Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTnpsc Exam

மராத்தியர்களின் எழுச்சி Online Test 7th Social Science Lesson 11 Questions in Tamil

மராத்தியர்களின் எழுச்சி Online Test 7th Social Science Lesson 11 Questions in Tamil

Congratulations - you have completed மராத்தியர்களின் எழுச்சி Online Test 7th Social Science Lesson 11 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பதினாராம் நூற்றாண்டில் கீழ்க்கண்ட எந்த சுல்தான்கள் மராத்தியர்களைத் தங்கள் குதிரைப்படையில் பணியமர்த்தினர்?
  1. பீஜப்பூர்
  2. கோல்கொண்டா
  3. அகமதுநகர்
  4. குஜராத்
A
1, 2
B
2, 4
C
1, 3
D
1, 4
Question 1 Explanation: 
(குறிப்பு: இச்சுல்தான்களின் படைகளில் மராத்தியர்களைப் பணியமர்த்தியசெயல், இஸ்லாமிய வீரர்களின் அதிகாரத்தைப் பெற வேண்டும் என்ற மராத்தியர்களின் ஆசையைச் சமன் செய்ய உதவியது.)
Question 2
  • கூற்று 1: பாறைகளும், குன்றுகளும் அடங்கிய மராத்திய நாட்டின் நிலப்பகுதி, அந்நிய படையெடுப்பாளர்களிடமிருந்து மராத்தியருக்குப் பாதுகாப்பளித்தது.
  • கூற்று 2: மராத்திய நாட்டின் புவியியல் கூறுகள் கொரில்லாப் போர் முறைக்கு உகந்ததாய் விளங்கியது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 2 Explanation: 
(குறிப்பு: மராத்திய நாட்டின் புவியியல் கூறுகள் மராத்தியர்களிடையே சில தனித்தன்மை வாய்ந்த பண்புகளை வளர்த்திருந்தன. அவை, மராத்திய மக்களை இந்தியாவின் ஏனைய மக்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டின.)
Question 3
_________ இல் பரவிய பக்தி இயக்கம், மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.
A
குஜராத்
B
மகாராஷ்டிரா
C
ஒடிசா
D
ஆந்திரா
Question 3 Explanation: 
(குறிப்பு: பக்தி இயக்கம் மராத்திய மக்களிடையே ஒற்றுமையைக் குறிப்பாகச் சமூகச் சமத்துவத்தை மேம்படுத்தியது. மராத்தியப் பகுதியைச் சேர்ந்த சமயத் தலைவர்கள் பல்வேறு சமூகக் குழுக்களிலிருந்து வந்தவராவர்.)
Question 4
சிவாஜியின் வாழ்வின் மீது கணிசமான செல்வாக்கை செலுத்திய பக்தி இயக்கத்தைச் சேர்ந்த பெரியோர்கள் யார்?
  1. ஏக்நாத்
  2. துக்காராம்
  3. சாம்பாஜி
  4. ராம்தாஸ்
A
1, 2, 3
B
2, 3, 4
C
1, 2, 4
D
1, 3, 4
Question 4 Explanation: 
(குறிப்பு: பக்தி இயக்கத்தை சேர்ந்த பெரியோர்களில் ஏக்நாத், துக்காரம், ராம்தாஸ் ஆகியோர் குறிப்பிடத்தக்கோர் ஆவர்.)
Question 5
  • கூற்று 1: மராத்தியரிடையே ஒற்றுமையை வளர்ப்பதில் மராத்திய மொழியும் இலக்கியமும் உதவி செய்தன.
  • கூற்று 2: பக்தி இயக்கப் பெரியோர்கள், மராத்திய மொழியில் இயற்றிய பாடல்களைத் தொகுத்தனர்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 5 Explanation: 
(குறிப்பு: மராத்திய மொழியில் இயற்றப்பட்ட பாடல்கள் அனைத்துச் சாதிகளையும், வர்க்கங்களையும் சேர்ந்த மக்களால் பாடப்பட்டிருந்தன.)
Question 6
__________ வீரர்கள் சிவாஜி படையின் வலிமையாகத் திகழ்ந்தனர்.
A
மாவலி குதிரைப்படை
B
மாவலி யானைப்படை
C
மாவலி காலாட்படை
D
மாவலி பீரங்கிப்படை
Question 6 Explanation: 
(குறிப்பு: இவர்களின் உதவுவியுடன் சிவாஜி புனேவுக்கு அருகேயிருந்த பல கோட்டைகளையும், புரந்தர் கோட்டையையும் கைப்பற்றினார்.)
Question 7
சிவாஜியின் இராணுவ நடவடிக்கைகளால் சினங்கொண்ட ___________ சுல்தான் சிவாஜியின் தந்தையைச் சிறை வைத்தார்.
A
அகமதுநகர்
B
பீஜப்பூர்
C
கோண்டுவானா
D
ஆக்ரா
Question 7 Explanation: 
(குறிப்பு: சிவாஜி தனது இராணுவ நடவடிக்கைகளை கைவிடுவதாக உறுதியளித்த பின்னரே அவரது தந்தை விடுவிக்கப்பட்டார். தந்தையார் இயற்கை எய்தும் வரை சிவாஜி பீஜப்பூருடன் அமைதியை மேற்கொண்டார்.)
Question 8
சிவாஜி, மராத்தியத் தலைவர் சந்திர ராவ் மோர் என்பாரிடமிருந்து ஜாவலியை _________ ஆண்டு கைப்பற்றினார்.
A
1647
B
1652
C
1655
D
1656
Question 8 Explanation: 
(குறிப்பு: பூனேவைச் சுற்றியிருந்த சிறிய அளவிலான மராத்தியத் தலைவர்களை அடக்கித் தமக்குக் கீழ்ப்பணியச் செய்தார்.)
Question 9
சிவாஜி, பீஜப்பூரின் தளபதியான அப்சல்கானை ________ ஆண்டு கொன்றார்.
A
1658
B
1659
C
1669
D
1667
Question 9 Explanation: 
(குறிப்பு: சிவாஜி தனது தந்தை இறந்தபின்பு, தான் கைப்பற்றிய மலைக்கோட்டைகளிலிருந்த பீஜப்பூர் வீரர்களைத் துரத்தியடித்து அவர்களுக்கு பதிலாக தம் தளபதிகளை அங்கே நியமித்தார்.)
Question 10
_________ ஆண்டு ஒளரங்கசீப்பின் மாமனாரும் முகலாயத் தளபதியுமான ஷெஸ்டகானை சிவாஜி காயப்படுத்தித் துரத்தியடித்தார்.
A
1659
B
1661
C
1662
D
1663
Question 10 Explanation: 
(குறிப்பு: சிவாஜியைத் தண்டிப்பதற்காக அனுப்பப்பட்ட பீஜப்பூர் படைகளை அவர் தோற்கடித்தது முகலாய அதிகாரிகளை எச்சரிக்கை அடையச் செய்தது. அவரை தண்டிக்கும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்ட முகலாயப் படையெடுப்பையும் அவர் தைரியத்துடன் எதிர்கொண்டார்.)
Question 11
அரபிக் கடற்கரையில் அமைந்திருந்த முக்கிய துறைமுகமான சூரத் நகரைச் சூரையாட சிவாஜி தமது படைகளை அனுப்பிய ஆண்டு
A
1662
B
1663
C
1664
D
1665
Question 11 Explanation: 
(குறிப்பு: சூரத் நகர் முகலாயரின் முக்கியத் துறைமுகமாக விளங்கியது.)
Question 12
ஒளரங்கசீப் சிவாஜியை அழித்தொழிக்கவும், பீஜப்பூரை இணைக்கவும் _________ என்ற ராஜபுத்திரத் தளபதியின் தலைமையின் கீழ் முகலாயப் படையை அனுப்பிவைத்தார்.
A
ராஜா மோகன்சிங்
B
ராணா சங்கா
C
பிருத்திவிராஜ் சௌகான்
D
ராஜா ஜெய்சிங்
Question 12 Explanation: 
(குறிப்பு: இறுதியில் சிவாஜி அமைதியை நாடினார். தாம் கைப்பற்றிய கோட்டைகளைக் கொடுத்துவிடவும், முகலாய அரசின் மன்சப்தாராகப் பொறுப்பேற்றுப் பீஜப்பூரைக் கைப்பற்றவும் சம்மதித்தார்.)
Question 13
சிவாஜி, ராஜா ஜெய்சிங்கின் வழிகாட்டுதலின்படி __________ன் முகலாய அரசவைக்கு செல்ல ஒத்துக்கொண்டார்.
A
அகமதுநகர்
B
பீடார்
C
மேவார்
D
ஆக்ரா
Question 13 Explanation: 
(குறிப்பு: ஆக்ராவிற்கு சென்றபோது அவமானப்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, அங்கிருந்து பழக்கூடையில் ஒளிந்து தப்பித்தார்.)
Question 14
அரசன் அல்லது பேரரசன் எனப் பொருள்படும் சத்ரபதி என்பது __________மொழிச்சொல்.
A
பிராகிருதம்
B
தெலுங்கு
C
மலையாளம்
D
சமஸ்கிருதம்
Question 14 Explanation: 
(குறிப்பு: சத்ர - குடை, பதி - தலைவன் அல்லது பிரபு. சத்ரபதி என்னும் சொல்லை மராத்தியர்கள் குறிப்பாக சிவாஜி பயன்படுத்தினார்.)
Question 15
சிவாஜி இரண்டாவது முறையாக சூரத் நகரைக் கொள்ளையடித்த ஆண்டு
A
1668
B
1669
C
1670
D
1674
Question 15 Explanation: 
(குறிப்பு: தக்காண அரசுகளுக்கு எதிரான தமது படையெடுப்புகளில் மராத்தியர்கள் தலையிடுவதைத் தவிர்ப்பதில் ஒளரங்கசீப் உறுதியாய் இருந்தார்.சிவாஜியுடன் உறவைச் சரிசெய்துகொள்ள முயற்சிகள் மேற்கொண்டார். அம்முயற்சிகள் தோல்வியுற்றன.)
Question 16
___________ ஆண்டு சிவாஜி சத்ரபதி என்னும் பட்டத்துடன் மணிமுடி சூட்டிக் கொண்டார்.
A
1672
B
1673
C
1674
D
1675
Question 16 Explanation: 
(குறிப்பு: தம் மகனின் முடிசூட்டு விழாவைக் காண்பதற்காக உயிருடனிருந்த சிவாஜியின் வயது முதிர்ந்த தாயார் ஜீஜாபாய், தம் வாழ்க்கை நிறைவுற்றதால் முடிசூட்டுவிழா முடிந்த சில நாட்களில் இயற்கை எய்தினார்.)
Question 17
சிவாஜியின் முடிசூட்டுவிழா __________ கோட்டையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
A
தோர்னா கோட்டை
B
பதிண்டா கோட்டை
C
கோண்டுவானா கோட்டை
D
ரெய்கார் கோட்டை
Question 17 Explanation: 
(குறிப்பு: சிவாஜி தமது வாழ்நாளின் இறுதி ஆண்டுகளைத் தம் மகன் சாம்பாஜியிடம் செலவிட்டார்.)
Question 18
சிவாஜி ________ ஆண்டு இயற்கை எய்தினார்.
A
1675
B
1678
C
1679
D
1680
Question 18 Explanation: 
(குறிப்பு: சிவாஜி தம் மகன் சாம்பாஜிக்கு தம்மைப் போலவே ஆட்சி புரிய அவருக்கு உதவினார். இறுதியில் நோய்வாய்ப்பட்டு வயிற்றுப் போக்கினாலும், காய்ச்சலினாலும் பாதிப்புற்று இயற்கை எய்தினார்.)
Question 19
சிவாஜியின் அரசியல் முறை எத்தனை வட்டங்களைக் கொண்டிருந்தது?
A
2
B
3
C
4
D
5
Question 19 Explanation: 
(குறிப்பு: சிவாஜி மூன்று வட்டங்களின் மையமாக விளங்கினார்.)
Question 20
சரியான கூற்றைத் தேர்ந்தெடு. (சிவாஜியின் மூன்று வட்ட அரசியல் முறை)
  1. முதல் வட்டத்தில் மக்களின் மீது அக்கறை கொண்ட அவர் எந்த வகையிலும் மக்கள் துன்புறுத்தப்படுவதை அனுமதிக்கவில்லை.
  2. இரண்டாவது வட்டத்தில் சிவாஜி மேலாதிக்கம் செலுத்தினாலும் நேரடி நிர்வாகத்தை மேற்கொள்ளவில்லை. கொள்ளையடிக்கப்படுவதிலிருந்தும், சூறையாடப்படுவதிலிருந்தும் மக்களைக் காப்பாற்றினார்.
  3. மூன்றாவது வட்டத்தில் கொள்ளயடிப்பது மட்டுமே சிவாஜியின் நோக்கமாக இருந்தது,
A
1 மட்டும் சரி
B
2, 3 சரி
C
1, 3 சரி
D
அனைத்தும் சரி
Question 21
தவறான இணையைத் தேர்ந்தெடு.
  1. சௌத் - மொத்த வருமானத்தில் 1/4
  2. சர்தேஷ்முகி - மொத்த வருமானத்தில் 1/10
A
1 மட்டும் தவறு
B
2 மட்டும் தவறு
C
இரண்டும் தவறு
D
எதுவுமில்லை
Question 21 Explanation: 
(குறிப்பு: சௌத் - பாதுகாப்புக் கட்டணம், சர்தேஷ்முகி - அரசருக்கான கட்டணம்)
Question 22
மராத்தியர் நிர்வாகத்தில் கிராமங்கள் _________ என்பவர்களால் நிர்வகிக்கப்பட்டது.
A
பட்டீல்
B
குல்கர்னி
C
தேஷ்முக்
D
கொத்தவால்
Question 22 Explanation: 
(குறிப்பு: இருபது முதல் நூறு எண்ணிக்கை வரையிலான கிராமங்கள் தேஷ்முக்கின் கட்டுப்பாட்டில் இருந்தன.)
Question 23
மராத்திய நிர்வாகத்தில் கிராமத் தலைவருக்கு உதவியாக ஒரு கணக்கரும் __________ என்ற பெயரில் ஆவணக்காப்பாளர் ஒருவரும் பணியாற்றினர்.
A
பட்டீல்
B
குல்கர்னி
C
தேஷ்முக்
D
கொத்தவால்
Question 23 Explanation: 
(குறிப்பு: ஒவ்வொரு கிராமத்திலும் அதிகாரம் மிக்க ஒரு கிராமத் தலைவர் (பட்டீல்) இருந்தார்.)
Question 24
தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு.
A
இராணுவம் மீதும், இராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதிலும் சிவாஜி மிகப்பெரும் கவனம் செலுத்தினார்.
B
ஒவ்வொரு படைவீரனும் தலைமை தளபதியால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
C
பணிநிறைவு பெற்ற மிகவும் போற்றப்பட்ட படைத்தளபதிகளின் பொறுப்பில் கோட்டைகள் விடப்பட்டன.
D
சிவாஜியின் படையெடுப்புகள் சமவெளிகளை நோக்கி நீட்சி பெற்றபோது குதிரைப்படைகள் எண்ணிக்கையில் பெருகி முக்கியத்துவம் பெற்றன.
Question 24 Explanation: 
(குறிப்பு: ஒவ்வொரு படைவீரனும் சிவாஜியால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடக்கத்தில் காலாட்படையே சிவாஜியின் இராணுவத்தின் முதுகெலும்பாக திகழ்ந்தது.)
Question 25
மராத்திய பேரரசில் _________ என்பவர் நவீனகால பிரதமருக்கு இணையானவர்.
A
சத்திரபதி
B
பேஷ்வா
C
பட்டீல்
D
பண்டிட் ராவ்
Question 25 Explanation: 
(குறிப்பு: உண்மையில் பேஷ்வாக்கள் சத்திரபதிகளுக்குத் துணையதிகாரிகளாய் இருந்தவர்களாவர்.)
Question 26
யாருடைய காலத்திலிருந்து பேஷ்வாக்கள் உண்மையான மராத்திய அரசர்களாயினர், சத்திரபதிகள் பெயரளவிற்கான அரசர்கள் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
A
சிவாஜி
B
சாம்பாஜி
C
பாலாஜி விஸ்வநாத்
D
ஷாகு
Question 26 Explanation: 
(குறிப்பு: சிவாஜி எட்டு அமைச்சர்களை கொண்ட குழுவிற்கு அஷ்ட பிரதான் என பெயரிட்டார்.)
Question 27
  • கூற்று 1: மராத்தியரிடையே ஒற்றுமையை வளர்ப்பதில் மராத்திய மொழியும் இலக்கியமும் உதவி செய்தன.
  • கூற்று 2: பக்தி இயக்கப் பெரியோர்கள், மராத்திய மொழியில் இயற்றிய பாடல்களைத் தொகுத்தனர்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 27 Explanation: 
(குறிப்பு: மராத்திய மொழியில் இயற்றப்பட்ட பாடல்கள் அனைத்துச் சாதிகளையும், வர்க்கங்களையும் சேர்ந்த மக்களால் பாடப்பட்டிருந்தன.)
Question 28
__________ ஆண்டு பிறந்த சிவாஜி, தன் தாயார் ஜீஜாபாயின் பாதுகாப்பில் வளர்ந்தார்.
A
1621
B
1624
C
1627
D
1629
Question 28 Explanation: 
(குறிப்பு: ஜூஜாபாய், இராமாயணம், மகாபாரதக் கதைகளைக் கூறி சிவாஜிக்கு அவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தினார்.)
Question 29
சிவாஜியின் ஆசிரியரும் குருவமான ___________ என்பவர் குதிரையேற்றம், போர்க்கலை, அரசு நிர்வாகம் ஆகியவற்றில் சிவாஜிக்கு பயிற்சியளித்தார்.
A
ஜீஜாபாய்
B
ராணா பிரதாப்
C
சாஜி போன்ஸ்லே
D
சாஜி போன்ஸ்லே
Question 30
தனது பதினெட்டாவது வயதில் இராணுவப் பணியில் முதலடி எடுத்து வைத்த சிவாஜி 1645 ல்  __________ கோட்டையைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றார்.
A
தோர்னா கோட்டை
B
பதிண்டா கோட்டை
C
கோண்டுவானா கோட்டை
D
கோண்டுவானா கோட்டை
Question 30 Explanation: 
(குறிப்பு: கோண்டுவானா கோட்டையைக் கைப்பற்றிய அடுத்த ஆண்டில் தோர்னா கோட்டையைக் கைப்பற்றினார். தொடர்ந்து கோட்டையைக் கைப்பற்றி அதனைப் புனரமைத்தார்.)
Question 31
சிவாஜியின் பாதுகாவலரான தாதாஜி கொண்டதேவ் __________ ஆண்டு இயற்கை எய்தினார்.
A
1646
B
1647
C
1648
D
1649
Question 31 Explanation: 
(குறிப்பு: தாதாஜி கொண்டதேவ் இறந்ததனால் சிவாஜி முழுமையான சுதந்திரம் பெற்றவரானார். தம் தந்தையாருக்குச் சொந்தமான கொண்டதேவால் நிர்வகிக்கப்பட்ட ஜாகீரையும் சிவாஜி பெற்றார்.)
Question 32
மராத்திய நிர்வாகத்தில், வசூலிக்கப்பட்ட நிலவரியில் எத்தனை பங்கு அரசால் எடுத்துக்கொள்ளப்பட்டது?
A
3/5
B
2/5
C
3/6
D
1/3
Question 32 Explanation: 
(குறிப்பு: குற்றவியல் வழக்குகள் சாஸ்திரங்கள் எனப்பட்ட இந்து சட்ட நூல்களின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டன.)
Question 33
தவறான இணையைத் தேர்ந்தெடு. (அஷ்டபிரதானின் பொறுப்புகள்)
A
பந்த்பிரதான் / பேஷ்வா - பிரதம அமைச்சர்
B
சுர்நாவிஸ் / சச்சீவ் – செயலர்
C
அமத்தியா / மஜும்தார் - வெளியுறவுத்துறை அமைச்சர்
D
வாக்கிய-நாவிஸ் – உள்துறை அமைச்சர்
Question 33 Explanation: 
(குறிப்பு: அமத்தியா / மஜும்தார் – நிதியமைச்சர்)
Question 34
தவறான இணையைத் தேர்ந்தெடு. (அஷ்டபிரதானின் பொறுப்புகள்)
A
சர்-இ-நெளபத்/சேனாபதி - தலைமைத் தளபதி
B
சுமந்த் /துபிர் - துணை பிரதமர்
C
நியாயதிஸ் - தலைமை நீதிபதி
D
பண்டிட் ராவ் - தலைமை அர்ச்சகர்
Question 34 Explanation: 
(குறிப்பு: சுமந்த் /துபிர் - வெளியுறவுத்துறை அமைச்சர்)
Question 35
சிவாஜியைத் தொடர்ந்து _________ உடனான சச்சரவிற்குப் பின்னர், சாம்பாஜி ஆட்சிப் பொறுப்பேற்றார்.
A
ஷாகு
B
அனாஜி தத்தோ
C
மார்வார் ரத்தோர்
D
துர்காதாஸ்
Question 35 Explanation: 
(குறிப்பு: குடும்ப சண்டைகள் மராத்திய அரசில் சிராய்ப்புகளை ஏற்படுத்தின.)
Question 36
மார்வார் ரத்தோர் குடும்பத்தைச் சேர்ந்த துர்காதாஸ் ஒளரங்கசீப்பிற்கு எதிராகக் கலகம் செய்த அவரது மகன் அக்பர் ஆகியோர் யாருடைய அரசவையில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டனர்?
A
சிவாஜி
B
சாம்பாஜி
C
ஷாகு
D
பாலாஜி விஸ்வநாத்
Question 36 Explanation: 
(குறிப்பு: இதை மிகப்பெரியதாக எடுத்துக்கொண்ட ஔரங்கசீப், சாம்பாஜியை ஒழித்துக்கட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்.)
Question 37
ஒளரங்கசீப் ________ ஆண்டு பீஜப்பூரையும் கோல்கொண்டாவையும் கைப்பற்றினார்.
A
1681
B
1683
C
1685
D
1687
Question 37 Explanation: 
(குறிப்பு: பீஜப்பூரையும் கோல்கொண்டாவையும் கைப்பற்றி இணைப்பதே ஒளரங்கசீப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது.)
Question 38
சிவாஜியின் பேரன் ஷாகு எந்தக் காலக்கட்டத்தில் ஆட்சி புரிந்தார்?
A
1708-1739
B
1703-1749
C
1708-1749
D
1702-1759
Question 38 Explanation: 
(குறிப்பு: ஷாகு என்றால் நேர்மையானவர் என்று பொருள். சிவாஜியிடமிருந்து இவரின் குணநலன்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக இப்பெயர் ஒளரங்கசீப்பால் வைக்கப்பட்டது.)(குறிப்பு: ஷாகு என்றால் நேர்மையானவர் என்று பொருள். சிவாஜியிடமிருந்து இவரின் குணநலன்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக இப்பெயர் ஒளரங்கசீப்பால் வைக்கப்பட்டது.)
Question 39
__________ நூற்றாண்டின் முதல் பாதிப்பகுதியில் மராத்திய அரசு அதிகாரம் ஒருங்கிணைக்கப்பட்டது.
A
16
B
17
C
18
D
19
Question 39 Explanation: 
(குறிப்பு: ஷாகுவிடம் பணி செய்தோர்க்கு அதிகாரப்பூர்வமான உரிமைகள் வழங்கப்பட்டதன் மூலம் இவ்வதிகார ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது.)
Question 40
சிவாஜி ஆகராவிலிருந்து தப்பிய போது வாரணாசியில் சாம்பாஜியின் பாதுகாவலராய் இருந்தவர் யார்?
A
கவிகலாஷ்
B
அனாஜி தத்தோ
C
மார்வார் ரத்தோர்
D
துர்காதாஸ்
Question 40 Explanation: 
(குறிப்பு: சாம்பாஜி, தம்முடைய குடும்ப அர்ச்சகரான கவிகலாஷ் என்பவரின் ஒழுக்கக்கேடான செல்வாக்கிற்கு ஆட்பட்டிருந்தார். கவிகலாஷ் புகழ்பெற்ற அறிஞரும் கவிஞருமாவார்.)
Question 41
  • கூற்று 1: ஷாகு மகாராஜாவின் நாற்பதாண்டுக்கால ஆட்சியின்போது மராத்தியரின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பகுதிகள் அதிகரித்தன.
  • கூற்று 2: ஷாகு மகாராஜாவின் காலத்தில் முறையாகக் கப்பம் வசூலிக்கப்படவில்லை.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 41 Explanation: 
(குறிப்பு: ஷாகுவின் காலத்தில் மிகவும் மையப்படுத்தப்பட்ட, வலுவான அரசுக்கட்டமைப்பு உருப்பெறத் தொடங்கியது. நிலங்களைச் சொந்தமாகக் கொண்டிருந்த குடும்பங்கள் உட்பட ஒவ்வொரு குடும்பமும் அரசுப்பணியின் மூலம் ஆதாயம் பெற்றது.)
Question 42
சாதாரண வருவாய்த்துறை அலுவலராகத் தமது பணியை தொடங்கிய பாலாஜி விஸ்வநாத் _____________இல் பேஷ்வா ஆனார்.
A
1710
B
1711
C
1712
D
1713
Question 42 Explanation: 
(குறிப்பு: தனக்கு நெருக்கமானவர்களின் ஆலோசனைகளுக்கு எதிராக ஷாகு, பாலாஜி விஸ்வநாத்தின் மூத்தமகனான இருபது வயதே நிரம்பிய பாஜிராவை அடுத்த பேஷ்வாவாகப் பணியமர்த்தினார்.)
Question 43
பேரரசர் பாஜிராவ் கீழ்க்கண்ட எந்தக் குடும்பங்களுக்கு அதிகாரங்களை வழங்கினார்?
  1. கெய்க்வாட்
  2. ஹோல்கார்
  3. சிந்தியா
  4. பீடார்
A
1, 2, 3
B
2, 3, 4
C
1, 3, 4
D
1, 2, 4
Question 43 Explanation: 
(குறிப்பு: பாஜிராவ் பாரம்பரியச் செல்வாக்கு பெற்றிருந்த குழுக்களான தேஷ்முக்குகளைச் சார்ந்திருக்க அவர் விரும்பவில்லை. மாறாகப் பேரரசர் ஷாகுவிற்கும், தமது தந்தையார் பாலாஜி விஸ்வநாத்துக்கும், மேற்கண்ட குடும்பங்களுக்கும் அதிகாரங்களை வழங்கினார்.)
Question 44
பொருத்துக (முக்கிய மராத்தியக் குடும்பங்கள்)
  1. கெய்க்வாட்                  i) நாக்பூர்
  2. பான்ஸ்லே                  ii) பரோடா
  3. ஹோர்கார்                 iii) இந்தூர்
  4. சிந்தி (அ) சிந்தியா    iv) குவாலியர்
  5. பேஷ்வா                       v) புனே
A
ii i iv v iii
B
iii ii iv v i
C
ii i iii iv v
D
i iii ii v iv
Question 45
மாளவத்திற்கும், குஜராத்திற்கும் எதிராகப் போர்ப் பிரகடனம் செய்து அவற்றை முகலாயரின் மேலாதிக்கத்திலிருந்து விடுவித்தவர்
A
ஷாகு
B
பாலாஜி விஸ்வநாத்
C
பாஜிராவ்
D
பாலாஜி பாஜிராவ்
Question 45 Explanation: 
(குறிப்பு: முகலாயர் சார்பாக இப்போரில் தலையிட்ட முகலாயப் படைகளும் ஹைதராபாத் நிஜாமின் படைகளும் தோற்கடிக்கப்பட்டன.)
Question 46
பேரரசர் ஷாகுவை மகாராஷ்டிரத்தின் அரசன் எனவும், ஏனைய தக்காணப் பகுதிகளுக்குத் தலைவன் எனவும் அங்கீகரிக்க வைப்பதில் வெற்றிபெற்றவர்
A
பாலாஜி விஸ்வநாத்
B
பாலாஜி பாஜிராவ்
C
பாஜிராவ்
D
அனாஜி தத்தோ
Question 46 Explanation: 
(குறிப்பு: மேற்கண்ட செயல் மூலம் அப்பகுதிகளிலிருந்து சௌத், சர்தேஷ்முகி ஆகிய கப்பத் தொகைகளை மராத்திய அதிகாரிகள் சட்டபூர்வமாக வசூலிக்க முடிந்தது.)
Question 47
பாஜிராவ், நிதி நிர்வாகச் செயல்பாடுகளை ___________இல் மையப்படுத்தினார்.
A
குவாலியர்
B
இந்தூர்
C
நாக்பூர்
D
பூனே
Question 47 Explanation: 
(குறிப்பு: பூனேவில் மையப்படுத்தியதால் தக்காணப் பகுதிகளிலிருந்து அனுப்பி வைக்கப்படும் கப்பங்களை உரிய நேரத்தில் பெற்றுக் கொள்ள முடிந்தது.)
Question 48
50000 க்கும் குறைவான குதிரை வீரர்களைக் கொண்ட மராத்தியப் படை __________ ஆண்டு இரு மடங்கானது.
A
1718
B
1719
C
1720
D
1721
Question 48 Explanation: 
(குறிப்பு: மராத்தியர்களின் படை பீரங்கிப் படைப்பிரிவைக் கொண்டிருக்கவில்லை.)
Question 49
  • கூற்று 1: முகலாயருக்கு எதிரான மராத்தியரின் வெற்றிக்கு முகலாயப் படைகளின் திறமையின்மையே காரணமாகும்.
  • கூற்று 2: தக்காணத்தின் மீதான மராத்தியரின் மேலாதிக்கத்திற்கு ஷாகு, பேஷ்வாக்களின் கீழ் வளர்ந்த மராத்திய அதிகாரிகள், படைத்தளபதிகள் ஆகியோரின் குண இயல்புகளும் காரணம் ஆகும்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 50
பாலாஜி பாஜிராவ் பேஷ்வா பொறுப்பில் இருந்தபோது, பேரரசு ஷாகு __________ ஆண்டு இயற்கை எய்தினார்.
A
1748
B
1749
C
1750
D
1751
Question 50 Explanation: 
(குறிப்பு: அரச குடும்பத்தில் ஏற்பட இருந்த வாரிசுரிமைப் போட்டி சரியான நேரத்தில் பாலாஜி பாஜிராவின் தலையீட்டால் தவிர்க்கப்பட்டது.)
Question 51
பேஷ்வாக்கள் ஆட்சி புரிந்த சமயத்தில் தலைநகரை சத்தாராவிலிருந்து பூனே நகரத்திற்கு மாற்ற முடிவு செய்தவர்
A
பாலாஜி விஸ்வநாத்
B
பாலாஜி பாஜிராவ்
C
பாஜிராவ்
D
ஷாகு
Question 51 Explanation: 
(குறிப்பு: பாலாஜி பாஜிராவ் காலத்தில் அனைத்து அதிகாரங்களும் பேஷ்வாவின் கரங்களில் குவிக்கப்பட்டன. மராத்திய விவசாயப் போர் வீரர்களின் காலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.)
Question 52
  • கூற்று 1: பாலாஜி பாஜிராவ் காலத்தில் பெரிய பீரங்கிகள் மராத்திய அதிகாரிகளின் கீழிருந்தன.
  • கூற்று 2: பீரங்கிகளை இயக்குவது பராமரிப்பது ஆகிய பணிகளில் பெரும்பாலும் போர்த்துகீசியர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோர் அமர்த்தப்பட்டனர்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 52 Explanation: 
(குறிப்பு: ஊதியம் வழங்கப்பட்ட வீரர்களைக் கொண்ட படைக்குத் பாலாஜி பாஜிராவ் தலைமையேற்றார்.)
Question 53
பாலாஜி பாஜிராவ் காலத்தில் நாக்பூரிலிருந்து மராத்தியப் படைகள் கீழ்க்கண்ட எந்த பகுதிகளை கொள்ளையடிப்பதை நோக்கமாக கொண்ட படையெடுப்புகளை நடத்தின?
  1. பீகார்   2. வங்காளம்          3. ஆக்ரா                  4. ஒடிசா
A
1, 2
B
1, 4
C
1, 2, 4
D
1, 2, 3
Question 53 Explanation: 
(குறிப்பு: கர்நாடகப் பகுதிகள் குறித்து மராத்தியர்களுக்கும் ஹைதரபாத் நிஜாமுக்குமிடையே முரண்பாடுகளும் மோதல்களும் நிலவியபோதும், கன்னட, தமிழ் தெலுங்கு பகுதிகள் மராத்தியரின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவரப்பட்டன.)
Question 54
____________ ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒவ்வோர் ஆண்டும் மராத்தியத் தளபதி ரகுஜி பான்ஸ்லேயின் தலைமையில் கொள்ளையடிப்பதை நோக்கமாகக் கொண்ட படையெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
A
1738-1745
B
1741-1785
C
1745-1751
D
1745-1754
Question 55
பேஷ்வாக்களின் வருவாய்த்துறை நிர்வாகம் _________ என்னும் முக்கிய அதிகாரிகளைக் கொண்டிருந்தது.
A
பந்த்பிரதான்
B
சுர்நாவிஸ்
C
அமத்தியா
D
காமவிஸ்தார்
Question 55 Explanation: 
(குறிப்பு: கப்பமோ வரியோ வசூலிக்கப்பட வேண்டிய பகுதியில் பாதுகாப்பிற்காக சில வீரர்கள் அடங்கிய படைப்பிரிவை வைத்துக்கொள்ள இவர் அதிகாரம் பெற்றிருந்தார்.)
Question 56
வருவாய்த்துறை நிர்வாகத்தின் முக்கியத் தலைவரான காமவிஸ்தார் யாரால் நியமிக்கப்பட்டார்?
A
அமத்தியா
B
முதன்மை அமைச்சர்
C
பேஷ்வா
D
சுர்நாவிஸ்
Question 57
பேஷ்வாக்களின் கீழான மராத்திய நிர்வாகம் குறித்தக் கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A
வருவாய்த்துறை ஆவணங்களை பராமரிப்பதற்காக சில எழுத்தர்களும் பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
B
வருவாய் வசூலுக்கான ஒப்பந்தங்கள் வருடமொருமுறை ஏலம் விடப்பட்டன.
C
குறிப்பிட்ட ஒரு பகுதியிலிருந்து கடந்த ஆண்டு பெறப்பட்ட வருமானத்தின் அடிப்படையில் இந்த ஆண்டும் வசூல் செய்யப்பட வேண்டிய தொகை பேஷ்வாவின் அதிகாரிகளால் நிர்ணயம் செய்யப்பட்டது.
D
ஏலத்தில் வெற்றி பெற்று எதிர்கால வாய்ப்பினைப் பயன்படுத்த நினைக்கும் வரி அல்லது வருவாய் வசூலிப்பாளர் சொத்துக்கள் உடையவராக இருக்க வேண்டிய அவசியமில்லை.
Question 57 Explanation: 
(குறிப்பு: ஏலத்தில் வெற்றி பெற்று எதிர்கால வாய்ப்பினைப் பயன்படுத்த நினைக்கும் வரி அல்லது வருவாய் வசூலிப்பாளர் சொத்துக்கள் உடையவராகவும் நேர்மையானவராகவும் இருத்தல் வேண்டும்.)
Question 58
  • கூற்று 1: செய்திப் பரிமாற்றக் கடிதங்கள் அடங்கிய கோப்புகளையும், கணக்குப் பதிவேடுகளையும் மதிப்பீடு செய்கையில், ஆவணங்களைத் துல்லியமாகப் பராமரிப்பதில் பேஷ்வாக்கள் கவனமுடன் இருந்தனர்.
  • கூற்று 2: இரண்டாம் பானிப்பட் போரில் பீரங்கிப்படை முக்கியத்துவம் பெற்றிருந்தது,
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 59
பேஷ்வாக்களின் கீழான மராத்திய நிர்வாகத்தில், வரிவசூலிப்பாளர் எதிர்பார்க்கப்படும் மொத்த வசூல்தொகையில்___________முதல் சரிபாதி வரை முதலில் செலுத்திட வேண்டும்.
A
1/2
B
1/3
C
1/4
D
1/5
Question 59 Explanation: 
(குறிப்பு: தனது சொந்தப் பணத்திலிருந்து அவர் அதை செலுத்தலாம் அல்லது வட்டிக்குக் கடன் தருவோரிடமிருந்து பெற்றுக் கட்டலாம்.)
Question 60
முகலாயர்களின் வீழ்ச்சிக்கு ராணுவ ரீதியாகப் பங்களிப்பு செய்தவர்கள் யார்?
A
மராத்தியர்கள்
B
பேஷ்வாக்கள்
C
ஆங்கிலேயர்கள்
D
பிரெஞ்சுக்காரர்கள்
Question 60 Explanation: 
(குறிப்பு: முகலாயர்களோடு ஒப்பிடுகையில் பேஷ்வாக்களின் ஆட்சி நவீனமாக இருந்தது.)
Question 61
  • கூற்று 1: பேஷ்வா பாலாஜி பாஜிராவின் காலத்தில் மராத்திய அரசின் வட எல்லை மிக விரைவாக ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் ஆகியவற்றின் எல்லைகளை நெருங்கியது.
  • கூற்று 2: ஒரு கட்டத்தில் மராத்தியரின் கப்பம் வசூலிக்கும் ஆட்சிப்பரம்பு டெல்லிக்கு ஐம்பது மைல்களுக்கு அருகே வரை விரிவடைந்தது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 62
மராத்தியர்களின் குறுகிய காலப் பேரரசு _________ ஆண்டு டெல்லிக்கு அருகேயுள்ள பானிப்பட்டில் முடிந்தது.
A
1758
B
1759
C
1760
D
1761
Question 62 Explanation: 
(குறிப்பு: பஞ்சாபைக் கடந்து தங்கள் ஆட்சிப்பரப்பை விரிவடைய செய்ய மராத்தியர்கள் மேற்கொண்ட முயற்சி ஆப்கானியர்களின் அரசர் அகமது ஷா அப்தாலியால் தடுக்கப்பெற்றது.)
Question 63
அப்தாலி இறுதியாக டெல்லியின் மீது படையெடுத்து  வருவதற்கு முன்னர் எத்தனை முறை மராத்தியர்களின் மீது படையெடுத்தார்?
A
16
B
17
C
18
D
19
Question 63 Explanation: 
(குறிப்பு: தளபதிகள் பலரின் கீழ் பிரிந்திருந்த மராத்தியப் படையினர் பல வகையான தந்திரங்களுடன் இப்போரை அணுகினர்.)
Question 64
1761இல் நடைபெற்ற மூன்றாம் பானிப்பட் போரை __________ படைகள் தீர்மானித்தன.
A
காலாட்படை
B
குதிரைப்படை
C
பீரங்கிப்படை
D
யானைப்படை
Question 64 Explanation: 
(குறிப்பு: ஆப்கானியர்களின் இடம்விட்டு இடம் நகர்ந்து செல்லக்கூடிய பீரங்கிப் படைகள் மராத்திய காலாட்படையினரையும் குதிரைப்படையினரையும் கொன்றுகுவித்தன.)
Question 65
பொருத்துக.
  1. ஷாஜி பான்ஸ்லே              i) சிவாஜியின் தாய்
  2. சாம்பாஜி                          ii) பீஜப்பூர் தளபதி
  3. ஷாகு                                  iii) சிவாஜியின் தந்தை
  4. ஜீஜாபாய்                          iv) சிவாஜியின் மகன்
  5. அப்சல்கான்                       v) சிவாஜியின் பேரன்
A
ii i iv v iii
B
iii iv v i ii
C
ii i iii iv v
D
i iii ii v iv
Question 66
  • கூற்று: மராத்தியப் போர்வீரர்கள் தங்கள் வசிப்பிடத்திற்குத் தொலைவில் உள்ள கோட்டைகளிலும், நகரங்களிலும் வாழ்ந்தனர்.
  • காரணம்: மராத்திய வீரர்கள் ஒவ்வோர் ஆண்டும் போர்க்களத்திலிருந்து தங்கள் நிலங்களின் வேளாண் பணிகளுக்காகச் சென்று வருவதற்கு
A
கூற்றிற்கான காரணம் சரி
B
கூற்றிற்கான காரணம் தவறு
C
கூற்று சரி, காரணம் தவறு
D
கூற்று மற்றும் காரணம் தவறு
Question 67
காலவரிசைப்படி நிகழ்வுகளை வரிசைப்படுத்துக.
  1. சிவாஜி, தம் பாதுகாவலர் இறந்தவுடன் சுதந்திரமான அரசரானார்.
  2. பாலாஜி பாஜிராவ் அரசப் பதவி ஏற்றார்.
  3. சிவாஜியின் தந்தை இறந்தவுடன் ஜாவலியின் மீது படையெடுத்தார்.
  4. பாலாஜி விஸ்வநாத் பேஷ்வாவாக பொறுப்பேற்றார்.
A
1 3 4 2
B
2 1 4 3
C
3 1 4 2
D
3 4 1 2
Question 67 Explanation: 
குறிப்பு: சிவாஜியின் பாதுகாவலரான தாதாஜி கொண்டதேவ் 1649ல் இயற்கை எய்தினார். சிவாஜி ஜாவலியை 1656ல் கைப்பற்றினார். பாலாஜி விஸ்வநாத் 1713ல் பேஷ்வாவாக பதவி ஏற்றார்.)
Question 68
_________ ன் ஆட்சிக்காலத்திலேயே சிவாஜியின் தந்தையும், அகமதுநகர், பீஜப்பூர் ஆகிய அரசுகளில் அதிகாரியாகப் பணியாற்றியவருமான ஷாஜிபான்ஸ்லே பல இடையூறுகளைச் செய்தார்.
A
அலாவுதீன் கில்ஜி
B
ஷாஜகான்
C
பாபர்
D
அக்பர்
Question 68 Explanation: 
(குறிப்பு: பான்ஸ்லேவின் மகனான சிவாஜி மராத்தியருக்குப் புகழ் சேர்த்தார். முகலாயரை அச்சமடைய வைத்தார்.)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 68 questions to complete.

2 Comments

  1. q.no 63 அப்தாலி இறுதியாக டெல்லியின் மீது படையெடுத்து வருவதற்கு முன்னர் எத்தனை முறை மராத்தியர்களின் மீது படையெடுத்தார்? 8 years

Leave a Reply to sundari v Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!