Online TestTnpsc Exam
மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது? Online test 8th Social Science Lesson 8 Questions in Tamil
மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது? Online test 8th Social Science Lesson 8 Questions in Tamil
Congratulations - you have completed மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது? Online test 8th Social Science Lesson 8 Questions in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
2020ஆம் ஆண்டின்படி இந்தியாவில் எத்தனை மாநில அரசாங்கங்கள் செயல்படுகின்றன?
27 | |
28 | |
29 | |
30 |
Question 1 Explanation:
(குறிப்பு - இந்தியாவில் 2019 ஆண்டு வரை 29 மாநில அரசுகளும், 2020 ஆண்டு முதல் 28 மாநில அரசுகளும் செயல்படுகின்றன)
Question 2 |
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- ஒவ்வொரு மாநிலமும் தனக்கென தனியே சட்டமன்றமும், நிர்வாகமும் கொண்டுள்ளது.
- எல்லா மாநிலமும் தனக்கென தனியே ஒரு உயர் நீதிமன்றத்தை கொண்டுள்ளது.
- மாநில ஆளுநர் சட்டமன்றத்தில் ஒரு அங்கமாக திகழ்கிறார்.
I, II மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 2 Explanation:
(குறிப்பு- ஒவ்வொரு மாநிலமும் தனக்கான நிர்வாகத்தையும், சட்டமன்றத்தை யும் தனியே கொண்டுள்ளது. எனினும் உயர்நீதிமன்றங்களை ஒவ்வொரு மாநிலமும் தனித்தும், இரு மாநிலங்களுக்கு பொதுவாக ஒரு உயர் நீதிமன்றம் எனவும் கொண்டுள்ளது)
Question 3 |
மாநில ஆளுநர் ஒரு மாநில சட்டமன்றத்தின்.................
நிரந்தர உறுப்பினர் | |
கௌரவ உறுப்பினர் | |
ஒரு அங்கம் | |
தலைமை உறுப்பினர் |
Question 3 Explanation:
(குறிப்பு- ஒரு மாநில ஆளுநர் ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்தில் ஒரு அங்கமாக திகழ்கிறார். அவர் ஒருபோதும் சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆவதில்லை)
Question 4 |
மாநில நிர்வாகம் யார் தலைமையின் கீழ் உள்ளது?
- மாநில ஆளுநர்
- மாநில முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை
- மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
I, II மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 4 Explanation:
(குறிப்பு - ஒவ்வொரு மாநில நிர்வாகமும் மாநில ஆளுநர் மற்றும் முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையில் மேற்கொள்ளப்படுகிறது.)
Question 5 |
நம் நாட்டில் நடைமுறையில் உள்ள அரசாங்கம் எது?
- மத்திய அரசு
- மாநில அரசு
I மட்டும் | |
II மட்டும் | |
இரண்டும் | |
இரண்டும் அல்ல |
Question 5 Explanation:
(குறிப்பு- நமது நாட்டில் மத்திய அரசு மாநில அரசு என்ற இரண்டு வகை அரசாங்கங்கள் நடைமுறையில் உள்ளன. 28 மாநில அரசுகளும் அதற்கு தலைமையாக ஒரு மத்திய அரசும் உள்ளது)
Question 6 |
ஒரு மாநில அரசின் தலைவராக மாநில ஆளுநர் இருப்பார் என குறிப்பிடுவது?
பாராளுமன்றம் | |
உச்சநீதிமன்றம் | |
இந்திய அரசியலமைப்புச் சட்டம் | |
மாநில சட்ட விதிகள் |
Question 6 Explanation:
(குறிப்பு - மாநில ஆளுநர் - இந்திய அரசியலமைப்புச் சட்டம் 153வது விதி)
Question 7 |
கீழ்காணும் கூற்றுகளில் சரியானது எது?
- ஒவ்வொரு மாநிலமும் ஒரு ஆளுநரை கொண்டுள்ளது.
- இரண்டு மாநிலங்களுக்கு பொதுவாக ஒரு ஆளுநர் நியமிக்கப்படலாம்
- ஒரு மாநிலத்துக்கு ஒரு ஆளுநர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.
I, II மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 7 Explanation:
(குறிப்பு - ஒவ்வொரு மாடியிலும் தனக்கென ஒரு ஆளுநரை கொண்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு பொதுவாக ஒரு ஆளுநர் நியமிக்கப்படலாம், எனினும் ஒரு மாநிலத்திற்கு ஒரு ஆளுநர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.)
Question 8 |
ஒரு மாநிலத்தின் ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
- பிரதமர்
- குடியரசு தலைவர்
- பாராளுமன்றம்
I, II மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 8 Explanation:
(குறிப்பு - ஒரு மாநிலத்தின் ஆளுநரை, இந்திய அரசியலமைப்புச் சட்டம் விதி 155இன்படி இந்திய குடியரசு தலைவர் நியமிக்கிறார்.
Question 9 |
ஆளுநரின் பதவிக் காலம் கீழே உள்ளவற்றில் எது?
- ஐந்து ஆண்டுகள் மட்டும்
- ஐந்து ஆண்டுகள் மற்றும் புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரை
- கட்டாயமாக 5 ஆண்டுகள்
I, II மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 9 Explanation:
(குறிப்பு - ஒரு மாநிலத்தின் ஆளுநரின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளாகும். இடையில் அவர் விருப்பத்தின் பெயரில் அவர் ராஜினாமா செய்ய முடியும். ஐந்து ஆண்டுகள் கழிந்த பின் புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரை அவர் பொறுப்பில் இருப்பார்)
Question 10 |
கீழுள்ள கூற்றுகளில் எது சரியானது?
- மாநில ஆளுநர் பதவிக்காலம் முடியும் முன்னர் ராஜினாமா செய்யலாம்
- மாநில ஆளுநரை குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய முடியும்.
- மாநில ஆளுநரை மாநில அரசாங்கம் பதவி நீக்கம் செய்ய முடியும்.
I, II மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 10 Explanation:
(குறிப்பு - ஒரு மாநில ஆளுநரை, அம்மாநில அரசாங்கம் பதவி நீக்கம் செய்ய முடியாது)
Question 11 |
ஆளுநர் பற்றிய தவறான கூற்று?
- ஆளுநரை பணியிட மாற்றம் செய்ய முடியாது
- ஆளுநரின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட முடியாது
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 11 Explanation:
(குறிப்பு - ஒரு மாநில ஆளுநரை, வேறு மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்ய முடியும். தேவைப்படும்போது ஆளுநரின் பதவிக் காலம் நீட்டிக்க படலாம்)
Question 12 |
ஒரு மாநில ஆளுநர் அம்மாநிலத்தில்....
- நேரடியாக நிர்வாக கடமையாற்றலாம்
- மறைமுகமாக நிர்வாக கடமையாற்றலாம்
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 12 Explanation:
( குறிப்பு - அரசியலமைப்பு சட்ட விதி 154 இன் படி, ஒரு மாநில ஆளுநர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிர்வாக பணியாற்றலாம்)
Question 13 |
பொருத்துக
- மாநில ஆளுநர் - a) சட்ட விதி 156
- ஆளுநரின் ஆட்சி அதிகாரம் - b) சட்டவிதி 153
- ஆளுநரை அமர்த்துதல் - c) சட்டவிதி 155
- ஆளுநரின் பதவிக் காலம் - d) சட்டவிதி 154
I-b, II-d, III-c, IV-a | |
I-a, II-d, III-c, IV-b | |
I-b, II-a, III-c, IV-d | |
I-a, II-c, III-b, IV-d |
Question 13 Explanation:
(குறிப்பு- இந்திய அரசியலமைப்புச் சட்ட விதிகள் 154, 155, 156 முறையே ஆளுநரின் ஆட்சி அதிகாரம், ஆளுநரை அமர்த்துதல், மற்றும் ஆளுநரின் பதவிக் காலத்தை குறிக்கிறது)
Question 14 |
கீழுள்ள கூற்றுகளில் சரியானது எது?
- ஒரு மாநில ஆளுநரின் ஆட்சி அதிகாரம், அந்த மாநிலத்துக்கு உட்பட்டதாக இருக்கிறது.
- இரு மாநிலங்களுக்கும் பொதுவாக நியமிக்கப்பட்ட ஆளுநரின் ஆட்சி அதிகாரம் ஏதேனும் ஒரு மாநிலத்துக்கு உட்பட்டவையாக இருக்கிறது.
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 14 Explanation:
(குறிப்பு - ஒரு ஆளுநரின் ஆட்சியதிகாரம் அவர் நியமிக்கப்பட்டுள்ள மாநிலத்திற்கு அல்லது மாநிலங்களுக்கு பொருந்தும்)
Question 15 |
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- குடியரசுத் தலைவர் மாநில ஆளுநரை நியமிக்கும் முன் மத்திய அமைச்சரவையின் ஆலோசனையை கேட்டு அறிகிறார்.
- ஒருவர் ஆளுநராக அவரது சொந்த மாநிலத்தில் நியமிக்கப்படுவது இல்லை.
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 15 Explanation:
(குறிப்பு - குடியரசுத் தலைவர் மாநில ஆளுநரை நியமிக்கும் போது மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்படுகிறார். மேலும் தொடர்புடைய மாநில அரசையும் கலந்தாலோசிக்கிறார். பொதுவாக ஒருவர் ஆளுநராக அவரது சொந்த மாநிலத்தில் நியமிக்கப்படுவது இல்லை)
Question 16 |
மாநில ஆளுநருக்கான தகுதியை குறிப்பிடும் அரசமைப்பு சட்டவிதி எது?
அரசமைப்பு சட்ட விதி 157 | |
அரசமைப்பு சட்ட விதி 156 | |
அரசமைப்பு சட்ட விதி 155 | |
அரசமைப்பு சட்ட விதி 158 |
Question 16 Explanation:
(குறிப்பு - ஒரு மாநில ஆளுநராக அமர்த்தப்படுவதற்கான தகுதிப்பாடுகள் பற்றிக் கூறுவது, அரசியலமைப்பு சட்ட விதி 157 ஆகும்.)
Question 17 |
ஆளுநர் நியமனத்தின் தகுதிகளில் தவறானது எது?
36வது நிரம்பிய, இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். | |
பாராளுமன்ற உறுப்பினராக இருத்தல் கூடாது | |
சட்டமன்ற உறுப்பினராக இருத்தல் கூடாது | |
ஆதாயம் தரும் எந்த பதவியையும் வகித்தல் கூடாது. |
Question 17 Explanation:
(குறிப்பு- ஆளுநரின் வயது தகுதி, 35 வயது ஆகும்)
Question 18 |
ஒரு மாநிலத்தின் தலைமை நிர்வாகி யார்?
ஆளுநர் | |
முதல் அமைச்சர் | |
முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை | |
இவர் எவரும் அல்ல |
Question 18 Explanation:
(குறிப்பு - ஒரு மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆளுநர் ஆவார். மாநில அரசின் நிர்வாக அதிகாரங்கள் ஆளுநரிடம் உள்ளன)
Question 19 |
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
ஆளுநரால் | |
குடியரசுத் தலைவரால் | |
சட்டமன்ற சபாநாயகரால் | |
அமைச்சரவை குழுவால் |
Question 19 Explanation:
(குறிப்பு - ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவையை மாநில ஆளுநர் நியமிக்கிறார்)
Question 20 |
ஒரு மாநிலதில் துறைவாரியாக அமைச்சரை நியமிப்பதில் ஆளுநரின் பங்களிப்புகளில் சரியானது எது?
- ஆளுநர் தனது குழு மூலம் துறைவாரியான அமைச்சர்களை தேர்வு செய்து நியமிக்கிறார்.
- ஆளுநர் முதலமைச்சரின் ஆலோசனையின்படி துறைரீதியான அமைச்சர்களை நியமிக்கிறார்.
- ஆளுநர் தன்னிச்சையாக துறை ரீதியான அமைச்சர்களை நியமிக்கிறார்.
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
III மட்டும் சரி | |
II மட்டும் சரி |
Question 20 Explanation:
( குறிப்பு - ஆளுநர் முதலமைச்சரின் ஆலோசனையின்படி துறை ரீதியான அமைச்சர்களை நியமனம் செய்கிறார். அவர்களுக்கு பதவி பிரமாணமும் செய்து வைக்கிறார்)
Question 21 |
ஆளுநரால் நியமனம் செய்யப்படுபவர் யார்?
மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் | |
மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் | |
மாநில பல்கலைக்கழக துணைவேந்தர் | |
இவை அனைத்தும் |
Question 21 Explanation:
(குறிப்பு - ஒரு மாநில ஆளுநர் அம்மாநில பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக இருக்கிறார். பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்கள் ஆளுநர் நியமனம் செய்கிறார். மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் போன்றோரையும் ஆளுநர் நியமனம் செய்கிறார்)
Question 22 |
ஆளுநரின் அறிக்கையின்படி குடியரசுத் தலைவர் அரசியலமைப்பு சட்டப்பிரிவு............... பயன்படுத்தி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்துகிறார்.
சட்டப்பிரிவு 356 | |
சட்டப்பிரிவு 352 | |
சட்டப்பிரிவு 360 | |
இவை எதுவும் அல்ல |
Question 22 Explanation:
(குறிப்பு - இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356இன் படி ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்த முடியும். மாநில ஆளுநரின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துகிறார்)
Question 23 |
மாநில ஆளுநரின் சட்டமன்ற அதிகாரங்களில் தவறானது எது?
மாநில சட்டமன்ற கூட்டத்தை கூட்ட முடியும் | |
மாநில சட்டமன்ற கூட்டத்தை ஒத்தி வைக்க முடியும் | |
மாநில சட்டமன்றத்தைக் கலைக்க முடியும் | |
மாநில சட்டமன்றத்தை பணியிட மாற்றம் செய்ய முடியும். |
Question 23 Explanation:
(குறிப்பு - ஒரு மாநில ஆளுநரால் அந்த மாநிலத்தில் உள்ள சட்டமன்றத்தை பணியிட மாற்றம் செய்ய முடியாது)
Question 24 |
சட்டமன்ற கூட்டம் நடைபெறாத போது அவசர சட்டத்தை பிறப்பிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?
ஆளுநர் | |
அமைச்சரவை குழு | |
சட்டமன்ற குழு | |
பாராளுமன்றம் |
Question 24 Explanation:
(குறிப்பு- சட்டமன்ற கூட்டம் நடை பெறாத போது ஆளுநர் அவசர சட்டங்களை பிறப்பிக்கிறார். முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை குழுவின் ஆலோசனையின்படி அவசர சட்டங்களை பிறப்பிப்பார்)
Question 25 |
சட்டமன்றத்தில் பண மசோதா தாக்கல் குறித்த சரியான கூற்று எது?
- ஆளுநரின் ஒப்புதலுக்கு பின்னரே பணம் மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டு வர முடியும்.
- ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் பட மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டு வரமுடியும்.
- பண மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டு வந்த பின்னர், ஆளுநரின் ஒப்புதல் தேவை.
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 25 Explanation:
(குறிப்பு- ஆளுநரின் ஒப்புதலுக்கு பின்னரே பண மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டு வரமுடியும்)
Question 26 |
சட்டமன்றத்திற்கு ஆளுநரால் நியமிக்கப்படும் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினரின் எண்ணிக்கை என்ன?
ஒன்று | |
இரண்டு | |
மூன்று | |
நான்கு |
Question 26 Explanation:
(குறிப்பு - சட்டமன்றத்திற்கு ஒரு ஆங்கிலோ இந்திய உறுப்பினரை அவர்கள் போதிய அளவு பிரதிநிதித்துவம் பெறாத போது நியமனம் செய்யும் அதிகாரத்தை ஆளுநர் கொண்டுள்ளார்)
Question 27 |
மாநில சட்ட மேலவை உறுப்பினர்களில் எத்தனை பங்கு மாநில ஆளுநரால் பிரதிநிதித்துவ அடிப்படையில் நியமிக்கபடுகிறது?
நான்கில் ஒரு பங்கு. | |
ஐந்தில் ஒரு பங்கு | |
ஆறில் ஒரு பங்கு. | |
மூன்றில் ஒரு பங்கு |
Question 27 Explanation:
(குறிப்பு - சட்ட மேலவைக்கு அறிவியல், இலக்கியம், கலை, சமூக சேவை, கூட்டுறவு இயக்கம் ஆகிய துறைகளில் சிறப்பாக பங்காற்றிய அறிஞர்களில் ஆறில் ஒரு பங்கு அளவிற்கு பிரதிநிதித்துவ அடிப்படையில் ஆளுநர் நியமிக்கிறார்)
Question 28 |
தமிழ்நாடு மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை, ஆளுநரின் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினர் உடன் சேர்த்து........... ஆகும்.
234 உறுப்பினர்கள் | |
235 உறுப்பினர்கள் | |
236 உறுப்பினர்கள் | |
237 உறுப்பினர்கள் |
Question 28 Explanation:
( குறிப்பு - தமிழ்நாடு மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை -234, ஆளுநர் நியமிக்கும் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினர் - 1, ஆக மொத்தம் 235 உறுப்பினர்கள் ஆவார்கள்)
Question 29 |
மாநில அரசின் எதிர்பாரா செலவின நிதி யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கும்?
மாநில ஆளுநர் | |
மாநில நிதியமைச்சர் | |
மாநில தலைமை கணக்கு தணிக்கையாளர் | |
மத்திய நிதியமைச்சர் |
Question 29 Explanation:
(குறிப்பு - மாநில அரசின் எதிர்பாரா செலவின நிதி ஆளுநரின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கும்)
Question 30 |
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- மாநில அரசாங்கத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை ஆளுநரின் ஒப்புதலுடன் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.
- சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் ஒப்புதல் அளிக்கிறார்
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 30 Explanation:
(குறிப்பு - மாநிலத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கிறார். ஆளுநரின் ஒப்புதலுக்கு பின்னரே நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்)
Question 31 |
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- மாநில ஆளுநர் குடியரசுத் தலைவரைப் போன்று மாநிலத்தில் பெயரளவில் நிர்வாகத் தலைவராக உள்ளார்.
- மாநில ஆளுநர் எப்போதும் பெயரளவு தலைவராக உள்ளார்.
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 31 Explanation:
(குறிப்பு - மாநில ஆளுநர் ஒரு மாநிலத்தின் பெயரளவு தலைவராக இருப்பார். எனினும் எப்போதும் அவர் பெயரளவு தலைவராக இருப்பதில்லை. தனது அதிகாரங்களை குறிப்பிட்ட சில நேர்வுகளில் செயல்படுத்துகிறார்)
Question 32 |
ஆளுநர்...................... ஒரு முகவராக மாநிலத்தில் செயல்படுகிறார்.
மாநில அரசின் | |
மத்திய அரசின் | |
குடியரசு தலைவரின் | |
பாராளுமன்றத்தின் |
Question 32 Explanation:
( குறிப்பு - ஒரு மாநிலத்தின் ஆளுநர், மத்திய அரசின் ஒரு முகவராக அம்மாநிலத்தில் செயல்படுகிறார். எனவே இவர் மத்திய மற்றும் மாநில அரசுகளின் இடையே உறவை பராமரிப்பதற்கு பொறுப்பு வாய்ந்தவர் ஆவார்)
Question 33 |
ஒரு மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்த அறிக்கையை குடியரசுத் தலைவருக்கு சமர்பிப்பவர் யார்?
மாநில முதலமைச்சர் | |
மாநில சட்டம் ஒழுங்கு அமைச்சர் | |
மாநில ஆளுநர் | |
மாநில காவல்துறை டிஜிபி |
Question 33 Explanation:
(குறிப்பு - மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அறிக்கையை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்கிறார். ஆளுநரின் அறிக்கையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் மாநிலத்தில் நெருக்கடி நிலையை தேவை ஏற்படும்போது அறிவிக்கிறார்.)
Question 34 |
ஆளுநர் தன்னிச்சையான முடிவுகளை செயல்படுத்த உதவும் அதிகாரம்?
விருப்ப உரிமை அதிகாரம் | |
தன்னிச்சை அதிகாரம் | |
சர்வாதிகாரம் | |
இவை எதுவும் அல்ல |
Question 34 Explanation:
(குறிப்பு - ஆளுநர் விருப்ப உரிமை அதிகாரத்தை செயல்படுத்தும்போது தன்னிச்சையான முடிவுகளை எடுக்கிறார். மேலும் அவர் அமைச்சரவையில் இடம் இருந்து அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை கோரிப் பெறலாம்)
Question 35 |
ஒரு மாநில அமைச்சரவையின் தலைவர்.............ஆவார்.
சட்டமன்ற சபாநாயகர் | |
முதலமைச்சர் | |
ஆளுநர் | |
இவர் யாரும் அல்ல |
Question 35 Explanation:
(குறிப்பு - மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மை கொண்டுள்ள கட்சியின் தலைவரை மாநில முதலமைச்சராக ஆளுநர் நியமிப்பார். மாநில முதலமைச்சரே, அமைச்சரவையின் தலைவர் ஆவார்)
Question 36 |
ஒரு மாநில முதலமைச்சரின் பதவிக்காலம் என்ன?
கட்டாயம் 5 ஆண்டுகள் பதவி வகிக்க வேண்டும். | |
நிலையானது அல்ல | |
ஐந்து ஆண்டுகள், எனினும் ராஜினாமா செய்து கொள்ளலாம். | |
விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். |
Question 36 Explanation:
(குறிப்பு- மாநில முதலமைச்சரின் பதவிக்காலம் நிலையான ஒன்று அல்ல. சட்டமன்றத்தில் பெரும்பான்மை உள்ளவரை முதலமைச்சராக நீடிப்பார்)
Question 37 |
யாருடைய பதவி விலகுதல் என்பது ஒட்டுமொத்த அமைச்சரவையும் பதவி விலங்குகளை குறிக்கும்?
சட்டமன்ற சபாநாயகர் | |
முதலமைச்சர் | |
மாநில ஆளுநர் | |
மாநில எதிர்க்கட்சித் தலைவர் |
Question 37 Explanation:
(குறிப்பு - ஒரு மாநில முதலமைச்சர் பதவி விலகுதல் என்பது ஒட்டுமொத்த அமைச்சரவையும் பதவி விலகுதலை குறிக்கும்)
Question 38 |
ஒரு மாநில முதலமைச்சர் தனது ராஜினாமா கடிதத்தை யாரிடம் சமர்ப்பிக்க வேண்டும்?
மாநில ஆளுநரிடம் | |
பிரதமரிடம் | |
குடியரசுத் தலைவரிடம் | |
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் |
Question 38 Explanation:
(குறிப்பு- ஒரு மாநில முதலமைச்சர் தனது ராஜினாமா கடிதத்தை மாநில ஆளுநரிடம் சமர்ப்பித்தல் வேண்டும். அவ்வாறு முதல்வர் ராஜினாமா செய்யும் போது மொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்ததாக எடுத்துக்கொள்ளப்படும்.)
Question 39 |
கீழ்காணும் செய்திகளில் தவறானது எது?
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மாநில சட்டமன்ற உறுப்பினராக இருத்தல் வேண்டும். | |
சட்டமன்ற உறுப்பினராக இல்லாத பட்சத்தில், 6 மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். | |
ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் மட்டுமே முதலமைச்சராக முடியும். | |
சட்டமன்ற உறுப்பினர் முதலமைச்சரான பின்பு, சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறத்தல் முடியாது. |
Question 39 Explanation:
(குறிப்பு - சட்டமன்ற உறுப்பினராக உள்ளவர் மட்டுமே முதலமைச்சராக முடியும். எனினும் அவர் அதற்கு முன்னர் சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சர் குழுவில் இடம் பெற்றவராக இருக்க தேவையில்லை. முதல் முறை சட்டமன்ற உறுப்பினரும் முதலமைச்சர் ஆகலாம்)
Question 40 |
ஈரவை சட்டமன்றம் கொண்ட மாநிலங்கள் அல்லாதது எது?
ஆந்திரப் பிரதேசம் | |
உத்திர பிரதேசம் | |
கர்நாடகம் | |
கேரளா |
Question 40 Explanation:
(குறிப்பு - சட்டமன்ற மேலவை மற்றும் சட்டமன்றம் கீழவை என இரு அவைகளை கொண்ட மாநிலங்களுள் கேரளா தவறானது. )
Question 41 |
கீழ் உள்ள மாநிலங்களில் எது ஈரவை கொண்ட மாநிலம் ஆகும்?
தமிழ்நாடு | |
கேரளா | |
மத்திய பிரதேசம் | |
மகாராஷ்டிரம் |
Question 41 Explanation:
(குறிப்பு - தமிழ்நாடு, கேரளா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உறவை கொண்ட மாநிலங்கள் ஆகும். மகாராஷ்டிர மாநிலம் சட்டமேலவை, சட்டகீழவை என இரு அவை கொண்ட மாநிலம் ஆகும்)
Question 42 |
மாநிலத்தின் தலைமை நிர்வாகி யார்?
முதலமைச்சர் | |
மாநில ஆளுநர் | |
சட்டமன்ற சபாநாயகர் | |
இவர் யாருமல்ல |
Question 42 Explanation:
(குறிப்பு - முதலமைச்சர் மாநிலத்தின் தலைமை நிர்வாகி அவர் மாநில அரசாங்கத்தின் பல்வேறு முக்கிய முடிவுகள் அவரது தலைமையின் கீழ் எடுக்கப்படுகின்றன)
Question 43 |
மாநில அமைச்சர்களை நியமனம் செய்வது யார்?
மாநில ஆளுநர் | |
மாநில முதலமைச்சர் | |
மாநில சட்டமன்ற சபாநாயகர் | |
மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி |
Question 43 Explanation:
(குறிப்பு - அமைச்சரவையை உருவாக்குவதில் முக்கியபங்கு மாநில முதலமைச்சர் வகிக்கிறார். மாநில முதலமைச்சரின் ஆலோசனையின் பெயரில் அமைச்சர்களை ஆளுநர் நியமிக்கிறார்)
Question 44 |
மாநில அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளில் யாருடைய முடிவு இறுதியான முடிவாக இருக்கும்?
குடியரசு தலைவர் | |
குடியரசு தலைவர் | |
முதலமைச்சர் | |
மாநில அமைச்சரவைக் குழு |
Question 44 Explanation:
(குறிப்பு - ஒரு மாநில அரசின் கொள்கைகள் மக்களின் நலனுக்கு எதிராக இல்லாததை உறுதி செய்தவர் மாநில முதலமைச்சர் ஆவார். மாநில அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளில் முதலமைச்சரின் முடிவில் உறுதியாக இருக்கும்)
Question 45 |
பல்வேறு துறைகளை கண்காணித்து, பல்வேறு துறைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைபது?
மாநில அமைச்சரவைக் குழு | |
முதலமைச்சர் | |
ஆளுநர் | |
எதிர்க்கட்சித் தலைவர் |
Question 45 Explanation:
(குறிப்பு - பல்வேறு துறைகளை கண்காணித்து ஆலோசனை வழங்குதலும், பல்வேறு துறைகளில் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் முதலமைச்சரின் தலையாய பணியாகும்)
Question 46 |
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- மாநில அரசாங்கத்தின் உயர்பதவிகளில் நியமனம் செய்யும் முக்கிய அதிகாரத்தை முதலமைச்சர் கொண்டுள்ளார்.
- முதலமைச்சர் பல்வேறு உயர் அதிகாரிகளை நியமிக்கிறார்.
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 46 Explanation:
(குறிப்பு - முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின் படியே ஆளுநர் பல்வேறு உயர் அதிகாரிகளை நியமிக்கிறார்)
Question 47 |
ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவை குறைந்தபட்சம் எத்தனை உறுப்பினர்களை கொண்டிருக்கும்?
இருபது | |
முப்பது | |
நாற்பது | |
ஐம்பது |
Question 47 Explanation:
(குறிப்பு - ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவை யானது 40 உறுப்பினர்களுக்கு குறையாமல் இருக்கவேண்டும் அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறது)
Question 48 |
ஒரு மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினர் எண்ணிக்கை, அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில்................... மிகாமல் இருத்தல் வேண்டும்.
மூன்றில் ஒரு பங்குக்கு | |
மூன்றில் இரு பங்குக்கு | |
நான்கில் ஒரு பங்குக்கு | |
ஐந்தில் ஒரு பங்குக்கு |
Question 48 Explanation:
(குறிப்பு - சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமல் சட்டமன்ற மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை இருத்தல் வேண்டும் என அரசியல் அமைப்புச் சட்ட விதி கூறுகிறது.)
Question 49 |
சட்டமன்ற மேலவையின் உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
நேர்முகமாக | |
மறைமுகமாக | |
தேர்வுக் குழு மூலமாக | |
குலுக்கல் மூலமாக |
Question 49 Explanation:
(குறிப்பு - சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்)
Question 50 |
பொருத்துக
- மாநில சட்டமன்றத்தின் அமைப்பு - a) அரசமைப்புச் சட்ட விதி 170
- மாநிலச் சட்ட மேலவை ஒழிப்பு/உருவாக்குதல் - b) அரசமைப்புச் சட்ட விதி 169
- சட்டமன்றப் பேரவைகளின் கட்டமைப்பு - c) அரசமைப்புச் சட்ட விதி 168
- சட்டமன்ற மேலவைகளின் கட்டமைப்பு - d) அரசமைப்புச் சட்ட விதி 171
I-c, II-b, III-a, IV-d | |
I-a, II-d, III-c, IV-b | |
I-b, II-a, III-c, IV-d | |
I-a, II-c, III-b, IV-d |
Question 50 Explanation:
(குறிப்பு- ஒரு மாநில சட்டமன்றம் பற்றிய அரசமைப்புச் சட்ட விதிகள் சட்டவிதி 168 முதல் தொடங்குகிறது)
Question 51 |
சட்ட மேலவை உறுப்பினர்கள் நியமனம் பற்றி சரியாக பொருத்துக
- மூன்றில் ஒரு பங்கு - a) ஆளுநரால் நியமனம்
- சட்டமன்ற உறுப்பினர்கள் - b) பட்டதாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுவர்
- III. பன்னிரண்டில் ஒரு பங்கு - c) மூன்றில் ஒரு பங்கு
- ஆறில் ஒரு பங்கு - d) மாவட்ட பஞ்சாயத்து, நகராட்சி உறுப்பினர்கள்
I-d, II-c, III-b, IV-a | |
I-a, II-c, III-d, IV-b | |
I-b, II-c, III-a, IV-d | |
I-a, II-c, III-b, IV-d |
Question 51 Explanation:
(குறிப்பு - சட்டமன்ற மேலவை உள்ள மாநிலங்களின் சட்டமன்ற மேலவை உறுப்பினர்களை, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட பஞ்சாயத்து மற்றும் நகராட்சி உறுப்பினர்கள், பட்டதாரிகள் போன்றவர்களால் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்)
Question 52 |
சட்டமேலவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பங்கு என்ன?
மூன்றில் ஒரு பங்கு | |
பன்னிரண்டில் ஒரு பங்கு | |
ஆறில் ஒரு பங்கு | |
நான்கில் ஒரு பங்கு |
Question 52 Explanation:
(குறிப்பு - சட்டமேலவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் இடைநிலை ஆசிரியர்கள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ல் ஒரு பங்கு ஆகும்)
Question 53 |
சட்டமேலவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் பங்கு பெறாதவர் யார்?
நகராட்சி உறுப்பினர்கள் | |
பஞ்சாயத்து உறுப்பினர்கள் | |
இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள் | |
வழக்கறிஞர்கள் |
Question 53 Explanation:
(குறிப்பு- சட்ட மேலவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் இடைநிலைகள் பள்ளி ஆசிரியர்கள், மாவட்ட பஞ்சாயத்து மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் பங்கு பெறுவர். வழக்கறிஞர்கள் பங்கு பெறுவதில்லை)
Question 54 |
மன்றப் பேரவை குறித்த தவறான செய்தி எது?
- சட்டமன்ற மேலவை ஒரு நிலையான அவையாகும்.
- சட்டமன்ற மேலவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெறுவர்.
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 54 Explanation:
(குறிப்பு - சட்டமன்ற மேலவை உறுப்பினர்களில், மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வு பெறுவர் )
Question 55 |
சட்ட மேலவை உறுப்பினர்களின் எத்தனை பங்கு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெறுவர்?
மூன்றில் ஒரு பங்கு | |
நான்கில் ஒரு பங்கு | |
ஆறில் ஒரு பங்கு | |
இவை எதுவும் இல்லை |
Question 55 Explanation:
( குறிப்பு - சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வு பெறுவர். அக் காலிப்பணியிடங்களுக்கு தேர்தல் நடைபெறும்)
Question 56 |
சட்ட மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம் என்ன?
ஆறு ஆண்டுகள் | |
ஐந்து ஆண்டுகள் | |
நான்காண்டுகள் | |
நிலையானதல்ல |
Question 56 Explanation:
(குறிப்பு - சட்ட மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். இந்தப் பதவிக்காலம் நிலையானது ஆகும்)
Question 57 |
சட்டமன்றத்தில் ஆளுநர் சிறப்புரை வழங்க வழி செய்யும் அரசமைப்பு சட்ட விதி எது?
அரசமைப்பு சட்ட விதி 176 | |
அரசமைப்பு சட்ட விதி 177 | |
அரசமைப்பு சட்ட விதி 178 | |
அரசமைப்பு சட்ட விதி 179 |
Question 57 Explanation:
(குறிப்பு - ஒவ்வொரு சட்டமன்றக் கூட்டத்தொடரின் போதும், ஆளுநர் சட்டமன்றத்தில் சிறப்புரை ஆற்றுவார். ஆளுநர் சிறப்புரை வழங்க வழி செய்யும் அரசமைப்புச் சட்ட விதி - 176 ஆகும் )
Question 58 |
மாநில சட்டமன்றத்தின் செயலகம் குறித்த அரசமைப்பு சட்ட விதி எது?
அரசமைப்பு சட்ட விதி 185 | |
அரசமைப்பு சட்ட விதி 186 | |
அரசமைப்பு சட்ட விதி 187 | |
அரசமைப்பு சட்ட விதி 188 |
Question 58 Explanation:
(குறிப்பு - மாநில சட்டமன்றத்தின் செயலகம் குறித்த இந்திய அரசமைப்புச் சட்டம் விதி 187 ஆகும். தமிழ்நாட்டின் தலைமை செயலகம் சென்னை ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது)
Question 59 |
மாநில சட்ட மேலவை உறுப்பினராக குறைந்தபட்ச வயது நிர்ணயம் எது?
25 வயது | |
30 வயது | |
32 வயது | |
35 வயது |
Question 59 Explanation:
(குறிப்பு - மாநில சட்ட மேலவையில் உறுப்பினராக 30 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்)
Question 60 |
சட்ட மேலவை தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பவர்?
- சட்ட மேலவை உறுப்பினர்கள்
- சட்டப்பேரவை உறுப்பினர்கள்
- பஞ்சாயத்து மற்றும் நகராட்சி உறுப்பினர்கள்
I மட்டும் | |
II மட்டும் | |
III மட்டும் | |
எல்லாமே தவறு |
Question 60 Explanation:
(குறிப்பு - சட்டமேலவை தலைவர் மற்றும் துணைத் தலைவரை சட்ட மேலவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பர்)
Question 61 |
மாநில அரசாங்கத்தின் சட்டங்களை உருவாக்குபவர்கள்................. என்று அழைக்கப்படுகிறார்கள்.
சட்டமன்ற உறுப்பினர்கள் | |
சட்ட மேலவை உறுப்பினர்கள் | |
மாநில அமைச்சர் குழு | |
இவர் யாருமல்ல |
Question 61 Explanation:
(குறிப்பு - மாநில அரசாங்கத்தின் சட்டங்களை உருவாக்குபவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்)
Question 62 |
சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பவர் யார்?
மாவட்ட நகராட்சி உறுப்பினர்கள் | |
மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் | |
சட்ட மன்ற தொகுதி மக்கள் | |
சட்டமன்ற உறுப்பினர் தேர்வு குழு |
Question 62 Explanation:
(குறிப்பு - சட்டமன்ற உறுப்பினர்களை, சட்டமன்ற தொகுதிகளை சார்ந்த பொதுமக்கள் நேரடியாக தேர்வு செய்வர்)
Question 63 |
ஒரு சட்டமன்ற தொகுதிக்கு அதிகபட்சம் எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
ஒரு உறுப்பினர் | |
இரண்டு உறுப்பினர்கள் | |
மூன்று உறுப்பினர்கள் | |
நான்கு உறுப்பினர்கள் |
Question 63 Explanation:
(குறிப்பு - ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒரு தொகுதிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர் தேர்வு செய்யப்படுவதில்லை)
Question 64 |
ஒரு சட்டமன்ற தொகுதியின் குறைந்தபட்ச வாக்காளர்களின் எண்ணிக்கை என்ன?
1 லட்சம் | |
2 லட்சம் | |
3 லட்சம் | |
4 லட்சம் |
Question 64 Explanation:
(குறிப்பு - ஒரு சட்டமன்ற தொகுதியில் குறைந்தது ஒரு லட்சம் முதல், பல லட்சம் வாக்கு மக்கள் தொகையை கொண்டிருக்கும். எனினும் ஒரு தொகுதிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்)
Question 65 |
சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடுவதற்கான குறைந்த பட்ச வயது வரம்பு என்ன?
21 வயது | |
25 வயது | |
27 வயது | |
30 வயது |
Question 65 Explanation:
( குறிப்பு - சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட குறைந்தபட்ச வயது 25 ஆகும். அதிகபட்ச வயது நிர்ணயிக்கப்படவில்லை)
Question 66 |
சட்டப்பேரவைக்கான தேர்தல் குறித்த தவறான செய்தி எது?
ஒரு சட்டமன்ற தொகுதியில் இருந்து ஒரு உறுப்பினர் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். | |
ஒருவர் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடலாம். | |
எந்தக் கட்சியைச் சாராத ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது. | |
சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. |
Question 66 Explanation:
(குறிப்பு - எந்த கட்சியையும் சாராதவர் சட்டப்பேரவைக்கான தேர்தலில் போட்டியிட முடியும். அவ்வாறு போட்டியிடும் வேட்பாளர் சுயேட்சை வேட்பாளர் என்று அழைக்கப்படுவார்)
Question 67 |
கீழ்க்காணும் கூற்றுகளில் எது தவறானது?
- சட்டப்பேரவை தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிடுவோர்க்கு சின்னம் வழங்கப்படும்.
- சட்டப்பேரவை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவோர்க்கு சின்னம் வழங்கப்பட மாட்டாது,
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 67 Explanation:
(குறிப்பு - சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு கட்சி சின்னமும், சுயேச்சையாக போட்டியிடுவோர்க்கு தேர்தல் ஆணையத்தால் சின்னமும் வழங்கப்படும்.)
Question 68 |
கீழ்க்கண்டவற்றுள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுபவர் யார்?
ஆளுநர் | |
சட்ட மேலவை உறுப்பினர் | |
சட்டப்பேரவை உறுப்பினர் | |
சட்ட மேலவை உறுப்பினர் |
Question 68 Explanation:
(குறிப்பு - மேலே உள்ளவற்றில் சட்டப்பேரவை உறுப்பினர் தவிர்த்து மற்ற அனைவரும் தேர்வுக்குழு உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டமன்ற தொகுதி மக்கள் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர்)
Question 69 |
ஒரு மாநில சட்டமன்றத்தின் அதிகபட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கை என்ன?
250 | |
300 | |
400 | |
500 |
Question 69 Explanation:
(குறிப்பு - இந்திய அரசியலமைப்பின் படி ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்தில் 500 உறுப்பினர்களுக்கு மேலாக இருக்கக் கூடாது. தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 ஆகும் )
Question 70 |
இந்தியாவில் அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மாநிலம் எது?
தமிழ்நாடு | |
உத்தரப் பிரதேசம் | |
ஆந்திரப் பிரதேசம் | |
மேற்கு வங்காளம் |
Question 70 Explanation:
(குறிப்பு - இந்தியாவில் அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மாநிலம் உத்திர பிரதேசம் ஆகும். அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 402 ஆகும்)
Question 71 |
ஒரு மாநிலத்தின் சட்டப்பேரவையில் குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன?
30 | |
40 | |
50 | |
60 |
Question 71 Explanation:
(குறிப்பு - இந்திய அரசியலமைப்பின் படி ஒரு மாநிலத்தின் சட்டப் பேரவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்தபட்சம் 60 ஆகும் )
Question 72 |
சட்டமன்ற கூட்டங்களுக்கு தலைமை ஏற்பவர் யார்?
ஆளுநர் | |
சட்டமன்ற சபாநாயகர் | |
சட்ட மேலவைத் தலைவர் | |
சட்ட மேலவை துணைத் தலைவர் |
Question 72 Explanation:
(குறிப்பு - சட்டமன்ற கூட்டங்களுக்கு சட்டமன்ற சபாநாயகர் தலைமை வகிப்பார். சட்டமன்ற சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்)
Question 73 |
விதான் சபா என்று அழைக்கப்படுவது எது?
சட்டமன்ற பேரவை | |
சட்டமன்ற மேலவை | |
பாராளுமன்ற மேலவை | |
பாராளுமன்ற கீழவை |
Question 73 Explanation:
(குறிப்பு - சட்டமன்றத்தின் பேரவையானது விதான் சபா என்று அழைக்கப்படுகிறது. அதேபோல பாராளுமன்ற கீழவை லோக்சபா எனவும், பாராளுமன்ற மேலவை ராஜ்யசபா எனவும் அழைக்கப்படுகிறது)
Question 74 |
சட்டமன்ற உறுப்பினர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கையான 60 உறுப்பினர்களுக்கும் குறைவாக வைத்துக் கொள்ளும் அதிகாரம் கொண்ட மாநிலங்கள் கீழே உள்ளவற்றில் எது?
- கோவா மற்றும் பாண்டிச்சேரி
- சிக்கிம் மற்றும் மிசோரம்
- டில்லி மற்றும் மணிப்பூர்
I, II மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
எல்லாம் சரி |
Question 74 Explanation:
( குறிப்பு - அரசமைப்பின் படி ஒரு மாநிலத்தின் குறைந்தபட்ச சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 60 ஆகும். எனினும் பாராளுமன்ற சட்டத்தின் மூலம் சிக்கிம், மிசோரம், கோவா மற்றும் பாண்டிச்சேரி 60 க்கும் குறைவான உறுப்பினர்களின் எண்ணிக்கையை கொண்டுள்ளது)
Question 75 |
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தேவையான உறுப்பினர்களின் ஆதரவு எண்ணிக்கை என்ன?
119 உறுப்பினர்கள் ஆதரவு தேவை | |
118 உறுப்பினர்கள் ஆதரவு தேவை | |
117 உறுப்பினர்கள் ஆதரவு தேவை | |
116 உறுப்பினர்கள் ஆதரவு தேவை |
Question 75 Explanation:
(குறிப்பு - தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 ஆகும். எனில் அதில் பாதியான 117 உறுப்பினர்களின் ஆதரவும், உடன் ஒரு உறுப்பினரின் ஆதரவும் சேர்ந்து, மொத்தம் 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.)
Question 76 |
மாநில அரசாங்கம் என அழைக்கப்படுவதில் பங்கு பெறாதவர் யார்?
- மாநில முதலமைச்சர்
- பல்வேறு துறை அமைச்சர்கள்
- எதிர்க்கட்சித் தலைவர்
I, II மட்டும் | |
I, III மட்டும் | |
II, III மட்டும் | |
எல்லாமும் |
Question 76 Explanation:
(குறிப்பு - மாநில முதலமைச்சரும் மற்றும் அவரது தலைமையிலான பல்வேறு துறை அமைச்சர்களும் கொண்ட அமைப்பு மாநில அரசாங்கம் என அழைக்கப்படுகிறது)
Question 77 |
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மை பெற்ற கட்சி ஆட்சி அமைக்கும்.
- சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான வாக்கு பெற்ற கட்சி ஆட்சியமைக்கும்.
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 77 Explanation:
(குறிப்பு - சட்டமன்ற தேர்தல்களில் பெரும்பான்மையான வாக்கு பெற்ற கட்சி, பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். அவ்வாறு பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்ட கட்சி ஆட்சி அமைக்கும்)
Question 78 |
சட்டமன்றம் ஆண்டிற்கு எத்தனை முறை கூடும்?
இரண்டு அல்லது மூன்று முறை | |
மூன்று அல்லது நான்கு முறை | |
இரண்டு முறை மட்டும் | |
வரைமுறை இல்லை |
Question 78 Explanation:
(குறிப்பு - சட்டமன்றம் ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று முறை கூடும்)
Question 79 |
சட்டமன்றம் கீழ்காணும் பட்டியலில் எந்தப் பட்டியலில் தொடர்பான துறைகள் மீது சட்டம் இயற்ற முடியும்?
- மாநிலப் பட்டியல் துறைகள்
- மத்திய பட்டியல் துறைகள்
- பொதுப் பட்டியல் துறைகள்
I, II மட்டும் | |
I, III மட்டும் | |
II, III மட்டும் | |
எல்லாமும் |
Question 79 Explanation:
(குறிப்பு - சட்டமன்றம் மாநிலப் பட்டியல் மற்றும் மத்தியப் பட்டியலில் உள்ள துறைகள் தொடர்பாக சட்டத்தை இயற்ற முடியும்)
Question 80 |
மாநில சட்டமன்றம் எப்போது தனது சட்டமியற்றும் அதிகாரத்தை இழக்கிறது?
- நெருக்கடிநிலை
- குடியரசுத் தலைவர் ஆட்சி
I மட்டும் | |
II மட்டும் | |
இரண்டும் | |
இரண்டும் அல்ல |
Question 80 Explanation:
(குறிப்பு - நெருக்கடி நிலைகள், ஜனாதிபதி ஆட்சி உள்ளபோது சட்டமன்றம் தனது சட்டமியற்றும் அதிகாரத்தை பயன்படுத்த இயலாது)
Question 81 |
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் சட்டமன்றத்தின் அமைச்சரவையை கலைக்க முடியும்.
- மாநில சட்டமன்றம் ஆனது மாநிலத்தின் நிதியை கட்டுப்படுத்துகிறது.
- நிதி மசோதாவை சட்ட மேலவையிலும், சட்ட பேரவையிலும் கொண்டு வர இயலும்.
I, II மட்டும் | |
I, III மட்டும் | |
II, III மட்டும் | |
எல்லாமும் |
Question 81 Explanation:
(குறிப்பு - நிதி மசோதாவை சட்டமன்றத்தில் மட்டுமே கொண்டு வர இயலும். சட்ட மேலவையில் கொண்டுவர இயலாது)
Question 82 |
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- சட்டமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் பங்கேற்கின்றனர்.
- சட்டமன்ற உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் பங்கு கொள்கின்றனர்.
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 82 Explanation:
( குறிப்பு - சட்டமன்ற உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும், குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்)
Question 83 |
கீழுள்ள கூற்றுகளில் எது தவறானது?
- அரசியலமைப்பை திருத்துவதில் சட்டமன்றம் பங்கு வகிப்பதிலை.
- அரசியலமைப்பை திருத்தும் சில நேர்வுகளில் மாநிலங்களவை பங்கு வகிக்கிறது.
I மட்டும் தவறு | |
II மட்டும் தவறு | |
இரண்டும் தவறு | |
இரண்டும் சரி |
Question 83 Explanation:
( குறிப்பு - அரசியலமைப்பை வைத்திருக்கும் சில நேர்வுகளில், மாநிலங்களவை மற்றும் சட்ட மன்றத்தின் ஒப்புதல் அவசியமாகிறது)
Question 84 |
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- ஒரு மாநிலத்தில் சட்டமன்றம் மற்றும் அமைச்சரவை பொதுவாக எங்கு செயல்படுகிறதோ அதுவே மாநிலத்தின் தலைநகரம் ஆகும்
- II .சட்டமன்ற பேரவை சட்டமன்ற மேலவையைக் காட்டிலும் அதிக அதிகாரம் கொண்டதாகும்.
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 84 Explanation:
( குறிப்பு - தமிழ்நாட்டின் சட்டமன்ற வளாகம், தலைமை செயலகம் என அழைக்கப்படுகிறது. இது சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது )
Question 85 |
மாநிலத்தின் உயரிய நீதி அமைப்பாக விளங்குவது எது?
உயர் நீதிமன்றம் | |
உச்சநீதிமன்றம் | |
மாவட்ட நீதிமன்றம் | |
இவை எதுவுமல்ல |
Question 85 Explanation:
(குறிப்பு - ஒரு மாநிலத்தின் உயரிய நீதி அமைப்பாக விளங்குவது உயர்நீதிமன்றம் ஆகும்.)
Question 86 |
எந்த மாநிலத்தின் உயர் நீதிமன்றம் உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்ற வளாகம் கொண்டது என்ற பெருமையை உடையது?
தமிழ்நாடு | |
மேற்கு வங்காளம் | |
மகாராஷ்டிரா | |
மத்திய பிரதேசம் |
Question 86 Explanation:
(குறிப்பு - தமிழ்நாடு உயர் நீதிமன்ற வளாகம், உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்ற வளாகம் என்ற பெருமையை உடையது. இது சென்னையில் அமைந்துள்ளது)
Question 87 |
அரசியலமைப்பின் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உயர் நீதிமன்றம் இருக்கும் எனும் விதி எது?
அரசியலமைப்பு சட்ட விதி 214 | |
அரசியலமைப்பு சட்ட விதி 215 | |
அரசியலமைப்பு சட்ட விதி 216 | |
அரசியலமைப்பு சட்ட விதி 217 |
Question 87 Explanation:
(குறிப்பு - அரசியலமைப்பு சட்ட விதி 214 இன் படி, ஒவ்வொரு மாநிலமும் தனக்கான ஒரு உயர்நீதிமன்றத்தை கொண்டிருக்கும்)
Question 88 |
இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு பொதுவானதொரு உயர்நீதிமன்றத்தை நிறுவுதல் எனும் அரசியலமைப்பு சட்ட விதி எது?
அரசியலமைப்பு சட்ட விதி 231 | |
அரசியலமைப்பு சட்ட விதி 241 | |
அரசியலமைப்பு சட்ட விதி 230 | |
அரசியலமைப்பு சட்ட விதி 229 |
Question 88 Explanation:
(குறிப்பு - இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு பொதுவான ஒரு உயர் நீதிமன்றம் இருக்கலாம் என்று கூறும் அரசியலமைப்பு சட்ட விதி 231 ஆகும். இந்த விதியின் படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு பொதுவான உயர் நீதிமன்றம் சென்னையில் அமைந்துள்ளது)
Question 89 |
மாநில உயர் நீதிமன்றம் எத்தனை தலைமை நீதிபதி கொண்டிருக்கும்?
ஒன்று | |
இரண்டு | |
மூன்று | |
எல்லாமே தவறு |
Question 89 Explanation:
(குறிப்பு- மாநில உயர் நீதிமன்றங்கள் ஒரு தலைமை நீதிபதியும், குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்ட பிற நீதிபதிகளையும் கொண்டிருக்கும்)
Question 90 |
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- எல்லா உயர்நீதிமன்றமும் ஒரே மாதிரியான எண்ணிக்கை கொண்ட நீதிபதிகளை கொண்டிருக்காது.
- மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமனம் செய்பவர் மாநில ஆளுநர் ஆவார்.
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 90 Explanation:
(குறிப்பு - குடியரசு தலைவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையும், மாநில ஆளுநரையும் கலந்து ஆலோசித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமனம் செய்வார்)
Question 91 |
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பெற்றிருக்க வேண்டிய தகுதிகளில் தவறானது எது?
இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும் | |
15 ஆண்டுகள் நீதித்துறை அலுவலராக பணியாற்றி இருக்க வேண்டும். | |
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நீதிமன்றங்களில் வழக்குரைஞராக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். | |
மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி இருக்க வேண்டும். |
Question 91 Explanation:
(குறிப்பு - உயர்நீதிமன்ற நீதிபதி இந்தியாவில் 10 ஆண்டுகாலம் நீதித்துறை அலுவலராக பணியாற்றி இருக்க வேண்டும், என்பது சரியான ஒரு தகுதியாகும்)
Question 92 |
உயர்நீதிமன்ற நீதிபதிகள் எந்த வயது வரை அப்பதவியில் இருப்பார்?
62 வயது வரை | |
63 வயது வரை | |
64 வயது வரை | |
65 வயது வரை |
Question 92 Explanation:
(குறிப்பு- உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது 62 ஆகும். எனினும் நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை மற்றும் திறமையின்மை ஆகியவற்றின் அடிப்படையில் நீதிபதிகளை நீக்கலாம்)
Question 93 |
உயர் நீதிமன்றங்கள் வழங்கும் பேராணைகள் தவறானது எது?
ஆட்கொணர்வு நீதி பேராணை | |
தடை உருத்தும் நீதி பேராணை | |
கட்டளையிடும் நீதிப்பேராணை | |
விடுதலை நீதிப் பேராணை |
Question 93 Explanation:
(குறிப்பு - உயர்நீதிமன்றம் ஆனது ஆட்கொணர் நீதிப்பேராணை, தகுதி முறை வினவும் நீதிப்பேராணை, தடை உறுத்தும் நீதிப் பேராணை, கட்டளையிடும் நீதிப்பேராணை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய வலியுறுத்தும் நீதிப்பேராணை ஆகியவற்றை பிறப்பிக்கின்றன)
Question 94 |
உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பு செல்லாத நீதிமன்றம் எது?
மாவட்ட நீதிமன்றம் | |
துணை உயர்நீதிமன்றம் | |
ராணுவ நீதிமன்றம் | |
இவை எதுவுமில்லை |
Question 94 Explanation:
(குறிப்பு - ஒவ்வொரு உயர் நீதிமன்றம் தனது அதிகார எல்லைக்குள் உள்ள ராணுவ நீதிமன்றங்கள் மற்றும் தீர்பாயங்களுக்கு தனது அதிகாரத்தை செலுத்துவதில்லை)
Question 95 |
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- உயர்நீதிமன்றம் சார்நிலை நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்துகிறது.
- சார் நிலை நீதிமன்றங்களில் உள்ள வழக்கை, உயர் நீதிமன்றம் எடுத்து தானே முடிவு செய்யலாம்.
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 95 Explanation:
(குறிப்பு -மாநில உயர் நீதிமன்றம், மாநிலத்தில் உள்ள அனைத்து சார்நிலை நீதிமன்றங்கள் ஐயும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. சார்நிலை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கை, சட்ட முகாந்திரம் உள்ளது என உயர் நீதிமன்றம் கருதினால் அதை தானே எடுத்து விசாரிக்கலாம்)
Question 96 |
மாவட்ட நீதிபதிகளை நியமனம் செய்பவர் யார்?
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி | |
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி | |
மாநில முதலமைச்சர் | |
மாநில ஆளுநர் |
Question 96 Explanation:
(குறிப்பு - ஒவ்வொரு மாவட்டமும் மாவட்ட நீதிமன்றத்தின் எல்லைக்குள் அமைந்திருக்கும். ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றமும் ஒரு தலைமை நீதிபதியை கொண்டிருக்கும். மாவட்ட தலைமை நீதிபதியை நியமிப்பவர் அம்மாநில ஆளுநர் ஆவார்)
Question 97 |
அரசியலமைப்பின் பாதுகாப்பு என்பது.................. சுதந்திரமாக செயல்படுவதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.
பாராளுமன்றம் | |
சட்டமன்றம் | |
நீதிமன்றம் | |
மக்கள் மன்றம் |
Question 97 Explanation:
(குறிப்பு - நீதிமன்றங்கள் தங்களது அதிகாரங்களை தனது எல்லைக்குள் செயல்படுத்தும் போது நீதிமன்றம் முழு அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் கொண்டிருக்கும்)
Question 98 |
இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்களில் மொத்த எண்ணிக்கை என்ன?
20 | |
22 | |
24 | |
26 |
Question 98 Explanation:
(குறிப்பு - இந்தியாவில் உள்ள மொத்த உயர்நீதிமன்றங்களின் எண்ணிக்கை 24 ஆகும். இவற்றுள் இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான உயர் நீதிமன்றங்களும் அடங்கும்)
Question 99 |
பொருத்துக
- உயர்நீதிமன்ற அமைப்பு - a) சட்டவிதி 217
- உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம் - b) சட்ட விதி 224
- கூடுதல் நீதிபதிகளை அமர்த்துதல் - c) சட்ட விதி 231
- இரு மாநிலங்களுக்கும் பொதுவான உயர் நீதிமன்றம் - d) சட்ட விதி 216
I-d, II-a, III-b, IV-c | |
I-a, II-c, III-d, IV-b | |
I-b, II-c, III-a, IV-d | |
I-a, II-c, III-b, IV-d |
Question 99 Explanation:
(குறிப்பு - மாநில உயர்நீதி மன்றங்கள் குறித்து அரசமைப்பு சட்ட 214 முதல் 231 வரை உள்ளது )
Question 100 |
தவறான இணை எது?
- செயலாளர் தலைமை நீதிபதியை அமர்த்துதல் - சட்ட விதி 223
- கூடுதல் நீதிபதிகளை அமர்த்துதல் - சட்ட விதி 224
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு | |
I மட்டும் சரி | |
II மட்டும் சரி |
Question 100 Explanation:
(குறிப்பு - உயர்நீதிமன்ற உங்களுக்கான கூடுதல் நீதிபதிகளை அமர்த்துதல் சட்டவிதி 224 மற்றும் செயலாளர் தலைமை நீதிபதி அமர்த்துதல் சட்டவிதி 223 எடுத்துரைக்கிறது)
Question 101 |
உயர் நீதிமன்றங்களின் அதிகார வரம்பை ஒன்றியத்தில் அவர்களுக்கும் அதிகப்படுத்துதல் என்பதைக் கூறும் இந்திய அரசியலமைப்பு சட்ட விதி எது?
அரசியலமைப்பு சட்ட விதி 230 | |
அரசியலமைப்பு சட்ட விதி 229 | |
அரசியலமைப்பு சட்ட விதி 228 | |
அரசியலமைப்பு சட்ட விதி 227 |
Question 101 Explanation:
(குறிப்பு - உயர் நீதிமன்றங்களின் அதிகார வரம்பை ஒன்றியத்தின் ஆட்சி நில வகைகளுக்கும் அதிகப்படுத்தல் தொடர்பான இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 230 ஆகும். இந்த விதியின் படி தமிழ்நாடு மாநிலத்திற்கும், பாண்டிச்சேரி ஒன்றியது ஆட்சி நிலை வரைக்கும் பொதுவான உயர் நீதிமன்றம் சென்னையில் அமைந்துள்ளது)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 101 questions to complete.