Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTnpsc Exam

ஐரோப்பியர்களின் வருகை Online Test 8th Social Science Lesson 1 Questions in Tamil

ஐரோப்பியர்களின் வருகை Online Test 8th Social Science Lesson 1 Questions in Tamil

Congratulations - you have completed ஐரோப்பியர்களின் வருகை Online Test 8th Social Science Lesson 1 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
ஆனந்தரங்கரின் பிரெஞ்சு இந்திய உறவு முறை பற்றிய அன்றாட நிகழ்வுகளின் குறிப்புகள் எந்தக் காலக்கட்டத்தை சேர்ந்தவை?
A
1725 - 1746
B
1728 – 1760
C
1738 – 1780
D
1736 – 1760
Question 1 Explanation: 
(குறிப்பு: ஆனந்தரங்கரின் குறிப்புகள் 1736-1760 வரையிலான காலத்தை பற்றி அறிய உதவும் ஒரே எழுதப்பட்ட, சமய சார்பற்ற மதிப்புமிக்க பதிவாக உள்ளன.)
Question 2
ஆனந்தரங்கர் பாண்டிச்சேரி பிரெஞ்சு வர்த்தகத்தில் __________ ஆக பணிபுரிந்தார்.
A
கணக்கர்
B
மேற்பார்வையாளர்
C
மொழிபெயர்ப்பாளர்
D
காவலர்
Question 2 Explanation: 
(குறிப்பு: ஆனந்தரங்கரின் குறிப்புகள் அரசியல் தீர்வுகளை வெளிப்படையாக விளக்கும் வரலாற்றாதாரமாக உள்ளன.)
Question 3
கீழ்க்கண்டவற்றுள் எழுதப்பட்ட ஆதாரங்களாக கருதப்படுபவை எவை?
  1. இலக்கியங்கள்
  2. பயணக் குறிப்புகள்
  3. நாட்குறிப்புகள்
  4. சுயசரிதை
  5. துண்டு பிரசுரங்கள்
  6. அரசாங்க ஆவணங்கள்
  7. கையெழுத்துப் பிரதிகள்
A
அனைத்தும்
B
1, 2, 3, 7
C
2, 4, 5
D
1, 2, 3, 5
Question 4
இந்திய தேசிய ஆவணக்காப்பகம் (NAI) எங்கு அமைந்துள்ளது?
A
கல்கத்தா
B
சென்னை
C
டெல்லி
D
மும்பை
Question 4 Explanation: 
(குறிப்பு: இது இந்திய அரசின் ஆவணங்களைப் பாதுகாக்கும் முதன்மைக் காப்பகமாகும்.)
Question 5
  • கூற்று 1: வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடம் ஆவணக்காப்பகம் என்று அழைக்கப்படுகிறது.
  • கூற்று 2: இந்திய தேசிய ஆவணக்காப்பகம் ஆசியாவில் உள்ள ஆவணக் காப்பகங்களிலேயே மிகவும் பெரியதாகும்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 5 Explanation: 
(குறிப்பு: இந்திய தேசிய ஆவணக் காப்பகம், கடந்த கால நிர்வாக முறைகளைப் புரிந்து கொள்வதற்கான அனைத்துத் தகவல்களுடன் தற்கால மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கும் ஒரு வழிகாட்டியாக விளங்குகிறது.)
Question 6
இந்திய தேசிய ஆவணக்காப்பகத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
A
ஆனந்தரங்கர்
B
வில்லியம் மில்லர்
C
ஜார்ஜ் வில்லியம் பாரஸ்ட்
D
ஹென்றி
Question 6 Explanation: 
(குறிப்பு: இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அறிவியல் ரீதியான வாழ்க்கை மற்றும் மக்கள் நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்வதற்கான உண்மையான சான்றுகள் NAIல் அடங்கியுள்ளன.)
Question 7
சென்னை பதிப்பாசனத்தில் உள்ள பெரும்பாலான ஆவணங்கள் எந்த மொழியில் உள்ளன?
A
பிரெஞ்சு
B
தமிழ்
C
சமஸ்கிருதம்
D
ஆங்கிலம்
Question 7 Explanation: 
(குறிப்பு: தமிழ்நாடு ஆவணக்காப்பகம் என்று அழைக்கப்படும் சென்னை பதிப்பாசனம் சென்னையில் அமைந்துள்ளது.)
Question 8
  • கூற்று 1: சென்னை பதிப்பாசனம் தென்னிந்தியாவின் மிகப்பழமையான மற்றும் மிகப்பெரிய களஞ்சியங்களுள் ஒன்றாகும்.
  • கூற்று 2: தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் டச்சு, டேனிஷ், பாரசீக, மராத்திய நிர்வாக பதிவுகளின் தொகுப்புகள் பிரெஞ்சு, போர்ச்சுக்கீசிய, தமிழ், உருது போன்ற மொழிகளில் உள்ளன.a
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 9
தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் ________ ஆம் ஆண்டு டச்சு பதிவுகளின் தொகுப்புகள் உள்ளன.
A
1624
B
1637
C
1640
D
1642
Question 9 Explanation: 
(குறிப்பு: இந்த டச்சு பதிவுகள், கொச்சி மற்றும் சோழமண்டல கடற்கரையில் உள்ள இடங்களுடன் தொடர்புடையது. இந்த பதிவுகள் 1657-1845 காலப் பகுதியை உள்ளடக்கியது.)
Question 10
'சென்னை நாட்குறிப்பு பதிவுகள்’ யாருடைய முயற்சியால் வெளியிடப்பட்டது?
A
டாட்வெல்
B
வில்லியம் மில்லர்
C
ஜார்ஜ் வில்லியம் பாரஸ்ட்
D
ஹென்றி
Question 10 Explanation: 
(குறிப்பு: 'சென்னை நாட்குறிப்பு பதிவுகள்’ 1917ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.)
Question 11
தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் உள்ள டேனிஷ் பதிவுகள் எந்த காலப்பகுதியை உள்ளடக்கியவை?
A
1666-1745
B
1647-1845
C
1777-1845
D
1776-1845
Question 12
தவறான இணையைத் தேர்ந்தெடு.
A
லூயிஸ் கோட்டை - பாண்டிச்சேரி
B
புனித ஜார்ஜ் கோட்டை – சென்னை
C
புனித டேவிட் கோட்டை – கடலூர்
D
புனித பிரான்சிஸ் ஆலயம் – கோவா
Question 12 Explanation: 
(குறிப்பு: புனித பிரான்சிஸ் ஆலயம் – கொச்சி.)
Question 13
இந்தியாவின் மிகப்பெரும் தேசிய அருங்காட்சியகம் நிறுவப்பட்ட ஆண்டு
A
1942
B
1947
C
1948
D
1949
Question 13 Explanation: 
(குறிப்பு: இந்தியாவின் மிகப்பெரும் தேசிய அருங்காட்சியகம் டெல்லியிலுள்ளது.)
Question 14
நவீன இந்தியாவின் முதல் நாணயம் __________ ஆண்டில் ஆங்கிலேய ஆட்சியில் வெளியிடப்பட்டது.
A
1762
B
1792
C
1862
D
1892
Question 14 Explanation: 
(குறிப்பு: இராணி விக்டோரியாவுக்கு பிறகு அரியணை ஏறிய மன்னர் ஏழாம் எட்வர்டு, தனது உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட்டார்.)
Question 15
_________ ஆண்டு ரிசர்வ் வங்கி முறையாக நிறுவப்பட்டு இந்திய அரசின் ரூபாய் நோட்டுக்களை வெளியிடும் அதிகாரத்தைப் பெற்றது.
A
1928
B
1932
C
1934
D
1935
Question 15 Explanation: 
(குறிப்பு: நிர்வாக வரலாற்றை அரிய ஒரு சிறந்த ஆதாரமாக நாணயங்கள் திகழ்கின்றன)
Question 16
மன்னர் ஆறாம் ஜார்ஜ் உருவம் தாங்கிய இந்தியாவின் முதல் 5 ரூபாய் நோட்டு எந்த ஆண்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது?
A
1935 நவம்பர்
B
1935 நவம்பர்
C
1937 அக்டோபர்
D
1938 ஜனவரி
Question 17
புனித டேவிட் கோட்டை ஆங்கிலேயரால் கட்டப்பட்ட ஆண்டு
A
1592
B
1672
C
1984
D
1690
Question 17 Explanation: 
(குறிப்பு: புனித டேவிட் கோட்டை கடலூரில் அமைந்துள்ளது.)
Question 18
துருக்கியர்களால் கான்ஸ்டாண்டிநோபிள் கைப்பற்றப்பட்ட ஆண்டு
A
கி.பி 1543
B
கி.பி 1548
C
கி.பி 1483
D
கி.பி 1453
Question 18 Explanation: 
(குறிப்பு: காண்ஸ்டாண்டிநோபிள் கைப்பற்றப்பட்ட பின் இந்தியாவிற்கும், ஐரோப்பாவிற்குமிடையிலான நிலவழி மூடப்பட்டது. துருக்கி வட ஆப்பிரிக்காவிலும், பால்கன் தீபகற்பத்திலும் நுழைந்தது.)
Question 19
  • கூற்று: போர்ச்சுக்கீசிய இளவரசர் ஹென்றி பொதுவாக "மாலுமி ஹென்றி” என அறியப்படுகிறார்.
  • காரணம்: ஹென்றி உலகின் அறியப்படாத பகுதிகளை ஆராயவும், சாகச வாழ்க்கையை மேற்கொள்ளவும் தனது நாட்டு மக்களை ஊக்குவித்தார்.
A
கூற்று சரி, காரணம் தவறு
B
கூற்று தவறு, காரணம் சரி
C
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்
D
கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல.
Question 19 Explanation: 
(குறிப்பு: 1. ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும், போர்ச்சுக்கல் மட்டும் இந்தியாவிற்கு புதிய கடல் வழியைக் கண்டுபிடிப்பதில் ஆர்வமாக இருந்தது.)
Question 20
போர்த்துக்கீசிய மாலுமியான பார்த்தலோமியோ டயஸ் தென்னாப்பிரிக்காவின் தெற்குமுனையை அடைந்த ஆண்டு
A
1427
B
1437
C
1467
D
1487
Question 20 Explanation: 
(குறிப்பு: மன்னர் இரண்டாம் ஜான் பார்த்தலோமியோ டயஸை ஆதரித்தார்.)
Question 21
வாஸ்கோடாகாமா, இந்திய மாலுமி ஒருவரின் உதவியோடு கள்ளிக்கோட்டையை அடைந்த ஆண்டு
A
கி.பி 1492
B
கி.பி 1494
C
கி.பி 1496
D
கி.பி 1498
Question 21 Explanation: 
(குறிப்பு: வாஸ்கோடாகாமா தென்னாப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்து, அங்கிருந்து மொசாம்பிக் பகுதிக்குத் தனது பயணத்தை தொடர்ந்தார். அங்கிருந்து இந்தியரின் உதவியோடு கள்ளிக்கோட்டையை அடைந்தார்.)
Question 22
வாஸ்கோடாகாமா கள்ளிக்கோட்டையை அடைந்தபோது அவரை வரவேற்ற மன்னர்
A
ஜஹாங்கீர்
B
சாமரின்
C
காப்ரல்
D
ஒளரங்கசீப்
Question 23
இரண்டாவது போர்த்துகீசிய மாலுமி பெட்ரோ அல்வாரிஸ் காப்ரல் என்பவர் கள்ளிக்கோட்டையை வந்தடைந்த ஆண்டு
A
1499
B
1500
C
1501
D
1502
Question 23 Explanation: 
(குறிப்பு:. இவர் வாஸ்கோடாகாமாவின் கடல்வழியைப் பின்பற்றி 13 கப்பல்களில் சில 100 வீரர்களுடன் கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார்.)
Question 24
வாஸ்கோடாகாமா, எத்தனை கப்பல்களுடன் இரண்டாவது முறையாக இந்தியா வந்தடைந்தார்?
A
10
B
11
C
12
D
13
Question 24 Explanation: 
(குறிப்பு: கி.பி 1501 ல் இரண்டாவது முறையாக இந்தியா வந்தார்.)
Question 25
வாஸ்கோடாகாமா கீழ்க்கண்ட எந்த பகுதிகளில் போர்ச்சுக்கீசிய வர்த்தக மையத்தை நிறுவினார்?
  1. கண்ணணூர்
  2. கள்ளிக்கோட்டை
  3. கொச்சின்
  4. குஜராத்
A
1, 2, 3
B
2, 3, 4
C
1, 2, 4
D
1, 3, 4
Question 25 Explanation: 
(குறிப்பு: வாஸ்கோடாகாமா கண்ணணூரில் முதல் வர்த்தக மையத்தை நிறுவினார்.)
Question 26
___________ போர்ச்சுக்கீசிய கிழக்கிந்திய கம்பெனியின் முதல் தலைநகரமாயிற்று.
A
கண்ணனூர்
B
கோவா
C
குஜராத்
D
கொச்சின்
Question 26 Explanation: 
(குறிப்பு: வாஸ்கோடாகாமா வர்த்தக மையங்கள் நிறுவுவதை கண்டு கோபங்கொண்ட சாமரின் போர்ச்சுக்கீசியரைத் தாக்கினார். ஆனால் அவர் போர்ச்சுக்கீசியரால் தோற்கடிக்கப்பட்டார்.)
Question 27
வாஸ்கோடாகாமா மூன்றாவது முறையாக இந்தியா வந்த ஆண்டு
A
1521
B
1522
C
1523
D
1524
Question 27 Explanation: 
(குறிப்பு: வாஸ்கோடாகாமா நோய்வாய்ப்பட்டு டிசம்பர் 1524ல் கொச்சியில் காலமானார்.)
Question 28
இந்தியாவிலிருந்த போர்த்துக்கீசிய பகுதிகளுக்கு  முதல் ஆளுநராக அனுப்பப்பட்டவர்
A
வாஸ்கோடாகாமா
B
பெட்ரோ அல்வாரிஸ்
C
பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
D
நினோ டி குன்கா
Question 28 Explanation: 
(குறிப்பு: பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா 1505ல் இந்திய போர்ச்சுக்கீசிய பகுதிகளுக்கு ஆளுநராக அனுப்பப்பட்டார்.)
Question 29
இந்தியாவில் போர்ச்சுக்கீசிய கப்பற்படையை பலப்படுத்த 'நீலநிறக்கொள்கை’ பின்பற்றியவர் யார்?
A
பெட்ரோ அல்வாரிஸ்
B
பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
C
அல்போன்சோ டி அல்புகர்க்
D
நினோ டி குன்கர்
Question 30
__________பகுதி சுல்தான்கள் போர்ச்சுக்கீசியருக்கு எதிராக, எகிப்து மற்றும் துருக்கி சுல்தான்களுக்கு ஆதரவளித்தனர்.
A
பீஜப்பூர், டெல்லி
B
காபூல், டெல்லி
C
பீஜப்பூர், குஜராத்
D
காபூல், குஜராத்
Question 30 Explanation: 
(குறிப்பு: இந்திய பெருங்கடலில் அரேபிய ஏகபோக வர்த்தகத்தை போர்ச்சுக்கீசியர் தகர்க்க முயன்ற போது அது எதிர்மறையாக துருக்கி எகிப்தை பாதித்தது.)
Question 31
அல்மெய்டா காலத்தில் __________க்கு அருகில் நடைபெற்ற கடற்படை போரில் முஸ்லீம் கூட்டுப்படைகள் போர்ச்சுக்கீசியரை தோற்கடித்தன.
A
கோவா
B
மும்பை
C
சாவல்
D
டையூ
Question 31 Explanation: 
(குறிப்பு: இப்போரில் அல்மெய்டாவின் மகன் கொல்லப்பட்டான்.)
Question 32
___________ல் நடைபெற்ற கடற்போரில் அல்மெய்டா, முஸ்லீம் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தார்.
A
கோவா
B
மும்பை
C
சாவல்
D
டையூ
Question 33
இந்தியாவில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை உண்மையில் நிறுவியவர் __________ ஆவார்.
A
வாஸ்கோடாகாமா
B
அல்போன்சோ டி அல்புகர்க்
C
பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
D
நினோ டி குன்கா
Question 33 Explanation: 
(குறிப்பு: அல்புகர்க் இந்தியப் பெண்களுடனான போர்ச்சுகீசிய திருமணங்களை ஊக்குவித்தார்.)
Question 34
அல்போன்சோ டி அல்புகர்க் _________ ஆண்டு பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவைக் கைப்பற்றினார்.
A
1509 நவம்பர்
B
1510 நவம்பர்
C
1509 பிப்ரவரி
D
1510 பிப்ரவரி
Question 34 Explanation: 
(குறிப்பு: 1515ல் பாரசீக வளைகுடாவில் உள்ள ஆர்மஸ் துறைமுகப் பகுதியில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை விரிவுபடுத்தினார்.)
Question 35
__________ ஆண்டு போர்ச்சுக்கீசியர் ஆசியாவில் கடற்படை மேலாண்மையைக் கோரினர்.
A
கி.பி 1507
B
கி.பி 1508
C
கி.பி 1509
D
கி.பி 1510
Question 36
நினோ - டி – குன்கா _________ ஆண்டு குஜராத்தின் பகதூர்ஷாவிடமிருந்து பசீன் பகுதியைக் கைப்பற்றினார்.
A
1532
B
1533
C
1534
D
1535
Question 36 Explanation: 
(குறிப்பு: 1537ல் குஜராத்தின் டையூவைக் கைப்பற்றினார்.)
Question 37
நினோ டி குன்கா __________ ஆண்டு போர்ச்சுக்கீசியரின் தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றினார்.
A
1529
B
1530
C
1531
D
1532
Question 37 Explanation: 
(குறிப்பு: போர்ச்சுக்கீசியர் 16 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மேற்கு கடற்கரையில் கோவா, டையூ, டாமன், சால்செட், பசீன், செளல் மற்றும் பம்பாய் போன்ற பகுதிகளைக் கைப்பற்றுவதில் வெற்றிபெற்றனர்.)
Question 38
நினோ டி குன்கா ___________ ஆண்டு சால்செட்டை ஆக்கிரமித்தார்.
A
1538
B
1542
C
1545
D
1548
Question 38 Explanation: 
(குறிப்பு: நினோ டி குன்கா, குஜராத்தின் உள்ளூர்த் தலைவர்களிடமிருந்து டாமனைக் கைப்பற்றிய பின் சால்செட்டை ஆக்கிரமித்தார்.)
Question 39
____________ இந்தியாவில் புகையிலை சாகுபடியை அறிமுகப்படுத்தினர்.
A
டச்சுக்காரர்கள்
B
டேனியர்கள்
C
போர்ச்சுக்கீசியர்கள்
D
ஆங்கிலேயர்கள்
Question 39 Explanation: 
(குறிப்பு: போர்ச்சுக்கீசியரின் செல்வாக்கினால் கத்தோலிக்க கிறித்துவம் இந்தியாவின் கிழக்கு, மேற்கு கடற்கரையோர சில பகுதிகளில் பரவியது.)
Question 40
_________ ஆண்டு போர்ச்சுக்கீசியரால் கோவாவில் அச்சு இயந்திரம் அமைக்கப்பட்டது.
A
1552
B
1554
C
1556
D
1558
Question 40 Explanation: 
(குறிப்பு: அச்சு இயந்திரத்தின் உதவியால் ஓர் ஐரோப்பிய எழுத்தாளர் 1563 ல் கோவாவில் "இந்திய மருத்துவ தாவரங்கள்" என்ற நூலை அச்சிட்டு வெளியிட்டார்.)
Question 41
__________ ஆண்டில் போர்ச்சுக்கீசிய அதிகாரம் கோவா, டையூ, டாமன் ஆகியவற்றோடு நின்றுபோனது.
A
1639
B
1672
C
1719
D
1739
Question 41 Explanation: 
(குறிப்பு: 17 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசிய அதிகாரம் படிப்படியாக டச்சுவிடம் வீழ்ச்சியடைந்தது.)
Question 42
__________ ஆண்டு நெதர்லாந்து ஐக்கிய கிழக்கிந்திய கம்பெனி என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு, கிழக்கிந்திய நாடுகளில் வர்த்தகம் செய்ய அரசிடமிருந்து அனுமதி பெற்றது.
A
1598
B
1599
C
1600
D
1602
Question 42 Explanation: 
(குறிப்பு: போர்ச்சுக்கீசியர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள் இந்தியாவிற்கு வருகை புரிந்தனர்.)
Question 43
டச்சுக்காரர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகு ___________ என்ற இடத்தில் தனது வர்த்தக மையத்தை நிறுவினர்.
A
பாண்டிச்சேரி
B
பழவேற்காடு
C
மசூலிப்பட்டினம்
D
வங்காளம்
Question 43 Explanation: 
(குறிப்பு: ஆரம்த்தில் பழவேற்காடு டச்சுக்காரர்களின் தலைநகராக இருந்தது.)
Question 44
டச்சுக்காரர்கள் ___________ ஆண்டு போர்ச்சுக்கீசியரிடமிருந்து அம்பாய்னாவை கைப்பற்றி இந்தோனேசியா தீவில் ஆதிக்கத்தை நிலை நிறுத்தினர்.
A
1602
B
1603
C
1604
D
1605
Question 44 Explanation: 
(குறிப்பு: மேலும் டச்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியரிடமிருந்து நாகப்பட்டினத்தைக் கைப்பற்றி, தென்னிந்தியா-வில் தங்களை வலிமைப்படுத்திக் கொண்டனர்.)
Question 45
டச்சுக்காரர்கள் __________ ஆண்டு தலைநகரை பழவேற்காட்டிலிருந்து நாகப்பட்டினத்திற்கு மாற்றிக் கொண்டனர்.
A
1680
B
1687
C
1689
D
1690
Question 46
கீழ்க்கண்டவற்றுள் டச்சுக்காரர்களின் முக்கிய வர்த்தக மையங்களாக இருந்தவை எவை?
  1. பழவேற்காடு
  2. சின்சுரா
  3. சூரத்
  4. காசிம்பஜார்
  5. பாட்னா
  6. பாலசோர்
A
அனைத்தும்
B
2, 3, 5
C
1, 2, 4, 5
D
1, 3, 5, 6
Question 46 Explanation: 
(குறிப்பு: ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி 17ஆம் நூற்றாண்டு முழுவதும், டச்சு மற்றும் போர்ச்சுக்கீசியர்களுக்குப் போட்டியாக இருந்தது.)
Question 47
  • கூற்று 1: இந்தியப் பொருட்களான பட்டு, பருத்தி, இண்டிகோ, அரிசி மற்றும் அபினி ஆகியவை டச்சுக்காரர்கள் வர்த்தகம் செய்த பொருட்களாகும்.
  • கூற்று 2: கருப்பு மிளகு மற்றும் மற்ற நறுமணப் பொருட்கள் மீதான வியாபாரத்தில் டச்சுக்காரர்கள் ஏகபோக உரிமை பெற்றிருந்தனர்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 48
___________ ஆண்டு டச்சுக்காரர்கள் அம்பாய்னாவில் பத்து ஆங்கில வியாபாரிகள் மற்றும் ஒன்பது ஜப்பானியர்களை கொன்றனர்.
A
1613
B
1618
C
1620
D
1623
Question 48 Explanation: 
(குறிப்பு: இந்நிகழ்வு டச்சு மற்றும் ஆங்கிலேயர்களிடையே பகைமையை வளர்த்தது.)
Question 49
ஆங்கிலேயர்கள் மற்றும் டச்சுக்காரர்களிடையே நடைபெற்ற பெடரா போர் ___________ ஆண்டு நடைபெற்றது.
A
1728
B
1732
C
1759
D
1788
Question 49 Explanation: 
(குறிப்பு: பெடரா போரில் ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்களைத் தோற்கடித்தனர்.)
Question 50
டச்சுக்காரர்கள் தங்களது குடியேற்றங்களை முழுமையாக __________ ஆண்டு ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தனர்.
A
1759
B
1762
C
1785
D
1795
Question 51
பழவேற்காட்டில் டச்சுக்காரர்கள் __________ ஆண்டு கெல்டிரியா கோட்டையைக் கட்டினர்.
A
1610
B
1612
C
1613
D
1615
Question 51 Explanation: 
(குறிப்பு: 1502 முதல் பழவேற்காட்டின் மீது கட்டுப்பாட்டை ஏற்படுத்திய போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்களால் தங்களின் ஆதிக்கத்தை இழந்தனர்.)
Question 52
கீழ்க்கண்டவற்றுள் டச்சுக்காரர்களின் கோட்டைகள் மற்றும் கைப்பற்றிய பகுதிகள் எவை?
  1. நாகப்பட்டினம்
  2. புன்னக்காயல்
  3. பரங்கிப்பேட்டை
  4. கடலூர்
  5. தேவனாம்பட்டினம்
A
1, 3, 5
B
1, 3, 4
C
1, 2, 3
D
அனைத்தும்
Question 52 Explanation: 
(குறிப்பு: டச்சுக்காரர்களின் காலத்தில் பழவேற்காட்டிலிருந்து வைரங்கள் மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.)
Question 53
இங்கிலாந்து இராணி எலிசபெத் கிழக்கிந்திய நாடுகளுகடன் வர்த்தகம் செய்ய கவர்னர் மற்றும் லண்டன் வர்த்தகர்கள் நிறுவனத்திற்கு __________அன்று ஒரு அனுமதி பட்டயம் வழங்கினார்.
A
1598 டிசம்பர் 28
B
1599 அக்டோபர் 31
C
1600 டிசம்பர் 31
D
1600 அக்டோபர் 31
Question 53 Explanation: 
(குறிப்பு: லண்டன் வர்த்தகர்கள் நிறுவனம் ஒரு கவர்னர் மற்றும் 24 இயக்குநர்களைக் கொண்டிருந்தது.)
Question 54
ஜஹாங்கீர் அவைக்கு, மாலுமி வில்லியம் ஹாக்கின்ஸ் அனுப்பிவைக்கப்பட்ட ஆண்டு
A
1601
B
1603
C
1605
D
1608
Question 54 Explanation: 
(குறிப்பு: வில்லியம் ஹாக்கின்ஸ் சூரத் நகரில் வணிக மையத்தை அமைக்க அனுமதி கோரினார். ஆனால் ஜஹாங்கீர் அனுமதி வழங்கவில்லை.)
Question 55
  • கூற்று: பேரரசர் ஜஹாங்கீர், 1613 ல் சூரத்தில் ஆங்கில வர்த்தக மையத்தை அமைக்க அனுமதித்தார்.
  • காரணம்: சூரத் அருகே நடைபெற்ற கடற்போரில் ஆங்கிலத் தளபதி தாமஸ் பெஸ்ட் போர்ச்சுக்கீசிய கடற்படையைத் தோற்கடித்தார்.
A
கூற்று சரி, காரணம் தவறு
B
கூற்று தவறு, காரணம் சரி
C
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்
D
கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல.
Question 55 Explanation: 
(குறிப்பு: சூரத், ஆரம்பத்தில் ஆங்கிலேயரின் தலைமையகமாக இருந்தது.)
Question 56
கேப்டன் நிக்கோலஸ் டவுண்டன் _________ ஆண்டு போர்ச்சுக்கீசியரை வென்றார்.
A
1613
B
1614
C
1615
D
1616
Question 56 Explanation: 
(குறிப்பு: இந்த சம்பவம் முகலாயர் அவையில் ஆங்கிலேயரின் கெளரவத்தை அதிகரித்தன.)
Question 57
___________ ஆண்டு ஜஹாங்கீர் அவைக்கு இங்கிலாந்து மன்னர் ஜேம்ஸ் அவர்களால் சர் தாமஸ் ரோ அனுப்பிவைக்கப்பட்டார்.
A
1614
B
1615
C
1616
D
1617
Question 57 Explanation: 
(குறிப்பு: சர் தாமஸ் ரோ ஆக்ராவில் மூன்றாண்டுகள் தங்கி இருந்தார்.)
Question 58
சர் தாமஸ் ரோ கீழ்க்கண்ட எந்தெந்த இடங்களில் வணிக மையங்களை நிறுவினார்?
  1. ஆக்ரா
  2. அலகாபாத்
  3. அகமதாபாத்
  4. புரோச்
A
1, 2, 4
B
2, 4
C
1, 3, 4
D
1, 4
Question 58 Explanation: 
(குறிப்பு: ஆக்ராவில் தங்கியிருந்த தாமஸ் ரோ மூன்று ஆண்டு இறுதியில் பேரரசர் ஜஹாங்கீரிடம் இந்தியாவில் வணிகம் செய்யும் உரிமையைப் பெற்றார்.)
Question 59
ஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை வங்காள விரிகுடா கடற்கரையில் உள்ள மசூலிப்பட்டினத்தில் எந்த ஆண்டு நிறுவினர்?
A
1610
B
1611
C
1613
D
1614
Question 59 Explanation: 
(குறிப்பு: மசூலிப்பட்டினம், கோல்கொண்டா அரசின் ஒரு முக்கிய துறைமுகமாகும்.)
Question 60
பிரான்சிஸ் டே என்ற ஆங்கில வணிகர், சந்திரகிரி மன்னரான சென்னப்ப நாயக்கர் என்பவரிடமிருந்து _________ ஆண்டு மெட்ராசை குத்தகைக்குப் பெற்றார்.
A
1619
B
1629
C
1639
D
1642
Question 60 Explanation: 
(குறிப்பு: மெட்ராஸில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி புனித ஜார்ஜ் கோட்டை என அழைக்கப்படும் தனது புகழ்வாய்ந்த வணிக மையத்தை நிறுவியது.)
Question 61
____________ ஆங்கிலேயரால் கட்டப்பட்ட முதல் கோட்டையாகவும், கிழக்குப் பகுதி முழுமைக்குமான தலைமையிடமாகவும் விளங்கியது.
A
புனித டேவிட் கோட்டை
B
புனித ஜார்ஜ் கோட்டை
C
புனித லூயிஸ் கோட்டை
D
புனித பிரான்சிஸ் ஆலயம்
Question 62
மன்னர் இரண்டாம் சார்லசிடமிருந்து பம்பாய் தீவை ____________ ஆண்டு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி பெற்றது.
A
1655
B
1658
C
1668
D
1672
Question 62 Explanation: 
(குறிப்பு: ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி 10 பவுண்டுகள் குத்தகை கொடுத்து பம்பாய் தீவைப் பெற்றது.)
Question 63
இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் _________ இளவரசி காதரினை திருமணம் செய்து கொண்டார்.
A
டச்சு
B
டேனிய
C
போர்ச்சுக்கீசிய
D
எகிப்து
Question 63 Explanation: 
(குறிப்பு: இரண்டாம் சார்லஸ் திருமண சீராக பம்பாய் தீவை போர்ச்சுக்கீசிய மன்னரிடமிருந்து பெற்றார்.)
Question 64
__________ ஆண்டு சுதாநுதி என்ற இடத்தில் ஜாப் சார்னாக் என்பவரால் வர்த்தக மையம் நிறுவப்பட்டது.
A
1672
B
1685
C
1688
D
1690
Question 64 Explanation: 
(குறிப்பு: 1696 ல் சுதநூதியில் வலுவான ஒரு கோட்டை கட்டப்பட்டது.)
Question 65
சுதநூதி, காளிகட்டம் மற்றும் கோவிந்தபூர் ஆகிய மூன்று கிராமங்களின் ஜமீன்தாரி உரிமையை __________ ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி பெற்றது.
A
1690
B
1692
C
1696
D
1698
Question 65 Explanation: 
(குறிப்பு: 1700ல் சுதாநுதியில் கட்டப்பட்ட கோட்டை வில்லியம் கோட்டை என அழைக்கப்பட்டது.)
Question 66
சரியான இணையைத் தேர்ந்தெடு.
  1. பிளாசி போர் - 1757
  2. பக்சார் போர் – 1784
A
இரண்டும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 66 Explanation: 
(குறிப்பு: பக்சார் போர் - 1764.)
Question 67
டென்மார்க் அரசர் நான்காம் கிரிஸ்டியன் ____________ ஆண்டு ஒரு பட்டயத்தை வெளியிட்டு டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்கினார்.
A
1614 மார்ச் 15
B
1615 மார்ச் 16
C
1616 மார்ச் 17
D
1617 மார்ச் 18
Question 67 Explanation: 
(குறிப்பு: செராம்பூர், டேனியர்களின் இந்தியத் தலைமையிடமாக இருந்தது.)
Question 68
தவறான இணையைத் தேர்ந்தெடு. (டேனியர்கள் குடியேற்றங்களை அமைத்த இடம் - ஆண்டு)
  1. தரங்கம்பாடி – 1620
  2. செராம்பூர் – 1676
A
இரண்டும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 69
__________ ஆண்டு டேனியர்கள் இந்தியாவிலிருந்த தங்கள் குடியேற்றங்கள் அனைத்தையும் ஆங்கில அரசுக்கு விற்றனர்.
A
1745
B
1785
C
1792
D
1845
Question 69 Explanation: 
(குறிப்பு: டேனியர்கள் இந்தியாவில் தங்களைப் பலப்படுத்திக் கொள்ள தவறவிட்டனர்.)
Question 70
__________ என்பவர் தரங்கம்பாடியில் அச்சுக்கூடத்தை நிறுவினார்.
A
ஜோதன்பர்க்
B
சீகன்பால்கு
C
கால்பர்ட்
D
மார்காரா
Question 70 Explanation: 
(குறிப்பு: தரங்கம்பாடியை டேனியர்கள் டானஸ்பெர்க் என அழைத்தனர். சீகன்பால்கு என்பவரை டென்மார்க்கின் அரசர் இந்தியாவிற்கு அனுப்பினார்.)
Question 71
பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
A
1662
B
1663
C
1664
D
1665
Question 71 Explanation: 
(குறிப்பு: மன்னர் பதினான்காம் லூயியின் அமைச்சரான கால்பர்ட் என்பவர் இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது.)
Question 72
________ ஆண்டு வியாபாரத்திற்காக பிரான்காய்ஸ் கரோன் தலைமையின் கீழ் ஒரு குழு இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டது.
A
1665
B
1666
C
1667
D
1668
Question 72 Explanation: 
(குறிப்பு: வியாபாரத்திற்காக இந்தியாவிற்கு வருகை தந்த ஐரோப்பிய நாடுகளுள் கடைசி ஐரோப்பிய நாடு பிரான்சு ஆகும்.)
Question 73
தவறான இணையைக் கண்டறிக.
A
பிரான்சிஸ் டே - டென்மார்க்
B
பெட்ரோ காப்ரல் – போர்ச்சுக்கல்
C
கேப்டன் ஹாக்கின்ஸ் – இங்கிலாந்து
D
கால்பர்ட் – பிரான்ஸ்
Question 73 Explanation: 
(குறிப்பு - பிரான்சிஸ் டே - இங்கிலாந்து)
Question 74
இந்தியாவில் முதல் பிரெஞ்சு வணிக மையத்தை கரோன் என்பவர் _________ நகரில் நிறுவினார்.
A
ஆக்ரா
B
சூரத்
C
அகமதாபாத்
D
வங்காளம்
Question 74 Explanation: 
(குறிப்பு: 1669ல் மார்காரா என்பவர் கோல்கொண்டா சுல்தானின் அனுமதி பெற்று பிரான்சின் இரண்டாவது வர்த்தக மையத்தை மசூலிப்பட்டினத்தில் நிறுவினார்.)
Question 75
__________ ஆண்டு பீஜப்பூர் ஆட்சியாளர் ஷெர்கான் லோடிக்கு வழங்கப்பட்ட மானியத்தின் கீழ், மார்டின் என்பவர் பாண்டிச்சேரியில் குடியேற்றத்தை நிறுவினார்.
A
1663
B
1669
C
1673
D
1674
Question 75 Explanation: 
(குறிப்பு: பாண்டிச்சேரியில் செயின்ட் லூயிஸ் எனப்படும் கோட்டையை பிரான்காய்ஸ் மாட்டின் கட்டினார்.)
Question 76
வங்காளத்தின் முகலாய ஆளுநரான செயிஸ்டகானின் அனுமதி பெற்று ________ ஆண்டு பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி கல்கத்தாவுக்கு அருகே சந்திர நாகூர் என்ற நகரை நிர்மாணித்தது.
A
1669
B
1672
C
1673
D
1675
Question 76 Explanation: 
(குறிப்பு: மாஹி, காரைக்கால், பாலசோர் மற்றும் காசிம் பசார் போன்ற இடங்கள் பிரெஞ்சுக்காரர்களின் முக்கிய வர்த்தக மையங்களாகும்.)
Question 77
பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக ஜோசப் பிராங்காய்ஸ் டியூப்ளே நியமனம் செய்யப்பட்ட ஆண்டு
A
1685
B
1712
C
1735
D
1742
Question 77 Explanation: 
(குறிப்பு: டியூப்ளேவுக்கு பின் பாண்டிச்சேரியின் பிரெஞ்சு ஆளுநராக டூமாஸ் அனுப்பப்பட்டார்.)
Question 78
தூரக்கிழக்கு நாடுகளுடன் வணிகம் செய்யும் நோக்கில் ஜோதன்பர்க் என்பவர் சுவீடன் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவிய ஆண்டு
A
1713
B
1728
C
1731
D
1742
Question 78 Explanation: 
(குறிப்பு: டச்சு கிழக்கிந்திய கம்பெனி மற்றும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் வெற்றி சுவீடன் கிழக்கிந்திய கம்பெனியின் தோற்றத்திற்கு ஊக்குவிப்பாக இருந்தது.)
Question 79
பொருத்துக.
  1. டச்சுக்காரர்கள்               i) 1664
  2. ஆங்கிலேயர்கள்             ii) 1602
  3. டேனியர்கள்                     iii) 1600
  4. பிரெஞ்சுக்காரர்கள்        iv) 1616
A
ii i iv iii
B
ii iii iv i
C
i iv v iii
D
iv iii i ii
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 79 questions to complete.

One Comment

Leave a Reply to Shunmuga Arthi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!