Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTnpsc Exam

உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்புறமும் Online Test 6th Social Science Lesson 23 Questions in Tamil

உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்புறமும் Online Test 6th Social Science Lesson 23 Questions in Tamil

Congratulations - you have completed உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்புறமும் Online Test 6th Social Science Lesson 23 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் தவறானது எது?

A
சேலம்
B
திருப்பூர்
C
தஞ்சாவூர்
D
கரூர்
Question 1 Explanation: 
(குறிப்பு: பல லட்சம் மக்கள்தொகையும், அதிக வருவாயும் இருக்கும் ஊர்களை மாநகராட்சியாக தமிழ்நாடு அரசு அறிவிக்கும். தமிழகத்தில் 15 மாநகராட்சிகள் உள்ளன. அவை, சென்னை, 2. மதுரை, 3. கோயம்புத்தூர், 4. திருச்சி, 5. சேலம், 6. திருநெல்வேலி, 7. ஈரோடு 8. தூத்துக்குடி, 9. திருப்பூர், 10. வேலூர், 11. திண்டுக்கல், 12. தஞ்சாவூர், 13. நாகர்கோவில், 14. ஓசூர் 15. ஆவடி
Question 2

இந்தியாவின் மிக பழமையான உள்ளாட்சி அமைப்பான சென்னை மாநகராட்சி எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

A
1588
B
1596
C
1688
D
1720
Question 2 Explanation: 
(குறிப்பு: நகர்ப்புறத்தை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என்றும் கிராமப்புறத்தை ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி என்றும் பிரிக்கப்படுகின்றன. இவை உள்ளாட்சி அமைப்புகள் எனப்படும்.)
Question 3

தமிழ்நாட்டில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் உள்ள நகராட்சியில் ________க்கும் அதிகமான மக்கள்தொகை இருக்கும்.

A
10,000
B
50,000
C
1,00,000
D
10,00,000
Question 3 Explanation: 
(குறிப்பு: நகரத்திற்கும், கிராமத்திற்கும் இடைப்பட்ட ஊர். சுமார் 10 ஆயிரம் பேர் வாழக்கூடிய ஊராக இருந்தால் அது பேரூராட்சி எனப்படும்.)
Question 4

தமிழ்நாட்டில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட நகராட்சி ___________ ஆகும்.

A
அரக்கோணம்
B
அருப்புக்கோட்டை
C
இராசிபுரம்
D
வாலாஜாபேட்டை
Question 4 Explanation: 
(குறிப்பு: வாலாஜாபேட்டை வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.)
Question 5
  • கூற்று 1: நகராட்சிகள் அதிகமாக உள்ள மாவட்டம் பெரம்பலூர் மாவட்டம்.
  • கூற்று 2: இந்தியாவிலேயே முதல் முறையாக பேரூராட்சி என்ற உள்ளாட்சி அமைப்பு தமிழ்நாட்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
A
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
B
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 5 Explanation: 
(குறிப்பு: நகராட்சிகள் அதிகமாக உள்ள மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம்.)
Question 6

சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

  • மாநகராட்சிக்கு இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஒருவர் ஆணையராக இருப்பார்.
  • நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையர்களாக நியமிக்கப்படுவார்கள்.
  • பேரூராட்சியின் நிர்வாக அலுவலர் செயல் அலுவலர் ஆவார்.
A
அனைத்தும்
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 7

மக்களுக்கும் அரசுக்கும் இடையே இணைப்புப் பாலமாக செயல்படுவது

A
மாவட்ட ஊராட்சி
B
கிராம ஊராட்சி
C
பேரூராட்சி
D
மாநகராட்சி
Question 7 Explanation: 
(குறிப்பு: கிராமங்கள், மக்கள்தொகைக்கு ஏற்ப பல பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. இதன் பிரதிநிதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள், ஊராட்சி மன்றத் தலைவர் பகுதி உறுப்பினர்கள் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் (கவுன்சிலர்) மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்.)
Question 8

தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

A
பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்பபடுகிறது.
B
ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் (கவுன்சிலர்) ஒருவர் தேர்ந்தெடுக்கடுப்படுகிறார்.
C
ஊராட்சி ஒன்றியத் தலைவரை மக்கள் நேரடியாக தேர்தலின் மூலம் தேர்ந்தெடுப்பர்.
D
வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாக அலுவலர் ஆவார்.
Question 8 Explanation: 
(குறிப்பு: கவுன்சிலர்கள் தங்களில் ஒருவரை ஊராட்சி ஒன்றியத் தலைவராகத் தேர்ந்தெடுப்பர். ஊராட்சி ஒன்றிய அளவில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.)
Question 9

நீலகிரி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் __________ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

A
3
B
4
C
5
D
6
Question 9 Explanation: 
(குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் அதிகப்படியாக 22 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.)
Question 10

_________ மக்கள்தொகை என்ற அடிப்படையில் மாவட்டம், மாவட்ட ஊராட்சி எனப்படும் பல பகுதிகளாகப் (District Panchayat ward) பிரிக்கப்படுகின்றது.

A
1000
B
10000
C
20000
D
50000
Question 10 Explanation: 
(குறிப்பு: பகுதி உறுப்பினர்களைக் கிராம ஊராட்சி மக்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் தங்களின் ஒருவரை மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கின்றனர்.)
Question 11
  • கூற்று 1: மாநகராட்சித் தலைவரும் (மேயர்), நகராட்சித் தலைவரும் நேரடி தேர்தல் மூலம் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.
  • கூற்று 2: மாநகராட்சித் துணைத்தலைவரும், நகராட்சித் துணைத்தலைவரும் அந்தந்தப் பகுதி (ward) உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார்கள்.
A
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
B
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 11 Explanation: 
(குறிப்பு: தொகுதிகள், பகுதிகள் (wards) என அழைக்கப்படுகின்றன. பகுதி உறுப்பினர்களை மக்கள் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர்.)
Question 12

கீழ்க்கண்டவற்றுள் கிராம ஊராட்சியின் விருப்பப் பணிகள் எவை?

  1. பூங்கா அமைத்தல்       
  2. நூலகம் அமைத்தல்
  3. விளையாட்டு மைதானம் அமைத்தல்
  4. ஊர்ச் சாலைகள் அமைத்தல்
A
1, 2, 4
B
2, 3, 4
C
1, 3, 4
D
1, 2, 3
Question 12 Explanation: 
(குறிப்பு: கிராம ஊராட்சியின் அவசியப் பணிகள் குடிநீர் வழங்குதல், தெருவிளக்கு அமைத்தல், தெருக்களைத் தூய்மைப்படுத்துதல், கழிவுநீர்க் கால்வாய் அமைத்தல், ஊர்ச்சாலைகள் அமைத்தல், மத்திய மாநில அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்.)
Question 13

கிராம ஊராட்சியின் வருவாய்களில் தவறானது எது?

A
குடிநீர் இணைப்புக்கான கட்டணம்
B
நிலவரியிலிருந்து குறிப்பிட்ட பங்கு
C
கடைகள் மீதான வரி
D
பொழுதுபோக்கு வரி
Question 13 Explanation: 
(குறிப்பு: கிராம ஊராட்சியின் வருவாய்கள் வீட்டு வரி, தொழில் வரி, கடைகள் மீதான வரி, குடிநீர் இணைப்புக்கான கட்டணம், நிலவரியிலிருந்து குறிப்பிட்ட பங்கு, சொத்துரிமை மாற்றம் - குறிப்பிட்ட பங்கு, மத்திய மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு)
Question 14
கீழ்க்கண்டவற்றுள் மாநகராட்சியின் வருவாய்கள் எவை?
  1. வீட்டு வரி
  2. குடிநீர் வரி
  3. தொழில்வரி
  4. பொழுதுபோக்கு வரி
  5. கடைகள் மீதான வரி
A
அனைத்தும்
B
1, 2, 5
C
2, 3, 5
D
1, 2, 4, 5
Question 14 Explanation: 
(குறிப்பு: மாநகராட்சியின் வருவாய் வீட்டு வரி, குடிநீர் வரி, கடைகள் மீதான வரி, தொழில் வரி, பொழுதுபோக்கு வரி, வாகனக் கட்டணம், மத்திய மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு)
Question 15

தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

A
ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராமசபை அமைக்கப்பட்டுள்ளது.
B
கிராமசபை ஒரு நிரந்தர அமைப்பு ஆகும்.
C
கிராம சபையே மக்களாட்சி அமைப்பின் ஆணிவேராகும்.
D
கிராமசபைக்கூட்டம் ஆண்டுக்கு மூன்று முறை கூடும்.
Question 15 Explanation: 
(குறிப்பு: கிராமசபைக்கூட்டம் ஆண்டுக்கு நான்கு முறை கூடும். ஜனவரி 26, மே 1, ஆகஸ்டு 15, அக்டோபர் 2 ஆகிய நாள்களில் இக்கூட்டம் கூடும். இந்நாள்களைத் தவிர தேவைக்கேற்பவும் அவசர காலங்களிலும் கிராமசபை கூடும். இவை சிறப்பு கிராமசபைக்கூட்டம் எனப்படும். மாவட்ட ஆட்சித் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஆசிரியர் போன்றோரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்.)
Question 16

தேசிய பஞ்சாயத்து ராஜ் சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?

A
1992 ஏப்ரல் 24
B
1992 ஏப்ரல் 20
C
1992 ஏப்ரல் 25
D
1992 ஏப்ரல் 28
Question 16 Explanation: 
(குறிப்பு: உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களைப் பரவலாக்குவது என்ற நோக்கத்திற்காகத் தேசிய பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்டது. இப்படியான ஓர் அமைப்பு வேண்டும் என்று இதற்கு இப்பெயர் வைத்தவர் மகாத்மா காந்தி.)
Question 17

தேசிய ஊராட்சி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

A
ஜனவரி 24
B
ஜனவரி 26
C
ஏப்ரல் 24
D
ஏப்ரல் 26
Question 17 Explanation: 
(குறிப்பு: பஞ்சாயத்து ராஜ் சிறப்பம்சங்கள் கிராமசபை அமைத்தல் மூன்றடுக்கு ஊராட்சி அமைப்பு இடஒதுக்கீடு தேர்தல் பதவிக்காலம் நிதிக்குழு கணக்கு மற்றும் தணிக்கை)
Question 18

2011இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் எத்தனை சதவீத இடங்களில் வெற்றிபெற்றனர்?

A
33%
B
35%
C
38%
D
39%
Question 18 Explanation: 
(குறிப்பு: அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்கள் பங்கேற்கும் வகையில் 33% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.)
Question 19

__________ ஆண்டு தமிழக அரசு பெண்களுக்கு உள்ளாட்சியில் 50% இட ஒதுக்கீடு வழங்க சட்டத்திருத்தம் செய்துள்ளது.

A
2014
B
2016
C
2017
D
2018
Question 20

தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

A
உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.
B
மத்திய தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்துகிறது.
C
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளது.
D
தமிழகத்தின் தேர்தல் ஆணையம் சென்னை கோயம்பேட்டில் உள்ளது.
Question 20 Explanation: 
(குறிப்பு: மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்துகிறது.)
Question 21

மாநகராட்சியின் தலைவர் __________ என அழைக்கப்படுகிறார்.

A
மேயர்
B
கமிஷனர்
C
பெருந்தலைவர்
D
தலைவர்
Question 22
பொருத்துக.
  1. நகராட்சிகள்                       i) 15
  2. மாநகராட்சிகள்                 ii) 148
  3. மாவட்ட ஊராட்சிகள்       iii) 36
  4. பேரூராட்சிகள்                    iv) 561
  5. ஊராட்சி ஒன்றியங்கள்    v) 385
A
i iii ii iv v
B
ii iii i v iv
C
iii v iv ii i
D
ii i iii iv v
Question 22 Explanation: 
(குறிப்பு: தமிழ்நாட்டில் 12618 கிராம ஊராட்சிகள் உள்ளன.)
Question 23
கீழ்க்கண்டவற்றுள் நகர்ப்புற அமைப்புடன் பொருந்தாதது____________
A
மாநகராட்சி
B
நகராட்சி
C
பேரூராட்சி
D
ஊராட்சி
Question 23 Explanation: 
விளக்கம்: நகர்ப்புறத்தை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என்றும் கிராமப்புரத்தை ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி என்றும் பிரித்து வைத்திருக்கலாம்.
Question 24
கீழ்க்கண்வர்களில் யார் ஒருவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
A
ஊராட்சி மன்றத் தலைவர்
B
பகுதி உறுப்பினர்கள்
C
ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்
D
மேற்கண்ட அனைவரும்
Question 25
கூற்று 1: மாவட்ட ஊராட்சியின் பகுதி உறுப்பினர்களைக் கிராம ஊராட்சி மக்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர். கூற்று 2: மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் தங்களின் ஒருவரை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கின்றனர்.
A
கூற்று 1 சரி, 2 தவறு
B
கூற்று 1 தவறு, 2 சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 26
கீழ்க்கண்டவற்றுள் கிராம ஊராட்சியின் அவசியமான பணிகளுல் பொருந்தாதது எது.
A
தெருக்களைத் தூய்மைப்படுத்துதல்
B
ஊர்ச்சாலைகள் அமைத்தல்
C
மத்திய அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்
D
தெருவிளக்கு அமைத்தல்
Question 26 Explanation: 
விளக்கம்: மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 26 questions to complete.

3 Comments

Leave a Reply to Jaga Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!