Online Test

சிந்துவெளி நாகரிகம் – குப்தர்கள் – Revision Test in Tamil

சிந்துவெளி நாகரிகம் - குப்தர்கள் -Revision Test in Tamil

Congratulations - you have completed சிந்துவெளி நாகரிகம் - குப்தர்கள் -Revision Test in Tamil . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பொருத்துக:
    1. மெசபடோமியா நாகரிகம்          i) பொ.ஆ.மு 1700 – 1122
    2. சிந்துவெளி நாகரிகம்            ii) பொ.ஆ.மு 3100 – 1100
    3. எகிப்து நாகரிகம்        iii) பொ.ஆ.மு 3300 – 1900
    4. சீன நாகரிகம்                    iv) பொ.ஆ.மு 3500 – 2000
A
ii iii i iv
B
iii i ii iv
C
iv iii ii i
D
ii i iii iv
Question 2
ஹரப்பா நகரத்தின் இடிபாடுகளை முதன் முதலில் _____ என்ற ஆங்கிலேயர் தமது நூலில் விவரித்தார்.
A
ஜான் மார்ஷல்
B
சார்லஸ் மேனன்
C
அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்
D
ஜார்ஜ்
Question 2 Explanation: 
(குறிப்பு: சார்லஸ் மேனன் கிழக்கிந்திய கம்பெனியில் பணிபுரிந்த படைவீரரும், ஆராய்ச்சியாளரும் ஆவார். அவர் தற்போது பாகிஸ்தானில் உள்ள இந்தியாவின் வடமேற்கு பகுதியில் பார்வையிட்டபோது சில செங்கல் திட்டுகள் இருப்பதைக் கண்டார்.)
Question 3
1856 ல் பொறியாளர்கள் ________ இருந்து _______ வரை இரயில் பாதை அமைக்கும் பொருட்டு நிலத்தை தோண்டிய போது அதிகமான சுட்ட செங்கற்கள் கண்டறியப்பட்டன.
A
மும்பை, தானே
B
லாகூர், தானே
C
லாகூர், சூரத்
D
லாகூர், கராச்சி
Question 3 Explanation: 
(Notes: இரயில் பாதை அமைக்கும் பொருட்டு நிலத்தை தோண்டிய போது அதிகமான சுட்ட செங்கற்கள் கண்டறியப்பட்டன. ஆனால் அவற்றின் முக்கியத்துவத்தை உணராமல் அவற்றை இரயில் பாதைக்கு இடையில் போடப்படும் கற்களுக்கு பதிலாக பயன்படுத்தினர்.)
Question 4
_____ ஆண்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ நகரங்களை அகழாய்வு செய்ய ஆரம்பித்தனர்.
A
1856
B
1920
C
1924
D
1930
Question 5
நாகரிகம் என்ற வார்த்தை ______மொழி வார்த்தையான 'சிவிஸ்’ (CIVIS) என்பதிலிருந்து வந்தது.
A
கிரேக்கம்
B
சமஸ்கிருதம்
C
லத்தீன்
D
ஆங்கிலம்
Question 5 Explanation: 
(குறிப்பு: சிவிஸ் என்பதன் பொருள் நகரம் ஆகும்.)
Question 6
1924 ல் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் இயக்குநர் _____ என்பவர் ஹரப்பாவிற்கும் மொஹெஞ்சதாரோவிற்கும் இடையே பொதுவான அம்சங்கள் இருப்பதைக் கண்டறிந்தார்.
A
ஜான் மார்ஷல்
B
சார்லஸ் மேனன்
C
அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்
D
டல்ஹௌசி
Question 6 Explanation: 
(குறிப்பு: ஜான் மார்ஷல் ஹரப்பாவிற்கும் மொஹெஞ்சதாரோ இரண்டுமே ஒரு பெரிய நாகரிகத்தை சார்ந்த வெவ்வேறு பகுதிகள் என்ற முடிவுக்கு வந்தார்.)
Question 7
இந்திய தொல்லியல் துறை (ASI) எந்த ஆண்டு அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் என்ற நில அளவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது.
A
1856
B
1861
C
1920
D
1924
Question 7 Explanation: 
(குறிப்பு: ASI – Archaelogical Survey of India இதன் தலைமையகம் புதுதில்லியில் உள்ளது.)
Question 8
சிந்துவெளி நாகரிகம் குறித்த கூற்றுகளில் தவறானது எது?
  1. காலப் பகுதி – வெண்கலக் காலம்
  2. பரப்பு – 31 லட்சம் சதுர கி.மீ
  3. நகரங்கள் - 6 பெரிய நகரங்கள்
  4. கிராமங்கள் - 400க்கும் மேற்பட்டவை
A
அனைத்தும் சரி
B
1, 2, 3 சரி
C
1, 2,4 சரி
D
1, 3 சரி
Question 9
கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது?
A
மெஹர்கர் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஓர் இடம் ஆகும்.
B
இது பாகிஸ்தான் நாட்டில் பலுசிஸ்தான் மாநிலத்தில் சிந்து ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
C
மக்கள் வேளாண்மையிலும், கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டதற்கான சான்று இங்கு கிடைத்துள்ளது.
D
பொ.ஆ.மு 7000 ஐ ஒட்டிய காலத்திலேயே மெஹர்கரில் நாகரிகத்துக்கு முந்தைய வாழ்க்கை நிலவியதற்கான தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Question 10
சிந்துவெளி நாகரிகத்தில் செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானியக் களஞ்சியம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ?
A
பஞ்சாப் – ராகிகர்கி
B
ஹரியானா – ராகிகர்கி
C
பஞ்சாப் – உதய்ப்பூர்
D
ராஜஸ்தான் - லூனி ஆற்றங்கரை
Question 10 Explanation: 
(குறிப்பு: இந்த தானியக் களஞ்சியம் முதிர்ச்சியடைந்த ஹரப்பா காலத்தைச் சார்ந்தது.)
Question 11
சுமேரியாவின் அக்காடிய பேரரசிற்குட்பட்ட அரசன் நாரம்-சின் என்பவர் சிந்துவெளி பகுதியிலுள்ள _____ என்னும் இடத்தில் இருந்து அணிகலன் வாங்கியதாகக் குறிப்பு எழுதியுள்ளார்.
A
லோத்தல்
B
ராகிகர்கி
C
மெலுக்கா
D
லாகூர்
Question 11 Explanation: 
(குறிப்பு: பண்டைய மெசபடோமியாவில் உள்ள சுமேர் பகுதி என்பது தற்கால ஈராக், குவைத் மற்றும் சிரியாவை குறிக்கும்)
Question 12
தவறான தொடரைத் தேர்ந்தெடு.
A
ஹரப்பா நகர தெருக்கள் சட்டக வடிவமைப்பை கொண்டிருந்தன.
B
மொஹஞ்சதாரோவில் இருந்த கூட்ட அரங்கு 30 தூண்கள் 5 வரிசைகளை கொண்டு பரந்து விரிந்த கூடம் ஆகும்.
C
பாரசீக வளைகுடா மற்றும் மெசபடோமியாவில் கண்டுபிடிக்கப்பட்டதைப் போன்று உருளை வடிவமுத்திரைகள் சிந்து வெளிப்பகுதியிலும் காணப்படுகின்றன
D
குஜராத்திலுள்ள லோதலில் கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
Question 12 Explanation: 
(குறிப்பு: மொஹஞ்சதாரோவில் இருந்த கூட்ட அரங்கு 20 தூண்கள் 4 வரிசைகளை கொண்டு பரந்து விரிந்த கூடம் ஆகும். • லோதல் என்னும் இடம் குஜராத்தில் சபர்மதி ஆற்றின் ஒரு துணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.)
Question 13
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
A
குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தினாலான அளவுகோல் 1407 மி.மீ வரை சிறிய அளவீடுகளைக் கொண்டுள்ளது.
B
மனிதர்களால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட உலோகம் செம்பு.
C
சிந்துவெளி மக்களுக்கு இரும்பின் பயன் பற்றி தெரியாது.
D
சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய சிவப்பு நிற மணிக்கற்களைப் பயன்படுத்தினர்
Question 13 Explanation: 
குறிப்பு: குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தினாலான அளவுகோல் 1704 மி.மீ வரை சிறிய அளவீடுகளைக் கொண்டுள்ளது.)
Question 14
தவறான இணையைத் தேர்ந்தெடு
A
ASI - ஜான் மார்ஷல்
B
கோட்டை - தானியக் களஞ்சியம்
C
லோத்தல் - கப்பல் கட்டும் தளம்
D
ஹரப்பா நாகரிகம் - காவிரி ஆறு
Question 15
சிந்துவெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர்?
A
செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்
B
செம்பு, வெள்ளி, இரும்பு, வெண்கலம்
C
செம்பு, தங்கம், இரும்பு, வெள்ளி
D
செம்பு, வெள்ளி, இரும்பு, தங்கம்
Question 15 Explanation: 
( குறிப்பு: சிந்துவெளி மக்களுக்கு இரும்பின் பயன் பற்றி தெரியாது. தங்கம், வெள்ளி, தந்தம், சங்கு, செம்பு, சுடுமண் மற்றும் விலையுயர்ந்த கற்களால் அணிகலன்கள் செய்யப்பட்டிருந்தன.)
Question 16
  • கூற்று - ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனலாம்.
  • காரணம் - திட்டமிடப்பட்ட நகர அமைப்பு, மேம்பட்ட கழிவு நீர் அமைப்பு
A
கூற்றும் காரணமும் சரி
B
கூற்று தவறு, காரணம் சரி
C
கூற்று சரி, காரணம் தவறு
D
கூற்றும் காரணமும் தவறு
Question 17
கீழே கூறப்பட்டுள்ள மொஹஞ்சதாரோவை பற்றிய கூற்றுகளில் எவை சரியானவை?
A
தங்க ஆபரணங்கள் பற்றித் தெரியவில்லை.
B
வீடுகள் சுட்ட செங்கற்களால் மட்டுமே கட்டப்பட்டன.
C
கருவிகள் இரும்பினால் செய்யப்பட்டன.
D
பெருங்குளம் நீர் கசியாமல் இருப்பதற்காக பல அடுக்குகளால் இயற்கை தார் கொண்டு பூசப்பட்டன.
Question 17 Explanation: 
(குறிப்பு: பெருங்குளமானது நன்கு அகன்று, செவ்வக வடிவத்தில் அமைந்திருந்த நீர்த்தேக்கம் ஆகும். இது நீர் கசியாத கட்டுமானத்துக்கான மிகப் பழமையான சான்று ஆகும்.)
Question 18
பொருத்துக.
    1. மொஹஞ்சதாரோ              i) மேடான பகுதி
    2. வெண்கலம்                  ii) சிவப்பு மணிக்கல்
    3. கோட்டை                   iii) உலோகக் கலவை
    4. கார்னிலியன்             iv) இறந்தோர் மேடு
A
ii iv iii i
B
iii i ii iv
C
iv iii i ii
D
i iv iii ii
Question 19
தவறான தொடரைத் தேர்ந்தெடு.
    1. தொடக்க கால ஹரப்பா - பொ.ஆ.மு 3000 – 2600
    2. முதிர்ச்சி அடைந்த ஹரப்பா - பொ.ஆ.மு. 2600-1800
    3. பிற்கால ஹரப்பா - பொ.ஆ.மு.1800-1700
A
2 மட்டும் தவறு
B
3 மட்டும் தவறு
C
2, 3 தவறு
D
அனைத்தும் சரி
Question 19 Explanation: 
(குறிப்பு : 1. தொடக்க கால ஹரப்பா - பொ.ஆ.மு 3000 – 2600 2. முதிர்ச்சி அடைந்த ஹரப்பா - பொ.ஆ.மு. 2600-1900 3. பிற்கால ஹரப்பா - பொ.ஆ.மு.1900-1700)
Question 20
சிந்து நாகரிகமும் அதன் சமகாலப் பண்பாடுகளும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலுமாக மொத்தம் எவ்வளவு பரப்பளவில் அமைந்துள்ளன?
A
15 மில்லியன் சதுரகிலோ மீட்டர்
B
1.5 மில்லியன் சதுரகிலோ மீட்டர்
C
1.5 பில்லியன் சதுரகிலோ மீட்டர்
D
15 பில்லியன் சதுரகிலோ மீட்டர்
Question 20 Explanation: 
(குறிப்பு: சிந்து நகர பகுதியின் எல்லைகள் - மேற்கில் பாகிஸ்தான் -ஈரான் எல்லையில் அமைந்துள்ள சட்காசென் - டோர் குடியிருப்புகள், வடக்கில் ஷார்ட்டுகை (ஆப்கானிஸ்தான்), கிழக்கில் ஆலம்கிர்புர் (உத்திரப்பிரதேசம்), தெற்கில் தைமாபாத் (மகாராஷ்டிரம்))
Question 21
தவறான இணையைத் தேர்ந்தெடு.
A
டோலாவிரா - குஜராத், இந்தியா
B
காலிபங்கன் - ராஜஸ்தான், இந்தியா
C
ஹரப்பா - பஞ்சாப், இந்தியா
D
ராக்கிகார்ஹி - ஹரியானா, இந்தியா
Question 21 Explanation: 
(குறிப்பு: ஹரப்பா - பஞ்சாப், பாகிஸ்தான் மொகஞ்சதாரோ - சிந்து, பாகிஸ்தான் டோலாவிரா – குஜராத், இந்தியா காலிபங்கன் - ராஜஸ்தான், இந்தியா லோத்தல் - குஜராத், இந்தியா பனா வலி - ராஜஸ்தான், இந்தியா ராக்கிகார்ஹி - ஹரியானா, இந்தியா சர்கோட்டா - குஜராத், இந்தியா ஆகியவை ஹரப்பா கால முக்கிய நகரங்களாகும்.)
Question 22
சிந்துவெளி நாகரிகம் குறித்த கூற்றுகளில் தவறானது எது?
A
பெரும்குளத்தின் நான்கு பக்கங்களிலும் உள்ள நடைபாதைகளில் வடக்குப் பக்கத்திலும் தெற்கு பக்கத்திலும் படிக்கட்டுகள் அமைந்துள்ளது.
B
ஹரப்பா மக்கள் உழவுக்குக் கலப்பையை பயன்படுத்தினார்கள்.
C
செம்மறியாடு, வெள்ளாடு, குதிரை, கோழி போன்றவற்றை வளர்த்தார்கள்
D
ஹரப்பாவில் மாடுகள் செபு எனப்பட்டன.
Question 22 Explanation: 
(குறிப்பு: ஹரப்பா பண்பாட்டில் குதிரை இல்லை.)
Question 23
கீழ்க்கண்ட ஹரப்பா நாகரிக கைவினைப் பொருள்கள் மற்றும் அவற்றின் உற்பத்தி மையங்களில் தவறானது எது?
A
சங்கு - நாகேஷ்வர், பாலகோட்
B
வைடூரியம் – ஷார்டுகை
C
நுரைக்கல் - தெற்கு ராஜஸ்தான்
D
செம்பு – லோத்தல்
Question 24
  • கூற்று 1: ரோரி செர்ட் என்ற படிகக்கல் ஆப்கானிஸ்தானில் உள்ள ரோரி பகுதியில் காணப்படுகிறது.
  • கூற்று 2 : ஹரப்பா மக்கள் கத்திகளும் பிற கருவிகளும் செய்வதற்கு இது பயன்பட்டது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, 2 தவறு
D
கூற்று 1, 2 சரி
Question 24 Explanation: 
(குறிப்பு : ரோரி செர்ட் என்ற படிகக்கல் பாகிஸ்தானில் உள்ள ரோரி பகுதியில் காணப்படுகிறது.)
Question 25
_______ கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத் தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன.
A
க்யூனிபார்ம்
B
லோத்தல்
C
கார்னிலியன்
D
மெலுகா
Question 25 Explanation: 
(குறிப்பு: க்யூனிபார்ம் கல்வெட்டில் காணப்படும் மெலுகா என்னும் சொல் சிந்து பகுதியைக் குறிக்கிறது.)
Question 26
ஹரப்பா மக்கள் இன்றைய அளவீட்டில் _______ ஆகக் கொள்ளும் விதத்தில் அளவுகோலையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
A
ஒரு இஞ்ச் = 1.57 மி.மீ
B
ஒரு இஞ்ச் = 1.57 செ.மீ
C
ஒரு இஞ்ச் = 1.75 செ.மீ
D
ஒரு இஞ்ச் = 1.75 மி.மீ
Question 26 Explanation: 
(குறிப்பு: ஹரப்பா மக்கள் இரும எண்முறையை பின்பற்றினார்கள்.)
Question 27
ஹரப்பாவில் கிடைத்தவற்றில் மிக நீளமானதாகக் கருதப்படும் எழுத்துத் தொடர் எத்தனை குறியீடுகளைக் கொண்டுள்ளது?
A
25
B
26
C
27
D
28
Question 27 Explanation: 
(குறிப்பு: ஹரப்பா எழுத்துமுறையில் 5000 க்கும் மேற்பட்ட எழுத்துத் தொடர்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.)
Question 28
சிந்து நாகரிகம் ஏறத்தாழ_____லிருந்து வீழ்ச்சி அடைந்தது.
A
பொ.ஆ.மு.1800
B
பொ.ஆ.மு.1900
C
பொ.ஆ.மு.1950
D
பொ.ஆ.மு.1955
Question 29
ஹரப்பா பண்பாட்டு மக்கள் ______ என்ற சிலிகா கல் வகையில் செய்த பிளேடுகள், கத்திகள், செம்புப் பொருட்கள், எலும்பாலும் தந்தத்தாலும் செய்யப்பட்ட கருவிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார்கள்.
A
செபு
B
கார்னிலியன்
C
ஹாஸ்டோரியா
D
செர்ட்
Question 30
ஹரப்பன் முத்திரைகள் கீழ்க்கண்ட எந்தெந்த இடங்களில் கிடைத்துள்ளன?
  1. ஓமன் 2. பஹ்ரைன் 3. சீனா                4. ஈராக்               5. ஈரான்
A
1, 2, 3 சரி
B
2, 3, 5 சரி
C
1, 2, 4, 5 சரி
D
1 , 3, 4, 5 சரி
Question 30 Explanation: 
(குறிப்பு : ஹரப்பர்களுக்கு மெசபடோமியர்களுடன் நெருங்கிய வணிகத்தொடர்பு இருந்தது).
Question 31
"ஹரப்பா மொழியின் மூலவேர்கள் தென்னிந்திய திராவிட மொழிகளை ஒத்திருப்பதை காணலாம்" என்று சிந்துவெளி நாகரிகத்தை விரிவாக ஆய்வு செய்து கூறியவர் யார்?
A
யூரி நோரோசோவ்
B
ஐராவதம் மகாதேவன்
C
ஜான் மார்ஷல்
D
கன்னிங்ஹாம்
Question 32
லோத்தல் என்னும் செம்புக் கற்காலத் துறைமுகம் காணப்படும் இடம்
A
பஞ்சாப்
B
சிந்து
C
குஜராத்
D
மும்பை
Question 33
ஹரப்பா என்ற சிந்திமொழிச் சொல்லின் பொருள்
A
புதையுண்ட நகரம்
B
மலைக்கோட்டை நகரம்
C
நதிகளிடைப்பட்ட நகரம்
D
இடுகாட்டு மேடு
Question 34
மொகஞ்சதாரோ என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு ______ என்று பொருள்.
A
பழங்கற்காலமேடு
B
துறைமுக நகரம்
C
இடுகாட்டு மேடு
D
நதிகளிடைப்பட்ட நகரம்
Question 35
மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்டுள்ள நாட்டிய மங்கையின் உருவச்சிலை எந்த உலோகத்தால் ஆனது?
A
தங்கம்
B
பித்தளை
C
எஃகு
D
வெண்கலம்
Question 36
சிந்து வெளி மக்கள் பயன்படுத்திய எழுத்துமுறை ______
A
பிராமி
B
சித்திர எழுத்து
C
வட்டெழுத்து
D
சமஸ்கிருதம்
Question 36 Explanation: 
(குறிப்பு: ஏடுகளில் வரிகள் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாகவும் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாகவும் எழுதப்பட்டுள்ளன.)
Question 37
சிந்துவெளி மக்கள் _____ எனப்படும் சுடுமண் பாண்டம் செய்வதில் திறமை மிக்கவர்களாக இருந்தனர்.
A
டெர்ராகோட்டா
B
டெர்ரஸ்ட்ரியல்
C
டெர்ரஸ்
D
மேற்கண்ட எதுவுமில்லை
Question 38
  • கூற்று 1: சிந்துவெளி நகரங்களிலேயே மிகப்பெரியது மொகஞ்சதாரோ.
  • கூற்று 2: இது சுமார் இருநூறு ஹெக்டேர் பரப்பைக் கொண்டது என மதிப்பிடப்டுகிறது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, 2 தவறு
D
கூற்று 1, 2 சரி
Question 39
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
    1. 1931 ஆம் ஆண்டு சர்ஜான் மார்ஷல் மொகஞ்சாதாரோவின் காலத்தை கி.மு 3250 - கி.மு 2750 என மதிப்பிட்டார்.
    2. 1956ல் ஃபேர்சர்வ்ஸ் என்பவர் ஹரப்பா பண்பாட்டின் காலத்தை கி.மு.2000 – கி.மு.1500 என்று மதிப்பிட்டார்.
    3. 1964ல் டி.பி.அகர்வால் ஹரப்பா பண்பாட்டின் காலத்தை கி.மு.2300 - கி.மு.1750 என முடிவு செய்தார்.
A
2 மட்டும் தவறு
B
2 , 3 தவறு
C
1, 3 தவறு
D
எதுவுமில்லை
Question 40
மொகஞ்சதாரோவின் பெரும் குளியல் குளத்தின் நீளம், அகலம், ஆழம் முறையே
A
40, 32, 10
B
38, 23, 8
C
39, 23, 8
D
39, 24, 8
Question 41
சிந்துவெளி நாகரிகத்தில் ____, _____ ஆகியவை முக்கிய விளை பொருட்களாகும்.
A
கோதுமை, பருத்தி
B
கோதுமை, பார்லி
C
கோதுமை, கடுகு
D
கோதுமை, அரிசி
Question 41 Explanation: 
(குறிப்பு: எள், கடுகு, பருத்தி போன்றவையும் பயிரிடப்பட்டன. மிகையான தானியங்கள் களஞ்சியங்களில் சேமித்து வைக்கப்பட்டன.)
Question 42
ஹரப்பா பண்பாட்டின் முக்கிய பெண் தெய்வம்
A
பசுபதி
B
தாய்க் கடவுள்
C
பார்வதி
D
லட்சுமி
Question 42 Explanation: 
(குறிப்பு: முக்கிய ஆண் கடவுள் – பசுபதி. பிற்காலத்தில் லிங்க வழிபாடும் காணப்பட்டது. ஹரப்பா மக்கள் மரங்களையும் விலங்குகளையும் கூட வழிபட்டனர்.)
Question 43
சமுத்திரகுப்தரின் ஆட்சி, அவரது ஆளுமை, சாதனைகள் ஆகியவற்றை விளக்கும் கல்வெட்டு எது?
A
மெஹ்ரோலி கல்வெட்டு
B
அலகாபாத் கல்வெட்டு
C
அகமதாபாத் கல்வெட்டு
D
சாரநாத் கல்வெட்டு
Question 43 Explanation: 
(குறிப்பு: அலகாபாத் கல்வெட்டை பொறித்தவர் ஹரிசேனர். இது 33 வரிகளில் நாகரிவரிவடிவத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது.)
Question 44
_______ என்ற குப்த மன்னர் குமாரதேவி என்ற லிச்சாவி இளவரசியை மணந்தார்.
A
முதலாம் சந்திரகுப்தர்
B
சமுத்திரகுப்தர்
C
இரண்டாம் சந்திரகுப்தர்
D
ஸ்ரீகுப்தர்
Question 44 Explanation: 
குறிப்பு: லிச்சாவி என்பது வடக்கு பிகாரில் இருந்த பழமையான கணசங்கமாகும்.அது கங்கைக்கும் நேபாள தெராய்க்கும் இடைப்பட்ட பகுதியாகும்.)
Question 45
கல்வெட்டுகளில் மகாராஜா எனக் குறிப்பிடப்படும் குப்த அரசர்கள் யார்?
A
ஸ்ரீகுப்தர், முதலாம் சந்திரகுப்தர்
B
கடோத்கஜர், முதலாம் சந்திரகுப்தர்
C
ஸ்கந்தகுப்தர், கடோத்கஜர்
D
ஸ்ரீகுப்தர், கடோத்கஜர்
Question 45 Explanation: 
(குறிப்பு: ஸ்ரீகுப்தர் – பொ.ஆ.மு 240 – 280 கடோத்கஜர் – பொ.ஆ.மு 280 - 319)
Question 46
கவிராஜா என்ற பட்டம் பெற்ற குப்த அரசர் யார்?
A
முதலாம் சந்திரகுப்தர்
B
சமுத்திரகுப்தர்
C
இரண்டாம் சந்திரகுப்தர்
D
ஸ்ரீகுப்தர்
Question 46 Explanation: 
குறிப்பு: குப்தர் நாணயங்களில் சமுத்திரகுப்தர் வீணை வாசிப்பது போன்ற சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.)
Question 47
விக்ரமன், தேவகுப்தன், தேவராஜன், சிம்ஹவிக்ரமன், விக்ரமாதித்யன், சகாரி ஆகிய பெயர்களால் அழைக்கப்படும் அரசர் யார்?
A
முதலாம் சந்திரகுப்தர்
B
சமுத்திரகுப்தர்
C
இரண்டாம் சந்திரகுப்தர்
D
ஸ்ரீகுப்தர்
Question 48
இரண்டாம் சந்திரகுப்தர் குறித்த கூற்றுகளில் தவறானது எது?
A
விக்ரமாதித்யன் என்றும் அழைக்கப்பட்டார்.
B
தக்காண பகுதியை ஆண்ட வாகடக இளவரசருக்குத் தன் மகள் பிரபாவதியைத் திருமணம் செய்து கொடுத்தார்.
C
நவரத்தினங்கள் எனப்பட்ட ஒன்பது அறிஞர்கள் இவரது அவையில் இருந்தனர்
D
இவரது ஆட்சிக் காலத்தில் தான் யுவான் சுவாங் இந்தியா வந்தார்.
Question 48 Explanation: 
(குறிப்பு: இவரது ஆட்சிக் காலத்தில் தான் பாஹியான் என்ற பெளத்த அறிஞர் சீனாவிலிருந்து இந்தியா வந்தார்.)
Question 49
முதலாம் குமாரகுப்தர் குறித்த கூற்றுகளில் தவறானது எது?
A
இவர் பொ.ஆ.மு.544 வரை ஆட்சி செய்தார்.
B
நாளந்தா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார்.
C
சக்ராதித்யர் என்றும் அழைக்கப்பட்டார்.
D
குப்த வம்சத்தின் கடைசிப் பேரரசரான ஸ்கந்த குப்தர் இவரது புதல்வர் ஆவார்.
Question 49 Explanation: 
(குறிப்பு : இவர் பொ.ஆ.மு.455 வரை ஆட்சி செய்தார்.)
Question 50
வெள்ளி நாணயங்களை வெளியிட்ட முதல் குப்த அரசர் யார்?
A
முதலாம் சந்திரகுப்தர்
B
சமுத்திரகுப்தர்
C
இரண்டாம் சந்திரகுப்தர்
D
ஸ்ரீகுப்தர்
Question 51
அலகாபாத் கல்வெட்டுகளில் சமுத்திரகுப்தர் ______ என்ற கடவுளுடன் ஒப்பிடப்படுகிறார்.
A
பரம தைவத
B
பரமபாகவத
C
புருஷா
D
பரமாத்மா
Question 51 Explanation: 
(குறிப்பு: புருஷா - அனைவருக்கும் மேலானவர்.)
Question 52
அலகாபாத் பிரசஸ்தியை எழுதிய ஹரிசேனர் கீழ்க்கண்ட எந்த பட்டங்களை கொண்டவராக திகழ்ந்தார்?
  1. குமாரமாத்யா
  2. சந்திவிக்ரஹிகா
  3. மஹாமாத்யாயர்
  4. மஹாதண்டநாயகா
A
1, 2, 3 சரி
B
2, 3, 4 சரி
C
1, 2, 4 சரி
D
1 , 3, 4 சரி
Question 52 Explanation: 
(குறிப்பு: ஹரிசேனர் மஹாதண்டநாயகா துருவபூதியின் புதல்வர் ஆவார்)
Question 53
குப்தர்களின் அமைச்சர் குழு பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
A
மஹாசந்தி விக்ரஹா என்பவர் அமைச்சர்களில் உயர்நிலையில் இருந்துள்ளார்
B
நீதித்துறை, ராணுவம் ஆகியவற்றின் பொறுப்பு வகித்தவர் தண்டநாயகா அல்லது மஹா தண்டநாயகா என்றழைக்கப்பட்டார்
C
மஹா அஸ்வபதி என்பவர் யானைப்படைத் தலைவர் ஆவார்.
D
அலகாபாத் கல்வெட்டு மூன்று மஹா தண்டநாயகாக்களைக் குறித்து கூறுகிறது.
Question 53 Explanation: 
( குறிப்பு: மஹா அஸ்வபதி என்பவர் குதிரைப்படைத் தலைவர்)
Question 54
குப்தர்களின் பேராசில் தேசம் அல்லது புக்தி எனப்படும் மாநிலங்கள் ______ என்பவரால் நிர்வகிக்கப்பட்டன.
A
மஹாபிரதிஹரா
B
கத்யதபகிதா
C
விஷ்யபதி
D
உபாரிகா
Question 54 Explanation: 
(குறிப்பு: உபாரிகாக்கள் அரசரால் நேரடியாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் மாவட்ட தலைமை நிர்வாக அதிகாரிகளையும் வாரிய அதிகாரிகளையும் நியமித்தனர்)
Question 55
குப்த பேரரசின் மாநிலங்கள் _____ என்ற அதிகாரியின் கீழ் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன.
A
மஹாபிரதிஹரா
B
கத்யதபகிதா
C
விஷ்யபதி
D
உபாரிகா
Question 55 Explanation: 
(குறிப்பு: மாவட்டங்கள் விஷ்யா என அழைக்கப்பட்டன. விஷ்யபதிகள் மாநில ஆளுநரால் நியமிக்கப்பட்டனர். சில சமயங்களில் அரசரே நேரடியாக விஷ்யபதிகளை நியமித்தார்.)
Question 56
______ செப்பேடு மஹாதாரா என்பவர் தலைமையிலான அஷ்ட குல- அதிகாரனா குறித்து குறிப்பிடுகிறது.
A
அலகாபாத்
B
தாமோதர்பூர்
C
பஹார்பூர்
D
அகமதாபாத்
Question 56 Explanation: 
(குறிப்பு: மஹாதாரா என்பதற்கு கிராமப் பெரியவர், கிராமத் தலைவர், குடும்பத் தலைவர் என்று பல பொருள் உண்டு)
Question 57
குப்தர்கள் கால ஒற்றர்கள் கொண்ட உளவு அமைப்பு ______ என்று அழைக்கப்பட்டது.
A
அமாத்தியா
B
சச்சிவா
C
துடகா
D
கத்யதபகிதா
Question 58
குப்தர்கள் கால அரச கருவூலத்தின் முக்கிய வருவாய்க்கான பல்வேறு மூலவளங்கள் பற்றி குறிப்பிடும் நூல் எது?
A
நீதிசாரா
B
அர்த்தசாஸ்திரம்
C
கிலிப்பதா
D
உத்ரங்கா
Question 58 Explanation: 
(குறிப்பு: நீதிசாரா என்ற நூல் மெளரியர் காலத்து நூலான அர்த்தசாஸ்திரம் போன்ற நூல் ஆகும். இந்நூலை இயற்றியவர் காமாந்தகா ஆவார்.)
Question 59
பஹார்பூர் செப்பேடுகளின்படி ________ என்ற அதிகாரி மாவட்டத்தின் நிலப்பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் பாதுகாத்தார்.
A
மஹாபிரதிஹரா
B
கத்யதபகிதா
C
விஷ்யபதி
D
உஸ்தபாலா
Question 59 Explanation: 
(குறிப்பு: பஹார்பூர் செப்பேடு அரசர்தான் நிலத்தின் ஒரே உரிமையாளர் என்று காட்டுகிறது.)
Question 60
குப்தர்கள் கால நிலத்தின் வகைகளில் தவறான இணை எது?
A
க்ஷேத்ரா – பயிரிடக்கூடிய நிலம்
B
அப்ரஹதா - மேய்ச்சல் நிலம்
C
வாஸ்தி - குடியிருக்க தகுந்த நிலம்
D
கிலா - தரிசு நிலம்
Question 61
குப்தர்கள் காலத்தில் தரிசு நிலத்தை முதன்முதலாக சாகுபடி நிலமாக மாற்றுபவருக்கு தரப்படும் உரிமை ______ என அழைக்கப்படுகிறது.
A
அப்ரதாதர்மா
B
நிவி தர்மா
C
நிவி தர்ம அக்சயனா
D
பூமி சித்ராயனா
Question 61 Explanation: 
(குறிப்பு: பூமிசித்ராயனா நிலத்திற்குக் குத்தகையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது)
Question 62
கோயில் மராமத்து, வழிபாடு ஆகிய பணிகளுக்காகப் பிராமணர்கள், வணிகர்கள் ஆகியோருக்கு அளிக்கப்படும் நில மானியம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
அக்ரஹாரமானியம்
B
தேவக்கிரஹார மானியம்
C
சமய சார்பற்ற மானியம்
D
அப்ரதா தர்மா
Question 63
குப்தர்கள் காலநிலகுத்தகை வகைகளில் தவறானதை தேர்ந்தெடு.
    1. நிவிதர்மா - அறக்கட்டளை போன்ற அமைப்பின் மூலம் நில மானியம்
    2. நிவி தர்ம அக்சயனா - நிரந்தரமான அறக்கட்டளை, பெற்றவர் அதிலிருந்து வரும் வருவாயைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
    3. அப்ரதா தர்மா - வருவாயைப் பயன்படுத்தலாம் ஆனால் அதை பிறருக்குத் தானம் செய்ய முடியாது. நிர்வாக உரிமையும் இல்லை.
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் தவறு
C
3 மட்டும் தவறு
D
1, 3 தவறு
Question 64
_______ என்ற நூலில் வயல்களை வெள்ளங்களிலிருந்து பாதுகாத்த பந்தியா, பாசனத்திற்கு உதவிய கரா என்ற இரு வகை அணைக்கரைகள் குறிப்பிடப்படுகின்றன
A
நாரதஸ்மிருதி
B
அர்த்தசாஸ்திரம்
C
நீதிசாரா
D
நாதஸ்மிருதி
Question 65
தண்ணீர் தேங்குவதைத் தடுக்க ஜலநிர்கமா என்ற வடிகால்கள் இருந்ததாக யார் குறிப்பிடுகிறார்.
A
தண்டி
B
காளிதாசர்
C
அமரசிம்மர்
D
காமாந்தகா
Question 66
குப்தர்கள் காலத்தில் ஆரம்பத்தில் விருப்பப்பட்டு வழங்கப்பட்ட வரியாக இருந்து பின்னர் கட்டாய வரியாக மாற்றப்பட்ட ஒடுக்குமுறை வரி எது?
A
கரா
B
பலி
C
பாகா
D
போகா
Question 67
குப்தர்கள் காலத்தில் வர்த்தகர்கள் நகரத்திற்கோ துறைமுகத்திற்கோ கொண்டு வரும் வணிகச் சரக்குகளில் அரசருக்கான பங்கு எவ்வாறு அழைக்கப்பட்டது?
A
கிளிப்தா
B
ஹலிவகரா
C
ஹிரண்யா
D
சுல்கா
Question 67 Explanation: 
(குறிப்பு: சுல்கா என்பது சுங்க, நுழைவு வரிகளுக்கு ஒப்பிடலாம்.)
Question 68
தவறான தொடரைத் தேர்ந்தெடு.
    1. குப்தர்கள் காலத்தில் சிரேஷ்டி, சார்த்தவஹா என்ற இரு வேறுபட்ட வகைகளைச் சேர்ந்த வணிகர்கள் இருந்தனர்.
    2. சிரேஷ்டி என்பவர் பொதுவாக ஒரே இடத்தில் தங்கியிருப்பவர்.
    3. சார்த்தவஹா என்பவர் இலாபத்திற்காக ஊர் ஊராகச் சென்று வணிகம் செய்தவர்.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 69
இந்தியா, சீனா இடையிலான கடல் பயணத்தில் எதிர்கொள்ள நேரும் இடர்கள் குறித்து ______ குறிப்பிடுகிறார்.
A
யுவான் சுவாங்
B
பாஹியான்
C
காளிதாசர்
D
அமரசிம்மர்
Question 70
குப்தர் காலத்து சுவரோவியங்கள் கீழ்க்கண்ட எந்தெந்த இடங்களில் காணப்படுகின்றன?
  1. அஜந்தா
  2. பாக்
  3. பாதாமி
  4. எல்லோரா
A
1, 2, 3 சரி
B
2, 3, 4 சரி
C
1, 2 சரி
D
2 , 3 சரி
Question 70 Explanation: 
(குறிப்பு: அஜந்தா,பாக்கில் காணப்படும் ஓவியங்கள் மத்தியதேச ஒவியப் பள்ளி முறையின் தலை சிறந்த ஓவியங்களாகும்.)
Question 71
குப்தர்கள் காலத்தில் எழுதப்பட்ட நூல்கள் மற்றும் ஆசிரியர்களில் தவறான இணை எது?
A
அஷ்டத்யாயி - தண்டி
B
மஹாபாஷ்யா – பதஞ்சலி
C
அமரகோசம் – அமரசிம்மர்
D
சந்திரவியாகரணம் – சந்திரகோமியர்
Question 71 Explanation: 
(குறிப்பு : அஷ்டத்யாயி – பாணினி)
Question 72
எந்த ஆண்டு தில்லி சுல்தானிய மம்லூக் வம்சத்தின் பக்தியார் கில்ஜியின் படைகளால் நாளந்தா சூறையாடப்பட்டு, அழிக்கப்பட்டது.
A
பொ.ஆ.1300
B
பொ.ஆ.1200
C
பொ.ஆ.1100
D
பொ.ஆ.1400
Question 73
சூரிய சித்தாந்தா என்ற நூலில் _____ என்பவர் சூரிய கிரகணங்களின் உண்மையான காரணங்களை ஆராய்ந்தார்.
A
ஆரியபட்டர்
B
காளிதாசர்
C
அமரசிம்மர்
D
காமாந்தகா
Question 74
வராகமிகிரரின் எந்த நூல் வானவியல், புவியியல், தாவரவியல், இயற்கை வரலாறு ஆகியவற்றிற்கான கலைக்களஞ்சியமாக திகழ்கிறது?
A
பஞ்ச சித்தாந்திகா
B
பிருஹத் ஜாதகா
C
பிருஹத் சம்ஹிதா
D
கண்டகாத்யகா
Question 74 Explanation: 
(குறிப்பு: வராகமிகிரர் (ஆறாம் நூற்றாண்டு) பஞ்ச சித்தாந்திகா, பிருஹத் ஜாதகா ஆகிய மற்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.)
Question 75
பிரம்ம குப்தரின் பிரும்மஸ்புத – சித்தாந்தா, கண்டகாத்யகா ஆகிய நூல்கள் எந்த துறை சார்ந்த நூல்கள் ?
A
உயிரியல் மற்றும் வானவியல்
B
கணிதம் மற்றும் வானவியல்
C
உயிரியல் மற்றும் கணிதம்
D
இயற்பியல் மற்றும் வானவியல்
Question 76
குப்தர் காலத்தில் மருத்துவ அறிவியல் வளர்ந்து இருந்ததை குறிப்பிடும் நூல் எது?
A
ஹல்த்யாயுர்வேதா – பாலகாப்யா
B
பிருஹத் சக்ஹிதா – வராகமிகிரர்
C
முத்ராராட்சசம் – விசாகதத்தர்
D
மிருச்சகடிகம் – சூத்ரகர்
Question 76 Explanation: 
(குறிப்பு: ஹல்த்யாயுர்வேதா என்பது விலங்குகளுக்கான மருத்துவ நூலாகும்.)
Question 77
கீழ்க்கண்டவற்றுள் எது குப்தர் காலத்துக் குடைவரைக் கோயில் இல்லை?
A
உதயகிரி குகை (ஒடிசா )
B
அஜந்தா - எல்லோரா குகை (மகாராஷ்டிரா)
C
எலிபண்டா குகை (மகாராஷ்டிரா )
D
பாக் (மத்தியப் பிரதேசம்)
Question 78
தர்க்கம் குறித்த முதல் முழுமையான பெளத்த நூலை எழுதியவர்
A
திக்நாதர்
B
வசுபந்து
C
சந்திரகாமியா
D
வராகமிகிரர்
Question 79
தென்னிந்தியாவில் பல்லவ நாட்டு அரசர் விஷ்ணுகோபனை தோற்கடித்தவர் யார்?
A
முதலாம் சந்திரகுப்தர்
B
சமுத்திரகுப்தர்
C
இரண்டாம் சந்திரகுப்தர்
D
ஸ்ரீகுப்தர்
Question 80
________ என்ற சீனப் பயணி பொ.ஆ.5 ம் நூற்றாண்டின் இந்திய சமூகத்தைக் குறித்து விரிவாக எழுதியுள்ளார்.
A
இட்சிங்
B
யுவான் சுவாங்
C
பாஹியான்
D
வாங்-யுவான்-சீ
Question 81
விக்ரமாதித்யரின் அவையிலிருந்த நவரத்தினங்கள் குறித்த செய்திகளில் தவறானது எது?
A
ஹரிசேனர் - சமஸ்கிருத புலவர்
B
அமரசிம்ஹர் - இலக்கண ஆசிரியர்
C
சன்கு - கட்டடக்கலை நிபுணர்
D
விட்டல்பட்டர் – மாயவித்தைக்காரர்
Question 82
இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீமேகவர்மன் எனும் பெளத்த அரசன் எந்த குப்த மன்னரின் சமகாலத்தவர்?
A
முதலாம் சந்திரகுப்தர்
B
சமுத்திரகுப்தர்
C
இரண்டாம் சந்திரகுப்தர்
D
ஸ்ரீகுப்தர்
Question 83
குப்தப் பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர் யார்?
A
ஸ்கந்த குப்தர்
B
முதலாம் நரசிம்மகுப்தர்
C
ஸ்ரீ குப்தர்
D
விஷ்ணு குப்தர்
Question 84
நாளந்தா பல்கலைக்கழகத்தில் _______மகா பாடசாலைகளும் ______ மிகப்பெரிய நூலகங்களும் இருந்தன.
A
3,8
B
4,7
C
8, 3
D
7, 2
Question 85
தவறான கூற்றை தேர்ந்தெடு.
A
குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் முதலாம் சந்திரகுப்தர்.
B
குஷாணர்களின் நாணயங்கள் இவருக்கு உந்துதலை வழங்கின
C
குப்தர்களின் பொற்காசுகள் தினரா என்றழைக்கப்பட்டன
D
குப்தர்கள் வெளியிட்ட பொற்காசுகளை விட வெள்ளி, செப்புக் காசுகள் குறைவாகவே வெளியிடப்பட்டன.
Question 85 Explanation: 
(குறிப்பு: குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் சமுத்திரகுப்தர்.)
Question 86
குபேர நாகா, துருபசுவாமினி ஆகிய இருவரும் யாருடைய ஆசிரியர் என கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
A
முதலாம் சந்திரகுப்தர்
B
சமுத்திரகுப்தர்
C
இரண்டாம் சந்திரகுப்தர்
D
ஸ்ரீகுப்தர்
Question 87
பிரயாகை மெய்கீர்த்தியை இயற்றியவர் யார்?
A
காளிதாசர்
B
அமரசிம்மர்
C
ஹரிசேனர்
D
தன்வந்திரி
Question 88
சந்திரகுப்தரால் நிறுவப்பட்ட ஒற்றை இரும்புத் தூண் _____ என்ற இடத்தில் உள்ளது.
A
மெக்ராலி
B
பிதாரி
C
கத்வா
D
மதுரா
Question 89
  • கூற்று 1: தென்னிந்திய அரசர்களோடு இரண்டாம் சந்திரகுப்தர் சுமுகமான உறவைக் கொண்டிருக்கவில்லை.
  • கூற்று 2: குப்தர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினைப் பின்பற்றினர்.
A
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
B
கூற்று 2 தவறு, கூற்று 1 சரி
C
இரண்டு கூற்றுகளும் சரி
D
இரண்டு கூற்றுகளும் தவறு
Question 90
கீழ்க்காண்பனவற்றில் காலவரிசைப்படி அமைந்துள்ளது எது?
A
ஸ்ரீகுப்தர் - முதலாம் சந்திரகுப்தர் -சமுத்திரகுப்தர் – விக்கிரமாதித்யர்
B
முதலாம் சந்திரகுப்தர் - விக்கிரமாதித்யர் – ஸ்ரீகுப்தர் – சமுத்திரகுப்தர்
C
ஸ்ரீகுப்தர் -சமுத்திரகுப்தர் – விக்கிரமாதித்யர் - முதலாம் சந்திரகுப்தர்
D
விக்கிரமாதித்யர் - ஸ்ரீகுப்தர் -சமுத்திரகுப்தர் - முதலாம் சந்திரகுப்தர்
Question 91
பொருத்துக  
    1. மிகிரகுலா                                          i) வானியல்
    2. ஆரியபட்டர்                                         ii) குமாரகுப்தர்
    3. ஓவியம்                                                  iii) ஸ்கந்தகுப்தர்
    4. நாளந்தா பல்கலைக்கழகம்         iv) இடம் விட்டு இடம்  செல்லும் வணிகர்கள்
    5. சார்த்தவாகர்கள்                                    v) பாக்
A
i ii iv iii v
B
ii iv i iii v
C
iii i v ii iv
D
iii ii i iv v
Question 92
பொருத்துக.
    1. மேகதூதம்                             i) தண்டின்
    2. தேவி சந்திரகுப்தம்               ii) சூத்ரகர்
    3. தசகுமார சரிதம்                  iii) காளிதாசர்
    4. மிருச்சகடிகம்                            iv) விசாகதத்தர்
A
i ii iv iii
B
ii iv i iii
C
iii i ii iv
D
iii iv i ii
Question 93
கீழ்க்கண்டவர்களுள் குப்தர் காலத்தில் வாழ்ந்த மருத்துவ அறிஞர் யார்?
A
வராஹமிகிரர்
B
வாக்பதர்
C
சரகர்
D
சூஸ்ருதர்
Question 94
குப்த சகாப்தம் தொடங்கும் ஆண்டு
A
கி.பி.310
B
கி.பி.320
C
கி.பி.330
D
கி.பி.300
Question 95
  • கூற்று: ஹரப்பா மக்களின் பொறியியல் திறன் குறிப்பிடத்தக்கது.
  • காரணம்: கடலின் அலைகள், ஓதங்கள், நீரோட்டத்தைக் கணித்த பின் கப்பல் கட்டும் தளத்தைக் கட்டியிருப்பது
A
கூற்றும் காரணமும் சரி
B
கூற்று தவறு, காரணம் சரி
C
கூற்று சரி, காரணம் தவறு
D
கூற்று காரணம் இரண்டும் தவறு
Question 96
  • கூற்று: ஹரப்பா நாகரிகம் வெண்கல காலத்தை சார்ந்தது.
  • காரணம்: ஹரப்பா மக்களுக்கு இரும்பின் பயன் தெரியாது.
A
கூற்றும் காரணமும் சரி
B
கூற்று தவறு, காரணம் சரி
C
கூற்று சரி, காரணம் தவறு
D
கூற்று காரணம் இரண்டும் தவறு
Question 97
காவல் நிலையங்களின் பராமரிப்பிற்காக விதிக்கப்பட்ட காவல் வரி அல்லது நீர் வரியாக இருக்கலாம் என கருதப்படும் குப்தர் கால வரி எது?
A
பலி
B
உதியங்கா
C
உபரிகரா
D
கரா
Question 98
ஹரப்பா மக்களுக்கு முக்கியமான வாழ்வாதார வழிமுறையாக ______ இருந்தது.
A
வேளாண்மை
B
மட்பாண்டம் செய்தல்
C
கைவினைத் தொழில்கள்
D
மீன்பிடித்தல்
Question 99
சிந்துவெளி நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது?
A
பழைய கற்காலம்
B
இடைக்கற்காலம்
C
புதிய கற்காலம்
D
உலோகக் காலம்
Question 100
சிந்துவெளி நாகரிகம் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு
A
உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்று.
B
உலகின் இரண்டாவது திட்டமிடப்பட்ட நகரம்.
C
பழமையான நான்கு நாகரிகங்களில் பெரிய பரப்பளவு கொண்டது.
D
சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றிய உணர்வு மேலோங்கியிருந்தது.
Question 100 Explanation: 
(குறிப்பு: உலகின் முதல் திட்டமிடப்பட்ட நகரம்.)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!