சிந்துவெளி நாகரிகம் - குப்தர்கள் -Revision Test in Tamil
Congratulations - you have completed சிந்துவெளி நாகரிகம் - குப்தர்கள் -Revision Test in Tamil .
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பொருத்துக:
மெசபடோமியா நாகரிகம் i) பொ.ஆ.மு 1700 – 1122
சிந்துவெளி நாகரிகம் ii) பொ.ஆ.மு 3100 – 1100
எகிப்து நாகரிகம் iii) பொ.ஆ.மு 3300 – 1900
சீன நாகரிகம் iv) பொ.ஆ.மு 3500 – 2000
A
ii iii i iv
B
iii i ii iv
C
iv iii ii i
D
ii i iii iv
Question 2
ஹரப்பா நகரத்தின் இடிபாடுகளை முதன் முதலில் _____ என்ற ஆங்கிலேயர் தமது நூலில் விவரித்தார்.
A
ஜான் மார்ஷல்
B
சார்லஸ் மேனன்
C
அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்
D
ஜார்ஜ்
Question 2 Explanation:
(குறிப்பு: சார்லஸ் மேனன் கிழக்கிந்திய கம்பெனியில் பணிபுரிந்த படைவீரரும், ஆராய்ச்சியாளரும் ஆவார். அவர் தற்போது பாகிஸ்தானில் உள்ள இந்தியாவின் வடமேற்கு பகுதியில் பார்வையிட்டபோது சில செங்கல் திட்டுகள் இருப்பதைக் கண்டார்.)
Question 3
1856 ல் பொறியாளர்கள் ________ இருந்து _______ வரை இரயில் பாதை அமைக்கும் பொருட்டு நிலத்தை தோண்டிய போது அதிகமான சுட்ட செங்கற்கள் கண்டறியப்பட்டன.
A
மும்பை, தானே
B
லாகூர், தானே
C
லாகூர், சூரத்
D
லாகூர், கராச்சி
Question 3 Explanation:
(Notes: இரயில் பாதை அமைக்கும் பொருட்டு நிலத்தை தோண்டிய போது அதிகமான சுட்ட செங்கற்கள் கண்டறியப்பட்டன. ஆனால் அவற்றின் முக்கியத்துவத்தை உணராமல் அவற்றை இரயில் பாதைக்கு இடையில் போடப்படும் கற்களுக்கு பதிலாக பயன்படுத்தினர்.)
Question 4
_____ ஆண்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ நகரங்களை அகழாய்வு செய்ய ஆரம்பித்தனர்.
A
1856
B
1920
C
1924
D
1930
Question 5
நாகரிகம் என்ற வார்த்தை ______மொழி வார்த்தையான 'சிவிஸ்’ (CIVIS) என்பதிலிருந்து வந்தது.
A
கிரேக்கம்
B
சமஸ்கிருதம்
C
லத்தீன்
D
ஆங்கிலம்
Question 5 Explanation:
(குறிப்பு: சிவிஸ் என்பதன் பொருள் நகரம் ஆகும்.)
Question 6
1924 ல் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் இயக்குநர் _____ என்பவர் ஹரப்பாவிற்கும் மொஹெஞ்சதாரோவிற்கும் இடையே பொதுவான அம்சங்கள் இருப்பதைக் கண்டறிந்தார்.
A
ஜான் மார்ஷல்
B
சார்லஸ் மேனன்
C
அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்
D
டல்ஹௌசி
Question 6 Explanation:
(குறிப்பு: ஜான் மார்ஷல் ஹரப்பாவிற்கும் மொஹெஞ்சதாரோ இரண்டுமே ஒரு பெரிய நாகரிகத்தை சார்ந்த வெவ்வேறு பகுதிகள் என்ற முடிவுக்கு வந்தார்.)
Question 7
இந்திய தொல்லியல் துறை (ASI) எந்த ஆண்டு அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் என்ற நில அளவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது.
A
1856
B
1861
C
1920
D
1924
Question 7 Explanation:
(குறிப்பு: ASI – Archaelogical Survey of India
இதன் தலைமையகம் புதுதில்லியில் உள்ளது.)
Question 8
சிந்துவெளி நாகரிகம் குறித்த கூற்றுகளில் தவறானது எது?
காலப் பகுதி – வெண்கலக் காலம்
பரப்பு – 31 லட்சம் சதுர கி.மீ
நகரங்கள் - 6 பெரிய நகரங்கள்
கிராமங்கள் - 400க்கும் மேற்பட்டவை
A
அனைத்தும் சரி
B
1, 2, 3 சரி
C
1, 2,4 சரி
D
1, 3 சரி
Question 9
கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது?
A
மெஹர்கர் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஓர் இடம் ஆகும்.
B
இது பாகிஸ்தான் நாட்டில் பலுசிஸ்தான் மாநிலத்தில் சிந்து ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
C
மக்கள் வேளாண்மையிலும், கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டதற்கான சான்று இங்கு கிடைத்துள்ளது.
D
பொ.ஆ.மு 7000 ஐ ஒட்டிய காலத்திலேயே மெஹர்கரில் நாகரிகத்துக்கு முந்தைய வாழ்க்கை நிலவியதற்கான தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Question 10
சிந்துவெளி நாகரிகத்தில் செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானியக் களஞ்சியம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ?
A
பஞ்சாப் – ராகிகர்கி
B
ஹரியானா – ராகிகர்கி
C
பஞ்சாப் – உதய்ப்பூர்
D
ராஜஸ்தான் - லூனி ஆற்றங்கரை
Question 10 Explanation:
(குறிப்பு: இந்த தானியக் களஞ்சியம் முதிர்ச்சியடைந்த ஹரப்பா காலத்தைச் சார்ந்தது.)
Question 11
சுமேரியாவின் அக்காடிய பேரரசிற்குட்பட்ட அரசன் நாரம்-சின் என்பவர் சிந்துவெளி பகுதியிலுள்ள _____ என்னும் இடத்தில் இருந்து அணிகலன் வாங்கியதாகக் குறிப்பு எழுதியுள்ளார்.
A
லோத்தல்
B
ராகிகர்கி
C
மெலுக்கா
D
லாகூர்
Question 11 Explanation:
(குறிப்பு: பண்டைய மெசபடோமியாவில் உள்ள சுமேர் பகுதி என்பது தற்கால ஈராக், குவைத் மற்றும் சிரியாவை குறிக்கும்)
Question 12
தவறான தொடரைத் தேர்ந்தெடு.
A
ஹரப்பா நகர தெருக்கள் சட்டக வடிவமைப்பை கொண்டிருந்தன.
B
மொஹஞ்சதாரோவில் இருந்த கூட்ட அரங்கு 30 தூண்கள் 5 வரிசைகளை கொண்டு பரந்து விரிந்த கூடம் ஆகும்.
C
பாரசீக வளைகுடா மற்றும் மெசபடோமியாவில் கண்டுபிடிக்கப்பட்டதைப் போன்று உருளை வடிவமுத்திரைகள் சிந்து வெளிப்பகுதியிலும் காணப்படுகின்றன
D
குஜராத்திலுள்ள லோதலில் கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
Question 12 Explanation:
(குறிப்பு: மொஹஞ்சதாரோவில் இருந்த கூட்ட அரங்கு 20 தூண்கள் 4 வரிசைகளை கொண்டு பரந்து விரிந்த கூடம் ஆகும்.
• லோதல் என்னும் இடம் குஜராத்தில் சபர்மதி ஆற்றின் ஒரு துணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.)
Question 13
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
A
குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தினாலான அளவுகோல் 1407 மி.மீ வரை சிறிய அளவீடுகளைக் கொண்டுள்ளது.
B
மனிதர்களால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட உலோகம் செம்பு.
C
சிந்துவெளி மக்களுக்கு இரும்பின் பயன் பற்றி தெரியாது.
D
சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய சிவப்பு நிற மணிக்கற்களைப் பயன்படுத்தினர்
Question 13 Explanation:
குறிப்பு: குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தினாலான அளவுகோல் 1704 மி.மீ வரை சிறிய அளவீடுகளைக் கொண்டுள்ளது.)
Question 14
தவறான இணையைத் தேர்ந்தெடு
A
ASI - ஜான் மார்ஷல்
B
கோட்டை - தானியக் களஞ்சியம்
C
லோத்தல் - கப்பல் கட்டும் தளம்
D
ஹரப்பா நாகரிகம் - காவிரி ஆறு
Question 15
சிந்துவெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர்?
A
செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்
B
செம்பு, வெள்ளி, இரும்பு, வெண்கலம்
C
செம்பு, தங்கம், இரும்பு, வெள்ளி
D
செம்பு, வெள்ளி, இரும்பு, தங்கம்
Question 15 Explanation:
( குறிப்பு: சிந்துவெளி மக்களுக்கு இரும்பின் பயன் பற்றி தெரியாது. தங்கம், வெள்ளி, தந்தம், சங்கு, செம்பு, சுடுமண் மற்றும் விலையுயர்ந்த கற்களால் அணிகலன்கள் செய்யப்பட்டிருந்தன.)
Question 16
கூற்று - ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனலாம்.
காரணம் - திட்டமிடப்பட்ட நகர அமைப்பு, மேம்பட்ட கழிவு நீர் அமைப்பு
A
கூற்றும் காரணமும் சரி
B
கூற்று தவறு, காரணம் சரி
C
கூற்று சரி, காரணம் தவறு
D
கூற்றும் காரணமும் தவறு
Question 17
கீழே கூறப்பட்டுள்ள மொஹஞ்சதாரோவை பற்றிய கூற்றுகளில் எவை சரியானவை?
A
தங்க ஆபரணங்கள் பற்றித் தெரியவில்லை.
B
வீடுகள் சுட்ட செங்கற்களால் மட்டுமே கட்டப்பட்டன.
C
கருவிகள் இரும்பினால் செய்யப்பட்டன.
D
பெருங்குளம் நீர் கசியாமல் இருப்பதற்காக பல அடுக்குகளால் இயற்கை தார் கொண்டு பூசப்பட்டன.
Question 17 Explanation:
(குறிப்பு: பெருங்குளமானது நன்கு அகன்று, செவ்வக வடிவத்தில் அமைந்திருந்த நீர்த்தேக்கம் ஆகும். இது நீர் கசியாத கட்டுமானத்துக்கான மிகப் பழமையான சான்று ஆகும்.)
Question 18
பொருத்துக.
மொஹஞ்சதாரோ i) மேடான பகுதி
வெண்கலம் ii) சிவப்பு மணிக்கல்
கோட்டை iii) உலோகக் கலவை
கார்னிலியன் iv) இறந்தோர் மேடு
A
ii iv iii i
B
iii i ii iv
C
iv iii i ii
D
i iv iii ii
Question 19
தவறான தொடரைத் தேர்ந்தெடு.
தொடக்க கால ஹரப்பா - பொ.ஆ.மு 3000 – 2600
முதிர்ச்சி அடைந்த ஹரப்பா - பொ.ஆ.மு. 2600-1800
பிற்கால ஹரப்பா - பொ.ஆ.மு.1800-1700
A
2 மட்டும் தவறு
B
3 மட்டும் தவறு
C
2, 3 தவறு
D
அனைத்தும் சரி
Question 19 Explanation:
(குறிப்பு : 1. தொடக்க கால ஹரப்பா - பொ.ஆ.மு 3000 – 2600
2. முதிர்ச்சி அடைந்த ஹரப்பா - பொ.ஆ.மு. 2600-1900
3. பிற்கால ஹரப்பா - பொ.ஆ.மு.1900-1700)
Question 20
சிந்து நாகரிகமும் அதன் சமகாலப் பண்பாடுகளும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலுமாக மொத்தம் எவ்வளவு பரப்பளவில் அமைந்துள்ளன?
A
15 மில்லியன் சதுரகிலோ மீட்டர்
B
1.5 மில்லியன் சதுரகிலோ மீட்டர்
C
1.5 பில்லியன் சதுரகிலோ மீட்டர்
D
15 பில்லியன் சதுரகிலோ மீட்டர்
Question 20 Explanation:
(குறிப்பு: சிந்து நகர பகுதியின் எல்லைகள் -
மேற்கில் பாகிஸ்தான் -ஈரான் எல்லையில் அமைந்துள்ள சட்காசென் - டோர் குடியிருப்புகள், வடக்கில் ஷார்ட்டுகை (ஆப்கானிஸ்தான்), கிழக்கில் ஆலம்கிர்புர் (உத்திரப்பிரதேசம்), தெற்கில் தைமாபாத் (மகாராஷ்டிரம்))
Question 21
தவறான இணையைத் தேர்ந்தெடு.
A
டோலாவிரா - குஜராத், இந்தியா
B
காலிபங்கன் - ராஜஸ்தான், இந்தியா
C
ஹரப்பா - பஞ்சாப், இந்தியா
D
ராக்கிகார்ஹி - ஹரியானா, இந்தியா
Question 21 Explanation:
(குறிப்பு: ஹரப்பா - பஞ்சாப், பாகிஸ்தான்
மொகஞ்சதாரோ - சிந்து, பாகிஸ்தான்
டோலாவிரா – குஜராத், இந்தியா
காலிபங்கன் - ராஜஸ்தான், இந்தியா
லோத்தல் - குஜராத், இந்தியா
பனா வலி - ராஜஸ்தான், இந்தியா
ராக்கிகார்ஹி - ஹரியானா, இந்தியா
சர்கோட்டா - குஜராத், இந்தியா
ஆகியவை ஹரப்பா கால முக்கிய நகரங்களாகும்.)
Question 22
சிந்துவெளி நாகரிகம் குறித்த கூற்றுகளில் தவறானது எது?
A
பெரும்குளத்தின் நான்கு பக்கங்களிலும் உள்ள நடைபாதைகளில் வடக்குப் பக்கத்திலும் தெற்கு பக்கத்திலும் படிக்கட்டுகள் அமைந்துள்ளது.
B
ஹரப்பா மக்கள் உழவுக்குக் கலப்பையை பயன்படுத்தினார்கள்.
C
செம்மறியாடு, வெள்ளாடு, குதிரை, கோழி போன்றவற்றை வளர்த்தார்கள்
D
ஹரப்பாவில் மாடுகள் செபு எனப்பட்டன.
Question 22 Explanation:
(குறிப்பு: ஹரப்பா பண்பாட்டில் குதிரை இல்லை.)
Question 23
கீழ்க்கண்ட ஹரப்பா நாகரிக கைவினைப் பொருள்கள் மற்றும் அவற்றின் உற்பத்தி மையங்களில் தவறானது எது?
A
சங்கு - நாகேஷ்வர், பாலகோட்
B
வைடூரியம் – ஷார்டுகை
C
நுரைக்கல் - தெற்கு ராஜஸ்தான்
D
செம்பு – லோத்தல்
Question 24
கூற்று 1: ரோரி செர்ட் என்ற படிகக்கல் ஆப்கானிஸ்தானில் உள்ள ரோரி பகுதியில் காணப்படுகிறது.
கூற்று 2 : ஹரப்பா மக்கள் கத்திகளும் பிற கருவிகளும் செய்வதற்கு இது பயன்பட்டது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, 2 தவறு
D
கூற்று 1, 2 சரி
Question 24 Explanation:
(குறிப்பு : ரோரி செர்ட் என்ற படிகக்கல் பாகிஸ்தானில் உள்ள ரோரி பகுதியில் காணப்படுகிறது.)
Question 25
_______ கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத் தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன.
A
க்யூனிபார்ம்
B
லோத்தல்
C
கார்னிலியன்
D
மெலுகா
Question 25 Explanation:
(குறிப்பு: க்யூனிபார்ம் கல்வெட்டில் காணப்படும் மெலுகா என்னும் சொல் சிந்து பகுதியைக் குறிக்கிறது.)
Question 26
ஹரப்பா மக்கள் இன்றைய அளவீட்டில் _______ ஆகக் கொள்ளும் விதத்தில் அளவுகோலையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
A
ஒரு இஞ்ச் = 1.57 மி.மீ
B
ஒரு இஞ்ச் = 1.57 செ.மீ
C
ஒரு இஞ்ச் = 1.75 செ.மீ
D
ஒரு இஞ்ச் = 1.75 மி.மீ
Question 26 Explanation:
(குறிப்பு: ஹரப்பா மக்கள் இரும எண்முறையை பின்பற்றினார்கள்.)
Question 27
ஹரப்பாவில் கிடைத்தவற்றில் மிக நீளமானதாகக் கருதப்படும் எழுத்துத் தொடர் எத்தனை குறியீடுகளைக் கொண்டுள்ளது?
A
25
B
26
C
27
D
28
Question 27 Explanation:
(குறிப்பு: ஹரப்பா எழுத்துமுறையில் 5000 க்கும் மேற்பட்ட எழுத்துத் தொடர்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.)
Question 28
சிந்து நாகரிகம் ஏறத்தாழ_____லிருந்து வீழ்ச்சி அடைந்தது.
A
பொ.ஆ.மு.1800
B
பொ.ஆ.மு.1900
C
பொ.ஆ.மு.1950
D
பொ.ஆ.மு.1955
Question 29
ஹரப்பா பண்பாட்டு மக்கள் ______ என்ற சிலிகா கல் வகையில் செய்த பிளேடுகள், கத்திகள், செம்புப் பொருட்கள், எலும்பாலும் தந்தத்தாலும் செய்யப்பட்ட கருவிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார்கள்.
A
செபு
B
கார்னிலியன்
C
ஹாஸ்டோரியா
D
செர்ட்
Question 30
ஹரப்பன் முத்திரைகள் கீழ்க்கண்ட எந்தெந்த இடங்களில் கிடைத்துள்ளன?
ஓமன் 2. பஹ்ரைன் 3. சீனா 4. ஈராக் 5. ஈரான்
A
1, 2, 3 சரி
B
2, 3, 5 சரி
C
1, 2, 4, 5 சரி
D
1 , 3, 4, 5 சரி
Question 30 Explanation:
(குறிப்பு : ஹரப்பர்களுக்கு மெசபடோமியர்களுடன் நெருங்கிய வணிகத்தொடர்பு இருந்தது).
Question 31
"ஹரப்பா மொழியின் மூலவேர்கள் தென்னிந்திய திராவிட மொழிகளை ஒத்திருப்பதை காணலாம்" என்று சிந்துவெளி நாகரிகத்தை விரிவாக ஆய்வு செய்து கூறியவர் யார்?
A
யூரி நோரோசோவ்
B
ஐராவதம் மகாதேவன்
C
ஜான் மார்ஷல்
D
கன்னிங்ஹாம்
Question 32
லோத்தல் என்னும் செம்புக் கற்காலத் துறைமுகம் காணப்படும் இடம்
A
பஞ்சாப்
B
சிந்து
C
குஜராத்
D
மும்பை
Question 33
ஹரப்பா என்ற சிந்திமொழிச் சொல்லின் பொருள்
A
புதையுண்ட நகரம்
B
மலைக்கோட்டை நகரம்
C
நதிகளிடைப்பட்ட நகரம்
D
இடுகாட்டு மேடு
Question 34
மொகஞ்சதாரோ என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு ______ என்று பொருள்.
A
பழங்கற்காலமேடு
B
துறைமுக நகரம்
C
இடுகாட்டு மேடு
D
நதிகளிடைப்பட்ட நகரம்
Question 35
மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்டுள்ள நாட்டிய மங்கையின் உருவச்சிலை எந்த உலோகத்தால் ஆனது?
A
தங்கம்
B
பித்தளை
C
எஃகு
D
வெண்கலம்
Question 36
சிந்து வெளி மக்கள் பயன்படுத்திய எழுத்துமுறை ______
A
பிராமி
B
சித்திர எழுத்து
C
வட்டெழுத்து
D
சமஸ்கிருதம்
Question 36 Explanation:
(குறிப்பு: ஏடுகளில் வரிகள் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாகவும் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாகவும் எழுதப்பட்டுள்ளன.)
Question 37
சிந்துவெளி மக்கள் _____ எனப்படும் சுடுமண் பாண்டம் செய்வதில் திறமை மிக்கவர்களாக இருந்தனர்.