GeographyOnline Test
11th Geography Notes Part 5 in Tamil – Online Test – New Book
வளிமண்டலம் 11th Geography Questions in Tamil
Congratulations - you have completed வளிமண்டலம் 11th Geography Questions in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
வளிமண்டல கூறுகளில் ஏற்படும் குறுகிய கால மாற்றங்களை எவ்வாறு அழைக்கிறோம்?
குளிர்காலம் | |
வானிலை | |
காலநிலை | |
தட்ப வெட்பம் |
Question 1 Explanation:
வெப்பநிலை, அழுத்தம், காற்று, ஈரப்பதம், மேகம் மற்றும் மழைப்பொழிவு ஆகியவை வளிமண்டல கூறுகள் ஆகும். வானிலை நிலையற்றது. வானிலை இடத்திற்கு இடம், நாளுக்கு நாள்,நேரத்திற்கு நேரம் பெரிதும் மாறுபடுகிறது
Question 2 |
ஒரு பகுதியின் நீண்ட காலத்திற்கான வானிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குளிர்காலம் | |
வானிலை | |
காலநிலை | |
தட்ப வெட்பம் |
Question 2 Explanation:
காலநிலை நிரந்தரமானது. இது ஒரு இடத்தில் நிலையான சூழலை குறிக்கிறது.
Question 3 |
காலநிலை சராசரியை கணக்கிட எத்தனை ஆண்டுகளுக்கான வானிலை கூறுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்?
10 | |
15 | |
25 | |
30 |
Question 3 Explanation:
உலக வானிலையியல் அமைப்பு காலநிலை சராசரியை கணக்கிட தொடர்ச்சியாக 30 ஆண்டுகளுக்கான வானிலை கூறுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.
Question 4 |
காலநிலை என்ற சொல் கீழ்க்கண்ட எந்த மொழி சொல்லிலிருந்து பெறப்பட்டது?
கிரேக்கம் | |
லத்தீன் | |
ஆங்கிலம் | |
பிரான்ஸ் |
Question 4 Explanation:
காலநிலை என்ற சொல் கிளைமா என்ற பண்டைய கிரேக்க சொல்லில் இருந்து வந்தது. கிளைமா என்றால் சரிவு அல்லது சாய்வு என்று பொருள்படும்.
Question 5 |
புவியானது கிளைமேட்டா என்று அழைக்கப்படும் எத்தனை அட்சரேகை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
3 | |
5 | |
7 | |
9 |
Question 5 Explanation:
சராசரி வானிலையை குறிக்கும் கிளைமேட்டா என்ற சொல் நவீன ஐரோப்பிய மொழியில் கிளைம் அல்லது கிளைமேட் என வழக்கத்திற்கு வந்தது.
Question 6 |
வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களில் நைட்ரஜன் எத்தனை சதவீதம் உள்ளது?
70% | |
72% | |
76% | |
78% |
Question 6 Explanation:
வளிமண்டலம் 21% ஆக்ஸிஜன், 78% நைட்ரஜன் மற்றும் மற்ற வாயுக்களை(ஆர்கான், கார்பன் டை ஆக்சைடு, நியான் மற்றும் பிற வாயுக்கள் ) ஒரு சதவீதமும் கொண்டுள்ளது.
Question 7 |
கீழ்க்கண்டவற்றுள் வளிமண்டலம் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
- 1) புவியைச் சுற்றி வாயுக்கள் மற்றும் மிதக்கும் துகள்களால் ஆன ஒரு போர்வை போன்று சூழ்ந்துள்ள அமைப்பே வளிமண்டலம் என்று அழைக்கப்படுகிறது.
- 2) இது புவியின் மேற்பரப்பிலிருந்து பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு வரை பரவி காணப்படுகிறது.
- 3) இதில் நீராவி, தூசிப்படலம் மற்றும் மிகச் சிறிய துகள்கள் ஆகியவை காணப்படுகிறது.
1 & 3 | |
2 & 3 | |
1 & 2 | |
1, 2 & 3 |
Question 7 Explanation:
வளிமண்டலத்தில் காணப்படும் நீராவி, தூசிப்படலம் மற்றும் மிகச் சிறிய துகள்கள் வெப்பசக்தியை உட்கிரகித்து வெளியிடுவதால் வானிலை நிகழ்வுகள் ஏற்பட ஆதாரமாக அமைகின்றன.
Question 8 |
கீழ்க்கண்ட எந்த காரணியின் அடிப்படையில் வளிமண்டலமானது 5 அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
வெப்பநிலை | |
அடர்த்தி | |
அழுத்தம் | |
பரவும் திசை |
Question 8 Explanation:
வளிமண்டலமானது வெப்ப நிலையின் அடிப்படையில் அடியடுக்கு, படையடுக்கு, இடையடுக்கு, அயனியடுக்கு மற்றும் வெளி அடுக்கு என பிரிக்கப்பட்டுள்ளது.
Question 9 |
புவியின் மேற்பரப்புக்கு மிக அருகில் அமைந்துள்ள அடுக்கு எது?
படையடுக்கு | |
இடையடுக்கு | |
அடியடுக்கு | |
வெளியடுக்கு |
Question 10 |
நிலநடுக்கோட்டுப் பகுதியில் அடியடுக்கின் உயரம் எவ்வளவு?
13 கி.மீ | |
15 கி.மீ | |
18 கி.மீ | |
21 கி.மீ |
Question 10 Explanation:
அடியடுக்கானது தோராயமாக துருவப்பகுதியில் எட்டு கிலோமீட்டர் உயரம் வரையிலும் நிலநடுக்கோட்டுப் பகுதியில் 18 கிலோமீட்டர் உயரம் வரையிலும் பரவி காணப்படுகிறது.
Question 11 |
மழை தரும் மேகங்களை கொண்டுள்ள அடுக்கு எது?
படையடுக்கு | |
அடியடுக்கு | |
அயனியடுக்கு | |
இடையடுக்கு |
Question 12 |
கீழ்க்கண்டவற்றுள் அடியடுக்கு பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
- 1) இதன் உயரம் கோடைக்காலத்தில் குறைந்தும் குளிர்காலத்தில் அதிகரித்தும் பருவ காலத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது.
- 2) இந்த அடுக்கில் சூரிய கதிர்கள் நேரடியாக புவியில் விழுந்து பிரதிபலிக்கின்றன.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 12 Explanation:
இதன் உயரம் கோடைக்காலத்தில் அதிகரித்தும் குளிர்காலத்தில் குறைந்தும் பருவ காலத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது.
Question 13 |
அடி அடுக்கில் வெப்பநிலையானது எவ்வளவு உயரத்திற்கு ஒரு டிகிரி செல்சியஸ் என்ற விகிதத்தில் குறைகிறது?
145 மீட்டர் | |
165 மீட்டர் | |
175 மீட்டர் | |
195 மீட்டர் |
Question 13 Explanation:
ஒவ்வொரு 165 மீட்டருக்கு 1° செல்சியஸ் அல்லது 1000 மீட்டருக்கு 6.5° செல்சியஸ் என்ற விகித அளவில் வெப்பநிலை குறைகிறது.
Question 14 |
அடி அடுக்கில் வெப்பநிலையானது அதிகரிக்கும் உயரத்திற்கு ஏற்ப குறைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெப்ப குறைவு விகிதம் | |
வெப்ப விகிதம் | |
அடி வளிமுனை | |
எதிர் வெப்ப குறைவு விகிதம் |
Question 14 Explanation:
இந்த அடுக்கில் 70 முதல் 80 சதவிகிதம் வாயுக்கள் இருப்பதால் அடர்த்தியான அடுக்காக உள்ளது.
Question 15 |
அடி அடிக்கின் வெளி எல்லையான அடி வளிமுனையின் தடிமன் எவ்வளவு?
0.7 மீட்டர் | |
1.0 மீட்டர் | |
1.3 மீட்டர் | |
1.5 மீட்டர் |
Question 15 Explanation:
1.5 மீட்டர் தடிமன் உடைய அடி அடுக்கின் எல்லை அடிவளிமுனை என அழைக்கப்படுகிறது.
Question 16 |
படையடுக்கானது புவியின் மேற்பரப்பில் இருந்து எவ்வளவு உயரம் வரை அமைந்துள்ளது?
50 கி.மீ | |
65 கி.மீ | |
73 கி.மீ | |
79 கி.மீ |
Question 16 Explanation:
வளிமண்டல அடுக்கில் இரண்டாவதாக அமைந்துள்ள அடுக்கு படையடுக்கு ஆகும்.
Question 17 |
படை அடுக்கில் எத்தனை டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையானது சீராக உயர்கிறது?
-3° செல்சியஸ் | |
-4° செல்சியஸ் | |
-5° செல்சியஸ் | |
-6° செல்சியஸ் |
Question 17 Explanation:
அடி வளி முனையில் 20 கிலோ மீட்டர் உயரம் வரை நிலையாக உள்ள வெப்பநிலையானது பின்னர் படைவளி முனையில் -4° செல்சியஸ் வரை தொடர்ந்து சீராக உயர்கிறது.
Question 18 |
ஓசோன் அடுக்கு என்று அழைக்கப்படுவது எது?
அயனி அடுக்கு | |
அடி அடுக்கு | |
படை அடுக்கு | |
வெளி அடுக்கு |
Question 18 Explanation:
இந்த அடுக்கின் கீழ் பகுதியில் ஓசோன் வாயு மிகவும் செறிவாக உள்ளதால் இதனை ஓசோன் அடுக்கு என அழைக்கிறோம். ஓசோன் அடுக்கானது புவியில் வாழும் உயிரினங்களை பாதுகாக்கிறது.
Question 19 |
ஓசோன் அடுக்கு சூரியனிடமிருந்து வரும் எந்த கதிர்களை வளிமண்டலத்தில் நுழைவதை தடுக்கிறது?
காமா கதிர்கள் | |
காஸ்மிக் கதிர்கள் | |
அகச்சிவப்புக் கதிர்கள் | |
புற ஊதாக் கதிர்கள் |
Question 19 Explanation:
இக்கதிர்கள் மிகவும் ஆபத்தானவை. இவை தோல் புற்றுநோய் மற்றும் பூமியில் வாழும் உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
Question 20 |
புவியின் மேற்பரப்பிலிருந்து இடையடுக்கு எவ்வளவு உயரத்தில் அமைந்துள்ளது?
50 கி.மீ | |
85 கி.மீ | |
102 கி.மீ | |
127 கி.மீ |
Question 20 Explanation:
வளிமண்டலத்தில் மூன்றாவதாக அமைந்துள்ளது இடை அடுக்கு. இங்கு ஓசோன் வாயு இல்லாததால் அதிகரிக்கும் உயரத்திற்கு ஏற்ப வெப்பநிலை குறைகிறது.
Question 21 |
இடைவளி முனையில் வெப்பநிலை எவ்வளவு?
-25° செல்சியஸ் | |
-47° செல்சியஸ் | |
-78° செல்சியஸ் | |
90° செல்சியஸ் |
Question 21 Explanation:
இடையடுக்கு வளி மண்டலத்தின் மிக குளிரான அடுக்காகும். இடை அடுக்கின் மேல் எல்லையை இடை வளிமுனை என அழைக்கிறோம்.
Question 22 |
ஒளிரும் மேகங்கள் உருவாகும் அடுக்கு எது?
இடையடுக்கு | |
படையடுக்கு | |
வெளியடுக்கு | |
அயனிஅடுக்கு |
Question 22 Explanation:
இங்கு காஸ்மிக் துகள்கள் இருப்பதால் ஒளிரும் மேகங்கள் உருவாகின்றன. விண்வெளியிலிருந்து வரும் விண்கற்கள் இந்த அடுக்கில் விழுந்து காற்றுடன் உராய்வதால் வெப்பமடைந்து எரிந்து விடுகின்றன.
Question 23 |
அயனியடுக்கு எவ்வளவு உயரம் வரை காணப்படுகிறது?
300 கி.மீ | |
300 கி.மீ | |
400 கி.மீ | |
450 கி.மீ |
Question 23 Explanation:
வளி மண்டலத்தில் அமைந்துள்ள நான்காவது அடுக்கு அயனியடுக்கு ஆகும்.
Question 24 |
அயனியடுக்கில் எவ்வளவு வரை வெப்பம் அதிகரிக்கும்?
600° செல்சியஸ் | |
1000° செல்சியஸ் | |
1200° செல்சியஸ் | |
1500° செல்சியஸ் |
Question 24 Explanation:
குறைந்த அலைநீளம் மற்றும் அதிக ஆற்றலுடைய சூரிய கதிர் வீச்சுகள் ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் வாயுக்ளின் அயனிகளால் உட்கிரகிக்கப்படுவதால் இந்த அடுக்கில் வெப்ப நிலை வேகமாக அதிகரிக்கிறது.
Question 25 |
மின்னேற்றம் பெற்ற துகள்கள் காணப்படும் வெப்பம் அடுக்கின் கீழ் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
படையடுக்கு | |
வெளியடுக்கு | |
அயனியடுக்கு | |
அடியடுக்கு |
Question 25 Explanation:
இந்த மின்னேற்றம் பெற்ற துகள்கள் உயர் அட்சங்களில் துருவ மின் ஒளிகளை உருவாக்குகின்றன.
Question 26 |
கீழ்க்கண்டவற்றுள் அயனி அடுக்கு பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
- 1) வெப்ப ஆற்றல் ஒலி ஆற்றலாக மாற்றப்படும் போது சில வாயு மூலக்கூறுகள் எலக்ட்ரானை பெறுவதாலோ அல்லது இழப்பதாலோ மின்னேற்றம் பெற்ற துகள்களாக மாறுவதை அயனிகள் என்கிறோம்.
- 2) நீண்ட தூர கம்பியில்லா செயற்கைக்கோள் தொலைத்தொடர்புக்கு வழிவகை செய்கிறது.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 26 Explanation:
ஒளி ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படும் போது சில வாயு மூலக்கூறுகள் எலக்ட்ரானை பெறுவதாலோ அல்லது இழப்பதாலோ மின்னேற்றம் பெற்ற துகள்களாக மாறுவதை அயனிகள் என்கிறோம்.
Question 27 |
கீழ்கண்டவர்களுள் அயனி அடுக்கை கண்டுபிடித்தவர்கள் யார்?
ஹென்னலி மற்றும் ஹேவிசைடு | |
ஜேம்ஸ் ஹட்டன் மற்றும் ஹேவிசைடு | |
ஹென்னலி மற்றும் ஜேம்ஸ் ஹட்டன் | |
வில்லியம் ஸ்மித் மற்றும் ஹென்னலி |
Question 28 |
வளிமண்டலத்தின் வெளி அடுக்கு எவ்வளவு தூரம் வரை பரவி காணப்படுகிறது?
200 – 1000 கி.மீ | |
250 – 1300 கி.மீ | |
300 – 1500 கி.மீ | |
400 – 1600 கி.மீ |
Question 29 |
வெளியே அடுக்கில் உள்ள முக்கிய அணுக்கள் யாவை?
- 1) ஆக்சிஜன் 2) ஹைட்ரஜன் 3) நைட்ரஜன் 4) கார்பன்
1 & 2 | |
2 & 3 | |
1 & 3 | |
3 & 4 |
Question 29 Explanation:
இந்த அணுக்கள் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் பல நூறு கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் பயணம் செய்கின்றன. இதனால் வெளி அடுக்கு வாயுக்களைப் போல் செயல்படுவதில்லை.
Question 30 |
வெளி அடுக்கில் எவ்வளவு அளவு வரை வெப்பநிலை உயர்கிறது?
165° செல்சியஸ் | |
183° செல்சியஸ் | |
198° செல்சியஸ் | |
219° செல்சியஸ் |
Question 30 Explanation:
இவ்வடுக்கில் ஈர்ப்பு விசை குறைவாக உள்ளது. இவ்வடுக்கு படிப்படியாக விண்வெளியுடன் கலக்கிறது.
Question 31 |
ஓசோன் எத்தனை ஆக்சிஜன் அணுக்களால் ஆனது?
1 | |
2 | |
3 | |
4 |
Question 31 Explanation:
ஓசோன் என்பது ஆக்சிஜனின் ஒரு வடிவம் ஆகும். மூன்று ஆக்சிஜன் அணுக்கள் இணைந்து ஓசோன் உருவாகிறது
Question 32 |
ஓசோன் சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் எந்த கதிர்வீச்சை உட்கிரகித்து வடிகட்டுகிறது?
A | |
B | |
C | |
D |
Question 32 Explanation:
ஓசோன் அடுக்கானது புவியில் வாழும் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கிறது. எனினும் புவி பரப்பிற்கு அருகில் ஓசோன் வெப்பமடைந்து பெருகும் போது ஆஸ்துமா மற்றும் சுவாச நோய்கள் போன்ற உடல்நலக் குறைவை ஏற்படுத்துகிறது.
Question 33 |
வளிமண்டல படையெடுப்பில் ஓசோன் செறிவானது தொடர்ச்சியாக குறைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஓசோன் கடத்தல் | |
ஓசோன் சிதைவு | |
ஓசோன் மாற்றம் | |
ஓசோன் மறைதல் |
Question 33 Explanation:
முன்னர் ஓசோன் சிதைவு தூசுப்படலத்தை தெளிப்பான்கள் மற்றும் குளிர்சாதன பெட்டிகள் வெளியிடும் குளோரோபுளோரோ கார்பன் மற்றும் ஹாலோன் வாயுக்கள் வளிமண்டலத்தில் வேதிவினை புரிந்து ஓசோன் மூலக்கூறுகளை உடைத்து அதன் செறிவை குறைத்தன.
Question 34 |
சூப்பர்சோனிக் விமானம் வெளியிடும் வாயு எது?
கார்பன் டை ஆக்சைடு | |
ஹைட்ரஜன் | |
சல்பர் டை ஆக்சைடு | |
நைட்ரஜன் |
Question 34 Explanation:
சூப்பர்சோனிக் விமானம் வெளியிடும் நைட்ரஜன் வாயுக்கள் ஓசோன் மூலக்கூறுகளை உடைக்கின்றன. படை அடுக்கில் உள்ள ஓசோன் அடுக்கு முழுவதும் ஓசோன் பாதிப்புக்கு உட்படுத்தப்படுகிறது.ஏனென்றால் வளிமண்டல காற்று நகர்வு மூலம் நீண்ட தூரத்திற்கு கடத்தப்படுகின்றன.
Question 35 |
ஓசோன் துளை எங்கு காணப்படுகிறது?
அண்டார்டிகா | |
அமெரிக்கா | |
ஆர்டிக் | |
நியூசிலாந்து |
Question 35 Explanation:
அண்டார்டிகாவின் ஓசோன் அடுக்கு கடுமையாக பாதிக்கப்படுவதற்கு காரணம் இது சிறப்பு வளிமண்டல நிலை மற்றும் ரசாயன நிலையை கொண்டுள்ளது. இது உலகில் வேறு எங்கும் இல்லை.
Question 36 |
அண்டார்டிகாவின் துருவ படையடுக்கு மேகங்கள் துருவ படையடுக்குக் காற்றுடன் இணைந்து எதிர்வினை புரிந்து உருவாக்கும் வாயுக்கள் எவை?
நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் | |
ஃபுளோரின் மற்றும் குளோரின் | |
குளோரின் மற்றும் புரோமின் | |
ஹீலியம் மற்றும் ஃபுளோரின் |
Question 36 Explanation:
மிகக்குறைந்த குளிர்கால வெப்பநிலையால் அண்டார்க்டிக் படையெடுக்கு பாதிக்கப்பட்டு துருவ படையடுக்கு மேகங்களை உருவாக்குகிறது.
Question 37 |
அண்டார்டிகாவில் ஓசோன் துளை எந்த பருவக்z காலத்தில் ஏற்படுகிறது?
இலையுதிர் காலம் | |
வசந்த காலம் | |
கோடை காலம் | |
குளிர்காலம் |
Question 37 Explanation:
துருவ படையடுக்கில் உருவாகும் குளோரின் மற்றும் புரோமின் வாயுக்கள் வசந்த காலத்தில் அண்டார்டிகாவில் ஓசோன் துளையை உருவாக்குகிறது.
Question 38 |
அண்டார்டிகாவில் பதிவான ஓசோன் துளையின் அதிக பட்ச அளவு எவ்வளவு?
25.2 மில்லியன் சதுர கி.மீட்டர் | |
26.4 மில்லியன் சதுர கி.மீட்டர் | |
27.6 மில்லியன் சதுர கி.மீட்டர் | |
28.2 மில்லியன் சதுர கி.மீட்டர் |
Question 38 Explanation:
சமீபத்தில் எடுத்த புவியின் செயற்கை கோள் படத்தில் வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் அடுக்கு மெல்லியதாக காணப்பட்டது. அக்டோபர் 2,2015 இல் 28.2 மில்லியன் சதுர கி.மீட்டர் அளவு பதிவானது.
Question 39 |
அண்டார்டிகாவிலுள்ள ஓசோன் துளை கீழ்க்கண்ட எந்த கண்டத்தை விட பெரியதாக உள்ளது?
வட அமெரிக்கா | |
தென்னமெரிக்கா | |
ஆசியா | |
ஐரோப்பா |
Question 39 Explanation:
இந்த ஓசோன் துளையானது அண்டார்டிகா முழுவதும் புற ஊதாக் கதிர்களை அனுமதிப்பதால் உலக வெப்பமயமாதல், தோல் புற்றுநோய், கண்புரை மற்றும் பார்வை இழப்பு போன்ற பாதிப்புகளை உண்டாக்குகிறது.
Question 40 |
கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
- 1) ஓசோன் சிதைவு மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகளை பாதிக்கிறது.
- 2) அதிக அளவிலான புறஊதாக்கதிர்கள் தோலின் கரும்பு புற்றுநோயை ஏற்படுத்துகிறது.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 40 Explanation:
இந்த விளைவுகள், குறிப்பாக அதிக அளவிலான புற ஊதாக் கதிர்கள் புவியை அடைவதால் ஏற்படுகிறது.
Question 41 |
கீழ்க்கண்டவற்றுள் ஓசோனின் அளவீடு எது?
பார்செக் | |
ஸ்நுபி கேப் | |
கேண்டிலா | |
டாப்ஸன் |
Question 42 |
வெப்பநிலையின் அலகு எது?
செல்சியஸ் | |
ஜுல் | |
வாட் | |
ஆம்பியர் |
Question 43 |
சூரியனிடமிருந்து வரும் கதிர்கள் எவ்வகையான அலை நீளம் கொண்டவை?
அதிகமான | |
மிதமான | |
குறைந்த | |
வேகமாக |
Question 43 Explanation:
புவியின் மேற்பரப்பு சூரியனிடமிருந்து வரும் குறைந்த அலைநீளம் உடைய கதிர்களால் வெப்பப்படுத்தப்படுகிறது.
Question 44 |
புவி உட்கவரும் வெப்பத்தை எவ்வாறு அழைக்கிறோம்?
புவி கதிர்வீசல் | |
சூரிய கதிர்வீசல் | |
உள்வரும் சூரியகதிர் | |
b & c |
Question 44 Explanation:
வளிமண்டலம் வெப்பமடைதல் ஒரு மறைமுக செயல்முறையாகும். புவி கதிர்வீசல், வெப்பக் கடத்தல், வெப்ப சலனம் மற்றும் வெப்ப கிடை பரவல் ஆகியன இச்செயல்முறைகள் ஆகும்.
Question 45 |
புவியின் மேற்பரப்பால் உட்கிரகிக்கப்பட்டு பிரதிபலிக்கப்படும் வெப்பத்தை எவ்வாறு அழைக்கிறோம்?
சூரிய கதிர்வீசல் | |
புவி கதிர்வீசல் | |
வெப்ப சலனம் | |
வெப்பக் கடத்தல் |
Question 45 Explanation:
புவி கதிர்வீசல் நீண்ட அலைநீள தன்மையுடையதாக இருப்பதால் வளிமண்டலத்திற்கு அதிக வெப்பத்தை தருகிறது.
Question 46 |
கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
- 1) புவியின் மேற்பரப்பிலிருந்து வெப்ப ஆற்றல் ஆனது புவியின் மேற்பரப்புடன் நேரடியாகத் தொடர்புடைய வளி மண்டலத்தின் கீழ்ப்பகுதிக்கு மாற்றப்படும் செயல்முறையை வெப்பக்கடத்தல் என்கிறோம்.
- 2) காற்று மூலக்கூறுகளால் வெப்பமானது செங்குத்து மற்றும் கிடைமட்ட திசையில் நகருவதை முறையே வெப்ப சலனம் மற்றும் வெப்ப கிடைப்பரவல் என அழைக்கிறோம்.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 47 |
புவிக்கு வந்தடையும் வெப்ப ஆற்றலும் மீண்டும் விண்வெளிக்கு திரும்பிச் செல்லும் வெப்ப ஆற்றலும் சமமாக இருப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெப்ப சலனம் | |
வெப்பச் சமநிலை | |
வெப்ப பரவல் | |
வெப்பநிலை பரவல் |
Question 48 |
வளிமண்டலத்தையோ புவியையோ வெப்பமடையச் செய்யாத விண்வெளிக்கு திருப்பி அனுப்பப்படும் கதிர் வீசலின் சதவீதம் எவ்வளவு?
18% | |
25% | |
35% | |
42% |
Question 48 Explanation:
வளிமண்டலத்தை அடையும் 100% சூரிய கதிர் வீசலில் மேகங்கள், நீர்நிலைகள், பனிப்படிகங்கள் போன்றவை பிரதிபலிப்பதன் மூலம் 35% விண்வெளிக்கு திருப்பி அனுப்பப்படுகிறது.
Question 49 |
புவி உட்கிரகிக்கும் சூரிய கதிர் வீசலின் சதவீதம் எவ்வளவு?
28% | |
35% | |
47% | |
51% |
Question 49 Explanation:
விண்வெளிக்கு திருப்பி அனுப்பப்படும் 35% தவிர மீதமுள்ள 65% அலகில் 14% வளிமண்டலமும் 51% ( 34% நேரடி சூரிய கதிர்வீச்சு, 17% கதிர்வீச்சு சிதறல் ) புவியின் மேற்பரப்பும் உட்கிரகித்துக் கொள்கின்றன. புவி உட்கிரகிக்கும் 51% சூரிய கதிர்வீசலானது புவிக்கதிர்வீசலாக மீண்டும் விண்வெளிக்கு நேரடியாக திருப்பி அனுப்பப்படுகிறது.
Question 50 |
கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
- 1) பெறப்பட்ட வெப்பம் - 14%
- 2) புவி கதிர்வீசல் - 34%
- 3) கதிர்வீச்சு சிதறல் - 29%
1 & 2 | |
2 & 3 | |
1 & 3 | |
1, 2 & 3 |
Question 50 Explanation:
17% கதிர் வீசல் நேரடியாக விண்வெளிக்கும் 48% கதிர்வீசல் வளிமண்டலத்தால் உட்கிரகிக்கப்பட்டும் ( பெறப்பட்ட வெப்பம் 14%, புவி கதிர்வீசல் 34% ) படிப்படியாக விண்வெளிக்கு திருப்பி அனுப்பப்படுகிறது.
Question 51 |
உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் வெப்ப ஆற்றலுக்கு இடையே உள்ள விகிதம் சமமாக இருந்தால் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெப்பச் சமநிலை | |
உலக வெப்பச் சமநிலை | |
உலக வெப்ப ஆற்றல் சமநிலை | |
வெப்ப ஆற்றல் சமநிலை |
Question 51 Explanation:
வளிமண்டலத்தை அடையும் 100% சூரிய கதிர்வீசலும் மீண்டும் விண்வெளிக்கே திருப்பி அனுப்பப்பட்டால் உலக வெப்ப ஆற்றல் சமநிலை உருவாகும்.
Question 52 |
சூரிய கதிர்வீச்சு பூமியை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு?
7 நிமிடம் 10 வினாடிகள் | |
8 நிமிடம் 20 வினாடிகள் | |
8 நிமிடம் 30 வினாடிகள் | |
9 நிமிடம் 30 வினாடிகள் |
Question 53 |
புவியின் மேற்பரப்பிலுள்ள அட்சக்கோடுகள் முழுவதும் வெப்பநிலை பரவி காணப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெப்பக் கடத்தல் | |
வெப்ப சலனம் | |
கிடைமட்ட வெப்பநிலை பரவல் | |
செங்குத்து வெப்பநிலை பரவல் |
Question 53 Explanation:
வெப்பநிலை பரவலானது கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் வேறுபடுகிறது. இது கிடைமட்ட வெப்பநிலை பரவல் மற்றும் செங்குத்து வெப்பநிலை பரவல் எனவும் அழைக்கப்படுகிறது.
Question 54 |
புவியின் கடல்மட்ட உயரத்தில் உள்ள சம வெப்ப நிலையை உடைய இடங்களை இணைக்கும் கற்பனைக் கோடுகளை எவ்வாறு அழைக்கிறோம்?
செங்குத்து பரவல் | |
சமநிலை கோடுகள் | |
கிடைமட்ட பரவல் | |
சம வெப்பநிலை கோடுகள் |
Question 54 Explanation:
பொதுவாக நிலவரை படங்களில் கிடைமட்ட வெப்பநிலை பரவல் சம வெப்பநிலை கோடுகள் மூலம் காட்டப்படுகிறது.
Question 55 |
கீழ்கண்டவற்றுள் கிடைமட்ட வெப்ப பரவலை பாதிக்கும் காரணிகள் யாவை?
- 1) அட்சரேகை 2) கோள் காற்றுகள் 3) மேகமூட்டம் 4) மலைக்காற்று
1, 2 & 3 | |
2, 3 & 4 | |
1, 3 & 4 | |
1, 2, 3 & 4 |
Question 55 Explanation:
புவி மேற்பரப்பின் மீது கிடைமட்ட வெப்பநிலை பரவலானது இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. மேற்கண்ட காரணிகள் மட்டுமல்லாமல் கடல் நீரோட்டங்கள், நிலம் மற்றும் நீர் பரவல், புவிப்பரப்பின் தன்மை மற்றும் மலை தடைகள் ஆகியவையும் கிடைமட்ட பரவலை பாதிக்கும் காரணிகளாகும்.
Question 56 |
புவியில் சூரிய கதிர் வீசல் விழும் கோணத்தை எவ்வாறு அழைக்கிறோம்?
திட்டமிட்ட கோணம் | |
நிகழ்வு கோணம் | |
குவிநிலை கோணம் | |
ஏற்றக் கோணம் |
Question 56 Explanation:
நிலநடுக்கோட்டுப் பகுதியில் நிகழ்வு கோணம் செங்குத்தாக இருக்கிறது. துருவப்பகுதியில் சாய்வாக அமைகிறது.
Question 57 |
கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
- 1) நிகழ்வு கோணமானது நிலநடுக்கோட்டுப் பகுதியில் இருந்து துருவங்களை நோக்கி செல்லும் போது நேராக அமைகிறது.
- 2) வெப்பப்படுத்தப்படும் பூமியின் பரப்பளவு துருவத்தை நோக்கி செல்லும் இப்போது அதிகரிக்கிறது.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 57 Explanation:
நிகழ்வு கோணமானது நிலநடுக்கோட்டுப் பகுதியில் இருந்து துருவங்களை நோக்கி செல்லும் போது சாய்வாக அமைகிறது. எனவே வெப்பநிலையானது நிலநடுக்கோட்டுப் பகுதியில் அதிகமாகவும் துருவப் பகுதியில் குறைவாகவும் காணப்படுகிறது.
Question 58 |
நிலத்துடன் ஒப்பிடுகையில் நீரின் ஓர் அலகு பரப்பளவை வெப்பம் அடையச் செய்ய எத்தனை மடங்கு வெப்ப ஆற்றல் கூடுதலாக தேவைப்படுகிறது?
1.5 மடங்கு | |
1.8 மடங்கு | |
2.3 மடங்கு | |
2.5 மடங்கு |
Question 58 Explanation:
நீர் வெப்பமடைய கூடுதல் வெப்ப ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே கோடைக்காலத்தில் நிலமானது நீரை விட அதிக வெப்ப நிலையையும் குளிர்காலத்தில் நீரானது நிலத்தை விட அதிக வெப்ப நிலையையும் கொண்டுள்ளது.
Question 59 |
நிலத்தில் எந்த செயல்முறை காரணமாக வெப்பமடைவதும், குளிரடைவதும் வேகமாக நடைபெறுகிறது?
வெப்ப கதிர்வீசல் | |
வெப்ப சலனம் | |
வெப்பக் கடத்தல் | |
வெப்ப பரவல் |
Question 60 |
நீரில் எந்த செயல்முறை காரணமாக வெப்பமடைவதும், குளிர் அடைவதும் மெதுவாக நடைபெறுகிறது?
வெப்ப சலனம் | |
வெப்ப பரவல் | |
வெப்பக் கதிர்வீசல் | |
வெப்பக் கடத்தல் |
Question 61 |
வட அரைக்கோளத்தில் சராசரி வெப்பநிலை எவ்வளவு?
10.7° செல்சியஸ் | |
15.2° செல்சியஸ் | |
18.4° செல்சியஸ் | |
23.7° செல்சியஸ் |
Question 61 Explanation:
நீர் மற்றும் நிலத்தின் வெப்பநிலை வேறுபாட்டின் காரணமாக வட அரைக்கோளத்தில் அதிக நிலப்பகுதி உள்ளதால் அதன் சராசரி வெப்பநிலை தென் அரைக்கோளத்தை ( 13.3° செல்சியஸ் ) விட அதிகமாக உள்ளது.
Question 62 |
கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
- 1) வெப்பமண்டல கடல் பகுதியிலிருந்து வெப்ப நீரோட்டமானது துருவ பகுதியை நோக்கி குளிர்ந்த நீரை சுமந்து செல்வதால் துருவ கடற்கரை பகுதியில் வெப்பம் குறைகிறது.
- 2) குளிர் நீரோட்டங்கள் துருவப் பகுதியில் இருந்து குளிர்ந்த நீரை வெப்ப மண்டலப் பகுதிக்கு கொண்டு வருவதால் வெப்பமண்டல கடற்கரைப் பகுதியின் வெப்பநிலை குறைகிறது.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 62 Explanation:
வெப்பமண்டல கடல் பகுதியில் இருந்து வெப்ப நீரோட்டமானது துருவப்பகுதியை நோக்கி வெப்பமான நீரை சுமந்து செல்வதால் துருவ கடற்கரைப் பகுதியில் வெப்பம் அதிகரிக்கிறது.
Question 63 |
கீழ்க்கண்டவற்றுள் வெப்ப காற்றுகள் எவை?
- 1) வியாபார காற்றுகள் B] கிழக்கத்திய காற்றுகள் C] மேற்கத்திய காற்றுகள் D] வடகிழக்கு காற்றுகள்
1 & 2 | |
2 & 3 | |
1 & 3 | |
3 & 4 |
Question 63 Explanation:
வெப்பக்காற்றுகளான வியாபார காற்றுகள் மற்றும் மேற்கத்திய காற்றுகள் அதிக வெப்ப ஆற்றலை கடத்துவதால் வெப்ப நிலையை அதிகரிக்கிறது. அதேபோல் குளிர்ந்த துருவ கிழக்கத்திய காற்றுகள் துருவப் பகுதியில் இருந்து குறைந்த வெப்ப ஆற்றலை கடத்துவதால் வெப்பநிலையைக் குறைக்கிறது.
Question 64 |
சூரியனிடமிருந்து பூமிக்கு வரும் சூரிய ஒளி கதிரை மேகமூட்டத்துடன் இருக்கும் வானம் தடுப்பதால் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம் என்ன?
வெப்பநிலை அதிகரிக்கும் | |
வெப்பநிலை மாறாது | |
வெப்பநிலை குறையும் | |
வெப்பநிலை மிதமாகும் |
Question 64 Explanation:
ஆனால் வானம் பகலில் தெளிவாக இருக்கும் போது அதிகப்படியான சூரியகதிர் புவி மேற்பரப்பை அடைவதால் வெப்பநிலை உயருகிறது.
Question 65 |
கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
- 1) தெளிவான வானம் இரவு நேரத்தில் அதிகப்படியான புவி கதிர்வீசலை வெளியேற்றுகிறது.
- 2) தெளிவற்ற வானம் இரவு நேரத்தில் அதிகப்படியான புவி கதிர்வீசலை வெளியேற்றுகிறது.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 65 Explanation:
உதாரணமாக வெப்ப மண்டல பாலைவனங்கள் பகலில் அதிக வெப்ப நிலையையும் இரவில் மிக குறைவான வெப்ப நிலையையும் கொண்டுள்ளது.
Question 66 |
சூரிய கதிர் வீசல் பிரதிபலிக்கப்படுவது கீழ்கண்ட எந்தக் காரணியைப் பொறுத்து மாறுபடுகிறது?
வளிமண்டல வாயுக்கள் | |
புவிப்பரப்பின் தன்மை | |
மலைத் தடைகள் | |
மழையின் அளவு |
Question 67 |
கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
- 1) துருவ கிழக்கத்திய காற்று ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலை பகுதியால் தடுக்கப்படுகிறது.
- 2) பனிப்புயலானது ஆசியாவின் இமயமலைப் பகுதியால் தடுக்கப்படுகிறது.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 67 Explanation:
மேற்கண்ட நிகழ்வுகளால் இம்மலைகளின் வட சரிவு பகுதியில் குறைந்த வெப்ப நிலையும் அதன் தென் சரிவு பகுதியில் அதிக வெப்ப நிலையும் காணப்படுகிறது. காற்று அல்லது வளிப்பகுதிகள் மலையை நோக்கி வீசும் போது மலையின் இருபுறங்களிலும் வெப்பநிலை பரவலை பாதிக்கின்றது.
Question 68 |
கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
- 1) புவியின் மேற்பரப்பில் இருந்து மேலே செல்ல செல்ல வெப்பநிலை குறைகிறது.
- 2) வளிமண்டல படையடுக்கில் வெப்பநிலை கிடைமட்டமாக குறைவதை இயல்பான வெப்ப குறைவு விகிதம் என்கிறோம்.
- 3) வெப்பநிலை குறையும் விகிதமானது 1000 மீட்டருக்கு 5.6° செல்சியஸ் என்ற அளவில் குறைகிறது.
1 மட்டும் | |
2 மட்டும் | |
3 மட்டும் | |
1, & 3 |
Question 68 Explanation:
வளிமண்டல படையடுக்கில் வெப்பநிலை செங்குத்தாக குறைவதை இயல்பான வெப்பு குறைவு விகிதம் அல்லது செங்குத்து வெப்ப குறைவு என அழைக்கிறோம். வெப்பநிலை குறையும் விகிதமானது 1000 மீட்டருக்கு 6.5° செல்சியஸ் என்ற அளவில் குறைகிறது.
Question 69 |
கீழ்க்கண்டவற்றுள் செங்குத்து வெப்பநிலை பரவலை பாதிக்கும் காரணிகள் யாவை?
- 1) நிலம் மற்றும் நீர் பரவல் 2) உயரத்தை அடையும் புவி கதிர் வீசலின் அளவு 3) உயர் அட்சங்களில் வெப்ப ஆற்றலை உட்கிரகிக்கும் காற்றின் அடர்த்தி
1 & 2 | |
2 & 3 | |
1 & 3 | |
1, 2 & 3 |
Question 69 Explanation:
மேற்கூறிய இரு காரணிகளால் உயரம் அதிகரிக்கும் போது வெப்ப நிலையும் குறைகிறது.
Question 70 |
கடல் மட்டத்திலிருந்து கொடைக்கானலின் உயரம் என்ன?
1548 மீட்டர் | |
1816 மீட்டர் | |
2016 மீட்டர் | |
2133 மீட்டர் |
Question 71 |
அதிகரிக்கும் உயரத்திற்கு ஏற்ப வெப்பநிலை அதிகரிப்பதை எவ்வாறு அழைக்கிறோம்?
வெப்ப மாற்றம் | |
வெப்ப குறைவு விகிதம்
| |
செங்குத்து வெப்ப குறைவு | |
வெப்ப தலைகீழ் மாற்றம்
|
Question 71 Explanation:
வெப்ப கலையில் மாற்ற நிகழ்வின் போது குளிர் காற்று மீது வெப்ப காற்று காணப்படுகிறது.
Question 72 |
கீழ்கண்டவற்றுள் வெப்ப தலைகீழ் மாற்றத்திற்கான காரணி அல்லாதது எது?
நீண்ட குளிரான இரவுகள் | |
வறண்ட காற்று
| |
மேகமூட்டம் | |
மலைக்காற்று |
Question 73 |
கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
நீண்ட இரவு நாட்களில் வளிமண்டல கீழ்ப்பகுதி குளிர்ந்தும் மேற்பகுதி வெப்பமாகவும் காணப்படும்.
| |
வானம் தெளிவாக இருக்கும்போது அதிக அளவு புவி கதிர்வீசல் குறைவான உயரத்திற்கு சென்று விடுவதால் இப்பகுதியில் அதிகமான வெப்பநிலையே நிலவுகிறது |
Question 73 Explanation:
வானம் தெளிவாக இருக்கும்போது அதிக அளவு புவி கதிர்வீசல் அதிக உயரத்திற்கு சென்று விடுவதால் இப்பகுதியில் குறைவான வெப்பநிலையே நிலவுகிறது.
74) வறண்ட காற்று உட்கிரகிக்கும் புவி
Question 74 |
வறண்ட காற்று உட்கிரகிக்கும் புவி கதிர் வீசலின் அளவு எவ்வாறு இருக்கும்?
மிதமாக | |
எதுவும் இல்லை
| |
குறைவாக | |
அதிகமாக |
Question 75 |
இரவில் வளிமண்டலத்தில் அதிக வெப்ப இழப்பு ஏற்படக் காரணம் யாது?
- 1) குறைந்த புவி கதிர்வீசல் 2) அதிக புவி கதிர்வீசல் 3) குறைந்த அளவு ஒளி திருப்புத்திறன் 4) அதிக அளவு ஒலி திருப்புத்திறன்
1 & 2 | |
2 & 3 | |
4 & 3 | |
1 & 4
|
Question 75 Explanation:
குறைந்த புவி கதிர்வீசல் மற்றும் அதிக அளவு ஒலி திருப்புத்திறன் காரணமாக இரவில் வளிமண்டலத்தில் அதிக வெப்ப இழப்பு ஏற்படுவதால் புவி மேற்பரப்பு குளிர்ச்சி அடைகிறது.
Question 76 |
கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
- 1) பல்வேறு வளிமுகங்கள் உருவாகும் போது குளிர் காற்று மீது வெப்ப காற்று வெளியேறுவதால் வெப்ப தலைகீழ் மாற்றம் ஏற்படுகிறது.
- 2) அதிகாலையில் குளிர்ந்த காற்று மலை உச்சியிலிருந்து மேல் பகுதியை நோக்கி சென்று வெப்பக்காற்றை பள்ளத்தாக்கில் இருந்து கீழ் நோக்கி வெளியேற்றுகிறது.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 76 Explanation:
அதிகாலையில் குளிர்ந்த காற்று மலை உச்சியிலிருந்து கீழ்ப் பகுதியை நோக்கிச் சென்று வெப்பக்காற்றை பள்ளத்தாக்கில் இருந்து மேல்நோக்கி வெளியேற்றும் நிகழ்வை வெப்ப தலைகீழ் மாற்றம் என்கிறோம்.
Question 77 |
கீழ்க்கண்டவற்றுள் ஒளி திருப்புத்திறனுக்கான வரையறை எது?
சூரியனிலிருந்து வரும் கதிர்வீச்சின் அளவு | |
புவியிலிருந்து பிரதிபலிக்கப்படும் சூரிய கதிர் வீசலின் அளவு | |
புவியால் உட்கிரகிக்கப்படும் சூரிய கதிர் வீசலின் அளவு | |
வளி மண்டலத்தால் உட்கிரகிக்கப்படும் சூரிய கதிர் வீசலின் அளவு |
Question 77 Explanation:
இது அல்பிடோ என்றும் அழைக்கப்படுகிறது. காடுகளுடன் ஒப்பிடும்போது பனி அதிக அளவு ஒளி திருப்புத்திறனைக் கொண்டுள்ளது.
Question 78 |
பாரன்ஹீட் வெப்பநிலை அளவை கண்டுபிடித்தவர் யார்?
லார்டு கெல்வின் | |
ஆண்ட்ரு செல்சியஸ் | |
கேப்ரியல் பாரன்ஹீட் | |
ரூசோ பாரன்ஹீட் |
Question 78 Explanation:
கேப்ரியல் பாரன்ஹீட் 1714 ஆம் ஆண்டு பாரன்ஹீட் அளவை கண்டறிந்தார். ஆண்ட்ரூ செல்சியஸ் 1742 ஆம் ஆண்டு செல்சியஸ் அளவை கண்டறிந்தார். F = (C * 1.8 ) + 32
Question 79 |
கெல்வின் வெப்பநிலை அளவு எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?
1735 | |
1612 | |
1794 | |
1848 |
Question 79 Explanation:
லார்டு கெல்வின் என்பவர் கெல்வின் வெப்பநிலை அளவை 1848 ஆம் ஆண்டு கண்டறிந்தார். செல்சியஸில் அளவிலிருந்து கெல்வின் அளவிற்கு மாற்ற கொடுக்கப்பட்ட செல்சியஸ் அளவு உடன் 273.15 அளவை கூட்டிக் கொள்ள வேண்டும்.
Question 80 |
0° முதல் 23 ½ ° வடக்கு மற்றும் தெற்கு வரை உள்ள பகுதிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெப்ப மண்டலம் | |
மித வெப்ப மண்டலம் | |
துருவ மண்டலம் | |
எதுவும் இல்லை |
Question 81 |
கீழ்க்கண்டவற்றுள் வெப்ப மண்டலத்திற்கான வரையறை எது?
அட்சரேகைக்கும் தீர்க்கரேகைக்கும் இடைப்பட்ட பகுதி | |
தீர்க்கரேகைக்கும் மகரரேகைக்கும் இடைப்பட்ட பகுதி | |
கடகரேகைக்கும் மகரரேகைக்கும் இடைப்பட்ட பகுதி | |
கடகரேகைக்கும் அட்சரேகைக்கும் இடைப்பட்ட பகுதி |
Question 81 Explanation:
இப்பகுதியில் சூரிய கதிர்கள் செங்குத்தாக விழுவதால் இந்த மண்டலத்தில் வெப்பநிலை மற்ற இரண்டு மண்டலங்களை விட எப்போதும் அதிகமாக இருக்கும்
Question 82 |
கீழ்க்கண்டவற்றுள் மித வெப்ப மண்டலம் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
- 1) மித வெப்ப மண்டலம் 23 ½ ° வடக்கு முதல் 66 ½ ° வடக்கு மற்றும் 23 ½ ° தெற்கு முதல் 66 ½ ° தெற்கு வரை அமைந்துள்ளது.
- 2) வட அரைக்கோளத்தில் கடக ரேகைக்கும் ஆர்டிக் வட்டத்திற்கும் இடையிலும் தென் அரைக்கோளத்தில் மகர ரேகைக்கும் அண்டார்டிக் வட்டத்திற்கும் இடையிலும் அமைந்துள்ள பகுதியை மித வெப்ப மண்டலம் என அழைக்கிறோம்.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 83 |
வடகோளத்தில் ஆர்டிக் வட்டத்திற்கும் வடதுருவத்திற்கும் இடைப்பட்ட பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மித வெப்ப மண்டலம் | |
வெப்ப மண்டலம் | |
மித குளிர் மண்டலம் | |
துருவ மண்டலம் |
Question 83 Explanation:
இப்பகுதி மேலும் தென்கோளத்தில் அண்டார்டிக் வட்டத்திற்கும் தென் துருவத்திற்கும் இடையேயும் அமைந்துள்ளது.
Question 84 |
கீழ்க்கண்ட தொடர்கள் புவியின் எந்த வெப்ப மண்டலத்தை குறிப்பிடுகிறது?
இப்பகுதி 66 ½ ° வடக்கு முதல் 90° வடக்கு மற்றும் 66 ½ ° தெற்கு முதல் 90° தெற்கு வரை பரவியுள்ளது.
இப்பகுதியில் 24 மணி நேரமும் பகல் மற்றும் இரவு முறையே அதிகபட்ச கோடை மற்றும் அதிகபட்ச குளிர்காலத்தில் இருக்கும்.
வெப்ப மண்டலம் | |
துருவ மண்டலம் | |
மிதவெப்ப மண்டலம் | |
எதுவும் இல்லை |
Question 84 Explanation:
இப்பகுதியில் எப்போதும் சூரிய கதிர் சாய்வாக விழுவதால் மிகக் குறைவான வெப்ப நிலையை இங்கு காணப்படுகிறது
Question 85 |
ஒரு பகுதியின் ஒரு வருடத்தின் சராசரி வெப்ப நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சராசரி வெப்பநிலை | |
ஆண்டு சராசரி வெப்பநிலை | |
ஆண்டு வெப்பநிலை | |
காலநிலை |
Question 86 |
ஆண்டு சராசரி வெப்பநிலை என்பது எத்தனை ஆண்டுகளின் சராசரி வெப்பநிலை ஆகும்?
10 ஆண்டுகள் | |
15 ஆண்டுகள் | |
25 ஆண்டுகள் | |
30 ஆண்டுகள் |
Question 86 Explanation:
ஒரு பகுதியின் ஒரு நாளின் அதிகபட்ச வெப்ப நிலைக்கும் குறைந்தபட்ச வெப்பநிலைக்கும் இடையே உள்ள வேறுபாடு தினசரி வெப்பநிலை வீச்சு என அழைக்கப்படுகிறது.
Question 87 |
ஒரு பகுதியின் அதிகபட்ச வெப்ப நிலைக்கும் குறைந்தபட்ச வெப்ப நிலைக்கும் இடையே உள்ள வேறுபாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெப்பநிலை வீச்சு | |
வெப்பச் சமநிலை | |
வெப்பநிலை மாற்றம் | |
சராசரி வெப்பநிலை |
Question 88 |
வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்கள் என்ன எத்தகைய அலைநீளம் உடைய கதிர்களை உட்கிரகிக்கிறது?
குறைவான அலைநீளம் | |
நீண்ட அலைநீளம் | |
மிதமான அலைநீளம் | |
எதுவும் இல்லை |
Question 88 Explanation:
பசுமை இல்ல வாயுக்கள் ஒரு கண்ணாடியைப் போன்று செயல்பட்டு வெப்பத்தை தக்க வைத்துக் கொள்வதால் வெப்பம் வளி மண்டலத்தை விட்டு வெளியேறுவது தடுக்கப்படுகிறது. இந்நிகழ்வே பசுமை இல்ல விளைவு என அழைக்கப்படுகிறது
Question 89 |
கீழ்க்கண்டவற்றுள் பசுமை இல்ல வாயுக்கள் யாவை?
- 1) கார்பன் டை ஆக்சைடு 2) நீராவி 3) மீத்தேன் 4) ஓசோன்
1, 2 & 3 | |
1, 3 & 4 | |
2, 3 & 4 | |
1, 2, 3 & 4 |
Question 89 Explanation:
உலக வெப்பமயமாதல் ஒரு நூற்றாண்டு கால அளவில் கண்காணிக்கப்படுகிறது. பசுமை இல்ல வாயுக்கள் அதிகளவு உயிர் எரிபொருள் பயன்பாடு, வாகனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கார்பன் வாயுக்களால் உற்பத்தியாகிறது.
Question 90 |
நகர்ப்புற பகுதி மற்றும் பெரு நகரங்களை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவு வெப்பநிலை காணப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெப்பத்தீவு | |
நகரத்தீவு | |
நகர வெப்பத்தீவு | |
வெப்ப மண்டலம் |
Question 90 Explanation:
நகரங்களில் உள்ள வானுயர்ந்த கட்டிடங்கள், சாலைகள், குறைவான தாவர பரவல், குறைவான மண் பரப்பு போன்றவற்றால் நகர்ப்புறப் பகுதிகளில் கிராம பகுதியை விட அதிக வெப்பத்துடன் ஒரு வெப்ப தீவு போல காணப்படுவது நகர வெப்ப தீவு என அழைக்கப்படுகிறது.
Question 91 |
கீழ்கண்டவற்றுள் நகர வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் வழிகள் யாவை?
- 1) பசுமை கூரைகள் மற்றும் குளிர் கூரைகள் நிறுவுதல்
- 2) வாகனங்களிலிருந்து வரும் கார்பன் புகையை அதிகரித்தல்
- 3) மின்னாற்றல் திறனுடைய உபகரணங்களை பயன்படுத்துதல்
- 4) நகர்ப்புற பகுதிகளில் இருக்கும் அனைத்து தொழிற்சாலைகளையும் இடம் மாற்றுதல்
1, 2 & 3 | |
2, 3 & 4 | |
3, 4 & 1 | |
1, 2, 3 & 4 |
Question 91 Explanation:
நகர வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க வாகனங்களிலிருந்து வரும் கார்பன் புகையை குறைத்தல் வேண்டும். மேலும் வீட்டைச் சுற்றி நிழலை தரக்கூடிய மரம் மற்றும் தாவரங்களை வளர்ப்பதால் மேற்பரப்பு காற்றின் வெப்பநிலை குறைகிறது.
Question 92 |
கீழ்கண்டவற்றுள் வளிமண்டல அழுத்தத்திற்கான வரையறை எது?
வளிமண்டலத்தில் உள்ள மொத்த காற்று மூலக்கூறுகளின் எடை | |
வளிமண்டலத்தின் ஓரலகு பரப்பில் காணப்படும் காற்று மூலக்கூறுகளின் எடை | |
சூரியனிலிருந்து வரும் கதிர் வீச்சுகளின் எடை | |
புவியின் மேற்பரப்புக்கு மேலே ஓரலகு பரப்பிலுள்ள காற்று மூலக்கூறுகளின் எடை |
Question 92 Explanation:
புவியின் மீது வளிமண்டல அழுத்த பரவல் சீரான முறையில் இல்லை. புவிமேற்பரப்பில் விசையை செலுத்தும் காற்று மூலக்கூறுகளின் எடைக்கு ஏற்ப அழுத்தம் அதிகரிக்கும் அல்லது குறையும்.
Question 93 |
காற்றின் வெப்பநிலை அதிகரிக்கும்போது காற்றில் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை எவ்வாறு மாறுபடுகிறது?
குறையும் | |
அதிகரிக்கும் | |
சுழி | |
மாறாது |
Question 93 Explanation:
மூலக்கூறுகளின் எண்ணிக்கை குறையும்போது அழுத்தம் குறைகிறது. சில சமயங்களில் வெப்பநிலை குறையும்போது காற்றின் அழுத்தம் அதிகரிக்கிறது. எனவே வெப்பநிலையும், வளிமண்டல அழுத்தமும் எதிர்மறையான தொடர்புடையது.
Question 94 |
வளிமண்டல அழுத்தத்தை அளவிட பயன்படும் கருவியின் பெயர் என்ன?
வெப்பமானி | |
அழுத்தமானி | |
சோனார் | |
அம்மீட்டர் |
Question 94 Explanation:
சராசரி கடல்மட்ட உயரத்திலுள்ள சம அழுத்த பகுதிகளை இணைக்கும் கற்பனை கோட்டிற்கு சம அழுத்த கோடு என்று பெயர்.
Question 95 |
அழுத்தமானது கடல் மட்டத்திலிருந்து உயரே செல்ல செல்ல எவ்வாறு மாறுபடுகிறது?
குறையும் | |
அதிகரிக்கும் | |
சுழி | |
மாறாது இருக்கும் |
Question 96 |
கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
- 1) காற்று வெப்பம் அடையும் போது விரிவடைந்து செங்குத்தாக கீழே இறங்குவதால் காற்றின் அழுத்தம் உயர்ந்து உயர் அழுத்தப்பகுதி உருவாகிறது.
- 2) குளிர்ந்த காற்று அடர்த்தி அதிகமாகி செங்குத்தாக கீழே இறங்குவதால் தரைப்பகுதியில் காற்றின் எடை மற்றும் அழுத்தம் அதிகரித்து உயர் அழுத்த பகுதி உருவாகிறது.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 96 Explanation:
காற்று வெப்பம் அடையும் போது விரிவடைந்து செங்குத்தாக மேலே உயர்வதால் காற்றின் அழுத்தம் குறைந்து தாழ்வழுத்த பகுதி உருவாகிறது
Question 97 |
தடையின்றி நகரும் பொருட்கள் புவியின் சுழற்சியினால் வடகோளத்தில் எந்த பக்கத்தில் நகர்கின்றன?
மேல்நோக்கி | |
கீழ்நோக்கி | |
வலப்புறமாக | |
இடப்புறமாக |
Question 97 Explanation:
புவியின் சுழற்சியானது புவிமேற்பரப்பில் நகரும் பொருட்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தடையின்றி நகரும் பொருட்கள் புவியின் சுழற்சியினால் நேர்கோட்டில் பயணிக்காமல் வட கோளத்தில் வலப்புறமாகவும், தென்கோளத்தில் இடப்புறமாகவும் நகரும்.
Question 98 |
வடகோளத்தில் மணிக்கு எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் நேர்கோட்டில் செல்லும் ஒரு வாகனத்தில் சக்கரத்திற்கும் பூமிக்கும் இடையே உராய்வு இல்லை என்றால் வலப்புறமாக திரும்பும்?
28 | |
64 | |
81 | |
95 |
Question 98 Explanation:
மேற்கண்ட விளைவு கோரியாலிஸ் விளைவு என்று அழைக்கப்படுகிறது. இந்த விளைவை கண்டறிந்தவர் G.G. கோரியாலிஸ் ஆவார்.
Question 99 |
கோரியாலிஸ் விளைவின் காரணமாக செயற்கைக்கோள் ஏவும் தளங்கள் எந்த பக்க கடற்கரை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன?
கிழக்கு | |
மேற்கு | |
வடக்கு | |
தெற்கு |
Question 99 Explanation:
எடுத்துக்காட்டாக இந்தியாவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா மற்றும் பிரான்சில் உள்ள பிரெஞ்சு கயானா ஆகியவை கிழக்கு கடற்கரை பகுதிகளில் அமைந்துள்ளன.
Question 100 |
கீழ்க்கண்டவற்றுள் புவியின் மேற்பரப்பில் வளிமண்டல அழுத்தங்கள் சூழ்ந்து காணப்படும் பகுதிகள் எவை?
- 1) நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த பட்டை 2) துணை வெப்பமண்டல உயர் அழுத்தப்பட்டை 3) துணை துருவ தாழ்வழுத்த பட்டை 4) துருவ உயரழுத்த பட்டை
1, 2 & 3 | |
2, 3 & 4 | |
1, 2 & 4 | |
1, 2, 3 & 4 |
Question 101 |
கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
- 1) காற்றின் திசையை அறிய பயன்படும் கருவி - அனிமா மீட்டர்
- 2) காற்றின் வேகத்தை அளவிட பயன்படும் கருவி - காற்று திசைமானி
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 101 Explanation:
காற்றின் திசையை அறிய பயன்படும் கருவி காற்று திசைமானி ஆகும். காற்றின் வேகத்தை அளவிட பயன்படும் கருவி காற்றுமானி என்று அழைக்கப்படுகிறது.
Question 102 |
காற்று என்பது ____
செங்குத்தாக நகர்வது | |
கிடைமட்டமாக நகர்வது | |
மேல் நோக்கி நகர்வது | |
கீழ் நோக்கி நகர்வது |
Question 102 Explanation:
வளிமண்டல சமநிலையை நிலைநிறுத்த உயர் அழுத்தம் உள்ள பகுதிகளில் இருந்து தாழ்வு அழுத்தம் உள்ள பகுதியை நோக்கி மூலக்கூறுகள் கிடைமட்டமாக நகர்வதை காற்று என்கிறோம். இந்த காற்று எப்போதும் சம அழுத்த கோட்டில் செங்குத்தாக நகர்கிறது.
Question 103 |
புவி சுழற்சியால் ஏற்படும் எந்த விளைவின் காரணமாக காற்று திசை திருப்பப்படுகிறது?
புவியீர்ப்பு விசை | |
மின்காந்த விசை | |
கோரியாலிஸ் விளைவு | |
உராய்வு விசை |
Question 104 |
உலக அளவில் உள்ள அழுத்த பட்டைகளின் எண்ணிக்கை யாது?
5 | |
6 | |
7 | |
8 |
Question 104 Explanation:
நிலநடுக் கோட்டிலிருந்து துருவங்கள் வரை ஒவ்வொரு கோளத்திலும் நான்கு அழுத்த பட்டைகளும், உலக அளவில் மொத்தம் ஏழு அழுத்த பட்டைகளும் காணப்படுகின்றன.
Question 105 |
கீழ்கண்டவற்றுள் அமைதி மண்டலம் என்று அழைக்கப்படுவது எது?
நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த பட்டை | |
துணை வெப்பமண்டல உயரழுத்த பட்டை | |
துணை துருவ தாழ்வழுத்த பட்டைகள் | |
துருவ உயரழுத்த பட்டைகள் |
Question 105 Explanation:
இது அமைதியான பலவீனமான மற்றும் மாறுபடும் காற்று பகுதியாகும். இப்பகுதி முழுவதும் அதிக வெப்ப நிலையைக் கொண்டு நிலவுவதால் காற்று சூடாகி விரிவடைந்து மேல் நோக்கி செல்வதால் அழுத்தம் குறைந்து தாழ்வழுத்த பகுதியை உருவாக்குகிறது.
Question 106 |
கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
- 1) 5° வடக்கு மற்றும் 5° தெற்கு வரை உள்ள பகுதி நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த பட்டை என்று அழைக்கப்படுகிறது.
- 2) நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த பட்டை பகுதியில் உள்ள காற்றுகள் வியாபாரத்திற்கு பெரிதும் உதவியாக இருந்ததால் வியாபாரக் காற்று எனவும் அழைக்கப்படுகிறது.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 106 Explanation:
துணை வெப்பமண்டல உயர் அழுத்த பகுதியிலிருந்து காற்றானது நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த பகுதியை நோக்கி வீசுகிறது. இக்காற்றுகள் திசை திருப்பப்படும் பகுதியைப் பொருத்து வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு வியாபார காற்றுகள் என பெயரிடப்படுகின்றன
Question 107 |
கீழ்கண்டவற்றுள் குதிரை அட்சரேகை என அழைக்கப்படுவது எது?
நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த பட்டை | |
துணை வெப்பமண்டல உயரழுத்த பட்டை | |
துணை துருவ தாழ்வழுத்த பட்டைகள் | |
துருவ உயரழுத்த பட்டைகள் |
Question 107 Explanation:
இப்பகுதியில் அதிக அழுத்தம் நிலவுவதால் இவ்வழியே செல்லும் கப்பல்களின் வேகம் குறைவதை தடுக்க குதிரைகள் கடலில் தூக்கி எறியப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே துணை வெப்பமண்டலம் குதிரை அட்சரேகை எனவும் அழைக்கப்படுகிறது.
Question 108 |
துணை வெப்பமண்டல உயர்அழுத்த பட்டை பகுதியில் கீழிறங்கும் காற்றானது இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து நிலநடுக்கோட்டை நோக்கி வீசும் காற்றை எவ்வாறு அழைக்கிறோம்?
கிழக்கத்திய காற்று | |
உயர் அழுத்த காற்று | |
மேற்கத்திய காற்று | |
வியாபார காற்று |
Question 108 Explanation:
மேலும் துணை துருவத்தை நோக்கி வீசும் காற்றை மேற்கத்திய காற்று எனவும் அழைக்கிறோம். மேற்கத்திய காற்று துணை வெப்ப மண்டலத்தில் இருந்து துருவத்தை நோக்கி நகரும்போது வடகோளத்தில் வலதுபுறமாகவும் தென்கோளத்தில் இடதுபுறமாகவும் திரும்புகிறது.
Question 109 |
கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
- 1) 25° முதல் 35° வடக்கு மற்றும் தெற்கு இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதியை துணை வெப்பமண்டல உயர் அழுத்தப்பட்டை என அழைக்கிறோம்.
- 2) துணை வெப்ப மண்டலப் பகுதியில் குறைவழுத்த பட்டைகள் உருவாகின்றன
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 109 Explanation:
நிலநடுக்கோட்டுப் பகுதியில் இருந்து மேலெழும்பும் காற்றானது அதிக உயரத்தில் குளிர்ச்சியடைந்து துருவங்களை நோக்கி சென்று உயர் அட்ச பகுதிகளில் துருவ மண்டலத்தில் இருந்து வரும் காற்று மோதி துணை வெப்ப மண்டலப் பகுதியில் உயரழுத்த பட்டைகளை உருவாக்குகின்றன.
Question 110 |
கீழ்கண்டவற்றுள் துணை துருவ தாழ்வழுத்த பட்டை பகுதி எது?
30° முதல் 40° வடக்கு மற்றும் தெற்கு ரேகைகளுக்கு இடைப்பட்ட பகுதி | |
35° முதல் 45° வடக்கு மற்றும் தெற்கு ரேகைகளுக்கு இடைப்பட்ட பகுதி | |
50° முதல் 60° வடக்கு மற்றும் தெற்கு ரேகைகளுக்கு இடைப்பட்ட பகுதி | |
55° முதல் 65° வடக்கு மற்றும் தெற்கு ரேகைகளுக்கு இடைப்பட்ட பகுதி |
Question 111 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.
- 1) சாய்வான சூரிய கதிர் வீசல் மற்றும் குறைவான உள்வரும் வெப்பத்தால் துருவப்பகுதிகளில் நிலையாக குறைந்த வெப்ப நிலையே காணப்படுகிறது.
- 2) உயர் அழுத்தத்தில் காற்று வளிப்பகுதி எப்போதும் மையத்தில் குவிகிறது.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 111 Explanation:
உயர் அழுத்தத்தில் காற்று வளிப்பகுதி எப்போதும் மையத்திலிருந்து விலகுகிறது. ஆனால் குறைவழுத்த பகுதியில் காற்று குவிகிறது.
Question 112 |
80° வடக்கு மற்றும் 80° தெற்கு முதல் துருவம் வரை உள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த பட்டை | |
துணை வெப்பமண்டல உயரழுத்த பட்டை | |
துணை துருவ தாழ்வழுத்த பட்டைகள் | |
துருவ உயரழுத்த பட்டைகள் |
Question 112 Explanation:
குறைவான வெப்ப நிலையின் காரணமாக இரண்டு துருவங்களிலும் துருவ உயர் அழுத்த பட்டைகள் உருவாகின்றன. மேற்பரப்பில் இருக்கும் உயர் அழுத்தம் உயரமான பகுதிகளில் காணப்படும் தாழ்வழுத்தத்துடன் எப்பொழுதும் ஒத்திருக்கிறது. அதேபோல், மேற்பரப்பில் இருக்கும் தாழ்வழுத்தம் உயர் பகுதிகளில் காணப்படும் உயர்ழுத்தத்துடன் ஒத்திருக்கிறது.
Question 113 |
புவியின் தென்கோளத்தில் 40° தெற்கு முதல் 60° தெற்கு வரை உள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உறுமும் நாற்பது | |
சீறும் ஐம்பது | |
கீச்சிடும் அறுபது | |
அனைத்தும் சரி |
Question 113 Explanation:
புவியின் தென்கோளத்தில் 40° தெற்கு முதல் 60° தெற்கு வரை பெருங்கடல் பரந்து விரிந்துள்ளது. இதனால் மேற்கத்திய காற்றுகள் தொடர்ந்து வலிமையானதாக இருக்கும். எனவே இப்பகுதி மேற்காணும் பெயர்களில் கப்பலோட்டிகளால் அழைக்கப்படுகிறது.
Question 114 |
கீழ்க்கண்டவற்றுள் அழுத்தப்பட்டைகள் உருவாவதற்கான அடிப்படைக் காரணி அல்லாதது எது?
- 1) வெப்பநிலை 2) இயக்க ஆற்றல் 3) காற்றின் வேகம் 4) காற்றின் திசை
1 & 2 | |
2 & 3 | |
2 & 4 | |
1 & 3 |
Question 114 Explanation:
அழுத்த பட்டைகள் இரண்டு முக்கியமான காரணிகளைப் பொறுத்து உருவாகிறது. அவை வெப்பநிலை மற்றும் இயக்க ஆற்றல் ஆகும்.
Question 115 |
கீழ்க்கண்டவற்றுள் வெப்பத்தால் உருவாக்கப்பட்ட அழுத்த பட்டைகள் யாவை?
- 1) நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த பட்டை 2) துணை வெப்பமண்டல உயரழுத்த பட்டை 3) துணை துருவ தாழ்வழுத்த பட்டைகள் 4) துருவ உயரழுத்த பட்டைகள்
1 & 2 | |
1 & 3 | |
1 & 4 | |
3 & 4 |
Question 115 Explanation:
நிலநடுக்கோட்டுப் பகுதியில் அதிக வெப்பம் காரணமாக தாழ்வழுத்த பட்டைகளும் துருவ பகுதியில் குறைந்த வெப்பநிலை காரணமாக உயர் அழுத்த பட்டைகளும் உருவாகின்றன.
Question 116 |
கீழ்க்கண்டவற்றுள் இயக்க ஆற்றலினால் உருவாக்கப்பட்ட அழுத்த பட்டைகள் யாவை?
- 1) நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த பட்டை 2) துணை வெப்பமண்டல உயரழுத்த பட்டை 3) துணை துருவ தாழ்வழுத்த பட்டைகள் 4) துருவ உயரழுத்த பட்டைகள்
1 & 2 | |
2 & 3 | |
1 & 4 | |
2 & 4 |
Question 116 Explanation:
இவ்விரு பட்டைகளும் காற்றின் இயக்கம் மற்றும் மோதல் காரணமாக உருவாவதால் இயக்க ஆற்றலினால் உருவாக்கப்பட்ட அழுத்த பட்டைகள் என்று அழைக்கப்படுகின்றன.
Question 117 |
வியாபார காற்றானது மேலெழும்பும் நடுக்கோட்டு தாழ்வழுத்த பட்டை மற்றும் கீழிறங்கும் துணை வெப்பமண்டல உயரழுத்த பட்டையுடன் இணைந்து அறை போன்று காணப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பெரல் செல் | |
துருவ செல் | |
ஹார்லி செல் | |
ஹாட்லே செல் |
Question 118 |
மேற்கத்திய காற்றானது கீழிறங்கும் துணை வெப்பமண்டல உயரழுத்த பட்டை மற்றும் மேலெழும்பும் துணை துருவ தாழ்வழுத்த பட்டையுடன் இணைந்து அறை போன்று காணப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பெரல் செல் | |
துருவ செல் | |
ஹார்லி செல் | |
ஹாட்லே செல் |
Question 119 |
கீழ்கண்டவற்றுள் நெடுவரை காற்று அறை பகுதியில் உள்ள செல்கள் யாவை?
- 1) பெரல் செல் 2) துருவ செல் 3) ஹார்லி செல் 4) ஹாட்லே செல்
1, 2 & 3 | |
1, 2 & 4 | |
2, 3 & 4 | |
1, 2, 3 & 4 |
Question 119 Explanation:
வட தென் துருவ உயரழுத்த பட்டையில் இருந்து வரும் துருவ கிழக்கத்திய காற்று மற்றும் துணை துருவ குறைவழுத்த பட்டை ஆகியவை இணைந்த பகுதியை துருவ செல் என்று அழைக்கிறோம்.
Question 120 |
கீழ்க்கண்டவற்றுள் வெப்பமண்டல இணைப்புப் பகுதி என அழைக்கப்படுவது எது?
இரண்டு மேற்கத்திய காற்று அமைப்புகள் சந்திக்கும் பகுதி | |
இரண்டு கிழக்கத்திய காற்று அமைப்புகள் சந்திக்கும் பகுதி | |
இரண்டு வியாபார காற்று அமைப்புகள் சந்திக்கும் பகுதி | |
இரண்டு வெப்ப மண்டலங்கள் சந்திக்கும் பகுதி |
Question 121 |
அழுத்த மண்டலங்கள் கீழ்க்கண்ட எந்த நகர்வினால் மாறும் தன்மையை கொண்டுள்ளன?
5° வடக்கு மற்றும் 5° தெற்கு சூரியனின் நகர்வோடு ஒத்து நகர்தல் | |
5° வடக்கு மற்றும் 5° தெற்கு வியாபார காற்றுடன் ஒத்து நகர்தல் | |
5° கிழக்கு மற்றும் 5° மேற்கு சூரியனின் நகர்வோடு ஒத்து நகர்தல் | |
5° கிழக்கு மற்றும் 5° மேற்கு வியாபார காற்றுடன் ஒத்து நகர்தல் |
Question 121 Explanation:
அழுத்த மண்டலங்களும் மற்றும் முதன்மை காற்றுகளும் அவற்றின் நிலையிலிருந்து 5° வடக்கு மற்றும் 5° தெற்காக சூரியனின் நகர்வோடு ஒத்து நகர்வதால் இவை மாறும் தன்மையை கொண்டுள்ளன.
Question 122 |
கீழ்கண்டவற்றுள் வட்டார காற்றுகள் என அழைக்கப்படுவது எது?
முதன்மை நிலை காற்றுகள் | |
மேற்கத்திய காற்றுகள் | |
இரண்டாம் நிலை காற்றுகள் | |
வியாபார காற்றுகள் |
Question 122 Explanation:
பருவக் காற்று மற்றும் சூறாவளி ஆகிய இரண்டும் இரண்டாம் நிலை காற்று அல்லது வட்டார காற்றுகள் என கருதப்படுகின்றன.
Question 123 |
மாசிம் என்பதன் பொருள் என்ன?
காலங்கள் | |
பருவங்கள் | |
காற்றுகள் | |
பட்டைகள் |
Question 124 |
கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
- 1) கோடைக்காலத்தில் நிலப்பரப்பு அதிகமாக வெப்பமடைவதால் நிலப்பரப்பின் மீது தாழ்வழுத்த உருவாகிறது.
- 2) கோடைகாலத்தில் பெருங்கடல் பகுதியில் அதிகமான வெப்ப நிலை நிலவுவதால் இங்கு உயர் அழுத்தம் உருவாகிறது.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 125 |
கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
- 1) குளிர்காலத்தில் நிலமானது குறைந்த அளவு வெப்பத்தை வெளியேற்றுவதால் நிலத்தில் வெப்பமானது கடலை விட அதிகமாக காணப்படுகிறது.
- 2) குளிர்காலத்தில் நிலத்திலிருந்து இருந்து கடலை நோக்கி காற்று வீசுகிறது
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 126 |
கீழ்க்கண்டவற்றுள் பருவக்காற்றின் இயல்புகள் யாவை?
- 1) பருவங்களுக்கு இடையே காற்று வீசும் திசை குறைந்தபட்சம் 180° அளவு திரும்புதல்
- 2) கண்டங்கள் மற்றும் பெருங்கடலில் பெரும்பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துதல்
- 3) நிலம் மற்றும் நீர் பகுதியில் தோன்றும் உயர் மற்றும் தாழ் அழுத்த அமைப்புகள் பருவ காலத்திற்கு ஏற்ப இடம் மாறுதல்
1 & 2 | |
1 & 3 | |
2 & 3 | |
1, 2 & 3 |
Question 126 Explanation:
பருவங்களுக்கு இடையே காற்று வீசும் திசை குறைந்தபட்சம் 160° அளவு திரும்புதல் ஆகிய மூன்று முக்கிய இயல்புகளினால் பருவ காற்றானது பிற காற்றுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டு காணப்படுகிறது.
Question 127 |
பருவக்காற்று தன் இயல்புகளை ஒரு பருவத்தில் பெற்றும் மற்றொரு பருவத்தில் ஏதாவது ஒரு இயல்பு இல்லாமலும் இருக்குமானால் அக்காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
போலி பருவக் காற்று | |
பருவக்காற்று மாதிரி | |
பொய் பருவக்காற்று | |
அனைத்தும் சரி |
Question 128 |
பருவக்காற்று அமைப்பு இடம் சார்ந்து எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது?
2 | |
3 | |
4 | |
5 |
Question 128 Explanation:
அவை ஆசிய பருவ காற்று மற்றும் தெற்காசிய பருவக்காற்று ஆகும். மேலும் ஆசிய பருவக்காற்று, குளிர்கால பருவக் காற்று மற்றும் கோடைகால பருவ காற்று எனவும் தெற்காசிய பருவகாற்று,தென்மேற்கு பருவகாற்று மற்றும் வடகிழக்கு பருவக்காற்று எனவும் பிரிக்கப்பட்டுள்ளது.
Question 129 |
ஆசிய பருவக்காற்று பருவ காலத்தில் கீழ்க்கண்ட எந்த ஏரி பகுதியில் நிலவும் அதிக வெப்பத்தால் தாழ்வழுத்தம் உருவாகிறது?
பால்காஷ் ஏரி | |
பய்கால் ஏரி | |
உர்மியா ஏரி | |
பைவா ஏரி |
Question 129 Explanation:
பசிபிக் பெருங்கடலில் அல்லூசியன் தீவு பகுதியில் உள்ள குறைந்த வெப்பத்தால் உயர் அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் பசிபிக் பெருங்கடலில் இருந்து காற்று கோடைகாலத்தில் ஆசியாவின் மையப் பகுதியை நோக்கி வீசுவது ஆசியாவின் கோடைகால பருவக்காற்று என அழைக்கப்படுகிறது. அதேபோல் குளிர்காலத்தில் இதற்கு நேர்மாறாக நடைபெறுவதை ஆசியாவின் குளிர்கால பருவகாற்று என்கிறோம்.
Question 130 |
ஆசியாவின் கோடைக்கால பருவக்காற்று ஆசியாவின் எந்த பகுதிகளுக்கு மழைப் பொழிவை தருகிறது?
ஆசியாவின் மேற்கு கடற்கரை பகுதிக்கு | |
ஆசியாவின் கிழக்குக் கடற்கரை பகுதிக்கு | |
வட கிழக்கு ஆசியாவின் தெற்கு கடற்கரை பகுதிக்கு | |
தெற்காசியாவின் வட கிழக்குப் பகுதிக்கு |
Question 131 |
தெற்காசிய பருவக்காற்று கீழ்கண்ட எந்தெந்த நாடுகளில் வீசுகிறது?
- 1) இந்தியா 2) பாகிஸ்தான் 3) ஜப்பான் 4) இலங்கை 5) வங்காளதேசம் 6) ரஷ்யா
1, 2, 3 & 4 | |
2, 3, 4 & 5 | |
1, 2, 4 & 5 | |
1, 2, 3, 4, 5 & 6 |
Question 131 Explanation:
தெற்காசிய பருவக்காற்றால் அது இமயமலைக்கு தெற்குப் பகுதியில் உள்ள நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, மாலத்தீவு, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளில் வீசுகிறது.
Question 132 |
கீழ்கண்டவற்றுள் தவறானதை தேர்ந்தெடு.
- 1) கோடை காலத்தில் இந்திய தீபகற்பம் சுற்றியுள்ள கடல் பகுதியை விட அதிகமான வெப்பத்தை பெறுகிறது.
- 2) இதனால் பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் தாழ்வழுத்தம் உருவாகிறது.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை
|
Question 133 |
தென்மேற்கு பருவக்காற்று ஆண்டுக்கு எத்தனை மாதங்கள் மழை பொழிவை தருகிறது?
2 மாதங்கள் | |
3 மாதங்கள் | |
4 மாதங்கள் | |
5 மாதங்கள் |
Question 134 |
கீழ்க்கண்டவற்றுள் அரபிக்கடல் கிளை பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
- 1) இக்காற்று மேற்கு தொடர்ச்சி மலையில் தடுக்கப்பட்டு கிடைமட்டமாக நகர்ந்து மலை தடை மழையை உருவாக்குகிறது.
- 2) இங்கு மலை முகப்பு பகுதியில் அதிக மழைப் பொழிவையும் மழை மறைவுப் பகுதியில் குறைந்த மழை பொழிவையும் தருகிறது.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை
|
Question 134 Explanation:
அரபிக்கடல் கிளை காற்று மேற்கு தொடர்ச்சி மலையில் தடுக்கப்பட்டு செங்குத்தாக மேலே உயர்ந்து மலைத்தடை மழையை உருவாக்குகிறது. எனவே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் கிழக்குப் பகுதியுடன் ஒப்பிடும் போது மேற்கு கடற்கரை பகுதியில் அதிக மழைப்பொழிவை கொடுக்கிறது.
Question 135 |
இந்தியாவில் தென்மேற்குப் பருவக்காற்றால் மழை பெறும் முதல் மாநிலம் எது?
தமிழ்நாடு | |
கர்நாடகா | |
மகாராஷ்டிரா | |
கேரளா |
Question 135 Explanation:
அரபிக்கடல் கிளையால் ஏற்படும் தென்மேற்கு பருவக்காற்று கேரளாவில் தொடங்கி வடக்கு நோக்கிப் படிப்படியாக நகர்ந்து மேற்கு கடற்கரைப் பகுதியில் வளர்ச்சி அடைந்து கர்நாடகா, கோவா,மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் பருவமழையை கொடுக்கிறது.
Question 136 |
இந்தியாவில் தென்மேற்கு பருவ மழை எப்போது உருவாகிறது?
ஜூன் முதல் வாரத்தில்
| |
ஜூன் மூன்றாம் வாரத்தில்
| |
ஜூலை இரண்டாம் வாரத்தில்
| |
ஜூலை நான்காம் வாரத்தில்
|
Question 136 Explanation:
தென்மேற்கு பருவக்காற்று இமயமலையை நோக்கி முன்னேறிச் சென்று இமய மலையின் மீது மோதி, இமயமலை, பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் ஓரளவு மழையையும் மழையை கொடுக்கிறது
Question 137 |
கீழ்க்கண்டவற்றுள் இலங்கையில் மலைத்தடை மழை ஏற்பட காரணம் எது?
ஜெட் காற்று | |
வங்காள விரிகுடா கிளை
| |
அரபிக்கடல் கிளை | |
தல காற்றுகள்
|
Question 137 Explanation:
தென்மேற்கில் இருந்து வீசும் வங்காளவிரிகுடா கிளையானது இலங்கையில் மலை தடை மழையை ஏற்படுத்துவதோடு அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் மலைத் தடை மழையை கொடுக்கிறது.
Question 138 |
இந்தியாவில் தென்மேற்கு பருவ மழையைப் பெறும் முதல் பகுதி எது?
ஹேவ்லாக் தீவு | |
ரோஸ் தீவு | |
கிரேட் நிகோபார் தீவு | |
சிதியா தீவு |
Question 138 Explanation:
கிரேட் நிகோபார் தீவில் உள்ள இந்திரா முனை மே மாதம் நடுவில் மழை பெறுவதால் இந்தியாவின் தென் மேற்கு பருவ மழையைப் பெறும் முதல் பகுதி ஆகும். இக்காற்று இந்தியாவின் கிழக்கு கடற்கரை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைக்கு இணையாக வீசுகிறது..
Question 139 |
கீழ்கண்டவற்றில் சரியான கூற்றை தேர்ந்தெடு.
- 1) தென்மேற்கு பருவக்காற்று இந்தியாவின் கிழக்கு கடற்கரைக்கு போதிய அளவு மழையை கொடுக்கிறது.
- 2) வங்காள விரிகுடாக் கிளை மியான்மரில் உள்ள அரக்கன்யோமா மலையின் மீது மோதி மியான்மரின் மேற்கு கடற்கரைப் பகுதியில் மிக அதிக மழையை கொடுக்கிறது.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 139 Explanation:
தென்மேற்கு பருவக்காற்று இந்தியாவின் கிழக்கு கடற்கரைக்கு போதிய அளவு மலையை கொடுப்பதில்லை.
Question 140 |
கீழ்க்கண்ட எதன் காரணமாக பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது?
ஜெட் காற்று | |
வங்காள விரிகுடா கிளை | |
அரபிக்கடல் கிளை | |
தல காற்றுகள் |
Question 140 Explanation:
வங்காள விரிகுடா கிளை மியான்மரில் அரக்கன் யோகமா மலைகள் திருப்பப்பட்டு இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களை நோக்கி புனல் வடிவில் குவிகிறது. இக்காற்று மேகாலய பீடபூமி, வங்காள தேசம் மற்றும் இந்தியாவின் வட கிழக்குப் பகுதிகளுக்கு மிக அதிக மழையை கொடுக்கிறது. இக்காற்று மேலும் இமய மலைப் பகுதியை நோக்கி நகர்ந்து அதன் தெற்கு சரிவுகளில் அதிக மழையை கொடுத்து பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கை ஏற்படுகிறது.
Question 141 |
உலகிலேயே மிக அதிக மழை பெறும் பகுதி எது?
கவுகாத்தி | |
முஸோரி | |
மஜூலி | |
மாசின்றம் |
Question 142 |
வங்காள விரிகுடா கிளை எந்த பகுதியில் அரபிக்கடல் கிளை உடன் இணைகிறது?
பீகார் | |
நேபாளம் | |
மேற்கு வங்காளம் | |
சிக்கிம் |
Question 143 |
கீழ்க்கண்ட எதன் காரணமாக தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக தெற்கு ஆசிய கண்டத்தில் இருந்து விலகுகிறது?
வட கோளத்தை நோக்கி சூரியன் நகர்வதால் | |
தென் கோளத்தை நோக்கி சூரியன் நகர்வதால் | |
கிழக்கு நோக்கி சூரியன் நகர்வதால் | |
மேற்கு நோக்கி சூரியன் நகர்வதால் |
Question 144 |
கீழ்க்கண்டவற்றுள் பின்னடையும் பருவக்காற்று என்று அழைக்கப்படுவது எது?
வடகிழக்குப் பருவக்காற்று | |
தென்மேற்கு பருவக்காற்று | |
தெற்காசிய பருவக்காற்று | |
ஆசிய பருவக்காற்று |
Question 144 Explanation:
வடகிழக்குப் பருவக்காற்று தென்மேற்கு திசையை நோக்கி வறண்ட காற்றாக செல்வதால் தெற்காசியாவின் கடலோரப் பகுதியான இந்தியாவின் சோழமண்டலக் கடற்கரை மற்றும் இலங்கை பகுதிகளை தவிர மற்ற பகுதிகளுக்கு மழையை கொடுப்பதில்லை.
Question 145 |
கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
- 1) குளிர் காலத்தில் இந்திய துணை கண்டமானது இந்திய பெருங்கடலை விட குளிராக உள்ளது.
- 2) இந்தியாவில் விவசாயம் பெரும்பாலும் பருவ காற்று மழையையே சார்ந்துள்ளது.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 145 Explanation:
இந்திய துணைக்கண்டம் ஆனது இந்திய பெருங்கடலை விட குளிராக இருப்பதால் காற்று வடகிழக்கு திசையில் இருந்து தென்மேற்கு திசையை நோக்கி வீசுகிறது. இது வடகிழக்கு திசையிலிருந்து வீசுவதால் வடகிழக்கு பருவக்காற்று என்று அழைக்கப்படுகிறது.
Question 146 |
எல்நினோ ஆண்டில் எந்த கடல் நீரின் வெப்பநிலை அதிகரிக்கிறது?
இந்தியப் பெருங்கடல் | |
அட்லாண்டிக் பெருங்கடல் | |
தென் பெருங்கடல் | |
பசிபிக் பெருங்கடல் |
Question 146 Explanation:
பசிபிக் பெருங்கடலில் அதிகரிக்கும் வெப்பம் இந்திய பெருங்கடலில் உள்ள உயர் அழுத்தத்தை வலுவிழக்க செய்வதால் தெற்காசியாவை நோக்கி வீசும் தென்மேற்கு பருவக்காற்று வலுவிழக்கிறது.ஆனால் குளிர்காலத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில் தாழ்வழுத்தம் உருவாகி தாழ்வழுத்த மண்டலமாக மாறி வலுவான சூறாவளிகளை உருவாக்குகிறது.
Question 147 |
கீழ்க்கண்டவற்றுள் மூன்றாம் நிலை காற்று என்று அழைக்கப்படுவது எது?
வியாபார காற்று | |
வறண்ட காற்று | |
தல காற்று | |
ஜெட் காற்று |
Question 147 Explanation:
புவியின் மேற்பரப்பு வெப்பமடைதல் மற்றும் குளிர் அடைவதில் ஏற்படும் வேறுபாடுகள் காரணமாக உருவாகும் அழுத்த சரிவினால் தல அளவில் மூன்றாம் நிலை காற்றுகள் உருவாகின்றன.
Question 148 |
காற்றானது உயர் அழுத்தம் உடைய பெருங்கடலில் இருந்து தாழ்வழுத்தம் உடைய நிலப்பகுதியை நோக்கி வீசுவதை எவ்வாறு அழைக்கிறோம்?
கடல் காற்று | |
நில காற்று | |
மலைக்காற்று | |
பள்ளத்தாக்கு காற்று |
Question 148 Explanation:
மீனவர்கள் மாலையில் கரைக்கு திரும்ப கடற்காற்று பெரிதும் உதவுகிறது. கடல் காற்றும் நில காற்றும் கடலோரத்தில் படகு போக்குவரத்திற்கு பெரிதும் உதவுவதால் மீனவர்களின் தினசரி நடவடிக்கைக்கு உறுதுணையாகிறது.
Question 149 |
காற்றானது நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கடல் காற்று | |
நில காற்று | |
மலைக்காற்று | |
பள்ளத்தாக்கு காற்று |
Question 149 Explanation:
இக்காற்று இரவு நேரத்தில் வீசுகிறது. மீனவர்கள் அதிகாலையில் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல நில காற்று உதவுகிறது.
Question 150 |
காற்று வெப்பம் அடைவதால் அடர்த்தி குறைந்து பள்ளத்தாக்கு பக்கங்களின் வழியாக மெதுவாக மேலேறுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மலைக்காற்று | |
ஜெட் காற்று | |
பள்ளத்தாக்கு காற்று | |
வியாபார காற்று |
Question 150 Explanation:
பகல் நேரத்தில் நிலப்பரப்பையும் பள்ளத்தாக்கின் கீழ் பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் உள்ள காற்றையும் சூரியன் வெப்பப்படுத்துவதால் பள்ளத்தாக்கு காற்று உருவாகிறது.
Question 151 |
பள்ளத்தாக்கு காற்று திசை மாறி எந்த நேரத்தில் மலையின் மேல் பகுதியிலிருந்து பள்ளத்தாக்கின் அடிப்பகுதியை நோக்கி வீசுகிறது?
அதிகாலை நேரத்தில் | |
நண்பகல் நேரத்தில் | |
மாலை நேரத்தில் | |
இரவு நேரத்தில் |
Question 151 Explanation:
மேற்கண்ட நிகழ்வுக்கு மலைக்காற்று என்று பெயர். மழை காற்றும், பள்ளத்தாக்கு காற்றும் மலை உச்சி மற்றும் பள்ளத்தாக்குப் பகுதிகளின் வானிலையை பெரிதும் பாதிக்கிறது.
Question 152 |
கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
- 1) மலை உச்சியை காலையிலும், பள்ளத்தாக்கை மாலையிலும் தெளிவாக காண முடிகிறது.
- 2) அதிகாலையில் கீழே இறங்கும் மழை காற்றினால் உருவான மேகங்கள் சில நேரங்களில் மூடுபனி என்று அழைக்கப்படுகிறது
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 152 Explanation:
இந்த மூடுபனி ஏமன் போன்ற வறண்ட பகுதிகளில் விவசாயம் செய்ய பெரிதும் பயன்படுகிறது. மழை உச்சியானது மாலைவேளையில் மேலே உயரும் பள்ளத்தாக்கு காற்றினால் உருவான மேகங்களால் சூழப்பட்டுள்ளது.
Question 153 |
கீழ்க்கண்டவற்றுள் தல காற்று அல்லாதது எது?
லூ | |
ஃபான் | |
சினூக் | |
ஹெம் |
Question 153 Explanation:
மேலும் ஃபோரா, மிஸ்ட்ரல், ஹர்மாட்டன், காரபூரன், நார்வெஸ்டர், நார் ஈஸ்டர், காம்சின், பாம்பிரோ, சிமூம், சிராக்கோ மற்றும் சோண்டா ஆகியவை முக்கியமான சில தல காற்றுகள் ஆகும்.
Question 154 |
கீழ்கண்டவற்றுள் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வடகிழக்கு இத்தாலியை நோக்கி வீசும் காற்று எது?
ஃபோரா | |
சிராக்கோ | |
மிஸ்ட்ரல் | |
பாம்பிரோ |
Question 154 Explanation:
மேலும் மத்திய பிரான்ஸ் மற்றும் ஆல்ப்ஸ் மலையிலிருந்து மத்தியதரைக் கடலை நோக்கி வீசும் குளிர்ந்த வடக்கத்திய காற்று மிஸ்ட்ரல் என அழைக்கப்படுகிறது.
Question 155 |
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் சமவெளிகளில் வீசும் வெப்ப மற்றும் வறண்ட காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நார் ஈஸ்டர் | |
சிராக்கோ | |
லூ | |
ஃபோரா |
Question 155 Explanation:
மேலும் வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து கிழக்கு மத்தியதரைக் கடலை நோக்கி தென்கிழக்காக வீசும் காற்று காம்சின் என்று அழைக்கப்படுகிறது.
Question 156 |
கீழ்கண்டவற்றுள் நார்வெஸ்டார் காற்று பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
- 1) இது பின்லாந்தின் தெற்கு தீவின் மேற்குக் கடற்கரைக்கு மழையை கொடுக்கிறது.
- 2) நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரையில் வறண்ட காற்றாகவும் வீசுகிறது.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 156 Explanation:
நார்வெஸ்டார் காற்று தென்கிழக்கில் உள்ள ஆல்ப்ஸ் மலையின் மீது ஈரப்பதமிக்க முதன்மை காற்று மோதி மேல் எழுவதால் உருவாகும் காற்று ஆகும். இது நியூசிலாந்தின் தெற்கு தீவின் மேற்குக் கடற்கரைக்கு மழையை கொடுக்கிறது.
Question 157 |
கருப்பு புயல் எங்கு வீசுகிறது?
மத்திய ஆப்பிரிக்கா | |
மத்திய அமெரிக்கா | |
கிழக்கு அமெரிக்கா | |
மத்திய ஆசியா |
Question 157 Explanation:
கருப்பு புயல் என்பது மத்திய ஆசியாவில் வீசும் வசந்த காலம் மற்றும் கோடைக்காலம் மழை காற்று ஆகும். இது காரபூரன் என்று அழைக்கப்படுகிறது.
Question 158 |
மத்திய ஆப்பிரிக்காவின் குறுக்கே வடக்கில் இருந்து வீசும் வறண்ட காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நார் ஈஸ்டர் | |
காம்சிம் | |
ஃபோரா | |
ஹர்மாட்டன் |
Question 158 Explanation:
மேலும் ஆர்ப்ஸ் மற்றும் சுவிட்ஸர்லாந்தின் வடக்கு பகுதியை நோக்கி வீசும் தெற்கத்திய வறண்ட வெப்ப காற்று ஃபான் என்று அழைக்கப்படுகிறது.
Question 159 |
ராக்கி மலையில் இருந்து வீசும் மேற்கத்திய வறண்ட வெப்ப காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சிராக்கோ | |
காம்சிம் | |
சினூக் | |
நார்வெஸ்டார் |
Question 160 |
பாம்பிரோ காற்று எங்கு வீசுகிறது?
அர்ஜென்டினா | |
நியூசிலாந்து | |
இஸ்ரேல் | |
சுவிட்சர்லாந்து |
Question 160 Explanation:
மேலும் சகாரா, இஸ்ரேல், ஜோர்டான், சிரியா மற்றும் அரேபிய பாலைவனத்தில் வீசும் வலுவான வெப்ப வறண்ட காற்று சிமூம் ஆகும்.
Question 161 |
அர்ஜெண்டினாவில் ஆண்டிஸ் மலையின் கிழக்குச் சரிவில் வீசும் காற்று எது
ஃபோரா | |
சோண்டா | |
சிராக்கோ | |
லூ |
Question 161 Explanation:
மேலும் வட ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவின் தெற்கு பகுதியை நோக்கி வீசும் தெற்கத்திய காற்று சிறக்கும் என்று அழைக்கப்படுகிறது.
Question 162 |
ஜெட் காற்றுகள் எவ்வளவு உயரம் வரை வீசக்கூடியது?
3 கிலோ மீட்டரில் இருந்து 7 கிலோ மீட்டர் உயரம் வரை | |
4 கிலோ மீட்டரிலிருந்து 11 கிலோ மீட்டர் உயரம் வரை | |
5 கிலோ மீட்டரில் இருந்து 12 கிலோ மீட்டர் உயரம் வரை | |
6 கிலோ மீட்டரிலிருந்து 14 கிலோ மீட்டர் உயரம் வரை |
Question 162 Explanation:
ஜெட் காற்றுகள் என்பது அதிக உயரத்தில் 6 கி.மீட்டரிலிருந்து 14 கி.மீட்டர் உயரம் வரை வீசக்கூடிய மேற்கத்திய காற்று அமைப்பாகும். இது இரண்டு அரை கோளங்களிலும் அலை வடிவத்தில் மணிக்கு 450 கிலோ மீட்டர் வேகத்தில் மிக அதிக வேகத்துடன் வீசுகிறது.
Question 163 |
கீழ்கண்டவற்றுள் துருவங்களை சுற்றும் காற்று என்று அழைக்கப்படுவது எது?
தல காற்றுகள் | |
வியாபார காற்றுகள் | |
ஜெட் காற்றுகள் | |
மலைக்காற்றுகள் |
Question 163 Explanation:
ஜெட் காற்றுகள் துருவங்களை சுற்றி வருவதால் அதை துருவங்களை சுற்றும் காற்று என்று அழைக்கிறோம். அதிக உயரத்தில் வீசும் போதும் அவை புவி மேற்பரப்பு வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
Question 164 |
கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
- 1) ஜெட் காற்றுகளின் அலையலையான வடிவத்திற்கு ராஸ்பி அலைகள் என்று பெயர்.
- 2) ஜெட் காற்றுகள் முதலாம் உலகப்போரின் போது ஜெட் விமானிகள் அதிக உயரத்தில் உணர்ந்த இந்த வலிமையான காற்றின் எதிர் விசையின் விளைவை கொண்டு கண்டறியப்பட்டது.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 164 Explanation:
ஜெட் காற்றுகள் இரண்டாம் உலகப்போரின்போது கண்டறியப்பட்டது.
Question 165 |
கீழ்கண்டவற்றுள் ஜெட் காற்றால் ஏற்படும் விளைவு அல்லாதது எது?
துருவ சூறாவளி உருவாக்கம் | |
பருவக்காற்று மழையின் தீவிரம் | |
அதிவேக சூறாவளியின் வளர்ச்சி | |
வடகிழக்கு பருவமழையின் திடீர் தாக்குதல் |
Question 165 Explanation:
மேற்கண்டவை மட்டுமல்லாமல் தாமதமாக மற்றும் முன்பே வீசும் பருவக்காற்று, தென்மேற்குப் பருவமழையின் திடீர் தாக்குதல் மற்றும் மேற்கத்திய இடையூறு காற்றுகளால் இந்தியாவிற்கு மழையைக் கொண்டு வருதல் ஆகியன ஜெட் காற்றினால் ஏற்படும் விளைவுகளாகும்.
Question 166 |
கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
- 1) ஜெட் காற்றின் வேகம் வெப்பமண்டல சூறாவளியை மாற்றம் அடையச் செய்வதால் அதிவேக சூறாவளிகள் உருவாகி வளர்ச்சி அடைகின்றன.
- 2) ஜெட் காற்று வட அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் குளிர் காலத்தில் கடுமையான குளிர் அலைகளை உருவாக்குகிறது.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 166 Explanation:
துருவ மேற்கத்திய ஜெட் காற்று துருவத்திலிருந்து குளிர் வளி முகங்களை வெப்பமண்டலத்தை நோக்கி எடுத்துச் செல்வதால் துருவ சூறாவளி உருவாகிறது.
Question 167 |
இந்தியத் துணைக் கண்டத்தில் இருந்து பாமீரின் வடக்குப் பகுதி வரை உள்ள காற்று எது?
துருவ மேற்கத்திய ஜெட் காற்று | |
துருவ வடக்கத்திய ஜெட் காற்று | |
துருவ கிழக்கத்திய ஜெட் காற்று | |
வெப்பமண்டல கிழக்கத்திய ஜெட் காற்று |
Question 167 Explanation:
இக்காற்று திடீரென விலகுவதால் இந்திய துணை கண்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று திடீர் மழை பொழிவை ஏற்படுத்துகிறது.
Question 168 |
கீழ்க்கண்ட எந்த காற்று விலகுவதை பொருத்து தென்மேற்கு பருவக்காற்றின் வருகை தீர்மானிக்கப்படுகிறது?
வியாபார காற்று | |
மலைக்காற்று | |
பள்ளத்தாக்கு காற்று | |
ஜெட் காற்று |
Question 168 Explanation:
ஜெட் காற்று விலகும் விகிதத்தைப் பொறுத்து தென்மேற்கு பருவ காற்றானது தாமதமாகவோ அல்லது முன்பாகவோ வீசுகிறது.
Question 169 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த காற்றின் வருகை தென்மேற்கு பருவக்காற்று மழையின் தீவிரத்தை தூண்டுகிறது?
துருவ மேற்கத்திய ஜெட் காற்று | |
துருவ வடக்கத்திய ஜெட் காற்று | |
துருவ கிழக்கத்திய ஜெட் காற்று | |
வெப்பமண்டல கிழக்கத்திய ஜெட் காற்று |
Question 169 Explanation:
தென்மேற்கு பருவக்காற்று மழைப்பொழிவு அதிகரிக்க இது வழிவகுக்கிறது.
Question 170 |
இந்தியாவில் கோதுமை பயிரிடுவதற்கு பெரிதும் உதவும் ஜெட் காற்று எது?
துருவ மேற்கத்திய ஜெட் காற்று | |
துருவ வடக்கத்திய ஜெட் காற்று | |
துருவ கிழக்கத்திய ஜெட் காற்று | |
வெப்பமண்டல கிழக்கத்திய ஜெட் காற்று |
Question 171 |
காற்றானது ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் எடுத்துக்கொள்ளும் அதிகபட்ச நீராவியின் அளவை எவ்வாறு அழைக்கிறோம்?
ஈரப்பதம் | |
ஈரப்பத கொள்ளளவு | |
நீர் சுருங்குதல் | |
காற்றின் பருமன் |
Question 171 Explanation:
ஈரப்பதம் என்பது வளிமண்டலத்தில் உள்ள நீராவியின் அளவு ஆகும். காற்றின் வெப்பநிலை காற்றின் நீராவி கொள்ளளவை கட்டுப்படுத்துகிறது.
Question 172 |
கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
- 1) வெப்பநிலை உயரும் போது காற்றின் பருமன் அதிகரிக்கிறது.
- 2) வெப்பநிலை அதிகரிக்கும் போது ஈரப்பத கொள்ளளவும் அதிகரிக்கிறது.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 172 Explanation:
காற்றின் பருமன் அதிகரிப்பதால் காற்று ஈரப்பதத்தை எடுத்துக் கொள்ளும் அளவும் அதிகரிக்கிறது. ஈரப்பத கொள்ளளவு ஈரப்பதத்தின் அளவு அல்லது காற்றின் பருமன் என அளவிடப்படுகிறது.
Question 173 |
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் ஒரு கன அளவு காற்றில் உள்ள நீராவியின் மொத்த அளவை எவ்வாறு அழைக்கிறோம்?
தனிநிலை ஈரப்பதம் | |
சார்பு ஈரப்பதம் | |
அதீத பூரிதமடைதல் | |
ஈரப்பத கொள்ளளவு |
Question 174 |
கீழ்கண்டவற்றில் தவறானதை தேர்ந்தெடு.
- 1) ஈரப்பதமானி ஒரு பகுதியில் உள்ள சார்பு ஈரப்பதத்தை அளக்க உதவுகிறது.
- 2) காற்று பூரித நிலை அடைவதை காற்றின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் அளவு கட்டுப்படுத்துகிறது.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 175 |
காற்று எத்தனை சதவீதம் சார்பு ஈரப்பதத்தை அடைந்தால் அக்காற்று முற்றிலும் ஈரப்பதத்துடன் நிறைந்திருக்கும்?
50% | |
75% | |
100% | |
200% |
Question 176 |
வெப்பநிலை குறைவதால் ஈரப்பதம் அதிகரித்து காற்று பூரிதம் அடைவதை எவ்வாறு அழைக்கிறோம்?
திரவ நிலை | |
அதீத பூரிதம் அடைதல் | |
மூடுபனி | |
பனிப்புள்ளி |
Question 176 Explanation:
காற்றின் வெப்பநிலை குறைவதாலோ அல்லது ஈரப்பதத்தின் அளவு அதிகரிப்பதாலோ காற்று பூரித நிலையை அடைகிறது.
Question 177 |
பனிப்புள்ளி நிலையில் காற்றின் வெப்பநிலை மேலும் குறையும் போது அல்லது ஈரப்பதம் அதிகரிக்கும் போது காற்று மேலும் பூரிதம் அடைவதை எவ்வாறு அழைக்கிறோம்?
வாயு நிலை | |
அதீத பூரிதம் அடைதல் | |
மூடுபனி | |
பனிப்புள்ளி |
Question 177 Explanation:
இந்தநிலையில் ஒப்பு ஈரப்பதம் 100 சதவீத அளவை அடைகிறது. அங்கு காற்றானது அதிகப்படியான ஈரப்பதத்தை வெளியேற்றுகிறது. அப்போது சிறிய நீர்த் துளிகள் உருவாகி வளிமண்டலத்திலுள்ள மேகங்களாக மிதக்கிறது.
Question 178 |
கீழ்க்கண்டவற்றுள் தரை மேகம் என்று அழைக்கப்படுவது எது?
வெப்பமான ஈரக்காற்று | |
மூடுபனி | |
கீற்று மேகம் | |
படை மேகங்கள் |
Question 178 Explanation:
அதீத பூரிதமடைதலின் போது சிறிய நீர்த் துளிகள் உருவாகி வளிமண்டலத்தில் மேகங்களாக மிதப்பது போன்று புவியின் மேற்பரப்பில் தரைக்கு அருகில் ஏற்படுமானால் அதனை மூடுபனி என்று அழைக்கிறோம்.
Question 179 |
பொருத்துக.
- 1) ஆவியாதல் - i) நீர் நிலைகளிலிருந்தும் தாவரங்களிலிருந்தும் நீர் ஆவியாதல்
- 2) நீர் ஆவியாகுதல் - ii) நீர் திரவ நிலையிலிருந்து வாயு நிலையை அடைதல்
- 3) நீராவிப் போக்கு - iii) தாவரங்களிலிருந்து நீர் ஆவியாதல்
1 – I ; 2 – ii ; 3 – iii | |
1 – ii ; 2 – iii ; 3 – i | |
1 – iii ; 2 – ii ; 3 – i | |
1 – ii ; 2 – I ; 3 – iii |
Question 180 |
காற்றில் உள்ள நுண்ணிய நீர்த்துளிகள் சுருங்குதல் முறையால் காற்றில் மிதக்க கூடிய நிகழ்வை எவ்வாறு அழைக்கிறோம்?
பனித்துளிகள் | |
பனிப் புள்ளிகள் | |
மேகங்கள் | |
மூடுபனி |
Question 180 Explanation:
மேகங்கள் உருவாகுதல், உயரம் மற்றும் தோற்றத்தின் அடிப்படையில் உயரமான மேகங்கள், இடைப்பட்ட மேகங்கள், தாழ் மேகங்கள் மற்றும் மேகங்களின் செங்குத்து பரவல் என வகைப்படுத்தப்படுகிறது.
Question 181 |
கீழ்கண்டவற்றுள் உயரமான மேகம் அல்லாதது எது?
கீற்று மேகம் | |
கீற்று திரள் மேகம் | |
கீற்று படை மேகம் | |
உயர் திரள் மேகம் |
Question 181 Explanation:
பெரும்பாலும் தரைப்பகுதியில் இருந்து ஆறு கிலோ மீட்டர் உயரத்தில் காணப்படும் இறகு போன்ற கீற்று மேகங்களை உயரமான மேகங்கள் என்கிறோம்.
Question 182 |
கீழ்க்கண்டவற்றுள் மித வெப்ப மண்டலம் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
- 1) மித வெப்ப மண்டலம் 23 ½ ° வடக்கு முதல் 66 ½ ° வடக்கு மற்றும் 23 ½ ° தெற்கு முதல் 66 ½ ° தெற்கு வரை அமைந்துள்ளது.
- 2) வட அரைக்கோளத்தில் கடக ரேகைக்கும் ஆர்டிக் வட்டத்திற்கும் இடையிலும் தென் அரைக்கோளத்தில் மகர ரேகைக்கும் அண்டார்டிக் வட்டத்திற்கும் இடையிலும் அமைந்துள்ள பகுதியை மித வெப்ப மண்டலம் என அழைக்கிறோம்.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை
|
Question 182 Explanation:
இப்பகுதியில் சூரிய கதிர்கள் எப்போதும் செங்குத்தாக விழுவதில்லை. இங்கு கோடை காலத்தில் நீண்ட பகல், குறுகிய இரவும் மற்றும் குளிர் காலத்தில் நீண்ட இரவு, குறுகிய பகலும் காணப்படும்.
Question 183 |
கீழ்க்கண்டவற்றுள் பார்ப்பதற்கு மிருதுவான பஞ்சு போன்று காணப்படும் மேகம் எது?
உயர் படை மேகம் | |
படை மேகம் | |
திரள் மேகம் | |
கீற்று மேகம் |
Question 183 Explanation:
இது தெளிவான வானிலையையும் ஒளிமிக்க அந்தி வானத்தையும் காட்டுகிறது.
Question 184 |
கானாங்கெளுத்தி மீன் கூட்டம் போன்று காணப்படும் வேகம் எது?
கீற்று படை மேகம் | |
கீற்று திரள் மேகம் | |
படை மேகம் | |
திரள் மேகம் |
Question 184 Explanation:
மேலும் கீற்று படை மேகங்கள் மெல்லிய வெள்ளைத் தாள் போன்றது. வானம் பால் போன்று காட்சியளிக்கிறது. இந்த மேகங்களின் வழியே சூரியனும் சந்திரனும் ஒளிர்வதால் ஒரு ஒளிவட்டத்தை உருவாக்குகிறது.
Question 185 |
இடைப்பட்ட மேகங்கள் கீழ்க்கண்ட எந்த உயரங்களுக்கு இடையில் காணப்படுகிறது?
1 கிலோ மீட்டர் முதல் 3 கிலோ மீட்டர் வரை | |
2 கிலோ மீட்டர் முதல் 5 கிலோ மீட்டர் வரை | |
2 கிலோ மீட்டர் முதல் 6 கிலோ மீட்டர் வரை | |
1 கிலோ மீட்டர் முதல் 7 கிலோ மீட்டர் வரை |
Question 186 |
கீழ்க்கண்டவற்றுள் அலைகள் போன்று அடுக்கடுக்காக கம்பளி பஞ்சு போன்றும் சுருள்சுருளாகவும் தோற்றமளிக்கும் மேகம் எது?
கீற்று மேகம் | |
உயர் படை மேகம் | |
படை மேகம் | |
உயர் திரள் மேகம் |
Question 186 Explanation:
இது தெளிவான வானிலையை குறிக்கிறது. மேலும் உயர் படை மேகங்கள் அடர்த்தியான மற்றும் நீர் போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது.
Question 187 |
கீழ்கண்டவற்றுள் வான்வெளி போக்குவரத்திற்கு தடையாக இருக்கும் மேகம் எது?
கீற்று திரள் மேகம் | |
கீற்று படை மேகம் | |
படை திரள் மேகம் | |
படை மேகம் |
Question 187 Explanation:
இது மிகவும் தாழ்வான மேகம் ஆகும். சீரான சாம்பல் நிறத்துடன் அடர்த்தியாகவும் உயர்நில மூடுபனி போன்று தோற்றமளிக்கிறது. இது மந்தமான வானிலை மற்றும் லேசான தூறலை தருகிறது.படைத்திரள் மேகங்கள் அலை அலையாக கரடுமுரடாக காணப்படும்.
Question 188 |
கீழ்க்கண்டவற்றுள் மழைமேகம் என்று அழைக்கப்படுவது எது?
கீற்று படை மேகம் | |
கீற்று திரள் மேகம் | |
கார்படை மேகம் | |
திரள் மேகம் |
Question 188 Explanation:
இது மழை, பனி மற்றும் ஆலங்கட்டி மழையை கொடுக்கிறது. இம்மேகம் இருண்ட, மந்தமான, தெளிவான அடுக்குகளை கொண்டுள்ளது.
Question 189 |
மேகங்களின் செங்குத்து பரவல் மேகங்களின் உயரம் எவ்வளவு?
2 கி.மீ முதல் 10 கி.மீ வரை | |
3 கி.மீ முதல் 7 கி.மீ வரை | |
4 கி.மீ முதல் 9 கி.மீ வரை | |
5 கி.மீ முதல் 12 கி.மீ வரை |
Question 189 Explanation:
இது பெரும்பாலும் திரள் மேகங்களை கொண்டுள்ளது. திரள் மேகம் மற்றும் கார்திரள் மேகம் ஆகியன செங்குத்து பரவல் மேகங்களாகும்.
Question 190 |
கீழ்க்கண்டவற்றுள் தெளிவான வானிலை மேகம் என அழைக்கப்படுவது எது?
உயர் படை மேகம் | |
படை மேகம் | |
திரள் மேகம் | |
கீற்று மேகம் |
Question 190 Explanation:
இது நிலநடுக்கோட்டு பகுதியில் நடைபெறும் வெப்பச்சலன செயல்முறையோடு தொடர்புடைய கிடைமட்ட அடித்தளத்துடனும் வட்டவடிவ மேல்பகுதியுடனும் காணப்படும் செங்குத்து மேகமாகும்.
Question 191 |
கீழ்க்கண்டவற்றுள் காலிஃபிளவர் மேல்பகுதி போன்று பரவி காணப்படும் மேகம் எது?
கீற்று மேகம் | |
கீற்று திரள் மேகம் | |
கார்திரள் மேகம் | |
உயர் திரள் மேகம் |
Question 191 Explanation:
இது செங்குத்தாக நன்கு வளர்ந்த கருப்பு மற்றும் வெள்ளை நிறத்துடன் உருளை வடிவத்தில் காலிஃபிளவர் மேல்பகுதி போன்று பரவி காணப்படுகிறது. இது நிலநடுக்கோட்டுப் பகுதிகளில் அதிக வெப்ப சலனத்தின் காரணமாக உருவாகிறது. இது மின்னல், இடி மற்றும் கன மழையுடன் சேர்ந்து காணப்படும்.
Question 192 |
புவியின் மேற்பரப்பின் மீது அல்லது அருகில் காற்றிலிருக்கும் நீர் சுருங்குதலால் செறிவூட்டப்பட்ட மிக நுண்ணிய நீர்த்துளிகளை எவ்வாறு அழைக்கிறோம்?
பனித்துளிகள் | |
அடர் மூடுபனி | |
மேகங்கள் | |
மூடுபனி |
Question 192 Explanation:
கடல் காற்றில் அதிக ஈரப்பதம் இருப்பதால் அடர் மூடுபனி பொதுவாக கடலுக்கு அருகில் காணப்படும். குளிர்கால இரவு நேரங்களில் கண்டங்களின் உட்பகுதியில் வெப்பநிலை மிக குறைவாக காணப்படுவதால் இங்கு அடர் மூடுபனி உருவாகிறது.
Question 193 |
அடர் மூடுபனியில் பார்வை நிலை எந்த அளவுக்கு குறைவாக இருக்கும்?
1 கி.மீ | |
2 கி.மீ | |
3 கி.மீ | |
4 கி.மீ |
Question 193 Explanation:
அடர் மூடுபனி அமைதியான அல்லது குறைவான காற்று இருக்கும் நிலையில் ஏற்படும். புவி மேற்பரப்புக்கு அருகில் அடர் மூடுபனியானது குறைவான நீர் துளிகளையும், அதிகமான பார்வை நிலையையும் கொண்டிருந்தால் அதை மூடுபனி என அழைக்கிறோம்.
Question 194 |
அடர் மூடுபனி காற்று மாசுக்களுடன் கலந்து புகைமண்டலமாக மாறுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மூடுபனி | |
பூரித நிலை | |
அடர் மூடுபனி | |
பனிப்புகை |
Question 194 Explanation:
பெரிய தொழிற்சாலைகள் மற்றும் நகரங்கள் அமைந்துள்ள பகுதிகளில் காற்று மாசுகளினால் பனிப்புகை உருவாகிறது. ( புகை + அடர் மூடுபனி = பனிப்புகை ) இது மக்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது.
Question 195 |
மூன்று கோளங்களிலும் நீரின் தொடர்ச்சியான இயக்கத்தை எவ்வாறு அழைக்கிறோம்?
மழைப்பொழிவு | |
ஆவியாதல் | |
நீர் சுழற்சி | |
நீர் சுருங்குதல் |
Question 195 Explanation:
நீர் சுழற்சியானது ஆவியாதல், நீர் சுருங்குதல், மழைப் பொழிவு, கிடைமட்டமாக நகர்தல், இடைமறித்தல், நீராவி போக்கு, ஊடுருவல், வழிந்தோடுது மற்றும் கடலை நோக்கி ஓடுதல் போன்றவற்றை உள்ளடக்கியது ஆகும்.
Question 196 |
சூரியனின் வெப்ப ஆற்றலால் நீரானது திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாறும் செயல்முறையை எவ்வாறு அழைக்கிறோம்?
நீராவி போக்கு | |
ஆவியாதல் | |
நீராவியாகுதல் | |
நீர் சுருங்குதல் |
Question 196 Explanation:
வெப்பநிலை அதிகமாகும் போதோ, பரந்து விரிந்த நீரின் மேற்பரப்பின் மீது வறண்ட காற்று வீசும் போதோ ஆவியாதல் அதிகமாக நடைபெறுகிறது.
Question 197 |
காற்றின் வெப்பநிலை குறையும்போது நீராவி குளிர்ந்து நீர்த்துளியாக மாறுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நீர் சுருங்குதல் | |
மழைப்பொழிவு | |
நீராவி போக்கு | |
நீராவியாதல் |
Question 197 Explanation:
வளிமண்டலத்தில் வெப்பநிலையானது பனி நிலையை அடையும் போது நீர் சுருங்குதல் நிகழ்வு நடைபெறுகிறது. அனைத்து வடிவங்களிலும் காணப்படும் நீர் வளிமண்டலத்தில் இருந்து புவியை நோக்கி விழுவதை மழைப்பொழிவு என்கிறோம். மிக வறண்ட பகுதியில் மழைத்துளியானது தரைப்பகுதியை வந்தடைவதற்கு முன்பே ஆவியாகி விடுகிறது.
Question 198 |
கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
- 1) காற்றானது எப்போதும் அது இருக்கும் இடத்தின் பண்புகளை எடுத்துக் கொள்ளும்.
- 2) பல கிலோ மீட்டர் நீளம், அகலம் மற்றும் தடிமன் கொண்ட மிக அதிக அளவிலான காற்று தொகுதியானது ஒத்த இயற் பண்புகளை கொண்டு எந்த நிலையிலும் கிடைமட்ட திசையில் காணப்படுவது வளிப்பகுதிகள் என வரையறுக்கப்படுகிறது.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 198 Explanation:
வளிப் பகுதிகள் பற்றிய ஆய்வு வானிலையியலில் மிக முக்கியமான பகுதியாகும். காற்றானது இருக்கும் இடத்தின் பண்புகளை எடுத்துக் கொண்டு சில நாட்கள் அப்பரப்பின் மீது நிலைத்திருந்து தனது தன்மையை வளர்த்துக் கொள்ளும் சூழலில் இக்காற்றானது வளிப்பகுதியாக அடையாளப்படுத்தப்படுகிறது.
Question 199 |
விரிவான புவி மேற்பரப்பு பகுதியில் சூழப்பட்ட வளிப்பகுதியை எவ்வாறு அழைக்கிறோம்?
வளிமுகம் | |
வளிப்பகுதி | |
வளிமண்டலம் | |
வளிப்பகுதி மண்டலம் |
Question 199 Explanation:
இம்மண்டலம் நிலம் மற்றும் நீரை ஆதாரமாக கொண்டு உருவாகிறது. எடுத்துக்காட்டாக, சகாரா பாலைவனம், சைபீரியா, வட அமெரிக்காவின் பெரிய சமவெளி, ஐரோப்பாவின் வடக்கு சமவெளி,மேற்கு ஆஸ்திரேலியா, அண்டார்டிகா, கிரீன்லாந்து, ஆர்டிக் பெருங்கடல், வடக்கு மற்றும் தெற்கு பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடலில் ஆகியவை வளிப்பகுதி அமைவதற்கான சாதகமான ஆதார பகுதிகளாகும்.
Question 200 |
கீழ்கண்டவற்றுள் வளிப்பகுதிகளை வகைப்படுத்த காரணி அல்லாதது எது?
அட்ச ரேகை | |
தீர்க்கரேகை | |
வெப்பநிலை | |
நிலைத்தன்மை |
Question 200 Explanation:
வளிப்பகுதிகள் அட்சரேகையில் வெப்ப மண்டல மற்றும் துருவ வளிப்பகுதிகள் எனவும், புவி மேற்பரப்பின் இயல்பை கொண்டு கண்டம் மற்றும் கடல் வளிப்பகுதிகள் எனவும், வெப்ப நிலையைக் கொண்டு வெப்பம் மற்றும் குளிர் வளிப்பகுதிகள் எனவும், நிலைத்தன்மையை கொண்டு நிலையான மற்றும் நிலையற்ற வளிப்பகுதிகள் எனவும் வகைப்படுத்தப்படுகிறது.
Question 201 |
இரண்டு மாறுபட்ட வளிப்பகுதிகளுக்கு இடையிலான பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வளிமுனை | |
இடைவளிமுனை | |
வளிப்பகுதி மண்டலம் | |
வளிமுகம் |
Question 201 Explanation:
இரண்டு வெவ்வேறு இயற் குணங்களை கொண்ட வளிப்பகுதிகள் சந்திக்கும் போது காற்று பகுதி ஒன்றுடன் ஒன்று கலப்பது இல்லை. கனமான வளிப்பகுதி போதும் இலகுவான வளிப்பகுதியுடன் போதும் போதும், வளிமுகத்தின் முன்பகுதி எப்போதும் குளிர்ந்த வளிப்பகுதியின் மீது மேலேறி காணப்படும்.
Question 202 |
கார் திரள் மேகம் கீழ்க்கண்ட எதனால் உருவாகிறது?
கனமான வளிப்பகுதி | |
இலகுவான வளிப்பகுதி | |
குளிர்ந்த வளிப்பகுதி | |
வெப்ப வளிப்பகுதி |
Question 202 Explanation:
குளிர்ந்த வளிப்பகுதி வெகு விரைவாக நகர்ந்து சூடான காற்றை செங்குத்தாக மேலே தள்ளுவதால் அதிக சரிவுடன் கூடிய குளிர் வளிமுகம் உருவாகிறது. இதன் விளைவாக மின்னல் மற்றும் இடியோடு சேர்ந்த அதிக மழையை தரும் கார்திரள் மேகம் உருவாகிறது.
Question 203 |
படை மேகம் மற்றும் கார் படை மேகம் உருவாக காரணமான வளிப்பகுதி எது?
வெப்ப வளிப்பகுதி | |
குளிர்ந்த வளிப்பகுதி | |
கனமான வளிப்பகுதி | |
இலகுவான வளிப்பகுதி |
Question 203 Explanation:
வெப்ப வளிப்பகுதி குளிர் வளிப்பகுதி மீது நகரும் போது அது மென் சரிவை உருவாக்குகிறது. இதை வெப்ப வளிமுகம் என்கிறோம்.
Question 204 |
கீழ்கண்டவற்றுள் வளி முகம் உருவாவதற்கான காரணி எது?
- 1) இரண்டு வேறுபட்ட இயற் குணங்களுடைய வளிப்பகுதிகள் இருக்க வேண்டும்.
- 2) வளிப்பகுதிகளுக்கிடையே மோதல் இருத்தல் வேண்டும்.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 204 Explanation:
நிலநடுக்கோட்டு தாழ்வழுத்தப் பட்டைகள் இரண்டு வியாபாரக் காற்று அமைப்புகளும் சந்தித்தாலும் ஒத்த இயற் குணங்களை கொண்டுள்ளதால் ஒன்றோடொன்று மோதுவதில்லை. மாறுபட்ட வளிப்பகுதிகளைக் கொண்ட இரு துணை துருவ தாழ்வழுத்த பட்டைகள் வளிமுகத்தை உருவாக்குகின்றன.
Question 205 |
அமில மழையில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் காணப்படுவது எது?
நைட்ரஜன் | |
ஹைட்ரஜன் | |
சல்பர் டை ஆக்சைடு | |
அம்மோனியா |
Question 205 Explanation:
இது எரிமலையில் இருந்து வெளிவரும் வாயு மற்றும் மனித நடவடிக்கையால் வெளிவரும் சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு போன்ற சேர்மங்களின் ரசாயன எதிர்வினையால் ஏற்படுகிறது.
Question 206 |
இயல்பான மழையில் கலந்துள்ள அமிலம் எது?
அசிட்டிக் அமிலம் | |
ஹைட்ரோ குளோரிக் அமிலம் | |
நைட்ரிக் அமிலம் | |
கார்போனிக் அமிலம் |
Question 207 |
இயல்பான மழையின் PH மதிப்பு எவ்வளவு?
4.2 | |
4.8 | |
5.6 | |
5.9 |
Question 207 Explanation:
மழையின் மதிப்பு 5.6 க்கும் குறைவாக இருந்தால் அதை அமில மழை என்று அழைக்கிறோம். அமில மழையை குறைப்பதற்கான சிறந்த வழி சூரிய மற்றும் காற்று சக்தியை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களைப் பயன்படுத்துதல் மற்றும் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை குறைத்தல் ஆகும்.
Question 208 |
மேக விதைப்பு முறையில் விமானம் மூலம் மேகங்களின் மீது தூவப்படுவது எது?
நைட்ரஜன் | |
கார்போனிக் அமிலம் | |
சல்பர் டை ஆக்சைடு | |
திட கார்பன் டை ஆக்சைடு |
Question 208 Explanation:
மேகத்தில் தூவப்படும் பனிப்படிவங்கள் ஒன்றிணைந்து திரண்ட மேகங்களாக உருவாகின்றன. இந்த பனி படிகங்கள் வளர்ந்து, கீழே வரும்போது உருகி மழையாக பொழிகிறது. மேகமானது நீராவியால் பூரித நிலையை அடையவில்லை என்றால் மேக விதைப்பு முறையானது வெற்றியடையாது.
Question 209 |
வளிமண்டலத்திலிருந்து விழும் நீர்த்துளியின் விட்டம் எந்த அளவுக்கு அதிகமாக இருந்தால் அதை மழைப்பொழிவு என்கிறோம்?
0.3 மி.மீ | |
0.5 மி.மீ | |
0.7 மி.மீ | |
0.9 மி.மீ |
Question 209 Explanation:
நீர்த்துளியின் விட்டம் 0.5 மில்லிமீட்டருக்கு குறைவாக இருந்தால் அதை தூறல் என்கிறோம். புல் மற்றும் இலைகள் மீது காணப்படும் சிறிய நீர் துளிகளுக்கு பனித் திவலை என்று பெயர்.
Question 210 |
விழும் மழைத்துளி 5 மில்லி மீட்டர் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் அதனை எவ்வாறு அழைக்கிறோம்?
மழை பொழிவு | |
பனி | |
கல் மழை | |
ஆலங்கட்டி மழை |
Question 210 Explanation:
உறைபனி நிலைக்கு கீழே மழை பெய்யும்போது பனி செதில்களாகவோ அல்லது பனி துகள்களாகவோ விழுவதை பனி என்கிறோம்.
Question 211 |
கீழ்கண்டவற்றுள் ஆலங்கட்டி மழையின் உருவ அளவு எது?
20 முதல் 60 மில்லி மீட்டர் வரை | |
10 முதல் 56 மில்லி மீட்டர் வரை | |
5 முதல் 50 மில்லி மீட்டர் வரை | |
3 முதல் 40 மில்லி மீட்டர் வரை |
Question 211 Explanation:
வெப்பநிலை சுழியத்திற்கும் குறைவாக உள்ள நிலையில் நீர்த்துளிகள் மற்றும் பனிப் படிகமாக உருமாறி 5 முதல் 50 மில்லி மீட்டர் அல்லது அதைவிட அதிகமான அளவிலான பனித்துளிகளாக புவி மேற்பரப்பின் மீது விழுவது ஆலங்கட்டி மழை எனப்படுகிறது.
Question 212 |
காற்று மேலெழும்புவதற்கான காரணங்களின் அடிப்படையில் மழைப் பொழிவை எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
2 | |
3 | |
4 | |
5 |
Question 212 Explanation:
. மழைப்பொழிவு மேலெழும்புவதற்கான காரணங்களின் அடிப்படையில் வெப்பச்சலன மழை, மலை தடை மழை மற்றும் சூறாவளி மழை அல்லது வளிமுக மழை என வகைப்படுத்தப்படுகிறது.
Question 213 |
காற்று மேலே உயர்ந்து குளிர்ந்து பனி புள்ளி நிலையை அடைந்து சுருங்கும் செயல்முறை எந்த அடுக்கில் நடைபெறுகிறது?
அயனி அடுக்கு | |
அடி அடுக்கு | |
படை அடுக்கு | |
வெளி அடுக்கு |
Question 213 Explanation:
மேற்பரப்பில் உள்ள ஈரமான காற்று வெப்பம் காரணமாக விரிவடைந்து அதிகமான உயரத்திற்கு தள்ளப்படுகிறது. பனி புள்ளி நிலையை அடைந்து சுருங்கும் மேகம் அடி அடுக்கின் மேல் பகுதியில் சுழற்சியை ஏற்படுத்தி மேலும் குளிரடைந்து மழை பொழிவை ஏற்படுத்துவது வெப்பச்சலன மழை எனப்படும்.
Question 214 |
கீழ்கண்டவற்றுள் 4 மணி மழை பொழிவு என்று அழைக்கப்படுவது எது?
வெப்பச்சலன மழை | |
மலைத் தடைமழை | |
சூறாவளி மழை | |
வளிமுக மழை |
Question 214 Explanation:
இந்த மழை பிற்பகலில் பூமத்தியரேகைக்கு அருகில் உள்ள பகுதிகளில் ஆண்டு முழுவதும் ஏற்படுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. மத்திய அட்ச ரேகை பகுதியில் உள்ள கண்டங்களின் உட்பகுதிகளில் கோடை கால ஆரம்பத்தில் வெப்பச்சலன மழை ஏற்படுகிறது.
Question 215 |
மலைத் தடை மழை எப்போது உருவாகிறது?
உயரமான மலைத் தொடர் போன்ற நிலத் தோற்றத்திற்கு இணையாக காற்று மோதி உயரும்போது | |
உயரமான மலைத் தொடர் போன்ற நில தோற்றத்தின் மேற்கே காற்று மோதி உயரும்போது | |
உயரமான மலைத் தொடர் போன்ற நில தோற்றத்தின் வடக்கே காற்று மோதி உயரும்போது | |
உயரமான மலைத் தொடர் போன்ற நில தோற்றத்தின் குறுக்கே காற்று மோதி உயரும்போது |
Question 215 Explanation:
மழை பெறும் பகுதி அல்லது முகப்பு பகுதியில் வெப்பமான ஈரக்காற்று உயரே சென்று வெப்பநிலை பனி புள்ளி நிலையை அடையும்போது மேகங்கள் உருவாகி மழையைத் தருகிறது. காற்று இறங்கும் பகுதியை அடையும் இக்காற்றானது வறண்டு காணப்படுவதால் மழையைத் தருவதில்லை. எனவே இப்பகுதி மலை மறைவுப் பிரதேசம் என அழைக்கப்படுகிறது.
Question 216 |
சூறாவளி மழைப்பொழிவு கீழ்க்கண்ட எந்த மேகத்துடன் தொடர்புடையது?
கீற்று மேகம் | |
கீற்று திரள் மேகம் | |
கார்திரள் மேகம் | |
உயர் திரள் மேகம் |
Question 216 Explanation:
இவ்வகை மழைப்பொழிவு சூறாவளியோடு (வெப்ப மண்டல மற்றும் துணைவெப்ப மண்டல சூறாவளி ) தொடர்புடையது. இது வளிமுகப் பகுதியிலும் ஏற்படுகிறது.
Question 217 |
கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
- 1) வெவ்வேறு காற்று வளிப் பகுதிகள் கலப்பதால் வளிமுக மழைப்பொழிவு ஏற்படுகிறது.
- 2) வெப்ப வளிமுகத்திலிருந்து வெளிவரும் வெப்பமான காற்று தொகுதிகள் மிதமான மழைக்கு வழிவகுக்கிறது.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 217 Explanation:
மேலும் குளிர் வளி முகத்தில் இருந்து வெளிவரும் குளிர்காற்று தொகுதிகள் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையை கொடுக்கிறது.
Question 218 |
மலைத் தடைமழை முறையில் உயரம் அதிகரிக்கும் போது மழைப்பொழிவு எவ்வாறு மாறுபடுகிறது?
குறையும் | |
அதிகரிக்கும் | |
மாறாதிருக்கும் | |
எதுவும் இல்லை |
Question 218 Explanation:
அதிகமான மழை பெய்யும் உயரமான பகுதி அதிக மழை கோடு எனப்படும். இக் கோட்டிற்கு மேல் ஈரப்பதம் குறைய தொடங்குவதால் மழையானது உயரம் அதிகரிக்கும் போது குறைகிறது. இந்த நிலை மழையின் தலைகீழ் நிலை எனப்படும்.
Question 219 |
ஒரு புள்ளியில் எதன் அளவு குறையும் முன்னர் அதிக மழைப்பொழிவை ஏற்படுத்துவது அதிகபட்ச மழைக்கோடு என அழைக்கப்படுகிறது?
வெப்பநிலை | |
அழுத்தம் | |
காற்று | |
ஈரப்பதம் |
Question 219 Explanation:
அதிகபட்ச மழை கோடு நிலையில் உயரத்திற்கு ஏற்ப குறைந்த மழை பொழிவை மழைப்பொழிவின் தலைகீழ் மாற்றம் என அழைக்கிறோம்.
Question 220 |
குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரே அளவு மழை பெய்யும் பகுதிகளை இணைக்கும் கற்பனைக் கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மழைக் கோடு | |
நில வரைபடம் | |
சம மழைக்கோடு | |
சம மழைப்பகுதிகள் |
Question 220 Explanation:
சம மழைக் கோடு உள்ள வரைபடத்தை சம மழைக்கோடு நில வரைபடம் என அழைக்கிறோம்.
Question 221 |
மேக வெடிப்பினால் பெய்யும் மழை அளவு பொதுவாக ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு அளவில் இருக்கும்?
100 மி.மீ | |
150 மி.மீ | |
200 மி.மீ | |
250 மி.மீ |
Question 221 Explanation:
மேக வெடிப்பு என்பது ஒரு சிறிய புவிப்பரப்பில் குறுகிய காலத்திற்குள் திடீரென்று பெய்யும் மிக அதிக அளவு மழை ஆகும். இது ஒரு மணி நேரத்திற்கு 100 மில்லி மீட்டர்(3.94 அங்குலம் ) அல்லது அதற்கும் அதிகமான அளவில் இருக்கும். இது இடியுடன் தொடர்புடையதாகும். எடுத்துக்காட்டாக உத்தரகாண்ட் (2013 ) மற்றும் சென்னை (2015 ) ல் ஏற்பட்ட மேகவெடிப்பு.
Question 222 |
கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
- 1) மேகத்தின் மேல் பகுதி நேர் மின்னூட்டத்தையும் அதன் கீழ்ப்பகுதி எதிர் மின்னூட்டத்தையும் பெறுகிறது.
- 2) இடி வெப்பமான காற்று வேகமாக விரிவடைந்து சுருங்குவதால் மின்னலை தொடர்ந்து இடி உருவாகிறது.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 222 Explanation:
மேகத்திற்கும் புவியின் மேற்பரப்பிற்கும் இடையே உள்ள வேறுபட்ட மின்னூட்டம் காரணமாக மின்னல் உருவாகிறது.
Question 223 |
கீழ்கண்டவற்றுள் வளிமண்டல இடையூறுகள் என்று அழைக்கப்படுவது எது?
உயரழுத்தத்தை மையப்பகுதியிலும் தாழ் அழுத்தத்தை வெளிப்பகுதியிலும் கொண்ட மூடிய காற்று சுழற்சி | |
தாழ் அழுத்தத்தை மையப்பகுதியிலும் உயரழுத்தத்தை வெளிப்பகுதியிலும் கொண்ட மூடிய காற்று சுழற்சி | |
உயரழுத்தத்தை மத்தியிலும் தாழ் அழுத்தத்தை மையப்பகுதியிலும் கொண்ட மூடிய காற்று சுழற்சி | |
தாழ் அழுத்தத்தை மத்தியிலும் உயரழுத்தத்தை மையப்பகுதியிலும் கொண்ட மூடிய காற்று சுழற்சி |
Question 223 Explanation:
இது வட அரைக்கோளத்தில் கடிகாரம் எதிர் திசையிலும் தென் அரைக்கோளத்தில் கடிகார திசையிலும் சுழல்கிறது. இதனை சூறாவளி என்கிறோம்.
Question 224 |
சூறாவளிகள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
2 | |
3 | |
4 | |
5 |
Question 224 Explanation:
அட்சரேகை மற்றும் தோற்றத்தின் அடிப்படையில் சூறாவளிகள் வெப்பமண்டல சூறாவளி மற்றும் மிதவெப்ப மண்டல சூறாவளி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
Question 225 |
வெப்பமண்டல சூறாவளி எங்கு உருவாகிறது?
உயர் அட்சரேகையில் | |
தாழ் அட்சரேகையில் | |
உயர் தீர்க்க ரேகையில் | |
தாழ் தீர்க்கரேகையில் |
Question 225 Explanation:
அவை வெப்ப மண்டலப் பகுதிக்கு அருகில் பெருங்கடலின் வெப்பமான நீரின் மீது உருவாகின்றன. வெப்பக்காற்று மேலெழும்பி தாழ்வழுத்த பகுதியை உருவாக்குகிறது.
Question 226 |
பொருத்துக.
- 1) மணிக்கு 31 கி.மீ முதல் 61 கி.மீ - அ) அதிவேக புயல்
- 2) மணிக்கு 62 கி.மீ முதல் 88 கி.மீ - ஆ) வெப்பமண்டல தாழ்வழுத்த பகுதி
- 3) மணிக்கு 89 கி.மீ முதல் 118 கி.மீ - இ) மிக அதிவேக புயல்
- 4) மணிக்கு 119 கி.மீ முதல் 221 கி.மீ - ஈ) வெப்பமண்டல புயல்
1-ஆ; 2-இ; 3-ஈ; 4-அ | |
1-இ ; 2-ஈ ; 3-ஆ; 4-அ | |
1-ஆ; 2-ஈ; 3-அ; 4-இ | |
1-ஈ; 2-அ; 3-ஆ; 4-இ |
Question 226 Explanation:
மேலும் தாழ்வழுத்த அமைப்புகள் மணிக்கு 220 ஒரு கிலோ மீட்டருக்கு மேல் வேகம் கொண்ட மிக மிக அதிவேக புயல் மற்றும் வெப்ப மண்டல இடையூறுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
Question 227 |
வெப்பமண்டல பெருங்கடல் பகுதியில் எவ்வளவு வெப்பநிலை இருந்தால் சூறாவளி தோன்றும்?
27° செல்சியஸ் | |
35° செல்சியஸ் | |
42° செல்சியஸ் | |
53° செல்சியஸ் |
Question 227 Explanation:
இயல்பாக 27° செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமாக உள்ள வெப்பநிலையுடன் காணப்படும் வெப்பமண்டல பெருங்கடல் பகுதியில் மேற்பரப்பில் இருந்து வரும் வெப்பமான காற்று சூறாவளி தோன்ற ஆதாரமாக உள்ளது.
Question 228 |
உயர வேறுபாடு இல்லாத காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வளிமுகம் | |
புயல் | |
அதிக காற்று வெட்டு | |
குறைந்த காற்று வெட்டு |
Question 228 Explanation:
இது புயல் மேகங்கள் செங்குத்தாக அதிக உயரத்திற்கு செல்ல உதவுகிறது. பெருங்கடலின் மேற்பரப்பிற்கு அருகில் வெவ்வேறு திசைகளில் இருந்து வரும் காற்று குளிர்ந்து மேலெழும்பி புயல் மேகங்களை உருவாக்குகிறது.
Question 229 |
கீழ்க்கண்டவற்றுள் வெப்பமண்டல தாழ் அழுத்தம் ஒரு வெப்ப மண்டல புயலாகவும் பின்னர் சூறாவளி மற்றும் மிக அதிவேக சூறாவளியாக உருவாக காரணமான விசை எது?
புவியீர்ப்பு விசை | |
கொரியாலிஸ் விசை | |
புவியின் மின்காந்த விசை | |
சூரியனின் ஈர்ப்பு விசை |
Question 229 Explanation:
கொரியாலிஸ் விசையினால் புயல் உருவாக்கத்தின் முறைகள் உலக அளவில் அதிகம் வேறுபடுகின்றன. ஆனால் புயல் மேகங்கள் மொத்தமாக சுற்றத் தொடங்கும் போது அது ஒரு வெப்ப மண்டல அழுத்தமாக மாறுகிறது.
Question 230 |
சூறாவளியின் மையப் பகுதியில் காற்று தொகுதி செங்குத்தாக உயரும் பகுதியை எவ்வாறு அழைக்கிறோம்?
சூறாவளியின் சுவர் | |
சூறாவளியின் பாதை | |
சூறாவளியின் திசை | |
சூறாவளியின் கண் |
Question 230 Explanation:
சூறாவளியின் கண் என்பது ஒரு அமைதியான பகுதியாகும். மேலும் அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த அழுத்தத்தை கொண்டிருக்கும் மழைப்பொழிவு இல்லாத பகுதியாகும்.
Question 231 |
சூறாவளி சுவர் என்பது கீழ்க்கண்ட எந்த வகை மேகங்களால் ஆன பகுதியாகும்?
கார் படை மேகங்கள் | |
கீற்று மேகங்கள் | |
கார் திரள் மேகங்கள் | |
கீற்று திரள் மேகங்கள் |
Question 231 Explanation:
சூறாவளி சுவர் என்பது காணும் நிலை இல்லாத அதிகவேக காற்றுடன், மின்னல், இடி மற்றும் அதிக மழை பொலிவுடன் கூடிய கார் திரள் மேகங்களால் ஆன பகுதியாகும்.
Question 232 |
வெப்ப மண்டல சூறாவளிகள் பெரும்பாலும் எந்த காற்றின் திசையுடன் நகரும்?
தல காற்று | |
வியாபார காற்று | |
மேற்கத்திய காற்று | |
வறண்ட காற்று |
Question 232 Explanation:
வெப்ப மண்டல சூறாவளிகள் வியாபார காற்றுடன் நகர்வதால் அவை கிழக்கிலிருந்து மேற்காக நகர்ந்து கண்டங்களின் கிழக்கு கடற்கரையில் கரையை கடக்கிறது. வெப்பமண்டல சூறாவளியின் கண் பகுதி நிலத்தை அடைவதை சூறாவளி கரையை கடத்தல் என்கிறோம்.
Question 233 |
எந்த ஆண்டு முதல் அட்லாண்டிக் வெப்ப மண்டல புயல்கள் தேசிய சூறாவளி மையத்தால் உருவான பட்டியலில் இருந்து பெயரிடப்பட்டுள்ளன?
1885 | |
1899 | |
1953 | |
1967 |
Question 233 Explanation:
இப்போது உலக வானிலையியல் அமைப்பின் சர்வதேச குழுவால் நிர்வகிக்கப்பட்டு மேம்படுத்தப்படுகின்றன.
Question 234 |
1999 ஆம் ஆண்டு எங்கு ஏற்பட்ட சூறாவளி காரணமாக வட இந்திய பெருங்கடலில் உருவாகும் வெப்ப மண்டல சூறாவளிகளை பெயரிடுவதற்கான அவசியம் தோன்றியது?
ஒடிசா | |
மேற்கு வங்காளம் | |
ஆந்திரப் பிரதேசம் | |
குஜராத் |
Question 235 |
நீர்ப் பகுதிகளில் சுழல் காற்றின் தோற்றம் மற்றும் வடிவம் போன்று உருவாகும் நீர் சுழற்சியை எவ்வாறு அழைக்கிறோம்?
புயல் | |
சூறாவளி | |
நீர் சுழல் | |
சுழல் காற்று |
Question 235 Explanation:
நீர் சுழல் காற்றுக்கு கீழே அதிக அளவு மீன்கள் வருமேயானால் இது சில நேரங்களில் மீன் மலைக்கு வழிவகுக்கும்.
Question 236 |
இயக்க சூறாவளி மற்றும் அலை சூறாவளி என அழைக்கப்படுவது எது?
வெப்பமண்டல சூறாவளி | |
மிதவெப்ப மண்டல சூறாவளி | |
துருவ சூறாவளி | |
தாழ்வழுத்த சூறாவளி |
Question 236 Explanation:
மித வெப்ப மண்டலத்தில் உருவாகும் சூறாவளிகள் மிதவெப்பமண்டல சூறாவளி என்று அழைக்கப்படுகிறது. அவை காற்று வளிப்பகுதி மற்றும் காற்று வளிமுகங்கள் நகர்வதன் காரணமாக உருவாவதால் இயக்கம் மற்றும் அலை சூறாவளி என்று அழைக்கப்படுகிறது.
Question 237 |
கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
- 1) வளிமுகம் தோன்றல் - இரண்டு வெவ்வேறு வளிப் பகுதிகள் மோதுதல் காரணமாக வளிமுகம் உருவாகுகிறது.
- 2) சூறாவளி தோற்றம் - வெவ்வேறு பகுதிகளுடைய வளிமுகங்கள் மாற்றமடைவதால் உருவாகும் சூறாவளி.
- 3) முன்னேறும் நிலை - இந்த நிலையில் குளிர் வளிமுகம் வெப்ப வளிமுகத்தை நோக்கி முன்னேறிச் செல்கிறது.
- 4) இடையுறு நிலை - இந்நிலையில் வெப்ப வளிமுகத்தை குளிர் வளிமுகம் கடந்து முன் செல்கிறது.
1, 2 & 3 | |
2, 3 & 4 | |
1, 3 & 4 | |
அனைத்தும் சரி |
Question 237 Explanation:
மித வெப்ப மண்டல சூறாவளிகள் வெவ்வேறு வானிலை தன்மைகளைக் கொண்ட நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது. இறுதியாக வளிமுகங்கள் மறைந்து சூறாவளி வலுவிழப்பது வளிமுகம் மறையும் நிலை எனப்படுகிறது.
Question 238 |
கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடுக்கவும்.
- 1) மித வெப்ப மண்டல சூறாவளிகள் வெப்ப மண்டல சூறாவளி போல் அல்லாமல் அனைத்து பருவங்களிலும் நிலம் மற்றும் நீர் இரண்டிலும் உருவாகிறது.
- 2) வெப்ப மண்டல சூறாவளியை விட மிதவெப்ப மண்டல சூறாவளி பெரிய பகுதியை உள்ளடக்கியது.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 238 Explanation:
மித வெப்ப மண்டல சூறாவளிகள் நீண்டகாலம் நீடித்திருக்க கூடியது. இவை மேற்கத்திய காற்றுகளால் மேற்கிலிருந்து கிழக்காக நகர்கின்றன.
Question 239 |
கீழ்க்கண்டவற்றுள் எதிர் சூறாவளி என்பது எது?
சுழல் காற்றின் மையப்பகுதியில் உயர் அழுத்தமும் அதனைச் சுற்றி தாழ் அழுத்தமும் இருக்கும் | |
சுழல் காற்றின் மையப்பகுதியில் குறைவழுத்தமும் அதனைச் சுற்றி உயர் அழுத்தமும் இருக்கும் | |
சுழல் காற்றின் வெளிப்பகுதியில் தாழ்வழுத்தமும் அதனைச் சுற்றி உயர் அழுத்தமும் காணப்படும் | |
சுழல் காற்றின் வெளிப்பகுதியில் உயர் அழுத்தமும் அதனைச் சுற்றி தாழ்வழுத்தமும் காணப்படும் |
Question 239 Explanation:
இதன் சுழற்சி வட அரைக்கோளத்தில் கடிகார திசையிலும் தென் அரைக்கோளத்தில் கடிகார எதிர் திசையிலும் சுழல்கிறது.
Question 240 |
கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
- 1) எதிர் சூறாவளி உலகில் உள்ள சுழல் காற்று அமைப்புகளில் மிகச் சிறியது ஆகும்.
- 2) எதிர் சூறாவளிகள் துணை வெப்பமண்டல மற்றும் துணை துருவப்பகுதிகளில் உருவாகின்றன.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 240 Explanation:
எதிர் சூறாவளிகள் தான் உலகில் உள்ள சுழல் காற்று அமைப்புகளில் மிகப்பெரியது ஆகும். இதில் சூறாவளிகள் வெப்பநிலை அடிப்படையில் வெப்ப மைய மற்றும் குளிர்மைய எதிர் சூறாவளிகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை முறையே வறட்சி மற்றும் குளிர் அலைகளை தோற்றுவிக்கின்றன.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 240 questions to complete.