Online Test
Indian Polity Revision Test Part 3 in Tamil
Indian Polity Revision Test Part 3 in Tamil
Congratulations - you have completed Indian Polity Revision Test Part 3 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
’சிட்டிசன் என்ற சொல்லின் பொருள் யாது?
குடியுரிமை | |
பிறப்பு | |
வம்சாவளி | |
நகர அரசில் வசிப்பவர் |
Question 1 Explanation:
விளக்கம்: சிட்டிசன்’ (Citizen) எனும் சொல் ’சிவிஸ்’ (Civis) எனும் இலத்தின் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருள் ஒரு ’நகர அரசில் வசிப்பவர்’ என்பதாகும். இந்திய அரசியலமைப்பு, இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான ஒற்றை குடியுரிமையை வழங்குகிறது. இந்திய அரசியலமைப்பின் பாகம் II சட்டப்பிரிவுகள் 5 லிருந்து 11 வரை குடியுரிமையைப் பற்றி விளக்குகின்றன.
Question 2 |
குடியுரிமைச்சட்டம் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தால் எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது?
8 | |
7 | |
5 | |
9 |
Question 2 Explanation:
விளக்கம்: இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின்பு, 1955ல் இயற்றப்பட்ட குடியுரிமைச்சட்டம், குடியுரிமை பெறுதல் மற்றும் குடியுரிமை இழத்தல் ஆகியன பற்றி விளக்குகிறது. இச்சட்டம் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தால் எட்டு முறை திருத்தப்பட்டுள்ளது. முதலில், இக்குடியுரிமைச் சட்டம் காமன்வெல்த் குடியுரிமையை வழங்கியது. ஆனால் 2003ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்ட திருத்ததின்படி இவ்வுரிமை நீக்கப்பட்டது.
Question 3 |
குடியுரிமைச் சட்டம் 1955, குடியுரிமைப் பெற எத்தனை வழிகளைப் பரிந்துரை செய்கிறது?
8 | |
7 | |
5 | |
9 |
Question 3 Explanation:
விளக்கம்: குடியுரிமைச் சட்டம் 1955, குடியுரிமைப் பெற ஐந்து வழிகளைப் பரிந்துரை செய்கிறது. அவை; பிறப்பு, வம்சாவளி, பதிவுசெய்தல், இயல்புரிமை மற்றும் பிரதேச இணைவு ஆகும்.
Question 4 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.
1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியக் குடிமக்களாகக் கருதப்படுவர். | |
1951 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ வெளிநாட்டில் பிறந்த ஒருவரின் தந்தை(அவர் பிறந்த போது) இந்தியக் குடிமகனாக இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டில் பிறந்த அவர், வம்சாவளி மூலம் இந்தியக் குடியுரிமை பெறமுடியும். | |
ஒருவர் இந்தியக் குடியுரிமை கோரி, பொருத்தமான அங்கீகாரத்துடன் பதிவு செய்வதன் மூலம் இந்தியக் குடியுரிமை பெறலாம். | |
இவை அனைத்தும் |
Question 4 Explanation:
விளக்கம்: குடியுரிமைச் சட்டம் 1955ன் படி ஒருவர் கீழ்க்காணும் ஏதேனும் ஒரு முறையில் குடியுரிமை பெறமுடியும்.
பிறப்பின் மூலம்: 1950ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியக் குடிமக்களாகக் கருதப்படுவர்.
வம்சாவளி மூலம்: 1950ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ வெளிநாட்டில் பிறந்த ஒருவரின் தந்தை(அவர் பிறந்த போது) இந்தியக் குடிமகனாக இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டில் பிறந்த அவர், வம்சாவளி மூலம் இந்தியக் குடியுரிமை பெறமுடியும்.
பதிவின் மூலம்: ஒருவர் இந்தியக் குடியுரிமை கோரி, பொருத்தமான அங்கீகாரத்துடன் பதிவு செய்வதன் மூலம் இந்தியக் குடியுரிமை பெறலாம்.
இயல்புரிமை மூலம்: ஒரு வெளிநாட்டவர், இந்திய அரசிற்கு, இயல்புரிமை கோரி விண்ணப்பிப்பதன்
மூலம் அவர், இந்தியக் குடியுரிமை பெறலாம்.
5.பிரதேச (நாடுகள்) இணைவின் மூலம்: பிற நாடுகள் / பகுதிகள் இந்தியாவுடன் இணையும் போது இந்திய அரசு அவ்வாறு இணையும் நாடுகளின் மக்களைத் தமது குடிமக்களாகக் கருதி அவர்களுக்குக் குடியுரிமை வழங்கலாம்.
Question 5 |
குடியுரிமைச் சட்டம் 1955ன் படி, ஒருவர் தன் குடியுரிமையை எத்தனை வழிகளில் இழப்பார்?
3 | |
5 | |
4 | |
2 |
Question 5 Explanation:
விளக்கம்: குடியுரிமைச் சட்டம் 1955ன் படி, ஒருவர் தன் குடியுரிமையை, சட்டத்தின் மூலமாக பெறப்பட்டதாகவோ (அ) அரசியலமைப்பின் கீழ் முன்னுரிமையால் பெறப்பட்டதாகவோ இருக்கும்பட்சத்தில் பெற்ற குடியுரிமையைத் துறத்தல், முடிவுறச் செய்தல், இழத்தல் என்ற மூன்று வழிகளில் இழப்பார்.
Question 6 |
குடியுரிமையை இழத்தல் குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்க.
ஒரு குடிமகன் தாமாக முன்வந்து தனது குடியுரிமையை இழத்தல் | |
வேறு ஒரு நாட்டில் குடியுரிமை பெறும்போது தாமாகவே இந்தியக் குடியுரிமை முடிவுக்கு வந்துவிடுதல். | |
இயல்புரிமையின் மூலம் குடியுரிமை பெற்ற ஒரு குடிமகன், மோசடி செய்து குடியுரிமை பெற்றவர், தவறான பிரதிநிதித்துவம் தந்தவர் (அ) உண்மைகளை மறைத்தவர் என்பதை மத்திய அரசு கண்டறிந்து அவர் குற்றம் புரிந்தவர் என்று திருப்திப்படும் பட்சத்தில் மத்திய அரசு, அவரது குடியுரிமையை இழக்கச் செய்யும் | |
இவை அனைத்தும் |
Question 6 Explanation:
விளக்கம்: 1. ஒரு குடிமகன் தாமாக முன்வந்து தனது குடியுரிமையை இழத்தல்.
2. வேறு ஒரு நாட்டில் குடியுரிமை பெறும்போது தாமாகவே இந்தியக் குடியுரிமை முடிவுக்கு வந்துவிடுதல்.
3. இயல்புரிமையின் மூலம் குடியுரிமை பெற்ற ஒரு குடிமகன், மோசடி செய்து குடியுரிமை பெற்றவர், தவறான பிரதிநிதித்துவம் தந்தவர் (அ) உண்மைகளை மறைத்தவர் (அ) எதிரி நாட்டுடன் வாணிகம் செய்தவர் அல்லது இரண்டாண்டு காலத்திற்கு சிறை தண்டனை பெற்றவர் என்பதை மத்திய அரசு கண்டறிந்து அவர் குற்றம் புரிந்தவர் என்று திருப்திப்படும் பட்சத்தில் மத்திய அரசு, அவரது குடியுரிமையை இழக்கச் செய்யும்.
Question 7 |
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமை எந்த நாட்டிடமிருந்து பெறப்பட்டது?
அமெரிக்கா | |
ரஷ்யா | |
பிரிட்டன் | |
பிரான்சு |
Question 7 Explanation:
விளக்கம்: இருந்து 35 வரையுள்ள சட்டப்பிரிவுகள் அடிப்படை உரிமைகள் பற்றி கூறுகின்றன. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் இந்த அடிப்படை உரிமைகளை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகளின் தாக்கத்தால் உருவாக்கினார்கள்.
Question 8 |
முதலில் இந்திய அரசியலமைப்பு எத்தனை அடிப்படை உரிமைகளை வழங்கியது?
6 | |
7 | |
8 | |
9 |
Question 8 Explanation:
விளக்கம்: முதலில் இந்திய அரசியலமைப்பு ஏழு அடிப்படை உரிமைகளை வழங்கியது. ஆனால், தற்போது ஆறு அடிப்படை உரிமைகள் மட்டுமே உள்ளன.
Question 9 |
இந்திய அரசியலமைப்பின் எப்பகுதி ’இந்தியாவின் மகாசாசனம்’ என அழைக்கப்படுகிறது?
2 | |
4 | |
3 | |
5 |
Question 9 Explanation:
விளக்கம்: இந்திய அரசியலமைப்பின் பகுதி (III) ’இந்தியாவின் மகாசாசனம்’ என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமைகள் பொதுவானது. ஆனால் இந்திய குடிமக்களுக்கு மட்டுமேயான சில அடிப்படை உரிமைகளும் உள்ளன.
Question 10 |
இராணுவ மற்றும் கல்விசார் பட்டங்களைத் தவிர மற்ற பட்டங்களை நீக்கும் அரசியலமைப்பு பிரிவு எது?
19 | |
16 | |
18 | |
15 |
Question 10 Explanation:
விளக்கம்: பிரிவு 14 - சட்டத்தின் முன் அமனவரும் சைம்.
பிரிவு 15 - மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதைத் தடை செய்தல்.
பிரிவு 16 - பொது வேலை வாய்ப்புகளில் சம வாய்ப்பளித்தல்.
பிரிவு 17 - தீண்டாமையை ஒழித்தல்.
பிரிவு 18 - இராணுவ மற்றும் கல்விசார் பட்டங்களைத்
தவிர மற்ற பட்டங்களை நீக்குதல்.
Question 11 |
தொழிற்சாலைகள் மற்றும் ஆபத்தான இடங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்கும் அரசியலமைப்பு பிரிவு எது?
24 | |
23 | |
27 | |
28 |
Question 11 Explanation:
விளக்கம்: பிரிவு 23 - கட்டாய வேலை , கொத்தடிமை முறை மற்றும் மனிதத்தன்மையற்ற வியாபாரத்தைத் தடுத்தல்.
Question 12 |
சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நிறுவ அனுமதி அளிக்கும் அரசியலமைப்பு பிரிவு?
30 | |
32 | |
23 | |
21 |
Question 12 Explanation:
விளக்கம்: பிரிவு 29 - சிறுபான்மையினரின் எழுத்து, மொழி, மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு.
பிரிவு 30 - சிறு்பான்மையினரின் கல்வி நிறுவனங்களை நிறுவி, நிர்வகிக்கும் உரிமை.
Question 13 |
எத்தனை ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தப்படி, அடிப்படை உரிமைகள் பட்டியலிலிருந்து சொத்துரிமை நீக்கப்பட்டது?
92 | |
44 | |
46 | |
96 |
Question 13 Explanation:
விளக்கம்: 1978ஆம் ஆணடு, 44ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தப்படி, அடிப்படை உரிமைகள் பட்டியலிலிருந்து சொத்துரிமை (பிரிவு 31) நீக்கப்பட்டது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி XII, பிரிவு 300 A வின் கீழ் ஒரு சட்ட உரிமையாக வைக்கப்பட்டுள்ளது.
Question 14 |
வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு பாதுகாப்பு தரும் உரிமை எது?
21 | |
22 | |
23 | |
25 |
Question 14 Explanation:
விளக்கம்: பிரிவு 21 - வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு பாதுகாப்பு தரும் உரிமை
பிரிவு 21 A - தொடக்கக்கல்வி பெறும் உரிமை.
பிரிவு 22 - சில வழக்குகளில் கைது செய்து, தடுப்புக் காவலில் வைப்பதற்கெதிரான பாதுகாப்பு உரிமை
Question 15 |
தண்டனைகளிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை எது?
21 | |
20 | |
23 | |
25 |
Question 15 Explanation:
விளக்கம்: பிரிவு 19 - பேச்சுரிமை, கருத்து தெரிவிக்கும் உரிமை, அமைதியான முறையில் கூட்டம் கூடுவதற்கு உரிமை, சங்கங்கள், அமைப்புகள் தொடங்க உரிமை, இந்திய நாட்டிற்குள் விரும்பிய இடத்தில் வசிக்கும் மற்றும் தொழில் செய்யும் உரிமை.
பிரிவு 20 - குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமை மற்றும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை
Question 16 |
எந்த ஒரு சமயத்தினையும் ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும் உரிமை அளிக்கும் பிரிவு?
19 | |
25 | |
23 | |
27 |
Question 16 Explanation:
விளக்கம்: பிரிவு 25 - எந்த ஒரு சமயத்தினையும் ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும் உரிமை
பிரிவு 26 - சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை.
விளக்கம்: பிரிவு 25 - எந்த ஒரு சமயத்தினையும் ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும் உரிமை
பிரிவு 26 - சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை.
Question 17 |
குடிமக்களின் அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடைய முதல் எழுதப்பட்ட ஆவணம் யாரால் வெளியிடப்பட்டது?
முதலாம் ஜான் | |
இரண்டாம் ஜான் | |
முதலாம் லூயி | |
விக்டோரியா |
Question 17 Explanation:
விளக்கம்: பெரும் முதலாளிகளிடமிருந்து வந்த எதிர்ப்பு காரணமாக கி.பி. (பொ.ஆ) 1215இல் இங்கிலாந்து மன்னர் முதலாம் ஜான் என்பவரால் வெளியிடப்பட்ட உரிமைகள் பட்டயமே, ’மகாசாசனம்’ எனப்படும். இதுவே, குடிமக்களின் அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடைய முதல் எழுதப்பட்ட ஆவணமாகும்.
Question 18 |
நீதிமன்ற முத்திரையுடன், நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை எது?
நீதிப்பேராணை | |
அடிப்படை உரிமை | |
அடிப்படை கடமை | |
அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் |
Question 18 Explanation:
விளக்கம்: நீதிமன்ற முத்திரையுடன், நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை நீதிப்பேராணை எனப்படும். இது சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடைசெய்ய, நீதிமன்றத்தால் வெளியிடப்படும் ஆணையாகும்.
Question 19 |
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்கள் இரண்டுமே எத்தனை வகையான நீதிப்பேராணைகளை வெளியிட அதிகாரம் பெற்றுள்ளன?
6 | |
5 | |
7 | |
4 |
Question 19 Explanation:
விளக்கம்: உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்கள் இரண்டுமே ஐந்து வகையான நீதிப்பேராணைகளை வெளியிட அதிகாரம் பெற்றுள்ளன. அவை ஆட்கொணர்வு நீதிப்பேராணை, கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை, தடையுறுத்தும் நீதிப்பேராணை ஆவணக் கேட்பு நீதிப்பேராணை, தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை ஆகியனவாகும்.
Question 20 |
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32, இந்திய அரசியலமைப்பின் ’இதயம் மற்றும் ஆன்மா என்று கூறியவர் யார்?
எம்.என்.ராய் | |
அம்பேத்கார் | |
நேரு | |
வி.பி.சிங் |
Question 20 Explanation:
விளக்கம்: ஆணைகளை வெளியிட்டு மக்களின் உரிமைகளைக் காப்பதினால் உச்சநீதிமன்றம் அரசியலமைப்பின் பாதுகாவலன்’ என அழைக்கப்படுகிறது. Dr. B.R. அம்பேத்கரின் கூற்றுப்படி அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32, இந்திய அரசியலமைப்பின் ’இதயம் மற்றும் ஆன்மா’ ஆகும்.
Question 21 |
சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாக்கும் பேராணை எது?
ஆட்கொணர்வு நீதிப்பேராணை | |
கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை | |
தடையுறுத்தும் நீதிப்பேராணை | |
ஆவணக் கேட்பு பேராணை |
Question 21 Explanation:
விளக்கம்: ஆட்கொணர்வு நீதிப்பேராணை (Habeas Corpus) சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதிலிருந்து இது பாதுகாக்கிறது. கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை (Mandamus) யின்படி மனுதாரர் சட்ட உதவியுடன் தனது மனுதொடர்பான பணியினைச் சம்மந்தப்பட்ட துறையிலிருந்து நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
Question 22 |
ஒரு கீழ்நீதிமன்றம் தனது, சட்ட எல்லையைத் தாண்டி செயல்படுவதைத் தடுக்கும் பேராணை எது?
ஆட்கொணர்வு நீதிப்பேராணை | |
தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை | |
தடையுறுத்தும் நீதிப்பேராணை | |
ஆவணக் கேட்பு பேராணை |
Question 22 Explanation:
விளக்கம்: தடையுறுத்தும் நீதிப்பேராணை (Prohibition) ஒரு கீழ்நீதிமன்றம் தனது, சட்ட எல்லையைத் தாண்டி செயல்படுவதைத் தடுக்கிறது. ஆவணக் கேட்பு பேராணை (Certiorari) என்பது உயர்நீதிமன்றம், ஆவணங்களை நியாயமான பரிசீலனைக்கு தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ அனுப்பச் செய்ய கீழ்நீதிமன்றங்களுக்கு இடும் ஆணை ஆகும்.
Question 23 |
சட்டத்திற்குப் புறம்பாக, தகாத முறையில் அரசு அலுவலகத்தைக் கைப்பற்றுவதை தடை செய்யும் பேராணை எது?
ஆட்கொணர்வு நீதிப்பேராணை | |
கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை | |
தடையுறுத்தும் நீதிப்பேராணை | |
தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை |
Question 23 Explanation:
விளக்கம்: தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை (Quo-Warranto) இப்பேராணை சட்டத்திற்குப் புறம்பாக, தகாத முறையில் அரசு அலுவலகத்தைக் கைப்பற்றுவதை தடை செய்கிறது.
Question 24 |
குடியரசுத் தலைவரால் அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது, எந்த இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவின் கீழ் உத்திரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரம் தாமாகவே நிறுத்தப்படுகிறது?
18 | |
19 | |
20 | |
21 |
Question 24 Explanation:
விளக்கம்: இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 352ன் கீழ் குடியரசுத் தலைவரால் அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது, இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19ன் கீழ் உத்திரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரம் தாமாகவே நிறுத்தப்படுகிறது. மற்ற அடிப்படை உரிமைகளையும் குடியரசுத் தலைவர் சில குறிப்பிட்ட ஆணைகளைப் பிறப்பிப்பதின் மூலம் தடை செய்யலாம். குடியரசுத் தலைவரின் இந்த ஆணைகள் நாடாளுமன்றத்தால் கட்டாயம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
Question 25 |
எந்த சூழ்நிலையிலும், குடியரசுத்தலைவரால் தடைசெய்ய முடியாத உரிமை எது?
தொழில் செய்யும் உரிமை | |
அமைப்புகள் தொடங்க உரிமை | |
இந்திய நாட்டிற்குள் விரும்பிய இடத்தில் வசிக்கும் உரிமை | |
குற்றங்கள் மற்றும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்பு |
Question 25 Explanation:
விளக்கம்: எந்த சூழ்நிலையிலும், குடியரசுத்தலைவரால் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 20 மற்றும் 21ன் கீழ் வழங்கப்பட்ட உரிமைகள் (குற்றங்கள் மற்றும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்பு, வாழ்க்கை மற்றும் தனிநபர் சுதந்திரம் பாதுகாப்பு) தடைசெய்ய முடியாது.
Question 26 |
இந்திய அரசியலமைப்புச்சட்டம் பகுதி IV சட்டப்பிரிவு 36ல் இருந்து 51 வரை தரப்பட்டுள்ளவை எவை?
அடிப்படை உரிமைகள் | |
அடிப்படை கடமைகள் | |
அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் | |
இவை அனைத்தும் |
Question 26 Explanation:
விளக்கம்: அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள், இந்திய அரசியலமைப்புச்சட்டம் பகுதி IV சட்டப்பிரிவு 36ல் இருந்து 51 வரை தரப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம், வழிகாட்டும் நெறிமுறைகளுக்காகத் தனியாக வகைபாட்டினையும் கொண்டிருக்கவில்லை.
Question 27 |
பொருளடக்கம் மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில் அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் எத்தனை பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன?
3 | |
2 | |
4 | |
5 |
Question 27 Explanation:
விளக்கம்: பொருளடக்கம் மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில் அவை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது சமதர்ம, காந்திய மற்றும் தாராள-அறிவுசார்ந்தவை என்று பிரிக்கப்பட்டுள்ளன.
Question 28 |
அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்க.
இந்த கொள்கைகளை, நீதிமன்றத்தால் வலுக்கட்டாயமாகச் செயற்படுத்த முடியும். | |
இவை ஒரு நாட்டினை நிர்வகிக்க அவசியமானவை அல்ல. | |
ஓர் அரசு சட்டத்தை இயற்றும் போது இந்த கொள்கைகளையும் கவனத்தில்கொள்ள தேவை இல்லை. | |
இவற்றில் எதுவுமில்லை. |
Question 28 Explanation:
விளக்கம்: இந்த கொள்கைகளை, நீதிமன்றத்தால் வலுக்கட்டாயமாகச் செயற்படுத்த முடியாது. ஆனால் இவை ஒரு நாட்டினை நிர்வகிக்க அவசியமானவை. ஓர் அரசு சட்டத்தை இயற்றும் போது இந்த கொள்கைகளையும் கவனத்தில் கொள்ளவேண்டியது முக்கிய கடமையாகும்.
Question 29 |
இந்திய அரசியலமைப்பின் ‘புதுமையான சிறப்பம்சம்’ என்றழைக்கப்படுவது எது?
திருத்தும் தன்மை | |
முகவுரை | |
அடிப்படை கடமைகள் | |
அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் |
Question 29 Explanation:
விளக்கம்: சமுதாய நலனை மக்களுக்குத் தருவதே அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் நோக்கமாகும். இந்திய அரசியலமைப்பின் ‘புதுமையான சிறப்பம்சம்’ என Dr. B.R. அம்பேத்கர் இதனை விவரிக்கிறார்.
Question 30 |
எந்த அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின்படி , இந்திய அரசியலமைப்பின்பிரிவு 45 திருத்தப்பட்டுள்ளது?
86 | |
44 | |
46 | |
92 |
Question 30 Explanation:
விளக்கம்: 2002ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட, 86வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின்படி , இந்திய அரசியலமைப்பின் பிரிவு 45 திருத்தப்பட்டு, பிரிவு 21 A வின் கீழ் தொடக்கக்கல்வி, அடிப்படை உரிமையாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் திருத்தம், மாநில அரசுகள் முன்பருவ மழலையர் கல்வியை (Early Childhood care and Education - EECE) 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வழங்க அறிவுறுத்துகிறது.
Question 31 |
அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டவை?
பிரான்சு | |
கனடா | |
அமெரிக்க ஐக்கிய நாடுகள் | |
அயர்லாந்து |
Question 31 Explanation:
விளக்கம்: இவை அயர்லாந்து நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டவை . இவை அரசுக்கு வெறும் அறிவுறுத்தல்களே ஆகும். எந்த நீதிமன்றத்தாலும் கட்டாயப்படுத்த முடியாது. இவை தார்மீக மற்றும் அரசியல் ஒப்புதலைப் பெற்றவை. இந்தக் கொள்கைகளைச் செயற்படுத்தும் பொழுது, சமுதாய மற்றும் பொருளாதார ஜனநாயகம் உறுதியாகிறது. இவை மனித உரிமைகளைப் பாதுகாக்க வழிவகுக்கிறது.
Question 32 |
அடிப்படை உரிமைகள் குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்க.
இவை சட்ட ஒப்புதலைப் பெற்றவை. | |
இந்த உரிமைகள் நாட்டின் அரசியல் ஜனநாயகத்தை வலுப்படுத்துகின்றன . | |
இவை இயற்கையான உரிமைகள். | |
இவை அனைத்தும். |
Question 32 Explanation:
விளக்கம்: இவை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டவை .அரசாங்கத்தால் கூட இந்த உரிமையை சுருக்கவோ, நீக்கவோ முடியாது. இவற்றை நீதிமன்ற சட்டத்தால் செயற்படுத்த முடியும்.
Question 33 |
இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகள் எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டவை?
பிரான்சு | |
கனடா | |
பிரிட்டன் | |
ரஷ்யா |
Question 33 Explanation:
விளக்கம்: இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகள் என்பவை முன்னாள் சோவியத் யூனியன் (USSR) அரசியலமைப்பின் தாக்கத்தால் சேர்க்கப்பட்டதாகும்.
Question 34 |
இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கடமைகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட கமிட்டி எது?
ஜேவிபி கம்மிட்டி | |
அசோக்மேத்தா கமிட்டி | |
ராஜ மன்னார் கமிட்டி | |
சர்தார் ஸ்வரன் சிங் |
Question 34 Explanation:
விளக்கம்: 1976ஆம் ஆண்டு, காங்கிரஸ் கட்சி சர்தார் ஸ்வரன் சிங் கமிட்டியை அமைத்து அடிப்படைக் கடமைகள் குறித்து ஆராய பரிந்துரை செய்தது. அக்கமிட்டி அரசியலமைப்புச் சட்ட திருத்தம் செய்ய பரிந்துரைத்தது.
Question 35 |
எந்த அரசியல் அமைப்புச் சட்டதிருத்தத்தின்படி குடிமக்களின் கடமைகள் சேர்க்கப்பட்டன?
44 | |
46 | |
92 | |
42 |
Question 35 Explanation:
விளக்கம்: 1976ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 42வது அரசியல் அமைப்புச் சட்டதிருத்தம் நமது அரசியலமைப்பில் குடிமக்களின் பொறுப்புகள் சிலவற்றைச் சேர்த்தது. இவ்வாறு சேர்க்கப்பட்ட பொறுப்புகளே குடிமக்களின் கடமைகள் என்றழைக்கப்பட்டன.
Question 36 |
அரசியலமைப்பின் பகுதி IV A எந்த ஆண்டு அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது?
1978 | |
1976 | |
1992 | |
1986 |
Question 36 Explanation:
விளக்கம்: 1976ஆம் ஆண்டு 42வது அரசியல் அமைப்புச் சட்டதிருத்தம் அரசியலமைப்பின் பகுதி IV A என்ற ஒரு புதிய பகுதியைச் சேர்த்தது. இந்தப் புதிய பகுதி 51 A என்ற ஒரேயொரு பிரிவை மட்டும் கொண்டது. இது முதன்முறையாக, குடிமக்களின் பத்து அடிப்படைக் கடமைகளை விளக்கும் குறிப்பிட்ட சட்டத் தொகுப்பாக உள்ளது.
Question 37 |
கீழ்க்கண்டவற்றுள் அடிப்படைக்கடமைகள் எவை?
ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அரசியலமைப்பு, அதன் கொள்கைகள், நிறுவனங்கள், தேசியகீதம், தேசியக்கொடி, தேசிய சின்னங்கள் ஆகியவற்றை மதித்தல் | |
சுதந்திர போராட்டத்திற்குத் தூண்டுகோலாக அமைந்த உயரிய நோக்கங்களைப் போற்றி வளர்த்தல் | |
இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றைப்பேணிப் பாதுகாத்தல். | |
இவை அனைத்தும் |
Question 37 Explanation:
விளக்கம்: தேசப் பாதுகாப்பிற்காகத் தேவைப்படும் பொழுது தேசப்பணியாற்ற தயாராயிருத்தல். சமய, மொழி மற்றும் பிராந்திய அல்லது பகுதி சார்ந்த வேறுபாடுகளை மறந்து, பெண்களைத் தரக்குறைவாக நடத்தும் பழக்கத்தை நிராகரித்து, பெண்களின் கண்ணியத்தைக் காக்கும் எண்ணங்களை மேம்படுத்தி, இந்திய மக்கள் அனைவரிடையேயும் சகோதரத்துவத்தை வளர்த்தல். நமது உயர்ந்த, பாரம்பரிய கலப்பு கலாச்சாரத்தை மதித்து பாதுகாத்தல்.
Question 38 |
கீழ்க்கண்ட எந்த அரசியலமைப்பு பகுதியின் கீழ் அனைத்து இந்திய குடிமக்கள் தங்கள் குழந்தைகள் அனைவருக்கும் கல்வி பெறும் வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும்?
அடிப்படைக்கடமைகள் | |
அடிப்படை உரிமைகள் | |
அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் | |
இவை அனைத்தும் |
Question 38 Explanation:
விளக்கம்: 6 முதல் 14 Zவயது வரையுள்ள குழந்தைகள் அனைவருக்கும் கல்வி பெறும் வாய்ப்பினை வழங்குதல். (2002இல் அறிமுகப்படுத்ZZ அடிப்படைக் கடமையை அறிமுகப்படுத்தியது. இந்த பிரிவின் கீழ் அனைத்து இந்திய குடிமக்கள் அல்லது பெற்றோர்கள் 6 முதல் 14 வயதுள்ள தங்கள் குழந்தைகள் அனைவருக்கும் கல்வி பெறும் வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும்)
Question 39 |
கீழ்க்கண்டவற்றுள் அடிப்படைக்கடமைகளை தேர்க.
காடுகள், ஏரிகள், ஆறுகள், வனவிலங்குகள் மற்றும் உயிரினங்கள் அடங்கிய இயற்கை சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, மேம்படுத்தி அவை வாழும் சூழலை ஏற்படுத்துதல் | |
அறிவியல் கோட்பாடு, மனிதநேயம், ஆராய்ச்சி மனப்பான்மை மற்றும் சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்த்தல். | |
வன்முறையைக் கைவிட்டு பொது சொத்துக்களைப் பாதுகாத்தல் | |
இவை அனைத்தும். |
Question 39 Explanation:
விளக்கம்: காடுகள், ஏரிகள், ஆறுகள், வனவிலங்குகள் மற்றும் உயிரினங்கள் அடங்கிய இயற்கை சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, மேம்படுத்தி அவை வாழும் சூழலை ஏற்படுத்துதல். அறிவியல் கோட்பாடு, மனிதநேயம், ஆராய்ச்சி மனப்பான்மை மற்றும் சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்த்தல். வன்முறையைக் கைவிட்டு பொது சொத்துக்களைப் பாதுகாத்தல். தனிப்பட்ட மற்றும் கூட்டுசெயல்பாடுகள் என அனைத்து செயல்பாடுகளிலும் சிறந்தவற்றை நோக்கி செயல்பட்டு, தேசத்தின் நிலையான, உயர்ந்த முயற்சி மற்றும் சாதனைக்காக உழைத்தல்.
Question 40 |
இந்தியக் குடியுரிமை எத்தனை வகைப்படும்?
2 | |
3 | |
4 | |
5 |
Question 40 Explanation:
விளக்கம்: குடியுரிமை இரண்டு வகைப்படும்
இயற்கை குடியுரிமை: பிறப்பால் இயற்கையாக பெறக்கூடிய குடியுரிமை
இயல்புக் குடியுரிமை; இயல்பாக விண்ணப்பித்து பெறும் குடியுரிமை
Question 41 |
பிறப்பால் குடியுரிமை பெறுதல் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவற்றை தேர்க.
இக்குடியுரிமை பிறப்பிடத்தால் தீர்மானிக்கப்படுகிறது . 1950 ஜனவரி 26 முதல் 1987 ஜூலை வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர் எந்த நாட்டவராக இருப்பினும் அவர்கள் பிறப்பால் குடியுரிமை பெறுகின்றனர். | |
1986 ஜூலை 1 மற்றும் அதற்குப் பின் இந்தியாவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் ஒருவர் அச்சமயத்தில் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். | |
2003 டிசம்பர் 3 மற்றும் அதற்குப் பின் இந்தியாவில் பிறந்தவர்கள் பிறப்பால் குடியுரிமை பெறுகின்றனர். அல்லது பெற்றோரில் ஒருவர் இந்தியக் குடிமகனாகவும் மற்றொருவர் சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் இடம்பெயர்ந்தவராக இல்லாதிருந்தால் குடியுரிமை பெறுகின்றனர். | |
இவை அனைத்தும். |
Question 41 Explanation:
விளக்கம்: இக்குடியுரிமை பிறப்பிடத்தால் தீர்மானிக்கப்படுகிறது . 1950 ஜனவரி 26 முதல் 1987 ஜூலை வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர் எந்த நாட்டவராக இருப்பினும் அவர்கள் பிறப்பால் குடியுரிமை பெறுகின்றனர். 1987 ஜூலை 1 மற்றும் அதற்குப் பின் இந்தியாவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் ஒருவர் அச்சமயத்தில் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். 2004 டிசம்பர் 3 மற்றும் அதற்குப் பின் இந்தியாவில் பிறந்தவர்கள் பிறப்பால் குடியுரிமை பெறுகின்றனர். அல்லது பெற்றோரில் ஒருவர் இந்தியக் குடிமகனாகவும் மற்றொருவர் சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் இடம்பெயர்ந்தவராக இல்லாதிருந்தால் குடியுரிமை பெறுகின்றனர்.
Question 42 |
வம்சாவளியால் குடியுரிமை பெறுதல் குறித்த சரியான கூற்றுகளை தேர்க.
1950 ஜனவரி 26 முதல் 1982 டிசம்பர் 10 க்கு முன்னர் வெளிநாட்டில் பிறந்திருந்தாலும் அவருடைய தந்தை இந்தியக் குடிமகனாக இருக்கும் பட்சத்தில் அவர் வம்சாவளி மூலம் இந்திய குடியுரிமையைப் பெறுகிறார். | |
1992 டிசம்பர் 10 மற்றும் அதற்கு பின்னர் வெளிநாட்டில் பிறந்தவர்களின் பெற்றோரில் எவரேனும் ஒருவர் அச்சமயத்தில் இந்திய குடிமகனாக இருந்தால் அவர் இந்தியக் குடியுரிமையைப் பெறுகிறார். | |
2003 டிசம்பர் 4 ம் நாள் முதல் வெளிநாட்டில் பிறந்தவர்கள் அவர்களுடைய பிறப்பினை ஒரு வருடத்திற்குள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்யவில்லை எனில் இந்திய வம்சாவளிக் குடிமகனாக முடியாது. | |
இவை அனைத்தும். |
Question 42 Explanation:
விளக்கம்: 1950 ஜனவரி 26 முதல் 1992 டிசம்பர்10 க்கு முன்னர் வெளிநாட்டில் பிறந்திருந்தாலும் அவருடைய தந்தை இந்தியக் குடிமகனாக இருக்கும் பட்சத்தில் அவர் வம்சாவளி மூலம் இந்திய குடியுரிமையைப் பெறுகிறார்.1992 டிசம்பர் 10 மற்றும் அதற்கு பின்னர் வெளிநாட்டில் பிறந்தவர்களின் பெற்றோரில் எவரேனும் ஒருவர் அச்சமயத்தில் இந்திய குடிமகனாக இருந்தால் அவர் இந்தியக் குடியுரிமையைப் பெறுகிறார்.2003 டிசம்பர் 4 ம் நாள் முதல் வெளிநாட்டில் பிறந்தவர்கள் அவர்களுடைய பிறப்பினை ஒரு வருடத்திற்குள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்யவில்லை எனில் இந்திய வம்சாவளிக் குடிமகனாக முடியாது.
Question 43 |
பதிவு செய்தல் மூலம் குடியுரிமை பெறுதல் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவற்றை தேர்க.
இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஒரு நபர் எந்த ஒரு நாட்டில் வசித்தாலும் அல்லது பிரிக்கப்படாத இந்தியாவிற்கு வெளிப்பகுதியில் வசிப்பவராக இருந்தாலும் பதிவு செய்தலின் மூலம் குடியுரிமைபெறலாம். | |
எந்த ஒரு நாட்டிலும் குடிமகனாக இல்லாத ஒரு இந்தியர் அவர் வசிக்கும் நாட்டின் குடிமகனாவதை தடுக்கும் பொருட்டு பதிவு செய்தல் மூலம் குடியுரிமை வழங்கப்படுகிறது. | |
வெளிநாட்டுக் குடியுரிமையை ஒருவர் துறக்கும் பட்சத்தில் அவருக்கு பதிவு செய்தல் மூலம் குடியுரிமை வழங்கப்படுகிறது. | |
இவை அனைத்தும். |
Question 43 Explanation:
விளக்கம்: இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஒரு நபர் எந்த ஒரு நாட்டில் வசித்தாலும் அல்லது பிரிக்கப்படாத இந்தியாவிற்கு வெளிப்பகுதியில் வசிப்பவராக இருந்தாலும் பதிவு செய்தலின் மூலம் குடியுரிமைபெறலாம்.
Question 44 |
இந்தியக் குடிமகனை திருமணம் செய்த ஒருவர் பதிவின் மூலம் விண்ணப்பிக்கும் முன் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வசித்தவராக இருத்தல் வேண்டும்?
6 | |
7 | |
9 | |
10 |
Question 44 Explanation:
விளக்கம்: இந்தியக் குடிமகனை திருமணம் செய்த ஒருவர் பதிவின் மூலம் விண்ணப்பிக்கும் முன் ஏழு ஆண்டுகள் இந்தியாவில் வசித்தவராக இருத்தல் வேண்டும்.
Question 45 |
இயல்புக் குடியுரிமை குறித்த கூற்றுகளில் சரியானவற்றை தேர்க.
எந்த ஒரு நாட்டிலும் குடிமகனாக இல்லாத ஒரு இந்தியர் அவர் வசிக்கும் நாட்டின் குடிமகனாவதை தடுக்கும் பொருட்டு இயல்பு குடியுரிமை வழங்கப்படுகிறது. | |
வெளிநாட்டுக் குடியுரிமையை ஒருவர் துறக்கும் பட்சத்தில் அவருக்கு இயல்பு குடியுரிமை வழங்கப்படுகிறது. | |
ஒருவர் இந்தியாவில் வசிக்கும் பட்சத்தில் அல்லது இந்திய அரசுப்பணியில் இருக்கும் பட்சத்தில் (அ) ஆண்டு முழுவதும் இந்தியாவில் தங்கியிருக்கும் பட்சத்தில் இக்குடியுரிமையை பெறுகிறார். | |
இவை அனைத்தும். |
Question 45 Explanation:
விளக்கம்: ஒருவர் விண்ணப்பிப்பதன் மூலம் மத்திய அரசு அவருக்கு இயல்பு குடியுரிமைக்கான சான்றிதழை வழங்குகிறது. நல்ல பண்புகளையும் இந்திய அரசியலமைப்பில் எட்டாவது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு மொழியில் (தற்போது 22 மொழிகள்) போதிய அறிவினையும் பெற்ற ஒருவர் இயல்புக் குடியுரிமையைப் பெற தகுதியுடையவராவார்.
Question 46 |
இந்திய அரசு பாண்டிச்சேரி மக்களுக்கு எந்த ஆண்டு இந்தியக் குடியுரிமைக்கான ஆணையை வழங்கியது?
1965 | |
1972 | |
1962 | |
1968 |
Question 46 Explanation:
விளக்கம்: எந்தவொரு வெளிநாட்டுப் பகுதியும் இந்தியாவுடன் இணையும் போது, இந்திய அரசு அப்பகுதி மக்களை இந்திய குடிமக்களாக ஏற்றுக்கொள்கிறது.அந்த குறிப்பிட்ட நாளில் இருந்து அவர்கள் இந்திய குடிமக்களாகின்றனர். உதாரணமாக பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைந்தபொழுது, இந்திய அரசு அம்மக்களுக்கு 1962ல் இந்தியக் குடியுரிமைக்கான ஆணையை வழங்கியது.
Question 47 |
இரட்டைக் குடியுரிமை வழங்கும் நாடுகளுக்கு எடுத்துக்காட்டு?
அமெரிக்க ஐக்கிய நாடுகள் | |
சுவிட்சர்லாந்து | |
a) மற்றும் b) | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 47 Explanation:
விளக்கம்: இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு ஒற்றைக் குடியுரிமையை வழங்குகிறது. அதுவே இந்தியக் குடியுரிமை எனப்படுகிறது. ஆனால் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய கூட்டாட்சி அமைப்பு கொண்டுள்ள நாடுகளில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படுகிறது. (தேசிய குடியுரிமை, மற்றும் மாநில குடியுரிமை).
Question 48 |
ஒரு நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்கள் எத்தனை வகைபடுவர்?
2 | |
3 | |
4 | |
5 |
Question 48 Explanation:
விளக்கம்: ஒரு நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்களை இரண்டு வகையினராக நாம் அழைக்கின்றோம் அவை :
அந்நியர் (Alien) ஒரு நாட்டில் வசிக்கும் குடிமகனாக அல்லாத அனைவரும் அந்நியர் எனப்படுவர்.
உதாரணம் : வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டு மாணவர்கள்
குடியேறியவர் (Immigrant) ஒரு நாட்டில் எவ்வித தடையும் இன்றி நிரந்தரமாக வசிப்பதற்கும், பணி புரிவதற்கும் உரிமை பெறும் அந்நியர் குடியேறியவர் எனப்படுகிறார்.
Question 49 |
கீழ்க்கண்டவற்றுள் நற்குடிமகனின் பண்புகள் எவை?
அரசியலமைப்புச் சட்டத்தின் படி நடத்தல் | |
சட்டத்துக்கு கீழ்படிதல் | |
நற்பண்புகளையும், நீதியையும் நிலைநாட்டுதல் | |
இவை அனைத்தும். |
Question 49 Explanation:
விளக்கம்:
நற்குடிமகனின் பண்புகள்
■ அரசியலமைப்புச் சட்டத்தின் படி நடத்தல்
■ சட்டத்துக்கு கீழ்படிதல்
■ சமுதாயத்திற்கு தன் பங்களிப்பை ஆற்றுதல் மற்றும் குடிமைப் பணியை செயலாற்றுதல்.
■ நற்பண்புகளையும், நீதியையும் நிலைநாட்டுதல்
■ வேற்றுமைகளை மறந்து நடத்தல்
Question 50 |
வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படும் நாள்?
ஜனவரி – 19 | |
ஜனவரி – 29 | |
ஜனவரி – 9 | |
ஜனவரி – 12 |
Question 50 Explanation:
விளக்கம்: வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (பிரவாசி பாரதிய தினம்) இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரவாசி பாரதிய தினம் கொண்டாடப்படுகிறது.இந்த தினம் இந்தியாவின் வளர்ச்சிக்காக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் பங்களிப்பினை பெறும் வகையில் கொண்டாடப்படுகிறது. இது மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வருகை புரிந்த தினமான ஜனவரி – 9 – ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
Question 51 |
கீழ்க்கண்டவற்றுள் நேர்கோட்டில் செல்லக்கூடியவை எவை?
மக்களாட்சி | |
குடியுரிமை | |
a) மற்றும் b) | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 51 Explanation:
விளக்கம்: அரசியல் கோட்பாட்டில், குடியுரிமை என்பது குடிமக்களுக்கான சட்டப்பூர்வமான அங்கீகாரம் மட்டுமல்லாது, நெறிமுறை நல்லியல்பிற்கு இணங்க, அரசியல் செயல்பாடுகளில் முழுமையாகவும், சமமாகவும் பங்கேற்கின்ற உரிமையையும் அனைத்து குடிமக்களுக்கும் அளிப்பதாகும். மக்களாட்சியும், குடியுரிமையும் எப்போதும் ஒரே நேர்கோட்டில் செல்லக்கூடியது ஆகும். மக்களாட்சி என்பது அரசியல் கட்சிகள், தேர்தல் முறைமைகள், சட்டத்தின் ஆட்சி போன்றவைகளிலும், குடியுரிமை என்பது தனிமனிதர்களிடத்தும் முக்கிய கவனம் செலுத்துகின்றன.
Question 52 |
"குடியுரிமை என்பது பிறப்பிடம், குடும்பம், பரம்பரை மற்றும் பண்பாட்டைச் சார்ந்து அமைவதாகும்" என்பது யாருடைய கூற்று?
மாவோ | |
அரிஸ்டாட்டில் | |
ஸ்டாயிக் | |
கன்பூசியஸ் |
Question 52 Explanation:
விளக்கம்: அரிஸ்டாட்டிலின் கூற்றுபடி, குடியுரிமை என்பது பிறப்பிடம், குடும்பம், பரம்பரை மற்றும் பண்பாட்டைச் சார்ந்து அமைவதாகும். ‘ஸ்டாயிக்குகளின் (Stoics)’ கருத்து வளர்ச்சியடைந்த பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கே குடியிரிமை வழங்கப்பட வேண்டும் என்பதாகும். கன்பூசியசின் (Confusius) கருத்து பொது நலத்தை சீரமைத்து அதில் அனைவரும் தங்கள் நலனிற்காகவும், இணக்கத் சூழலுக்காகவும் பாடுபடவேண் டும் என்பதாகும். இந்தியாவிலும் இதே போன்று வசுதேவக் குடும்பகம் (Vasudeva Kudumbakam) (ஒரே உலகம், ஒரே குடும்பம்) என்பது ஒரு நல்லியல்பு கருத்தாக்கமாக காணப்படுகிறது.
Question 53 |
எந்த நாட்டின் நகர அரசில் குடியுரிமை என்பது அரசின் கடமைகளில் பங்கேற்பதாக அறியப்பட்டது?
சீனா | |
ஏதென்ஸ் | |
பாபிலோனியா | |
கியூபா |
Question 53 Explanation:
விளக்கம்: கிரேக்க மற்றும் ரோமானிய குடியரசுகளில் முக்கியத்துவம் பெற்ற குடியுரிமை என்பது நிலப்பிரபுத்துவ காலங்களில் முற்றிலுமாக மறைந்தது. மறுபடியும், மறுமலர்ச்சி காலக்கட்டத்தில் மனிதத்தன்மையின் விரும்பத்தக்க பகுதியாக குடியுரிமை மலர்ந்தது. பண்டைய ஏதென்சின், நகர அரசில் குடியுரிமை என்பது அரசின் கடமைகளில் பங்கேற்பதாக அறியப்பட்டது.
Question 54 |
ஒவ்வொரு மனிதனும் அரசியல் விலங்கு என்று கூறியவர் யார்?
மார்ஷல் | |
அரிஸ்டாட்டில் | |
கண்பூசியஸ் | |
பெர்னாட்ஷா |
Question 54 Explanation:
விளக்கம்: குடியுரிமை என்பதை அரிஸ்டாட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதினார். ஏனெனில் லட்சிய அரசு என்பது சட்டத்தின் அடிப்படையிலான, சட்டத்தை மதிக்கும் குடிமக்களாலேயே சாத்தியப்படும் எனக் கருதினார். அவர் மேலும் கூறுகையில், ஒவ்வொரு மனிதனும் அரசியல் விலங்கு என்றும், நகர அரசில் மட்டுமே அவன் முழுமையடைவான் என்றும் கூறுகிறார். எனவே அரசியல் பதவிகளை விரும்புவது இயற்கை என்கிறார். மேலும் அப்பெருமகனார், குடியுரிமை என்பது குடிமக்களையும், வேற்றுநாட்டவர்களையும் மட்டுமல்லாது பிறநாட்டு அடிமைகளையும் உள்ளடக்கியதாக ஓர் ஆட்சியில் காணப்படுவதாக விளக்குகிறார். ஒரு நாட்டின் குடிமகன் என்பவன் சட்டத்துறை, நீதித்துறை தொடர்பான அலுவல்கள் மட்டுமல்லாமல் அரசமைப்பின்படி அரசியல் உரிமைகளையும், அனுபவிக்கும் உரிமை பெற்றவனாக விளங்குகின்றான்.
Question 55 |
குடியுரிமையையும், சமூக நிலைமைகளையும், முதலாளித்துவ அடிப்படையில் ஆராய்ச்சி செய்தவர் யார்?
மார்ஷல் | |
ரூசோ | |
ஹியூம் | |
டோக்யூவில்லி |
Question 55 Explanation:
விளக்கம்: சுதந்திர சமூக மக்களாட்சிவாதியான மார்ஷல், குடியுரிமையையும், சமூக நிலைமைகளையும், முதலாளித்துவ அடிப்படையில் ஆராய்கிறார். அவரது கருத்தின்படி, குடியுரிமை மூன்று வகைப்படுகிறது. அவை குடிமை, அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த குடியுரிமைகளாகும். அனைத்து தனிமனிதர்களுக்கும் சுதந்திரம் என்பது குடிமை விவகாரங்களில் தேவைப்படுகிற ஒரு முக்கியமான அம்சமாகும். சட்டத்தின் ஆட்சியில், குடியுரிமை என்பது ஒரு தனித்துவம் பெற்ற அம்சமாக விளங்குகிறது. ஒரு குடிமகனாக, நமக்கு அரசியல் தொடர்பான முடிவெடுக்கும் முறைமையில் பங்குபெறுவதற்கு முழு உரிமை உண்டு. இது அரசியல் வகைப்பாட்டில் பிரதிபலிக்கிறது.
Question 56 |
“எவர் ஒருவருக்கு விவாதங்களிலும் அரசின் நீதி நிர்வாக அமைப்பிலும் பங்கேற்க அதிகாரம் இருக்கிறதோ அவரே குடிமகன் ஆவர்” என்று கூறியவர் யார்?
அரிஸ்டாட்டில் | |
ரூசோ | |
ஹியூம் | |
J.S.மில் |
Question 56 Explanation:
விளக்கம்: அரிஸ்டாட்டிலின் வரையறையின்படி “எவர் ஒருவருக்கு விவாதங்களிலும் அரசின் நீதி நிர்வாக அமைப்பிலும் பங்கேற்க அதிகாரம் இருக்கிறதோ அவரே குடிமகன் ஆவர். கிரேக்கர்கள் மக்களாட்சியின் கீழ் வாழும் பேறுபெற்றவர்கள். அவர்களின் அரசாங்கம் சாதாரண மக்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் தங்கள் பேச்சு உரிமையின் மூலமாக மிகப்பெரிய பேச்சு சுதந்திரத்தை பெற்றிருந்தனர்.
Question 57 |
கல்வியே நாட்டில் நிலவும் ஊழலுக்கும், நிலைத்தன்மையற்ற அரசியலுக்குமான தீர்வாக கருதப்படுகிறது என்று கருத்து தெரிவித்தவர் யார்?
பிளாட்டோ | |
பெர்னாட்ஷா | |
ஹியூம் | |
ரூசோ |
Question 57 Explanation:
விளக்கம்: பிளாட்டோ வின் கருத்துப்படி, கல்வியே நாட்டில் நிலவும் ஊழலுக்கும், நிலைத்தன்மையற்ற அரசியலுக்குமான தீர்வாக கருதப்படுகிறது. இதனால், அப்பெருமகனார், கல்வியானது பயனள்ளதாகவும், பொறுப்புள்ளதாகவும் அமைய வேண்டும் என கூறுகிறார். அரிஸ்டாட்டில்(Aristotle), ஹியூம்(Hume), மற்றும் ரூசோ(Rousseau), ஆகியோரின் கூற்றுப்படி ஓர், நாட்டின் குடிமக்களுக்கு, தங்களது நாட்டின் சக குடிமக்களின் அணுகுமுறை, எதிர்பார்ப்பு ஆகியவை பற்றிய அறிவு வேண்டும் என கூறுகின்றனர்.
Question 58 |
நாம் குடியிருக்கும் நாட்டின் அரசாங்கம் நமக்களிக்கும் பாதுகாப்பு உரிமை எது?
சட்ட உரிமை | |
குடியுரிமை | |
சொத்துரிமை | |
கல்வியுரிமை |
Question 58 Explanation:
விளக்கம்: தேசியக் குடியுரிமை என்பது, நாம் குடியிருக்கும் நாட்டின் அரசாங்கம் நமக்களிக்கும் பாதுகாப்பும் உரிமையுமாகும். ஆனாலும் அரசிற்கு தீரக்கக்கூடிய பிரச்சினைகள் பெருமளவில் இருப்பதால், தனிமனித உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு சட்டத்தினால் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
Question 59 |
மனித இயல்பு மற்றும் பகுத்தறிவின் ஒரு பகுதியான உரிமைகள் எவை?
சட்ட உரிமை | |
குடியுரிமை | |
இயற்கை உரிமை | |
கல்வியுரிமை |
Question 59 Explanation:
விளக்கம்: இந்த வகையான உரிமைகள் மனித இயல்பு மற்றும் பகுத்தறிவின் ஒரு பகுதியாகும். இதனை பற்றி அரசியல் கோட்பாடுகள் கூறுவது என்னவென்றால் ஒவ்வொரு மனிதனும் சில அடிப்படை உரிமைகளைப் பெற்றுள்ளான். இதனை அரசாங்கங்கள் கூட மறுக்க இயலாது. மரபுவழி அரசியல் தத்துவத்தில் “இயற்கை உரிமை” என்பது நேர்மையை அடிப்படையாகக் கொண்ட சிறந்த செயலையும், தூய ஆத்மா, சரியான செயல்பாடுகள் மற்றும் அரசின் சிறந்த ஆட்சி என குறிப்பிடப்பட்டுள்ளது.
Question 60 |
நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சமமாகக் கிடைக்க ௯டிய உரிமை எது?
சட்ட உரிமை | |
நீதிநெறி உரிமை | |
இயற்கை உரிமை | |
பொருளாதார உரிமை |
Question 60 Explanation:
விளக்கம்: நீதிநெறி உரிமை என்பது நன்னடத்தை, மரியாதை, நல்லொழுக்கம் ஆகியன பற்றியது ஆகும். இது அறநெறியின் படி மக்களை முழுமையாக வழி நடத்தி செல்கின்றது. சட்ட உரிமைகள் என்பது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சமமாகக் கிடைக்க ௯டிய ஒன்றாகும். இதில் எவ்வித பாகுபாடும் இன்றி பின்பற்றப்படுகிறது. சட்ட உரிமைகள் என்பது அரசினால் ஏற்று கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் ஆகும். சட்ட உரிமைகள் என்பது மூன்று வகைப்படும்.
Question 61 |
கீழ்க்கண்டவற்றுள் குடியுரிமைகள் எவை?
உயிர் வாழுகின்ற உரிமை | |
சட்ட உரிமை | |
இயற்கை உரிமை | |
a) மற்றும் b) |
Question 61 Explanation:
விளக்கம்: இந்த வகையான உரிமைகள் ஓர் மனிதன் சமூகத்தில் நாகரிகமான வாழ்க்கையை வாழ்வதற்கு அடிப்படை உரிமைகளை வழங்குகிறது. இது அரசினால் பாதுக்காக்கப்படுகிறது. அதாவது உயிர் வாழுகின்ற உரிமை, சுதந்திரம், மற்றும் சமத்துவம் ஆகிய குடிமை உரிமைகளை அரசு நிலைநாட்டி பாதுகாக்கிறது.
Question 62 |
கீழ்க்கண்ட எந்த உரிமையின் மூலம் மக்கள் தங்களது குடிமை மற்றும் அரசியல் உரிமைகளைப் பயன்படுத்த அதிகாரம் அளிக்கப்படுகிறது?
அரசியல் உரிமைகள் | |
குடிமை உரிமைகள் | |
பொருளாதார உரிமைகள் | |
a) மற்றும் b) |
Question 62 Explanation:
விளக்கம்: இந்த உரிமைகள் தனிமனிதனுக்கு பொருளாதார பாதுகாப்பு அளிப்பதாகும். இதன் மூலம் மக்கள் தங்களது குடிமை மற்றும் அரசியல் உரிமைகளைப் பயன்படுத்த அதிகாரம் அளிக்கப்படுகிறது. பொருளாதார உரிமை என்பது ஒருவருக்கு வேலை வாய்ப்பு உரிமை, தகுந்த பாதுகாப்பு உரிமை, சமூக பாதுகாப்புரிமை ஆகியவற்றினை அளிப்பது போன்றவை ஆகும். மக்கள் தங்களது நன்னடத்தை யின் மூலம் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு வழிவகை செய்வது அரசியல் உரிமைகள் ஆகும். இது வாக்களிக்கும் உரிமை, தேர்ந்தெடுக்கப்படும் உரிமை, பொதுப் பதவி வகிக்கும் உரிமை போன்றவை ஆகும்.
Question 63 |
ஒரு குறிப்பிட்ட சூழலில் தனி மனிதர்களுக்கு வழங்கப்படும் உறுதிகள் மற்றும் அதன் செயலாக்கங்கள் எது?
அரசியல் உரிமைகள் | |
ஒப்பந்தம் மூலம் பெறும் உரிமைகள் | |
சட்ட உரிமைகள் | |
மனித உரிமைகள் |
Question 63 Explanation:
விளக்கம்: இவ்வகையான உரிமைகள் என்பது தனி மனிதனுக்கு ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் வழங்கப்படுகிற வாக்குறுதிகள் அல்லது ஒப்பந்தங்கள் வாயிலாக தோற்றுவிக்கப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட சூழலில் தனி மனிதர்களுக்கு வழங்கப்படும் உறுதிகள் மற்றும் அதன் செயலாக்கங்களும் ஆகும். இதற்கு உதாரணமாக கூறவேண்டுமானால் பொருட்களை வாங்கும் உரிமை, சேவை பெறும் உரிமை, பொருள் அல்லது சேவையை விற்கும் உரிமை ஆகியவற்றினைக் குறிப்பிடலாம்.
Question 64 |
உரிமைகளில் மிகவும் உயர்ந்து இருப்பது எது?
அரசியல் உரிமைகள் | |
ஒப்பந்தம் மூலம் பெறும் உரிமைகள் | |
சட்ட உரிமைகள் | |
மனித உரிமைகள் |
Question 64 Explanation:
விளக்கம்: மனித உரிமைகள் என்பவை உரிமைகளில் மிகவும் உயர்ந்து இருப்பதாகும். இவை தார்மீக அடிப்படையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது உலகளவிலான மனித குலத்தின் நல்லியல்பில் உள்ளதாகும். இது உள்நாட்டு அளவிலும், சர்வதேச அளவிலும் சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலமாக ஆதரவளிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
Question 65 |
இராஜேந்திர பிரசாத் எத்தனையாவது அரசமைப்பு நிர்ணய சபையின் கூட்டத்தொடரில் குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?
12 | |
12 | |
14 | |
15 |
Question 65 Explanation:
விளக்கம்: 1950-ஆம் ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி பன்னிரண்டாவது அரசமைப்பு நிர்ணய சபையின் கூட்டத்தொடரில் இராஜேந்திரபிரசாத் முதலாவது இந்திய குடியரசு தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்டார். இதன் பிறகு அரசமைப்பு நிர்ணய சபையின் சட்ட மற்றும் அரசியல் வல்லுனர்கள் அரசமைப்பு கூட்டத்தின் அதிகாரப்பூர்வ பிரதிகளில் கையெழுத்திட்டனர்.
Question 66 |
மக்களாட்சிக்கு தேவையான அடிப்படை உரிமைகள் எவை?
சுதந்திரம் | |
சமத்துவம் | |
a) மற்றும் b) | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 66 Explanation:
விளக்கம்: சுதந்திரம் மற்றும் சமத்துவம் இரண்டுமே மக்களாட்சிக்கு தேவையான அடிப்படை உரிமைகள் ஆகும். இந்த உறுப்பு பின்வரும் உரிமைகளை குடிமக்களுக்கு அளிக்கிறது. சுதந்திரமான பேச்சு, மற்றும் கருத்து உரிமை, பொது இடத்தில் ஆயுதங்களின்றி அமைதியாக கூடுதல், சங்கம் அமைக்கும் உரிமை, நாடு முழுவதும் சுதந்திரமாக உலவுகின்ற உரிமை, போன்றவற்றை வழங்குகிறது.
Question 67 |
வாழும் உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம் என்பது கீழ்க்கண்டவற்றுள் எதைக்குறிக்கிறது?
எந்த ஒரு குடிமகனுக்கும் தனிநபர் சுதந்திரம் மறுக்கப்பட கூடாது. | |
எந்த ஒரு குடிமகனுக்கும் தனிநபர் சுதந்திரம் மறுக்கப்பட கூடாது. | |
அவர் தனது சார்பாக வாதாட ஒரு வழக்குரைஞரை தேர்தெடுத்து கொள்ளும் உரிமை வழங்கப்பட வேண்டும். | |
இவை அனைத்தும். |
Question 67 Explanation:
விளக்கம்: எந்த ஒரு குடிமகனுக்கும் தனிநபர் சுதந்திரம் மறுக்கப்பட கூடாது. அதாவது எந்த ஒரு மனிதனும் கைது செய்யப்படும் போது அதற்கான காரணத்தை அவனுக்கு தெரிவிக்காமல் காவலில் வைக்கக் கூடாது. மேலும் அவர் தனது சார்பாக வாதாட ஒரு வழக்குரைஞரை தேர்தெடுத்து கொள்ளும் உரிமை வழங்கப்பட வேண்டும். அவர் கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாக நீதிமன்றத்தின் முன்பாக ஆஜர்படுத்தப்பட வேண்டும்.
Question 68 |
தடுப்புக் காவல் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவற்றை தேர்க.
தடுப்புக் காவல் என்பது காலத்தின் கட்டாயத்தினால் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவரின் செயலை தடுப்பதற்கானதாகும். | |
தடுப்பு காவல் என்பது ஒருவர் சட்டம் மற்றும் ஒழுங்கை அச்சுறுத்தும் வகையிலும், தேசப்பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதையும் தடுப்பதற்காக அரசால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை ஆகும். | |
இதற்காக அந்த நபரைக் கைது செய்யவோ அல்லது காவலில் வைக்கவோ அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது. | |
இவை அனைத்தும் |
Question 68 Explanation:
விளக்கம்: தடுப்புக் காவல் என்பது காலத்தின் கட்டாயத்தினால் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவரின் செயலை தடுப்பதற்கானதாகும். தடுப்பு காவல் என்பது ஒருவர் சட்டம் மற்றும் ஒழுங்கை அச்சுறுத்தும் வகையிலும், தேசப்பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதையும் தடுப்பதற்காக அரசால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை ஆகும். இதற்காக அந்த நபரைக் கைது செய்யவோ அல்லது காவலில் வைக்கவோ அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது.
Question 69 |
தற்போதைய நிலையில் மனிதர்களுக்கு எதிரான மிகவும் ஆபத்தான சுரண்டலாக கருதப்படுவது எது?
குழந்தைத்தொழிலாளர் முறை | |
கொத்தடிமை முறை | |
ஆட்கடத்தல் | |
இவை அனைத்தும் |
Question 69 Explanation:
விளக்கம்: ஆட்கடத்தல் செய்தல் என்பது மனிதர்களை விற்பதும் வாங்குவதும் அவர்களை அடிமை போன்று நடத்துவதும் ஆகும். இது மட்டுமன்றி குழந்தைத்தொழிலாளர் முறையும் சுரண்டலின் மற்றொரு பகுதி ஆகும். இக்குழந்தைகள் ஊதியமின்றி பணி செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இந்த காரணத்தினால்தான் அரசமைப்பு சட்டத்திலேயே அரசு சுரண்டலுக்கு எதிரான உரிமையை வழங்கியுள்ளது.
Question 70 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
எந்த குடிமகனும் அரசு நடத்தும் அல்லது அரசின் நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் கல்விபெறுவதற்கு உரிமையுண்டு என்பதனை மறுக்க இயலாது. | |
சாதி, மதம், இனம், பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டுமாயின் அரசின் நிதி உதவி அந்தக் கல்வி நிறுவனத்திற்கு மறுக்கப்படும். | |
இந்த சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் எவ்விதமான கல்வி முறையை பின்பற்ற வேண்டும் என்பதனை அரசு வலியுறுத்த முடியாது. | |
இவை அனைத்தும். |
Question 70 Explanation:
விளக்கம்: எந்த குடிமகனும் அரசு நடத்தும் அல்லது அரசின் நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் கல்விபெறுவதற்கு உரிமையுண்டு என்பதனை மறுக்க இயலாது. இந்த உரிமையை சாதி, மதம், இனம், பாலினம், நம்பிக்கை போன்றவற்றைக் காரணம் காட்டி மறுக்க இயலாது. குடிமக்கள் தாங்கள் விரும்பும் பள்ளிகள் அல்லது கல்லூரிகளில் கல்வி கற்றும் உரிமை உள்ளது. எந்த ஒரு கல்வி நிறுவனமாவது இந்த அடிப்படையில் பாகுபாடு காட்டுமாயின் அரசின் நிதி உதவி அந்தக் கல்வி நிறுவனத்திற்கு மறுக்கப்படும். மேலும் இந்த சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் எவ்விதமான கல்வி முறையை பின்பற்ற வேண்டும் என்பதனை அரசு வலியுறுத்த முடியாது. அந்தக் கல்வி நிறுவனங்களை அவரவர்களது பண்பாட்டினை பாதுகாக்கும் வகையில் செயலாற்ற அனுமதிக்க வேண்டும்.
Question 71 |
ஒரு குடிமகன் தனது உரிமையை பாதுகாத்து கொள்வதற்கு உயர் நீதிமன்றத்தினை அணுகுவதற்கு வழி வகை செய்யும் அரசியலமைப்பு பிரிவு எது?
30 | |
221 | |
32 | |
226 |
Question 71 Explanation:
விளக்கம்: ஒரு குடிமகன் தனது உரிமையை பாதுகாத்து கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தினை அணுகுவதற்கு இந்த உரிமை வழி வகை செய்கின்றது. அரசமைப்பின் உறுப்பு 32-இன்படி உச்ச நீதிமன்றம் பரிகாரம் செய்யலாம். அதுவே அரசமைப்புச் சட்ட உறுப்பு 226-இன்படி உயர்நீதிமன்றம் பரிகாரம் செய்கின்றது. இதற்காக நீதிமன்றம் நீதிப்பேராணைகளை பிறப்பிக்கிறது. இவைகள், ஐந்து வகைப்படும்.
Question 72 |
தகவல் உரிமை சட்டம் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவற்றை தேர்க.
கேட்பதனை சட்டப்பூர்வமாக்கியுள்ளது. இந்தச்சட்டமானது அரசாங்கங்களை வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும், குடிமக்களுக்கு பொறுப்புணர்வு கொண்டதாகவும் மாற்றியுள்ளது. | |
இதன் மூலமாக அரசின் நடவடிக்கைகளை தகவலறிந்த குடிமக்கள் எளிதாகக் கண்காணிக்க முடியும். | |
இதனால் அரசாங்கம் மக்களுக்கு கடமைப்பட்டதாக மாற்றப்பட்டுள்ளது. | |
இவை அனைத்தும். |
Question 72 Explanation:
விளக்கம்: தகவல் உரிமை சட்டம் 2005-இல் வழி வகை செய்து அரசாங்கத்திடம் மக்கள் தகவல்கள் கேட்பதனை சட்டப்பூர்வமாக்கியுள்ளது. இந்தச்சட்டமானது அரசாங்கங்களை வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும், குடிமக்களுக்கு பொறுப்புணர்வு கொண்டதாகவும் மாற்றியுள்ளது. இதன் மூலமாக அரசின் நடவடிக்கைகளை தகவலறிந்த குடிமக்கள் எளிதாகக் கண்காணிக்க முடியும். இதனால் அரசாங்கம் மக்களுக்கு கடமைப்பட்டதாக மாற்றப்பட்டுள்ளது.
Question 73 |
தனியுரிமையை பாதுகாக்கும் அரசமைப்பு பிரிவு எது?
24 | |
21 | |
20 | |
29 |
Question 73 Explanation:
விளக்கம்: இந்திய மக்கள் கண்டிப்பாக தனி மனித வாழ்வின் மதிப்பு மிக்க அம்சங்களான வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் விடுதலையை யாரிடமும் ஒப்படைக்க வேண்டியதில்லை. அரசிடம் தனி மனிதனின் அனைத்து உரிமைகளை சமர்ப்பிக்க வேண்டியதில்லை. தனியுரிமை என்பது மனிதனின் மாண்புடன் ஒன்றிணைந்ததாகும். தனியுரிமையைப் பாதுகாப்பதற்கு அரசமைப்பின் உறுப்பு 21-இல் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திரத்தின் உள்ளார்ந்த பகுதியாகும். இந்த உரிமைகள் அரசமைப்பின் பகுதி – III-இல் இடம் பெற்றுள்ளது.
Question 74 |
மாற்றுப்பாலினத்தவரின் உரிமைகள் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானவற்றை தேர்க.
உச்சநீதிமன்றமானது மத்திய – மாநில அரசுகளுக்கு ஓர் உத்தரவை வழங்கியுள்ளது. அதில் இவர்களின் பாலின அடையாளத்தினை சட்ட பூர்வமாக அங்கீகரிக்கும்படி கூறியுள்ளது. | |
இவர்களுக்கும் மற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து அடிப்படை உரிமைகளையும் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. | |
இவர்கள் பொது நலம் மற்றும் சுகாதாரம், சமூக - பொருளாதார உரிமைகளாகிய அனைத்தும் பெறும் உரிமையுடையவர்கள் ஆவர். | |
இவை அனைத்தும். |
Question 74 Explanation:
விளக்கம்: இவர்கள் இப்போது ‘மூன்றாம் பாலினம்’ என்று அழைக்கப்படுகின்றனர். உச்சநீதிமன்றமானது மத்திய – மாநில அரசுகளுக்கு ஓர் உத்தரவை வழங்கியுள்ளது. அதில் இவர்களின் பாலின அடையாளத்தினை சட்ட பூர்வமாக அங்கீகரிக்கும்படி கூறியுள்ளது. இவர்களுக்கும் மற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து அடிப்படை உரிமைகளையும் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இவர்கள் பொது நலம் மற்றும் சுகாதாரம், சமூக - பொருளாதார உரிமைகளாகிய அனைத்தும் பெறும் உரிமையுடையவர்கள் ஆவர்.
Question 75 |
அரசின் வழிகாட்டி நெறிமுறைகளில் இடம் பெற்றுள்ள காந்தியக் கொள்கைகள் எவை?
குடிசைத் தொழில்கள் தனிநபரின் அடிப்படையிலோ அல்லது கூட்டுறவு அடிப்படையிலோ கிராமப்புற பகுதிகளில் ஊக்குவிக்கப்பட வேண்டும். | |
மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் | |
அனைவருக்கும் ‘பொது குடிமைச் சட்டம்’ கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். | |
a) மற்றும் b) |
Question 75 Explanation:
விளக்கம்: அரசின் வழிகாட்டி நெறிமுறைகளில் காந்தியக் கொள்கைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றின்படி குடிசைத் தொழில்கள் தனிநபரின் அடிப்படையிலோ அல்லது கூட்டுறவு அடிப்படையிலோ கிராமப்புற பகுதிகளில் ஊக்குவிக்கப்பட வேண்டும் என கூறுகிறது. மேலும் காந்திய கூற்றுப்படி மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என கூறுகிறது.
Question 76 |
அரசின் நேரடி வழிகாட்டி நெறிமுறைகளில் தற்போதைய அரசாங்கங்களுக்கு கூறப்பட்டுள்ள நெறிமுறைகள் எவை?
ஆணுக்கும், பெண்ணுக்கும் சரிசமமான வாழ்வாதாரங்களை உருவாக்கித் தர வேண்டும். | |
ஆணுக்கும், பெண்ணுக்கும் சரிசமமான ஊதியத்தை வழங்குகின்றது. | |
அனைவருக்கும், போதிய ஓய்வு, வாழ்க்கை தரம், மற்றும் சமூக, பண்பாட்டு வாய்ப்புகள் போன்றவை உறுதி செய்யப்படுகின்றன. | |
இவை அனைத்தும். |
Question 76 Explanation:
விளக்கம்: அரசின் நேரடி வழிகாட்டி நெறிமுறைகள் இந்திய அரசமைப்பின் பகுதி நான்கில் இடம் பெற்றுள்ளது. இதில் அரசியல், சமூக, பொருளாதார திட்டங்களை உள்ளடக்கி அரசுக்கு வழிகாட்டக்கூடிய பல மக்கள் நலக்கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நெறிமுறைக் கோட்பாடானது மனித நலன் சார்ந்த சமதர்ம நோக்கினைக் கொண்ட ஒரு செயல் திட்டத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது. அரசின் நேரடி வழிகாட்டி நெறிமுறைகளில் போதிய அளவிற்கு தற்போதைய அரசாங்கங்களுக்கு நேரடி வழிகாட்டி நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளன. அதனை அரசு நடைமுறைப்படுத்தி ஆணுக்கும், பெண்ணுக்கும் சரிசமமான வாழ்வாதாரங்களை உருவாக்கித் தர வேண்டும் என இச்சட்டம் கூறுகிறது. இது ஆணுக்கும், பெண்ணுக்கும் சரிசமமான ஊதியத்தை வழங்குகின்றது. இந்த நேரடி வழிகாட்டி நெறிமுறையில் உள்ள கொள்கையின்படி அனைவருக்கும், போதிய ஓய்வு, வாழ்க்கை தரம், மற்றும் சமூக, பண்பாட்டு வாய்ப்புகள் போன்றவை உறுதி செய்யப்படுகின்றன.
Question 77 |
அரசின் நேரடி வழிகாட்டி நெறிமுறைகளில் இடம் பெற்றுள்ள சுதந்திர மக்களாட்சி கொள்கைகள் எவை?
அனைவருக்கும் ‘பொது குடிமைச் சட்டம்’ கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். | |
மேலும் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி வழங்க வேண்டும் எனவும் கூறுகிறது. | |
குழந்தைகள் உடல் ரீதியான சித்ரவதை அல்லது மன உளைச்சலுக்கு ஆளாவதை தடை செய்கிறது. | |
இவை அனைத்தும். |
Question 77 Explanation:
விளக்கம்: அரசின் நேரடி வழிகாட்டி நெறிமுறைகளில் இடம் பெற்றுள்ள சுதந்திர மக்களாட்சி கொள்கை யின்படி அனைவருக்கும் ‘பொது குடிமைச் சட்டம்’ கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி வழங்க வேண்டும் எனவும் கூறுகிறது. குழந்தைகள் உடல் ரீதியான சித்ரவதை அல்லது மன உளைச்சலுக்கு ஆளாவதை தடை செய்கிறது.
Question 78 |
குடிமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அரசியல் உரிமைகள் எவை?
வாக்களிக்கும் உரிமை | |
பொது அலுவலகத்தில் பங்குகொள்ளும் உரிமை | |
அரசை விமர்சனம் செய்யும் உரிமை | |
இவை அனைத்தும். |
Question 78 Explanation:
விளக்கம்: இந்தியா உள்ளிட்ட அனைத்து மக்களாட்சி நாடுகளும் அவற்றின் குடிமக்களுக்கு அரசியல்
உரிமைகளை உறுதியளிக்கின்றன. அவை பின்வருமாறு:
வாக்களிக்கும் உரிமை
பொது அலுவலகத்தில் பங்குகொள்ளும் உரிமை
*அரசை விமர்சனம் செய்யும் உரிமை
குடிமக்கள் அனைவரும் அரசியல் வாழ்வில் தீவிரமாக பங்கெடுப்பதற்கு சமமான வாய்ப்பினை பெற்றிருத்தல் வேண்டும் இந்த உரிமைகள் அனைவருக்கும் வாக்குரிமை என்பதன் அடிப்படையில் மக்களுக்கு கிடைக்கின்றது. இந்தியாவில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது.
Question 79 |
இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை எந்த ஆண்டு அளிக்கப்பட்டது?
1950 | |
1951 | |
1948 | |
1952 |
Question 79 Explanation:
விளக்கம்: 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலிலேயே இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. ஆனால் சுவிட்சர்லாந்து நாட்டில் 1971 ஆம் ஆண்டில் தான்பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
Question 80 |
இந்தியாவில் எத்தனை வயது பூர்த்தி அடைந்த ஒருவர் தேர்தலில் போட்டியிடலாம்?
21 | |
24 | |
25 | |
26 |
Question 80 Explanation:
விளக்கம்: இந்தியாவில் 25 வயது பூர்த்தி அடைந்த எவரும் தேர்தலில் போட்டியிடலாம். அரசை விமர்சிக்கலாம் என்ற உரிமை ஒரு முக்கியமான உரிமை என்பதோடு மக்கள் தங்களது மாறுபட்ட கருத்துக்களை பல்வேறு வகையிலும் தெரிவிக்கலாம். நாட்டின் பிரதமரின் வாக்கின் மதிப்பும் ஒரு சாதாரண மனிதனின் வாக்கின் மதிப்பும் பொதுத் தேர்தலில் ஒன்றே என்பது அரசியல் சமத்துவத்தைக் குறிக்கிறது.
Question 81 |
ஆண் பெண் இருவரும் வாய்ப்புகள் மற்றும் வளங்களை பெறுதல் என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மனித மாண்பு | |
வாய்ப்பு மற்றும் கல்வியில் சமத்துவம் | |
பாலின சமத்துவம் | |
இந்திய அரசியலமைப்பில் சமத்துவம் |
Question 81 Explanation:
விளக்கம்: மனித இனங்களில் ஆண் பெண் இருவரும் தமது தனிப்பட்ட திறனை மேம்படுத்திக் கொள்ளலாம். தங்களது விருப்பங்களை எவ்வித கட்டுப்பாடுமின்றி ஏற்படுத்தியும் கொள்ளலாம். பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படவில்லை மேலும் அவர்கள் ஆண்களைக் காட்டிலும் பலவீனமானவர்கள் என்பதோடு சமூகத்தில் ஆண்களுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் அவர்களை வைத்துள்ளனர். அவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும். சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது அவர்கள் இருவரும் ஒன்றாக ஆக வேண்டும் என்பது இல்லை. ஆனால் உரிமைகள், பொறுப்புகள் மற்றும் வாய்ப்புகள் ஆகியவை ஆண், பெண் என்பதை பொறுத்து அமைதல் கூடாது. பாலியல் சமத்துவம் என்பது ஆண் பெண் இருவரும் வாய்ப்புகள் மற்றும் வளங்களை பெறுதல் ஆகும்.
Question 82 |
பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் எத்தனை சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது?
33 | |
50 | |
60 | |
40 |
Question 82 Explanation:
விளக்கம்: பெண்கள் பொருளாதார நடவடிக்கைகளில் பங்கெடுக்கவும் முக்கியமான முடிவுகளை எடுக்கவும் உரிமை கொண்டவர்கள் ஆவர். பெண்கள் தமது திறன் மற்றும் கடின உழைப்பால் எவ்விதத்திலும் ஆண்களுக்கு குறைவானவர்கள் அல்லர் என்பதை நிரூபித்துள்ளனர். பெண்கள் தற்போது எல்லை பாதுகாப்பு படை, விமானப் படைகளில் வெற்றிகரமாக பணிபுரிந்து வருகின்றனர். பெண்களை மேம்படுத்தும் விதமாக உள்ளாட்சி அமைப்புகளில் 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
Question 83 |
2017ஆம் ஆண்டில் நிலையான மேம்பாட்டிற்கான 17 குறிக்கோள்களில் பாலின சமத்துவம் என்பது எத்தனையாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது?
5 | |
6 | |
10 | |
9 |
Question 83 Explanation:
விளக்கம்: பாலின சமத்துவம் என்பது பெண்கள், ஆண்கள் சிறுவர், சிறுமியர், ஆகியோர் சமமான உரிமைகள் வாய்ப்புகள் பெற வேண்டும் என்று கூறுவதோடு அவர்கள் ஒன்று போல நடத்தப்பட வேண்டும் என யூனிசெப் நிறுவனம் கூறுகிறது. 2017ஆம் ஆண்டில் நிலையான மேம்பாட்டிற்கான 17 குறிக்கோள்களில் பாலின சமத்துவம் என்பது ஐந்தாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Question 84 |
பெண்கள் சம அந்தஸ்து பெறுவதற்கு கடினமாக பணியாற்றியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் யார்?
மகாதேவ் கோவிந்தரானடே | |
தாராபாய் ஷிண்டே | |
தயானந்த சரஸ்வதி | |
இவை அனைத்தும் |
Question 84 Explanation:
விளக்கம்: பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து பல்வேறு முயற்சிகள் பெண்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராஜா ராம் மோகன் ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், தயானந்த சரஸ்வதி, மகாதேவ் கோவிந்தரானடே, தாராபாய் ஷிண்டே, பேகம் ருகேயா சகாவத் உசேன் ஆகியோர் பெண்கள் சம அந்தஸ்து பெறுவதற்கு கடினமாக பணியாற்றியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவர்.
Question 85 |
மனித மாண்பு என்பது கீழ்க்கண்டவற்றுள் எதனைக்குறிப்பிடுகிறது?
சுய மரியாதை | |
மனிதநேயம் | |
நேர்மை | |
உண்மை |
Question 85 Explanation:
விளக்கம்: மனித மாண்பு என்பது சுய மரியாதை ஆகும். மனித மாண்பு என்பது முக்கியமான மனித உரிமை என்பதோடு இதிலிருந்தே அனைத்து அடிப்படை உரிமைகளும் தோன்றுகின்றன. மாண்பு என்பது கௌரவமான மேலான சிறந்த தகுதி ஆகும். ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் ஒரு மதிப்பு மிக்க உறுப்பினர் என்பதை கருதுதல் வேண்டும்.
Question 86 |
இந்திய குடிமக்களுக்கு சமத்துவத்தை அளிக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் எவை?
14 - 18 | |
12 - 16 | |
12 - 18 | |
12 - 35 |
Question 86 Explanation:
விளக்கம்: உலகின் அனைத்து நாடுகளின் அரசியல் அமைப்புகளும் அதன் மக்களுக்கு சமத்துவத்தை உறுதி அளித்துள்ளன. இதேபோன்று இந்திய அரசியலமைப்பு அதன் குடிமக்களுக்கு அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 14-18 மூலம் சமத்துவத்தை அளிக்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் அனைவருக்கும் சட்டத்தின்படி சமமான பாதுகாப்பு என்பது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21 இல் மேலும் வலிமை படுத்தப்பட்டுள்ளது.
Question 87 |
பாகுபாட்டை தடை செய்யும் சட்டப்பிரிவு எது?
14 | |
15 | |
16 | |
18 |
Question 87 Explanation:
விளக்கம்: சட்டப்பிரிவு 14 சட்டத்தின் முன் அனைவரும் சமம் என உத்தரவாதம் அளிக்கிறது. சட்டப்பிரிவு 15 பாகுபாட்டை தடை செய்கிறது. சட்டப்பிரிவு 16 பொது வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கிறது. சட்டப்பிரிவு 17 தீண்டாமையை ஒழிக்கிறது. சட்டப்பிரிவு 18 பட்டங்கள் அளித்து வேறுபடுத்துதலை தடை செய்கிறது.
Question 88 |
கீழ்க்கண்டவற்றுள் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் எவை?
அனைவரையும் நியாயமாக நடத்துதல் | |
அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பண்பாட்டினை உருவாக்குதல் | |
வாய்ப்புகள் அனைவரும் பெறுவதை உறுதிப்படுத்துதல் | |
இவை அனைத்தும் |
Question 88 Explanation:
விளக்கம்: நாம் பின்வரும் வழிகளில் சமத்துவத்தை மேம்படுத்தலாம்
அனைவரையும் நியாயமாக நடத்துதல்
அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பண்பாட்டினை உருவாக்குதல்
வாய்ப்புகள் அனைவரும் பெறுவதை உறுதிப்படுத்துதல்
முழுஆற்றலையும் மேம்படுத்த ஊக்குவித்தல்.
சட்டம் மற்றும் கொள்கைகளை வகுத்தல்
கல்வி
Question 89 |
மக்களாட்சியின் தூண்கள் என்றழைக்கப்படுபவை எவை?
நீதி | |
சமத்துவம் | |
a) மற்றும் b) | |
கல்வி |
Question 89 Explanation:
விளக்கம்: இந்தியா உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடாகும். சமத்துவம் மற்றும் நீதி என்பது மக்களாட்சியின் தூண்கள் ஆகும். மக்கள் சமமாக நடத்தப்படும்போது நீதி எட்டப்படும். சமத்துவம் என்பது மிகவும் முக்கியமானதாகும், ஏனெனில் அது தனிமனித மாண்பினை தக்க வைக்கிறது. சமூகம் நல்ல முறையில் இயங்குவதற்கு சமத்துவம் ஒரு முக்கியமான கோட்பாடு ஆகும்.
Question 90 |
இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் என்ற அமைப்பு எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1946 | |
1947 | |
1948 | |
1949 |
Question 90 Explanation:
விளக்கம்: இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் என்ற அமைப்பு 1946 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Question 91 |
பொது நலத்திற்காக மக்கள் இணைந்து வாழும் இடம் எது?
சமூகம் | |
குடும்பம் | |
பள்ளி | |
வழிபாட்டுத்தலங்கள் |
Question 91 Explanation:
விளக்கம்: சமூகம் என்பது பொது நலத்திற்காக மக்கள் இணைந்து வாழும் இடம் ஆகும். நமது சமுதாயம் என்பது விவசாயிகள், தொழிலாளர்கள், கைவினைஞர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள்,மாணாக்கர்கள் போன்ற பலரையும் உள்ளடக்கியது ஆகும். மக்களின் மேம்பட்ட வாழ்க்கை முறைக்கு சமுதாயங்கள் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன.
Question 92 |
சமூகத்தின் அடிப்படை அலகு எது?
தெரு | |
குடும்பம் | |
பள்ளி | |
வழிபாட்டுத்தலங்கள் |
Question 92 Explanation:
விளக்கம்:சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம் ஆகும். குடும்பம் இருவகைப்படும். கூட்டுக்குடும்பம் மற்றும் தனிக்குடும்பம். பல குடும்பங்கள் சேர்ந்து இணக்கமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மேலும் பல குடியிருப்புகள் இணைந்து கிராமங்களாகவும் பல கிராமங்கள் இணைந்து நகரங்களாகவும் உருவாகின்றன. குடி நீர், உணவு, மின்சாரம், கல்வி, வீட்டு வசதி, போன்ற தேவைகளே மக்களை ஒன்றுபடுத்தி சமூக நல்லிணக்கத்துடன் வாழச்செய்கின்றன.
Question 93 |
2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியா எத்தனை முக்கிய மொழிகளைக்கொண்டுள்ளது?
122 | |
140 | |
150 | |
223 |
Question 93 Explanation:
விளக்கம்: 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியா 122 முக்கிய மொழிகளைக்கொண்டுள்ளது. 1599 பிற முக்கிய மொழிகளைக்கொண்டுள்ளது. இந்தோ ஆரியன், திராவிடன், ஆஸ்ட்ரோ ஆஸ்டிக், சீன திபெத்தியன் ஆகிய நான்கும் முக்கிய மொழிக்குடும்பங்களாகும். தமிழ் மொழியானது பழமையான திராவிட மொழி ஆகும்.
Question 94 |
உரிமைகள் மசோதாவை அறிமுகப்படுத்தியவர் யார்?
ஏ.வி. ஸ்மித் | |
வின்ஸ்டன் சர்ச்சில் | |
எங்கல்ஸ் | |
ஜேம்ஸ் மேடிசன் |
Question 94 Explanation:
விளக்கம்: ஜேம்ஸ் மேடிசன்உரிமைகள் மசோதாவை அறிமுகப்படுத்தியவர் ஆவார். இது 1776 இல் அவர் வெளியிட்ட புகழ்பெற்ற வெர்ஜீனியா மனித உரிமைகள் பிரகடனத்தின் அடிப்படையில் அமைந்தது ஆகும்.
Question 95 |
பிரிட்டன் அரசமைப்பிடமிருந்து இந்திய அரசமைப்புக்கு பெறப்பட்டவை எவை?
சட்ட உருவாக்கமுறைகள் | |
நாடாளுமன்ற அரசாங்கம் | |
சட்டத்தின் ஆட்சி | |
இவை அனைத்தும் |
Question 95 Explanation:
விளக்கம்: பிரிட்டன் அரசமைப்பு – சட்ட உருவாக்கமுறைகள், நாடாளுமன்ற அரசாங்கம், சட்டத்தின் ஆட்சி, ஒற்றைக்குடியுரிமை, ஈரவை அரசாங்கம். இந்திய அரசாங்க சட்டம் 1935 – கூட்டா ட்சி முறை, ஆளுநர், நீதித்துறையின் பங்கு, நெருக்கடி நிலை அதிகாரங்கள்.
Question 96 |
அமெரிக்க அரசமைப்பிடமிருந்து இந்திய அரசமைப்புக்கு பெறப்பட்டவை எவை?
அடிப்படை உரிமைகள் | |
சுதந்திரமான நீதித்துறை | |
நீதிப்புனராய்வு | |
இவை அனைத்தும் |
Question 96 Explanation:
விளக்கம்: அமெரிக்க அரசமைப்பு – அடிப்படை உரிமைகள், சுதந்திரமான நீதித்துறை, நீதிப்புனராய்வு, குடியரசுத் தலைவர் பதவி நீக்க நடைமுறை, உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீதான குற்ற விசாரணை, துணைக்குடியரசுத் தலைவரின் பங்கு.
Question 97 |
மறுமலர்ச்சி காலக்கட்டத்தில் மனிதத்தன்மையின் விரும்பத்தக்க பகுதியாக மலர்ந்தது எது?
குடியுரிமை | |
அடிப்படை உரிமைகள் | |
அடிப்படை கடமைகள் | |
இவை அனைத்தும் |
Question 97 Explanation:
விளக்கம்: கிரேக்க மற்றும் ரோமானிய குடியரசுகளில் முக்கியத்துவம் பெற்ற குடியுரிமை என்பது நிலப்பிரபுத்துவ காலங்களில் முற்றிலுமாக மறைந்தது. மறுபடியும், மறுமலர்ச்சி காலக்கட்டத்தில் மனிதத்தன்மையின் விரும்பத்தக்க பகுதியாக குடியுரிமை மலர்ந்தது.
Question 98 |
வளர்ச்சியடைந்த பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கே குடியிரிமை வழங்கப்பட வேண்டும் என்பது யாருடைய கருத்தாகும்?
கன்பூசியஸ் | |
ரூசோ | |
அரிஸ்டாட்டில் | |
ஸ்டாயிக் |
Question 98 Explanation:
விளக்கம்: அரிஸ்டாட்டிலின் கூற்றுபடி, குடியுரிமை என்பது பிறப்பிடம், குடும்பம், பரம்பரை மற்றும் பண்பாட்டைச் சார்ந்து அமைவதாகும். ‘ஸ்டாயிக்குகளின் (Stoics)’ கருத்து வளர்ச்சியடைந்த பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கே குடியிரிமை வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.
Question 99 |
வயதான பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் நலன் சார்ந்த சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
2007 | |
2008 | |
2013 | |
2005 |
Question 99 Explanation:
விளக்கம்: வயதான பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் நலன் சார்ந்த சட்டம் (MWPSC Act) 2007-ல், முதியவர்கள் மற்றும் பெற்றோர் நலனுக்காக இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் படி முதியோருக்கு துரிதமாகவும், பயனுள்ளதாகவுமான நிவாரணத்தை வழங்க “பராமரிப்பு தீர்ப்பாயத்தினை” (Maintenance Tribunal) நிறுவியது. இச்சட்டத்தின்படி, பராமரிப்பு என்பது உணவு, உடுத்த உடை, இருப்பிடம் மற்றும் மருத்துவ சிகிச்சையையும் உள்ளடக்கியது ஆகும்.இச்சட்டத்தின் ஒரே நிபந்தனையாக, எவரெல்லாம் தன் சொந்த வருமானத்திலும், உடைமையின் மூலமும் தன்னை பராமரிக்க இயலாதவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் இப்பராமரிப்பின் கீழ் உட்படுவார்கள். இச்சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்ச பராமரிப்புச் செலவாக மாதம் 10,000 அளிக்க கட்டாயமாக்கப்பட்டது. பராமரிப்புத் தொகையானது, உரிமை கோருபவர்களின் தேவைகள் மற்றும் அவர்கள் இயல்பு வாழ்க்கையை வாழ்வதற்கான தேவைகளைப் பொருத்தும் அமைகிறது.
Question 100 |
தேசிய எல்லைகளை கடந்த குடி உரிமை எது?
தேசிய குடியுரிமை | |
சர்வதேச குடியுரிமை | |
உலக குடியுரிமை | |
இவை அனைத்தும் |
Question 100 Explanation:
விளக்கம்: உலக குடியுரிமை என்பது தேசிய எல்லைகளை கடந்த குடி உரிமை ஆகும். இவ்வுரிமையானது பலதரப்பட்ட மக்களும் நாடுகளும் சேர்ந்த கூட்டுறவு நடவடிக்கையை வலியுறுத்துகிறது. இதனால் குடியுரிமை என்பது பல்வேறுபட்ட சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை தீர்க்கக்கூடியதாக அமைகிறது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.