Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTnpsc Exam

சமத்துவம் பெறுதல் – Online Test 6th Social Science Lesson 8 Questions in Tamil

சமத்துவம் பெறுதல் - Online Test 6th Social Science Lesson 8 Questions in Tamil

Congratulations - you have completed சமத்துவம் பெறுதல் - Online Test 6th Social Science Lesson 8 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1

பாரபட்சம் என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது

A
முன்முடிவு
B
வேற்றுமை
C
தவறான நம்பிக்கை
D
பகைமை
Question 1 Explanation: 
முன் முடிவு என்பது மக்களின் மத நம்பிக்கைகள், அவர்கள் வாழ்கின்ற பகுதிகள், நிறம், மொழி மற்றும் உடை போன்ற பலவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. பாரபட்சமானது பாலின ரீதியாகவும், இன ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும், மாற்றுத் திறனாளிகள் மீதும் மற்றும் பிறவற்றிலும் காணப்படுகிறது.
Question 2

பின்வருவனவற்றுள் பாரபட்சம் உருவாவதற்கான காரணங்கள் யாவை

  • 1) சமூகமயமாக்கல்   2) பொருளாதார பயன்கள்   3) சர்வாதிகார ஆளுமை
A
1 & 2
B
2 & 3
C
1 & 3
D
அனைத்தும்
Question 2 Explanation: 
மேலும் நிர்ணயிக்கப்பட்ட நடத்தை, இன மையக் கொள்கை, கட்டுமான குழு அமைப்பு மற்றும் முரண்பாடுகள் ஆகியவை பாரபட்சம் உருவாவதற்கான பொதுவான சமூக காரணிகளாகும்.
Question 3

தென் ஆப்ரிக்காவில் இருந்த இனவெறிக்கு முடிவு கட்டியவர் யார்

A
யாக்கோபு சூமா
B
பி.ஜே.வோர்ஸ்டர்
C
பி.டபிள்யு.போதா
D
நெல்சன் மண்டேலா
Question 3 Explanation: 
தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறை வாழ்க்கைக்குப் பின் 1990 ஆம் ஆண்டு விடுதலை ஆனார். தென் ஆப்பிரிக்காவில் உலக அளவில் அமைதி நிலவவும், மனித உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னோடியாகவும் திகழ்ந்தார்.
Question 4

கீழ்கண்டவர்களுள் யார் பாபாசாகேப் என்று அழைக்கப்படுகிறார்

A
காந்தியடிகள்
B
அம்பேத்கர்
C
ஜவஹர்லால் நேரு
D
சுபாஷ் சந்திர போஸ்
Question 4 Explanation: 
இவர் இந்திய சட்ட நிபுணராகவும், பொருளாதார நிபுணராகவும், அரசியல்வாதியாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார். இவர் 1915 ல் எம்ஏ பட்டத்தைப் பெற்றார். பின்னர் 1927இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அதற்கு முன்னர் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் D.sc பட்டத்தையும் பெற்றிருந்தார்.
Question 5

எந்த ஆண்டு டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்கள் பாரத ரத்னா விருது பெற்றார்

A
1876
B
1882
C
1990
D
1992
Question 5 Explanation: 
இவரது மறைவுக்குப் பிறகு பாரதரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவர் அரசியலமைப்பு நிர்ணய சபையின் வரைவு குழுவின் தலைவராக இருந்தார். எனவே இவர் இந்திய அரசியலமைப்பின் தந்தையாக கருதப்படுகிறார். இவர் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றினார்.
Question 6

2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி எழுத்தறிவு வீதத்தில் முதலிடத்தில் உள்ள மாவட்டம் எது

A
கன்னியாகுமரி
B
நாமக்கல்
C
விழுப்புரம்
D
நீலகிரி
Question 6 Explanation: 
எழுத்தறிவு வீதத்தில் 91.75% பெற்று கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்திலும், 90.18% பெற்று சென்னை இரண்டாம் இடத்திலும், 86.16% பெற்று தூத்துக்குடி மூன்றாம் இடத்திலும் உள்ளது.
Question 7

2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி எழுத்தறிவு விகிதம் குறைவாக உள்ள மாவட்டம் எது

A
ஈரோடு
B
தர்மபுரி
C
திருநெல்வேலி
D
கிருஷ்ணகிரி
Question 7 Explanation: 
68.54% பெற்ற தர்மபுரி எழுத்தறிவு வீதத்தில் இறுதி இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் அரியலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம் மாவட்டங்கள் குறைவான எழுத்தறிவு பெற்ற மாவட்டங்களாக உள்ளன.
Question 8

2011 ஆம் ஆண்டு கணக்கின்படி தமிழ்நாட்டில் பாலின விகிதத்தில் முதலிடத்தில் உள்ள மாவட்டம் எது

A
பெரம்பலூர்
B
கன்னியாகுமரி
C
நீலகிரி
D
ராமநாதபுரம்
Question 8 Explanation: 
பாலின விகிதத்தில் நீலகிரி 1041 பெற்று முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் 1031, நாகப்பட்டினம் 1025, தூத்துக்குடி 1024 என்ற பாலின விகிதத்தை கொண்டுள்ளது. இது தேசிய பாலின விகித சராசரியான 943 விட அதிகமாகும்.
Question 9

2011 ஆம் ஆண்டு கணக்கின்படி தமிழ்நாட்டில் மிக குறைவான பாலின விகிதம் கொண்ட மாவட்டம் எது

A
விழுப்புரம்
B
காஞ்சிபுரம்
C
சேலம்
D
தர்மபுரி
Question 9 Explanation: 
பாலின பாகுபாடு என்பது இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே நிலவும் உடல்நலம், கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் சமத்துவமின்மை போன்றவற்றை குறிக்கிறது.பாலின பாகுபாடு என்பது இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே நிலவும் உடல்நலம், கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் சமத்துவமின்மை போன்றவற்றை குறிக்கிறது.
Question 10

இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று குறிப்பிடுகிறது

A
பிரிவு 12
B
பிரிவு 14
C
பிரிவு 16
D
பிரிவு 17
Question 10 Explanation: 
மேலும் நாட்டிற்குள் வசிக்கும் அனைவருக்கும் பாதுகாப்பினையும் தேவையற்ற பாகுபாட்டையும் தடைசெய்கிறது. நமது அரசியலமைப்பு நிலத்தால் வேறுபட்டிருப்பதைக் கூறுகிறது. எனவே சமத்துவமானது அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும்.
Question 11

இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப் பிரிவு தீண்டாமையை ஒழித்தது

A
பிரிவு 13
B
பிரிவு 13
C
பிரிவு 17
D
பிரிவு 19
Question 11 Explanation: 
சமத்துவம் என்பது தீண்டாமையை ஒரு குற்றமாக காண்பதாகும். இந்த விதிப்படி எந்த வகையிலும் தீண்டாமையைப் பின்பற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது.
Question 12

டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது எந்த ஆண்டு வழங்கப்பட்டது

A
1993
B
1995
C
1997
D
1999
Question 12 Explanation: 
இவர் இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராவார். இவர் மக்களின் குடியரசுத் தலைவர் என்று அழைக்கப்படுகிறார். இவர் இந்தியா 2020, அக்னி சிறகுகள், எழுச்சி தீபங்கள், தி லுமினஸ் பார்க், மிஷன் இந்தியா போன்ற நூல்களை எழுதியுள்ளார். அவரது சிறந்த பணியால் இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று அழைக்கப்படுகிறார்.
Question 13

திரு மாரியப்பன் தங்கவேலு அவர்கள் கீழ்கண்ட எந்த விளையாட்டுப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்

A
உயரம் தாண்டுதல்
B
குண்டு எறிதல்
C
ஓட்டப்பந்தயம்
D
ஈட்டி எறிதல்
Question 13 Explanation: 
2016 ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக்கில் 161 நாடுகளில் இருந்து 4300 பேர் பங்கேற்றனர். அதில் ஆண்கள் பிரிவில் உயரம் தாண்டுதலில் T-42 போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்றார்.
Question 14

கீழ்க்கண்டவர்களுள் 2008 ஆம் ஆண்டிற்கான  பாலைஸ் தேஸ் விழா போட்டிகளில் கேரம் சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்

A
ரேஷ்மி குமாரி
B
செ. இளவழகி
C
பிரக் ஞானந்தா
D
ஜி ஆகாஷ்
Question 14 Explanation: 
மேலும் அதே ஆண்டில் தேசிய கேரம் சாம்பியன் போட்டியில் முந்தைய உலக சாம்பியனான ரேஷ்மி குமாரியை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
Question 15

விஸ்வநாதன் ஆனந்த் எந்த ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனார்

A
1982
B
1984
C
1986
D
1988
Question 15 Explanation: 
2000, 2007, 2008, 2010 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் சதுரங்க விளையாட்டில் உலக சாம்பியனாக விளங்கினார். தனது 14வது வயதில் உலக இளையோர் சதுரங்கப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.
Question 16

நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை முதன்முதலில் பெற்ற வீரர் யார்

A
விஸ்வநாதன் ஆனந்த்
B
சச்சின் டெண்டுல்கர்
C
மேரி கோம்
D
மிதாலி ராஜ்
Question 16 Explanation: 
1991-92 இல் இவ்விருதைப் பெற்ற முதல் வீரர் ஆவார். மேலும் 2007 ஆம் ஆண்டில் நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருதை பெற்றார்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 16 questions to complete.

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!