Online TestScience
11th 12th Science Part 2 Notes Questions in Tamil
11th 12th Science Part 2 Notes Questions in Tamil - அணுக்கரு இயற்பியல்
Congratulations - you have completed 11th 12th Science Part 2 Notes Questions in Tamil - அணுக்கரு இயற்பியல்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
அணுக்கரு எப்போது யாரால் கண்டறியப்பட்டது?
ரூதர்போர்டு, 1911 | |
சாட்விக், 1911 | |
லாவாய்சியர், 1913 | |
ராண்டஜன், 1913 |
Question 1 Explanation:
குறிப்பு: ஆல்பா துகளின் சோதனையில் இருந்து அணுவின் நிறை மற்றும் நேர்மின்னூட்டம் அதன் மையத்தில் உள்ள ஒரு சிறிய பகுதியில் செறிந்திருக்கும் என்று ரூதர்போர்டு கண்டறிந்தார்.
Question 2 |
அணுக்கருவின் அளவு எதனோடு ஒப்பிடப்படுகிறது?
அணுவின் பாதியளவோடு | |
அணுவின் நிறையில் 3/4 | |
அணுவின் நிறையில் 1/4 பங்கு | |
அணுவின் முழு அளவு |
Question 2 Explanation:
குறிப்பு: அணுவின் மொத்த அளவோடு ஒப்பிடும் போது அணுக்கருவின் அளவானது மிகச் சிறியதாகும்
Question 3 |
அணுக்கரு துகள்கள் என்பவை எவை?
புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்கள் | |
நியூட்ரான்கள் மற்றும் புரோட்டன்கள் | |
நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்கள் | |
எலக்ட்ரான்கள் மட்டும் |
Question 3 Explanation:
குறிப்பு: அணுக்கரு அடிப்படை துகள்களான புரோட்டான்களையும், நியூட்ரான்களையும் கொண்டுள்ளது. இத்துகள்கள் அணுக்கரு துகள்கள் எனப்படும்.
Question 4 |
புரோட்டான், எலக்ட்ரானின் நிறையைப் போல ------------- மடங்கு நிறையை கொண்டது.
1500 மடங்கு | |
1836 மடங்கு | |
1900 மடங்கு | |
1868 மடங்கு |
Question 4 Explanation:
குறிப்பு: புரோட்டானது எலக்ட்ரானின் மின்னூட்ட்த்திற்கு சமமான நேர் மின்னூட்டத்தையும், எலக்ட்ரானின் நிறையைப் போல ஏறக்குறைய 1836 மடங்கு நிறையையும் கொண்டது.
Question 5 |
புரோட்டனின் நிறையினை கொண்ட நியூட்ரான் ஒரு ---------------- துகள் ஆகும்
நேர்மின் | |
எதிர்மின் | |
நடுமின்நிலைதுகள் | |
மின் சுமையற்றது. |
Question 5 Explanation:
குறிப்பு: நியூட்ரானின் நிறையானது புரோட்டானின் நிறைக்கு சமம். மேலும் நியூட்ரான் ஒரு மின்நடுநிலைத் துகள் ஆகும்.
Question 6 |
அணுக்கருவினுள் உள்ள அணுக்கரு துகள்கள் ------------------- விசையால் பிணைக்கப்பட்டுள்ளன.
நிலைமின்னியல் விசை | |
ஈர்ப்பு விசை | |
அணுக்கரு விசை | |
மையநோக்கு விசை |
Question 6 Explanation:
குறிப்பு: ஒவ்வொரு அணுக்கருவினுள் உள்ள அணுக்கருத்துகள் அணுக்கரு விசை என்ற வலிமையான கவர்ச்சி விசையால் பிணைக்கப்பட்டுள்ளன.
Question 7 |
zXA என்பது எதனை குறிக்கப் பயன்படுகிறது?
தனிமத்தின் எலக்ட்ரான்கள் | |
தனிமத்தின் புரோட்டான்கள் | |
தனிமத்தின் அணுக்கரு | |
தனிமத்தின் நியூட்ரான்கள் |
Question 7 Explanation:
குறிப்பு: ஒரு தனிமத்தின் அணுக்கரு zXA என்று குறிக்கப்படுகின்றது. இதில் X என்பது தனிமத்தின் வேதிக் குறியீடு. Z என்பது அணு எண். இது புரோட்டான்களின் எண்ணிக்கைக்கு சம்ம். A என்பது நிறை எண். இது புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கைக்குச் சமம்.
Question 8 |
குளோரினின் நியூட்ரான்களின் எண்ணிக்கை எவ்வளவு?
16 | |
14
| |
19 | |
18 |
Question 8 Explanation:
குறிப்பு: குளோரின் அணுக்கரு 17Cl35 எனக் குறிப்பிடப்படும். N = (A – Z) ஃ N = 35-17 = 18, அதாவது நியூட்ரான்களின் எண்ணிக்கை(N) ஆனது (A-Z)க்கு சமம்.
Question 9 |
சம எண்ணிக்கையுள்ள புரோட்டான்களையும், வேறுப்பட்ட எண்ணிக்கையுள்ள நியூட்ரான்களையும் கொண்டிருக்கும் தனிமங்களின் அணுக்கள் ----------------- என்று அழைக்கப்படுகிறது?
ஐசோபார்கள் | |
ஐசோடோப்புகள் | |
ஐசோடோன்கள் | |
ஐசோப்புகள் |
Question 10 |
ஐசோடோப்புகள் தனிம வரிசை அட்டவணையில் ஒரே இடத்தில் அமையும், இதன் காரணம் என்ன?
வேறுப்பட்ட பண்புகளை கொண்டுள்ளதால் | |
சமமான அணு எண்ணை கொண்டுள்ளதால் | |
வேறுபட்ட நிறை எண்ணை கொண்டதால் | |
ஒத்த வேதிப் பண்புகளை கொண்டதால் |
Question 10 Explanation:
குறிப்பு: ஐசோடோப்புகளின் அணுக்களின் எலக்ட்ரான் அமைப்பு ஒரே மாதிரியாக அமையுமாதலால் அவை ஒத்த வேதிப்பண்புகளை கொண்டிருக்கும். எனவே தனிம வரிசை அட்டவணையில் ஒரே இடத்தில் அமையும்
Question 11 |
ஐசோபார்கள் என்பது என்ன?
- A] சமமான நிறை எண்ணை கொண்டவை
- B] மாறுப்பட்ட அணு எண்ணை கொண்டவை
- C] வெவ்வேறு தனிமத்தின் அணுக்கள்
- D] இயற்பியல் மற்றும் வேதிப்பண்புகள் மாறுபட்டு அமையும்.
1 மற்றும் 2 சரி | |
2 மற்றும் 3 சரி | |
4 மட்டும் சரி | |
அனைத்தும் சரி |
Question 11 Explanation:
குறிப்பு: சமமான நிறை எண்ணையும் மாறுபட்ட அணு எண்ணையும் கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஆகும்.
Question 12 |
சம எண்ணிக்கையில் அமைந்த நியூட்ரான்களை கொண்டுள்ள வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
ஐசோடப்புகள் | |
ஐசோபார்கள் | |
ஐசோடோன்கள் | |
ஐசோப்புகள் |
Question 12 Explanation:
குறிப்பு: சம எண்ணிக்கையில் அமைந்த நியூட்ரான்களை கொண்டுள்ள வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோடோன்கள் அழைக்கப்படுகின்றன.
Question 13 |
ரூதர்போர்டின் ஆல்பா சிதறலின்படி மீச்சிறு தொலைவு என்பது எதனைக் குறிக்கிறது?
அணுக்கருவின் விட்டம் | |
அணுக்கருவின் பரப்பு | |
அணுக்கருவின் ஆரம் | |
அணுக்கருவின் சுற்றளவு |
Question 13 Explanation:
குறிப்பு: ஆல்பா துகள்கள் அணுக்கருவை அணுகும் மீச்சிறு தொலைவு அணுக்கருவின் ஆரமாகும். இதன் மதிப்பு 10-15m.
Question 14 |
R = roA1/3 என்ற எண்மான சமன்பாட்டில் ro மதிப்பு என்ன?
1.5F | |
1.6F | |
1.3F | |
1.9F |
Question 14 Explanation:
குறிப்பு: அணுக்கருவின் ஆரம் R மற்றும் நிறை A, ro என்பது விகித மாறிலி. F ன் மதிப்பு = 10-15m.
Question 15 |
அணுக்கருவின் நிறை மற்றும் அளவினைக் கொண்டு ----------------- கணக்கிடப்படுகிறது?
அணுக்கருவின் பருமன் | |
அணுக்கருவின் அடர்த்தி | |
அணுக்கருவின் நிறை | |
அணுக்கருவின் பரப்பு |
Question 15 Explanation:
குறிப்பு: அணுகருவின் அடர்த்தி என்பது அணுக்கரு நிறையினை, அணுக்கரு பருமனால் வகுக்க கிடைப்பதாகும். அணுக்கருவின் பருமன் = 4/3 (πR3)
Question 16 |
அணுக்கரு அடர்த்தியின் மதிப்பு என்ன?
1.816* 1017 | |
1.566* 1017 | |
1.853* 1017 | |
1.786* 1017 |
Question 16 Explanation:
குறிப்பு: அணுக்கரு அடர்த்தியின் உயர் மதிப்பு அணுக்கருவினுள் பருப்பொருள் அதிகளவில் திணிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது என்பதை காட்டுகிறது.
Question 17 |
அணுக்கருவின் உள்ளே அணுக்கரு மின்னூட்டத்திற்கு முக்கிய காரணம்?
அணுவின் எலக்ட்ரான்கள் | |
அணுவின் நியூட்ரான்கள் | |
அணுவின் புரோட்டான்கள் | |
அணுக்கரு அடர்த்தி |
Question 17 Explanation:
குறிப்பு: அணுக்கருவின் உள்ளே அணுக்கரு மின்னூட்டத்திற்கு முக்கிய காரணம் புரோட்டன்கள் ஆகும். ஒவ்வொரு புரோட்டானும் 1.6 * 10-19C ஆகும்.
Question 18 |
கார்பன் அணுவின் நிறையில் எத்தனை பங்கு ஒரு அணுவின் நிறைக்கு சமமாக அமையும்?
1/15 பங்கு | |
1/13 பங்கு | |
1/12 பங்கு | |
1/17 பங்கு |
Question 19 |
1 amu என்பது எதனைக் குறிக்கிறது?
- A] 1.55 * 10-36
- B] 1.75 * 10-36
- C] 1.66 * 10-27
- D] 1.58 * 10-36
A | |
B | |
C | |
D |
Question 20 |
ஹைட்ரஜன் அணுவின் நிறைக்கும் எலக்ட்ரானின் நிறைக்கும் உள்ள வேறுபாடு ---------------------- க்கு சமம்.
எலக்ட்ரானின் நிறை | |
புரோட்டானின் நிறை | |
நியூட்ரானின் நிறை | |
எலக்ட்ரான் மற்றும் புரோட்டானின் |
Question 20 Explanation:
குறிப்பு: புரோட்டனின் நிறையானது 1.007276amu ஆகும். நியூட்ரானின் நிறை 1.008665amu.
Question 21 |
E = mc2 என்ற சமன்பாட்டில் c என்பது எதனைக் குறிக்கிறது.
3*108ms-1 | |
4*108ms-1 | |
5*108ms-1 | |
8*108ms-1 |
Question 21 Explanation:
குறிப்பு: மேலே குறிப்பிட்ட சமன்பாடு என்பது ஐன்ஸ்டினின் நிறை ஆற்றல் இணைமாற்று சமன்பாடு ஆகும்.
Question 22 |
ஒரு வோல்ட் மின்னழுத்த வேறுபாட்டால் எலக்ட்ரான் பெறும் ஆற்றல் ------------ ஆகும்.
எலக்ட்ரான் வோல்ட் | |
எலக்ட்ரான் மின்னழுத்தம் | |
எலக்ட்ரான் அழுத்தம் | |
எலக்ட்ரானின் மின்னூட்டம் |
Question 22 Explanation:
குறிப்பு: எலக்ட்ரான் வோல்ட் எனப்படுவது ஒரு வோல்ட் மின்னழுத்த வேறுபாட்டால் எலக்ட்ரான் பெறும் ஆற்றல் ஆகும். இதனை (eV) குறிக்கப்படுகிறது.
Question 23 |
1amu என்பது எதற்கு சமம்.
931MeV | |
941MeV | |
981MeV | |
962MeV |
Question 23 Explanation:
குறிப்பு: amu என்பது atomic mass unit – அணுநிறை அலகு ஆகும்.
Question 24 |
எதன் நிறை, அதில் அடங்கியுள்ள துகள்களின் நிறைக்கு சமமாக கருதப்படுகிறது?
புரோட்டான்கள் | |
எலக்ட்ரான்கள் | |
நியூட்ரான்கள் | |
அணுவின் நிறை |
Question 24 Explanation:
குறிப்பு: அணுக்கருவானது புரோட்டான்களையும், நியூட்ரான்களையும் கொண்டிருப்பதால் அணுக்கருவின் நிறையானது அதில் அடங்கியுள்ள நிறைக்கு சமமாக கருதப்படுகிறது.
அணுக்கரு நிறை = Zmp +Nmp.
Question 25 |
அணுக்கருவில் உள்ள அணுக்கரு துகளின் மொத்த நிறைக்கும், அணுக்கருவின் உண்மை நிறைக்கும் இடையே உள்ள வேறுபாடு ---------------- எனப்படும்.
நிறை எண் | |
நிறை வழு | |
நிறை | |
மொத்த நிறை |
Question 25 Explanation:
குறிப்பு: அணுக்கருவில் உள்ள அணுக்கரு துகளின் மொத்த நிறைக்கும், அணுக்கருவின் உண்மை நிறைக்கும் இடையே உள்ள வேறுபாடு நிறைவழு எனப்படும்.
Question 26 |
புரோட்டான்களும், நியூட்ரான்களும் சேர்ந்து அணுக்கரு உருவாகும்போது மறையும் நிறையானது ……………………………?
உள்ளிழுத்து கொள்ளப்படுகிறது | |
சமமான ஆற்றலாக மாற்றப்படுகிறது | |
ஆற்றலை இழந்து விடுகிறது | |
ஆற்றலை வெளிவிடுவது இல்லை |
Question 26 Explanation:
குறிப்பு: புரோட்டான்களும், நியூட்ரான்களும் சேர்ந்து அணுக்கரு உருவாகும்போது மறையும் நிறையானது சமமான ஆற்றலாக மாற்றப்படுகிறது. இந்த ஆற்றல் அணுக்கரு பிணைப்பாற்றல் எனப்படும்.
Question 27 |
அணுக்கரு துகள்களில் பெரும மதிப்பு கொண்ட தனிமம் எது?
அயோடின் | |
இரும்பு | |
தாமிரம் | |
நிக்கல் |
Question 27 Explanation:
குறிப்பு: அணுக்கரு துகளின் பெரும மதிப்பு 8.8MeV. இது இருப்பின் அணுக்கரு நிலையாகும். இரும்பு அனைத்து தனிமங்களைவிட அதிக நிலைப்பு தன்மை கொண்டது.
Question 28 |
கதிரியக்கத்திற்கு உட்படாத அணுக்கருவின் நிறை எண் எவ்வளவு?
40-120 | |
50-80 | |
80-100 | |
120மேல் |
Question 28 Explanation:
குறிப்பு: நிறை எண் 40 மற்றும் 120க்கும் இடைப்பட்ட அணுக்கருக்களின் சராசரி பிணைப்பு ஆற்றல் 8.5MeV ஆக இருக்கும். இவற்றின் நிலைப்பு தன்மை அதிகமானதாக இருக்கும். இவை கதிரியத்திற்கு உட்படாது.
Question 29 |
நிலைப்பாடற்ற, கதிரியக்கத்திற்கு உட்படும் தனிமம் எது?
யுரேனியம் | |
தாமிரம் | |
லித்தியம் | |
காரீயம் |
Question 30 |
இலேசான மற்றும் கனமான அணுக்கருக்களின் -------------- ஆற்றல் அணுக்கரு பிளவு மற்றும் அணுக்கரு இணைவினை உருவாக்குகிறது.
குறைவான பிணைப்பு ஆற்றல் | |
அதிகமான கவர்ச்சி ஆற்றல் | |
அதிகமான பிணைப்பு ஆற்றல் | |
குறைவான ஈர்ப்பு ஆற்றல் |
Question 31 |
ஐசோடோப்புகளின் நிறையினை காண பயன்படும் அமைப்பு?
கூலிட்ஜ் குழாய் அமைப்பு | |
பெயின்பிரிட்ஜ் நிறை நிறமாலைமானி | |
மில்லிகனின் அமைப்பு | |
X கதிர்களின் அமைப்பு |
Question 31 Explanation:
குறிப்பு: நிறை நிறமாலைமானி என்பது ஐசோடோப்புகளின் அணு நிறைகளைத் துல்லியமாக அளந்தறியும் அமைப்பு ஆகும்.
Question 32 |
அணுக்கருவினுள் புரோட்டானையும் நியூட்ரான்களையும் இணைக்கும் விசை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அணுக்கரு ஈர்ப்பு விசை | |
அணுக்கரு கவர்ச்சி விசை | |
அணுக்கரு விசை | |
அணுக்கரு பிணைப்பு விசை |
Question 32 Explanation:
குறிப்பு: அணுக்கரு துகள் சிறு சிறு துகள்களாக உடையாமல் அணுக்கருவினுள் புரோட்டான்கலையும், நியூட்ரான்களையும் இணைக்கும் விசை அணுக்கரு விசை எனப்படும்.
Question 33 |
அணுக்கருவினுள் கண்டறியப்பட்ட விசைகளில் மிக அதிக வலிமை கொண்ட விசையாக கருதப்படுவது எது?
அணுக்கரு பிணைப்பாற்றல் | |
அணுக்கரு கவர்ச்சி விசை | |
அணுக்கரு ஈர்ப்பு விசை | |
அணுக்கரு விசை |
Question 33 Explanation:
குறிப்பு; அணுக்கரு விசையானது ஈர்ப்பியல் விசையை விட 1040 மடங்கு வலிமையானது.
Question 34 |
இரு அணுக்கரு துகள்களுக்கு இடையே மீசான் என்ற துகள் தொடர்ந்து பரிமாற்றம் செய்யப்படுவதாலேயே அணுக்கரு விசை தோன்றுகிறது எனக் கூறியவர் யார்?
ரூதர்போர்டு | |
சாட்விக் | |
யுகாவா | |
லவாய்சியர் |
Question 35 |
கதிரியக்கம் என்ற நிகழ்வினை கண்டறிந்தவர் யார்?
ராண்டஜன் | |
ரூதர்போர்டு | |
மேரி கியூரி | |
ஹென்றி பெக்காரல் |
Question 36 |
எந்த உப்பிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் வாயுக்களை அயனியாக்கும் தன்மைக் கொண்டவை.
சோடியம் | |
குளோரின் | |
யுரேனியம் | |
சோடியம் குளோரைடு |
Question 37 |
அதிகக் கதிரியக்கம் கொண்ட தனிமங்களான ரேடியம் மற்றும் பொலோனியம் ஆகியவற்றை கண்டுப்பிடித்தவர் யார்?
மேரிகியூரி மற்றும் பியரி கியூரி | |
ரூதர்போர்டு | |
சாட்விக் | |
லாவாய்சியர் |
Question 37 Explanation:
குறிப்பு: அதிகக் கதிரியக்கம் கொண்ட தனிமங்களான ரேடியம் மற்றும் பொலோனியம் ஆகியவற்றை கண்டுப்பிடித்தவர் மேரி கியூரி மற்றும் பியரி கியூரி. ஆல்பா, பீட்டா, காமா என்ற மூன்று வெவ்வேறு விதமான கதிர் வீச்சுகளே தனிமத்தின் கதிரியக்க செயல்பாடுகளுக்கு முக்கிய காரணமாகும்.
Question 38 |
ஆல்பா, பீட்டா, காமா போன்ற கதிர்களை வெளியிடும் தனிமத்தின் அணு எண்ணின் மதிப்பு?
63 | |
85 | |
82 | |
96 |
Question 38 Explanation:
குறிப்பு: அணு எண் 82ஐ விட அதிகமான எண் உடைய கனமான தனிமங்கள் தன்னிச்சையாக ஆல்பா, காமா, பீட்டா கதிர்களை வெளிவிடுகின்றன. இத்தகு தனிமங்கள் கதிரியக்க தனிமங்கள் எனப்படும்.
Question 39 |
காரீய கட்டியிலிருந்து நேர் மின்னூட்ட துகள்கள் வெளிவரும் துகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
ஆல்பா | |
பீட்டா | |
காமா | |
நடுநிலை துகள் |
Question 40 |
காரீய கட்டியிலிருந்து எதிர் மின்னூட்ட துகள்கள் வெளிவரும் துகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
ஆல்பா | |
பீட்டா | |
காமா | |
நடுநிலை துகள் |
Question 41 |
காரியத்திலிருந்து விலக்கம் அடையாத துகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
ஆல்பா | |
பீட்டா | |
காமா | |
X கதிர் |
Question 42 |
கீழ்க்கண்ட பண்புகளில் ஆல்பா கதிர்களின் பண்பில்லாததை குறிப்பிடுக?
- A] ஆல்பா கதிர்கள் மின் மற்றும் காந்த புலங்களால் விலக்கமடைகின்றன.
- B] தங்கம் போன்ற தனிமங்களால் சிதறடிக்கப்படுகின்றன.
- C] துத்தநாக சல்பைடு பேரியம் பிளாட்டினோ சயனைடு போன்ற பொருளகளின் மீது விழும் போது ஒளிர்தலை ஏற்படுத்துகின்றன.
- D] ஆல்பா கதிரின் அயனியாக்கும் திறன் பீட்டா கதிர்களை விட 100 மடங்கு குறைவு.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
3 மட்டும் சரி | |
4 மட்டும் சரி |
Question 42 Explanation:
குறிப்பு: ஆல்பா கதிர்கள் வாயுக்களின் வழியாக செல்லும் போது வாயுக்களை மிகுந்த அளவு அயனியாக்கம் செய்கின்றன. இவற்றின் அயனியாக்கும் திறன் பீட்டா கதிர்களை விட 100 மடங்கு அதிகம். காமா கதிர்களை விட 10000 மடங்கு அதிகம்.
Question 43 |
இரு அலகு நேர்மின்னூட்டம் கொண்ட கதிர் எது?
ஆல்பா கதிர் | |
பீட்டா கதிர் | |
காமா கதிர் | |
X கதிர் |
Question 43 Explanation:
குறிப்பு: ஆல்பா துகள் இரு புரோட்டான்களையும் இரு நியூட்ரான்களையும் கொண்ட ஹீலியம் அணுக்கருவாகும். இது இரு அலகு நேர்மின்னூட்டம் கொண்டது.
Question 44 |
ஓரலகு எதிர்மின்னூட்டமும், எலக்ட்ரானின் நிறையும் கொண்ட துகள்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
ஆல்பா துகள் | |
பீட்டா துகள் | |
காமா கதிர்கள் | |
X கதிர் |
Question 44 Explanation:
குறிப்பு: பீட்டா துகள்கள் ஓரலகு எதிர்மின்னூட்டமும், எலக்ட்ரானின் நிறையும் கொண்ட துகள்களாகும். இவை 0.3C முதல் 0.99C வரையிலான திசைவேகங்களை பெற்றிருக்கும். இங்கு C என்பது ஒளியின் திசைவேகம் ஆகும்.
Question 45 |
கீழே கொடுக்கப்பட்டவைகளில் தவறானதைத் தேர்ந்தெடுக்கவும்.
- A] காமா கதிர்கள் குறைந்த அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகளாகும்.
- B] மின் மற்றும் காந்த புலங்களால் விலக்கமடைவதில்லை.
- C] காமா கதிர்கள் ஒளியின் திசைவேகத்தில் செல்கின்றன.
- D] காமா கதிர்களின் அயனியாக்கும் திறன் மிக அதிகம்.
2 சரி | |
1 சரி | |
4 சரி | |
3 சரி |
Question 45 Explanation:
குறிப்பு. மேலே கொடுக்கப்பட்டவைகளில் 4 மட்டும் தவறானது. காமா கதிர்களின் திறன் மிகக் குறைவு ஆகும்.
Question 46 |
கதிரியக்க சிதைவு விதியினை கூறியவர் யார்?
ராண்டஜன் | |
சாட்விக் | |
சாடி மற்றும் பஜன் | |
ரூதர்போர்டு |
Question 46 Explanation:
குறிப்பு: 1913 – ல் சாடி மற்றும் பஜன் ஆகியோர் கதிரியக்க விதியினை கூறியுள்ளனர். கதிரியக்க சிதைவின் போது சிதைவுக்கு உட்படும் அணுக்கரு தாயணுக்கரு எனவும், சிதைவுக்கு பின் உருவாகும் அணுக்கரு சேயணுக்கரு என அழைக்கப்படுகிறது.
Question 47 |
ஒரு கதிரியக்க அணுக்கரு ஆல்பா துகள்களை வெளியிட்டு சிதைவடையும் போது அதன் அணு எண், நிறை எண்ணும் எவ்வாறாக குறைக்கின்றன?
அணு எண் 3, நிறை எண் 4 ஆக குறைகின்றன. | |
அணு எண் 2, நிறை எண் 4 ஆக குறைகின்றன. | |
அணு எண் 4, நிறை எண் 5 ஆக குறைகின்றன. | |
அணு எண் 5, நிறை எண் 3 ஆக குறைகின்றன. |
Question 48 |
பீட்டா சிதைவால் தோரியம் சிதைவுற்று ------------------ மாற்றப்படுகிறது.
ரேடானாக | |
புரோட்டோ ஆக்டினியமாக | |
யுரேனியமாக | |
காமா கதிராக |
Question 48 Explanation:
குறிப்பு: ஒரு கதிரியக்க அணுக்கரு பீட்டா துகளை வெளியிட்டு சிதைவடையும் போது அதன் அணு எண் ஒன்று அதிகரிக்கும். நிறை எண் மாறுபடாது.
Question 49 |
எந்த சிதைவின்போது, ஒரு கதிரியக்க அணுக்கருவின் ஆற்றல் மட்டம் மாறுபடும்?
ஆல்பா கதிர் | |
பீட்டா கதிர் | |
காமா கதிர் | |
X கதிர் |
Question 49 Explanation:
குறிப்பு: ஆல்பா சிதைவின் போது, ஒரு கதிரியக்க அணுக்கருவின் ஆற்றல் மட்டம் மாறுபடும். ஆனால் அணு எண் மற்றும் நிறை எண் மாறுபடாது.
Question 50 |
ஓரலகு நேரத்தில் சிதைவடையும் அணுக்களின் எண்ணிக்கை, அத்தனிமத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கைக்கு --------------- அமையும்.
எதிர்தகவில் | |
நேர்தகவில் | |
மாறாத நிலையில் | |
சம எண்ணிக்கையில் |
Question 51 |
தனிமங்களின் கதிரியக்க செயல்பாடுகளை வேறுபடுத்தி அறிய பயன்படுத்தபடுபவை எவை?
- 1] அரை ஆயுட்காலம் 2] சராசரி ஆயுட்காலம்
- 3] முழு ஆயுட்காலம் 4] முக்கால் ஆயுட்காலம்
1 மற்றும் 3 சரி | |
1 மற்றும் 2 சரி | |
3 மற்றும் 4 சரி | |
4 மற்றும் 1 சரி |
Question 51 Explanation:
குறிப்பு: அனைத்து கதிரியக்க தனிமங்களின் ஆயுட் காலங்களும் முடிவிலியாக அமைவதால் தனிமங்களின் கதிரியக்கச் செயல்பாடுகளை வேறுபடுத்தி அறிய அரை ஆயுட்காலம், சராசரி ஆயுட்காலம் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
Question 52 |
கதிரியக்க தனிமத்திலுள்ள அணுக்கள் பாதியளவு சிதைவடைய ஆகும் காலம் ----------- எனப்படும்.
அரை ஆயுட்காலம் | |
சராசரி ஆயுட்காலம் | |
முழு ஆயுட்காலம் | |
முக்கால் ஆயுட்காலம் |
Question 52 Explanation:
குறிப்பு: கதிரியக்க தனிமத்திலுள்ள அணுக்கள் பாதியளவு சிதைவடைய ஆகும் காலம் அரை ஆயுட்காலம் ஆகும்.
Question 53 |
கதிரியக்க தனிமம் முதலில் சிதைவடையும் போது அணுவின் ஆயுட்காலம் -------------- ஆகும்.
முடிவிலி | |
சராசரி ஆயுட்காலம் | |
அரை ஆயுட்காலம் | |
சுழி |
Question 54 |
கதிரியக்க தனிமத்தில் ஆரம்பத்தில் உள்ள அனைத்து அணுக்களின் எண்ணிக்கைக்கும் மொத்த ஆயுட்காலத்திற்கும் அதிலுள்ள மொத்த அணுக்களின் உள்ள விகிதம் ----------- ஆகும்.
அரை ஆயுட்காலம் | |
முழு ஆயுட்காலம் | |
சராசரி ஆயுட்காலம் | |
சுழி |
Question 54 Explanation:
குறிப்பு: கதிரியக்க தனிமத்தில் ஆரம்பத்தில் உள்ள அனைத்து அணுக்களின் எண்ணிக்கைக்கும் மொத்த ஆயுட்காலத்திற்கும் அதிலுள்ள மொத்த அணுக்களின் உள்ள விகிதம் சராசரி ஆயுட்காலம் ஆகும்.
Question 55 |
கதிரியக்க தனிமங்களில் எஞ்சியிருக்கும் பகுதி எவ்வாறு குறிப்பிடுப்படுகிறது?
- A] N/N0 = (1/2)n
- B] N/N0 = (1/5)n
- C] N/N0 = (3/4)n
- D] N/N0 = (1/4)n
A | |
B | |
C | |
D |
Question 55 Explanation:
குறிப்பு: கதிரியக்க தனிமங்களில் எஞ்சியிருக்கும் பகுதி N/N0 = (1/2)n குறிக்கப்படுகிறது. இதில் n என்பது அரை ஆயுட்காலங்களின் எண்ணிக்கை n = (மொத்த காலம் / அரை ஆயுட்காலம்)
Question 56 |
கதிரியக்க தனிமம் ஒன்றின் அணுக்கள் சிதைவடையும் வீதம் அதன் ---------------- எனப்படும்.
மொத்த கதிரியக்கம் | |
கதிரியக்க வீதம் | |
கதிரியக்க செயல்பாடு | |
கதிரியக்க சராசரி |
Question 56 Explanation:
குறிப்பு: கதிரியக்க தனிமம் ஒன்றின் அணுக்கள் சிதைவடையும் வீதம் அதன் கதிரியக்க செயல்பாடு எனப்படும். T என்ற காலத்தில் தனிமத்தில் N அணுக்கள் இருப்பதாக கொண்டால் அதன் கதிரியக்க செயல்பாட்டை R = -(dN/dt) என எழுதலாம்.
Question 57 |
கதிரியக்க செயல்பாட்டின் அலகு ---------------- ஆகும்.
பெக்கொரல் | |
கியூரி | |
ஹென்றி | |
ராண்டஜன் |
Question 58 |
கதிரியக்க தனிமத்தின் கதிரியக்க செயல்பாடு ------------- என்ற அலகால் குறிப்பிடப்படுகிறது?
பெக்கொரல் | |
கியூரி | |
ஹென்றி | |
ராண்டஜன் |
Question 58 Explanation:
குறிப்பு: கதிரியக்க தனிமத்தின் கதிரியக்க செயல்பாடு கியூரி என்ற அலகால் குறிப்பிடப்படுகிறது. ஒரு வினாடிக்கு 3.7*1010 சிதைவுகளை தரும் கதிரியக்க தனிமத்தின் அளவு கியூரி எனப்படும்.
இது 1 கிராம் ரேடியத்தின் கதிரியக்க செயல்பாட்டிற்கு சமம்.
Question 59 |
ஆல்பா கதிர்வீச்சுகள் பாரபின் மெழுகு போன்ற ஹைட்ரஜன் நிறைந்த பொருள்களின் வழியாக செல்லும் போது ----------------------- வெளிவருவதை ஐரெனி கியூரி மற்றும் ஜோலியட் இருவரும் கண்டுப்பிடித்தனர்.
நியூட்ரான்கள் | |
புரோட்டான்கள் | |
பாசிட்ரான்கள் | |
ரேடிய கதிர்கள் |
Question 59 Explanation:
குறிப்பு; ஆல்பா கதிர்வீச்சுகள் பாரபின் மெழுகு போன்ற ஹைட்ரஜன் நிறைந்த பொருள்களின் வழியாக செல்லும் போது புரோட்டான்கள் வெளிவருவதை 1932ல் ஐரெனி கியூரி மற்றும் ஜோலியட் இருவரும் கண்டுப்பிடித்தனர்.
Question 60 |
ஆல்பா கதிர்வீச்சுகள் பாரபின் மெழுகு போன்ற ஹைட்ரஜன் நிறைந்த பொருள்களின் வழியாக செல்லும் போது, வெளிப்படும் கதிர்வீச்சில் புரோட்டானின் நிறைக்கு சமமான நிறை கொண்ட துகள்கள் இருப்பதைக் கண்டறிந்தவர் யார்?
பொத்தே | |
பெக்கர் | |
மேரி கியூரி | |
சாட்விக் |
Question 60 Explanation:
குறிப்பு: ஆல்பா கதிர்வீச்சுகள் பாரபின் மெழுகு போன்ற ஹைட்ரஜன் நிறைந்த பொருள்களின் வழியாக செல்லும் போது, வெளிப்படும் கதிர்வீச்சில் புரோட்டானின் நிறைக்கு சமமான நிறை கொண்ட துகள்கள் இருப்பதைக் சாட்விக் கண்டறிந்தார். இத்துகள்களை நியூட்ரான்கள் என்று அழைத்தார்.
Question 61 |
சாட்விக், கதிர்வீச்சில் புரோட்டானின் நிறைக்கு சமமான நிறை கொண்ட துகள்களை கண்டறிந்தார். இத்துகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பாசிட்ரான்கள் | |
எலக்டரான்கள் | |
புரோட்டான்கள் | |
நியூட்ரான்கள் |
Question 61 Explanation:
குறிப்பு: ஏறக்குறைய கதிர்வீச்சில் புரோட்டானின் நிறைக்கு சமமான நிறை கொண்ட துகள்களை கண்டறிந்தார். இத்துகள் நியூட்ரான்கள் அழைக்கப்படுகிறது. இதனை 0n1 என்று குறிக்கப்படுகிறது.
Question 62 |
------------------ தவிர அனைத்து அணுக்கருக்களிலும் நியூட்ரான்கள் அடங்கியுள்ளன.
நைட்ரஜன் | |
ஹைட்ரஜன் | |
லித்தியம் | |
ரேடான் |
Question 63 |
கீழே கொடுக்கப்பட்டவைகளில் தவறானதை தேர்ந்தெடுக்க:
- 1.சுழி மின்னோட்டம் கொண்ட நடுநிலைத்துகள்.
- 2.மின் மற்றும் காந்த புலங்களால் விலக்கம் அடைவதில்லை
- 3.அணுக்கருவிற்கு வெளியே நிலைப்பாடற்றவை. இதன் அரை ஆயுட்காலம் 13 நிமிடங்கள்.
- 4.நியூட்ரான்கள் மின் நடுநிலை துகள். ஆதலால் அவை எளிதாக அணுக்கருக்களை ஊடுருவி செல்லாது.
4 மட்டும் சரி | |
3 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் சரி |
Question 63 Explanation:
குறிப்பு: நியூட்ரான்கள் மின் நடுநிலைதுகள். ஆதலால் அவை எளிதாக அணுக்கருக்களை ஊடுருவி செல்லும்.
Question 64 |
குறைவேக நியூட்ரான்களின் சராசரி இயக்க ஆற்றல் ?
0.025eV | |
0.0365eV | |
0.085eV | |
0.0415eV |
Question 64 Explanation:
குறிப்பு: 0 முதல் 1000eV வரை ஆற்றல் கொண்டவை குறைவேக நியூட்ரான்கள் எனப்படும். வெப்ப சமநிலையில் சராசரி இயக்க ஆற்றல் 0.025eV அளவில் உள்ள நியூட்ரான்கள் வெப்ப நியூட்ரான்கள் எனப்படும்.
Question 65 |
அணுக்கரு உலைகளில் வேக நியூட்ரான்கள் எதனை பயன்படுத்தி குறைவேக நியூட்ரான்களாக மாற்றப்படுகின்றன?
குளிரூட்டிகள் | |
தணிப்பான்கள் | |
குளிர்விப்பான்கள் | |
வெப்பமூட்டிகள் |
Question 65 Explanation:
குறிப்பு: 0.5MeV முதல் 10MeV வரை ஆற்றல் கொண்டவை வேக நியூட்ரான்கள் எனப்படும். அணுக்கரு உலைகளில் தணிப்பான்களை பயன்படுத்தி வேக நியூட்ரான்கள் குறைவேக நியூட்ரான்களாக மாற்றப்படுகின்றன
Question 66 |
கதிரியக்கம் அற்ற லேசான தனிமங்களை செயற்கை அல்லது தூண்டப்பட்ட முறைகளில் கதிரியக்க தனிமங்களாக மாற்றும் நிகழ்வு --------------- எனப்படும்.
இயற்கை கதிரியக்கம் | |
செயற்கை கதிரியக்கம் | |
செயல்படுத்தப்பட்ட கதிரியக்கம் | |
தூண்டபடாத கதிரியக்கம் |
Question 67 |
போரான், அலுமினியம் போன்ற துகள்களை ஆல்பா துகள்களை கொண்டு தாக்கும் போது ஒரலகு நேர் மின்னூட்டமும் எலக்ட்ரானின் நிறையும் கொண்ட துகள்கள் கண்டறியப்பட்டது. இதனை ---------------- என அழைக்கப்படுகிறது.
எலக்ட்ரான்கள் | |
நியூட்ரான்கள் | |
பாசிட்ரான்கள் | |
புரோட்டான்கள் |
Question 68 |
பாசிட்ரான்களை கண்டறிந்தவர் யார்?
- 1] கியூரி 2] பெக்காரல்
- 3] ஜோலியட் 4] சாட்விக்
1 மட்டும் | |
1 மட்டும் 2 | |
4 மட்டும் | |
3 மட்டும் 4 |
Question 69 |
நைட்ரஜனின் அரை ஆயுட்காலம் எவ்வளவு?
10.5 | |
10.1 | |
10.6 | |
10.4 |
Question 70 |
செயற்கை கதிரியக்க ஐசோடப்புகள் எந்த முறையில் உருவாக்கப்படுகின்றன?
- A] அணுக்கரு உலையினுள் தனிமங்களை பயன்படுத்தி
- B] அணுக்கரு உலையினுள் தனிமங்களை பிளந்து
- C] சைக்ளோட்ரான் துகள் முடுக்கிகளை பயன்படுத்தி
- D] அணுக்கரு இணைவினை பயன்படுத்தி
1 மட்டும் 3 சரி | |
1 மட்டும் 4 சரி | |
2 மட்டும் 4 சரி | |
3 மட்டும் 2 சரி |
Question 71 |
கோபல்ட் 60 எந்த நோயினை குணப்படுத்த மருத்துவ துறையில் பயன்படுகிறது?
இதய நோய் | |
மூளை நோய் | |
புற்று நோய் | |
கல்லீரல் நோய் |
Question 72 |
சோடியம் 24 எந்த நோயினை குணப்படுத்த மருத்துவ துறையில் பயன்படுகிறது?
இதய செயல்பாடுகள் | |
நுரையீரலின் செயல்பாடுகள் | |
மூளையின் செயல்பாடுகள் | |
நரம்பின் செயல்பாடுகள் |
Question 72 Explanation:
குறிப்பு: ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை கண்டறியவும், ரத்த ஓட்டத்தை நிலை நிறுத்தும் இதயத்துன் செயல்பாட்டை அறிய பயன்படுகிறது.
Question 73 |
அயோடின் 131 எந்த நோயினை குணப்படுத்த மருத்துவ துறையில் பயன்படுகிறது?
மூளை கழலைகள் | |
தைராய்டு சுரப்பி | |
பாரா தைராய்டு | |
மேற்கூறிய அனைத்தும்
|
Question 73 Explanation:
குறிப்பு: அனைத்து தைராய்டு சுரப்பியின் தன்மையினையும், கதிரியக்க அயோடின் மூளைக் கழலைகளை இடமறிய பயன்படுகிறது.
Question 74 |
கதிரியக்க இரும்பு 59 எந்த நோயினை குணப்படுத்த மருத்துவ துறையில் பயன்படுகிறது?
ரத்த அடைப்பு | |
ரத்த சோகை | |
ரத்தத்தின் அளவு | |
ரத்தத்தின் உப்பின் அளவு |
Question 75 |
தோல் நோயினை குணப்படுத்த எந்த கதிரியக்க தனிமம் பயன்படுகிறது?
அயோடின் 131 | |
பாஸ்பரஸ் P 32 | |
சோடியம் 24
| |
இரும்பு 59 |
Question 76 |
உரமாக பயன்படும் கதிரியக்க தனிமம் எது?
பாஸ்பரஸ் P 24 | |
பாஸ்பரஸ் P 32 | |
சோடியம் 24 | |
இரும்பு 59 |
Question 76 Explanation:
குறிப்பு: பாஸ்பேட் உரத்துடன் கதிரியக்க பாஸ்பரஸ் சேர்க்கப்பட்டு உரமாக இடப்படுகிறது. இது தாவரங்களின் விளைச்சலை அதிகரிக்கிறது. தாவரங்களின் வாழ்நாளை அதிகரிக்க பயன்படுகிறது.
Question 77 |
கதிரியக்க கார்பனின் அரை ஆயுட்காலம் எவ்வளவு?
3057 ஆண்டுகள் | |
5570 ஆண்டுகள் | |
6302 ஆண்டுகள் | |
2547 ஆண்டுகள் |
Question 77 Explanation:
குறிப்பு: வளிமண்டலத்தில் மேற்பகுதியில் காஸ்மிக் கதிர்களால் உருவாகும் நியூட்ரான்களால் N14 தாக்கப்பட்டு தொடர்ந்து C14 தோற்றுவிக்கப்படுகின்றது. அதன் அரை ஆயுட்காலம் 5570 ஆண்டுகள் ஆகும்.
Question 78 |
வளிமண்டலத்தில் எச்சேர்மத்தின் உருவாக்கம் மற்றும் சிதைவு ஆகியவை ஒரே சமநிலையில் அமைந்துள்ளது
நைட்ரஜன் | |
ஹைட்ரஜன் | |
சோடியம் | |
கார்பன் |
Question 79 |
எண்ணெய் ஓவியத்தில் காணப்படும் மரக்கரி மற்றும் உணக்கல் உடல் போன்றவைகளின் வயது எதன் மூலம் அறியப்படுகிறது?
நைட்ரஜன் | |
ஹைட்ரஜன் | |
சோடியம் | |
கார்பன் |
Question 79 Explanation:
குறிப்பு: கார்பனை பயன்படுத்தி மரச்சாமான்கள், தோல் ஆடைகள், எண்ணெய் ஓவியத்தில் பயன்படும் மரக்கரி, உணக்கல் உடல் போன்றவைகளின் வயதைக் கணக்கிடலாம்.
Question 80 |
கதிர்வீச்சின் அளவு 100R அளவுக்கு இருக்கும் போது ------------------ அல்லது -------------------- நோயை ஏற்படுத்தும்.
லுக்கெமியா / புற்றுநோய் | |
குவார்சியஸ் / ரத்த சோகை | |
எலும்பு முறிவு / மூளை நோய் | |
நரம்பு கோளாறு / இதய நோய் |
Question 80 Explanation:
குறிப்பு: கதிர்வீச்சின் அளவு 100R அளவுக்கு இருக்கும் போது லுக்கெமியா அல்லது புற்றுநோயை ஏற்படுத்தும்.
Question 81 |
மனிதருக்கு மரணத்தை ஏற்படுத்தும் கதிர்வீச்சின் அளவு என்ன?
200R | |
250R | |
600R | |
800R |
Question 81 Explanation:
குறிப்பு: மனிதருக்கு மரணத்தை ஏற்படுத்தும் கதிர்வீச்சின் அளவு 600R ஆகும். வாரத்திற்கு 250mR என்பது ஒருவர் பெறக்கூடிய கதிர்வீச்சின் பாதுகாப்பு அளவாகும்.
Question 82 |
கதிர்வீச்சின் அளவு --------------- என்ற அலகால் அளவிடப்படுகிறது?
ராண்டஜன் | |
ஹென்றி | |
பெக்காரல் | |
ஹெர்ட்ஸ் |
Question 82 Explanation:
குறிப்பு: கதிர்வீச்சின் அளவு ராண்டஜன் என்ற அலகால் அளவிடப்படுகிறது. ஒரு கிராம் காற்றில் 1.6*1012 சோடி அயனிகளை உருவாக்கும் கதிர்வீச்சு ஒரு ராண்டஜன் எனப்படும்.
Question 83 |
கதிர்வீச்சிலிருந்து மனிதர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள -------------------- ஆல் ஆன ஆடைகளை பயன்படுத்தி கொள்கிறார்கள்.
இரும்பு | |
காரீயம் | |
பெரிக் ஆக்சைடு | |
தாமிரம் |
Question 83 Explanation:
குறிப்பு: கதிர்வீச்சிலிருந்து மனிதர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள காரியத்தால் ஆன ஆடைகளை பயன்படுத்தி கொள்கிறார்கள்.
Question 84 |
செயற்கை தனிம மாற்றத்தை உருவாக்க பயன்படுவது எது?
அணுக்கரு இணைவு | |
அணுக்கரு பிளவு | |
துகள் முடுக்கிகள் | |
ஐசோடப்புகள் |
Question 84 Explanation:
குறிப்பு: மின்னூட்ட துகள்களை முடுக்கி செயற்கை தனிம மாற்றத்தை உருவாக்குகிறது. இவை உயர் ஆற்றல் மட்ட இயற்பியலின் அடிப்படை கருவியாகும்.
Question 85 |
காக்கிரஃப்ட் வால்டன் மற்றும் வான் டி கிராஃப் மின்னியற்றிகள் போன்றவற்றில் எந்த வகையான முடுக்கி பயன்படுகிறது?
நிலைமின்னியல் முடுக்கி | |
காந்தவியல் முடுக்கி | |
வட்ட வகை முடுக்கி | |
சுருள் வகை முடுக்கி |
Question 86 |
சைக்ளோட்ரான் மற்றும் சின்க்ரோட்ரான் போன்றவைகளின் ஆற்றலை 109 eV வரை அதிகரிக்கும் துகள் முடுக்கி எது?
நிலைமின்னியல் முடுக்கி
| |
காந்தவியல் முடுக்கி
| |
வட்ட வகை முடுக்கி
| |
சுருள் வகை முடுக்கி
|
Question 86 Explanation:
குறிப்பு: சுருள் வகை அல்லது துகள் முடுக்கி என்பது இரண்டாவது வகை துகள் முடுக்கி ஆகும். இவற்றிலிருந்து ஆற்றல் அதிகரித்து கொண்டே இருக்கும்.
Question 87 |
கதிரியக்க கதிர்வீச்சுகளின் செரிவை அளவிட ------------------ பயன்படுத்தப்படுகிறது
கெய்கர் முல்லி எண்ணி
| |
மில்லிகன் ஆய்வு
| |
கண்ணாடி வடிவ குழாய் அமைப்பு
| |
ராண்டஜன் ஆய்வு
|
Question 88 |
யுரேனியம் அணுக்கருவினை எதனை கொண்டு தாக்கும் போது, இரு அணுக்கருக்களாக உடைவதுடன் ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது
புரோட்டன் | |
நியூட்ரான் | |
எலக்ட்ரான் | |
பாசிட்ரான் |
Question 88 Explanation:
குறிப்பு: யுரேனியம் அணுக்கருவினை நியூட்ரானை கொண்டு தாக்கும் போது, இரு அணுக்கருக்களாக உடைவதுடன் ஆற்றலையும் வெளிப்படுவதை ஜெர்மன் நாட்டு ஆட்டோஹான் மற்றும் ஸ்ட்ராஸ்மன் 1939ல் கண்டறிந்தனர். இந்நிகழ்வு அணுக்கரு பிளவு எனப்படும்.
Question 89 |
ஒவ்வொரு அணுக்கரு பிளவின் போதும் ------------- அளவிலான நியூட்ரான்கள் வெளிப்படுகின்றன.
3.5 | |
2.5 | |
5.5
| |
6.5 |
Question 89 Explanation:
குறிப்பு: ஒவ்வொரு அணுக்கரு பிளவின் போதும் 2.5 அளவிலான நியூட்ரான்கள் வெளிப்படுகின்றன
Question 90 |
பொருத்துக
- 1.92U235 - a) 140.9177amu
- 2.56Ba141 - b) 235.045733amu
- 3.36Kr92 - c) 91.8854amu
- 4.0n1 - d) 1.008665amu
b a c d | |
a b c d | |
b c d a | |
d c b a |
Question 91 |
அணுக்கருவின் திரவத்துளி கோள வடிவத்தில் அமைய முக்கிய காரணமாக கருதப்படுவது?
ஈர்ப்பு விசை | |
மைய நோக்கு விசை | |
பரப்பு இழுவிசை | |
புவி ஈர்ப்பு விசை |
Question 91 Explanation:
குறிப்பு: பரப்பு இழுவிசையின் காரணமாக திரவத்துளி கோள வடிவத்தில் அமைகிறது. இதனை நீல்ஸ் போர் மற்றும் ஜான் வீலர் என்பவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
Question 92 |
அணுக்குண்டுகளில் பயன்படுத்தப்படும் தொடர்வினை எந்த வகையை சார்ந்த்து?
கட்டுபாடற்ற தொடர்வினை | |
கட்டுபாடுள்ள தொடர்வினை | |
சங்கிலி தொடர்வினை | |
பக்க தொடர்வினை |
Question 92 Explanation:
குறிப்பு: கட்டுப்பாடற்ற தொடர்வினையில் நியூட்ரான்கைன் எண்ணிக்கை மிகக் குறைந்த காலத்தில் மொத்த ஆற்றலும் வெளிப்படும். இந்த வகை அணுக்குண்டுகளில் பயன்படுத்தப்படுகிறது.
Question 93 |
அணுக்கரு உலைகளில் பயன்படும் வினை எந்த வகையைச் சார்ந்த்து?
கட்டுபாடற்ற தொடர்வினை | |
கட்டுபாடுள்ள தொடர்வினை | |
சங்கிலி தொடர்வினை | |
பக்க தொடர்வினை |
Question 93 Explanation:
குறிப்பு: கட்டுப்படான தொடர்வினையில் பிளவையை ஏற்படுத்தும் நியூட்ரான்களின் எண்ணிக்கை மாறிலியாக அமையும். இந்த வினை முக்கியமாக அணுக்கரு உலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
Question 94 |
இரண்டாம் உலகப்போரில் அணுக்குண்டு எந்த நாட்டின் மீது வீசப்பட்டது?
அமெரிக்கா | |
ஜப்பான் | |
ஜெர்மனி | |
ரஷ்யா |
Question 94 Explanation:
குறிப்பு: இரண்டாம் உலக போரின் போது சக்திவாய்ந்த அணுகுண்டு ஜப்பானிலுள்ள ஹிரோஷிமா நாகசாகி போன்ற நகரங்களில் வீசப்பட்டது. இது பெரும் அழிவினை ஏற்படுத்தியது.
Question 95 |
அணுக்கரு உலை எங்கு எப்போது அமைக்கப்பட்டது?
ரஷ்யா, 1935 | |
ஆப்பிரிக்கா, 1938 | |
சிகாகோ, 1942 | |
ஐரோப்பா, 1963 |
Question 95 Explanation:
குறிப்பு: முதலாவது அணுக்கரு உலை USA வில் உள்ள சிகாகோ என்னுமிடத்தில் 1942ல் நிறுவப்பட்டது.
Question 96 |
நாட்டில் வடிவமைக்கப்பட்ட உயர் அழுத்த கனநீர் அணுக்கரு உலைகளில் --------------- எரிப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
யுரேனியம் | |
தோரியம் | |
யுரேனியம் ஆக்சைடு | |
பொலோனியம் |
Question 97 |
உயர் அழுத்த நீர் அணுக்கரு உலைகளில் குறைவாக செறிவூட்டப்பட்ட ------------------- எரிப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
யுரேனியம் | |
தோரியம் | |
யுரேனியம் ஆக்சைடு | |
பொலோனியம் |
Question 98 |
கல்பாக்கத்திலுள்ள வேக உற்பத்தி சோதனை அணுக்கரு உலைகளில் ----------------- மற்றும் -------------- எரிப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
யுரேனியம் கார்பைடுகள் மற்றும் புளூட்டோனியம் | |
யுரேனியம் ஆக்சைடு மற்றும் தோரியம் | |
பொலோனியம் மற்றும் தோரியம் | |
புளூட்டோனியம் ஆக்சைடுகள் மற்றும் தோரியம் |
Question 99 |
கல்பாக்கத்திலுள்ள வேக அணு உற்பத்தி அணுக்கரு உலைகளில் ----------------- மற்றும் -------------- எரிப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
யுரேனியம் மற்றும் புளூட்டோனியம் ஆக்சைடுகள் | |
யுரேனியம் ஆக்சைடு மற்றும் தோரியம் | |
பொலோனியம் மற்றும் தோரியம் | |
புளூட்டோனியம் ஆக்சைடுகள் மற்றும் தோரியம் |
Question 100 |
92U233 எரிப்பொருளாக கொண்டு செயல்படும் அணு உலை எது?
தாராப்பூர் | |
கல்பாக்கம் (kalpakkam mini reactor) | |
கூடம்குளம் | |
காக்ராபார் |
Question 100 Explanation:
குறிப்பு: 92U233 எரிப்பொருளாக கொண்டு செயல்படும் அணு உலை கல்பாக்கம். இதில் யுரேனியம் மற்றும் அலுமினிய கலவை எரிப்பொருளாக தகடு வடிவத்தில் உள்ளது.
Question 101 |
அணுக்கரு பிளவையின் போது வெளிப்படுத்துகின்ற சராசரியாக 2MeV ஆற்றலை கொண்டுள்ள வேக நியூட்ரான்களை 0.025 MeV சராசரி ஆற்றல் கொண்ட வெப்ப நியூட்ரான்களாக மாற்றி தருவது ---------------- ஆகும்.
குளிர்விப்பான் | |
தணிப்பான் | |
எரிப்பொருள்கள் | |
ஐசோடப்புகள் |
Question 102 |
அணுக்கரு உலைகளில் தணிப்பான்களாக செயல்படுபவை எவை / எது?
கனநீர் | |
சாதரண நீர் | |
கிராபைட் | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 102 Explanation:
குறிப்பு: மேற்கூறிய அனைத்தும் தணிப்பான்களாக செயல்படுகிறது. இவற்றில் கிராபைட் மட்டும் சில நாடுகளில் தணிப்பான்களாக பயன்படுகிறது.
Question 103 |
ரேடியம் அல்லது பொலோனியத்துடன் --------------- கலந்த கலவை பொதுவாக நியூட்ரான் மூலமாக பயன்படுகிறது.
ஆக்சைடு | |
கார்பன் | |
பெரிலியம் | |
பெரிக் ஆக்சைடு |
Question 103 Explanation:
குறிப்பு: ரேடியம் அல்லது பொலோனியத்துடன் பெரிலியம் கலந்த கலவை பொதுவாக நியூட்ரான் மூலமாக பயன்படுகிறது. அணுக்கரு பிளவு தொடர் வினையை முதல் முறையாக தொடங்கி வைக்க நியூட்ரான் மூலம் தேவைப்படுகிறது.
Question 104 |
அணுக்கரு உலைகளில் தொடர்வினையை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் தண்டுகள் எது/எவை?
போரான் | |
காட்மியம் | |
போரான் கார்பைடு | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 104 Explanation:
குறிப்பு: உலைகளில் தொடர்வினையை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் தண்டுகள் போரான் அல்லது காட்மியத்தலான தண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. நம் நாட்டில் உள்ள அனைத்து திறன் அணுக்கரு உலைகளிலும் மண்பாண்ட பொருளான போரான் கார்பைடு கட்டுப்படுத்தும் தண்டாக பயன்படுகிறது.
Question 105 |
அணுக்கரு உலைகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் குளிர்விப்பான்கள் எது / எவை?
சாதரண நீர் | |
கனநீர் | |
திரவ சோடியம் | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 105 Explanation:
குறிப்பு: பொதுவாக மேற்கூறிய அனைத்தும் அணுக்கரு உலைகளில் பயன்படுத்தப்படும் குளிர்விப்பான்கள் ஆகும். வேக உற்பத்தி உலைகளில் திரவ சோடியம் குளிர்விப்பானாக பயன்படுகிறது.
Question 106 |
அணுக்கரு உலையில் உருவாகும் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு அணுக்கரு உலையானது சுமார் --------- முதல் ---------- வரையிலான கான்கீரிட் சுவர்களால் அமைக்கப்பட்டுள்ளது.
3 முதல் 4.5m | |
6 முதல் 9m | |
2 முதல் 2.5m | |
4 முதல் 5m |
Question 107 |
கீழே கொடுக்கப்பட்டவைகளில் தவறான கூற்றினை தேர்ந்தெடுக்க:
- 1.அணுக்கரு உலைகள் பெரும்பாலும் மின் திறன் உற்பத்திக்கு பயன்படுகின்றன.
- 2.அணுக்கரு உலைகள் கதிரியக்க ஐசோடப்புகளை உருவாக்குகின்றன.
- 3.அணுக்கரு உலைகள் அறிவியல் ஆராய்ச்சிக்கு பயன்படுகின்றன.
- 4.அணுக்கரு உலைகளில் மருத்துவ துறைக்கு பயன்படுத்தப்படுகின்றன.
4 மட்டும் | |
2 மட்டும் | |
1 மட்டும் | |
3 மட்டும் |
Question 108 |
இந்தியாவில் அணு ஆற்றல் நிறுவனம் எந்த ஆண்டு யாரால் நிறுவப்பட்டது?
1948, Dr.ஹோமி J பாபா | |
1950, ஹென்றி J பாபா | |
1956, ஐன்ஸ்டீன் | |
1963, பெக்காரல் |
Question 109 |
பாபா அணு ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
மும்பை | |
குஜராத் | |
மகாராஷ்டிரா | |
ஐதராபாத் |
Question 109 Explanation:
குறிப்பு: இந்தியாவில் அணு ஆராய்ச்சி நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலத்தில் டிராம்பே என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் அப்சரா, சைரஸ், துருவா, பூர்ணிமா போன்ற ஆராய்ச்சி உலைகள் அமைந்துள்ளன.
Question 110 |
இந்திரகாந்தி அணு ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
பெங்களூர் | |
மும்பை | |
தமிழ்நாடு | |
ஐதராபாத் |
Question 110 Explanation:
குறிப்பு: தமிழ்நாட்டில் கல்பாக்கம் என்ற இடத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. இங்கு காமினி என்ற ஆராய்ச்சி உலை அமைந்துள்ளது.
Question 111 |
அதிவேக சோதனை ஈணுலை என்ற உற்பத்தி உலை எங்கு அமைந்துள்ளது.
திருநெல்வேலி | |
தேனி | |
கல்பாக்கம் | |
கூடங்குளம் |
Question 112 |
இந்திய அணுக்கரு ஆற்றல் நிலையம் எந்த ஆண்டிற்குள் 20,000MW மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
2019 | |
2025 | |
2030 | |
2020 |
Question 113 |
இந்திய அணுக்கரு ஆற்றல் திட்டத்தில் தற்போது --------------- அணுக்கரு உலைகள் செயல்படுகின்றன.
15 | |
16 | |
14 | |
20 |
Question 113 Explanation:
குறிப்பு: இந்திய அணுக்கரு ஆற்றல் திட்ட்த்தில் தற்போது 14 அணுக்கரு உலைகள் செயல்படுகின்றன.
Question 114 |
பொருத்துக
- A] தாராப்பூர் - a)220
- B] ராஜஸ்தான் - b)170
- C] தமிழ்நாடு - c)160
- D] கர்நாடகா - d)200
a b c d | |
c d a b | |
c d b a | |
d a b c |
Question 114 Explanation:
குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டவை செயல்பாட்டில் உள்ள அணுக்கரு உலைகளின் திறன். 6 அணுக்கரு உலைகள் இந்தியாவில் இயங்கி வருகிறது. அவை: தாராப்பூர்(மகாராட்டிரா), கோட்டா(ராஜஸ்தான்), கல்பாக்கம்(தமிழ்நாடு), நரோரா(உத்திரபிரதேசம்), கக்ரபார்(குஜராத்), கைகா(கர்நாடகா)
Question 115 |
அணுக்கரு இணைவு நிகழ்வு எந்த வெப்பநிலையில் மட்டும் நடைபெறும்?
- A] 106K
- B] 107K
- C] 108K
- D] 109K
A | |
B | |
C | |
D |
Question 116 |
விண்மீன்களின் வெப்பநிலை?
- A] 106K
- B] 107K
- C] 108K
- D] 109K
A | |
B | |
C | |
D |
Question 117 |
சூரியனின் உட்பகுதியில் வெப்பநிலை?
- A] 1.4* 107K
- B] 2.6* 105K
- C] 3.2* 108K
- D] 1.8* 109K
A | |
B | |
C | |
D |
Question 118 |
சூரியனால் வெளியிடப்படும் மொத்த ஆற்றலின் அளவு?
- A] 3.8*1026 J/s
- B] 3.5*1038 J/s
- C] 2.2*1027 J/s
- D] 2.6*1030 J/s
A | |
B | |
C | |
D |
Question 119 |
அணுக்கரு இணைவு நிகழ்வுகளில் முக்கியமானதாக கருதப்படுவது எது / எவை?
- 1] புரோட்டான் – புரோட்டான்
- 2] கார்பன் - நைட்ரஜன்
- 3] நைட்ரஜன் – புரோட்டான்
- 4] புரோட்டான் – எலக்ட்ரான்
1 மற்றும் 3 சரி | |
2 மற்றும் 4 சரி | |
1 மற்றும் 2 சரி | |
3 மற்றும் 3 சரி |
Question 119 Explanation:
குறிப்பு: அணுக்கரு இணைவு நிகழ்வுகளில் புரோட்டான் – புரோட்டான், கார்பன் – நைட்ரஜன் சுற்று என்பவை சூரியன் மற்றும் விண்மீன்களில் நடைபெறும் முக்கியமான இருவகை அணுக்கரு இணைவு நிகழ்வுகள் ஆகும். சூரியனில் ஹீலியம், ஹைட்ரஜன் போன்றவை அயனியாக்கப்பட்ட நிலையில் தோன்றும் ஆற்றல் அதன் வெப்பநிலையை அதிகரிக்க செய்கிறது.
Question 120 |
புறவெளியின் அனைத்து திசைகளில் இருந்தும் புவியை அடையும் கதிர்வீச்சுகள் --------------- எனப்படும்.
அகச்சிவப்பு கதிர்கள் | |
புற ஊதா கதிர்கள் | |
காஸ்மிக் கதிர்கள் | |
X கதிர்கள் |
Question 121 |
காஸ்மிக் கதிர்கள் என்ற பெயரானது யாரால் வழங்கப்பட்டது?
ராண்டஜன் | |
மில்லிக்கன் | |
ரூதர்போர்டு | |
சாட்விக் |
Question 122 |
காஸ்மிக் கதிர்கள் ஆய்வுகள் ------------------ கருவியின் மூலம் தொடங்கப்பட்டன
தங்க இலை | |
வெள்ளி இலை | |
காரிய இலை | |
இரும்பு இலை |
Question 123 |
காஸ்மிக் கதிர்களின் பொழிவுகள், கதிர்வீச்சு மோதல் மற்றும் சோடி உருவாதல் போன்றவை எக்கொள்கையின் படி நிகழ்கிறது?
புவியீர்ப்பு கொள்கை | |
அருவிக் கொள்கை | |
மைய விலக்கு கொள்கை | |
மைய நோக்கு கொள்கை |
Question 124 |
எலக்ட்ரானின் நிறையை விட 207 மடங்கு அல்லது அதற்கு குறைவான நிறை கொண்ட லேசான துகள்கள் ------------ ஆகும்
போட்டான்கள் | |
லெப்டான்கள் | |
மீசான்கள் | |
மியுயான்கள் |
Question 125 |
காஸ்மிக் கதிர் ஆய்வுகளின் வாயிலாக கண்டுப்பிடிக்கப்பட்ட கதிர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
போட்டான்கள் | |
லெப்டான்கள் | |
மீசான்கள் | |
மியுயான்கள் |
Question 126 |
எலக்ட்ரான் மற்றும் புரோட்டானின் நிறைகளுக்கு இடைப்பட்ட நிறையையும், ஓரலகு மின்னூட்டத்தையும் கொண்டுள்ள அடிப்படைத் துகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன.
போட்டான்கள் | |
லெப்டான்கள் | |
மீசான்கள் | |
மியுயான்கள் |
Question 127 |
1935-ல் மீசான்கள் எனப் பெயரிட்டவர் யார்?
ஹைலில் | |
யுகாவா | |
ரைடர் | |
பெர்க் |
Question 128 |
கனமான துகள்களின் தொகுதி --------------- எனப்படும்.
பாரியான்கள் | |
நியூக்ளியான்கள் | |
ஹைப்பரான்கள் | |
புரோட்டான்கள் |
Question 128 Explanation:
குறிப்பு: கனமான துகள்களின் தொகுதி பாரியான்கள் எனப்படும். புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் இணைந்த பகுதி நியூக்ளியான்கள் எனப்படும். இவற்றில் எஞ்சிய பகுதிகள் ஹைப்பரான்கள் எனப்படும்
Question 129 |
ஹைப்பரான்கள் எத்தனை வகைப்படும்?
3 | |
4 | |
2 | |
5 |
Question 129 Explanation:
குறிப்பு: ஹைப்பரான்கள் நான்கு வகைப்படும். அவையாவன : லேம்டா, சிக்மா, சை, ஒமேகா என்பவையாகும்.
Question 130 |
--------------- தத்துவம் ஹைட்ரஜன் குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்படுகிறது?
அணுக்கரு இணைவு | |
அணுக்கரு பிணைப்பு | |
அணுக்கரு விலகல் | |
அணுக்கரு பிளவு |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 130 questions to complete.