Online TestTamil
10th Std Tamil Notes Part 5 Online Test
10 ஆம் வகுப்பு - ஐந்தாம் பாடம் - பொதுத்தமிழ் (சமச்சீர்)
Congratulations - you have completed 10 ஆம் வகுப்பு - ஐந்தாம் பாடம் - பொதுத்தமிழ் (சமச்சீர்).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
அப்பூதியடிகள் ------------------ இல் தோன்றியவர்.
மங்களூர் | |
திங்களூர் | |
நங்க நல்லூர் | |
திருவெண்ணெய் நல்லூர் |
Question 2 |
கீழ்க்கண்டவர்களுள் யார், திருநாவுக்கரசரிடம் பேரன்புடையவர்?
அறவண அடிகள் | |
அப்பூதியடிகள் | |
சடையப்பர் | |
இவர்களில் யாருமில்லை |
Question 3 |
அன்புக்கு அறிகுறியாகத் தம்மக்கள், அளவை, நிறைகோல், பசு, தாம் வைத்த தண்ணீர்ப்பந்தல் ஆகிய அனைத்திற்கும் திருநாவுக்கரசு என்னும் பெயரையே சூட்டி மகிழ்ந்தவர் யார்?
அறவண அடிகள் | |
அப்பூதியடிகள் | |
சடையப்பர் | |
இவர்களில் யாருமில்லை |
Question 4 |
திருநாவுக்கரசருக்கு, திருவமுது படைப்பதற்காக வாழைக்குருத்து அரியச் சென்றவர் யார்?
அப்பூதியடிகள் | |
அப்பூதியடிகளின் மூத்த மகன் | |
அப்பூதியடிகளின் இளைய மகன் | |
அப்பூதியடிகளின் மனைவி
|
Question 5 |
திருநாவுக்கரசருக்கு, திருவமுது படைப்பதற்காக வாழைக்குருத்து அரியச் சென்ற அப்பூதியடிகளின் மூத்த மகன், பாம்பு தீண்டியதால் இறந்தான். திருநாவுக்கரசு இதனையறிந்து, “ஒன்றுகொலாம்” என்னும் ------------------- பாடி, இறந்த பிள்ளையை எழுப்பித் திருவமுது செய்தருளினார்.
திருவருட்பா | |
கந்த சஷ்டி கவசம் | |
திரிகடுகம் | |
திருப்பதிகம் |
Question 6 |
களவு, பொய், காமம், கோபம் முதலிய குற்றம் காய்ந்தார்; வளமிகு மனையின் வாழ்க்கை நிலையினார் மனைப்பால் உள்ள; அளவைகள், நிறைகோல், மக்கள், ஆவொடு மேதி மற்றும்; உளஎலாம் அரசின் நாமம் சாற்றும்அவ் வொழுக லாற்றார் - இந்த பாடல் இடம் பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர்?
கம்பராமாயணம், கம்பர் | |
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
பெரிய புராணம், சேக்கிழார் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் |
Question 7 |
அளவில்சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார்; உளமனைய தண்ணளித்தாய் உறுவேனில் பரிவகற்றிக்; குளம்நிறைந்த நீர்த்தடம்போல் குளிர்தூங்கும் பரப்பினதாய் ; வளம்மருவும் நிழல்தருதண் ணீர்ப்பந்தர் வந்தணைந்தார் - இந்த பாடல் இடம் பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர்?
கம்பராமாயணம், கம்பர் | |
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
பெரிய புராணம், சேக்கிழார் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
|
Question 8 |
வந்தணைந்த வாகீசர் மந்தமா ருதசீதப்; பந்தருடன் அமுதமாம் தண்ணீரும் பார்த்தருளிச்; சிந்தைவியப் புறவருவார் திருநாவுக் கரசெனும்பேர்; சந்தமுற வரைந்ததனை எம்மருங்கும் தாங்கண்டார்; - இந்த பாடல் இடம் பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர்?
கம்பராமாயணம், கம்பர் | |
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
பெரிய புராணம், சேக்கிழார் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
|
Question 9 |
ஆறணியும் சடைமுடியார் அடியார்க்கு நீர்வைத்த; ஈறில்பெருந் தண்ணீர்ப்பந் தரில்நும்பேர் எழுதாதே; வேறொருபேர் முன்னெழுத வேண்டியகா ரணம்என்கொல்; கூறுமென எதிர்மொழிந்தார் கோதில்மொழிக் கொற்றவனார் - இந்த பாடல் இடம் பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர்?
கம்பராமாயணம், கம்பர் | |
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
பெரிய புராணம், சேக்கிழார் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
|
Question 10 |
பொங்குகடல் கல்மிதப்பிற் போந்தேறும் அவர் பெருமை; அங்கணர்தம் புவனத்தில் அறியாதார் யாருளரே; மங்கலமாம் திருவேடத் துடனின்றிவ் வகைமொழிந்தீர்; எங்குறைவீர் நீர்தாம்யார் இயம்புமென இயம்பினார் - இந்த பாடல் இடம் பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர்?
கம்பராமாயணம், கம்பர் | |
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
பெரிய புராணம், சேக்கிழார் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் |
Question 11 |
திருமறையோர் அதுமொழியத் திருநாவுக் கரசர்அவர்; பெருமையறிந் துரைசெய்வார் பிறதுறையி னின்றேற அருளுபெருஞ் சூலையினால் ஆட்கொள்ள அடைந்துய்ந்த தெருளும்உணர் வில்லாத சிறுமையேன் யான்என்றார் - இந்த பாடல் இடம் பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர்?
கம்பராமாயணம், கம்பர் | |
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
பெரிய புராணம், சேக்கிழார் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் |
Question 12 |
அரசறிய உரைசெய்ய அப்பூதி அடிகள்தாம்; கரகமலம் மிசைகுவியக் கண்ணருவி பொழிந்திழிய; உரைகுழறி உடம்பெல்லாம் உரோமபுள கம்பொலியத்; தரையின்மிசை வீழ்ந்தவர்தம் சரண கமலம் பூண்டார் - இந்த பாடல் இடம் பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர்?
கம்பராமாயணம், கம்பர் | |
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
பெரிய புராணம், சேக்கிழார் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் |
Question 13 |
ஆசனத்தில் பூசனைகள் அமர்வித்து விருப்பினுடன்; வாசம்நிறை திருநீற்றுக் காப்பேந்தி மனந்தழைப்பத்; தேசமுய்ய வந்தவரைக் திருவமுது செய்விக்கும் ; நேசமுற விண்ணப்பம் செயஅவரும் அதுநேர்ந்தார் - இந்த பாடல் இடம் பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர்?
கம்பராமாயணம், கம்பர் | |
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
பெரிய புராணம், சேக்கிழார் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
|
Question 14 |
தூயநற் கறிக ளான அறுவகைச் சுவையால் ஆக்கி; ஆயஇன் னமுதும் ஆக்கி அமுதுசெய் தருளத் தங்கள் ; சேயவர் தம்மில் மூத்த திருநாவுக் கரசை வாழை; மேயபொற் குருத்துக் கொண்டு வாஎன விரைந்து விட்டார் - இந்த பாடல் இடம் பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர்?
கம்பராமாயணம், கம்பர் | |
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
பெரிய புராணம், சேக்கிழார் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் |
Question 15 |
நல்லதாய் தந்தைஏவ நானிது செயப்பெற் றேனென்று; ஒல்லையில் விரைந்து தோட்டத் துள்புக்குப் பெரியவாழை; மல்லலம் குருத்தை ஈரும் பொழுதினில் வாள ராவொன்று; அல்லலுற் றழுங்கிச் சோர அங்கையில் தீண்டிற் றன்றே - இந்த பாடல் இடம் பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர்?
கம்பராமாயணம், கம்பர் | |
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
பெரிய புராணம், சேக்கிழார் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
|
Question 16 |
தளர்ந்துவீழ் மகனைக் கண்டு தாயரும் தந்தை யாரும் ; உளம்பதைத்து உற்று நோக்கி உதிரம்சேர் வடிவும் மேனி; விளங்கிய குறியும் கண்டு விடத்தினால் வீந்தான் என்று; துளங்குதல் இன்றித் தொண்டர் அமுதுசெய் வதற்குச் சூழ்வார் - இந்த பாடல் இடம் பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர்?
கம்பராமாயணம், கம்பர் | |
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
பெரிய புராணம், சேக்கிழார் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
|
Question 17 |
ஆதிநான் மறைநூல் வாய்மை அப்பூதி யாரை நோக்கிக்; காதலர் இவர்க்கு மூத்த சேயையும் காட்டும் முன்னே; மேதகு பூதி சாத்த என்றலும் விளைந்த தன்மை ; யாதும்ஒன் றுரையார் இப்போது இங்கவன் உதவான் என்றார் - இந்த பாடல் இடம் பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர்?
கம்பராமாயணம், கம்பர் | |
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
பெரிய புராணம், சேக்கிழார் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
|
Question 18 |
அவ்வுரை கேட்ட போதே அங்கணர் அருளால் அன்பர் ; செவ்விய திருவுள் ளத்தோர் தடுமாற்றஞ் சேர நோக்கி; இவ்வுரை பொறாதென் உள்ளம், என்செய்தான் இதற்கொன் றுண்டால்; மெய்விரித் துரையும் என்ன விளம்புவார் விதிர்ப்புற் றஞ்சி - இந்த பாடல் இடம் பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர்?
கம்பராமாயணம், கம்பர் | |
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் | |
பெரிய புராணம், சேக்கிழார் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் |
Question 19 |
நாவினுக் கரசர் கேளா நன்றுநீர் புரிந்த வண்ணம்; யாவரித் தன்மை செய்வார் என்றுமுன் எழுந்து சென்றே ; ஆவிதீர் சவத்தை நோக்கி அண்ணலார் அருளும் வண்ணம் ; பாவிசைப் பதிகம் பாடிப் பணிவிடம் பாற்று வித்தார் - இந்த பாடல் இடம் பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர்?
கம்பராமாயணம், கம்பர் | |
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்
| |
பெரிய புராணம், சேக்கிழார் | |
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
|
Question 20 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
காய்ந்தார் – நீக்கினார் | |
ஆ – பசு | |
மேதி – பன்றி | |
நிறைகோல் – துலாக்கோல் (தராசு) |
Question 20 Explanation:
மேதி என்பதன் சரியான சொற்பொருள் எருமை.
Question 21 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
மனை - வீடு | |
தண்ணளித்தாய் – குளிர்ச்சி நிறைந்த | |
தடம் – தடாகம் | |
நவ்வி - யானை |
Question 21 Explanation:
நவ்வி என்பதன் சரியான சொற்பொருள் மான்
Question 22 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
மந்தமாருதசீதம் – குளிர்ந்த இளந்தென்றல் காற்றுடன் கூடிய குளிர்ந்த நீர் | |
சந்தம் – அழகு | |
ஈறு– உடம்பு | |
புவனம் - உலகம் |
Question 22 Explanation:
ஈறு என்பதன் சரியான சொற்பொருள் எல்லை.
Question 23 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
சூலை – கொடிய வயிற்றுநோய் | |
கரம் – கை | |
கமலம் – தாமரை | |
மிசை – கீழ் |
Question 23 Explanation:
மிசை என்பதன் சரியான சொற்பொருள் மேல்.
Question 24 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
நேர்ந்தார் – இசைந்தார் | |
தங்கள் சேயவர் – தங்களின் குழந்தைகள் | |
பொற்குருத்து – மிக இளமையான வாழைக்குருத்து | |
ஒல்லை – மெதுவாக |
Question 24 Explanation:
ஒல்லை என்பதன் சரியான சொற்பொருள் விரைவு.
Question 25 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
மல்லல் – வளமான | |
அம் – அழகிய | |
வாள் – கூரிய | |
அரா – தேள் |
Question 25 Explanation:
அரா என்பதன் சரியான சொற்பொருள் பாம்பு.
Question 26 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
அழுங்கி – மிக வருந்தி | |
அங்கை – உள்ளங்கை | |
உதிரம் – மோதிரம் | |
மேனி – உடல் |
Question 26 Explanation:
உதிரம் என்பதன் சரியான சொற்பொருள் குருதி.
Question 27 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
வீந்தான் – இறந்தான் | |
மறைநூல் – நான்மறை | |
செய் – சிற்றூர் | |
பூதி – திருநீறு |
Question 27 Explanation:
செய் என்பதன் சரியான சொற்பொருள் குழந்தை.
Question 28 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
அங்கணர் – அழகிய நெற்றிக்கண்ணையுடைய சிவன் | |
பொறாது – ஏற்கும் | |
மெய் – உண்மை | |
பணிவிடம் – பாம்பின் நஞ்சு |
Question 28 Explanation:
பொறாது என்பதன் சரியான சொற்பொருள் ஏற்காது.
Question 29 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
சவம் – பிணம் | |
பாற்றுவித்தார் – போக்குவித்தார் | |
நவ்வி - மான் | |
கேழல் - யானை |
Question 29 Explanation:
கேழல் என்பதன் சரியான சொற்பொருள் பன்றி.
Question 30 |
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு தருக.
செலவொழியா வழி - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் | |
வழிக்கரை – ஆறாம் வேற்றுமைத்தொகை | |
உறுவேனில் – வினைத்தொகை | |
நீர்த்தடம் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை |
Question 30 Explanation:
உறுவேனில் என்பதன் சரியான இலக்கணக்குறிப்பு உரிச்சொற்றொடர்.
Question 31 |
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு தருக.
பந்தர் – பந்தல் என்பதன் கடைப்போலி | |
அணைந்த வாகீசர் – வினையெச்சம் | |
பொங்குகடல் – வினைத்தொகை | |
பெருமையறிந்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை |
Question 31 Explanation:
அணைந்த வாகீசர் என்பதன் சரியான இலக்கணக்குறிப்பு பெயரெச்சம்
Question 32 |
அறிந்து, அடைந்து - இலக்கணக்குறிப்பு தருக.
வினையெச்சம் | |
பெயரெச்சம் | |
வினைத்தொகை | |
இரண்டாம் வேற்றுமைத்தொகை
|
Question 33 |
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு தருக.
கரகமலம் – உருவகம் | |
பொழிந்திழிய – வினையெச்சம் | |
தேசம் - இடவாகுபெயர் | |
வந்தவர் – வினைமுற்று |
Question 33 Explanation:
வந்தவர் என்பதன் சரியான இலக்கணக்குறிப்பு வினையாலணையும் பெயர்.
Question 34 |
நற்கறிகள், இன்னமுதம் – இலக்கணக்குறிப்பு தருக.
வினைத்தொகை | |
பண்புத்தொகை | |
ஆகுபெயர் | |
உருவகம் |
Question 35 |
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு தருக.
தாய்தந்தை – எண்ணும்மை | |
மல்லலம் குருத்து – உரிச்சொற்றொடர் | |
தீண்டிற்று – ஒன்றன்பால் வினைமுற்று | |
துளங்குதல் – தொழிற்பெயர் |
Question 35 Explanation:
தாய்தந்தை என்பதன் சரியான இலக்கணக்குறிப்பு உம்மைத்தொகை
Question 36 |
பூதி சாத்த - இலக்கணக்குறிப்பு தருக
ஒன்றன்பால் வினைமுற்று | |
வினைத்தொகை | |
பண்புத்தொகை | |
இரண்டாம் வேற்றுமைத்தொகை |
Question 37 |
அங்கணர் – இலக்கணக்குறிப்பு தருக
ஒன்றன்பால் வினைமுற்று | |
வினைத்தொகை | |
பண்புத்தொகை | |
அன்மொழித்தொகை |
Question 38 |
நோக்கி – இலக்கணக்குறிப்பு தருக
ஒன்றன்பால் வினைமுற்று | |
வினைத்தொகை | |
பண்புத்தொகை | |
வினையெச்சம் |
Question 39 |
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு தருக.
எழுந்து, சென்று – வினையெச்சம் | |
பணிவிடம் - இரண்டாம் வேற்றுமைத்தொகை | |
கேளா - செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம் | |
அங்கணர் - அன்மொழித்தொகை |
Question 39 Explanation:
பணிவிடம் என்பதன் சரியான இலக்கணக்குறிப்பு ஆறாம் வேற்றுமைத்தொகை.
Question 40 |
பொருந்தாதது எது? பிரித்தறிதல்.
செலவொழியா = செல + ஒழியா | |
வழிக்கரை = வழி + கரை | |
வந்தணைந்த = வந்து + அணைந்த | |
எம்மருங்கும் = எ + மருங்கும் |
Question 40 Explanation:
செலவொழியா என்பதன் சரியான பிரித்தறிதல் = செலவு + ஒழியா.
Question 41 |
பொருந்தாதது எது? பிரித்தறிதல்.
எங்குறைவீர் = எங்கு + உறைவீர் | |
கண்ணருவி = கண் + அருவி | |
உடம்பெல்லாம் = உடம்பு + எல்லாம் | |
திருவமுது = திருவ + முது |
Question 41 Explanation:
திருவமுது என்பதன் சரியான பிரித்தறிதல் = திரு + அமுது.
Question 42 |
பொருந்தாதது எது? பிரித்தறிதல்.
மனந்தழைப்ப = மனம் + தழைப்ப | |
நற்கறிகள் = நன்மை + கறிகள் | |
இன்னமுது = இன்ன + முது | |
வாளரா = வாள் + அரா |
Question 42 Explanation:
இன்னமுது என்பதன் சரியான பிரித்தறிதல் = இனிமை + அமுது.
Question 43 |
பொருந்தாதது எது? பிரித்தறிதல்.
அங்கை = அகம் + கை | |
நான்மறை = நான் + மறை | |
விதிர்ப்புற்றஞ்சி = விதிர்ப்பு + உற்று + அஞ்சி | |
பாவிசை = பா + இசை |
Question 43 Explanation:
நான்மறை என்பதன் சரியான பிரித்தறிதல் = நான்கு + மறை.
Question 44 |
பெரியபுராணத்தை இயற்றியவர்?
சீத்தலைச் சாத்தனார் | |
கம்பர் | |
மாணிக்கவாசகர் | |
சேக்கிழார் |
Question 45 |
சேக்கிழார், தற்போதைய ---------------- மாவட்டத்திலுள்ள குன்றத்தூரில் பிறந்தவர்.
தஞ்சாவூர் | |
திருச்சி | |
மதுரை | |
காஞ்சிபுரம் |
Question 46 |
சேக்கிழார் அவர்களின் இயற்பெயர் -----------------?
முருகானந்தன் | |
இராமதேவன் | |
அருண்மொழித் தேவர் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 47 |
அநபாயச்சோழனிடம் தலைமை அமைச்சராய்த் திகழ்ந்தவர் யார்?
சீத்தலைச் சாத்தனார் | |
கம்பர் | |
மாணிக்கவாசகர் | |
சேக்கிழார் |
Question 48 |
உத்தமசோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர் யார்?
சீத்தலைச் சாத்தனார் | |
கம்பர் | |
மாணிக்கவாசகர் | |
சேக்கிழார் |
Question 49 |
தெய்வச் ---------------- என்றும் தொண்டர்சீர் பரவுவார் என்றும் போற்றப்படுபவர் யார்?
சீத்தலைச் சாத்தனார் | |
கம்பர் | |
மாணிக்கவாசகர் | |
சேக்கிழார் |
Question 50 |
சேக்கிழார் அவர்களின் காலம் -------------------- நூற்றாண்டு.
கி.பி. பத்தாம் | |
கி.பி. பதினொன்றாம் | |
கி.பி.பன்னிரண்டாம் | |
கி.பி. பதின்மூன்றாம்
|
Question 51 |
தனியடியார் அறுபத்துமூவரும், தொகையடியார் ஒன்பதின்மரும் ஆக எழுபத்திருவர் ------------------- ஆவர்.
சமண அடியார் | |
புத்த அடியார் | |
சிவனடியார் | |
வைணவ அடியார் |
Question 52 |
-------------------- வரலாற்றைக் கூறுவதால், பெருமை பெற்ற புராணம் என்னும் பொருளில் ” பெரிய புராணம்” என்னும் பெயர் பெற்றது.
சமண அடியார் | |
புத்த அடியார் | |
சிவனடியார் | |
வைணவ அடியார்
|
Question 53 |
பெரிய புராணம் நூலுக்கு, சேக்கிழார் இட்ட பெயர் ------------------------.
ஞான தேசிக புராணம் | |
சிவனடி புராணம் | |
திருத்தொண்டர் புராணம் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 54 |
பெரிய புராணம் நூலை, தில்லை நடராசப்பெருமான் “------------------------” என்று அடியெடுத்துக் கொடுக்கப் பாடப்பெற்றதெனவும் கூறுவர்.
ஓம் நமச்சிவாய | |
சிவனடி போற்றி | |
உலகெலாம் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 55 |
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார், “பத்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ” என ------------------- என்பவரை புகழ்ந்துரைத்துள்ளார்.
சீத்தலைச் சாத்தனார் | |
கம்பர் | |
மாணிக்கவாசகர் | |
சேக்கிழார் |
Question 56 |
உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியந்தான், ” பெரியபுராணம் ” என்பார் ------------------------------.
அண்ணா | |
கண்ணதாசன் | |
பெரியார் | |
திரு.வி.க |
Question 57 |
அன்பைப் பெருக்கி எனது ஆருயிரைக் காக்க வந்த; இன்பப் பெருக்கே இறையே பராபரமே - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
வள்ளலார் | |
தாயுமானவர் | |
நாமக்கல் கவிஞர் | |
வாணிதாசன் |
Question 58 |
ஒளிப்படம் எடுக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?
1810 | |
1820 | |
1830 | |
1840 |
Question 59 |
----------------- என்ற, அங்கிலேயர் முதலில் ஓடும் குதிரையை இயக்கப்படமாக எடுத்து வெற்றி பெற்றார்.
எடிசன் | |
எட்வர்டு மைபிரிட்சு | |
ஈஸ்ட்மன் | |
பிரான்சிஸ் சென்கின்சு |
Question 60 |
------------- என்பார் படச்சுருள் உருவாக்கும் முறையை கண்டுபிடித்தார்.
எடிசன் | |
எட்வர்டு மைபிரிட்சு | |
ஈஸ்ட்மன் | |
பிரான்சிஸ் சென்கின்சு
|
Question 61 |
------------- என்பவர் ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தார்.
எடிசன் | |
எட்வர்டு மைபிரிட்சு | |
ஈஸ்ட்மன் | |
பிரான்சிஸ் சென்கின்சு
|
Question 62 |
பிரான்சிஸ் சென்கின்சு என்ற அமெரிக்கர் ---------------- இல் ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப்படத்தைப் பலரும் பார்க்கும் வகையில் வடிவமைத்தார்.
1894 | |
1884 | |
1874 | |
1864 |
Question 63 |
------------------------ என்ற அமெரிக்கர் 1894 இல் ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப்படத்தைப் பலரும் பார்க்கும் வகையில் வடிவமைத்தார்.
எடிசன் | |
எட்வர்டு மைபிரிட்சு | |
ஈஸ்ட்மன் | |
பிரான்சிஸ் சென்கின்சு
|
Question 64 |
பிரான்சிஸ் சென்கின்சு என்ற ----------------- நாட்டுக்காரர் 1894 இல் ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப்படத்தைப் பலரும் பார்க்கும் வகையில் வடிவமைத்தார்.
சுவிட்சர்லாந்து | |
கனடா | |
அமெரிக்கா | |
ஜப்பான் |
Question 64 Explanation:
இவ்வியக்கப்படத்தில் நாட்டியம், கடல் அலைகள் கரையில் மோதுதல் முதலிய கட்சிகளைக் காண முடிந்தது. இவற்றை ஆயிரக்கணக்கான இடங்களில் படம் காட்டிக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கினர். இவை பேசும் படங்கள் அல்ல, ஊமை படங்களே.
Question 65 |
புதிய படவீழ்த்திகள் உருவாக, இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன?
எடிசன் | |
எட்வர்டு மைபிரிட்சு | |
ஈஸ்ட்மன் | |
பிரான்சிஸ் சென்கின்சு
|
Question 66 |
ஒரு மொழிப்படத்தை மற்ற மொழியில் மாற்றி அமைக்கும் முறைக்கு -------------- என்று பெயர்
குரல் மற்றம் | |
கதை மற்றம் | |
மொழி மாற்றம் | |
இவற்றில் ஏதுமில்லை
|
Question 67 |
நடிப்பாற்றலை எடுத்துக்கூறிச் சில நேரங்களில் தாமே நடித்தும், காட்சிகள் அமைத்தும் படம் முடியும் வரை உழைக்கும் நுண்மாண் நுழைபுலம் உடையாரை --------------------- என்பர்.
விநியோகஸ்தர் | |
தயாரிப்பாளர் | |
இயக்குநர் | |
நடிகர் |
Question 68 |
-------------------- வாயிலாக உலக நிகழ்வுகளை நம் இருப்பிடத்திலேயே, காணும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன.
செய்திப்படங்கள் | |
கருத்துப்படங்கள் | |
கல்விப்படங்கள் | |
இவற்றில் ஏதுமில்லை
|
Question 69 |
-------------- வாயிலாக ஒருநாட்டு மக்களின் வாழ்க்கை முறைகளை உள்ளவாறு அறியலாம்.
செய்திப்படங்கள் | |
கருத்துப்படங்கள் | |
கல்விப்படங்கள் | |
விளக்கப் படங்கள்
|
Question 70 |
திரைப்படம் எடுக்கப் பயன்படும் படச்சுருள் ----------------- என்னும் பொருளால் ஆனது.
ஆக்டினாயிடு | |
செல்லுலாய்டு | |
மேக்னைடு | |
இவற்றில் ஏதுமில்லை
|
Question 71 |
படம் எடுக்கப் பயன்படும் சுருள், ----------------------- எனப்படும்.
எதிர்ச்சுருள் | |
ஒளி நாடா | |
ஒலி நாடா | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 71 Explanation:
ஒலி, ஒளிப்பதிவுகளைத் தனித்தனிப் படச்சுருள்களில் அமைப்பர்.
Question 72 |
படப்பிடிப்புக் கருவியில் ஓரடி நீளமுள்ள படச்சுருளில் ------------- படங்கள் வீதம் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ச்சியாக எடுக்கப்படும்.
14 | |
15 | |
16 | |
17 |
Question 73 |
நடிகர்களின் நடிப்பையும், பாடும் பாடல்களையும், உரையாடல்களையும் ------------------ செய்வர்.
ஒலிப்பதிவு | |
ஒளிப்பதிவு | |
ஒழிப்பதிவு | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 74 |
உரையாடலில் எழும் ஒலி அலைகள் ஒரு நுண்ணொலிபெருக்கியைத் தாக்கும். நுண்ணொலிபெருக்கி ஒலியலைகளை மின் அதிர்வுகளாக்கும். மின் அதிர்வுகள் பெருக்கப்பட்டு ஒருவகை விளக்கினுள் செலுத்தப்படுகின்றன. அம்மின்னோட்டத்திற்குத் தக்கவாறு விளக்கின் --------------- மாறும்.
ஒளி | |
ஒழி | |
ஒலி | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 75 |
--------------- கருவி என்னும் கருவி திரையரங்குகளில் திரைப்படம் காட்டப் பயன்படுகிறது.
ஒழிஒலிப்படக் | |
ஒளிஒலிப்படக் | |
ஒளிஒழிப்படக் | |
இவற்றில் ஏதுமில்லை
|
Question 76 |
ஒளிமிகு விளக்குகளுக்கும், உருப்பெருக்கிகளுக்கும் இடையில் படம் வரும். முன்புறம் ஒரு மூடி இருக்கும். மூடிக்கு இரண்டு கைகள் உண்டு. அந்த மூடி நொடிக்கு ----------------- முறை சுழலும். அதன் கைகள் நொடிக்குப் ------------ முறை சுழலும்.
ஆறு, பன்னிரண்டு | |
ஏழு, பதினான்கு | |
எட்டு, பதினாறு | |
ஒன்பது, பதினெட்டு |
Question 77 |
கருத்துப்படம் அமைக்கத் தொடங்கியவர் ----------------- என்பவர் ஆவார்.
எடிசன் | |
எட்வர்டு மைபிரிட்சு | |
ஈஸ்ட்மன் | |
வால்ட் டிஸ்னி |
Question 77 Explanation:
வால்ட் டிஸ்னி ஓவியர். ஒரே செயலைக் குறிக்கும் பல்லாயிரக்கணக்கான படங்களை வரைவார். ஒன்றுக்கொன்று சிறிது சிறிதாக மாறுவனவாக இருக்கும். இப்படங்களை வரிசைப்படி அடுக்கி வைத்துவிட்டு மிக வேகமாக ஏடுகளைப் புரட்டினால், அவை வெவ்வேறு படங்களாகத் தோன்றாமல் ஒரே நிகழ்வாகத் தோன்றும்.
Question 78 |
கருத்துப் படம் -------------- என்று அழைக்கப்படும்.
விளக்கப்படம் | |
செய்திப்படம் | |
இயங்குரு படம் | |
இவற்றில் ஏதுமில்லை
|
Question 79 |
உலகில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளையே படமாக்கிக் காட்டுவது -----------------?
விளக்கப்படம் | |
செய்திப்படம் | |
இயங்குரு படம் | |
இவற்றில் ஏதுமில்லை
|
Question 80 |
ஒரு நிகழ்வை மட்டும் எடுத்துக்கொண்டு, அதைப்பற்றிய முழு விளக்கத்தினையும் தருவது ------------------?
விளக்கப்படம் | |
செய்திப்படம் | |
இயங்குரு படம் | |
இவற்றில் ஏதுமில்லை
|
Question 81 |
உலகத்தமிழ் மாநாட்டு நிகழ்வை மட்டும் காட்டும் படம் ---------------- எனப்படும்.
விளக்கப்படம் | |
செய்திப்படம் | |
இயங்குரு படம் | |
இவற்றில் ஏதுமில்லை
|
Question 82 |
வாழ்க்கையில் நேரில் காண முடியாத பல இடங்களையும் நேரில் பார்ப்பதனைப் போலவே காட்டுவதற்குக் ----------------- வழி செய்கிறது.
கல்விப்படம் | |
விளக்கப்படம் | |
செய்திப்படம் | |
இயங்குரு படம் |
Question 83 |
சந்திப்பிழை நீக்கி எழுதுக.
திரைப்படம் எடுக்க பயன்படும் படசுருள் செல்லுலாய்டு என்னும் பொருளால் ஆனது | |
திரைப்படம் எடுக்கப் பயன்படும் படச்சுருள் செல்லுலாய்டு என்னும் பொருளால் ஆனது | |
திரைபடம் எடுக்கப் பயன்படும் படசுருள் செல்லுலாய்டு என்னும் பொருளால் ஆனது | |
திரைபடம் எடுக்க பயன்படும் படச்சுருள் செல்லுலாய்டு என்னும் பொருளால் ஆனது
|
Question 84 |
சந்திப்பிழை நீக்கி எழுதுக.
திரைப்படம் மக்களைத் தன்பால் ஈர்த்துக் கட்டிப்போட வல்லது | |
திரைபடம் மக்களைத் தன்பால் ஈர்த்துக் கட்டிபோட வல்லது | |
திரைப்படம் மக்களை தன்பால் ஈர்த்துக் கட்டிபோட வல்லது | |
திரைபடம் மக்களைத் தன்பால் ஈர்த்து கட்டிப்போட வல்லது
|
Question 85 |
ஒருமைப் பன்மைப் பிழை நீக்கி எழுதுக :-
ஈஸ்ட்மன் என்பார் படச்சுருள் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தனர் | |
ஈஸ்ட்மன் என்பார் படச்சுருள் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தார்கள் | |
ஈஸ்ட்மன் என்பார் படச்சுருள் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தனர்கள் | |
ஈஸ்ட்மன் என்பார் படச்சுருள் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தார்
|
Question 86 |
ஒருமைப் பன்மைப் பிழை நீக்கி எழுதுக :-
இயங்குரு படங்களைக் குழந்தைகள் விரும்பிப் பார்க்கின்றனர் | |
இயங்குரு படங்களைக் குழந்தைகள் விரும்பிப் பார்க்கின்றது | |
இயங்குரு படங்களைக் குழந்தைகள் விரும்பிப் பார்க்கின்றார்கள் | |
இயங்குரு படங்களைக் குழந்தைகள் விரும்பிப் பார்க்கின்றன
|
Question 87 |
பொருந்தாதது எது?
ஈஸ்ட்மன் - படச்சுருள் | |
எடிசன் - ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவி | |
எட்வர்டு மைபிரிட்சு - இயக்கப்படம் | |
வால்ட் டிஸ்னி - புதிய படவீழ்த்திகள் |
Question 87 Explanation:
வால்ட் டிஸ்னி என்பது கருத்துப்படத்துடன் தொடர்புடையது
Question 88 |
பொருந்தாதது எது?
persistence of vision - பார்வை நிலைப்பு | |
Dubbing - ஒளிச்சேர்க்கை | |
Director - இயக்குநர் | |
Shooting - படப்பிடிப்பு |
Question 88 Explanation:
Dubbing - ஒலிச்சேர்க்கை.
Question 89 |
பொருந்தாதது எது?
cartoon - கருத்துப் படம் | |
Negative - எதிர்ச்சுருள் | |
Camera - படப்பிடிப்புக்கருவி | |
Trolly - ஒளி நாடா |
Question 89 Explanation:
Trolly - நகர்த்தும் வண்டி
Question 90 |
பொருந்தாதது எது?
Microphone - நுண்ணொலிபெருக்கி | |
Projector - எதிர்ச்சுருள் | |
Lense - உருப்பெருக்கி | |
Motion Pictures - இயங்குருப் படங்கள் |
Question 90 Explanation:
Projector – படவீழ்த்தி
Question 91 |
பாரதரத்னா எம். ஜி. இராமச்சந்திரன் இலங்கையிலுள்ள கண்டியில் ---------------- ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் பதினேழாம்நாள் பிறந்தார்.
1907 | |
1917 | |
1927 | |
1937 |
Question 92 |
பாரதரத்னா எம். ஜி. இராமச்சந்திரன் கோபாலமேனன் – சத்யபாமா இணையருக்கு -------------- மகன் ஆவார்.
மூன்றாவது | |
நான்காவது | |
ஐந்தாவது | |
ஆறாவது |
Question 93 |
பாரதரத்னா எம். ஜி. இராமச்சந்திரன் - இவரது இரண்டாவது அகவையில் தந்தை காலமானார். இராமச்சந்திரனுடைய குடும்பம் தமிழ்நாட்டில் உள்ள --------------------- நகருக்குக் குடிபெயர்ந்தது.
சாத்தூர் | |
மன்னார்குடி | |
செங்கல்பட்டு | |
கும்பகோணம் |
Question 94 |
பாரதரத்னா எம். ஜி. இராமச்சந்திரன் அவர்களின் அன்னை சத்யபாமா, அங்குள்ள ---------------- பள்ளியில் சக்கரபாணியையும், இராமச்சந்திரனையும் சேர்த்தார்.
திண்ணைப் | |
ஆனையடிப் | |
காஞ்சிப் | |
இவற்றில் ஏதுமில்லை
|
Question 95 |
------------------ என்பவரின் பேச்சாற்றல், பழகும் பண்பு, உண்மை, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு முதலியவற்றால் இராமச்சந்திரன் கவரப்பட்டார்.
தந்தை பெரியார் | |
அறிஞர் அண்ணா | |
திரு.வி.க | |
இவர்களில் யாருமில்லை |
Question 96 |
கடின உழைப்பே ஒரு நாட்டுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும் என்று நம்பியவர்?
தந்தை பெரியார் | |
அறிஞர் அண்ணா | |
திரு.வி.க | |
எம்.ஜி.ஆர்
|
Question 97 |
மக்கள் ---------------- என்பவரை புரட்சி நடிகர், மக்கள் திலகம் என்றும் போற்றினார்.
தந்தை பெரியார் | |
அறிஞர் அண்ணா | |
திரு.வி.க | |
எம்.ஜி.ஆர் |
Question 98 |
எம்.ஜி.ஆர் அவர்களை இதயக்கனி என்று போற்றியவர்?
தந்தை பெரியார் | |
அறிஞர் அண்ணா | |
திரு.வி.க | |
இவர்களில் யாருமில்லை
|
Question 99 |
எம்.ஜி.ஆர் அவர்கள் ------------ ஆம் ஆண்டு சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினரானார்.
1960 | |
1961 | |
1962 | |
1963 |
Question 100 |
எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது --------------- தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
சாத்தூர் | |
ஆர்.கே.நகர் | |
ராயபுரம் | |
பரங்கிமலை |
Question 101 |
எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் ------------- ஆம் ஆண்டில், தாமிருந்த இயக்கத்திலிருந்து விலகிப் புதிய கட்சியைத் தொடங்கினார்.
1970 | |
1971 | |
1972 | |
1973 |
Question 102 |
எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் -------------- ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரு வெற்றி பெற்று முதல்வராகப் பதவி ஏற்றார்.
1975 | |
1976 | |
1977 | |
1978 |
Question 103 |
எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் -------------- ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதல்வராகப் பணியாற்றினார்.
9 | |
10 | |
11 | |
12 |
Question 104 |
எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களது பணிகளைப் பாராட்டி, டாக்டர் பட்டம் வழங்கியது யார்?
திருச்சி பல்கலைக்கழகம் | |
சென்னைப் பல்கலைக்கழகம் | |
மதுரைப் பல்கலைக்கழகம் | |
அண்ணா பல்கலைக்கழகம் |
Question 104 Explanation:
இந்திய அரசு சிறந்த நடிகருக்கான பாரத் பட்டத்தை வழங்கி, அவருக்குச் சிறப்புச் சேர்த்தது.
Question 105 |
காமராசர் காலத்தில் அறிமுகப்படுத்திய மதிய உணவுத் திட்டத்தைத் தொடக்கப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் சத்துணவு வழங்கும் திட்டமாகச் செயல்படுத்தியவர் யார்?
அண்ணா | |
கருணாநிதி | |
எம்.ஜி. இராமச்சந்திரன் | |
ஜெயலலிதா |
Question 106 |
புரட்சித் தலைவர் என்று மக்களால் போற்றப்பட்ட எம்.ஜி. இராமச்சந்திரன் ----------------- அன்று இயற்கை எய்தினார்.
24.12.1987 | |
24.12.1986 | |
24.12.1989 | |
24.12.1988 |
Question 107 |
எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களின் பணியைப் பாராட்டி இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா விருது (இந்திய மாமணி) ---------------- ஆம் ஆண்டு அவருடைய மறைவுக்குப் பின் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.
1991 | |
1990 | |
1988 | |
1989 |
Question 108 |
உவமை, உவமேயம் ஆகிய இரண்டனுக்கும் இடையில் வரும் உருபு, ---------------- எனப்படும்.
ஆகுபெயர் | |
இலக்கணம் | |
பொருள்கோள் | |
உவம உருபு |
Question 108 Explanation:
தமிழ்ச்செல்வி குயில்போலப் பாடினாள்.
இத்தொடர் குரலினிமையை உணர்த்துகிறது. குரலினிமைக்குக் குயிலின் குரல் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு ஒருபொருளைச் சிறப்பித்துக்கூற, அதனைவிடச் சிறந்த வேறொரு பொருளோடு ஒப்பிடுவதே உவமித்துக் கூறுதல் எனப்படும். இவ்வாறு, உவமித்துக் கூறுவதனால் புரியாதன எளிதில் புரியும். கேட்டார்க்கு இன்பம் பயக்கும். சிறப்பிக்கப்படும் பொருள் உவமேயம் எனப்படும். அதற்கு ஒப்பாகக் காட்டப்படும் பொருள் உவமை எனப்படும். இதனை உவமானம் எனவும் கூறுவர். உவமை, உவமேயம் ஆகிய இரண்டனுக்கும் இடையில் வரும் உருபு, உவம உருபு எனப்படும். தமிழ் தேன்போல இனிமையானது. இத்தொடரில் போல என்பது உவம உருபு, உவம உருபுகள் பல, அவற்றையும், அவை தொடரில் அமைந்து வருவதனையும் காண்போம்.
உவம உருபு – தொடர்
1 . போல – கிளிபோலப் பேசினாள்.
2 . புரைய – வேய்புரை தோள்
3 . ஒப்ப – தாயொப்பப் பேசும் மகள்.
4 . உறழ – முழவு உறழ் தடக்கை.
5 . அன்ன – மலரன்ன சேவடி.
மேற்கண்டவை போன்ற உவம உறுகள் பல உள்ளன.
Question 109 |
உவமை, உவமேயம் (உவமிக்கப்படும் பொருள்) ஆகிய இரண்டையும் பொருத்துகின்ற உவம உருபு வெளிப்படையாக வருவது விரியுவமை. இஃது ---------------- எனப்படும்.
உவமேயத் தொடர் | |
உருவக தொடர் | |
உவமைத் தொடர்
| |
இவற்றில் ஏதுமில்லை |
Question 109 Explanation:
(எ.கா.) : தேன்போன்ற மொழி.
இத்தொடரில் தேன் – உவமை, மொழி – உவமேயம், போன்ற – உவமஉருபு. உவம உருபு, இத்தொடரில் வெளிப்பட வந்துள்ளதனால் இது, விரியுவமை எனப்படும். இஃது உவமைத் தொடராகும்.
Question 110 |
தேன்மொழி - இதில் உவமை உவமேயம் ஆகிய இரண்டனுக்கும் இடையில் உவம உருபு மறைந்து வந்துள்ளது. எனவே, இதனைத் தொகையுவமை என்பர். இதனை, ------------------ எனவும் கூறுவர்.
உவமேயத் தொடர் | |
உருவக தொடர் | |
உவமத் தொகை | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 111 |
ஒருபொருளை அதனைவிடச் சிறந்த மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது --------------- எனப்படும்.
உருவகம் | |
உவமை | |
உவமேயம் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 111 Explanation:
உவமை உருவாக மாற்றம் :
(எ.கா.) : பவளவாய் (பவளம் போன்ற வாய்).
இத்தொடரில் வாய் பவளத்தோடு ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது. பவளம் – உவமை, வாய் – உவமேயம் (உவமையை ஏற்கும் பொருள்). இவ்வாறு ஒருபொருளை அதனைவிடச் சிறந்த மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமை எனப்படும்.
(எ.கா.) : வாய்ப்பவளம்.
இத்தொடரில் வாயே பவளம் எனப் பொருள் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது. உவமைத்தொகையில் முதல் பகுதி (பவளம்) உவமானமாகவும் அதன் அடுத்த பகுதி உவமேயமாகவும் (வாய்) அமையும். உருவகத்தில், உவமேயம் முதல் பகுதி, உவமை அடுத்த பகுதியாக இருக்கும். இவ்வாறு உவமானத்தையும் உவமேயத்தையும் வேறுபடுத்தாது, இரண்டும் ஒன்றே என ஒற்றுமைபடுத்திக் காட்டுவதே உருவகம்.
உவமை : உருவகம்
அமுதமொழி - மொழியமுது
கயற்கண் - கண்கயல்
தேன்தமிழ் - தமிழ்த்தேன்
பூவிரல் - விரல்பூ
மதிமுகம் - முகமதி
மலரடி - அடிமலர்
முத்துப்பல் - பல்முத்து
விற்புருவம் - புருவவில்
மலர்ப்பாதம் – பாதமலர்
Question 112 |
பொருந்தாதது எது? மரபுத்தொடர்களுக்கான பொருள்.
ஆயிரங் காலத்துப் பயிர் - நீண்ட காலத்திற்குரியது | |
எடுப்பார் கைப்பிள்ளை - தன் சிந்தனையின்றிச் சொல்பவர் பேச்சைக் கேட்டு நடப்பவர் | |
ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது - பட்டறிவில்லாத படிப்பறிவு | |
அவலை நினைத்து உரலை இடித்தல் - பொய்யழுகை |
Question 112 Explanation:
அவலை நினைத்து உரலை இடித்தல் - எண்ணமும் செயலும் ஒத்துவராமை
Question 113 |
பொருந்தாதது எது? மரபுத்தொடர்களுக்கான பொருள்.
முதலைக்கண்ணீர் - பொய்யழுகை | |
அவசரக்குடுக்கை - எண்ணித் துணியாதார் | |
ஆகாயத்தாமரை - அலைந்து திரிதல் | |
கம்பி நீட்டல் - சொல்லிக் கொள்ளாமல் செல்லல் |
Question 113 Explanation:
ஆகாயத்தாமரை - இல்லாத ஒன்று
Question 114 |
பொருந்தாதது எது? மரபுத்தொடர்களுக்கான பொருள்.
தாளம்போடுதல் - எதைச் சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளல் | |
கானல் நீர் - இருப்பது போல் தோன்றும் ஆனால் இராதது | |
பஞ்சாய்ப் பறத்தல் - அலைந்து திரிதல் | |
குட்டிச்சுவர் - பொய்யழுகை | |
கொட்டியளத்தல் - மிகுதியாகப் பேசுதல் |
Question 114 Explanation:
குட்டிச்சுவர் - பயனின்றி இருத்தல்
Question 115 |
ஒருமை பன்மைப் பிழைகளை நீக்கி எழுதுக. தவறானது எது?
திரையரங்குகளில் திரைப்படம் காட்ட ஒளி - ஒலிப்படக் கருவி என்ற கருவி பயன்படுகின்றது | |
நமது சமுதாயத்தில் அறிவியலும் தொழில்நுட்பமும் ஆங்காங்கு ஒளிபரப்பும் மின்விளக்குகள் போல் இருக்கின்றது | |
இன்று பேருந்துகள் ஓடா | |
ஓர் அணில் மரத்தில் ஏறியது | |
நான் வாங்கிய நூல் இஃது இல்லை |
Question 115 Explanation:
நான் வாங்கிய நூல் இஃது அன்று
Question 116 |
இந்திய அரசியலில் சாணக்கியர் என்று போற்றப்பட்ட மூதறிஞர் யார்?
பெரியார் | |
காமராசர் | |
அண்ணா | |
இராசகோபாலாச்சாரியார் |
Question 117 |
இணையான தமிழ்ப்பழமொழிகளை அறிக. Birds of the same feather flock together
இனம் இனத்தோடு சேரும் | |
வீட்டில் எலி வெளியில் புலி | |
தோல்வியே வெற்றிக்கு அடிப்படை | |
கல்வி கரையில, கற்பவர் நாள் சில |
Question 118 |
இணையான தமிழ்ப்பழமொழிகளை அறிக. Every cock will crow upon his own dunghill
இனம் இனத்தோடு சேரும் | |
வீட்டில் எலி வெளியில் புலி | |
தோல்வியே வெற்றிக்கு அடிப்படை | |
கல்வி கரையில, கற்பவர் நாள் சில
|
Question 119 |
இணையான தமிழ்ப்பழமொழிகளை அறிக. - Failure is the stepping stone to success
இனம் இனத்தோடு சேரும் | |
வீட்டில் எலி வெளியில் புலி | |
தோல்வியே வெற்றிக்கு அடிப்படை | |
கல்வி கரையில, கற்பவர் நாள் சில |
Question 120 |
இணையான தமிழ்ப்பழமொழிகளை அறிக. - Art is long and life is short
இனம் இனத்தோடு சேரும் | |
வீட்டில் எலி வெளியில் புலி | |
தோல்வியே வெற்றிக்கு அடிப்படை | |
கல்வி கரையில, கற்பவர் நாள் சில |
Question 121 |
இணையான தமிழ்ப்பழமொழிகளை அறிக.- Look before you leap
ஆழம் அறியாமல் காலைவிடாதே | |
வீட்டில் எலி வெளியில் புலி | |
தோல்வியே வெற்றிக்கு அடிப்படை | |
கல்வி கரையில, கற்பவர் நாள் சில
|
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 121 questions to complete.