Online Test
Geography Part 2 Revision Test in Tamil
Geography Part 2 Revision Test in Tamil
Congratulations - you have completed Geography Part 2 Revision Test in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய இருப்புப்பாதை போக்குவரத்து வலையமைப்பு எங்கு காணப்படுகிறது?
இந்தியா | |
சீனா | |
ரஷ்யா | |
அமெரிக்கா |
Question 1 Explanation:
விளக்கம்: சின்கான்வென் எனப்படும் உலகப்புகழ் வாய்ந்த அதிவிரைவு புல்லட் இரயில் (352 கி.மீ/ மணி) ஜப்பானிலுள்ள ஒசாகா மற்றும் டோக்கியோ இடையில் பயணிக்கின்றது. ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய இருப்புப்பாதை போக்குவரத்து வலையமைப்பு இந்தியாவில் காணப்படுகிறது.
Question 2 |
உலகிலேயே நீண்ட இருப்புப்பாதை வழித்தடம் எந்த இரு நகரங்களை இணைக்கிறது?
லெனின் கிரேட் - விளாடிவோஸ்டாக் | |
சிங்கப்பூர் - இஸ்தான்புல் | |
ஒசாகா - டோக்கியோ | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 2 Explanation:
விளக்கம்: உலகிலேயே நீண்ட இருப்புப்பாதை வழித்தடம் டிரான்ஸ்-சைபீரியன் இருப்புப்பாதை (9258 கி.மீ) ஆகும். அது கண்டம் கடக்கும் இருப்புப்பாதை போக்குவரத்து ஆகும். அது லெனின் கிரேட் மற்றும் விளாடிவோஸ்டாக் ஆகியவற்றை இணைக்கிறது. டிரான்ஸ் ஆசியா இருப்புப்பாதை சிங்கப்பூரை, துருக்கியிலுள்ள இஸ்தான்புல்லுடன் இணைக்கின்றது.
Question 3 |
இந்தியாவிலுள்ள ஆக்ராவிலிருந்து இலங்கையிலுள்ள மதாரா வரை செல்லும் ஆசிய நெடுஞ்சாலை எது?
ஆசிய நெடுஞ்சாலை 1 (AH1) | |
ஆசிய நெடுஞ்சாலை 43 (AH43) | |
ஆசிய நெடுஞ்சாலை 42 (AH42) | |
ஆசிய நெடுஞ்சாலை 32 (AH32) |
Question 3 Explanation:
விளக்கம்: ஆசிய நெடுஞ்சாலை வலையமைப்பிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை (20,557 கி.மீ) ஆசிய நெடுஞ்சாலை 1 (AH1) ஆகும். இது டோக்கியோவைத் துருக்கியுடன் இணைக்கிறது. ஆசிய நெடுஞ்சாலை 43 (AH43) இந்தியாவிலுள்ள ஆக்ராவிலிருந்து இலங்கையிலுள்ள மதாரா வரை செல்கின்றது. (3024 கி.மீ)
Question 4 |
எந்த ஒரு நாட்டிற்கும் பொருளாதார முன்னேற்றத்தின் முதுகெலும்பாக விளங்குவது எது/எவை?
வேளாண்மை | |
தொழிற்பிரதேசங்கள் | |
போக்குவரத்து | |
b) மற்றும் d) |
Question 4 Explanation:
விளக்கம்: எந்த ஒரு நாட்டிற்கும் பொருளாதார முன்னேற்றத்தின் முதுகெலும்பாக விளங்குவது போக்குவரத்தே ஆகும். ஆசியாவின் பல நாடுகளும் தங்களது போக்குவரத்து வலையமைப்பை மேம்படுத்தி வருகின்றன. ஆசியாவில் காணப்படும் மிகப் பொதுவான போக்குவரத்து சாலைப் போக்குவரத்து ஆகும்.
Question 5 |
ஆசிய நெடுஞ்சாலை வடக்கு தெற்காக எந்த இரு நாடுகளை இணைக்கிறது?
டோக்கியோ - துருக்கி | |
ரஷ்யா - இந்தோனேசியா | |
சிங்கப்பூர் - இஸ்தான்புல் | |
ஒசாகா - டோக்கியோ |
Question 5 Explanation:
விளக்கம்: ஆசிய நெடுஞ்சாலை கிழக்கில் டோக்கியோவையும் மேற்கில் துருக்கியையும், வடக்கில் ரஷ்யாவையும், தெற்கில் இந்தோனேசியாவையும் (1,41,000 கி.மீ) இணைக்கின்றது. இந்நெடுஞ்சாலை 32 நாடுகளின் வழியே கடந்து செல்கின்றது.
Question 6 |
ஐரோப்பாவைத் தெற்கு ஆசியாவுடன் இணைப்பது எது?
நன்னம்பிக்கை முனை வழி | |
டிரான்ஸ் பசிபிக் வழி | |
சூயஸ் கால்வாய் வழி | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 6 Explanation:
விளக்கம்: நன்னம்பிக்கை முனை வழி, ஐரோப்பாவைத் தெற்கு ஆசியாவுடன் இணைக்கின்றது. டிரான்ஸ் பசிபிக் வழி கிழக்காசியத் துறைமுகங்களை மேற்கு அமெரிக்க நாடுகளின் துறைமுகங்களுடன் இணைக்கின்றது. சூயஸ் கால்வாய் வழி உலக வர்த்தக வழியின் நடுவே பயணித்து ஐரோப்பாவைத் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவுடன் இணைக்கிறது. டோக்கியோ, ஷங்காய், சிங்கப்பூர், ஹாங்காங், சென்னை, மும்பை, கராச்சி மற்றும் துபாய் ஆகியன ஆசியாவின் முக்கியத் துறைமுகங்களாகும்.
Question 7 |
ஐரோப்பாவின் முதன்மை சமயம் எது?
கிருத்துவம் | |
இந்துக்கள் | |
முஸ்லிம்கள் | |
யூதர் |
Question 7 Explanation:
விளக்கம்: ஐரோப்பா கண்டம் மொழி மற்றும் கலாச்சாரங்களில் மிகுந்த வேறுபாடுகளைக் கொண்டு காணப்படுகின்றது. ஆங்கிலம், ஸ்பானிஷ், போர்ச்சுகீசு, பிரெஞ்சு, இத்தாலியன் மற்றும் ஸ்லோவிக் மொழிகள் ஐரோப்பா முழுவதும் பரவலாகப் பேசப்படும் மொழியாகும். ஐரோப்பாவின் முதன்மை சமயம் கிருத்துவம் ஆகும். குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் யூதர்களும் இக்கண்டத்தில் பரவிக் காணப்படுகின்றனர். இங்கு வாழும் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் காகசாய்டு இனத்தவர் ஆவார்.
Question 8 |
ஒரே பண்புகள் மற்றும் பழக்க வழக்கங்களைப் காலங்காலமாக பின்பற்றக் கூடிய மக்கள் குழுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இனக்குழுக்கள் | |
மனித இனம் | |
பழங்குடியினர் | |
மலை வாழ் மக்கள் |
Question 8 Explanation:
விளக்கம்: மனித இனத்தை மனித உயிர்களுக்குள்ளே பல்வேறு உயிரியல் குழுக்களாக பிரித்துள்ளார்கள். ஒரே பண்புகள் மற்றும் பழக்க வழக்கங்களைப் காலங்காலமாக பின்பற்றக் கூடிய மக்கள் குழுக்கள், மனித இனம் என்று அழைக்கப்படுகிறது. பெருமளவில் பரந்து காணப்படும் மனித இனத்தின் வகைகளை தலையின் வடிவம், முகம், மூக்கு, கண், முடியின் வகை, தோலின் நிறம் மற்றும் இரத்தத்தின் வகை போன்ற பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டுள்ளது.
Question 9 |
உலகின் முக்கிய மனித இனங்கள் எவை?
காக்கசாய்ட் | |
நீக்ராய்டு | |
மங்கோலாய்டு | |
இவை அனைத்தும். |
Question 9 Explanation:
விளக்கம்: உலகின் முக்கிய மனித இனங்கள்
காக்கசாய்டு (ஐரோப்பியர்கள்)
நீக்ராய்டு (ஆப்பிரிக்கர்கள்)
மங்கோலாய்டு (ஆசியர்கள்)
ஆஸ்ட்ரலாய்டு (ஆஸ்திரேலியர்கள்)
Question 10 |
வெள்ளை நிறத்தோலும், அடர்பழுப்பு நிறக்கண்களும், அலை போன்ற முடியும், நீளமான மூக்கும் உடைய இனம்?
காக்கசாய்டு | |
நீக்ராய்டு | |
மங்கோலாய்டு | |
இவை அனைத்தும். |
Question 10 Explanation:
விளக்கம்: காக்கசாய்டு என்பவர்கள் ஐரோப்பிய இனத்தவர்கள், இவ்வின மக்கள் வெள்ளை நிறத்தோலும், அடர் பழுப்பு நிறக்கண்களும், அலை போன்ற முடியும், நீளமான மூக்கும் உடையவர்களாவர். இவர்கள் யூரேசியாவிலும் காணப்படுகிறார்கள்.
Question 11 |
நீளமான தலை, மற்றும் தடித்த உதடுகளைக் கொண்ட இனக்குழு?
காக்கசாய்டு | |
ஆஸ்ட்ரலாய்டு | |
மங்கோலாய்டு | |
நீக்ராய்டு |
Question 11 Explanation:
விளக்கம்: நீக்ராய்டு இன மக்கள் கருமைநிறக் கண்கள், கருப்புநிறத் தோல், கருமையான, முடி, அகலமான மூக்கு, நீளமான தலை, மற்றும் தடித்த உதடுகளைக் கொண்டவர்களாவார்கள். இவர்கள் ஆப்பிரிக்காவில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள்.
Question 12 |
ஆசியா மற்றும் ஆர்க்டிக் பிரதேசத்தில் காணப்படும் இடம் எது?
காக்கசாய்டு | |
ஆஸ்ட்ரலாய்டு | |
மங்கோலாய்டு | |
நீக்ராய்டு |
Question 12 Explanation:
விளக்கம்: மங்கோலியர்கள் பொதுவாக ஆசியஆப்பிரிக்க இனத்தர்களாவர். இவர்கள் வெளிர் மஞ்சள் முதல் பழுப்புநிறத் தோல், நீளமானமுடி, தட்டையான முக அமைப்பு, பெரிய தலை மற்றும் மத்தியமான மூக்கு உடையவர்களாவார்கள். இவர்கள் ஆசியா மற்றும் ஆர்க்டிக் பிரதேசத்தில் காணப்படுகிறார்கள்.
Question 13 |
கீழ்க்கண்டவற்றுள் ஆஸ்திரேலியர்களின் தொடர்புடையது எது?
அகலமான மூக்கு | |
வெள்ளை நிறத்தோல் | |
அடர்பழுப்பு நிறக்கண் | |
அலை போன்ற முடி |
Question 13 Explanation:
விளக்கம்: ஆஸ்திரேலியர்கள் அகலமான மூக்கு, சுருள்முடி, கருப்புநிறத்தோல் மற்றும் குறைவான உயரம் உடையவர்களாக குட்டையானவர்களாகக் காணப்படுகிறார்கள். இவர்கள் ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவில் வாழ்ந்து வருகிறார்கள்.
Question 14 |
வட இந்தியாவில் திராவிடர்களின் முதல் நிலைத்தோற்றம் எது?
தோடர்கள் | |
சிந்து சமவெளி நாகரிகம் | |
பிராகுயி இன மக்கள் | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 14 Explanation:
விளக்கம்: இந்தியாவை மனித நாகரிகத்தின் தோட்டில் என்றே கூற வேண்டும். வட இந்தியாவில் திராவிடர்களின் முதல் நிலைத் தோற்றத்தையே, சிந்து சமவெளி நாகரிகம் என்கிறோம். பிற்காலத்தில் இந்தோ- ஆரியர்களின் வருகைக்குப் பிறகு திராவிட மக்கள் இந்தியாவின் தென்பகுதிக்குத் தள்ளப்பட்டார்கள். இந்தியாவின் தென்பகுதி மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் துளு ஆகியவை திராவிட மொழிகளாகும். பெரும்பாலும் இவர்கள் இந்தியாவின் தென் பகுதியில் வாழ்ந்து வந்தார்கள்.
Question 15 |
ஒரு குழுவின் அடையாளமாகவும், கலாச்சார புத்துணர்வுப் புள்ளியின் அடையாளமாகவும் திகழ்வது எது?
இனம் | |
மதம் | |
திருவிழாக்கள் | |
மொழி |
Question 15 Explanation:
விளக்கம்: மதம் என்பது ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையும், வழிபாட்டு முறையும் கொண்டதாகும். இது மனிதனை ஒரு மனித சமுதாயத்திற்குள் கொண்டுவரும். மதம் ஒரு குழுவின் அடையாளமாகவும், கலாச்சார புத்துணர்வுப் புள்ளியின் அடையாளமாகவும் திகழ்கிறது.
Question 16 |
கீழ்க்கண்டவற்றுள் மத வகைப்பாடுகள் எவை?
உலகளாவிய மதங்கள் | |
மனித இனப்பிரிவு மதங்கள் | |
நாடோடிகள் | |
இவை அனைத்தும் |
Question 16 Explanation:
விளக்கம்: மத வகைப்பாடுகள்
(அ) உலகளாவிய மதங்கள்
கிறிஸ்துவம், இஸ்லாம் மற்றும் புத்த மதம்
(ஆ) மனித இனப்பிரிவு மதங்கள்
ஜூடோயிசம், இந்துமதம் மற்றும் ஜப்பானிய ஷிண்டோயிசம்
(இ) நாடோடிகள் (அல்லது) பாரம்பரிய மதங்கள்
அனிமிஸம், ஷாமானிஸம் மற்றும் ஷாமன்
Question 17 |
பொருத்துக.
- a) ஜூடாய்ஸம் - 1) அகியாரி
- b) ஜொராஸ்டிரியம் - 2) சினகாக்
- c) சமணம் - 3) பசாதி
- d) புத்த மதம் - 4) விஹாரா
1) 2) 3) 4) | |
2) 1) 3) 4) | |
3) 4) 2) 1) | |
4) 3) 1) 2) |
Question 18 |
சமுதாய அமைப்பிற்கு கலாச்சாரத்தை பரப்பும் ஒரு பிரதான கருவியாக விளங்குவது எது?
இனம் | |
மதம் | |
திருவிழாக்கள் | |
மொழி |
Question 18 Explanation:
விளக்கம்: சமுதாய அமைப்பிற்கு மொழி கலாச்சாரத்தை பரப்பும் ஒரு பிரதான கருவியாகும். ஒருவர் மற்றொருவருடன் தொடர்பு கொள்வதற்கு எழுத்து வடிவிலோ அல்லது ஒலி வடிவிலோ மொழி பயன்படுத்தப்படுகிறது. அரசியல், பொருளாதார சமூக மற்றும் மத செயல்பாடுகளின் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள மொழி வழி வகுக்கிறது.
Question 19 |
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை?
22 | |
24 | |
18 | |
21 |
Question 19 Explanation:
விளக்கம்: இந்தியா பல வகையான மொழிகளைக் கொண்ட நாடு. இந்தி மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக உள்ளது. இந்திய மாநிலங்கள் மொழிகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அரசால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. வட இந்தியாவில் காஷ்மீர், உருது, பஞ்சாபி, இந்தி, ராஜஸ்தானி, குஜராத்தி, பெங்காலி, அஸ்ஸாமி மற்றும் பல மொழிகள் பயன்படுத்துகின்றனர். தென்னிந்தியாவில் முக்கியமான மொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் இவை திராவிட மொழிகள் என்றழைக்கப்படுகிறது.
Question 20 |
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் வரும் 3வது ஞாயிற்றுக்கிழமை எந்நாளாக கொண்டாடப்படுகிறது?
உலக மக்கள் தொகை நாள் | |
பன்னாட்டு தாய்மொழி தினம | |
உலக மத நல்லிணக்க நாள் | |
உலக கலாச்சார பல்வகை நாள் |
Question 20 Explanation:
விளக்கம்: * ஜூலை 11 - உலக மக்கள் தொகை நாள் - பிப்ரவரி 21
பன்னாட்டு தாய்மொழி தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் வரும் 3வது ஞாயிற்றுக்கிழமை - உலக மத நல்லிணக்க நாள்
மே-21 - உலக கலாச்சார பல்வகை நாள்
Question 21 |
புவியியல் தகவல் அமைப்பு (GIS) யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
வால்டா டாப்ளர் | |
ரோஜர் டாம்லின்டன் | |
a) மற்றும் b) | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 21 Explanation:
விளக்கம்: புவியியல் தகவல் அமைப்பு ஒரு கணினி சார்ந்த கருவியாகும். இதைக் கொண்டு கொடுக்கப்பட்ட புவியியல் நிலப்பரப்பைப் பற்றி அதிக புள்ளி விபரங்களைச் சேகரிக்க தொலை நுண்ணுர்வு, உலக அமைவிடம் கண்டறியும் தொகுதி மற்றும் பிற ஆதார மூலங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
Question 22 |
புவி தகவல் அமைப்பு கீழ்க்கண்டவற்றுள் எதனைக்கொண்ட அமைப்பாகும்?
கணினி வன்பொருள் | |
மென்பொருள் | |
புவித் தகவல்கள் | |
இவை அனைத்தும் |
Question 22 Explanation:
விளக்கம்: புவிதகவல் அமைப்பு என்பது கணினி வன்பொருள், மென்பொருள், புவித் தகவல்கள் மற்றும் பணியாளர் தொகுதி இணைந்த அமைப்பாகும்.
G – Geographic – புவி
I – Information – தகவல்
S – System – அமைப்பு
புவியியல் தகவல் அமைப்பு (GIS) 1950 இல் வால்டா டாப்ளர் மற்றும் கனடாவைச் சார்ந்த ரோஜர் டாம்லின்டன் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்டது. பொது மக்கள் சேவைக்காக புவிதகவல் தொகுதி கூகுள் நிலவரைபடம், யாகூ நிலவரைபடம் மற்றும் கூகுள் புவி மாதிரி போன்றவற்றை முதன்மை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.
Question 23 |
புவி தகவல் அமைப்பின் மிக முக்கிய மூலப்பொருள் எது?
கணினி | |
இட அமைப்பு | |
தகவல் | |
புவி |
Question 23 Explanation:
விளக்கம்: மிக முக்கிய மூலப்பொருள் இட அமைப்பு ஆகும். வரைபடத்தில் நமக்கு அறிமுகமில்லாத ஓர் இடத்தை அறிந்துகொள்ள, அறிமுகமான ஒரு முகவரியிலிருந்து இணைப்பு பெற்று தகவல்களை ஒருங்கிணைக்கலாம். ஒரு பகுதியின் ஒவ்வொரு வகையின் தரவுகளும் ஒரு வரைபடத்தின் தனித்தனி அடுக்குகளாகச் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. GIS இல் அடுக்குகள் தேவையெனில் பயன்படுத்தவும் தேவை இல்லை எனில் அதை நீக்கவும் செய்யலாம். எடுத்துக்காட்டாக மருத்துவமனை, பள்ளிக்கூடம், நீர்நிலைகள், பூங்காக்கள் மற்றும் ஏடிஎம். தரவின் இணைப்பைப் பயன்படுத்தி கணினியால் ஒரு வரைபடத்தை உருவாக்க முடியும்.
Question 24 |
கீழ்க்கண்டவற்றுள் புவி தகவல் தொகுதியின் நன்மைகள் எவை?
புவி தகவல் தொகுதி விவரங்களின் அடிப்படையில் உருவாக்கப்படும் நிலவரைபடங்கள் மூலம் பிரச்சனைக்குரிய இடங்களைச் சுட்டிக்காட்ட முடியும். | |
புவி தகவல் தொகுதி உறுதியான வள மேலாண்மை, தகவல் தொடர்பு மற்றும் நகர வட்டார திட்டமிடுதலுக்கும் பயன்படுகிறது. | |
இவை இரண்டும் | |
a) மட்டும் |
Question 24 Explanation:
விளக்கம்: நிலப்பயன்பாட்டுத்தேவைகளை திட்டமிடவும் உள்ளாட்சி அமைப்புகளின் வரிவிதித்தல் மற்றும் திட்டமிடுதலுக்கும் உதவுகிறது.
Question 25 |
புவி தகவல் தொகுதியின் வன்பொருள் மற்றும் மென்பொருளின் செயல்பாடுகள் எவை?
தொகுத்தல் | |
வழங்குதல் | |
ஒழுங்குபடுத்தல் | |
திட்டமிடல் |
Question 25 Explanation:
விளக்கம்: * புள்ளி விவர உள்ளீடு மற்றும் சரிப்பார்த்தல்
தொகுத்தல்
சேமித்தல்
புதுப்பித்தல் மற்றும் மாற்றிமைத்தல்
மேலாண்மை மற்றும் பரிமாற்றம் செய்தல்
கையாளுதல்
மாற்றியமைத்தல் மற்றும் தகவல் தரல்
பகுப்பாய்வு மற்றும் சேர்த்தமைத்தல்
Question 26 |
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தினால் இலவச இணைய தளம் கணினி சார்ந்த பயன்பாட்டிற்காக எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
2009 | |
2007 | |
2006 | |
2008 |
Question 26 Explanation:
விளக்கம்: புவன் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு ‘புவி’ என்று பொருள். இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தினால் (ISRO) ஆகஸ்ட் 12ம் நாள், 2009 ஆம் ஆண்டு, இலவச இணைய தளம் கணினி சார்ந்த பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய தொலைநுண்ணுணர்வு செயற்கைக்கோளானது சில வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் பதிமங்களை ஆராய இயலும். செயற்கைக்கோள் படங்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் ஏழு செயற்கைகோள்களின் மூலம் கார்ட்டோசாட் I மற்றும் கார்டோசாட் II எடுக்கப்பட்ட படங்களும் இதில் உள்ளடக்கியது.
Question 27 |
கீழ்க்கண்டவற்றுள் புவனின் நன்மைகள் எவை?
தனது முப்பரிமாண அமைவு மூலம் புவன் புவி மெய்யாகவே அண்டவெளியில் சுழல்வதைப் போன்ற தோற்றத்தைத் தருகின்றது. | |
மாணவர்கள், அறிவியல் மற்றும் பல்வேறு இடங்களின் வரலாறு போன்ற பலவகையான பாடங்களைப் புரிந்து கொள்ள உதவுகிறது. | |
இயற்கை வளங்கள் தகவல்களையும் பேரிடர்கள் பற்றிய தகவல்களையும் உரிய நேரத்தில் தெரிவிப்பதில் மிகவும் உறுதுணையாக உள்ளது. | |
இவை அனைத்தும் |
Question 27 Explanation:
விளக்கம்: ஆட்சியாளர்கள் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தவும், கண்காணிக்கவும் உதவுகிறது. இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ள புவன் மூலம் ஒருவர் விரும்பிய இடங்களையோ செய்திகளில் இடம்பெறும் நிகழ்வுகள் நடைபெற்ற இடங்களையோ, தாங்கள் செல்லவே இயலாத உலகின் எந்த ஒரு பகுதி அல்லது ஓர் இடத்தின் பெயர்களையோ அட்ச தீர்க்கப் பரவலைக் கொண்டு ஆராய்ந்து அறியலாம். விஞ்ஞானிகள், அறிஞர்கள், கல்வியாளர்கள் கொள்கை வகுப்பாளர்கள் அல்லது பொதுமக்கள் ஆகியோருக்கு புவன் மிகுந்த பயனை அளிக்கிறது.
Question 28 |
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
கூகுள் உலகம் என்பது இணையதள அடிப்படையிலான ஒரு கணினி வன் பொருளாகும். | |
கூகுள் உலகம் ஒரு இரு பரிமாண மெய்நிகர் புவி மாதிரியாகும். | |
நகரங்கள் மற்றும் கட்டடங்களைச் செங்குத்து மற்றும் சாய்வுக் கோணத்தில் பார்ப்பதற்குக் கூகுள் உலகம் வழிவகைச் செய்கிறது. | |
a) மற்றும் b). |
Question 28 Explanation:
விளக்கம்: கூகுள் உலகம் என்பது இணையதள அடிப்படையிலான ஒரு கணினி மென் பொருளாகும். கூகுள் உலகம் ஒரு முப்பரிமாண மெய்நிகர் புவி மாதிரியாகும். இது கூகுள் தேடல் திறனை கொண்டு நிலவரைபடம், செயற்கைக்கோள் பதிமங்கள், வான்வழி படங்கள், புவிதகவல் அமைப்பு விவரங்கள் மற்றும் உலகில் உள்ள கட்டடங்களை முப்பரிமாண கட்டடங்களாகக் காட்சிப்படுத்துகிறது. நகரங்கள் மற்றும் கட்டடங்களைச் செங்குத்து மற்றும் சாய்வுக் கோணத்தில் பார்ப்பதற்குக் கூகுள் உலகம் வழிவகைச் செய்கிறது.
Question 29 |
நவ்ஸ்டார் என்பது எத்தனை அமெரிக்க செயற்கைகோள்களின் வலைப்பின்னலாகும்?
6 | |
24 | |
32 | |
28 |
Question 29 Explanation:
விளக்கம்: நவ்ஸ்டார் என்பது 20,350 கிலோ மீட்டர் புவிப்பரப்பிற்கு மேல் சுற்றி வரும் 6 வெவ்வேறு சுற்றுப்பாதையில் 24 அமெரிக்கா செயற்கைகோள்களின் வலைப்பின்னலாகும். ஒவ்வொரு செயற்கைகோளும், தொடர்ச்சியான உலகளாவிய தகவல் தொடர்புக்காக ஒருநாளில் இருமுறை புவியை சுற்றி வருகின்றது. ஜி.பி.எஸ் கருவிகள் எல்லா அளவிலும், வடிவிலும் கிடைக்கின்றன.
Question 30 |
கலிலியோ என்பது எந்த நாட்டின் ஜி.என்.எஸ்.எஸ் அமைப்பு?
ஐரோப்பா | |
அமெரிக்க ஐக்கிய நாடுகள் | |
ரஷ்யா | |
சீனா |
Question 30 Explanation:
விளக்கம்: GNSS (ஜி.என்.எஸ்.எஸ்) எடுத்துக்காட்டுகள்
ஐரோப்பாவின் கலிலியோ
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் [NAVSTAR] உலக அமைவிட கண்டறியும் தொகுதியான நவ்ஸ்டார் [NAVSTAR]
ரஷ்யாவின் குளோனாஸ் (GLONASS)
சீனாவின் பீடோ [Bei Dou] செயற்கைக்கோள் அமைப்பு
இந்தியாவின் நாவிக் (NAVIC) செயற்கைக்கோள் அமைப்பு
Question 31 |
புவி சுற்றுப்பாதையில் சுற்றி வரும் செயற்கைக்கோள்களிலிருந்து ஒரு பொருள் அல்லது ஒரு பகுதியைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் தொழில் நுட்பம் எது?
செயற்கைக்கோள் தொலை நுண்ணுணர்வு | |
செயற்கைக்கோள் பதிமங்கள் | |
உணர்வி | |
இவை அனைத்தும் |
Question 31 Explanation:
விளக்கம்: செயற்கைக்கோள் தொலை நுண்ணுணர்வு என்பது புவி சுற்றுப்பாதையில் சுற்றி வரும் செயற்கைக்கோள்களிலிருந்து ஒரு பொருள் அல்லது ஒரு பகுதியைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் தொழில் நுட்பமாகும். 'செயற்கைக்கோள் பதிமங்கள்' என்பது செயற்கைகோள்களின் எண்ணிம தோற்றுரு செய்யப்பட்ட படங்களைக் (digitally transmitted images) குறிப்பிடுகிறது.
Question 32 |
கீழ்க்கண்டவற்றுள் தொலைநுண்ணுணர்வின் கூறுகள் எவை?
ஆற்றல்மூலம் | |
அனுப்பும் வழி | |
இலக்கு | |
இவை அனைத்தும் |
Question 32 Explanation:
விளக்கம்: தொலைநுண்ணுணர்வின் கூறுகள்
(Components of remote sensing)
ஆற்றல்மூலம் (Energy Source)
அனுப்பும் வழி (Transmission Path)
இலக்கு (Target)
உணர்விகள் (Sensor)
Question 33 |
கீழ்க்கண்டவற்றுள் தொலைநுண்ணுணர்வின் செயல்பாடுகள் எவை?
மின்காந்த கதிர்வீச்சு அல்லது சூரியக்கதிர்வீச்சு தொலை நுண்ணுணர்வின் ஆற்றலுக்கு முதன்மை ஆதாரமாக திகழ்கிறது | |
உணர்வியால் (Sensor) பதிவு செய்யப்பட்ட ஆற்றலானது புவியிலுள்ள நிலையத்திற்கு அனுப்பப்பட்டு பின்னர் புகைப்படங்களாக செயல்முறையாக்கப்படுகிறது. | |
செயற்கைக்கோளிலுள்ள உணர்வி (Sensor) பிரதிபலிக்கப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட கதிர்வீச்சை பதிவிடுகிறது. | |
இவை அனைத்தும் |
Question 33 Explanation:
விளக்கம்: சூரியனிலிருந்து வரும் சூரிய ஒளியானது புவியை வந்தடைவதற்கு முன் வளிமண்லத்தின் வழியாக பயணிக்கிறது. சூரிய கதிர்களானது எந்த ஒரு பொருளாலும் வளிமண்டலத்தினால் தடுக்கப்படுவதில்லை. சூரியக்கதிர்வீச்சு புவியின் மேற்பரப்பில் விழும்போது அதன் சில ஆற்றல் உட்கிரகிக்கப்படுகிறது. சில மேற்பரப்பின் வழியாக கடத்தப்படுகிறது. எஞ்சியவை பிரதிபலிக்கப்படுகிறது. புவியின் மேற்பரப்பானது இயற்கையாகவே கதிர்வீச்சை வெப்பமாக வெளியிடுகிறது. பிரதிபலிக்கப்பட்ட ஆற்றலானது புவியின் பரப்பிலிருந்து மீண்டும் வான்வெளிக்குச் செல்கிறது.
Question 34 |
உலக மக்கள் தொகையில் எத்தனை சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது?
10% | |
15 .2% | |
17% | |
17.5% |
Question 34 Explanation:
விளக்கம்: ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு நாட்டில் வசிக்கின்ற மொத்த மக்களின் எண்ணிக்கையே ஒரு நாட்டின் மக்கள் தொகை என்று அழைக்கப்படுகிறது. சீனாவிற்கு அடுத்தப்படியாக உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. உலகின் மொத்த நிலப்பரப்பில் இந்தியா 2.4 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால் உலக மக்கள் தொகையில் சுமார் 17.5 சதவீதத்தை கொண்டுள்ளது. இந்திய மக்கள் தொகை விகிதம் அதன் பரப்பு விகிதத்தை விட மிக அதிகமாக உள்ளதை இது காட்டுகிறது.
Question 35 |
இந்திய மக்கள் தொகை ஏறக்குறைய எத்தனை நாடுகளின் மக்கள் தொகைக்குச் சமமாக உள்ளது?
6 | |
5 | |
4 | |
8 |
Question 35 Explanation:
விளக்கம்: உலகில் உள்ள ஆறு நபர்களில் ஒருவர் இந்தியராக உள்ளார். அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், பாக்கிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஜப்பான் ஆகிய ஆறு நாடுகளின் மொத்த மக்கள் தொகை 1214.3 மில்லியன் ஆகும். இந்திய மக்கள் தொகை ஏறக்குறைய இந்த ஆறு நாடுகளின் மக்கள் தொகைக்குச் சமமாக உள்ளது.
Question 36 |
மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளின் பயன்கள் எவை?
நிர்வாகம் | |
திட்டமிடல் | |
திட்ட மேலாண்மை | |
இவை அனைத்தும் |
Question 36 Explanation:
விளக்கம்: மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு நாட்டின் வரையறுக்கப்பட்ட பகுதி அல்லது முழுபகுதியில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உள்ள மக்களின் பொருளாதார மற்றும் சமூக புள்ளி விவரங்களை சேகரித்து, தொகுத்து, மற்றும் பகுப்பாய்வு செய்து மக்களியல் பற்றிய விவரங்களை அளித்தல் ஆகும். இந்த கணக்கெடுப்பு பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள், நிர்வாகம், திட்டமிடல், கொள்கைகள் உருவாக்குதல், அரசாங்கத்தின் பல்வேறு திட்ட மேலாண்மை மற்றும் மதிப்பீடு செய்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
Question 37 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
’மக்கள் தொகை பரவல்’ என்பது புவியின் மேற்பரப்பில் மக்கள் எவ்விடைவெளியில் உள்ளார்கள் என்பதைக் குறிக்கிறது. | |
இந்திய மக்கள் தொகை பரவல் வளங்களின் பரவலுக்கேற்ப அமையவில்லை. | |
தொழில் மையங்கள் மற்றும் செழிப்பான வேளாண் பிரதேசங்கள் மக்கள் தொகை செறிவுமிக்கதாக காணப்படுகிறது. | |
a) மற்றும் c) |
Question 37 Explanation:
விளக்கம்: அதே சமயம் மலைப்பிரதேசங்கள் வறண்ட நிலப்பகுதிகள், வனப்பகுதிகள், தொலைதூரப் பகுதிகள் போன்ற பகுதிகளில் மக்கள் தொகைக் குறைவாகவும், மக்களற்றும் காணப்படுகிறது. நிலப்பரப்பு, காலநிலை, மண், நீர் பரப்புகள், கனிம வளங்கள், தொழிலகங்கள், போக்குவரத்து மற்றும் நகரமயமாக்கல் ஆகியவை நாட்டின் மக்கள் தொகை பரவலைப் பாதிக்கும் முக்கிய காரணிகளாகும்.
Question 38 |
இந்தியாவில் அதிக மக்கட்தொகை கொண்ட மாநிலம் எது?
உத்திரப்பிரதேசம் | |
மகாராஷ்ட்டிரா | |
மேற்கு வங்கம் | |
ஆந்திரப்பிரதேசம் |
Question 38 Explanation:
விளக்கம்: 199.5 மில்லியன் மக்கட்தொகையைக் கொண்ட உத்திரப்பிரதேச மாநிலம் இந்தியாவில் அதிக மக்கட்தொகை மாநிலமாகும். இதனைத் தொடர்ந்து மகாராஷ்ட்டிரா (112.3 மில்லியன்) பீகார் (103.8 மில்லியன்) மேற்கு வங்கம் (91.3 மில்லியன்) மற்றும் ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேசம் (84.6 மில்லியன்) ஆகிய ஐந்து மாநிலங்கள் நாட்டின் மக்கள் தொகையில் பாதியைக் கொண்டுள்ளன.
Question 39 |
நாட்டின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதி மக்கள் எங்கு வாழ்கின்றனர்?
உத்திரப் பிரதேசம் | |
மகாராஷ்ட்டிரா | |
சிக்கிம் | |
a) மற்றும் b) |
Question 39 Explanation:
விளக்கம்: உத்திரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்ட்டிரா ஆகிய மாநிலங்களில் மட்டும் நாட்டில் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதி வாழ்கின்றனர். இந்தியாவில் மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் சிக்கிம் (0.61 மில்லியன்) ஆகும். புதுடெல்லி 16.75 மில்லியன் மக்கட்தொகையுடன் யூனியன் பிரதேசங்களிடையே முதலிடம் வகிக்கிறது.
Question 40 |
நாட்டின் மக்கட்தொகை பரவல் சீரற்று காணப்படுவதற்கான காரணிகள் யாவை?
வரலாறு | |
சமூகம் | |
பொருளாதாரம் | |
இவை அனைத்தும் |
Question 40 Explanation:
விளக்கம்: நாட்டின் மக்கட்தொகை பரவல் சீரற்று காணப்படுவதற்கு பெளதீக, சமூக பொருளாதார மற்றும் வரலாற்று காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெளதீக காரணிகள் என்பது நிலத்தோற்றம் காலநிலை, நீர், இயற்கைத் தாவரங்கள், கனிமங்கள் மற்றும் ஆற்றல் வளங்களை உள்ளடக்கியது. மதம், கலாச்சாரம், அரசியல் பிரச்சினைகள், பொருளாதாரம், மனித குடியிருப்புகள்,போக்குவரத்து வலைப்பின்னல், தொழில்மயமாக்கல், நகரமயமாதல், வேலை வாய்ப்புகள் போன்றவை முக்கிய சமூக பொருளாதாரக் காரணிகளாகும்.
Question 41 |
2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் சராசரி மக்கள் அடர்த்தி?
382 | |
384 | |
389 | |
386 |
Question 41 Explanation:
விளக்கம்: மக்கள் தொகை அடர்த்தி மக்கள்தொகை பரவலில் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதற்கு உதவுகிறது. இது சராசரியாக ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறது. 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் சராசரி மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 382 ஆகும்.
Question 42 |
இந்தியாவில் மிக அதிக மக்கள்டர்த்தியைக் கொண்ட மாநிலம்?
டெல்லி | |
பீகார் | |
மஹாராஷ்டிரா | |
a) மற்றும் b) |
Question 42 Explanation:
விளக்கம்: உலகின் மக்களடர்த்தி மிகுந்த பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் மிக அதிக மக்கள்டர்த்தியைக் கொண்ட மாநிலமாக பீகாரும் (1106 பேர்/ச.கி.மீ) மிக குறைந்த மக்கள் அடர்த்தியைக் கொண்ட மாநிலமாக அருணாச்சலப் பிரதேசமும் (17 பேர்/ச.கி.மீ) உள்ளது. யூனியன் பிரதேசங்களில் புதுடெல்லி (11320 பேர்/ச.கி.மீ) அதிக மக்களடர்த்தியைக் கொண்டதாகவும், அந்தமான் நிக்கோபார் தீவுகள் குறைந்த மக்களடர்த்தியைக் கொண்டதாகவும் (46 பேர் ச.கி.மீ) உள்ளன.
Question 43 |
ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் ஒரு நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றத்தை உணர்த்துவது எது?
அதிக மக்கள் அடர்த்தி | |
மக்கட்தொகை பரவல் | |
மக்கள் தொகை வளர்ச்சி | |
இவை அனைத்தும் |
Question 43 Explanation:
விளக்கம்: மக்கள் தொகை வளர்ச்சி விகிதம், மக்கள் தொகையின் ஒரு முக்கியமான அம்சமாகும். இது மக்கள் தொகை மாற்றத்தைப் புரிந்து கொள்ள உதவுவதோடு மட்டுமல்லாமல் கடந்த கால சமுதாயத்தின் மாற்றங்களைத் தெரிந்து கொண்டு வருங்கால மக்கள் தொகையின் பண்புகளை கணிக்க உதவுகிறது. மக்கள் தொகை வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் ஒரு நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றத்தை உணர்த்துகிறது. மக்கள் தொகைவளர்ச்சி சதவீதத்தில் குறிப்பிடப்பட்டு, மக்கள் தொகை வளர்ச்சி விகிதமாக விவரிக்கப்படுகிறது.
Question 44 |
1921 - 51 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை வளர்ச்சியின் நிலை என்ன?
தேக்க நிலை காலம் | |
நிலையான வளர்ச்சிக் காலம் | |
வளர்ச்சி குன்றல் | |
மக்கள் தொகை வெடிப்ப |
Question 44 Explanation:
விளக்கம்: முதல் இருபது ஆண்டு (1901-1921) காலக்கட்டத்தில் இந்தியாவின் மக்கள் தொகை 15 மில்லியன்கள் அதிகரித்தது. 1921-இல் மக்கள் தொகை எதிர்மறை வளர்ச்சி விகிதமாக (-0.31%) ஆக பதிவாகியுள்ளது. இது இந்திய மக்கள் தொகை வரலாற்றில் ஒரு முறை மட்டுமே ஏற்பட்ட நிகழ்வாகும். இது மக்களியல் வரலாற்றில் ’பெரும் மக்களியல் பிளவு ஆண்டு’ என அழைக்கப்படுகிறது.
Question 45 |
மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு எது?
901-1921 | |
1921 - 51 | |
1951 – 1981 | |
1981-2011 |
Question 45 Explanation:
விளக்கம்: நிலையான வளர்ச்சிக் காலம் (மூன்றாம் காலக்கட்டம்) - 1951 – 1981 மூன்றாவது 30 ஆண்டுகளில் (1951 – 1981) காலக்கட்டத்தில் 1951 இல் 361 மில்லியன்களாக இருந்த மக்கட்தொகை 1981-இல் 683 மில்லியன்களாக வளர்ச்சியடைந்தது. முந்தைய கால வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் இக்காலத்தில் வளர்ச்சி விகிதம் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி உள்ளது. இந்த அதிவேக வளர்ச்சியை “மக்கள் தொகை வெடிப்பு” என்று குறிப்பிடுகிறோம்.
Question 46 |
கீழ்க்கண்டவற்றுள் மக்கள் தொகை வளர்ச்சியைத் தீர்மானிப்பவை எவை?
பிறப்பு விகிதம் | |
இறப்பு விகிதம் | |
இடப்பெயர்வு | |
இவை அனைத்தும் |
Question 46 Explanation:
விளக்கம்: மக்கள் தொகை மாற்றம் என்பது ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியிலிருந்து மற்றொரு காலப்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் மக்கள் தொகை அதிகரிப்பதையோ அல்லது குறைவதையோ குறிப்பிடுவதாகும். பிறப்பு விகிதம், இறப்பு விகிதம் மற்றும் இடப்பெயர்வு ஆகியவை மக்கள் தொகை வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. மேலும் இவை மூன்றும் மக்கள் தொகையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. பிறப்பு விகிதம் என்பது ஒரு வருடத்தில் 1000 மக்கள் எண்ணிக்கையில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையாகும். இறப்பு விகிதம் எனப்படுவது ஒர் ஆண்டில் 1000 மக்கள் தொகையில் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும். இந்தியாவில் இறப்பு விகிதத்தின் விரைவான சரிவு மக்கள் தொகையின் துரித வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.
Question 47 |
ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மக்கள் இடம் பெயர்ந்து செல்வது எத்தனை வகைப்படும்?
4 | |
2 | |
3 | |
5 |
Question 47 Explanation:
விளக்கம்: இடப்பெயர்வு என்பது ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மக்கள் இடம் பெயர்ந்து செல்வதாகும். இது உள்நாட்டு இடப்பெயர்வு (ஒரு நாட்டின் எல்லைக்குள்) மற்றும் சர்வதேச இடப்பெயர்வு (நாடுகளுக்கு இடையே) என இருவகைப்படும். உள்நாட்டு இடப்பெயர்வு நாட்டின் மக்கள் தொகையில் மாற்றத்தை ஏற்படுத்தாது. ஆனால் ஒரு நாட்டின் மக்கள் தொகை பரவல் மாற்றத்திற்குக் காரணமாக அமைகிறது. இடப்பெயர்வானது மக்கள் தொகை பரவல் மற்றும் கலவையின் மாற்றத்தை ஏற்படுத்தும் காரணியாக அமைகிறது. இந்தியாவில் இடப்பெயர்வு கிராமப் புறத்திலிருந்து நகர்புறத்தை நோக்கி பெருந்திரளாக காணப்படுகிறது.
Question 48 |
கீழ்க்கண்டவற்றுள் இடப்பெயர்வுக்கு உந்து காரணியாக உள்ளது எது?
அதிக வேலைவாய்ப்பு | |
அதிக ஊதியம் | |
வேலைவாய்ப்பின்மை | |
இவை அனைத்தும் |
Question 48 Explanation:
விளக்கம்: இந்தியாவில் இடப்பெயர்வு கிராமப் புறத்திலிருந்து நகர்புறத்தை நோக்கி பெருந்திரளாக காணப்படுகிறது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை மற்றும் தகுதிக்கேற்ப வேலையின்மை ஆகியவை இடப்பெயர்வுக்கு உந்து காரணிகளாக உள்ளன நகர்புற பகுதிகளில் தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக அதிக வேலைவாய்ப்பு மற்றும் அதிக ஊதியம் புலம்பெயர்தலுக்கு இழுக்காரணிகளாக உள்ளன. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 121 கோடி மக்களில் 45 கோடி மக்கள் இடம் பெயர்ந்தவர்களாவார்கள். இந்த 37 சதவீத இடப்பெயர்வில் 48 சதவீதம் பெண்களும் 52 சதவீதம் ஆண்களும் உள்ளனர்.
Question 49 |
பல்வேறு பண்புகளான வயது, பாலினம், திருமணநிலை, சாதி, மதம், மொழி, கல்வி, தொழில் போன்றவற்றை உள்ளடக்கியது எது?
மக்கள் தொகை கலவை | |
மக்கட்தொகை பரவல் | |
மக்கள் தொகை வளர்ச்சி | |
அதிக மக்கள் அடர்த்தி |
Question 49 Explanation:
விளக்கம்: மக்கள் தொகைக் கலவை என்பது பல்வேறு பண்புகளான வயது, பாலினம், திருமணநிலை, சாதி, மதம், மொழி, கல்வி, தொழில் போன்றவற்றை உள்ளடக்கியது. மக்கள் தொகை கலவை பற்றி கற்பது சமூக பொருளாதார மற்றும் மக்கள் தொகையின் அமைப்பை அறிய உதவுகிறது.
Question 50 |
மக்கள் தொகை குணாதிசியங்களில் ஒர் அடிப்படை அம்சம் எது?
மக்கள் தொகை கலவை | |
மக்கட்தொகை பரவல் | |
மக்கள் தொகை வளர்ச்சி | |
வயதுக் கலவை |
Question 50 Explanation:
விளக்கம்: வயது கலவை என்பது ஒரு நாட்டின் மக்கள் தொகையில் உள்ள பல்வேறு வயது பிரிவினர் எண்ணிக்கையை குறிக்கிறது. இது மக்கள் தொகை குணாதிசியங்களில் ஒர் அடிப்படை அம்சமாகும். இது சார்ந்துள்ள மக்கள் தொகை மற்றும் உழைக்கும் மக்கள் தொகைக்கும் உள்ள விகிதத்தை புரிந்து கொள்ளப் பயன்படுகிறது. நாட்டின் மக்கள் தொகை வயதின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. இந்தியாவில் 15 வயதிற்கும் குறைவானவர்கள் 29.5 சதவீதமும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 8 சதவீதமும் உள்ளனர். ஆதலால் சார்ந்துள்ள மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில் 37.5 சதவீதமாக உள்ளது. மீதமுள்ள 62.5 சதவீதம் உழைக்கும் மக்கள் தொகையாக உள்ளது.
Question 51 |
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள் உள்ளனர்?
940 | |
960 | |
980 | |
930 |
Question 51 Explanation:
விளக்கம்: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு
940 பெண்களாக உள்ளது. இது மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட குறைவாக இருப்பதைக் காட்டுகிறது. கேரள மாநிலம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மட்டும் பெண்கள் பாலின விகிதமானது 1000கும் அதிகமாக உள்ளது. கேரளாவில் 1084 பெண்களும், புதுச்சேரியில் 1038 பெண்களும் உள்ளனர். ஆனால் யூனியன் பிரதேசமான டையூ டாமனில் குறைந்த பாலின விகிதம் (618) பதிவாகியுள்ளது.
Question 52 |
இந்திய மக்கள் தொகையின் எழுத்தறிவு விகிதம் எவ்வளவு?
74.04% | |
82.14% | |
65.46% | |
92.28% |
Question 52 Explanation:
விளக்கம்: மக்களில் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்களே எழுத்தறிவு பெற்றவர் ஆவார்கள். இது மக்களின் தரத்தை அறியும் முக்கிய அளவு கோலாகும். மொத்த மக்கள் தொகையில் எழுத்தறிவு பெற்ற மக்களின் எண்ணிக்கையே எழுத்தறிவு விகிதம் எனப்படும். இந்தியாவில் கல்வியறிவு வளர்ச்சியில் தொடர்ச்சியான முன்னேற்றம் காணப்படுகின்றது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்திய மக்கள் தொகையின் எழுத்தறிவு விகிதம் 74.04% ஆகும். இவற்றில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 82.14% ஆகவும் மற்றும் பெண்களின் எழுத்தறிவு விகிதம் 65.46% ஆகவும் உள்ளது.
Question 53 |
பீகார் மாநிலத்தின் எழுத்தறிவு விகிதம்?
63.04% | |
62.14% | |
65.46% | |
63.82% |
Question 53 Explanation:
விளக்கம்: கேரள மாநிலம் எழுத்தறிவில் 93.9% பெற்று இந்தியாவின் முதல் மாநிலமாகவும், இலட்சத்தீவுகள் 92.28% இரண்டவதாகவும் உள்ளது. குறைந்த எழுத்தறிவு பெற்ற மாநிலமாக பீகார் (63.82%) உள்ளது.
Question 54 |
ஒரு ஆண்டில் 6 மாதங்களுக்குக் குறைவாக வேலை செய்பவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?
பகுதி நேரத் தொழிலாளர்கள் | |
முதன்மைத் தொழிலாளர்கள் | |
தொழிலாளர் அல்லாதோர் | |
இரண்டாம் நிலை தொழிலாளர் |
Question 54 Explanation:
விளக்கம்: தொழிலாளர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. அவை முதன்மை தொழிலாளர்கள், பகுதி நேர தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் அல்லாதோர். மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒரு ஆண்டின் பெரும் பகுதி நாட்களில் பணியாற்றுபவர்கள் முதன்மைத் தொழிலாளர்கள் எனப்படுவர் (குறைந்த பட்சம் வருடத்தில் 6 மாதம் அல்லது 183 நாட்கள்). ஒரு ஆண்டில் 6 மாதங்களுக்குக் குறைவாக வேலை செய்பவர்கள் பகுதி நேரத் தொழிலாளர்கள் எனவும், வேலை செய்யாத மக்கள் தொழிலாளர் அல்லாதோர் ஆவார்.
Question 55 |
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் வேலையில் பங்கேற்கும் பெண்கள் விகிதம்?
39.79% | |
53.25% | |
25.51% | |
32.54% |
Question 55 Explanation:
விளக்கம்: வேலையில் பங்கேற்போர் விகிதம் மொத்த தொழிலாளர்களின் சதவீதத்தை குறிக்கிறது. அதாவது ஒரு பகுதியின் மக்கள் தொகையில் மொத்த முதன்மைத் தொழிலாளர்கள் மற்றும் பகுதி நேரத் தொழிலாளர்களின் சதவீதத்தைக் குறிக்கிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில்
வேலையில் பங்கேற்போர் விகிதம் 39.79% ஆகும். இவற்றில் ஆண்கள் 53.25சதவீதமும், பெண்கள் 25.51 சதவீதமாகும். மொத்த தொழிலாளர்களில் முதன்மைத் தொழிலாளர்கள் 75.23 சதவீதமும் மீதமுள்ள 24.77சதவீதத்தினர் பகுதி நேரத் தொழிலாளர்களாகவும் உள்ளனர்.
Question 56 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
கிராமப்புற சமுதாயம் நகர்புற சமுதாயமாக மாற்றமடைவதையே நகரமயமாக்கம் என்கிறோம். | |
நகரமயமாக்கலின் நிலை என்பது நகரம் மற்றும் பெரு நகரங்களில் உள்ள மக்கள் தொகை விகிதம் மற்றும் வேளாண் சாரா தொழிலார்களின் விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் அளவிடப்படுகிறது. | |
இவ்விரண்டும் தொழில்மயமாக்கம், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம்நிலை பொருளாதார விரிவாக்க செயல்பாடுகளுடன் நெருங்கிய தொடர்புடையதாக கருதப்படுகிறது. | |
இவை அனைத்தும் |
Question 56 Explanation:
விளக்கம்: கிராமப்புற சமுதாயம் நகர்புற சமுதாயமாக மாற்றமடைவதையே நகரமயமாக்கம் என்கிறோம். நகரமயமாக்கலின் நிலை என்பது நகரம் மற்றும் பெரு நகரங்களில் உள்ள மக்கள் தொகை விகிதம் மற்றும் வேளாண் சாரா தொழிலார்களின் விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் அளவிடப்படுகிறது. இவ்விரண்டும் தொழில்மயமாக்கம், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம்நிலை பொருளாதார விரிவாக்க செயல்பாடுகளுடன் நெருங்கிய தொடர்புடையதாக கருதப்படுகிறது.
Question 57 |
இந்தியாவில் நகரமயமாக்கலின் நிலை எந்த இரு ஆண்டிற்குள் மூன்று மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது?
1901 - 2011 | |
1920 - 2010 | |
1900 - 2010 | |
1947 - 2015 |
Question 57 Explanation:
விளக்கம்: நகர்புற மக்கள் தொகை சதவீதத்தின் அடிப்படையிலேயே நகரமயமாக்கம் அளவிடப்படுகிறது. இந்தியாவில் நகரமயமாக்கலின் நிலை 1901 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டிற்குள் மூன்று மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது. நம் நாட்டில் 2001 ஆம் ஆண்டு 27.82 சதவீதமாக இருந்த நகர்ப்புற மக்கள் தொகை 2011 ஆம் ஆண்டில் 31.16 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது பத்தாண்டுகளில் 3 சதவீதம் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
Question 58 |
மிகுந்த நகர்மயமாக்கப்பட்ட பகுதியாக உள்ள மாநிலம் எது?
டெல்லி | |
கோவா | |
குஜராத் | |
மஹாராஷ்டிரா |
Question 58 Explanation:
விளக்கம்: நகரமயமாக்கம் மாநிலங்களிடையே அதிகமாக வேறுபட்டு காணப்படுகிறது. இந்தியாவில் 62.17 சதவீத நகர்ப்புற மக்கள் தொகையுடன் கோவா மாநிலம் மிகுந்த நகர்மயமாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. 10.04 சதவீத நகர்ப்புற மக்கள் தொகையுடன் இமாச்சல பிரதேசம் குறைந்த நகரமயமாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. யூனியன் பிரதேசங்களுக்கிடையில் புதுடெல்லி (97.50%) மற்றும் சண்டிகர் (97.25%) மிகுந்த நகரமயமாக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன. பெரிய மாநிலங்களுள் மிகுந்த நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடும் (48.4%) அதைத்தொடர்ந்து கேரளா (47.7%) மற்றும் மகராஷ்ட்டிராவும் (45.2%) உள்ளன.
Question 59 |
கீழ்க்கண்டவற்றுள் மெகா நகரங்கள் எவை?
மும்பை | |
புதுடெல்லி | |
கொல்கத்தா | |
இவை அனைத்தும் |
Question 59 Explanation:
விளக்கம்: மொத்தமுள்ள 468 UAs முதன்மை நகரபிரிவில், 53 நகரங்களில் மக்கள்தொகைஒவ்வொன்றிலும் ஒரு மில்லியனுக்கும் மேல் உள்ளது. இந்நகரங்கள் 'மில்லியன் நகரங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. இவை நாட்டின் முக்கிய நகர்புற மையங்களாகும். மில்லியன் நகரங்களுக்கு இடையில் மூன்று நகரபுற குவியல்கள் தலா 10 மில்லியனுக்கு மேலான மக்கள் தொகையுடன் “மெகா நகரங்கள்” என அழைக்கப்படுகின்றன. அவைகள் மும்பை (18.4 மில்லியன்), புதுடெல்லி (16.3 மில்லியன்) மற்றும் கொல்கத்தா (14.1 மில்லியன்) ஆகும்.
Question 60 |
தங்கள் கொள்ளளவை விட அதிகமான மக்கள் தொகையுடன் காணப்படும் நகரம் எது?
சூரத் | |
கொல்கத்தா | |
பெங்களூர் | |
இவை அனைத்தும் |
Question 60 Explanation:
விளக்கம்: நகரமயமாக்கலும் மக்கள் தொகை அடர்த்தியும் ஒன்றோடொன்று நெருகிய தொடர்புடையவை. நகர்ப்புறமயமாக்கலின் விரைவான வளர்ச்சியானது சமூக-பொருளாதார அபிவிருத்தியின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நகர்ப்புறமயமாக்கம் விரைவாக அதிகரித்து வருகிறது. கிராமத்திலிருந்து நகரங்களுக்கு இடப்பெயர்தல் நகர்பகுதிகளில் மக்கள் தொகை வெடிப்பிற்கு வழிவகுக்கிறது. மும்பை, கொல்கத்தா, புதுடெல்லி போன்ற பெருநகரங்கள் தங்கள் கொள்ளளவை விட அதிகமான மக்கள் தொகையுடன் காணப்படுகின்றன.
Question 61 |
இந்தியாவில் நகரமயமாக்கலால் ஏற்படும் பிரச்சனைகள் யாவை?
நகர விரிவாக்கத்தை ஏற்படுத்துகிறது. | |
நகர்புறங்களில் மக்கள் நெருக்கடியை தோற்றுவிக்கிறது. | |
நகர்புறங்களில் குடியிருப்புகளின் பற்றாக்குறையை உருவாக்குகிறது. | |
இவை அனைத்தும். |
Question 61 Explanation:
விளக்கம்: * குடிசைப் பகுதிகள் தோன்ற காரணமாகஉள்ளது.
போக்குவரத்து நெரிசலை அதிகப்படுத்துகிறது.
குடிநீர் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றது.
வடிகால் பிரச்சனைகள் உண்டாகின்றன.
திடக்கழிவு மேலாண்மையை சிக்கலாக்கிறது.
குற்றங்கள் அதிகரிக்க காரணமாகின்றன.
Question 62 |
கீழ்க்கண்டவற்றுள் மனிதவள மேம்பாடு குறித்து டாக்டர் மெகபூப்-உல்-ஹ்க் என்ற பொருளாதார நிபுணரின் கூற்று எது?
மனிதவள மேம்பாடு என்பது கல்வி, உடல்நலம், வருமானம், அதிகாரம் போன்றவைகளில் மக்களுக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும் ஒரு செயல் முறையாகும். | |
இது பெளதீக சூழலலிருந்து பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சுதந்திரம் போன்றவைகளில் மனித விருப்ப வரம்புகளின் அதிகரிப்பதையும் உள்ளடக்கியதாகும். | |
இவை இரண்டும். | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 62 Explanation:
விளக்கம்: டாக்டர் மெகபூப்-உல்-ஹ்க் என்ற பொருளாதார நிபுணரின் கூற்றுப்படி, ”மனிதவள மேம்பாடு என்பது கல்வி, உடல்நலம், வருமானம், அதிகாரம் போன்றவைகளில் மக்களுக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும் ஒரு செயல் முறையாகும். இது பெளதீக சூழலலிருந்து பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சுதந்திரம் போன்றவைகளில் மனித விருப்ப வரம்புகளின் அதிகரிப்பதையும் உள்ளடக்கியதாகும்”.
Question 63 |
கீழ்க்கண்டவற்றுள் மனிதவள வளர்ச்சியின் குறியீடுகள் எவை?
தேசிய வருமானம் | |
வள-கூட்டமைப்பு | |
போக்குவரத்து | |
a) மற்றும் b) |
Question 63 Explanation:
விளக்கம்: மக்கள் தொகை போக்குகள், ஆரோக்கிய வெளிப்பாடு, கல்விச் சாதனைகள், தேசிய வருமானம், வள-கூட்டமைப்பு, தொழில், வேலைவாய்ப்பு, மனித பாதுகாப்பு, மனித மற்றும் முதலீட்டு ஈர்ப்பு ஆகியன மனிதவள வளர்ச்சியின் குறியீடுகளாகும். நல்வாழ்வியல், உணர்வு மற்றும் அடிப்படை உரிமை ஒப்பந்தங்கள் ஆகியன மனித வள மேம்பாட்டு துணைக் குறியீடுகளாகும்.
Question 64 |
மனிதவள மேம்பாடு என்பது எத்தனை அடிப்படை பரிமாணங்களைக் கொண்ட ஒரு கூட்டுக் குறியீடாகும்?
3 | |
4 | |
2 | |
5 |
Question 64 Explanation:
விளக்கம்: மனிதவள மேம்பாடு என்பது மூன்று அடிப்படை பரிமாணங்களைக் கொண்ட ஒரு கூட்டுக் குறியீடாகும்.
ஆரோக்கியம் – பிறப்பு காலத்தில்-சராசரி வாழ்நாள் மதிப்பீடு.
கல்வி – பள்ளி செல்லும் குழந்தைகளின் படிப்பு காலம், வயது வந்தோர் சராசரியாக பள்ளிகளில் கற்கும் காலம்.
வருமானம் – நிகர தேசிய வருமானம் மற்றும் தனிநபர் வருமானம்.
Question 65 |
ஒரு நாட்டின் உயிர் நாடியாக கருதப்படுவது எது?
தொழில் | |
கல்வி | |
போக்குவரத்து | |
ஆற்றல் வளங்கள் |
Question 65 Explanation:
விளக்கம்: போக்குவரத்து என்பது பயணிகள் மற்றும் சரக்குகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதாகும். போக்குவரத்து அமைப்பு ஒரு நாட்டின் உயிர் நாடியாககருதப்படுகிறது. பண்டைய காலத்தில் மனிதன் கால் நடையாகவோ அல்லது விலங்குகளையோ போக்குவரத்திற்கு பயன்படுத்தி வந்தான். சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் போக்குவரத்து எளிமையாக்கப்பட்டது. மற்றும் படிப்படியாக பல்வேறுபட்ட போக்குவரத்து முறைகள் உருவாயின.
Question 66 |
மற்ற போக்குவரத்து முறைகளை ஒப்பிடும் பொழுது மலிவானது எது?
சாலைகள் | |
இரயில்வே | |
வான்வெளி | |
நீர்வழி |
Question 66 Explanation:
விளக்கம்: சாலை வழி குறுகிய மற்றும் நீண்ட தூரத்திற்கு பயணிகள் மற்றும் சரக்குகளை கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது குறுகிய மத்திய மற்றும் தொலைதூர சேவைகளுக்கு பொருத்தமானதாக உள்ளது. இது குறுகிய தூர பயணத்திற்கு மிகவும் உகந்ததாககும். சாலைகளை அமைப்பது மற்றும் பராமரிப்பு செய்வது மற்ற போக்குவரத்து முறைகளை ஒப்பிடும் பொழுது மலிவானதாகும். சாலைப் போக்குவரத்து அமைப்பு மூலம் பண்ணைகள், தொழிற்சாலைகள் மற்றும் சந்தைகள் ஆகியவற்றிக்கிடையில் எளிதில் தொடர்பை ஏற்படுத்துகிறது. இது சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களாலும் பயன்படுத்தக் கூடிய மலிவான போக்குவரத்தாகும்.
Question 67 |
குறைவான நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை எது?
NH 4 | |
NH 7 A | |
NH 30 | |
NH 47 A |
Question 67 Explanation:
விளக்கம்: இந்தியாவில் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை NH 7 ஆகும். இது உத்திரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசியிலிருந்து நாட்டில் உள்ள கன்னியாக்குமரி வரை 2369 கி.மீ நீளத்தைக்கொண்டதாகும். குறைவான நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை NH 47 A ஆகும். இது எர்ணாகுளத்திலிருந்து 6 கி.மீ தொலைவைக்கொண்ட கொச்சின் துறைமுகத்தை இணைக்கிறது.
Question 68 |
மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுடன் மாவட்ட மற்றும் வட்டார தலைமை இடங்களை இணைக்கும் சாலை எது?
மாவட்டச் சாலைகள் | |
ஊரகப் பகுதி சாலைகள் | |
எல்லைப்புறச் சாலைகள் | |
மாநில நெடுஞ்சாலைகள் |
Question 68 Explanation:
விளக்கம்: மாவட்டச் சாலைகளானது மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுடன் மாவட்ட மற்றும் வட்டார தலைமை இடங்களை இணைக்கிறது. மாவட்ட சாலைகள் மாநிலத்தின் பொதுப் பணித்துறையால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. 2016 –இன்படி இந்தியாவில் மாவட்டச் சாலைகளின் நீளம் 5,61,940 கி.மீ. (16.81%) ஆகும்.
Question 69 |
கிராமப்புற வளர்ச்சியின் ஒரு முக்கிய கூறு எது?
தொழில் | |
ஊரகப் பகுதி சாலைகள் | |
கல்வி | |
கைவினைப்பொருள் |
Question 69 Explanation:
விளக்கம்: கிராமப்புறச் சாலைகளின் இணைப்பு கிராமப்புற வளர்ச்சியின் ஒரு முக்கிய கூறாகும். இச்சாலைகள் கிராமப்புறங்களை இணைப்பதில் முக்கிய பாங்காற்றுகின்றது. இது பல்வேறு கிராமங்களை அதன் அருகில் உள்ள நகரங்களுடன் இணைக்கிறது. இவைகளை கிராம பஞ்சாயத்துகளால் பராமரிக்கப்படுகின்றன. 2016ஆம் ஆண்டின்படி இந்தியாவில் கிராமப்புற சாலைகளின் மொத்த நீளம் 39,35,337 கி.மீ ஆகும். கிராமபுறச் சாலைகளானது, பஞ்சாயத்து சாலைகள், (பஞ்சாயத்து, சமிதி, ஜில்லா-பரிஷித் மற்றும் கிராம பஞ்சாயத்து) பிரதம மந்திரியின் பிரதான கிராமப்புற சாலைகள் திட்டம் மற்றும் மாநிலப் பொதுப்பணித் துறையினரால் அமைக்கப்படும் சாலைகள் ஆகியவைகளைக் கொண்டதாகும்.
Question 70 |
எல்லைப்புறச் சாலைகள் எதன் மூலம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன?
பொதுப் பணித்துறை | |
எல்லைப்புறச் சாலைகள் நிறுவனம் | |
தரைவழி மற்றும் நெடுஞ்சாலைத்துறை | |
a) மற்றும் b) |
Question 71 |
இந்தியாவில் எந்த ஆண்டிற்குள் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் நகர்ப்புறங்களில் வசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது?
2025 | |
2030 | |
2035 | |
2022 |
Question 71 Explanation:
விளக்கம்: 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவின் நகர்புற மக்கள் தொகை 377 மில்லியன்களைக் கடந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட அதிகமாக உள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் நகர்ப்புறங்களில் வசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Question 72 |
கீழ்க்கண்டவற்றுள் எது 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது?
பொதுப் பணித்துறை | |
எல்லைப்புறச் சாலைகள் நிறுவனம் | |
தரைவழி மற்றும் நெடுஞ்சாலைத்துறை | |
தங்க நாற்கரச் சாலைகள் |
Question 72 Explanation:
விளக்கம்: இது 5,846 கி.மீ நீளத்தையும் 4 முதல் 6 வழிகளைக் கொண்டதாகவும் உள்ளது. இது வடக்கு தெற்காக இந்தியாவின் நான்கு பெரு நகரங்களான புதுடெல்லி – கொல்கத்தா - சென்னை – மும்பை – புதுடெல்லி ஆகியவைகளை இணைக்கிறது. இத்திட்டம் 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
Question 73 |
வட - தென் மற்றும் கிழக்கு – மேற்கு பகுதிகளை இணைக்கும் சாலைகள் எங்கு சந்திக்கின்றன?
லக்னோ | |
ஜான்சி | |
டெல்லி | |
மிர்சாபூர் |
Question 73 Explanation:
விளக்கம்: வட - தென் பகுதிகளை இணைக்கும் சாலைகளின் நோக்கம் ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரையும் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரியையும் 4,076 கி.மீ நீளத்தைக் கொண்டசாலை மூலம் இணைப்பதாகும். (கொச்சின், சேலம் உள்பட) கிழக்கு-மேற்கு பகுதிகளை இணைக்கும் சாலைகள் அசாம் மாநிலத்தில் சில்சரையும் குஜராத்தில் உள்ள துறைமுக நகரான போர்பந்தரையும் இணைக்கும் வகையில் 3,640 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சாலைகளும் ஜான்சியில் சந்திக்கின்றன.
Question 74 |
நன்கு மேம்படுத்தப்பட்ட தரமான பல்வழிப் பாதைகளைக் கொண்ட சாலை எது?
விரைவுச் சாலைகள் | |
பன்னாட்டு நெடுஞ்சாலைகள் | |
தங்க நாற்கரச் சாலைகள் | |
மாவட்டச் சாலைகள் |
Question 74 Explanation:
விளக்கம்: விரைவுச் சாலைகள் என்பன நன்கு மேம்படுத்தப்பட்ட தரமான பல்வழிப் பாதைகளைக் கொண்ட அதிவேக போக்குவரத்திற்கான சாலைகள் ஆகும். முக்கியமான சில விரைவுச் சாலைகள்
மும்பை – பூனா விரைவுச் சாலை
கொல்கத்தா – டம்டம் விமான நிலையம் விரைவுச்சாலை
துர்காப்பூர் – கொல்கத்தா விரைவுச்சாலை
புதுடெல்லி மற்றும் ஆக்ரா இடையேயான யமுனா விரைவுச்சாலை.
Question 75 |
உலக வங்கி நிதியுதவியின் மூலம் அமைக்கப்பட்ட சாலைகள் எவை?
விரைவுச் சாலைகள் | |
பன்னாட்டு நெடுஞ்சாலைகள் | |
தங்க நாற்கரச் சாலைகள் | |
மாவட்டச் சாலைகள் |
Question 75 Explanation:
விளக்கம்: இந்தியாவை அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவை மேம்படுத்தும் நோக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள சாலைகள் பன்னாட்டு நெடுஞ்சாலைகள் ஆகும். இச்சாலைகள் ஆசிய மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (ESCHP) உடன்படிக்கையின் கீழ் உலக வங்கி நிதியுதவியின் மூலம் அமைக்கப்பட்டுள்ளன. இச்சாலைகள் பாகிஸ்தான், நேபாளம், பூடான், வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய அண்டை நாடுகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கின்றன.
Question 76 |
கிழக்கு மத்திய இரயில்வே தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது?
கொரக்பூர் | |
கொல்கத்தா | |
புவனேஸ்வர் | |
ஹசிப்பூர் |
Question 76 Explanation:
விளக்கம்:
வடக்கு இரயில்வே - புதுடெல்லி
வடமேற்கு இரயில்வே - ஜெய்ப்பூர்
வட மத்திய இரயில்வே - அலகாபாத்
வடகிழக்கு இரயில்வே - கொரக்பூர்
வடகிழக்கு எல்லை இரயில்வே - கௌகாத்தி
கிழக்கு இரயில்வே - கொல்கத்தா
கிழக்கு கடற்கரை இரயில்வே - புவனேஸ்வர்
கிழக்கு மத்திய இரயில்வே - ஹசிப்பூர்
Question 77 |
தென்மேற்கு இரயில்வேயின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது?
மும்பை | |
செகந்தராபாத் | |
ஹுப்ளி | |
பிலாஸ்பூர் |
Question 77 Explanation:
விளக்கம்: மேற்கு மத்திய இரயில்வே - ஜபல்பூர்
மத்திய இரயில்வே - மும்பை (சத்ரபதி சிவாஜி முனையம்)
மேற்கு இரயில்வே - மும்பை (சர்ச்கேட்)
தெற்கு இரயில்வே - சென்னை
தென் மத்திய இரயில்வே - செகந்தராபாத்
தென் கிழக்கு இரயில்வே - கொல்கத்தா
தென்மேற்கு இரயில்வே - ஹுப்ளி
தென் கிழக்கு மத்திய இரயில்வே - பிலாஸ்பூர்
கொங்கன் இரயில்வே - நவி மும்பை
Question 78 |
நாட்டினுடைய உள்நாட்டு போக்குவரத்திற்கான முக்கிய உயிர் நாடியாக அமைந்துள்ளது எது?
சாலைகள் | |
நீர்வழி | |
தொடர்வண்டி வழி | |
விமான வழி |
Question 78 Explanation:
விளக்கம்: இந்திய இரயில்வே அமைப்பு நாட்டினுடைய உள்நாட்டு போக்குவரத்திற்கான முக்கிய உயிர் நாடியாக அமைந்துள்ளது மிக அதிக அளவிலான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தின் தேவையை பூர்த்தி செய்வதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கான பங்களிப்பை இரயில்வே அளித்துவருகிறது. மேலும் இந்திய தரைவழிப் போக்குவரத்து அமைப்பின் முதுகெலும்பாக கருதப்படுகிறது.
Question 79 |
இந்திய இரயில்வே துறை எத்தனை இரயில்வே மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
16 | |
17 | |
15 | |
18 |
Question 79 Explanation:
விளக்கம்: 2017 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்திய இரயில் பாதையின் மொத்த நீளம் 67,368 கி.மீ ஆகும். இவ்வமைப்பு 7,349 இரயில் நிலையங்களை உள்ளடக்கியது இரயில்களின் இயக்கம் மற்றும் மேலாண்மைக்காக, இந்திய இரயில்வே துறை 16 இரயில்வே மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
Question 80 |
நாட்டினுடைய உள்நாட்டு போக்குவரத்திற்கான முக்கிய உயிர் நாடியாக அமைந்துள்ளது எது?
சாலைகள் | |
நீர்வழி | |
தொடர்வண்டி வழி | |
விமான வழி |
Question 80 Explanation:
விளக்கம்: இந்திய இரயில்வே அமைப்பு நாட்டினுடைய உள்நாட்டு போக்குவரத்திற்கான முக்கிய உயிர் நாடியாக அமைந்துள்ளது மிக அதிக அளவிலான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தின் தேவையை பூர்த்தி செய்வதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கான பங்களிப்பை இரயில்வே அளித்துவருகிறது. மேலும் இந்திய தரைவழிப் போக்குவரத்து அமைப்பின் முதுகெலும்பாக கருதப்படுகிறது.
Question 81 |
தொடர்வண்டித்துறை எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது?
1951 | |
1952 | |
1954 | |
1957 |
Question 81 Explanation:
விளக்கம்: இந்தியாவின் முதல் இரயில் போக்குவரத்து மும்பை மற்றும் தானே நகரங்களுக் கிடையேயான 34 கி.மீ தூரத்திற்கு 1853-இல் தொடங்கப்பட்டது. 1952-இல் இரயில்வேயானது ’இந்தியன் இரயில்வே’ என்ற பெயருடன் தேசிய மயமாக்கப்பட்டது. இந்தியன் இரயில்வேயின் தலைமையகம் புது டெல்லியாகும்.
Question 82 |
இந்திய இரயில்வே துறை இருப்புபாதையின் அகலத்தை அடிப்படையாகக் கொண்டு எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படுகிறது?
6 | |
5 | |
4 | |
3 |
Question 82 Explanation:
விளக்கம்: வட இந்திய இரயில்வே மிக நீண்ட இரயில்பாதையையுடையது. அதற்கு அடுத்தாற் போல் மேற்கித்திய இரயில்வே நீளமான இரயில் பாதையைக் கொண்டுள்ளது.இந்திய இரயில்வே துறை இருப்புபாதையின் அகலத்தை அடிப்படையாகக் கொண்டு நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை 1. அகலப்பாதை (1.676 மீ அகலம்) 2. மீட்டர் பாதை (1.00 மீ அகலம்) 3. குறுகிய பாதை (0.762 மீ. அகலம்) மற்றும் 4. குறுகிய தூக்குப் பாதை (0.610. அகலம்) ஆகியவையாகும்.
Question 83 |
மெட்ரோ இரயில் சேவை கொண்ட ஆறாவது நகரம் எது?
ஹைதராபாத் | |
கொச்சி | |
மும்பை | |
சென்னை |
Question 83 Explanation:
விளக்கம்: இந்தியாவின் முதல் புறநகர் இரயில் போக்குவரத்து மும்பையில் 1925-இல் தொடங்கப்பட்டது. சென்னை நகரம் மெட்ரோ இரயில் சேவை கொண்ட ஆறாவது நகரமாகும். காத்திமன் (GATHIMAN) அதிவிரைவு வண்டி இந்தியாவின் மிக அதிகவேக இரயில்வண்டி ஆகும். இந்த இரயில்வண்டி புதுடெல்லியையும் ஆக்ராவையும் இணைக்கிறது. இது 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து மேற்கூறிய இரு நகரங்களுக்கிடையேயான 200 கிமீ தொலைவை 105 நிமிடங்களில் கடக்கிறது.
Question 84 |
பொறியியல் துறையின் அதிசயமாக கருதப்படுவது எது?
மெட்ரோ இரயில் | |
புல்லட் ரெயில் | |
கொங்கன் இரயில்வே | |
a) மற்றும் b) |
Question 84 Explanation:
விளக்கம்: இரயில்வே துறையின் முக்கிய சாதனைகளில் ஒன்றான கொங்கன் இரயில்வே 1998 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இது மகாராஷ்ட்டிராவில் உள்ள ரோகாவிற்கும் கர்நாடகாவில் உள்ள மங்களூருக்கும் இடைப்பட்ட 760 கி.மீ நீளத்தை இணைக்கிறது. கொங்கன் இரயில்வே பொறியியல் துறையின் அதிசயமாக கருதப்படுகிறது. இந்த இரயில்வே அதன் பாதையில் 146 ஆறுகள் மற்றும் சிற்றோடைகளையும் சுமார் 2000 பாலங்களையும் 73 சுரங்கப் பாதைகளையும் கடந்து செல்கிறது.
Question 85 |
எந்த மாநிலங்களின் கூட்டு முயற்சியில் கொங்கன் வழித்தடம் அமைக்கப் பட்டுள்ளது?
மகாராஷ்ட்டிரா | |
குஜராத் | |
கேரளா | |
இவை அனைத்தும் |
Question 85 Explanation:
விளக்கம்: ஆசியாவின் மிக நீளமான 6.44 கி.மீ நீளம் கொண்ட சுரங்கப்பாதை இவ்வழியில் அமைந்துள்ளது. மகாராஷ்ட்டிரா, கோவா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் கூட்டு முயற்சியில் இந்த வழித்தடம் அமைக்கப் பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள குவாசிகண்ட் மற்றும் ஜம்மு பகுதியில் உள்ள பானிஹால் இடையேயான இரயில் இருப்புப்பாதை 2013 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த இரயில்பாதை பீர்பாஞ்சல் மலைத் தொடர் வழியே 11.2 கி.மீ நீண்ட சுரங்கப்பாதையை கடந்து செல்கிறது.
Question 86 |
இந்தியாவில் எத்தனை பெரு நகரங்களில் மெட்ரோ இரயில்சேவை வழங்கப்படுகிறது?
6 | |
7 | |
8 | |
9 |
Question 86 Explanation:
விளக்கம்: இந்தியாவில் 8 பெரு நகரங்களில் மெட்ரோ இரயில்சேவை வழங்கப்படுகிறது. அவைகள் கொல்கத்தா (மேற்கு வங்கம்) சென்னை (தமிழ்நாடு) புதுடெல்லி, பெங்களூர் (கர்நாடகா) குர்கயோன் (ஹரியானா) மும்பை (மகாராஷ்ட்டிரா) ஜெய்ப்பூர் (இராஜஸ்தான்) மற்றும் கொச்சி (கேரளா) ஆகும்.
Question 87 |
இந்திய மெட்ரோ இரயில் போக்குவரத்து முதன் முதலில் எங்கு தொடங்கப்பட்டது?
மும்பை | |
புதுடெல்லி | |
கொல்கத்தா | |
பெங்களூர் |
Question 87 Explanation:
விளக்கம்: இந்தியாவில் இந்த இரயில் சேவை முதன் முதலில் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. இது அதிக மக்களை விரைவாக ஏற்றிச் செல்லும் அமைப்பாகக் கருதப்படுகிறது (MRTS) செப்டம்பர் 2018–இன்படி இந்தியாவில் 507 கி.மீ நீள மெட்ரோ இருப்பு பாதைகள் 381 இரயில் நிலையங்களுடன் இயங்கிவருகிறது. மேகாலயா மாநிலத்தில் இரயில் போக்குவரத்து இல்லை.
Question 88 |
இந்தியாவின் முக்கிய குழாய் போக்குவரத்து அமைப்புகள் எவை?
அசாம் - கான்பூர் | |
சலயா - ஜலந்தர் | |
ஹஜிரா - ஜெக்தீஷ்பூர் | |
இவை அனைத்தும் |
Question 88 Explanation:
விளக்கம்: மேல் அசாமில் உள்ள எண்ணெய் வயலில் இருந்து கான்பூர் வரையிலும், குஜராத்தில் உள்ள சலாயா பகுதியிலிருந்து, பஞ்சாபிலுள்ள ஜலந்தர் வரையிலும், குஜராத்தில் உள்ள ஹஜிராவிலிருந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஜெகதீஷ்பூர் வரை செல்லும் குழாய் போக்குவரத்துகள் இந்தியாவின் முக்கிய குழாய் போக்குவரத்து அமைப்புகளாகும்.
Question 89 |
கனமான மற்றும் அதிக அளவிலான சரக்குகளை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு எடுத்துச் செல்ல மிகவும் ஏற்ற வழித்தடம் எது?
சாலைகள் | |
நீர்வழி | |
இரயில்வழி | |
குழாய் வழி |
Question 89 Explanation:
விளக்கம்: நீர்வழிப் போக்குவரத்து இந்தியாவில் பயணிகள் மற்றும் சரக்குகள் போக்குவரத்திற்கு முக்கியமான ஒன்றாகும். இது பழமையான மற்றும் மலிவான ஒரு போக்குவரத்து முறையாகும். கனமான மற்றும் அதிக அளவிலான சரக்குகளை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு எடுத்துச் செல்ல மிகவும் ஏற்றது நீர்வழிப் போக்குவரத்தாகும். இது சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் குறைந்த எரிபொருள் செலவின போக்குவரத்து முறையாகும். நீர்வழிப் போக்குவரத்து இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை
உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து
கடல் வழிப்போக்குவரத்து.
Question 90 |
இந்தியாவின் மொத்த உள்நாட்டு சரக்கு கையாளுதலில் நீர்வழிப்போக்குவரத்தின் பங்களிப்பு எவ்வளவு?
0.1% | |
0.5% | |
1 % | |
3% |
Question 90 Explanation:
விளக்கம்: இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆறுகள் கால்வாய்கள் ஏரிகள் மற்றும் காயல்களைக் கொண்ட மிகப்பெரிய வலைப்பின்னல் அமைப்புடன் நடைபெற்றுவருகிறது. நீர்வழிப் போக்குவரத்து நீரின்ஆழம், அகலம் மற்றும் தொடர் நீரோட்டத்தைப் பொறுத்து அமைகிறது. நம் நாட்டில் நீர்வழிப்போக்குவரத்திற்கு 14,500 கி.மீ தொலைவு ஏதுவாக உள்ளது. இதில் 5,200 கி.மீ நீளம் ஆறுகள் மூலமும் 4000 கி.மீ நீளம் கால்வாய்கள் மூலமும் இயந்திர படகுகளைக் கொண்டு நடைபெறுகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு சரக்கு கையாளுதலில் சுமார் 0.1% இதன் பங்களிப்பாகும்.
Question 91 |
கேரளா மாநிலத்தின் கொல்லம் மற்றும் கோட்டபுரம் இடையே அமைந்துள்ள நீர்வழிப்போக்குவரத்து எது?
தேசிய நீர்வழிப்போக்குவரத்து எண்.1 | |
தேசிய நீர்வழிப்போக்குவரத்து எண்.2 | |
தேசிய நீர்வழிப்போக்குவரத்து எண்.3 | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 91 Explanation:
விளக்கம்: இந்த நீர்வழி கேரளா மாநிலத்தின் கொல்லம் மற்றும் கோட்டபுரம் இடையே உள்ளது. 24 மணி நேரமும் செயல்பட்டு 205 கி.மீ தொலைவிற்கு போக்குவரத்து வசதியை அளிக்கக்கூடிய இந்தியாவின் முதல் தேசிய நீர்வழி போக்குவரத்து இதுவாகும்.
Question 92 |
தேசிய நீர்வழிப்போக்குவரத்து எண். 2 எந்த ஆற்றில் நடைபெறுகிறது?
யமுனை | |
கங்கை | |
பிரம்மபுத்ரா | |
சிந்து |
Question 92 Explanation:
விளக்கம்: தேசிய நீர்வழிப்போக்குவரத்து எண். 2 இது பிரம்மபுத்ரா ஆற்றில் துபிரி மற்றும் காடியாவிற்கு இடையே சுமார் 891 கி.மீ நீளத்தைக் கொண்டுள்ளது. இது ஹால்தியா மற்றும் அலகாபாத் இடையே 1620 கி.மீ நீளத்தை கொண்டு, கங்கை-பாகிரதி – ஹுக்ளி ஆறுகளுடன் இணைந்து செயல்படுகிறது.
Question 93 |
இந்தியாவின் கனரக பொருட்கள் மற்றும் அதிக அளவிலான சரக்குகளை கையாளுவதில் முக்கிய பங்கு வகிப்பது எது?
சாலைகள் | |
கப்பல் போக்குவரத்து | |
இரயில் வழி | |
குழாய் வழி |
Question 93 Explanation:
விளக்கம்: கடல்வழி போக்குவரத்து இந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்திய வெளிநாட்டு வர்த்தகத்தில் சுமார் 95 சதவீத அளவுக்கு 70 சதவீத மதிப்புள்ள சரக்குகள் கடல்வழிப்போக்குவரத்து மூலமாக நடைபெறுகிறது. இந்தியாவின் கனரக பொருட்கள் மற்றும் அதிக அளவிலான சரக்குகளை கையாளுவதில் கப்பல் போக்குவரத்து முக்கிய பங்காற்றுகிறது. இது மிகவும் சிக்கனமான போக்குவரத்து மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுக்கும் ஏற்ற ஒன்றாகும். கடல் மற்றும் பெருங்கடல் வழிகள் பெரும்பாலும் சர்வதேச வணிகத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன.
Question 94 |
இந்தியாவில் அமைந்துள்ள நடுத்தர மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை?
300 | |
350 | |
213 | |
250 |
Question 94 Explanation:
விளக்கம்: இந்தியாவில் 13 பெரிய துறைமுகங்களும்,200 நடுத்தர மற்றும் சிறிய துறைமுகங்களும் உள்ளன. பெரிய துறைமுகங்களை மத்திய அரசாங்கமும் சிறிய மற்றும் நடுத்தர துறைமுகங்களை அந்தந்த மாநில அரசுகளும் நிர்வாகம் செய்கின்றன. கிழக்கு இந்திய கடற்கரையில் அமைந்துள்ள முக்கிய துறைமுகங்கள் கொல்கத்தா, ஹால்தியா, பாரதீப், விசாகப்பட்டினம், சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகும்.
Question 95 |
கீழ்க்கண்டவற்றுள் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள துறைமுகங்கள் எவை?
காண்ட்லா | |
ஹால்தியா | |
பாரதீப் | |
a) மற்றும் b) |
Question 95 Explanation:
விளக்கம்: மேற்கு இந்திய கடற்கரையில் அமைந்துள்ள முக்கிய துறைமுகங்கள் காண்டலா, மும்பை, நவசேவா(ஜவகர்லால் நேரு துறைமுகம்), மர்மகோவா, நியூமங்களூரு மற்றும் கொச்சின் ஆகும். இந்தியாவில் நான்கு முக்கிய கப்பல் கட்டும் தளங்கள்
இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் – விசாகப்பட்டினம்
கார்டன் ரீச் கப்பல் கட்டும் தொழிற்சாலை - கொல்கத்தா
மசாகான் கப்பல் கட்டும் தொழிற்சாலை - மும்பை
கொச்சி கப்பல் கட்டும் தளம் - கொச்சி
Question 96 |
முதல் இந்திய விமானப் போக்குவரத்து எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1918 | |
1917 | |
1916 | |
1914 |
Question 96 Explanation:
விளக்கம்: இப்போக்குவரத்து, பயணிகள், சரக்குகள், அஞ்சல்கள் ஆகியவற்றைக் கொண்டு செல்கின்றன. அவசரகால நேரங்கள், இயற்கை மற்றும்செயற்கைபேரிடர்களான வெள்ளம், பஞ்சம், தொற்றுநோய்கள், போர்கள் போன்ற நிகழ்வுகளின்போதும் வான்வழிப்போக்குவரத்து முக்கிய பங்காற்றுகிறது. முதல் இந்திய விமானப் போக்குவரத்து பிப்ரவரி 1918-இல் ஹென்றி பிக்யூர் என்பவரால் அலகாபாத்திலிருந்து நைனிக் என்ற இடத்திற்கு கடிதங்கள் கொண்டு செல்லப்பட்டதன் மூலம் ஆரம்பமானது.
Question 97 |
வெளிநாட்டு போக்குவரத்து சேவையை வழங்கும் இந்திய விமான சேவை எது?
இந்தியன் ஏர்லைன்ஸ் | |
ஏர் இந்தியா | |
a) மற்றும் b) | |
ஏர் பாரத் |
Question 97 Explanation:
விளக்கம்: உள்நாட்டு வான் வழிப்போக்குவரத்து ஒரு நாட்டினுடைய எல்லைக்குள்ளும் சர்வதேச வான்வழி போக்குவரத்து உலகின் முக்கிய நகரங்களையும் இணைக்கிறது. இந்திய அரசாங்கம் இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா என்ற இரண்டு விமான சேவைகளை வழங்குகிறது. இந்தியன் ஏர்லைன்ஸ் உள்நாட்டு போக்குவரத்து சேவையையும், ஏர் இந்தியா நிறுவனம் வெளிநாட்டு போக்குவரத்து சேவையையும் வழங்குகின்றன.
Question 98 |
இந்தியாவில் தற்பொழுது எத்தனை சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன?
18 | |
19 | |
17 | |
21 |
Question 98 Explanation:
விளக்கம்: இந்த விமான நிலையங்களின் நிர்வாக பொறுப்பினை இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம் கவனித்து வருகிறது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம்- கொல்கத்தா, சென்னை சர்வதேச விமைனநிலையம்- சென்னை, இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையம் – புதுடெல்லி, சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம்- மும்பை, திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் – திருவனந்தபுரம், சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் – அகமதாபாத், பெங்களூரு சர்வதேச விமான நிலையம் பெங்களூரு, ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையம் – ஐதராபாத் போன்றவை முக்கியமான விமான நிலையங்கள் ஆகும்.
Question 99 |
இந்திய வானொலி ஒளிபரப்பு சேவை எங்கு முதன் முதலில் தொடங்கப்பட்டது?
டெல்லி | |
கொல்கத்தா | |
அகமதாபாத் | |
மும்பை |
Question 99 Explanation:
விளக்கம்: இந்திய வானொலி ஒளிபரப்பு சேவை, மும்பை வானொலி சங்கம் மூலமாக 1923 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து மக்களின் சமூக கலாச்சார வாழ்க்கை முறை மாற்றங்களுக்கு காரணமாக விளங்கி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது 1936- ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி என்றும் 1957 ஆம் ஆண்டு முதல் “ஆகாச வாணி” எனவும்பெயர் மாற்றம்செய்து அழைக்கப்பட்டு வருகிறது. இது கல்வி, செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற கூட்டத்தொடர் நிகழ்வுகள் மற்றும் சிறப்பு விழாக்கள் தொடர்பான நிகழ்வுகளையும் சிறப்பு செய்திகளாக ஒளிபரப்புகிறது.
Question 100 |
தகவல் தொடர்பிற்காக பயன்படுத்தப்படும் முக்கிய செயற்கைக்கோள்கள் எவை?
இன்சாட் வரிசை | |
ஜி-சாட் வரிசை | |
கல்பனா 1 | |
இவை அனைத்தும் |
Question 100 Explanation:
விளக்கம்: இன்சாட் வரிசை, ஜி-சாட் வரிசை, கல்பனா 1, ஹேம்சாட், எஜுசாட் (Edusat) போன்றவை தகவல் தொடர்பிற்காக பயன்படுத்தப்படும் முக்கிய செயற்கைக்கோள்ளாகும். டிசம்பர் 19, 2018 ஆம் ஆண்டு ஏவப்பட்ட ஜிசாட் 7A தகவல் தொடர்புக்காக சமீப காலத்தில் ஏவப்பட்ட ஒரு செயற்கைக்கோள் ஆகும். ஆகஸ்ட் 30 , 1983 ஆம் ஆண்டு ஏவப்பட்ட இன்சாட் 1B தகவல் தொடர்பிற்க்காக ஏவப்பட்ட முதல் இன்சாட் வரிசை செயற்கைக்கோள் ஆகும்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.