Online Test
மராத்தியர்கள் – விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம் – Revision Test in Tamil
மராத்தியர்கள் – விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம் - Revision Test in Tamil
Congratulations - you have completed மராத்தியர்கள் – விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம் - Revision Test in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
பொருத்துக
- முதல் ஆங்கிலேய மராத்திய போர் i) 1761
- மூன்றாம் பானிபட் போர் ii) 1775-1782
- சிவாஜி முடிசூட்டப்படுதல் iii) 1674
- புரந்தர் உடன்படிக்கை iv) 1665
ii i iii iv | |
i ii iv iii | |
ii i iii iv | |
ii iii iv i |
Question 2 |
தஞ்சாவூரில் நாயக்க மன்னரின் ஆட்சி முடிவடைந்த உடன் ______ தமிழகத்தில் மராத்திய ஆட்சியை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டார்.
சரபோஜி | |
வெங்கோஜி | |
சாம்பாஜி | |
சாஹு |
Question 2 Explanation:
(குறிப்பு: வெங்கோஜி - மராத்திய தளபதி.தஞ்சாவூரில் 1674 ல் தொடங்கிய மராத்தியரின் ஆட்சி 1832 ஆம் ஆண்டு இரண்டாம் சரபோஜி மன்னர் மரணம் வரை நீடித்தது.)
Question 3 |
தக்காண பகுதியில் சிதறிக் கிடந்த மராத்தியாரை ஒன்று திரட்டி_____ஐ தலைநகராக கொண்டு சிவாஜி வலுவான அரசை ஏற்படுத்தினார்.
பீஜப்பூர் | |
கோல்கொண்டா | |
ராய்கர் | |
ஜுன்னார் |
Question 4 |
தவறான தொடரை தேர்ந்தெடு
ஜீன்னார் என்ற இடத்திற்கு அருகே ஷிவ்னர் என்ற பகுதியில் சிவாஜி பிறந்தார். | |
பூனாவில் இருந்த ஷாஜி போன்ஸ்லேவின் ஜாகீர்தார் தாதாஜி கொண்டதேவின் பராமரிப்பில் சிவாஜி வளர்ந்தார். | |
துறவி துக்காராம் அவர்களை சிவாஜி தனது குருவாக ஏற்று மரியாதை செலுத்தினார். | |
1646ல் தோர்னா கோட்டையை பீஜப்பூர் சுல்தானிடமிருந்து சிவாஜி கைப்பற்றினார். |
Question 4 Explanation:
(குறிப்பு: துறவி ராம்தாஸ் அவர்களை சிவாஜி தனது குருவாக ஏற்று மரியாதை செலுத்தினார்.)
Question 5 |
இராணுவ மற்றும் நிர்வாக சேவைகளுக்கான அங்கீகாரமாக வழங்கப்பட்ட நிலம் ______ என அழைக்கப்பட்டது
கர்கானா | |
சத்னாமி | |
சராய்கள் | |
ஜாகீர் |
Question 5 Explanation:
(குறிப்பு: பூனாவில் இருந்த ஷாஜி போன்ஸ்லேவின் ஜாகீர்தார் தாதாஜி கொண்டதேவ் )
Question 6 |
முகலாயரின் முக்கிய துறைமுகமாக விளங்கிய சூரத் நகரை குறிவைத்து_______ ஆண்டு சிவாஜி தாக்குதல் நடத்தினார்.
1658 | |
1662 | |
1663 | |
1664 |
Question 6 Explanation:
(குறிப்பு: 1670 ஆம் ஆண்டு சிவாஜி மீண்டும் சூரத் துறைமுகத்தை தாக்கி கைப்பற்றினார்
Question 7 |
________ ஆண்டு ஏற்பட்ட புரந்தர் உடன்படிக்கையின்படி சிவாஜிக்கு அவர் கைப்பற்றிய கோட்டைகளை வைத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது.
1664 ஜூன் 11 | |
1665 ஜூன் 11 | |
1664 ஜூலை 11 | |
1665 ஜூலை 11 |
Question 7 Explanation:
(குறிப்பு: புரந்தர் உடன்படிக்கையின்படி சிவாஜி மன்சப்தாராக செயல்பட்டு பீஜப்பூரைக் கைப்பற்ற முகலாயருக்கு உதவ ஒப்புக் கொண்டார்.)
Question 8 |
______ ஆண்டு முதல் சிவாஜி போர்க்கொள்கையை கடைபிடிக்கலானார்.
1658 | |
1664 | |
1665 | |
1666 |
Question 8 Explanation:
(குறிப்பு: இந்தக் கொள்கையினால் மராத்திய வீரர்கள் புதிய வெற்றிகளைப் பெற்றனர்.ராஜா ஜஸ்வந்த் சிங் சிவாஜியுடன் நட்பு பாராட்டினார்.)
Question 9 |
1672 ஆம் ஆண்டு _______ என்னும் இடத்திலிருந்து சௌத் எனப்படும் நான்கில் ஒரு பங்கு வருமானத்தை வருடாந்திரக் கப்பமாக மராத்தியர் பெற்றனர்.
பீஜப்பூர் | |
பூனா | |
சூரத் | |
குஜராத் |
Question 10 |
______ ஆண்டு சிவாஜி ராய்கர் கோட்டையில் வேத முறைப்படி அரியணை ஏறினார்.
1664 ஜூன் 11 | |
1664 ஜூன் 6 | |
1674 ஜூன் 6 | |
1674 ஜூன் 11 |
Question 10 Explanation:
(குறிப்பு: அரியணை ஏறியபின் சிவாஜி ‘சத்ரபதி’ என்ற பட்டத்தை சூட்டினார்.)
Question 11 |
சிவாஜியின் அஷ்டபிரதான் சபையில் அரசரின் அன்றாட கடிதப் போக்குவரத்தை கவனித்துக் கொண்டதோடு வரைவுகளைத் திருத்தும் அதிகாரமும் கொண்டவர் _____
சுமந்த் | |
பண்டிட் ராவ் | |
சுருநாவிஸ் | |
தனத்தியாக்சா |
Question 11 Explanation:
(குறிப்பு: இப்பணி செய்பவர் சச்சிவ் அல்லது சுருநாவிஸ் அல்லது உள்துறை செயலர் என அழைக்கப்படுகிறார்.)
Question 12 |
சிவாஜியின் சபையில் அரசின் அனைத்து பொதுக்கணக்குகளையும் ஆராய்ந்து ஒப்புதல் கையொப்பமிடுவது யாருடைய வேலை?
பேஷ்வா | |
அமத்யா | |
வாக்கியநவிஸ் | |
தனத்தியாக்சா |
Question 12 Explanation:
(குறிப்பு: இப்பணி செய்பவர் அமத்யா அல்லது நிதி அமைச்சர் என அழைக்கப்படுகிறார்.)
Question 13 |
நிர்வாக வசதிக்காக சிவாஜி தனது அரசை எத்தனை மாகாணங்களாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு அரசப்பிரதிநிதியை அமர்த்தினார்.
2 | |
3 | |
4 | |
5 |
Question 13 Explanation:
(குறிப்பு: மாகாணங்கள் பிராந்த் எனப்படும் பல பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டன.)
Question 14 |
- கூற்று 1: மராத்தியர் கைப்பற்றிய மாவட்டத்தின் வருவாயில் மூன்றில் ஒரு பங்கு ‘செளத்’ என வசூலிக்கப்பட்டது.
- கூற்று 2: சர்தேஷ்முக் என்ற தகுதியின் காரணமாக சிவாஜி தனது கூடுதல் வருவாயில் 10% ஐ சர்தேஷ்முகி என்னும் வரிமூலம் பெற்றார்.
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 தவறு |
Question 14 Explanation:
(குறிப்பு: மராத்தியர் கைப்பற்றிய மாவட்டத்தின் வருவாயில் நான்கில் ஒரு பங்கு ‘செளத்’ என வசூலிக்கப்பட்டது. தேசாய்கள், தேஷ்முக்குகளின் பிரதம தலைமையாக சர்தேஷ்முக் திகழ்ந்தார்.)
Question 15 |
சிவாஜியின் இராணுவ அமைப்பு முறையில் தவறான கூற்று எது?
ரெஜிமெண்டுகள், பிரிகேடுகள் என குதிரைப்படை பிரிக்கப்பட்டது. | |
ஒன்பது வீரர்களைக் கொண்ட சிறிய படைப்பிரிவுக்கு நாயக் தலைமை வகித்தார். | |
பத்து ஜமால்தார்களின் தலைவராக ஒரு ஹஜாரி திகழ்ந்தார் | |
ஒரு ஜமால்தாரின் கீழ் ஐந்து ஹவில்தார் செயல்பட்டனர். |
Question 15 Explanation:
(குறிப்பு: ரெஜிமெண்டுகள், பிரிகேடுகள் என காலாட்படை பிரிக்கப்பட்டது.)
Question 16 |
சிவாஜியின் படையில் அரசு மூலமாகக் குதிரைகள் வழங்கப்பட்ட படை வீரர்கள் _____ என்றும், தாங்களாகவே குதிரைகளை ஏற்பாடு செய்து கூலிக்கு வேலை செய்யும் வீரர்கள் _______ என்றும் அழைக்கப்பட்டனர்.
பர்கிர்கள், ஹஜாரி | |
பர்கிர்கள், ஷைலேதார்கள் | |
ஷைலேதார்கள், பர்கிர்கள் | |
ஹஜாரி, பர்கிர்கள் |
Question 16 Explanation:
(குறிப்பு: இது தவிர நீர் கொண்டு செல்லும் குதிரைப்படைவீரர்களும், குதிரைகளுக்கு லாடம் கட்டுபவர்களும் இருந்தனர்.)
Question 17 |
மராத்தியர்கள் கால நீதித்துறை குறித்த தவறான கூற்றை தேர்ந்தெடு
கிராமங்களில் பஞ்சாயத்து நடைமுறை இருந்தது | |
சிவில் வழக்குகளை பட்டேல்கள் விசாரித்தனர் | |
சிவில், கிரிமினல் வழக்குகளுக்கான மேல்முறையீடுகளைத் தலைமை நீதிபதி நியாயதேஷ், ஸ்மிருதிகளின் ஆலோசனையோடு விசாரித்தார். | |
ஹாஜிர்மஜ்லிம் இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாக இருந்தது |
Question 17 Explanation:
(குறிப்பு: கிரிமினல் வழக்குகளை பட்டேல்கள் விசாரித்தனர்.)
Question 18 |
மராத்தியர் ஆட்சியில்_______ என்பவர் ஆற்றல் மிகுந்த முதல் பேஷ்வா ஆவார்.
பாலாஜி விஸ்வநாத் | |
முதலாம் பாஜிராவ் | |
பாலாஜி பாஜிராவ் | |
சாஹூ |
Question 18 Explanation:
குறிப்பு: பேஷ்வா என்பவர் சிவாஜியின் அஷ்டபிரதான் அமைப்பில் முதன்மையானவர்.)
Question 19 |
பேஷ்வா என்ற _______சொல்லின் பொருள் ‘முதன்மையான அல்லது பிரதம அமைச்சர் என்பதாகும்.
இலத்தீன் | |
கிரேக்கம் | |
பாரசீகம் | |
தேவநாகரி |
Question 19 Explanation:
(குறிப்பு: 18 ஆம் நூற்றாண்டில் பேஷ்வாக்கள் அதிக அதிகாரங்களைப் பெற்று ஆட்சிபுரிந்தனர்.)
Question 20 |
எந்த ஆண்டில் எட்டப்பட்ட வார்னா ஒப்பந்தத்தின்படி சாஹூவின் இறையாண்மையை ஏற்குமாறு கோல்ஹாபுரின் சாம்பாஜிக்கு நெருக்குதல் அளிக்கப்பட்டது.
1713 | |
1723 | |
1731 | |
1738 |
Question 20 Explanation:
குறிப்பு: முதலாம் பாஜிராவ் (1720 - 1740) காலத்தில் வார்ணா ஒப்பந்தம் நடைபெற்றது.)
Question 21 |
தானே, சால்செட், பேசின் ஆகிய பகுதிகள் ______ இல் போர்த்துக்கீசியரிடமிருந்து கைப்பற்றப்பட்டு அவர்கள் கொங்கணக் கடற்கரைப் பிரதேசத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
1713 | |
1723 | |
1731 | |
1738 |
Question 21 Explanation:
குறிப்பு: இதே நேரத்தில் மராத்தியருடன் ஆங்கிலேயர் நட்புறவை ஏற்படுத்தியதன் மூலம் தக்காணப்பகுதியில் தடையில்லா வணிகம் செய்யும் உரிமையைப் பெற்றார்கள்)
Question 22 |
கீழ்க்காண்பவர்களுள் நானாசாகிப் என்று அழைக்கப்பட்டு நல்ல நிர்வாகியாகவும் நிதி தொடர்பான விஷயங்களில் வல்லுநராகவும் விளங்கியவர் யார்?
பாலாஜி விஸ்வநாத் | |
பாலாஜி பாஜிராவ் | |
முதலாம் பாஜிராவ் | |
சாஹு |
Question 22 Explanation:
(குறிப்பு: முதலாம் பாஜி ராவ் மறைவுக்குப் பிறகு பாலாஜி பாஜிராவ் பேஷ்வாவாக பதவியேற்றார்)
Question 23 |
தவறான இணையைத் தேர்ந்தெடு
உத்கிர் போர் – 1670 | |
பிளாசி போர் – 1757 | |
மூன்றாவது பானிபட் போர் – 1761 | |
சிவாஜியின் இறப்பு – 1680 |
Question 23 Explanation:
குறிப்பு: 1748 ல் நிஜாம் ஆசப்ஜாவின் மறைவுக்குப் பிறகு வாரிசு போட்டி வெடித்தது. நிஜாமின் மூத்த மகனுக்கு ஆதரவு அளித்த பேஷ்வா 1760ல் நடந்த உத்கிர் போரில் சதாசிவ ராவ் தலைமையில் இராணுவத்தை அனுப்பி போரில் வெற்றி பெற்றார்)
Question 24 |
பேஷ்வாக்களின் கீழ் மராத்திய நிர்வாகம் குறித்த செய்திகளில் தவறான தொடரைத் தேர்ந்தெடு
பெரிய மாகாணங்கள் 'சர்-சுபாஷ்தார்கள்' என்றழைக்கப்பட்ட மாகாண ஆளுநர்களின் கீழ் இருந்தன. | |
மாகாணங்களின் கீழ் இருந்த மண்டலங்கள் சுபாக்கள் மற்றும் பிராந்துகள் என்று அழைக்கப்பட்டன | |
தேஷ்முக், தேஷ்பாண்டே ஆகியோர் மாவட்ட அளவில் கணக்குகளை கவனித்தனர். | |
மம்லத்தார், காமா விஸ்தார் ஆகியோர் கிராமங்களில் பேஷ்வாக்களின் பிரதிநிதிகளாக விளங்கினர். |
Question 24 Explanation:
(குறிப்பு: மம்லத்தார், காமா விஸ்தார் ஆகியோர் மாவட்டங்களில் பேஷ்வாக்களின் பிரதிநிதிகளாக விளங்கினர்.)
Question 25 |
பேஷ்வாக்களின் கீழ் இயங்கிய மராத்திய நிர்வாகத்தில் நகரங்களிலும் மாநகரங்களிலும் தலைமை அதிகாரி ______ என்று அழைக்கப்பட்டார்.
தேஷ்முக் | |
சுபாஷ்தார்கள் | |
கொத்வால் | |
தேஷ்பாண்டே |
Question 25 Explanation:
(குறிப்பு: நகரக் காவல்துறையின் தலைவராகவும் நீதிபதியாகவும் கொத்வால் செயல்பட்டார்.)
Question 26 |
கொங்கணம், கண்டேரி, விஜயதுர்க் ஆகிய இடங்களில் கடற்படைத் தளங்களைக் கட்டியவர் யார்?
பாலாஜி விஸ்வநாத் | |
பாலாஜி பாஜிராவ் | |
முதலாம் பாஜிராவ் | |
சாஹு |
Question 26 Explanation:
குறிப்பு: மராத்தியத் துறைமுகங்களைப் பாதுகாக்கும் பொருட்டு மராத்திய கடற்படை உருவாக்கப்பட்டது
Question 27 |
_______ தனது ஆட்சிக் காலத்தில் நயங்காரா அமைப்பை உருவாக்கினார்
ராஜா தேசிங்கு | |
கிருஷ்ண தேவராயர் | |
வெங்கோஜி | |
சந்தாஜி |
Question 27 Explanation:
குறிப்பு: இதன்படி தமிழகம் செஞ்சி, தஞ்சாவூர், மதுரை என மூன்று மிகப்பெரிய நயங்காராக்களாக பிரிக்கப்பட்டது.)
Question 28 |
மராத்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கான முதலாவது அச்சகத்தை நிறுவியவர் யார்?
ராஜா தேசிங்கு | |
கிருஷ்ண தேவராயர் | |
வெங்கோஜி | |
இரண்டாம் சரபோஜி |
Question 28 Explanation:
குறிப்பு: ஒரு அச்சகத்தை நிறுவுவது, சரஸ்வதி மஹால் நூலகத்தை மேம்படுத்துவது ஆகியவை இரண்டாம் சரபோஜியின் திட்டங்களாக இருந்தன
Question 29 |
சரபோஜி, சமயப்பரப்புக் குழு மற்றும் காலனி அரசுக்கு முன்னோடியாக ______ ஆண்டிலேயே தஞ்சாவூரில் கிறித்தவர்கள் அல்லாத உள்ளூர் குழந்தைகளின் கல்விக்காக முதலாவது நவீனப் பொதுப் பள்ளிகளை நிறுவினார்.
1707 | |
1803 | |
1820 | |
1841 |
Question 30 |
புரந்தர் உடன்படிக்கை, சிவாஜிக்கும் ______க்கும் இடையே கையெழுத்தானது.
அஃப்சல்கான் | |
செயிஷ்டகான் | |
ஜெய்சிங் | |
ஒளரங்கசீப் |
Question 31 |
மராத்திய சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தை மேம்படுத்திய பேஷ்வா _______ஆவார்.
முதலாம் பாஜி ராவ் | |
பாலாஜி விஷ்வநாத் | |
பாலாஜி பாஜி ராவ் | |
இரண்டாம் பாஜி ராவ் |
Question 31 Explanation:
குறிப்பு: பாலாஜி விஷ்வநாத்துக்குப் பிறகு அவரது மகன் முதலாம் பாஜிராவ் 1720ல் மன்னர் சாஹூவால் பேஷ்வாவாக நியமிக்கப்பட்டார்.)
Question 32 |
______ உடன்படிக்கை முதலாம் ஆங்கிலோ- மராத்தியப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.
மதராஸ் உடன்படிக்கை | |
பூனா உடன்படிக்கை | |
சால்பை உடன்படிக்கை | |
பேசின் உடன்படிக்கை |
Question 32 Explanation:
(குறிப்பு: முதலாம் ஆங்கிலேய- மராத்தியப் போர் (1775 - 1782))
Question 33 |
இரண்டாவது ஆங்கிலோ மராத்தியப் போரின் போது ஆங்கிலேய கவர்னர் - ஜெனரலாக இருந்தவகாரன்வாலிஸ் பிரபுர்
காரன்வாலிஸ் பிரபு | |
வெல்லெஸ்லி பிரபு | |
ஹேஸ்டிங்ஸ் பிரபு | |
டல்ஹௌசி பிரபு |
Question 33 Explanation:
(குறிப்பு: இரண்டாம் ஆங்கிலேய மராத்திய போர் (1803-1806))
Question 34 |
மனிதர்களுக்காகவும் மற்றும் விலங்குகளுக்காகவும் மூலிகை மருந்துகளைக் தயாரிக்க _______ இரண்டாம் சரபோஜியால் நிறுவப்பட்டது
சரஸ்வதி மஹால் | |
முக்தாம்பாள் சத்திரம் | |
நவவித்யா | |
தன்வந்திரி மஹால் |
Question 34 Explanation:
குறிப்பு: நோயாளிகளின் ஆவணங்களைப் பராமரிக்கும் முறையும் அறிமுகம் செய்யப்பட்டது. 18 தொகுதிகள் அடங்கிய ஆராய்ச்சி புத்தகத்தையும் சரபோஜி மன்னர் உருவாக்கினார்)
Question 35 |
கீழ்க்கண்டவற்றுள் இரண்டாம் சரபோஜி எழுதாத புத்தகம் என்ன?
குமாரசம்பவ சம்பு | |
தேவேந்திர குறவஞ்சி | |
முத்ரராஷ்ஸ்சாயா | |
குமார சம்பவம் |
Question 36 |
சிவாஜியின் ஆட்சிக்குப் பிறகு வந்தவர்களைக் கால வரிசைப்படி எழுதவும் .
சாம்பாஜி, சாஹு, ராஜாராம், இரண்டாம் சாம்பாஜி | |
சாம்பாஜி, ராஜாராம், சாஹு, இரண்டாம் சாம்பாஜி | |
ராஜாராம், சாம்பாஜி, சாஹு, இரண்டாம் சாம்பாஜி | |
சாம்பாஜி, இரண்டாம் சாம்பாஜி, ராஜாராம், சாஹு |
Question 37 |
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருத்தப்படவில்லை.
சிவாஜி - மலை எலி | |
முதலாம் பாஜி ராவ் – உத்கிர் போர் | |
தைமூர் ஷா - லாகூரின் வைஸ்ராய் | |
தேசிங்கு – செஞ்சி |
Question 38 |
- கூற்று:மூன்றாம் பானிபட் போர் ஆங்கிலேயரின் அதிகார எழுச்சிக்கு வழிவகுத்தது.
- காரணம்: இத்தோல்வி மராத்தியருக்கும் முகலாயருக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.
கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும். | |
கூற்று சரி, காரணம் தவறு | |
கூற்று, காரணம் தவறு | |
கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல. |
Question 39 |
- கூற்று 1: வடகிழக்கு எல்லைப்புறப் பகுதியின் பாதுகாப்பை வீழ்ந்துகொண்டிருந்த முகலாயப் பேரரசு நழுவவிட்டது.
- கூற்று 2: இது நாதிர்ஷாவின் படையெடுப்பிற்கு வழிவகுத்தது.
கூற்று 1 சரி | |
கூற்று 2 சரி | |
கூற்று 1, 2 சரி | |
கூற்று 1, 2 தவறு |
Question 40 |
சரியான கூற்றை தேர்ந்தெடு
ஆங்கிலேயர்கள் மராத்தியருடன் நட்புறவு கொண்டு தக்காணத்தில் தடையில்லா வணிகம் செய்யும் உரிமம் பெற்றனர். | |
1749 இல் ஆற்காட்டு நவாப் தோஸ்து அலியை சாஹூ தோற்கடித்துக் கொன்றார். | |
பேஷ்வாக்களின் கீழ் நீதிமுறை முழுமை பெற்றிருந்தது | |
தஞ்சை மராத்திய அரசின் போன்ஸ்லே வம்சத்து கடைசி அரசர் வெங்கோஜி ஆவார். |
Question 41 |
சிவாஜியை அடக்க பீஜப்பூர் சுல்தான், அப்சல்கான் என்பவரை சிவாஜியை உயிருடனோ அல்லது சாகடித்தோ கொண்டு வரும்படி எந்த ஆண்டு அனுப்பினார்?
1659 | |
1660 | |
1661 | |
1662 |
Question 41 Explanation:
(குறிப்பு: சிவாஜி புரந்தர், ரெய்கார், தேவார்னா மற்றும் கல்யாண் ஆகிய கோட்டைகளை பிஜப்பூர் சுல்தானிடமிருந்து கி.பி 1646ல் கைப்பற்றினார்.)
Question 42 |
முகலாய மன்னர் ஒளரங்கசீப், தனது தக்காண ஆளுநர் செயிஷ்டகானை எந்த ஆண்டு சிவாஜியை அடக்க அனுப்பினார்.
1659 | |
1660 | |
1661 | |
1662 |
Question 42 Explanation:
(குறிப்பு: செயிஸ்டகான், பூனா என்ற இடத்தில் முகாமிட்டிருந்தார்.)
Question 43 |
அஷ்டப்பிரதான் குறித்த செய்திகளில் தவறான இணையைத் தேர்ந்தெடு.
சச்சிவா - உள்துறை அமைச்சர் | |
சுமந்த் - வெளியுறவு அமைச்சர் | |
அமத்தியா - நீதி துறை | |
மந்திரி - காலமுறை அமைச்சர் |
Question 44 |
கீழ்க்கண்டவர்களுள் ‘முற்போக்கு கொள்கையை’ கடைப்பிடித்தவர் யார்?
பாலாஜி விஸ்வநாத் | |
பாலாஜி பாஜிராவ் | |
முதலாம் பாஜிராவ் | |
சாஹு |
Question 44 Explanation:
(குறிப்பு: பாஜி ராவ் பீஷ்வாக்களில் தலைசிறந்தவராக போற்றப்படுகிறார். இவர் மராத்திய பேரரசை வடக்கு பகுதியில் விரிவுபடுத்த விரும்பினார்.)
Question 45 |
ஹரிஹரர் மற்றும் புக்கர் விஜயநகரப் பேரரசை ஏற்படுத்தும் முன்பாக ______ இடம் பணி செய்தனர்.
டெல்லி சுல்தான் | |
ஹொய்சாளர் | |
பீஜப்பூர் சுல்தான் | |
யாதவர் |
Question 45 Explanation:
குறிப்பு: ஹரிஹரர் மற்றும் புக்கர் 1336 ல் புதிய அரசுக்கான அடித்தளத்தை அமைத்தனர்)
Question 46 |
கீழ்க்கண்டவற்றை காலவரிசைப்படுத்துக
சங்கம வம்சம், ஆரவீடு வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம் | |
சங்கம வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம், ஆரவீடு வம்சம் | |
சாளுவ வம்சம், சங்கம வம்சம், துளுவ வம்சம், ஆரவீடு வம்சம் | |
சங்கம வம்சம், துளுவ வம்சம், சாளுவ வம்சம், ஆரவீடு வம்சம் |
Question 47 |
கிருஷ்ணதேவராயர் தன் வெற்றிகளின் நினைவாக வெற்றித் தூணை எழுப்பிய இடம்
பெல்காம் | |
கட்டாக் | |
சிம்மாச்சலம் | |
இராஜமகேந்திரவரம் |
Question 47 Explanation:
குறிப்பு: கிருஷ்ண தேவராயரின் ஆட்சியின் தொடக்கத்தில் மைசூருக்கு அருகே இருந்த கலக மனப்பான்மை கொண்ட உம்மத்தூர் குறுநில மன்னனை தோற்கடித்து பணியசெய்தார்.)
Question 48 |
முகம்மது கவான் ஒரு மதரசாவை நிறுவி அதில் 3000 கையெழுத்து நூல்களை வைத்திருந்த இடம்
பெரார் | |
பீஜப்பூர் | |
பீடார் | |
அகமதுநகர் |
Question 49 |
சரியான கூற்றினைத் தேர்ந்தெடு.
விஜயநகர அரசின் அரசர்கள் ஐந்து வம்சங்களாக சுமார் 300 ஆண்டுகள் ஆட்சி செய்தனர் | |
ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளில் ஒரிசாவின் கஜபதி மற்றும் விஜயநகர அரசுகளிடையே கடும் போர் நடைபெற்றது. | |
அப்துர் ரசாக் ஒரு பாரசீகத் தூதுவராகக் கொச்சியிலிருந்த சாமுத்திரியின் அவைக்கு வந்தார் | |
பாமினி அரசர்கள் அதிக அளவில் தங்க நாணயங்களை பல்வேறு வகையான தெய்வங்களின் உருவங்களுடன் வெளியிட்டனர். |
Question 50 |
பொருத்துக.
- அப்துர் ரசாக் i) ரஷ்யா
- நிகிடின் ii) சாளுவ நாயக்கர்
- டோமிங்கோ பயஸ் மற்றும் நூனிஸ் iii) பாரசீகம்
- செல்லப்பா iv) போர்த்துகல்
i ii iii iv | |
iv iii ii i | |
ii i iv iii | |
iii i iv ii |
Question 51 |
- கூற்று 1: முதலாம் முகமது ஏற்படுத்திய சிறந்த அரசு அவருக்கு பின் வந்த சுல்தான்களாலும் மராத்தியர்களாலும் பின்பற்றப்பட்டது.
- கூற்று 2: கவான் போர்ச்சுகீசிய வேதியியல் நிபுணர்களைக் கொண்டு வெடிமருந்தைத் தயார் செய்வது, பயன்படுத்துவது கற்றுத்தரச் செய்தார்.
கூற்று 1, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 தவறு | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி |
Question 51 Explanation:
(குறிப்பு: கவான் பாரசீக வேதியியல் நிபுணர்களைக் கொண்டு வெடிமருந்தைத் தயார் செய்வது, பயன்படுத்துவது கற்றுத்தரச் செய்தார்.
Question 52 |
தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட இலக்கியமான ராயவாசகமு______ன் கீழ் இருந்த நாயக்க முறை பற்றிய ஆர்வமூட்டக்கூடிய தகவல்களைத் தருகின்றது.
ஹரிஹரர் | |
கிருஷ்ண தேவராயர் | |
இரண்டாம் தேவராயர் | |
வீர நரசிம்மர் |
Question 52 Explanation:
(குறிப்பு: விஜயநகர அரசவையின் ஆதரவில் எழுதப்பட்ட மனுசரிதம், சாளுவவையுதம் போன்ற இலக்கியங்கள் விஜயநகர அரசின் வம்சாவளி, அரசியல் மற்றும் சமூகம் பற்றிய தகவல்களைத் தருகின்றன.)
Question 53 |
தவறான இணையைத் தேர்ந்தெடு
அப்துர் ரசாக் - பாரசீகப் பயணி | |
நிகிடின் -ரஷியப் பயணி | |
டோமிங்கோ பயஸ் – மொராக்கோ நாட்டு வணிகர் | |
நூனிஸ் - இத்தாலி நாடு |
Question 54 |
விஜயநகர அரசர்கள் _______ என்று குறிப்பிடப்பட்ட தங்க நாணயங்களை அதிக எண்ணிக்கையில் வெளியிட்டனர்.
நாணயம் | |
வராகன் | |
தங்கா | |
ஹென்னா |
Question 55 |
- கூற்று 1: அலாவுதீன் ஹசன் பாமன்ஷா என்பவர் சுமூகமான நிர்வாகத்திற்காக தில்லி சுல்தானியர் முறையை பின்பற்றினார்.
- கூற்று 2: தனது ஆட்சிப் பகுதியை நான்கு பிரிவுகளாகப் பிரித்தார். அவை தராப்ஸ் எனப்பட்டன.
கூற்று 1, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 தவறு | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி |
Question 55 Explanation:
(குறிப்பு: குல்பர்கா, தெளலதாபாத், பீடார், பெரார் ஆகியவை அந்த நான்கு மாகாணங்களாகும்.)
Question 56 |
தன்னுடைய வெற்றிகளை நினைவுக் கூறும் வகையில் நாணயங்களில் தன்னுடைய பெயரை இரண்டாம் அலெக்சாண்டர் என்று பொறித்துக் கொண்டவர் யார்?
அலாவுதீன் ஹசன் பாமன்ஷா | |
முதலாம் முகமது | |
முகமது கவான் | |
கிருஷ்ண தேவராயர் |
Question 56 Explanation:
(குறிப்பு: 11 ஆண்டுகள் பாமன்ஷா(1347- 1358) தன் அரசியல் எதிரிகளை அடக்கி சிறப்பாக ஆட்சி செய்தார்.)
Question 57 |
_____ என்பவர் சமஸ்கிருத மொழியில் மதுரா விஜயம் எனும் நூலை எழுதினார்.
குமார கம்பண்ணா | |
கங்காதேவி | |
கிருஷ்ணதேவராயர் | |
இரண்டாம் தேவராயர் |
Question 57 Explanation:
(குறிப்பு: மதுரை சுல்தானை 1370 இல் கொன்றதன் மூலம் மதுரை சுல்தானிய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை குமார கம்பண்ணாவை சாரும் என்று இந்நூல் குறிப்பிடுகின்றது. குமார கம்பண்ணாவின் மனைவி கங்காதேவி ஆவார்.)
Question 58 |
யாருடைய ஆட்சிக் காலத்தில் பாரசீக நாட்டின் தூதுவர் அப்துர் ரஸாக் என்பவர் கொச்சி சாமுத்திரி அரசவைக்கும் விஜயநகரத்திற்கும் வருகை தந்தார்?
குமார கம்பண்ணா | |
வீர நரசிம்மர் | |
கிருஷ்ணதேவராயர் | |
இரண்டாம் தேவராயர் |
Question 58 Explanation:
குறிப்பு: அப்துர் ரசாக், இரண்டாம் தேவராயர் மிகப் பெரும் பகுதியைக் கட்டுப்படுத்தினார் என்றும், இலங்கை அரசனிடமிருந்து கப்பம் பெற்றார் என்றும் குறிப்பிடுகின்றார்.)
Question 59 |
யாருடைய ஆட்சிக் காலத்தில் பாரசீக நாட்டின் தூதுவர் அப்துர் ரஸாக் என்பவர் கொச்சி சாமுத்திரி அரசவைக்கும் விஜயநகரத்திற்கும் வருகை தந்தார்?
குமார கம்பண்ணா | |
வீர நரசிம்மர் | |
கிருஷ்ணதேவராயர் | |
இரண்டாம் தேவராயர் |
Question 59 Explanation:
குறிப்பு: அப்துர் ரசாக், இரண்டாம் தேவராயர் மிகப் பெரும் பகுதியைக் கட்டுப்படுத்தினார் என்றும், இலங்கை அரசனிடமிருந்து கப்பம் பெற்றார் என்றும் குறிப்பிடுகின்றார்.)
Question 60 |
நரச நாயக்கின் மூத்த மகன் வீர நரசிம்மர் துளுவ வம்சத்தின் ஆட்சியை தொடங்கி வைத்த ஆண்டு
1491 | |
1498 | |
1505 | |
1509 |
Question 60 Explanation:
(குறிப்பு: இவரை தொடர்ந்து இவருடைய தம்பி கிருஷ்ண தேவராயர் அரியணை எறினார்.)
Question 61 |
நாயக் அல்லது நாயங்காரா முறையை மறுசீரமைப்பு செய்து அதற்கு சட்ட அங்கீகாரத்தை கொடுத்த அரசர் யார்?
அலாவுதீன் ஹசன் பாமன்ஷா | |
முதலாம் முகமது | |
முகமது கவான் | |
கிருஷ்ண தேவராயர் |
Question 61 Explanation:
(குறிப்பு: கிருஷ்ண தேவராயரின் ஆட்சி காலத்தில் வருகை புரிந்த சமகால வெளிநாட்டு பயணிகளான நூனிஸ், பயஸ் போன்றோர் அவருடைய ஆளுமை விஜயநகரத்தின் உயர்நிலை, செல்வ செழிப்பு குறித்தும் கூறியுள்ளனர்.),
Question 62 |
தமது தலைநகரை குல்பர்காவிலிருந்து பீடாருக்கு மாற்றிய பாமினி அரசர் யார்?
முதலாம் முகமது ஷா | |
இரண்டாம் முகமது ஷா | |
பெரோஸ் ஷா பாமினி | |
அகமது ஷா |
Question 62 Explanation:
(குறிப்பு: அகமது ஷா கொடுங்கோலனாகவும், இறக்கமற்றவனாகவும் இருந்தார். இவர் வாரங்கல் பகுதியை வென்றதால் தமது தலைநகரை மாற்றினார்.)
Question 63 |
தக்காண முஸ்லீம்களின் பொய்யான குற்றச்சாட்டை நம்பிய முகமது ஷாவால் கவான் கொல்லப்பட்ட ஆண்டு
1435 | |
1481 | |
1491 | |
1498 |
Question 64 |
ஹசன் கங்கு பாமினி என்பவர் ______ஆம் ஆண்டு பாமினி அரசைத் தோற்றுவித்தார்.
1345 | |
1346 | |
1347 | |
1348 |
Question 64 Explanation:
குறிப்பு: ஹசன் கங்கு பாமினி தேவகிரியை சேர்ந்த துருக்கிய அலுவலர் ஆவார்.வடகிழக்கில் மாகூர் முதல் தெற்கே தெலுங்கானா வரையில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றினார்.)
Question 65 |
மதராஸா என்ற கல்விக்கூடங்களையும், பல மசூதிகளையும் கட்டிய பாமினி அரசர்
முதலாம் முகமது ஷா | |
இரண்டாம் முகமது ஷா | |
பெரோஸ் ஷா பாமினி | |
அகமது ஷா |
Question 65 Explanation:
(குறிப்பு: இரண்டாம் அகமதுஷா (1378 - 1397) அமைதியை விரும்பினார். அண்டை நாடுகளுடன் நட்பை வளர்த்தார்.)
Question 66 |
கிருஷ்ண தேவராயர் சிவசமுத்திரம், ரெய்ச்சூர் ஆகிய பகுதிகளை வென்ற ஆண்டுகள் முறையே
1512, 1514 | |
1510, 1512 | |
1501, 1521 | |
1501,1512 |
Question 66 Explanation:
குறிப்பு: கிருஷ்ண தேவராயர், வடக்கே கிருஷ்ணா நதி முதல் தெற்கே காவிரி வரையிலும், மேற்கே அரபிக் கடல் முதல் கிழக்கே வங்கக்கடல் வரையிலுமாக பரந்த பேரரசை நிறுவினார்.)
Question 67 |
சங்கம, சாளுவ, துளுவ, அரவீடு வம்சங்கள் விஜயநகரை எந்தக் காலக்கட்டத்தில் ஆட்சி புரிந்தன?
1335-1672 | |
1335-1762 | |
1336-1672 | |
1336-1762 |
Question 68 |
- கூற்று: கிருஷ்ணதேவராயர் ஆந்திர போஜர் என்று அழைக்கப்பட்டார்.
- காரணம்: கிருஷ்ணதேவராயர் வைணவராக இருந்தபோதிலும் அனைத்து சமயங்களையும் மதித்து நடந்தார்.கலை, இலக்கியப் புரவலராகவும் அவர் திகழ்ந்தார்.
கூற்று சரி, காரணம் தவறு | |
கூற்று தவறு, காரணம் சரி | |
கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் சரியான விளக்கமல்ல | |
கூற்று, காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம் |
Question 69 |
அஷ்டதிக்கஜங்களில் 'ஆந்திரகவிதாபிதாமகர்’ என்று புகழப்பட்டவர் யார்?
அல்லசாணி பெத்தண்ணா | |
நந்தி திம்மண்ணா | |
தெனாலி இராமன் | |
பட்டு மூர்த்தி |
Question 69 Explanation:
குறிப்பு: அல்லசாணி பெத்தண்ணாவின் முக்கிய படைப்புகள் மனுசரிதம் மற்றும் ஹரிகதாசாரம்.)
Question 70 |
பீஜப்பூர், அகமதுநகர், கோல் கொண்டா, பீடார் ஆகிய அரசுகளின் கூட்டுப்படைகள் 1565 ல் தலைக்கோட்டை என்னும் இடத்தில் யாரைத் தாக்கின?
கிருஷ்ண தேவராயர் | |
அச்சுததேவர் | |
வெங்கடர் | |
ராமராயர் |
Question 70 Explanation:
(குறிப்பு:தலைக்கோட்டை போர் ராக்ஷஸதாங்கடி என்றும் அழைக்கப்படுகிறது.)
Question 71 |
தவறான தொடரைத் தேர்ந்தெடு
கிருஷ்ண தேவராயரின் அவைக்கு பிரான்சிஸ் கோ டி அல்மெய்டா தனது தூதுவர்களை அனுப்பி வைத்தார் | |
திவானி என்ற இடத்தில் நடந்த போரில் கிருஷ்ண தேவராயர் முஸ்லீம் படைகளை இறுதியாக முறியடித்தார். | |
விஜய நகர பேரரசுக்கு சாவுமணி அடித்த போர் தலைக்கோட்டைப் போர். | |
விஜய நகர அரசின் கடைசி அரசர் இரண்டாம் ஸ்ரீரங்கர் |
Question 72 |
விஜயநகர பேரரசு ஆட்சி முறையில் விளைச்சலில் எத்தனை பங்கு நில வரியாக வசூலிக்கப்பட்டது?
1/3 | |
1/4 | |
1/5 | |
1/6 |
Question 73 |
விஜயநகர பேரரசு ஆட்சியில் இராணுவத்தின் உயர் அதிகாரிகளான பாளையக்காரர்கள் ஆற்றும் பணிக்கு ஈடாக வழங்கப்பட்ட நிலங்கள் ____ என்று அழைக்கப்பட்டன.
பிரம்மதானம் | |
அமரம் | |
வாரம் | |
திவானி |
Question 73 Explanation:
(குறிப்பு: படை வீரர்களுக்கு ஊதியம் பொதுவாக பணமாகவே வழங்கப்பட்டது.)
Question 74 |
விஜயநகர பேரரசு காலத்திய செல்வந்தர்களின் அழகான வீடுகள் அவற்றில் பணிபுரிந்த ஏராளமான பணியாளர்கள் பற்றிய விவரங்களை ______ குறிப்பிட்டுள்ளார்.
பயஸ் | |
நிக்கோலோ டி கோண்டி | |
போர்போசா | |
நூணிஸ் |
Question 75 |
விஜயநகர பேரரசு காலத்தில் ஏராளமான பெண்கள் அரண்மனைகளில் பணிப்பெண்களாகவும் நாட்டிய மகளிராகவும் பல்லக்கு சுமப்பவர்களாகவும் இருந்தனர் என ______ கூறுகிறார்.
பயஸ் | |
நிக்கோலோ டி கோண்டி | |
போர்போசா | |
நூணிஸ் |
Question 76 |
புரந்தர் உடன்படிக்கையின் படி சிவாஜி தம்மிடமிருந்த 35 கோட்டைகளில் எத்தனை கோட்டைகளை முகலாயரிடம் ஒப்படைத்தார்.
18 | |
20 | |
23 | |
28 |
Question 76 Explanation:
(குறிப்பு : சிவாஜி, ஜெய்சிங் இடையே புரந்தர் உடன்படிக்கை ஏற்பட்டது)
Question 77 |
சிவாஜி ஆட்சிக் காலத்தின் இறுதியில் _____கோட்டைகளை அவர் பெற்றிருந்தார்.
200 | |
220 | |
240 | |
260 |
Question 77 Explanation:
(குறிப்பு: ஒவ்வொரு கோட்டையும் சம தகுதி வாய்ந்த மூன்று அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் விடப்பட்டன.)
Question 78 |
தவறான இணையைத் தேர்ந்தெடு.
பரோடா – கெய்க் வாட் | |
நாக்பூர் – போன்ஸ்லே | |
இந்தூர் – ஹோல்கர் | |
பூனா- சிந்தியா |
Question 78 Explanation:
குறிப்பு: பரோடாவில் கெய்க்வாட், நாக்பூரின் போன்ஸ்லே, இந்தூரில் ஹோல்கர், குவாலியரில் சிந்தியா, பூனாவில் பேஷ்வா என மராட்டியத் தலைவர்கள் அந்தந்த பகுதிகளில் செல்வாக்குடன் விளங்கினர்
Question 79 |
இபன் பதூதா ______ நாட்டுப் பயணி .
மொராக்கோ | |
வெனிஷிய | |
போர்த்துக்கல் | |
சீனா |
Question 80 |
விஜயநகர அரசின் அரச முத்திரை
பன்றி | |
புலி | |
மீன் | |
வில் |
Question 81 |
______கோல்கொண்டா கோட்டையைக் கட்டினார்.
இராஜா கிருஷ்ண தேவ் | |
சுல்தான் குலகுதுப்பான் | |
முகமது கவான் | |
பாமன்ஷா |
Question 82 |
எந்த இரு பகுதிகளிடையே இடைப்படு நாடாகப் புதுக்கோட்டை இருந்தது
சோழ மற்றும் விஜயநகர அரசுகள் | |
சோழ மற்றும் பாண்டிய அரசுகள் | |
சேர மற்றும் பாண்டிய அரசுகள் | |
சோழ மற்றும் சேர அரசுகள் |
Question 83 |
- கூற்று: பாமன்ஷா மிகச் சரியாகத் தாக்குதல் தொடுத்துவாரங்கல் மற்றும் ரெட்டி அரசுகளான ராஜமுந்திரி, கொண்ட வீடு ஆகியன மீது ஆதிக்கம் செலுத்தி ஆண்டுதோறும் திறை செலுத்த வைத்தார்.
- காரணம்: இது அடிக்கடி போர்கூற்று சரி, காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமன்று கள் ஏற்பட வழிவகுத்தது.
கூற்று சரி, காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமன்று | |
கூற்று சரி, காரணம் தவறு | |
கூற்றும் தவறு காரணமும் தவறு | |
கூற்று சரி, காரணத்திற்கு கூற்று சரியான விளக்கமாகும். |
Question 84 |
தவறான இணையைத் தேர்ந்தெடு.
விஜய நகர அரசின் தொடக்கம் - 1336 | |
பாமினி அரசின் தொடக்கம் – 1347 | |
துளுவ வம்சம் தொடக்கம் – 1508 | |
கிருஷ்ண தேவராயர் மன்னராக முடி சூடல் – 1509 |
Question 84 Explanation:
(குறிப்பு: துளுவ வம்சம் தொடக்கம் – 1503)
Question 85 |
தஞ்சாவூரில் மராத்தியர் ஆட்சி நீடித்திருந்த காலக்கட்டம் _______.
1674 - 1732 | |
1674 – 1823 | |
1647 – 1832 | |
1674 – 1832 |
Question 85 Explanation:
குறிப்பு: தஞ்சாவூரில் நாயக்க மன்னரின் ஆட்சி முடிவடைந்த உடன் மராத்திய தளபதி வெங்கோஜி தமிழிழகத்தில் மராத்திய ஆட்சியை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டார்.)
Question 86 |
- கூற்று 1: சிவாஜி 1656 முதல் தனது இராணுவ செயல்பாடுகளை மீண்டும் தொடங்கி சதாரா மாவட்டத்தில் ஜாவ்லி என்ற இடத்தைக் கைப்பற்றினார்.
- கூற்று 2: ஜாவ்லி என்ற இடத்திலிருந்து மேற்கே இரண்டு மைல் தொலைவில் பிரதாப்கர் என்ற புதிய கோட்டை கட்டப்பட்டது.
கூற்று 1, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 தவறு | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி |
Question 86 Explanation:
(குறிப்பு: சிவாஜி, ஜாவ்லியை கைப்பற்றிய பிறகு மராத்தியரின் மத்தியில் பிரபலம் அடைந்தார். இளைஞர்கள் அவரது இராணுவத்தில் இணைந்தனர்.)
Question 87 |
_______ ஆண்டு ஒளரங்கசீப் செயிஷ்டகானை தக்காணத்திலிருந்து திரும்ப அழைத்துக் கொண்டார்.
1658 | |
1660 | |
1663 | |
1664 |
Question 87 Explanation:
(குறிப்பு: 1660 ஆம் ஆண்டு செயிஷ்டகான் தக்காணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.)
Question 88 |
ராம ராஜாவின் தத்துப் புதல்வரான _______1808ல் மரணமடையும் வரை பெயருக்கு மன்னராக ஆட்சியில் இருந்தார்.
சாம்பாஜி | |
சாஹூ | |
பிரதாப் சிங் | |
இரண்டாம் சாஹூ |
Question 88 Explanation:
குறிப்பு: இரண்டாம் சாஹூவுக்கு பின் அவரது மகன் பிரதாப் சிங் அரியணை ஏறினார்.)
Question 89 |
_______ஐ தலைநகராகக் கொண்டு தாராபாய் ஒரு மாற்று அரசாங்கத்தை நடத்தினார்.
ராய்க்கர் | |
பீஜப்பூர் | |
கோல்ஹாபூர் | |
கல்யாண் |
Question 90 |
அகமது ஷா அப்தலியால் தில்லி சூறையாடப்பட்ட ஆண்டு
1747 | |
1757 | |
1767 | |
1776 |
Question 90 Explanation:
(குறிப்பு: தில்லியை விட்டு வெளியேறும் முன் அப்தலி தில்லியில் தனது பிரதிநிதியாக மீர் பசஷியை நியமனம் செய்தார்)
Question 91 |
சௌத் என்ற வரி பிரிக்கப்பட்ட முறைகளில் தவறானது எது?
ஆட்சியாளருக்கு 25 சதவீதம் | |
மராததிய அதிகாரிகள் மற்றும் படைகளைப் பராமரிப்பதற்காக இராணுவத் தளபதிகளுக்கு 66 சதவீதம் | |
பிறப்பில் பிராமணராகவும் தலைவராகவும் உள்ள பண்டிட் சச்சீவுக்கு 6 சதவீதம் | |
வரி வசூல் செய்வோருக்கு 8 சதவீதம் |
Question 91 Explanation:
(குறிப்பு: வரி வசூல் செய்வோருக்கு 3 சதவீதம்)
Question 92 |
______ ஆண்டு ஆங்கிலேய காலனி அரசுக்கு சரபோஜி சமர்ப்பித்த முக்கியத் திட்டத்தில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் இந்திய மாணவர்களுக்கு இலவசப் பள்ளிகளை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்
1812 | |
1821 | |
1820 | |
1823 |
Question 92 Explanation:
குறிப்பு: சரபோஜி, பாடத்திட்டம் மற்றும் கல்விப் பயிற்றும் முறைகளில் நவீன முறைகளையும் மாணவர்களுக்கு உறைவிடப்பள்ளி முறையையும் அறிமுகம் செய்தார்.)
Question 93 |
மன்னர் சரபோஜி அவர் காலத்தில் வாழ்ந்த _____ என்பவரைக் கல்வித் துறையின் முன்னோடியாக கருதினார்
சார்லஸ் உட் | |
சி.எஸ்.ஜான் | |
தாமஸ் மன்றோ | |
சார்லஸ் மேனன் |
Question 93 Explanation:
குறிப்பு: சி.எஸ்.ஜான் தரங்கம்பாடி சமய பரப்புக் குழுவைச் சேர்ந்த அறிஞர். அவர் கல்வித் துறையில் புதிய பரிசோதனைகளையும் சீர்திருத்தங்களையும் மேற்கொண்டார்.)
Question 94 |
சென்னை ஆளுநர் தாமஸ் மன்றோ _____ ஆம் ஆண்டில் தொடக்கப் பள்ளிகளுக்கான ஒரு திட்டத்தை யோசனையாகக் கூறினார்.
1820 | |
1822 | |
1823 | |
1835 |
Question 95 |
'முடிசூடிய பல தலைவர்களை நான பார்த்து இருக்கிறேன். ஆனால் இவர் தவிர எவரிடமும் அது இளவரசத் தன்மையோடு அலங்கரித்ததில்லை’ என்று சரபோஜி மன்னரை புகழ்ந்தவர் யார்?
சி.எஸ்.ஜான் | |
சார்லஸ் மேனன் | |
அருட்தந்தை பிஷப் ஹீபர் | |
தாமஸ் மன்றோதாமஸ் மன்றோ |
Question 96 |
வலிமைமிக்க கொரில்லாப் போர் முறையை பின்பற்றியோர்
மராத்தியர் | |
முகலாயர் | |
ஆங்கிலேயர் | |
நாயக்கர் |
Question 97 |
சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
சிவாஜியை அடக்கும் முக்கிய நோக்கில் 1660 ஆம் ஆண்டு அஃப்சல்கான் தக்காணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் | |
சிவாஜியின் வழித்தோன்றல்களைப் பாதுகாப்பதில் செஞ்சி முன்னணியில் செயல்பட்டது. | |
சிவாஜியின் வருவாய் நிருவாகம், மனிதாபிமானம் சார்ந்து, உற்பத்திச் செய்பவர்களுக்கு சாதகமாக அமைந்திருந்தது. | |
சர்தேஷ்முகி என்பது சிவாஜி வசூலித்த 15 சதவிகித கூடுதல் வருவாயாகும். |
Question 98 |
மராட்டியர்கள் ஆட்சியில் கிராம அளவில் வருவாய் வசூலை மத்திய அரசுக்கு அனுப்பும் பொறுப்பை ______ ஏற்றிருந்தனர்.
தேஷ்முக்கு | |
குல்கர்னி | |
கொத்வால் | |
பட்டேல் |
Question 99 |
சிவாஜியின் இராணுவ அமைப்பில் மிகச் சிறிய படை அலகின் தலைவராக ______ இருந்தார்.
நாயக் | |
ஹவில்தார் | |
பர்கிர் | |
ஷைலேதார் |
Question 100 |
- சரியான விடையைத் தேர்ந்தெடு
- வடகிழக்கு எல்லைப்புறப் பகுதியின் பாதுகாப்பை வீழ்ந்துகொண்டிருந்த முகலாயப் பேரரசு நழுவவிட்டது.
- இது நாதிர்ஷாவின் படையெடுப்பிற்கு வழிவகுத்தது.
1 சரி | |
2 சரி | |
1, 2 சரி | |
1, 2 தவறு |
Question 100 Explanation:
(குறிப்பு: 1739 ல் நாதிர் ஷாவின் தாக்குதல்கள் தொடங்கின.கோகினூர் வைரம், மதிப்புமிக்க மயிலாசனம் ஆகியவற்றை அவர் கைப்பற்றிச் சென்றார்.)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.