Online TestTamilTnpsc Exam
10th Tamil Unit 1 Online Test – Iyal 1 New Book Online Test
10th Tamil Questions - Part 1
Congratulations - you have completed 10th Tamil Questions - Part 1.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- "அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!
- முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!
- கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்
- மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!”
- என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
தமிழ் விடு தூது | |
கனிச்சாறு | |
நூறாசிரியம் | |
பாவியக்கொத்து |
Question 1 Explanation:
(விளக்கம்: பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு (தொகுதி 1) தொகுப்பில் இடம்பெற்றுள்ளது)
Question 2 |
- "செந்தமிழே! உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை
- எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்?
- முந்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்
- விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும்”
- என்ற பாடலை இயற்றியவர் யார்?
பாரதிதாசன் | |
நாமக்கல் கவிஞர் | |
முடியரசன் | |
பெருஞ்சித்திரனார் |
Question 2 Explanation:
(விளக்கம்: பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு ( தொகுதி 1) தொகுப்பில் இடம்பெற்றுள்ளது)
Question 3 |
- "சாகும்போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் – என்றன்
- சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்" என்று கூறியவர் யார்?
இரசூல் கம்சதேவ் | |
பாரதிதாசன் | |
சச்சிதானந்தன் | |
ஆறுமுக நாவலர் |
Question 4 |
- “தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
- இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!
- மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!
- முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!”
- என்ற பாடலை இயற்றியவர் யார்?
கனக சுப்புரத்தினம் | |
எத்திராசலு | |
துரைராசு | |
துரை. மாணிக்கம் |
Question 5 |
பெருஞ்சித்திரனார் கீழ்க்கண்ட எந்த இதழ்களின் மூலம் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பினார்?
- 1. தென்மொழி 2. தமிழ்நிலம்
- 3. தமிழ்சிட்டு 4. தென்றல்
1, 2 சரி | |
1 , 3 சரி | |
1, 4 சரி | |
2 , 4 சரி |
Question 6 |
கீழ்க்கண்டவற்றுள் பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள் எவை?
- உலகியல் நூறு
- பாவியக்கொத்து
- நூறாசிரியம்
- மகபுகுவஞ்சி
- பள்ளிப் பறவைகள்
அனைத்தும் சரி | |
2, 3, 5 சரி | |
1, 3, 4 சரி | |
1, 4, 5 சரி |
Question 7 |
பெருஞ்சித்திரனாரின் எந்த நூல் தமிழுக்குக் கருவூலமாய் அமைந்தது
திருக்குறள் உரை | |
திருக்குறள் ஞான உரை | |
திருக்குறள் மெய்ப்பொருளுரை | |
திருக்குறள் மெய்யுரை |
Question 7 Explanation:
(விளக்கம்: பெருஞ்சித்திரனாரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.)
Question 8 |
- “செந்தா மரைத்தேனைக் குடித்துச் சிறகார்ந்த
- அந்தும்பி பாடும் அதுபோல யாம்பாடி
- முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித் தமிழே!”
- என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?
தமிழ் விடு தூது | |
கனிச்சாறு | |
கொய்யாக்கனி | |
பாவியக்கொத்து |
Question 9 |
'நாடும் மொழியும் நமதிரு கண்கள்’ என்று கூறியவர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
நாமக்கல் கவிஞர் | |
பேரறிஞர் அண்ணா |
Question 10 |
"தமிழல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும் போது, தமிழிலுள்ள ஒருபொருட் பலசொல் வரிசைகள் அவற்றில் இல்லாக்குறை எந்தத் தமிழறிஞர்க்கும் மிகத் தெளிவாக தோன்றும். தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டு தமிழுக்கே சிறப்பாக உரியனவாகக் கருதப்படும் சொற்கள் மட்டுமன்றித் தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில் உள" என்று கூறியவர் யார்?
ஜி.யு.போப் | |
வீரமாமுனிவர் | |
கால்டுவெல் | |
திரு.வி.க |
Question 10 Explanation:
(விளக்கம்: திராவிமொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் கால்டுவெல் கூறியது)
Question 11 |
கீழ்க்கண்ட தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிக்கும் சொற்களில் எது தவறானது?
தாள் - நெல், கேழ்வரகு | |
தண்டு - கீரை, வாழை | |
கோல் - நெட்டி, மிளகாய்ச் செடி | |
தூறு – மூங்கிலின் அடி |
Question 11 Explanation:
(விளக்கம்: தூறு - குத்துச் செடி, புதர்)
Question 12 |
கீழ்க்கண்ட தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிக்கும் சொற்களில் எது தவறானது?
- தட்டு அல்லது தட்டை - கம்பு, சோளம்
- கழி - மூங்கிலின் அடி
- கழை – கரும்பின் அடி
- அடி - புளி, வேம்பு
1, 3 | |
1, 4 | |
2, 3 | |
2, 4 |
Question 12 Explanation:
(விளக்கம்:
• கழி - கரும்பின் அடி
• கழை – மூங்கிலின் அடி)
Question 13 |
தாவரங்களின் அடியிலிருந்து பிரிந்து செல்லும் பிரிவுகளுக்கு வழங்கும் சொற்களில் எது தவறானது ?
கவை – அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை | |
கிளை – கவையின் பிரிவு | |
சினை – கிளையின் பிரிவு | |
போத்து – சினையின் பிரிவு |
Question 13 Explanation:
( விளக்கம்:
• கொம்பு அல்லது கொப்பு – கவையின் பிரிவு
• கிளை – கொம்பின் பிரிவு )
Question 14 |
தாவரங்களின் அடியிலிருந்து பிரிந்து செல்லும் பிரிவுகளுக்கு வழங்கும் சொற்களில் எது தவறானது ?
-
- குச்சு – போத்தின் பிரிவு
- இணுக்கு - குச்சியின் பிரிவு
- கொப்பு - கவையின் பிரிவு
1, 2 | |
1 மட்டும் | |
2 மட்டும் | |
எதுவுமில்லை |
Question 15 |
கீழ்க்கண்ட காய்ந்த தாவரத்தின் பகுதிகளுக்கு வழங்கும் சொற்களில் எது தவறானது?
கட்டை – காய்ந்த கொம்பும் கவையும் அடியும் | |
சுள்ளி - காய்ந்த குச்சி | |
விறகு - காய்ந்த கிளை | |
வெங்கழி – காய்ந்த கழி |
Question 15 Explanation:
(விளக்கம்: விறகு - காய்ந்த சிறுகிளை)
Question 16 |
தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்களை சரியான இணையுடன் பொருத்துக.
-
- இலை i) புளி, வேம்பு
- தாள் ii) நெல், புல்
- தோகை iii) தென்னை, பனை
- ஓலை iv) சோளம், கரும்பு
i ii iii iv | |
i iii ii iv | |
i ii iv iii | |
ii i iv iii |
Question 17 |
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைத் தேர்ந்தெடு.
-
- சண்டு – காய்ந்த இலை
- சருகு – காய்ந்த தாளும் தோகையும்
இரண்டும் | |
1 மட்டும் | |
2 மட்டும் | |
எதுவுமில்லை |
Question 17 Explanation:
விளக்கம்:
• சண்டு – காய்ந்த தாளும் தோகையும்
• சருகு – காய்ந்த இலை )
Question 18 |
கீழ்க்கண்ட தாவரத்தின் நுனிப் பகுதிகளைக் குறிக்கும் சொற்களில் தவறானது எது?
கொழுந்தாடை - கரும்பின் நுனிப் பகுதி | |
துளிர் - நெல், புல் முதலியவற்றின் கொழுந்து | |
முறி - மூங்கில், நாணல் முதலியவற்றின் கொழுந்து | |
குருத்து – சோளம், கரும்பு, தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து |
Question 18 Explanation:
(விளக்கம்: முறி அல்லது கொழுந்து - புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து)
Question 19 |
பூவின் நிலைகளை குறிக்கும் சொற்களை ஆராய்க.
-
- அரும்பு – பூவின் தோற்றநிலை
- போது – பூ விரியத் தொடங்கும் நிலை
- அலர் - பூவின் மலர்ந்த நிலை
- வீ - பூ வாடின நிலை
- செம்மல் – பூ வாடின நிலை
1, 2, 3 தவறு | |
4, 5 தவறு | |
3, 4 தவறு | |
1, 5 தவறு |
Question 19 Explanation:
(விளக்கம்:
• செம்மல் - பூ வாடின நிலை
• வீ – பூ வாடின நிலை)
Question 20 |
சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் யார்?
வீரமாமுனிவர் | |
ஆறுமுக நாவலர் | |
பெருங்குமரனார் | |
இளங்குமரனார் |
Question 21 |
தமிழ்த்திரு இரா.இளங்குமரனார் திருவள்ளுவர் தவச்சாலையை நிறுவிய இடம்
நெல்லூர் | |
மேலூர் | |
அல்லூர் | |
பாலூர் |
Question 22 |
இரா.இளங்குமரனார் குறித்த கூற்றுகளில் எது தவறானது?
பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் | |
தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வருபவர் | |
தமிழ்வழி திருமணங்களை நடத்தி வருபவர் | |
இசையாக்கப் பணிகளை விரும்பிச் செய்பவர் |
Question 22 Explanation:
(விளக்கம்: நூலாக்கப் பணிகளை விரும்பிச் செய்பவர்)
Question 23 |
விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்து விடக் கூடாது என்று எண்ணியவர் யார்?
திரு.வி.க | |
இரா. இளங்குமரனார் | |
இளங்குமணன் | |
மீனாட்சி சுந்தரனார் |
Question 24 |
இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலை கொண்டவர் யார்?
மீனாட்சி சுந்தரனார் | |
ஆறுமுகநாவலர் | |
திரு.வி.க | |
உ.வே.சா |
Question 25 |
தமிழ்த்தென்றல் திரு.வி.க போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக் கொண்டவர் யார்?
அண்ணா | |
இரா.இளங்குமரனார் | |
இளங்குமணன் | |
மீனாட்சி சுந்தரனார் |
Question 26 |
கீழ்கான்பனவற்றுள் இளங்குமரனார் எழுதிய நூல்கள் எவை ?
-
- குண்டலகேசி உரை
- யாப்பருங்கலம் உரை
- புறத்திரட்டு உரை
- திருக்குறள் தமிழ் மரபுரை
- காக்கைப் பாடினிய உரை
அனைத்தும் | |
1, 2, 4 | |
2, 4, 5 | |
1, 3, 4 |
Question 27 |
இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித் தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு முதலிய நூல்களை எழுதியவர் யார்?
திரு.வி.க | |
மீனாட்சி சுந்தரனார் | |
மு.வ | |
இளங்குமரனார் |
Question 28 |
தாவரத்தின் பிஞ்சு வகைகளுக்கு வழங்கும் சொற்களில் எது தவறானது ?
பூம்பிஞ்சு - பூவோடு கூடிய இளம்பிஞ்சு | |
பிஞ்சு - இளம் காய் | |
கவ்வை – சிறுபிஞ்சு | |
வடு – மாம்பிஞ்சு |
Question 28 Explanation:
(விளக்கம்: கவ்வை – எள்பிஞ்சு)
Question 29 |
கீழ்க்கண்ட தாவரத்தின் பிஞ்சு வகைகளுக்கு வழங்கும் சொற்களில் சரியானது எது / எவை?
-
- மூசு – பலாப்பிஞ்சு
- குரும்பை - முற்றாத தேங்காய்
- முட்டுக்குரும்பை – சிறு குரும்பை
- இளநீர் – தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு
அனைத்தும் சரி | |
1, 3 சரி | |
2, 4 சரி | |
1, 2, 3 சரி |
Question 29 Explanation:
(விளக்கம்:
• இளநீர் - முற்றாத தேங்காய்
• குரும்பை – தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு)
Question 30 |
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைத் தேர்ந்தெடு.
-
- நுழாய் – இளநெல்
- கருக்கல் – இளம்பாக்கு
- கச்சல் - வாழைப் பிஞ்சு
1, 2 | |
2, 3 | |
1 , 3 | |
எதுவுமில்லை |
Question 30 Explanation:
(விளக்கம்:
• நுழாய் – இளம்பாக்கு
• கருக்கல் – இளநெல்)
Question 31 |
தாவரங்களின் குலை வகைகளைக் குறிக்கும் சொற்களில் எது தவறானது ?
கொத்து - அவரை, துவரை முதலியவற்றின் குலை | |
குலை – வாழைக்குலை | |
கதிர் - கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் கதிர் | |
சீப்பு – வாழைத்தாற்றின் பகுதி |
Question 31 Explanation:
(விளக்கம்: குலை – கொடி முந்திரி போன்றவற்றின் குலை)
Question 32 |
கீழ்க்காணும் தாவரங்களின் குலை வகைகளைக் குறிக்கும் சொற்களை ஆராய்க.
-
- தாறு – வாழைக்குலை
- அலகு குரல் - நெல், தினை முதலியவற்றின் கதிர்
- குரல் - நெல், தினை முதலியவற்றின் கதிர்
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
1 , 3 சரி | |
2, 3 சரி |
Question 33 |
பொருத்துக
-
- சூம்பல் i) நுனியில் சுருங்கிய காய்
- சிவியல் ii) சுருங்கிய பழம்
- சொத்தை iii) புழு பூச்சி அரித்த காய் அல்லது கனி
- வெம்பல் iv) சூட்டினால் பழுத்த பிஞ்சு
iv iii ii i | |
i ii iii iv | |
ii i iv iii | |
iv ii i iii |
Question 34 |
கீழ்க்காணும் கெட்டுப் போன காய்க்கும் கனிக்கும் தாவரத்திற்கேற்ப வழங்கும் சொற்களில் தவறானது எது?
அளியல் - குளு குளுத்த பழம் | |
அழுகல் - குளு குளுத்து நாளிய பழம் அல்லது காய் | |
சொண்டு - சுருங்கிய பழம் | |
ஒல்லிக்காய் – தென்னையில் கெட்ட காய் |
Question 34 Explanation:
( விளக்கம்: சொண்டு – பதராய்ப் போன மிளகாய்)
Question 35 |
பின்வருவனவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு
-
- கூகைக்காய் – கோட்டான் உட்கார்ந்ததினால் கெட்ட காய்
- தேரைக்காய் - தேரை அமர்ந்ததினால் கெட்ட காய்
- அல்லிக்காய் – தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய்
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2 , 3 சரி | |
1 மட்டும் சரி |
Question 36 |
பழங்களின் மேற்பகுதியினைக் குறிக்க வழங்கும் சொற்களில் எது தவறானது ?
தோல் – மிக மெல்லியது | |
தோடு – வன்மையானது | |
ஒடு – மிக வன்மையானது | |
குடுக்கை - சுரையின் ஓடு |
Question 36 Explanation:
(விளக்கம்: தோல் – திண்ணமானது)
Question 37 |
பழங்களின் மேற்பகுதியினைக் குறிக்க வழங்கும் சொற்களில் எது சரி?
மட்டை - மிக மெல்லியது | |
தொலி – தேங்காய் நெற்றின் மேற்பகுதி | |
கொம்மை - வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி | |
தோடு - நெல், கம்பு முதலியவற்றின் மூடி |
Question 37 Explanation:
(விளக்கம்:
• மட்டை - தேங்காய் நெற்றின் மேற்பகுதி
• தொலி – மிக மெல்லியது
• உமி - நெல், கம்பு முதலியவற்றின் மூடி)
Question 38 |
தானியங்களுக்கு வழங்கும் சொற்களில் எது தவறானது?
கூலம் - நெல், புல் (கல்) முதலிய தானியங்கள் | |
பயறு - அவரை, உளுந்து முதலியவை | |
கடலை – வேர்க்கடலை, கொண்டைக்கடலை முதலியவை | |
விதை - வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து |
Question 38 Explanation:
(விளக்கம்: விதை - கத்தரி, மிளகாய் முதலியவற்றின் வித்து)
Question 39 |
புளி, காஞ்சிரை முதலியவற்றின் வித்துகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
முத்து | |
காழ் | |
கொட்டை | |
முதிரை |
Question 40 |
தானியங்களுக்கு வழங்கும் சொற்களில் தவறான இணையைத் தேர்ந்தெடு?
முத்து - வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து | |
தேங்காய் - தென்னையின் வித்து | |
கொட்டை - புளி, காஞ்சிரை முதலியவற்றின் வித்து | |
முதிரை - அவரை, துவரை முதலிய பயறுகள் |
Question 40 Explanation:
( விளக்கம்: கொட்டை – மா, பனை முதலியவற்றின் வித்து)
Question 41 |
தாவரங்களின் இளம் பருவத்திற்கான சொற்களில் தவறானது எது?
நாற்று - நெல், கத்தரி முதலியவற்றின் இளநிலை | |
கன்று – மா, புளி, வாழை முதலியவற்றின் இளநிலை | |
குருத்து - தென்னையின் இளநிலை | |
பிள்ளை - தென்னையின் இளநிலை |
Question 41 Explanation:
(விளக்கம்: குருத்து – வாழையின் இளநிலை)
Question 42 |
சரியான இணையைத் தேர்ந்தெடு
- குட்டி – விளாவின் இளநிலை
- மடலி – பனையின் இளநிலை
- வடலி - பனையின் இளநிலை
- பைங்கூழ் - நெல், சோளம் முதலியவற்றின் பசும் பயிர்
அனைத்தும் சரி | |
1, 2, 4 சரி | |
1 , 3, 4 சரி | |
2 , 3 சரி |
Question 43 |
ஒரு மொழி____மக்களாலும் அதன் இலக்கியம் ______மக்களாலும் அமையப்பெறும்.
புல, பொது | |
பொது, புல | |
பொது, அரச | |
அரச, பொது |
Question 44 |
தாள், தோகை, ஓலை என்பன எந்த உறுப்பின் பாகுபாடுகள்
மலர் | |
இலை | |
கனி | |
தண்டு |
Question 45 |
கீழ்வருனவற்றுள் நெல்லின் வகைகளில் அல்லாதது எது?
-
- சம்பா
- மட்டை
- கார்
- கார்நெல்
- வெண்ணெல்
- செந்நெல்
அனைத்தும் சரி | |
2 , 3 தவறு | |
2, 4 தவறு | |
2, 3, 5 தவறு |
Question 46 |
சம்பா என்ற நெல் வகையில் எத்தனை உள்வகைகள் உள்ளன?
40 | |
60 | |
90 | |
100 |
Question 47 |
கீழ்வருவனவற்றுள் சம்பாவின் நெல் வகைகளில் அல்லாதது எது?
- 1.ஆவிரம் பூச்சம்பா 2. ஆனைக்கொம்பன் சம்பா 3. குண்டுச் சம்பா
- 4.குதிரைவாலிச் சம்பா 5. சிறுமணிச்சம்பா 6. சீரகச் சம்பா
அனைத்தும் சரி | |
2, 3 தவறு | |
1, 2, 3 தவறு | |
1 மட்டும் தவறு |
Question 48 |
"உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியாவே. மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே " என்று கூறியவர் யார்?
இராமலிங்கனார் | |
அய்யாத்துரையார் | |
அப்பாத்துரையார் | |
துரை.மாணிக்கம் |
Question 48 Explanation:
( விளக்கம்: க. அப்பாத்துரையார் பன்மொழிப் புலவர் என அழைக்கப்படுகிறார்.)
Question 49 |
கீழ்வருவனவற்றுள் தென்றமிழ் நாட்டில் மட்டும் விளையும் சிறுகூலங்கள் எவை?
- வரகு
- காடைக்கண்ணி
- குதிரைவாலி
- மட்டை
அனைத்தும் சரி | |
1, 2, 3 சரி | |
2, 3, 4 சரி | |
2, 3 சரி |
Question 50 |
திருந்திய மக்களை மற்ற உயிரினின்றும் பிரித்துக் காட்டுவது அதுவே ஒரு நாட்டாரின் அல்லது இனத்தாரின் நாகரிகத்தை அளந்தறிவதற்கும் சிறந்த வழியாகும்.
நூல்கள் | |
இலக்கணம் | |
மொழி | |
நாடகங்கள் |
Question 51 |
பாவாணர் ____ கட்டுரையில் வித்துவகை, வேர் வகை, அரித்தாள்வகை, காய்ந்த இலைவகை போன்ற பல்வேறு பொருட்களின் வகைகளை பற்றி கூறியுள்ளார்.
தமிழ்வளம் | |
தமிழ்ச்சொல் | |
தமிழ்ச்சொல்வளம் | |
சொல்வளம் |
Question 52 |
மொழிஞாயிறு என அழைக்கப்படுபவர் யார்?
தாராபாரதி | |
தேவநேயப் பாவாணர் | |
பரிதிமாற் கலைஞர் | |
முடியரசன் |
Question 53 |
தேவநேயப் பாவாணரின் ‘தமிழ்ச் சொல்வளம்’ என்னும் கட்டுரை எந்த நூலில் இடம் பெற்றுள்ளது ?
தமிழாய்வுக் கட்டுரைகள் | |
சொல்லாய்வுக் கட்டுரைகள் | |
தமிழாராய்ச்சிக் கட்டுரைகள் | |
சொல் ஆராய்ச்சி கட்டுரைகள் |
Question 54 |
பல்வேறு இலக்கணக் கட்டுரைகளையும் மொழியாராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதி தமிழ் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர் யார்?
பரிதிமாற் கலைஞர் | |
தேவநேயப் பாவாணர் | |
அறிஞர் அண்ணா | |
பெரியார் |
Question 55 |
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக பணியாற்றியவரும் உலகத் தமிழ் கழகத்தை நிறுவி தலைவராக இருந்தவர் யார்?
சாலை. இளந்திரையனார் | |
பரிதிமாற் கலைஞர் | |
தேவநேயப் பாவாணர் | |
உ.வே.சா |
Question 56 |
கார்டிலா எனும் நூல் முதன் முதலில் தமிழ் மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்ட ஆண்டு
1554 | |
1555 | |
1556 | |
1557 |
Question 57 |
போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் லிசுபனில் தமிழ் மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்ட நூல் ______வரி வடிவில் அச்சிடப்பட்டுள்ளது.
ஆங்கிலம் | |
எகிப்தியம் | |
ரோமன் | |
கிரேக்கம் |
Question 57 Explanation:
(நூலின் பெயர்: carthila de lingoa tamul e portugues)
Question 58 |
இந்திய மொழிகளிலேயே மேலை நாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறிய மொழி
சமஸ்கிருதம் | |
மலையாளம் | |
தெலுங்கு | |
தமிழ் |
Question 59 |
Carthila de lingoa tamul e portugues என்னும் நூல் எத்தனை வண்ணங்களில் மாறிமாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது.
2 | |
3 | |
4 | |
5 |
Question 59 Explanation:
(விளக்கம்: கறுப்பு, சிவப்பு ஆகிய வண்ணங்களில் அச்சிடப்பட்டுள்ளது.)
Question 60 |
கீழ்வருவனவற்றுள் ' சொல்லுதல் ‘ எனும் பொருள் தரும் சொற்கள் எவை?
- 1.விளம்புதல் 2. செப்புதல் 3. உரைத்தல்
- 4. கூறல் 5.இயம்பல்
அனைத்தும் சரி | |
3, 4, 5 சரி | |
2, 4, 5 சரி | |
1 , 3, 4 சரி |
Question 61 |
- "நித்தம் அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு
- இணைகிடந்த தேதமிழ் ஈண்டு” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
தமிழ் விடு தூது | |
தனிப்பாடல் திரட்டு | |
முக்கூடற் பள்ளு | |
திருவள்ளுவ மாலை |
Question 62 |
"முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்”
- அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
- விளம்புதல் 2. கற்பது 3. தருதல் 4. வாங்குவது
1, 2 | |
2 , 3 | |
3, 4 | |
1, 4 |
Question 62 Explanation:
(விளக்கம்:தனிப்பாடல் திரட்டு நூலில் இவ்வரிகள் இடம்பெற்றுள்ளது)
Question 63 |
" மெத்த வணிகலமும் மேவலால் "
- அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
- பொருந்துதல் 2. பெறுதல் 3. தருதல் 4. பிரிதல்
1, 2 | |
2 , 3 | |
3, 4 | |
1, 4 |
Question 63 Explanation:
(விளக்கம்: தனிப்பாடல் திரட்டு நூலில் இவ்வரிகள் இடம்பெற்றுள்ளது)
Question 64 |
முச்சங்கம்’ என தனிப்பாடல் திரட்டில் குறிப்பிடப்படும் மூன்று சங்குகள் எவை?
- 1.வெண்சங்கு 2. வலம்புரி சங்கு 3. சலஞ்சலம் பாஞ்சசன்யம்
1, 2, 3 | |
2, 3, 4 | |
1 , 3, 4 | |
1, 2, 4 |
Question 65 |
ஒரு சொல்லோ சொற்றொடரோ இருபொருள்பட வருவது _____அணி எனப்படும்.
பிறிது மொழிதல் அணி | |
உவமை அணி | |
எடுத்துக்காட்டுவமையணி | |
சிலேடை அணி |
Question 65 Explanation:
(விளக்கம்: இரட்டுற மொழிதல் அணி சிலேடை அணி என்றும் அழைக்கப்படுகிறது.)
Question 66 |
சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை | |
பெரியவன் கவிராயர் | |
தமிழழகனார் | |
அழகிய பெரியவன் |
Question 67 |
கீழ்க்கண்டவர்களுள் சண்முகசுந்தரம் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?
சண்முகசிகாமணிக் கவிராயர் | |
குமரகுருபரர் | |
சுந்தரம்பிள்ளை | |
தமிழழகனார் |
Question 68 |
சந்தக் கவிமணி தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்?
11 | |
12 | |
13 | |
14 |
Question 69 |
காலையிலேயே மாலையும் வந்து விட்டதே" என்று கூறியவர் யார்?
கி.வா.ஜகந்நாதன் | |
இசை விமர்சகர் சுப்புடு | |
கி.ஆ.பெ.விசுவநாதன் | |
சுரதா |
Question 70 |
" அன்று கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல், குரலிலும் கம்மல்” என்று சிலேடை நயத்தில் இசை நிகழ்ச்சியை விமரிசனம் செய்தவர் யார்?
கி.வா.ஜகந்நாதன் | |
சுப்புடு | |
கி.ஆ.பெ.விசுவநாதன் | |
சுரதா |
Question 71 |
உணர்ச்சிகளை காட்ட ______ கொண்ட மொழிநடையே ஏற்ற கருவி.
உவமை | |
உவமேயம் | |
உரிச்சொல் | |
அணி |
Question 72 |
"இவர் பல்துறை வித்தகர்” என்று பல் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்ற நண்பரை அறிமுகம் செய்தவர் யார்?
கி.வா.ஜகந்நாதன் | |
சுப்புடு | |
கி.ஆ.பெ.விசுவநாதன் | |
சுரதா |
Question 73 |
குறிஞ்சி மலர் என்ற நூலை இயற்றியவர் யார்?
ஈரோடு தமிழன்பன் | |
கபிலர் | |
நா.பார்த்தசாரதி | |
பாரதிதாசன் |
Question 74 |
“திருப்பரங்குன்றத்தின் அழகைப் பார்ப்பதற்கென்றே இயற்கை பதித்து வைத்த இரண்டு பெரிய நிலைக்கண்ணாடிகளைப் போல் வடபுறமும் தென்புறமும் நீர் நிறைந்த கண்மாய்கள்” என்று உவமையை பயன்படுத்தியவர் யார்?
ஈரோடு தமிழன்பன் | |
கல்கி | |
நா.பார்த்தசாரதி | |
சுரதா |
Question 75 |
திருவள்ளுவர் என்ற பெயரில் முதல் தமிழ் கணினியை பி.சி.எம். டேட்டா புரொடக்ட்ஸ் என்னும் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்த ஆண்டு
1973 செப்டம்பர் | |
1973 அக்டோபர் | |
1983 செப்டம்பர் | |
1983 அக்டோபர் |
Question 76 |
சென்னை தேனாம்பேட்டையில் இருந்த புள்ளி விவரத் துறை அலுவலகத்திற்கும் தலைமை செயலகத்துக்கும் கோப்புகளையும் செய்திகளையும் பறிமாறிக் கொண்ட முதல் நேர்வழிக் கணினி எது?
தமிழ் மறை | |
திருக்குறள் | |
நாயனார் | |
திருவள்ளுவர் |
Question 77 |
திருவள்றவர் கணினி எந்தெந்த மொழிகளை கையாளக் கூடியதாக அமைந்தது
தமிழ், சமஸ்கிருதம் | |
தமிழ், மலையாளம் | |
தமிழ், ஆங்கிலம் | |
தமிழ், தெலுங்கு |
Question 78 |
‘உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்' என்று உருவகத்தை பற்றி எழுதியவர் யார்?
குன்னூர்க் கிழார் | |
தொல்காப்பியர் | |
தண்டி | |
நக்கீரர் |
Question 79 |
இன்றைய இலக்கியங்களில் _____ ஐ விட _______ உணர்வுகளைத் தூண்டி எழுப்புவதில் வெற்றி பெறுகின்றது.
உருவகம், உவமை | |
உவமை, உருவகம் | |
உவமை, உவமேயம் | |
உவமேயம், உவமை |
Question 80 |
"களம்புகத் துடித்து நின்ற உனக்கு, வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது, உண்டு மகிழ்ந்தாய்; உன் புன்னகைத்தான் அதற்குச் சான்று " என்பது யாருடைய உரைநடை
பெரியார் | |
அண்ணா | |
திரு.வி.க | |
மீனாட்சி சுந்தரனார் |
Question 81 |
உவம உருபு மறைந்து வந்தால் அதற்கு ______அணி என்று பெயர்.
உவமையணி | |
உருவக அணி | |
எடுத்துக்காட்டுவமை அணி | |
பிறிது மொழிதல் அணி |
Question 82 |
- " புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
- வாய்மையால் காணப் படும் "
- இக்குறட்பாவில் அமைந்துள்ள அணி
உவமையணி | |
உருவக அணி | |
எடுத்துக்காட்டுவமை அணி | |
பிறிது மொழிதல் அணி |
Question 83 |
எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துகையில் _____ என்கிறோம்.
இணை அணி | |
ஒப்பு அணி | |
இணைபொழிப்பு | |
இணை ஒப்பு |
Question 84 |
‘மழையும புயலும்' என்ற நூலை எழுதியவர் யார்?
நா.பார்த்சாரதி | |
தண்டி | |
வ.ராமசாமி | |
திரு.வி.க |
Question 85 |
"ஊர் கூடிச் செக்கு தள்ள முடியுமா? என்று கேட்கிறார்கள், ஊர் கூடின பிறகுதான் செக்குத் தள்ள வேண்டும் என்று காத்திருப்பவர்களின் காரியம் கைகூடாது. புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை" என்று கூறியவர் யார்?
நா.பார்த்தசாரதி | |
தண்டி | |
வ.ராமசாமி | |
திரு.வி.க |
Question 86 |
ஞாயிறு, திங்கள், நெஞ்சம் போன்ற அஃறிணைப் பொருள்கள், சொல்லுந போலவும், கேட்குந போலவும் சொல்லியாங்கு அமையும்” என்று எழுதும் திறத்தை குறிப்பிட்டுள்ளவர் யார்?
அகத்தியர் | |
தொல்காப்பியர் | |
கம்பர் | |
கபிலர் |
Question 86 Explanation:
(விளக்கம்: செய்யுளியல், 192)
Question 87 |
உயிர் இல்லாத பொருள்களை உயிர் உள்ளன போலவும், உணர்வு இல்லாத பொருள்களை உணர்வுடையன போலவும் கற்பனை செய்வது இணையத் தமிழன் காலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இணை ஒப்பு | |
இலக்கணை | |
ஒப்பு எல்லை | |
இலக்கணம் |
Question 88 |
"மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலைமீது இவர்வேன்; ஓரிடத்தில் அமர்வேன்; மேலும் கீழும் பார்ப்பேன்; சுற்று முற்றும் பார்ப்பேன்;மனம் அமைதி எய்தும் " என்று எழுதியவர் யார்?
நா. பார்த்தசாரதி | |
தண்டி | |
வ.ராமசாமி | |
திரு.வி.க |
Question 89 |
தமிழின்பம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
நா.பார்த்சாரதி | |
ரா.பி.சேதுப்பிள்ளை | |
வ.ராமசாமி | |
திரு.வி.க |
Question 90 |
" தென்றல் அசைந்து வரும் தென்தமிழ் நாட்டில் அமைந்த திருக்குற்றாலம், மலை வளம் படைத்த பழம்பதியாகும். அம்மலையிலே, கோங்கும் வேங்கையும் ஓங்கி வளரும்; குரவமும் முல்லையும் நறுமணங் கமழும்! கோல மாமயில் தோகை விரித்தாடும்” என்று எழுதியவர் யார்?
நா.பார்த்சாரதி | |
ரா.பி.சேதுப்பிள்ளை | |
வ.ராமசாமி | |
திரு.வி.க |
Question 91 |
நாட்டுப்பற்று” என்னும் கட்டுரைத் தொகுப்பு யாருடையது?
மு.வ | |
ரா.பி.சேதுப்பிள்ளை | |
வ.ராமசாமி | |
திரு.வி.க |
Question 92 |
படிப்பவருக்கு முரண்படுவது போல இருக்கும்;உண்மையில் முரண்படாத – மெய்ம்மையைச் சொல்லுவது ____ எனப்படும்.
இணை ஒப்பு | |
இலக்கணை | |
ஒப்பு எல்லை | |
முரண்படு மெய்ம்மை |
Question 93 |
" வாழ்க்கை நடத்துவதற்குப் பொருள்கள் பல வேண்டும். அரிசி, காய், கனி முதலியவை வேண்டும். உடை, வீடு முதலியவை வேண்டும். காசும் காகித நோட்டும் வேண்டும். இன்னும் பல வேண்டும். இவற்றை ஆளும் அறிவும் வேண்டும்" எழுதியவர் யார்?
மு.வ | |
ரா.பி.சேதுப்பிள்ளை | |
வ.ராமசாமி | |
திரு.வி.க |
Question 94 |
- "இந்த உலகத்தில் பயம் என்ற ஒன்றிற்குத் தவிர வேறு எதற்கு நாம் பயப்பட வேண்டும்?" என்பது கீழ்க்கண்ட எதற்கு எடுத்துக்காட்டு
இணை ஒப்பு | |
இலக்கணை | |
ஒப்பு எல்லை | |
முரண்படு மெய்ம்மை |
Question 95 |
"கலப்பில்லாத பொய்" என முரண்பட்ட சொல்லை சேர்த்து எழுதுவது _____ எனப்படும்.
எதிரிணை இசைவு | |
இலக்கணை | |
சொல்முரண் | |
முரண்படு மெய்ம்மை |
Question 96 |
சொல்லும் முறையில் அழுத்தம் கொடுப்பதற்காக எதிரும் புதிருமான முரண்படும் கருத்துகளை அமைத்து எழுதுவது ______ எனப்படும்.
எதிரிணை இசைவு | |
இலக்கணை | |
சொல்முரண் | |
முரண்படு மெய்ம்மை |
Question 97 |
" குடிசைகள் ஒரு பக்கம்; கோபுரங்கள் மறுபக்கம் ; பசித்த வயிறுகள் ஒரு பக்கம்; புளிச்சேப்பக்காரர்கள் மறுபக்கம் ; மெலிந்த எலும்புக்கூடுகள் ஒருபக்கம் ; பருத்த தொந்திகள் மறுபக்கம் ; கேடுகெட்ட இந்த சமுதாயத்திற்கு என்றைக்கு விமோசனம்? தோழர்களே, சிந்தியுங்கள்!” என்று எழுதியவர் யார்?
மு.வ | |
ரா.பி.சேதுப்பிள்ளை | |
ப.ஜீவானந்தம் | |
திரு.வி.க |
Question 97 Explanation:
(விளக்கம்: இந்த வரிகள் எதிரிணை இசைவுக்கு எடுத்துக்காட்டு)
Question 98 |
"அவர் பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழமை உண்டா?எதைக் கண்டு அவர் திகைத்தார்? எந்த புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது ? எனவே தான் பெரியாருடைய பெரும் பணியை நான் ஒரு தனி மனிதனின் வரலாறு என்றல்ல ஒரு சகாப்தம் – ஒரு காலகட்டம் – ஒரு திருப்பம் என்று கூறுகிறேன்" என்று பெரியாரை புகழ்ந்தவர் யார்?
சுரதா | |
அண்ணா | |
எமி.ஜி.ஆர் | |
கருணாநிதி |
Question 99 |
"இந்தியாதான் என்னுடைய மோட்சம்; இந்தியாவின் நன்மைதான் என் நன்மை. இந்தியாதான் என் இளமையின் மெத்தை என் யெளவனத்தின் நந்தவனம்; என்கிழக்காலத்தின் காசி” என்று கூறியவர் யார்?
அண்ணா | |
பெரியார் | |
பாரதியார் | |
பாரதிதாசன் |
Question 100 |
'உரைநடையின் அணிநலன்கள்' என்னும் கட்டுரை _______ நூலில் அமைந்துள்ளது.
உரைநடை உலகம் | |
இணைய உலகம் | |
இணையம் | |
புதிய உரைநடை |
Question 100 Explanation:
( விளக்கம்: புதியஉரைநடை - எழில் முதல்வன்)
Question 101 |
மா.இராமலிங்கம் (எ) எழில் முதல்வன் எந்த நூலுக்காக சாகித்திய அகாடெமி பரிசு பெற்றார்
இனிக்கும் நினைவுகள் | |
எங்கெங்கு காணினும் | |
யாதுமாகி நின்றாய் | |
புதிய உரைநடை |
Question 102 |
இனிக்கும் நினைவுகள், எங்கெங்கு காணினும், யாதுமாகி நின்றாய் முதலிய நூல்களை இயற்றியவர் யார்?
மு.வ | |
ஜீவானந்தம் | |
பெரியார் | |
மா. இராமலிங்கம் |
Question 103 |
மாநிலக் கல்லூரியில் பேராசிரியராகவும் குடந்தை அரசு ஆடவர் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்த் துறைத் தலைவராக பணி செய்தவர் யார்?
மு.வ | |
ஜீவானந்தம் | |
பெரியார் | |
மா.இராமலிங்கம் |
Question 104 |
- "வாழையும் கமுகும் தாழ்குலைத்தெங்கும்
- மாவும் பலாவும் சூழ் அடுத்து ஓங்கி
- தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்”
- என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
சீவக சிந்தாமணி | |
மதுரைக் காஞ்சி |
Question 104 Explanation:
(விளக்கம்: சிலப்பதிகாரம் காடுகாண் காதையில் அமைந்துள்ளது)
Question 105 |
'உள்ளங்கை நெல்லிக்கனி போல’ என்ற இலக்கியத் தொடரில் அமைந்துள்ள நயம்
உவமை | |
உருவகம் | |
மோனை | |
எதுகை |
Question 106 |
மொழியை தெளிவுறப் பேசவும் எழுதவும் உதவுவது
இலக்கியம் | |
இலக்கணம் | |
செய்யுள் | |
செய்யுள் உறுப்புகள் |
Question 107 |
அளபெடுத்தல் என்பதன் பொருள் _____
நீண்டு ஒலித்தல் | |
குறுகி ஒலித்தல் | |
வாய்ப்பாடு | |
அசை |
Question 108 |
செய்யுளில் ஓசை குறையும் போது, அதனை நிறைவு செய்ய, மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கிற உயிர் நெட்டெழுத்துகள் ஏழும் தத்தம் அளவில் நீண்டு ஒலித்து அதை குறிக்க நெட்டெழுத்துகளின் இனமான குற்றெழுத்துகள் அவற்றின் பின்னால் வருவது ____ எனப்படும்.
ஒற்றளபெடை | |
உயிரளபெடை | |
ஐகாரக் குறுக்கம் | |
ஒளகாரக் குறுக்கம் |
Question 109 |
உயிரளபெடை எத்தனை வகைப்படும்?
2 | |
3 | |
4 | |
5 |
Question 110 |
செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய, நெட்டெழுத்துகள் அளிப்படுத்தல் _______ அளபெடை என்பர்
செய்யுளிசை அளபெடை | |
இன்னிசை அளபெடை | |
சொல்லிசை அளபெடை | |
ஒற்றளபெடை |
Question 111 |
இசை நிறை அளபெடை என அழைக்கப்படும் அளபெடை எது?
செய்யுளிசை அளபெடை | |
இன்னிசை அளபெடை | |
சொல்லிசை அளபெடை | |
ஒற்றளபெடை |
Question 112 |
செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது _____ ஆகும்
செய்யுளிசை அளபெடை | |
இன்னிசை அளபெடை | |
சொல்லிசை அளபெடை | |
ஒற்றளபெடை |
Question 113 |
- "கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
- எடுப்பதூஉம் எல்லாம் மழை “
- இதில் அடிகோடிட்ட சொற்களில் பயின்று வந்துள்ள அளபெடை
செய்யுளிசை அளபெடை | |
இன்னிசை அளபெடை | |
சொல்லிசை அளபெடை | |
ஒற்றளபெடை |
Question 114 |
செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாக திரிந்து அளபெடுப்பது _____ அளபெடை .
செய்யுளிசை அளபெடை | |
இன்னிசை அளபெடை | |
சொல்லிசை அளபெடை | |
ஒற்றளபெடை |
Question 115 |
" உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
செய்யுளிசை அளபெடை | |
இன்னிசை அளபெடை | |
சொல்லிசை அளபெடை | |
ஒற்றளபெடை |
Question 116 |
சரியான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக – நசை
துன்பம் | |
இன்பம் | |
வெறுப்பு | |
விருப்பம் |
Question 117 |
செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகள் மற்றும் ஆய்த எழுத்தும் அளபெடுப்பது _____ அளபெடை.
செய்யுளிசை அளபெடை | |
இன்னிசை அளபெடை | |
சொல்லிசை அளபெடை | |
ஒற்றளபெடை |
Question 118 |
ஒற்றளபெடையில் அளபெடுக்கும் மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை
10 | |
11 | |
12 | |
13 |
Question 119 |
கீழ்வருவனவற்றுள் ஒற்றளபெடையில் அளபெடுக்காத மெய்யெழுத்து எது?
ய் | |
ல் | |
ர் | |
ள் |
Question 119 Explanation:
(விளக்கம்: ஒற்றளபெடையில் அளபெடுக்காத மெய்யெழுத்துகள்
ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள்)
Question 120 |
ஓர் எழுத்து தனித்தோ பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் தரும் வகையில் அமைவது _______ ஆகும்.
அசை | |
சீர் | |
தளை | |
சொல் |
Question 121 |
கீழ்க்கண்ட சொல் குறித்த கூற்றுகளில் தவறானது எது?
இரு திணைகளையும் ஐந்து பால்களையும் குறிக்கும். | |
மூவகை இடங்களிலும் வரும் | |
உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் வரும். | |
வெளிப்படையாக மட்டும் வரும் |
Question 121 Explanation:
(விளக்கம்: வெளிப்படையாகவும் குறிப்பாகவும் வரும்)
Question 122 |
கீழ்வருவனவற்றுள் மொழியின் வகைகள் எவை?
-
- தனி மொழி
- தொடர் மொழி
- பல்வகை மொழி
- பொது மொழி
அனைத்தும் | |
1, 2, 3 | |
1, 2, 4 | |
1 , 3, 4 |
Question 122 Explanation:
(விளக்கம்: மொழி மூன்று வகைப்படும்)
Question 123 |
- ஒரு மொழி ஒருபொரு ளனவாம் தொடர்மொழி
- பலபொருளன பொது இருமையும் ஏற்பன"
- என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
அகத்தியம் | |
தொல்காப்பியம் | |
நன்னூல் | |
நாலடியார் |
Question 124 |
ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது _____ எனப்படும்.
தனி மொழி | |
தொடர் மொழி | |
பொது மொழி | |
எழுத்து மொழி |
Question 125 |
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது _____ ஆகும்.
தனி மொழி | |
தொடர் மொழி | |
பொது மொழி | |
எழுத்து மொழி |
Question 126 |
ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும் தொடர் மொழிக்கும் பொதுவாய் அமைவது _____ ஆகும்
தனி மொழி | |
தொடர் மொழி | |
பொது மொழி | |
எழுத்து மொழி |
Question 127 |
வேங்கை, எட்டு முதலியவை எவ்வகை மொழிக்கு எடுத்துக்காட்டுகள்
தனி மொழி | |
தொடர் மொழி | |
பொது மொழி | |
எழுத்து மொழி |
Question 127 Explanation:
( விளக்கம்: எள் + து = நின்று எள்ளை உண்
வேம் + கை = வேகின்ற கை)
Question 128 |
ஒரு வினை அல்லது செயலை குறிக்கும் பெயரானது எண் இடம் காலம் பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது ____ எனப்படும்
குணப் பெயர் | |
தொழிற்பெயர் | |
சினைப் பெயர் | |
பொருட்பெயர் |
Question 129 |
'ஆளல்' என்ற தொழிற் பெயரின் வினையடி மற்றும் விகுதி
அல், ஆள் | |
ஆள், அல் | |
ஆல், அள் | |
அள், ஆல் |
Question 130 |
'வாழ்க்கை' என்ற தொழிற் பெயரின் வினையடி மற்றும் விகுதி
வாழ்வு, கை | |
வாழ்வு, ஐ | |
வாழ், கை | |
வாழ், ஐ |
Question 131 |
நடத்தல்’ என்ற தொழிற் பெயரின் வினையடி மற்றும் விகுதி
நடந்து, அல் | |
நட, தல் | |
நட, அல் | |
நடந்து, தல் |
Question 132 |
நட வாமை, கொல்லாமை முதலியவை எவ்வகை தொழிற்பெயர்கள்
முதனிலைத் தொழிற்பெயர் | |
முதனிலை திரிந்த தொழிற்பெயர் | |
எதிர்மறைத் தொழிற்பெயர் | |
செய்வினை |
Question 133 |
விகுதி பெறாமல் வினைப் பகுதியே தொழிற்பெயராதல் எவ்வகை தொழிற்பெயராகும்?
முதனிலைத் தொழிற்பெயர் | |
முதனிலை திரிந்த தொழிற்பெயர் | |
எதிர்மறைத் தொழிற்பெயர் | |
செய்வினை |
Question 134 |
விகுதி பெறாமல் முதனிலை திரிந்து வரும் தொழிற்பெயர் ______ எனப்படும்.
முதனிலைத் தொழிற்பெயர் | |
முதனிலை திரிந்த தொழிற்பெயர் | |
எதிர்மறைத் தொழிற்பெயர் | |
செய்வினை |
Question 135 |
ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது ______ எனப்படும்.
வினையெச்சம் | |
பெயரெச்சம் | |
வினையாலணையும் பெயர் | |
குறிப்பு வினை முற்று |
Question 135 Explanation:
(விளக்கம்: இது தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று காலங்களிலும் வரும்)
Question 136 |
தொழிற்பெயர் குறித்த கூற்றுகளில் தவறானது எது?
வினை பெயர்த்தன்மையாகி வினையையே உணர்த்தி நிற்கும். | |
காலம் காட்டாது | |
முன்னிலைக்கே உரியது | |
எ. கா. : பாடுதல், படித்தல் |
Question 136 Explanation:
( விளக்கம்: படர்க்கைக்கே உரியது)
Question 137 |
வினையாலணையும் பெயர் குறித்த கூற்றுகளில் தவறானது எது?
தொழிலை செய்யும் கருத்தாவைக் குறிக்கும் | |
காலம் காட்டாது | |
மூவிடத்திற்கும் உரியது | |
எ. கா. : பாடியவள், படித்தவர் |
Question 137 Explanation:
(விளக்கம்: காலம் காட்டும்)
Question 138 |
மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது
வணிகக் கப்பல்களும் ஐம்பெருங் காப்பியங்களும் | |
பெரு வணிகமும் பெரும் கலன்களும் | |
ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும் | |
வணிகக் கப்பல்களும் அணிகலன்களும் |
Question 139 |
' காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் ‘ நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது
இலையும் சருகும் | |
தோகையும் சண்டும் | |
தாளும் ஓலையும் | |
சருகும் சண்டும் |
Question 140 |
எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
எந் + தமிழ் + நா | |
எந்த + தமிழ் + நா | |
எம் + தமிழ் + நா | |
எந்தம் + தமிழ் + நா |
Question 141 |
கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ – தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே
பாடிய, கேட்டவர் | |
பாடல், பாடிய | |
கேட்டவர், பாடிய | |
பாடல், கேட்டவர் |
Question 142 |
வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை
குலை வகை | |
மணி வகை | |
கொழுந்து வகை | |
இலை வகை |
Question 143 |
- ‘மரமது மரத்தில் ஏறி
- மரமதைத் தோளில் வைத்து
- மரமது மரத்தைக் கண்டு
- மரத்தினால் மரத்தைக் குத்தி
- மரமது வழியே சென்று ' என்ற பாடலை பாடியவர் யார்?
அழகிய சொக்கநாதர் | |
காளமேக புலவர் | |
சுந்தர கவிராசர் | |
பட்டினத்தடிகள் |
Question 144 |
- ‘வனமனைக் கேகும் போது
- மரமது கண்ட மாதர்
- மரமுடன் மரம் எடுத்தார்’
- என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்
சிலப்பதிகாரம் | |
சீறாப்புராணம் | |
மணிமேகலை | |
தனிப்பாடல் திரட்டு |
Question 145 |
- 'தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை
- தேரும் சிலப்பதி காறமதை
- ஊனிலே எம்முயிர் உல்லலவும் – நிதம்
- ஓதி யுணர்ந்தின் புருவோமே' என்ற பாடலை பாடியவர் யார்?
கா.நமச்சிவாயர் | |
மீனாட்சி சுந்தரனார் | |
கவிமணி | |
பாரதிதாசன் |
Question 146 |
- 'தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே
- தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே
- ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே
- உணர்வினுக் குணர்வதாய் ஒளிர் தமிழ் மொழியே ‘
- என்ற பாடலை பாடியவர் யார்?
கா.நமச்சிவாயர் | |
மீனாட்சி சுந்தரனார் | |
கவிமணி | |
பாரதிதாசன் |
Question 147 |
பொருத்துக
-
- Vowel i) மெய்யெழுத்து
- Consonant ii) உயிரெழுத்து
- Homograph iii) ஒரு மொழி
- Monolingual iv) ஒப்பெழுத்து
i ii iii iv | |
i iii ii iv | |
i ii iv iii | |
ii i iv iii |
Question 148 |
சரியான இணையைத் தேர்ந்தெடு
-
- Conversation – உரையாடல்
- Discussion – கலந்துரையாடல்
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 149 |
- ‘வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே
- மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே
- தானனி சிறப்புறுருந் தனித்தமிழ் மொழியே
- தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே ‘
- என்ற வரிகள் அமைந்த பாடலை இயற்றியவர்
கா. நமச்சிவாயர் | |
மீனாட்சி சுந்தரனார் | |
கவிமணி | |
பாரதிதாசன் |
Question 150 |
தவறான இணையைத் தேர்ந்தெடு
-
- நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும் - மா. நன்னன்
- தவறின்றி தமிழ் எழுதுவோம் - முனைவர் சேதுமணி மணியன்
- பச்சை நிழல் – உதயசங்கர்
1, 2 | |
2, 3 | |
1, 3 | |
எதுவுமில்லை |
Question 150 Explanation:
• நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும் - முனைவர் சேதுமணி மணியன்
• தவறின்றி தமிழ் எழுதுவோம் - மா. நன்னன்.)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 150 questions to complete.
I got 95
149/150
My Mark
143
135
Really good experience
119
144/150