Online Test

தென் இந்திய வரலாறு – Revision Test in Tamil

தென் இந்திய வரலாறு - Revision Test in Tamil

Congratulations - you have completed தென் இந்திய வரலாறு - Revision Test in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
சோழர்கள் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A
சோழர்கள் குறித்த பிற்காலக் கல்வெட்டுகள் சமூக வேறுபாடுகள் பற்றி எதையும் குறிப்பிடவில்லை.
B
சோழர்கள் காலத்தில் சைவ, வைணவ நூல்கள் தொகுத்து முறைப்படுத்தப்பட்டன.
C
நன்னூல், நேமிநாதம், வீரசோழியம் ஆகியவை இக்காலத்தில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க இலக்கண நூல்கள் ஆகும்
D
கம்ப இராமாயணம், கலிங்கத்துப்பரணி, குலோத்துங்கச் சோழன் பிள்ளைத்தமிழ், மூவருலா ஆகியவை சோழர்கள் காலத்தில் இயற்றப்பட்டன.
Question 1 Explanation: 
(குறிப்பு: பிற்காலக் கல்வெட்டுகள் சமூக வேறுபாடுகள் குறித்துக் குறிப்பிடுகின்றன. அவை சமூகத்தில் சாதிகள், துணைச்சாதிகள் இருந்ததை காட்டுகின்றன.)
Question 2
_______ முத்தரையர்களிடமிருந்து காவிரி ஆற்றின் கழிமுகப் பகுதிகளை வென்று 859 ல் சோழ அரசை நிறுவினார்.
A
முதலாம் இராஜராஜன்
B
முதலாம் இராஜேந்திரன்
C
முதலாம் பராந்தகன்
D
விஜயாலயன்
Question 2 Explanation: 
(குறிப்பு: வரலாற்று ஆய்வாளர்கள் இச்சோழர்களை பிற்காலச் சோழர் என்றும் பேரரசுச் சோழர் என்றும் குறிப்பிடுகிறார்கள்.)
Question 3
இராஜராஜ சோழனால் ______ என்ற இடத்தில் கட்டப்பட்ட கோயில் இராஜராஜேஸ்வரம் என அழைக்கப்படுகிறது.
A
ஸ்ரீவிஜயா
B
கடாரம்
C
மகாதிட்டா
D
கல்யாணி
Question 3 Explanation: 
(குறிப்பு: இராஜராஜ சோழனால் இலங்கையின் வடகிழக்கு பகுதியில் கட்டப்பட்ட கோயில் 'சிவ-தேவாலே’ (சிவாலயம்) எனப்படுகிறது.)
Question 4
முதலாம் இராஜேந்திரன் தன் தந்தையின் படையெடுப்புகளில் பங்கேற்று, மேலைச்சாளுக்கியரைச் தாக்கி, சோழ அரசின் எல்லையை ______ ஆறு வரை விரிவுப்படுத்தினார்.
A
கிருஷ்ணா
B
துங்கபத்திரை
C
கங்கை
D
கோதாவரி
Question 4 Explanation: 
(குறிப்பு: இராஜராஜன், முதலாம் இராஜேந்திரன் இருவரும் இரு ஆண்டு காலம் கூட்டாக ஆட்சி செய்தார்கள்)
Question 5
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
A
1032 ல் முதலாம் இராஜேந்திரன் அரசப் பொறுப்பேற்றார்.
B
முதலாம் இராஜேந்திரன் வட இந்தியாவின் மீது மிகத் தீவிரமான ஒரு படையெடுப்பை நிகழ்த்தினார்
C
வட இந்திய படையெடுப்பில் படைகளை கோதாவரி ஆறு வரை அவரே வழிநடத்திச் சென்றார்.
D
முதலாம் இராஜேந்திரனுக்கு வட இந்தியாவில் கிடைத்த வெற்றிகளின் நினைவாக கங்கை கொண்ட சோழபுரம் கட்டப்பட்டது
Question 6
  • கூற்று: இராஜராஜ சோழனுக்கு 'கடாரம் கொண்டான்' என்ற பட்டம் சூட்டப்பட்டது.
  • காரணம்: குறுநில மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த கடாரத்தை தோற்கடித்ததால் இப்பட்டம் வழங்கப்பட்டது.
A
கூற்று சரி காரணம் தவறு
B
கூற்று தவறு காரணம் சரி
C
கூற்று காரணம் இரண்டும் சரி
D
கூற்று காரணம் இரண்டும் தவறு
Question 6 Explanation: 
(குறிப்பு: முதலாம் இராஜேந்திரனின் கடற்படை ஸ்ரீவிஜயா (தெற்கு சுமத்ரா) மீது தாக்குதல் தொடுத்து வெற்றி பெற்றது.)
Question 7
முடிகொண்ட சோழன், கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், பண்டித சோழன் போன்ற பட்டங்களை சூட்டிக் கொண்டவர் யார்?
A
முதலாம் இராஜராஜன்
B
முதலாம் இராஜேந்திரன்
C
முதலாம் பராந்தகன்
D
விஜயாலயன்
Question 8
மேலைச் சாளுக்கிய அரசின் மீது _______ இல் முதலாம் இராஜராஜன் தொடுத்த போரும் _____ இல் முதலாம் இராஜேந்திரன் தொடுத்த போரும் அவர்களுக்கு வெற்றியைத் தந்தன.
A
1006, 1009
B
1001, 1003
C
1003, 1009
D
1003, 1006
Question 8 Explanation: 
(குறிப்பு: சாளுக்கிய தலைநகர் கல்யாணியைத் தகர்க்க இராஜேந்திரன் தன் மகனை அனுப்பினார். அங்கிருந்து கொண்டுவரப்பட்ட துவாரபாலகர் சிலை தாராசுரம் கோயிலில் உள்ளது)
Question 9
முதலாம் இராஜராஜனும் முதலாம் இராஜேந்திரனும் தங்களுடைய இராஜகுருக்களாக முறையே ______ , ____ ஆகியோரை கல்வெட்டுக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளனர் –
A
சர்வ சிவன், ஈசான சிவன்
B
ஈசான சிவன், சர்வ சிவன்
C
தேவன், சர்வ சிவன்
D
சர்வ சிவன், தேவன்
Question 9 Explanation: 
(குறிப்பு: சோழ அரசர்கள் தங்கள் ஆன்மீக வழிகாட்டி அல்லது இராஜகுருக்களாகப் பிராமணர்களை நியமித்தனர்.)
Question 10
சோழர் கால படைகள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
A
படை வீரர்களுக்கு ‘படைப்பற்று’ என்ற உரிமை வழங்கப்பட்டிருந்தது.
B
தலைநகரில் படை முகாம் இட்டிருந்த இடம் ‘படைவீடு' எனப்பட்டது.
C
புதிதாகச் சேர்க்கப்படும் பகுதிகளில் அமைக்கப்பட்ட புறக்காவல் படைகள் ‘நிலைப்படைகள்’ எனப்பட்டன.
D
ஒரு படைப்பிரிவின் தலைவர் ‘சேனாபதி’, ‘தண்டநாயகம்’ என்றழைக்கப்பட்டார்.
Question 10 Explanation: 
(குறிப்பு: ஒரு படைப்பிரிவின் தலைவர் ‘நாயகம்' என்றும் பின்னாட்களில் 'படைமுதலி’ என்றும் அழைக்கப்பட்டார். படைத்தளபதி ‘சேனாபதி’, ‘தண்டநாயகம்’ என்றழைக்கப்பட்டார்.)
Question 11
யாருடைய ஆட்சியில் மாமல்லபுரம் ‘மாநகரம்’ என்ற குழுவால் நிர்வகிக்கப்பட்டது?
A
முதலாம் இராஜராஜன்
B
முதலாம் இராஜேந்திரன்
C
நரசிம்மவர்மன்
D
குலோத்துங்க சோழன்
Question 12
உள்நாட்டிலும் கடல் கடந்தும் வணிகத்தை ஊக்குவிப்பதற்காகக் ______சுங்க வரிகளை நீக்கினார்.
A
விஜயாலயன்
B
முதலாம் இராஜராஜன்
C
குலோத்துங்கன்
D
முதலாம் இராஜேந்திரன்
Question 12 Explanation: 
(குறிப்பு: குலோத்துங்கன் 'சுங்கம் தவிர்த்த சோழன்’ என்று அழைக்கப்படுகிறார்.)
Question 13
சோழ அரசக்கட்டமைப்பில் வேளாண் வகை கிராமங்களில் நிலம் வைத்திருந்தவர்களின் மன்றம் ______ எனப்பட்டது.
A
ஊரார்
B
நாட்டார்
C
நகரத்தார்
D
சபை
Question 13 Explanation: 
(குறிப்பு: சோழ அரசக் கட்டமைப்பின் அடிப்படை உறுப்புகளாக நாட்டார் செயல்பட்டனர். நாட்டார்களுக்கு மரியாதை செலுத்தும் நோக்கில் ஆசுடையான் (நில உரிமையாளர்), அரையன் (வழி நடத்துவோர்), கிழவன் (தலைவர்) போன்ற பட்டங்கள் அளிக்கப்பட்டன.)
Question 14
சோழர்கள் காலத்தில் _____ நிர்வாகத்துக்கெனத் தனியாக ஒரு துறை ‘புறவுவரித்திணைக்களம்’ என்ற பெயரில் இயங்கியது.
A
குடிநீர் வருவாய்
B
குடிமை வரி
C
நில வருவாய்
D
பாசன வருவாய்
Question 14 Explanation: 
(குறிப்பு: புறவுவரித்திணைக்களத் துறையின் தலைவர் 'புறவுவரித்திணைக்கள நாயகம்' எனப்பட்டார்.)
Question 15
கீழ்க்கண்ட எந்த சோழ அரசர்கள் நிலங்களை வகைப்படுத்தி அளவீடு செய்து அதற்கேற்றவாறு வரிகளை விதித்தனர்.
  • 1.முதலாம் இராஜராஜன் 2. முதலாம் குலோத்துங்கன்
  • 3.முதலாம் இராஜேந்திரன் 4. மூன்றாம் குலோத்துங்கன்
A
1, 2, 3 சரி
B
2, 3, 4 சரி
C
1, 2, 4 சரி
D
1, 3, 4 சரி
Question 15 Explanation: 
(குறிப்பு: நில அளவீடு பணியில் ஈடுபட்டவர்கள் 'நாடு வகை செய்கிற’ என்று குறிப்பிடப்பட்டார்கள். இவர் நில உடமைச் சமூகத்தை சேர்ந்தவர்.)
Question 16
சோழர்கள் கால நில வருவாய் முறையில், நிலத்தைக் குத்தகைக்கு பெற்று வேளாண்மை செய்தவர்கள் அரசுக்கும் நில உடமையாளர்களுக்கும் செலுத்திய வரி _____ எனப்படும்.
A
காணிகடன்
B
இறை
C
இறைகட்டின காணிகடன்
D
குடிமை வரி
Question 17
சோழர்கள் காலத்தில் வரியாக வசூலிக்கப்பட்ட நெல் ______ என்ற அலகின் அடிப்படையில் வசூலிக்கப்பட்டது.
A
காணி
B
படி
C
இறை
D
களம்
Question 18
தவறான கூற்றைத் தேர்ந்தெடு
A
வடி என்பது நீர் வடக்குத் தெற்காக ஓடுவதாகும்.
B
வாய்க்கால் என்றால் கிழக்கு மேற்காக ஓடுவதாகும்
C
வடி என்பது நீரை கொண்டு வருவதையும், வாய்க்கால் என்பது நீரை வெளியேற்றுவதையும் குறிக்கும்
D
இராஜேந்திர சோழன் எழுப்பிய ஜலமய ஜெயஸ்தம்பத்தை கண்டு அல்பெருனி வியந்தார்.
Question 19
சோழர் காலத்தில், கிராம சபைகள் பாசனக் குளங்களைப் பழுது பார்க்க _______ என்ற வரி வசூலிக்கப்பட்டது.
A
அமஞ்சி
B
வெட்டி
C
ஏரி ஆயம்
D
களம்
Question 19 Explanation: 
( குறிப்பு: சில சமயங்களில் அரையன் போன்ற உள்ளூர் தலைவர்கள் புயலில் சேதமடைந்த குளங்களை பழுது பார்த்துப் புதுப்பித்தனர்.)
Question 20
தவறான கூற்றை தேர்ந்தெடு
A
சோழ அரசர்கள் தீவிர சைவர்கள் ஆவர்
B
முதலாம் பராந்தகனும் உத்தமச் சோழனும் சைவ சமயத்தை வளர்க்க நிதியுதவியும் நிலக் கொடையும் அளித்தனர்.
C
முதலாம் இராஜேந்திரனுக்கு சிவபாதசேகரன் என்ற பட்டமும் உண்டு.
D
சோழர் சமூகத்தில் எண்ணெய் ஆட்டுபவர்கள் சங்கர பாடியார் என அழைக்கப்பட்டனர்.
Question 20 Explanation: 
(குறிப்பு: முதலாம் இராஜராஜனுக்கு சிவபாதசேகரன் என்ற பட்டமும் உண்டு. சிவனுடைய பாதங்களை இறுகப் பற்றியவன் என்பது இதற்குப் பொருள்.)
Question 21
சைவ சித்தாந்தத்தின் அடிப்படை நூலான சிவஞானபோதம் ______ என்பவரால் இயற்றப்பட்டது.
A
மெய்க்கண்டர்
B
பரணர்
C
பாரவி
D
இராஜராஜன்
Question 22
யாருடைய வட இந்திய வெற்றியின் நினைவாகத் தஞ்சாவூர் பெரிய கோயில் போன்றே கங்கை கொண்ட சோழபுரத்தில் கோயில் கட்டப்பட்டது?
A
விஜயாலயன்
B
முதலாம் இராஜராஜன்
C
குலோத்துங்கன்
D
முதலாம் இராஜேந்திரன்
Question 22 Explanation: 
(குறிப்பு: இராஜேந்திரன் சோழ கங்கம் என்ற புதிய பாசன ஏரியையும் தலைநகர் அருகே உருவாக்கினார். இது ஜலதம்பம் (நீர்த் தூண்) என அழைக்கப்படுகிறது.)
Question 23
சோழர் கால வளஞ்சியர் குழுவெட்டிய ஐநூற்றுவப்பேரேரி என்ற பாசன ஏரி எங்கு அமைந்துள்ளது.
A
சிவகங்கை
B
புதுக்கோட்டை
C
மதுரை
D
காஞ்சிபுரம்
Question 23 Explanation: 
குறிப்பு: சோழர் காலத்தில் அஞ்சு வண்ணத்தார், மணிக்கிராமத்தார் ஆகிய இரு வணிகக் குழுக்கள் இருந்தன.)
Question 24
தென் ஆற்காடு பகுதியில் உள்ள எண்ணாயிரத்தில் வேதக் கல்லூரி ஒன்றை நிறுவியவர் யார்?
A
ராஜாதிராஜன்
B
மூன்றாம் குலோத்துங்கன்
C
முதலாம் இராஜேந்திரன்
D
இராஜராஜன்
Question 24 Explanation: 
குறிப்பு: இக்கல்லூரியில் 340 மாணவர்கள் பயின்றவர்கள். 14 ஆசிரியர்கள் பணியாற்றினர்.வேதம், இலக்கணம் வேதாந்தம் ஆகியவை இங்கு கற்பிக்கப்பட்டன.)
Question 25
முதலாம் இராஜேந்திரனை தொடர்ந்து பின் வந்த அரசர்கள் _____ல் புதுச்சேரிக்கு அருகிலுள்ள திருபுவனியிலும், _____ல் செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள திருமுக்கூடலிலும் சமஸ்கிருத கல்லூரிய அமைத்தனர்.
A
1038, 1051
B
1048, 1061
C
1038, 1061
D
1048, 1051
Question 25 Explanation: 
(குறிப்பு: இந்த சமஸ்கிருதக் கல்வி மையங்களில் வேதங்கள், சமஸ்கிருத இலக்கணம், சமயம், தத்துவங்கள் ஆகியவை கற்றுத் தரப்பட்டன.)
Question 26
எந்த ஆண்டு பாண்டிய மன்னன் முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் சோழர் தலைநகரான கங்கைகொண்ட சோழபுத்தைக் கைப்பற்றினார்
A
1234
B
1243
C
1246
D
1264
Question 27
ராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகிய சோழ அரசர்களின் ஆட்சிக் காலத்தில் வலிமை படைத்த குறுநில மன்னர்களாக விளங்கிய சம்புவராயர்களின் அரசு______ எனப்பட்டது.
A
சுயராஜ்யம்
B
இராஜ கம்பீர ராஜ்யம்
C
இராஜ ராஜ்யம்
D
குறுநில ராஜ்யம்
Question 28
______ ஆண்டு முதலாம் மாறவர்மன் குலசேகரப்பாண்டியன் கடைசி சோழ அரசரான மூன்றாம் இராஜேந்திர சோழனைத் தோற்கடித்தார்.
A
1264
B
1284
C
1276
D
1279
Question 29
பாண்டிய நாட்டைச் சேர்ந்த _______ என்ற கிராமத்தில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் கூடல் என்ற சொல் குறிப்பிடப்பெற்றுள்ளது.
A
கொற்கை
B
புலிமான் கோம்பை
C
வேள்விக்குடி
D
கீழடி
Question 29 Explanation: 
(குறிப்பு: பத்துப்பாட்டு நூலான நூல்களான பட்டினப்பாலையிலும், மதுரைக் காஞ்சியிலும் கூடல் பாண்டியர் தலைநகரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.)
Question 30
களப்பிரரிடமிருந்து பாண்டியர் பகுதியை ______ மீட்டதாகச் செப்பேடுகள் கூறுகின்றன.
A
அரிகேசரி
B
சேந்தன்
C
கடுங்கோன்
D
மாறவர்மன்
Question 30 Explanation: 
(குறிப்பு: கடுங்கோனைத் தொடர்ந்து இரு அரசர்கள் அடுத்தடுத்து ஆட்சி செய்தனர். அவர்களில் சேந்தன் என்பவர் போர் முறையில் சிறந்தவராக இருந்தார். இவர் சேரரை வென்றதால் வானவன் என்ற பட்டம் பெற்றார்.)
Question 31
______ என்ற சைவத் துறவி அரிகேசரியை சமண மதத்திலிருந்து சைவ மதத்துக்கு மாற்றினார்.
A
திருநாவுக்கரசர்
B
திருஞானசம்பந்தர்
C
சுந்தரர்
D
மாணிக்கவாசகர்
Question 31 Explanation: 
(குறிப்பு: சமணர்களை கழுவேற்றிய கூன்பாண்டியனே அரிகேசரி என்று அடையாளம் காணப்படுகிறார்.)
Question 32
கீழ்க்காண்பவர்களுள் முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன் ஆகியோருக்கு சமகாலத்தவர் யார்?
A
விஜயாலயன்
B
அரிகேசரி
C
சேந்தன்
D
கடுங்கோன்
Question 32 Explanation: 
(குறிப்பு: அரிகசேரி தமது காலத்தைச் சேர்ந்த சேர, சோழ, பல்லவ சிங்கள அரசர்களை வெற்றி கொண்டதாக கல்வெட்டு குறிப்புகளும் செப்பேடுகளும் கூறுகின்றன.)
Question 33
சரியான காலவரிசைப்படி எழுதுக.
A
கோச்சடையான் ரணதீரன், மாறவர்மன் ராஜசிம்ஹன், முதலாம் வரகுணன், ஸ்ரீமாற ஸ்ரீவல்லபர்
B
மாறவர்மன் ராஜசிம்ஹன், ஸ்ரீமாற ஸ்ரீவல்லபர், முதலாம் வரகுணன், கோச்சடையான் ரணதீரன்.
C
கோச்சடையான் ரணதீரன், ஸ்ரீமாற ஸ்ரீவல்லபர், மாறவர்மன் ராஜசிம்ஹன், முதலாம் வரகுணன்
D
முதலாம் வரகுணன், கோச்சடையான் ரணதீரன், ஸ்ரீமாற ஸ்ரீவல்லபர், மாறவர்மன் ராஜசிம்ஹன்.
Question 34
முதலாம் வரகுணன் குறித்த கூற்றுகளில் தவறானது எது?
A
புகழ்பெற்ற வேள்விக்குடி நிலக் கொடை அளித்தவர்.
B
பல்லவர்களையும் சேரர்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டார்.
C
பாண்டிய அரசைத் தஞ்சாவூர், திருச்சி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளுக்கு விரிவுபடுத்தினார்.
D
திருப்புறம்பியம் போரில் அபராஜித பல்லவனால் தோற்கடிக்கப்பட்டார்.
Question 34 Explanation: 
(குறிப்பு: இரண்டாம் வரகுணன் திருப்புறம்பியம் போரில் அபராஜித பல்லவனால் தோற்கடிக்கப்பட்டார்.)
Question 35
வெனீஸைச் சேர்ந்த புகழ் பெற்ற பயணி மார்க்கோபோலோ எந்தெந்த ஆண்டுகளில் காயலுக்கு வருகை புரிந்தார்?
A
1278, 1283
B
1288, 1293
C
1287, 1294
D
1279, 1295
Question 35 Explanation: 
(குறிப்பு: காயல் துறைமுகம் முழுவதும் அரேபிய, சீன கப்பல்களால் நிறைந்திருந்ததாகவும் காயல் நகரில் வணிக நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெறுவதாகவும் மார்க்கோபோலோ கூறுகிறார்.)
Question 36
இரண்டாம் பாண்டிய அரசின் சிறப்புமிக்க ஆட்சியாளர் என கருதப்படுபவர் யார்?
A
மாறவர்மன் குலசேகரன்
B
வீரபாண்டியன்
C
விக்கிரம பாண்டியன்
D
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
Question 36 Explanation: 
குறிப்பு: இவர் தமிழ்நாடு முழுவதையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததுடன், ஆந்திராவில் உள்ள நெல்லூர் வரை தனது அரசியல் அதிகாரத்தை செலுத்தினார்.)
Question 37
காயல் துறைமுக நரில், அரபுத் தலைவன் _______ என்பவரால் குதிரைகளை இறக்குமதி செய்யும் முகவர் நிறுவனம் தொடங்கப்பட்டது.
A
வாசாஃப்
B
மாலிக்கு ஆம்பர்
C
மாலிக்கு இஸ்லாம் ஜமாலுதீன்
D
முகமது மாலிக்
Question 38
_________ கடல் வழிப்படையெடுப்புகள் ஸ்ரீவிஜயா அரசு வரை விரிவடைந்திருந்தன.
A
மூன்றாம் குலோத்துங்கன்
B
முதலாம் இராஜேந்திரன்
C
முதலாம் இராஜராஜன்
D
பராந்தகன்
Question 38 Explanation: 
குறிப்பு: தென் கிழக்கு ஆசியாவில் 700க்கும் 1300க்கும் இடையே செழித்து வளர்ந்த நாடுகளுள் ஸ்ரீவிஜயாவும் ஒன்று. இதுவலிமையான கடற்படை கொண்டதாகவும் வணிகத்தில் சிறந்ததாகவும் இருந்தது)
Question 39
______படுகையில் இருந்த சோழ அரசின் மையப்பகுதி சோழ மண்டலம் எனப்படுகிறது.
A
வைகை
B
காவிரி
C
கிருஷ்ணா
D
கோதாவரி
Question 40
_______ ஒரு கலத்துக்கு சமம் ஆகும்.
A
28 கி.கி
B
27 கி.கி
C
32 கி.கி
D
72 கி.கி
Question 41
பொருத்துக.
  1. படை முகாம்                                 i) படைவீடு
  2. புறக்காவல் படைகள்             ii) தண்டநாயகம்
  3. தலைவர்                               iii) நிலைப்படை
  4. படைத் தளபதி                 iv) படை முதலி
A
i iii iv ii
B
iv ii i iii
C
ii i iii iv
D
ii iii i iv
Question 42
_____ பாண்டியர்களின் முதல் தலைநகரமாகும்.
A
மதுரை
B
காயல்பட்டினம்
C
கொற்கை
D
புகார்
Question 42 Explanation: 
(குறிப்பு: முத்துக்குளித்தல் தொழிலோடு வரலாற்றுப் பூர்வமாக இணைந்த கொற்கை பாண்டியரின் தொடக்க கால தலைநகரமாகவும் துறைமுகமாகவும் இருந்தது. பிற்காலத்தில் அவர்கள் மதுரைக்கு இடம் பெயர்ந்தனர்)
Question 43
வறட்சிப் பகுதியான இராமநாதபுரத்தில் பாண்டிய அரசர்கள் _______ஐக் கட்டினார்கள்.
A
அகழிகள்
B
மதகுகள்
C
அணைகள்
D
ஏரிகள்
Question 43 Explanation: 
(குறிப்பு: இத்தகைய பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள், உள்ளூர் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோர் மேற்பார்வையில் பாசன வேலைகள் மேற்கொள்ளப்பட்டன.)
Question 44
தொடக்க காலப் பல்லவ அரசர்கள் ______ன் கீழ் சிற்றரசர்களாக இருந்தனர்.
A
சாளுக்கியர்கள்
B
டெல்லி சுல்தான்கள்
C
மராத்தியர்கள்
D
சாதவாகனர்கள்
Question 44 Explanation: 
குறிப்பு: பல்லவ அரசர்கள் தென்கிழக்கு கடற்கரைப் பகுதியில் முக்கிய வணிக மையமாகத் திகழ்ந்த காஞ்சிபுரத்தையும், அதன் வளம் நிறைந்த வேளாண் பகுதிகளையும் ஆண்டனர்.)
Question 45
பொ.ஆ.800 ஐச் சேர்ந்த மானூர் கல்வெட்டு _______ நிர்வாகம் குறித்த செய்திகளைத் தருகின்றது.
A
மத்திய அரசு
B
கிராமம்
C
படை
D
மாகாணம்
Question 46
பல்லவ அரசர்களின் பெயர்களை காலவரிசைப்படி எழுதுக.
A
சிம்ம விஷ்ணு, இரண்டாம் சிம்மவர்மன், முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன்
B
இரண்டாம் சிம்மவர்மன், சிம்ம விஷ்ணு, முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன்
C
இரண்டாம் சிம்மவர்மன், சிம்ம விஷ்ணு, முதலாம் நரசிம்மவர்மன், முதலாம் மகேந்திரவர்மன்
D
சிம்ம விஷ்ணு, இரண்டாம் சிம்மவர்மன், முதலாம் நரசிம்மவர்மன், முதலாம் மகேந்திரவர்மன்
Question 47
______ ஆண்டு யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள் அட்டவணையில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்டது
A
1982
B
1983
C
1984
D
1985
Question 47 Explanation: 
(குறிப்பு: மாமல்லபுரத்திலுள்ள ஒற்றைக் கருங்கல்லில் செதுக்கி உருவாக்கப்பட்ட கடற்கரைக் கோவிலும், ஏனைய கோவில்களும், வராகர்குகையும் பல்லவக் கட்டிடக்கலையின் ஈடு இணையற்ற அழகிற்கு எடுத்துக்காட்டுகள்.)
Question 48
______ன் படைத் தளபதி பரஞ்சோதி, சிறுத்தொண்டர் என பிரபலமாக அறியப்பட்டார்.
A
இரண்டாம் சிம்மவர்மன்
B
சிம்ம விஷ்ணு
C
முதலாம் நரசிம்மவர்மன்
D
முதலாம் மகேந்திரவர்மன்
Question 49
________ என்பவர் மகேந்திரவர்மனை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு தழுவச் செய்தார்.
A
திருநாவுக்கரசர்
B
திருஞானசம்பந்தர்
C
சுந்தரர்
D
மாணிக்கவாசகர்
Question 49 Explanation: 
குறிப்பு: மகேந்திரவர்மன் கலை கட்டிடக் கலைக்கு பேராதரவு அளித்தார். திராவிடக் கட்டடக் கலைக்கு ஒரு புதிய பாணியை அறிமுகம் செய்தார். அது மகேந்திரபாணி எனக் குறிப்பிடப்படுகின்றது.)
Question 50
_______ என்ற பல்லவ மன்னன் ராஜசிம்மன் என்று அழைக்கப்பட்டார்
A
இரண்டாம் நரசிம்மவர்மன்
B
சிம்ம விஷ்ணு
C
முதலாம் நரசிம்மவர்மன்
D
முதலாம் மகேந்திரவர்மன்
Question 50 Explanation: 
குறிப்பு: இரண்டாம் நரசிம்மவர்மன் சீன அரசுக்கு தூதுக் குழுக்களை அனுப்பினார். சீன நாட்டின் தூதுக் குழுக்களை வரவேற்றார். காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலை கட்டியவர் இவரே.)
Question 51
அரசர்களின் பெயர்கள் மற்றும் பட்டங்களில் தவறான இணையைத் தேர்ந்தெடு.
A
சிம்ம விஷ்ணு - அவனிசிம்மர்
B
முதலாம் மகேந்திரவர்மன் – குணபாரன்
C
முதலாம் நரசிம்மவர்மன் – வாதாபிகொண்டான்
D
இரண்டாம் நரசிம்மவர்மன் - விசித்திர சித்தன்
Question 52
பல்லவர் கட்டிடக்கலையின் வகைகளில் தவறான இணையைத் தேர்ந்தெடு.
    1. பாறைக் குடைவரைக் கோவில்கள் - மகேந்திரவர்மன் பாணி
    2. ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும் - ராஜசிம்மன் பாணி
    3. கட்டுமானக் கோவில்கள் - நந்திவர்மன் பாணி
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 53
ராஜசிம்மேஸ்வரம் கோவில் ______ கலைபாணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
A
பாறை குடைவரைக் கோயில்
B
ஒற்றைக் கல் ரதங்களும் சிற்ப மண்டபம்
C
கட்டுமானக் கோவில்
D
கடற்கரைக் கோவில்
Question 53 Explanation: 
(குறிப்பு: கைலாசநாதர் கோவில் ராஜசிம்மேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவில் மிருதுவான மணற் கற்களால் கட்டப்பட்டவையாகும்.)
Question 54
காஞ்சி புரத்திலுள்ள வைகுண்டப் பெருமாள் கோவில் _____ கட்டடக்கலை பணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்
A
மகேந்திரவர்மன் பாணி
B
மாமல்லன் பாணி
C
ராஜசிம்மன் பாணி
D
நந்திவர்மன் பாணி
Question 55
தவறான இணையைத் தேர்ந்தெடு.
A
நியாயபாஷ்யா – வாத்ஸ்யாயர்
B
தசகுமார சரிதம் – பாரவி
C
கிராதார்ஜூனியம் – பாரவி
D
பாரதவெண்பா – பெருந்தேவனார்
Question 55 Explanation: 
(குறிப்பு: தண்டின் - முதலாம் நரசிம்மவர்மன், பாரவி - சிம்ம விஷ்ணு, பெருந்தேவனார்- இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் வாழ்ந்தவர்கள்.)
Question 56
புகழ் பெற்ற இசைக் கலைஞரான ருத்ராச்சாரியர் யாருடைய காலத்தில் வாழ்ந்தவர்?
A
இரண்டாம் நரசிம்மவர்மன்
B
சிம்ம விஷ்ணு
C
முதலாம் நரசிம்மவர்மன்
D
முதலாம் மகேந்திரவர்மன்
Question 56 Explanation: 
குறிப்பு: குடுமியான்மலை, திருமயம் ஆகிய இடங்களிலுள்ள கோவில்களில் காணப்படும் இசை குறித்த கல்வெட்டுக்கள் இசையில் பல்லவர் கொண்டிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றன.)
Question 57
அய்கோல் கல்வெட்டு சாளுக்கிய அரசன் ______ என்பவரது அவைக்களப் புலவரான ரவி கீர்த்தி என்பவரால் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது
A
முதலாம் புலகேசி
B
இரண்டாம் புலிகேசி
C
முதலாம் விக்கிரமாதித்தன்
D
இரண்டாம் கீர்த்திவர்மன்
Question 58
பாரசீக அரசர் இரண்டாம் குஸ்ரூ _____ன் அவைக்கு தூதுக்குழு ஒன்றை அனுப்பி வைத்தார்.
A
முதலாம் புலகேசி
B
இரண்டாம் புலிகேசி
C
முதலாம் விக்கிரமாதித்தன்
D
இரண்டாம் கீர்த்திவர்மன்
Question 58 Explanation: 
குறிப்பு: இரண்டாம் புலிகேசி (கி.பி. 610 - 642) சாளுக்கிய வம்சத்தின் மிகவும் வலிமை பெற்ற அரசராவார்.)
Question 59
_______ என்ற சாளுக்கிய மன்னனை ராஷ்டிரகூட வம்ச அரசை நிறுவிய தந்தி துர்க்கா போரில் தோற்கடித்தார்.
A
முதலாம் புலகேசி
B
இரண்டாம் புலிகேசி
C
முதலாம் விக்கிரமாதித்தன்
D
இரண்டாம் கீர்த்திவர்மன்
Question 60
_______ என்ற மேலை சாளுக்கியர் தலைநகரை மன்யகேட்டாவிலிருந்து கல்யாணிக்கு மாற்றினார்.
A
ஆறாம் விக்ரமாதித்யன்
B
இரண்டாம் தைலப்பர்
C
முதலாம் சோமேஸ்வரர்
D
இரண்டாம் புலிகேசி
Question 60 Explanation: 
குறிப்பு: இரண்டாம் தைலப்பர் கி.பி 973ல் மாளவ அரசர் பரம்பரையைத் தோற்கடித்து கல்யாணியைக் கைப்பற்றினார்)
Question 61
வாதாபியிலுள்ள விஷ்ணு கோவில் சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த ______ ஆல் கட்டப்பட்டது.
A
மங்களேசன்
B
இரண்டாம் தைலப்பர்
C
முதலாம் சோமேஸ்வரர்
D
இரண்டாம் புலிகேசி
Question 61 Explanation: 
(குறிப்பு: இரண்டாம் விக்கிரமாதித்தனுடைய அய்கோல் கல்வெட்டு இங்குள்ளது.)
Question 62
_____ என்ற ராஷ்டிரகூட அரசர் ஜினசேனா எனும் சமணத் துறவியால் சமண மதத்திற்கு மாற்றப்பட்டார்
A
முதலாம் கிருஷ்ணர்
B
இரண்டாம் கிருஷ்ணர்
C
அமோகவர்ஷர்
D
மூன்றாம் கோவிந்தன்
Question 62 Explanation: 
(குறிப்பு: ராஷ்டிரகூட அரசர்களில் தலைசிறந்த அரசர் அமோக வர்ஷர், அவர் மான்யக்கோட்டாவில் புதிய தலைநகரை உருவாக்கினார்.)
Question 63
கி.பி. 916 ல் பராந்தகச் சோழனால் வல்லம் போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்ட ராஷ்டிரக்கூட அரசர்
A
முதலாம் கிருஷ்ணர்
B
இரண்டாம் கிருஷ்ணர்
C
அமோகவர்ஷர்
D
மூன்றாம் கோவிந்தன்
Question 63 Explanation: 
(குறிப்பு: அமோகவர்ஷரின் மகன் இரண்டாம் கிருஷ்ணர் ஆவார்)
Question 64
இராமேஸ்வரத்தில் கிருஷ்ணேஸ்வரா கோவிலை கட்டிய ராஷ்டிரக் கூட அரசர்
A
முதலாம் கிருஷ்ணர்
B
இரண்டாம் கிருஷ்ணர்
C
அமோகவர்ஷர்
D
மூன்றாம் கிருஷ்ணர்
Question 64 Explanation: 
குறிப்பு: மூன்றாம் கிருஷ்ணர் ராஷ்டிரகூட வம்சத்தின் திறமை வாய்ந்த கடைசி அரசனாவார். இவர் சோழர்களை தக்கோலம் போரில் தோற்கடித்துத் தஞ்சாவூரைக் கைப்பற்றினார்.)
Question 65
_______ ஆல் இயற்ற்ப்பட்ட கவிராஜ மார்க்கம் கன்னட மொழியின் முதல் கவிதை நூலாகும்.
A
முதலாம் கிருஷ்ணர்
B
இரண்டாம் கிருஷ்ணர்
C
அமோகவர்ஷர்
D
மூன்றாம் கோவிந்தன்
Question 66
முதல் சமண தீர்த்தங்கரரான ரிஷபதேவரின் வாழ்க்கையை சித்திரிக்கும் ஆதிபுராணத்தை இயற்றியவர் யார்?
A
ஸ்ரீ பொன்னா
B
ஆதிகவி பம்பா
C
ரன்னா
D
அமோகவர்ஷர்
Question 66 Explanation: 
குறிப்பு: ஆதிகவி பம்பா கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்களில் ஒருவர் எனக் கருதப்படுகிறார். ஆதிகவி பம்பா, ஆதி புராணம், விக்கிரமார்ஜூன விஜயம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்)
Question 67
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
A
எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயில் மூன்றாம் கிருஷ்ணருடை ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது.
B
இக்கோவில் 60,000 சதுர அடிகள் பரப்பளவைக் கொண்டுள்ளது.
C
இதனுடைய விமானத்தின் உயரம் 90 அடிகளாகும்
D
இக்கோவில் மாமல்லபுர கடற்கரைக் கோவிலின் சாயலைப் பெற்றுள்ளது
Question 67 Explanation: 
குறிப்பு: கைலாசநாதர் கோவில் திராவிடக் கட்டடக் கலைக்கூறுகளைக் கொண்டுள்ளது.)
Question 68
கோவில் விமானங்களைக் கட்டுவதில் புதிய கட்டடக்கலை பாணியான வெசாரா யாரால் வளர்க்கப்பட்டது?
A
சோழர்கள்
B
பல்லவர்கள்
C
சாளுக்கியர்கள்
D
ராஷ்டிரகூடர்கள்
Question 68 Explanation: 
குறிப்பு: வெசாரா என்பது தென் இந்திய (திராவிட) மற்றும் வட இந்திய (நாகாரா) கட்டடப் பாணிகளின் கலப்பு ஆகும்.)
Question 69
பல்லவ அரசினைப் பற்றிய கூற்றுகளைச் சிந்திக்கவும்.
  • கூற்று 1: இவர்களுடைய ஆட்சியில் அப்பரால் இயற்றப்பட்ட தேவாரம் முதல் மற்ற தமிழ் இலக்கியங்களும் செழித்தோங்கின.
  • கூற்று 2: முதலாம் மகேந்திரவர்மன் மத்த விலாச பிரகசனம் எனும் நூலின் ஆசிரியர் ஆவார்.
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
இரு கூற்றுகளும் சரி
D
இரு கூற்றுகளும் தவறு
Question 70
கீழ்க்காண்பனவற்றில் எது சரியான இணையில்லை
A
எல்லோரா குகைகள் - ராஷ்டிரகூடர்கள்
B
மாமல்லபுரம் - முதலாம் நரசிம்மவர்மன்
C
எலிபெண்டா குகைகள் -அசோகர்
D
பட்டக்கல் – சாளுக்கியர்கள்
Question 71
தவறான இணையைக் கண்டறியவும்
A
தந்தின் - தசகுமார சரிதம்
B
வாத்ஸ்யாயர் - பாரத வெண்பா
C
பாரவி – கிரதார்ஜுனியம்
D
அமோகவர்ஷர் -கவிராஜமார்க்கம்
Question 72
பொருத்துக.
  • 1) பல்லவர்                                i) கல்யாணி
  • 2) கீழை சாளுக்கியர்             ii) மான்ய கேட்டா
  • 3) மேலைச் சாளுக்கியர்       iii) காஞ்சி
  • 4) ராஷ்டிரகூடர்                       iv) வெங்கி
A
i iii ii iv
B
ii iii i iv
C
ii iv i iii
D
iii iv i ii
Question 73
'தெள்ளாறு தந்த நந்திவர்மன்’ என நந்திக் கலம்பகம் யாரை கூறிப்பிடுகிறது.
A
முதலாம் நந்திவர்மன்
B
இரண்டாம் நந்திவர்மன்
C
மூன்றாம் நந்திவர்மன்
D
நான்காம் நந்திவர்மன்
Question 73 Explanation: 
குறிப்பு: மூன்றாம் நந்திவர்மன் தெள்ளாறு என்னுமிடத்தில் நடைபெற்ற பெரும் போரில் பாண்டிய மன்னன் ஸ்ரீ வல்லபனை வென்றார்)
Question 74
பல்லவர் நிர்வாகத்தின் சரியான வரிசையை தேர்ந்தெடு
A
பல்லவ நாடு, ராஷ்டிரம், விஷயங்கள், நாடு, ஊர்
B
பல்லவ நாடு, விஷயங்கள், ராஷ்டிரம், நாடு, ஊர்
C
பல்லவ நாடு, விஷயங்கள், நாடு, ராஷ்டிரம், ஊர்
D
பல்லவ நாடு, நாடு, விஷயங்கள், ராஷ்டிரம், ஊர்
Question 75
______ பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து, அதன் தலைநகரான மதுரையை வென்றதால் 'மதுரை கொண்டான்’ என புகழப்பட்டார்
A
விஜயாலய சோழன்
B
முதலாம் ஆதித்த சோழன்
C
முதலாம் பராந்தகன்
D
மூன்றாம் கிருஷ்ணன்
Question 75 Explanation: 
குறிப்பு: முதலாம் பராந்தகன் தக்கோலம் போரில் இராட்டிரகூட மன்னர் மூன்றாம் கிருஷ்ணரிடம் தோற்று கி.பி. 955ல் இறந்தார்.)
Question 76
இராஜராஜன் காலத்தில் வரிவிதிப்புக்கான கணக்கெடுப்புப் பணி_______ என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.
A
ஊரார்
B
நாட்டார்
C
நகரத்தார்
D
சேனாபதி குரவன்
Question 77
______ காலத்தை சார்ந்த உத்திரமேரூர் கல்வெட்டு கிராம நிர்வாகத்தைப் பற்றி விரிவாக விளக்குகிறது.
A
முதலாம் இராஜராஜன்
B
முதலாம் நரசிம்மவர்மன்
C
முதலாம் பராந்தக சோழன்
D
முதலாம் இராஜேந்திரன்
Question 78
முதலாம் இராசேந்திரனின் வழித்தோன்றல்களை காலவரிசைப்படி எழுதுக.
A
இரண்டாம் இராசேந்திரன், முதலாம் இராசாதிராசன், இராச மகேந்திரன், வீர இராசேந்திரன்
B
முதலாம் இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன், வீர இராசேந்திரன், இராச மகேந்திரன்
C
முதலாம் இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன், இராசமகேந்திரன், வீர இராசேந்திரன்
D
முதலாம் இராசாதிராசன், வீர இராசேந்திரன், இராசமேகந்திரன், இரண்டாம் இராசேந்திரன்
Question 79
கீழ்க்கண்டவர்களுள் ‘சோணாடு வழங்கியருளிய சுந்தரப் பாண்டியன்' என அழைக்கப்படும் பாண்டிய மன்னன் யார்?
A
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
B
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
C
முதலாம் சடையவர்மன் சுந்தரப் பாண்டியன்
D
முதலாம் மாறவர்மன் குலசேகரன்
Question 79 Explanation: 
(குறிப்பு: கி.பி.1219 ல் மூன்றாம் குலோத்துங்க சோழனை வென்றார். எனினும் ஹொய்சாளர்கள் சோழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால் தான் வென்ற சோழ நாட்டை குலோத்துங்கனிடமே கொடுத்தார்.)
Question 80
‘ எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரப் பாண்டியன், மகாராஜாதிராஜா, ஸ்ரீ பரமேஸ்வரன், பொன்வேய்ந்த பெருமாள் ‘ என்றெல்லாம் புகழப்படுபவர் யார்?
A
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
B
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
C
முதலாம் சடையவர்மன் சுந்தரப் பாண்டியன்
D
முதலாம் மாறவர்மன் குலசேகரன்
Question 80 Explanation: 
குறிப்பு: இவரது காலத்தில் பாண்டியப் பேரரசு வடக்கே நெல்லூர், கடப்பா முதற்கொண்டு தெற்கே கன்னியாகுமரி வரையில் விரிவு பெற்றது.)
Question 81
தவறான இணையைத் தேர்ந்தெடு.
A
நம்மாழ்வார் – திருப்பல்லாண்டு
B
அதிவீரராம பாண்டியன் – நைடதம்
C
இரத்தினகிரி உலா – மகேந்திரவர்மன்
D
மகாபாரதம் – வில்லிபுத்தூரார்
Question 81 Explanation: 
(குறிப்பு: இரத்தினகிரி உலா, சேயூர் முருகன் உலா – ஸ்ரீ கவிராயர்)
Question 82
தமிழ்நாட்டில் சங்க காலம் முடிந்த பிறகு, களப்பிரர்ளின் ஆட்சி _______ ஆண்டுகள் நீடித்தது.
A
150
B
200
C
250
D
300
Question 82 Explanation: 
குறிப்பு: களப்பிரர்களை தொடர்ந்து காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தில் பல்லவர்கள் தங்கள் அரசை நிறுவினர்.)
Question 83
_______ முதல் _____ வரையிலான முற்காலபல்லவர்கள் பிராகிருத மொழியில் பட்டயங்களை வெளியிட்டனர்.
A
கி.பி 200-300
B
கி.பி. 250 – 350
C
கி.பி 300 – 350
D
கி.பி 350 – 450
Question 83 Explanation: 
( குறிப்பு: சிவஸ்கந்தவர்மன், விஜயஸ்கந்தவர்மன் ஆகியோர் இம்மரபில் குறிப்பிடத்தக்கவர்கள்)
Question 84
சோழ அரசன் _____ கடைசி பல்லவ அரசன் அபராஜிதனை முறியடித்து காஞ்சி பகுதியைக் கைப்பற்றினான்.
A
விஜயாலயன்
B
முதலாம் இராஜேந்திரன்
C
இரண்டாம் இராஜேந்திரன்
D
முதலாம் ஆதித்தன்
Question 84 Explanation: 
(குறிப்பு: பல்லவர்களது ஆட்சி கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை நீடித்தது.)
Question 85
களப்பிரர்களை முறியடித்து தொண்டை மண்டலத்தில் பல்லவர் ஆட்சியை நிலையாக ஏற்படுத்தியவர் யார்?
A
விஷ்ணு கோபன்
B
சிம்ம விஷ்ணு
C
முதலாம் மகேந்திரவர்மன்
D
ராஜசிம்மன்
Question 85 Explanation: 
குறிப்பு: சோழர்களை முறியடித்த அவர் காவிரி நதிக்கரை வரை பல்லவர் ஆட்சியை விரிவுபடுத்தினார்)
Question 86
பொருத்துக.
  1. பெருந்தேவனார்                      i) நாலாயிர திவ்ய பிரபந்தம்
  2. ஆழ்வார்கள்                                   ii) தேவாரம்
  3. நாயன்மார்கள்                             iii) மத்தவிலாச பிரகாசனம்
  4. முதலாம் மகேந்திரவர்மன்       iv) பாரத வெண்பா
A
i iii iv ii
B
ii iii i iv
C
iv i ii iii
D
ii iv iii i
Question 87
தென்னிந்தியாவைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஹர்ஷரின் எண்ணத்தை சிதைத்தவர்
A
முதலாம் புலிகேசி
B
இரண்டாம் புலிகேசி
C
விக்ரமாதித்யன்
D
இரண்டாம் கீர்த்திவர்மன்
Question 87 Explanation: 
குறிப்பு: நர்மதை ஆற்றங்கரையில் ஹர்ஷவர்த்தனரை இரண்டாம் புலிகேசி முறியடித்தார்
Question 88
_____ ஆட்சிக் காலத்தில் ஹளயுதா என்பவர் கவிரஹஸ்யம் என்ற நூலைப் படைத்தார்.
A
முதலாம் கிருஷ்ணர்
B
அமோகவர்ஷர்
C
மூன்றாம் கிருஷ்ணர்
D
தந்தி துர்க்கர்
Question 89
சரியான தொடரைத் தேர்ந்தெடு
A
எல்லோரா பம்பாய்க்கு அருகிலுள்ள தீவு
B
கைலாசநாதர் கோயில் எல்லோராவில் உள்ளது
C
எல்லோரா கோயில் சாளுக்கிய ஆட்சியில் கட்டப்பட்டது.
D
எல்லோரா கைலாசநாதர் கோயில் இரண்டாம் புலிகேசியால் கட்டப்பட்டது.
Question 90
பொருத்துக
  1. ரவி கீர்த்தி                           i) விக்ரம சேன விஜயம்
  2. முதலாம் அமோக வர்ஷர்          ii) கணித சாரம்
  3. பம்பா                                               iii) ஐஹோலே கல்வெட்டு
  4. வீராச்சாரியார்                             iv) கவிராஜ மார்க்கம்
A
i iii iv ii
B
iii iv i ii
C
iv i ii iii
D
ii iv iii i
Question 91
காந்தளுர் சாலை என்ற இடத்தில் சேர மன்னன் பாஸ்கர ரவிவர்மனுடைய கடற்படைகளை முறியடித்தவர் யார்?
A
முதலாம் ராஜராஜன்
B
முதலாம் இராஜேந்திரன்
C
விஜயாலய சோழன்
D
முதலாம் குலோத்துங்கன்
Question 91 Explanation: 
(குறுப்பு: முதலாம் ராஜராஜன், அவரது புதல்வன் முதலாம் ராஜேந்திரன் ஆகிய இருவரின் ஆட்சி காலங்களிலும் சோழப் பேரரசு புகழின் உச்சியை எட்டியது.)
Question 92
_______ என்ற சோழ அரசன் 72 வணிகர்கள் அடங்கிய தூதுக் குழுவை சீனாவிற்கு அனுப்பி வைத்தார்.
A
முதலாம் ராஜராஜன்
B
முதலாம் இராஜேந்திரன்
C
விஜயாலய சோழன்
D
முதலாம் குலோத்துங்கன்
Question 92 Explanation: 
குறிப்பு: முதலாம் குலோத்துங்கன் ஸ்ரீவிஜய அரசுடன் நல்லுறவை மேற்கொண்டிருந்தார். காடவராயர்கள் போன்ற குறுநிலத் தலைவர்கள் இவரது காலத்தில் எழுச்சி பெற்றனர்.)
Question 93
_____ ஆண்டு தஞ்சையில் பிரகதீஸ்வரம் என்றழைக்கப்படும் தஞ்சை பெரிய கோயிலை ராஜராஜன் கட்டி முடித்தார்.
A
கி.பி 1001
B
கி.பி. 1010
C
கி.பி. 1012
D
கி.பி. 1020
Question 94
சோழ கங்கம் என்ற நீர்ப்பாசன ஏரியை கங்கைகொண்ட சோழபுரம் என்ற இடத்தில் வெட்டியவர் யார்?
A
முதலாம் ராஜராஜன்
B
முதலாம் இராஜேந்திரன்
C
விஜயாலய சோழன்
D
முதலாம் குலோத்துங்கன்
Question 95
பொருத்துக.
  1. உத்திரமேரூர் கல்வெட்டுகள்              i) முதலாம் ராஜராஜன்
  2. சுங்கம் தவிர்த்த சோழன்                      ii) முதலாம் ராஜேந்திரன்
  3. முடி கொண்டான்                                     iii) முதலாம் குலோத்துங்கன்
  4. ஜெயங்கொண்டான்                                iv) முதலாம் பராந்தகன்
A
i iii iv ii
B
iii iv i ii
C
iv iii ii i
D
ii iv iii i
Question 96
பம்பாய்க்கு அருகில் உள்ள ஸ்ரீபுரிக்கு எலிபான்டா என பெயரிட்டவர்கள் யார்?
A
பாரசீகர்கள்
B
போர்ச்சுகீசியர்கள்
C
ஆங்கிலேயர்கள்
D
டச்சுக்காரர்கள்
Question 96 Explanation: 
குறிப்பு: பெரிய யானையின் சிற்பத்தை ஸ்ரீபுரியில் கண்ட போர்ச்சுகீசியர்கள் அதற்கு எலிபான்டா என்று பெயரிட்டு அழைத்தனர்.)
Question 97
கி.பி.350 முதல் 550 வரை ஆட்சி புரிந்த பல்லவர்கள் _______மொழியில் பட்டயங்களை வெளியிட்டனர்.
A
பிராகிருதம்
B
வடமொழி
C
கன்னடம்
D
தமிழ்
Question 97 Explanation: 
(குறிப்பு: இக்காலக்கட்டத்தில் முக்கிய ஆட்சியாளர் விஷ்ணுகோபன். இவர் சமுத்திரகுப்தரின் தென்னிந்திய படையெடுப்பின் போது முறியடிக்கப்பட்டார்)
Question 98
யுவான் சுவாங் காஞ்சிக்கு வருகைப் புரிந்த போது ஆட்சியிலிருந்த அரசன்
A
முதலாம் மகேந்திரவர்மன்
B
முதலாம் நரசிம்மவர்மன்
C
ராஜசிம்மன்
D
இரண்டாம் நந்திவர்மன்
Question 98 Explanation: 
(குறிப்பு: காஞ்சி பற்றிய அவரது வருணனை குறிப்பிடத்தக்கது. மிகப் பெரிய, அழகிய நகரான அது ஆறு மைல்கள் சுற்றளவு கொண்டது எனக் கூறியுள்ளார்)
Question 99
சங்கரபக்தன், வாத்யவித்யாதரன், ஆகமப் பிரியன் போன்ற விருதுகளை சூட்டிக் கொண்டவர் யார்?
A
இரண்டாம் பரமேஸ்வரவர்மன்
B
இரண்டாம் நந்திவர்மன்
C
முதலாம் ஆதித்தன்
D
இரண்டாம் நரசிம்மவர்மன்
Question 100
  • கூற்று 1: பாறைகுடைவரை கோவிலைச் செதுக்கும் முறையிலிருந்து, கற்களைக் கொண்டு கட்டுமானக் கோயில்களைக் கட்டும் மாற்றம் ஏற்பட்டதை பல்லவர் கலை உணர்த்துகிறது.
  • கூற்று 2: காஞ்சியிலுள்ள கைலாசநாதர் கோவில் பல்லவர்களின் கலை மற்றும் கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
A
கூற்று 1 தவறு
B
கூற்று 2 தவறு
C
இரு கூற்றுகளும் சரி
D
இரு கூற்றுகளும் தவறு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!