Online Test
Indian Polity Revision Test Part 1 in Tamil
இந்திய அரசியலமைப்பு -Revision Test in Tamil
Congratulations - you have completed இந்திய அரசியலமைப்பு -Revision Test in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
1946 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் எத்தனை உறுப்பினர்களைக்கொண்டது?
387 | |
389 | |
385 | |
384 |
Question 1 Explanation:
விளக்கம்: அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் நோக்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 389 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் என்ற அமைப்பு 1946 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக முனைவர் ராஜேந்திரபிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், மௌலானா ஆசாத், எஸ்.ராதாகிருஷ்ணன், விஜயலஷ்மி பண்டிட், uuசரோஜினி நாயுடு உட்படப் பலர் இந்த அமைப்பில் இடம்பெற்றிருந்தனர். 15 பெண் உறுப்பினர்கள் இந்த அமைப்பில் இடம்பெற்றிருந்தனர்.
Question 2 |
அரசமைப்புச்சட்ட வரைவுக்குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் யார்?
ஜவஹர்லால் நேரு | |
சர்தார் வல்லபாய் பட்டேல் | |
பி.என்.ராவ் | |
சரோஜினி நாயுடு |
Question 2 Explanation:
விளக்கம்: எட்டு பேர் கொண்ட அரசமைப்புச்சட்ட வரைவுக்குழு உருவாக்கப்பட்டு அதன் தலைவராக அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இதற்கான ஆலோசகராக பி.என்.ராவ் நியமிக்கப்பட்டார். இக்குழுவின் முதல் கூட்டம் 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெற்றது. அன்றே அரசமைப்புச் சட்டத்தை எழுதும் வேலைகள் தொடங்கிவிட்டன.
Question 3 |
இந்திய அரசமைப்பு இறுதி செய்யப்படுவதற்கு முன் எத்தனை முறை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன?
2000 முறை | |
1500 முறை | |
1300 முறை | |
1453 முறை |
Question 3 Explanation:
விளக்கம்: இக்குழுவினர் ஐக்கிய இராச்சியம் அமெரிக்கா, அன்றைய சோவியத் ரஷ்யா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உட்பட 60 நாடுகளின்அரசமைப்புச் சட்டங்களை வாசித்து, அவற்றில் இருந்த சிறப்பான பகுதிகளை முன் மாதிரியாகக்கொண்டு நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கினர். இந்திய அரசமைப்பு சட்டம் இறுதி செய்யப்படுவதற்கு முன் 2000 முறை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
Question 4 |
அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க எத்தனை ரூபாய் செலவிடப்பட்டது?
64 இலட்சம் | |
60 இலட்சம் | |
50 இலட்சம் | |
54 இலட்சம் |
Question 4 Explanation:
விளக்கம்: நமது அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை ஒவ்வோர் இந்தியருக்குமான நீதி, தன்செயலுரிமை சமத்துவத்தை உறுதி செய்வதோடு சகோதரத்துவத்தையும் வலியுறுத்த்துகிறது. அரசமைப்புச்சட்டத்தின் முன்னுரைதான் முகப்புரை என்றழைக்கப்படுகிறது. அது இந்தியாவை இறையாண்மை, சமத்துவம், மதச்சார்பின்மை, மக்களாட்சி குடியரசு என்று வரையறை செய்கிறது.
Question 5 |
ஒரு நாட்டின் உச்சநிலை அதிகாரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உயர்நீதி மன்றம் | |
மக்களாட்சி | |
இறையாண்மை | |
இராணுவம் |
Question 5 Explanation:
விளக்கம்: அரசமைப்புச் சட்டம் இந்திய மக்களுக்கு முழு அதிகாரத்தை வழங்கியுள்ளது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களிடம் நிறைவேற்று அதிகாரம் இருக்கிறது. இப்படியாக ஒரு நாட்டின் உச்சநிலை அதிகாரத்தையே இறையாண்மை என்கிறோம்.
Question 6 |
அடிப்படை உரிமைகள் மொத்தம் எத்தனை?
ஆறு | |
ஏழு | |
எட்டு | |
ஒன்பது |
Question 6 Explanation:
விளக்கம்: ஒவ்வொரு குடிமகனுக்கும் மிகத்தேவையான உரிமைகளே அடிப்படை உரிமைகள் என்று அழைக்கப்படுகின்றன. சம உரிமை, சுதந்திரமாக செயல்படும் உரிமை, சுரண்டலுக்கு எதிரான உரிமை, சுதந்திர
சமய உரிமை, கலாச்சார மற்றும் கல்வி பெறும் உரிமை, சட்டத்தீர்வு பெறும் உரிமை ஆகியவை இன்றியமையாத உரிமைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
Question 7 |
அரசுகள் சட்டமியற்றும்போதும் ஆட்சி செய்யும்போதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை எவை?
அடிப்படை உரிமைகள் | |
அடிப்படைக் கடமைகள் | |
முகப்புரை | |
அரசு நெறிமுறைக்கோட்பாடுகள் |
Question 7 Explanation:
விளக்கம்: அரசுகள் சட்டமியற்றும்போதும் ஆட்சி செய்யும்போதும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில வழிகாட்டுதல்களை அரசமைப்புச்சட்டம் வழங்கியுள்ளது. இவை கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவை அல்ல என்றாலும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை.
Question 8 |
பெற்றோர் அல்லது பாதுகாவலர் தம் குழந்தைக்கு 6 - 14 வயதுக்குள் கல்வி தருவது?
அடிப்படை உரிமைகள் | |
அடிப்படைக் கடமைகள். | |
முகப்புரை | |
அரசு நெறிமுறைக்கோட்பாடுகள். |
Question 8 Explanation:
விளக்கம்: தேசியக்கொடியையும் தேசிய கீதத்தையும் மதித்து நடப்பது, எல்லா குடிமக்களும் அரசியல் சட்டத்தை மதித்து பேணுவது, சுதந்திரத்திற்காக போராடிய நமது தலைவர்களை பின்பற்றி நடப்பது, நாட்டைப் பாதுகாப்பது, நாட்டுக்காக தேவைப்படும்போது சேவை செய்ய தயாராக இருப்பது, மத, மொழி, இன எல்லை கடந்து அனைவரும் சகோதர மனப்பான்மையுடன் இருப்பது, நமது பழம்பெருமை மிக்க பாரம்பரியத்தை காப்பது, காடுகள், நதிகள், ஏரிகள் உள்ளிட்ட இயற்கையையும் வன விலங்குகளையும் பாதுகாப்பது, அறிவியல், மனிதாபிமானம், சீர்திருத்த உணர்வுகளை வளர்ப்பது, வன்முறையைத் தவிர்த்து அரசு சொத்துக்களை பாதுகாப்பது.
Question 9 |
கீழ்க்கண்டவற்றுள் அடிப்படை உரிமை அல்லாதது?
சம உரிமை | |
கல்வி பெறும் உரிமை | |
ஓட்டுரிமை | |
கலாச்சார உரிமை |
Question 9 Explanation:
விளக்கம்: பதினெட்டு வயது பூர்த்தியான இந்தியக்குடிமகன் ஒவ்வொருவரும் ஓட்டளிக்கும் உரிமையைப் பெறுகிறார்கள். இந்த உரிமையை அவர்கள் பெறுவதற்கு ஜாதி, மதம், பாலினம், பொருளாதார அடுக்கு உட்பட எதுவும் தடையாக இருக்க முடியாது.
Question 10 |
நமது அரசியல் சட்டம் உருவானபோது மொத்தம் எத்தனை உறுப்புகள் இருந்தன?
395 | |
397 | |
398 | |
396 |
Question 10 Explanation:
விளக்கம்: நமது அரசியல் சட்டம் உருவானபோது, 395 உறுப்புகள், 22 பகுதிகள் மற்றும் 8 அட்டவணைகள் இடம்பெற்றிருந்தன.தற்போது 448 உறுப்புகள், 25 பகுதிகள், 12 அட்டவணைகள் இடம்பெற்றுள்ளன. அரசமைப்புச்சட்டம் 16.9.2016 வரை 101 முறை நிறுத்தப்பட்டுள்ளது.
Question 11 |
நேரடி மக்களாட்சி முறை கொண்ட நாடு எது?
இந்தியா | |
இங்கிலாந்து | |
அமெரிக்க ஐக்கிய நாடுகள் | |
சுவிட்சர்லாந்து |
Question 11 Explanation:
விளக்கம்: ஒரு நாட்டின் குடிமக்கள் தேர்தல் வழியில் தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும், அதன்மூலம் அரசு அதிகாரத்தில் நேரடியாகப் பங்கேற்பதையும்தான் மக்களாட்சி என்கிறோம். மக்களாட்சி அமைப்பில் குறிப்பிடத்தகுந்த அளவு அதிகாரம் மக்களிடம் இருக்கும். அவர்கள் நேரடியாக அரசியலில் ஈடுபடவும், அரசின் முடிவெடுக்கும் நடைமுறைகளில் பங்குபெறவும் இயலும். நேரடி மக்களாட்சி (Direct Democracy), பிரதிநிதித்துவ மக்களாட்சி (Representative Democracy) ஆகிய இரண்டும் பிரபலமான முறைகள். நேரடி மக்களாட்சி முறையில் மக்களே சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றிருப்பார்கள். நேரடி மக்களாட்சியில் மக்களே சட்டங்களை உருவாக்குகின்றர். அனைத்து சட்டத்திருத்தங்களையும் மக்கள்தான் அங்கீகரிப்பர். அரசியல்வாதிகள் நாடாளுமன்ற செயல்முறைகளின்படி ஆட்சி செய்வர். நேரடி மக்களாட்சியை வெற்றிகரமான செயல்படுத்தும் வரலாற்றைசுவிட்சர்லாந்து பெற்றுள்ளது.
Question 12 |
ஐ.நா உலக மக்களாட்சி நாளாக எந்நாளை அறிவித்துள்ளது?
செப்டம்பர் 15 | |
செப்டம்பர் 16 | |
செப்டம்பர் 17 | |
செப்டம்பர் 18 |
Question 12 Explanation:
விளக்கம்: 2007ல் ஐ.நா.சபை செப்டம்பர் 15 ஆம் நாளை உலக மக்களாட்சி தினமாக அறிவித்துள்ளது. இந்தியா போன்றதொரு மக்கள்தொகை மிக்க நாட்டில் அனைவரும் நிம்மதியாக வாழ வேண்டுமென்றால் மக்கள் அனைவரும் விதிகள், வழிமுறைகள், உரிமைகள் மற்றும் கடமைகளை அறிந்து பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. நமது அரசமைப்புச்சட்டம் அத்தகைய வழிமுறைகளை நமக்கு வழங்கியுள்ளது. அவை நமது நாட்டின் சட்ட ஒழுங்கைக் காப்பாற்றுவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.
Question 13 |
உலகில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டங்களிலேயே மிகப்பெரியது எது?
இந்தியா | |
இங்கிலாந்து | |
அமெரிக்க ஐக்கிய நாடுகள் | |
சுவிட்சர்லாந்து |
Question 13 Explanation:
விளக்கம்: இந்திய அரசமைப்புச்சட்டம்தான் உலகில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டங்களிலேயே மிகப் பெரியது. இதை டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் தலைமையிலான அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கியது. அதனால்தான் அவர் நமது அரசமைப்புச்சட்டத்தை உருவாக்கிய முதன்மை வடிவமைப்பாளராகக் கருதப்படுகிறார்.
Question 14 |
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் எந்த ஆண்டு பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது?
1920 | |
1910 | |
1930 | |
1924 |
Question 14 Explanation:
விளக்கம்: உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடு நியூஸிலாந்து (New zealand) ஆகும் (1893). ஐக்கிய பேரரசில் (United Kingdom) 1918ஆம் ஆண்டும், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (United states of America) 1920-ஆம் ஆண்டும்தான் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. அதே காலகட்டத்தில் இந்தியாவில் பணக்காரர்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை வழங்கப்பட்டிருந்தது. மகாத்மா காந்தி உட்படப் பல தலைவர்கள் அனைவருக்கும் ஓட்டுரிமை என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். இன்று இந்தியாவில் 18 வயது நிறைவடைந்த ஒவ்வொருவருக்கும் ஓட்டுரிமை வழங்கப்பட்டுள்ளது. (உலகளாவிய வயதுவந்தோர் உரிமைகளின்படி).
Question 15 |
இந்தியக்குடிமக்களில் எத்தனை சதவீதம் பேர் தங்களது நாட்டின் மக்களாட்சியின்மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன?
76% | |
77% | |
78% | |
79% |
Question 15 Explanation:
விளக்கம்: இந்தியக்குடிமக்களில் 79% பேர் தங்களது நாட்டின் மக்களாட்சியின் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக உலக அளவிலான இப்பட்டியலில் இந்தியாவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது.
Question 16 |
உலகின் மிக பழமையான மக்களாட்சி நாடு அல்லாதது எது?
நியூசிலாந்து | |
ஐஸ்லாந்து | |
இங்கிலாந்து | |
அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
Question 16 Explanation:
விளக்கம்: கிரேக்கத்தின் சிறப்புக்கூறு அரசியல் தத்துவத்தின் அடித்தளம் ஆகும். ரோமானியப் பேரரசின் சிறப்புக்கூறு நாகரிக வளர்ச்சியின் உலகளாவிய விரிவாக்கம் ஆகும். ஐஸ்லாந்தின் சிறப்புக்கூறு உலகிலேயே பழமையான மற்றும் நீண்ட காலமாக செயல்பட்டுவரும் நாடாளுமன்றத்தைக் கொண்டது. இங்கிலாந்தின் சிறப்புக்கூறு 1215இல் எழுதப்பட்ட மகாசாசனம் (மாக்னா கார்டா). அமெரிக்க ஐக்கிய நாடுகள் மிகப் பழமையான மக்களாட்சிகளுள் ஒன்றாகும்.
Question 17 |
தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை?
11 | |
13 | |
14 | |
12 |
Question 17 Explanation:
விளக்கம்: பல லட்சம் மக்கள் தொகையும், அதிக வருவாயும் இருக்கும் ஊர்களை மாநகராட்சியாக தமிழ்நாடு அரசு அறிவிக்கும். 12 மாநகராட்சிகள் இருக்கின்றன. 1. சென்னை 2. மதுரை 3.கோயம்புத்தூர் 4. திருச்சி 5. சேலம் 6. திருநெல்வேலி 7. ஈரோடு 8. தூத்துக்குடி 9.திருப்பூர் 10. வேலூர் 11. திண்டுக்கல் 12. தஞ்சாவூர் ஆகியன.
Question 18 |
இந்தியாவின் மிகபழமையான உள்ளாட்சி அமைப்பு எது?
தஞ்சாவூர் | |
மதுரை | |
திருச்சி | |
சென்னை |
Question 18 Explanation:
விளக்கம்: 1688ல் உருவாக்கப்பட்டசென்னை மாநகராட்சிதான் இந்தியாவின் மிக பழமையான உள்ளாட்சி அமைப்பாகும். தமிழ்நாட்டில மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையுடன், வருவாய் அதிகம் இருக்கும் ஊர்களை நகராட்சி என்று பிரித்துள்ளனர்.
Question 19 |
நகராட்சிகள் அதிகமாக உள்ள மாவட்டம் எது?
காஞ்சிபுரம் | |
மதுரை | |
திருச்சி | |
சென்னை |
Question 19 Explanation:
விளக்கம்: தமிழ்நாட்டில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட நகராட்சி வாலாஜாபேட்டை
நகராட்சி ஆகும் (வேலூர் மாவட்டம்). நகராட்சிகள் அதிகமாக உள்ள மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஆகும். நகர்ப்புறத்தை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என்றும் கிராமப்புறத்தை
ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி என்றும் பிரித்து வைத்திருக்கிறார்கள். இவை
உள்ளாட்சி அமைப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
Question 20 |
சுமார் 10 ஆயிரம் பேர் வாழக்கூடிய ஊர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நகராட்சி | |
பேரூராட்சி | |
ஊராட்சி | |
ஊராட்சி ஒன்றியம் |
Question 20 Explanation:
விளக்கம்: சுமார் 10 ஆயிரம் பேர் வாழக்கூடிய ஊராக இருந்தால் அதுதான் பேரூராட்சி. இந்தியாவிலேயே முதல் முறையாக பேரூராட்சி என்ற உள்ளாட்சி அமைப்பு தமிழ்நாட்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. மாநகராட்சிக்கு இந்திய ஆட்சிப்பணி (இ.ஆ.ப) அதிகாரி ஒருவர் ஆணையராக இருப்பார். நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையர்களாக நியமிக்கப்படுவார்கள். பேரூராட்சியின் நிர்வாக அலுவலர் செயல் அலுவலர் (EO) ஆவார்.
Question 21 |
கிராமங்கள் எதன் அடிப்படையில் பல பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன?
வருவாய் | |
மக்கள் தொகை | |
தொலைவு | |
இடம் |
Question 21 Explanation:
விளக்கம்: கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு கிராம ஊராட்சி ஆகும். கிராம ஊராட்சி மக்களுக்கும் அரசுக்கும் இடையே இணைப்புப் பாலமாக செயல்படுகிறது. கிராமங்கள், மக்கள் தொகைக்கு ஏற்ப பல பகுதிகளாகப் (Ward) பிரிக்கப்படுகின்றன. இதன் பிரதிநிதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள்
• ஊராட்சி மன்றத் தலைவர்
• பகுதி உறுப்பினர்கள்
• ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் (கவுன்சிலர்)
• மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்.
Question 22 |
ஊராட்சி ஒன்றியத் தலைவர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
ஊராட்சி மன்றத் தலைவர் | |
பகுதி உறுப்பினர் | |
மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் | |
கவுன்சிலர்கள் |
Question 22 Explanation:
விளக்கம்: பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு
ஊராட்சியிலும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் (கவுன்சிலர்) ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். கவுன்சிலர்கள் தங்களில் ஒருவரை ஊராட்சி ஒன்றியத் தலைவராகத் தேர்ந்தெடுப்பர். துணைத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுகிறார், வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) இதன் நிர்வாக அலுவலர் ஆவார்.
Question 23 |
எந்த மாவட்டத்தில் அதிகப்படியாக ஊராட்சி ஒன்றியங்கள் அமைந்துள்ளன?
சென்னை | |
தஞ்சாவூர் | |
விழுப்புரம் | |
மதுரை |
Question 23 Explanation:
விளக்கம்: விழுப்புரம் மாவட்டத்தில் தான் அதிகப்படியாக 22 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
• நீலகிரி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் 4 ஊராட்சி ஒன்றியங்கள் தான் உள்ளன.
Question 24 |
மாவட்டம் பல பகுதிகளாகப் பிரிக்கப்படுவதற்கு அடிப்படையான மக்கள் தொகை அளவு?
50,000 | |
60,000 | |
55,000 | |
70,000 |
Question 24 Explanation:
விளக்கம்: ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி அமைக்கப்பட்டுள்ளது. 50,000 மக்கள் தொகை என்ற அடிப்படையில் மாவட்டம் பல பகுதிகளாகப் (District Panchayat ward) பிரிக்கப்படுகின்றது. பகுதி உறுப்பினர்களைக் கிராம ஊராட்சி மக்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் தங்களின் ஒருவரை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கின்றனர். ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் வளர்ச்சித் திட்டங்களைக் கண்காணிக்கவும் மேற்பார்வையிடவும் செய்கின்றனர்.
Question 25 |
கீழ்க்கண்டவர்களுள் நேரடித்தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் யார்?
மேயர் | |
பகுதி உறுப்பினர்கள் | |
நகராட்சித்துணைத் தலைவர் | |
மேற்கண்ட அனைவரும் |
Question 25 Explanation:
விளக்கம்: உள்ளாட்சி அமைப்புகள் தேந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன.
தொகுதிகள், பகுதிகள் (wards) என அழைக்கப்படுகின்றன. பகுதி உறுப்பினர்களை மக்கள் நேரடித் தேர்தல் மூலம்
தேர்ந்தெடுக்கின்றனர். அவ்வாறே மாநகராட்சித் தலைவரும் (மேயர்), நகராட்சித் தலைவரும் நேரடி தேர்தல் மூலம் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். மாநகராட்சித் துணைத்தலைவரும், நகராட்சித் துணைத் தலைவரும் அந்தந்தப் பகுதி (ward)உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவர்.
Question 26 |
பொதுமக்களுக்குத் தேவையான பணிகள் எத்தனை வகைப்படும்?
2 | |
3 | |
5 | |
4 |
Question 26 Explanation:
விளக்கம்: பொதுமக்களுக்குத் தேவையான பணிகளை அவசியப்பணிகள், விருப்பப்பணிகள். இவை உள்ளாட்சி
அமைப்புகளால் வழங்கப்படுகின்றன.
அவசியப் பணிகள்:
• குடிநீர் வழங்குதல்
• தெருவிளக்கு அமைத்தல்
• தெருக்களைத் தூய்மைப்படுத்துதல்
• கழிவு நீர்க் கால்வாய் அமைத்தல்
• ஊர்ச்சாலைகள் அமைத்தல்
• மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்.
விருப்பப் பணிகள்:
• பூங்கா அமைத்தல்
• நூலகம் அமைத்தல்
• விளையாட்டு மைதானம் அமைத்தல்
இன்னும்பிற.
Question 27 |
கீழ்க்கண்டவற்றுள் மாநகராட்சியின் பணிகள் எவை?
குடிநீர் வசதி | |
பூங்காக்கள் | |
மருத்துவச் சேவை | |
மேற்கண்ட அனைத்தும் |
Question 27 Explanation:
விளக்கம்: குடிநீர் வசதி
• தெருவிளக்கு அமைத்தல்
• தூய்மைப் பணி
• மருத்துவச் சேவை
• சாலைகள் அமைத்தல்
• மேம்பாலங்கள் அமைத்தல்
• சந்தைகளுக்கான இடவசதி
• கழிவுநீர்க்கால்வாய்
• திடக்கழிவு மேலாண்மை
• மாநகராட்சிப் பள்ளிகள்
• பூங்காக்கள்
• விளையாட்டு மைதானங்கள்
• பிறப்பு, இறப்பு பதிவு. இன்னும்பிற
Question 28 |
கீழ்க்கண்டவற்றுள் கிராம ஊராட்சியின் வருவாய் எது?
வாகனக் கட்டணம் | |
பொழுதுபோக்கு வரி | |
தொழில் வரி | |
மேற்கண்ட அனைத்தும் |
Question 28 Explanation:
விளக்கம்:
• வீட்டுவரி
• தொழில் வரி
• கடைகள் மீதான வரி
• குடிநீர் இணைப்புக்கான கட்டணம்
• நிலவரியிலிருந்து குறிப்பிட்ட பங்கு
• சொத்துரிமை மாற்றம் – குறிப்பிட்ட பங்கு
• மத்திய மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு.
இன்னும்பிற.,
Question 29 |
கீழ்க்கண்டவற்றுள் மாநகராட்சியின் வருவாய் எது?
வாகனக் கட்டணம் | |
பொழுதுபோக்கு வரி | |
தொழில் வரி | |
மேற்கண்ட அனைத்தும் |
Question 29 Explanation:
விளக்கம்:
மாநகராட்சியின் வருவாய்:
• வீட்டு வரி
• குடிநீர் வரி
• கடைகள் மீதான வரி
• தொழில் வரி
• பொழுதுபோக்கு வரி
• வாகனக் கட்டணம்
• மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு.
இன்னும்பிற.,
Question 30 |
மக்களாட்சி அமைப்பின் ஆணிவேராக கருதப்படுவது எது?
ஊர்மன்றக்கூட்டம் | |
ஊராட்சி | |
கிராம சபை | |
கிராம சபைக் கூட்டம் |
Question 30 Explanation:
விளக்கம்: ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராம சபை அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு நிரந்தர அமைப்பு. கிராம சபைக் கூட்டம் சிறிய கிராமங்களிலும் நடைபெறும். கிராம சபையே மக்களாட்சி அமைப்பின் ஆணிவேராகும்.
இக்கூட்டம் ஆண்டுக்கு நான்கு முறை கூடும். மாவட்ட ஆட்சித்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்,
ஆசிரியர் போன்றோரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்வர். அப்போது மக்கள் தங்கள் தேவைகளையும் குறைகளையும் நேரடியாகச் சொல்லலாம். இக்கூட்டம் ஜனவரி 26, மே 1, ஆகஸ்டு 15, அக்டோபர் 2 ஆகிய நாள்களில் கூடும். இந்நாள்களைத் தவிர தேவைக்கேற்பவும் அவசர காலங்களிலும் கிராம சபை கூடும்.
இவை சிறப்பு கிராம சபைக்கூட்டம் எனப்படும்.
Question 31 |
தேசிய ஊராட்சி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 23 | |
ஏப்ரல் 25 | |
ஏப்ரல் 26 | |
ஏப்ரல் 24 |
Question 31 Explanation:
விளக்கம்: உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களைப் பரவலாக்குவது என்ற நோக்கத்திற்காகத் தேசிய பஞ்சாயத்து ராஜ் சட்டம் 1992ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கொண்டுவரப்பட்டது. இப்படியான ஓர் அமைப்பு வேண்டும் என்று இதற்கு இப்பெயர் வைத்தவர் நம் மகாத்மா காந்தி. தேசிய ஊராட்சி தினம் ஏப்ரல் 24.
Question 32 |
கீழ்க்கண்டவற்றுள் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் சிறப்பம்சங்கள் யாவை?
இடஒதுக்கீடு | |
தேர்தல் | |
நிதிக் குழு | |
மேற்கண்ட அனைத்தும் |
Question 32 Explanation:
விளக்கம்: • கிராம சபை அமைத்தல்
• மூன்றடுக்கு ஊராட்சி அமைப்பு
• இடஒதுக்கீடு
• தேர்தல்
• பதவிக்காலம்
• நிதிக் குழு
• கணக்கு மற்றும் தணிக்கை இன்னும் பிற
Question 33 |
எந்த ஆண்டு தமிழக அரசு பெண்களுக்கு உள்ளாட்சியில் 50%இடஒதுக்கீடு வழங்க சட்டத்திருத்தம் செய்துள்ளது?
2015 | |
2012 | |
2017 | |
2016 |
Question 33 Explanation:
விளக்கம்: அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்கள் பங்கேற்கும் வகையில் 33% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 2011 இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் 38% இடங்களில் வெற்றி பெற்றனர் என்பது சிறப்பு. 2016 ஆம் ஆண்டு தமிழக அரசு பெண்களுக்கு உள்ளாட்சியில் 50% இடஒதுக்கீடு வழங்க சட்டத்திருத்தம் செய்துள்ளது.
Question 34 |
தமிழகத்தின் மாநில தேர்தல் ஆணையம் எங்கு அமைந்துள்ளது?
மதுரை | |
தஞ்சாவூர் | |
கோவை | |
கோயம்பேடு |
Question 34 Explanation:
விளக்கம்: உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் 5 ஆண்டுகள். இதற்கான தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. மாநில தேர்தல் ஆணையம் இதற்கான தேர்தலை நடத்துகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளது. தமிழகத்தின் தேர்தல் ஆணையம் சென்னை கோயம்பேட்டில் உள்ளது.
Question 35 |
தமிழ்நாட்டில் அமைந்துள்ள பேரூராட்சிகளின் எண்ணிக்கை?
561 | |
562 | |
563 | |
564 |
Question 35 Explanation:
விளக்கம்:
கிராம ஊராட்சிகள் - 12,524
ஊராட்சி ஒன்றியங்கள் - 385
மாவட்ட ஊராட்சிகள் - 31
பேரூராட்சிகள் - 561
நகராட்சிகள் - 125
மாநகராட்சிகள் - 12
Question 36 |
உயர்குடியாட்சிக்கு எடுத்துக்காட்டு எது?
பூடான் | |
கத்தார் | |
ஓமன் | |
இங்கிலாந்து |
Question 36 Explanation:
விளக்கம்: உயர்குடியினரால் நடத்தப்பட்டு அமைக்கப்படும் அரசாங்கம் ஆகும். எ.கா. இங்கிலாந்து, ஸ்பெயின். ஒரு நபர் (வழக்கமாக அரசர்)- ஆல் அமைக்கப்படும் அரசாங்கமே முடியாட்சி (அரசியலமைப்பு முடியாட்சி) எனப்படும். எ.கா. பூடான், ஓமன், கத்தார்.
Question 37 |
முழு அதிகாரம் கொண்ட அரசாங்கம் எது?
உயர்குடியாட்சி | |
முடியாட்சி | |
தனிநபர் ஆட்சி | |
சிறு குழு ஆட்சி |
Question 37 Explanation:
விளக்கம்: முழு அதிகாரம் கொ ண்ட ஒரு நபரால் அமைக்கப்படும் அரசாங்கமே தனிநபர் ஆட்சி ஆகும். எ.கா. வட கொரியா, சவுதி அரேபியா. மக்களின் சிறிய குழு ஒன்று ஒரு நாட்டையோ (அ) அமைப்பையோ கட்டுப்படுத்துவதே “சிறு குழு ஆட்சி” எனப்படும். எ.கா. முன்னாள் சோவியத் யூனியன், சீனா, வெனிசுலா.
Question 38 |
மதகுருமார்களின் ஆட்சிக்கு எடுத்துக்காட்டு?
வாட்டிகன் | |
கத்தார் | |
ஓமன் | |
இங்கிலாந்து |
Question 38 Explanation:
விளக்கம்: மதகுருமார்கள் தம்மை கடவுளாகவோ (அ) கடவுளின் பெயரால், மதகுருமார்களால் அமைக்கப்படும் அரசாங்கமே “மதகுருமார்களின் ஆட்சி”. எ.கா. வாட்டிகன்.
Question 39 |
மக்களாட்சி உடைய நாடு அல்லாதது எது?
இந்தியா | |
அமெரிக்க ஐக்கிய நாடுகள் | |
பிரான்ஸ் | |
ஆஸ்திரேலியா |
Question 39 Explanation:
விளக்கம்: ஒரு நாட்டின் தகுதியுள்ள குடிமக்களால் வாக்களிக்கப்பட்ட தனிநபரோ அல்லது குழுவாகவோ தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் அமைக்கப்படும் அரசாங்கமே“மக்களாட்சி” எனப்படும். எ.கா. இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரான்ஸ்.
Question 40 |
மக்களிடமே அல்லது அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளிடமும் உயரிய அதிகாரம் இருக்கின்ற அரசாங்க முறை?
குடியரசு | |
மக்களாட்சி | |
உயர்குடியாட்சி | |
சிறு குழு ஆட்சி |
Question 40 Explanation:
விளக்கம்: மக்களிடமே அல்லது அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளிடமும் உயரிய அதிகாரம் இருக்கின்ற அரசாங்க முறையே “குடியரசு” எனப்ப டும். இவ்வகை அரசாங்கத்தில் ஒரு முடிமன்னரை காட்டிலும் மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட (அ) நியமிக்கப்பட்ட குடியரசுத்தலைவர் இருப்பார் .
(எ.கா) இந்தியா, ஆஸ்திரேலியா.
Question 41 |
முதன் முதலில் “குடியரசு” (Republic) எனும் சொல் எங்கு வடிவமைக்கப்பட்டது?
இங்கிலாந்து | |
அயர்லாந்து | |
ரோம் | |
ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
Question 41 Explanation:
விளக்கம்: பொ.ஆ.மு.500ம் ஆண்டு ரோம் நாட்டில் முதன் முதலில் “குடியரசு” (Republic) எனும்
சொல் வடிவமைக்கப்பட்டது. இச்சொல் “res publica” எனும் லத்தீன் மொ ழிச் சொல்லிலிருந்து பெறப்பட்ட து. இதன் பொருள் “பொது விவகாரம்” (public matter) என்பதாகும். இந்திய அரசியலமைப்பு நவம்பர் 26, 1949ல்
ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஜனவரி 26, 1950ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த து. எனவே, ஜனவரி மாதம் 26 நாள், 1950ஆம் ஆண்டு இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.
Question 42 |
பொது விவகாரங்களில் மக்கள் தங்களது விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மூலம் வெளிப்படுத்தும் அரசாங்கத்தின் வகை எது?
நேரடி மக்களாட்சி | |
மறைமுக மக்களாட்சி | |
பிரதிநிதித்துவ மக்களாட்சி | |
b) அல்லது c) |
Question 42 Explanation:
விளக்கம்: பொது விவகாரங்களில் மக்களே நேரடியாக முடிவெடுக்கக்கூடிய அரசு முறையே நேரடி மக்களாட்சி என்கிறோம். எ.கா. பண்டைய கிரேக்க நகர அரசுகள், சுவிட்சர்லாந்து. பொது விவகாரங்களில் மக்கள் தங்களது விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மூலம் வெளிப்படுத்தும் அரசாங்கத்தின் வகையே மறைமுக மக்களாட்சி என்று அழைக்கப்படுகிறது.
(எ.கா.) இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து.
Question 43 |
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு எது?
இந்தியா | |
சீனா | |
ரோம் | |
ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
Question 43 Explanation:
விளக்கம்: இந்தியா நாடாளுமன்றமக்களாட்சி முறையைக் கொண்டுள்ள நாடாகும். இந்தியாவின்
நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கியது. இது நாட்டிற்கு தேவையான சட்டங்களை உருவாக்குகிறது. கொள்கை முடிவெடுப்பதில் மக்கள் பங்கு பெறுவதும், ஒப்புதல் அளிப்பதும்
இந்தியாவிலுள்ள நாடாளுமன்ற மக்களாட்சி அரசாங்கத்தின் இரு முக்கிய கூறுகளாக விளங்குகின்றன. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியாவாகும்.
Question 44 |
இந்தியாவில் மக்களாட்சி எத்தனை முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் இயங்குகிறது?
ஐந்து | |
ஆறு | |
ஏழு | |
நான்கு |
Question 44 Explanation:
விளக்கம்: உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியாவாகும். இந்தியாவில் மக்களாட்சி பின்வரும் ஐந்து முக்கிய கொள்கைக ளின் அடிப்படையில் இயங்குகிறது. அவை இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, மக்களாட்சி மற்றும் குடியரசு.
Question 45 |
கீழ்க்கண்டவற்றுள் மக்களாட்சியின் குறைகள் எவை?
தல சுய ஆட்சி | |
மறைமுக அல்லது பிரதிநிதித்துவ முறை கொண்ட மக்களாட்சி | |
முடிவெடுக்கும் முறையில் காலதாமதம் | |
a) மற்றும் c) |
Question 45 Explanation:
விளக்கம்: குறைகள்:- 1. மறைமுக அல்லது பிரதிநிதித்துவ முறை கொண்ட மக்களாட்சி
2. வாக்காளர்களிடையே போதிய ஆர்வமின்மை மற்றும் குறைந்த வாக்குப்பதிவு
3. சில சமயங்களில் நிலையற்ற அரசாங்கத்திற்கு வழி வகுக்கிறது
4. முடிவெடுக்கும் முறையில் காலதாமதம்.
Question 46 |
இந்திய நாடாளுமன்ற த்தின் எந்த அவையில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற பிரதம அமைச்சரை, இந்திய அரசின் தலைவரான குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்?
மாநிலங்களவை | |
மக்களவை | |
a) அல்லது b) | |
இரண்டும் |
Question 46 Explanation:
விளக்கம்: இந்திய அரசு பகுதி கூட்டாட்சி அமைப்பு முறையைப் பெற்றுள்ள நாடு. இங்கே நடுவண் அரசு (நாடாளுமன்றம்), மாநில அரசு (சட்டமன்றம்), உள்ளாட்சி அமைப்புகள் (ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி) ஆகிய
நிலைகளில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தியாவில் பொதுத் தேர்தலை, இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது. தேசிய அளவில், இந்திய நாடாளுமன்ற த்தின் கீழவையான மக்களவையில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற பிரதம அமைச்சரை, இந்திய அரசின் தலைவரான குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
Question 47 |
இரு ஆங்கிலோ- இந்தியர்களைக் குடியரசுத்தலைவர் எந்த அவைக்கு நியமனம் செய்கிறார்?
மாநிலங்களவை | |
மக்களவை | |
a) அல்லது b) | |
மேலவை |
Question 47 Explanation:
விளக்கம்: நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்
தேர்தல்கள் மூலம் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேலும் இரு ஆங்கிலோ- இந்தியர்களைக் குடியரசுத்தலைவர் மக்களவைக்கு நியமனம் செய்கிறார். நாடாளுமன்றத்தின் மேலவையான
மாநிலங்களவை உறுப்பினர்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெ டுக்கின்றனர். மேலும் கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவை
ஆகிய துறைகளில் சிறப்பாகச் சேவை புரிந்த 12 பேரை மாநிலங்கள் அவைக்கு குடியரசுத்தலைவர் நியமனம் செய்கிறார்.
Question 48 |
மக்களவையின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு?
1951 - 1952 | |
1946 - 1947 | |
1948 - 1949 | |
1950 -1951 |
Question 48 Explanation:
விளக்கம்: இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், மக்களவையின் முதல் பொதுத் தேர்தல் 1951ம்
ஆண்டு அக்டோபர் 25ம் நாள் முதல் 1952ம் ஆண்டு பிப்ர வரி 21ம் நாள் வரை பல்வேறு கால கட்டங்களில் நடைபெற்றது. மொத்தம் இருந்த 489 இடங்களில் 364 இடங்களில் வெற்றி பெற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சியை அமைத்தது. சுதந்திர இந்தியாவில் மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆவார்.
Question 49 |
பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு?
1921 | |
1924 | |
1920 | |
1925 |
Question 49 Explanation:
விளக்கம்: இம்பீரியல் கவுன்சில் எனும் மத்திய சட்டசபைக்கும் மாகாண சட்டசபைக்கும்தேவையான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1920ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதுவே இந்திய வரலாற்றின் முதல் பொதுத்தேர்தல் ஆகும்.
Question 50 |
கீழ்க்கண்டவற்றுள் மக்களாட்சி முறை வெற்றிகரமாகச் செயல்படுவதற்கான நிபந்தனைகள் எவை?
பொதுமக்களின் கருத்து வலுவாகஇருத்தல் | |
மக்களிடையே சகிப்புத்தன்மை யும், மத நல்லிணக்கமும் நிலவுதல் | |
அடிப்படை உரிமைகள் பற்றிய அறிவும் விழிப்புணர்வும் மக்களிடம் ஏற்படுத்துதல் | |
மேற்கண்ட அனைத்தும். |
Question 50 Explanation:
விளக்கம்: 1) ஏழைகள் மற்றும் எழுத்தறிவற்றோருக்கு மக்களாட்சியின் பலன்களைக் கிடைக்கச்
செய்ய அதிகாரம் அளித்தல்.
2) தேர்ந்தெடுக்கப்பட்டப் பிரதிநிதிகள் தமது அதிகாரத்தையும், பொதுச்சொத்துக்களையும்
தவறாகப் பயன்படுத்தாமல் இருத்தல்.
3) மக்களாட்சி முறையை ப் பீடித்திருக்கும் சமூக தீமைகளையும், சமூகக்
கொடுமைகளையும் ஒழித்தல்.
4) மக்களின் கருத்தைப் பிரதிபலிக்கப் பாரபட்சமற்ற, திறமைமிக்க ஊடகங்களின்
தேவையை உணர்தல்.
Question 51 |
தன்னிச்சையான தேர்தல் ஆணையம் அமைத்திட இந்திய அரசியலமைப்பின் எப்பிரிவு வழிவகைச் செய்கிறது?
325 | |
324 | |
326 | |
321 |
Question 51 Explanation:
விளக்கம்: நாட்டின் சுதந்திரமான, நியாயமான தேர்தலை உறுதி செய்திட தன்னிச்சையான தேர்தல் ஆணையம்
அமைத்திட இந்திய அரசியலமைப்பின் பிரிவு 324ன் படி வழிவகைச் செய்கிறது. தற்போது தேர்தல் ஆணையமானது ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களை உள்ளடக்கியுள்ளது.
ii) பாராளுமன்ற தேர்தல் சம்மந்தமான வாக்காளர்களின் பட்டியல் தயாரித்தல், தொகுதிகளை வரையறை செய்தல் உட்பட அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டப் பிற அனைத்து விவகாரங்களைப் பெறுவதற்கான
சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றலாம்.
Question 52 |
எந்த சட்டத்தின் விதி எண் நோட்டா (NOTA) பற்றி விவரிக்கிறது?
49 - O | |
49 - Q | |
49 - P | |
49 - M |
Question 52 Explanation:
விளக்கம்: ஒரு மக்களாட்சி நடைபெறும் நாட்டிலுள்ள வாக்காளர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரையும் தேர்வு செய்ய விருப்பம் இல்லை எனில் வாக்காளர்கள் மேற்கண்ட எவரும் இல்லை எனும் ஓர் பொத்தானை வாக்கு இயந்திரத்தில் தேர்வு செய்யலாம்.இந்திய தேர்தல் நடத்தை விதிகள், (1961) - இல் எனும் சட்டத்தின் விதி எண் 49 - O இம்முறை பற்றி விவரிக்கிறது. 2014 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் நோட்டா முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. உலகில் நோட்டாவை அறிமுகப்படுத்திய 14 வது நாடு இந்தியாவாகும்.
Question 53 |
இந்திய குடியரசுத் தலைவர் பின்வரும் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
பாராளுமன்றத்தின் இரு அவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் | |
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் | |
a) மற்றும் b) | |
a) மட்டும் |
Question 53 Explanation:
விளக்கம்: இந்திய குடியரசுத் தலைவர் பின்வரும் உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் குழாம் (Electoral College) மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவை 1. பாராளுமன்றத்தின் இரு அவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
2. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்
குறிப்பு: பாராளுமன்றஇரு அவைகள் மற்றும் மாநில சட்டமன்றங்களில் நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்கள் இக்குழுவில் அங்கம் இடம் பெறமாட்டார்கள்.
Question 54 |
ஓர் அரசியல் கட்சி எத்தனை அங்கங்களை பெற்றுள்ளது?
மூன்று | |
நான்கு | |
ஐந்து | |
இரண்டு |
Question 54 Explanation:
விளக்கம்: ஓர்அரசியல் கட்சி என்பது அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்துவதற் காகத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிகழ்ச்சி நிரல்களையும், குறிப்பிட்டக் கொள்கைகளையும் கொண்ட, மக்கள் குழுவின் அமைப்பாகக் காணப்படும். தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் எனும் மூன்று அங்கங்களை ஓர் அரசியல் கட்சி பெற்றுள்ளது.
Question 55 |
இரு கட்சி முறை உள்ள நாடுகளுக்கு எடுத்துக்காட்டு எது?
பிரான்ஸ் | |
சீனா | |
கியூபா | |
அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
Question 55 Explanation:
விளக்கம்: உலகில் கட்சி முறையினை மூன்று வகைகளாக வகைப்படுத்தலாம்.
i) ஒரு கட்சி முறை - ஒரே ஒரு ஆளும் கட்சி மட்டும் பங்கு பெறுவது ஆகும். இம்முறையில் எதிர்கட்சிகள்
அனுமதிக்கப்படுவதில்லை. (எ.கா. சீனா, கியூபா, முன்னாள் சோவியத் யூனியன்)
ii) இரு கட்சி முறை - இரு முக்கிய கட்சிகள் மட்டுமே பங்கு பெறுவது ஆகும். (எ.கா. அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து)
iii) பல கட்சி முறை - இரண்டிற்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கு பெறுவது ஆகும். (எ.கா. இந்தியா, இலங்கை, பிரான்ஸ், இத்தாலி)
Question 56 |
ஒரு கட்சி தேசிய கட்சி என்ற தகுதியை பெற எத்தனை மாநிலங்களில் தேசியக்கட்சி என்ற தகுதியை பெற்றிருக்க வேண்டும்?
மூன்று | |
நான்கு | |
ஐந்து | |
இரண்டு |
Question 56 Explanation:
விளக்கம்: ஒரு கட்சி குறைந்தது நான்கு மாநிலங்களிலாவது மாநிலக் கட்சி என்ற தகுதியை பெற்றிருக்குமானால் அது ‘தேசியக் கட்சி’ என்ற தகுதியை பெறுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தல் வேண்டும்.
Question 57 |
2017 நிலவரப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசிய கட்சிகளின் எண்ணிக்கை
ஏழு | |
ஆறு | |
எட்டு | |
ஐந்து |
Question 57 Explanation:
விளக்கம்: இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து அரசியல் கட்சிகளையும் சமமாகப் பாவித்தப் போதிலும், தேசியக் கட்சிகளுக்கும், மாநிலக் கட்சிகளுக்கும் சில சிறப்புச் சலுகைகளை வழங்குகிறது. இக்கட்சிகளுக்கு தனித்தனிச் சின்னங்கள் வழங்கப்படுகிறது. ஒரு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் மட்டுமே அக்கட்சியின் சின்னத்தை உபயோகிக்க முடியும். 2017 நிலவரப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசிய கட்சிகளின் எண்ணிக்கை ஏழு ஆகும்
Question 58 |
மாநிலக் கட்சிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சிறு கட்சிகள் | |
பிராந்தியக்கட்சிகள் | |
பகுதிக்கட்சிகள் | |
வட்டாரக்கட்சிகள் |
Question 58 Explanation:
விளக்கம்: ஏழு தேசிய கட்சிகளைத் தவிர, நாட்டின் பெரும்பான்மையான முக்கிய கட்சிகளை“மாநிலக் கட்சி”களாக தேர்தல் ஆணையம் வகைப்படுத்தியிருக்கிறது. இக்கட்சிகள் பொதுவாகப் “பிராந்தியக் கட்சிகள்” என்று குறிப்பிடுவர். மக்களவை தேர்தலிலோ அல்லது மாநில சட்டசபைத் தேர்தலிலோ ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களை வெற்றி பெற்ற அல்லது குறிப்பிட்ட சதவிகித வாக்குகளைப் பெற்றதன் அடிப்படையில் இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு கட்சியை மாநிலக் கட்சியாக அங்கீகாரம் அளிக்கிறது.
Question 59 |
ஒரு கட்சி தேசியக் கட்சி எனும் பங்கு பெற மக்களவையில் குறைந்தபட்சம் எத்தனை சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும்?
2 சதவீதம் | |
3 சதவீதம் | |
4 சதவீதம் | |
6 சதவீதம் |
Question 59 Explanation:
விளக்கம்: இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி தேசியக் கட்சி எனும் பங்கு பெற பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்திருத்தல் வேண்டும்.
i) மக்களவை தேர்தலிலோ (அ) மாநில சட்டசபைத் தேர்தலிலோ குறைந்தபட்சம் நான்கு மாநிலங்களில் பதிவான மொத்தச் செல்லத்தகுந்த வாக்குகளில் குறைந்தபட்சம் 6% பெற்றிருக்க வேண்டும்.
ii) மக்களவையில் குறைந்தபட்சம் 2 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். மேலும் குறைந்தபட்சம் மூன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
iii) குறைந்தபட்சம் நான்கு மாநிலங்களில் ‘மாநிலக் கட்சியாக’ அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.
Question 60 |
தேசிய அரசுக்கும் பிராந்திய அரசுக்கும் இடையில் இருக்கும் உறவின் அடிப்படையில் அரசு எத்தனை வகைப்படும்?
2 | |
3 | |
4 | |
6 |
Question 60 Explanation:
விளக்கம்: தேசிய அரசுக்கும் பிராந்திய அரசுக்கும் இடையில் இருக்கும் உறவின் அடிப்படையிலேயே ஒற்றை ஆட்சி முறை என்றும் கூட்டாட்சி முறை என்றும் அரசு வகைப்படுத்தப்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்தின்படி தேசிய அரசும் பிராந்திய அரசுகளும் தங்களது அதிகாரங்களைப் பகிர்ந்து அவரவர் எல்லைக்கு உட்பட்டு சுதந்திரமாகச் செயல்படுவது கூட்டாட்சி முறை ஆட்சியாகும்.
Question 61 |
கூட்டாட்சி முறையை கொண்ட நாடுகளுக்கு எடுத்த்துக்காட்டு?
ஐக்கிய அமெரிக்க நாடுகள் | |
சுவிட்சர்லாந்து | |
ஆஸ்திரேலியா | |
மேற்கண்ட அனைத்தும் |
Question 61 Explanation:
விளக்கம்: ஐக்கிய அமெரிக்க நாடுகள், சுவிட்சர்லாந்து ஆஸ்திரேலியா, கனடா, ரஷ்யா, பிரேசில்,
அர்ஜென்டினா ஆகிய நாடுகள் கூட்டாட்சி முறையை கொண்டவை. கூட்டாட்சி முறையில் தேசிய அரசை மைய அரசு அல்லது மத்திய அரசு என்றும் பிராந்திய அரசை மாநில அரசு அல்லது மாகாண அரசு என்றும்
அழைக்கின்றனர்.
Question 62 |
கீழ்க்கண்டவற்றுள் கூட்டாட்சியின் நிறை அல்லாதது?
உள்ளூர் சுய ஆட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு இடையே சமரசம் ஏற்படுத்துதல் | |
மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு, நிர்வாகத் திறன்கள் மேம்பட வழிவகுக்கிறது. | |
மிகப் பெரிய நாடுகள் தோன்றுவதற்கு வழி செய்கிறது | |
இரட்டைக் குடியுரிமை |
Question 62 Explanation:
விளக்கம்: கூட்டாட்சியின் நிறைகள்:
* அதிகாரம் பகிர்ந்து அளிக்கப் படுவதால் மத்திய அரசின் சர்திவதிகாரப் போக்கைத் தடுக்கிறது.
* மிகப்பெரிய நாடுகளுக்குப் பொருத்தமானது
* பொருளாதார மற்றும் பண்பாட்டு முன்னேற்றங்களுக்கு நன்மை அளிக்கிறது.
Question 63 |
இந்திய அரசியலமைப்பில் கூட்டாட்சி முறை அம்சங்கள் எவை?
இரட்டை அரசாங்கம் | |
எழுதப்பட்ட அரசியலமைப்பு | |
அதிகாரப் பகிர்வு | |
மேற்கண்ட அனைத்தும் |
Question 63 Explanation:
விளக்கம்: இந்திய அரசியலமைப்பில் கூட்டாட்சி முறை அம்சங்கள்:
* இரட்டை அரசாங்கம்
* எழுதப்பட்ட அரசியலமைப்பு
* அதிகாரப் பகிர்வு
* அரசியல் அமைப்பின் உயர் அதிகாரம்
நாட்டின் உச்சபட்சசட்டமாக அரசியலமைப்புச் சட்டம் விளங்குகிறது. மத்திய மாநில அரசுகளால் இயற்றப்படும் சட்டங்கள் அதன் விதிகளுக்கு உட்பட்டு அமைதல் வேண்டும்.
* நெகிழும் தன்மையற்ற அரசியல் அமைப்பு
* சுதந்திரமான நீதித்துறை
* இரண்டு அவை ஆட்சி.
Question 64 |
நிர்வாக மற்றும் சட்டமன்ற அமைப்புகளுக்கு இடையே உள்ள தொடர்பின் தன்மையைப் பொறுத்து அரசுகள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன?
2 | |
3 | |
4 | |
5 |
Question 64 Explanation:
விளக்கம்: நவீன மக்களாட்சி முறைகளைப் நாடாளுமன்ற ஆட்சி முறை அதிபர் மக்களாட்சி முறை என இருவகைகளாகப் பிரிக்கலாம். நிர்வாக மற்றும் சட்டமன்ற அமைப்புகளுக்கு இடையே உள்ள தொடர்பின்
தன்மையைப் பொறுத்து அரசுகள் இவ்விரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. நாடாளுமன்ற ஆட்சி முறையில்
சட்டமன்றத்தில் கொள்கைகள் மற்றும் செயல்களுக்கு நிர்வாகத்துறை பொறுப்பேற்கிறது
Question 65 |
பொறுப்பு அரசாங்கம் நடைமுறையில் உள்ள நாடுகள் எவை?
பிரிட்டன் | |
ஜப்பான் | |
கனடா | |
மேற்கண்ட அனைத்தும் |
Question 65 Explanation:
விளக்கம்: நாடாளுமன்ற ஆட்சிமுறை அமைச்சரவை அரசாங்கம் அல்லது பொறுப்பு அரசாங்கம் அல்லது வெஸ்ட் மினிஸ்டர் அரசாங்க மாதிரி எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இவ்வகை ஆட்சிமுறை பிரிட்டன், ஜப்பான், கனடா, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
Question 66 |
கீழ்க்கண்டவற்றுள் நாடாளுமன்ற ஆட்சி முறை நிறைகள் எவை?
பொறுப்பான அரசாங்கம் | |
பரவலான பிரதிநிதித்துவம் | |
தொடர்ச்சியான கொள்கைகள் | |
a) மற்றும் b) |
Question 66 Explanation:
விளக்கம்: நாடாளுமன்ற ஆட்சி முறை நிறைகள்:
* சட்டமன்றம் மற்றும் நிர்வாகத் துறைக்கு இடையிலான இணக்கம்
* பொறுப்பான அரசாங்கம்
* சர்வாதிகாரத்தைத் தடுக்கிறது
* பரவலான பிரதிநிதித்துவம்
குறைகள்:
* நிலையற்ற அரசாங்கம்
* தொடர்ச்சியற்ற கொள்கைகள்
* அமைச்சரவையின் சர்வாதிகாரம்
* அதிகாரங்களைப் பிரிப்பதில் உள்ள சிக்கல்கள்
Question 67 |
அதிகாரப் பகிர்வு கொள்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட எங்கு காணப்படுகின்றன?
பிரேசில் | |
சீனா | |
கனடா | |
நியூசிலாந்து |
Question 67 Explanation:
விளக்கம்: அதிபர் மக்காளட்சி முறை என்பது சட்ட மன்றத்திற்கு பொறுப்பில்லாததாகவும் நாடாளுமன்றம் அற்றதாகவும் நிலைத்த நிர்வாகம் அற்றதாகவும் நிலைத்த நிர்வாக அமைப்பு உடையதாகவும் இருக்கும். அதிகாரப் பகிர்வு கொள்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இவ்வரசு முறை அமெரிக்கா, பிரேசில், இரஷ்யா, இலங்கை போன்ற நாடுகளில் நடை முறையில் உள்ளது.
Question 68 |
கீழ்க்கண்டவற்றுள் ஜெர்மனி நாடாளுமன்றத்தின் பெயர் எது?
கெனெஸட் | |
பந்தெஸ்டாக் | |
போக்டிங் | |
ஸ்டார்டிங் |
Question 68 Explanation:
விளக்கம்: இஸ்ரேல் - கெனெஸட்
ஜெர்மனி - பந்தெஸ்டாக்
டென்மார்க் - போக்டிங்
நார்வே - ஸ்டார்டிங்
ஐக்கிய அமெரிக்க நாடுகள் - காங்கிரஸ்
Question 69 |
கிச்சன் கேபினட் முறையைக் கொண்ட நாடு எது?
டென்மார்க் | |
நார்வே | |
அமெரிக்கா | |
பிரிட்டன் |
Question 69 Explanation:
விளக்கம்: அதிபர் அமைச்சரவையின் உதவியோடு ஆட்சிபுரிகிறார் அல்லது அமைச்சரவையைக்
"கிச்சன் கேபினட்" என்று அழைக்கிறார்கள். இது தேர்ந்தெடுக்கப்படாத துறைசார்ந்த செயலர்களைக் கொண்ட சிறு ஆலோசனைக் அமைப்பு ஆகும். அதிபரால் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்படும் இவர்கள் அதிபருக்கு மட்டுமே கடமைப்பட்டவர்களாகவும் எந்தநேரத்திலும் பதவியிறக்கம் செய்யப்படுவதற்கு உட்பட்டவர்களாகவும் இருப்பார்கள்.
Question 70 |
அமெரிக்க அதிபர் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
4 | |
5 | |
3 | |
6 |
Question 70 Explanation:
விளக்கம்: அமெரிக்க அதிபர் மாகாணம் மற்றும் அரசின் தலைவராகத் திகழ்கிறார். அரசின் தலைவர் என்பது ஒரு பெயரளவிற்கான பதவியாகும். அரசாங்கத்தின் தலைவராக நிர்வாக அமைப்புகளுக்கு தலைமைதாங்கி
வழிநடத்துகிறார். அமெரிக்க அதிபர் வாக்காளர் மன்றத்தினால் நான்காண்டுகளுக்கொரு முறை
தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒரு கடுமையான அரசியலமைப்புச் சட்டத்திற்கான குற்றச்சாட்டு இருந்தால மட்டுமே நாடாளுமன்றத்தால் பதவி இறக்கம் செய்ய முடியும்.
Question 71 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
மகா சபையின் (காங்கிரஸ்) செயல்பாடுகளுக்கு அதிபரும் அவரது செயலாளர்களும் பொறுப்பேற்க மாட்டார்கள். | |
மகா சபையில் இவர்கள் உறுப்பினராகவும் இருப்பதில்லை கூட்டங்களில் கலந்து கொள்வதும் இல்லை. | |
மகா சபையின் கீழவையான பிரதிநிதிகளின் அவையை அதிபரால் கலைக்க இயலாது | |
அனைத்தும் சரி. |
Question 71 Explanation:
விளக்கம்: அதிகாரங்களைப் பிரிக்கும் கோட்பாடு அடிப்படையிலேயே அமெரிக்க அதிபர் முறை
விளங்குகிறது. அரசின் சட்டமன்ற, நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறை அதிகாரங்கள் மூன்றும் தனியாக பிரிக்கப்பட்டு சுதந்திரமாக இயங்கும் அமைப்புகளாகும்.
Question 72 |
கீழ்க்கண்டவற்றுள் அதிபர் மக்களாட்சி முறையின் நிறைகள் யாவை?
ஜனநாயகமானது | |
அதிபரின் முறையான கட்டுப்பாடு | |
a) மற்றும் b) | |
நிர்வாக மற்றும் சட்டமன்றத்திற்கு இடையிலான இணக்கமான உறவு |
Question 72 Explanation:
விளக்கம்: அதிபர் மக்களாட்சி ஆட்சி முறை நிறைகள்:
* ஜனநாயகமானது
* அதிபரின் முறையான கட்டுப்பாடு
* முடிவெடுத்தலை மேம்படுத்துதல்
* மாகாண அரசாங்கம்.
குறைகள்:
* சர்வாதிகாரமாகச் சிதையும் வாய்ப்பு
* நிர்வாக மற்றும் சட்டமன்றத்திற்கு இடையிலான இணக்கமற்ற உறவு
* சட்டமன்றம் மற்றும் நிர்வாகக் குழுவுக்கு இடையிலான நல்லுறவின்மை
Question 73 |
இந்திய மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே உள்ள சட்ட மன்ற உறவுகளுக்கான பிரிவு?
243 முதல் 252 வரை | |
242 முதல் 252 வரை | |
235 முதல் 255 வரை | |
245 முதல் 255 வரை |
Question 73 Explanation:
விளக்கம்: இந்திய நாடு, இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வழி முறைகளுக்கு உட்பட்டு
மத்திய, மாநில அரசுகளுக்கிடையே அதிரங்களை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களின் கூட்டமைப்பு
ஆகும். மத்திய மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரங்கள் பகிர்ந்து கொள்ளப் பட்டாலும் அனைத்து
விவகாரங்களிலும் முடிவெடுப்பது மத்திய அரசே 3ஆகும். மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான
உறவு என்பது:
1. சட்ட மன்ற உறவுகள் (பிரிவுகள் 245 முதல் 255 வரை)
2. நிர்வாக உறவுகள் (பிரிவுகள் 256 முதல் 263 வரை)
3. நிதி உறவுகள் (பிரிவுகள் 268 முதல் 294 வரை)
Question 74 |
பொதுப்பட்டியலில் இடம்பெற்றுள்ள துறைகளின் எண்ணிக்கை?
52 | |
51 | |
53 | |
54 |
Question 74 Explanation:
விளக்கம்:பொதுப்பட்டியல் 52 துறைகளாக உள்ளன. குற்றவியல் மற்றும் சிவில் நடைமுறைகள்,
திருமணம் மற்றும் விவாகரத்து, பொருளாதாரம் மற்றும் சிறப்புத் திட்டமிடல், செய்தித்தாள், புத்தகங்கள்
மற்றும் அச்சகங்கள், மக்கள் தொகை கட்டுப்பாடு ஆகியன.
Question 75 |
வெளியுறவுத் துறைகள், பாதுகாப்பு போன்றவை எந்தப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது?
மத்தியப் பட்டியல் | |
மாநிலப் பட்டியல் | |
பொதுப்பட்டியல் | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 75 Explanation:
விளக்கம்: மத்தியப் பட்டியலில் 100 துறைகள் உள்ளடங்கியுள்ளது . வெளியுறவுத் துறைகள், பாதுகாப்பு,ஆயுதப்படைகள், தொலைதொடர்பு, தபால் மற்றும் தந்தி, மாநிலங்களுக்கிடையிலான வியாபாரம்
மற்றும் வணிகம்.மாநிலப் பட்டியல் 61 துறைகளைக் கொண்டுள்ளது. மாநிலத்தின் பொது ஒழுங்கு, காவல்
துறை, நீதித்துறை நிர்வாகம், சிறைத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், விவசாயம் போன்றவை
Question 76 |
உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை’ என அழைக்கப்படுபவர் யார்?
கர்சன் பிரபு | |
ரிப்பன் பிரபு | |
லிட்டன் பிரபு | |
வில்லியம் பெண்டிங் பிரபு |
Question 76 Explanation:
விளக்கம்: ரிப்பன் பிரபுவின் 1882ஆம் ஆண்டு தீர்மானத்தின்படி, மேற்கத்திய நாடுகளின்
மக்களாட்சி முறையின் அடிப்படையில் 19ஆம் நூற்றாண்டின் கால் இறுதியில் உள்ளாட்சி அமைப்புகள்
இந்தியாவில் புத்துயிர் பெற்றன. நவீன உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடித்தளமிட்டதால்
ரிப்பன் பிரபு, ‘உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை’ என அழைக்கப்படுகிறார்.
Question 77 |
மாகாணங்களில் தன்னாட்சி நடைமுறைக்கு வந்த ஆண்டு?
1935 | |
1936 | |
1937 | |
1939 |
Question 77 Explanation:
விளக்கம்: 1935 இந்திய அரசு சட்டம், மாகாணங்களில் தன்னாட்சியை அறிமுகப்படுத்தியது. இச்சட்டம் 1937இல் நடைமுறைக்கு வந்தது. காங்கிரஸ் ஆட்சி அமைத்த மாகாணங்களில், ஊரக வளர்ச்சிக்குச் சிறப்பு கவனம் அளிக்கப்பட்டது. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் கிராமங்களிலிருந்து நகரங்கள் வரை கட்டமைக்கப்பட வேண்டும் என்பது காந்தியடிகளின் திட்டங்களின் ஒரு முக்கியக் கூறாக இருந்தது.
Question 78 |
1957ஆம் ஆண்டின் பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு அடிப்படையாகத் திகழ்ந்தவை எவை?
சமூக அபிவிருத்தி திட்டம் (1952) | |
தேசிய நீட்டிப்பு சேவை (1953) | |
a) மட்டும் | |
a) மற்றும் b) |
Question 78 Explanation:
விளக்கம்: உள்ளாட்சி அமைப்புகள் என்ற முறையின் கருத்துருவாக்கம், 1957ஆம் ஆண்டு
முதல் 1986ஆம் ஆண்டு வரை, நான்கு முக்கிய குழுக்களின் உருவாக்கம் மற்றும் அவற்றின்
முயற்சியினால் நடைமுறைப்படுத்தப்பட்டது. சமூக அபிவிருத்தி திட்டம் (1952) மற்றும் தேசிய
நீட்டிப்பு சேவை (1953) ஆகியன, 1957ஆம் ஆண்டின் பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு அடிப்படையாகத் திகழ்ந்தன.
Question 79 |
மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்பினை பரிந்துரைத்த குழு?
பல்வந்த் ராய் மேத்தா குழு | |
அசோக் மேத்தா குழு | |
ஜி.வி.கே ராவ் குழு | |
எல்.எம்.சிங்வி குழு |
Question 79 Explanation:
விளக்கம்: மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்பு, வட்டார அளவில் பஞ்சாயத்து சமிதி, மாவட்ட அளவில் ஜில்லா பரிஷத். அசோக் மேத்தா குழு இரண்டு அடுக்கு முறை மற்றும் கட்சிகள் அனைத்து நிலை தேர்தல்களிலும் பங்கு பெற வேண்டும்.ஜி.வி.கே ராவ் குழு திட்டக்குழுவால் நியமிக்கப்படுதல். எல்.எம்.சிங்வி குழு 73 வது மற்றும் 74 வது அரசமைப்பு திருத்தச்சட்டங்கள் 1992.
Question 80 |
73 மற்றும் 74 வது அரசமைப்பு திருத்தச் சட்டங்களின் (1992) சிறப்பம்சங்கள் எவை?
பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது | |
பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டில் பெண்களுக்கும் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. | |
எல்லா அளவு நிலைகளிலும் தலைவர்கள் பதவிக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. | |
இவை அனைத்தும் |
Question 80 Explanation:
விளக்கம்: ¾ ஊராட்சி மற்றும் நகராட்சிகள் ‘உள்ளாட்சி அமைப்பு’ நிறுவனங்களாகச் செயல்படும். ¾ குடியரசு அமைப்பின் அடிப்படை அலகுகள்: வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள உரிய வயதுடையோரைக் கொண்ட கிராம சபைகள் (கிராமங்கள்) மற்றும் பகுதி குழுக்கள் (நகராட்சிகள்) ஆகியன. ¾ கிராமங்கள் இடையில் காணப்படும் வட்டாரம் / வட்டம் / மண்டலம் மற்றும் மாவட்ட அளவில் ஊராட்சிகள் என
மூன்றடுக்கு முறையில் செயல்படுகின்றன. இரண்டு மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையை உடைய சிறு மாநிலங்களில் பஞ்சாயத்துக்கள் இரண்டடுக்கு முறையில் இயங்குகின்றன. ¾ நேரடித் தேர்தலின் மூலம் அனைத்து அளவிலும் இடங்கள் நிரப்பப்படுகின்றன. ¾ அனைத்து அளவு நிலைகளில் பஞ்சாயத்து தலைவர்களுக்கான இடங்களில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு, மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்படும்.
Question 81 |
1994 தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் எவை?
மூன்று அடுக்கு அமைப்பு | |
கிராம சபை | |
தேர்தல் ஆணையத்தினை நிறுவுதல் | |
இவை அனைத்தும் |
Question 81 Explanation:
விளக்கம்: நிதி ஆணையத்தினை நிறுவுதல், மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதத்தில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு, பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு மற்றும் ) மாவட்ட திட்டக்குழுக்களை அமைத்தல்.
Question 82 |
கிராம ஊராட்சியின் ஆய்வாளராக செயல்படுபவர் யார்?
மாவட்ட ஆட்சியர் | |
வட்டாட்சியர் | |
கோட்டாட்சியர் | |
கிராம நிர்வாக அலுவலர் |
Question 82 Explanation:
விளக்கம்: கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகள், கிராம ஊராட்சி என்று அழைக்கப்படுகின்றன. தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். (18வயது பூர்த்தியடைந்தோர்) அவர்களது பணிக்காலம் 5 வருடங்கள் ஆகும். கிராம ஊராட்சியின் ஆய்வாளராக மாவட்ட ஆட்சியர் செயல்படுகின்றார். ஐநூறுக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்டுள்ள ஒவ்வொரு கிராமமும் கிராம ஊராட்சியாக உருமாறியுள்ளது.
Question 83 |
மாநகராட்சியின் ஆணையராக நியமிக்கப்படுபவர் யார்?
மாவட்ட ஆட்சியர் | |
மேயர் | |
கோட்டாட்சியர் | |
சட்ட மன்ற உறுப்பினர் |
Question 83 Explanation:
விளக்கம்: இந்திய ஆட்சிப்பணி (IAS) அதிகாரி ஒருவர் மாநகராட்சியின் ஆணையராக நியமிக்கப்படுகிறார். மாநகராட்சி சபையில் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் அனைத்தும் இவரால் செயல்படுத்தப்படுகிறன. மாநகராட்சி அலுவலகம் இவரது செயல்பாடுகளுக்கு உதவுகின்றது
Question 84 |
மாநகராட்சி குழு கூட்டங்களுக்குத் தலைமை தாங்குபவர் யார்?
மாவட்ட ஆட்சியர் | |
மேயர் | |
கோட்டாட்சியர் | |
சட்ட மன்ற உறுப்பினர் |
Question 84 Explanation:
விளக்கம்: மாநகராட்சித் தலைவரின் (மேயரின்) முக்கிய
பணிகள்:
• அரசுக்கும் மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் இடையே ஓர் இணைப்புப்பாலமாக மேயர் செயல்படுகிறார்.
• மாநகராட்சி குழு கூட்டங்களுக்குத் தலைமை தாங்குகிறார்.
• வெளிநாட்டு பிரமுகர்களை வரவேற்று உபசரிப்பார்
Question 85 |
நமது மக்களாட்சிக்கு அடிப்படையாக விளங்குபவை எவை?
தேர்தல் | |
உள்ளாட்சி அமைப்புகள். | |
அடிப்படை உரிமைகள் | |
சமத்துவம் |
Question 85 Explanation:
விளக்கம்: உள்ளாட்சி அமைப்புகளே அடிப்படைகளாகும். உள்ளாட்சி அமைப்புகளின் அரசமைப்பு நிலை, அவற்றின்செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியத்துவத்தினை அளிக்கின்றது. இருப்பினும், இந்தியாவில் இவற்றின் செயல்பாடுகளில் ஒரு சில நெருக்கடிகள் உள்ளன.
Question 86 |
அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்
Dr. இராஜேந்திரபிரசாத் | |
H.C. முகர்ஜி | |
சச்சிதானந்த சின்கா | |
V.T. கிருஷணமாச்சாரி |
Question 86 Explanation:
விளக்கம்: அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம், 1946ஆம் ஆணடு டிசம்பர் 9ஆம் நாள் நடைபெற்றது.
இச்சபையின் தற்காலிக தலைவராக மூத்த உறுப்பினர் Dr. சச்சிதானந்த சின்கா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அரசியலமைப்பை உருவாக்க கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும்போது அவர் இறந்ததைத் தொடர்ந்து, Dr. இராஜேந்திரபிரசாத் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவராகவும், H.C. முகர்ஜி மற்றும் V.T. கிருஷணமாச்சாரி இருவரும் துணைத் தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
Question 87 |
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்புக் கூறுகள் எவை?
உலகிலுள்ள எழுதப்பட்ட, அனைத்து அரசியலமைப்புகளை விடவும் மிகவும் நீளமானது. | |
இது நெகிழாத்தன்மை கொண்டதாகவும், நெகிழும் தன்மை கொண்டதாகவும் உள்ளது | |
கூட்டாட்சி முறை அரசாங்கத்தை (மத்திய, மாநில அரசுகள்) ஏற்படுத்துகிறது. | |
இவை அனைத்தும் |
Question 87 Explanation:
விளக்கம்: இதன் பெரும்பாலான கருத்துகள் பல்வேறு நாடுகளின் அரசியலமைப்புகளிலிருந்து
பெறப்பட்டவை. மத்தியில் மட்டுமல்லாமல் மாநிலங்களிலும் நாடாளுமன்ற முறையைத் தோற்றுவிக்கிறது.இந்தியாவைச் சமயச்சார்பற்ற நாடாக்குகிறது. சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது. உலகளாவிய வயது வந்தோர் வாக்குரிமையை அறிமுகப்படுத்தியதோடு 18 வயது நிரம்பிய குடிமக்கள் அனைவருக்கும் எந்த வித பாகுபாடுமின்றி வாக்குரிமையை வழங்குகிறது. ஒற்றை குடியுரிமையை வழங்குகிறது. சிறுபான்மையினர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கு சிறப்பு விதிகள் மூலம் சலுகைகள் வழங்க வகை செய்கிறது.
Question 88 |
"அரசியலமைப்பின் திறவுகோல்" என குறிப்பிடப்படுவது எது?
அடிப்படைக்கடமைகள் | |
அடிப்படை உரிமைகள் | |
அரசுநெறிமுறைக்கோட்பாடுகள் | |
முகவுரை |
Question 88 Explanation:
விளக்கம்: முகவுரை’ (Preamble) என்ற சொல் அரசியலமைப்பிற்கு அறிமுகம் அல்லது முன்னுரை என்பதைக் குறிக்கிறது. இது அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் இலட்சியங்களை உள்ளடக்கியது. இது அரசியலமைப்பின் சுருக்கம் அல்லது சாராம்சத்தைக் கொண்டது. இது பெரும் மதிப்புடன் "அரசியலமைப்பின் திறவுகோல்" என குறிப்பிடப்படுகிறது.
Question 89 |
இந்திய அரசியலமைப்பின் முகவுரைக்கு அடிப்படையான குறிக்கோள் தீர்மானம் யாரால் கொண்டுவரப்பட்டது?
Dr. இராஜேந்திரபிரசாத் | |
H.C. முகர்ஜி | |
நேரு | |
V.T. கிருஷணமாச்சாரி |
Question 89 Explanation:
விளக்கம்: 1947ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் நாள் இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜவகர்லால் நேருவின் ’குறிக்கோள் தீர்மானத்தின்’ அடிப்படையில் இந்திய அரசியலமைப்பின் முகவுரை அமைந்துள்ளது. இந்தியா ஒரு இறையாண்மைமிக்க, சமதர்ம, சமயச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு என நமது அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் நீதி என அனைத்திலும் பாதுகாப்பு வழங்குவதே இதன் நோக்கமாகும். இந்திய மக்கள் அனைவருக்கும் சுதந்திரமாகச் சிந்தித்தல், உணர்வுகளை வெளிப்படுத்துதல், நம்பிக்கை, சமய வழிபாடு ஆகியவற்றில் சுதந்திரமாக செயல்படஇந்திய அரசியலமைப்பு உத்திரவாதம் அளிக்கிறது. தகுதி, வாய்ப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சமத்துவத்தை அளிக்கிறது. இந்தியர்களிடையே சகோதரத்துவத்தை வளர்க்க ஊக்கமளிக்கிறது.
Question 90 |
இந்திய அரசியலமைப்பின் முகவுரை எந்த ஆண்டு திருத்தப்பட்டது?
1976 | |
1978 | |
1952 | |
1991 |
Question 90 Explanation:
விளக்கம்: இந்திய அரசியலமைப்பின் முகவுரை அமைந்துள்ளது. முகவுரையானது 1976ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின்படி திருத்தப்பட்டது. அதன்படி, சமதர்மம், சமய ச்சார்பின்மை, ஒருமைப்பாடு, என்ற மூன்று புதிய சொற்கள் சேர்க்கப்பட்டன. ’இந்திய மக்களாகிய நாம்’ என்ற சொற்களுடன் இந்திய அரசியலமைப்பின் முகவுரை தொடங்குகிறது. இது இந்திய அரசியலமைப்புத் தனது அதிகாரத்தை மக்களிடமிருந்து பெறப்பட்டதைத் தெளிவுபடுத்துகிறது. இதிலிருந்து, இந்திய மக்களே இந்திய அரசியலமைப்பின் ஆதாரம் என நாம் கூறமுடியும்.
Question 91 |
2003ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்ட திருத்ததின்படி நீக்கப்பட்ட உரிமை எது?
சொத்துரிமை | |
காமன்வெல்த் குடியுரிமை | |
அரசுரிமை | |
அனுமதியின்றி கூடும் உரிமை |
Question 91 Explanation:
விளக்கம்: இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின்பு, 1955ல் இயற்றப்பட்ட குடியுரிமைச்சட்டம், குடியுரிமை பெறுதல் மற்றும் குடியுரிமை இழத்தல் ஆகியன பற்றி விளக்குகிறது. இச்சட்டம் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தால் எட்டு முறை திருத்தப்பட்டுள்ளது. முதலில், இக்குடியுரிமைச் சட்டம் காமன்வெல்த் குடியுரிமையை வழங்கியது. ஆனால் 2003ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்ட திருத்ததின்படி இவ்வுரிமை நீக்கப்பட்டது.
Question 92 |
குடியுரிமைச் சட்டம் 1955, குடியுரிமைப் பெற எத்தனை வழிகளைப் பரிந்துரை செய்கிறது?
5 | |
6 | |
4 | |
3 |
Question 92 Explanation:
விளக்கம்: குடியுரிமைச் சட்டம் 1955, குடியுரிமைப் பெற ஐந்து வழிகளைப் பரிந்துரை செய்கிறது. அவை;
பிறப்பு, வம்சாவளி, பதிவுசெய்தல், இயல்புரிமை மற்றும் பிரதேச இணைவு ஆகும். குடியுரிமைச் சட்டம் 1955ன் படி ஒருவர் கீழ்க்காணும் ஏதேனும் ஒரு முறையில் குடியுரிமை பெறமுடியும்.
Question 93 |
முதலில் இந்திய அரசியலமைப்பு எத்தனை அடிப்படை உரிமைகளை வழங்கியது?
7 | |
6 | |
8 | |
9 |
Question 93 Explanation:
விளக்கம்: இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி (III) 12ல் இருந்து 35 வரையுள்ள சட்டப்பிரிவுகள் அடிப்படை உரிமைகள் பற்றி கூறுகின்றன. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் இந்த அடிப்படை உரிமைகளை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகளின் தாக்கத்தால் உருவாக்கினார்கள். முதலில் இந்திய அரசியலமைப்பு ஏழு அடிப்படை உரிமைகளை வழங்கியது. ஆனால், தற்போது ஆறு அடிப்படை உரிமைகள் மட்டுமே உள்ளன. இந்திய அரசியலமைப்பின் பகுதி (III) ’இந்தியாவின் மகாசாசனம்’ என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமைகள் பொதுவானது. ஆனால் இந்திய குடிமக்களுக்கு மட்டுமேயான சில அடிப்படை உரிமைகளும் உள்ளன.
Question 94 |
சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நிறுவி, நிர்வகிக்கும் உரிமை எது?
பிரிவு 30 | |
பிரிவு 28 | |
பிரிவு 29 | |
பிரிவு 27 |
Question 94 Explanation:
விளக்கம்: இந்திய அரசியலமைப்பின் பகுதி (III) ’இந்தியாவின் மகாசாசனம்’ என அழைக்கப்படுகிறது.
விளக்கம்: இந்திய அரசியலமைப்பின் பகுதி (III) ’இந்தியாவின் மகாசாசனம்’ என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமைகள் பொதுவானது. ஆனால் இந்திய குடிமக்களுக்கு மட்டுமேயான சில அடிப்படை உரிமைகளும் உள்ளன.
Question 95 |
Dr. B.R. அம்பேத்கரின் கூற்றுப்படி எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு இந்திய அரசியலமைப்பின் ’இதயம் மற்றும் ஆன்மா’ ஆகும்?
பிரிவு 30 | |
பிரிவு 12 | |
பிரிவு 17 | |
பிரிவு 31 |
Question 95 Explanation:
விளக்கம்: அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை (சட்டப்பிரிவு-32) நீதிமன்ற முத்திரையுடன், நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை நீதிப்பேராணை எனப்படும். இது சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடைசெய்ய, நீதிமன்றத்தால் வெளியிடப்படும் ஆணையாகும். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்கள் இரண்டுமே ஐந்து வகையான நீதிப்பேராணைகளை வெளியிட அதிகாரம் பெற்றுள்ளன. அவை ஆட்கொணர்வு நீதிப்பேராணை, கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை, தடையுறுத்தும் நீதிப்பேராணை ஆவணக் கேட்பு நீதிப்பேராணை, தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை ஆகியனவாகும். இது போன்ற ஆணைகளை வெளியிட்டு மக்களின் உரிமைகளைக் காப்பதினால் உச்சநீதிமன்றம் ‘அரசியலமைப்பின் பாதுகாவலன்’ என அழைக்கப்படுகிறது.
Question 96 |
சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாக்கும் பேராணை எது?
கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை | |
ஆட்கொணர்வு நீதிப்பேராணை | |
தடையுறுத்தும் நீதிப்பேராணை | |
ஆவணக் கேட்பு பேராணை |
Question 96 Explanation:
விளக்கம்: கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை (Mandamus):
மனுதாரர் சட்ட உதவியுடன் தனது மனுதொடர்பான பணியினைச் சம்மந்தப்பட்ட துறையிலிருந்து நிறைவேற்றிக் கொள்ள முடியும் தடையுறுத்தும் நீதிப்பேராணை (Prohibition): ஒரு கீழ்நீதிமன்றம் தனது, சட்ட எல்லையைத் தாண்டி செயல்படுவதைத் தடுக்கிறது.
Question 97 |
தகாத முறையில் அரசு அலுவலகத்தைக் கைப்பற்றுவதை தடை செய்யும் பேராணை எது?
கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை | |
தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை | |
தடையுறுத்தும் நீதிப்பேராணை | |
ஆவணக் கேட்பு பேராணை |
Question 97 Explanation:
விளக்கம்: இப்பேராணை சட்டத்திற்குப் புறம்பாக, தகாத முறையில் அரசு அலுவலகத்தைக் கைப்பற்றுவதை தடை செய்கிறது. ஆவணக் கேட்பு பேராணை (Certiorari): உயர்நீதிமன்றம், ஆவணங்களை நியாயமான பரிசீலனைக்கு தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ அனுப்பச் செய்ய கீழ்நீதிமன்றங்களுக்கு இடும் ஆணை ஆகும்
Question 98 |
குடியரசுத் தலைவரால் அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது, எந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உத்திரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரம் தாமாகவே நிறுத்தப்படுகிறது?
19 | |
12 | |
15 | |
16 |
Question 98 Explanation:
விளக்கம்: இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 352ன் கீழ் குடியரசுத் தலைவரால் அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது, இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19ன் கீழ் உத்திரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரம் தாமாகவே நிறுத்தப்படுகிறது. மற்ற அடிப்படை உரிமைகளையும் குடியரசுத் தலைவர் சில குறிப்பிட்ட ஆணைகளைப் பிறப்பிப்பதின் மூலம் தடை செய்யலாம். குடியரசுத் தலைவரின் இந்த ஆணைகள் நாடாளுமன்றத்தால் கட்டாயம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
Question 99 |
குடியரசுத்தலைவரால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த பிரிவு வழங்கும் உரிமைகளை தடை செய்ய முடியாது?
15 மற்றும் 21 | |
20 மற்றும் 24 | |
20 மற்றும் 25 | |
20 மற்றும் 21 |
Question 99 Explanation:
விளக்கம்: குடியரசுத்தலைவரால் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 20 மற்றும் 21ன் கீழ் வழங்கப்பட்ட உரிமைகள் (குற்றங்கள் மற்றும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்பு, வாழ்க்கை மற்றும் தனிநபர் சுதந்திரம் பாதுகாப்பு) தடைசெய்ய முடியாது.
Question 100 |
மத்திய அரசு இந்தியக்குடிமகன் ஒருவரின் குடியுரிமையை இழக்கச் செய்ய தேவையானவை?
உண்மைகளை மறைத்தவர் | |
எதிரி நாட்டுடன் வாணிகம் செய்தவர் | |
இரண்டாண்டு காலத்திற்கு சிறை தண்டனை பெற்றவர் | |
இவை அனைத்தும் |
Question 100 Explanation:
விளக்கம்: குடியுரிமைச் சட்டம் 1955ன் படி, மூன்று வழிகளில் இழப்பார்.
1. ஒரு குடிமகன் தாமாக முன்வந்து தனது குடியுரிமையை இழத்தல்.
2. வேறு ஒரு நாட்டில் குடியுரிமை பெறும்போது தாமாகவே இந்தியக் குடியுரிமை முடிவுக்கு வந்துவிடுதல்.
3. இயல்புரிமையின் மூலம் குடியுரிமை பெற்ற ஒரு குடிமகன், மோசடி செய்து குடியுரிமை
பெற்றவர், தவறான பிரதிநிதித்துவம் தந்தவர் (அ) உண்மைகளை மறைத்தவர் (அ) எதிரி நாட்டுடன் வாணிகம் செய்தவர் அல்லது இரண்டாண்டு காலத்திற்கு சிறை தண்டனை பெற்றவர். என்பதை மத்திய அரசு கண்டறிந்து அவர் குற்றம் புரிந்தவர் என்று திருப்திப்படும் பட்சத்தில் மத்திய அரசு, அவரது குடியுரிமையை இழக்கச் செய்யும்.
Question 101 |
இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் எதிலிருந்து எது வரை குடியுரிமையைப் பற்றி விளக்குகின்றன?
5 லிருந்து 11 வரை | |
6 லிருந்து 12 வரை | |
4 லிருந்து 10 வரை | |
5 லிருந்து 12 வரை |
Question 101 Explanation:
விளக்கம்: ’சிட்டிசன்’ (Citizen) எனும் சொல் ’சிவிஸ்’ (Civis) எனும் இலத்தின் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்.
இதன் பொருள் ஒரு ’நகர அரசில் வசிப்பவர்’ என்பதாகும். இந்திய அரசியலமைப்பு, இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான ஒற்றை குடியுரிமையை வழங்குகிறது. இந்திய அரசியலமைப்பின் பாகம் II சட்டப்பிரிவுகள் 5 லிருந்து 11 வரை குடியுரிமையைப் பற்றி விளக்குகின்றன.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 101 questions to complete.