Online TestTamil
		
	
	
9th Tamil Part 6 Online Test – New Book
9th Tamil Questions - Part 6
Congratulations - you have completed 9th Tamil Questions - Part 6.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
- " சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
- யவனர் தந்த வினைமான் நன்கலம் "
- என்னும் பாடலடி இடம்பெற்றுள்ள நூல்
| புறநானூறு  | |
| அகநானூறு  | |
| கலித்தொகை  | |
| மணிமேகலை | 
| Question 2 | 
அரேபியர் சேரநாட்டு மிளகை கொண்டு போய் விற்ற இடங்கள் எவை
| செங்கடல் துறைமுகம், ரோம் நகர துறைமுகம் | |
| செங்கடல் துறைமுகம், அலெக்சாண்டிரியா துறைமுகம் | |
| ரோம் நகர துறைமுகம், அலெக்சாண்டிரியா துறைமுகம் | |
| எகிப்து, ரோம் நகர துறைமுகம் | 
| Question 3 | 
முசிறி துறைமுகத்தில் யவனர்களால் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களில் அல்லாதது எது ?
| பவளம்  | |
| செம்பு  | |
| கண்ணாடி  | |
| இரும்பு | 
| Question 4 | 
கிளியோபாட்ரா கொற்கை முத்தை அணிந்ததாக பதிவு செய்துள்ளவர் யார்?
| மார்க்கோபோலோ  | |
| பிளினி  | |
| யுவான்சுவாங்  | |
| சாணக்கியர் | 
| Question 5 | 
கீழ்க்கண்டவற்றுள் கொற்கை முத்தின் சிறப்பினை குறிப்பிடும் நூல் எது ?
| அர்த்தசாஸ்திரம்  | |
| வர்ணசாஸ்திரம்  | |
| வானசாஸ்திரம்  | |
| மகாபாரதம் | 
| Question 6 | 
திசையை அறிய பயன்படும் காந்தவூசி பற்றிய செய்தி எந்நூலில் உள்ளது ?
| சிலப்பதிகாரம்  | |
| மணிமேகலை  | |
| வளையாபதி  | |
| குண்டலகேசி | 
| Question 7 | 
கீழ்க்கண்டவற்றுள் கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் அல்லாதது எது ?
- மருங்கை 2. எயிற்பட்டினம் 3. அரிக்கமேடு 4.நறவு 5. மாந்தை
| 1,5  | |
| 1,4, 5 	 | |
| 4, 5 | |
| 4 மட்டும் | 
Question 7 Explanation: 
 (விளக்கம் : நறவு, மாந்தை ஆகியவை மேற்குக் கடற்கரை பகுதியில் புகழ் பெற்று விளங்கிய துறைமுகம்)
| Question 8 | 
கீழ்க்கண்டவற்றுள் மேற்கு கடற்கரை பகுதியில் புகழ்பெற்று விளங்கிய துறைமுகம் எது ?
| வைக்கரை  | |
| மருங்கை  | |
| கொற்கை  | |
| கொல்லந்துரை | 
Question 8 Explanation: 
 (விளக்கம் : மேற்கு கடற்கரை பகுதியில் புகழ்பெற்று விளங்கிய துறைமுகங்கள் மங்களூர், நறவு, தொண்டி, மாந்தை, முசிறி, வைக்கரை, விழிஞம்)
| Question 9 | 
மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உருவான பேரியாறு கடலில் கலக்குமிடத்தில் இயற்கையாக உருவான துறைமுகம் எது?
 
| நறவு  | |
| மாந்தை  | |
| வைக்கரை  | |
| முசிறி | 
| Question 10 | 
முசிறி – அலெக்சாண்டிரியா ஒப்பந்தம் யார் யாருக்கிடையே ஏற்பட்டது
| தமிழ் – கிரேக்க வணிகர்கள் | |
| தமிழ் – உரோமானிய வணிகர்கள் | |
| தமிழ் – சீன வணிகர்கள் | |
| தமிழ் – யவன வணிகர்கள் | 
| Question 11 | 
முசிறி – அலெக்சாண்ட்ரியா ஒப்பந்தம் ஏற்பட்ட காலம்
| பொ.ஆ.பி 130 		 | |
| பொ. ஆ. மு. 130 | |
| பொ.ஆ.பி. 150 		 | |
| பொ. ஆ.மு. 150 | 
| Question 12 | 
" பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம் " எனும் வரி இடம்பெற்றுள்ள நூல்
| அகநானூறு  | |
| பதிற்றுப்பத்து  | |
| புறநானூறு  | |
| கலித்தொகை | 
| Question 13 | 
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
- பந்தர் பெயரிய பேரிசை மூதூர் – பாடல் 67, அடி 2
- பந்தர் பயந்த பலர்புகழ் முத்தம் - பாடல் 74, அடி 6
- நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர் – பாடல் 55, அடி 4
| 3 மட்டும் சரி  | |
| 3 மட்டும் தவறு | |
| அனைத்தும் சரி  | |
| அனைத்தும் தவறு | 
| Question 14 | 
காவிரிப்பூம்பட்டினம் எத்தனை கூறுகளாக பிரிக்கப்பட்டிருந்தது ?
| இரண்டு  | |
| மூன்று  | |
| நான்கு  | |
| ஐந்து | 
| Question 15 | 
காவிரியாறு கடலில் கலக்கும் இடத்தில் ____ கரையில் காவிரிப்பூம்பட்டினம் இருந்தது .
| வடகரை  | |
| தென்கரை  | |
| துறைமுகம்  | |
| பட்டினப்பாக்கம் | 
| Question 16 | 
காவிரிப்பூம்பட்டினத்தின் இரண்டு கூறுகள் எவை ?
| வடகரை, தென்கரை	 | |
| பட்டினப்பாக்கம், முத்துப்பாக்கம் | |
| மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாலை | |
| பட்டினப்பாக்கம், மருவூர்ப்பாக்கம் | 
| Question 17 | 
துறைமுகத்தின் செயல்திறனை கணக்கிடுவதற்கு தற்போது பயன்படுத்தும் முறை _____ .
| ஒற்றைச் சாளர முறை | |
| இரட்டை வழிப் பாதை | |
| ஏற்றுமதி, இறக்குமதி 	 | |
| கப்பல்களின் எண்ணிக்கை | 
| Question 18 | 
காவிரி பூம்பட்டின துறைமுகங்களில் பொருள்களுக்கு சுங்கத்தீர்வைகள் வசூலிக்கப்பட்டன என தெரிவிக்கும் நூல்
| புறனாநூறு  | |
| பட்டினப்பாலை  | |
| பதிற்றுப்பத்து | |
| கலித்தொகை | 
| Question 19 | 
புகார் நகரத்தில், சுங்கத் தீர்வை பெற்றுக் கொண்டு புலிச்சின்னம் அடையாளம் வைத்த பொருள்கள், ஏற்றுமதி செய்ய மலைபோல் குவிந்திருந்தன என கூறும் பட்டிப்பாலை அடிகள் எவை ?
| அடி 125 – 134  | |
| அடி 145 – 152 | |
| அடி 120 – 135  | |
| அடி 124 – 135 | 
| Question 20 | 
கோவலன் ,கண்ணகி, மாதவி, மணிமேகலை முதலானோர் ____ ஆட்சிக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்தனர் .
| நலங்கிள்ளி  | |
| நெடுங்கிள்ளி   | |
| கிள்ளிவளவன்  | |
| நெடுஞ்செழியன் | 
| Question 21 | 
கீழ்க்கண்டவற்றள் காவிரி பூம்பட்டினத்தில் வணிகத்தில் ஈடுபடாதவர்கள் யார் ?
| சாவகர்கள்  | |
| சீனர்கள்  | |
| யவனர்கள்  | |
| வட இந்தியர்கள் | 
| Question 22 | 
சோழ நாட்டு வணிகர்கள் வணிகம் செய்த இடங்கள் எவை ?
| சாவக நாடு ,காழகம், கங்கை துறைமுகம் | |
| எகிப்து, காழகம், கங்கை துறைமுகம் | |
| சீனா, காழகம், எகிப்து | |
| சீனா, காழகம், கங்கை துறைமுகம் | 
| Question 23 | 
முசிறி துறைமுகத்தில் ______ ஏற்றுமதி சிறப்பு பெற்றிருந்தது .
| முத்து  | |
| தந்தம்  | |
| பொன்  | |
| மிளகு | 
| Question 24 | 
கீழ்க்கண்டவற்றுள் ' யவனப்பிரியா ‘ என்பது _____ .
| முத்து  | |
| தந்தம்  | |
| பொன்  | |
| மிளகு | 
| Question 25 | 
மிளகிற்கு மாற்றாக யவனர்கள் தந்த பொருள் எது ?
| பொன்  | |
| தந்தம்  | |
| வெள்ளி  | |
| வைரம் | 
| Question 26 | 
கீழ்க்கண்டவற்றுள் ' பந்தர் ‘ என்பதன் பொருள் ______ .
| அரச வீதி  | |
| வணிகர்கள் வீதி  | |
| கடைவீதி  | |
| அந்தணர்கள் வீதி | 
| Question 27 | 
தீழ்க்கண்டவற்றுள் சேரர்களின் புகழ்பெற்ற துறைமுகம் எது ?
| முசிறி  | |
| கொற்கை  | |
| காவிரி பூம்பட்டினம்  | |
| தொண்டி | 
| Question 28 | 
கீழ்க்கண்டவற்றுள் பேரியாறு உருவான மலை எது ?
| மேற்கு தொடர்ச்சி மலை  | |
| கிழக்கு தொடர்ச்சி மலை | |
| இமயமலை  | |
| ஆரவல்லி மலை | 
| Question 29 | 
தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் மேற்குக்கரையில் அமைந்த துறைமுகம் எது ?
| முசிறி  | |
| கொற்கை  | |
| தொண்டி  | |
| காவிரிப்பூம்பட்டினம் | 
| Question 30 | 
பாண்டியர்களின் கப்பற்படைத் தளமாக விளங்கிய இடம் எது?
| கொற்கை  | |
| முசிறி  | |
| தொண்டி  | |
| காவிரிப்பூம்பட்டினம் | 
| Question 31 | 
பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் துறந்த பின் அறியணை ஏறியவர் யார்?
| அதிவீரராம பாண்டியன்  | |
| சடையவர்மன் வீரபாண்டியன் | |
| வீரகேசரி  | |
| வெற்றிவேற்செழியன் | 
| Question 32 | 
பாண்டிய வம்சத்தில் ஆளும் மன்னரை அடுத்து அரசாளும் இளவரசர்கள் எந்நகரில் தங்கி நிருவாகம் கற்றனர்
| கொற்கை  | |
| முசிறி  | |
| தொண்டி  | |
| காவிரி பூம்பட்டினம் | 
| Question 33 | 
" மாலை திங்கள் வழியோன் ஏறினான் " எனும் பாடலடி இடம்பெற்றுள்ள நூல்
| பட்டினப்பாலை  | |
| பதிற்றுப்பத்து  | |
| சிலப்பதிகாரம்  | |
| மணிமேகலை | 
| Question 34 | 
" கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் " என்பது சிலப்பதிகாரத்தின் எந்த காதையிலுள்ள பாடலடி
| வழக்குரை காதை  | |
| வரந்தரு காதை  | |
| மங்கல வாழ்த்துப்பாடல்  | |
| நீர்ப்படைக் காதை | 
| Question 35 | 
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
- கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் - அடி 127
- மாலைத் திங்கள் வழியோன் ஏறினன் - அடி 134
- மன்பதை காக்கும் முறைமுதல் கட்டிலின் - அடி 138
| 1 மட்டும் சரி  | |
| 2, 3 சரி  | |
| அனைத்தும் சரி  | |
| அனைத்தும் தவறு. | 
Question 35 Explanation: 
 ( விளக்கம் : 2.மாலைத் திங்கள் வழியோன் ஏறினன் - அடி 138
3.மன்பதை காக்கும் முறைமுதல் கட்டிலின் - அடி 134)
| Question 36 | 
கொற்கை துறைமுகத்தில் செல்வர் ஏறி வரும் குதிரையின் குளம்புகளுக்குள் மாட்டிக் கொள்ளும் அளவிற்கு கரையோரங்களில் பொருள்கள் குவிந்திருந்ததாக கூறும் நூல்
| புறநானூறு  | |
| அகநானூறு  | |
| சிலப்பதிகாரம்  | |
| பட்டினப்பாலை | 
| Question 37 | 
' வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர் ‘ என்பது எந்நூலில் உள்ள பாடலடி
| புறநானூறு  | |
| அகநானூறு  | |
| சிலப்பதிகாரம்  | |
| பட்டினப்பாலை | 
| Question 38 | 
- " திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்
- கவர் நடைப்புரவிக் கால்வடுத் தபுக்கும்
- நற்றேர் வழுதி கொற்கை முன்துறை " என்ற பாடலை பாடியவர் யார்
| அகநானூறு – வெண்கண்ணனார்  | |
| புறநானூறு – வெண்கண்ணனார் | |
| சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள் | |
| அகநானூறு – இளங்கோவடிகள் | 
| Question 39 | 
கொற்கையில் ஆடவர்கள் முத்துக் குளிக்கவும், வலம்புரி சங்கு எடுக்கவும் கடலில் மூழ்கினர் என கூறும் அகநானூற்றின் பாடல்
| 300 வது பாடல்  | |
| 530 வது பாடல்  | |
| 350 வது பாடல்  | |
| 325 வது பாடல் | 
| Question 40 | 
இராமநாதபுரம் அழகன் குளத்தில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடு எக்காலத்திற்கு முற்பட்டது
| 1000 ஆண்டுகள் 	 | |
| 2000 ஆண்டுகள்  | |
| 3000 ஆண்டுகள்  | |
| 4000 ஆண்டுகள் | 
| Question 41 | 
பொருத்துக
- வடமலை i) பொன், மணிக்கற்கள்
- மேற்கு மலை ii) சந்தனம், ஆரம்
- தென்கடல் iii) முத்து
- கீழ்க்கடல் iv) பவளம்
- தரைவழி v) கறி
| iii 	i 	ii 	v 	iv | |
| iii 	ii 	i 	iv 	v | |
| ii 	i 	iii 	v 	iv | |
| i 	ii 	iii 	iv 	v | 
| Question 42 | 
கொற்கை துறைமுகத்தில் பொருள்கள் குதிரையின் குளம்புகளுக்குள் மாட்டிக் கொள்ளும் அளவிற்கு கரையோரங்களில்  குவிந்திருந்தன எனும் செய்தி அகநானூற்றின் எத்தனையாவது பாடலில் இடம்பெற்றுள்ளது
| 130  | |
| 310  | |
| 131  | |
| 132 | 
| Question 43 | 
பொ.ஆ.பி முதல் நூற்றாண்டில் யவனர் – தமிழர் வணிகத்தை விரிவுப்படுத்தியவர் யார் ?
| ஹிப்பல்ஸ்  | |
| அகஸ்தஸ் சீஸர்  | |
| நெடுஞ்செழியன்  | |
| யவனர் | 
| Question 44 | 
கொற்கை அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழிகள் சார்ந்த காலம்
| இரும்பு காலம்  | |
| உலோகக்காலம்  | |
| செம்பு கற்காலம் 	 | |
| பெருங்கற்காலம் | 
| Question 45 | 
“ சங்ககாலம் முதல் பிற்கால பாண்டியர் காலம் வரை பாண்டிய நாட்டு முத்துக்களை உரோம் நகரத்தினர் விரும்பி வாங்கினர்" என்று கூறிய வரலாற்று அறிஞர்
| அகஸ்டஸ்  | |
| ஸ்டிராபோ  | |
| ஹிப்பல்ஸ்  | |
| சீஸர் | 
| Question 46 | 
பாண்டிய மன்னர்கள் அகஸ்டஸ் மன்னன் அரசவைக்கு பரிசாக அளித்த பொருள் எது?
| வலம்புரி சங்கு 	 | |
| வைரம்  | |
| முத்து  | |
| பவளம் | 
| Question 47 | 
பாண்டிய மன்னனின் குதிரைப்படைக்காக
எத்தனை அரேபியக் குதிரைகள் ஆண்டுதோறும் கொற்கை துறைமுகத்தில் வந்திறங்கின .
| 15,000 	 | |
| 14,000  | |
| 17,000  | |
| 16,000 | 
| Question 48 | 
பாண்டிய நாட்டு நாணயங்களை அச்சிடுவதற்கான பட்டறைகள் நிறைந்த தெருவின் பெயர் _____ .
| அஃகசாலை | |
| எஃகு சாலை  | |
| நாணயசாலை  | |
| பட்டறை சாலை | 
| Question 49 | 
பருவக்காற்றின் உதவியினால் முசிறித் துறைமுகத்துக்கு நடுக்கடல் வழியாக விரைவில் பயணம் செய்யும் வழியை கண்டறிந்தவர் யார் ?
| அகஸ்தஸ்  | |
| ஸ்டிரோபா  | |
| ஹிப்பல்ஸ்  | |
| சீஸர் | 
| Question 50 | 
_____ பருவக்காற்று வழியாக யவனக் கடல் வணிகம் பெருகியது.
| வியாபாரக்காற்று  | |
| தென் மேற்கு பருவக்காற்று | |
| வடகிழக்கு பருவக்காற்று  | |
| ஹிப்பல்ஸ் காற்று | 
| Question 51 | 
______ அரசர்களின் உருவ முத்திரை இடப்பட்ட நாணய புதையல்கள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ளன.
| எகிப்திய  | |
| யவனர்  | |
| உரோமபுரி  | |
| சீனர் | 
| Question 52 | 
கீழ்க்கண்ட பாடல் வரிகளை ஆராய்க .
- சுள்ளியம் பேர்யாற்று வெண்னுரை கலங்க – அகநானூறு
- நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர் – பதிற்றுப்பத்து
- மாலைத் திங்கள் வழியோன் ஏறினான் – சிலம்பு
- பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – அகநானூறு
| அனைத்தும் தவறு  | |
| 1, 3, 4 சரி  | |
| 3, 4 சரி  | |
| அனைத்தும் சரி | 
| Question 53 | 
மதுரை குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது
- தமிழகத்தின் தொன்மையான நகரம் .
- இரண்டாயிரம் ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வரும் நகரங்களுள் ஒன்று .
- கௌடில்யர், கிரேக்க தூதர் மெகஸ்தனிஸ் போன்ற வெளிநாட்டு பயணிகளால் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்கது.
- செவ்விலக்கியத்தின் தலைநகராக திகழ்கிறது .
| 3, 4  | |
| 2, 4  | |
| 3 மட்டும்  | |
| எதுவுமில்லை | 
Question 53 Explanation: 
 (விளக்கம்:  கௌடில்யர் – பொ.ஆ.மு.370
மெகஸ்தனிஸ் - பொ.ஆ.மு.350)
| Question 54 | 
- “ எல்லா இனமும் மதமும் உண்டு – இங்கு
- இறையருள் ஆலயம் ஏகமுண்டு!
- பல்லாயிரம் ஆண்டு வரலாறு – இதைப்
- பாடாத நாவில்லை பண்பாடு! "
- என்ற பாடலில் சிறப்பிக்கப்படும் நகரம்
| தஞ்சாவூர்  | |
| கும்பகோணம்  | |
| மதுரை  | |
| திருச்சி | 
| Question 55 | 
இலக்கணக் குறிப்புத் தருக .
- செங்கோல், பேரழகு
| வினைத் தொகை		 | |
| பண்புத்தொகை | |
| உவமை தொகை	 | |
| உம்மை தொகை | 
Question 55 Explanation: 
 (விளக்கம் : இரு சொற்களுக்கிடையில் 'மை’ விகுதி தொக்கி வருவது பண்புத்தொகை எனப்படும்)
| Question 56 | 
இலக்கணக் குறிப்புத் தருக
- எழுந்த, பாடு
| பெயரெச்சம், ஏவல்வினைமுற்று | |
| வினையெச்சம், பெயரெச்சம் | |
| வினைத் தொகை, பெயரெச்சம் | |
| வினையெச்சம், ஏவல்வினைமுற்று | 
Question 56 Explanation: 
 (விளக்கம் : பெயரெச்சம் என்பது பெயர்ச்சொல்லை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும்.
முன்னிலையில் ஒருவனை, ஒருத்தியை அல்லது ஒன்றினை ஆணையிட்டு ஏவும் வினையே ஏவல் வினைமுற்று என்பதாகும்.இது எதிர்காலத்தைக் காட்டி வரும். ஒருமை, பன்மையை உணர்த்தும்.)
| Question 57 | 
இலக்கணக் குறிப்புத் தருக – பாடாத
| ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் | |
| எதிர்மறைப் பெயரெச்சம் | |
| வினைத்தொகை | |
| ஏவல்வினை முற்று | 
| Question 58 | 
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – வாழ்ந்திருக்கும்
| வாழ்ந்து + இருக்கும் | |
| வாழ்ந்து + இரு + க் + க் + உம் | |
| வாழ்ந்திரு + க் + க் + உம் | |
| வாழ்ந்திரு + க் + உம் | 
| Question 59 | 
" வாழ்ந்திருக்கும் >> வாழ்ந்திரு + க் + க் + உம் " இதில் ‘ க்+க் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
| சந்தி, எதிர்மறை இடைநிலை | |
| சந்தி, எதிர்கால இடைநிலை | |
| எதிர்கால இடைநிலை, சந்தி | |
| சந்தி, இறந்தகால இடைநிலை | 
| Question 60 | 
சிந்து என்னும் பாவகை _____ பாடல் அமைப்பிலிருந்து தோன்றியது .
| தெம்மாங்கு  | |
| ஆனந்தகளிப்பு  | |
| சந்தப் பாடல் 			 | |
| நாட்டுப்புறப் பாடல் | 
Question 60 Explanation: 
 ( விளக்கம் : சிந்து என்பது ஓசைநயத்துடன் பாடக் கூடிய பாவகை .)
| Question 61 | 
சிந்து வகை பாடல்கள் ______,______ அமைந்த கண்ணிகளை கொண்டவை .
| இலக்கணம், சந்தம் | |
| பாவகை, இலக்கணம் | |
| சந்தம், இயைபுத் தொடை | |
| சந்தம், பாவகை | 
| Question 62 | 
கீழ்க்கண்டவற்றுள் எந்த வகை பாடல் வடிவங்கள் சிந்து பாவகை வழக்கிலிருந்த  காலத்தில் புதிய பாவடிவங்களாக தோன்றின .
- 1.ஆனந்தக்களிப்பு 2 . தெம்மாங்கு 3. வழிநடைச் சிந்து
- நொண்டிச்சிந்து 5. கும்மிப் பாடல்கள்
| அனைத்தும்  | |
| 1, 2  | |
| 1, 2, 5  | |
| 3, 4 | 
| Question 63 | 
ஓரெதுகை பெற்ற இரண்டு அடிகள் அளவொத்து வருவது _____ பாவகை ஆகும் .
| வெண்பா  | |
| ஆசிரியப்பா  | |
| சிந்து  | |
| கலிப்பா | 
| Question 64 | 
கீழ்க்கண்டவர்களுள் சிந்து வகையினை அதிகமாக கையாண்டவர் யார் ?
| பாரதியார்  | |
| பாரதிதாசன்  | |
| கடுவெளி சித்தர் 	 | |
| கம்பர் | 
| Question 65 | 
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது ?
- சிந்து என்பது இசைத்தமிழ்ப் பாகுபாடுகளில் ஒன்று .
- பல்லவி, அனுப்பல்லவி, இன்றி சரணங்களுக்குரிய கண்ணிகளுடன் உடைய பாக்கள் சில வகைச் சிந்துகளில் காணப்படுகின்றன.
- சித்தர் பாடல்கள் பல சிந்து வகையில் அமைந்துள்ளன.
| அனைத்தும் சரி 	 | |
| 1, 2 சரி  | |
| 1, 3 சரி  | |
| 2, 3 சரி | 
| Question 66 | 
"பாபம் செய்யாதிரு மனமே " என்னும் சிந்து வகைப் பாடல் யாருடையது ?
| திருமூலர்  | |
| அகத்தியர்  | |
| கடுவெளிச் சித்தர்  | |
| தொல்காப்பியர் | 
| Question 67 | 
' சிந்துக்குத் தந்தை ‘ என போற்றப்படுபவர் யார் ?
| பாரதியார்  | |
| பாரதிதாசன்  | |
| கடுவெளி சித்தர்  | |
| கம்பர் | 
| Question 68 | 
சரியான இணையைத் தேர்ந்தெடு
- பல்லவி – எடுப்பு
- அனுபல்லவி – தொடுப்பு
- சரணம் – முடிப்பு
| அனைத்தும் சரி  | |
| 1, 2 சரி  | |
| 1, 3 சரி 	 | |
| 2, 3 சரி | 
| Question 69 | 
மதுரைக் காஞ்சி என்பது எவ்வகை நூல்களுள் ஒன்று ?
| பதினெண் கீழ்க்கணக்கு  | |
| பதினெண் மேற்கணக்கு | |
| சிந்துப் பாடல் 	 | |
| எட்டுத்தொகை | 
| Question 70 | 
- “ பாரதி போதிச்ச பாடசாலை – திருப்
- பரங்குன்ற முருகன் நின்னசோலை "
- என்ற வரிகள் எந்த கவிதையில் இடம்பெற்றுள்ளன
| மதுரைக் காஞ்சி  | |
| நான்மாடக்கூடல்  | |
| காவடிச் சிந்து  | |
| நொண்டிச்சிந்து | 
| Question 71 | 
மதுரைக் காஞ்சியில் கீழ்க்கண்ட எந்தெந்த காட்சிகள் கவித்துவமாய் விரிந்துள்ளன .
- 1.கோட்டை கொத்தளம் 2. திருவிழாக்கள்
- பலவகைப் பள்ளிகள்
- நாற்பெருங்குழு
- அந்தி வணிகம்
| அனைத்தும்  | |
| 1, 3, 5  | |
| 2, 3 	 | |
| 1, 2, 3 | 
| Question 72 | 
- "மண்உற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின்
- விண்உற ஓங்கிய பல் படைப்புரிசைத் தொல்வலி நிலைஇய "
- என்னும் வரிகளை இயற்றியவர் யார் ?
| பாரதியார்  | |
| கடுவெளி சித்தர்  | |
| மாங்குடி மருதனார்  | |
| பாரதிதாசன் | 
| Question 73 | 
- " ஆறு கிடந்தன்ன அகல்நெடுந் தெருவில்
- பல்வேறு குழாஅத்து இசைஎழுந்து ஒலிப்ப”
- இவ்வரிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன ?
| நான்மாடக்கூடல்   | |
| மதுரைக் காஞ்சி  | |
| பதிற்றுப்பத்து  | |
| புறநானூறு | 
| Question 74 | 
- " பொறிமயிர் வாரணம் ...
- கூட்டுறை வயமாப் புலியொடு குழும "
- என்ற வரிகள் மதுரையில் ______ இருந்ததை உணர்த்துகின்றன .
| வாரணங்கள்  | |
| புலிகள்  | |
| மாடங்கள்  | |
| வனவிலங்கு சரணாலயம் | 
| Question 75 | 
மதுரையில் வனவிலங்கு சரணாலயம் இருந்த செய்தியை கூறும் மதுரைக் காஞ்சியின் அடிகள் _____ .
| 637 – 639 	 | |
| 693 – 697  | |
| 673 – 677 		 | |
| 637 – 677 | 
| Question 76 | 
பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்னும் நூலை இயற்றியவர் யார் ?
| இராசவேல்  | |
| இராசமாணிக்கனார்  | |
| இராசேந்திரன்  | |
| அரவிந்த் குப்தா | 
| Question 77 | 
சரியான பொருளை தேர்ந்தெடு
- புரிசை, பணை
| மதில், பனைமரம் | |
| சாளரம், பனைமரம் | |
| நீர்நிலை ,சாளரம்	 | |
| மதில், முரசு | 
| Question 78 | 
சரியான பொருளை தேர்ந்தெடு
- சில்காற்று, மாகால்
| பெருங்காற்று, புயல்	 | |
| தென்றல், புயல் | |
| தென்றல், பெருங்காற்று | |
| தென்றல், சாளரம் | 
| Question 79 | 
சரியான பொருளை தேர்ந்தெடு
- முந்நீர், கயம்
| மூன்று வகையான நீர், கடல் | |
| கடல், நீர்நிலை | |
| கடல்,முரசு			 | |
| கடல், சாளரம் | 
| Question 80 | 
சரியான பொருளை தேர்ந்தெடு
- அணங்கு, புழை
| ஒழுங்கு, சாளரம் | |
| தெய்வம், மதில் | |
| தெய்வம், சாளரம் | |
| மதில், சாளரம் | 
| Question 81 | 
சரியான பொருளை தேர்ந்தெடு
- ஓவு, நியமம்
| ஓய்வு, நியமனம்	 | |
| ஓய்வு, அங்காடி | |
| ஓவியம், அங்காடி | |
| ஓவியம், நியமனம் | 
| Question 82 | 
இலக்கணக் குறிப்புத் தருக
- நெடுநிலை, முந்நீர்
| வினைத் தொகை		 | |
| பண்புத்தொகை | |
| உவமை தொகை | |
| உம்மை தொகை | 
Question 82 Explanation: 
 (விளக்கம் : இரு சொற்களுக்கிடையில் 'மை’ விகுதி தொக்கி வருவது பண்புத்தொகை எனப்படும்)
| Question 83 | 
இலக்கணக் குறிப்புத் தருக
- முழங்கிசை, இமிழிசை
| வினைத் தொகை | |
| பண்புத்தொகை | |
| உவமை தொகை | |
| உம்மை தொகை | 
Question 83 Explanation: 
 (விளக்கம் : வினைத் தொகை என்பது மூன்று கால வினைகளையும் தொகுத்து ஒரு சேரக் குறிக்குமாறு வரும் பெயர்ச்சொல் ஆகும். இச்சொல் முக்காலத்தையும் உணர்த்தும் .)
| Question 84 | 
இலக்கணக் குறிப்புத் தருக – மகிழ்ந்தோர்
| வினையாலணையும் பெயர்	 | |
| எதிர்மறைப் பெயரெச்சம் | |
| வினைத்தொகை | |
| ஏவல்வினை முற்று | 
Question 84 Explanation: 
 (விளக்கம் : வினைமுற்று, வினைசெய்த கருத்தாவைக் குறிக்க வருவது வினையாலணையும் பெயர் ஆகும்.)
| Question 85 | 
இலக்கணக் குறிப்புத் தருக – மாகால்
| உரிச்சொல் தொடர் | |
| பண்புத்தொகை | |
| உவமை தொகை | |
| ஏவல்வினை முற்று | 
| Question 86 | 
இலக்கணக் குறிப்புத் தருக – ஓங்கிய, வாயில்
| பெயரெச்சம், ஏவல்வினைமுற்று | |
| வினையெச்சம், பெயரெச்சம் | |
| பெயரெச்சம், இலக்கணப் போலி | |
| வினையெச்சம், ஏவல்வினைமுற்று | 
Question 86 Explanation: 
 (விளக்கம் : பெயரெச்சம் என்பது பெயர்ச்சொல்லை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும்.
| Question 87 | 
இலக்கணக் குறிப்புத் தருக
- நிலைஇய, குழாஅத்து
| செய்யுளிசை அளபெடை, சொல்லிசை அளபெடை | |
| சொல்லிசை அளபெடை, செய்யுளிசை அளபெடை | |
| எதிர்மறைப் பெயரெச்சம், செய்யுளிசை அளபெடை | |
| பெயரெச்சம், சொல்லிசை அளபெடை | 
Question 87 Explanation: 
 (விளக்கம் : செய்யுளிசை அளபெடை செய்யுளில் இசையைக் கூட்டுவதற்குப் பயன்படுத்தப்படும்.
ஒரு பெயர்ச் சொல்லை வினை எச்சமாக மாற்றுவது சொல்லிசை அளபெடை எனப்படும்)
| Question 88 | 
பகுபத உறுப்புகளாகப் பிரித்து எழுதுக – ஆழ்ந்த
| ஆழ்ந்து + அ | |
| ஆழ் + த் + அ | |
| ஆழ் + த்(ந்) + த் + அ		 | |
| ஆழ் + ந் + அ | 
| Question 89 | 
பகுபத உறுப்புகளாகப் பிரித்து எழுதுக – ஓங்கிய
| ஓங்கு + இய | |
| ஓங்கு + இ + அ | |
| ஓங்கு + ய் + அ	 | |
| ஓங்கு + இ(ன்) + ய் + அ | 
| Question 90 | 
பகுபத உறுப்புகளாகப் பிரித்து எழுதுக – மகிழ்ந்தோர்
| மகிழ்ந்து + ஓர்	 | |
| மகிழ்ந்து +ய் + ஓர் | |
| மகிழ்+த்(ந்) +த் + ஓர்	 | |
| மகிழ் + த் + ஓர்  | 
| Question 91 | 
‘ ஆழ்ந்த  ‘ என்ற சொல்லின்  பகுபத உறுப்புகளில் ' அ ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
| வினையெச்ச  விகுதி		 | |
| பெயரெச்ச விகுதி | |
| ஒன்றன்பால் வினைமுற்று விகுதி | |
| பலர்பால் வினை முற்று விகுதி | 
Question 91 Explanation: 
 (விளக்கம் : பெயரெச்ச விகுதிகள் – அ, (உம்))
| Question 92 | 
‘ ஓங்கிய ‘என்ற சொல்லின்  பகுபத உறுப்புகளில் ' ய் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
| சந்தி  | |
| சாரியை  | |
| உடம்படுமெய்  | |
| இறந்தகால இடைநிலை | 
| Question 93 | 
' மகிழ்ந்தோர்  ‘என்ற சொல்லின்  பகுபத உறுப்புகளில் ' ஓர் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
| பலர்பால் வினைமுற்று விகுதி | |
| ஆண்பால் வினைமுற்று விகுதி | |
| பெண்பால் வினைமுற்று விகுதி | |
| ஒன்றன்பால் வினைமுற்று விகுதி | 
Question 93 Explanation: 
 (விளக்கம் : பலர்பால் வினைமுற்று விகுதிகள் - அர், ஆர், ப, மார்)
| Question 94 | 
மதுரைக் காஞ்சி மொத்தம் எத்தனை அடிகளைக் கொண்டது ?
| 872  | |
| 782  | |
| 354  | |
| 534 | 
| Question 95 | 
மதுரைக் காஞ்சியிலுள்ள பாடல்களில் எத்தனை அடிகள் மதுரையைப் பற்றி மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன?
| 872  | |
| 782  | |
| 354  | |
| 534 | 
| Question 96 | 
மதுரைக் காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் யார் ?
| சேரன் செங்குட்டுவன் | |
| இளம்பெருவழுதி | |
| தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் | |
| நலங்கிள்ளி | 
| Question 97 | 
மதுரைக் காஞ்சியின் ஆசிரியர் யார் ?
| கணிமேதாவியர்  | |
| மாங்குடி மருதனார் | |
| ஒளவையார்  | |
| பாண்டியன் நெடுஞ்செழியன் | 
| Question 98 | 
மாங்குடி மருதனார் எட்டுத்தொகையில் எத்தனை பாடல்களைப் பாடியுள்ளார்?
| 11  | |
| 12  | |
| 13  | |
| 14 | 
| Question 99 | 
கீழக்கண்ட கூற்றுகளுள் சரியானது எது ?
- எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று மதுரைக் காஞ்சி .
- காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள் .
- மதுரையின் சிறப்புகளை பாடுவதாலும் நிலையாமையைப் பற்றிக் கூறுவதாலும் மதுரைக் காஞ்சி எனப்பட்டது .
- இதை 'பெருகுவள மதுரைக்காஞ்சி ‘ எனவும் அழைக்கப்படுகிறது .
| அனைத்தும் சரி 	 | |
| 2, 3, 4 சரி 	 | |
| 1, 3, 4 சரி 	 | |
| 3, 4 சரி | 
Question 99 Explanation: 
 (விளக்கம் : பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக் காஞ்சி .)
| Question 100 | 
கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது ?
- மால் என்பதன் தமிழ்ச் சொல் பல்லங்காடியகம் .
- பகலில் செயல்படும் கடை வீதிகள் ‘ நாளங்காடி ‘ எனப்படும் .
- இரவில் செயல்படும் கடை வீதிகள் ‘ அல்லங்காடி ‘ எனப்படும்
| அனைத்தும் சரி 	 | |
| 2, 3 சரி  | |
| 2, 3 தவறு 		 | |
| 1, 3 சரி | 
Question 100 Explanation: 
 (விளக்கம் : நாள் – பகல், அல் – இரவு)
| Question 101 | 
உள்ளுர்த் தேவைக்கு ஏற்றார் போல், அங்கு விளைகிற உணவுப் பொருள்களையும் விவசாயம், சமையல், வீடு ஆகியவற்றுக்குத் தேவையான பொருள்களையும் சிறிய அளவில் விற்கும் சிறு வணிக செயல்பாடு ____ எனப்படும் .
| சந்தை  | |
| கிராமச் சந்தை  | |
| வியாபாரம்  | |
| சிறு வியாபாரம் | 
| Question 102 | 
கிருஷ்ணகிரி  மாவட்டம் போச்சம்பள்ளிச் சந்தை எத்தனை கடைகளுடன் எவ்வளவு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
| 1000, 18 ஏக்கர்  	 | |
| 8000, 81 ஏக்கர்  | |
| 8000, 18 ஏக்கர்	 	 | |
| 1000, 81 ஏக்கர் | 
| Question 103 | 
போச்சம்பள்ளிச் சந்தை வாரந்தோறும் எந்தக் கிழமைகளில் கூடுகிறது ?
| சனி  | |
| ஞாயிறு  | |
| திங்கள்  | |
| செவ்வாய் | 
| Question 104 | 
போச்சம்பள்ளிச் சந்தை எத்தனை ஆண்டுகள் பழமை வாய்ந்தது ?
| 152  | |
| 251  | |
| 125  | |
| 215 | 
Question 104 Explanation: 
 (விளக்கம் : இச்சந்தையில் நான்கு தலைமுறை நட்பு நிலவுகிறது .)
| Question 105 | 
தவறான இணையைத் தேர்ந்தெடு .
| மணப்பாறை – மாட்டுச்சந்தை | |
| அய்யலூர் – ஆட்டுச்சந்தை  | |
| ஒட்டன்சத்திரம் – காய்கறிச்சந்தை | |
| நாகர்கோவில் தோவாளை - கருவாட்டுச் சந்தை | 
Question 105 Explanation: 
 ( விளக்கம் : நாகர்கோவில் தோவாளை – பூச்சந்தை)
| Question 106 | 
சரியான இணையைத் தேர்ந்தெடு .
- ஈரோடு – ஜவுளிச்சந்தை
- காராமணி குப்பம் (கடலூர்) - கருவாட்டுச் சந்தை
- நாகப்பட்டினம் - மீன் சந்தை
| அனைத்தும் சரி 	 | |
| 1, 2 சரி  | |
| 2, 3 சரி	  | |
| 1, 3 சரி | 
| Question 107 | 
சரியான இணையை தேர்ந்தெடு .
- ஒன்றின் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குத் தொன்று தொட்டு ஆகி வருவது ஆகுபெயர் ஆகும் .
- தொல்காப்பியர் ஆகுபெயர்களை பதினைந்தாகவும் நன்னூலார் ஏழாகவும் வகைப்படுத்தி இலக்கணம் வகுத்துள்ளனர் .
| அனைத்தும் சரி  | |
| 1 மட்டும் சரி  | |
| 2 மட்டும் சரி 	 | |
| இரண்டும் தவறு | 
Question 107 Explanation: 
 (விளக்கம் : தொல்காப்பியர் ஆகுபெயர்களை ஏழாகவும் நன்னூலார் பதினைந்தாகவும் வகைப்படுத்தி இலக்கணம் வகுத்துள்ளனர் .)
| Question 108 | 
‘ முல்லையைத் தொடுத்தாள் ‘ எவ்வகை ஆகுபெயர்
| பொருளாகு பெயர் 	 | |
| இடவாகு பெயர்  | |
| காலவாகு பெயர் 		 | |
| சினையாகுபெயர் | 
| Question 109 | 
' வகுப்பறை சிரித்தது ‘ எவ்வகை ஆகுபெயர்
| பொருளாகு பெயர் 	 | |
| இடவாகு பெயர்  | |
| காலவாகு பெயர் 	 | |
| சினையாகுபெயர் | 
| Question 110 | 
கீழ்க்கண்டவற்றுள் சினையாகுபெயரை குறிக்கும் தொடர் எது ?
| கார் அறுத்தான்			 | |
| மருக்கொழுந்து நட்டான் | |
| மஞ்சள் பூசினாள் | |
| வற்றல் தின்றான் | 
| Question 111 | 
கீழ்க்கண்டவற்றுள் பண்பாகு பெயரை குறிக்கும் தொடர் எது ?
| கார் அறுத்தான் | |
| மருக்கொழுந்து நட்டான் | |
| மஞ்சள் பூசினாள் | |
| வற்றல் தின்றான் | 
| Question 112 | 
' கார் அறுத்தான் ' எவ்வகை ஆகுபெயர்
| பொருளாகு பெயர் 	 | |
| இடவாகு பெயர்  | |
| காலவாகு பெயர் 	 | |
| சினையாகுபெயர் | 
Question 112 Explanation: 
 ( விளக்கம் : கார் என்னும் காலப் பெயர் அக்காலத்தில் விளையும் பயிருக்கு ஆகி வந்தது)
| Question 113 | 
கீழ்க்கண்டவற்றுள் தொழிலாகுபெயரை குறிக்கும் தொடர் எது ?
| கார் அறுத்தான்	 | |
| மருக்கொழுந்து நட்டான் | |
| மஞ்சள் பூசினாள் | |
| வற்றல் தின்றான் | 
Question 113 Explanation: 
 ( விளக்கம் : வற்றல் என்னும் தொழில் பெயர் வற்றிய உணவுப் பொருளுக்கு ஆகி வந்தது.)
| Question 114 | 
சரியான இணையைத் தேர்ந்தெடு .
- வானொலி கேட்டு மகிழ்ந்தனர் - கருவியாகு பெயர்
- பைங்கூழ் வளர்ந்தது - காரியவாகு பெயர்
- அறிஞர் அண்ணாவை படித்திருக்கிறேன் – கருத்தாவாகுபெயர்
| அனைத்தும் சரி  | |
| 1 மட்டும் சரி  | |
| 2, 3 சரி 	 | |
| 2 மட்டும் சரி | 
Question 114 Explanation: 
 (விளக்கம் : 
வானொலி கேட்டு மகிழ்ந்தனர் - வானொலி என்னும் கருவி, அதன் காரியமாகிய நிகழ்ச்சிகளுக்கு ஆகி வந்தது.
பைங்கூழ் வளர்ந்தது – கூழ் என்னும் காரியம் அதன் கருவியாகிய பயிருக்கு ஆகி வந்தது .
அறிஞர் அண்ணாவை படித்திருக்கிறேன் – அறிஞர் அண்ணா என்னும் கருத்தாவின் பெயர், அவர் இயற்றிய நூல்களுக்கு ஆகி வருகிறது .)
| Question 115 | 
தவறான இணையைத் தேர்ந்தெடு
- ஒன்று பெற்றால் ஒளிமயம் – எண்ணலளவை ஆகுபெயர்
- இரண்டு கிலோ கொடு – முகத்தலளவை ஆகுபெயர்
- அரை லிட்டர் வாங்கு – எடுத்தலளவை ஆகுபெயர்
- ஐந்து மீட்டர் வெட்டினான் – நீட்டலளவை ஆகுபெயர்
| அனைத்தும்   | |
| 2, 3 	 | |
| 1,4 		 | |
| எதுவுமில்லை | 
Question 115 Explanation: 
 (விளக்கம் : 2. இரண்டு கிலோ கொடு – எடுத்தலளவை ஆகுபெயர்
3. அரை லிட்டர் வாங்கு – முகத்தலளவை ஆகுபெயர்)
| Question 116 | 
- கூற்று 1 : காவிரிப்பூம்பட்டினம் சோழ நாட்டின் துறைமுகமாகும் .
- கூற்று 2 : வண்டியூர் என்னும் ஊர் காஞ்சி மாநகரத்தில் அமைந்துள்ளது .
| கூற்று 1,2 சரி 		 | |
| கூற்று 1, 2 தவறு  | |
| கூற்று 2 சரி, 1 தவறு 	 | |
| கூற்று 1 சரி, 2 தவறு | 
| Question 117 | 
ஏற்றுமதி, இறக்குமதி குறித்துக் கூறும் சங்க நூல்கள்
| பட்டினப்பாலை, குறிஞ்சிப்பாட்டு  | |
| குறிஞ்சிப்பாட்டு, பதிற்றுப்பத்து | |
| மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு | |
| மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை | 
| Question 118 | 
- விடைக்கேற்ற வினாவைத் தெரிவு செய்க
- காவிரியாற்றின் கழிமுகம் ஆழமாகவும், அகலமாகவும் இருந்தது.
- பகலில் இயங்கும் கடைகள் நாளங்காடிகள்.
| காவிரியாற்றின் கழிமுகம் எதற்காக அமைந்திருந்தது ? – பகலில் இயங்கும் கடைகள் எவ்விதம் அழைக்கப்பட்டன ? | |
| காவிரியாற்றின் கழிமுகம் எவ்வாறு அமைந்திருந்தது ? – பகலில் இயங்கும் கடைகள் எவ்வாறு அழைக்கப்பட்டன ? | |
| காவிரியாற்றின் கழிமுகம் எங்கு அமைந்துள்ளது - பகலில் கடைகள் எவ்வாறு இயங்கின  | |
| காவிரியாற்றின் கழிமுகம் எதனால் அமைந்திருந்தது ? – பகலில் இயங்கும் கடைகள் எப்படி அழைக்கப்பட்டன ? | 
| Question 119 | 
" மாகால் எடுத்த முந்நீர் போல் " இவ்வரிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன.
| நான்மாடக்கூடல்  | |
| மதுரைக்காஞ்சி  | |
| புறநானூறு  | |
| அகநானூறு | 
| Question 120 | 
சோழநாட்டின் தலைநகராகிய காவிரி பூம்பட்டினத்திலும், பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையிலும் " கூலங் குவித்த கூல வீதிகள் “ இருந்தன எனக் கூறும் நூல் எது ?
| சிலப்பதிகாரம்  | |
| மணிமேகலை  | |
| புறநானூறு  | |
| மதுரைக் காஞ்சி | 
| Question 121 | 
சரியான தொடரை தேர்ந்தெடு .
| மலையேறிய மக்கள் மாலையின் வேகவேகமாய்க் கீழிறங்கின . | |
| எங்கள் ஊர் சந்தையில் காய்கறிகள் கிடைக்கும் . | |
| பண்டை துறைமுகங்களில் ஏற்றுமதிச் செய்யப்பட்டது. | |
| சிட்டுக்கு சிறகுகள் முளைத்தது . | 
Question 121 Explanation: 
 ( விளக்கம் :
மலையேறிய மக்கள் மாலையில் வேகவேகமாய்க் கீழிறங்கின .
பண்டை துறைமுகங்களில் ஏற்றுமதி செய்யப்பட்டது.
சிட்டுக்கு சிறகுகள் முளைத்தன .)
| Question 122 | 
கீழ்வருவனவற்றுள் கூலம் எனக் குறிப்பிடப்படுபவை எவை
- 1.நெல்லும் புல்லும் 2. வரகும் தினையும்
- எள்ளும் கொள்ளும்
- அவரையும் துவரையும்
- பயறும் உளுந்தும்
| அனைத்தும் சரி 		 | |
| 1, 3,5 | |
| 1, 2, 3  | |
| 3, 4, 5 | 
| Question 123 | 
பொருத்துக.
- கழிமுகங்கள் i) Estuaries
- கலங்கரை விளக்கம் ii) Light house
- துறைமுகங்கள் iii) Ports
- பண்டமாற்றுமுறை iv) Commodity Exchange
| i 	ii 	iii 	iv | |
| iii 	ii 	i 	iv | |
| iv 	iii 	ii 	i  | |
| iv 	ii 	i 	iii | 
| Question 124 | 
பொருத்துக
- இளநீர் i) Vegetable Soup
- அகழி ii) Sugar Cane juice
- கரும்புச்சாறு iii) Moat
- காய்கறி வடிச் சாறு iv) Tender coconut
| i 	ii 	iii 	iv | |
| iii 	ii 	i 	iv | |
| iv 	iii	ii 	i  | |
| iv 	ii 	i 	iii | 
| Question 125 | 
சரியான இணையைத் தேர்ந்தெடு .
- நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம் – முனைவர் சு. சக்திவேல்
- தரங்கம்பாடி தங்கப் புதையல் - பெ.தூரன்
- இருட்டு எனக்குப் பிடிக்கும் (அன்றாட வாழ்வில் அறிவியல்) - ச.தமிழ்ச்செல்வன்
| அனைத்தும் சரி 	 | |
| 2, 3 சரி  | |
| 1, 3 சரி  | |
| 1, 2 சரி | 
| Question 126 | 
- "அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
- ஐந்துசால்பு ஊன்றிய தூண் “
- இக்குறளில் பயின்று வரும் அணி
| உவமை அணி | |
| எடுத்துக்காட்டுவமை அணி | |
| ஏகதேச உருவக அணி	 | |
| உருவக அணி | 
| Question 127 | 
- " ஊழிபெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு)
- ஆழி எனப்படு வார் “
- இக்குறளில் பயின்று வரும் அணி
| உவமை அணி | |
| எடுத்துக்காட்டுவமை அணி | |
| ஏகதேச உருவக அணி | |
| உருவக அணி | 
| Question 128 | 
- " உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
- எழுவாரை எல்லாம் பொறுத்து "
- இக்குறளில் பயின்று வரும் அணி
| உவமை அணி | |
| எடுத்துக்காட்டுவமை அணி | |
| ஏகதேச உருவக அணி | |
| உருவக அணி | 
| Question 129 | 
பொருளுக்கேற்ற அடியை சரியாக பொருந்தியுள்ளதா என ஆராய்க.
- கண்டானாம் தான்கண்டவாறு – தெரிந்த அளவில் அறிவுடையவனாகத் தோன்றுவான் .
- அறம் நாணத்தக்கது உளடைத்து - அறம் வெட்கப்பட்ட அவனை விட்டு விலகிப் போகும் .
- மாற்றாரை மாற்றும் படை – பகைவரையும் நட்பாக்கும் கருவி
| அனைத்தும் சரி  | |
| 2, 3 சரி  | |
| 1, 3 சரி 	 | |
| 1, 2 சரி | 
| Question 130 | 
ஐந்து சால்புகளில் இரண்டு ____ .
| வானமும் நாணமும் | |
| நாணமும் இணக்கமும் | |
| இணக்கமும் சுணக்கமும் | |
| இணக்கமும் பிணக்கமும் | 
| Question 131 | 
- அன்புநாண் ஒப்புரவு ___ வாய்மையொடு
- ஐந்துசால்பு ஊன்றிய ____.
| பணிதல், படை	 | |
| பணிதல், தூண் | |
| கண்ணோட்டம், தூண் | |
| கண்ணோட்டம், படை | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 131 questions to complete.  
      
Ques no 40 ans is b .
Hello sir how to join this all test series pls reply… And mention the fee details… ASAP…