Online TestTnpsc Exam
தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் Online Test 10th Social Science Lesson 16 Questions in Tamil
தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் Online Test 10th Social Science Lesson 16 Questions in Tamil
Congratulations - you have completed தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் Online Test 10th Social Science Lesson 16 Questions in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
___________நூற்றாண்டின் பிற்பாதியில் ஐரோப்பியர்கள் இந்தியத் துணைக் கண்டத்தின் மீது தங்கள் அரசியல் அதிகாரத்தை நிறுவினர்.
16 | |
17 | |
18 | |
19 |
Question 1 Explanation:
(குறிப்பு: பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவை இணைப்பதில் அக்கறை செலுத்திய ஐரோப்பியர்கள் இந்திய சமூகத்தை மறு ஒழுங்கமைவு செய்தனர்.)
Question 2 |
1578இல் தம்பிரான் வணக்கம் எனும் தமிழ் புத்தகம் __________இல் வெளியிடப்பட்டது.
சென்னை | |
மைசூர் | |
கல்கத்தா | |
கோவா |
Question 2 Explanation:
(குறிப்பு: ஐரோப்பிய மொழிகள், தவிர்த்து அச்சில் ஏறிய மொழிகளில் முதல் மொழி தமிழ் மொழியாகும்.)
Question 3 |
சீகன்பால்கு என்பவரால் தரங்கம்பாடியில் அச்சகம் நிறுவப்பட்ட ஆண்டு
1702 | |
1705 | |
1709 | |
1712 |
Question 4 |
தொடக்ககால தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் ___________ ஆண்டு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
1709 | |
1782 | |
1804 | |
1812 |
Question 4 Explanation:
(குறிப்பு: திருக்குறள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டதன் விளைவாக இக்காலப்பகுதியில் மிகவும் பழமையான செவ்வியல் தமிழ் இலக்கியங்களை வெளியிடுவதில் தமிழ் அறிஞர்களிடையே புத்தெழுச்சி ஏற்பட்டது.)
Question 5 |
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் செவ்வியல் இலக்கியங்களை மீண்டும் கண்டறிவதற்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழித்தவர்கள்
- சி.வை.தாமோதரனார்
- உ.வே.சாமிநாதர்
- சீகன்பால்கு
- திரு.வி.க
1, 2 | |
2, 3 | |
1, 4 | |
2, 3 |
Question 5 Explanation:
(குறிப்பு: சி.வை.தாமோதரனார் (1832-1901), உ.வே.சாமிநாதர் (1855-1942))
Question 6 |
கீழ்க்கண்டவற்றுள் சி.வை.தாமோதரனார் பதிப்பித்த நூல்கள் எவை?
- தொல்காப்பியம்
- வீரசோழியம்
- இறையனார் அகப்பொருள்
- இலக்கண விளக்கம்
- கலித்தொகை
- சூளாமணி
அனைத்தும் | |
1, 2, 4, 5 | |
2, 4, 5, 6 | |
1, 3, 4, 5 |
Question 6 Explanation:
(குறிப்பு: சி.வை.தாமோதரனார் பனையோலைகளில் கையால் எழுதப் பெற்றிருந்த பல தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களைப் பதிப்பித்தார்.)
Question 7 |
தவறான இணையைத் தேர்ந்தெடு. (உ.வே.சாமிநாதர் பதிப்பித்த நூல்கள் – வெளியிடப்பட்ட ஆண்டு)
சீவகசிந்தாமணி – 1887 | |
பத்துப்பாட்டு – 1889 | |
சிலப்பதிகாரம் – 1892 | |
புறநானூறு – 1893 |
Question 7 Explanation:
(குறிப்பு: புறநானூறு - 1894)
Question 8 |
பொருத்துக. (உ.வே.சாமிநாதர் பதிப்பித்த நூல்கள் – வெளியிடப்பட்ட ஆண்டு)
- புறப்பொருள் வெண்பா மாலை i) 1895
- மணிமேகலை ii) 1898
- ஐங்குறுநூறு iii) 1903
- பதிற்றுப்பத்து iv) 1904
iv ii iii i | |
iii i ii iv | |
i ii iii iv | |
iv iii ii i |
Question 8 Explanation:
(குறிப்பு: உ.வே.சாமிநாதர், தமிழறிஞர் மீனாட்சி சுந்தரனாரின் மாணவர் ஆவார்.)
Question 9 |
F.W. எல்லிஸ் புனித ஜார்ஜ் கோட்டையில் கல்லூரியினை நிறுவிய ஆண்டு
1805 | |
1807 | |
1812 | |
1816 |
Question 9 Explanation:
(குறிப்பு: F.W. எல்லிஸ், தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட மொழிக்குடும்பத்தை சார்ந்தவை, அவை இந்தோ-ஆரியக் குடும்ப மொழிகளோடு தொடர்பில்லாதவை எனும் கோட்பாட்டை உருவாக்கினார்.)
Question 10 |
திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம் என்னும் நூலை 1856ல் இயற்றியவர்
சி.வை.தாமோதரனார் | |
உ.வே.சாமிநாதர் | |
கால்டுவெல் | |
F.W. எல்லிஸ் |
Question 10 Explanation:
(குறிப்பு: கால்டுவெல் இந்நூலில் எல்லிஸின் கோட்பாட்டை விரிவுப்படுத்தினார். திராவிட மொழிகளுக்கிடையில் நெருக்கமான ஒப்புமை இருப்பதையும் அப்படியான ஒப்புமை சமஸ்கிருதத்துடன் இல்லை என்பதையும் நிறுவினார்.)
Question 11 |
தமிழ் இசை வரலாறு குறித்து நூல்களை வெளியிட்டு தமிழ் இசைக்குச் சிறப்பு செய்தவர்
ராமலிங்க அடிகள் | |
ஆபிரகாம் பண்டிதர் | |
திரு.வி.க | |
பரிதிமாற் கலைஞர் |
Question 11 Explanation:
(குறிப்பு: தமிழ் மறுமலர்ச்சி பிராமணியத்தின் பண்பாட்டு மேலாதிக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கியது. இப்போக்குகள் கலைகளிலும் இலக்கியங்களிலும் சமயத்திலும் பிரதிபலித்தது.)
Question 12 |
காலனிய சக்தியை எதிர்கொள்வதற்காக பொதுவுடமைவாதத்தையும் சமத்துவத்தையும் வளர்த்தவர்
அயோத்திதாசர் | |
ஈ.வெ.ராமசாமி | |
M.சிங்காரவேலர் | |
ச. வையாபுரி |
Question 12 Explanation:
(குறிப்பு: M. சிங்காரவேலர் (1860-1946) பெளத்தத்திற்குப் புத்துயிரளித்த ஒரு தொடக்ககால முன்னோடி ஆவார்.)
Question 13 |
சமூக ரீதியாக உரிமைகள் மறுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்கள் பிரிவினரின் உரிமைகளுக்காகப் பகுத்தறிவுச் சித்தாந்தத்தை உயர்த்திப் பிடித்தவர்கள் யார்?
- அயோத்திதாசர்
- சிங்காரவேலர்
- வையாபுரி
- பெரியார் ஈ.வெ.ராமசாமி
1, 2 | |
2, 3 | |
2, 4 | |
1, 4 |
Question 13 Explanation:
(குறிப்பு: அயோத்திதாசர் வாழ்ந்த காலம் 1845 -1914, பெரியார் வாழ்ந்த காலம் 1879-1973.)
Question 14 |
கீழ்க்கண்டவர்களுள் தங்களின் எழுத்துக்கள் மூலம் தமிழ் இலக்கியத்தின் புத்தெழுச்சிக்குப் பங்களிப்பு செய்தவர்கள் யார்?
- பரிதிமாற் கலைஞர்
- மறைமலையடிகள்
- சுப்பிரமணிய பாரதி
- ச வையாபுரி
- கவிஞர் பாரதிதாசன்
- திரு.வி.கல்யாண சுந்தரம்
அனைத்தும் | |
2, 4, 5, 6 | |
1, 3, 4, 5 | |
1, 2, 5, 6 |
Question 14 Explanation:
(குறிப்பு:
திரு.வி.க: 1883-1953
பரிதிமாற் கலைஞர்: 1870 – 1903
மறைமலையடிகள்: 1876-1950
சுப்பிரமணிய பாரதி: 1882 – 1921
ச. வையாபுரி: 1891-1956
கவிஞர் பாரதிதாசன்: 1891-1964)
Question 15 |
இந்து சமய பழமைவாதத்தை கேள்விக்குள்ளாக்கியவர்
ராமலிங்க அடிகள் | |
ஆபிரகாம் பண்டிதர் | |
திரு.வி.க | |
பரிதிமாற் கலைஞர் |
Question 15 Explanation:
(குறிப்பு: வள்ளலார் வாழ்ந்த காலம் 1823 – 1874.)
Question 16 |
தமிழ்மொழி ஒரு செம்மொழி, எனவே சென்னைப் பல்கலைக்கழகம் தமிழை ஒரு வட்டார மொழியென அழைக்கக்கூடாதென முதன்முதலாக வாதாடியவர் யார்?
திரு.வி.க | |
உ.வே.சா | |
சூரிய நாராயண சாஸ்திரி | |
ராமலிங்க அடிகள் |
Question 16 Explanation:
(குறிப்பு: வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரி மதுரை அருகே பிறந்தார். பரிதிமாற் கலைஞர் என தூய தமிழ்ப் பெயரைச் சூடிக் கொண்டவர்.)
Question 17 |
பரிதிமாற் கலைஞர் மேற்கத்திய இலக்கிய மாதிரிகள் மீது கொண்டிருந்த தாக்கத்தின் விளைவாக ___________ வரிச்செய்யுள் வடிவத்தை தமிழுக்கு அறிமுகம் செய்தார்.
2 | |
4 | |
10 | |
14 |
Question 17 Explanation:
(குறிப்பு: பரிதிமாற்கலைஞர் சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றினார். 33 ஆண்டுகள் நிறைவு பெற்றிருந்த அவர் இளம் வயதில் இயற்கை எய்தினார்.)
Question 18 |
தமிழ் மொழியியல் தூய்மைவாதத்தின் தந்தை எனக் கருதப்படுபவர்
பரிதிமாற் கலைஞர் | |
திரு.வி.க | |
மறைமலை அடிகள் | |
பி. சுந்தரனார் |
Question 18 Explanation:
(குறிப்பு: மறைமலைஅடிகள் (1876-1950) தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கியவர் எனவும் கருதப்படுகிறார்.)
Question 19 |
மறைமலை அடிகள் கீழ்க்கண்ட எந்த நூல்களுக்கு விளக்கவுரை எழுதியுள்ளார்?
- எட்டுத்தொகை
- பத்துப்பாட்டு
- பட்டினப்பாலை
- முல்லைப்பாட்டு
1, 2 | |
2, 3 | |
1,3 | |
3, 4 |
Question 19 Explanation:
(குறிப்பு: மறைமலை அடிகள் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார்.)
Question 20 |
மறைமலை அடிகள் இளைஞராக இருந்த போது _________ எனும் பத்திரிகையில் பணிபுரிந்தார்.
இந்தியா | |
சுதேசமித்திரன் | |
நியூ இந்தியா | |
சித்தாந்த தீபிகா |
Question 20 Explanation:
(குறிப்பு: மறைமலை அடிகள் பிராமணர் அல்லாதோர் இயக்கத்தின் மீது பற்றுக்கொண்டவர்.)
Question 21 |
மறைமலை அடிகள் அவர்களின் ஆசிரியர்
- பி. சுந்தரனார்
- திரு.வி.க
- சோமசுந்தர நாயக்கர்
- பரிதிமாற் கலைஞர்
1, 2 | |
2, 3 | |
1, 4 | |
1, 3 |
Question 21 Explanation:
(குறிப்பு: தூய தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும் சமஸ்கிருத்தத்தின் செல்வாக்கு தமிழ் மொழியிலிருந்து அகற்றப்படுவதையும் மறைமலை அடிகள் ஊக்குவித்தார்.)
Question 22 |
மறைமலையடிகள் தனித்தமிழ் இயக்கத்தை __________ ஆம் ஆண்டு தொடங்கினார் என பொதுவாகக் கூறப்படுகிறது.
1912 | |
1914 | |
1916 | |
1917 |
Question 22 Explanation:
(குறிப்பு: மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை தனித்தமிழ் இயக்கம் உருவாக்கப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தார்.)
Question 23 |
- கூற்று 1: மறைமலை அடிகள், வேதாச்சலம் என்ற தனது பெயரை தூய தமிழில் மறைமலை அடிகள் என மாற்றிக்கொண்டார்.
- கூற்று 2: மறைமலை அடிகளின் ஞானசாகரம் எனும் பத்திரிகை ஞானோதயம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 23 Explanation:
(குறிப்பு: மறைமலை அடிகளின் ஞானசாகரம் எனும் பத்திரிகை அறிவுக்கடல் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.)
Question 24 |
மறைமலை அடிகளின் சமரச சன்மார்க்க சங்கம் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
- மறைமலை அடிகளின் சமரச சன்மார்க்க சங்கம் எனும் நிறுவனம் பொதுநிலைக் கழகம் என்று பெயரிடப்பட்டது.
- இவ்வியக்கம் தமிழ் சமுதாயத்திலிருந்த இந்தி, சமஸ்கிருதம் மற்றும் பிராமண மேலாதிக்கத்தை விமர்சித்தது.
- இவ்வியக்கம் பிற்காலத் தமிழ் சமூகத்திலிருந்த பிராமணிய மற்றும் சமஸ்கிருத மரபுகளை எதிர்கொண்ட சமூக இயக்கங்களுக்கு வழி வகுத்தது.
1 மட்டும் தவறு | |
1, 3 தவறு | |
3 மட்டும் தவறு | |
எதுவுமில்லை |
Question 24 Explanation:
(குறிப்பு: தமிழ் சொற்களுக்குள் புகுந்துவிட்ட சமஸ்கிருதச் சொற்களுக்கு இணையான பொருள்தரக்கூடிய தமிழ் சொற்களடங்கிய அகராதி ஒன்றை நீலாம்பிகை தொகுத்தார்.)
Question 25 |
1911 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சென்னை மாகாண மக்கள்தொகையில் பிராமணரல்லாதோரின் எண்ணிக்கை _________ விழுக்காடு.
80 | |
85 | |
90 | |
92 |
Question 25 Explanation:
(குறிப்பு: 1911 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சென்னை மாகாண மக்கள்தொகையில் பிராமணர்களின் எண்ணிக்கை 3 விழுக்காட்டிற்கு சற்றே அதிகாமாக இருந்தது.)
Question 26 |
1901 முதல் 1911 வரையிலான பத்தாண்டுகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்த பிராமணர்களின் எண்ணிக்கை
1035 | |
2084 | |
3567 | |
4074 |
Question 26 Explanation:
(குறிப்பு: 306 இந்தியக் கிறித்தவர்களும், 69 முகமதியர்களும் 225 ஐரோப்பிய மற்றும் யூரேசியர்களும் பட்டப்படிப்பு முடித்தவர்களாக இருந்தனர்.)
Question 27 |
1901 முதல் 1911 வரையிலான பத்தாண்டுகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்த பிராமணரல்லாதோரின் எண்ணிக்கை
306 | |
567 | |
1028 | |
1035 |
Question 28 |
பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக மதராஸ் பிராமணரல்லாதோர் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு
1905 | |
1908 | |
1909 | |
1911 |
Question 29 |
டாக்டர் சி. நடேசனார் எனும் மருத்துவர் மதராஸ் ஐக்கிய கழகம் எனும் அமைப்பை உருவாக்கிய ஆண்டு
1909 | |
1910 | |
1911 | |
1912 |
Question 29 Explanation:
(குறிப்பு: மதராஸ் ஐக்கிய கழகம் பின்னாளில் மதராஸ் திராவிடர் சங்கம் என்று மாறியபின் திராவிடர்களின் மேம்பாட்டிற்கான உதவிகளை செய்தது.)
Question 30 |
டாக்டர் நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் மற்றும் அலமேலுமங்கை தாயாரம்மாள் உட்பட 30 முக்கிய பிராமணர் அல்லாத தலைவர்கள் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை உருவாக்க ஒருங்கிணைந்த நாள்
1915 அக்டோபர் 5 | |
1915 நவம்பர் 20 | |
1916 அக்டோபர் 16 | |
1916 நவம்பர் 20 |
Question 30 Explanation:
(குறிப்பு: ஆங்கில அரசின் பிரதிநிதித்துவ அமைப்புகளை அறிமுகம் செய்வது போன்ற அரசியல் சீர்திருத்தங்கள் பிராமணர்களின் அரசியல் அதிகாரத்தை மேலும் வலுவடையச் செய்யும் என அஞ்சிய கல்வி கற்ற பிராமணர் அல்லாதவர்கள் தங்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டிக் கொள்ள முடிவு செய்து தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை நிறுவினர்.)
Question 31 |
சி. நடேசனார் அவர்களால் திருவல்லிக்கேணியில் திராவிடர் இல்லம் என்ற பெயரில் தங்கும் விடுதி நிறுவப்பட்ட ஆண்டு
1914 ஜூலை | |
1915 ஜூலை | |
1916 ஜூலை | |
1917 ஜூலை |
Question 31 Explanation:
(குறிப்பு: நடேசனார் தங்கும் விடுதி வசதியில்லாமல் பிராமணரல்லாத மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டதால் அதை சரி செய்யும் வகையில் இவ்விடுதியை நிறுவினார். மேலும் பிராமணர் அல்லாத மாணவர்களின் நலன் கருதி இவ்வில்லம் ஒரு இலக்கிய அமைப்பையும் கொண்டிருந்தது.)
Question 32 |
பிராமணரல்லாதோர் அறிக்கை__________அன்று விக்டோரியா பொது அரங்கில் நடைபெற்ற கூட்டமொன்றில் வெளியிடப்பட்டது.
1915 ஆகஸ்ட் | |
1915 நவம்பர் | |
1916 அக்டோபர் | |
1916 டிசம்பர் |
Question 32 Explanation:
(குறிப்பு: இவ்வறிக்கை பிராமணரல்லாத சமூகங்களின் கருத்துக்களைத் தெளிவுபடக் கூறியது. மேலும் சென்னை மாகாணத்தின் பிராமணரல்லாதோர்களின் பொதுவான நிலையை அளவீடு செய்தது.)
Question 33 |
கீழ்க்கண்டவற்றுள் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் வெளியிட்ட செய்தித்தாள்கள் எவை?
- திராவிடன்
- ஜஸ்டிஸ்
- ஆந்திர பிரகாசிகா
- தமிழ் தேசிகம்
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 2, 4 | |
1, 3, 4 |
Question 33 Explanation:
(குறிப்பு: திராவிடன் - தமிழ், ஜஸ்டிஸ் - ஆங்கிலம், ஆந்திர பிரகாசிகா – தெலுங்கு.)
Question 34 |
"சென்னை மாகாணத்திலுள்ள 4 கோடியே 1 ½ லட்சம் மக்களில் 4 கோடிகளுக்கு குறைவில்லாதவர்கள் பிராமணர் அல்லாதவர்களே, சென்னை மாகாணத்தின் அரசியல் சூழல் அவர்களை தங்களுக்கு உரிமையுள்ள பங்கினை எடுத்துக் கொள்ள இடமளிக்கவில்லை" என கூட்டிக்காட்டிய அறிக்கை
விக்டோரியா போறறிக்கை | |
பிராமணர் அல்லாதோர் அறிக்கை | |
பிராமணர் அறிக்கை | |
மெளன்ட்பேட்டன் அறிக்கை |
Question 34 Explanation:
(குறிப்பு: "ஆங்கில அரசின் உண்மையான நீதி மேலும் வாய்ப்புகளுக்கான சமத்துவம்" எனும் ஆங்கிலேயக் கொள்கைகளின்படி நடைபெறும் அரசே இந்தியர்களின் நலன்களுக்கு உகந்தது என வாதிட்டு “நாங்கள் ஆங்கிலேய அரசை ஆழமாக நேசிக்கிறோம் விசுவாசத்துடன் பற்றுக் கொண்டுள்ளோம்" என்று இவ்வறிக்கை அறிவித்தது.)
Question 35 |
1920ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று இந்தியாவின் முதல் அமைச்சரவையை சென்னையில் அமைத்த கட்சி
Question 35 Explanation:
(குறிப்பு: நீதிக்கட்சி அமைச்சரவையில் A. சுப்பராயலு சென்னை மாகாணத்தின் முதலமைச்சரானார்.)
Question 36 |
காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தைப் புறக்கணித்த சூழலில் நீதிக்கட்சி __________ ஆண்டு தேர்தல் நடைபெறும் வரை ஆட்சியில் தொடர்ந்து நீடித்தது.
1923 | |
1926 | |
1930 | |
1937 |
Question 36 Explanation:
(குறிப்பு: நீதிக்கட்சி 1920 - 1923 மற்றும் 1923 – 1926 ஆகிய ஆண்டுகளில் அரசமைத்தது.)
Question 37 |
நீதிக்கட்சி குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.
- நீதிக்கட்சியே நாட்டில் பிராமணர் அல்லாதவர்களின் மூலாதாரமாய் விளங்கிற்று.
- நீதிக்கட்சி அரசாங்கம் மக்கள் தொகையில் பெரும்பாலனவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை விரிவுப்படுத்தி அரசியல் தளத்தில் அவர்களுக்கென இடத்தை உருவாக்கியது.
- சாதிமறுப்புத் திருமணங்களைக் கட்டுப்படுத்திய சட்டச் சிக்கல்களை நீதிக் கட்சியினர் அகற்றினர்.
- பொதுக் கிணறுகளையும் நீர் நிலைகளையும் ஒடுக்கப்பட்ட பிரிவு மக்கள் பயன்படுத்துவதை தடுத்த தடைகளை தகர்த்தனர்.
அனைத்தும் சரி | |
2, 3 சரி | |
1, 2, 4 சரி | |
1, 3, 4 சரி |
Question 38 |
- கூற்று 1: ஒடுக்கப்பட்ட பிரிவு குழந்தைகள் பொதுப்பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டுமென நீதிக்கட்சி அரசு ஆணை பிறப்பித்தது.
- கூற்று 2: இச்சமூகக் குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கென 1920இல் தங்கும் விடுதிகள் உருவாக்கப்பட்டன.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 38 Explanation:
(குறிப்பு: ஒடுக்கப்பட்ட சமூக குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கென 1923இல் தங்கும் விடுதிகள் நீதிக்கட்சியால் உருவாக்கப்பட்டன.)
Question 39 |
தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை நீதிக்கட்சி அங்கீகரித்த ஆண்டு
1920 | |
1921 | |
1922 | |
1923 |
Question 39 Explanation:
(குறிப்பு: நீதிக்கட்சி கீழிருந்த சட்டமன்றம்தான் முதன்முதலாக தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை அங்கீகரித்தது.)
Question 40 |
முத்துலட்சுமி அம்மையார் ___________ ஆண்டு இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராக ஆனார்.
Question 41 |
பல்வேறு சாதி சமூகங்களை சார்ந்தவர்களும் அரசுப் பணிகளில் சேர்வதற்கு சமமான வாய்ப்புகளை உறுதி செய்யும் பொருட்டு நீதிக்கட்சியால் கொண்டுவரப்பட்ட வகுப்புவாரி அரசாணைகள் இயற்றப்பட்ட ஆண்டு
- 1920 செப்டம்பர் 15
- 1921 செப்டம்பர் 16
- 1922 ஆகஸ்ட் 15
- 1923 ஆகஸ்ட் 2
1, 2 | |
2, 3 | |
1, 3 | |
2, 4 |
Question 41 Explanation:
(குறிப்பு: பல்வேறு சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நீதிக்கட்சி வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தொடர்பான சட்டங்களை இயற்றும் பணிகளை மேற்கொண்டது.)
Question 42 |
நீதிக்கட்சியால் பணியாளர் தேர்வாணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
1921 | |
1923 | |
1924 | |
1926 |
Question 42 Explanation:
(குறிப்பு: நிர்வாக அதிகாரங்களை அனைத்து சமூகத்தினரும் பங்கிட்டுக் கொள்வதை ஊக்குவிக்கும் வண்ணம் அரசு அதிகாரிகளை தேர்வு செய்ய பணியாளர் தேர்வாணையம் அமைக்கப்பட்டது.)
Question 43 |
பிரிட்டிஷ் இந்திய அரசு ____________ ஆண்டு பொதுப்பணியாளர் தேர்வாணையத்தை உருவாக்கியது.
1925 | |
1927 | |
1928 | |
1929 |
Question 43 Explanation:
(குறிப்பு: நீதிக்கட்சியின் பணியாளர் தேர்வு வாரிய முறையை பின்பற்றி பிரிட்டிஷ் இந்திய அரசு பொதுப் பணியாளர் தேர்வாணையத்தை உருவாக்கியது.)
Question 44 |
நீதிக்கட்சி _________ ஆண்டு இந்து சமய அறநிலையச் சட்டத்தை இயற்றியது.
1923 | |
1924 | |
1925 | |
1926 |
Question 44 Explanation:
(குறிப்பு: இச்சட்டப்படி எந்தவொரு தனிநபரும், சாதி வேறுபாடின்றி கோவில்களின் நிர்வாகக் குழுக்களில் உறுப்பினராகவும் கோவிலின் சொத்துக்களை நிர்வகிக்கவும் வழிவகை செய்யப்பட்டது.)
Question 45 |
சுயமரியாதை இயக்கச் சொற்பொழிவுகளின் மையப் பொருளாக இருந்தது ___________ ஆகும்.
பகுத்தறிவு | |
சுயமரியாதை | |
இனம் | |
சுயாட்சி |
Question 45 Explanation:
(குறிப்பு: திராவிட மக்களுடைய நீண்ட கால வரலாற்றின் போக்கில் திராவிட மக்கள் ஆரிய பிராமணர்களால் திட்டமிட்டு ஒடுக்கப்பட்டதாக அச்சொற்பொழிவுகளில் விவாதிக்கப்பட்டன.)
Question 46 |
இஸ்லாம் சமூகத்தில் சீர்திருத்த முன்முயற்சிகள் மேற்கொண்ட துருக்கியை சேர்ந்த முஸ்தபா கமால் பாட்சா, ஆப்கானிஸ்தானத்தைச் சேர்ந்த அமானுல்லா ஆகியோரை திராவிட முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டுமென கூறியவர்
இரட்டைமலை சீனிவாசன் | |
M.C. ராஜா | |
பெரியார் | |
ராஜாஜி |
Question 46 Explanation:
(குறிப்பு: முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது போன்ற சில பழக்கங்களை பெரியார் விமர்சனம் செய்தார்.)
Question 47 |
சுயமரியாதை இயக்கம் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
பகுத்தறிவும் சுயமரியாதையும் அனைத்து மனிதர்களின் பிறப்புரிமை எனப் பிரகடனம் செய்த சுயமரியாதை இயக்கம் சுயாட்சியைக் காட்டிலும் இவை முக்கியமானவை எனும் கருத்தை உயர்த்தி பிடித்தது. | |
பெண்களின் தாழ்வான நிலைக்கு எழுத்தறிவின்மையே காரணம் என அறிவித்த இவ்வியக்கம் அனைவருக்கும் கட்டாயத் தொடக்கக் கல்வியை வழங்கும் பணிகளை மேற்கொண்டது. | |
இவ்வியக்கம் பெண் விடுதலை கோருதல், மூடநம்பிக்கைகளை நீக்குதல் மற்றும் பகுத்தறிவை வலியுறுத்துதல் போன்ற கோரிக்கைகளை கோரியது. | |
சுயமரியாதை இயக்கம் பிராமணர் அல்லாத இந்துக்களின் நலன்களுக்காக மட்டும் போராடியது. |
Question 47 Explanation:
(குறிப்பு: சுயமரியாதை இயக்கம் பிராமணர் அல்லாத இந்துக்களின் நலன்களுக்காக மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களின் நலனுக்காகவும் போராடியது.)
Question 48 |
இஸ்லாமின் மேன்மை மிகுந்த கோட்பாடுகளான ___________,__________ ஆகியவற்றை சுயமரியாதை இயக்கம் பாராட்டியது.
சமத்துவம், சுயமரியாதை | |
பகுத்தறிவு, சுதந்திரம் | |
சமத்துவம், சகோதரத்துவம் | |
சுதந்திரம், சுயமரியாதை |
Question 48 Explanation:
(குறிப்பு: இந்து சமூகத்தின ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இஸ்லாத்தில் இணைவதன் மூலம் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் அடைகிறார்கள் என்று சுயமரியாதை இயக்கம் கருதியது.)
Question 49 |
பெரியார் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர் ஆவார். | |
ஈரோட்டை சேர்ந்த செல்வந்தரும் வணிகருமான வெங்கடப்பர், சின்னத்தாயம்மாள் ஆகியோரின் மகனாவார். | |
சென்னையின் நகர சபைத் தலைவர் பதவி உட்பட பல பதவிகளையும் அவர் வகித்தார். | |
மதுவிலக்கு இயக்கத்திற்கு ஆதரவாகத் தனது தோப்பிலிருந்த 500 தென்னை மரங்களை வெட்டினார். |
Question 49 Explanation:
(குறிப்பு: பெரியார் ஈரோட்டின் நகர சபைத் தலைவர் பதவி (1918-1919) உட்பட பல பதவிகளையும் அவர் வகித்தார்.)
Question 50 |
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிதியுதவியில் இயங்கிய சேரன்மாதேவி குருகுலம் ___________ எனும் காங்கிரஸ் தலைவரால் நடத்தப்பெற்றது.
சத்தியமூர்த்தி | |
வ.வே. சுப்பிரமணியம் | |
பெரியார் | |
ஜார்ஜ் ஜோசப் |
Question 50 Explanation:
(குறிப்பு: சேரன்மாதேவி குருகுலப் பள்ளியில், உணவு உண்ணும் அறையில் சாதி அடிப்படையிலான பாகுபாடு நிலவுவதை பெரியார் கண்டித்தார்.)
Question 51 |
சட்டசபை போன்ற பிரதிநிதித்துவ அமைப்புகளில் பிராமணர் அல்லாதவர்களுக்கு இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்துவதற்கான தீர்மானத்தை பெரியார்_____________ ஆண்டு நிறைவேற்ற முயற்சி செய்தார்.
1923 | |
1924 | |
1925 | |
1926 |
Question 51 Explanation:
(குறிப்பு: பெரியார், 1925இல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் குழுவின் வருடாந்திர மாநாட்டில் இத்தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சி செய்து தோல்வியடைந்தார்.)
Question 52 |
பெரியார்__________ ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்.
1923 | |
1924 | |
1925 | |
1926 |
Question 52 Explanation:
(குறிப்பு: காங்கிரசில் ஏற்பட்ட பிரச்சனைகளால் பெரியார் 1925 இல் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்.)
Question 53 |
பொருத்துக. (பெரியார் தொடங்கிய இதழ்கள்)
- குடியரசு i) 1935
- ரிவோல்ட் ii) 1934
- புரட்சி iii) 1933
- பகுத்தறிவு iv) 1928
- விடுதலை v) 1925
i iii iv ii v | |
v iv iii ii i | |
i ii iii iv v | |
v i iv ii iii |
Question 54 |
சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வ செய்தித்தாள்
ரிவோல்ட் | |
புரட்சி | |
விடுதலை | |
குடியரசு |
Question 54 Explanation:
(குறிப்பு: பிராமணரல்லாதோர், பெண்கள், சமயத்தில் சிறுபான்மையினர் ஆகியோரின் எண்ணங்களை குடியரசு பத்திரிகை வெளிக்கொணர்ந்தது.)
Question 55 |
பெரியார் புத்தரின் 2500வது பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள பர்மா சென்ற ஆண்டு
1932 | |
1945 | |
1949 | |
1954 |
Question 56 |
- கூற்று 1: பெரியார் சிங்கப்பூர், மலேசியா, எகிப்து, சோவியத் ரஷ்ய குடியரசு, கிரீஸ், துருக்கி, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், போர்த்துகள் ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தார்.
- கூற்று 2: சோவியத் ரஷ்யாவிலும் ஐரோப்பாவிலும் பெரியார் பெற்ற பயண அனுபவங்கள் அவரை சமதர்மக் கருத்துக்களின்பால் நாட்டம் கொள்ள வைத்தன.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 56 Explanation:
(குறிப்பு: பெரியார் பௌத்த சமய முன்னோடியும், தென்னிந்தியாவின் முதல் பொதுவுடைமைவாதியுமான சிங்காரவேலருடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தார்.)
Question 57 |
B.R. அம்பேத்கார் எழுதிய சாதி ஒழிப்பு (Annihilation of caste) எனும் நூலை பெரியார் தமிழில் பதிப்பித்த ஆண்டு
1935 | |
1936 | |
1937 | |
1938 |
Question 57 Explanation:
(குறிப்பு: B.R. அம்பேத்கார் அவர்களின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தனித்தேர்தல் தொகுதிக் கோரிக்கையை பெரியாரும் ஆதரித்தார்.)
Question 58 |
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
- 1937 இல் ராஜாஜியின் தலைமையிலான அரசின் செயல்பாட்டினை எதிர்க்கும் விதமாக, பள்ளிகளில் இந்தியைக் கட்டாய பாடமாக அறிமுகம் செய்ததற்கு எதிராகப் பெரியார் மக்கள் செல்வாக்கு பெற்ற இயக்கத்தை நடத்தினார்.
- 1937-39 ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டமானது தமிழ்நாட்டு அரசியலில் மிக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
- இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்காக பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார் சிறையில் இருந்தபோதே நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
1, 3 சரி | |
2, 3 சரி |
Question 59 |
நீதிக்கட்சி சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து திராவிடர் கழகம் என பெயர் சூட்டப்பட்ட ஆண்டு
1942 | |
1943 | |
1944 | |
1945 |
Question 60 |
பெரியார்__________எனும் புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதினார்.
விசித்திரசித்தன் | |
சித்திரபுத்திரன் | |
புத்திரன் | |
எமன் |
Question 60 Explanation:
(குறிப்பு: ஒவ்வொரு இதழிலும் சமூகப் பிரச்சனைகள் தொடர்பான தனது கருத்துகளைப் பெரியார் வழக்கமான கட்டுரையாக எழுதினார்.)
Question 61 |
இந்திய தேசிய காங்கிரஸ்__________ ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதன்முதலில் பங்கேற்றது.
1923 | |
1926 | |
1937 | |
1945 |
Question 61 Explanation:
(குறிப்பு: 1937 தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரஸ் நீதிக்கட்சியை படுதோல்ல்வி அடையச் செய்தது.)
Question 62 |
மாகாண அரசுகளில் இரட்டையாட்சி முறையை அறிமுகம் செய்த பின்னர் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் __________ ஆண்டு முதல் தேர்தல் நடைபெற்றது.
1918 | |
1920 | |
1923 | |
1925 |
Question 63 |
தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு.
சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த ராஜாஜி (1952-54) பள்ளிக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்திய தொழில் கல்வி பயிற்சித் திட்டமானது, மாணவர்களுக்கு அவர்களின் தந்தையர்கள் செய்து வந்த தொழில்களில் பயிற்சியளிப்பதாக அமைந்தது. | |
இதை குலக்கல்வித் திட்டம் என விமர்சித்த பெரியார் இத்திட்டத்தை முழுமையாக எதிர்த்தார். | |
குலக்கல்வி திட்டத்திற்கு எதிராக பெரியார் மேற்கொண்ட போராட்டங்கள் ராஜாஜியின் பதவி விலகலுக்கு இட்டுச் சென்றது. | |
ராஜாஜிக்கு பின் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்னை மாநிலத்தின் முதலமைச்சரானார். |
Question 63 Explanation:
(குறிப்பு: ராஜாஜிக்கு பின் கு. காமராஜ் சென்னை மாநிலத்தின் முதலமைச்சரானார்.)
Question 64 |
- கூற்று 1: பெரியார் தன்னுடைய தொன்னூற்று நான்காவது வயதில் 1978ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
- கூற்று 2: பெரியாரின் உடல் சென்னையில் பெரியார் திடலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 64 Explanation:
(குறிப்பு: பெரியார் தன்னுடைய தொன்னூற்று நான்காவது வயதில் 1973ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.)
Question 65 |
"சமயம் என்றால் நீங்கள் மூட நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று பொருள்" என உறுதிபடக் கூறியவர்
அம்பேத்கார் | |
ராஜாஜி | |
பெரியார் | |
இரட்டைமலை சீனிவாசன் |
Question 65 Explanation:
(குறிப்பு: பெரியார் சமயத்தின் இடத்தில் பகுத்தறிவு வைக்கப்பட வேண்டுமென்றார்.)
Question 66 |
பெரியார் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
- பெரியார் தன் வாழ்நாள் முழுவதையும் தான் நிறுவிய சிந்தனையாளர்கள் அல்லது பகுத்தறிவாளர்கள் அமைப்புகள் மூலமாக மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பரப்புரை செய்வதில் செலவழித்தார்.
- கோவில்களில் நிலவிய பரம்பரை அர்ச்சகர்கள் முறையை அவர் எதிர்த்தார்.
- சாதி அடிப்படையில் இல்லாமல், முறையான சமய அறிவைப் பெற்றுள்ள தகுதியுடைய தனி நபர்களும் அர்ச்சகர் ஆகலாம் என அவர் வாதிட்டார்.
- பிராமண அர்ச்சகர்களையும் வேதச் சடங்குகளையும் புறக்கணிக்கும்படி அவர் மக்களை ஊக்குவித்தார்.
- சடங்குகளற்ற சாதி மறுப்பு, சுயமரியாதை திருமணங்களைப் பரிந்துரைத்தார்.
2, 4 தவறு | |
4 மட்டும் தவறு | |
3 மட்டும் தவறு | |
எதுவுமில்லை |
Question 67 |
- கூற்று 1: திருமணம் செய்து கொடுப்பது எனும் வார்த்தைகளை மறுத்த பெரியார் அவை பெண்களைப் பொருட்களாக நடத்துகின்றன என்றார்.
- கூற்று 2 அவைகளுக்கு மாற்றாக நாலடியாரில் இருந்து எடுக்கப்பட்ட வாழ்க்க்கைத் துணை என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டினார்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 67 Explanation:
(குறிப்பு: திருமணம் செய்து கொடுப்பது எனும் வார்த்தைகளை மறுத்த பெரியார் அவைகளுக்கு மாற்றாக திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்ட வாழ்க்க்கைத் துணை என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டினார்.)
Question 68 |
பெண்ணியம் குறித்து பெரியார் எழுதிய மிக முக்கியமான நூல்
பெண்மை | |
பெண்ணின் அடிமைத்தனம் | |
பெண் ஏன் அடிமையானாள் | |
பெண்ணியம் |
Question 68 Explanation:
(குறிப்பு: பெரியார் சொத்துக்கள், பாதுகாவலர்களாக இருத்தல், மற்றும் தத்தெடுத்தல் ஆகியவற்றில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை வேண்டுமென்றார்.)
Question 69 |
தமிழக அரசு, இந்து வாரிசுரிமைச் சீர்திருத்தச் சட்டத்தை அறிமுகம் செய்த ஆண்டு
1979 | |
1982 | |
1988 | |
1989 |
Question 69 Explanation:
(குறிப்பு: இச்சட்டம் முன்னோர்களின் சொத்துக்களை உடைமையாகப் பெறுவதில் பெண்களுக்குச் சம உரிமை உண்டென்பதை உறுதிப்படுத்தியது.)
Question 70 |
இரட்டைமலை சீனிவாசன் _________ ஆண்டு காஞ்சிபுரத்தில் பிறந்தார்.
1825 | |
1832 | |
1842 | |
1859 |
Question 70 Explanation:
(குறிப்பு: இரட்டைமலை சீனிவாசன் தாத்தா எனப் பரவலாக அறியப்பட்டார். சாதிப்படிநிலைகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதி, சமத்துவம், சமூக உரிமைகள் ஆகியவற்றுக்காகப் போராடினார்.)
Question 71 |
தவறான இணையைத் தேர்ந்தெடு. (இரட்டைமலை சீனிவாசன் பெற்ற பட்டங்கள் - தரப்பட்ட ஆண்டு)
- ராவ்சாகிப் – 1926
- ராவ் பகதூர் – 1930
- திவான் பகதூர் – 1932
1 மட்டும் தவறு | |
1, 2 தவறு | |
2 மட்டும் தவறு | |
3 மட்டும் தவறு |
Question 72 |
இரட்டைமலை சீனிவாசனின் சுயசரிதையான ஜீவிய சரித சுருக்கம் __________ ஆண்டு வெளியிடப்பட்டது.
1930 | |
1932 | |
1938 | |
1939 |
Question 72 Explanation:
(குறிப்பு: ஜீவிய சரித சுருக்கம் எனும் நூல் முதன்முதலாக எழுதப்பெற்ற சுயசரிதை நூல்களில் ஒன்றாகும்.)
Question 73 |
இரட்டைமலை சீனிவாசன் அவர்களால் ஆதிதிராவிட மகாஜன சபை எனும் அமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு
1882 | |
1889 | |
1893 | |
1896 |
Question 73 Explanation:
(குறிப்பு: இரட்டைமலை சீனிவாசன் ஒடுக்கப்பட்ட மக்களின் கூட்டமைப்பு மற்றும் சென்னை மாகாண ஒடுக்கப்பட்ட வகுப்பாரின் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் தலைவராக பணியாற்றினார்.)
Question 74 |
இரட்டைமலை சீனிவாசன் _________இல் காந்தியடிகளை சந்தித்து அவருடன் நெருக்கமானார்.
சென்னை | |
தென்னாப்பிரிக்கா | |
குஜராத் | |
கல்கத்தா |
Question 75 |
இரட்டைமலை சீனிவாசன் சென்னை மாகாண சட்டசபை உறுப்பினரான ஆண்டு
1920 | |
1923 | |
1926 | |
1930 |
Question 75 Explanation:
(குறிப்பு: இரட்டைமலை சீனிவாசன், நீதிக்கட்சியில் தனது செல்வாக்கினை ஏற்படுத்தி ஒடுக்க்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்தார்.)
Question 76 |
- கூற்று 1: B.R. அம்பேத்கருடன் நெருக்கமான இரட்டைமலை சீனிவாசன் லண்டனில் நடைபெற்ற முதல், இரண்டாம் வட்டமேஜை மாநாடுகளில் கலந்து கொண்டு சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் கருத்துக்களுக்காக குரல் கொடுத்தார்.
- கூற்று 2: 1932இல் செய்து கொள்ளப்பட்ட பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களுள் இரட்டைமலை சீனிவாசனும் ஒருவர் ஆவார்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 77 |
சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் உறுப்பினர்
இரட்டைமலை சீனிவாசன் | |
ம.சிங்காரவேலர் | |
மயிலை சின்னதம்பி ராஜா | |
பி.பி. வாடியா |
Question 77 Explanation:
(குறிப்பு: எம்.சி. ராஜா சென்னை சட்டசபையில் நீதிக்கட்சியின் துணைத் தலைவராகச் செயல்பட்டார்.)
Question 78 |
ஆதிதிராவிடர், ஆதி ஆந்திரர் எனும் வார்த்தைகளைப் பயன்படுத்துமாறு பரிந்துரைத்தவர்
ராஜாஜி | |
ம.சிங்காரவேலர் | |
மயிலை சின்னதம்பி ராஜா | |
பெரியார் |
Question 78 Explanation:
(குறிப்பு: தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டுமென கோரிய எம். சி. ராஜா பொது நீர்நிலைகள், பாதைகள் முதல் இடுகாடுகள் வரை பயன்படுத்தும் உரிமை ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தோருக்கும் வேண்டுமெனக் கோரி பல பொதுக் கூட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தினார்.)
Question 79 |
எம்.சி.ராஜா அவர்களால் அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு
1925 | |
1926 | |
1927 | |
1928 |
Question 79 Explanation:
(குறிப்பு: தொடக்கத்தில் தனித் தேர்தல் தொகுதி வேண்டுமெனக் கோரிய எம்.சி.ராஜா பூனா உடன்படிக்கைக்குப் பின்னர் அந்நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டு கூட்டுத்தொகுதி முறையை ஆதரித்தார்.)
Question 80 |
- கூற்று 1: மயிலை சின்னதம்பி ராஜா (1883-1943) மக்களால் எம்.சி. ராஜா என அழைக்கப்பட்ட அவர் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலைவர்களில் முக்கியமானவர்.
- கூற்று 2: ஒரு ஆசிரியராக தனது பணியைத் தொடங்கிய எம்.சி.ராஜா பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றுக்கான பல்வேறு பாடப்புத்தகங்களை எழுதினார்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 81 |
இந்தியாவின் முதல் தொழில் சங்கமான சென்னை தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்ட ஆண்டு
1916 | |
1917 | |
1918 | |
1919 |
Question 81 Explanation:
(குறிப்பு: சென்னை மாகாணத்தில் பி.பி.வாடியா, ம.சிங்காரவேலர், திரு.வி.கல்யாணசுந்தரம் போன்றவர்கள் தொழிலாளர் சங்கங்களை அமைப்பதில் முன்முயற்சி மேற்கொண்டனர்.)
Question 82 |
அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநாடு 1920 அக்டோபர் 31 அன்று ___________ல் நடைபெற்றது.
ஆக்ரா | |
கல்கத்தா | |
சென்னை | |
பம்பாய் |
Question 82 Explanation:
(குறிப்பு: இம்மாநாட்டில் தொழிலாளர்களின் பிரச்சனைகளில் காவல்துறை தலையிடுவதிலிருந்து பாதுகாப்பு, வேலையில்லாதவர்களுக்கென ஒரு பதிவேட்டைப் பராமரித்தல், உணவுப் பண்டங்களின் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடு, காயமடைந்தோருக்கு ஈட்டுத்தொகை மற்றும் உடல் நலக் காப்பீடு ஆகிய தீர்மானங்கள் குறித்து பிரதிநிதிகள் தீர்மானித்தனர்.)
Question 83 |
1923இல் முதல் முதலாக மே தின விழாவை ஏற்பாடு செய்தவர்
ராஜாஜி | |
ம.சிங்காரவேலர் | |
மயிலை சின்னதம்பி ராஜா | |
பெரியார் |
Question 83 Explanation:
(குறிப்பு: ம.சிங்காரவேலர் இந்திய பொதுவுடைமை கட்சியின் ஆரம்ப கால தலைவர்களில் ஒருவராக இருந்தார்.)
Question 84 |
சிங்காரவேலர் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
சென்னை மாகாண தொழிலாளர் இயக்க நடவடிக்கைகளில் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார். | |
சென்னையில் பிறந்த சிங்காரவேலர் சென்னைப் பல்கலைக்கழகத்தை சார்ந்த மாநிலக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். | |
இளமைக் காலத்தில் சமணத்தைப் பரிந்துரை செய்தார். | |
சிங்கார வேலர் கார்ல் மார்க்ஸ், சார்லஸ் டார்வின், ஹெர்பர்ட் ஸ்பென்சர், ஆல்பர்ட் ஐன்ஸ்டின் ஆகியோரின் கருத்துக்களை தமிழில் வடித்தார். |
Question 84 Explanation:
(குறிப்பு: சிங்காரவேலர் இளமைக் காலத்தில் பௌத்தத்தை பரிந்துரை செய்தார். தமிழ், ஆங்கிலம், உருது, இந்தி, ஜெர்மன், பிரெஞ்ச் மற்றும் ரஷ்யன் என பல மொழிகளை அறிந்திருந்தார்.)
Question 85 |
சிங்காரவேலர், தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சனைகளை வெளிப்படுத்துவதற்காக _________ என்ற பத்திரிக்கையை வெளியிட்டார்.
உரிமை | |
தொழிலாளன் | |
சுதந்திரம் | |
பொதுவுடைமை |
Question 85 Explanation:
(குறிப்பு: சிங்காரவேலர் பெரியாரோடும் சுயமரியாதை இயக்கத்தோடும் நெருக்கமாக இருந்தார்.)
Question 86 |
- கூற்று 1: தமிழ்மொழி பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தனது மேன்மையை மீட்டுப் பெற்றது.
- கூற்று 2: மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கம், பெரியாரின் மொழிச் சீர்திருத்தம் மற்றும் தமிழிசை இயக்கம் ஆகியவை தமிழுக்கு வலுச்சேர்த்தன.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 86 Explanation:
(குறிப்பு: திராவிட உணர்வுக்கு இட்டுச் சென்ற தமிழ் மறுமலர்ச்சி நவீனத் தமிழ் மொழியின் வளர்ச்சிலும் அதன் கலை வடிவங்களுடைய வளர்ச்சியிலும் பெரும் பங்களிப்பைச் செய்தது.)
Question 87 |
1912 இல் தஞ்சாவூரில் “சங்கீத வித்யா மகாஜன சங்கம்" என்ற அமைப்பை ஏற்படுத்தியவர்
ராஜாஜி | |
ம.சிங்காரவேலர் | |
மயிலை சின்னதம்பி ராஜா | |
ஆபிரகாம் பண்டிதர் |
Question 87 Explanation:
(குறிப்பு: இந்த அமைப்பே தமிழிசை இயக்கத்தின் கருமூலமானது. இசை நிகழ்வுகளில் தமிழில் பாடல்கள் பாடப்படுவதற்கு இவ்வியக்கம் முக்கியத்துவம் வழங்கியது.)
Question 88 |
தமிழிசையின் நிலை குறித்து விவாதிக்க _________ ஆண்டு முதல் தமிழிசை மாநாடு நடத்தப்பட்டது.
1941 | |
1942 | |
1943 | |
1944 |
Question 89 |
தமிழுக்கு மேலாக இந்தியை அறிமுகம் செய்வது திராவிடர்களுக்கான வேலைவாய்ப்புகளை மறுப்பதாக அமையுமென அறிவித்தவர்.
ராஜாஜி | |
காமராஜர் | |
சிங்காரவேலர் | |
பெரியார் |
Question 89 Explanation:
(குறிப்பு: இந்தி மொழி அறிமுகம் செய்யப்பட்டால் தமிழ்மொழி பாதிப்புக்குள்ளாகும் என மறைமலை அடிகள் சுட்டிக் காட்டினார்.)
Question 90 |
இந்தியப் பெண்கள் சங்கம் __________ ஆண்டு சென்னை அடையாறில் தொடங்கப்பெற்றது.
1912 | |
1915 | |
1917 | |
1919 |
Question 90 Explanation:
(குறிப்பு: அன்னிபெசன்ட், டோரதி ஜினராகதாசா, மார்கரெட் கசின்ஸ் ஆகியோரால் இந்திய பெண்கள் சங்கம் தொடங்கப்பெற்றது.)
Question 91 |
இந்திய பெண்கள் சங்கம் _________ ஆண்டு அகில இந்திய பெண்கள் மாநாட்டை நிறுவியது.
1925 | |
1926 | |
1927 | |
1928 |
Question 91 Explanation:
(குறிப்பு: பெண்கல்வி குறித்த பிரச்சனைகளைக் கையாள்வதற்காக இம்மாநாடு தொடங்கப்பட்டது.)
Question 92 |
- கூற்று 1: தேவதாசி முறையை ஒழிப்பதற்காகச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதற்காக நடைபெற்ற இயக்கத்தில் டாக்டர்.முத்துலட்சுமி அம்மையார் முதலிடம் வகித்தார்.
- கூற்று 2: 'மதராஸ் (அர்பணிப்பைத் தடுத்தல்) தேவதாசி சட்டம் 1947’ எனும் சட்டம் அரசால் இயற்றப்பட்டது.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 92 Explanation:
(குறிப்பு: கடவுளுக்கு இறைப்பணி செய்யும் சேவகர்களாக இளம் பெண்களை இந்து கோவில்களுக்கு அர்ப்பணிக்கும் வழக்கம் இருந்தது அவ்வாறு அர்ப்பணிக்கப்பட்டோர் தேவதாசி என்று அறியப்பட்டனர்.)
Question 93 |
__________ ஆண்டு சென்னை சட்டமன்றத்தில் முத்துலட்சுமி அம்மையார் “சென்னை மாகாணத்தில் இந்து கோவில்களுக்குப் பெண்கள் அர்பணிக்கப்படுவதை தடுப்பது" எனும் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
1928 | |
1929 | |
1930 | |
1931 |
Question 93 Explanation:
(குறிப்பு: பின்னர் தேவதாசி ஒழிப்புச் சட்டமாக மாறிய இம்மசோதா, இந்து கோவில் வளாகங்களிலோ அல்லது வேறு வழிபாட்டு இடங்களிலோ "பொட்டுக் கட்டும் சடங்கு" நடத்துவது சட்டத்திற்கு புறம்பானது என அறிவித்தது.)
Question 94 |
தேவதாசி ஒழிப்பு மசோதா சட்டமாக மாறுவதற்கு _________ ஆண்டுகள் காத்திருந்தது.
5 | |
10 | |
12 | |
15 |
Question 94 Explanation:
(குறிப்பு: இச்சட்டம் தேவதாசி முறைக்கு உதவி செய்கிற தூண்டிவிடுகிற குற்றத்தை செய்வோர்க்கு குறைந்தபட்சம் ஐந்தாண்டு சிறை தண்டனை என ஆணையிட்டது.)
Question 95 |
பொருத்துக.
- திராவிடர் இயக்கம் i) மறைமலை அடிகள்
- தொழிலாளன் ii) இரட்டைமலை சீனிவாசன்
- தனித்தமிழ் இயக்கம் iii) சிங்காரவேலர்
- ஜீவிய சரித சுருக்கம் iv) நடேசனார்
ii i iii iv | |
i iv iii ii | |
iv iii ii i | |
iv iii ii i |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 95 questions to complete.
95) question option 4 3 1 2