Online TestTnpsc Exam

முகலாயப்பேரரசு Online Test 7th Social Science Lesson 10 Questions in Tamil

முகலாயப்பேரரசு Online Test 7th Social Science Lesson 10 Questions in Tamil

Congratulations - you have completed முகலாயப்பேரரசு Online Test 7th Social Science Lesson 10 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
தவறான இணையைத் தேர்ந்தெடு.
A
பாபர் - 1526 முதல் 1530
B
அக்பர் - 1556 முதல் 1605
C
ஜஹாங்கீர் - 1605 முதல் 1627
D
ஒளரங்கசீப் - 1627 முதல் 1658
Question 2
தவறான கூற்றைத் தேர்ந்தெடு
  1. தந்தை வழியில் பாபர் தைமூரின் கொள்ளுப்பேரன் ஆவார்.
  2. தாய் வழியில் பாபருடைய தாத்தா, தாஷ்கண்டைச் சேர்ந்த யூனுஸ்கான் ஆவார்.
  3. யூனுஸ்கான் மாபெரும் மங்கோலிய அரசன் செங்கிஸ்கானின் பதின்மூன்றாவது தலைமுறை வாரிசு ஆவார்.
A
1 மட்டும் தவறு
B
1, 3 தவறு
C
2 மட்டும் தவறு
D
எதுவுமில்லை
Question 3
ஜாகிருதீன் முகமது பிறந்த ஆண்டு_________.
A
1483 ஜனவரி 14
B
1483 பிப்ரவரி 14
C
1482 பிப்ரவரி 16
D
1483 பிப்ரவரி 16
Question 3 Explanation: 
(குறிப்பு: ஜாகிருதீன் என்பதன் பொருள் நம்பிக்கையைக் காப்பவர்.)
Question 4
பாபர் எந்த வயதில் மத்திய ஆசியாவில் ஒரு சிறிய அரசான பர்கானாவைப் பரம்பரைச் சொத்தாகப் பெற்றார்?
A
10
B
11
C
12
D
13
Question 4 Explanation: 
(குறிப்பு: பாபர் மிக விரைவிலேயே பர்கானாவிலிருந்து உஸ்பெக்குகளால் துரத்தியடிக்கப்பட்டார். துயரம் நிறைந்த பத்தாண்டுகளுக்குப் பின்னர், பாபர் காபூலின் ஆட்சிப் பொறுப்பேற்றார்.)
Question 5
இந்தியாவில் முகலாயர் ஆட்சி நடைபெற்ற காலம்
A
1526 – 1658
B
1525 – 1658
C
1526 – 1758
D
1526 – 1707
Question 5 Explanation: 
(குறிப்பு: பாபருடைய வருகையுடன் இந்தியாவில் ஒரு புதிய சகாப்தமும் ஒரு புதிய பேரரசும் தொடங்கியது. கி.பி. 1526 முதல் 1707 வரை முகலாய பேரரசர்களின் புகழ் ஆசியா, ஐரோப்பா முழுவதிலும் பரவியது.)
Question 6
பாபர் __________ ஆண்டில் இந்தியாவை நோக்கித் தமது முதற்படையெடுப்பை மேற்கொண்டார்.
A
1502
B
1504
C
1505
D
1507
Question 6 Explanation: 
(குறிப்பு: பாபர் 1505 ஆம் ஆண்டு காபூலையும் கைப்பற்றினார்.)
Question 7
யாருடைய இந்தியப் படையெடுப்பின் நினைவுகளால் தூண்டப்பட்டு பாபர், கிழக்கு நோக்கித் தமது பார்வையைத் திருப்பினார்.
A
செங்கிஸ்கான்
B
தைமூர்
C
ஹூமாயூன்
D
செர்ஷா
Question 7 Explanation: 
(குறிப்பு: பாபர் இந்தியாவின் மீது படையெடுத்தாலும், மத்திய ஆசிய பகுதிகளிலும் அவர் கவனம் செலுத்த நேர்ந்தது.)
Question 8
டெல்லி சுல்தான் இப்ராகிம் லோடியை பதவியை விட்டு நீக்க பாபரின் உதவியை நாடியவர்கள் யார்?
  1. திலாவார்கான்
  2. தௌலத்கான்
  3. ஆரம்ஷா
  4. ஆலம்கான்
A
1, 3
B
2, 4
C
2, 3
D
1, 4
Question 8 Explanation: 
(குறிப்பு: தௌலத்கான் லோடியின் மகன் திலாவார் கான், டெல்லி சுல்தானின் மாமனார் ஆலம்கான் ஆவர்.)
Question 9
___________ ஆண்டு நடைபெற்ற போரில் பாபர் இப்ராகிம் லோடியைத் தோற்கடித்.து டெல்லியையும் ஆக்ராவையும் கைப்பற்றினார்.
A
1523
B
1524
C
1525
D
1526
Question 9 Explanation: 
(குறிப்பு: 1526ல் நடைபெற்ற போர் முதலாம் பானிபட் போர் என அழைக்கப்படுகிறது.)
Question 10
இந்தியாவில் முகலாய வம்சத்தின் ஆட்சி ________ ஐ தலைநகராகக் கொண்டு துவங்கியது.
A
பஞ்சாப்
B
பீகார்
C
டெல்லி
D
ஆக்ரா
Question 10 Explanation: 
(குறிப்பு: 1524 வரையிலும் பாபர் பஞ்சாபைக் கடந்து வர ஆசைப்படவில்லை.)
Question 11
ராணா சங்காவையும் அவருடைய ஆதரவாளர்களையும் பாபர் ________ என்னுமிடத்தில் தோற்கடித்தார்.
A
காபூல்
B
பஞ்சாப்
C
கன்வா
D
சந்தேரி
Question 11 Explanation: 
(குறிப்பு: கன்வா போர் 1527 இல் நடைபெற்றது.)
Question 12
சந்தேரித் தலைவருக்கு எதிரான போரில் பாபர் வெற்றி பெற்ற ஆண்டு
A
1527
B
1528
C
1529
D
1530
Question 13
இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர்_________.
A
தைமூர்
B
செங்கிஸ்கான்
C
ஜாகிருதீன் முகமது பாபர்
D
ஹூமாயூன்
Question 13 Explanation: 
(குறிப்பு: முகல் என்னும் வார்த்தையைப் பாபரின் மூதாதையரிடம் கண்டறியலாம்.)
Question 14
_________ ஆண்டு பாபர் வங்காளம், பீகார் ஆகியவற்றைச் சேர்ந்த ஆப்கானியத் தலைவர்களை வெற்றி கொண்டார்.
A
1530
B
1529
C
1531
D
1532
Question 14 Explanation: 
(குறிப்பு: பாபர் துருக்கிய, பாரசீக மொழிகளில் புலமை பெற்றவராவார்.)
Question 15
துசுக்-இ-பாபரி என்ற நூலை இயற்றியவர் யார்?
A
ஆலம்கிர்
B
ஜஹாங்கிர்
C
பாபர்
D
ராணா சங்கா
Question 15 Explanation: 
(குறிப்பு: பாபர் தம் சுயசரிதை நூலான துசுக்-இ-பாபரியில் இந்துஸ்தான் பற்றிய தமது கருத்துகளையும், விலங்குகள், செடிகள், மலர்கள், மரங்கள், கனிகள் குறித்தும் பதிவு செய்துள்ளார்.)
Question 16
பாபர் தமது வெற்றிகளை ஒருங்கிணைக்கும் முன்னரே _________ ஆண்டு இயற்கை எய்தினார்.
A
1529
B
1530
C
1531
D
1532
Question 17
யாருடைய மரபைப் பின்பற்றி பாபரும் தமக்குப் பிடித்த தன் மூத்த மகன் ஹூமாயுனைத் தம் வாரிசாக அறிவித்தார்?
A
தைமூர்
B
செங்கிஸ்கான்
C
செர்ஷா
D
அலாவுதீன் கில்ஜி
Question 17 Explanation: 
(குறிப்பு: செங்கிஸ்கான் தம்முடைய மகன்களில் யார் தகுதியுடையவரோ அவரைத் தமது வாரிசாக அறிவித்திருந்தார்.)
Question 18
கீழ்க்கண்டவர்களுள் ஹீமாயூனின் சகோதரர்கள் யாவர்?
  1. கம்ரான்
  2. அஸ்காரி
  3. செர்ஷா சூர்
  4. ஹிண்டல்
A
1, 2, 3
B
2, 4
C
1, 2, 4
D
2, 3, 4
Question 18 Explanation: 
(குறிப்பு: ஹூமாயூன் அரச பதவி ஏற்றவுடன் தம் தந்தையின் விருப்பத்திற்கிணங்கத் தாம் பெற்ற நாட்டை பிரித்துச் சகோதரர்களுக்குக் கொடுத்தார். ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் டெல்லி அரியணையின் மீது ஆசை இருந்தது.)
Question 19
ஷெர்ஷா சூர் கீழ்க்கண்ட எந்த பகுதிகளை ஆட்சி செய்து வந்தார்?
  1. பஞ்சாப்   2. பீகார்   3. வங்காளம்     4. குஜராத்
 
A
1, 2
B
2, 3
C
1, 4
D
2, 4
Question 19 Explanation: 
(குறிப்பு: ஷெர்ஷா சூர் ஹூமாயூனுக்கு போட்டியாக போர்களில் ஈடுபட்டார்.)
Question 20
ஷெர்ஷா _________ இல் செளசா என்ற இடத்திலும், _______இல் கன்னோஜியிலும் ஹமாயூனைத் தோற்கடித்தார்.
A
1529, 1530
B
1523, 1524
C
1534, 1535
D
1539, 1540
Question 20 Explanation: 
(குறிப்பு: அரியணையிலிருந்து தூக்கி வீசப்பட்ட ஹுமாயூன் ஈரானுக்குத் தப்பியோட நேர்ந்தது.)
Question 21
ஹூமாயூன் _________ ஆண்டு டெல்லியை மீண்டும் கைப்பற்றினார்.
A
1544
B
1555
C
1556
D
1566
Question 21 Explanation: 
(குறிப்பு: பாரசீக அரசர், சபாவிட் வம்சத்தைச் சேர்ந்த ஷா-தாமஸ்ப் என்பவரின் உதவியால் ஹூமாயூன் டெல்லியை மீண்டும் கைப்பற்றினார்.)
Question 22
ஹூமாயூன்_________இல் உள்ள தமது நூலகத்தின் படிக்கட்டுகளில் இடறி விழுந்து மரணத்தைத் தழுவினார்.
A
பீகார்
B
டெல்லி
C
வாரணாசி
D
காபூல்
Question 22 Explanation: 
(குறிப்பு: 1556 ஆம் ஆண்டு ஹூமாயூன் மரணமடைந்தார்.)
Question 23
  • கூற்று 1: ஷெர்ஷா, பீகாரில் சசாரம் பகுதியை ஆண்டு வந்த ஹசன் சூரி என்னும் ஆப்கானியப் பிரபுவின் மகனாவார்.
  • கூற்று 2: ஷெர்ஷா, தமது குறுகிய கால ஆட்சியில் வங்காளம் முதல் சிந்துவரை (காஷ்மீர் நீங்கலாக) பரவியிருந்த ஒரு பேரரசை உருவாக்கினார்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 23 Explanation: 
(குறிப்பு: ஷெர்ஷா நல்ல பயனைத் தரும் ஒரு நிலவருவாய் முறையினை அறிமுகம் செய்தார் மற்றும் பல சாலைகளை அமைத்தார்.)
Question 24
__________ ஆக்ராவில் சூர் வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கி வைத்தார்.
A
பாபர்
B
தைமூர்
C
செங்கிஸ்கான்
D
ஷெர்ஷா
Question 24 Explanation: 
(குறிப்பு: ஷெர்ஷா நாணயங்களையும் நிறுத்தல், முகத்தல் அளவுகளையும் தர அளவுப்படுத்தினார்.)
Question 25
______________ வயதில் ஹூமாயூனின் மகன் அக்பர் அரசராக முடிசூட்டப்பட்டார்.
A
12
B
13
C
14
D
15
Question 25 Explanation: 
(குறிப்பு: அக்பர் சிறுவனாக இருந்ததால், பைராம்கான் பகர ஆளுநர் பொறுப்பேற்று அக்பர் சார்பாக ஆட்சி புரிந்தார்.)
Question 26
சூர் வம்சத்தைச் சேர்ந்த __________ என்பவர் 1556 இல் டெல்லியையும் ஆக்ராவையும் கைப்பற்றினார்.
A
செங்கிஸ்கான்
B
ஷெர்ஷா
C
ஹெமு
D
பைராம்கான்
Question 26 Explanation: 
(குறிப்பு: 1556இல் இரண்டாம் பானிபட் போரில் பைராம்கான் ஹெமுவை தோற்கடித்துக் கொன்றார்.)
Question 27
அக்பரின் தூண்டுதல் காரணமாக பைராம்கான் எந்த இடத்தில் கொல்லப்பட்டார்?
A
பஞ்சாப்
B
வங்காளம்
C
பீகார்
D
குஜராத்
Question 27 Explanation: 
(குறிப்பு: பைராம்கான் கொல்லப்பட்டதால் அக்பரால் அரசை முழுமையாகக் கட்டுப்படுத்த முடிந்தது. படையெடுப்பின் மூலமாகவும் நட்புறவின் மூலமாகவும் அக்பர் இந்தியாவின் பெரும்பகுதியைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்.)
Question 28
மத்திய இந்திய பகுதியைச் சேர்ந்த ராணி __________ என்பவரை பாபர் தோற்கடித்தார்.
A
லட்சுமிபாய்
B
துர்க்காவதி
C
சந்த் பீவி
D
பத்மாவதி
Question 28 Explanation: 
(குறிப்பு: அக்பர் மாளவைத்தையும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளையும் கைப்பற்றினார்.)
Question 29
தென்னிந்தியாவில் அகமதுநகர் அரசின் பகர ஆட்சியாளராக இருந்த ராணி __________ என்பவரின் மீது அக்பர் படையெடுத்தார்.
A
லட்சுமிபாய்
B
துர்க்காவதி
C
சந்த் பீவி
D
பத்மாவதி
Question 29 Explanation: 
(குறிப்பு: ராணி சந்த் பீவி காட்டிய வலுவான எதிர்ப்பால் பெரிதும் வியந்துபோன முகலாயப் படை, அவ்வம்மையார்க்குச் சாதகமாக அமைதி உடன்படிக்கை செய்து கொண்டது.)
Question 30
ராணா உதய்சிங்கை அக்பர் தோற்கடித்து சித்தூரையும் ராந்தம்பூரையும் முறையே எந்தெந்த ஆண்டுகளில் கைப்பற்றினார்?
A
1565, 1566
B
1567, 1568
C
1568, 1569
D
1564,1565
Question 30 Explanation: 
(குறிப்பு: ராணா உதய்சிங் என்பவர் மேவாரின் அரசர் ஆவார்.)
Question 31
அக்பர், ராணா பிரதாப்பை ஹால்டிகாட் போரில் வெற்றி கொண்ட ஆண்டு__________.
A
1574
B
1575
C
1576
D
1577
Question 31 Explanation: 
(குறிப்பு: ராணா பிரதாப் என்பவர் ராணா உதய்சிங்கின் மகனாவார்.)
Question 32
ஹால்டிகாட் போரில் தோல்வியுற்ற பிரதாப் சிங்__________ என்னும் தமது குதிரையில் தப்பி காட்டில் இருந்தவாறே போரைத் தொடர்ந்தார்.
A
சூபி
B
சலீம்
C
சேத்தக்
D
சிஸ்டி
Question 32 Explanation: 
(குறிப்பு: துணிச்சல் மிகுந்த இந்த ரஜபத்திரர்களின் நினைவுகள் ராஜபுதனத்தில் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது.)
Question 33
__________ ஐ அக்பர் கைப்பற்றியதால் அக்கடல் பகுதியில் வாணிகம் மேற்கொண்டிருந்த அரேபியரையும், ஐரோப்பியரையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.
A
மும்பை
B
வங்காளம்
C
கோவா
D
குஜராத்
Question 33 Explanation: 
(குறிப்பு: கிழக்கே வங்காளம், பீகார், ஒடிசா ஆகியவை மீது அக்பர் மேற்கொண்ட படையெடுப்புகள் தென்கிழக்கு ஆசியாவுடனும் சீனாவுடனும் தொடர்பு ஏற்பட உதவியது.)
Question 34
நாடுகளைக் கைப்பற்றும் நோக்கில் அக்பர் மேற்கொண்ட படையெடுப்புகளில் முக்கியமானவை ___________ பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையாகும்.
A
வடகிழக்கு
B
வடமேற்கு
C
தக்காணம்
D
காஷ்மீர்
Question 34 Explanation: 
(குறிப்பு: மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம் அக்பர் காண்டகார், காஷ்மீர், காபூல் ஆகியவற்றைப் பேரரசுடன் இணைத்தார்.)
Question 35
அக்பரின் தக்காணப் படையெடுப்புகள் மூலம் கீழ்க்கண்ட எந்த பகுதிகள் அக்பர் அரசுடன் இணைக்கப்பட்டன?
  1. காண்டகார்
  2. பீரார்
  3. காண்டேஷ்
  4. அகமது நகர்
A
அனைத்தும்
B
2, 3
C
1, 2, 3
D
2, 3, 4
Question 35 Explanation: 
(குறிப்பு: வடக்கே காஷ்மீர், தெற்கே கோதாவரி, மேற்கே காண்டகார், கிழக்கே வங்காளம் ஆகியவற்றுக்கிடையே முகலாயப் பேரரசு பரந்து விரிந்திருந்தது.)(குறிப்பு: வடக்கே காஷ்மீர், தெற்கே கோதாவரி, மேற்கே காண்டகார், கிழக்கே வங்காளம் ஆகியவற்றுக்கிடையே முகலாயப் பேரரசு பரந்து விரிந்திருந்தது.)
Question 36
1605 இல் இயற்கை எய்திய அக்பரின் உடல் எங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது?
A
பீரார்
B
ராஞ்சி
C
அகமது நகர்
D
சிக்கந்தரா
Question 36 Explanation: 
(குறிப்பு: சிக்கந்தரா ஆக்ராவிற்கு அருகே அமைந்துள்ளது.)
Question 37
"வாள் வலிமையின் மூலம் பெறப்படும் ஆதாயங்களைக் காட்டிலும் அன்பின் மூலம் பெறப்படும் ஆதாயங்களின் ஆயுள் அதிகம்" என்பதை உணர்ந்தவர்
A
பாபர்
B
ஹூமாயூன்
C
அக்பர்
D
ஒளரங்கசீப்
Question 37 Explanation: 
(குறிப்பு: அக்பர் இந்து பிரபுக்கள் மற்றும் இந்து மக்களின் திரளின் நம்பிக்கையைப் பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்.)
Question 38
முஸ்லிம்கள் அல்லாதோர் மீது விதிக்கப்பட்டிருந்த ஜிசியா வரியையும், இந்துப் பயணிகளின் மீது விதிக்கப்பட்டிருந்த வரிகளையும் நீக்கியவர் யார்?
A
பாபர்
B
ஹூமாயூன்
C
அக்பர்
D
ஒளரங்கசீப்
Question 38 Explanation: 
(குறிப்பு: அக்பர் ரஜபுத்திர உயர்குடிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர், தன் மகனுக்கும் ரஜபுத்திரப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார்.)
Question 39
அக்பர் காலத்தில், ஜெய்ப்பூரைச் சேர்ந்த ராஜாமான்சிங் என்பவர் __________ன் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
A
வங்காளம்
B
பீடார்
C
பீகார்
D
காபூல்
Question 39 Explanation: 
(குறிப்பு: அக்பர் பேரரசின் உயர்பதவிகளில் ரஜபுத்திரப் பிரபுக்களைப் பணியமர்த்தினார்.)
Question 40
  •  கூற்று 1: அக்பர் அனைத்து மதங்களைச் சார்ந்தோரையும் சமமாகவும் பெருந்தன்மையோடும் நடத்தினார்.
  • கூற்று 2: சூபி துறவியான சலீம் சிஸ்டியும், சீக்கிய குருவான ராம்தாசும் அக்பரின் அளவில்லா மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருந்தனர்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 41
____________க்கு அமிர்தசரசில் அக்பர் பரிசாக வழங்கிய இடத்தில் ஹர்மிந்தர் சாகிப் கருவறை கட்டப்பட்டது.
A
குரு கோவிந்த் சிங்
B
சலீம் சிஸ்டி
C
குரு ராம்தாஸ்
D
அர்ஜூன்சிங்
Question 41 Explanation: 
(குறிப்பு: புதிய நகரான பதேப்பூர் சிக்ரியில் அக்பரால் கட்டப்பெற்ற இபாதத்கானா என்னும் மண்டபத்தில் அனைத்து மதங்களின் அறிஞர்களும் ஒன்றுகூடி உரையாடினர்.)
Question 42
அக்பருடைய சொந்த நூலகத்தில் ________க்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இருந்தன.
A
2000
B
3000
C
4000
D
5000
Question 42 Explanation: 
(குறிப்பு: அக்பர் கல்வியைப் பெரிதும் ஆதரித்தார்.)
Question 43
சரியான இணையைத் தேர்ந்தெடு.
  1. தான்சென் – இசைமேதை
  2. தஷ்வந் – ஓவியர்
  3. பீர்பால் - சிறந்த கதை ஆசிரியர்
  4. அப்துல் பெய்சி – நூலாசிரியர்
A
அனைத்தும்
B
1, 2, 4
C
2, 3, 4
D
1, 2
Question 43 Explanation: 
(குறிப்பு: அபுல்பாசல், அப்துல் பெய்சி, அப்துர் ரகீம்கான் - இ - கான் ஆகிய நூலாசிரியர்கள் சிறந்த கதை ஆசிரியரான பீர்பால், திறமையான அதிகாரிகளான ராஜா தோடர்மால், ராஜா பகவன்தாஸ், ராஜா மான்சிங் ஆகியோர் அக்பரின் அவையில் இடம்பெற்றிருந்தனர்.)
Question 44
ஜஹாங்கீர் என்பதன் பொருள்__________.
A
உலகின் அரசர்
B
உலகத்தைக் கைப்பற்றியவர்
C
அரண்மனை கிளி
D
அரண்மனை ஒளி
Question 44 Explanation: 
(குறிப்பு: அக்பருக்கு பின்னர், அவருடைய ரஜபுத்திர மனைவிக்குப் பிறந்த இளவரசர் சலீம் நூருதீன் முகமது ஜஹாங்கீர் என்ற பெயரில் மகுடம் சூடினார்.)
Question 45
  • கூற்று 1: ஜஹாங்கீர் அரசாட்சியைக் காட்டிலும் கலைகள், ஓவியம், தோட்டங்கள், மலர்கள் ஆகியவற்றின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.
  • கூற்று 2: ஜஹாங்கீரின் மனைவியார், நூர்ஜகான் என அறியப்பட்ட மெகருன்னிசா உண்மையான அதிகாரத்தைப் பெற்றவராகத் திகழ்ந்தார்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 45 Explanation: 
(குறிப்பு: தந்தையரின் மரபுகளை ஓரளவு ஜஹாங்கீர் பின்பற்றினார். அக்பர் காலத்துச் சகிப்புத்தன்மை ஜஹாங்கீர் காலத்திலும் தொடர்ந்தது.)(குறிப்பு: தந்தையரின் மரபுகளை ஓரளவு ஜஹாங்கீர் பின்பற்றினார். அக்பர் காலத்துச் சகிப்புத்தன்மை ஜஹாங்கீர் காலத்திலும் தொடர்ந்தது.)
Question 46
ஜஹாங்கீரால் தூக்கிலிடப்பட்ட சீக்கியத் தலைவர் ____________.
A
குரு கோவிந்த் சிங்
B
சலீம் சிஸ்டி
C
குரு ராம்தாஸ்
D
குரு அர்ஜூன்சிங்
Question 46 Explanation: 
(குறிப்பு: ஜஹாங்கீர், தமக்கு எதிராக அரியணையைக் கைப்பற்ற முயற்சி மேற்கொண்டு கலகம் விளைவித்த தமது மகன் குஷ்ருவுக்கு உதவினார் என்பதற்காக குரு அர்ஜூன்சிங்கைத் தூக்கிலிட உத்தரவிட்டார்.)
Question 47
  • கூற்று: ஆப்கானிஸ்தான், பாரசீகம், மத்திய ஆசியா ஆகிய பகுதிகளுக்கான வணிகப்பாதைகளின் மீதான தங்கள் கட்டுப்பாட்டை முகலாயர் இழக்க நேர்ந்தது,
  • காரணம்: ஜஹாங்கீர், குரு அர்ஜூன் சிங்கை தூக்கிலிட்டதன் விளைவாக முகலாயருக்கும் சீக்கியருக்கும் இடையே நெடுநாள் போர்கள் நடைபெற்றன.
A
கூற்று சரி, காரணம் தவறு
B
கூற்று, காரணம் இரண்டும் சரி
C
கூற்று தவறு, காரணம் சரி
D
கூற்று காரணம் இரண்டும் தவறு
Question 48
_________பகுதியை முகலாயர் இழந்தது வடமேற்கிலிருந்து வரும் படையெடுப்புகளுக்கு இந்தியாவைத் திறந்து வைத்தது போன்றதாகியது.
A
பஞ்சாப்
B
குஜராத்
C
ஆக்ரா
D
காண்டகார்
Question 48 Explanation: 
(குறிப்பு: ஜஹாங்கீர் அகமதுநகரைக் கைப்பற்றிய போதிலும், அது அவருடைய ஆட்சிக்காலம் முழுவதும் பிரச்சனைக்குரியதாகவே இருந்தது.)
Question 49
இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸின் பிரதிநிதியான தாமஸ்ரோ யாருடைய அரசவைக்கு வருகை புரிந்தார்?
A
அக்பர்
B
ஜஹாங்கீர்
C
ஷாஜகான்
D
ஒளரங்கசீப்
Question 49 Explanation: 
(குறிப்பு: ஜஹாங்கீர் போர்த்துகீசியருக்கும் பின்னர் ஆங்கிலேயர்களுக்கும் வணிக உரிமைகளை வழங்கினார்.
Question 50
ஜஹாங்கீரின் அனுமதி பெற்று தாமஸ்ரோ ___________ல் முதல் வணிக மையத்தை நிறுவினார்.
A
அகமதாபாத்
B
கோவா
C
மும்பை
D
சூரத்
Question 51
ஷாஜகான் என்பதன் பொருள் __________.
A
அரண்மனை கிளி
B
உலகத்தைக் கைப்பற்றியவர்
C
உலகத்தின் அரசர்
D
அரண்மனை ஒளி
Question 51 Explanation: 
(குறிப்பு: ஜஹாங்கீரைத் தொடர்ந்து, இளவரசர் குர்ரம் ஒரு அதிகாரப் போராட்டத்திற்குப் பின்னர் ஷாஜகான் என்ற பெயருடன் அரசராக ஆட்சிப் பொறுப்பேற்றார்.)
Question 52
ஷாஜகான் அகமது நகரை தனது அரசுடன் இணைத்துக் கொண்ட ஆண்டு
A
1634
B
1629
C
1631
D
1632
Question 52 Explanation: 
(குறிப்பு: ஷாஜகானால் பீஜப்பூரும் கோல்கொண்டாவும் கைப்பற்றப்பட்டன. இச்சமயத்தில் சில மராத்திய போர்த்தளபதிகள் குறிப்பாக ஷாஜி பான்ஸ்லே (சிவாஜியின் தந்தை) போன்றோர் தக்காண அரசர்களிடம் பணியில் சேர்ந்தனர்.)
Question 53
  • கூற்று 1: ஷாஜகான் சமய சகிப்புத்தன்மை உடையவராக விளங்கினார்.
  • கூற்று 2: ஷாஜகான் காலத்தில் முகலாயரின் புகழ் அதன் உச்சத்தை எட்டியது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 53 Explanation: 
(குறிப்பு: சமய விடயங்களில் ஷாஜகான் சகிப்புத்தன்மை அற்றவராக விளங்கினார்.)
Question 54
___________ ஆண்டு ஷாஜகான் நோய்வாய்ப்பட்டதைத் தொடர்ந்து அவருடைய நான்கு மைந்தர்களுக்குள் வாரிசு உரிமைப்போர் வெடித்தது.
A
1656
B
1657
C
1658
D
1659
Question 54 Explanation: 
(குறிப்பு: ஒளரங்கசீப் தம்முடைய மூன்று சகோதரர்களான தாரா, சூஜா, முராத் ஆகியோரைக் கொன்று வெற்றிபெற்றார்.)
Question 55
ஷாஜகான் தம் வாழ்நாளின் இறுதியில் எத்தனை ஆண்டுகள் கைதியாக கழித்தார்?
A
5
B
6
C
7
D
8
Question 55 Explanation: 
(குறிப்பு: ஷாஜகான் ஒரு கைதியாக ஆக்ரா கோட்டையிலுள்ள ஷாபர்ஜ் அரண்மனையில் கழித்தார்.)
Question 56
ஆலம்கிர் என்னும் பட்டத்தை சூட்டிக்கொண்ட முகலாய அரசர்
A
ஜஹாங்கிர்
B
பாபர்
C
ஷாஜகான்
D
ஒளரங்கசீப்
Question 56 Explanation: 
(குறிப்பு: ஆலம்கிர் என்பதன் பொருள் உலகைக் கைப்பற்றியவர். முகலாய மாமன்னர்களில் கடைசி அரசரான ஒளரங்கசீப் தம் தந்தையைச் சிறைப்படுத்தி ஆட்சியைத் தொடங்கினார்.)
Question 57
சரியான இணையைத் தேர்ந்தெடு.
  1. ஜஹாங்கீர் - கலைகளின் மீது ஆர்வம் கொண்டவர்
  2. ஷாஜகான் - கட்டிடக்கலையில் நாட்டம் கொண்டவர்
  3. ஒளரங்கசீப் - மத சகிப்புத்தன்மை அற்றவர்
A
அனைத்தும்
B
1, 2 சரி
C
2 மட்டும் சரி
D
1, 3 சரி
Question 57 Explanation: 
(குறிப்பு: ஒளங்கசீப் இந்துக்களின் மீது மீண்டும் ஜிசியா வரியை விதித்தார். இந்துக்களை அரசுப் பணிகளில் அமர்த்துவதைத் தவிர்த்தார்.)
Question 58
___________ ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வடஇந்தியாவிலிருந்த ஒளரங்கசீப் பண்டேலர்கள், சீக்கியர்கள், ஜாட்டுகள், சாத்னாமியர்கள் ஆகியோரின் கலகங்களை அடக்கினார்.
A
1658 - 1685
B
1658 – 1684
C
1658 – 1682
D
1658 – 1681
Question 58 Explanation: 
(குறிப்பு: வடகிழக்கில் ஒளரங்கசீப் மேற்கொண்ட விரிவாக்க நடவடிக்கைகள் காமரூபாவைச் (அஸ்ஸாம்) சேர்ந்த ஆகோம் அரசுடன் போர் ஏற்படக் காரணமாயிற்று. இவ்வரசு முகலாயர்களால் பலமுறை தாக்கப்பட்டாலும் அதை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை.)
Question 59
தக்காணத்தில் சிவாஜியின் மகன் சாம்பாஜியுடன் ஒப்பந்தம் மேற்கொண்ட இளவரசர் __________.
A
ஒளரங்கசீப்
B
ஜஹாங்கீர்
C
ஷாஜகான்
D
அக்பர்
Question 59 Explanation: 
(குறிப்பு: மேற்கண்ட ஒப்பந்தத்தினால் 1689 இல் ஒளரங்கசீப் தக்காணம் செல்ல நேர்ந்தது. ஒளரங்கசீப்பின் மகன் இளவரசர் அக்பர் அவருக்கு எதிராக கலகம் செய்ததோடு ரஜபுத்திரர்களுடன் சேர்ந்து கொண்டு இடையூறு விளைவித்தார்.)
Question 60
சிவாஜி__________ ஆண்டு தம்மை மராத்திய நாட்டின் பேரரசராக அறிவித்தார்.
A
1654
B
1664
C
1674
D
1678
Question 60 Explanation: 
(குறிப்பு: தென்மேற்கில் சிவாஜியின் எழுச்சியை ஒளரங்கசீப்பால் தடுக்க இயலவில்லை. ஆனால் அவரால் சிவாஜியின் மைந்தரான, பட்டத்து இளவரசர் சாம்பாஜியைக் கைது செய்து சித்ரவதை செய்து கொல்ல முடிந்தது.)
Question 61
ஒளரங்கசீப் தக்காணத்தில் கீழ்க்கண்ட எந்த அரசுகளைப் பணியவைத்தார்?
  1. பீஜப்பூர்
  2. கல்கத்தா
  3. பம்பாய்
  4. கோல்கொண்டா
A
1,2
B
2, 3
C
1, 4
D
2, 4
Question 62
ஒளரங்கசீப் __________ ஆண்டு மரணத்தை தழுவினார்.
A
1702
B
1704
C
1705
D
1707
Question 62 Explanation: 
(குறிப்பு: ஒளரங்கசீப் தமது தொண்ணூறாவது வயதில் மரணத்தை தழுவும் வரை தக்காணத்திலேயே தங்கியிருந்தார்.)
Question 63
ஒளரங்கசீப்பின் ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் ஆங்கிலேயர்கள் கீழ்க்கண்ட எந்தெந்த இடங்களில் வணிக மையங்களை வலுவாக நிறுவினர்?
  1. மதராஸ்
  2. பாண்டிச்சேரி
  3. கல்கத்தா
  4. பம்பாய்
A
1, 2, 4
B
2, 3, 4
C
1, 3, 4
D
2, 4
Question 63 Explanation: 
(குறிப்பு: ஒளரங்கசீப்பின் இறுதி காலக்கட்டத்தில் பிரெஞ்சுக்காரர்கள் தங்களின் முதன்மை வணிக மையத்தைப் பாண்டிச்சேரியில் நிறுவினர்.)
Question 64
முகலாயப் நிர்வாகத்தில் __________ என்பவர் இஸ்லாமியச் சட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.
A
வக்கீல்
B
திவான்
C
மீர்பாக்க்ஷி
D
சதா-உஸ்-சுதூர்
Question 65
பொருத்துக.
  1. வக்கீல்               i) பிரதம மந்திரி
  2. வஜீர்                   ii) வருவாய் துறை மற்றும் செலவுகள்
  3. மீர் பாக்க்ஷி      iii) இராணுவத்துறை அமைச்சர்
  4. மீர்சமான்         iv) அரண்மனை நிர்வாகம்
  5. குவாஜி              v) தலைமை நீதிபதி
A
i iii iv v ii
B
ii iv v i iii
C
v iv iii ii i
D
i ii iii iv v
Question 65 Explanation: 
(குறிப்பு: வஜீர், திவான் எனவும் அழைக்கப்பட்டார்.)
Question 66
முகலாய நிர்வாகத்தின் சரியான வரிசையைத் தேர்ந்தெடு.
A
பேரரசு - சுபாக்கள் – சர்க்கார்கள் – பர்கானாக்கள் - கிராமங்கள்
B
பேரரசு – சர்க்கார்கள் – சுபாக்கள் – பர்கானாக்கள் – கிராமங்கள்
C
பேரரசு – சுபாக்கள் – பர்கானாக்கள் – சர்க்கார்கள் – கிராமங்கள்
D
பேரரசு – பர்கானாக்கள் – சுபாக்கள் – சர்க்கார்கள் – கிராமங்கள்
Question 66 Explanation: 
பேரரசு – பர்கானாக்கள் – சுபாக்கள் – சர்க்கார்கள் – கிராமங்கள்
Question 67
முகலாயர்களின் உள்ளாட்சி நிர்வாகம் குறித்தக் கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A
நகரங்களும் பெருநகரங்களும் கொத்தவால் எனும் அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டன.
B
கொத்தவால் நகரத்தின் நிதி பராமரிப்பைக் கவனித்துக்கொண்டார்..
C
கிராம நிர்வாகம் கிராமப் பஞ்சாயத்துகளிடம் வழங்கப்பட்டிருந்தது.
D
கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் தீர்ப்புகளை வழங்கினர்.
Question 67 Explanation: 
(குறிப்பு: கொத்தவால் சட்டம் ஒழுங்கை பராமரித்தார். கிராமப் பஞ்சாயத்துகள் என்பவை முறைப்படுத்தப்படாத கிராம அளவிலான நீதி வழங்கும் அமைப்புகள் ஆகும்.)
Question 68
முகலாய இராணுவம் கீழ்க்கண்ட எந்த பிரிவுகளைக் கொண்டிருந்தன?
  1. காலாட்படை
  2. குதிரைப்படை
  3. யானைப்படை
  4. பீரங்கிப்படை
A
அனைத்தும்
B
1, 2, 3
C
2, 3, 4
D
1, 3, 4
Question 68 Explanation: 
(குறிப்பு: அரசர் நன்கு பியிற்றுவிக்கப்பட்ட, சிறப்பு வாய்ந்த ஆயுங்களை ஏந்திய எண்ணிக்கையிலும் அதிகமான பாதுகாப்பு வீரர்களையும், அரண்மனைக் காவலர்களையும் பராமரித்தார்.)
Question 69
மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்தவர்
A
பாபர்
B
ஜஹாங்கீர்
C
அக்பர்
D
ஒளரங்கசீப்
Question 69 Explanation: 
(குறிப்பு: மன்சப்தாரி முறையின் கீழ் பிரபுக்கள், ராணுவ அதிகாரிகள், குடிமைப் பணி அதிகாரிகள் ஆகியோரின் பணிகள் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரே பணியாக மாற்றப்பட்டன.இப்பணியிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு மன்சப் (படிநிலை, தகுதி அந்தஸ்து) வழங்கப்பட்டது.)
Question 70
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
  1. மன்சப்தார் சாட், சவார் எனும் இருவிடயங்களைச் சார்ந்திருந்தன.
  2. சாட் என்பது ஒரு மன்சப்தார் பராமரிக்க வேண்டிய குதிரைகள், குதிரைவீரர்களின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும்.
  3. சவார் என்பது மன்சப்தாரின் தகுதியைக் குறிப்பதாகும்.
A
2 மட்டும்
B
3 மட்டும்
C
2, 3
D
எதுவுமில்லை
Question 70 Explanation: 
(குறிப்பு: சவார் என்பது ஒரு மன்சப்தார் பராமரிக்க வேண்டிய குதிரைகள், குதிரைவீரர்களின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும். சாட் என்பது மன்சப்தாரின் தகுதியைக் குறிப்பதாகும்.)
Question 71
மன்சப்தாரின் உதியமானது அவரால் பராமரிக்கப்படும் ___________ ன் எண்ணிக்கையைப் பொறுத்திருந்தது.
A
படைவீரர்கள்
B
யானைகள்
C
குதிரைகள்
D
நிலங்கள்
Question 71 Explanation: 
(குறிப்பு: குதிரைகளின் எண்ணிக்கை 10 முதல் 10,000 வரை இருந்தது. பேரரசர் மன்சப்தார்களுக்கு உயர்ந்த ஊதியம் வழங்கினார்.)
Question 72
  • கூற்று 1: முகலாய நிர்வாகத்தில் திருட்டைத் தவிர்ப்பதற்காக குதிரைகளுக்கு முத்திரையிடும் முறை பின்பற்றப்பட்டது.
  • கூற்று 2: அக்பருடைய ஆட்சிக்காலத்தில் மன்சப்தார் பதவி பரம்பரை உரிமை சார்ந்ததாக இல்லை.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 72 Explanation: 
(குறிப்பு: அக்பருக்கு பின்னர், மன்சப்தார் பதவி பரம்பரை உரிமை சார்ந்த பணியானது.)
Question 73
யாருடைய காலத்தில் ராஜா தோடர்மால் வருவாய்த்துறை அமைச்சராக பணியாற்றினார்?
A
பாபர்
B
ஷாஜகான்
C
அக்பர்
D
ஒளரங்கசீப்
Question 73 Explanation: 
(குறிப்பு: வருவாய்த்துறை அமைச்சரான ராஜா தோடர்மால் ஷெர்ஷா அறிமுகம் செய்த முறையைப் பின்பற்றினார். அம்முறையை மேலும் சீர்செய்தார்.)
Question 74
தோடர்மாலின் ஜப்த் முறை கீழ்க்கண்ட எந்த மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது?
  1. வடக்கு
  2. வடமேற்கு
  3. தக்காணம்
  4. வடகிழக்கு
A
1, 2
B
2, 3
C
1, 4
D
1, 3
Question 74 Explanation: 
(குறிப்பு: ஜப்த் முறையின்படி நிலங்கள் அளவை செய்யப்பட்டு அவற்றின் இயல்புக்கும் வளத்திற்கும் ஏற்றவாறு வகைப்படுத்தப்பட்டன.)
Question 75
ஜப்த் முறையின்படி, பத்தாண்டு காலத்திற்குச் சராசரி விளைச்சலில் ________ பங்கு அரசுக்கு வரியாகச் செலுத்தப்பட வேண்டுமென நிர்ணயம் செய்யப்பட்டது.
A
1/2
B
1/3
C
1/4
D
1/6
Question 75 Explanation: 
(குறிப்பு:ஷாஜகானின் காலத்தில் ஜப்த் அல்லது ஜப்தி எனும் இம்முறை தக்காண மாகாணங்களுக்கும் நீடிக்கப்பெற்றது.)
Question 76
முகலாயப் பேரரசர்கள், டெல்லி சுல்தான்களின் காலத்தில் வளர்த்தெடுக்கப்பட்ட இக்தா முறையை __________ எனப் புதிய பெயரிட்டுச் செயல்படுத்தினர்.
A
ஜப்தி
B
காதர்
C
ஜாகீர்
D
சவார்
Question 76 Explanation: 
(குறிப்பு: ஜாகீர் முறையின் கீழ் குறிப்பிட்ட ஒரு பகுதியில் நிலவரி வசூல் செய்யும் பொறுப்பும் அப்பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பும் ராணுவ அல்லது சிவில் அதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது பெயர் ஜாகீர்தார் ஆகும்.)
Question 77
தங்களது ஊதியத்தை பணமாகப் பெறாத ஒவ்வொரு மன்சப்தாரும் __________ ஆவார்.
A
ஜமீன்தார்
B
கொத்தவால்
C
ஜாகீர்தார்
D
கனுங்கோ
Question 77 Explanation: 
(குறிப்பு: ஜாகீர்தார் தம் அதிகாரிகள் மூலம் நிலவரியை வசூல் செய்தார்.)
Question 78
முகலாயர் காலத்தில் மாவட்ட அளவிலான வரிவசூல் அதிகாரி _________ ஆவார்.
A
பொட்டதார்
B
பட்வாரி
C
முக்காதம்
D
அமில் குஜார்
Question 78 Explanation: 
(குறிப்பு: அமில் குஜாருக்கு பொட்டாதார், கனுங்கோ, பட்வாரி, முக்காதம் போன்ற துணைநிலை அதிகாரிகள் உதவி செய்தனர்.)
Question 79
முகலாயர் காலத்தில் நில உரிமையாளர்களிடமிருந்து நிலவரியை வசூலிக்கப் பணியமர்த்தப்பட்டவர்களே_________ ஆவர்.
A
ஜமீன்தார்
B
கொத்தவால்
C
ஜாகீர்தார்
D
கனுங்கோ
Question 79 Explanation: 
(குறிப்பு: ஜமீன்தார்கள் முகலாய அதிகாரிகள், படைவீரர்கள் ஆகியோரின் உதவியுடன் நிலவரியை வசூல் செய்தனர். சட்டம், ஒழுங்கு, அமைதி ஆகியவற்றையும் பாதுகாத்தனர்.)
Question 80
_________நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஜமீன்தார்களுக்கு தங்களது ஜமீன் பகுதிகளின் மீது பரம்பரை உரிமை வழங்கப்பட்டது.
A
15
B
16
C
17
D
18
Question 80 Explanation: 
(குறிப்பு: உள்ளூர் அளவிலான தலைவர்களும் சிற்றரசர்களும் ஜமீன்தார்கள் என்றே அழைக்கப்பட்டனர். வரிவசூல் பணிகளைச் செய்வதற்காகப் படைகளை வைத்துக்கொள்ளும் அதிகாரமும் ஜமீன்தார்களுக்கு வழங்கப்பட்டது.)
Question 81
  • கூற்று 1: அறிஞர்களுக்கும், இறைப்பணியில் ஈடுபட்டுள்ள பெரியோர்க்கும், சமயம் சார்ந்த நிறுவனங்களுக்கும் முகலாய அரசர்கள் நிலங்களை வழங்கினர்.
  • கூற்று 2: வரிவிலக்கு அளிக்கப்பட்ட இத்தகைய நிலங்கள் சுயயூர்கள் என்றழைக்கப்பட்டன.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 82
அனைத்து மதங்களிலுமுள்ள சிறந்த கொள்கைகளை ஒருங்கிணைத்துத் தீன்-இலாகி என்னும் ஒரே சமயத்தை உருவாக்க முயன்றவர்
A
ஜஹாங்கீர்
B
ஷாஜகான்
C
அக்பர்
D
ஒளரங்கசீப்
Question 82 Explanation: 
(குறிப்பு: அக்பரின் அவையில் போர்த்துகீசிய கிறித்துவப் பாதிரியார்கள் மிகவும் விரும்பத்தக்கவர்களாக இருந்துள்ளனர். அக்பருடைய கொள்கைகளை ஜஹாங்கீரும் ஷாஜகானும் பின்பற்றினர்.)
Question 83
பாரசீகக் கட்டட முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர்
A
ஷெர்ஷா
B
அக்பர்
C
ஷாஜகான்
D
பாபர்
Question 83 Explanation: 
(குறிப்பு: பாரசீகக் கட்டட முறையை பயன்படுத்தி பாபர் ஆக்ரா, ப்யானா, டோலாப்பூர், குவாலியர் மற்றும் க்யூல் (அலிகார்) போன்ற பகுதிகளில் கட்டடங்களைக் கட்டுவித்தார்.)
Question 84
ஹூமாயூனின் டெல்லி அரண்மனையான தீன் – இ - பானா பின்னாளில் யாரால் இடிக்கப்பட்டிருக்கக்கூடும் என அறியப்படுகிறது?
A
தைமூர்
B
ஒளரங்கசீப்
C
ஷெர்ஷா
D
ஆங்கிலேயர்கள்
Question 84 Explanation: 
(குறிப்பு: ஷெர்ஷா தீன் - இ - பானாவை இடித்து அவ்விடத்தில் புரான கிலாவைக் கட்டினார்.)
Question 85
பீகாரில் சசாரம் என்னுமிடத்தில் அமைந்துள்ள கல்லறை மாடம் யாருடைய காலத்தில் கட்டப்பட்டது?
A
பாபர்
B
ஹூமாயூன்
C
ஷாஜகான்
D
ஷெர்சா
Question 85 Explanation: 
(குறிப்பு: ஷெர்சாவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மிக முக்கியமான நினைவுச்சின்னம் பீகார் கல்லறை மாடமாகும்.)
Question 86
கீழ்க்கண்டவற்றுள் அக்பரால் கட்டப்பட்டவை எவை?
  1. திவான்-இ-காஸ்
  2. திவான்-இ-ஆம்
  3. பஞ்ச் மஹால்
  4. ரங்மஹால்
  5. சலீம் சிஸ்டியின் கல்லறை
  6. புலந்தர்வாசா
A
1, 3, 4, 6
B
1, 3, 4, 6
C
2, 4, 5, 6
D
அனைத்தும்
Question 87
_________இல் உள்ள அக்பரின் கல்லறை கட்டடப் பணிகளை ஜஹாங்கீர் நிறைவு செய்தார்.
A
சசாரம்
B
ஆக்ரா
C
சிக்கந்தரா
D
ஒளரங்காபாத்
Question 87 Explanation: 
(குறிப்பு: ஜஹாங்கீர், ஆக்ராவில் நூர்ஜகானின் தந்தையான இம்மத்-உத்-தெலாவின் கல்லறையையும் கட்டினார்.)
Question 88
பொருத்துக.
  • தந்தை                                        மகன்
  1. அக்பர்                                    i) தில்வார் கான்
  2. 2. தெளலத்தான் லோடி    ii) ராணா பிரதாப்
  3. 3. ஹசன் சூரி                      iii) ஹிமாயூன்
  4. பாபர்                                   iv) ஷெர்ஷா
  5. உதய்சிங்                            v) ஜஹாங்கீர்
A
ii i iii iv v
B
v i iv iii ii
C
iv v i iii ii
D
iv i ii iii v
Question 89
ஷாஜகான் குறித்தக் கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
  1. பேரரசர் அமர்வதற்காக விலையுயர்ந்த நவரத்தினக் கற்கள் பதிக்கப்பெற்ற மயிலாசனம் தயாரிக்கப்பட்டது.
  2. யமுனை நதிக்கரையில் உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் எழுப்பப்பட்டது.
  3. ஆக்ராவிலுள்ள முத்து மசூதி (மோதி மசூதி) டெல்லியிலுள்ள மிகப்பெரிய ஜூம்மா மசூதி ஆகியவை ஷாஜகானால் கட்டப்பட்டவையாகும்.
A
1, 2
B
1, 3
C
2, 3
D
எதுவுமில்லை
Question 89 Explanation: 
(குறிப்பு: ஒளரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தில், கட்டடக்கலை பெரிய அளவிலான ஆதரவைப் பெறவில்லை.)
Question 90
ஒளரங்காபாத்தில் உள்ள பிபிகா மக்பாரா என்னும் கல்லறை மாடம் யாரால் கட்டப்பட்டது?
A
ஷாஜகான்
B
ஜஹாங்கீர்
C
ஆஜாம் ஷா
D
ஒளரங்கசீப்
Question 90 Explanation: 
(குறிப்பு: ஆஜாம்ஷா என்பவர் ஒளரங்கசீப்பின் மகன் ஆவார். இவர் தம் தாயின் அன்பைப் போற்றும் வகையில் பிபிகா மக்பாராவை கட்டினார்.)
Question 91
செங்கோட்டை என்பது ______ ஆண்டில் பேரரசர் ஷாஜகானால் மதில்களால் சூழப்பெற்ற தனது தலைநகர் ஷாஜகானாபாத்தில் கட்டப்பட்ட அரண்மனையாகும்.
A
1628
B
1629
C
1639
D
1640
Question 91 Explanation: 
(குறிப்பு: சிவப்பு நிறக் கற்களால் கட்டப்பட்டுள்ளதால் இது செங்கோட்டை என அழைக்கப்படுகிறது. லால் குய்லா என்று அழைக்கப்படும் டெல்லியிலுள்ள செங்கோட்டை முகலாயப் பேரரசர்களின் வாழ்விடமாகும்.)
Question 92
பொருத்துக.
  1. பாபர்                            i) அகமது நகர்
  2. துர்க்காவதி               ii) அஷ்டதிக்கஜம்
  3. ராணி சந்த்பீபி           iii) அக்பர்
  4. தீன் – இலாஹி             iv) சந்தேரி
  5. இராஜா மான்சிங்      v) மத்திய மாகாணம்
A
ii i iii iv v
B
iii i iv ii v
C
iv v i iii ii
D
iv i ii iii v
Question 93
  • கூற்று: ஒளரங்கசீப் மற்ற மதங்களை வெறுத்ததனால் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது.
  • காரணம்: ஒளரங்கசீப் இந்துக்கள் மீது மீண்டும் ஜெசியா மற்றும் பாதயாத்திரை வரியை விதித்தனர்.
A
காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
B
கூற்றிற்குக் காரணம் சரியான விளக்கமல்ல
C
கூற்று தவறு, காரணம் தவறு
D
கூற்று சரி மற்றும் காரணம் தவறு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 93 questions to complete.

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!