Online Test
தென் இந்திய வரலாறு – Revision Test in Tamil
தென் இந்திய வரலாறு - Revision Test in Tamil
Congratulations - you have completed தென் இந்திய வரலாறு - Revision Test in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
சோழர்கள் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
சோழர்கள் குறித்த பிற்காலக் கல்வெட்டுகள் சமூக வேறுபாடுகள் பற்றி எதையும் குறிப்பிடவில்லை.
| |
சோழர்கள் காலத்தில் சைவ, வைணவ நூல்கள் தொகுத்து முறைப்படுத்தப்பட்டன. | |
நன்னூல், நேமிநாதம், வீரசோழியம் ஆகியவை இக்காலத்தில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க இலக்கண நூல்கள் ஆகும் | |
கம்ப இராமாயணம், கலிங்கத்துப்பரணி, குலோத்துங்கச் சோழன் பிள்ளைத்தமிழ், மூவருலா ஆகியவை சோழர்கள் காலத்தில் இயற்றப்பட்டன. |
Question 1 Explanation:
(குறிப்பு: பிற்காலக் கல்வெட்டுகள் சமூக வேறுபாடுகள் குறித்துக் குறிப்பிடுகின்றன. அவை சமூகத்தில் சாதிகள், துணைச்சாதிகள் இருந்ததை காட்டுகின்றன.)
Question 2 |
_______ முத்தரையர்களிடமிருந்து காவிரி ஆற்றின் கழிமுகப் பகுதிகளை வென்று 859 ல் சோழ அரசை நிறுவினார்.
முதலாம் இராஜராஜன் | |
முதலாம் இராஜேந்திரன் | |
முதலாம் பராந்தகன் | |
விஜயாலயன் |
Question 2 Explanation:
(குறிப்பு: வரலாற்று ஆய்வாளர்கள் இச்சோழர்களை பிற்காலச் சோழர் என்றும் பேரரசுச் சோழர் என்றும் குறிப்பிடுகிறார்கள்.)
Question 3 |
இராஜராஜ சோழனால் ______ என்ற இடத்தில் கட்டப்பட்ட கோயில் இராஜராஜேஸ்வரம் என அழைக்கப்படுகிறது.
ஸ்ரீவிஜயா | |
கடாரம் | |
மகாதிட்டா | |
கல்யாணி |
Question 3 Explanation:
(குறிப்பு: இராஜராஜ சோழனால் இலங்கையின் வடகிழக்கு பகுதியில் கட்டப்பட்ட கோயில் 'சிவ-தேவாலே’ (சிவாலயம்) எனப்படுகிறது.)
Question 4 |
முதலாம் இராஜேந்திரன் தன் தந்தையின் படையெடுப்புகளில் பங்கேற்று, மேலைச்சாளுக்கியரைச் தாக்கி, சோழ அரசின் எல்லையை ______ ஆறு வரை விரிவுப்படுத்தினார்.
கிருஷ்ணா | |
துங்கபத்திரை | |
கங்கை | |
கோதாவரி |
Question 4 Explanation:
(குறிப்பு: இராஜராஜன், முதலாம் இராஜேந்திரன் இருவரும் இரு ஆண்டு காலம் கூட்டாக ஆட்சி செய்தார்கள்)
Question 5 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
1032 ல் முதலாம் இராஜேந்திரன் அரசப் பொறுப்பேற்றார். | |
முதலாம் இராஜேந்திரன் வட இந்தியாவின் மீது மிகத் தீவிரமான ஒரு படையெடுப்பை நிகழ்த்தினார் | |
வட இந்திய படையெடுப்பில் படைகளை கோதாவரி ஆறு வரை அவரே வழிநடத்திச் சென்றார். | |
முதலாம் இராஜேந்திரனுக்கு வட இந்தியாவில் கிடைத்த வெற்றிகளின் நினைவாக கங்கை கொண்ட சோழபுரம் கட்டப்பட்டது |
Question 6 |
- கூற்று: இராஜராஜ சோழனுக்கு 'கடாரம் கொண்டான்' என்ற பட்டம் சூட்டப்பட்டது.
- காரணம்: குறுநில மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த கடாரத்தை தோற்கடித்ததால் இப்பட்டம் வழங்கப்பட்டது.
கூற்று சரி காரணம் தவறு | |
கூற்று தவறு காரணம் சரி | |
கூற்று காரணம் இரண்டும் சரி | |
கூற்று காரணம் இரண்டும் தவறு |
Question 6 Explanation:
(குறிப்பு: முதலாம் இராஜேந்திரனின் கடற்படை ஸ்ரீவிஜயா (தெற்கு சுமத்ரா) மீது தாக்குதல் தொடுத்து வெற்றி பெற்றது.)
Question 7 |
முடிகொண்ட சோழன், கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், பண்டித சோழன் போன்ற பட்டங்களை சூட்டிக் கொண்டவர் யார்?
முதலாம் இராஜராஜன் | |
முதலாம் இராஜேந்திரன் | |
முதலாம் பராந்தகன் | |
விஜயாலயன் |
Question 8 |
மேலைச் சாளுக்கிய அரசின் மீது _______ இல் முதலாம் இராஜராஜன் தொடுத்த போரும் _____ இல் முதலாம் இராஜேந்திரன் தொடுத்த போரும் அவர்களுக்கு வெற்றியைத் தந்தன.
1006, 1009 | |
1001, 1003 | |
1003, 1009 | |
1003, 1006 |
Question 8 Explanation:
(குறிப்பு: சாளுக்கிய தலைநகர் கல்யாணியைத் தகர்க்க இராஜேந்திரன் தன் மகனை அனுப்பினார். அங்கிருந்து கொண்டுவரப்பட்ட துவாரபாலகர் சிலை தாராசுரம் கோயிலில் உள்ளது)
Question 9 |
முதலாம் இராஜராஜனும் முதலாம் இராஜேந்திரனும் தங்களுடைய இராஜகுருக்களாக முறையே ______ , ____ ஆகியோரை கல்வெட்டுக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளனர் –
சர்வ சிவன், ஈசான சிவன் | |
ஈசான சிவன், சர்வ சிவன் | |
தேவன், சர்வ சிவன் | |
சர்வ சிவன், தேவன் |
Question 9 Explanation:
(குறிப்பு: சோழ அரசர்கள் தங்கள் ஆன்மீக வழிகாட்டி அல்லது இராஜகுருக்களாகப் பிராமணர்களை நியமித்தனர்.)
Question 10 |
சோழர் கால படைகள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
படை வீரர்களுக்கு ‘படைப்பற்று’ என்ற உரிமை வழங்கப்பட்டிருந்தது. | |
தலைநகரில் படை முகாம் இட்டிருந்த இடம் ‘படைவீடு' எனப்பட்டது. | |
புதிதாகச் சேர்க்கப்படும் பகுதிகளில் அமைக்கப்பட்ட புறக்காவல் படைகள் ‘நிலைப்படைகள்’ எனப்பட்டன. | |
ஒரு படைப்பிரிவின் தலைவர் ‘சேனாபதி’, ‘தண்டநாயகம்’ என்றழைக்கப்பட்டார். |
Question 10 Explanation:
(குறிப்பு: ஒரு படைப்பிரிவின் தலைவர் ‘நாயகம்' என்றும் பின்னாட்களில் 'படைமுதலி’ என்றும் அழைக்கப்பட்டார். படைத்தளபதி ‘சேனாபதி’, ‘தண்டநாயகம்’ என்றழைக்கப்பட்டார்.)
Question 11 |
யாருடைய ஆட்சியில் மாமல்லபுரம் ‘மாநகரம்’ என்ற குழுவால் நிர்வகிக்கப்பட்டது?
முதலாம் இராஜராஜன் | |
முதலாம் இராஜேந்திரன் | |
நரசிம்மவர்மன் | |
குலோத்துங்க சோழன் |
Question 12 |
உள்நாட்டிலும் கடல் கடந்தும் வணிகத்தை ஊக்குவிப்பதற்காகக் ______சுங்க வரிகளை நீக்கினார்.
விஜயாலயன் | |
முதலாம் இராஜராஜன் | |
குலோத்துங்கன் | |
முதலாம் இராஜேந்திரன் |
Question 12 Explanation:
(குறிப்பு: குலோத்துங்கன் 'சுங்கம் தவிர்த்த சோழன்’ என்று அழைக்கப்படுகிறார்.)
Question 13 |
சோழ அரசக்கட்டமைப்பில் வேளாண் வகை கிராமங்களில் நிலம் வைத்திருந்தவர்களின் மன்றம் ______ எனப்பட்டது.
ஊரார் | |
நாட்டார் | |
நகரத்தார் | |
சபை |
Question 13 Explanation:
(குறிப்பு: சோழ அரசக் கட்டமைப்பின் அடிப்படை உறுப்புகளாக நாட்டார் செயல்பட்டனர். நாட்டார்களுக்கு மரியாதை செலுத்தும் நோக்கில் ஆசுடையான் (நில உரிமையாளர்), அரையன் (வழி நடத்துவோர்), கிழவன் (தலைவர்) போன்ற பட்டங்கள் அளிக்கப்பட்டன.)
Question 14 |
சோழர்கள் காலத்தில் _____ நிர்வாகத்துக்கெனத் தனியாக ஒரு துறை ‘புறவுவரித்திணைக்களம்’ என்ற பெயரில் இயங்கியது.
குடிநீர் வருவாய் | |
குடிமை வரி | |
நில வருவாய் | |
பாசன வருவாய் |
Question 14 Explanation:
(குறிப்பு: புறவுவரித்திணைக்களத் துறையின் தலைவர் 'புறவுவரித்திணைக்கள நாயகம்' எனப்பட்டார்.)
Question 15 |
கீழ்க்கண்ட எந்த சோழ அரசர்கள் நிலங்களை வகைப்படுத்தி அளவீடு செய்து அதற்கேற்றவாறு வரிகளை விதித்தனர்.
- 1.முதலாம் இராஜராஜன் 2. முதலாம் குலோத்துங்கன்
- 3.முதலாம் இராஜேந்திரன் 4. மூன்றாம் குலோத்துங்கன்
1, 2, 3 சரி | |
2, 3, 4 சரி | |
1, 2, 4 சரி | |
1, 3, 4 சரி |
Question 15 Explanation:
(குறிப்பு: நில அளவீடு பணியில் ஈடுபட்டவர்கள் 'நாடு வகை செய்கிற’ என்று குறிப்பிடப்பட்டார்கள். இவர் நில உடமைச் சமூகத்தை சேர்ந்தவர்.)
Question 16 |
சோழர்கள் கால நில வருவாய் முறையில், நிலத்தைக் குத்தகைக்கு பெற்று வேளாண்மை செய்தவர்கள் அரசுக்கும் நில உடமையாளர்களுக்கும் செலுத்திய வரி _____ எனப்படும்.
காணிகடன் | |
இறை | |
இறைகட்டின காணிகடன் | |
குடிமை வரி |
Question 17 |
சோழர்கள் காலத்தில் வரியாக வசூலிக்கப்பட்ட நெல் ______ என்ற அலகின் அடிப்படையில் வசூலிக்கப்பட்டது.
காணி | |
படி | |
இறை | |
களம் |
Question 18 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு
வடி என்பது நீர் வடக்குத் தெற்காக ஓடுவதாகும். | |
வாய்க்கால் என்றால் கிழக்கு மேற்காக ஓடுவதாகும் | |
வடி என்பது நீரை கொண்டு வருவதையும், வாய்க்கால் என்பது நீரை வெளியேற்றுவதையும் குறிக்கும் | |
இராஜேந்திர சோழன் எழுப்பிய ஜலமய ஜெயஸ்தம்பத்தை கண்டு அல்பெருனி வியந்தார். |
Question 19 |
சோழர் காலத்தில், கிராம சபைகள் பாசனக் குளங்களைப் பழுது பார்க்க _______ என்ற வரி வசூலிக்கப்பட்டது.
அமஞ்சி | |
வெட்டி | |
ஏரி ஆயம் | |
களம் |
Question 19 Explanation:
( குறிப்பு: சில சமயங்களில் அரையன் போன்ற உள்ளூர் தலைவர்கள் புயலில் சேதமடைந்த குளங்களை பழுது பார்த்துப் புதுப்பித்தனர்.)
Question 20 |
தவறான கூற்றை தேர்ந்தெடு
சோழ அரசர்கள் தீவிர சைவர்கள் ஆவர் | |
முதலாம் பராந்தகனும் உத்தமச் சோழனும் சைவ சமயத்தை வளர்க்க நிதியுதவியும் நிலக் கொடையும் அளித்தனர். | |
முதலாம் இராஜேந்திரனுக்கு சிவபாதசேகரன் என்ற பட்டமும் உண்டு. | |
சோழர் சமூகத்தில் எண்ணெய் ஆட்டுபவர்கள் சங்கர பாடியார் என அழைக்கப்பட்டனர். |
Question 20 Explanation:
(குறிப்பு: முதலாம் இராஜராஜனுக்கு சிவபாதசேகரன் என்ற பட்டமும் உண்டு. சிவனுடைய பாதங்களை இறுகப் பற்றியவன் என்பது இதற்குப் பொருள்.)
Question 21 |
சைவ சித்தாந்தத்தின் அடிப்படை நூலான சிவஞானபோதம் ______ என்பவரால் இயற்றப்பட்டது.
மெய்க்கண்டர் | |
பரணர் | |
பாரவி | |
இராஜராஜன் |
Question 22 |
யாருடைய வட இந்திய வெற்றியின் நினைவாகத் தஞ்சாவூர் பெரிய கோயில் போன்றே கங்கை கொண்ட சோழபுரத்தில் கோயில் கட்டப்பட்டது?
விஜயாலயன் | |
முதலாம் இராஜராஜன் | |
குலோத்துங்கன் | |
முதலாம் இராஜேந்திரன் |
Question 22 Explanation:
(குறிப்பு: இராஜேந்திரன் சோழ கங்கம் என்ற புதிய பாசன ஏரியையும் தலைநகர் அருகே உருவாக்கினார். இது ஜலதம்பம் (நீர்த் தூண்) என அழைக்கப்படுகிறது.)
Question 23 |
சோழர் கால வளஞ்சியர் குழுவெட்டிய ஐநூற்றுவப்பேரேரி என்ற பாசன ஏரி எங்கு அமைந்துள்ளது.
சிவகங்கை | |
புதுக்கோட்டை | |
மதுரை | |
காஞ்சிபுரம் |
Question 23 Explanation:
குறிப்பு: சோழர் காலத்தில் அஞ்சு வண்ணத்தார், மணிக்கிராமத்தார் ஆகிய இரு வணிகக் குழுக்கள் இருந்தன.)
Question 24 |
தென் ஆற்காடு பகுதியில் உள்ள எண்ணாயிரத்தில் வேதக் கல்லூரி ஒன்றை நிறுவியவர் யார்?
ராஜாதிராஜன் | |
மூன்றாம் குலோத்துங்கன் | |
முதலாம் இராஜேந்திரன் | |
இராஜராஜன் |
Question 24 Explanation:
குறிப்பு: இக்கல்லூரியில் 340 மாணவர்கள் பயின்றவர்கள். 14 ஆசிரியர்கள் பணியாற்றினர்.வேதம், இலக்கணம் வேதாந்தம் ஆகியவை இங்கு கற்பிக்கப்பட்டன.)
Question 25 |
முதலாம் இராஜேந்திரனை தொடர்ந்து பின் வந்த அரசர்கள் _____ல் புதுச்சேரிக்கு அருகிலுள்ள திருபுவனியிலும், _____ல் செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள திருமுக்கூடலிலும் சமஸ்கிருத கல்லூரிய அமைத்தனர்.
1038, 1051 | |
1048, 1061 | |
1038, 1061 | |
1048, 1051 |
Question 25 Explanation:
(குறிப்பு: இந்த சமஸ்கிருதக் கல்வி மையங்களில் வேதங்கள், சமஸ்கிருத இலக்கணம், சமயம், தத்துவங்கள் ஆகியவை கற்றுத் தரப்பட்டன.)
Question 26 |
எந்த ஆண்டு பாண்டிய மன்னன் முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் சோழர் தலைநகரான கங்கைகொண்ட சோழபுத்தைக் கைப்பற்றினார்
1234 | |
1243 | |
1246 | |
1264 |
Question 27 |
ராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகிய சோழ அரசர்களின் ஆட்சிக் காலத்தில் வலிமை படைத்த குறுநில மன்னர்களாக விளங்கிய சம்புவராயர்களின் அரசு______ எனப்பட்டது.
சுயராஜ்யம் | |
இராஜ கம்பீர ராஜ்யம் | |
இராஜ ராஜ்யம் | |
குறுநில ராஜ்யம் |
Question 28 |
______ ஆண்டு முதலாம் மாறவர்மன் குலசேகரப்பாண்டியன் கடைசி சோழ அரசரான மூன்றாம் இராஜேந்திர சோழனைத் தோற்கடித்தார்.
1264 | |
1284 | |
1276 | |
1279 |
Question 29 |
பாண்டிய நாட்டைச் சேர்ந்த _______ என்ற கிராமத்தில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் கூடல் என்ற சொல் குறிப்பிடப்பெற்றுள்ளது.
கொற்கை | |
புலிமான் கோம்பை | |
வேள்விக்குடி | |
கீழடி |
Question 29 Explanation:
(குறிப்பு: பத்துப்பாட்டு நூலான நூல்களான பட்டினப்பாலையிலும், மதுரைக் காஞ்சியிலும் கூடல் பாண்டியர் தலைநகரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.)
Question 30 |
களப்பிரரிடமிருந்து பாண்டியர் பகுதியை ______ மீட்டதாகச் செப்பேடுகள் கூறுகின்றன.
அரிகேசரி | |
சேந்தன் | |
கடுங்கோன் | |
மாறவர்மன் |
Question 30 Explanation:
(குறிப்பு: கடுங்கோனைத் தொடர்ந்து இரு அரசர்கள் அடுத்தடுத்து ஆட்சி செய்தனர். அவர்களில் சேந்தன் என்பவர் போர் முறையில் சிறந்தவராக இருந்தார். இவர் சேரரை வென்றதால் வானவன் என்ற பட்டம் பெற்றார்.)
Question 31 |
______ என்ற சைவத் துறவி அரிகேசரியை சமண மதத்திலிருந்து சைவ மதத்துக்கு மாற்றினார்.
திருநாவுக்கரசர் | |
திருஞானசம்பந்தர் | |
சுந்தரர் | |
மாணிக்கவாசகர் |
Question 31 Explanation:
(குறிப்பு: சமணர்களை கழுவேற்றிய கூன்பாண்டியனே அரிகேசரி என்று அடையாளம் காணப்படுகிறார்.)
Question 32 |
கீழ்க்காண்பவர்களுள் முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன் ஆகியோருக்கு சமகாலத்தவர் யார்?
விஜயாலயன் | |
அரிகேசரி | |
சேந்தன் | |
கடுங்கோன் |
Question 32 Explanation:
(குறிப்பு: அரிகசேரி தமது காலத்தைச் சேர்ந்த சேர, சோழ, பல்லவ சிங்கள அரசர்களை வெற்றி கொண்டதாக கல்வெட்டு குறிப்புகளும் செப்பேடுகளும் கூறுகின்றன.)
Question 33 |
சரியான காலவரிசைப்படி எழுதுக.
கோச்சடையான் ரணதீரன், மாறவர்மன் ராஜசிம்ஹன், முதலாம் வரகுணன், ஸ்ரீமாற ஸ்ரீவல்லபர் | |
மாறவர்மன் ராஜசிம்ஹன், ஸ்ரீமாற ஸ்ரீவல்லபர், முதலாம் வரகுணன், கோச்சடையான் ரணதீரன். | |
கோச்சடையான் ரணதீரன், ஸ்ரீமாற ஸ்ரீவல்லபர், மாறவர்மன் ராஜசிம்ஹன், முதலாம் வரகுணன் | |
முதலாம் வரகுணன், கோச்சடையான் ரணதீரன், ஸ்ரீமாற ஸ்ரீவல்லபர், மாறவர்மன் ராஜசிம்ஹன். |
Question 34 |
முதலாம் வரகுணன் குறித்த கூற்றுகளில் தவறானது எது?
புகழ்பெற்ற வேள்விக்குடி நிலக் கொடை அளித்தவர். | |
பல்லவர்களையும் சேரர்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டார். | |
பாண்டிய அரசைத் தஞ்சாவூர், திருச்சி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளுக்கு விரிவுபடுத்தினார். | |
திருப்புறம்பியம் போரில் அபராஜித பல்லவனால் தோற்கடிக்கப்பட்டார். |
Question 34 Explanation:
(குறிப்பு: இரண்டாம் வரகுணன் திருப்புறம்பியம் போரில் அபராஜித பல்லவனால் தோற்கடிக்கப்பட்டார்.)
Question 35 |
வெனீஸைச் சேர்ந்த புகழ் பெற்ற பயணி மார்க்கோபோலோ எந்தெந்த ஆண்டுகளில் காயலுக்கு வருகை புரிந்தார்?
1278, 1283 | |
1288, 1293 | |
1287, 1294 | |
1279, 1295 |
Question 35 Explanation:
(குறிப்பு: காயல் துறைமுகம் முழுவதும் அரேபிய, சீன கப்பல்களால் நிறைந்திருந்ததாகவும் காயல் நகரில் வணிக நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெறுவதாகவும் மார்க்கோபோலோ கூறுகிறார்.)
Question 36 |
இரண்டாம் பாண்டிய அரசின் சிறப்புமிக்க ஆட்சியாளர் என கருதப்படுபவர் யார்?
மாறவர்மன் குலசேகரன் | |
வீரபாண்டியன் | |
விக்கிரம பாண்டியன் | |
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் |
Question 36 Explanation:
குறிப்பு: இவர் தமிழ்நாடு முழுவதையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததுடன், ஆந்திராவில் உள்ள நெல்லூர் வரை தனது அரசியல் அதிகாரத்தை செலுத்தினார்.)
Question 37 |
காயல் துறைமுக நரில், அரபுத் தலைவன் _______ என்பவரால் குதிரைகளை இறக்குமதி செய்யும் முகவர் நிறுவனம் தொடங்கப்பட்டது.
வாசாஃப் | |
மாலிக்கு ஆம்பர் | |
மாலிக்கு இஸ்லாம் ஜமாலுதீன் | |
முகமது மாலிக் |
Question 38 |
_________ கடல் வழிப்படையெடுப்புகள் ஸ்ரீவிஜயா அரசு வரை விரிவடைந்திருந்தன.
மூன்றாம் குலோத்துங்கன் | |
முதலாம் இராஜேந்திரன் | |
முதலாம் இராஜராஜன் | |
பராந்தகன் |
Question 38 Explanation:
குறிப்பு: தென் கிழக்கு ஆசியாவில் 700க்கும் 1300க்கும் இடையே செழித்து வளர்ந்த நாடுகளுள் ஸ்ரீவிஜயாவும் ஒன்று. இதுவலிமையான கடற்படை கொண்டதாகவும் வணிகத்தில் சிறந்ததாகவும் இருந்தது)
Question 39 |
______படுகையில் இருந்த சோழ அரசின் மையப்பகுதி சோழ மண்டலம் எனப்படுகிறது.
வைகை | |
காவிரி | |
கிருஷ்ணா | |
கோதாவரி |
Question 40 |
_______ ஒரு கலத்துக்கு சமம் ஆகும்.
28 கி.கி | |
27 கி.கி | |
32 கி.கி | |
72 கி.கி |
Question 41 |
பொருத்துக.
- படை முகாம் i) படைவீடு
- புறக்காவல் படைகள் ii) தண்டநாயகம்
- தலைவர் iii) நிலைப்படை
- படைத் தளபதி iv) படை முதலி
i iii iv ii | |
iv ii i iii | |
ii i iii iv | |
ii iii i iv |
Question 42 |
_____ பாண்டியர்களின் முதல் தலைநகரமாகும்.
மதுரை | |
காயல்பட்டினம் | |
கொற்கை | |
புகார் |
Question 42 Explanation:
(குறிப்பு: முத்துக்குளித்தல் தொழிலோடு வரலாற்றுப் பூர்வமாக இணைந்த கொற்கை பாண்டியரின் தொடக்க கால தலைநகரமாகவும் துறைமுகமாகவும் இருந்தது. பிற்காலத்தில் அவர்கள் மதுரைக்கு இடம் பெயர்ந்தனர்)
Question 43 |
வறட்சிப் பகுதியான இராமநாதபுரத்தில் பாண்டிய அரசர்கள் _______ஐக் கட்டினார்கள்.
அகழிகள் | |
மதகுகள் | |
அணைகள் | |
ஏரிகள் |
Question 43 Explanation:
(குறிப்பு: இத்தகைய பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள், உள்ளூர் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோர் மேற்பார்வையில் பாசன வேலைகள் மேற்கொள்ளப்பட்டன.)
Question 44 |
தொடக்க காலப் பல்லவ அரசர்கள் ______ன் கீழ் சிற்றரசர்களாக இருந்தனர்.
சாளுக்கியர்கள் | |
டெல்லி சுல்தான்கள் | |
மராத்தியர்கள் | |
சாதவாகனர்கள் |
Question 44 Explanation:
குறிப்பு: பல்லவ அரசர்கள் தென்கிழக்கு கடற்கரைப் பகுதியில் முக்கிய வணிக மையமாகத் திகழ்ந்த காஞ்சிபுரத்தையும், அதன் வளம் நிறைந்த வேளாண் பகுதிகளையும் ஆண்டனர்.)
Question 45 |
பொ.ஆ.800 ஐச் சேர்ந்த மானூர் கல்வெட்டு _______ நிர்வாகம் குறித்த செய்திகளைத் தருகின்றது.
மத்திய அரசு | |
கிராமம் | |
படை | |
மாகாணம் |
Question 46 |
பல்லவ அரசர்களின் பெயர்களை காலவரிசைப்படி எழுதுக.
சிம்ம விஷ்ணு, இரண்டாம் சிம்மவர்மன், முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன் | |
இரண்டாம் சிம்மவர்மன், சிம்ம விஷ்ணு, முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன் | |
இரண்டாம் சிம்மவர்மன், சிம்ம விஷ்ணு, முதலாம் நரசிம்மவர்மன், முதலாம் மகேந்திரவர்மன் | |
சிம்ம விஷ்ணு, இரண்டாம் சிம்மவர்மன், முதலாம் நரசிம்மவர்மன், முதலாம் மகேந்திரவர்மன் |
Question 47 |
______ ஆண்டு யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள் அட்டவணையில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்டது
1982 | |
1983 | |
1984 | |
1985 |
Question 47 Explanation:
(குறிப்பு: மாமல்லபுரத்திலுள்ள ஒற்றைக் கருங்கல்லில் செதுக்கி உருவாக்கப்பட்ட கடற்கரைக் கோவிலும், ஏனைய கோவில்களும், வராகர்குகையும் பல்லவக் கட்டிடக்கலையின் ஈடு இணையற்ற அழகிற்கு எடுத்துக்காட்டுகள்.)
Question 48 |
______ன் படைத் தளபதி பரஞ்சோதி, சிறுத்தொண்டர் என பிரபலமாக அறியப்பட்டார்.
இரண்டாம் சிம்மவர்மன் | |
சிம்ம விஷ்ணு | |
முதலாம் நரசிம்மவர்மன் | |
முதலாம் மகேந்திரவர்மன் |
Question 49 |
________ என்பவர் மகேந்திரவர்மனை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு தழுவச் செய்தார்.
திருநாவுக்கரசர் | |
திருஞானசம்பந்தர் | |
சுந்தரர் | |
மாணிக்கவாசகர் |
Question 49 Explanation:
குறிப்பு: மகேந்திரவர்மன் கலை கட்டிடக் கலைக்கு பேராதரவு அளித்தார். திராவிடக் கட்டடக் கலைக்கு ஒரு புதிய பாணியை அறிமுகம் செய்தார். அது மகேந்திரபாணி எனக் குறிப்பிடப்படுகின்றது.)
Question 50 |
_______ என்ற பல்லவ மன்னன் ராஜசிம்மன் என்று அழைக்கப்பட்டார்
இரண்டாம் நரசிம்மவர்மன் | |
சிம்ம விஷ்ணு | |
முதலாம் நரசிம்மவர்மன் | |
முதலாம் மகேந்திரவர்மன் |
Question 50 Explanation:
குறிப்பு: இரண்டாம் நரசிம்மவர்மன் சீன அரசுக்கு தூதுக் குழுக்களை அனுப்பினார். சீன நாட்டின் தூதுக் குழுக்களை வரவேற்றார். காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலை கட்டியவர் இவரே.)
Question 51 |
அரசர்களின் பெயர்கள் மற்றும் பட்டங்களில் தவறான இணையைத் தேர்ந்தெடு.
சிம்ம விஷ்ணு - அவனிசிம்மர் | |
முதலாம் மகேந்திரவர்மன் – குணபாரன் | |
முதலாம் நரசிம்மவர்மன் – வாதாபிகொண்டான் | |
இரண்டாம் நரசிம்மவர்மன் - விசித்திர சித்தன் |
Question 52 |
பல்லவர் கட்டிடக்கலையின் வகைகளில் தவறான இணையைத் தேர்ந்தெடு.
-
- பாறைக் குடைவரைக் கோவில்கள் - மகேந்திரவர்மன் பாணி
- ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும் - ராஜசிம்மன் பாணி
- கட்டுமானக் கோவில்கள் - நந்திவர்மன் பாணி
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 53 |
ராஜசிம்மேஸ்வரம் கோவில் ______ கலைபாணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
பாறை குடைவரைக் கோயில் | |
ஒற்றைக் கல் ரதங்களும் சிற்ப மண்டபம் | |
கட்டுமானக் கோவில் | |
கடற்கரைக் கோவில் |
Question 53 Explanation:
(குறிப்பு: கைலாசநாதர் கோவில் ராஜசிம்மேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவில் மிருதுவான மணற் கற்களால் கட்டப்பட்டவையாகும்.)
Question 54 |
காஞ்சி புரத்திலுள்ள வைகுண்டப் பெருமாள் கோவில் _____ கட்டடக்கலை பணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்
மகேந்திரவர்மன் பாணி | |
மாமல்லன் பாணி | |
ராஜசிம்மன் பாணி | |
நந்திவர்மன் பாணி |
Question 55 |
தவறான இணையைத் தேர்ந்தெடு.
நியாயபாஷ்யா – வாத்ஸ்யாயர் | |
தசகுமார சரிதம் – பாரவி | |
கிராதார்ஜூனியம் – பாரவி | |
பாரதவெண்பா – பெருந்தேவனார் |
Question 55 Explanation:
(குறிப்பு: தண்டின் - முதலாம் நரசிம்மவர்மன், பாரவி - சிம்ம விஷ்ணு, பெருந்தேவனார்- இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் வாழ்ந்தவர்கள்.)
Question 56 |
புகழ் பெற்ற இசைக் கலைஞரான ருத்ராச்சாரியர் யாருடைய காலத்தில் வாழ்ந்தவர்?
இரண்டாம் நரசிம்மவர்மன் | |
சிம்ம விஷ்ணு | |
முதலாம் நரசிம்மவர்மன் | |
முதலாம் மகேந்திரவர்மன் |
Question 56 Explanation:
குறிப்பு: குடுமியான்மலை, திருமயம் ஆகிய இடங்களிலுள்ள கோவில்களில் காணப்படும் இசை குறித்த கல்வெட்டுக்கள் இசையில் பல்லவர் கொண்டிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றன.)
Question 57 |
அய்கோல் கல்வெட்டு சாளுக்கிய அரசன் ______ என்பவரது அவைக்களப் புலவரான ரவி கீர்த்தி என்பவரால் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது
முதலாம் புலகேசி | |
இரண்டாம் புலிகேசி | |
முதலாம் விக்கிரமாதித்தன் | |
இரண்டாம் கீர்த்திவர்மன் |
Question 58 |
பாரசீக அரசர் இரண்டாம் குஸ்ரூ _____ன் அவைக்கு தூதுக்குழு ஒன்றை அனுப்பி வைத்தார்.
முதலாம் புலகேசி | |
இரண்டாம் புலிகேசி | |
முதலாம் விக்கிரமாதித்தன் | |
இரண்டாம் கீர்த்திவர்மன் |
Question 58 Explanation:
குறிப்பு: இரண்டாம் புலிகேசி (கி.பி. 610 - 642) சாளுக்கிய வம்சத்தின் மிகவும் வலிமை பெற்ற அரசராவார்.)
Question 59 |
_______ என்ற சாளுக்கிய மன்னனை ராஷ்டிரகூட வம்ச அரசை நிறுவிய தந்தி துர்க்கா போரில் தோற்கடித்தார்.
முதலாம் புலகேசி | |
இரண்டாம் புலிகேசி | |
முதலாம் விக்கிரமாதித்தன் | |
இரண்டாம் கீர்த்திவர்மன் |
Question 60 |
_______ என்ற மேலை சாளுக்கியர் தலைநகரை மன்யகேட்டாவிலிருந்து கல்யாணிக்கு மாற்றினார்.
ஆறாம் விக்ரமாதித்யன் | |
இரண்டாம் தைலப்பர் | |
முதலாம் சோமேஸ்வரர் | |
இரண்டாம் புலிகேசி |
Question 60 Explanation:
குறிப்பு: இரண்டாம் தைலப்பர் கி.பி 973ல் மாளவ அரசர் பரம்பரையைத் தோற்கடித்து கல்யாணியைக் கைப்பற்றினார்)
Question 61 |
வாதாபியிலுள்ள விஷ்ணு கோவில் சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த ______ ஆல் கட்டப்பட்டது.
மங்களேசன் | |
இரண்டாம் தைலப்பர் | |
முதலாம் சோமேஸ்வரர் | |
இரண்டாம் புலிகேசி |
Question 61 Explanation:
(குறிப்பு: இரண்டாம் விக்கிரமாதித்தனுடைய அய்கோல் கல்வெட்டு இங்குள்ளது.)
Question 62 |
_____ என்ற ராஷ்டிரகூட அரசர் ஜினசேனா எனும் சமணத் துறவியால் சமண மதத்திற்கு மாற்றப்பட்டார்
முதலாம் கிருஷ்ணர் | |
இரண்டாம் கிருஷ்ணர் | |
அமோகவர்ஷர் | |
மூன்றாம் கோவிந்தன் |
Question 62 Explanation:
(குறிப்பு: ராஷ்டிரகூட அரசர்களில் தலைசிறந்த அரசர் அமோக வர்ஷர், அவர் மான்யக்கோட்டாவில் புதிய தலைநகரை உருவாக்கினார்.)
Question 63 |
கி.பி. 916 ல் பராந்தகச் சோழனால் வல்லம் போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்ட ராஷ்டிரக்கூட அரசர்
முதலாம் கிருஷ்ணர் | |
இரண்டாம் கிருஷ்ணர் | |
அமோகவர்ஷர் | |
மூன்றாம் கோவிந்தன் |
Question 63 Explanation:
(குறிப்பு: அமோகவர்ஷரின் மகன் இரண்டாம் கிருஷ்ணர் ஆவார்)
Question 64 |
இராமேஸ்வரத்தில் கிருஷ்ணேஸ்வரா கோவிலை கட்டிய ராஷ்டிரக் கூட அரசர்
முதலாம் கிருஷ்ணர் | |
இரண்டாம் கிருஷ்ணர் | |
அமோகவர்ஷர் | |
மூன்றாம் கிருஷ்ணர் |
Question 64 Explanation:
குறிப்பு: மூன்றாம் கிருஷ்ணர் ராஷ்டிரகூட வம்சத்தின் திறமை வாய்ந்த கடைசி அரசனாவார். இவர் சோழர்களை தக்கோலம் போரில் தோற்கடித்துத் தஞ்சாவூரைக் கைப்பற்றினார்.)
Question 65 |
_______ ஆல் இயற்ற்ப்பட்ட கவிராஜ மார்க்கம் கன்னட மொழியின் முதல் கவிதை நூலாகும்.
முதலாம் கிருஷ்ணர் | |
இரண்டாம் கிருஷ்ணர் | |
அமோகவர்ஷர் | |
மூன்றாம் கோவிந்தன் |
Question 66 |
முதல் சமண தீர்த்தங்கரரான ரிஷபதேவரின் வாழ்க்கையை சித்திரிக்கும் ஆதிபுராணத்தை இயற்றியவர் யார்?
ஸ்ரீ பொன்னா | |
ஆதிகவி பம்பா | |
ரன்னா | |
அமோகவர்ஷர் |
Question 66 Explanation:
குறிப்பு: ஆதிகவி பம்பா கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்களில் ஒருவர் எனக் கருதப்படுகிறார். ஆதிகவி பம்பா, ஆதி புராணம், விக்கிரமார்ஜூன விஜயம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்)
Question 67 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயில் மூன்றாம் கிருஷ்ணருடை ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. | |
இக்கோவில் 60,000 சதுர அடிகள் பரப்பளவைக் கொண்டுள்ளது. | |
இதனுடைய விமானத்தின் உயரம் 90 அடிகளாகும் | |
இக்கோவில் மாமல்லபுர கடற்கரைக் கோவிலின் சாயலைப் பெற்றுள்ளது |
Question 67 Explanation:
குறிப்பு: கைலாசநாதர் கோவில் திராவிடக் கட்டடக் கலைக்கூறுகளைக் கொண்டுள்ளது.)
Question 68 |
கோவில் விமானங்களைக் கட்டுவதில் புதிய கட்டடக்கலை பாணியான வெசாரா யாரால் வளர்க்கப்பட்டது?
சோழர்கள் | |
பல்லவர்கள் | |
சாளுக்கியர்கள் | |
ராஷ்டிரகூடர்கள் |
Question 68 Explanation:
குறிப்பு: வெசாரா என்பது தென் இந்திய (திராவிட) மற்றும் வட இந்திய (நாகாரா) கட்டடப் பாணிகளின் கலப்பு ஆகும்.)
Question 69 |
பல்லவ அரசினைப் பற்றிய கூற்றுகளைச் சிந்திக்கவும்.
- கூற்று 1: இவர்களுடைய ஆட்சியில் அப்பரால் இயற்றப்பட்ட தேவாரம் முதல் மற்ற தமிழ் இலக்கியங்களும் செழித்தோங்கின.
- கூற்று 2: முதலாம் மகேந்திரவர்மன் மத்த விலாச பிரகசனம் எனும் நூலின் ஆசிரியர் ஆவார்.
கூற்று 1 மட்டும் சரி | |
கூற்று 2 மட்டும் சரி | |
இரு கூற்றுகளும் சரி | |
இரு கூற்றுகளும் தவறு |
Question 70 |
கீழ்க்காண்பனவற்றில் எது சரியான இணையில்லை
எல்லோரா குகைகள் - ராஷ்டிரகூடர்கள் | |
மாமல்லபுரம் - முதலாம் நரசிம்மவர்மன் | |
எலிபெண்டா குகைகள் -அசோகர் | |
பட்டக்கல் – சாளுக்கியர்கள் |
Question 71 |
தவறான இணையைக் கண்டறியவும்
தந்தின் - தசகுமார சரிதம் | |
வாத்ஸ்யாயர் - பாரத வெண்பா | |
பாரவி – கிரதார்ஜுனியம் | |
அமோகவர்ஷர் -கவிராஜமார்க்கம் |
Question 72 |
பொருத்துக.
- 1) பல்லவர் i) கல்யாணி
- 2) கீழை சாளுக்கியர் ii) மான்ய கேட்டா
- 3) மேலைச் சாளுக்கியர் iii) காஞ்சி
- 4) ராஷ்டிரகூடர் iv) வெங்கி
i iii ii iv | |
ii iii i iv | |
ii iv i iii | |
iii iv i ii |
Question 73 |
'தெள்ளாறு தந்த நந்திவர்மன்’ என நந்திக் கலம்பகம் யாரை கூறிப்பிடுகிறது.
முதலாம் நந்திவர்மன் | |
இரண்டாம் நந்திவர்மன் | |
மூன்றாம் நந்திவர்மன் | |
நான்காம் நந்திவர்மன் |
Question 73 Explanation:
குறிப்பு: மூன்றாம் நந்திவர்மன் தெள்ளாறு என்னுமிடத்தில் நடைபெற்ற பெரும் போரில் பாண்டிய மன்னன் ஸ்ரீ வல்லபனை வென்றார்)
Question 74 |
பல்லவர் நிர்வாகத்தின் சரியான வரிசையை தேர்ந்தெடு
பல்லவ நாடு, ராஷ்டிரம், விஷயங்கள், நாடு, ஊர் | |
பல்லவ நாடு, விஷயங்கள், ராஷ்டிரம், நாடு, ஊர் | |
பல்லவ நாடு, விஷயங்கள், நாடு, ராஷ்டிரம், ஊர் | |
பல்லவ நாடு, நாடு, விஷயங்கள், ராஷ்டிரம், ஊர் |
Question 75 |
______ பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து, அதன் தலைநகரான மதுரையை வென்றதால் 'மதுரை கொண்டான்’ என புகழப்பட்டார்
விஜயாலய சோழன் | |
முதலாம் ஆதித்த சோழன் | |
முதலாம் பராந்தகன் | |
மூன்றாம் கிருஷ்ணன் |
Question 75 Explanation:
குறிப்பு: முதலாம் பராந்தகன் தக்கோலம் போரில் இராட்டிரகூட மன்னர் மூன்றாம் கிருஷ்ணரிடம் தோற்று கி.பி. 955ல் இறந்தார்.)
Question 76 |
இராஜராஜன் காலத்தில் வரிவிதிப்புக்கான கணக்கெடுப்புப் பணி_______ என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.
ஊரார் | |
நாட்டார் | |
நகரத்தார் | |
சேனாபதி குரவன் |
Question 77 |
______ காலத்தை சார்ந்த உத்திரமேரூர் கல்வெட்டு கிராம நிர்வாகத்தைப் பற்றி விரிவாக விளக்குகிறது.
முதலாம் இராஜராஜன் | |
முதலாம் நரசிம்மவர்மன் | |
முதலாம் பராந்தக சோழன் | |
முதலாம் இராஜேந்திரன் |
Question 78 |
முதலாம் இராசேந்திரனின் வழித்தோன்றல்களை காலவரிசைப்படி எழுதுக.
இரண்டாம் இராசேந்திரன், முதலாம் இராசாதிராசன், இராச மகேந்திரன், வீர இராசேந்திரன் | |
முதலாம் இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன், வீர இராசேந்திரன், இராச மகேந்திரன் | |
முதலாம் இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன், இராசமகேந்திரன், வீர இராசேந்திரன் | |
முதலாம் இராசாதிராசன், வீர இராசேந்திரன், இராசமேகந்திரன், இரண்டாம் இராசேந்திரன் |
Question 79 |
கீழ்க்கண்டவர்களுள் ‘சோணாடு வழங்கியருளிய சுந்தரப் பாண்டியன்' என அழைக்கப்படும் பாண்டிய மன்னன் யார்?
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் | |
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் | |
முதலாம் சடையவர்மன் சுந்தரப் பாண்டியன் | |
முதலாம் மாறவர்மன் குலசேகரன் |
Question 79 Explanation:
(குறிப்பு: கி.பி.1219 ல் மூன்றாம் குலோத்துங்க சோழனை வென்றார். எனினும் ஹொய்சாளர்கள் சோழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால் தான் வென்ற சோழ நாட்டை குலோத்துங்கனிடமே கொடுத்தார்.)
Question 80 |
‘ எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரப் பாண்டியன், மகாராஜாதிராஜா, ஸ்ரீ பரமேஸ்வரன், பொன்வேய்ந்த பெருமாள் ‘ என்றெல்லாம் புகழப்படுபவர் யார்?
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் | |
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் | |
முதலாம் சடையவர்மன் சுந்தரப் பாண்டியன் | |
முதலாம் மாறவர்மன் குலசேகரன் |
Question 80 Explanation:
குறிப்பு: இவரது காலத்தில் பாண்டியப் பேரரசு வடக்கே நெல்லூர், கடப்பா முதற்கொண்டு தெற்கே கன்னியாகுமரி வரையில் விரிவு பெற்றது.)
Question 81 |
தவறான இணையைத் தேர்ந்தெடு.
நம்மாழ்வார் – திருப்பல்லாண்டு | |
அதிவீரராம பாண்டியன் – நைடதம் | |
இரத்தினகிரி உலா – மகேந்திரவர்மன் | |
மகாபாரதம் – வில்லிபுத்தூரார் |
Question 81 Explanation:
(குறிப்பு: இரத்தினகிரி உலா, சேயூர் முருகன் உலா – ஸ்ரீ கவிராயர்)
Question 82 |
தமிழ்நாட்டில் சங்க காலம் முடிந்த பிறகு, களப்பிரர்ளின் ஆட்சி _______ ஆண்டுகள் நீடித்தது.
150 | |
200 | |
250 | |
300 |
Question 82 Explanation:
குறிப்பு: களப்பிரர்களை தொடர்ந்து காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தில் பல்லவர்கள் தங்கள் அரசை நிறுவினர்.)
Question 83 |
_______ முதல் _____ வரையிலான முற்காலபல்லவர்கள் பிராகிருத மொழியில் பட்டயங்களை வெளியிட்டனர்.
கி.பி 200-300 | |
கி.பி. 250 – 350 | |
கி.பி 300 – 350 | |
கி.பி 350 – 450 |
Question 83 Explanation:
( குறிப்பு: சிவஸ்கந்தவர்மன், விஜயஸ்கந்தவர்மன் ஆகியோர் இம்மரபில் குறிப்பிடத்தக்கவர்கள்)
Question 84 |
சோழ அரசன் _____ கடைசி பல்லவ அரசன் அபராஜிதனை முறியடித்து காஞ்சி பகுதியைக் கைப்பற்றினான்.
விஜயாலயன் | |
முதலாம் இராஜேந்திரன் | |
இரண்டாம் இராஜேந்திரன் | |
முதலாம் ஆதித்தன் |
Question 84 Explanation:
(குறிப்பு: பல்லவர்களது ஆட்சி கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை நீடித்தது.)
Question 85 |
களப்பிரர்களை முறியடித்து தொண்டை மண்டலத்தில் பல்லவர் ஆட்சியை நிலையாக ஏற்படுத்தியவர் யார்?
விஷ்ணு கோபன் | |
சிம்ம விஷ்ணு | |
முதலாம் மகேந்திரவர்மன் | |
ராஜசிம்மன் |
Question 85 Explanation:
குறிப்பு: சோழர்களை முறியடித்த அவர் காவிரி நதிக்கரை வரை பல்லவர் ஆட்சியை விரிவுபடுத்தினார்)
Question 86 |
பொருத்துக.
- பெருந்தேவனார் i) நாலாயிர திவ்ய பிரபந்தம்
- ஆழ்வார்கள் ii) தேவாரம்
- நாயன்மார்கள் iii) மத்தவிலாச பிரகாசனம்
- முதலாம் மகேந்திரவர்மன் iv) பாரத வெண்பா
i iii iv ii | |
ii iii i iv | |
iv i ii iii | |
ii iv iii i |
Question 87 |
தென்னிந்தியாவைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஹர்ஷரின் எண்ணத்தை சிதைத்தவர்
முதலாம் புலிகேசி | |
இரண்டாம் புலிகேசி | |
விக்ரமாதித்யன் | |
இரண்டாம் கீர்த்திவர்மன் |
Question 87 Explanation:
குறிப்பு: நர்மதை ஆற்றங்கரையில் ஹர்ஷவர்த்தனரை இரண்டாம் புலிகேசி முறியடித்தார்
Question 88 |
_____ ஆட்சிக் காலத்தில் ஹளயுதா என்பவர் கவிரஹஸ்யம் என்ற நூலைப் படைத்தார்.
முதலாம் கிருஷ்ணர் | |
அமோகவர்ஷர் | |
மூன்றாம் கிருஷ்ணர் | |
தந்தி துர்க்கர் |
Question 89 |
சரியான தொடரைத் தேர்ந்தெடு
எல்லோரா பம்பாய்க்கு அருகிலுள்ள தீவு | |
கைலாசநாதர் கோயில் எல்லோராவில் உள்ளது | |
எல்லோரா கோயில் சாளுக்கிய ஆட்சியில் கட்டப்பட்டது. | |
எல்லோரா கைலாசநாதர் கோயில் இரண்டாம் புலிகேசியால் கட்டப்பட்டது. |
Question 90 |
பொருத்துக
- ரவி கீர்த்தி i) விக்ரம சேன விஜயம்
- முதலாம் அமோக வர்ஷர் ii) கணித சாரம்
- பம்பா iii) ஐஹோலே கல்வெட்டு
- வீராச்சாரியார் iv) கவிராஜ மார்க்கம்
i iii iv ii | |
iii iv i ii | |
iv i ii iii | |
ii iv iii i |
Question 91 |
காந்தளுர் சாலை என்ற இடத்தில் சேர மன்னன் பாஸ்கர ரவிவர்மனுடைய கடற்படைகளை முறியடித்தவர் யார்?
முதலாம் ராஜராஜன் | |
முதலாம் இராஜேந்திரன் | |
விஜயாலய சோழன் | |
முதலாம் குலோத்துங்கன் |
Question 91 Explanation:
(குறுப்பு: முதலாம் ராஜராஜன், அவரது புதல்வன் முதலாம் ராஜேந்திரன் ஆகிய இருவரின் ஆட்சி காலங்களிலும் சோழப் பேரரசு புகழின் உச்சியை எட்டியது.)
Question 92 |
_______ என்ற சோழ அரசன் 72 வணிகர்கள் அடங்கிய தூதுக் குழுவை சீனாவிற்கு அனுப்பி வைத்தார்.
முதலாம் ராஜராஜன் | |
முதலாம் இராஜேந்திரன் | |
விஜயாலய சோழன் | |
முதலாம் குலோத்துங்கன் |
Question 92 Explanation:
குறிப்பு: முதலாம் குலோத்துங்கன் ஸ்ரீவிஜய அரசுடன் நல்லுறவை மேற்கொண்டிருந்தார். காடவராயர்கள் போன்ற குறுநிலத் தலைவர்கள் இவரது காலத்தில் எழுச்சி பெற்றனர்.)
Question 93 |
_____ ஆண்டு தஞ்சையில் பிரகதீஸ்வரம் என்றழைக்கப்படும் தஞ்சை பெரிய கோயிலை ராஜராஜன் கட்டி முடித்தார்.
கி.பி 1001 | |
கி.பி. 1010 | |
கி.பி. 1012 | |
கி.பி. 1020 |
Question 94 |
சோழ கங்கம் என்ற நீர்ப்பாசன ஏரியை கங்கைகொண்ட சோழபுரம் என்ற இடத்தில் வெட்டியவர் யார்?
முதலாம் ராஜராஜன் | |
முதலாம் இராஜேந்திரன் | |
விஜயாலய சோழன் | |
முதலாம் குலோத்துங்கன் |
Question 95 |
பொருத்துக.
- உத்திரமேரூர் கல்வெட்டுகள் i) முதலாம் ராஜராஜன்
- சுங்கம் தவிர்த்த சோழன் ii) முதலாம் ராஜேந்திரன்
- முடி கொண்டான் iii) முதலாம் குலோத்துங்கன்
- ஜெயங்கொண்டான் iv) முதலாம் பராந்தகன்
i iii iv ii | |
iii iv i ii | |
iv iii ii i | |
ii iv iii i |
Question 96 |
பம்பாய்க்கு அருகில் உள்ள ஸ்ரீபுரிக்கு எலிபான்டா என பெயரிட்டவர்கள் யார்?
பாரசீகர்கள் | |
போர்ச்சுகீசியர்கள் | |
ஆங்கிலேயர்கள் | |
டச்சுக்காரர்கள் |
Question 96 Explanation:
குறிப்பு: பெரிய யானையின் சிற்பத்தை ஸ்ரீபுரியில் கண்ட போர்ச்சுகீசியர்கள் அதற்கு எலிபான்டா என்று பெயரிட்டு அழைத்தனர்.)
Question 97 |
கி.பி.350 முதல் 550 வரை ஆட்சி புரிந்த பல்லவர்கள் _______மொழியில் பட்டயங்களை வெளியிட்டனர்.
பிராகிருதம் | |
வடமொழி | |
கன்னடம் | |
தமிழ் |
Question 97 Explanation:
(குறிப்பு: இக்காலக்கட்டத்தில் முக்கிய ஆட்சியாளர் விஷ்ணுகோபன். இவர் சமுத்திரகுப்தரின் தென்னிந்திய படையெடுப்பின் போது முறியடிக்கப்பட்டார்)
Question 98 |
யுவான் சுவாங் காஞ்சிக்கு வருகைப் புரிந்த போது ஆட்சியிலிருந்த அரசன்
முதலாம் மகேந்திரவர்மன் | |
முதலாம் நரசிம்மவர்மன் | |
ராஜசிம்மன் | |
இரண்டாம் நந்திவர்மன் |
Question 98 Explanation:
(குறிப்பு: காஞ்சி பற்றிய அவரது வருணனை குறிப்பிடத்தக்கது. மிகப் பெரிய, அழகிய நகரான அது ஆறு மைல்கள் சுற்றளவு கொண்டது எனக் கூறியுள்ளார்)
Question 99 |
சங்கரபக்தன், வாத்யவித்யாதரன், ஆகமப் பிரியன் போன்ற விருதுகளை சூட்டிக் கொண்டவர் யார்?
இரண்டாம் பரமேஸ்வரவர்மன் | |
இரண்டாம் நந்திவர்மன் | |
முதலாம் ஆதித்தன் | |
இரண்டாம் நரசிம்மவர்மன் |
Question 100 |
- கூற்று 1: பாறைகுடைவரை கோவிலைச் செதுக்கும் முறையிலிருந்து, கற்களைக் கொண்டு கட்டுமானக் கோயில்களைக் கட்டும் மாற்றம் ஏற்பட்டதை பல்லவர் கலை உணர்த்துகிறது.
- கூற்று 2: காஞ்சியிலுள்ள கைலாசநாதர் கோவில் பல்லவர்களின் கலை மற்றும் கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
கூற்று 1 தவறு | |
கூற்று 2 தவறு | |
இரு கூற்றுகளும் சரி | |
இரு கூற்றுகளும் தவறு |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.