Online Test
தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் – Revision Test in Tamil
தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் -Revision Test in Tamil
Congratulations - you have completed தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் -Revision Test in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
அடிமை வம்சத்தின் மூன்று முக்கிய ஆட்சியாளர்கள் யார்?
- குத்புதீன் ஐபக்
- இல்துமிஷ்
- பால்பன்
- ரஸியா சுல்தனா
1, 2, 3 சரி | |
2, 3, 4 சரி | |
1, 3, 4 சரி | |
1, 3 சரி |
Question 2 |
தவறான தொடரைத் தேர்ந்தெடு.
- அடிமை வம்சத்தை மம்லக் வம்சம் என்றும் கூறுவர்.
- மம்லக் என்பதற்கு உடைமை என்று பொருளாகும்.
- இது 'ஓர் அடிமை' என்பதற்கான அரபுத் தகுதிப் பெயருமாகும்
2 மட்டும் தவறு | |
1, 2 தவறு | |
2 , 3 தவறு | |
அனைத்தும் சரி |
Question 3 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு
குத்புதீன் ஐபக் நான்கு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். | |
குத்புதீன் ஐபக் புத்திசாலி என்றும் நேர்மையான நிர்வாகி என்றும் பெயரெடுத்தார். | |
புகழ்பெற்ற நாளந்தா பெளத்த பல்கலைக்கழகத்தை அழித்தவர் பக்தியார் கில்ஜி. | |
குத்புதீன் ஐபக் 1120 ல் லாகூரில் செளகான் எனும் விளையாட்டின் போது நிகழ்ந்த ஒரு விபத்தில் இறந்தார். |
Question 4 |
சம்சுதீன் இல்துமிஷ் ______இனத்தைச் சார்ந்த குத்புதீன் ஐபக்கின் அடிமை.
மங்கோலிய | |
துருக்கிய | |
ரோமானிய | |
அரேபிய |
Question 4 Explanation:
(குறிப்பு: இல்துமிஷின் மேல்தட்டு அடிமைகள் பலரும் துருக்கிய, மங்கோலிய வழித்தோன்றல்கள். அவர்களை புக்காரா, சாமர்கண்ட், பாக்தாத் போன்ற வணிக மையங்களிலிருந்து வணிகர்கள் தில்லிக்கு அழைத்து வந்தனர்.)
Question 5 |
யாருடைய ஆட்சி தில்லியில் 243 அடி உயரமுள்ள குதுப்மினார் என்ற ஒரு வெற்றித் தூணைக் கட்டியதற்கும் சுல்தான்கள் ஆட்சி காலத்தின் இரண்டு அடிப்படை நாணயங்களான செப்பு, வெள்ளி தங்காவை அறிமுகம் செய்ததற்கும் குறிப்பிடத்தகுந்தது?
குத்புதீன் ஐபக் | |
இல்துமிஷ் | |
பால்பன் | |
செர்ஷா |
Question 6 |
1254 இல், வடமேற்கில் ஷிவாலிக் ஆட்சிப் பகுதிகளின் தளபதியாக இருந்த ______ என்பவர் தில்லியைக் கைப்பற்றினார்.
ஆரம்ஷா | |
ஜலாலுதீன் | |
உலுக்கான் | |
செங்கிஸ்கான் |
Question 6 Explanation:
(குறிப்பு: உலுக்கான் சுல்தானுக்கு துணையாக இருந்த ஆட்சி அதிகாரப் பிரதிநிதி என்று பொருள்படும் நயிப் இ முல்க் என்று பட்டம் சூட்டிக் கொண்டார்.)
Question 7 |
பால்பன் காலத்தில், மேவாரை சுற்றிய அடர்ந்த காட்டுப் பகுதிகளில் வாழ்ந்த _______ என்ற ஓர் இசுலாமியச் சமூகம் கொலையிலும் கொள்ளையிலும் ஈடுபட்டிருந்தது.
பண்டகன் | |
மியோ | |
நிஸ்பா | |
மொய்சு |
Question 7 Explanation:
(குறிப்பு: பால்பன் மியோக்களை அழிக்க தாமே முன்னின்று மேவாரை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினார். அவரின் படை வீரர்கள், மியோக்களைத் தேடிப் பிடித்துக் கொன்றனர்)
Question 8 |
பால்பன் வங்காளத்தின் ஆளுநராக தனக்கு பிடித்த _________ என்னும் அடிமையை நியமித்தார்.
துக்ரில் கான் | |
புக்ரா கான் | |
கைகுபாத் | |
மேயோ கான் |
Question 8 Explanation:
(குறிப்பு: துக்ரில் கான் விரைவிலேயே வெளிப்படையாக கலகத்தில் ஈடுபட்டார். இதனால் பால்பன் அவரைக் கொன்று வங்கத்தின் ஆளுநராக தனது மகன் புக்ரா கானை நியமித்தார்.)
Question 9 |
தில்லியை சுற்றியுள்ள பகுதிகளிலும் தோவாபிலும் நிகழ்ந்த பால்பனின் தாக்குதல்களை ________ குறிப்பிடுகிறார்.
அல்பருனி | |
பாரணி | |
பாஹியான் | |
யுவான் சுவாங் |
Question 9 Explanation:
(குறிப்பு: இந்த தாக்குதல்களின் போது காடுகள் அழிக்கப்பட்டு அந்த நிலங்கள் புதிதாக படையில் சேர்ந்த ஆப்கானியர்களுக்கும் மற்றவர்களுக்கும் குத்தகையில்லா நிலங்களாக வழங்கப்பட்டன)
Question 10 |
______ நூற்றாண்டில் மங்கோலியர்கள் செங்கிஸ்கான் தலைமையில் ஒரு மிகப் பெரிய அரசாட்சியை நிறுவினர்.
11 | |
12 | |
13 | |
14 |
Question 11 |
எந்த ஆண்டு தேவகிரி கோட்டையைக் கைப்பற்றுவதற்காக மாலிக் காஃபூர் தலைமையில் ஒரு பெரும் படையை அலாவுதீன் அனுப்பினார்.
1207 | |
1307 | |
1210 | |
1310 |
Question 11 Explanation:
குறிப்பு: தீபகற்பத்தில் அலாவுதீன் கில்ஜியின் முதல் இலக்கு மேற்கு தக்காணத்திலிருந்த தேவகிரியாகும்.)
Question 12 |
படை வீரர்களுக்கு கொள்ளையில் பங்கு தராமல் பணமாக ஊதியம் வழங்கிய முதல் சுல்தான் யார்?
முகமது பின் துக்ளக் | |
பால்பன் | |
அலாவுதீன் | |
ஜலாலுதீன் |
Question 13 |
துக்ளக் வம்சத்தில் தனது தலைநகரை டெல்லியிலிருந்து தௌலதாபாத்துக்கு மாற்றும் துணிவான முயற்சியை மேற்கொண்டவர் யார்?
ஃபெரோஸ் துக்ளக் | |
கியாசுதீன் துக்ளக் | |
ஜான் கான் | |
ஜலாலுதீன் |
Question 13 Explanation:
(குறிப்பு: முகமது பின் துக்ளக்கின் இயற்பெயர் ஜான் கான்.மகாராஷ்டிராவில் உள்ள தேவகிரிக்கு முகமது பின் துக்ளக் சூட்டிய பெயர் தௌலதாபாத்.)
Question 14 |
முகமது பின் துக்ளக் அறிமுகப்படுத்திய அடையாள நாணய முறை கீழ்க்கண்ட எந்த நாடுகளில் நடைமுறையிலிருந்தது?
மங்கோலியா, சீனா | |
சீனா, ஈராக் | |
ரஷ்யா, சீனா | |
சீனா, ஈரான் |
Question 14 Explanation:
(குறிப்பு: இந்தியாவில் நாணயங்களின் மதிப்பு அதிலிருந்த வெள்ளி உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன. ஆனால் துக்ளக்கின் முயற்சியினால் வெண்கல நாணயங்களைப் போலியாக அடிப்பது எளிதாயிருந்தது.)
Question 15 |
முகமது பின் துக்ளக் வேளாண்மையைக் கவனித்துக் கொள்ள ______ என்ற தனித்துறையை ஏற்படுத்தினார்.
திவானி இன்ஷா | |
திவான்-இ-அமிர்கோஹி | |
நாயப் -இ-ரியாசத் | |
திவானி ரியாசத் |
Question 16 |
இந்தியாவில் முதன் முறையாக இஸ்லாமியர் அல்லாதார் மீது ஜிஸியா வரியை விதித்தவர் யார்?
முகமது பின் துக்ளக் | |
அக்பர் | |
ஒளரங்கசீப் | |
குத்புதீன் ஐபக் |
Question 17 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு
ஃபெரோஸ் துக்ளக்கிடம் ஓர் உயரதிகாரியாக இருந்த புகழ் பெற்ற கான்-இ-ஜஹன் இசுலாமுக்கு மாறிய ஒரு பிராமணர் | |
ஃபெரோஸ் துக்ளக் காலத்தில் 1,80,000 அடிமைகளின் நல்வாழ்க்கையில் அடிமைகள் நலத்துறை அக்கறை செலுத்தியது. | |
ஃபெரோஸ் காலத்திய ஒரே பெரிய இராணுவப் படையெடுப்பு வங்கத்தின் மீது தொடுக்கப்பட்டதாகும். | |
கடைசி துக்ளக் அரசர் நசுருதீன் முகமது ஷா ஆவார். |
Question 17 Explanation:
(குறிப்பு : ஃபெரோஸ் காலத்திய ஒரே பெரிய இராணுவப் படையெடுப்பு சிந்துவின் மீது தொடுக்கப்பட்டதாகும்.)
Question 18 |
கிசர் கான் நிறுவிய சையது வம்சத்தில் 1451 வரையிலும் எத்தனை சுல்தான்கள் ஆண்டனர்?
3 | |
4 | |
5 | |
6 |
Question 18 Explanation:
(குறிப்பு: முற்பட்ட சையது சுல்தான்கள் தைமூரின் மகனுக்கு திறை செலுத்தி ஆட்சி புரிந்தனர். அவர்களின் ஆட்சியை யாஹியா-பின்-அஹ்மத் சிரிந்தி இயற்றிய தாரிக் -இ-முபாரக்-சாஹி குறிப்பிடுகிறது.)
Question 19 |
1504 ல் தலைநகரை தில்லியிலிருந்து ஆக்ராவுக்கு மாற்றிய லோடி வம்ச அரசர் யார்?
பஹ்லோல் லோடி | |
சிக்கந்தர் லோடி | |
இப்ராஹிம் லோடி | |
தௌலத்கான் லோடி |
Question 19 Explanation:
(குறிப்பு: லோடி ஆட்சியாளர்களில் சிக்கந்தர் லோடியே புகழ்மிக்கவர்.)
Question 20 |
பூமியில் கடவுளின் பிரதிநிதியாகத் தாம் ஆட்சி செய்வதாக கூறிய டெல்லி சுல்தான் யார்?
அலாவுதீன் கில்ஜி | |
பால்பன் | |
குத்புதீன் ஐபக் | |
முகமது பின் துக்ளக் |
Question 20 Explanation:
(குறிப்பு: மதத்தின் பரிந்துரைகள் குறித்து தாம் கவலைப்படவில்லை என்று கூறிக்கொண்டு அலாவுதீன் கில்ஜி முழு அதிகாரத்தைக் கோரினார்)
Question 21 |
“ஒன்பது வானங்கள்" என்னும் நூலில் தம்மை ஓர் இந்தியன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமிதம் கொண்டவர் யார்?
பரனி | |
அல்பரூனி | |
அமிர் குஸ்ரு | |
சம்சுதீன் சிராஜ் அஃபிஃப் |
Question 21 Explanation:
(குறிப்பு: இந்நூலில் அவர் இந்தியாவின் வானிலையை, அதன் மொழிகளை குறிப்பாக சமஸ்கிருதத்தை அதன் கலைகளை, இசையை, மக்களை, அதன் விளங்குகளையும் கூட போற்றுகிறார்.)
Question 22 |
அரச பதவியை விடுத்து, தில்லியிலிருந்து விலகி முப்பதாண்டுகள் அமைதியில் வாழ்ந்த ஒரே சுல்தான்
முபாரக் ஷா | |
ஆலம் ஷா | |
கிசர் கான் | |
துக்ரில் கான் |
Question 23 |
பொருத்துக
-
- ராமச்சந்திரா i) காகதீய
- கான்-இ-ஜஹான் ii) பத்மாவத்
- மாலிக் முஹமத் ஜெய்சி iii) மான்சிங்
- மன் மந்திர் iv) தேவகிரி
ii i iv iii | |
i ii iii iv | |
iv i ii iii | |
iii i ii iv |
Question 24 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
-
- குத்புதீன் ஐபக் நிறுவிய குத்பி மரபு (1206-1211)
- இல்துத்மிஷ் நிறுவிய முதல் இல்பாரி மரபு (1211 - 1266)
- பால்பன் நிறுவிய இரண்டாவது இல்பாரி மரபு (1266-1290)
அனைத்தும் சரி | |
2 மட்டும தவறு | |
3 மட்டும் தவறு | |
2, 3 தவறு |
Question 25 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
-
- குத்புதீன் ஐபக் நிறுவிய குத்பி மரபு (1206-1211)
- இல்துத்மிஷ் நிறுவிய முதல் இல்பாரி மரபு (1211 - 1266)
- பால்பன் நிறுவிய இரண்டாவது இல்பாரி மரபு (1266-1290)
அனைத்தும் சரி | |
2 மட்டும தவறு | |
3 மட்டும் தவறு | |
2, 3 தவறு |
Question 25 Explanation:
(குறிப்பு: அடிமை வம்சம் மாம்லுக் வம்சம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பொருள் அடிமை. கி.பி 1206 முதல் 1290 வரை அடிமை வம்சம் டெல்லியில் ஆட்சிபுரிந்தது.)
Question 26 |
முஸ்லீம் எழுத்தாளர்களால் ‘லாக் பக்ஷ்’ என அழைக்கப்பட்டவர் யார்?
குத்புதீன் ஐபக் | |
இல்துத்மிஷ் | |
பால்பன் | |
அலாவுதீன் |
Question 26 Explanation:
(குறிப்பு: முஸ்லீம் எழுத்தாளர்களுக்கு தாராளமாக கொடைகளை வழங்கியதால் அவ்வாறு அழைக்கப்பட்டார். ஹசன் நிசாமி என்ற சிறந்த அறிஞரை ஐபக் ஆதரித்தார்.)
Question 27 |
இல்துத்மிஷ் ______ ஆண்டு காலிப்பிடம் இருந்து அனுமதி பத்திரத்தை பெற்று இந்தியாவின் சட்ட முறையான ஆட்சியாளரானார்.
1211 | |
1229 | |
1230 | |
1232 |
Question 27 Explanation:
(குறிப்பு : இல்துத்மிஷ் அஜ்மீரில் அழகிய மசூதி ஒன்றையும் கட்டினார்.)
Question 28 |
புதிய தலைநகர் சீரி மற்றும் புகழ் வாய்ந்த நுழைவாயிலான ‘அலை தர்வாசா' என்ற கட்டிடத்தையும் கட்டியவர் யார்?
குத்புதீன் ஐபக் | |
இல்துத்மிஷ் | |
பால்பன் | |
அலாவுதீன் |
Question 28 Explanation:
(குறிப்பு: அலாவுதீன் கில்ஜி, தனது மாமனாரான ஜலாலுதீன் கில்ஜியை சதி செய்து கொன்றுவிட்டு டெல்லி அரியணையைக் கைப்பற்றினார்)
Question 29 |
சிறந்த இலக்கிய, சமய மற்றும் தத்துவக் கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றிருந்த ஒரே டெல்லி சுல்தான் யார்?
அலாவுதீன் கில்ஜி | |
கியாசுதீன் துக்ளக் | |
முகமது பின் துக்ளக் | |
பிரோஸ் துக்ளக் |
Question 29 Explanation:
(குறிப்பு: முகமது பின் துக்ளக்கின் சமகால எழுத்தாளர்களான ஈசாமி, பரானி, இபன் பதூதா போன்றவர்கள் துக்ளக்கின் ஆளுமை குறித்து தெளிவாக குறிப்பிடவில்லை.)
Question 30 |
பிரோஸ் துக்ளக் குறித்த கூற்றுகளில் தவறானது எது?
ஜும்மா மசூதி, குதுப்மினார் போன்ற பழைய சின்னங்களை செப்பனிட்டார். | |
அனாதைகள் மற்றும் கைம்பெண்கள் நலனுக்காக திவானி கைரத் என்ற புதிய துறையை உருவாக்கினார். | |
பரானி, அபிப் போன்ற அறிஞர்களை ஆதரித்தார். | |
ஷியா முஸ்லிம்களையும், சூஃபித்துறவிகளையும், இந்துக்களையும் சமய சகிப்புத்தன்மையுடன் நடத்தினார் |
Question 30 Explanation:
(குறிப்பு: உலோமாக்களின் பேச்சை மதித்து நடந்த பிரோஸ் ஷியா முஸ்லிம்களையும், சூஃபித்துறவிகளையும் சமய சகிப்புத்தன்மையுடன் நடத்தவில்லை. இந்துக்களின் மீது விதிக்கப்படும் ஜிஸியா வரியை கட்டாயமாக்கினார்)
Question 31 |
அலாவுதீன் கில்ஜி காலத்தில் தென்னிந்திய படையெடுப்புக்கு தளபதியாக இருந்தவர்.
அலாவுதீன் கில்ஜி | |
குத்புதீன் ஐபக் | |
மாலிக்காபூர் | |
ஜலாலுதீன் கில்ஜி |
Question 31 Explanation:
(குறிப்பு: தேவகிரியாதவர்கள், வாரங்கல் காகதீயர்கள், துவார சமுத்திரத்தில் ஹோய்சாளர்கள், மதுரை பாண்டியர்கள் ஆகியோர் மீது மாலிக் கபூர் படையெடுத்தார்)
Question 32 |
திவானி அர்ஸ் என்ற ராணுவத் துறையை ஏற்படுத்தி ராணுவ நிர்வாகத்தை சீரமைத்தவர் யார்?
குத்புதீன் ஐபக் | |
இல்துத்மிஷ் | |
பால்பன் | |
அலாவுதீன் |
Question 33 |
தாங்கா என்ற அராபிய நாணய முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர்
அலாவுதீன் கில்ஜி | |
இல்துத்மிஷ் | |
முகமது பின் துக்ளக் | |
பிரோஸ் துக்ளக் |
Question 33 Explanation:
(குறிப்பு: தாங்கா என்ற அராபிய வெள்ளி நாணயம் 175 கிராம் எடை கொண்டது)
Question 34 |
சரியான வரிசையை தேர்ந்தெடு.
கில்ஜி – மாம்லுக் – துக்ளக் - சையது - லோடி | |
மாம்லுக் - துக்ளக் - கில்ஜி - லோடி – சையது | |
மாம்லுக் - கில்ஜி – துக்ளக் - சையது – லோடி | |
மாம்லுக் – துக்ளக் - கில்ஜி – சையது – லோடி |
Question 35 |
டெல்லி சுல்தானியத்தின் மாகாண ஆளுநர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
ஷிக்தர்கள் | |
முக்திகள் | |
பட்வாரிகள் | |
சௌத்ரிகள் |
Question 35 Explanation:
(குறிப்பு: டெல்லி சுல்தானியத்தின் மாகாண ஆளுநர்கள் முக்திகள் அல்லது வாலிஸ் என்று அழைக்கப்பட்டனர். சட்டம், ஒழுங்கை பராமரிப்பது, நிலவரி வசூலிப்பது அவர்களது முக்கிய பணியாகும்.)
Question 36 |
கோரா மற்றும் சனம் போன்ற புதிய ராகங்களை அறிமுகப்படுத்தியவர் யார்?
பீர்போதன் | |
ராஜாமன்சிங் | |
அமிர்குஸ்ரு | |
அல்பருனி |
Question 36 Explanation:
(குறிப்பு: அமிர் குஸ்ரு இந்து மற்றும் ஈரானிய முறைகளை ஒன்றிணைத்து குவாலிஸ் என்ற புதிய வகை மெல்லிசைகளையும் அவர் உருவாக்கினார். சிதார் இசைக்கருவியும் அவரது கண்டுபிடிப்பே.)
Question 37 |
தவறான தொடரை தேர்ந்தெடு.
-
- இக்தா - அதிகாரிகளுக்கு ஊதியத்திற்கு பதிலாக அளிக்கப்பட்ட மான்யங்கள்.
- காலிசா - சுல்தானின் நேரடி நிர்வாகத்தில் இருந்த நிலங்கள். அதிலிருந்து பெறப்பட்ட வருவாய் அரசவை செலவினங்களுக்கு பயன்படுத்தப்பட்டது.
- இனாம் -சமயத் தலைவர்களுக்கும், சமய நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட நிலங்கள்.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 37 Explanation:
(குறிப்பு : பொதுவாக விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கை குடியானவர்கள் வரியாக செலுத்தினர்)
Question 38 |
பொருத்துக.
-
- மின்ஹஜ்-உஸ்- சிராஜ் i) ராஜதரங்கிணி
- அமிர்குஸ்ரு ii) தபாகத்-இ-நாசரி
- கல்ஹணர் iii) கிதாப்-உல்-ஹிந்த்
- அல்பரூனி iv) சபாக்-இ-ஹிந்த்
ii i iv iii | |
iv iii ii i | |
ii iv i iii | |
ii iii i iv |
Question 39 |
அலாவுதீன் கில்ஜியின் வெற்றிகளைக் கூறும் ________ என்ற நூலை அமிர் குஸ்ரு எழுதியுள்ளார்.
தபாகத்-இ-நாசரி | |
சபாக்-இ-ஹிந்த் | |
காசெய்ன்-உல்- ஃபுரூ | |
கிதாப்-உல்-இந்த் |
Question 40 |
டெல்லியிலுள்ள கோட்லா கோட்டையை அமைத்தவர்
பிரோஸ் துக்ளக் | |
இல்துத்மிஷ் | |
அலாவுதீன் கில்ஜி | |
சிக்கந்தர் லோடி |
Question 40 Explanation:
(குறிப்பு: டெல்லி சுல்தான்கள் சிகப்பு, மஞ்சள் நிறங்களாலான பளிங்கு கற்களையும், மணற்பாறைகளையும் பயன்படுத்தி கட்டிடங்களை அவர்கள் பல வண்ணங்களில் அமைத்தனர்.)
Question 41 |
"பால்பன், ஒரு அடிமையாக, தண்ணீர் சுமக்கும் தொழிலாளியாக, வேட்டைக்காரனாக, தளபதியாக, இராஜதந்திரியாக, சுல்தானாக வாழ்ந்தவர். அதோடு டெல்லி சுல்தான்களில் குறிப்பிடத்தக்கவர்” என்று கூறியவர் யார்?
லேன்பூல் | |
பாபர் | |
ஜான் மார்ஷல் | |
சார்லஸ் மேனன் |
Question 42 |
பிரோஸ் துக்ளக் வசூலித்த வரிகளில் தவறானது எது?
கரோஜ் - விளைச்சலில் 1/10 பங்கு | |
கம்ஸ் - போர்களில் கைப்பற்றிய பொருட்களில் 1/3 பங்கு | |
பெஸியா தலைவரி | |
ஜகாத் - குறிப்பிட்ட இஸ்லாமிய மதச்சடங்குகளைச் செய்வதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் . |
Question 42 Explanation:
(குறிப்பு: கம்ஸ் - போர்களில் கைப்பற்றிய பொருட்களில் 1/10 பங்கு)
Question 43 |
காபூல் மன்னர் பாபரை இந்தியா மீது படையெடுக்கும்படி அழைத்தவர்
பஹ்லுல் லோடி | |
இப்ராஹீம் லோடி | |
தௌலத்கான் லோடி | |
தில்வர்கான் லோடி |
Question 43 Explanation:
(குறிப்பு: தௌலத்கான் லோடியின் மகன் தில்வர்கான் லோடியை, இப்ராஹிம் லோடி கொடுமைப்ப௹த்தியதால் தௌலத்கான் லோடி காபூல் மன்னர் பாபரை உதவிக்கு அழைத்தார்.)
Question 44 |
சுல்தான்களின் அமைச்சர்களில் தவறான இணையைத் தேர்ந்தெடு.
திவானி ரிஸாலத் - வெளியுறவு அமைச்சர் | |
சுதர்- உஸ்-சாதர் - அஞ்சல் துறை அமைச்சர் | |
வசீர் - பிரதம அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் | |
காஸி-உல்-கஸாத் – நீதித்துறை அமைச்சர் |
Question 45 |
‘ இந்திய கிளி' என்று அழைக்கப்பட்ட கவிஞர் _____ ஆவார்.
அல்பெருணி | |
கைகுபாத் | |
அமிர்குஸ்ரு | |
அமீர் ஹாசன் |
Question 45 Explanation:
(குறிப்பு: சிறந்த பாரசீக மொழிக் கவிஞரான அமிர்குஸ்ரு சுமார் 4,00,000 ஈரடிச் செய்யுள்களை எழுதியுள்ளார். இவரது கவிதைகளில் நிறைய இந்தி சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.)
Question 46 |
_______ ஆண்டு கான்வா போர்க்களத்தில் பாபர் அரும்பாடுபட்டு ராணா சங்காவை வெற்றி கொண்டார்.
கி.பி.1526 | |
கி.பி.1527 | |
கி.பி.1528 | |
கி.பி. 1529 |
Question 46 Explanation:
(குறிப்பு: பானிபட் போரில் பாபர் வெற்றி பெற்றாலும் மீவாரை ஆட்சி செய்த இராஜபுத்திர மன்னர் ராணாசங்கா பாபருக்கு பெரும் சவாலாக அமைந்தார். இதனால் கான்வா போர் நடைபெற்றது)
Question 47 |
பாபர் தன் சுயசரிதை நூலான துசுக்-கி-பாபரி அல்லது பாபரின் நினைவுகள் என்னும் நூலை ________மொழியில் எழுதியுள்ளார்.
உருது | |
சமஸ்கிருதம் | |
துருக்கிய | |
கிரேக்க |
Question 47 Explanation:
( குறிப்பு: பாபர் சிறந்த போர் வீரராகவும், அறிஞராகவும், கவிஞராகவும் விளங்கினார்.)
Question 48 |
பொருத்துக.
-
- இராணாசங்கா i) 1582
- தீன்-இலாஹி ii) வருவாய் முறை
- இரண்டாம் பானிபட்டுப் போர் iii) மீவார் நாட்டு அரசர்
- இராஜாதோடர்மால் iv) 1556
ii iii iv i | |
iii i iv ii | |
ii iv i iii | |
iii i iv ii |
Question 49 |
ஜாகிருதின் முகம்மது பாபர் ______ ஆண்டு மத்திய ஆசியாவிலுள்ள பர்கானா நிலப்பகுதியை ஆட்சி செய்த உமர் ஷேக் மிர்ஷா என்பவருக்கு மூத்த மகனாக பிறந்தார்.
கி.பி.1473 | |
கி.பி.1483 | |
கி.பி.1493 | |
கி.பி. 1463 |
Question 50 |
பாபர் தனது தந்தை மறைவிற்கு பிறகு தனது ______ வயதில் பர்கானாவின் ஆட்சி பொறுப்பை ஏற்றார்.
11 | |
12 | |
13 | |
14 |
Question 50 Explanation:
(குறிப்பு: பாபர் தந்தை வழியில் துருக்கியைச் சார்ந்த தைமூர் இனத்தையும், தாய் வழியில் மங்கோலிய இனத்தை சார்ந்த செங்கிஸ்கான் இனத்தையும் வழித்தோன்றலாக கொண்டிருந்தார்.)
Question 51 |
பாபர் கி.பி.1529 ஆம் ஆண்டு கோக்ரா போரில் யாரை தோற்கடித்து முகலாயப் பேரரசினை இந்தியாவில் நிலைநாட்டினார்?
இப்ராஹிம் லோடி | |
தௌலத்கான் லோடி | |
தில்வர்கான் லோடி | |
முகம்மது லோடி |
Question 52 |
பாபரால் தோற்றுவிக்கப்பட்ட முகலாயப் பேரரசு யாரால் பலப்படுத்தப்பட்டது?
உமாயூன் | |
ஷெர்ஷா | |
அக்பர் | |
அசோகர் |
Question 53 |
கி.பி 1539 ம் ஆண்டு _______ என்ற இடத்தில் நடைபெற்ற போரில் ஷெர்கானிடம் உமாயூன் தோல்வியுற்றார்.
சௌஷா | |
கைகுபாத் | |
கான்வா | |
கன்னோசி |
Question 53 Explanation:
(குறிப்பு: 1540 ஆம் ஆண்டு கன்னோசிப் போரிலும் தோல்வியுற்று உமாயூன் 15 ஆண்டுகள் நாடோடியாக வாழ்ந்தார்.)
Question 54 |
ஜோன்பூரை ஆட்சி செய்த ஆப்கானிய கவர்னர் ______ என்ற பட்டத்தை ஃபரித் என்பவருக்கு வழங்கினார்.
சூர் | |
ஷெர்கான் | |
உமாயூன் | |
லோடி |
Question 54 Explanation:
(குறிப்பு: ஃபரித்தால் (ஹெர்ஷா சூர்) நிறுவப்பட்ட பேரரசு ‘சூர்' வம்சம் என அழைக்கப்பட்டது.)
Question 55 |
______ ஆண்டு பண்டேல்கண்டை ஆட்சி செய்த அரசருக்கெதிராக செர்ஷா தனது கடைசி படையெடுப்பை மேற்கொண்டார்.
1545 | |
1556 | |
1554 | |
1565 |
Question 55 Explanation:
(குறிப்பு: கலஞ்சார்கோட்டை முற்றுகையின் போது எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த வெடி விபத்தில் ஷெர்ஷா மரணமடைந்தார்.)
Question 56 |
குதிரைப்படையில் குதிரைக்கு சூடு போடும் தாக் முறையினை அறிமுகப்படுத்தியவர் யார்?
உமாயூன் | |
ஷெர்ஷா | |
அக்பர் | |
பால்பன் |
Question 56 Explanation:
(குறிப்பு: ஷெர்ஷா காலத்தில் குதிரைப்படை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.)
Question 57 |
ஷெர்ஷாவின் நாணய சீர்திருத்தம் குறித்த கூற்றுகளில் தவறானது எது?
புழக்கத்திலிருந்த பழைய உலோக நாணயங்களை ரத்து செய்தார். | |
வெள்ளி மற்றும் செப்பு நாணயங்களுக்கு ஒப்பீட்டு விகிதாச்சாரத்தை நிர்ணயம் செய்தார். | |
நாணயங்களில் தனது பெயரினை துருக்கிய மொழியில் பொறிக்க செய்தார். | |
நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்படுகிறார். |
Question 57 Explanation:
(குறிப்பு: நாணயங்களில் தனது பெயரினை தேவநாகிரி மொழியில் பொறிக்க செய்தார்.)
Question 58 |
ஜலாலுதீன் முகம்மது அக்பர் _____ ஆண்டு அமரக்கோட்டையில் பிறந்தார்.
1524 நவம்பர் 22 | |
1524 நவம்பர் 23 | |
1542 நவம்பர் 22 | |
1542 நவம்பர் 23 |
Question 58 Explanation:
குறிப்பு: அக்பர் தனது பதினான்காவது வயதில் 1556ல் பேரரசராக முடிசூட்டப்பட்டார். பைராம்கான் அக்பரின் பாதுகாப்பாளராக உமாயூனால் நியமிக்கப்பட்டார்.)
Question 59 |
முஸ்லீம்கள் அல்லாதவர்களிடம் நல்லாதரவைப் பெற, ஒற்றுமையை வளர்க்க ஜிசியா மற்றும் புனிதப் பயணவரியினை ரத்து செய்தவர் யார்?
உமாயூன் | |
ஷெர்ஷா | |
அக்பர் | |
பால்பன் |
Question 59 Explanation:
(குறிப்பு: அக்பர் ராஜபுத்திரர்களோடு நட்பு பாராட்டினார். ஜெய்ப்பூர் இளவரசி ஜோத்பாயை அக்பர் மணந்தார்.)
Question 60 |
______ என்பவர் இதிகாச நூல்களாகிய இராமாயணம் மற்றும் மகாபாரதத்தை பாரசீக மொழியில் மொழிபெயர்த்தார்.
அபுல் பாசல் | |
அபுல் பைசி | |
தான்சென் | |
அமிர்குஸ்ரு |
Question 60 Explanation:
(குறிப்பு: அபுல்பாசல் மற்றும் அவரின் சகோதரர் அபுல்பைசி பல வடமொழி நூல்களை பாரசீக மொழியில் மொழி பெயர்த்தனர்.)
Question 61 |
_______ ஆண்டு அக்பர் இபாதத் கானா என்ற தொழுகை இல்லத்தைக் கட்டி பல்வேறு மதத் தலைவர்களை அழைத்து சமயத்தின் நற்கூறுகளை ஆய்வு செய்தார்.
கி.பி.1576 | |
கி.பி. 1575 | |
கி.பி.1578 | |
கி.பி. 1582 |
Question 61 Explanation:
( குறிப்பு: கி.பி.1582ல் அக்பர் தீன் இலாஹி அல்லது தெய்வீக மதத்தினை வெளியிட்டார்.)
Question 62 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
ஜஹாங்கீர் கி.பி.1605 ஆம் ஆண்டு அரியணை ஏறினார். | |
ஜஹாங்கீரினால் கொல்லப்பட்ட ஐந்தாவது சீக்கிய குரு அர்சுன் தேவ். | |
ஜஹாங்கீர் தன்னுடைய சுய சரிதையை துசுக்-இ-ஜஹாங்கிரி என்ற பெயரில் எழுதியுள்ளார். | |
இவர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நீதிமணி ஷபர்ஜ் அரண்மனையில் ஒரு கட்டப்பட்டு மறுமுனை கங்கை ஆற்றின் கரையில் ஒரு கல்தூணில் இணைக்கப்பட்டிருந்தது. |
Question 62 Explanation:
குறிப்பு: ஜஹாங்கீர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நீதிமணி ஷபர்ஜ் அரண்மனையில் ஒரு கட்டப்பட்டு மறுமுனை யமுனை ஆற்றின் கரையில் ஒரு கல்தூணில் இணைக்கப்பட்டிருந்தது.)
Question 63 |
மொகலாயர் மாகாண நிர்வாகத்தின் சரியான வரிசையைத் தேர்ந்தெடு.
அரசு - சுபா - மாகாணங்கள் – சர்க்கார் – பர்கானாக்கள் - கிராமங்கள் | |
அரசு -சர்க்கார் - சுபா - மாகாணங்கள் - பர்கானாக்கள் – கிராமங்கள் | |
அரசு - மாகாணங்கள் - சுபா - சர்க்கார் - பர்கானாக்கள் – கிராமங்கள் | |
அரசு -சுபா - மாகாணங்கள் - பர்கானாக்கள் - சர்க்கார் – கிராமங்கள் |
Question 64 |
இரண்டாம் பானிபட் போரில் அக்பரால் தோற்கடிக்கப்பட்டவர் யார்?
ஷெர்ஷா | |
பைரம்கான் | |
மாகம் அனாகா | |
ஹெமு |
Question 64 Explanation:
(குறிப்பு: வங்காளத்தை ஆண்ட முகம்மது ஷாவிடம் பிரதம மந்திரியாக இருந்த ஹெமு அக்பரை தோற்கடித்து டெல்லியை கைப்பற்ற எண்ணினார். இதனால் இரண்டாவது பானிபட் போர் கி.பி.1556ல் நடந்தது)
Question 65 |
ஷெர்ஷா ______ன் முன்னோடி என அழைக்கப்படுகிறார்.
அக்பர் | |
உமாயூன் | |
ஷாஜஹான் | |
ஒளரங்கசீப் |
Question 65 Explanation:
(குறிப்பு: ஷெர்ஷாவின் ஆட்சி காலத்தில் பணியாற்றிய இராஜாதோடர்மால் வருவாய் துறை அமைச்சராக அக்பரிடம் பணியாற்றினார். எனவே அக்பர் ஷெர்ஷாவின் அடிச்சுவட்டை பின்பற்றினார்.)
Question 66 |
_______ ஆட்சி காலம் முகலாயர் ஆட்சியின் பொற்காலம் என்றழைக்கப்படுகிறது.
பாபர் | |
அக்பர் | |
ஷாஜகான் | |
ஒளரங்கசீப் |
Question 66 Explanation:
(குறிப்பு: முகலாய பேரரசு ஷாஜகானின் ஆட்சியில் புகழின் உச்சியை அடைந்தது. கட்டடக்கலையின் விந்தைகள் இப்பேரரசின் பொருளாதார செழிப்பினை பறைசாற்றுகிறது)
Question 67 |
தவறான தொடரைத் தேர்ந்தெடு.
-
- பீரங்கியைப் பயன்படுத்தும் ராணுவப் படைப்பிரிவு artillery ஆகும்.
- வெடிமருந்து முதன் முதலில் சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்டு கி.பி. 13 ம் நூற்றாண்டில் ஐரோப்பாவை அடைந்தது.
- பாபருக்கு முன்பாக இந்தியாவில் போர்களில் பீரங்கிகள் பயன்படுத்தவில்லை.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 68 |
கீழ்க்கண்டவற்றுள் தக்காண சுல்தானியம் என்று அழைக்கப்படும் பகுதிகள் எவை?
- கோல்கொண்டா 2. பீஜப்பூர் 3. அகமதுநகர் 4. பூனா 5. அகமதாபாத்
1, 2, 3 சரி | |
2, 3,5 சரி | |
1, 2, 4 சரி | |
2, 3, 4 சரி |
Question 69 |
முகலாயர் காலத்துக் டச்சு குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட் ஆண்டுகளில் தவறான இணை எது?
மசூலிப்பட்டினம் -1605 | |
புலிக்காட் – 1601 | |
சூரத் – 1616 | |
காரைக்கால் – 1645 |
Question 70 |
ஷாஜகானின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர்கள் குறித்த கூற்றுகளில் தவறான இணையைத் தேர்ந்தெடு.
பெர்னியர் - பிரெஞ்சு மருத்துவர், பயணி | |
மான்டெல்சோ - ஜெர்மன் பயணி, துணிச்சல் வீரர் | |
பீட்டர் முன்டி- பிரெஞ்சு வைர வியாபாரி | |
மனுச்சி - இத்தாலிய எழுத்தாளர் மற்றும் பயணி |
Question 71 |
வட்ட வடிவக் குவிமாட வடிவிலான கோல்கும்பாஸ் ______ வம்சத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.
முகலாயர் | |
அடில்ஷாஹி | |
கில்ஜி | |
ஐரோப்பியர் |
Question 72 |
_______ என்று அழைக்கப்பட்ட கிராமத் தலைவர்கள் கிராமத்தின் நிர்வாக உறுப்பான பஞ்ச் என்ற அமைப்பினை உருவாக்கினர்.
மன்சப்தார் | |
ஹக்கீம் | |
ஜமீன் | |
முக்காடம் |
Question 72 Explanation:
(குறிப்பு: கிராம அளவில் வரிகளை வசூலிப்பதும் அவை தொடர்பான கணக்குகளைப் பராமரிப்பதும் இப்பஞ்சாயத்தின் பொறுப்பாகும்.)
Question 73 |
_______பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பதினான்காம் லூயி ஆகியோர் சமகாலத்தவர்கள்.
அக்பர் | |
ஜஹாங்கீர் | |
ஷாஜகான் | |
ஒளரங்கசீப் |
Question 73 Explanation:
குறிப்பு: ஷாஜகான் காலத்தில்தான் அரசருக்காகப் புகழ்பெற்ற மயிலாசனம் செய்யப்பட்டது.)
Question 74 |
கப்பலின் ஒட்டகம் என சொல்லப்படும் தொழில்நுட்பத்தை உலகத்திலேயே கண்டறிந்த முதல் அரசர் ______ ஆவார்.
அக்பர் | |
ஷாஜகான் | |
ஷெர்ஷா | |
பாபர் |
Question 74 Explanation:
(குறிப்பு: இத்தொழில் நுட்பத்தின் படி ஒரு பெரிய படகின் மீதே கப்பல் கட்டப்படும். அவ்வாறு கட்டப்படுவது அக்கப்பல்களை கடலுக்குள் கொண்டு செல்வதை எளிதாக்கியது
Question 75 |
ஜஹாங்கீர் மற்றும் ______அமைத்த ஷாலிமார் தோட்டங்கள் இந்திய தோட்டக்கலையில் குறிப்பிடத்தக்க வையாகும்.
அக்பர் | |
ஷாஜகான் | |
ஹூமாயூன் | |
ஒளரங்கசீப் |
Question 76 |
கீழே உள்ள ஆட்சியாளர்களுள் யார் அக்பரின் சமகாலத்தவர் இல்லை?
இங்கிலாந்தின் எலிசபெத் | |
ஷேக்ஸ்பியர் | |
பிரான்சின் நான்காம் ஹென்றி | |
இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி |
Question 77 |
சரியான கூற்றை தேர்ந்தெடு
-
- ராணா சங்காவின் மூர்க்கமான வலிமை வாய்ந்த படைகள் பாபரின் சக்தி வாய்ந்த படையை எதிர்கொண்டது.
- கன்னோசி போருக்குப் பின் அக்பர் நாடு இல்லாத ஒரு இளவரசர் ஆனார்.
1 சரி | |
2 சரி | |
1, 2 சரி | |
1 சரி 2 தவறு |
Question 78 |
- கூற்று: ஒளரங்கசீப்பின் ஆட்சியின் இறுதியில் முகலாயப் பேரரசின் அழிவு ஆரம்பமாயிற்று.
- காரணம்: ஒளரங்கசீப் தக்காண அரசர்களிடம் நட்புறவாக இருந்தார்.
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல | |
கூற்று சரி; காரணம் சரியான விளக்கம் ஆகும் | |
கூற்று தவறு, காரணம் சரி | |
கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும். |
Question 79 |
கீழ்க்கண்டவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது.
பாஸ்கராச்சார்யா - நீதிநெறி விளக்கம் | |
ஆமுக்தமால்யதா – கிருஷ்ணதேவராயர் | |
ஜகன்னாத பண்டிதர் – ரசகங்காதரா | |
அல்லசானி பெத்தண்ணா – மனுசரித்ரா |
Question 80 |
பொருத்துக.
-
- அபுல் பாசல் i) ஒளரங்கசீப்
- ஜூம்மா மசூதி ii) அக்பர்
- பாதுஷாஹி மசூதி iii) ஷெர்ஷா
- புராண கிலா iv) ஷாஜகான்
ii iv i iii | |
iii ii i iv | |
iii i iv ii | |
i iii ii iv |
Question 81 |
சரியான கூற்றைத் தேர்ந்தெடு
- ஷெர்ஷா மேற்கில் உள்ள சிந்து முதல் வங்காளத்தில் உள்ள சோனர்கான் வரையிலான கிராண்ட் டிரங்க் சாலையை சீர்படுத்தினார்.
- அக்பர் தனது மிகப் பெரிய படையெடுப்புகளின் மூலமாக மாபெரும் பேரரசிற்கு அடித்தளம் இட்டார்
1 சரி | |
2 சரி | |
1, 2 சரி | |
1, 2 தவறு |
Question 82 |
மன்சப்தாரி முறை குறித்த கூற்றுகளில் தவறான தொடரை தேர்ந்தெடு
குறைந்தபட்ச தகுதி நிலை மன்சப்தார் 10, அதிகபட்ச தகுதி மன்சப்தார் 5000 | |
இது அனைத்து வகையான குடிமக்களுக்கும் வழங்கப்பட்டது. | |
சத் என்பது ஒருவரது தனிப்பட்ட அந்தஸ்தைக் குறிப்பதாகும். | |
சாவர் என்பது ஒருவர் வைத்திருக்க வேண்டிய குதிரை வீரர்களின் எண்ணிக்கை அடிப்படையிலானது. |
Question 82 Explanation:
( குறிப்பு: மன்சப்தாரி முறை உயர்குடியினருக்கு மட்டுமே வழங்கப்பட்டது)
Question 83 |
அக்பரின் மறைவுக்குப் பிறகு 1605 ஆம் ஆண்டு இளவரசர் சலீம் _____ என்ற பட்டத்தோடு ஆட்சிக்கு வந்தார்.
உமாயூன் – நல்வாய்ப்பு | |
உமாயூன் – அதிர்ஷ்டசாலி | |
ஜஹாங்கீர் - உலகை வென்றவர் | |
ஜஹாங்கீர் - இந்தியாவை வென்றவர் |
Question 83 Explanation:
(குறிப்பு: 1611 ஆம் ஆண்டு ஜஹாங்கீர் மெஹருனிசாவை மணந்து கொண்டார். அவர் நூர்ஜஹான் (உலகின் ஒளி) என்று அழைக்கப்பட்டார்.)
Question 84 |
ஷெர்ஷா மேம்படுத்திய நான்கு முக்கிய பெருவழி சாலைகளில் தவறானது எது?
சோனார்கான் - சிந்து | |
ஆக்ரா – புர்ஹாம்பூர் | |
ஜோத்பூர் – சித்தூர் | |
ஆக்ரா – சிந்து |
Question 84 Explanation:
(குறிப்பு: நான்கு முக்கிய பெருவழி சாலைகள்
1. சோனார்கான் - சிந்து
2. ஆக்ரா – புர்ஹாம்பூர்
3. ஜோத்பூர் – சித்தூர்
4. லாகூர் – முல்தான்)
Question 85 |
கீழ்க்கண்டவற்றுள் ஷெர்ஷா ஆட்சிகாலத்திய அதிகாரிகளில் தவறான இணை எது?
ஷிக்தார் - ராணுவ அதிகாரி | |
அமின் – நிலவருவாய் | |
பொடேதார் - கருவூல அதிகாரி | |
கர்கூன்கள் - படைத் தளபதி |
Question 85 Explanation:
(குறிப்பு: கர்கூன்கள் - கணக்கர்கள்.ஷிக்தார், அமின், பொடேதார்,கர்கூன்கள் ஆகிய அதிகாரிகள் பர்கானா நிர்வாகத்தை கவனித்து வந்தனர்.)
Question 86 |
பஸ்வான், மிஸ்கினா, தஸ்வந்த் ஆகியோர் யாருடைய அரசவைக் கலைஞர்களாக திகழ்ந்தனர்?
அக்பர் | |
ஷாஜகான் | |
ஹூமாயூன் | |
ஜஹாங்கீர் |
Question 87 |
ஆக்ராவுக்கு அருகிலுள்ள _______ என்னும் இடத்தில் அக்பரின் கல்லறையை ஜஹாங்கீர் கட்டி முடித்தார்.
டெல்லி | |
சிக்கந்தர் | |
ஜோத்பூர் | |
லாகூர் |
Question 87 Explanation:
(குறிப்பு: டெல்லியிலுள்ள உமாயூன் கல்லறை அக்பரது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. நூர்ஜஹான் தனது தந்தை இதிமத்தெளலாவின் கல்லறையை ஆக்ராவில் கட்டினார்.)
Question 88 |
தக்காணத்தில் வாழ்ந்த மக்கள் காலணியேதுமின்றி காணப்பட்டதாக ______ என்ற அயல் நாட்டுப் பயணி குறிப்பிட்டுள்ளார்.
பாஹியான் | |
யுவான் சுவாங் | |
நிக்கிடின் | |
மெகஸ்தனிஸ் |
Question 89 |
சரியான கூற்றினை கண்டுபிடி
இந்திய, பாரசீக மற்றும் இஸ்லாமியக் கட்டடக்கலையின் பாணியில் முகலாயரின் கட்டடக்கலையின் மறுவடிவமாக தாஜ்மஹால் உள்ளது. | |
அக்பரது புதிய தலைநகரமான ஆக்ரா மற்றும் அதன் சுற்றுசுவர்களுக்குள் பல எழுச்சியூட்டும் கட்டடங்கள் உள்ளன. | |
மோதி மசூதி முழுவதும் பளிங்கு கல்லால் கட்டப்பட்டது. | |
புராண கிலா ஒரு உயர்ந்த கோட்டையாகும் |
Question 90 |
சரியான கூற்றினை கண்டுபிடி
ஒவ்வொரு மன்சப்தாருக்கும் 10 முதல் 10000 வரையிலான படை வீரர்களைக் கொண்டிருக்க வேண்டுமென்பதை ஜாட்டுகள் தீர்மானித்தனர். | |
ஷெர்ஷாவின் நாணய முறை ஆங்கிலேயரின் நாணய முறைக்கு அடித்தளமிட்டது. | |
முகலாயருக்கும் ராணா பிரதாப் சிங்கிற்கும் இடையே நடைபெற்ற ஹால்டிகாட்டி போர் மிகக் கடுமையான இறுதிப் போர் ஆகும். | |
சீக்கிய புனித நூலான ‘குரு கிரந்த சாகிப்’ குரு அர்ஜுன் தேவால் தொகுக்கப்பட்டது. |
Question 91 |
ரசகங்காதரா என்ற நூலை இயற்றிய ஜெகநாத பண்டிதர் யாருடைய அவைக்களப்புலவராக திகழ்ந்தார்?
அக்பர் | |
ஷாஜகான் | |
ஹூமாயூன் | |
ஜஹாங்கீர் |
Question 92 |
கல்ஹணர் காஷ்மீரின் முழுமையான வரலாறு குறித்து எழுதிய 'ராஜவலிபதகா' எனும் நூல் அக்பர் ஆட்சிக் காலத்தில் _______ என்பவரால் தொகுக்கப்பட்டது.
ஜெகநாத பண்டிதர் | |
நீலகண்டர் | |
தஜிகனிலகந்தி | |
பிரக்ஞபட்டர் |
Question 93 |
ஏகநாதர், துக்காராம், ராம்தாஸ், முக்திஸ்வர் ஆகியோரின் இலக்கிய படைப்புகளால் ______ இலக்கியம் எழுச்சி பெற்றது.
தேவநாகரி | |
மராத்தியம் | |
தெலுங்கு | |
பாரசீகம் |
Question 94 |
பாபரின், சகாட்டி துருக்கிய மொழியில் எழுதிய சுயசரிதையை ______ என்பவர் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்தார்.
ஜெகநாத பண்டிதர் | |
அப்துல் ரகீம் கானி-இ- கானான் | |
தஜிகனிலகந்தி | |
பிரக்ஞபட்டர் |
Question 95 |
முகலாயர் காலத்தில் _____ என்னும் தொழிற்கூடங்களில் விலையுயர்ந்த கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
பர்கூன் | |
சராய்கள் | |
கர்கானா | |
சத்னாமி |
Question 95 Explanation:
(குறிப்பு: அரச குடும்பங்களுக்கு தேவையான பொருட்களை அரண்மனை சார்ந்த கர்கானாக்கள் உற்பத்தி செய்தன.)
Question 96 |
________ ஆண்டு அல்புகர்க் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவை கைப்பற்றி அதை கீழ்த்திசை போர்த்துக்கீசிய பேரரசின் தலைநகராக்கினார்.
1498 | |
1500 | |
1501 | |
1510 |
Question 97 |
ஷெர்ஷா காலத்தில் அனைத்து சாலைகளிலும் _____ எனப்படும் சத்திரங்கள் அமைக்கப்பட்டு வணிகர்கள் தங்கவும் உணவருந்தவும் வசதிகள் செய்துதரப்பட்டன.
பர்கூன் | |
சராய்கள் | |
கர்கானா | |
சத்னாமி |
Question 97 Explanation:
( குறிப்பு: சராய்கள் விறுவிறுப்பான வணிகத்திற்கு உத்ரவாதம் அளித்தன. செர்ஷாவால் உருவாக்கப்பட்ட ஒரு சில சராய்கள் இன்றளவும் உள்ளன.)
Question 98 |
‘ விவசாயி சீர்குலைந்தால் அரசன் சீர்குலைவான்’ என நம்பியவர் யார்?
அக்பர் | |
ஷாஜகான் | |
ஷெர்ஷா
| |
ஜஹாங்கீர் |
Question 98 Explanation:
(குறிப்பு: ஷெர்ஷா காலத்தில் நிலங்கள் முறையாக அளவை செய்யப்பட்டு நிலங்களின் வளத்திற்கு ஏற்றவாறு வரி நிர்ணயம் செய்யப்பட்டது.)
Question 99 |
தவறான இணையைத் தேர்ந்தெடு
கன்னோசி போர் – 1540 | |
செளசா போர் – 1549 | |
கான்வா போர் – 1527 | |
காக்ரா போர் – 1529 |
Question 100 |
பாதுஷா நாமா என்பது _____ன் வாழ்க்கை வரலாறாகும்.
பாபர் | |
ஹுமாயூன் | |
ஷாஜகான் | |
அக்பர் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.