Online Test

தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் – Revision Test in Tamil

தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் -Revision Test in Tamil

Congratulations - you have completed தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் -Revision Test in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
அடிமை வம்சத்தின் மூன்று முக்கிய ஆட்சியாளர்கள் யார்?
  1. குத்புதீன் ஐபக்
  2. இல்துமிஷ்
  3. பால்பன்
  4. ரஸியா சுல்தனா
A
1, 2, 3 சரி
B
2, 3, 4 சரி
C
1, 3, 4 சரி
D
1, 3 சரி
Question 2
தவறான தொடரைத் தேர்ந்தெடு.
  1. அடிமை வம்சத்தை மம்லக் வம்சம் என்றும் கூறுவர்.
  2. மம்லக் என்பதற்கு உடைமை என்று பொருளாகும்.
  3. இது 'ஓர் அடிமை' என்பதற்கான அரபுத் தகுதிப் பெயருமாகும்
A
2 மட்டும் தவறு
B
1, 2 தவறு
C
2 , 3 தவறு
D
அனைத்தும் சரி
Question 3
தவறான கூற்றைத் தேர்ந்தெடு
A
குத்புதீன் ஐபக் நான்கு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.
B
குத்புதீன் ஐபக் புத்திசாலி என்றும் நேர்மையான நிர்வாகி என்றும் பெயரெடுத்தார்.
C
புகழ்பெற்ற நாளந்தா பெளத்த பல்கலைக்கழகத்தை அழித்தவர் பக்தியார் கில்ஜி.
D
குத்புதீன் ஐபக் 1120 ல் லாகூரில் செளகான் எனும் விளையாட்டின் போது நிகழ்ந்த ஒரு விபத்தில் இறந்தார்.
Question 4
சம்சுதீன் இல்துமிஷ் ______இனத்தைச் சார்ந்த குத்புதீன் ஐபக்கின் அடிமை.
A
மங்கோலிய
B
துருக்கிய
C
ரோமானிய
D
அரேபிய
Question 4 Explanation: 
(குறிப்பு: இல்துமிஷின் மேல்தட்டு அடிமைகள் பலரும் துருக்கிய, மங்கோலிய வழித்தோன்றல்கள். அவர்களை புக்காரா, சாமர்கண்ட், பாக்தாத் போன்ற வணிக மையங்களிலிருந்து வணிகர்கள் தில்லிக்கு அழைத்து வந்தனர்.)
Question 5
யாருடைய ஆட்சி தில்லியில் 243 அடி உயரமுள்ள குதுப்மினார் என்ற ஒரு வெற்றித் தூணைக் கட்டியதற்கும் சுல்தான்கள் ஆட்சி காலத்தின் இரண்டு அடிப்படை நாணயங்களான செப்பு, வெள்ளி தங்காவை அறிமுகம் செய்ததற்கும் குறிப்பிடத்தகுந்தது?
A
குத்புதீன் ஐபக்
B
இல்துமிஷ்
C
பால்பன்
D
செர்ஷா
Question 6
1254 இல், வடமேற்கில் ஷிவாலிக் ஆட்சிப் பகுதிகளின் தளபதியாக இருந்த ______ என்பவர் தில்லியைக் கைப்பற்றினார்.
A
ஆரம்ஷா
B
ஜலாலுதீன்
C
உலுக்கான்
D
செங்கிஸ்கான்
Question 6 Explanation: 
(குறிப்பு: உலுக்கான் சுல்தானுக்கு துணையாக இருந்த ஆட்சி அதிகாரப் பிரதிநிதி என்று பொருள்படும் நயிப் இ முல்க் என்று பட்டம் சூட்டிக் கொண்டார்.)
Question 7
பால்பன் காலத்தில், மேவாரை சுற்றிய அடர்ந்த காட்டுப் பகுதிகளில் வாழ்ந்த _______ என்ற ஓர் இசுலாமியச் சமூகம் கொலையிலும் கொள்ளையிலும் ஈடுபட்டிருந்தது.
A
பண்டகன்
B
மியோ
C
நிஸ்பா
D
மொய்சு
Question 7 Explanation: 
(குறிப்பு: பால்பன் மியோக்களை அழிக்க தாமே முன்னின்று மேவாரை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினார். அவரின் படை வீரர்கள், மியோக்களைத் தேடிப் பிடித்துக் கொன்றனர்)
Question 8
பால்பன் வங்காளத்தின் ஆளுநராக தனக்கு பிடித்த _________ என்னும் அடிமையை நியமித்தார்.
A
துக்ரில் கான்
B
புக்ரா கான்
C
கைகுபாத்
D
மேயோ கான்
Question 8 Explanation: 
(குறிப்பு: துக்ரில் கான் விரைவிலேயே வெளிப்படையாக கலகத்தில் ஈடுபட்டார். இதனால் பால்பன் அவரைக் கொன்று வங்கத்தின் ஆளுநராக தனது மகன் புக்ரா கானை நியமித்தார்.)
Question 9
தில்லியை சுற்றியுள்ள பகுதிகளிலும் தோவாபிலும் நிகழ்ந்த பால்பனின் தாக்குதல்களை ________ குறிப்பிடுகிறார்.
A
அல்பருனி
B
பாரணி
C
பாஹியான்
D
யுவான் சுவாங்
Question 9 Explanation: 
(குறிப்பு: இந்த தாக்குதல்களின் போது காடுகள் அழிக்கப்பட்டு அந்த நிலங்கள் புதிதாக படையில் சேர்ந்த ஆப்கானியர்களுக்கும் மற்றவர்களுக்கும் குத்தகையில்லா நிலங்களாக வழங்கப்பட்டன)
Question 10
______ நூற்றாண்டில் மங்கோலியர்கள் செங்கிஸ்கான் தலைமையில் ஒரு மிகப் பெரிய அரசாட்சியை நிறுவினர்.
A
11
B
12
C
13
D
14
Question 11
எந்த ஆண்டு தேவகிரி கோட்டையைக் கைப்பற்றுவதற்காக மாலிக் காஃபூர் தலைமையில் ஒரு பெரும் படையை அலாவுதீன் அனுப்பினார்.
A
1207
B
1307
C
1210
D
1310
Question 11 Explanation: 
குறிப்பு: தீபகற்பத்தில் அலாவுதீன் கில்ஜியின் முதல் இலக்கு மேற்கு தக்காணத்திலிருந்த தேவகிரியாகும்.)
Question 12
படை வீரர்களுக்கு கொள்ளையில் பங்கு தராமல் பணமாக ஊதியம் வழங்கிய முதல் சுல்தான் யார்?
A
முகமது பின் துக்ளக்
B
பால்பன்
C
அலாவுதீன்
D
ஜலாலுதீன்
Question 13
துக்ளக் வம்சத்தில் தனது தலைநகரை டெல்லியிலிருந்து தௌலதாபாத்துக்கு மாற்றும் துணிவான முயற்சியை மேற்கொண்டவர் யார்?
A
ஃபெரோஸ் துக்ளக்
B
கியாசுதீன் துக்ளக்
C
ஜான் கான்
D
ஜலாலுதீன்
Question 13 Explanation: 
(குறிப்பு: முகமது பின் துக்ளக்கின் இயற்பெயர் ஜான் கான்.மகாராஷ்டிராவில் உள்ள தேவகிரிக்கு முகமது பின் துக்ளக் சூட்டிய பெயர் தௌலதாபாத்.)
Question 14
முகமது பின் துக்ளக் அறிமுகப்படுத்திய அடையாள நாணய முறை கீழ்க்கண்ட எந்த நாடுகளில் நடைமுறையிலிருந்தது?
A
மங்கோலியா, சீனா
B
சீனா, ஈராக்
C
ரஷ்யா, சீனா
D
சீனா, ஈரான்
Question 14 Explanation: 
(குறிப்பு: இந்தியாவில் நாணயங்களின் மதிப்பு அதிலிருந்த வெள்ளி உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன. ஆனால் துக்ளக்கின் முயற்சியினால் வெண்கல நாணயங்களைப் போலியாக அடிப்பது எளிதாயிருந்தது.)
Question 15
முகமது பின் துக்ளக் வேளாண்மையைக் கவனித்துக் கொள்ள ______ என்ற தனித்துறையை ஏற்படுத்தினார்.
A
திவானி இன்ஷா
B
திவான்-இ-அமிர்கோஹி
C
நாயப் -இ-ரியாசத்
D
திவானி ரியாசத்
Question 16
இந்தியாவில் முதன் முறையாக இஸ்லாமியர் அல்லாதார் மீது ஜிஸியா வரியை விதித்தவர் யார்?
A
முகமது பின் துக்ளக்
B
அக்பர்
C
ஒளரங்கசீப்
D
குத்புதீன் ஐபக்
Question 17
தவறான கூற்றைத் தேர்ந்தெடு
A
ஃபெரோஸ் துக்ளக்கிடம் ஓர் உயரதிகாரியாக இருந்த புகழ் பெற்ற கான்-இ-ஜஹன் இசுலாமுக்கு மாறிய ஒரு பிராமணர்
B
ஃபெரோஸ் துக்ளக் காலத்தில் 1,80,000 அடிமைகளின் நல்வாழ்க்கையில் அடிமைகள் நலத்துறை அக்கறை செலுத்தியது.
C
ஃபெரோஸ் காலத்திய ஒரே பெரிய இராணுவப் படையெடுப்பு வங்கத்தின் மீது தொடுக்கப்பட்டதாகும்.
D
கடைசி துக்ளக் அரசர் நசுருதீன் முகமது ஷா ஆவார்.
Question 17 Explanation: 
(குறிப்பு : ஃபெரோஸ் காலத்திய ஒரே பெரிய இராணுவப் படையெடுப்பு சிந்துவின் மீது தொடுக்கப்பட்டதாகும்.)
Question 18
கிசர் கான் நிறுவிய சையது வம்சத்தில் 1451 வரையிலும் எத்தனை சுல்தான்கள் ஆண்டனர்?
A
3
B
4
C
5
D
6
Question 18 Explanation: 
(குறிப்பு: முற்பட்ட சையது சுல்தான்கள் தைமூரின் மகனுக்கு திறை செலுத்தி ஆட்சி புரிந்தனர். அவர்களின் ஆட்சியை யாஹியா-பின்-அஹ்மத் சிரிந்தி இயற்றிய தாரிக் -இ-முபாரக்-சாஹி குறிப்பிடுகிறது.)
Question 19
1504 ல் தலைநகரை தில்லியிலிருந்து ஆக்ராவுக்கு மாற்றிய லோடி வம்ச அரசர் யார்?
A
பஹ்லோல் லோடி
B
சிக்கந்தர் லோடி
C
இப்ராஹிம் லோடி
D
தௌலத்கான் லோடி
Question 19 Explanation: 
(குறிப்பு: லோடி ஆட்சியாளர்களில் சிக்கந்தர் லோடியே புகழ்மிக்கவர்.)
Question 20
பூமியில் கடவுளின் பிரதிநிதியாகத் தாம் ஆட்சி செய்வதாக கூறிய டெல்லி சுல்தான் யார்?
A
அலாவுதீன் கில்ஜி
B
பால்பன்
C
குத்புதீன் ஐபக்
D
முகமது பின் துக்ளக்
Question 20 Explanation: 
(குறிப்பு: மதத்தின் பரிந்துரைகள் குறித்து தாம் கவலைப்படவில்லை என்று கூறிக்கொண்டு அலாவுதீன் கில்ஜி முழு அதிகாரத்தைக் கோரினார்)
Question 21
“ஒன்பது வானங்கள்" என்னும் நூலில் தம்மை ஓர் இந்தியன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமிதம் கொண்டவர் யார்?
A
பரனி
B
அல்பரூனி
C
அமிர் குஸ்ரு
D
சம்சுதீன் சிராஜ் அஃபிஃப்
Question 21 Explanation: 
(குறிப்பு: இந்நூலில் அவர் இந்தியாவின் வானிலையை, அதன் மொழிகளை குறிப்பாக சமஸ்கிருதத்தை அதன் கலைகளை, இசையை, மக்களை, அதன் விளங்குகளையும் கூட போற்றுகிறார்.)
Question 22
அரச பதவியை விடுத்து, தில்லியிலிருந்து விலகி முப்பதாண்டுகள் அமைதியில் வாழ்ந்த ஒரே சுல்தான்
A
முபாரக் ஷா
B
ஆலம் ஷா
C
கிசர் கான்
D
துக்ரில் கான்
Question 23
பொருத்துக
    1. ராமச்சந்திரா                i) காகதீய
    2. கான்-இ-ஜஹான்                 ii) பத்மாவத்
    3. மாலிக் முஹமத் ஜெய்சி          iii) மான்சிங்
    4. மன் மந்திர்                                   iv) தேவகிரி
A
ii i iv iii
B
i ii iii iv
C
iv i ii iii
D
iii i ii iv
Question 24
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
    1. குத்புதீன் ஐபக் நிறுவிய குத்பி மரபு (1206-1211)
    2. இல்துத்மிஷ் நிறுவிய முதல் இல்பாரி மரபு (1211 - 1266)
    3. பால்பன் நிறுவிய இரண்டாவது இல்பாரி மரபு (1266-1290)
A
அனைத்தும் சரி
B
2 மட்டும தவறு
C
3 மட்டும் தவறு
D
2, 3 தவறு
Question 25
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
    1. குத்புதீன் ஐபக் நிறுவிய குத்பி மரபு (1206-1211)
    2. இல்துத்மிஷ் நிறுவிய முதல் இல்பாரி மரபு (1211 - 1266)
    3. பால்பன் நிறுவிய இரண்டாவது இல்பாரி மரபு (1266-1290)
A
அனைத்தும் சரி
B
2 மட்டும தவறு
C
3 மட்டும் தவறு
D
2, 3 தவறு
Question 25 Explanation: 
(குறிப்பு: அடிமை வம்சம் மாம்லுக் வம்சம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பொருள் அடிமை. கி.பி 1206 முதல் 1290 வரை அடிமை வம்சம் டெல்லியில் ஆட்சிபுரிந்தது.)
Question 26
முஸ்லீம் எழுத்தாளர்களால் ‘லாக் பக்ஷ்’ என அழைக்கப்பட்டவர் யார்?
A
குத்புதீன் ஐபக்
B
இல்துத்மிஷ்
C
பால்பன்
D
அலாவுதீன்
Question 26 Explanation: 
(குறிப்பு: முஸ்லீம் எழுத்தாளர்களுக்கு தாராளமாக கொடைகளை வழங்கியதால் அவ்வாறு அழைக்கப்பட்டார். ஹசன் நிசாமி என்ற சிறந்த அறிஞரை ஐபக் ஆதரித்தார்.)
Question 27
இல்துத்மிஷ் ______ ஆண்டு காலிப்பிடம் இருந்து அனுமதி பத்திரத்தை பெற்று இந்தியாவின் சட்ட முறையான ஆட்சியாளரானார்.
A
1211
B
1229
C
1230
D
1232
Question 27 Explanation: 
(குறிப்பு : இல்துத்மிஷ் அஜ்மீரில் அழகிய மசூதி ஒன்றையும் கட்டினார்.)
Question 28
புதிய தலைநகர் சீரி மற்றும் புகழ் வாய்ந்த நுழைவாயிலான ‘அலை தர்வாசா' என்ற கட்டிடத்தையும் கட்டியவர் யார்?
A
குத்புதீன் ஐபக்
B
இல்துத்மிஷ்
C
பால்பன்
D
அலாவுதீன்
Question 28 Explanation: 
(குறிப்பு: அலாவுதீன் கில்ஜி, தனது மாமனாரான ஜலாலுதீன் கில்ஜியை சதி செய்து கொன்றுவிட்டு டெல்லி அரியணையைக் கைப்பற்றினார்)
Question 29
சிறந்த இலக்கிய, சமய மற்றும் தத்துவக் கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றிருந்த ஒரே டெல்லி சுல்தான் யார்?
A
அலாவுதீன் கில்ஜி
B
கியாசுதீன் துக்ளக்
C
முகமது பின் துக்ளக்
D
பிரோஸ் துக்ளக்
Question 29 Explanation: 
(குறிப்பு: முகமது பின் துக்ளக்கின் சமகால எழுத்தாளர்களான ஈசாமி, பரானி, இபன் பதூதா போன்றவர்கள் துக்ளக்கின் ஆளுமை குறித்து தெளிவாக குறிப்பிடவில்லை.)
Question 30
பிரோஸ் துக்ளக் குறித்த கூற்றுகளில் தவறானது எது?
A
ஜும்மா மசூதி, குதுப்மினார் போன்ற பழைய சின்னங்களை செப்பனிட்டார்.
B
அனாதைகள் மற்றும் கைம்பெண்கள் நலனுக்காக திவானி கைரத் என்ற புதிய துறையை உருவாக்கினார்.
C
பரானி, அபிப் போன்ற அறிஞர்களை ஆதரித்தார்.
D
ஷியா முஸ்லிம்களையும், சூஃபித்துறவிகளையும், இந்துக்களையும் சமய சகிப்புத்தன்மையுடன் நடத்தினார்
Question 30 Explanation: 
(குறிப்பு: உலோமாக்களின் பேச்சை மதித்து நடந்த பிரோஸ் ஷியா முஸ்லிம்களையும், சூஃபித்துறவிகளையும் சமய சகிப்புத்தன்மையுடன் நடத்தவில்லை. இந்துக்களின் மீது விதிக்கப்படும் ஜிஸியா வரியை கட்டாயமாக்கினார்)
Question 31
அலாவுதீன் கில்ஜி காலத்தில் தென்னிந்திய படையெடுப்புக்கு தளபதியாக இருந்தவர்.
A
அலாவுதீன் கில்ஜி
B
குத்புதீன் ஐபக்
C
மாலிக்காபூர்
D
ஜலாலுதீன் கில்ஜி
Question 31 Explanation: 
(குறிப்பு: தேவகிரியாதவர்கள், வாரங்கல் காகதீயர்கள், துவார சமுத்திரத்தில் ஹோய்சாளர்கள், மதுரை பாண்டியர்கள் ஆகியோர் மீது மாலிக் கபூர் படையெடுத்தார்)
Question 32
திவானி அர்ஸ் என்ற ராணுவத் துறையை ஏற்படுத்தி ராணுவ நிர்வாகத்தை சீரமைத்தவர் யார்?
A
குத்புதீன் ஐபக்
B
இல்துத்மிஷ்
C
பால்பன்
D
அலாவுதீன்
Question 33
தாங்கா என்ற அராபிய நாணய முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர்
A
அலாவுதீன் கில்ஜி
B
இல்துத்மிஷ்
C
முகமது பின் துக்ளக்
D
பிரோஸ் துக்ளக்
Question 33 Explanation: 
(குறிப்பு: தாங்கா என்ற அராபிய வெள்ளி நாணயம் 175 கிராம் எடை கொண்டது)
Question 34
சரியான வரிசையை தேர்ந்தெடு.
A
கில்ஜி – மாம்லுக் – துக்ளக் - சையது - லோடி
B
மாம்லுக் - துக்ளக் - கில்ஜி - லோடி – சையது
C
மாம்லுக் - கில்ஜி – துக்ளக் - சையது – லோடி
D
மாம்லுக் – துக்ளக் - கில்ஜி – சையது – லோடி
Question 35
டெல்லி சுல்தானியத்தின் மாகாண ஆளுநர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
A
ஷிக்தர்கள்
B
முக்திகள்
C
பட்வாரிகள்
D
சௌத்ரிகள்
Question 35 Explanation: 
(குறிப்பு: டெல்லி சுல்தானியத்தின் மாகாண ஆளுநர்கள் முக்திகள் அல்லது வாலிஸ் என்று அழைக்கப்பட்டனர். சட்டம், ஒழுங்கை பராமரிப்பது, நிலவரி வசூலிப்பது அவர்களது முக்கிய பணியாகும்.)
Question 36
கோரா மற்றும் சனம் போன்ற புதிய ராகங்களை அறிமுகப்படுத்தியவர் யார்?
A
பீர்போதன்
B
ராஜாமன்சிங்
C
அமிர்குஸ்ரு
D
அல்பருனி
Question 36 Explanation: 
(குறிப்பு: அமிர் குஸ்ரு இந்து மற்றும் ஈரானிய முறைகளை ஒன்றிணைத்து குவாலிஸ் என்ற புதிய வகை மெல்லிசைகளையும் அவர் உருவாக்கினார். சிதார் இசைக்கருவியும் அவரது கண்டுபிடிப்பே.)
Question 37
தவறான தொடரை தேர்ந்தெடு.
    1. இக்தா - அதிகாரிகளுக்கு ஊதியத்திற்கு பதிலாக அளிக்கப்பட்ட மான்யங்கள்.
    2. காலிசா - சுல்தானின் நேரடி நிர்வாகத்தில் இருந்த நிலங்கள். அதிலிருந்து பெறப்பட்ட வருவாய் அரசவை செலவினங்களுக்கு பயன்படுத்தப்பட்டது.
    3. இனாம் -சமயத் தலைவர்களுக்கும், சமய நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட நிலங்கள்.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 37 Explanation: 
(குறிப்பு : பொதுவாக விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கை குடியானவர்கள் வரியாக செலுத்தினர்)
Question 38
பொருத்துக.
    1. மின்ஹஜ்-உஸ்- சிராஜ்        i) ராஜதரங்கிணி
    2. அமிர்குஸ்ரு                       ii) தபாகத்-இ-நாசரி
    3. கல்ஹணர்                     iii) கிதாப்-உல்-ஹிந்த்
    4. அல்பரூனி                         iv) சபாக்-இ-ஹிந்த்
A
ii i iv iii
B
iv iii ii i
C
ii iv i iii
D
ii iii i iv
Question 39
அலாவுதீன் கில்ஜியின் வெற்றிகளைக் கூறும் ________ என்ற நூலை அமிர் குஸ்ரு எழுதியுள்ளார்.
A
தபாகத்-இ-நாசரி
B
சபாக்-இ-ஹிந்த்
C
காசெய்ன்-உல்- ஃபுரூ
D
கிதாப்-உல்-இந்த்
Question 40
டெல்லியிலுள்ள கோட்லா கோட்டையை அமைத்தவர்
A
பிரோஸ் துக்ளக்
B
இல்துத்மிஷ்
C
அலாவுதீன் கில்ஜி
D
சிக்கந்தர் லோடி
Question 40 Explanation: 
(குறிப்பு: டெல்லி சுல்தான்கள் சிகப்பு, மஞ்சள் நிறங்களாலான பளிங்கு கற்களையும், மணற்பாறைகளையும் பயன்படுத்தி கட்டிடங்களை அவர்கள் பல வண்ணங்களில் அமைத்தனர்.)
Question 41
"பால்பன், ஒரு அடிமையாக, தண்ணீர் சுமக்கும் தொழிலாளியாக, வேட்டைக்காரனாக, தளபதியாக, இராஜதந்திரியாக, சுல்தானாக வாழ்ந்தவர். அதோடு டெல்லி சுல்தான்களில் குறிப்பிடத்தக்கவர்” என்று கூறியவர் யார்?
A
லேன்பூல்
B
பாபர்
C
ஜான் மார்ஷல்
D
சார்லஸ் மேனன்
Question 42
பிரோஸ் துக்ளக் வசூலித்த வரிகளில் தவறானது எது?
A
கரோஜ் - விளைச்சலில் 1/10 பங்கு
B
கம்ஸ் - போர்களில் கைப்பற்றிய பொருட்களில் 1/3 பங்கு
C
பெஸியா தலைவரி
D
ஜகாத் - குறிப்பிட்ட இஸ்லாமிய மதச்சடங்குகளைச் செய்வதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் .
Question 42 Explanation: 
(குறிப்பு: கம்ஸ் - போர்களில் கைப்பற்றிய பொருட்களில் 1/10 பங்கு)
Question 43
காபூல் மன்னர் பாபரை இந்தியா மீது படையெடுக்கும்படி அழைத்தவர்
A
பஹ்லுல் லோடி
B
இப்ராஹீம் லோடி
C
தௌலத்கான் லோடி
D
தில்வர்கான் லோடி
Question 43 Explanation: 
(குறிப்பு: தௌலத்கான் லோடியின் மகன் தில்வர்கான் லோடியை, இப்ராஹிம் லோடி கொடுமைப்ப௹த்தியதால் தௌலத்கான் லோடி காபூல் மன்னர் பாபரை உதவிக்கு அழைத்தார்.)
Question 44
சுல்தான்களின் அமைச்சர்களில் தவறான இணையைத் தேர்ந்தெடு.
A
திவானி ரிஸாலத் - வெளியுறவு அமைச்சர்
B
சுதர்- உஸ்-சாதர் - அஞ்சல் துறை அமைச்சர்
C
வசீர் - பிரதம அமைச்சர் மற்றும் நிதியமைச்சர்
D
காஸி-உல்-கஸாத் – நீதித்துறை அமைச்சர்
Question 45
‘ இந்திய கிளி' என்று அழைக்கப்பட்ட கவிஞர் _____ ஆவார்.
A
அல்பெருணி
B
கைகுபாத்
C
அமிர்குஸ்ரு
D
அமீர் ஹாசன்
Question 45 Explanation: 
(குறிப்பு: சிறந்த பாரசீக மொழிக் கவிஞரான அமிர்குஸ்ரு சுமார் 4,00,000 ஈரடிச் செய்யுள்களை எழுதியுள்ளார். இவரது கவிதைகளில் நிறைய இந்தி சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.)
Question 46
_______ ஆண்டு கான்வா போர்க்களத்தில் பாபர் அரும்பாடுபட்டு ராணா சங்காவை வெற்றி கொண்டார்.
A
கி.பி.1526
B
கி.பி.1527
C
கி.பி.1528
D
கி.பி. 1529
Question 46 Explanation: 
(குறிப்பு: பானிபட் போரில் பாபர் வெற்றி பெற்றாலும் மீவாரை ஆட்சி செய்த இராஜபுத்திர மன்னர் ராணாசங்கா பாபருக்கு பெரும் சவாலாக அமைந்தார். இதனால் கான்வா போர் நடைபெற்றது)
Question 47
பாபர் தன் சுயசரிதை நூலான துசுக்-கி-பாபரி அல்லது பாபரின் நினைவுகள் என்னும் நூலை ________மொழியில் எழுதியுள்ளார்.
A
உருது
B
சமஸ்கிருதம்
C
துருக்கிய
D
கிரேக்க
Question 47 Explanation: 
( குறிப்பு: பாபர் சிறந்த போர் வீரராகவும், அறிஞராகவும், கவிஞராகவும் விளங்கினார்.)
Question 48
பொருத்துக.
    1. இராணாசங்கா                                   i) 1582
    2. தீன்-இலாஹி                                         ii) வருவாய் முறை
    3. இரண்டாம் பானிபட்டுப் போர்    iii) மீவார் நாட்டு அரசர்
    4. இராஜாதோடர்மால்                        iv) 1556
A
ii iii iv i
B
iii i iv ii
C
ii iv i iii
D
iii i iv ii
Question 49
ஜாகிருதின் முகம்மது பாபர் ______ ஆண்டு மத்திய ஆசியாவிலுள்ள பர்கானா நிலப்பகுதியை ஆட்சி செய்த உமர் ஷேக் மிர்ஷா என்பவருக்கு மூத்த மகனாக பிறந்தார்.
A
கி.பி.1473
B
கி.பி.1483
C
கி.பி.1493
D
கி.பி. 1463
Question 50
பாபர் தனது தந்தை மறைவிற்கு பிறகு தனது ______ வயதில் பர்கானாவின் ஆட்சி பொறுப்பை ஏற்றார்.
A
11
B
12
C
13
D
14
Question 50 Explanation: 
(குறிப்பு: பாபர் தந்தை வழியில் துருக்கியைச் சார்ந்த தைமூர் இனத்தையும், தாய் வழியில் மங்கோலிய இனத்தை சார்ந்த செங்கிஸ்கான் இனத்தையும் வழித்தோன்றலாக கொண்டிருந்தார்.)
Question 51
பாபர் கி.பி.1529 ஆம் ஆண்டு கோக்ரா போரில் யாரை தோற்கடித்து முகலாயப் பேரரசினை இந்தியாவில் நிலைநாட்டினார்?
A
இப்ராஹிம் லோடி
B
தௌலத்கான் லோடி
C
தில்வர்கான் லோடி
D
முகம்மது லோடி
Question 52
பாபரால் தோற்றுவிக்கப்பட்ட முகலாயப் பேரரசு யாரால் பலப்படுத்தப்பட்டது?
A
உமாயூன்
B
ஷெர்ஷா
C
அக்பர்
D
அசோகர்
Question 53
கி.பி 1539 ம் ஆண்டு _______ என்ற இடத்தில் நடைபெற்ற போரில் ஷெர்கானிடம் உமாயூன் தோல்வியுற்றார்.
A
சௌஷா
B
கைகுபாத்
C
கான்வா
D
கன்னோசி
Question 53 Explanation: 
(குறிப்பு: 1540 ஆம் ஆண்டு கன்னோசிப் போரிலும் தோல்வியுற்று உமாயூன் 15 ஆண்டுகள் நாடோடியாக வாழ்ந்தார்.)
Question 54
ஜோன்பூரை ஆட்சி செய்த ஆப்கானிய கவர்னர் ______ என்ற பட்டத்தை ஃபரித் என்பவருக்கு வழங்கினார்.
A
சூர்
B
ஷெர்கான்
C
உமாயூன்
D
லோடி
Question 54 Explanation: 
(குறிப்பு: ஃபரித்தால் (ஹெர்ஷா சூர்) நிறுவப்பட்ட பேரரசு ‘சூர்' வம்சம் என அழைக்கப்பட்டது.)
Question 55
______ ஆண்டு பண்டேல்கண்டை ஆட்சி செய்த அரசருக்கெதிராக செர்ஷா தனது கடைசி படையெடுப்பை மேற்கொண்டார்.
A
1545
B
1556
C
1554
D
1565
Question 55 Explanation: 
(குறிப்பு: கலஞ்சார்கோட்டை முற்றுகையின் போது எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த வெடி விபத்தில் ஷெர்ஷா மரணமடைந்தார்.)
Question 56
குதிரைப்படையில் குதிரைக்கு சூடு போடும் தாக் முறையினை அறிமுகப்படுத்தியவர் யார்?
A
உமாயூன்
B
ஷெர்ஷா
C
அக்பர்
D
பால்பன்
Question 56 Explanation: 
(குறிப்பு: ஷெர்ஷா காலத்தில் குதிரைப்படை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.)
Question 57
ஷெர்ஷாவின் நாணய சீர்திருத்தம் குறித்த கூற்றுகளில் தவறானது எது?
A
புழக்கத்திலிருந்த பழைய உலோக நாணயங்களை ரத்து செய்தார்.
B
வெள்ளி மற்றும் செப்பு நாணயங்களுக்கு ஒப்பீட்டு விகிதாச்சாரத்தை நிர்ணயம் செய்தார்.
C
நாணயங்களில் தனது பெயரினை துருக்கிய மொழியில் பொறிக்க செய்தார்.
D
நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
Question 57 Explanation: 
(குறிப்பு: நாணயங்களில் தனது பெயரினை தேவநாகிரி மொழியில் பொறிக்க செய்தார்.)
Question 58
ஜலாலுதீன் முகம்மது அக்பர் _____ ஆண்டு அமரக்கோட்டையில் பிறந்தார்.
A
1524 நவம்பர் 22
B
1524 நவம்பர் 23
C
1542 நவம்பர் 22
D
1542 நவம்பர் 23
Question 58 Explanation: 
குறிப்பு: அக்பர் தனது பதினான்காவது வயதில் 1556ல் பேரரசராக முடிசூட்டப்பட்டார். பைராம்கான் அக்பரின் பாதுகாப்பாளராக உமாயூனால் நியமிக்கப்பட்டார்.)
Question 59
முஸ்லீம்கள் அல்லாதவர்களிடம் நல்லாதரவைப் பெற, ஒற்றுமையை வளர்க்க ஜிசியா மற்றும் புனிதப் பயணவரியினை ரத்து செய்தவர் யார்?
A
உமாயூன்
B
ஷெர்ஷா
C
அக்பர்
D
பால்பன்
Question 59 Explanation: 
(குறிப்பு: அக்பர் ராஜபுத்திரர்களோடு நட்பு பாராட்டினார். ஜெய்ப்பூர் இளவரசி ஜோத்பாயை அக்பர் மணந்தார்.)
Question 60
______ என்பவர் இதிகாச நூல்களாகிய இராமாயணம் மற்றும் மகாபாரதத்தை பாரசீக மொழியில் மொழிபெயர்த்தார்.
A
அபுல் பாசல்
B
அபுல் பைசி
C
தான்சென்
D
அமிர்குஸ்ரு
Question 60 Explanation: 
(குறிப்பு: அபுல்பாசல் மற்றும் அவரின் சகோதரர் அபுல்பைசி பல வடமொழி நூல்களை பாரசீக மொழியில் மொழி பெயர்த்தனர்.)
Question 61
_______ ஆண்டு அக்பர் இபாதத் கானா என்ற தொழுகை இல்லத்தைக் கட்டி பல்வேறு மதத் தலைவர்களை அழைத்து சமயத்தின் நற்கூறுகளை ஆய்வு செய்தார்.
A
கி.பி.1576
B
கி.பி. 1575
C
கி.பி.1578
D
கி.பி. 1582
Question 61 Explanation: 
( குறிப்பு: கி.பி.1582ல் அக்பர் தீன் இலாஹி அல்லது தெய்வீக மதத்தினை வெளியிட்டார்.)
Question 62
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
A
ஜஹாங்கீர் கி.பி.1605 ஆம் ஆண்டு அரியணை ஏறினார்.
B
ஜஹாங்கீரினால் கொல்லப்பட்ட ஐந்தாவது சீக்கிய குரு அர்சுன் தேவ்.
C
ஜஹாங்கீர் தன்னுடைய சுய சரிதையை துசுக்-இ-ஜஹாங்கிரி என்ற பெயரில் எழுதியுள்ளார்.
D
இவர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நீதிமணி ஷபர்ஜ் அரண்மனையில் ஒரு கட்டப்பட்டு மறுமுனை கங்கை ஆற்றின் கரையில் ஒரு கல்தூணில் இணைக்கப்பட்டிருந்தது.
Question 62 Explanation: 
குறிப்பு: ஜஹாங்கீர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நீதிமணி ஷபர்ஜ் அரண்மனையில் ஒரு கட்டப்பட்டு மறுமுனை யமுனை ஆற்றின் கரையில் ஒரு கல்தூணில் இணைக்கப்பட்டிருந்தது.)
Question 63
மொகலாயர் மாகாண நிர்வாகத்தின் சரியான வரிசையைத் தேர்ந்தெடு.
A
அரசு - சுபா - மாகாணங்கள் – சர்க்கார் – பர்கானாக்கள் - கிராமங்கள்
B
அரசு -சர்க்கார் - சுபா - மாகாணங்கள் - பர்கானாக்கள் – கிராமங்கள்
C
அரசு - மாகாணங்கள் - சுபா - சர்க்கார் - பர்கானாக்கள் – கிராமங்கள்
D
அரசு -சுபா - மாகாணங்கள் - பர்கானாக்கள் - சர்க்கார் – கிராமங்கள்
Question 64
இரண்டாம் பானிபட் போரில் அக்பரால் தோற்கடிக்கப்பட்டவர் யார்?
A
ஷெர்ஷா
B
பைரம்கான்
C
மாகம் அனாகா
D
ஹெமு
Question 64 Explanation: 
(குறிப்பு: வங்காளத்தை ஆண்ட முகம்மது ஷாவிடம் பிரதம மந்திரியாக இருந்த ஹெமு அக்பரை தோற்கடித்து டெல்லியை கைப்பற்ற எண்ணினார். இதனால் இரண்டாவது பானிபட் போர் கி.பி.1556ல் நடந்தது)
Question 65
ஷெர்ஷா ______ன் முன்னோடி என அழைக்கப்படுகிறார்.
A
அக்பர்
B
உமாயூன்
C
ஷாஜஹான்
D
ஒளரங்கசீப்
Question 65 Explanation: 
(குறிப்பு: ஷெர்ஷாவின் ஆட்சி காலத்தில் பணியாற்றிய இராஜாதோடர்மால் வருவாய் துறை அமைச்சராக அக்பரிடம் பணியாற்றினார். எனவே அக்பர் ஷெர்ஷாவின் அடிச்சுவட்டை பின்பற்றினார்.)
Question 66
_______ ஆட்சி காலம் முகலாயர் ஆட்சியின் பொற்காலம் என்றழைக்கப்படுகிறது.
A
பாபர்
B
அக்பர்
C
ஷாஜகான்
D
ஒளரங்கசீப்
Question 66 Explanation: 
(குறிப்பு: முகலாய பேரரசு ஷாஜகானின் ஆட்சியில் புகழின் உச்சியை அடைந்தது. கட்டடக்கலையின் விந்தைகள் இப்பேரரசின் பொருளாதார செழிப்பினை பறைசாற்றுகிறது)
Question 67
தவறான தொடரைத் தேர்ந்தெடு.
    1. பீரங்கியைப் பயன்படுத்தும் ராணுவப் படைப்பிரிவு artillery ஆகும்.
    2. வெடிமருந்து முதன் முதலில் சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்டு கி.பி. 13 ம் நூற்றாண்டில் ஐரோப்பாவை அடைந்தது.
    3. பாபருக்கு முன்பாக இந்தியாவில் போர்களில் பீரங்கிகள் பயன்படுத்தவில்லை.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 68
கீழ்க்கண்டவற்றுள் தக்காண சுல்தானியம் என்று அழைக்கப்படும் பகுதிகள் எவை?
  1. கோல்கொண்டா 2. பீஜப்பூர் 3. அகமதுநகர் 4. பூனா 5. அகமதாபாத்
A
1, 2, 3 சரி
B
2, 3,5 சரி
C
1, 2, 4 சரி
D
2, 3, 4 சரி
Question 69
முகலாயர் காலத்துக் டச்சு குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட் ஆண்டுகளில் தவறான இணை எது?
A
மசூலிப்பட்டினம் -1605
B
புலிக்காட் – 1601
C
சூரத் – 1616
D
காரைக்கால் – 1645
Question 70
ஷாஜகானின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர்கள் குறித்த கூற்றுகளில் தவறான இணையைத் தேர்ந்தெடு.
A
பெர்னியர் - பிரெஞ்சு மருத்துவர், பயணி
B
மான்டெல்சோ - ஜெர்மன் பயணி, துணிச்சல் வீரர்
C
பீட்டர் முன்டி- பிரெஞ்சு வைர வியாபாரி
D
மனுச்சி - இத்தாலிய எழுத்தாளர் மற்றும் பயணி
Question 71
வட்ட வடிவக் குவிமாட வடிவிலான கோல்கும்பாஸ் ______ வம்சத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.
A
முகலாயர்
B
அடில்ஷாஹி
C
கில்ஜி
D
ஐரோப்பியர்
Question 72
_______ என்று அழைக்கப்பட்ட கிராமத் தலைவர்கள் கிராமத்தின் நிர்வாக உறுப்பான பஞ்ச் என்ற அமைப்பினை உருவாக்கினர்.
A
மன்சப்தார்
B
ஹக்கீம்
C
ஜமீன்
D
முக்காடம்
Question 72 Explanation: 
(குறிப்பு: கிராம அளவில் வரிகளை வசூலிப்பதும் அவை தொடர்பான கணக்குகளைப் பராமரிப்பதும் இப்பஞ்சாயத்தின் பொறுப்பாகும்.)
Question 73
_______பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பதினான்காம் லூயி ஆகியோர் சமகாலத்தவர்கள்.
A
அக்பர்
B
ஜஹாங்கீர்
C
ஷாஜகான்
D
ஒளரங்கசீப்
Question 73 Explanation: 
குறிப்பு: ஷாஜகான் காலத்தில்தான் அரசருக்காகப் புகழ்பெற்ற மயிலாசனம் செய்யப்பட்டது.)
Question 74
கப்பலின் ஒட்டகம் என சொல்லப்படும் தொழில்நுட்பத்தை உலகத்திலேயே கண்டறிந்த முதல் அரசர் ______ ஆவார்.
A
அக்பர்
B
ஷாஜகான்
C
ஷெர்ஷா
D
பாபர்
Question 74 Explanation: 
(குறிப்பு: இத்தொழில் நுட்பத்தின் படி ஒரு பெரிய படகின் மீதே கப்பல் கட்டப்படும். அவ்வாறு கட்டப்படுவது அக்கப்பல்களை கடலுக்குள் கொண்டு செல்வதை எளிதாக்கியது
Question 75
ஜஹாங்கீர் மற்றும் ______அமைத்த ஷாலிமார் தோட்டங்கள் இந்திய தோட்டக்கலையில் குறிப்பிடத்தக்க வையாகும்.
A
அக்பர்
B
ஷாஜகான்
C
ஹூமாயூன்
D
ஒளரங்கசீப்
Question 76
கீழே உள்ள ஆட்சியாளர்களுள் யார் அக்பரின் சமகாலத்தவர் இல்லை?
A
இங்கிலாந்தின் எலிசபெத்
B
ஷேக்ஸ்பியர்
C
பிரான்சின் நான்காம் ஹென்றி
D
இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி
Question 77
சரியான கூற்றை தேர்ந்தெடு
    1. ராணா சங்காவின் மூர்க்கமான வலிமை வாய்ந்த படைகள் பாபரின் சக்தி வாய்ந்த படையை எதிர்கொண்டது.
    2. கன்னோசி போருக்குப் பின் அக்பர் நாடு இல்லாத ஒரு இளவரசர் ஆனார்.
A
1 சரி
B
2 சரி
C
1, 2 சரி
D
1 சரி 2 தவறு
Question 78
  • கூற்று: ஒளரங்கசீப்பின் ஆட்சியின் இறுதியில் முகலாயப் பேரரசின் அழிவு ஆரம்பமாயிற்று.
  • காரணம்: ஒளரங்கசீப் தக்காண அரசர்களிடம் நட்புறவாக இருந்தார்.
A
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
B
கூற்று சரி; காரணம் சரியான விளக்கம் ஆகும்
C
கூற்று தவறு, காரணம் சரி
D
கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
Question 79
கீழ்க்கண்டவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது.
A
பாஸ்கராச்சார்யா - நீதிநெறி விளக்கம்
B
ஆமுக்தமால்யதா – கிருஷ்ணதேவராயர்
C
ஜகன்னாத பண்டிதர் – ரசகங்காதரா
D
அல்லசானி பெத்தண்ணா – மனுசரித்ரா
Question 80
பொருத்துக.
    1. அபுல் பாசல் i) ஒளரங்கசீப்
    2. ஜூம்மா மசூதி ii) அக்பர்
    3. பாதுஷாஹி மசூதி iii) ஷெர்ஷா
    4. புராண கிலா iv) ஷாஜகான்
A
ii iv i iii
B
iii ii i iv
C
iii i iv ii
D
i iii ii iv
Question 81
சரியான கூற்றைத் தேர்ந்தெடு
  1. ஷெர்ஷா மேற்கில் உள்ள சிந்து முதல் வங்காளத்தில் உள்ள சோனர்கான் வரையிலான கிராண்ட் டிரங்க் சாலையை சீர்படுத்தினார்.
  2. அக்பர் தனது மிகப் பெரிய படையெடுப்புகளின் மூலமாக மாபெரும் பேரரசிற்கு அடித்தளம் இட்டார்
A
1 சரி
B
2 சரி
C
1, 2 சரி
D
1, 2 தவறு
Question 82
மன்சப்தாரி முறை குறித்த கூற்றுகளில் தவறான தொடரை தேர்ந்தெடு
A
குறைந்தபட்ச தகுதி நிலை மன்சப்தார் 10, அதிகபட்ச தகுதி மன்சப்தார் 5000
B
இது அனைத்து வகையான குடிமக்களுக்கும் வழங்கப்பட்டது.
C
சத் என்பது ஒருவரது தனிப்பட்ட அந்தஸ்தைக் குறிப்பதாகும்.
D
சாவர் என்பது ஒருவர் வைத்திருக்க வேண்டிய குதிரை வீரர்களின் எண்ணிக்கை அடிப்படையிலானது.
Question 82 Explanation: 
( குறிப்பு: மன்சப்தாரி முறை உயர்குடியினருக்கு மட்டுமே வழங்கப்பட்டது)
Question 83
அக்பரின் மறைவுக்குப் பிறகு 1605 ஆம் ஆண்டு இளவரசர் சலீம் _____ என்ற பட்டத்தோடு ஆட்சிக்கு வந்தார்.
A
உமாயூன் – நல்வாய்ப்பு
B
உமாயூன் – அதிர்ஷ்டசாலி
C
ஜஹாங்கீர் - உலகை வென்றவர்
D
ஜஹாங்கீர் - இந்தியாவை வென்றவர்
Question 83 Explanation: 
(குறிப்பு: 1611 ஆம் ஆண்டு ஜஹாங்கீர் மெஹருனிசாவை மணந்து கொண்டார். அவர் நூர்ஜஹான் (உலகின் ஒளி) என்று அழைக்கப்பட்டார்.)
Question 84
ஷெர்ஷா மேம்படுத்திய நான்கு முக்கிய பெருவழி சாலைகளில் தவறானது எது?
A
சோனார்கான் - சிந்து
B
ஆக்ரா – புர்ஹாம்பூர்
C
ஜோத்பூர் – சித்தூர்
D
ஆக்ரா – சிந்து
Question 84 Explanation: 
(குறிப்பு: நான்கு முக்கிய பெருவழி சாலைகள் 1. சோனார்கான் - சிந்து 2. ஆக்ரா – புர்ஹாம்பூர் 3. ஜோத்பூர் – சித்தூர் 4. லாகூர் – முல்தான்)
Question 85
கீழ்க்கண்டவற்றுள் ஷெர்ஷா ஆட்சிகாலத்திய அதிகாரிகளில் தவறான இணை எது?
A
ஷிக்தார் - ராணுவ அதிகாரி
B
அமின் – நிலவருவாய்
C
பொடேதார் - கருவூல அதிகாரி
D
கர்கூன்கள் - படைத் தளபதி
Question 85 Explanation: 
(குறிப்பு: கர்கூன்கள் - கணக்கர்கள்.ஷிக்தார், அமின், பொடேதார்,கர்கூன்கள் ஆகிய அதிகாரிகள் பர்கானா நிர்வாகத்தை கவனித்து வந்தனர்.)
Question 86
பஸ்வான், மிஸ்கினா, தஸ்வந்த் ஆகியோர் யாருடைய அரசவைக் கலைஞர்களாக திகழ்ந்தனர்?
A
அக்பர்
B
ஷாஜகான்
C
ஹூமாயூன்
D
ஜஹாங்கீர்
Question 87
ஆக்ராவுக்கு அருகிலுள்ள _______ என்னும் இடத்தில் அக்பரின் கல்லறையை ஜஹாங்கீர் கட்டி முடித்தார்.
A
டெல்லி
B
சிக்கந்தர்
C
ஜோத்பூர்
D
லாகூர்
Question 87 Explanation: 
(குறிப்பு: டெல்லியிலுள்ள உமாயூன் கல்லறை அக்பரது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. நூர்ஜஹான் தனது தந்தை இதிமத்தெளலாவின் கல்லறையை ஆக்ராவில் கட்டினார்.)
Question 88
தக்காணத்தில் வாழ்ந்த மக்கள் காலணியேதுமின்றி காணப்பட்டதாக ______ என்ற அயல் நாட்டுப் பயணி குறிப்பிட்டுள்ளார்.
A
பாஹியான்
B
யுவான் சுவாங்
C
நிக்கிடின்
D
மெகஸ்தனிஸ்
Question 89
சரியான கூற்றினை கண்டுபிடி
A
இந்திய, பாரசீக மற்றும் இஸ்லாமியக் கட்டடக்கலையின் பாணியில் முகலாயரின் கட்டடக்கலையின் மறுவடிவமாக தாஜ்மஹால் உள்ளது.
B
அக்பரது புதிய தலைநகரமான ஆக்ரா மற்றும் அதன் சுற்றுசுவர்களுக்குள் பல எழுச்சியூட்டும் கட்டடங்கள் உள்ளன.
C
மோதி மசூதி முழுவதும் பளிங்கு கல்லால் கட்டப்பட்டது.
D
புராண கிலா ஒரு உயர்ந்த கோட்டையாகும்
Question 90
சரியான கூற்றினை கண்டுபிடி
A
ஒவ்வொரு மன்சப்தாருக்கும் 10 முதல் 10000 வரையிலான படை வீரர்களைக் கொண்டிருக்க வேண்டுமென்பதை ஜாட்டுகள் தீர்மானித்தனர்.
B
ஷெர்ஷாவின் நாணய முறை ஆங்கிலேயரின் நாணய முறைக்கு அடித்தளமிட்டது.
C
முகலாயருக்கும் ராணா பிரதாப் சிங்கிற்கும் இடையே நடைபெற்ற ஹால்டிகாட்டி போர் மிகக் கடுமையான இறுதிப் போர் ஆகும்.
D
சீக்கிய புனித நூலான ‘குரு கிரந்த சாகிப்’ குரு அர்ஜுன் தேவால் தொகுக்கப்பட்டது.
Question 91
ரசகங்காதரா என்ற நூலை இயற்றிய ஜெகநாத பண்டிதர் யாருடைய அவைக்களப்புலவராக திகழ்ந்தார்?
A
அக்பர்
B
ஷாஜகான்
C
ஹூமாயூன்
D
ஜஹாங்கீர்
Question 92
கல்ஹணர் காஷ்மீரின் முழுமையான வரலாறு குறித்து எழுதிய 'ராஜவலிபதகா' எனும் நூல் அக்பர் ஆட்சிக் காலத்தில் _______ என்பவரால் தொகுக்கப்பட்டது.
A
ஜெகநாத பண்டிதர்
B
நீலகண்டர்
C
தஜிகனிலகந்தி
D
பிரக்ஞபட்டர்
Question 93
ஏகநாதர், துக்காராம், ராம்தாஸ், முக்திஸ்வர் ஆகியோரின் இலக்கிய படைப்புகளால் ______ இலக்கியம் எழுச்சி பெற்றது.
A
தேவநாகரி
B
மராத்தியம்
C
தெலுங்கு
D
பாரசீகம்
Question 94
பாபரின், சகாட்டி துருக்கிய மொழியில் எழுதிய சுயசரிதையை ______ என்பவர் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்தார்.
A
ஜெகநாத பண்டிதர்
B
அப்துல் ரகீம் கானி-இ- கானான்
C
தஜிகனிலகந்தி
D
பிரக்ஞபட்டர்
Question 95
முகலாயர் காலத்தில் _____ என்னும் தொழிற்கூடங்களில் விலையுயர்ந்த கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
A
பர்கூன்
B
சராய்கள்
C
கர்கானா
D
சத்னாமி
Question 95 Explanation: 
(குறிப்பு: அரச குடும்பங்களுக்கு தேவையான பொருட்களை அரண்மனை சார்ந்த கர்கானாக்கள் உற்பத்தி செய்தன.)
Question 96
________ ஆண்டு அல்புகர்க் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவை கைப்பற்றி அதை கீழ்த்திசை போர்த்துக்கீசிய பேரரசின் தலைநகராக்கினார்.
A
1498
B
1500
C
1501
D
1510
Question 97
ஷெர்ஷா காலத்தில் அனைத்து சாலைகளிலும் _____ எனப்படும் சத்திரங்கள் அமைக்கப்பட்டு வணிகர்கள் தங்கவும் உணவருந்தவும் வசதிகள் செய்துதரப்பட்டன.
A
பர்கூன்
B
சராய்கள்
C
கர்கானா
D
சத்னாமி
Question 97 Explanation: 
( குறிப்பு: சராய்கள் விறுவிறுப்பான வணிகத்திற்கு உத்ரவாதம் அளித்தன. செர்ஷாவால் உருவாக்கப்பட்ட ஒரு சில சராய்கள் இன்றளவும் உள்ளன.)
Question 98
‘ விவசாயி சீர்குலைந்தால் அரசன் சீர்குலைவான்’ என நம்பியவர் யார்?
A
அக்பர்
B
ஷாஜகான்
C
ஷெர்ஷா
D
ஜஹாங்கீர்
Question 98 Explanation: 
(குறிப்பு: ஷெர்ஷா காலத்தில் நிலங்கள் முறையாக அளவை செய்யப்பட்டு நிலங்களின் வளத்திற்கு ஏற்றவாறு வரி நிர்ணயம் செய்யப்பட்டது.)
Question 99
தவறான இணையைத் தேர்ந்தெடு
A
கன்னோசி போர் – 1540
B
செளசா போர் – 1549
C
கான்வா போர் – 1527
D
காக்ரா போர் – 1529
Question 100
பாதுஷா நாமா என்பது _____ன் வாழ்க்கை வரலாறாகும்.
A
பாபர்
B
ஹுமாயூன்
C
ஷாஜகான்
D
அக்பர்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!