உடல் நலம் மற்றும் நோய்கள் Online Test 10th Science Lesson 21 Questions in Tamil
உடல் நலம் மற்றும் நோய்கள் Online Test 10th Science Lesson 21 Questions in Tamil
Quiz-summary
0 of 81 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 81 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- Answered
- Review
-
Question 1 of 81
1. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] கொடூரமான, வன்முறையான, தீங்கு விளைவிக்கின்ற அல்லது காயமேற்படுத்துகின்ற தாக்குதலுக்கு ஒருவரை மற்றொருவர் உள்ளாக்குவது தவறான பயன்பாடு எனப்படும்.
2] இது குடும்பம் மற்றும் அக்குடும்பத்தை சாராத நபர்களினால் ஏற்படுகிறது.
3] இது உடல், உணர்வு அல்லது மனம், வாய்மொழி, குழந்தைகள் மற்றும் பாலியல் ரீதியிலான தவறான பயன்பாடுகளை உள்ளடக்கியதாகும்.
Correct
விளக்கம்: கொடூரமான, வன்முறையான, தீங்கு விளைவிக்கின்ற அல்லது காயமேற்படுத்துகின்ற தாக்குதலுக்கு ஒருவரை மற்றொருவர் உள்ளாக்குவது தவறான பயன்பாடு எனப்படும். இது குடும்பம் மற்றும் அக்குடும்பத்தை சாராத நபர்களினால் ஏற்படுகிறது.
Incorrect

Question 2 of 81
2. Question
- போக்சோ சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ____________
Correct
விளக்கம்: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக 2012 – இல் போக்சோ (POCSO) சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
Incorrect
விளக்கம்: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக 2012 – இல் போக்சோ (POCSO) சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
-
Question 3 of 81
3. Question
- குழந்தை உரிமைகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ____________
Correct
விளக்கம்: குழந்தை உரிமைகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 2005 ஆகும்.Q
Incorrect
விளக்கம்: குழந்தை உரிமைகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 2005 ஆகும்.Q
-
Question 4 of 81
4. Question
- குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு ____________
Correct
விளக்கம்: குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு மார்ச் 2007 ஆகும்.
Incorrect
விளக்கம்: குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு மார்ச் 2007 ஆகும்.
-
Question 5 of 81
5. Question
- மருந்துகளின் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் மீதான சர்வதேச நாள் ____________
Correct
விளக்கம்: மருந்துகளின் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் மீதான சர்வதேச நாள் – ஜுன் 26
Incorrect
விளக்கம்: மருந்துகளின் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் மீதான சர்வதேச நாள் – ஜுன் 26
-
Question 6 of 81
6. Question
- போதையூட்டும் மருந்துகள் மற்றும் மனோவியல் மருந்துகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ____________
Correct
விளக்கம்: 1985 – ஆம் ஆண்டில் போதையூட்டும் மருந்துகள் மற்றும் மனோவியல் மருந்துகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
Incorrect
விளக்கம்: 1985 – ஆம் ஆண்டில் போதையூட்டும் மருந்துகள் மற்றும் மனோவியல் மருந்துகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
-
Question 7 of 81
7. Question
- கூற்று(A): நச்சு நீக்கம் மருந்துகளைப் படிப்படியாக நிறுத்தி, அடிமையானவரை அறிகுறிகளிலிருந்து மீட்பதற்கு உதவுகிறது.
காரணம்(R): இதனால் அவர்கள் கடுமையான உடல் மற்றும் உணர்வுரீதியான தொந்தரவுக்கு உள்ளாகின்றனர்.
Correct
விளக்கம்: நச்சு நீக்கம் மருந்துகளைப் படிப்படியாக நிறுத்தி, அடிமையானவரை அறிகுறிகளிலிருந்து மீட்பதற்கு உதவுகிறது. இதனால் அவர்கள் கடுமையான உடல் மற்றும் உணர்வுரீதியான தொந்தரவுக்கு உள்ளாகின்றனர்.

Question 8 of 81
8. Question
- புகையிலையானது ____________ புகையிலைத் தாவரங்களிலிருந்து பெறப்படுகிறது.
Correct
விளக்கம்: புகையிலையானது நிக்கோட்டியானா டொபாக்கம் மற்றும் நிக்கோட்டியானா ரஸ்டிகா ஆகிய புகையிலைத் தாவரங்களிலிருந்து பெறப்படுகிறது.
Incorrect
விளக்கம்: புகையிலையானது நிக்கோட்டியானா டொபாக்கம் மற்றும் நிக்கோட்டியானா ரஸ்டிகா ஆகிய புகையிலைத் தாவரங்களிலிருந்து பெறப்படுகிறது.
-
Question 9 of 81
9. Question
- புகைபிடித்தலின் போது வெளிப்படும் புகையில் உள்ள ____________ எனும் புற்றுநோய்க் காரணிகள், நுரையீரல் புற்றுநோயை உண்டாக்குகின்றன.
Correct
விளக்கம்: புகைபிடித்தலின் போது வெளிப்படும் புகையில் உள்ள பென்சோபைரின் மற்றும் பாலிசைக்ளிக் ஹைட்ரோகார்பன்கள் எனும் புற்றுநோய்க் காரணிகள், நுரையீரல் புற்றுநோயை உண்டாக்குகின்றன.
Incorrect
விளக்கம்: புகைபிடித்தலின் போது வெளிப்படும் புகையில் உள்ள பென்சோபைரின் மற்றும் பாலிசைக்ளிக் ஹைட்ரோகார்பன்கள் எனும் புற்றுநோய்க் காரணிகள், நுரையீரல் புற்றுநோயை உண்டாக்குகின்றன.
-
Question 10 of 81
10. Question
- நுரையீரலின் மூச்சு சிற்றறைகளில் ஏற்படும் வீக்கம் ____________ எனும் நோயை உண்டாக்குகிறது.
Correct
விளக்கம்: நுரையீரலின் மூச்சு சிற்றறைகளில் (lung alveoli) ஏற்படும் வீக்கம் வாயு பரிமாற்றத்திற்கான மேற்பரப்பை குறைத்து எம்பைசீமா எனும் நோயை உண்டாக்குகிறது.
Incorrect
விளக்கம்: நுரையீரலின் மூச்சு சிற்றறைகளில் (lung alveoli) ஏற்படும் வீக்கம் வாயு பரிமாற்றத்திற்கான மேற்பரப்பை குறைத்து எம்பைசீமா எனும் நோயை உண்டாக்குகிறது.
-
Question 11 of 81
11. Question
- கூற்று(A): புகைபிடித்தலின்போது உண்டாகும் புகையில் உள்ள கார்பன்–மோனாக்சைடு இரத்த சிவப்பணுவில் உள்ள ஹீமோகுளோபினுடன் பிணைப்பை ஏற்படுத்தி அதன் ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் திறனை குறைக்கிறது.
காரணம்(R): இதனால் உடல் திசுக்களில் ரத்தசோகையை உண்டாக்குகிறது.
Correct
விளக்கம்: புகைபிடித்தலின்போது உண்டாகும் புகையில் உள்ள கார்பன்–மோனாக்சைடு இரத்த சிவப்பணுவில் உள்ள ஹீமோகுளோபினுடன் பிணைப்பை ஏற்படுத்தி அதன் ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் திறனை குறைக்கிறது. இதனால் உடல் திசுக்களில் ஹைபாக்சியாவை உண்டாக்குகிறது.

Question 12 of 81
12. Question
- கூற்று(A): புகைபிடித்தலினால் ஏற்படும் அதிக இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
காரணம்(R): இதனால் இதய நோய்கள் உண்டாவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது.
Correct
விளக்கம்: புகைபிடித்தலினால் ஏற்படும் அதிக இரத்த அழுத்தம் இதய நோய்கள் உண்டாவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது.
Incorrect
விளக்கம்: புகைபிடித்தலினால் ஏற்படும் அதிக இரத்த அழுத்தம் இதய நோய்கள் உண்டாவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது.
-
Question 13 of 81
13. Question
- புகைபிடித்தலினால் ____________ சுரப்பினை அதிகரித்து, இரைப்பை மற்றும் முன்சிறுகுடல் புண்களை (அல்சர்) ஏற்படுத்துகிறது.
Correct
விளக்கம்: இரைப்பை சுரப்பினை அதிகரித்து, இரைப்பை மற்றும் முன்சிறுகுடல் புண்களை (அல்சர்) ஏற்படுத்துகிறது.
Incorrect
விளக்கம்: இரைப்பை சுரப்பினை அதிகரித்து, இரைப்பை மற்றும் முன்சிறுகுடல் புண்களை (அல்சர்) ஏற்படுத்துகிறது.
-
Question 14 of 81
14. Question
- உலக சுகாதார நிறுவனம் (WHO) எந்த ஆண்டுபோதை (drug) என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஆலோசனை வழங்கியது?
Correct
விளக்கம்: உலக சுகாதார நிறுவனம் (WHO) 1984 போதை (drug) என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஆலோசனை வழங்கியது.
Incorrect
விளக்கம்: உலக சுகாதார நிறுவனம் (WHO) 1984 போதை (drug) என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஆலோசனை வழங்கியது.
-
Question 15 of 81
15. Question
- புகையிலை எதிர்ப்புச் சட்டம் ____________ இல் கொண்டு வரப்பட்டது.
Correct
விளக்கம்: புகையிலை எதிர்ப்புச் சட்டம் மே-1 2004- இல் கொண்டு வரப்பட்டது.
Incorrect
விளக்கம்: புகையிலை எதிர்ப்புச் சட்டம் மே-1 2004- இல் கொண்டு வரப்பட்டது.
-
Question 16 of 81
16. Question
- உலக புகையிலை எதிர்ப்பு நாள் ____________
Correct
விளக்கம்: மே – 31 புகையிலை எதிர்ப்பு நாளாகக் கருதப்படுகிறது. (உலக புகையிலை எதிர்ப்பு நாள்)
Incorrect
விளக்கம்: மே – 31 புகையிலை எதிர்ப்பு நாளாகக் கருதப்படுகிறது. (உலக புகையிலை எதிர்ப்பு நாள்)
-
Question 17 of 81
17. Question
- மதுவினால் உடல் நலத்திற்கு ஏற்படும் தீமையான விளைவுகளில் எவை சரியானவை?
1] நரம்பு செல்லைப் பாதித்து பல்வேறு விதமான மன மற்றும் உடல்ரீதியான தொந்தரவுகளை உண்டாக்குகிறது.
2] உடல் உறுப்புகளின் ஒருங்கிணைப்பை அதிகரிக்கிறது.
3] மங்கலான, குறைந்த பார்வை, சாலைகளில் விபத்துகளில் முடிகிறது.
Correct
விளக்கம்: நரம்பு செல்லைப் பாதித்து பல்வேறு விதமான மன மற்றும் உடல்ரீதியான தொந்தரவுகளை உண்டாக்குகிறது. உடல் உறுப்புகளின் ஒருங்கிணைப்பை குறைக்கிறது. மங்கலான, குறைந்த பார்வை, சாலைகளில் விபத்துகளில் முடிகிறது.

Question 18 of 81
18. Question
- மதுவினால் உடல் நலத்திற்கு ஏற்படும் தீமையான விளைவுகளில் எவை சரியானவை?
1] இரத்த நாளங்களின் விரிவடைதல் இதயத்தின் செயல்பாட்டைப் பாதிக்கின்றது.
2] உடல் தன் கட்டுப்பாட்டையும், தன்ணுணர்வினையும் இழந்து உடல்நலக் கோளாறுகளை உண்டாக்கி இறுதியில் இறப்பை ஏற்படுத்துகிறது.
Correct
விளக்கம்: இரத்த நாளங்களின் விரிவடைதல் இதயத்தின் செயல்பாட்டைப் பாதிக்கின்றது. உடல் தன் கட்டுப்பாட்டையும், தன்ணுணர்வினையும் இழந்து உடல்நலக் கோளாறுகளை உண்டாக்கி இறுதியில் இறப்பை ஏற்படுத்துகிறது.

Question 19 of 81
19. Question
- கல்லீரல் சேதத்தினால் கல்லீரலில் அதிக அளவு கொழுப்பு சேமிக்கப்பட்டு ____________ மற்றும் நார்த் திசுக்கள் உருவாதலை ஏற்படுத்துகிறது.
Correct
விளக்கம்: கல்லீரல் சேதத்தினால் கல்லீரலில் அதிக அளவு கொழுப்பு சேமிக்கப்பட்டு சிர்ரோஸிஸ் மற்றும் நார்த் திசுக்கள் உருவாதலை ஏற்படுத்துகிறது.
Incorrect
விளக்கம்: கல்லீரல் சேதத்தினால் கல்லீரலில் அதிக அளவு கொழுப்பு சேமிக்கப்பட்டு சிர்ரோஸிஸ் மற்றும் நார்த் திசுக்கள் உருவாதலை ஏற்படுத்துகிறது.
-
Question 20 of 81
20. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] டயாபடீஸ் மெல்லிடஸ் ஒரு நாள்பட்ட வளர்சிதை மாற்றக் கோளாறாகும்.
2] லத்தீனில் டயாபடீஸ் – இனிப்பு : மெல்லிடஸ் – ஓடுகின்ற எனப் பொருள்படும்.
Correct
விளக்கம்: டயாபடீஸ் மெல்லிடஸ் ஒரு நாள்பட்ட வளர்சிதை மாற்றக் கோளாறாகும். (கிரேக்கத்தில் டயாபடீஸ் – ஓடுகின்ற : மெல்லிடஸ் – இனிப்பு எனப் பொருள்படும்).
Incorrect
விளக்கம்: டயாபடீஸ் மெல்லிடஸ் ஒரு நாள்பட்ட வளர்சிதை மாற்றக் கோளாறாகும். (கிரேக்கத்தில் டயாபடீஸ் – ஓடுகின்ற : மெல்லிடஸ் – இனிப்பு எனப் பொருள்படும்).
-
Question 21 of 81
21. Question
- கூற்று(A): இன்சுலின் சுரப்பியின் பற்றாக்குறையான, குறைபாடான இன்சுலின் செயல்பாடு அல்லது இன்சுலின் சுரக்காமை போன்றவற்றால் அதிகரிக்கும்.
காரணம்(R): இரத்த குளுக்கோஸ் அளவு இதன் பண்பாகும்.
Correct
விளக்கம்: இன்சுலின் சுரப்பியின் பற்றாக்குறையான, குறைபாடான இன்சுலின் செயல்பாடு அல்லது இன்சுலின் சுரக்காமை போன்றவற்றால் அதிகரிக்கும் இரத்த குளுக்கோஸ் அளவு இதன் பண்பாகும்.
Incorrect
விளக்கம்: இன்சுலின் சுரப்பியின் பற்றாக்குறையான, குறைபாடான இன்சுலின் செயல்பாடு அல்லது இன்சுலின் சுரக்காமை போன்றவற்றால் அதிகரிக்கும் இரத்த குளுக்கோஸ் அளவு இதன் பண்பாகும்.
-
Question 22 of 81
22. Question
- டயாபடீஸ் மெல்லிடஸ் பொதுவாக அதிக அளவில் காணப்படும் ____________ குறைபாடாகும்.
Correct
விளக்கம்: டயாபடீஸ் மெல்லிடஸ் பொதுவாக அதிக அளவில் காணப்படும் கணையக் குறைபாடாகும்.
Incorrect
விளக்கம்: டயாபடீஸ் மெல்லிடஸ் பொதுவாக அதிக அளவில் காணப்படும் கணையக் குறைபாடாகும்.
-
Question 23 of 81
23. Question
- நீரிழிவு நோயாளிகளில் 10%-லிருந்து 20% ____________ வகையைச் சார்ந்தவர்களாவர்.
Correct
விளக்கம்: நீரிழிவு நோயாளிகளில் 10%-லிருந்து 20% IDDM (Insulin Dependent Diabetes Mellitus) வகையைச் சார்ந்தவர்களாவர்.
Incorrect
விளக்கம்: நீரிழிவு நோயாளிகளில் 10%-லிருந்து 20% IDDM (Insulin Dependent Diabetes Mellitus) வகையைச் சார்ந்தவர்களாவர்.
-
Question 24 of 81
24. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] IDDM திடீரெனத் தோன்றும், உயிருக்கு ஆபத்தானது. இது கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் அழிவதன் காரணமாக ஏற்படுகிறது.
2] இதனால் வழக்கத்திற்கு மாறாக, போதுமான அளவு இன்சுலின் சுரக்காமல் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைகிறது.
Correct
விளக்கம்: IDDM திடீரெனத் தோன்றும், உயிருக்கு ஆபத்தானது. இது கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் அழிவதன் காரணமாக ஏற்படுகிறது. இதனால் வழக்கத்திற்கு மாறாக, போதுமான அளவு இன்சுலின் சுரக்காமல் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கிறது.

Question 25 of 81
25. Question
- குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே ஏற்படுவது ____________
Correct
விளக்கம்: IDDM (வகை-1 இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோய்) இது குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே ஏற்படுகிறது.
Incorrect
விளக்கம்: IDDM (வகை-1 இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோய்) இது குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே ஏற்படுகிறது.
-
Question 26 of 81
26. Question
- பின்வரும் காரணங்கள் எந்த வகை நீரிழிவு நோய் என கண்டறிக?
1] மரபணு மரபுவழி
2] சுற்றுச்சூழல் காரணிகள்
3] வைரஸ் காரணமாக தொற்றுகள்
4]கடுமையான மன அழுத்தம்
Correct
விளக்கம்: இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோய்க்கான காரணங்கள்: மரபணு மரபுவழி மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் (வைரஸ் காரணமாக தொற்றுகள், கடுமையான மன அழுத்தம்) ஆகியவை இவ்வகையான நீரிழிவு நோய்க்கு காரணமாகின்றன.

Question 27 of 81
27. Question
- இன்சுலின் சாராத நீரிழிவு நோய் ____________ என அழைக்கப்படும்.
Correct
விளக்கம்: இன்சுலின் சாராத நீரிழிவு நோய் வயதானோரின் நீரிழிவு நோய் என்று அழைக்கப்படும்.
Incorrect
விளக்கம்: இன்சுலின் சாராத நீரிழிவு நோய் வயதானோரின் நீரிழிவு நோய் என்று அழைக்கப்படும்.
-
Question 28 of 81
28. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] NIDDM 80%-லிருந்து 90% நீரிழிவு நோயாளிகளில் காணப்படுகிறது.
2] இது மெதுவாகவும், மிதமாகவும் உருவாகி அதிக நிலைப்புத் தன்மை பெறுகிறது.
3] கணையத்தால் சுரக்கப்படுகின்ற இன்சுலினின் அளவு போதுமானதாக உள்ளது.
Correct
விளக்கம்: NIDDM 80%-லிருந்து 90% நீரிழிவு நோயாளிகளில் காணப்படுகிறது. இது மெதுவாகவும், மிதமாகவும் உருவாகி அதிக நிலைப்புத் தன்மை பெறுகிறது. கணையத்தால் சுரக்கப்படுகின்ற இன்சுலினின் அளவு போதுமானதாக உள்ளது. ஆனால் அதன் செயல்பாடு குறைபாடு உள்ளதாகக் காணப்படுகிறது.

Question 29 of 81
29. Question
- பின்வரும் காரணங்கள் எந்த வகை நீரிழிவு நோய் என கண்டறிக?
1] வயது அதிகரித்தல்
2] உடல் பருமன்
3] உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறை
Correct
விளக்கம்: இன்சுலின் சாராத நீரிழிவு நோய்க்கான காரணங்கள்: வயது அதிகரித்தல் (நடுத்தர மற்றும் வயதானவர்களை பாதிக்கும்), உடல் பருமன், உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறை, அளவுக்கதிகமாக உண்ணுதல், உடல் செயல்பாடுகள் இல்லாமை போன்ற காரணிகள் இதற்கு காரணமாய் அமைகின்றன.

Question 30 of 81
30. Question
- WHO-வின் திருத்தம் செய்யப்பட்ட புள்ளி விவரப்படி எந்த ஆண்டில் இந்தியாவில் 57.2 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்: WHO-வின் திருத்தம் செய்யப்பட்ட புள்ளி விவரப்படி 2025-இல் இந்தியாவில் 57.2 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: WHO-வின் திருத்தம் செய்யப்பட்ட புள்ளி விவரப்படி 2025-இல் இந்தியாவில் 57.2 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
-
Question 31 of 81
31. Question
- 2030 – இல் இறப்பை ஏற்படுத்துகின்ற காரணிகளில் நீரிழிவு நோய் ____________ ஆக திகழுமென உலக சுகாதார (WHO) அமைப்பு தெரிவிக்கிறது.
Correct
விளக்கம்: 2030 – இல் இறப்பை ஏற்படுத்துகின்ற காரணிகளில் நீரிழிவு நோய் 7-வதாகத் திகழுமென உலக சுகாதார (WHO) அமைப்பு தெரிவிக்கிறது.
Incorrect
விளக்கம்: 2030 – இல் இறப்பை ஏற்படுத்துகின்ற காரணிகளில் நீரிழிவு நோய் 7-வதாகத் திகழுமென உலக சுகாதார (WHO) அமைப்பு தெரிவிக்கிறது.
-
Question 32 of 81
32. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] இந்தியாவில் ஏழு பேரில் ஒருவர் நீரிழிவு நோயாளி ஆவார்.
2] நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சராசரி வயது 45 ஆகும். பிற நாடுகளில் 56 வயதாகும்.
Correct
விளக்கம்: இந்தியாவில் எட்டு பேரில் ஒருவர் நீரிழிவு நோயாளி ஆவார். நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சராசரி வயது 40 ஆகும். பிற நாடுகளில் 55 வயதாகும்.
Incorrect
விளக்கம்: இந்தியாவில் எட்டு பேரில் ஒருவர் நீரிழிவு நோயாளி ஆவார். நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சராசரி வயது 40 ஆகும். பிற நாடுகளில் 55 வயதாகும்.
-
Question 33 of 81
33. Question
- பொருத்துக
a) இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரித்தல் – 1] பாலியூரியா
b) அதிகளவு சிறுநீர் வெளியேறுதல் – 2] ஹைபர்கிளைசீமியா
c) நீரிழப்பினால் ஏற்படும் தாகம் – 3] கிளைகோசூரியா
d) குளுக்கோஸ் சிறுநீரில் வெளியேற்றப்படுதல் – 4] பாலிபேஜியா
e) அதிகப்படியான பசி – 5] பாலிடிப்சியா
Correct
Incorrect
-
Question 34 of 81
34. Question
- WHO-வின் அளவீட்டின்படி உணவுண்ணா நிலையில் இரத்த குளுக்கோஸின் அளவு ____________ விட அதிகமாகவும் காணப்பட்டால் டயாபடீஸைக் கண்டறிந்து உறுதிப்படுத்துதல் அவசியமானதாகும்.
Correct
விளக்கம்: WHO-வின் அளவீட்டின்படி உணவுண்ணா நிலையில் இரத்த குளுக்கோஸின் அளவு 140 மிகி/டெசிலி விட அதிகமாகவும் காணப்பட்டால் டயாபடீஸைக் கண்டறிந்து உறுதிப்படுத்துதல் அவசியமானதாகும்.
Incorrect
விளக்கம்: WHO-வின் அளவீட்டின்படி உணவுண்ணா நிலையில் இரத்த குளுக்கோஸின் அளவு 140 மிகி/டெசிலி விட அதிகமாகவும் காணப்பட்டால் டயாபடீஸைக் கண்டறிந்து உறுதிப்படுத்துதல் அவசியமானதாகும்.
-
Question 35 of 81
35. Question
- WHO-வின் அளவீட்டின்படி உணவுண்ணா நிலையில் சீரற்ற இரத்த குளுக்கோஸ் அளவு ____________ விட அதிகமாகவும் காணப்பட்டால் டயாபடீஸைக் கண்டறிந்து உறுதிப்படுத்துதல் அவசியமானதாகும்.
Correct
விளக்கம்: WHO-வின் அளவீட்டின்படி உணவுண்ணா நிலையில் சீரற்ற இரத்த குளுக்கோஸ் அளவு 200 மிகி/டெசிலி–ஐ விட அதிகமாகவும் இரண்டு சந்தர்ப்பங்களுக்கு மேல் காணப்பட்டால் டயாபடீஸைக் கண்டறிந்து உறுதிப்படுத்துதல் அவசியமானதாகும்.

Question 36 of 81
36. Question
- கார்போஹைட்ரேட்டுகள் ____________ மற்றும் சிக்கலான சர்க்கரை வடிவத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
Correct
விளக்கம்: கார்போஹைட்ரேட்டுகள் ஸ்டார்ச் மற்றும் சிக்கலான சர்க்கரை வடிவத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
Incorrect
விளக்கம்: கார்போஹைட்ரேட்டுகள் ஸ்டார்ச் மற்றும் சிக்கலான சர்க்கரை வடிவத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
-
Question 37 of 81
37. Question
- மொத்த கலோரி மதிப்பில்____________ அளவு கார்போஹைட்ரேட் மூலம் பராமரிக்கப்பட வேண்டும்.
Correct
விளக்கம்: மொத்த கலோரி மதிப்பில் 50 – 55% அளவு கார்போஹைட்ரேட் மூலம் பராமரிக்கப்பட வேண்டும்.
Incorrect
விளக்கம்: மொத்த கலோரி மதிப்பில் 50 – 55% அளவு கார்போஹைட்ரேட் மூலம் பராமரிக்கப்பட வேண்டும்.
-
Question 38 of 81
38. Question
- இந்தியர்களின் இரத்தத்தில் இருக்க வேண்டிய விரும்பத்தக்க கொழுப்பின் அளவானது ____________ ஆகும்.
Correct
விளக்கம்: இந்தியர்களின் இரத்தத்தில் இருக்க வேண்டிய விரும்பத்தக்க கொழுப்பின் அளவானது 200 மிகி/டெசிலி ஆகும்.
Incorrect
விளக்கம்: இந்தியர்களின் இரத்தத்தில் இருக்க வேண்டிய விரும்பத்தக்க கொழுப்பின் அளவானது 200 மிகி/டெசிலி ஆகும்.
-
Question 39 of 81
39. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] LDL நல்ல கொலஸ்ட்ரால் இதய நோய்க்கான ஆபத்தை குறைக்கிறது.
2] HDL இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது.
Correct
விளக்கம்: HDL (அதிக அடர்த்தி கொண்ட லிப்போபுரதம்) அல்லது நல்ல கொலஸ்ட்ரால் இதய நோய்க்கான ஆபத்தை குறைக்கிறது. மாறாக LDL (குறை அடர்த்தி கொண்ட லிப்போபுரதம்) இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது.
Incorrect
விளக்கம்: HDL (அதிக அடர்த்தி கொண்ட லிப்போபுரதம்) அல்லது நல்ல கொலஸ்ட்ரால் இதய நோய்க்கான ஆபத்தை குறைக்கிறது. மாறாக LDL (குறை அடர்த்தி கொண்ட லிப்போபுரதம்) இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது.
-
Question 40 of 81
40. Question
- புற்றுநோய் என்ற சொல்லுக்கு இலத்தீன் மொழியில் ____________ என்று பொருள்.
Correct
விளக்கம்: புற்றுநோய் என்ற சொல்லுக்கு இலத்தீன் மொழியில் ‘நண்டு’ என்று பொருள்.
Incorrect
விளக்கம்: புற்றுநோய் என்ற சொல்லுக்கு இலத்தீன் மொழியில் ‘நண்டு’ என்று பொருள்.
-
Question 41 of 81
41. Question
- புற்றுநோயைப் பற்றிய படிப்புக்கு ____________ என்று பெயர்.
Correct
விளக்கம்: புற்றுநோயைப் பற்றிய படிப்புக்கு “ஆன்காலஜி” (ஆன்கோ – கட்டி) என்று பெயர்.
Incorrect
விளக்கம்: புற்றுநோயைப் பற்றிய படிப்புக்கு “ஆன்காலஜி” (ஆன்கோ – கட்டி) என்று பெயர்.
-
Question 42 of 81
42. Question
- உலக புற்றுநோய் நாள் ____________
Correct
விளக்கம்: உலக புற்றுநோய் நாள் – பிப்ரவரி 4
Incorrect
விளக்கம்: உலக புற்றுநோய் நாள் – பிப்ரவரி 4
-
Question 43 of 81
43. Question
- தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள்____________
Correct
விளக்கம்: தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் – நவம்பர் 7
Incorrect
விளக்கம்: தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் – நவம்பர் 7
-
Question 44 of 81
44. Question
- புகையிலைப் பழக்கம், அட்ரினலின் சுரப்பைத் தூண்டுகிறது. இதற்குக் காரணமான காரணி
Correct
விளக்கம்: உலகளாவிய வணிக ரீதியிலான புகையிலை தயாரிப்பில் பயன்படுகின்றன. அதிலிருக்கும் “நிக்கோட்டின்” எனும் ஆல்கலாய்டு புகையிலைக்கு ஒருவர் அடிமையாதலை ஏற்படுத்துகிறது. நிக்கோட்டின் கிளர்ச்சியைத் தூண்டும், மிகவும் தீங்கு விளைவிக்கின்ற, நச்சுத்தன்மை வாய்ந்த பொருளாகும்.

Question 45 of 81
45. Question
- சாதாரண செல்களை விட புற்றுநோய் செல்கள் கதிர்வீச்சினால் சுலபமாக அழிக்கப்படுகின்றன. ஏனெனில் அவை
Correct
விளக்கம்: கட்டுப்பாடற்ற, அபரிமிதமான செல் பிரிதல் புற்றுநோயாகும். எனவே அவை சாதாரண செல்களை விட புற்றுநோய் செல்கள் கதிர்வீச்சினால் சுலபமாக அழிக்கப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: கட்டுப்பாடற்ற, அபரிமிதமான செல் பிரிதல் புற்றுநோயாகும். எனவே அவை சாதாரண செல்களை விட புற்றுநோய் செல்கள் கதிர்வீச்சினால் சுலபமாக அழிக்கப்படுகின்றன.
-
Question 46 of 81
46. Question
- நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலைத் தாக்கும் புற்றுநோய் வகை
Correct
விளக்கம்: லிம்போமா புற்றுநோய் வகை நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலைத் தாக்கும்.
Incorrect
விளக்கம்: லிம்போமா புற்றுநோய் வகை நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலைத் தாக்கும்.
-
Question 47 of 81
47. Question
- அளவுக்கு மிஞ்சிய மதுப்பழக்கத்தினால் உருவாவது
Correct
விளக்கம்: கல்லீரல் சேதத்தினால் கல்லீரலில் அதிக அளவு கொழுப்பு சேமிக்கப்பட்டு சிர்ரோஸிஸ் மற்றும் நார்த் திசுக்கள் உருவாதலை ஏற்படுத்துகிறது.
Incorrect
விளக்கம்: கல்லீரல் சேதத்தினால் கல்லீரலில் அதிக அளவு கொழுப்பு சேமிக்கப்பட்டு சிர்ரோஸிஸ் மற்றும் நார்த் திசுக்கள் உருவாதலை ஏற்படுத்துகிறது.
-
Question 48 of 81
48. Question
- இதயக்குழல் இதயநோய் ஏற்படக் காரணம்
Correct
விளக்கம்: இதயக்குழல் இதயநோய் ஏற்படக் காரணம் இதயத் தசைகளுக்கு போதிய இரத்தம் செல்லாமை ஆகும்.
Incorrect
விளக்கம்: இதயக்குழல் இதயநோய் ஏற்படக் காரணம் இதயத் தசைகளுக்கு போதிய இரத்தம் செல்லாமை ஆகும்.
-
Question 49 of 81
49. Question
- எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு ———————– என்று பெயர்.
Correct
விளக்கம்: கார்சினோமா : எபிதீலியல் மற்றும் சுரப்பிகளின் திசுக்களில் உருவாகிறது.
Incorrect
விளக்கம்: கார்சினோமா : எபிதீலியல் மற்றும் சுரப்பிகளின் திசுக்களில் உருவாகிறது.
-
Question 50 of 81
50. Question
- மெட்டாஸ்டாசிஸ் இதனுடன் தொடர்புடையது
Correct
விளக்கம்: மெட்டாஸ்டாசிஸ் வீரியமிக்க கட்டி (மாலிக்னன்ட்) தொடர்புடையது ஆகும்.
Incorrect
விளக்கம்: மெட்டாஸ்டாசிஸ் வீரியமிக்க கட்டி (மாலிக்னன்ட்) தொடர்புடையது ஆகும்.
-
Question 51 of 81
51. Question
- மது அருந்தியவுடன், உடலில் முதலில் பாதிக்கப்படும் பகுதி
Correct
விளக்கம்: நரம்பு செல்லைப் பாதித்து பல்வேறு விதமான மன மற்றும் உடல்ரீதியான தொந்தரவுகளை உண்டாக்குகிறது.
Incorrect
விளக்கம்: நரம்பு செல்லைப் பாதித்து பல்வேறு விதமான மன மற்றும் உடல்ரீதியான தொந்தரவுகளை உண்டாக்குகிறது.
-
Question 52 of 81
52. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] எய்ட்ஸ் என்பது ஒரு கொள்ளை நோய் (எபிடமிக்)
2] புற்றுநோய் உருவாக்கும் ஜீன்களுக்கு ஆன்கோஜீன்கள் என்று பெயர்.
Correct
விளக்கம்: எய்ட்ஸ் என்பது ஒரு கொள்ளை நோய் (எபிடமிக்). புற்றுநோய் உருவாக்கும் ஜீன்களுக்கு ஆன்கோஜீன்கள் என்று பெயர்.
Incorrect
விளக்கம்: எய்ட்ஸ் என்பது ஒரு கொள்ளை நோய் (எபிடமிக்). புற்றுநோய் உருவாக்கும் ஜீன்களுக்கு ஆன்கோஜீன்கள் என்று பெயர்.
-
Question 53 of 81
53. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] உடல் பருமனின் பண்பு கட்டிகள் உருவாக்கம் ஆகும்.
2] வெள்ளையணுக்கள் மற்றும் இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பது லுயூக்கேமியா எனப்படுகிறது.
Correct
விளக்கம்: புற்றுநோயின் பண்பு கட்டிகள் உருவாக்கம் ஆகும். வெள்ளையணுக்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பது லுயூக்கேமியா எனப்படுகிறது.
Incorrect
விளக்கம்: புற்றுநோயின் பண்பு கட்டிகள் உருவாக்கம் ஆகும். வெள்ளையணுக்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பது லுயூக்கேமியா எனப்படுகிறது.
-
Question 54 of 81
54. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] நோயின் காரணங்கள் பற்றி அறிய உதவும் அறிவியல் பிரிவு நோய்க்காரண ஆய்வு (ஏட்டியாலஜி) எனப்படுகிறது.
2] நோயாளிகளின் ஆடைகளை பயன்படுத்துவதனால் எய்ட்ஸ் நோய் பரவாது.
Correct
விளக்கம்: நோயின் காரணங்கள் பற்றி அறிய உதவும் அறிவியல் பிரிவு நோய்க்காரண ஆய்வு (ஏட்டியாலஜி) எனப்படுகிறது. நோயாளிகளின் ஆடைகளை பயன்படுத்துவதனால் எய்ட்ஸ் நோய் பரவாது.
Incorrect
விளக்கம்: நோயின் காரணங்கள் பற்றி அறிய உதவும் அறிவியல் பிரிவு நோய்க்காரண ஆய்வு (ஏட்டியாலஜி) எனப்படுகிறது. நோயாளிகளின் ஆடைகளை பயன்படுத்துவதனால் எய்ட்ஸ் நோய் பரவாது.
-
Question 55 of 81
55. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] இன்சுலின் பற்றாக்குறையினால் டயாபடீஸ் மெல்லிடஸ் வகை-2 உருவாகிறது.
2] கார்சினோஜன் என்பவை புற்றுநோயை உருவாக்கும் காரணிகளாகும்.
Correct
விளக்கம்: இன்சுலின் செயல்பாடு குறைவாக உள்ளதால் டயாபடீஸ் மெல்லிடஸ் வகை-2 உருவாகிறது. கார்சினோஜன் என்பவை புற்றுநோயை உருவாக்கும் காரணிகளாகும்.
Incorrect
விளக்கம்: இன்சுலின் செயல்பாடு குறைவாக உள்ளதால் டயாபடீஸ் மெல்லிடஸ் வகை-2 உருவாகிறது. கார்சினோஜன் என்பவை புற்றுநோயை உருவாக்கும் காரணிகளாகும்.
-
Question 56 of 81
56. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] நிக்கோட்டின் என்பது மயக்கமூட்டி வகை மருந்து.
2] சிர்ரோசிஸ் (கல்லீரல் வீக்கம்) என்பது மூளைக் கோளாறு நோயுடன் தொடர்புடையது.
Correct
விளக்கம்: நிக்கோட்டின் என்பது மயக்கமூட்டி வகை மருந்து. சிர்ரோசிஸ் (கல்லீரல் வீக்கம்) என்பது கல்லீரல் வீக்கம் நோயுடன் தொடர்புடையது.
Incorrect
விளக்கம்: நிக்கோட்டின் என்பது மயக்கமூட்டி வகை மருந்து. சிர்ரோசிஸ் (கல்லீரல் வீக்கம்) என்பது கல்லீரல் வீக்கம் நோயுடன் தொடர்புடையது.
-
Question 57 of 81
57. Question
- பொருத்துக
a) உணவு பழக்கம் மாறுதல் – 1] உடல் பருமன்
b) அதிக கலோரி – 2] கீமோதெரபி
c) நீடித்த வயிற்றுப்போக்கு – 3] எய்ட்ஸ்
d) வேதி மருந்து சிகிச்சை – 4] தவறான பயன்பாடு
Correct
Incorrect
-
Question 58 of 81
58. Question
- பொருத்துக
a) முழு தானியங்கள் – 1] ஹீமோகுளோபின்
b) ஆல்கஹால் – 2] கிளைக்கோசூரியா
c) கார்பன் மோனாக்சைடு – 3] டயாபாடிஸ் மெல்லிடஸ்
d) கொழுப்பு பொருட்கள் – 4] ஆலோசனைகள்
e) அதிகப்படியான குளூக்கோஸ் – 5] கரோனரி இதய நோய்
Correct
Incorrect
-
Question 59 of 81
59. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] மருந்துகளை தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்பவர்கள் அதற்கு அடிமையாகின்றனர். இதுவே மருந்துக்கு அடிமையாதல் என்றழைக்கப்படுகிறது.
2] ஆல்கஹாலைச் சார்ந்திருத்தல், மதுப் பழக்கம் எனவும், அடிமையாதல், மதுவுக்கு அடிமையாதல் எனவும் அழைக்கப்படுகிறது.
Correct
விளக்கம்: மருந்துகளை தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்பவர்கள் அதற்கு அடிமையாகின்றனர். இதுவே மருந்துக்கு அடிமையாதல் அல்லது மருந்துகளின் தவறான பயன்பாடு என்றழைக்கப்படுகிறது. ஆல்கஹாலைச் சார்ந்திருத்தல், மதுப் பழக்கம் எனவும், அடிமையாதல், மதுவுக்கு அடிமையாதல் எனவும் அழைக்கப்படுகிறது.

Question 60 of 81
60. Question
- உலக எய்ட்ஸ் தினம் ____________
Correct
விளக்கம்: ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 1 ஆம் நாள் “உலக எய்ட்ஸ் தினம்” ஆக அனுசரிக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 1 ஆம் நாள் “உலக எய்ட்ஸ் தினம்” ஆக அனுசரிக்கப்படுகிறது.
-
Question 61 of 81
61. Question
61. கீழ்க்கண்டவை எந்த நோய்க்கான அறிகுறிகள் ஆகும்?
1] நிணநீர் முடிச்சுகளில் வீக்கம்
2] மூளைச் சேதம்
3] நினைவாற்றல் குறைவு
4] பசியின்மை,
Correct
விளக்கம்: பாதிக்கப்பட்ட நபர்களில் நோய் எதிர்ப்பாற்றல் குறைகிறது. இதனால் அந்நபர்கள்வைரஸ், பாக்டீரியா, புரோட்டோசோவா மற்றும் பூஞ்சைத் தொற்றினால் அதிகளவில் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். நிணநீர் முடிச்சுகளில் வீக்கம், மூளைச் சேதம், நினைவாற்றல் குறைவு, பசியின்மை, எடை குறைதல், காய்ச்சல், நீடித்த வயிற்றுப்போக்கு, இருமல், சோம்பல், தொண்டை அழற்சி, வாந்தி மற்றும் தலைவலி போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.

Question 62 of 81
62. Question
- HIV வைரஸை ____________ சோதனை மூலம் உறுதிப்படுத்தலாம்.
Correct
விளக்கம்: HIV வைரஸை எலைசா (ELISA-Enzyme Linked ImmunoSorbentAssay)சோதனை மற்றும் வெஸ்டர்ன் பிளாட் சோதனை மூலம் உறுதிப்படுத்தலாம்.
Incorrect
விளக்கம்: HIV வைரஸை எலைசா (ELISA-Enzyme Linked ImmunoSorbentAssay)சோதனை மற்றும் வெஸ்டர்ன் பிளாட் சோதனை மூலம் உறுதிப்படுத்தலாம்.
-
Question 63 of 81
63. Question
- இந்தியாவின் முதல் எய்ட்ஸ் நோயாளி ____________யைச் சேர்ந்தவர்.
Correct
விளக்கம்: இந்தியாவின் முதல் எய்ட்ஸ் நோயாளி சென்னையைச் சேர்ந்தவர் ஆவார்.
Incorrect
விளக்கம்: இந்தியாவின் முதல் எய்ட்ஸ் நோயாளி சென்னையைச் சேர்ந்தவர் ஆவார்.
-
Question 64 of 81
64. Question
- இந்தியாவில் முதன் முதலில் HIV தொற்றுக்கான ஆதாரத்தினை ஆவணப்படுத்திய ஆண்டு____________
Correct
விளக்கம்: டாக்டர் சுனிதி சால்மோன் குழுவினர் 1985 – இல் இந்தியாவில் முதன் முதலில் HIV தொற்றுக்கான ஆதாரத்தினை ஆவணப்படுத்தினார்கள்.
Incorrect
விளக்கம்: டாக்டர் சுனிதி சால்மோன் குழுவினர் 1985 – இல் இந்தியாவில் முதன் முதலில் HIV தொற்றுக்கான ஆதாரத்தினை ஆவணப்படுத்தினார்கள்.
-
Question 65 of 81
65. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] இந்தியாவின் டாக்டர் சுனிதி சால்மோன் HIV ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையின் முன்னோடி ஆவார்.
2] இவர் சென்னையில் 1981 –களில் எய்ட்ஸ் ஆராய்ச்சிக்கான முதல் தன்னார்வ சோதனை மற்றும் ஆலோசனை மையங்களை ஏற்படுத்தினார்.
Correct
விளக்கம்: இந்தியாவின் டாக்டர் சுனிதி சால்மோன் HIV ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையின் முன்னோடி ஆவார். இவர் சென்னையில் 1980 –களில் எய்ட்ஸ் ஆராய்ச்சிக்கான முதல் தன்னார்வ சோதனை மற்றும் ஆலோசனை மையங்களை ஏற்படுத்தினார்.

Question 66 of 81
66. Question
- உயிரியல் துலங்கல் மாற்றிகளான ____________ தடைகாப்பு மண்டலத்தைத் தூண்டுவதன் மூலம் புற்று நோய் கட்டிகளை அழிக்கின்றன.
Correct
விளக்கம்: உயிரியல் துலங்கல் மாற்றிகளான இண்டர்பெரான்கள் தடைகாப்பு மண்டலத்தைத் தூண்டுவதன் மூலம் புற்று நோய் கட்டிகளை அழிக்கின்றன.
Incorrect
விளக்கம்: உயிரியல் துலங்கல் மாற்றிகளான இண்டர்பெரான்கள் தடைகாப்பு மண்டலத்தைத் தூண்டுவதன் மூலம் புற்று நோய் கட்டிகளை அழிக்கின்றன.
-
Question 67 of 81
67. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] தக்காளி இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் உதவுகின்றன.
2] எய்ட்ஸ் நோய்த்தடைக்காப்பு மண்டலத்தினை பாதிக்கிறது.
Correct
விளக்கம்: கரையாத நார்ச்சத்து கொண்ட ஆளி விதைகள், கொய்யா, தக்காளி மற்றும் கீரைகள் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் உதவுகின்றன. மனித தடைகாப்பு குறைவு வைரஸால் (HIV) ஏற்படுத்தப்படும் ஒரு கொடிய நோய் எய்ட்ஸ் ஆகும். இதில் நோய்த் தடைக்காப்பு மண்டலம் உடலின் நோய்க் காரணிகளை ஒடுக்குவதில் தோல்வியடைகிறது.

Question 68 of 81
68. Question
- ____________ என்பது புற்றுநோய்க்கான சிகிச்சை அல்ல
Correct
விளக்கம்: புற்றுநோய் சிகிச்சை கீழ்க்கண்ட வழிமுறைகளை உள்ளடக்கியது: அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, வேதிமருந்து சிகிச்சை, தடைக்காப்பு சிகிச்சை.
Incorrect
விளக்கம்: புற்றுநோய் சிகிச்சை கீழ்க்கண்ட வழிமுறைகளை உள்ளடக்கியது: அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, வேதிமருந்து சிகிச்சை, தடைக்காப்பு சிகிச்சை.
-
Question 69 of 81
69. Question
- பாலியல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தைகளில் ____________ அறிகுறிகள் காணப்படுகின்றன.
Correct
விளக்கம்: பாலியல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தைகளில் பிறப்புறுப்புக் காயம், வயிற்று வலி, அடிக்கடி ஏற்படும் சிறுநீர்த் தொற்று மற்றும் நடத்தையில் மாற்றம் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.

Question 70 of 81
70. Question
- இரத்தப் புற்றுநோய்க்கு ____________ என்று பெயர்.
Correct
விளக்கம்: லியூக்கேமியா; இது இரத்தப் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாகக் காணப்படும் இவ்வகைப் புற்றுநோய் 15 வயதுக்கும் குறைவான குழந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
Incorrect
விளக்கம்: லியூக்கேமியா; இது இரத்தப் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாகக் காணப்படும் இவ்வகைப் புற்றுநோய் 15 வயதுக்கும் குறைவான குழந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
-
Question 71 of 81
71. Question
- எலும்பு மஜ்ஜை மற்றும் நிணநீர் முடிச்சுகளில் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது எந்த வகை புற்றுநோயின் பண்பாகும்?
Correct
விளக்கம்: லியூக்கேமியா : எலும்பு மஜ்ஜை மற்றும் நிணநீர் முடிச்சுகளில் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது இதன் பண்பாகும்.
Incorrect
விளக்கம்: லியூக்கேமியா : எலும்பு மஜ்ஜை மற்றும் நிணநீர் முடிச்சுகளில் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது இதன் பண்பாகும்.
-
Question 72 of 81
72. Question
- இணைப்பு மற்றும் தசைத் திசுக்களில் உருவாகும் புற்றுநோய் எந்த வகை புற்றுநோயின் பண்பாகும்?
Correct
விளக்கம்: சார்கோமா : இணைப்பு மற்றும் தசைத் திசுக்களில் உருவாகும் புற்றுநோய் இவ்வகையைச் சார்ந்தது. இவ்வகைப் புற்றுநோய் எலும்பு, குருத்தெலும்பு, தசை நாண்கள், அடிப்போஸ் திசு மற்றும் தசைகள் ஆகியவற்றில் ஏற்படலாம்.

Question 73 of 81
73. Question
- கீழ்க்கண்டவை எந்த வகை கட்டிகள் என கண்டறிக?
1] உறுப்புகளுக்குள்ளாகவே பாதிப்பை ஏற்படுத்தும்.
2] உடலின் மற்ற பாகங்களுக்கு பரவாது.
Correct
விளக்கம்: தீங்கற்ற அல்லது மேலிக்னன்ட் வகை அல்லாத கட்டிகள்: உறுப்புகளுக்குள்ளாகவே பாதிப்பை ஏற்படுத்தும். உடலின் மற்ற பாகங்களுக்கு பரவாது.
Incorrect
விளக்கம்: தீங்கற்ற அல்லது மேலிக்னன்ட் வகை அல்லாத கட்டிகள்: உறுப்புகளுக்குள்ளாகவே பாதிப்பை ஏற்படுத்தும். உடலின் மற்ற பாகங்களுக்கு பரவாது.
-
Question 74 of 81
74. Question
- பெருக்கமடைந்த செல் குழுக்கள் வேகமாக வளர்ச்சியடைந்து சுற்றியுள்ள இயல்பான திசுக்களில் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்துவது ____________
Correct
விளக்கம்: மேலிக்னன்ட் கட்டிகள் பெருக்கமடைந்த செல் குழுக்கள் வேகமாக வளர்ச்சியடைந்து சுற்றியுள்ள இயல்பான திசுக்களில் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும்.
Incorrect
விளக்கம்: மேலிக்னன்ட் கட்டிகள் பெருக்கமடைந்த செல் குழுக்கள் வேகமாக வளர்ச்சியடைந்து சுற்றியுள்ள இயல்பான திசுக்களில் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும்.
-
Question 75 of 81
75. Question
- BMI விரிவாக்கம் ____________
Correct
விளக்கம்: BMI- உடற் பருமக் குறீயீடு
Incorrect
விளக்கம்: BMI- உடற் பருமக் குறீயீடு
-
Question 76 of 81
76. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] CHD என்பது கரோனரி இதய நோய் ஆகும்.
2] CUD என்பது இதய நோய்கள் ஆகும்.
Correct
விளக்கம்: CHD என்பது கரோனரி இதய நோய் ஆகும். CUD என்பது இதய நோய்கள் ஆகும்.
Incorrect
விளக்கம்: CHD என்பது கரோனரி இதய நோய் ஆகும். CUD என்பது இதய நோய்கள் ஆகும்.
-
Question 77 of 81
77. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] NACO என்பது தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும்.
2] PUFA என்பது நிறைவுறாத கொழுப்பு அமிலம் ஆகும்.
Correct
விளக்கம்: NACO என்பது தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும். PUFA என்பது நிறைவுறாத கொழுப்பு அமிலம் ஆகும்.
Incorrect
விளக்கம்: NACO என்பது தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும். PUFA என்பது நிறைவுறாத கொழுப்பு அமிலம் ஆகும்.
-
Question 78 of 81
78. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] கணையத்தில் பீட்டா செல்கள் இன்சுலினை சுரக்கின்றன.
2] ரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபினுடன் கார்பன் மோனாக்சைடு பிணைப்பை ஏற்படுத்துகிறது.
Correct
விளக்கம்: கணையத்தில் பீட்டா செல்கள் இன்சுலினை சுரக்கின்றன. ரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபினுடன் கார்பன் மோனாக்சைடு பிணைப்பை ஏற்படுத்துகிறது.
Incorrect
விளக்கம்: கணையத்தில் பீட்டா செல்கள் இன்சுலினை சுரக்கின்றன. ரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபினுடன் கார்பன் மோனாக்சைடு பிணைப்பை ஏற்படுத்துகிறது.
-
Question 79 of 81
79. Question
- கூற்று(A): நீரிழிவு நோய் உடல்பருமன் மற்றும் புற்றுநோய் போன்றவை வாழ்க்கை பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களினால் ஏற்படுகிறது.
காரணம்(R): வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் மனிதனுக்கு தேவைப்படுகிறது
Correct
விளக்கம்: நீரிழிவு நோய் உடல்பருமன் மற்றும் புற்றுநோய் போன்றவை வாழ்க்கை பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களினால் ஏற்படுகிறது. வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் மனிதனுக்கு தேவைப்படுகிறது

Question 80 of 81
80. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] பரவலாகக் காணப்படும் இதயக் குழல் நோய் (கரோனரி இதய நோய்) இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதால் ஏற்படுகிறது.
2] கட்டுப்பாடற்ற, அபரிமிதமான செல் பிரிதல் புற்று நோயாகும். இது அருகிலுள்ள திசுக்களுக்குள் ஊடுருவி, கட்டிகள் அல்லது நியோபிளாசத்தை உருவாக்கி திசுக்களை அழிக்கிறது.
Correct
விளக்கம்: பரவலாகக் காணப்படும் இதயக் குழல் நோய் (கரோனரி இதய நோய்) இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதால் ஏற்படுகிறது. கட்டுப்பாடற்ற, அபரிமிதமான செல் பிரிதல் புற்று நோயாகும். இது அருகிலுள்ள திசுக்களுக்குள் ஊடுருவி, கட்டிகள் அல்லது நியோபிளாசத்தை உருவாக்கி திசுக்களை அழிக்கிறது.

Question 81 of 81
81. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] HIV நோயை உண்டாக்கும் வைரஸ் ரெட்ரோ வைரஸ் எனப்படும்.
2] இதயத் தசை நசிவுறல் நோய் இதயத் தசை திசுக்களின் இறப்பு நோய் என்றழைக்கப்படும்.
Correct
விளக்கம்: HIV நோயை உண்டாக்கும் வைரஸ் ரெட்ரோ வைரஸ் எனப்படும். இதயத் தசை நசிவுறல் நோய் இதயத் தசை திசுக்களின் இறப்பு நோய் என்றழைக்கப்படும்.
Incorrect
விளக்கம்: HIV நோயை உண்டாக்கும் வைரஸ் ரெட்ரோ வைரஸ் எனப்படும். இதயத் தசை நசிவுறல் நோய் இதயத் தசை திசுக்களின் இறப்பு நோய் என்றழைக்கப்படும்.
Leaderboard: உடல் நலம் மற்றும் நோய்கள் Online Test 10th Science Lesson 21 Questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||