Online Test

Geography Part 1 Revision Test in Tamil

Geography Part 1 Revision Test in Tamil

Congratulations - you have completed Geography Part 1 Revision Test in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
ஒரு நிலப்பகுதி மலையாக கருதப்பட சுற்றுப்புறத்திலிருந்து எத்தனை மீட்டர் உயர்ந்து காணப்பட வேண்டும்?
A
300 மீ
B
400 மீ
C
500 மீ
D
600 மீ
Question 1 Explanation: 
விளக்கம்: இவை வன்சரிவை கொண்டிருக்கும். இவை தனித்தோ அல்லது தொடர்களாகவோ காணப்படுகின்றன. தொடர்ச்சியாக நீண்டு காணப்படும் மலைகள் மலைத்தொடர் எனப்படும். பொதுவாக மலைத்தொடர்கள் பல நூறு கிலோ மீட்டர் முதல் பல்லாயிரம் கிலோ மீட்டர் வரை பரவி காணப்படுகின்றன.
Question 2
உலகின் நீளமான மலைத்தொடர் எது?
A
ராக்கி
B
ஆண்டிஸ்
C
போரா
D
இமயமலை
Question 2 Explanation: 
விளக்கம்: இது சுமார் 7000 கி.மீ நீளத்திற்கு வடக்கு தெற்காக பரவியுள்ளது. உலகத்திலேயே உயரமான சிகரம் இமயமலைத்தொடரில் உள்ள எவரெஸ்ட் ஆகும். மலைகள் ஆறுகள் உற்பத்தியாகும் இடமாக உள்ளன. இவை தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் இருப்பிடமாகவும் உள்ளன. சில மலைப்பகுதிகள் சிறந்த சுற்றுலாத்தலங்களாகவும் விளங்குகின்றன. உதக மண்டலம், கொடைக்கானல், கொல்லி மலை, ஏலகிரி போன்ற கோடை வாழிடங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன.
Question 3
கனிமங்கள் நிறைந்து காணப்படும் பகுதி எது?
A
மலைகள்
B
சமவெளிகள்
C
பீட பூமிகள்
D
பள்ளத்தாக்குகள்
Question 3 Explanation: 
விளக்கம்: சமமான மேற்பரப்பைக்கொண்ட உயர்த்தப்பட்ட நிலப்பரப்பு பீடபூமி ஆகும். இவைகள் மலைகளைப்போன்று வன்சரிவைக்கொண்டவை. பீட பூமிகள் 100 கி.மீ முதல் பல்லாயிரம் கி.மீ வரை உயர்ந்து காணப்படுகின்றன. உலகிலேயே உயர்ந்த பீடபூமி திபெத் பீடபூமியாகும். ஆகவே திபெத் பீடபூமியை உலகத்தின் கூரை என்று அழைக்கிறோம்.
Question 4
மேசை நிலம் என்றழைக்கப்படும் நிலத்தோற்றம் எது?
A
மலைகள்
B
சமவெளிகள்
C
பீட பூமிகள்
D
பள்ளத்தாக்குகள்
Question 4 Explanation: 
விளக்கம்: பொதுவாக பீடபூமிகளில் கனிமங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்தியாவில் காணப்படும் சோட்டாநாகபுரி பீடபூமி கனிமங்கள் நிறைந்த பகுதியாகும். எனவே சுரங்கத்தொழில் இப்பகுதியின் முக்கியத்தொழிலாகும். தென்னிந்தியாவில் உள்ள தக்காண பீடபூமி எரிமலைப்பாறைகளால் ஆனது. தருமபுரி பீடபூமி, கோயமுத்தூர் பீடபூமி, மதுரை பீடபூமி ஆகியன தமிழ்நாட்டில் காணப்படும் பீடபூமிகளாகும்.
Question 5
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட பிரதேசங்களாய் விளங்குபவை எவை?
A
மலைகள்
B
சமவெளிகள்
C
பீட பூமிகள்
D
பள்ளத்தாக்குகள்
Question 5 Explanation: 
விளக்கம்: சமவெளி சமமான மற்றும் தாழ்நிலத்தோற்றமாகும். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 200 மீ க்கும் குறைவான உயரம் கொண்ட நிலத்தோற்றமாகும். சில சமவெளிகள் சீரற்றதாகவும் காணப்படும். பெரும்பாலும் சமவெளிகள், ஆறுகள், துணை ஆறுகள் மற்றும் கிளை ஆறுகளால் உருவாக்கப்படுகின்றன. இங்கு வளமான மண்ணும் நீர்ப்பாசனமும் இருப்பதால் வேளாண்மை தழைத்தோங்குகிறது.
Question 6
பெருங்கடல்களின் மொத்தப்பரப்பில் 20 சதவீத பரப்பைக்கொண்ட கடல் எது?
A
பசிபிக் பெருங்கடல்
B
இந்தியப்பெருங்கடல்
C
அட்லான்டிக் பெருங்கடல்
D
ஆர்டிக் பெருங்கடல்
Question 6 Explanation: 
விளக்கம்: பசிபிக் பெருங்கடல் - 47% அட்லான்டிக் பெருங்கடல் - 23% இந்தியப்பெருங்கடல் - 20% தென் பெருங்கடல் - 6% ஆர்டிக் பெருங்கடல் - 4%
Question 7
பசிபிக் பெருங்கடலின் மேற்கில் அமைந்துள்ள நாடு/கள் எது/எவை?
A
ஆசியா
B
ஆஸ்திரேலியா
C
a) மற்றும் b)
D
வட அமெரிக்கா
Question 7 Explanation: 
விளக்கம்: பசிபிக் பெருங்கடலின் மேற்கில் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவும் கிழக்கில் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவும் எல்லைகளாக உள்ளன. இது வடக்கு தெற்காக ஆர்டிக் பெருங்கடல் முதல் தென் பெருங்கடல் வரை பரவியுள்ளது. இதன் பரப்பளவு சுமார் 168.72 மில்லியன் சதுர கிலோ மீட்டர் ஆகும்.
Question 8
v
A
பசிபிக் பெருங்கடல்
B
இந்தியப்பெருங்கடல்
C
அட்லான்டிக் பெருங்கடல்
D
ஆர்டிக் பெருங்கடல்
Question 8 Explanation: 
விளக்கம்: இது புவியின் இரண்டாவது பெரிய பெருங்கடல் ஆகும். இதன் பரப்பளவு சுமார் 85.13 மில்லியன் சதுர கி.மீ ஆகும்.அட்லாண்டிக் பெருங்கடலின் கிழக்கே ஐரோப்பாவும், ஆப்பிரிக்காவும் மேற்கே வட அமெரிக்காவும் தென் அமெரிக்காவும் எல்லைகளாக உள்ளன. இப்பெருங்கடல் ஆங்கில எழுத்தான S வடிவத்தில் உள்ளது. ஜிப்ரால்டர் நீர்ச்சந்தி அட்லாண்டிக் நீர்ப்பகுதியையும் மத்திய தரைக்கடல் பகுதியையும் இணைக்கிறது.
Question 9
இந்தியப்பெருங்கடலின் ஆழமான அகழி எது?
A
ஜாவா
B
மில்வாக்கி
C
மரியானா
D
a) மற்றும் b)
Question 9 Explanation: 
விளக்கம்: மலாக்கா நீர்ச்சந்தி இந்தியப்பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கிறது. இந்தியப்பெருங்கடலில் அரபிக்கடல், வங்காள விரிகுடா, செங்கடல், பாரசீக வளைகுடா போன்ற கடல்கள் எல்லையோரக்கடல்களாக உள்ளன. இந்தியப்பெருங்கடலின் ஆழமான பகுதி ஜாவா அகழி ஆகும். இந்தியப்பெருங்கடலில் அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவுகள், மாலத்தீவுகள், இலங்கை, மொரீஷியஸ், ரீயூனியன் உள்ளிட்ட பல தீவுகள் காணப்படுகின்றன.
Question 10
கீழ்க்கண்டவற்றுள் அட்சக்கோடுகளின் தொடக்கம் எது?
A
90°
B
23°
C
D
66°
Question 10 Explanation: 
விளக்கம்: புவியின்மீது கிழக்கிலிருந்து மேற்காக கிடைமட்டமாக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள், அட்சக்கோடுகள் எனப்படும். புவியின் மையத்தில் காணப்படும் 0° அட்சக்கோடு நிலநடுக்கோடு எனப்படும். இது அட்சக்கோடுகளின் தொடக்கமாகும். இக்கோட்டிலிருந்து வடக்கிலும் தெற்கிலும் 90° வரை இணையான கோடுகளாக சமதூர இடைவெளியில் வரையப்பட்டுள்ளன. ஒவ்வொரு அட்சக்கோட்டிற்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு தூரம் 111 கி.மீ. ஆகும்.
Question 11
தீர்க்கக்கோடுகளின் தொடக்கக்கோடு எந்த நாட்டின் வழியே செல்கிறது?
A
இங்கிலாந்து
B
அமெரிக்கா
C
இத்தாலி
D
ஆப்பிரிக்கா
Question 11 Explanation: 
விளக்கம்: இங்கிலாந்து நாட்டின் இலண்டனுக்கு அருகிலுள்ள கிரீன்விச் என்னுமிடத்தில் 'இராயல் வானியல் ஆய்வுமையம்' (Royal Astronomical observatory) அமைந்துள்ளது. இம்மையத்தின் வழியே செல்லும் தீர்க்கக் கோட்டினைத் தீர்க்கக் கோடுகளின் தொடக்கக் கோடாக வைத்துக் கொள்வதென, 1884ஆம் ஆண்டு அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்த பன்னாட்டு கருத்தரங்கில் அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டன.
Question 12
பன்னாட்டு தேதிக்கோடு எந்த நீர்ச்சந்தியின் வழியாக செல்கிறது?
A
ஜிப்ரால்டர்
B
மலாக்கா
C
பேரிங்
D
பாக்
Question 12 Explanation: 
விளக்கம்: தீர்க்கக் கோடுகளில் 180° தீர்க்கக்கோடானது பன்னாட்டு தேதிக்கோடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பசிபிக் பெருங்கடலில் அலாஸ்காவிற்கும், இரஷ்யாவிற்கும் இடையில் பேரிங் நீர்ச்சந்தி வழியாக செல்கின்றது. ஒருவர் மேற்கிலிருந்து கிழக்காக இக்கோட்டுப் பகுதியைக் கடந்தால் ஒருநாள் குறையும். மாறாக, கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி கடந்தால் ஒருநாள் கூடும். இக்கோட்டினை அடிப்படையாகக் கொண்டு உலகில் அனைத்துப் பகுதிகளிலும் தேதி நிர்ணயிக்கப்படுகிறது.
Question 13
தமிழ்நாட்டில்  காணப்படும் ஆற்று வளைவுகளுக்கு எடுத்துக்காட்டு எது?
A
சிற்றாறு
B
வெள்ளாறு
C
காவிரியாறு
D
பெரியாறு
Question 13 Explanation: 
விளக்கம்: தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் சேத்தியாத்தோப்பு அருகே வெள்ளாற்று பகுதியில் காணப்படும் ஆற்று வளைவுகள் (Meanders) இருபக்கங்களிலும் தொடர்ந்து அரித்தல் மற்றும் படிதல் ஏற்படுவதால், ஆற்று வளைவின் கழுத்துப் பகுதிகள் குறைந்து வருகின்றன. நாளடைவில், ஆற்று வளைவு ஆற்றிலிருந்து துண்டிக்கப்பட்டு ஒரு ஏரியாக உருவெடுக்கின்றது. இதுவே குதிரைக் குளம்பு ஏரி (Oxbow lake) எனப்படுகிறது.
Question 14
பனியாறுகளால் பாறைகளின் மீது ஏற்படுத்தும் கை நாற்காலி போன்ற பள்ளத்தாக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
சர்க்கு
B
லெவீஸ்
C
உட்பாய்த் தேக்கம்
D
மொரைன்
Question 14 Explanation: 
விளக்கம்: மலைச்சரிவில் பனி அரிப்பால் சர்க்குகள் ஏற்படுகின்றன. சர்க்குகள் என்பது பனியாறுகளால் பாறைகளின் மீது ஏற்படுத்தும் கை நாற்காலி போன்ற பள்ளத்தாக்கு ஆகும். இதன் எல்லாப்பக்கமும் செங்குத்தாகவும், தலைப்பகுதி செங்குத்து சுவர் போன்றும் உள்ளது. எ.கா. ஸ்காட்லாந்திலுள்ள கார்ரி சர்க் மற்றும் ஜெர்மனியிலுள்ள கார் சர்க்.
Question 15
காற்றடி வண்டல் படிவுகள்  அதிகமாக காணப்படும் நாடு?
A
தென் அமெரிக்கா
B
சீனா
C
ஸ்காட்லாந்து
D
ஜெர்மனி
Question 15 Explanation: 
விளக்கம்: மணல் துகள்கள் மிக லேசாகவும் மற்றும் எடை குறைவாகவும் இருக்கும் போது காற்று நீண்ட தொலைவிற்கு கடத்தி செல்கின்றது. இவ்வாறு கடத்தப்பட்ட மணல் ஒரு பெரும் பரப்பில் படிவதை காற்றடி வண்டல் படிவுகள் (Loess) எனப்படுகிறது. காற்றடி வண்டல் படிவுகள் சீனாவில் அதிகமாக காணப்படுகின்றன.
Question 16
கீழ்க்கண்டவற்றுள் வானிலை  மற்றும் காலநிலையை  நிர்ணயிக்கும் காரணிகள் யாவை?
A
நிலநடுக்கோட்டிலிருந்து தூரம்
B
கடல் மட்டத்திலிருந்து உயரம்
C
மலைகளின் இடையூறு
D
இவை அனைத்தும்
Question 16 Explanation: 
விளக்கம்: * மேக மூட்டம் * கடல் நீரோட்டங்கள் * இயற்கைத் தாவரங்கள் * நிலநடுக்கோட்டிலிருந்து தூரம் * கடல் மட்டத்திலிருந்து உயரம் * மலைகளின் இடையூறு * வீசும் காற்றின் தன்மை * கடலிலிருந்து தூரம்
Question 17
புவி மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை எவ்வளவு?
A
13°
B
14°
C
15°
D
16°
Question 17 Explanation: 
விளக்கம்: சமவெப்பநிலை உள்ள இடங்களை இணைக்க வரைபடத் தில் வரையப்படும் கற்பனைக் கோடு சமவெப்பக்கோடு ஆகும். வெப்பநிலை பருவத்திற்கு பருவம், இடத்திற்கு இடம், கண்டத்திற்கு கண்டம் வேறுபடும். புவி மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 13° செல்சியஸ் ஆகும்.
Question 18
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
A
நிலநடுக்கோட்டிலிருந்து 5° வட தென் அட்சங்களுக்கு இடையே காணப்படும் பகுதியே நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலமாகும்.
B
நிலநடுக்கோட்டுப் பகுதிகளில் சூரியனின் செங்குத்தா ன கதிர்கள் அப்பகுதியை வெப்பமடையச் செய்கிறது.
C
இவ்வெப்பத்தினால் காற்று விரிவடைந்து மேல்நோக்கிச் செல்வதால் உயரழுத்தம் உருவாகின்றது
D
மேற்கண்ட அனைத்தும்
Question 18 Explanation: 
விளக்கம்: நிலநடுக்கோட்டிலிருந்து 5° வட தென் அட்சங்களுக்கு இடையே காணப்படும் பகுதியே நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலமாகும். நிலநடுக்கோட்டுப் பகுதிகளில் சூரியனின் செங்குத்தான கதிர்கள் அப்பகுதியை வெப்பமடையச் செய்கிறது. இவ்வெப்பத்தினால் காற்று விரிவடைந்து மேல்நோக்கிச் செல்வதால் தாழ்வழுத்தம் உருவாகின்றது. இதனால் இம்மண்டலம் 'அமைதி மண்டலம்' (doldrums) எனவும் அழைக்கப்படுகிறது.
Question 19
குதிரை அட்சங்கள் என்று அழைக்கப்படும் மண்டலம் எது?
A
நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம்
B
துணை வெப்ப உயர் அழுத்த மண்டலம்.
C
துணைதுருவ தாழ்வு அழுத்த மண்டலம்
D
துருவ உயர் அழுத்த மண்டலம்
Question 19 Explanation: 
விளக்கம்: வெப்ப மண்டலத்திலிருந்து 35° வடக்கு மற்றும் தெற்கு அட்சம் வரை காணப்படும் மண்டலம் துணை வெப்ப உயர் அழுத்த மண்டலம் எனப்படும். நிலநடுக்கோட்டுப் பகுதியின் அதிக வெப்பத்தின் காரணமாக மேலெழுகின்ற காற்றானது குளிச்சியடைவதால் அதன் எடை அதிகரித்து இங்கு கீழிறங்குகின்றது. எனவே, இம்மண்டலத்தில் உயர் அழுத்தம் உருவாகின்றது. இம்மண்டலம் ‘குதிரை அட்சங்கள்’ என்றும் அழைக்கப்படுகிறது.
Question 20
கீழ்க்கண்டவற்றுள் கோள்காற்றுகள் யாவை?
A
மேலைக்காற்றுகள்
B
துருவகீழைக்காற்றுகள்
C
வியாபாரக்காற்றுகள்
D
இவை அனைத்தும்.
Question 20 Explanation: 
விளக்கம்: வருடம் முழுவதும் நிலையாக ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள்காற்று எனப்படும். இவை ‘நிலவும்காற்று’ (Prevailing Winds) எனவும் அழைக்கப்படுகிறது.‘வியாபாரக்காற்றுகள்’ (Trade Winds) ‘மேலைக்காற்றுகள்’ (westerlies) மற்றும் ‘துருவகீழைக்காற்றுகள்’ (Polar Easterlies) ‘கோள் காற்றுகள்’ ஆகும்.
Question 21
வெப்ப மண்டல உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசும் காற்றுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
மேலைக்காற்றுகள்
B
காலமுறைக்காற்றுகள்
C
வியாபாரக்காற்றுகள்
D
இவை அனைத்தும்
Question 21 Explanation: 
விளக்கம்: மேலைக் காற்றுகள் நிலையான காற்றுகள் ஆகும். இவை வட அரைக்கோளத்தில் தென் மேற்கிலிருந்து, வடகிழக்காகவும், தென் அரைக்கோளத்தில் வடமேற்கிலிருந்து, தென் கிழக்காகவும் வீசுகின்றன. மேலைக்காற்றுகள் மிகவும் வேகமாக வீசக்கூடியவை, எனவே, இக்காற்றுகள் 40º “கர்ஜிக்கும் நாற்பதுகள்” எனவும் 50º அட்சங்களில் “சீறும் ஐம்பதுகள் எனவும் 60º அட்சங்களில் “கதறும் அறுபதுகள்’’ எனவும் அழைக்கப்படுகிறது.
Question 22
கீழ்க்கண்டவற்றுள் வலுவிழந்தக் காற்றுகள்  எவை?
A
மேலைக்காற்றுகள்
B
துருவகீழைக்காற்றுகள்
C
வியாபாரக்காற்றுகள்
D
காலமுறைக்காற்றுகள்
Question 22 Explanation: 
விளக்கம்: துருவ உயர் அழுத்த மண்டலத்திலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசும் குளிர்ந்த, வறண்ட காற்றுகள் துருவ கீழைக்காற்றுகள் எனப்படுகின்றன. இவை வட அரைக்கோளத்தில் வடகிழக்கிலிருந்தும், தென்அரைக்கோளத்தில் தென் கிழக்கிலிருந்தும் வீசுகின்றன. இக்காற்றுகள் வலுவிழந்தக் காற்றுகளாகும்.
Question 23
பருவத்திற்கேற்ப தன் திசையை மாற்றிக் கொள்கின்ற தன்மையுடைய காற்றுக்கள் எவை?
A
மேலைக்காற்றுகள்
B
துருவகீழைக்காற்றுகள்
C
வியாபாரக்காற்றுகள்
D
காலமுறைக்காற்றுகள்
Question 23 Explanation: 
விளக்கம்: இவ்வாறு திசையை மாற்றிக் கொள்வதற்கு நிலமும் கடலும் வெவ்வேறு விகிதங்களில் வெப்பமடைவதே காரணமாகும். காற்றுகள் தன் திசையைப் பருவத்திற்கேற்ப மாற்றிக் கொள்வதால் இதற்கு பருவக்காற்று (மான்சூன்) என்று பெயர்.
Question 24
கிழக்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் வெப்பச்சூறாவளிகள் ரவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A
ஹரிக்கேன்கள்
B
பேக்யுஸ்
C
டைபூன்கள்
D
வில்லிவில்லி
Question 24 Explanation: 
விளக்கம்: வெப்பச் சூறாவளிகள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. இவை இந்தியப் பெருங்கடல் பகுதியில் சூறாவளிகள் (Cyclone) என்றும், மேற்கு பசிபிக்பெருங்கடலில் டைபூன்கள் (Typhoons) என்றும், கிழக்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகளில் ஹரிக்கேன்கள் (Hurricanes) என்றும், பிலிப்பைன்ஸ் பகுதிகளில் பேக்யுஸ் (Baguios) என்றும், ஆஸ்திரேலியாவில் வில்லிவில்லி (Wily Wily) என்றும் அழைக்கப்படுகிறது.
Question 25
மேற்கத்திய இடையூறு காற்று’ (Western Disturbance) என்று அழைக்கப்படும் சூறாவளி எது?
A
மிதவெப்பச்சூறாவளிகள்
B
வெப்பச்சூறாவளிகள்
C
கூடுதல் வெப்பச்சூறாவளிகள்
D
இவை அனைத்தும்
Question 26
தன் ஆற்றலை உயர் அட்சங்களின் வெப்ப மாற்றங்களிலிருந்து பெறும் சூறாவளி எது?
A
மிதவெப்பச்சூறாவளிகள்
B
வெப்பச்சூறாவளிகள்
C
கூடுதல் வெப்பச்சூறாவளிகள்
D
இவை அனைத்தும்
Question 26 Explanation: 
விளக்கம்: கூடுதல் வெப்பச் சூறாவளிகள் என்பது 30° முதல் 60° வரை உள்ள வடக்கு மற்றும் தெற்கு அட்சப்பகுதிகளில் வீசுகின்றன. இது ‘மைய அட்ச சூறாவளிகள்’ (Mid Latitudes Cyclones) என்றும் அழைக்கப்படுகின்றன. இச்சூறாவளிகள் தன் ஆற்றலை உயர் அட்சங்களின் வெப்ப மாற்றங்களிலிருந்து பெறுகின்றன. இது லேசான சாரல்மழை (Mildshowers) முதல் பெருங்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழைப்பொழிவையும்(Heavy hails), இடியுடன் கூடிய மழைப்பொழிவையும் பனிப்பொழிவையும் (Blizzards) மற்றும் சுழல் காற்றுகளையும் (Tornadoes) அளிக்கின்றன.
Question 27
ஆப்பிரிக்காவின் வட கடற்கரைப் பகுதியில் வீசும் தலக்காற்று எது?
A
ஃபான் காற்று
B
சிராக்கோ
C
சின்னூக்
D
மிஸ்ட்ரல்
Question 27 Explanation: 
விளக்கம்: ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறுகிய காலத்திற்கு மட்டும் வீசும் காற்று தலக்காற்று எனப்படும். தலக்காற்றின் தாக்கம் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படும். இவை குறிப்பிட்ட பருவத்தில் மட்டும் வீசுகின்ற காற்றாகும். இது உலகில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. ● ஃபான் காற்று(Foehn) - (ஆல்ப்ஸ் – ஐரோப்பா) ● சிராக்கோ (Sirocco) - (ஆப்பிரிக்காவின் வட கடற்கரைப் பகுதி) ● சின்னூக் (Chinnook) - (ராக்கி மலைத்தொடர் – வட அமெரிக்கா) ● லூ (Loo) - (தார் பாலைவனம் – இந்தியா) ● மிஸ்ட்ரல் (Mistral) - (மத்தியத் தரைக்கடல் பகுதி – பிரான்ஸ்) ● போரா (Bora) - (மத்தியத் தரைக்கடல் பகுதி – இத்தாலி)
Question 28
மிகச்சிறிய பனித்துகள்களை கொண்ட மேகம் எது?
A
கீற்றுத் திரள் மேகங்கள்
B
கீற்றுப்படை மேகங்கள்
C
இடைப்பட்ட திரள்மேகங்கள்
D
கீழ்மட்டமேகங்கள்
Question 28 Explanation: 
விளக்கம்: கீற்றுப்படை மேகங்கள் மென்மையாக பால் போன்ற வெள்ளை நிறத்தில் கண்ணாடி போன்று காணப்படும். இது மிகச்சிறிய பனித்துகள்களை கொண்ட மேகமாகும். கீற்றுத் திரள் மேகங்கள் வெண்மையான திட்டுக்களாகவோ , விரிப்பு போன்றோ, அடுக்கடுக்காகவோ அமைந்திருக்கும். இவை பனிப்படிகங்களால் உண்டானவை ஆகும்.
Question 29
கம்பளிக்கற்றை மேகங்கள்  என்று அழைக்கப்படும் மேகம் எது?
A
கீற்றுத் திரள் மேகங்கள்
B
கீற்றுப்படை மேகங்கள்
C
இடைப்பட்ட திரள்மேகங்கள்
D
கீழ்மட்டமேகங்கள்
Question 29 Explanation: 
விளக்கம்: தனித்தனியாக உள்ள மேகத்திரள்கள் ஒன்று டனொன்று இணைந்து பல்வேறு வடிவங்களில் காணப்படும். இவை அலைத்திரள் அல்லது இணைக்கற்றைகள் போன்ற அமைப்புடன் காட்சியளிக்கும் ஆகையினால் இதனை ’செம்மறியாட்டுமேகங்கள்’ (Sheep Clouds), அல்லது ‘கம்பளிக்கற்றைமேகங்கள்’ (Wool Pack Clouds) என்றுஅழைக்கப்படுகிறது.
Question 30
புவியின் மேற்பரப்பை ஒட்டிய பகுதிகளில் தோன்றும் கருமையான மேகங்கள்?
A
கீற்றுத் திரள் மேகங்கள்
B
கீற்றுப்படை மேகங்கள்
C
இடைப்பட்ட திரள்மேகங்கள்
D
கார்படை மேகங்கள்.
Question 30 Explanation: 
விளக்கம்: புவியின் மேற்பரப்பை ஒட்டிய பகுதிகளில் தோன்றும் கருமையான மேகங்கள் கார்படை மேகங்கள் ஆகும். இவை மழை, பனி மற்றும் ஆலங்கட்டி மழையுடன் தொடர்புடையது. வளிமண்டலக் கீழ் அடுக்கில் (Troposphere) மட்டும் தான் அனைத்து வகையான மேகங்களும் காணப்படும். சூரிய மறைவின் பொழுது கீற்று மேகங்கள் பல வண்ணத்தில் காட்சியளிப்பதால் “பெண்குதிரை வால்கள்” (Mare’s Tails) என்றும் அழைக்கப்படுகிறது.
Question 31
ஷான் பீடபூமி எங்கு அமைந்துள்ளது?
A
சௌதி அரேபியா
B
மியான்மர்
C
சீனா
D
இந்தியா
Question 31 Explanation: 
விளக்கம்: தெற்கு பீடபூமிகள், வடக்கு பீடபூமிகளைக் காட்டிலும் உயரம் குறைந்து காணப்படுகின்றன. தெற்கு பீடபூமிகளில் முக்கியத்துவம் வாய்ந்த நான்கு பீடபூமிகளாவன : அரேபிய பீடபூமி (சௌதி அரேபியா), தக்காண பீடபூமி (இந்தியா) ஷான் பீடபூமி (மியான்மர்), யுனான் பீடபூமி (சீனா). இவற்றில் மிகப் பெரியது அரேபிய பீடபூமி ஆகும்.
Question 32
கீழ்க்கண்டவற்றுள் மிகப்பெரிய தீவுக்கூட்டம் எது?
A
இந்தோனேசியா
B
மாலத்தீவுகள்
C
பிலிப்பைன்ஸ்
D
ஜப்பான்
Question 32 Explanation: 
விளக்கம்: ஒன்றிணைக்கப்பட்ட பல தீவுகள், தீவுக்கூட்டம் என அழைக்கப்படுகின்றது. இந்தோனேசியா மிகப்பெரியத் தீவுக்கூட்டம் ஆகும். அரபிக்கடலில் உள்ள மாலத்தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள், பாரசீக வளைகுடாவில் உள்ள பஹ்ரைன் போன்ற வை இந்தியப் பெருங்கடலில் காணப்படும் சிறிய தீவுக்கூட்டங்களாகும். இலங்கைத் தீவு வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது.
Question 33
கீழ்க்கண்டவற்றுள் குளிர்பாலைவனம் எது?
A
கோபி
B
தக்லாமக்கன்
C
தார்
D
a) மற்றும் b)
Question 33 Explanation: 
விளக்கம்: ஆசியாவில் பாலைவனங்கள் மேற்கு கடற்கரையோரமாகக் காணப்படுகின்றன. இங்குள்ள அரேபிய (சௌதி அரேபியா) மற்றும் தார் (இந்தியா மற்றும் பாகிஸ்தான்) பாலைவனங்கள் மிக வெப்பமான பாலைவனங்கள் ஆகும். கோபி மற்றும் தக்லாமக்கன் பாலைவனங்கள் மிகவும் குளிர்ந்த பாலைவனங்கள் ஆகும். ஆசியாவின் மிகப் பெரிய பாலைவனம் அரேபிய பாலைவனமாகும்.
Question 34
மேற்காசிய நாடுகளிலேயே  குறிப்பிடத்தக்க அளவில் கனிம வளங்கள் எங்கு காணப்படுகின்றன?
A
மியான்மர்
B
தாய்லாந்து
C
அமெரிக்கா
D
ஈரான்
Question 34 Explanation: 
விளக்கம்: கனிம வளங்கள் ஆசியா பல்வகையான கனிம வளங்களைக் கொண்டுள்ளது. இரும்பு, நிலக்கரி, மாங்கனீசு, பாக்ஸைட், துத்தநாகம், டங்ஸ்டன், பெட்ரோலியம், தகரம் ஆகியவற்றின் உற்பத்தியில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை வாயு மேற்காசிய நாடுகளில் காணப்படுகின்றன. உலகின் மூன்றில் ஒரு பங்கு எண்ணெய் ஆசியாவிலிருந்து கிடைக்கப்பெறுகின்றது. மேற்காசிய நாடுகளிலேயே, ஈரானில் குறிப்பிடத்தக்க அளவில் கனிம வளங்கள் காணப்படுகின்றன.
Question 35
உலகிலேயே அதிக அளவில் மைக்காவினை உற்பத்தி செய்யும் நாடு எது?
A
இந்தியா
B
சீனா
C
பாகிஸ்தான்
D
ஈரான்
Question 35 Explanation: 
விளக்கம்: பாக்ஸைட், இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளில் காணப்படுகின்றது. இந்தியா உலகிலேயே அதிக அளவில் மைக்காவினை உற்பத்தி செய்கின்றது. மியான்மர், தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தகரம் காணப்படுகின்றது.
Question 36
ஆசியாவிலேயே மிக அதிகமான பயிர்செய்ய ஏற்ற நிலப்பரப்பைக் கொண்டுள்ள நாடு எது?
A
இந்தியா
B
சீனா
C
பாகிஸ்தான்
D
ஈரான்
Question 36 Explanation: 
விளக்கம்: ஆசியாவிலேயே மிக அதிகமான பயிர்செய்ய ஏற்ற நிலப்பரப்பைக் கொண்டுள்ள நாடு இந்தியா ஆகும். பல மேற்காசிய நாடுகளில் நிலத்தடி நீர், நிலப்பரப்பிற்கு அருகில் கிடைக்கும் இடங்களில் பயிர்கள் பயிரிடப்படுகின்றன. ஈராக் நாட்டில் வேளாண் நடவடிக்கைகள் மழைப்பொழிவு மற்றும் யூப்ரடிஸ், டைக்ரிஸ் ஆறுகளிலிருந்து பெறப்படும் நீரினைப் பொறுத்தே அமைகின்றன.
Question 37
ஆசியாவின் 'அரிசிக் கிண்ணம்' என்று  அழைக்கப்படும் நாடு எது?
A
தாய்லாந்து
B
நியூசிலாந்து
C
பாகிஸ்தான்
D
ஈராக்
Question 37 Explanation: 
விளக்கம்: மியான்மர், ஜப்பான், வங்காளதேசம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் நெல் விளைவிக்கும் பிற முக்கிய நாடுகளாகும். அதிக மழைப்பொழிவு, செழுமை வாய்ந்த சமவெளிகள் மற்றும் மனிதவளம் ஆகியவற்றைப் பெற்றிருப்பதால் பருவமழை பெய்யும் ஆசியப்பகுதிகள் நெல் விளைய ஏற்ற பகுதிகளாகத் திகழ்கின்றன. தாய்லாந்து தென்கிழக்கு ஆசியாவின் 'அரிசிக் கிண்ணம்' என அழைக்கப்படுகின்றது.
Question 38
கீழ்க்கண்டவற்றுள் எது கலந்த நீர் நீராவியாகும்போது கால்சைட் விழுதுகள் போன்று காட்சியளிக்கும்?
A
கால்சியம் ஆக்சைட்
B
கால்சியம் கார்பனேட்
C
கால்சியம் குளோரைடு
D
பொட்டாசியம் பெர்மாங்கனேட்
Question 38 Explanation: 
விளக்கம்: குகைகளின் கூரைகளிலிருந்து ஒழுகும் கால்சியம் கார்பனேட் கலந்த நீர் நீராவியாகும்போது கால்சைட் விழுதுகள் போன்று காட்சியளிக்கும். இது கல் விழுது (Stalactite) என்று அழைக்கப்படுகிறது. கால்சியம் கார்பனேட் கலந்த நீர் தரையில் படிந்து மேல்நோக்கி வளர்வது கல்முளை(Stalagmite) எனப்படுகிறது. கீழ்நோக்கி வளரும் கல்விழுதும், மேல் நோக்கி வளரும் கல்முளையும் ஒன்று சேர்ந்து செங்குத்து கல்தூணாக (Columns or pillars) உருவாகிறது.
Question 39
பனியாறுகளின்  நகர்வுக்கு காரணமான காரணிகள் எவை?
A
சரிவு
B
பனிக்கட் டியின் கன அளவு
C
அடர்த்தி
D
இவை அனைத்தும்
Question 39 Explanation: 
விளக்கம்: பெரும் பரப்பளவில் உள்ள பனிக்கட்டிகள் அதன் அடிப்பாகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் வெப்பம் உருவாகி பனிக்கட்டியின் அடியில் உருகி மெல்ல நகரத் தொடங்குகிறது. இதன் நகர்வின் வேகம் ஒரு நாளில் சில சென்டிமீட்டர் முதல் பல நூறு மீட்டர் வரை வேறுபடும். இந்நகர்விற்கான காரணங்கள் சரிவு, பனிக்கட்டியின் கன அளவு, அடர்த்தி, பயணிக்கும் நிலத்தின் உராயும் தன்மை மற்றும் வெப்பம் போன்றவை ஆகும். ஆறுகளைப் போன்றே பனியாறுகளும் அரித்தல், கடத்துதல் மற்றும் படியவைத்தல் போன்ற செயல்களைச் செய்கின்றன.
Question 40
பனியாற்றுக்கு இணையாகப் படிய வைக்கப்படும் குறுகிய தொடர் குன்றுகள்?
A
மொரைன்
B
இன்சல்பர்க்
C
யார்டங்
D
எஸ்கர்கள்
Question 40 Explanation: 
விளக்கம்: பனியாறுகள் உருகுவதால் அவை கொண்டு வரும் கூழாங்கற்கள், சரளை கற்கள் மற்றும் மணல் ஒரு நீண்ட குறுகிய தொடர் குன்று போன்று பனியாற்றுக்கு இணையாகப் படிய வைக்கப்ப டுகிறது. இவ்வாறு படியவைக்கப்படும் குறுகிய தொடர் குன்றுகளே எஸ்கர்கள் எனப்படுகின்றன.
Question 41
கீழ்க்கண்டவற்றுள் எவை மழைப்பொழிவை தருவதில்லை?
A
கீற்று மேகங்கள
B
கீற்றுத் திரள் மேகங்கள்
C
கீற்றுப்படை மேகங்கள்
D
கார்படைமேகங்கள்
Question 41 Explanation: 
விளக்கம்: வளிமண்டலத்தில் 8000 முதல் 12000 மீட்டர்உயரத்தில் மெல்லிய, வெண்ணிற இழை போன்ற தோற்றத்தில் காணப்படும் மேகங்கள் கீற்று மேகங்கள் எனப்படுகின்றன. இது முற்றிலும் ஈரப்பதம் இல்லாத மேகங்களாகும். எனவே, இம்மேகங்கள் மழைப்பொழிவை தருவதில்லை.
Question 42
சாம்பல் அல்லது நீல நிறத்தில் சீராக மெல்லிய விரிப்பு போன்று காணப்படும் மேகங்கள் எவை?
A
இடைப்பட்ட படைமேகங்கள்
B
கீற்றுத் திரள் மேகங்கள்
C
கீற்றுப்படை மேகங்கள்
D
கார்படைமேகங்கள்
Question 42 Explanation: 
விளக்கம்: சாம்பல் அல்லது நீல நிறத்தில் சீராக மெல்லிய விரிப்பு போன்று காணப்படும் மேகங்கள் இடைப்பட்ட படை மேகங்களாகும். இவை உறைந்த நீர்த்திவலைகளைக் கொண்டிருக்கும்.
Question 43
காற்றில் மிக அதிகமான ஈரப்பதம் இருந்தால் மட்டும் ஏற்படுவது?
A
பனி
B
ஆலங்கட்டி மழை
C
மழை
D
கல்மாரி மழை
Question 43 Explanation: 
விளக்கம்: உறைநிலைக்கும் அதிகமான வெப்பநிலை காணப்படும் போது மழைப் பொழிகிறது. புவியின் மிக அதிகமான இடங்களில் மழைப்பொழிவு கிடைக்கிறது. காற்றில் மிக அதிகமான ஈரப்பதம் இருந்தால் மட்டுமே மழைப்பொழிவு ஏற்படும். மழைத்துளியின் விட்டம் 5 மில்லி மீட்டருக்கு மேல் காணப்படும்.
Question 44
உறையும் நிலைக்கு கீழாக நீர் சுருங்குதல் ஏற்படும்போது  ஏற்படுவது எது?
A
பனி
B
ஆலங்கட்டி மழை
C
மழை
D
கல்மாரி மழை
Question 44 Explanation: 
விளக்கம்: உறையும் நிலைக்கு கீழாக நீர் சுருங்குதல் ஏற்படும்போது பனிப்பொழிவு ஏற்படுகிறது. பகுதியாகவோ , முழுமையாகவோ ஒளி புகா தன்மையுடன் காணப்படும் பனித்துகள் படிகங்களை பனி என்று அழைக்கின்றோம். இந்த பனிப்படிகங்கள் ஒன்றோடொன் று மோதிப் பனிச்சீவல்களாக (Snowflakes) உருப்பெருகின்றன.
Question 45
வெப்பக்காற்றும், குளிர்க்காற்றும் சந்திக்கும் எல்லையில் நீராவி சுருங்குவதால் ஏற்படும் மழை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
வளிமுக மழை
B
வெப்பச்சலன மழை
C
மலைத்தடுப்பு மழைப்பொழிவு
D
கல்மாரி மழை
Question 45 Explanation: 
விளக்கம்: அடர்த்தியான காற்றுத்திரகள் ஒருமுகப்படுத்தப்பட்டு பின்பு மேல்நோக்கி சென்று வெப்பம் மாறா நிலையினால் குளிர்ச்சியடைந்து பொழியும் மழை சூறாவளி மழைப்பொழிவு எனப்படுகிறது. வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் சூறாவளி மழைப்பொழிவு கிடைக்கின்றது. வெப்பக்காற்றும், குளிர்க்காற்றும்
Question 46
கீழ்க்கண்டவற்றுள் மழை மறைவுப்பிரதேசங்கள் எவை?
A
மும்பை
B
பூனா
C
ஷில்லாங்
D
இவை அனைத்தும்
Question 46 Explanation: 
விளக்கம்: இந்தியாவில் அதிக மழையைப்பெறும் இடம் மௌசின்ராம். இது பூர்வாச்சல் மலையின் காற்று மோதும் பக்கம் அமைந் துள்ள து. ஆனால் இம்மலையின் காற்று மோதா பக்கம் அமைந்துள்ள ‘ஷில்லாங்’ மிக குறைந்த அளவே மழையைப் பெறுகிறது. இதைப் போன்றே மும்பையும், பூனாவும் அமைந்துள்ளன
Question 47
நிலத்தோற்ற மழை என அழைக்கப்படுவது எது?
A
வளிமுக மழை
B
வெப்பச்சலன மழை
C
மலைத்தடுப்பு மழைப்பொழிவு
D
கல்மாரி மழை
Question 47 Explanation: 
விளக்கம்: மலைத் தடுப்பு மழை நிலத்தோற்ற மழை எனவும் அழைக்கப்படுகிறது. ஈரப்பதம் மிகுந்து வீசும் காற்று மலைச்சரிவால் தடுக்கப்பட்டு மேல்நோக்கி எழுகிறது. இவ்வாறு எழுந்த காற்று பின்னர் குளிர்விக்கப்பட்டு சுருங்கி மழைப்பொழிவைத் தருகின்றது. இவ்வாறு பெறப்படுகின்ற மழைப்பொழிவு மலைத்தடுப்பு மழைப் பொழிவு (Orographic Rainfall) என்று அழைக்கப்படுகின்றது.
Question 48
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
A
வெப்பக்காற்று குளிர்காற்றை விட அதிகமான ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்ளும் தன்மையுடையதாகும்.
B
ஒப்பு ஈரப்பதமானது குளிர்காற்றில் அதிகமாகவும் வெப்பக்காற்றில் குறைவாகவும் காணப்படும்.
C
a) மற்றும் b)
D
b) மட்டும்
Question 48 Explanation: 
விளக்கம்: வளிமண்டலத்தில் வானிலையையும் காலநிலையையும் பாதிக்கும் ஒரு முக்கியமான காரணியாக ஈரப்பதம் உள்ளது. வளிமண்டலத்தில் உள்ள நீராவியின் அளவே “ஈரப்பதம்” ஆகும். வளிமண்டலத்தில் நீராவியின் அளவு அதிகரித்தால் ஈரப்பதத்தின் அளவும் அதிகரிக்கும். வளிமண்டலத்தில் உள்ள மொத்த நீராவியின் அளவு முழுமையான ஈரப்பதம்’ (absolute humidity) எனப்படும். வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதம் அளவிற்கும் அதன் மொத்தக் கொள்ளளவிற்கும் உள்ள விகிதாச்சாரமே ‘ஒப்பு ஈரப்பதம்’ (Relative humidity) எனப்படும்.
Question 49
தாழ்வழுத்தப்பகுதியை  உயரழுத்தப்பகுதி சுற்றி இருப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
சூறாவளி
B
எதிர்ச்சூறாவளி
C
வெப்பத் தலைகீழ் மாற்றம்
D
a) மற்றும் b)
Question 49 Explanation: 
விளக்கம்: தாழ்வழுத்தப்பகுதியை உயரழுத்தப்பகுதி சுற்றி இருப்பதே சூறாவளி (Cyclone) என்று அழைக்கப்படுகிறது. உயர் அழுத்தப் பகுதியைச் சுற்றி தாழ்வழுத்தப்பகுதி இருப்பது எதிர்ச்சூறாவளி (Anti Cyclone) என்று அழைக்கப்படுகிறது. கண்ணுக்குத் தெரியும் சுருங்கிய நீராவி காற்றில் மிதப்பதையே மேகங்கள் என்கிறோம். அனைத்து பொழிவுகளும் மேகங்களிலிருந்து உருவாகின்றன.
Question 50
வளங்கள் எதன் அடிப்படையில் கண்டறியப்பட்ட வளங்கள் மற்றும் மறைந்திருக்கும் வளங்கள் என்று வகைப்படுத்தப்படுகிறது?
A
உரிமை
B
வளர்ச்சி
C
தோற்றம்
D
இவை அனைத்தும்
Question 50 Explanation: 
விளக்கம்: கண்டறியப்பட்ட வளங்கள்: தற்போது பயன்படுத்தப்படுவதும் அதன் இருப்பின் அளவும் கண்டறியப்பட்டுள்ளது. எ.கா: நெய்வேலி நிலக்கரி சுரங்கம். மறைந்திருக்கும் வளங்கள் என்பது தற்போது அதிக பயன்பாட்டில் இல்லாததும், அதன் அளவு மற்றும் இருப்பிடம் அறியப்படாமல் இருப்பதுமாகும். இவ்வளத்தினை எடுத்து பயன்படுத்துவதற்கான தொழில் நுட்பங்கள் இன்னும் வளர்ச்சி அடையவில்லை. வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் காணப்படும் ஈஸ்ட்.
Question 51
வட அரைக்கோளம் எத்தனை சதவீத நிலப்பரப்பைக் கொண்டுள்ளது?
A
61%
B
81%
C
71%
D
91%
Question 51 Explanation: 
விளக்கம்: கண்டங்கள் மற்றும் கடல்கள் வட மற்றும் தென் அரைக்கோளங்களில் ஒரே சீராகப் பரவியிருக்கவில்லை. வட அரைக்கோளம் 61% நிலப்பரப்பையும் தென் அரைக்கோளம் 81% நீர்ப்பரப்பையும் கொண்டுள்ளது. நிலம் மற்றும் நீர்ப்பரவலின் அடிப்படையில் வட அரைக்கோளம் நிலஅரைக்கோளம் என்றும் தென் அரைக்கோளம், நீர் அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகின்றன.
Question 52
உலகின் செழிப்பான மீன்பிடித்தளங்கள் எங்கு காணப்படுகிறது?
A
கண்டத்திட்டு
B
கண்டச்சரிவு
C
கண்ட உயர்ச்சி
D
கடலடி மலைத்தொடர்கள்
Question 52 Explanation: 
விளக்கம்: கண்டத்திட்டு ஆழமற்ற பகுதியாக இருப்பதினால் சூரிய ஒளி நன்கு ஊடுருவிச் செல்கின்றது. இது கடற்புற்கள், கடற்பாசி மற்றும் பிளாங்டன் போன்றவை நன்கு வளர்வதற்குச் சாதகமாக உள்ளது. இதனால் இப்பகுதிகள் உலகின் செழிப்பான மீன்பிடித்தளங்களுள் ஒன்றாக உள்ளது. (எ.கா.) நியூபவுண்ட்லாந்தில் உள்ள ‘கிராண்ட் பாங்க்’ (The Grand Bank).
Question 53
ஆழ்துளைக் கிணறுகள் மூலம் எண்ணெய் எடுப்பதற்கும் சுரங்க நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் சிறந்த இடமாக விளங்குவது எது?
A
கண்டத்திட்டு
B
கண்டச்சரிவு
C
கண்ட உயர்ச்சி
D
கடலடி மலைத்தொடர்கள்
Question 53 Explanation: 
விளக்கம்: கண்டத்திட்டு நிலத்திலிருந்து கடலை நோக்கி மென்சரிவுடன் கடலில் முழ்கியுள்ள ஆழமற்ற பகுதியே கண்டத்திட்டு எனப்படுகிறது. பெரும்பாலும் இப்பகுதிகள் மென்சரிவைக் கொண்ட சீரான கடற்படுகையாகும். கண்டத்திட்டுகள் மிக அதிக அளவு கனிமங்களையும் எரிசக்தி கனிமங்களையும் கொண்டுள்ளது. இப்பகுதி ஆழ்துளைக் கிணறுகள் மூலம் எண்ணெய் எடுப்பதற்கும் சுரங்க நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் சிறந்த இடமாக விளங்குகின்றது. (எ.கா.) அரபிக் கடலில் அமைந்துள்ள ‘மும்பைஹை’.
Question 54
கடலடிப் பள்ளத்தாக்குகள் மற்றும் அகழிகள் காணப்படுவது எப்பகுதியின் சிறப்பம்சங்களாகும்?
A
கண்டத்திட்டு
B
கண்டச்சரிவு
C
கண்ட உயர்ச்சி
D
கடலடி மலைத்தொடர்கள்
Question 54 Explanation: 
விளக்கம்: கண்டத்திட்டின் விளிம்பிலிருந்து வன் சரிவுடன் ஆழ்கடலை நோக்கிச் சரிந்து காணப்படும் பகுதியே கண்டச்சரிவாகும். இது கண்ட மேலோட்டிற்கும், கடலடி மேலோட்டிற்கும் இடையில் ஒரு எல்லையை உருவாக்குகின்றது. வன்சரிவினைக் கொண்டிருப்பதால் படிவுகள் எதுவும் இங்குக் காணப்படுவதில்லை. கடலடிப் பள்ளத்தாக்குகள் மற்றும் அகழிகள் காணப்படுவது இப்பகுதியின் சிறப்பம்சங்களாகும். சூரிய ஒளி மிகக் குறைந்த அளவே ஊடுருவிச் செல்வதால் வெப்பநிலை மிகக்குறைவாகவே உள்ளது. இதனால் இப்பகுதியில் வாழும் கடல்வாழ் உயிரினங்களில் வளர்சிதை மாற்றம் மெதுவாகவே நடைபெறுகிறது.
Question 55
உவர்ப்பியத்தின் அளவு எப்பகுதியில் அதிகமாக உள்ளது?
A
வெப்பமண்டலப் பகுதி
B
நிலநடுக்கோடு
C
துருவப்பகுதி
D
a) மற்றும் b)
Question 55 Explanation: 
விளக்கம்: கடல் நீரில் கரைந்துள்ள உப்பின் விகித அளவு உவர்ப்பியம் எனப்படும். இது ஆயிரத்தின் பகுதியாக அளவிடப்படுகிறது. இதன் அளவு கிடைமட்ட மற்றும் செங்குத்து அளவிலும் மாறுபடுகிறது. கடலின் மேற்புற வெப்பநிலையைப் பொறுத்து, வெப்ப மண்டலத்திலிருந்து, துருவப் பகுதி வரை உவர்ப்பியத்தின் அளவு மாறுபடுகின்றது. வெப்பமண்டலப் பகுதியில் ஆவியாதல் அதிகமாக நடைபெறுவதினால் உவர்ப்பியம் அதிகமாகக் காணப்படுகின்றது. உயர்ப்பியத்தின் அளவு வெப்பமண்டலப் பகுதிகளில் அதிகமாகவும், நிலநடுக்கோடு மற்றும் துருவப்பகுதிகளில் குறைவாகவும் உள்ளது.
Question 56
புவி, சூரியன் மற்றும் சந்திரன் செங்குத்துக் கோணத்தில் வரும்போது உருவாகும் அலைகளின் உயரம் எவ்வாறு இருக்கும்?
A
குறைவாக
B
மிகக்குறைவாக
C
அதிகமாக
D
மிக அதிகமாக
Question 56 Explanation: 
விளக்கம்: புவி, சூரியன் மற்றும் சந்திரன் செங்குத்துக் கோணத்தில் வரும்போது இவற்றின் ஈர்ப்பு விசையானது ஒன்றுக்கொன்று எதிராகச் செயல்படுவதினால் உயரம் குறைவான அலைகள் உருவாகின்றன. இவ்வுயரம் குறைவான அலைகள், தாழ் ஓதங்கள் எனப்படுகின்றன. இரண்டு உயர் ஓதங்களுக்கு இடையே தாழ் ஓதங்கள் ஏற்படுகின்றன. சந்திரனின் முதல் மற்றும் இறுதி கால் பகுதியில் அதாவது மாதத்தில் இரண்டு முறை இவ்வோதங்கள் ஏற்படுகின்றன. இவற்றின் ஈர்ப்பு விசையானது ஒன்றுக்கொன்று எதிராகச் செயல்படுவதினால் உயரம் குறைவான அலைகள் உருவாகின்றன.
Question 57
கீழ்க்கண்டவற்றுள் குளிர் நீரோட்டம் எது?
A
அலாஸ்கா
B
குரோஷியா
C
லேட்ரடார்
D
வளைகுடா நீரோட்டம்
Question 57 Explanation: 
விளக்கம்: லேட்ரடார் குளிர் நீரோட்டம் ஆகும்.வளைகுடா நீரோட்டத்துடன் இணைவதன் விளைவாக பனிமூட்டத்தினை உருவாக்கி, கடல் போக்குவரத்திற்குத் தடையை ஏற்படுத்துகிறது. குரோஷியா, அலாஸ்கா, வளைகுடா நீரோட்டம் ஆகியன வெப்ப நீரோட்டங்கள் ஆகும்.
Question 58
தாழ் அட்சக்கோட்டுப் பகுதிகளிலிருந்து உயர் அட்சக் கோட்டுப் பகுதிகளை நோக்கி நகரும் நீரோட்டங்களுக்கு எடுத்துக்காட்டு?
A
அட்லாண்டிக் பெருங்கடலின் வளைகுடா நீரோட்டம்
B
பசிபிக் பெருங்கடலின் வட புவியிடைக் கோட்டு நீரோட்டம் பசிபிக் பெருங்கடலின் வட புவியிடைக் கோட்டு நீரோட்டம்
C
a) மற்றும் b)
D
பசிபிக் பெருங்கடலின் பெருவியன் நீரோட்டம்
Question 58 Explanation: 
விளக்கம்: கடல் நீரோட்டங்கள் வெப்பத்தின் அடிப்படையில் வெப்ப நீரோட்டம் மற்றும் குளிர் நீரோட்டம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. தாழ் அட்சக்கோட்டுப் பகுதிகளிலிருந்து (வெப்ப மண்டலம்) உயர் அட்சக் கோட்டுப் பகுதிகளை (மிதவெப்ப மண்டலம், துருவ மண்டலம்) நோக்கி நகரும் நீரோட்டங்கள் வெப்ப நீரோட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு: அட்லாண்டிக் பெருங்கடலின் வளைகுடா நீரோட்டம் மற்றும் பசிபிக் பெருங்கடலின் வட புவியிடைக் கோட்டு நீரோட்டம் ஆகும்.
Question 59
கீழ்க்கண்டவற்றுள்  சூழ்நிலை  மண்டலத்தின் அடிப்படை கூறுகள் யாவை?
A
உயிரற்ற கூறுகள்
B
உயிருள்ள கூறுகள்
C
ஆற்றல் கூறுகள்
D
இவை அனைத்தும்
Question 59 Explanation: 
விளக்கம்: சூழ்நிலை மண்டலம் மூன்று அடிப்படைக் கூறுகளைக் கொண்டுள்ளது. அவை, அ) உயிரற்ற கூறுகள் ஆ) உயிருள்ள கூறுகள் மற்றும் இ) ஆற்றல் கூறுகள்
Question 60
ஊன்உண்ணிகளில் உயர்நிலையில் உள்ளவை எவை?
A
நுகர்வோர்
B
இரண்டாம் நிலை நுகர்வோர்
C
மூன்றாம்நிலை நுகர்வோர்
D
a) மற்றும் b)
Question 60 Explanation: 
விளக்கம்: மூன்றாம்நிலை நுகர்வோர் (Tertiary Consumers) - ஊன்உண்ணிகளில் உயர்நிலையில் உள்ளவையாகும். அவை தாவர உண்ணிகளையும். ஊன்உண்ணிகளையும் உணவாகக் கொள்ளக் கூடியவை ஆகும். (எ.கா.) ஆந்தை, முதலை ஆகியவை.
Question 61
கோடை வாழிடங்கள் அமைந்துள்ள மலைத்தொடர் எது?
A
சிறிய இமயமலைகள்
B
மேற்கு இமயமலை
C
இமாத்ரி
D
சிவாலிக்
Question 61 Explanation: 
விளக்கம்: இம்மலைத்தொடரில் காணப்படும் மலைகள் பீர்பாஞ்சல், தவ்லதார், மற்றும் மகாபாரத் ஆகிய மலைகள் இத்தொடரில் காணப்படுகின்றன. புகழ் பெற்ற கோடை வாழிடங்கலான சிம்லா, முசெளரி, நைனிடால், அல்மோரா, ரானிகட் மற்றும் டார்ஜிலிங் போன்ற கோடை வாழிடங்கள் இம்மலைத் தொடரில் அமைந்துள்ளன.
Question 62
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
A
சிவாலிக் மலைத் தொடரானது ஜம்மு காஷ்மீரில் இருந்து அசாம் வரை நீண்டு உள்ளது.
B
இத்தொடரின் ஒரு பகுதி ஆறுகளால் உருவாக்கப்பட்ட படிவுகளால் ஆனது.
C
இதன் உயரம் 900 மீட்டரிலிருந்து 1100 மீட்டர் வரை வேறுபடுகிறது.
D
இவை அனைத்தும்.
Question 62 Explanation: 
விளக்கம்: இதன் சராசரி உயரம் 1000 மீ ஆகும். இதன் சராசரி அகலமானது மேற்கில் 50 கி.மீ. முதல் கிழக்கில் 10 கி.மீ வரையும் மாறுபடுகிறது. இது மிகவும் தொடர்ச்சியற்ற மலைத் தொடர்களாகும். குறுகலான நீண்ட பள்ளத்தாக்குகள், சிறிய இமயமலைக்கும் வெளிப்புற இமயமலைக்கும் இடையில் காணப்படுகின்றன. இவை கிழக்கு பகுதியில் டூயர்ஸ்(Duars) எனவும் மேற்கு பகுதியில் டூன்கள் (Duns) எனவும் அழைக்கப்படுகிறது. இப் பகுதிகள் குடியிருப்புகளின் வளர்ச்சிக்கு ஏற்றதாக உள்ளது.
Question 63
கீழ்க்கண்டவற்றுள் வேளாண்மைக்கு உகந்த பகுதி எது?
A
பாபர் சமவெளி
B
தராய் மண்டலம்
C
பாங்கர் சமவெளி
D
காதர் சமவெளி
Question 63 Explanation: 
விளக்கம்: பெரும் சமவெளியில் காணப்படும் பாங்கர் என்பது மேட்டு நில வண்டல் படிவுகளைக் கொண்ட நிலத்தோற்றம். இங்குள்ள படிவுகள் யாவும் பழைய வண்டல் மண்ணால் ஆனவை. இவை வெள்ளப்பெருக்கு ஏற்படா உயர்நிலப் பகுதிகளில் அமைந்துள்ளன. இம்மண்ணானது கருமை நிறத்துடன், வளமான இலைமக்குகளைக் கொண்டும், நல்ல வடிகலாமைப்பையையும் கொண்டுள்ளதால் இது வேளாண்மைக்கு உகந்ததாக உள்ளது.
Question 64
மேற்குத் தொடர்ச்சி மலையின் வடபகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
குருசிகார்
B
சயாத்ரி
C
பூர்வாதிரி
D
மருஸ்தலி
Question 64 Explanation: 
விளக்கம்: இம்மலைகள் தீபகற்ப பீடபூமியின் மேற்கு விளிம்பு பகுதியில் காணப்படுகிறது. இவை மேற்கு கடற்கரைக்கு இணையாகச் செல்கிறது. இம்மலையின் வடபகுதி சயாத்ரி என்று அழைக்கப்படுகிறது. இதன் உயரமானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்லச் செல்ல அதிகரிக்கிறது. ஆனைமலை, ஏலக்காய் மலை மற்றும் பழனிமலை ஆகியவை சந்திக்கும் பகுதியில் ஆனைமுடிச்சிகரம் அமைந்துள்ளது. மலைவாழிடமான கொடைக்கானல் பழனி மலையில் அமைந்துள்ளது.
Question 65
மேற்கு கடற்கரையின் மத்திய பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
கனரா கடற்கரை
B
கொங்கண கடற்கரை
C
மலபார் கடற்கரை
D
a) அல்லது b)
Question 65 Explanation: 
விளக்கம்: மேற்கு கடற்கரையின் வடபகுதி கொங்கணக் கடற்கரை எனவும். மத்திய பகுதி கனரா கடற்கரை எனவும் அழைக்கப்படுகிறது. 20-100 கி.மீ வரை அகலமும், 550 கி.மீ நீளமும் கொண்ட இதன் தென்பகுதி மலபார் கடற்கரை என அழைக்கப்படுகிறது. ஆழமில்லாத பல காயல்கள், உப்பங்கழிகள் மற்றும் டெரிஸ் போன்றவை இக்கடற்கரைப் பகுதியில் காணப்படுகின்றன. வேம்பநாடு ஏரி இப்பகுதியில் உள்ள ஒரு முக்கியமான ஏரியாகும்.
Question 66
கீழ்க்கண்டவற்றுள் கிழக்கு கடற்கரைச் சமவெளியில் அமைந்துள்ள முக்கியமான ஏரிகள் எவை?
A
சிலிகா ஏரி
B
கொல்லேறு ஏரி
C
பழவேற்காடு (புலிகாட்) ஏரி
D
இவை அனைத்தும்
Question 66 Explanation: 
விளக்கம்: மகாநதிக்கும் கிருஷ்ணா நதிக்கும் இடைப்பட்டப் பகுதி வடசர்க்கார் எனவும், கிருஷ்ணா மற்றும் காவேரி ஆற்றிற்கு இடைப்பட்டப் பகுதி சோழமண்டல கடற்கரை எனவும் அழைக்கப்படுகிறது. சென்னையில் உள்ள மெரினா கடற்கரை மிக பிரபலமான உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையாகும். மகாநதி டெல்டாவிற்கு தென்மேற்கே அமைந்துள்ள சிலிகா ஏரி இந்தியாவின் மிகப்பெரிய காயல் ஏரியாகும். கோதாவரி ஆற்றுக்கும் கிருஷ்ணா ஆற்றுக்கும் இடையே கொல்லேறு ஏரி அமைந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச எல்லையில் பழவேற்காடு (புலிகாட்) ஏரி அமைந்துள்ளது. இவைகள் கிழக்கு கடற்கரைச் சமவெளியில் அமைந்துள்ள முக்கியமான ஏரிகளாகும்.
Question 67
கீழ்க்கண்டவற்றுள் சரியானதைத் தேர்ந்தெடு?
  • A) : இந்தியாவின் ஒரே செயல்படும் எரிமலை அந்தமான் நிகோபர் தீவுக்கூட்டத்தில் உள்ள பாரன் தீவாகும்.
  • R) : அரபிக்கடலில் உள்ள இலட்சத்தீவுகள் முருகைப் பாறைகளால் உருவானவை.
A
A) சரி R) தவறு
B
A) சரி R) சரி
C
A) தவறு R) தவறு
D
A) தவறு R) சரி
Question 67 Explanation: 
விளக்கம்: அந்தமான் நிகோபர் தீவுகள் மற்றும் இலட்சத்தீவுகள் என இரண்டு பெரும் தீவுக் கூட்டங்கள் இந்தியாவில் அமைந்துள்ளன. 572 தீவுகளைக் கொணட அந்தமான் நிகோபர் தீவுகள் வங்காள விரிகுடாவிலும், 27 தீவுக் கூட்டங்களைக் கொண்ட இலட்சத்தீவுகள் அரபிக் கடலிலும் அமைந்துள்ளன. இவற்றில் அந்தமான் நிகோபர் தீவுகள் புவி உள் இயக்க விசைகள் மற்றும் எரிமலைகளால் உருவானதாகும்.
Question 68
இலட்சத்தீவுக்கூட்டங்களை 8° கால்வாய் எதிலிருந்து பிரிக்கிறது?
A
மாலத்தீவு
B
நிகோபர் தீவு
C
பாரன் தீவு
D
பிட் தீவு
Question 68 Explanation: 
விளக்கம்: இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இலட்சத்தீவு முருகைப் பாறைகளால் ஆனது. இத்தீவுகள் சுமார் 32 ச.கி.மீ பரப்பளவைக்கொண்டதாகும். இதன் நிர்வாகத் தலைநகரம் காவராத்தி ஆகும் இலட்சத்தீவுக்கூட்டங்களை 8° கால்வாய் மாலத்தீவிலிருந்து பிரிக்கிறது. இங்கு மனிதர்கள் வசிக்காத பிட் தீவு(Pitt Island) பறவைகள் சரணாலயத்திற்கு பெயர் பெற்றது. இலட்சத் தீவு, மினிக்காய் மற்றும் அமினித் தீவு கூட்டங்களை 1973 ஆம் ஆண்டு முதல் இலட்சத்தீவுகள் என அழைக்கப்படுகிறது.
Question 69
சிந்துநதியின் மிகப்பெரிய துணையாறு எது?
A
சினாப்
B
ராவி
C
பியாஸ்
D
ஜீலம்
Question 69 Explanation: 
விளக்கம்: சிந்து நதி லடாக் மற்றும் ஜாஸ்கர் மலைத்தொடர் வழியாக பாய்ந்து குறுகிய மலை இடுக்குகளை உருவாக்குகிறது. ஜம்மு-காஷ்மீர் வழியாக பாய்ந்து பின் தென்புறமாக பாகிஸ்தானின் சில்லார் பகுதியில் நுழைந்து, பின் அரபிக்கடலில் கலக்கிறது. இதன் துணையாறுகள் ஜீலம், சினாப், ராவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் ஆகியனவாகும். சினாப் சிந்துநதியின் மிகப்பெரிய துணையாறு ஆகும்.
Question 70
கங்கை ஆற்றுடன் இணைந்த  பிரம்மபுத்ரா எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
மனாஸ்
B
பராக்
C
மேக்னா
D
ஜமுனா
Question 70 Explanation: 
விளக்கம்: திபெத்தில் உள்ள மானசரோவர் ஏரிக்கு கிழக்கே கைலாஷ் மலைத் தொடரில் உள்ள செம்மாயுங்டங் என்ற பனியாற்றில் சுமார் 5150 மீ உயரத்திலிருந்து உற்பத்தியாகிறது. இதன் மொத்த வடிகாலமைப்பான 5,80,000 ச.கி.மீட்டரில் இந்தியாவில் பாயும் பரப்பு 1,94,413 ச.கி.மீ ஆகும். திபெத் பகுதியில் சாங்போ (தூய்மை) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இவ்வாற்றின் நீளம் சுமார் 2900 கி.மீ. இதில் 900 கி.மீ. மட்டுமே இந்தியாவில் பாய்கிறது. பிரம்மபுத்ரா ஆறு அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள திகாங் என்ற மலை இடுக்கின் வழியாக இந்தியாவிற்குள் நுழைகிறது. திஸ்டா, மனாஸ், பராக், சுபன்ஸ்ரீ ஆகியவை இவ்வாற்றின் சில முக்கிய துணையாறுகளாகும். வங்களாதேசத்தில் ஜமுனா எனவும் கங்கை ஆற்றுடன் இணைந்த போது மேக்னா எனவும் அழைக்கப்படுகிறது.
Question 71
இமய மலையில் தோன்றும் ஆறுகளின் சிறப்பு இயல்புகள் எவை?
A
நீர்மின் உற்பத்தி செய்ய இயலாத நிலை
B
ஆற்றின் மத்திய மற்றும் கீழ்நிலைப்பகுதிகள் போக்குவரத்திற்கு ஏற்றது.
C
நீளமானவை மற்றும் அகலமானவை
D
இவை அனைத்தும்
Question 71 Explanation: 
விளக்கம்: இமய மலையில் தோன்றும் ஆறுகளின் சிறப்பு இயல்புகள்: 1) இமயமலையில் உற்பத்தியாகின்றன. 2 நீளமானவை மற்றும் அகலமானவை 3) வற்றாத நதிகள் 4) நீர்மின் உற்பத்தி செய்ய இயலாத நிலை 5) ஆற்றின் மத்திய மற்றும் கீழ்நிலைப்பகுதிகள் போக்குவரத்திற்கு ஏற்றது.
Question 72
விருத்தகங்கா என அழைக்கப்படும் ஆறு எது?
A
மகாநதி
B
கோதாவரி
C
தபதி
D
காவிரி
Question 72 Explanation: 
விளக்கம்: தீபகற்ப இந்தியாவில் பாயும் மிக நீளமான ஆறான (1465 கி.மீ) கோதாவரி, மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிறது. இந்நதி விருத்தகங்கா எனவும் அழைக்கப்படுகிறது. இது 3.13 இலட்சம் சதுர.கி.மீ பரப்பளவு வடிநிலத்தைக் கொண்டது.
Question 73
எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
A
மத்தியப்பிரதேசம்
B
இராஜஸ்தான்
C
ஆந்திரப்பிரதேசம்
D
குஜராத்
Question 73 Explanation: 
விளக்கம்: இந்தியாவில் குஜராத் மாநிலம் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்ட்ரா மற்றும் ஆந்திரப்பிரதேசம் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி செய்யும் பிற முக்கிய மாநிலங்களாகும். நிலக்கடலை உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது இடத்தை இந்தியா வகிக்கிறது.
Question 74
பொருத்துக
  1. a) பழுப்புப் புரட்சி -                    1) தோல், கோக்கோ, மரபுசாரா உற்பத்தி
  2. b) தங்க நூலிழைப் புரட்சி -      2) சணல் உற்பத்தி
  3. c) பொன் புரட்சி -                     3) பழங்கள், தேன் மற்றும் தோட்டக்கலை
  4. d)சாம்பல் புரட்சி                     - 4) உரங்கள்
A
1) 2) 3) 4)
B
2) 4) 1) 3)
C
3) 1) 2) 4)
D
4) 2) 3) 1)
Question 74 Explanation: 
விளக்கம்: விளக்கம்: மஞ்சள் புரட்சி - எண்ணெய் வித்துக்கள் (குறிப்பாக கடுகு மற்றும் சூரிய காந்தி) நீலப் புரட்சி - மீன்கள் உற்பத்தி இளஞ்சிவப்புப் புரட்சி - வெங்காயம், மருத்து பொருட்கள், இறால் உற்பத்தி. பசுமைப் புரட்சி - அனைத்து வேளாண் உற்பத்தி வெள்ளிப் புரட்சி - முட்டை மற்றும் கோழிகள் வெள்ளி இழைப் புரட்சி - பருத்தி சிவப்புப் புரட்சி - இறைச்சி உற்பத்தி, தக்காளி உற்பத்தி வட்டப் புரட்சி - உருளைக்கிழங்கு பசுமைப் புரட்சி - உணவு தானியங்கள் வெண்மைப் புரட்சி - பால் உற்பத்தி
Question 75
கால்சியம் சல்ஃபேட்டின் நீர்ம கனிமம் எது?
A
ஜிப்சம்
B
மெக்னீசியம்
C
சிமெண்ட்
D
பாரிஸ் சாந்து
Question 75 Explanation: 
விளக்கம்: ஜிப்சம் என்பது கால்சியம் சல்ஃபேட்டின் நீர்ம கனிமமாகும். இது சுண்ணாம்புப்பாறை, மணற்பாறை, மாக்கல் போன்ற படிவுப்பாறைகளில் ஒளிப்புகும், வெண்ணிறமான தாதுவாக காணப்படுகிறது. இது சிமெண்ட், உரங்கள், சுவர்ப்பட்டிகள், பாரிஸ் சாந்து (plaster of paris) போன்றவற்றின் உற்பத்திற்கு மூலப்பொருளாகவும், மண் வளமூட்டியாகவும் பயன்படுகிறது. இவற்றின் மொத்த இருப்பில் இராஜஸ்தான் மாநிலம் மட்டும் 81% சதவீத படிவுகளைக் கொண்டுள்ளது. ஜம்மூ- காஷ்மீரில் 14 சதவீதம், தமிழ்நாட்டில் 2 சதவீதம், மீதமுள்ள 3 சதவீதம் குஜராத், இமாச்சலப்பிரதேசம், கர்நாடகம், உத்ரகாண்ட், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களில் காணப்படுகின்றன. இராஜஸ்தான் மாநிலம் 82 சதவீதம் ஜிப்சத்தை உற்பத்தி செய்கிறது. ஜோத்பூர், பிக்காநர்,ஜெய்சால்மர் ஆகிய மாவட்டங்கள் இவற்றின் முக்கிய உற்பத்தியாளராகும்.
Question 76
இந்தியொவின் கடலலை சக்தி ஆலைகள் உள்ள இடங்கள் எவை?
A
விழிஞ்சம்
B
அந்தமான் நிக்கோபார்
C
a) மற்றும் b)
D
எண்ணூர்
Question 76 Explanation: 
விளக்கம்: இந்தியாவின் கடலலை சக்தி வளத்திறன் 40000 MW ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. 150 KW உற்பத்தி திறன் கொண்ட அலை சக்தி ஆலை திருவானந்தபுரத்திற்கு அருகில் உள்ள விழிஞ்சம் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இதே போன்று மற்றொரு ஆலை அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் நிறுவப்பட்டுள்ளது.
Question 77
இந்துஸ்தான் எஃகு நிறுவனம்ஜெர்மனியின் தொழில்நுட்ப உதவியுடன் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
A
பத்ராவதி
B
ரூர்கேலா
C
துர்காபூர்
D
பொகாரோ
Question 77 Explanation: 
விளக்கம்: வெப்ப மற்றும் குளிர்ந்த உருளை தகடுகள் மின்முலாம் பூசப்பட்ட தகடுகள் மற்றும் மின்சாதன தகடுகள் உற்பத்தி பொருட்கள் ஆகும். இந்துஸ்தான் எஃகு நிறுவனம் ரஷ்யா தொழில்நுட்ப உதவியுடன் (HSL) பிலாய்-சத்தீஸ்கர். ரயில்வே மற்றும் கப்பல் கட்டும் உபகரணங்கள் உற்பத்தி பொருட்கள் ஆகும்.
Question 78
துருப்பிடிக்காத இரும்பு எங்கு தயாரிக்கப்படுகிறது?
A
பத்ராவதி
B
ரூர்கேலா
C
துர்காபூர்
D
சேலம்
Question 78 Explanation: 
விளக்கம்: வெப்ப உலோகம் விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் தயாரிக்கப்படுகிறது. நீண்ட மற்றும் பட்டை எஃகுகள் விஜய நகர் எஃகு ஆலையில் தயாரிக்கப்படுகிறது. இரும்பு கழிவு மற்றும் இரும்பு உலோகம் இந்துஸ்தான் எஃகு நிறுவனம் ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியுடன் அமைந்துள்ளது. தேனிரும்பு டாட்டா இரும்பு எஃகு நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.
Question 79
இந்தியாவின் முதல் மென்பொருள் தொழிலகம் எது?
A
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
B
இன்போடெக்
C
அசெஞர்
D
காக்னிசன்ட்
Question 79 Explanation: 
விளக்கம்: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இந்தியாவின் முதல் மென்பொருள் தொழிலகம் ஆகும். இது 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இத்துடன் எல் & டி, இன்போடெக், ஜ - பிளக்ஸ், அசெஞர், காக்னிசன்ட், கேலக்ஸி சொல்யுசன்ஸ், இந்தியா பிரைவேட் லிமிடெட், ஜ டி சி, இன்போடெக் போன்றவைகளும் இந்தியாவின் முக்கியமான மென்பொருள் தொழிலகங்களாகும். தற்சமயம், இந்தியா முழுவதும் 500 க்கும் மேற்பட்ட மென்பொருள் தொழிலகங்கள் உள்ளன. இந்நிறுவனங்கள் உலகின் சுமார் 95 நாடுகளுக்கு மென்பொருள் ஏற்றுமதி சேவையை செய்கிறது.
Question 80
இந்தியத் தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் எவை?
A
மின் பற்றாக்குறையும் சீரற்ற மின் வினியோகம்
B
தொழிலகங்கள் நிறுவுவதற்கு ஏற்ற பரந்த நிலப்பரப்பு இல்லாமை
C
கடன் பெருவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள்
D
இவை அனைத்தும்
Question 80 Explanation: 
விளக்கம்: இந்தியத் தொழிலகங்கள் பல சவால்களை எதிர்கொண்டுள்ளன. அவற்றில் சில முக்கிய பிரச்சினைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. * மின் பற்றாக்குறையும் சீரற்ற மின் வினியோகம் * தொழிலகங்கள் நிறுவுவதற்கு ஏற்ற பரந்த நிலப்பரப்பு இல்லாமை * கடன் பெருவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள். * கடனுக்கான அதிக வட்டி விகிதம். * மலிவான ஊதியத்திற்கு வேலையாட்கள் கிடைக்காமை. * ஊழியர்களுக்கான தொழில்நுற்ப மற்றும் தொழில் முறை பயிற்சிகள் இல்லாமை. * தொழிற்பேட்டைகளுக்கருகில் வசிப்பதற்கு ஏற்ற சூழல் இல்லாமை
Question 81
பொருத்துக.
  1. a) ஆந்தரசைட் -                   1) 60 முதல் 80 சதவீதம்.
  2. b) பிட்டுமினஸ் -                      2) 80 முதல் 90 சதவீதம்
  3. c) பழுப்பு நிலக்கரி -               3) 40 சதவீதத்திற்கும் குறைவாக
  4. d) மரக்கரி -                               4) 40 முதல் 60 சதவீதம்
A
1 2 3 4
B
2 1 4 3.
C
4 3 2 1
D
3 2 1 4
Question 81 Explanation: 
விளக்கம்: நிலக்கரி என்பது எளிதில் எரியக்கூடிய உயிரின படிமங்கள் கொண்ட ஒரு நீரக கனிமம் ஆகும். இது படிவுப் பாறைகளில் கிடைக்கிறது, ஒரு நாட்டின் தொழிற்சாலை வளர்ச்சிக்கு மிக இன்றியமையாததாக இருப்பதால் இது கருப்பு தங்கம் (Black gold) என அழைக்கப்படுகிறது. பல்வேறு வகையான பயன்பாடுகளின் காரணமாக நிலக்கரி இந்தியாவின் மிக முக்கியமான ஆற்றல் மூலமாக விளங்குகிறது. இதை வாயுவாகவும், எண்ணெயாகவும் மற்றும் அனல் மின்சக்தியாகவும் மாற்ற இயலும்.
Question 82
இயற்கை எரிவாயுவின் பகுதிப்பொருட்கள் எவை?
A
நைட்ரஜன்
B
ஹைட்ரஜன்
C
ஆக்சிஜன்
D
b) மற்றும் c)
Question 82 Explanation: 
விளக்கம்: இயற்கை எரிவாயு பொதுவாக பெட்ரோலிய பகுதிகளுடன் இணைந்து காணப்படுகிறது. இது இயற்கையாக உருவாகும் ஒரு நீர்ம கரிம வாயுவாகும்.இவற்றின் பெரும்பகுதி மீத்தேன் வாயுவும் பல்வேறு அளவுகளில் உள்ள மதுக்கரியம் (alkaline) சிறிய சதவீதத்திலான கார்பன்- டை- ஆக்ஸைடு, நைட்ரஜன் மற்றும் நைட்ரஜன் சல்பைடு கலந்த கலவைகளால் ஆனது. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அழிந்து புதையுண்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அதிக வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக மக்குவதன் மூலம் உண்டாக்கூடிய ஒரு வாயு. இது வெப்பப்படுத்தலுக்கும், சமையலுக்கும் மின் உற்பத்திக்கும் ஆதாரமாக விளங்குகிறது.
Question 83
மேற்கு கடற்கரைக்கு அருகில் உள்ள எண்ணெய் வயல்கள் எவை?
A
பேஸ்ஸைம் எண்ணெய் வயல்
B
திக்பாய் எண்ணெய் வயல்
C
மோரான் ஹக்ரிஜன்
D
இவை அனைத்தும்
Question 83 Explanation: 
விளக்கம்: 1.மும்பை ஹை எண்ணெய் வயல் (65% மிகப்பெரியது) 2. குஜராத் கடற்கரை ( 2வது பெரியது ) 3. பேஸ்ஸைம் எண்ணெய் வயல் மும்பை ஹையின் தென்பகுதி 4. அலியாபெத்-எண்ணெய் வயல் ( பவ் நகரின் தென்பகுதி) 5. அங்கலேஸ்வர். 6. காம்பே- லூனி பகுதிகள் 7. அகமதாபாத்- கலோல் பகுதி.
Question 84
சுண்ணாம்புக்கல் காணப்படும் பாறைகள் எவை?
A
கால்சியம் கார்பனேட்
B
கால்சியம்
C
கால்சியம் மற்றும் மெக்னீசியம்
D
இவை அனைத்தும்
Question 84 Explanation: 
விளக்கம்: சுண்ணாம்புக்கல், சிறிய அளவிலான சிலிக்கா, அலுமினா, இரும்பு ஆக்ஸைடு, பாஸ்பரஸ் மற்றும் கந்தகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. சோடா சாம்பல், எரிசோடா, வெளுக்கும் தூள் (bleaching powder) காகிதம், சிமெண்ட், இரும்பு எஃகு உற்பத்தி, கண்ணாடி மற்றும் உரங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகளில் சுண்ணம்புக்கல் பயன்படுகிறது. இதன் முக்கிய உற்பத்தியாளர்கள் ஆந்திர மாநிலத்தின் (20 சதவீதம்) கடப்பா, கர்னூல், குண்டூர் மாவட்டங்களாகும். தெலுங்கானா மாநிலமும் 20 சதவீத உற்பத்தியைச் செய்கின்றது.
Question 85
இந்தியாவிலேயே அதிக அளவு காற்றாலைகளைக் கொண்டுள்ள மாநிலம் எது?
A
குஜராத்
B
தமிழ்நாடு
C
மத்தியப்பிரதேசம்
D
கர்நாடகம்
Question 85 Explanation: 
விளக்கம்: இந்தியாவிலேயே அதிக அளவு காற்றாலைகளைக் கொண்டுள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முப்பந்தல் -பெருங்குடிப்பகுதி உலகிலேயே ஒரு பகுதியில் அதிக காற்றாலைகளைக் கொண்ட பெரிய காற்றாலை பண்ணை ஆகும்.
Question 86
இந்தியா உலக அளவில் அதிக காற்றாலைத் திறன் கொண்ட நாடுகளில் எத்தனையாவது  இடத்தில் உள்ளது?
A
4
B
3
C
2
D
5
Question 86 Explanation: 
விளக்கம்: இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தி 1986 ஆம் ஆண்டு முதன் முதலில் குஜராத்தில் உள்ள கடற்கரைப் பகுதியான ஓகா, மகாராஷ்டிரா கடற்கரைப் பகுதியான இரத்தினகிரி, தமிழ்நாட்டிலுள்ள கடற்கரைப் பகுதியான தூத்துக்குடியில் 55 கிலோவாட் உற்பத்தி திறனுடன் நிறுவப்பட்ட காற்றாலைகள் மூலம் வளர்ச்சியடைய ஆரம்பித்தது. கடந்த சில வருடங்களாக இதன் உற்பத்தி திறன் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. இந்தியா உலக அளவில் அதிக காற்றாலைத் திறன் கொண்ட நாடுகளில் நான்காவது இடத்தில் உள்ளது.
Question 87
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூரில் எத்தனை நெசவாலைகள் அமைந்துள்ளன?
A
435
B
200
C
100
D
157
Question 87 Explanation: 
விளக்கம்: மகாராஷ்டிரம், குஜராத், மேற்கு வங்கம், உத்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பருத்தி நெசவாலைகள் செறிந்து காணப்படுகின்றது. தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் அதிக எண்ணிக்கையிலான பருத்தி நெசவாலைகள் உள்ளன. இதனால் கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 435 நெசவாலைகளில் 200 நெசவாலைகள் கோயம்புத்தூர் பகுதியில் அமைந்துள்ளன. ஈரோடு, திருப்பூர், கரூர், சென்னை, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, சேலம் மற்றும் விருதுநகர் ஆகியன மாநிலத்தின் பிற முக்கிய நெசவாலை நகரங்களாகும்.
Question 88
இந்தியாவின் இரண்டாவது பெரிய நெசவாலைத் துறையாக எது உள்ளது?
A
ரோமம்
B
பருத்தி
C
சணல்
D
இவை அனைத்தும்
Question 88 Explanation: 
விளக்கம்: தற்காலத்தில் சணலானது பருத்தி மற்றும் ரோமத்துடன் சேர்த்து நெசவு செய்யப்படுகிறது. சணல் பொருட்கள் உலக மொத்த உற்பத்தியில் இந்தியா மட்டும் 35% பங்களிப்பைக் கொண்டுள்ளது. பருத்தி நெசவாலைகளுக்கு அடுத்தாற்போல் சணல் ஆலைகள் இந்தியாவின் இரண்டாவது பெரிய நெசவாலைத் துறையாக உள்ளது. இயற்கையான சணல் என்பது புதுபிக்கக் கூடிய எளிதில் மக்கக்கூடிய, சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாகவும் உள்ளதால் இது தங்க இழைப்பயிர் என்றும் அழைக்கப்படுகிறது.
Question 89
டாட்டா இரும்பு எஃகு தொழிற்சாலை ஜாம்ஷெட்பூரில் எந்த ஆண்டு தொடங்கபட்டது?
A
1905
B
1909
C
1907
D
1917
Question 89 Explanation: 
விளக்கம்: ஆண்டு ”சாக்சி” என்றழைக்கப்பட்ட ஜாம்ஷெட்பூரில் தொடங்கப்பட்ட முதல் நவீன தொழிற்சாலையாகும். ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், , ஒடிசா, ஆகிய மாநிலங்களில் செறிந்து காணப்படுகின்றன. ஜாரியா ராணிகஞ்ச் பொகாரோ, கரன்புரா ஆகிய நிலக்கரி வயல்களும் மற்றும் மயூர்பஞ்ச், இயோன்ஜர் மற்றும் புரேனா ஆகிய இரும்பு தாது சுரங்கங்களும் ஒன்றுக்கொன்று அருகாமையில் அமைந்திருப்பது இதன் காரணமாகும். இத்தொழிற்சாலைக்குத் தேவையான டோலமைட், மாங்கனீஷ் மற்றும் சிலிகான் போன்ற தாது படிவுகள் போதுமான அளவில் கிடைக்கின்றன.
Question 90
ஆசியாவின் டெட்ரோய்ட் என்று அழைக்கப்படும் நகரம் எது?
A
பெங்களூர்
B
சென்னை
C
திருச்சி
D
மும்பை
Question 90 Explanation: 
விளக்கம்: பிரதான வாகனத் தொழிற்சாலைகளும் அதனை சார்ந்த தொழிற்சாலைகளும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இருப்பதால் சென்னை ஆசியாவின் டெட்ரோய்ட் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் முதல் வாகனத் தொழிலகம் மும்பைக்கு அருகில் உள்ள குர்லா என்னும் இடத்தில் 1947 ல் பிரீமியர் வாகன நிறுவனம் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இதைதொடர்ந்து 1948 கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள உத்தர்பாரா என்னும் இடத்தில் இந்துஸ்தான்மோட்டார் நிறுவனம் தொடங்கப்பட்டது.
Question 91
இந்தியாவில் அதிக மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்யும் நகரம் எது?
A
பெங்களூர்
B
சென்னை
C
திருச்சி
D
மும்பை
Question 91 Explanation: 
விளக்கம்: இந்தியாவில் அதிக மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்யும் நகரம் பெங்களூருவாகும். எனவே பெங்களூரு ”இந்தியாவின் மின்னியல் தலைநகரம்” என்று அழைக்கப்படுகிறது. ஹைதராபாத், புதுதில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, கான்பூர், பூனா,லக்னோ, ஜெய்ப்பூர் மற்றும் கோயம்புத்தூர் இதர முக்கிய மின்னியல் உற்பத்தி மையங்களாகும்.
Question 92
டார்ன் ஏரி என்று அழைக்கப்படும் ஏரிகள் எங்கு உருவாகின்றன?
A
மலைப்பகுதி
B
சமவெளிகள்
C
சதுப்புநிலப்பகுதிகள்
D
துருவப்பகுதிகள்
Question 92 Explanation: 
விளக்கம்: பனி உருகும் போது, சர்க்கானது நீரால் நிரப்பப்பட்டு அழகான ஏரிகளாக மலைப்பகுதிகளில் உருவாகின்றன. இந்த ஏரிகள் டார்ன் ஏரி என்று அழைக்கப்படுகிறது. அடுத்தடுத்த இரண்டு சாக்குகள் ஒன்றை நோக்கி ஒன்று அரிக்கப்படும் போது, இதற்கு முன்னர் அமைந்த வட்டமான நிலத்தோற்றம் குறுகிய மற்றும் மலைச்சரிவான பக்கங்களுடன் கூடிய முகடுகளாக மாற்றம் அடைகின்றன. இம்முகடுகள் அரெட்டுகள் என்ற கத்திமுனைக் குன்றுகளாக உருவெடுக்கின்றன.
Question 93
உலகிலேயே மிக நீளமான கடற்கரை எங்கு அமைந்துள்ளது?
A
புளோரிடா
B
இத்தாலி
C
போர்ச்சுக்கல்
D
நியூசிலாந்து
Question 93 Explanation: 
விளக்கம்: அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாநிலத்தில் தெற்கில் காணப்படும் மியாமி கடற்கரை ஆகும். இரண்டாவது நீண்ட கடற்கரை சென்னையில் அமைந்துள்ள மெரினா கடற்கரை ஆகும். கடல் அலைகளால் மணல் மற்றும் சரளைகள் படிந்துள்ள கடலோரப்பகுதி கடற்கரை (Beach) எனப்படும். ஏறக்குறைய கடற்கரைக்கு இணையாக கடலில் நீள்வட்ட வடிவில் படிந்துள்ள மணல் அல்லது சேறு மணல் திட்டுக்கள் எனப்படுகின்றன.
Question 94
சிலிகாவின் அளவு குறைந்து மிக மெதுவாக எரிமலை குழம்பு வெளியேறும்போது உருவாகும் எரிமலை எது?
A
தழல் கூம்பு எரிமலை
B
பல்சிட்டக் கூம்பு எரிமலை
C
கேடய எரிமலை
D
a) மற்றும் b)
Question 94 Explanation: 
விளக்கம்: சிலிகாவின் அளவு குறைந்து மிக மெதுவாக எரிமலை குழம்பு வெளியேறும்போது கேடய எரிமலை உருவாகின்றது. இவை அகன்று மென்மையான சரிவுகளைக் கொண்ட கூம்பு வடிவத்தில் காணப்படும். ஹவாய் தீவுகளிலுள்ள எரிமலைக் குன்றுகள் இவ்வகையை சார்ந்தவையாகும்.
Question 95
பலநூறு கிலோ மீட்டர் உயரத்திற்கு வெடித்து சிதறும்போது உருவாகும் எரிமலைகள் எவை?
A
தழல் கூம்பு எரிமலை
B
பல்சிட்டக் கூம்பு எரிமலை
C
கேடய எரிமலை
D
a) மற்றும் b)
Question 95 Explanation: 
விளக்கம்: மிகுந்த சிலிகா கொண்ட மாக்மாவை உள்ளிருக்கும் வாயுக்கள் தடுக்கும்போது ஏற்படும் அதிக அழுத்தத்தினால் வாயுக்களும், சாம்பல் துகள் சேர்ந்த ஓர் கலவை மிகுந்த சத்தத்துடன் வளிமண்டத்தில், பலநூறு கிலோ மீட்டர் உயரத்திற்கு வெடித்து சிதறும்போது, தழல் கூம்பு எரிமலைகள் உருவாகின்றன. இவ்வகை எரிமலைகள் தழல் கூம்பு வடிவத்தை பெறுகின்றன.
Question 96
கீழ்க்கண்டவற்றுள் உறங்கும் எரிமலை என்று அழைக்கப்படுவது எது?
A
செயலிழந்த எரிமலை
B
பல்சிட்டக் கூம்பு எரிமலை
C
செயல்படும் எரிமலை
D
செயல்படாத எரிமலை
Question 96 Explanation: 
விளக்கம்: பல வருடங்களாக எரிமலைக் குழம்பை வெளியேற்றுவதற்கான எந்த ஒரு அறிகுறியும் வெளிப்படுத்தாமல், எப்போது வேண்டுமானாலும் செயல்படக்கூடிய எரிமலைகள் செயல்படாத எரிமலைகள் என அழைக்கப்படுகிறது. இதை உறங்கும் எரிமலை என்றும் அழைப்பர். இத்தாலியில், வெசுவியஸ், ஜப்பானில் பியூஜியாமா, இந்தோனேஷியாவில் சிரகோட்டா ஆகியவை இவ்வகைக்கு பிரசித்தி பெற்ற எடுத்துக்காட்டுகளாகும்.
Question 97
உலகில் முக்கிய எரிமலை நிகழ்வு பகுதிகள் எவை?
A
பசிபிக் வளையப் பகுதி
B
மத்திய கண்டப் பகுதி
C
மத்திய அட்லாண்டிக் பகுதி
D
இவை அனைத்தும்
Question 97 Explanation: 
விளக்கம்: ஒரு சில எரிமலைகள் மட்டுமே உள்கண்ட பிரதேசங்களில் காணப்படுகின்றன. உலகின் எரிமலை பிரதேசங்களே முக்கிய நில அதிர்வு பகுதிகளாக விளங்குகின்றன. உலகில் மூன்று முக்கிய எரிமலை நிகழ்வு பகுதிகள் உள்ளன. அவை 1. பசிபிக் வளையப் பகுதி (The Cirum – Pacific belt) 2. மத்திய கண்டப் பகுதி (The Mid Continental belt) 3. மத்திய அட்லாண்டிக் பகுதி (The Mid Atlantic belt)
Question 98
‘மத்திய தரைக்கடல் பகுதியின் கலங்கரை விளக்கம்’ என்றழைக்கப்படும் எரிமலை எது?
A
எட்னா
B
வெசூவியஸ்
C
ஸ்ட்ரோம்போலி
D
மேட்டர்ஹார்ன்
Question 98 Explanation: 
விளக்கம்: ஆல்பைன் மலைத் தொடரில் பல செயல்படும் எரிமலைகள் உள்ளன. எட்னா, வெசூவியஸ் மற்றும் ஸ்ட்ரோம்போலி எரிமலைகள் ஐரோப்பாவில் காணப்படும் முக்கிய எரிமலைகளாகும். இப்பிரதேசத்தில் நிலநடுக்கங்கள் சாதாரணமாக நிகழும். ஸ்ட்ரோம்போலி எரிமலை ‘மத்திய தரைக்கடல் பகுதியின் கலங்கரை விளக்கம்’ என்றழைக்கப்படுகின்றது.
Question 99
தெற்கு ஐரோப்பிய பகுதியில் காணப்படும் தொடர்ச்சியான இளம் மடிப்பு மலைகள் எவை/எது?
A
ஆல்பைன்
B
யுரால்
C
டோரா
D
போரா
Question 99 Explanation: 
விளக்கம்: ஆல்பைன் மலைத்தொடர் தெற்கு ஐரோப்பிய பகுதியில் காணப்படும் தொடர்ச்சியான இளம் மடிப்பு மலைகள் ஆகும். அங்குக் காணப்படும் முக்கிய மலைத்தொடர்கள் சியாரா நெவேடா, பைரினீஸ், ஆல்ப்ஸ், அப்னின்ஸ், டினாரிக் ஆல்ப்ஸ், காகசஸ் மற்றும் கார்பேதியன் மலைத்தொடர்கள் ஆகும். பைரனீஸ் மலைகள் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையில் இயற்கை எல்லையாக விளங்குகின்றன. ஐரோப்பாவின் மிக உயரமான சிகரம் காகசஸ் மலைத்தொடரிலுள்ள எல்ப்ராஸ் சிகரமாகும் (5645மீ). ஆல்ப்ஸ் மலையில் உள்ள மாண்ட் பிளாங்க் (4807மீ) சிகரம் ஆல்பைன் மலைத் தொடரில் காணப்படும் இரண்டாவது மிக உயர்ந்த சிகரமாகும்.
Question 100
ஐரோப்பாவின் மிக நீளமான ஆறு எது?
A
டேன்யூப்
B
வோல்கா ஆறு
C
நீப்பர்
D
ரைன்
Question 100 Explanation: 
விளக்கம்: பெரும்பான்மையான ஆறுகள் ஆல்ப்ஸ் மலைகள் மற்றும் மத்திய பீடபூமி ஆகியவற்றில் உருவாகின்றன. மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் உள்நாட்டு நீர்ப்போக்குவரத்திற்கு இவ்வாறுகள் பெரிதும் உதவுகின்றன. வோல்கா ஆறு ஐரோப்பாவின் மிக நீளமான ஆறு ஆகும். டேன்யூப் ஆறு ஐரோப்பாவின் ஒன்பது நாடுகள் வழியாகப் பாய்கின்றது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!