Online TestTamil

11th Tamil Part 9 Online Test – New Book

11th Tamil Iyal 9 Online Test - New Book Unit 9

11th Tamil Iyal 9 Online Test – New Book Unit 9

11th Tamil Questions - Part 9

Congratulations - you have completed 11th Tamil Questions - Part 9. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
சித்தர்களை ‘ நிறைமொழி மாந்தர் ‘ என கூறும் நூல்கள் எவை?
    1. சிலப்பதிகாரம் தொல்காப்பியம்
    2. திருக்குறள் 4. மணிமேகலை
A
1, 2
B
2, 3
C
3, 4
D
1, 4
Question 2
சித்தர்களை ‘ சித்தன் ‘ என கூறும் நூல்கள் எவை?
    1. சிலப்பதிகாரம் 2. தொல்காப்பியம்
    2.  திருக்குறள் 4. மணிமேகலை
A
1, 2
B
1 மட்டும்
C
4 மட்டும்
D
1, 4
Question 3
சிலப்பதிகாரத்தின் எந்த காதையில் சித்தர்களை ' சித்தன்’ என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டுள்ளது ?
A
வருந்தருக் காதை
B
ஊர் சூழ்வரிக் காதை
C
நாடுகாண் காதை
D
பவத்திரம்அருக என பாவைநோற்றக் காதை
Question 4
  • கூற்று   : சித்தர்கள் ‘ பிறப்பறுத்தவர்கள் ‘ என்று அழைக்கப்பட்டனர்.
  • காரணம்    : அறிவு வேறு, ஞானம் வேறு என்று உலகிற்கு விளக்கி, யோக மார்க்கத்தையும் ஞான மார்க்கத்தையும் தங்களின் உயர்நெறிகளாகக் கொண்டவர்கள்.
A
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்
B
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் ஆனால் சரியான விளக்கமல்ல
C
கூற்று சரி காரணம் தவறு
D
கூற்று காரணம் இரண்டும் தவறு
Question 5
"மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்" என்று கூறுவது
A
அகத்திய ஞானம்
B
தொல்காப்பிய ஞானம்
C
திருக்குறள்
D
திருமந்திரம்
Question 6
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது ?
A
சித்தர்கள் என்றால் நிறைவடைந்தவர் என்பது பொருள்.
B
இவர்கள் சித்தத்தை வென்று 'சித்து' என்னும் பேரறிவினைப் பெற்றவர்கள் ஆவர்
C
இவர்கள் எண்வகைச் சித்திகளைக் கைவரப் பெற்றவர்கள்.
D
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதே சித்தர் நோக்கம்.
Question 6 Explanation: 
(Note: "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பதே சித்தர் நோக்கம்)
Question 7
கீழ்க்கண்டவற்றுள் 'சித்து' என்பதன் பொருள்கள் யாவை?
    1. மனம் உடல்                3. ஆன்மா             4. கருத்து
A
அனைத்தும் சரி
B
1, 2, 3 சரி
C
1, 3, 4 சரி
D
2, 3, 4 சரி
Question 8
தமிழ் பேரகராதியின் படி ‘சித்தி' என்ற சொல்லின் பொருள்களில் அல்லாதது எது?
A
மெய்யறிதல்
B
வெற்றி
C
காரியம் கைகூடல்
D
கடவுள்
Question 9
சித்தர்களில் ஆதி சித்தராகக் கருதப்படுபவர் யார்?
A
திருமூலர்
B
சிவவாக்கியர்
C
சிவன்
D
கடுவெளி சித்தர்
Question 10
சித்தர்களில் கலகக்காரர் என்று அழைக்கப் படுபவர் யார்?
A
திருமூலர்
B
சிவவாக்கியர்
C
சிவன்
D
கடுவெளி சித்தர்
Question 11
கீழ்க்கண்டக் கூற்றுகளில் எவை சரியானவை?
  1. திருமூலரின் காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு அல்லது 6 ஆம் நூற்றாண்டு.
  2. சிவவாக்கியரின் காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு
  3. மற்ற சித்தர்கள் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு முதல் வாழ்ந்தவர்கள்
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 12
  • “ எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா
  • யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில் "
  • என்று பாடியவர் யார்?
A
கடுவெளி சித்தர்
B
பட்டினத்தார்
C
பாரதி
D
பாரதிதாசன்
Question 13
கீழ்க்கண்டவற்றுள் திருமூலரின் கடவுட் கொள்கையாக விளங்கியது எது?
A
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
B
ஒன்றென்றிரு, தெய்வம் உண்டென்றிரு
C
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
D
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்
Question 14
மனிதர்கள் கடவுளின் பெயரால் கருத்து வேறுபாடு கொண்டு தமக்குள் கலகம் விளைவித்துக் கொள்வதில் சித்தர்களுக்கு உடன்பாடு இல்லை என்பதை மெய்ப்பிக்கும் அடிகள் யாவை?
  1. மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்.
  2. நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 15
கீழ்க்கண்டவற்றுள் பட்டினத்தார்  பாடிய வரிகள் எது?
A
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
B
ஒன்றென்றிரு, தெய்வம் உண்டென்றிரு
C
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
D
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்
Question 16
"ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை" என்று ____ கூறுகிறது.
A
அகத்திய ஞானம்
B
தொல்காப்பிய ஞானம்
C
திருக்குறள்
D
திருமந்திரம்
Question 17
சித்தர்களைப் பொறுத்த அளவில் வீடுபேறு என்பது ______.
A
கடவுளை அறிதல்
B
உலகை அறிதல்
C
தன்னை அறிதல்
D
துறவு நிலை
Question 18
" தன்னை அறிந்த நிலையில் ஆன்மா தானே தனக்குத் தலைவனாய் நிற்கும் " என்பது யாருடைய வாக்கு?
A
திருமூலர்
B
சிவவாக்கியர்
C
தொல்காப்பியர்
D
கடுவெளி சித்தர்
Question 19
"நாடொணாத அமிர்தமுண்டு நான் அழிந்து நின்ற நாள் “ என்று கூறியவர் யார்.?
A
திருமூலர்
B
சிவவாக்கியர்
C
தொல்காப்பியர்
D
கடுவெளி சித்தர்
Question 20
சித்தர்களை 'கிளர்ச்சியாளர்கள் ‘ என்று கூறியவர் யார்?
A
கனக சுப்புரத்தினம்
B
சபாபதி
C
க. கைலாசபதி
D
பாரதியார்
Question 21
"சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ?’’ என்று பாடியவர் யார்?
A
திருமூலர்
B
சிவவாக்கியர்
C
பாம்பாட்டிச் சித்தர்
D
பத்திரகிரியார்
Question 22
"சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்" என்று பாடியவர் யார்?
A
திருமூலர்
B
சிவவாக்கியர்
C
பாம்பாட்டிச் சித்தர்
D
பத்திரகிரியார்
Question 23
  • '' ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே
  • சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்"
  • என்று பாடியவர் யார்?
A
திருமூலர்
B
சிவவாக்கியர்
C
பாம்பாட்டிச் சித்தர்
D
பத்திரகிரியார்
Question 24
  • கூற்று : சித்தர்களை ஆன்மிக இரசவாதிகள் என்று தமிழகத்தில் கருதுகிறார்கள்.
  • காரணம்: இரசவாதி எவ்வாறு தாழ்ந்த உலோகத்தை தங்கமாக மாற்றுகிறானோ அவ்வாறே சித்தரும் தம்முடைய உடலையும் உள்ளத்தையும் சார்ந்து நிற்கும் உயிரை எந்தச் சார்புமற்ற உயர்ந்த ஆன்ம நிலைக்கு மாற்றுகிறார்.
A
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்
B
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கமல்ல
C
கூற்று சரி காரணம் தவறு
D
கூற்று காரணம் இரண்டும் தவறு.
Question 25
கீழ்க்கண்டவற்றுள் உடம்பின் இன்றியமையாமையைக் கூறும் திருமந்திர பாடலடிகள் யாவை?
  1. உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே
  2. உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
  3. ஒன்றே குலம் ஒருவனே தேவன்
A
அனைத்தும்
B
1, 3
C
1, 2
D
2, 3
Question 26
  • "நந்தவ னத்திலோர் ஆண்டி – அவன்
  • நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
  • கொண்டு வந்தானொரு தோண்டி – அதைக்
  • கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி "
  • என்று பாடியவர் யார்?
A
கடுவெளிச் சித்தர்
B
சிவவாக்கியர்
C
பாம்பாட்டிச் சித்தர்
D
பத்திரகிரியார்
Question 27
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது ?
A
தன்னை அறிந்த நிலையில் ஆன்மா தானே தனக்குத் தலைவனாய் நிற்கும் என்பது தொல்காப்பியர் வாக்கு.
B
தன்னை அறிவதற்கு ‘ நான் ' என்னும் அகங்காரம் அழிய வேண்டும்.
C
அண்டத்தில் உள்ளது பிண்டம் ; பிண்டத்தில் உள்ளது அண்டம் என்பது சித்தர் மொழி
D
நாடிகளைப் பிடித்து நோய் அறியும் திறன் பெற்ற சித்தர்கள் மருந்து தயாரிக்கும் வேதியியல் கூறுகளையும் அறிந்திருந்தனர்.
Question 27 Explanation: 
(Note: தன்னை அறிந்த நிலையில் ஆன்மா தானே தனக்குத் தலைவனாய் நிற்கும் என்பது திருமூலர் வாக்கு.)
Question 28
தமிழ்ச் சித்தர்களின் பாடல்கள் எளிமையாக இருப்பினும் மறைபொருள் கூற்றுகளாக______ ஆகவே எழுதப்பட்டன.
A
மங்களம்
B
இடக்கரடக்கல்
C
குழுஉக்குறி
D
செய்யுள்
Question 29
சித்தர்கள் தங்களது பாடல்களில் மறைபொருள் கூற்றுகளாக குறிப்பிட்டுள்ளதை ___,  ___,  ___ என்ற மூன்று கூறுகளை அறிந்தவர்களால் மட்டுமே பொருள் காணத்தக்கவையாக அமைந்துள்ளன.
A
கல்வி, மந்திரம், ஞானம்
B
யோகம், தந்திரம், மருத்துவம்
C
யோகம், மந்திரம், ஞானம்
D
தந்திரம், மந்திரம், மருத்துவம்
Question 30
கீழ்க்கண்டவற்றுள் குண்டலினி சக்தியை உச்சியில் ஏற்றி அமுதம் உண்ணும் நிலையைக் கூறும் சொல் எது?
A
குண்டலினி சக்தி
B
அமுதம்
C
மாங்காய்ப் பால்
D
அமுதப்பால்
Question 31
  • " தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே! – ஒரு
  • தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே!"
  • என்று பாடியவர் யார்?
A
பாரதி
B
பாரதிதாசன்
C
கடுவெளி சித்தர்
D
வள்ளலார்
Question 32
மருத்துவம், மந்திரம், இரசவாதம், யோகம், ஞானம் போன்ற பல் துறைகளில் சித்தர்கள் பாடிய பாடல்கள் தமிழ் மொழியின் _____ எனப்படுகின்றன.
A
கல்விப் பெட்டகம்
B
கல்விச் சோலை
C
அறிவுப் பெட்டகம்
D
அறிவுச் சோலை
Question 33
"ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை" என்னும் பாடலடி திருமந்திரத்தில் எத்தனையாவது பாடலில் அமைந்துள்ளது?
A
1647
B
1467
C
1746
D
1476
Question 34
பொருத்துக
  1. கரிமா     i) அணுவை போல சிறுத்து நிற்கும் ஆற்றல்
  2. லகிமா   ii) வரையறையற்று விரிந்து படரும் ஆற்றல்
  3. மகிமா    iii) காற்றில் மிதக்கும் ஆற்றல்
  4. அணிமா          iv) எங்கும் வியாபித்திருக்கும் ஆற்றல்
A
i ii iii iv
B
ii i iv iii
C
iv iii ii i
D
iv ii iii i
Question 35
பொருத்துக.
  • ஈசத்துவம்                 i) படைக்கவும் அடக்கவும் கொண்ட ஆற்றல்
  • பிராகாமியம்    ii) இயற்கைத் தடைகளைக் கடக்கும் ஆற்றல்
  • காமாவசாயித்வம் iv) விரும்பியதை முடிக்கும் ஆற்றல்
  • வசித்வம்                  v) உலகப்படைப்புகளை  அடக்கி ஆளும் ஆற்றல்
A
i ii iii iv
B
ii i iv iii
C
iv iii ii i
D
iv ii iii i
Question 36
கீழ்க்கண்டவற்றுள் அட்டமா சித்திகளில் அல்லாதது எது?
A
வசித்துவம்
B
காமாவசாயித்வம்
C
மகிமாவசித்வம்
D
ஈசத்துவம்
Question 37
கீழ்க்கண்டவற்றுள் எது ஓவியத்துக்கு ஒப்பானது என்று போற்றப்படுகின்றது?
A
கவிதை
B
ஹைக்கூ
C
வெண்பா
D
செய்யுள்
Question 38
ஹைக்கூ _____ ன் இலக்கிய பாங்கினைத் தன்னுள் கொண்டதாகும்.
A
கவிதை
B
செய்யுள்
C
உரைநடை
D
ஜென் உரை
Question 39
  • " பட்டுப்போன மரக்கிளை,
  • அமர்ந்து ஓய்வெடுக்கும் காகம்;
  • இலையுதிர் கால மாலை "
  • என்ற ஹைக்கூ யாருடையது?
A
மோரிடாகே
B
பாஷோ
C
இஸ்ஸா
D
பிரமிள்
Question 40
  • " விழுந்த மலர்
  • கிளைக்குத்  திரும்புகிறது
  • அடடா… வண்ணத்துப்பூச்சி "
  • என்ற ஹைக்கூ யாருடையது?
A
மோரிடாகே
B
பாஷோ
C
இஸ்ஸா
D
பிரமிள்
Question 41
  • “ பெட்டிக்கு வந்த பின்
  • எல்லாக் காய்களும் சமம் தான்
  • சதுரங்கக் காய்கள் "
  • என்ற ஹைக்கூ யாருடையது?
A
மோரிடாகே
B
பாஷோ
C
இஸ்ஸா
D
பிரமிள்
Question 42
கீழ்க்கண்டவற்றுள் தனிமையையும் அமைதியையும் உட்கருத்தாக கொண்ட ஹைக்கூ எது?
A
பட்டுப்போன மரக்கிளை, அமர்ந்து ஓய்வெடுக்கும் காகம்; இலையுதிர் கால மாலை
B
விழுந்த மலர் கிளைக்குத் திரும்புகிறது அடடா… வண்ணத்துப்பூச்சி
C
பெட்டிக்கு வந்த பின் எல்லாக் காய்களும் சமம் தான் சதுரங்கக் காய்கள்
D
சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது
Question 43
கீழ்க்கண்டவற்றுள் ஓர் அழகு போனாலும் மற்றொரு அழகு, அதன் இடத்தை நிரப்பும் என்பதை உட்கருத்தாக கொண்ட ஹைக்கூ எது?
A
பட்டுப்போன மரக்கிளை, அமர்ந்து ஓய்வெடுக்கும் காகம்; இலையுதிர் கால மாலை
B
விழுந்த மலர் கிளைக்குத் திரும்புகிறது அடடா… வண்ணத்துப்பூச்சி
C
பெட்டிக்கு வந்த பின் எல்லாக் காய்களும் சமம் தான் சதுரங்கக் காய்கள்
D
சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது
Question 44
சதுரங்க விளையாட்டின்போது வெவ்வேறு அதிகாரங்களைப் பெறும் காய்கள் பெட்டிக்குள் வந்த பின் சமமாகின்றன. மனிதர் நிலையும் அத்தன்மையதே என்று கூறும் ஹைக்கூவை எழுதியவர் யார்?
A
மோரிடாகே
B
பாஷோ
C
இஸ்ஸா
D
பிரமிள்
Question 45
காவியத்துக்கான பொதுவான பாடுபொருள் எது?
A
போர்
B
இறப்பு
C
காற்று
D
வாழ்வு
Question 46
  • " சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று
  • காற்றின் தீராத பக்கங்களில்
  • ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது "
  • என்ற வரிகள் யாருடையது?
A
மோரிடாகே
B
பாஷோ
C
இஸ்ஸா
D
பிரமிள்
Question 47
பிரமிள் கவிதைகள் என்ற பெயரில் யாருடைய கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன?
A
சிவமூர்ததி
B
சிவபாலா
C
சிவராமலிங்கம்
D
சிவராமு
Question 48
சிவராமலிங்கம் அவர்கள் கீழ்க்கண்ட எந்த புனைப்பெயர்களில் எழுதினார்?
  • 1. பிரமிள்            2. அரூப் சிவராம்           3. தருமு சிவராம்
  • 4.  பானு சந்திரன்
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
3, 4 சரி
D
1, 2, 3 சரி
Question 49
பிரமிள் அவர்கள் கீழ்க்கண்ட எந்தெந்த தளங்களில் இயங்கினார் ?
  1. சிறுகதை                   2. நாடகம்             3.  மொழியாக்கம்   4. விமர்சனம்  5. புதுக்கவிதை
A
அனைத்தும் சரி
B
1, 2, 3 சரி
C
3, 4, 5 சரி
D
1, 2, 3, 4 சரி
Question 50
கீழ்க்கண்டவற்றுள் பிரமிள் அவர்கள் எழுதிய சிறுகதை தொகுப்பு எது?
A
வெயிலும் நிழலும்
B
நக்ஷத்திரவாசி
C
லங்காபுரி ராஜா
D
நிழல்
Question 51
கீழ்க்கண்டவற்றுள் சிவராமலிங்கம் அவர்கள் எழுதிய  நாடகம் எது?
A
வெயிலும் நிழலும்
B
நக்ஷத்திரவாசி
C
லங்காபுரி ராஜா
D
நிழல்
Question 52
கீழ்க்கண்டவற்றுள் பிரமிள் அவர்கள் எழுதிய  கட்டுரைத் தொகுப்பு எது?
A
வெயிலும் நிழலும்
B
நக்ஷத்திரவாசி
C
லங்காபுரி ராஜா
D
நிழல்
Question 53
  • " உடைஅணிந்தேன் எனச் சொல்லுகிறாய் – வெறும்
  • உடலுக் கணிவது உடையல்ல
  • விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் – ஒரு
  • வினாவாய் நீயே நிற்கின்றாய் "
  • என்ற வரிகளை இயற்றியவர் யார்?
A
ஜீவா
B
கல்கி
C
அப்துல் ரகுமான்
D
தாராபாரதி
Question 54
  • “ 'நான்' என்பாய் அது நீயில்லை – வெறும்
  • நாடக வசனம் பேசுகிறாய்
  • ஏன்? என்பாய் இது கேள்வியில்லை – அந்த
  • ஏன் என்னும் ஒளியில் உனைத் தேடு"
  • என்ற பாடலில் அமைந்துள்ள பா வகை என்ன?
A
வெண்பா
B
சிந்து
C
வஞ்சிப்பா
D
ஆசிரியப்பா
Question 55
  • "வென்றேன் என்பர் மனிதரெல்லாம் -பெறும்
  • வெற்றியிலே தான் தோற்கின்றனர் "
  • என்ற வரிகள் இடம்பெற்றுள்ள பாடல் ?
A
தொலைந்து போனவர்கள்
B
பிரமிள் கவிதைகள்
C
ஆலாபனை
D
பித்தன்
Question 56
கீழ்க்கண்டவற்றுள் மெளலானா ரூமி அவர்கள் பிறந்த நாடு மற்றும் ஆண்டு எது?
A
பாகிஸ்தான் – 1207
B
ஆப்கானிஸ்தான் – 1206
C
ஆப்கானிஸ்தான்-1207
D
பாகிஸ்தான்-1206
Question 57
கீழ்க்கண்ட மெளலானா ரூமி குறித்த கூற்றுகளை ஆராய்க.
  1. ரூமி அவர்கள் ஆன்ம ஞானியாக மாறி சூஃபி பிரிவைத் தழுவினார்.
  2. அவருடைய மஸ்னவி என்ற உலகப்புகழ் பெற்ற இத்தாலிய ஞான காவியம் குறிப்பிடத்தக்கது.
  3. அதில் புல்லாங்குழலை ஆன்மாவாகக் குறியீடு செய்து கவிதை படைத்திருக்கிறார்.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
1, 3 சரி
D
1,3 தவறு
Question 58
  • " என்னை மூங்கிற்காட்டிலிருந்து
  • வெட்டி வீழ்த்திப் பிரிந்ததற்காக
  • நான் எழுப்பும் கூக்குரல் கேட்டு
  • ஆடவர் பெண்டிர் யாவரும்
  • அழுது புலம்புகின்றனர் "
  • இது யாருடைய கவிதை?
A
அப்துல் ரகுமான்
B
மெளலானா ரூமி
C
தாராபாரதி
D
மீரா
Question 59
இலக்கணக் குறிப்புத் தருக – கற்றேன்,  உரைத்தாய்
A
முன்னிலை ஒருமை வினைமுற்று, தன்மை ஒருமை வினைமுற்று
B
முன்னிலை ஒருமை வினைமுற்று, முன்னிலை ஒருமை வினைமுற்று
C
தன்மை ஒருமை வினைமுற்று, முன்னிலை ஒருமை வினைமுற்று
D
தன்மை ஒருமை வினைமுற்று, படர்க்கை ஒருமை வினைமுற்று
Question 60
இலக்கணக் குறிப்புத் தருக – உடை அணிந்தேன்
A
2 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
B
2 ம் வேற்றுமைத் தொகை
C
7 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
D
7 ம் வேற்றுமைத் தொகை
Question 61
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக - வென்றேன்
A
வென்று + ஏன்
B
வென் + ற் + ஏன்
C
வெல்(ன்) + ற் + ஏன்
D
வென்று + ற் + ஏன்
Question 62
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – நிற்கின்றாய்
A
நில் + கிறு+ஆய்
B
நில்(ற்) + கின்று + ஆய்
C
நின்று + ஆய்
D
நில் + ற் + கிறு + ஆய்
Question 63
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – பெற்றேன்
A
பெறு (பெற்று) + ஏன்
B
பெற்று + ய் + ஏன்
C
பெறு ( பெற்று) + ய் + ஏன்
D
பெறு + ஏன்
Question 64
"வென்றேன் >> வெல்(ன்) + ற் + ஏன் “ என்பதில் 'ற்’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்?
A
சந்தி
B
நிகழ்கால இடைநிலை
C
இறந்த கால இடைநிலை
D
எதிர்கால இடைநிலை
Question 65
நிற்கின்றாய் >> நில் ( ற்) + கின்று + ஆய் " என்பதில் 'ஆய்' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம் ?
A
முன்னிலை பன்மை வினை முற்று விகுதி
B
முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
C
தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
D
படர்க்கை ஒருமை வினைமுற்று விகுதி
Question 66
" பெற்றேன் >>பெறு ( பெற்று) + ஏன் " என்பதில் ' ஏன் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம் ?
A
முன்னிலை பன்மை வினை முற்று விகுதி
B
முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
C
தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
D
படர்க்கை ஒருமை வினைமுற்று விகுதி
Question 67
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – அணிந்தேன்
A
அணிந்து + ஏன்
B
அணி + ந் + த் + ஏன்
C
அணி +த்(ந்) +த் + ஏன்
D
அணிந்து+த் + ஏன்
Question 68
" அணிந்தேன் >> அணி +த்(ந்) +த் + ஏன் " என்பதில் 'த்’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
விகுதி
B
நிகழ்கால இடைநிலை
C
இறந்த கால இடைநிலை
D
எதிர்கால இடைநிலை
Question 69
அப்துல் ரகுமான் அவர்கள் கீழ்க்கண்ட எந்தெந்த வடிவங்களில் கவிதைகள் இயற்றியுள்ளார்?
  • 1. புதுக்கவிதை                       2. ஹைக்கூ
  1. வசனக் கவிதை 4. மரபுக் கவிதை
A
அனைத்தும்
B
1, 2, 3
C
1, 3, 4
D
2, 3, 4
Question 70
கீழ்க்கண்டவற்றுள் அப்துல் ரகுமான் அவர்கள் இயற்றிய நூல்கள் எவை?
  • 1.பால்வீதி                                       2. நேயர்விருப்பம்
  1.  பித்தன் 4. ஆலாபனை
A
அனைத்தும் சரி
B
1, 2,4 சரி
C
2, 3, 4 சரி
D
1, 3, 4 சரி
Question 71
அப்துல் ரகுமான் அவர்கள் எந்த கவிதை தொகுப்பிற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?
A
பால்வீதி
B
நேயர்விருப்பம்
C
பித்தன்
D
ஆலாபனை
Question 72
கீழ்க்கண்டவற்றுள் அப்துல் ரகுமான் அவர்கள் பெற்ற விருதுகள் யாவை?
  • 1.ஞானபீட விருது                           2. சாகித்திய அகாதெமி விருது
  1.  தமிழன்னை விருது 4. பாரதிதாசன் விருது
A
அனைத்தும் சரி
B
1, 2, 3 சரி
C
2, 3, 4 சரி
D
1, 3, 4 சரி
Question 73
அப்துல் ரகுமான் அவர்களுக்கு 'தமிழன்னை விருதை ‘ எந்த பல்கலைக்கழகம் வழங்கியது ?
A
பாரதியார் பல்கலைக்கழகம்
B
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
C
சென்னைப் பல்கலைக்கழகம்
D
தமிழ்ப் பல்கலைக்கழகம்
Question 74
  • " முடிந்ததென்பாய் ஒரு காரிய்த்தை – இங்கு
  • முடிதல் என்பது எதற்குமில்லை"
  • என்ற வரிகள் இடம்பெற்றுள்ள பாடல் எந்த கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது ?
A
பால்வீதி
B
சுட்டு விரல்
C
பித்தன்
D
ஆலாபனை
Question 75
  • கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
  • அப்துல் ரகுமான் அவர்கள் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
  • இவர் வானம்பாடிக் கவிஞர்களில் ஒருவர்.
A
அனைத்தும் சரி
B
2 மட்டும் சரி
C
2 மட்டும் தவறு
D
இரண்டும் தவறு
Question 76
' தாயால் வந்த துயரத்தையும் தர்மத்தால் வென்றவன்’ மற்றும் ' அறமற்ற போரிலும் செஞ்சோற்றுக்கடன் தீர்த்து அறம் காத்தவன்’ என்ற கூற்றுகள் யாரை குறிப்பிடுகின்றன?
A
கண்ணன்
B
கன்னன்
C
கிருஷ்ணன்
D
துரியோதனன்
Question 77
  • "மேருவி னிடைத்தவம் பூண்டேன்
  • ஈண்டிய வறுமைப் பெருந்துயர் உழந்தேன்"
  • -யார் யாரிடம் கூறியது ?
A
கண்ணன் கன்னனிடம் கூறியது
B
கன்னன் கண்ணனிடம் கூறியது.
C
கண்ணன் அர்ச்சுணனிடம் கூறியது
D
அர்ச்சுணன் கண்ணனிடம் கூறியது.
Question 78
  • "நன்று என நகைத்துத் தரத்தகு பொருள் நீ நவில்க என"
  • யார் யாரிடம் கூறியது ?
A
கண்ணன் கன்னனிடம் கூறியது
B
கன்னன் கண்ணனிடம் கூறியது.
C
கண்ணன் அர்ச்சுணனிடம் கூறியது
D
அர்ச்சுணன் கண்ணனிடம் கூறியது.
Question 79
  • " அல்லல் வெவ்வினையால் இன்னம் உற்பவம்உண்
  • டாயினும் ஏழ்எழு பிறப்பும்
  • இல்லைஎன்று இரப்போர்க்கு இல்லை என்று உரையா
  • இதயம்நீ அளித்தருள் என்றான்''
  • யார் யாரிடம் கூறியது ?
A
கண்ணன் கன்னனிடம் கூறியது
B
கன்னன் கண்ணனிடம் கூறியது.
C
கண்ணன் அர்ச்சுணனிடம் கூறியது
D
அர்ச்சுணன் கண்ணனிடம் கூறியது
Question 80
  • "நீ வேண்டிய வரங்கள் சொல்லுக உனக்குத் தருதும் என்று உரைப்ப "
  • யார் யாரிடம் கூறியது ?
A
கண்ணன் கன்னனிடம் கூறியது
B
கன்னன் கண்ணனிடம் கூறியது.
C
கண்ணன் அர்ச்சுணனிடம் கூறியது
D
அர்ச்சுணன் கண்ணனிடம் கூறியது.
Question 81
"வென்றிகொள் விசயன் விசயவெங் கணையால்” இதில் அடிக்கோடிட்ட சொல் யாரை குறிக்கிறது?
A
கன்னன்
B
கண்ணன்
C
நான்முகன்
D
அருச்சுணன்
Question 82
  • "மல்லல்அம் தொடையல் நிருபனை முனிவன் மகிழ்ந்து
  • நீ வேண்டிய வரங்கள் சொல்லுக “ இதில் அடிக்கோடிட்ட சொல் யாரை குறிக்கிறது?
A
கன்னன்
B
கண்ணன்
C
நான்முகன்
D
மாவலிச்சக்ரவர்த்தி
Question 83
  • " முன்னம்ஓர் அவுணன் செங்கை நீர்ஏற்று
  • மூவுலகமும் உடன் கவர்ந்தோன் " இதில் அடிக்கோடிட்ட சொல் யாரை குறிக்கிறது?
A
கன்னன்
B
கண்ணன்
C
நான்முகன்
D
மாவலிச்சக்ரவர்த்தி
Question 84
"பூவில்வாழ் அயன்" என்பது யாரைக் குறிக்கிறது?
A
கன்னன்
B
கண்ணன்
C
நான்முகன்
D
மாவலிச்சக்ரவர்த்தி
Question 85
  • "ஆவியோ நிலையின் கலங்கியது யாக்கை
  • அகத்ததோ புறத்ததோ அறியேன்" என்று கூறியது யார்?
A
கன்னன்
B
கண்ணன்
C
அர்ச்சுணன்
D
மாவலிச்சக்ரவர்த்தி
Question 86
  • "சூரன் மாமதலை” என்பது யாரை குறிக்கிறது?
A
கன்னன்
B
கண்ணன்
C
அர்ச்சுணன்
D
மாவலிச்சக்ரவர்த்தி
Question 87
மகாபாரதப் போரில் அர்ச்சுனனின் வில்லடிபட்டுக் கன்னன் தேர்ச்சக்கரத்தில் சாய்வது எத்தனையாவது நாள் போரில் ?
A
16
B
17
C
18
D
11
Question 88
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
  1. பாரதப் போரில் பாண்டவர்களுக்குத் தலைமை தருமன்.
  2. கௌரவர்களுக்கு தலைமை துரியோதனன்.
  3. கன்னன் துரியோதனனுக்காக தீரத்துடன் போர் செய்தான்.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 89
  • "தாண்டிய தரங்கக் கருங்கடல் உடுத்த
  • தரணியில் தளர்ந்தவர் தமக்கு
  • வேண்டிய தருதி நீ எனக் கேட்டேன்"
  • இவ்வடிகள் எந்நூலில் இடம் பெறுகின்றன?
A
மகாபாரதம்
B
வில்லிபாரதம்
C
இராமாயணம்
D
புறநானூறு
Question 90
  • சரியான பொருளை தேர்ந்தெடு.
  • தரங்கம், எழிலிஏறு
A
மலை, இடி
B
பேரிடி, கடல்
C
கடல், பேரிடி
D
பேரிடி, மலை
Question 91
  • சரியான பொருளை தேர்ந்தெடு.
  • மல்லல், தொடையல்
A
மாலை, வளமை
B
வளமை, மாலை
C
காடு, வெற்றி
D
வெற்றி, காடு
Question 92
சரியான பொருளை தேர்ந்தெடு.
  • துரகதம், உற்பவம்
A
பிறவி, வெற்றி
B
வெற்றி, பிறவி
C
குதிரை, பிறவி
D
பிறவி, குதிரை
Question 93
சரியான பொருளை தேர்ந்தெடு.
  • அங்கை, கவனம்
A
மங்கை, நிதானம்
B
உள்ளங்கை, நிதானம்
C
மங்கை, வேகம்
D
உள்ளங்கை, வேகம்
Question 94
சரியான பொருளை தேர்ந்தெடு.
  • நான்மறை, ஓவுஇலாது
A
நான்கு வேதங்கள், ஓய்வு இல்லாது
B
பிரமன், ஓய்வு இல்லாது
C
நான்கு வேதங்கள், ஒன்றும் மிச்சமின்றி
D
பிரமன், ஒன்றும் மிச்சமின்றி
Question 95
இலக்கணக் குறிப்புத் தருக.
  • கருங்கடல், பெருந்துயர், வெங்கனை, செங்கை, வெவ்வினை
A
வினைத்தொகைகள்
B
பண்புத்தொகைகள்
C
உருவகங்கள்
D
உவமைகள்
Question 96
இலக்கணக் குறிப்புத் தருக.
  • தடந்தேர், மாமதலை
A
வினைத்தொகைகள்
B
பண்புத்தொகைகள்
C
உரிச்சொல் தொடர்கள்
D
வியங்கோள் வினைமுற்றுகள்
Question 97
இலக்கணக் குறிப்புத் தருக.
  • கண்மலர், வென்றி
A
உவமை, வினையெச்சம்
B
உருவகம்,மெலித்தல் விகாரம்
C
உவமை, மெலித்தல் விகாரம்
D
உருவகம், வினையெச்சம்
Question 98
இலக்கணக் குறிப்புத் தருக.
  • ஈகையும்செல்வமும்,  முத்தியும்பெறுதி
A
உம்மைத்தொகை, உம்மைத் தொகை
B
எண்ணும்மை, உம்மைத்தொகை
C
எண்ணும்மை, உயர்வு சிறப்பும்மை
D
உம்மைத்தொகை, உயர்வு சிறப்பும்மை
Question 99
இலக்கணக் குறிப்புத் தருக.
  • நவில்க, உதவுக, கொள்க, தருக, சொல்லுக
A
வினைத்தொகைகள்
B
பண்புத்தொகைகள்
C
உரிச்சொல் தொடர்கள்
D
வியங்கோள் வினைமுற்றுகள்
Question 100
  • இலக்கணக் குறிப்புத் தருக.
  • பொருள் எலாம், நிகர் அலன்
A
மெலித்தல் விகாரங்கள்
B
இடைக்குறை விகாரங்கள்
C
விளித்தல் விகாரங்கள்
D
வல்லின விகாரங்கள்
Question 101
  • இலக்கணக் குறிப்புத் தருக.
  • வாழ்அயன், செய்புண்ணியம்
A
வினைத்தொகைகள்
B
பண்புத்தொகைகள்
C
உரிச்சொல் தொடர்கள்
D
வியங்கோள் வினைமுற்றுகள்
Question 102
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – தாண்டிய
A
தாண்டு + இய
B
தாண்டு + இ + ய் + அ
C
தாண்டு + இ (ன்) + ய் + அ
D
தாண்டு + இ(ன்) + ய
Question 103
கீழ்க்கண்டவற்றுள் வடமொழியில் எழுதப்பட்ட இதிகாசங்கள் எவை?
  • 1. கம்பராமாயணம்                 2.  இராமாயணம்           3.  மகாபாரதம்
  1. சிலப்பதிகாரம்       5. மணிமேகலை
A
1, 2, 3
B
2, 3
C
1, 2, 5
D
1, 2, 3, 5
Question 104
கீழ்க்கண்டவற்றுள் தமிழில் எழுதப்பட்ட இதிகாசங்கள் எவை?
  • 1. கம்பராமாயணம்                 2.  இராமாயணம்           3.  வில்லிபாரதம்
  1. சிலப்பதிகாரம்       5. மணிமேகலை
A
1, 2, 3
B
1, 3
C
1, 2, 4
D
1, 2, 3, 4
Question 105
கீழ்க்கண்டவற்றுள் வடமொழியில் எழுதப்பட்ட காப்பியங்கள் எவை?
  • 1. கம்பராமாயணம்                  2.  இராமாயணம்           3.  மகாபாரதம்
  1. சிலப்பதிகாரம்       5. மணிமேகலை
A
அனைத்தும்
B
2, 3
C
4, 5
D
1, 4, 5
Question 106
"ஹோமரின் இலியட், ஒடிசி “ ஆகியவை எம்மொழியில் எழுதப்பட்ட இதிகாசங்கள்
A
இலத்தீன்
B
கிரேக்கம்
C
ஆங்கிலம்
D
பிரெஞ்சு
Question 107
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது ?
A
உலகிலுள்ள பழமையான மொழிகளில் இதிகாசங்களும் காப்பியங்களும் தோன்றியுள்ளன.
B
தமிழில் எழுதப்பட்ட முதல் இரு காப்பியங்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை.
C
பிற மொழி இதிகாசங்கள் பெண்மையை முதன்மைப்படுத்திப் பேசுகின்றன.
D
தமிழ்க் காப்பியங்கள் போருக்கு முதன்மை கொடுக்கவில்லை.
Question 108
" தாண்டு + இ (ன்) + ய் + அ " இதில் ‘ ய் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
சாரியை
B
உடம்படுமெய் சந்தி
C
இடைநிலை
D
விகாரம்
Question 109
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – தருதி
A
தரு + தி
B
தரு+ த் + இ
C
தா (தரு) + த் + இ
D
தா (தரு) + தி
Question 110
" தருதி >> தா (தரு) + த் + இ என்பதில் ‘ த் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
சந்தி
B
உடம்படு மெய் சந்தி
C
விகாரம்
D
எழுத்துப்பேறு
Question 111
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – பூண்டேன்
A
பூண்டு + ஏன்
B
பூண் + ட் + ஏன்
C
பூண் + டே + என்
D
பூண் + ட் + என்
Question 112
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – அளிப்பாய்
A
அளி + ப் + ஆய்
B
அளிப்பு + ஆய்
C
அளி + ப் + ப் + ஆய்
D
அளித்து + ப் + ஆய்
Question 113
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – தழுவி
A
தழுவு + வ் + இ
B
தழுவு + இ
C
தழு + வ் + இ
D
தழுவு + ய் + இ
Question 114
" பூண்டேன் >> பூண் + ட் + ஏன் " இதில் 'ஏன்' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
B
தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
C
படர்க்கை ஒருமை வினைமுற்று விகுதி
D
தன்மை பன்மை வினைமுற்று விகுதி
Question 115
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – கொண்டு
A
கொண் + டு
B
கொண் + ட் + உ
C
கொள்(ண்) + ட் + உ
D
கொள்(ண்) + ட் + டு
Question 116
" அளிப்பாய் >> அளி + ப் + ப் + ஆய் “ இதில் "ஆய் " என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
B
தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
C
படர்க்கை ஒருமை வினைமுற்று விகுதி
D
தன்மை பன்மை வினைமுற்று விகுதி
Question 117
" தழுவி >>தழுவு + இ" இதில் ' இ ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
தொழிற்பெயர் விகுதி
B
பெயரெச்ச விகுதி
C
வினையெச்ச விகுதி
D
சாரியை
Question 118
" கொண்டு >>கொள்(ண்) + ட் + உ" இதில் ‘உ’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
தொழிற்பெயர் விகுதி
B
பெயரெச்ச விகுதி
C
பெயரெச்ச விகுதி
D
சாரியை
Question 119
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – அறியேன்
A
அறி+ஏன்
B
அறி+ய் + (ஆ) + ஏன்
C
அறி+ ய் + ஏன்
D
அறி+யேன்
Question 120
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – தருக
A
தரு+க
B
தா + க
C
தா ( தரு) + க
D
தா (தரு) + க் + அ
Question 121
" அறியேன் >>அறி + ய் + (ஆ) + ஏன் " இதில் ‘ ஏன் ' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
B
தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
C
படர்க்கை ஒருமை வினைமுற்று விகுதி
D
தன்மை பன்மை வினைமுற்று விகுதி
Question 122
" தருக >>தா ( தரு) + க " என்பதில் 'க' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
தொழிற்பெயர் விகுதி
B
பெயரெச்ச விகுதி
C
வினையெச்ச விகுதி
D
வியங்கோள் வினைமுற்று விகுதி
Question 123
சரியான புணர்ச்சி விதி வரிசையைத் தேர்ந்தெடு – கருங்கடல்
Question 124
"தடம் + தேர்>>தடந்தேர் " இதில் இடம்பெறும் புணர்ச்சி விதி
A
மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்
B
இனமிகல்
C
இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் க ச த ப மிகும்
D
மவ்வீறு ஒன்றழிந்து உயிரீறு ஒப்பவும் வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்
Question 125
வடமொழியில் வியாசர் எழுதிய மகாபாரதத்தைத் தழுவித் தமிழில் இயற்றியவர் யார்?
A
கம்பர்
B
வால்மீகி
C
வில்லிப்புதூரார்
D
கபிலர்
Question 126
வரபதி ஆட்கொண்டான் என்ற மன்னரால் ஆதரிக்கப்பட்டவர் யார்?
A
கம்பர்
B
வால்மீகி
C
வில்லிப்புதூரார்
D
கபிலர்
Question 127
வில்லிபாரதம் மொத்தம் எத்தனை பருவம் மற்றும் பாடல்களை கொண்டது?
A
7, 3451
B
7,4351
C
10,4351
D
10, 3451
Question 128
வில்லி பாரதம் எவ்வகைப் பாடல்களால் ஆனது?
A
சிந்து
B
வெண்பா
C
ஆசிரியப்பா
D
விருத்தப்பா
Question 129
வில்லிப்புத்தூராரை ஆதரித்த வரபதி ஆட்கொண்டான் ____ என்னுமிடத்தை ஆண்டு வந்தார்.
A
வரகுணம்
B
வரபதி
C
வக்கபாகை
D
வில்லிப்புத்தூர்
Question 130
  • அல்லல் வெவ்வினையால் இன்னம் உற்பவம்உண்
  • டாயினும் ஏழ்எழு பிறப்பும்
  • இல்லைஎன்று இரப்போர்க்கு இல்லை என்று உரையா
  • இதயம்நீ அளித்தருள் என்றான்''
  • என்ற வரிகள் வில்லிபாரதத்தில் எந்த பருவத்தில் இடம் பெற்றுள்ளது ?
A
கண்ண பருவம்
B
கன்ன பருவம்
C
ஆதி பருவம்
D
சௌப்திக பருவம்
Question 131
வில்லிபாரத்தில் அமைந்துள்ள முதல் மற்றும் கடைசி பருவங்கள் முறையே எவை ?
A
ஆதி பருவம் - கன்ன பருவம்
B
ஆதி பருவம் – கண்ண பருவம்
C
ஆதி பருவம் – சௌப்திக பருவம்
D
ஆதி பருவம் - போர் பருவம்
Question 132
தமிழ்ச் சிறுகதைகளை உலகத் தரத்திற்கு உயர்த்தியவர் யார் ?
A
அப்துல் ரகுமான்
B
பாரதியார்
C
பாரதிதாசன்
D
புதுமைப்பித்தன்
Question 133
இங்கிலீஷ்  இலக்கியத்தில் கடைசி கொழுந்து என்று கருதப்படுபவர் யார்?
A
ஜேம்ஸ் ஜாய்ஸ்
B
ஜி.யு.போப்
C
ஜேம்ஸ் ஜான்
D
ஜேம்ஸ் போப்
Question 134
விருததாசலம் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?
A
ஜீவானந்தம்
B
மீரா
C
புதுமைப்பித்தன்
D
ஈரோடு தமிழன்பன்
Question 135
‘சிறுகதை மன்னர் ‘ என்று போற்றப்படுபவர் யார்?
A
ஜீவானந்தம்
B
மீரா
C
புதுமைப்பித்தன்
D
அப்துல் ரகுமான்
Question 136
"காஞ்சனை, சாப விமோசனம் " போன்ற நூல்களை எழுதியவர் யார்?
A
ஜீவானந்தம்
B
மீரா
C
அப்துல் ரகுமான்
D
புதுமைப்பித்தன்
Question 137
கவிஞர் புதுமைப் பித்தன் அவர்கள் கீழ்க்கண்ட எந்தெந்த துறைகளில் இயங்கினார் ?
  • 1.சிறுகதை                   2.  கவிதை           3. கட்டுரை
    1.  நாடகம் புத்தக விமர்சனம்
A
அனைத்தும் சரி
B
1, 3, 5 சரி
C
2, 3, 4 சரி
D
1, 3, 4 சரி
Question 138
காஞ்சனை என்பது எவ்வகையான நூல்?
A
கவிதை தொகுப்பு
B
கட்டுரை தொகுப்பு
C
சிறுகதை தொகுப்பு
D
நாடக தொகுப்பு
Question 139
படித்தல் என்னும் செயலானது கீழ்க்கண்ட எந்த செயல்களை உள்ளடக்கி முழுமைப் பெறுகிறது?
  • 1.கேட்டல்                             2. வரிவடிவத்தைக் காணுதல்
  1.  முறையாக ஒலித்தல் 4. பொருள் உணர்தல்    5. பேசுதல்
A
1, 2, 3
B
2, 3,5
C
2, 3, 4
D
1, 2, 4
Question 140
மக்கள் உணர்வின் இயக்கமாக விளங்கும் மொழியின் இயக்கத்திற்கு ______ உண்டு.
A
இயக்கம்
B
நிறுத்தம்
C
உணர்வு
D
ஆக்கம்
Question 141
“ மரணத்தின் பின் மனிதர்நிலை " என்னும் நூலை இயற்றியவர் யார்?
A
ஜீவானந்தம்
B
புதுமைப்பித்தன்
C
அப்துல் ரகுமான்
D
மறைமலை அடிகள்
Question 142
ஒரு தொடரில் உள்ள பொருள் வேறுபாட்டை உணர்த்துவதற்கு அடிப்படையாக விளங்குவது எது?
A
ஒலி
B
ஒளி
C
நிறுத்தக்குறிகள்
D
எழுதுவது
Question 143
சரியான இடங்களில் நிறுத்தக்குறிகளை இட்டு எழுதுக.
  • " மறைமலையடிகள் மரணத்தின்பின் மனிதர் நிலை என்னும் நூலை இயற்றினார் "
A
மறைமலையடிகள், மரணத்தின்பின் மனிதர் நிலை என்னும் நூலை இயற்றினார்.
B
மறைமலையடிகள் மரணத்தின்பின், ' மனிதர் நிலை’ என்னும் நூலை இயற்றினார்.
C
மறைமலையடிகள் மரணத்தின்பின், ' மனிதர் நிலை’ என்னும் நூலை இயற்றினார்.
D
மறைமலையடிகள் மரணத்தின்பின், மனிதர் நிலை என்னும் நூலை இயற்றினார்.
Question 144
பொருள்களைத் தனித்தனியாகக் குறிப்பிடும் இடங்கள், எச்சச் சொற்றொடர்கள்,  எடுத்துக் காட்டுகள், இணைப்புச் சொற்கள், திருமுகவிளி, இணைமொழிகள் முதலிய இடங்களில் ____ வரும்.
A
காற்புள்ளி
B
அரைப்புள்ளி
C
முக்காற்புள்ளி
D
முற்றுப்புள்ளி
Question 145
சரியான இடங்களில் நிறுத்தக்குறிகளை இட்டு எழுதுக.
  • "இனியன் நன்கு படித்தான் அதனால் தேர்ச்சி பெற்றான்"
A
இனியன் நன்கு படித்தான், அதனால் தேர்ச்சி பெற்றான்.
B
இனியன் நன்கு படித்தான்; அதனால் தேர்ச்சி பெற்றான்
C
இனியன் நன்கு படித்தான். அதனால், தேர்ச்சி பெற்றான்
D
இனியன் நன்கு படித்தான்; அதனால், தேர்ச்சி பெற்றான்.
Question 146
"அளி- அன்பு அருள் குளிர்ச்சி வண்டு இரக்கம் எளிமை" (பொருள்)
A
அளி- அன்பு அருள், குளிர்ச்சி, வண்டு, இரக்கம், எளிமை.
B
அளி- அன்பு அருள் : குளிர்ச்சி : வண்டு : இரக்கம் : எளிமை.
C
அளி- அன்பு; அருள் ; குளிர்ச்சி ; வண்டு ; இரக்கம் ; எளிமை.
D
அளி- "அன்பு, அருள், குளிர்ச்சி, வண்டு, இரக்கம், எளிமை.
Question 147
சிறு தலைப்பு, நூற்பகுதி எண், பெருங் கூட்டுத் தொடர் முதலிய இடங்களில் ___ வருதல் வேண்டும்.
A
காற்புள்ளி
B
அரைப்புள்ளி
C
முக்காற்புள்ளி
D
முற்றுப்புள்ளி
Question 148
  • சரியான இடங்களில் நிறுத்தக்குறிகளை இட்டு எழுதுக.
  • “ பத்துப்பாட்டு 2 – 246 "
A
பத்துப்பாட்டு 2 – 246.
B
பத்துப்பாட்டு 2 : 246.
C
பத்துப்பாட்டு: 2 : 246
D
பத்துப்பாட்டு 2 ; 246
Question 149
சரியான இடங்களில் நிறுத்தக்குறிகளை இட்டு எழுதுக.
  • "வேலன் கடைக்குச் சென்றான் பொருள்களை வாங்கினான் வீடு திரும்பினான்"
A
வேலன் கடைக்குச் சென்றான், பொருள்களை வாங்கினான், வீடு திரும்பினான்.
B
வேலன் கடைக்குச் சென்றான்: பொருள்களை வாங்கினான் : வீடு திரும்பினான்.
C
வேலன் கடைக்குச் சென்றான்; பொருள்களை வாங்கினான்; வீடு திரும்பினான்.
D
வேலன் கடைக்குச் சென்றான், பொருள்களை வாங்கினான் ; வீடு திரும்பினான்.
Question 150
தலைப்பின் இறுதி, தொடரின் இறுதி, முகவரி இறுதி,சொற்குறுக்கம், நாள் முதலிய இடங்களில் ______ வருதல் வேண்டும்.
A
காற்புள்ளி
B
அரைப்புள்ளி
C
முக்காற்புள்ளி
D
முற்றுப்புள்ளி
Question 151
ஒரு வினாத் தொடர், முற்றுத் தொடராகவும் நேர் கூற்றுத் தொடராகவும், இருப்பின், இறுதியில் ____ வருதல் வேண்டும்.
A
கேள்விக்குறி
B
அரைப்புள்ளி
C
முக்காற்புள்ளி
D
முற்றுப்புள்ளி
Question 152
வியப்பிடைச் சொல்லுக்குப் பின்பும் நேர்கூற்று வியப்புத் தொடர் இறுதியில் அடுக்குச் சொற்களின் பின்னும்______ வருதல் வேண்டும்.
A
காற்புள்ளி
B
அரைப்புள்ளி
C
முக்காற்புள்ளி
D
வியப்புக் குறி
Question 153
பல்வேறு வகையான நிறுத்தக்குறிகளை நமக்கு அறிமுகப்படுத்தி எவ்வெவ்விடங்களில் அவற்றை பயன்படுத்த வேண்டுமென விளக்கியவர்கள் யார்?
A
சீனர்கள்
B
ரோமானியர்கள்
C
ஐரோப்பியர்கள்
D
யவனர்கள்
Question 154
பழங்காலத்தில் பனை ஓலைகளிலோ கல்வெட்டுகளிலோ ஒரு பாடல் அல்லது உரைநடைப் பகுதி எழுதி முடித்ததும் அதனை எழுதி முடித்தமைக்கு அடையாளமாக அதன் இறுதியில் எவற்றை பயன்படுத்தினர் ?
  1. சுழியம் இடுதல்
  2. . இணைக் கோடுகள் இடுதல்
  3. கோடு இடுதல்
A
அனைத்தும் சரி
B
2, 3 சரி
C
1, 3 சரி
D
1, 2 சரி
Question 155
அண்மையில் இருப்பாரை அழைப்பதற்கும், தொலைவில் இருப்பாரை அழைப்பதற்கும் ____ பயன்படுத்த வேண்டும்.
A
காற்புள்ளி
B
அரைப்புள்ளி
C
முக்காற்புள்ளி
D
விளிக் குறி
Question 156
ஒரு எழுத்தேனும் சொல்லேனும் சொற்றொடரேனும் தன்னையே தன்னையே குறிக்கும்  இடம், கட்டுரைப் பெயர், நூற் பெயர் குறிக்கும் இடம், பிறர் கூற்றுப் பகுதிகள் முதலான இடங்களில் ______ குறி வருதல் வேண்டும்.
A
ஒற்றை மேற்கோள் குறி
B
இரட்டை மேற்கோள் குறி
C
முக்காற்புள்ளி
D
வியப்புக் குறி
Question 157
' செவ்வாழை ‘ என்னும் சிறுகதையை எழுதியவர் யார்?
A
கண்ணதாசன்
B
மீரா
C
அண்ணா
D
புதுமைப்பித்தன்
Question 158
நேர்க் கூற்றுகளிலும்,  மேற்கோள்களிலும் ____ குறி வருதல் வேண்டும்.
A
ஒற்றை மேற்கோள் குறி
B
இரட்டை மேற்கோள் குறி
C
முக்காற்புள்ளி
D
வியப்புக் குறி
Question 159
சரியான நிறுத்தக்குறியுடைய சொற்றொடரைக் கண்டுபிடிக்க.
A
மலரவன் தன் பாட்டியிடம் நான் படிக்கிறேன் என்றான்.
B
மலரவன், தன் பாட்டியிடம், "நான் படிக்கிறேன் " என்றான்.
C
மலரவன் தன் பாட்டியிடம், " நான் படிக்கிறேன்" என்றான்.
D
மலரவன் தன் பாட்டியிடம், நான் படிக்கிறேன்! என்றான்.
Question 160
  • "கற்றேன் என்பாய் கற்றாயா? -வெறும்
  • காகிதம் தின்பது கல்வியில்லை "
  • இவ்வடிகளில் பயின்று வருவது
A
அடி எதுகை, அடி மோனை
B
சீர்மோனை, அடி எதுகை
C
அடி மோனை, அடி இயைபு
D
சீர்மோனை, அடி மோனை
Question 161
கொள் – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
A
கொள்க
B
கொள்ளுதல்
C
கொள்ளும்
D
கொள்பவன்
Question 162
வில்லிபாரதத்தில் "சூரியனின் தோன்றல் “ என்று குறிப்பிடப்படுபவர் யார்?
A
கண்ணன்
B
கன்னன்
C
அருச்சுணன்
D
பிரமன்
Question 163
" நின் புண்ணியம் அனைத்தும் உதவுக" என்று கூறியது யார்?
A
கண்ணன்
B
கன்னன்
C
அருச்சுணன்
D
பிரமன்
Question 164
‘ தொலைந்து போனவர்கள் ' என்ற பாடலை பாடியவர் யார்?
A
முண்டாசுக் கவி
B
கனக சுப்புரத்தினம்
C
கவிக்கோ
D
சிவராமலிங்கம்
Question 165
"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று பாடியவர் யார்?
A
கம்பர்
B
கபிலர்
C
வள்ளலார்
D
சபாபதி
Question 166
' திருவருட்பா ‘ என்ற நூலை எழுதியவர் யார்?
A
கம்பர்
B
கபிலர்
C
வள்ளலார்
D
சபாபதி
Question 167
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது ?
A
வள்ளலார் அன்பு, அமைதி வழியிலான சமூகத்தை உருவாக்க விரும்பினார்.
B
அவர் கடவுள் ஒன்றே என்றார்
C
சாதி, மத, இன, பால் வேறுபாடுகள் கலந்த அருட்பெருஞ்சோதி ஒன்றே இறைவன் என்பதை வலியுறுத்தினார்.
D
இவர் பதினேழு வயதிலேயே கவிபாடும் வல்லமை பெற்றார்.
Question 167 Explanation: 
(Note: இவர் ஏழு வயதிலேயே கவிபாடும் வல்லமை பெற்றார்.)
Question 168
கீழ்க்கண்டவற்றுள் வள்ளலார் இயற்றிய நூல்கள் யாவை?
  • 1.தெய்வமணி மாலை                    2. கந்தர் சரவணப் பத்து
  1. மநு முறை கண்ட வாசகம் 4. சின்மய தீபிகை
A
அனைத்தும்
B
1, 2, 4
C
1, 2, 3
D
1, 3, 4
Question 169
கீழ்க்கண்டவற்றுள் வள்ளலார் இயற்றிய உரைநடைநூல் எது ?
  • 1.தெய்வமணி மாலை                    2. கந்தர் சரவணப் பத்து
  1. மநு முறை கண்ட வாசகம் 4. சின்மய தீபிகை
A
அனைத்தும்
B
1, 2
C
3 மட்டும்
D
4 மட்டும்
Question 170
கீழ்க்கண்டவற்றுள் வள்ளலார் பதிப்பித்த நூல்கள் யாவை?
  • 1.ஒழிவில் ஒடுக்கம்                       2. தொண்டை மண்டல சதகம்
  1. மநு முறை கண்ட வாசகம் 4. சின்மய தீபிகை
A
அனைத்தும்
B
1, 2, 4
C
1, 2, 3
D
1, 3, 4
Question 171
வள்ளலார் அவர்கள் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு பாராட்ட____ தோற்றுவித்தார்.
A
ஞான சபை
B
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
C
சத்திய தருமச் சாலை
D
மேற்கண்ட எதுவுமில்லை
Question 172
கீழ்க்கண்டவற்றுள் வள்ளலார் தோற்றுவித்தவை எவை?
  • 1.ஞான சபை                         2. சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
  1. சத்திய தருமச் சாலை
A
அனைத்தும்
B
1, 2
C
3 மட்டும்
D
1 மட்டும்
Question 173
கீழ்க்கண்டவற்றுள் வள்ளலாரின் கொள்கைகளில் அல்லாதது எது?
A
சிறு தெய்வ வழிபாடு கூடாது.
B
சாதி, சமயம் முதலிய வேறுபாடுகள் கூடா
C
புராணங்களும் சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்கும்.
D
புலால் உண்ணலாகாது.
Question 174
' விரும்பினார் '- இவ்வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றுக.
A
விரும்பு
B
விரும்புதல்
C
விரும்பியவர்
D
விரும்பிய
Question 175
  • "உலகவழக் கழிந்தொழிந்து சிதையா உன்
  • சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்ததுமே "
  • என்று கூறியவர் யார்?
A
கம்பர்
B
வள்ளலார்
C
கபிலர்
D
பேராசிரியர் சுந்தரனார்
Question 176
சரியான இணையை தேர்ந்தெடு.
  1. இலக்கியம் படித்தலின் அறிமுகம் – ஹட்சன்
  2. மொழிக் கல்வி – விட்னி
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
அனைத்தும் தவறு
Question 177
  • “ ஒன்றிலிருந் தொன்றென்னும் உலகநிலை அறிந்தேன்
  • உணவுகளின் பிண்டந்தான் உடலென்ப தறிந்தேன்"
  • என்று பாடியவர் யார்?
A
பாரதி
B
பாரதிதாசன்
C
சுரதா
D
திருமூலர்
Question 178
பொருத்துக.
  • Soul                 i) ஆன்மா
  • Illusion             ii) மாயை
  • Wisdom            iii) அறிவு
  • Tragedy            iv) துன்பம்
A
i iii iv ii
B
i ii iii iv
C
ii iii iv i
D
iv iii ii i
Question 179
சரியான இணையைத் தேர்ந்தெடு
  1.  Honour – மாண்பு
  2. Siddha Medicine – சித்த மருத்துவம்
  3. Punctuation Marks – நிறுத்தக் குறிகள்
A
அனைத்தும் சரி
B
1, 2 மட்டும் சரி
C
2, 3மட்டும் சரி
D
1, 3 மட்டும் சரி
Question 180
தவறான இணையைத் தேர்ந்தெடு.
A
என் வாழ்க்கை என் கையில் – ஞாநி
B
மொழிப்பெயர்ப்பு – அய்யாசாமி
C
மனித வாழ்வை மாற்றியமைத்த கண்டுபிடிப்பாளர்கள் – அய்யாசாமி
D
காவியம் - பிரமிள்
Question 180 Explanation: 
(Note: மனித வாழ்வை மாற்றியமைத்த கண்டுபிடிப்பாளர்கள் – ஆர்.கே.வி கோபாலகிருஷ்ணன்)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 180 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!