Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTnpsc Exam

இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் Online Test 10th Social Science Lesson 3 Tamil

இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் Online Test 10th Social Science Lesson 3 Tamil

Congratulations - you have completed இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் Online Test 10th Social Science Lesson 3 Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • கூற்று 1: சமச்சீர் காலநிலை என்பது 'பிரிட்டிஷ் காலநிலை’ என்றும் அழைக்கப்படுகிறது.
  • கூற்று 2: பிரிட்டிஷ் காலநிலை அதிக வெப்பமுடையதாகவோ அல்லது மிகக் குளிருடையதாகவோ இருக்காது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 2
இந்தியாவின் அட்சப் பரவல்
A
9°4' வட அட்சம் முதல் 37°6'
B
8°6' வட அட்சம் முதல் 37°9'
C
4°8’ வட அட்சம் முதல் 67°3’
D
8°4' வட அட்சம் முதல் 37°6'
Question 2 Explanation: 
(குறிப்பு: 23°30’ வட அட்சமான கடகரேகை நாட்டை இரு சமபாகங்களாக பிரிக்கிறது.)
Question 3
  • கூற்று 1: இந்தியாவில் கடகரேகைக்கு வடக்கே அமைந்துள்ள பகுதிகளில் ஆண்டு முழுவதும் அதிக வெப்பமும் மிக குளிரற்ற சூழலும் நிலவுகிறது.
  • கூற்று 2: கடகரேகைக்கு வடக்கே உள்ள பகுதிகள் மித வெப்ப காலநிலையைக் கொண்டுள்ளது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 3 Explanation: 
(குறிப்பு: இந்தியாவில் கடகரேகைக்கு தெற்கே அமைந்துள்ள பகுதிகளில் ஆண்டு முழுவதும் அதிக வெப்பமும் மிக குளிரற்ற சூழலும் நிலவுகிறது.)
Question 4
இந்தியாவில் கோடைக்காலத்தில், கடக ரேகைக்கு வடக்கே உள்ள பகுதியின் வெப்பம் ___________க்கு மேலாக உள்ளது.
A
40°
B
60°
C
80°
D
90°
Question 4 Explanation: 
(குறிப்பு: கடக ரேகையின் வடக்கே உள்ள பகுதியில், குளிர்கால வெப்பநிலை உறைநிலையை ஒட்டியும் உள்ளன.)
Question 5
கீழ்க்கண்டவற்றுள் இந்திய காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகள் எவை?
  1. அட்சம் பரவல்
  2. கடல் மட்டத்திலிருந்து உயரம்
  3. பருவக்காற்று
  4. நிலத்தோற்றம்
  5. ஜெட் காற்றுகள்
A
அனைத்தும்
B
1, 2, 3, 4
C
2, 3, 4
D
1, 3, 4, 5
Question 6
புவிப்பரப்பிலிருந்து உயரே செல்ல செல்ல வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் ___________ என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது.
A
3.2 °C
B
3.5 °C
C
6.5 °C
D
6.7 °C
Question 6 Explanation: 
(குறிப்பு: மேற்கண்ட நிகழ்வுக்கு "இயல்பு வெப்ப வீழ்ச்சி" என்று பெயர்.)
Question 7
சமவெளிப் பகுதிகளைக் காட்டிலும் மலைப்பகுதிகள் குளிராக இருக்கக் காரணம்
A
இயல்பு வெப்ப உயர்வு
B
இயல்பு வெப்ப வீழ்ச்சி
C
கண்டக் காலநிலை
D
காலநிலை மாற்றம்
Question 7 Explanation: 
(குறிப்பு: உதகை, தென்னிந்தியாவின் இதர மழை வாழிடங்கள் மற்றும் இமயமலையில் அமைந்துள்ள முசௌரி, சிம்லா போன்ற பகுதிகள் சமவெளிகளை விட மிகவும் குளிராக உள்ளது.)
Question 8
  • கூற்று: தீபகற்ப இந்தியாவில் குளிர்க்காலம் குளிரற்று காணப்பட்டு வருடம் முழுவதும் சீரான வெப்பநிலையைக் கொண்டுள்ளது.
  • காரணம்: இப்பகுதி முழுவதும் நிலவும் காலநிலை கடல்சார் ஆதிக்கத்தை கொண்டுள்ளது.
A
கூற்று சரி, காரணம் தவறு
B
கூற்று தவறு, காரணம் சரி
C
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்
D
கூற்று காரணம் இரண்டும் சரி, ஆனால் சரியான விளக்கமல்ல
Question 8 Explanation: 
(குறிப்பு: கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு, வெப்பம் மற்றும் அழுத்த வேறுபாடுகளைத் தோற்றுவிப்பதன் மூலம் மழைப்பொழிவையும் பாதிக்கின்றது.)
Question 9
  • கூற்று 1: கடல்களின் ஆதிக்கமின்மை காரணமாக மத்திய மற்றும் வட இந்திய பகுதிகள் வெப்பநிலையில் பருவகால மாறுபாடுகளைக் கொண்டுள்ளன.
  • கூற்று 2: வட இந்தியப் பகுதிகளில் கோடையில் கடும் வெப்பமும் மற்றும் குளிர் காலத்தில் கடும் குளிரும் நிலவுகிறது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 10
கொச்சியின் வருடாந்திர சராசரி வெப்பம் ___________ அளவுக்கு மிகாமல் உள்ளது.
A
20°C
B
30°C
C
40°C
D
50°C
Question 10 Explanation: 
(குறிப்பு: கொச்சி கடற்கரை பகுதியில் அமைந்திருப்பதால் வருடாந்திர சராசரி வெப்பம் 30°C க்கு மிகாமல் உள்ளது.)
Question 11
புதுடில்லியின் வருடாந்திர சராசரி வெப்பம் _________க்கும் அதிகமாக உள்ளது.
A
20°C
B
30°C
C
40°C
D
50°C
Question 11 Explanation: 
(குறிப்பு: புதுடில்லி கடற்கரையிலிருந்து வெகுதொலைவில் அமைந்துள்ளதால் வருடாந்திர சராசரி வெப்பம் 40°C க்கும் அதிகமாக உள்ளது.)
Question 12
  • கூற்று: கொல்கத்தாவில் மழைப்பொழிவு 69 செ.மீ ஆகவும் உள் பகுதியில் அமைந்திருக்கும் பிகானீரில் (இராஜஸ்தான்) 24 செ.மீ க்கு குறைவான மழைப்பொழிவே பதிவாகின்றது.
  • காரணம்: கொல்கத்தா கடற்கரைக்கு அருகில் அமைந்திருப்பதால் அங்கு அதிகளவு மழைப்பொழிவு பதிவாகின்றது.
A
கூற்று சரி, காரணம் தவறு
B
கூற்று தவறு, காரணம் சரி
C
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்
D
கூற்று காரணம் இரண்டும் சரி, ஆனால் சரியான விளக்கமல்ல
Question 12 Explanation: 
(குறிப்பு: கொல்கத்தாவில் மழைப்பொழிவு 119 செ.மீ ஆகவும் உள் பகுதியில் அமைந்திருக்கும் பிகானீரில் (இராஜஸ்தான்) 24 செ.மீ க்கு குறைவான மழைப்பொழிவே பதிவாகின்றது.)
Question 13
இந்தியாவில் சூரியனின் செங்குத்துக் கதிர்கள் __________ மாத மத்தியில் விழுகின்றன.
A
ஏப்ரல்
B
மே
C
ஜூன்
D
ஜூலை
Question 13 Explanation: 
(குறிப்பு: இந்தியாவில் கோடைக்காலம் மே மாத இறுதியில் முடிவடைகிறது.)
Question 14
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
  1. தென்மேற்கு பருவக்காற்று தொடக்கத்தின் காரணமாக வெப்பநிலை குறைந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கு மிதமானது முதல் கனமழை வரை பொழிகிறது.
  2. தென்கிழக்கு இந்தியாவின் காலநிலையும் தென்மேற்கு பருவக்காற்றின் ஆதிக்கத்திற்கு உட்படுகிறது.
  3. இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் மிக முக்கிய காரணி பருவக் காற்றாகும். இவை பருவங்களுக்கேற்ப மாறி வீசும் காற்றுகளாகும்.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
1, 3 சரி
D
2, 3 சரி
Question 14 Explanation: 
(குறிப்பு: தென்கிழக்கு இந்தியாவின் காலநிலை வடகிழக்கு பருவக்காற்றின் ஆதிக்கத்திற்கு உட்படுகிறது.)
Question 15
காலநிலை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியின் சுமார் __________ ஆண்டு சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.
A
10-15
B
25-35
C
30-35
D
35-40
Question 15 Explanation: 
(குறிப்பு: வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள வளிமண்டலத்தின் தன்மையைக் குறிப்பதாகும்.)
Question 16
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
  1. தென்மேற்கு பருவக்காற்று தொடக்கத்தின் காரணமாக வெப்பநிலை குறைந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கு மிதமானது முதல் கனமழை வரை பொழிகிறது.
  2. தென்கிழக்கு இந்தியாவின் காலநிலையும் தென்மேற்கு பருவக்காற்றின் ஆதிக்கத்திற்கு உட்படுகிறது.
  3. இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் மிக முக்கிய காரணி பருவக் காற்றாகும். இவை பருவங்களுக்கேற்ப மாறி வீசும் காற்றுகளாகும்.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
1, 3 சரி
D
2, 3 சரி
Question 16 Explanation: 
(குறிப்பு: தென்கிழக்கு இந்தியாவின் காலநிலை வடகிழக்கு பருவக்காற்றின் ஆதிக்கத்திற்கு உட்படுகிறது.)
Question 17
காலநிலையின் முக்கிய கூறுகள் எவை?
  1. வெப்பநிலை
  2. வளிமண்டல அழுத்தம்
  3. காற்றின் திசை
  4. மழையளவு
A
அனைத்தும்
B
1, 2, 4
C
2, 3, 4
D
1, 3, 4
Question 17 Explanation: 
(குறிப்பு: இந்தியாவின் நிலத்தோற்றம் காலநிலையின் முக்கிய கூறுகளை பெருமளவில் பாதிக்கின்றது.)
Question 18
  • கூற்று: குளிர்காலத்திலும் வடஇந்தியா வெப்ப மண்டலக் காலநிலையைக் கொண்டுள்ளது.
  • காரணம்: இமயமலைகள் மத்திய ஆசியாவிலிருந்து வீசும் கடும் குளிர்க்காற்றைத் தடுத்து, இந்திய துணைக் கண்டத்தை வெப்பப் பகுதியாக வைத்திருக்கிறது.
A
கூற்று சரி, காரணம் தவறு
B
கூற்று தவறு, காரணம் சரி
C
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்
D
கூற்று காரணம் இரண்டும் சரி, ஆனால் சரியான விளக்கமல்ல
Question 19
  • கூற்று 1: தென்மேற்கு பருவக்காற்று காலங்களில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் மேற்கு சரிவுப் பகுதி கனமழையைப் பெறுகிறது.
  • கூற்று 2: மாறாக மகாராஷ்ட்ரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் பெரும்பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலைகளின் மழைமறைவுப் பகுதி அல்லது காற்று மோதாப்பக்கத்தில் அமைந்திருப்பதால் மிகக்குறைந்த அளவு மழையைப் பெறுகின்றன.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 20
வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகள் __________ என்கிறோம்.
A
பருவக்கால காற்றுகள்
B
வளிமண்டல தாழ்வழுத்தம்
C
புயல்
D
ஜெட்காற்றுகள்
Question 20 Explanation: 
(குறிப்பு: ஜெட் காற்றோட்ட கோட்பாட்டின் படி, உப அயன மேலை காற்றோட்டம் வடபெரும் சமவெளிகளிலிருந்து திபெத்திய பீடபூமியை நோக்கி இடம்பெயர்வதால் தென்மேற்கு பருவக்காற்று உருவாகின்றது.)
Question 21
கீழை ஜெட் காற்றோட்டங்கள் __________ காலங்களில் வெப்பமண்டல தாழ்வழுத்தங்களை உருவாக்குகின்றன.
  1. தென்மேற்கு பருவக்காற்று
  2. பின்னடையும் பருவக்காற்று
  3. குளிர்காலம்
  4. கோடைக்காலம்
A
1, 2
B
2, 3
C
1, 3
D
3, 4
Question 22
மான்சூன் என்ற சொல் மெளசிம் என்ற __________ மொழி சொல்லிலிருந்து பெறப்பட்டது.
A
ஆங்கிலம்
B
இலத்தீன்
C
அரபு
D
சமஸ்கிருதம்
Question 22 Explanation: 
(குறிப்பு: மெளசிம் என்பதன் பொருள் பருவகாலம் ஆகும்.)
Question 23
  • கூற்று 1: பருவகாலம் என்ற சொல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அரபு மாலுமிகளால் இந்தியப்பெருங்கடல் கடற்கரைப் பகுதிகளில் குறிப்பாக அரபிக்கடலில் பருவங்களுக்கேற்ப மாறி வீசும் காற்றுகளை குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்பட்டது.
  • கூற்று 2: இந்தியாவில் பருவக்காற்று, கோடைக்காலத்தில் தென்மேற்கு திசையிலிருந்து வடகிழக்கு நோக்கியும், குளிர்காலத்தில் வடகிழக்கு திசையிலிருந்து தென்மேற்கு நோக்கியும் வீசுகிறது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 23 Explanation: 
(குறிப்பு: பருவக்காலக் காற்றுகள் எளிதில் புரிந்துக்கொள்ள இயலாத ஒரு சிக்கலான நிகழ்வு ஆகும்.)
Question 24
__________ கோட்பாட்டின்படி, சூரியனின் நிலைக்கு ஏற்ப பருவகாலம் இடப்பெயர்வாகும்.
A
சூரியக் கோட்பாடு
B
பருவகாலக் கோட்பாடு
C
இயங்குக் கோட்பாடு
D
இடை அயனக் குவி மண்டலக் கோட்பாடு
Question 24 Explanation: 
(குறிப்பு: வளி அழுத்த மண்டலங்களால் பருவக்காற்றுகள் உருவாகின்றன.)
Question 25
சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு. (தென்மேற்கு பருவக்காற்று உருவாகும் விதம்)
  1. வடகோள உச்ச கோடையில் சூரியனின் செங்குத்துக் கதிர் கடக ரேகையின் மீது விழுகின்றது.
  2. இதனால் அனைத்து வளி அழுத்த மற்றும் காற்று மண்டலங்கள் வடக்கு நோக்கி இடம்பெயர்கின்றன.
  3. இச்சமயத்தில் இடை அயனக் குவி மண்டலமும் (ITCZ) வடக்கு நோக்கி நகர்வதால் இந்தியாவின் பெரும்பகுதி வடகிழக்கு வியாபாரக் காற்றின் ஆதிக்கத்திற்கு உள்ளாகின்றன.
  4. இக்காற்று பூத்தியரேகையை கடக்கும் போது புவி சுழற்சியால் ஏற்படும் விசையின் காரணமாக தென்மேற்கு நோக்கி வீசுகிறது.
  5. இக்காற்று தென்மேற்கிலிருந்து வீசுவதால் தென்மேற்கு பருவக்காற்றாக மாறுகிறது.
A
அனைத்தும் சரி
B
1, 2, 4 சரி
C
2, 3, 4 சரி
D
1, 2, 5 சரி
Question 25 Explanation: 
(குறிப்பு: இடை அயனக் குவி மண்டலமும் (ITCZ) வடக்கு நோக்கி நகர்வதால் இந்தியாவின் பெரும்பகுதி தென்கிழக்கு வியாபாரக் காற்றின் ஆதிக்கத்திற்கு உள்ளாகின்றன. இக்காற்று பூத்தியரேகையை கடக்கும் போது புவி சுழற்சியால் ஏற்படும் விசையின் காரணமாக வடகிழக்கு நோக்கி வீசுகிறது.)
Question 26
___________ பூமியிலேயே வறண்ட பகுதியாகும்.
A
சகாரா பாலைவனம்
B
தார்ப் பாலைவனம்
C
அடகாமா பாலைவனம்
D
கோபி பாலைவனம்
Question 27
வானிலை நிபுணர்கள் இந்திய காலநிலையில் __________ பருவங்களை அடையாளம் கண்டுள்ளனர்.
A
2
B
3
C
4
D
5
Question 27 Explanation: 
(குறிப்பு: நான்கு பருவங்கள் குளிர்காலம் கோடைக்காலம் தென்மேற்கு பருவக்காற்று காலம் அல்லது மழைக்காலம் வடகிழக்கு பருவக் காற்று காலம்)
Question 28
குளிர்பருவத்தில் வளியழுத்த மற்றும் காற்றுமண்டலங்கள் __________ நோக்கி நகர்வதன் மூலம் வடகிழக்கு பருவக்காற்று உருவாகின்றது.
A
கிழக்கு
B
மேற்கு
C
வடக்கு
D
தெற்கு
Question 28 Explanation: 
(குறிப்பு: பருவங்களுக்கேற்றவாறு தங்களது திசைகளை மாற்றிக்கொண்டு வீசும் கோள் காற்றுகளைப் பருவக்காற்று என்கிறோம்.)
Question 29
தவறான இணையைத் தேர்ந்தெடு.
A
குளிர்காலம்: ஜனவரி முதல் பிப்ரவரி வரை
B
கோடைக் காலம்: மார்ச் முதல் மே வரை
C
மழைக்காலம்: ஜூன் முதல் செப்டம்பர் வரை
D
வடகிழக்கு பருவக்காற்று காலம்: செப்டம்பர் முதல் ஜனவரி வரை
Question 29 Explanation: 
(குறிப்பு: வடகிழக்கு பருவக்காற்று காலம்: அக்டோபர் முதல் டிசம்பர் வரை)
Question 30
சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு.
  1. குளிர்காலத்தில் சூரியனின் செங்குத்துக் கதிர்கள் இந்தியாவிலிருந்து வெகு தொலைவிலுள்ள மகரரேகையின் மீது செங்குத்தாக விழுகிறது.
  2. இதனால் இந்திய பகுதி சாய்வான சூரியக் கதிர்களை பெறுகிறது. இதுவே குறைந்த வெப்பத்திற்கு காரணமாக உள்ளது.
A
இரண்டும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 30 Explanation: 
(குறிப்பு: தெளிவான வானம், சிறந்த வானிலை, மென்மையான வடக்கு காற்றுகள், குறைந்த ஈரப்பதம் மற்றும் மிகுந்த தினசரி பகல்நேர வெப்ப வேறுபாடுகள் ஆகியன குளிர் பருவத்தின் குணாதிசயங்கள்.)
Question 31
குளிர்காலத்தில் வட இந்தியாவில் ஓர் உயர் அழுத்தம் உருவாகி காற்று ___________ லிருந்து சிந்து-கங்கை பள்ளத்தாக்குகள் வழியாக வீசுகிறது.
A
வடக்கு
B
வடமேற்கு
C
வடகிழக்கு
D
தென்கிழக்கு
Question 31 Explanation: 
(குறிப்பு: இக்காலத்தில், தென்னிந்தியாவில் காற்றின் திசையானது கிழக்கிலிருந்து மேற்காக உள்ளது.)
Question 32
  • கூற்று 1. குளிர்காலத்தில் சராசரி வெப்பநிலையானது வடக்கிலிருந்து தெற்கே அதிகரிக்கிறது.
  • கூற்று 2: நாட்டின் வடமேற்குப் பகுதியில் வடக்கு நோக்கி செல்லும் போது வெப்பம் கணிசமாக குறைகிறது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 32 Explanation: 
(குறிப்பு: குளிர்காலத்தில், ஒரு நாளின் குறைந்தபட்ச சராசரி வெப்பநிலையானது தென்னிந்தியாவில் 22 °C லிருந்து வடக்கு சமவெளிகளில் 10 °C ஆகவும் பஞ்சாப் சமவெளியில் 6°C ஆகவும் உள்ளது.)
Question 33
குளிர்காலப் பருவத்தில் கீழ்க்கண்ட எந்த பகுதிகள் மழையைப் பெறுகின்றன?
  1. மேற்கு இமயமலை
  2. தமிழ்நாடு
  3. கேரளா
  4. மத்தியப் பிரதேசம்
A
அனைத்தும்
B
1, 2, 3
C
2, 3, 4
D
1, 3, 4
Question 33 Explanation: 
(குறிப்பு: குளிர்காலத்தில் மத்தியத் தரைக்கடல் பகுதியில் உருவாகும் மேற்கத்திய இடையூறுடன் தாழ்வழுத்தங்கள் வட இந்தியாவில் மழையைத் தருகின்றன. இக்காற்றை இந்தியாவிற்கு கொண்டுவருவதில் ஜெட் காற்றோட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.)
Question 34
  • கூற்று 1: ஜெட் காற்றோட்டத்தின் மூலம் உருவாகும் காற்றானது பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசத்தில் மழைப்பொழிவையும், ஜம்மு காஷ்மீரின் மலைப்பகுதிகளில் பனிப்பொழிவையும் தருகிறது.
  • கூற்று 2: இம்மழை குளிர்கால கோதுமை பயிரிடலுக்கு மிகவும் பயனளிக்கிறது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 35
முன் பருவக்காற்றுக் காலம் குறித்தக் கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு.
A
இப்பருவத்தில் சூரியனின் செங்குத்துக் கதிர்கள் இந்திய தீபகற்பத்தின் மீது விழுகிறது.
B
இப்பருவத்தில் வெப்பநிலை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி அதிகரிக்கிறது.
C
கோடைக்காலத்தின் முற்பகுதியில் நாடு முழுவதும் வெப்பமான வறண்ட வானிலை நிலவுகிறது.
D
கோடைக்காலத்தின் மத்தியிலும், இறுதியிலும் நிலப்பகுதி இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழையின் ஆதிக்கத்திற்கு உட்படுகிறது.
Question 35 Explanation: 
(குறிப்பு: கோடைக்காலம் முன் பருவக்காற்றுக் காலம் எனவும் அழைக்கப்படுகிறது. இப்பருவத்தில் வெப்பநிலை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அதிகரிக்கிறது.)
Question 36
ஏப்ரல் மாதத்தில் தென் இந்திய உட்பகுதிகளில் தின சராசரி வெப்பநிலை __________ ஆகப் பதிவாகிறது.
A
20°C-30°C
B
30°C-35°C
C
30°C-40°C
D
40°C-50°C
Question 36 Explanation: 
(குறிப்பு: ஏப்ரல் மாதத்தில் மத்திய இந்திய நிலப்பகுதியின் பல பகுதிகளில் பகல் நேர உச்ச வெப்பநிலை 40 °C ஆக உள்ளது.)
Question 37
‘மாஞ்சாரல்’ என்ற இடியுடன் கூடிய மழை எந்த பகுதிகளுடன் தொடர்புடையது?
  1. கேரளா
  2. கர்நாடகா
  3. ஆந்திரா
  4. தமிழ்நாடு
A
1, 2
B
2, 3
C
3, 4
D
1, 4
Question 37 Explanation: 
(குறிப்பு: மாஞ்சாரல் மழை கேரளா, கர்நாடகா பகுதிகளில் விளையும் ‘மாங்காய்கள்’ விரைவில் முதிர்வதற்கு உதவுகிறது.)
Question 38
கால்பைசாகி தலக்காற்று எந்தப் பகுதிகளுக்கு குறுகியக் கால மழையைத் தருகிறது?
  1. பீகார்
  2. பஞ்சாப்
  3. மேற்குவங்கம்
  4. அசாம்
A
அனைத்தும்
B
1, 2, 3
C
1, 3, 4
D
2, 3, 4
Question 38 Explanation: 
(குறிப்பு: ஏபரல் மற்றும் மே மாதங்களில் வடமேற்கு திசையிலிருந்து வீசும் தலக்காற்று நார்வெஸ்டர் அல்லது கால்பைசாகி என்று அழைக்கப்படுகிறது.)
Question 39
தென்மேற்கு பருவக்காற்று பொதுவாக ________ மாதத்தின் முதல் வாரத்தில் இந்தியாவின் தென்பகுதியில் தொடங்குகிறது.
A
ஏப்ரல்
B
மே
C
ஜூன்
D
ஜூலை
Question 39 Explanation: 
(குறிப்பு: தென்மேற்கு பருவக்காற்று கொங்கணக் கடற்கரை பகுதிக்கு ஜுன் இரண்டாவது வாரத்திலும் ஜூலை 15 இல் அனைத்து இந்தியப் பகுதிகளுக்கும் முன்னேறுகிறது.)
Question 40
உலகளாவிய காலநிலை நிகழ்வான "எல்நினோ” ____________ காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
A
வடகிழக்கு பருவக்காற்று
B
தென்மேற்கு பருவக்காற்று
C
கோடைக்காலம்
D
குளிர்காலம்
Question 41
தென்மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன் வட இந்தியாவின் வெப்பநிலையானது ___________ வரை உயருகிறது.
A
36°C
B
42°C
C
46°C
D
48°C
Question 41 Explanation: 
(குறிப்பு: தென்மேற்கு பருவக்காற்று இந்தியாவின் வெப்பநிலையை பெருமளவில் குறைக்கிறது.)
Question 42
தென்மேற்கு பருவக் காற்றின் இடி மற்றும் மின்னலுடன் கூடிய துவக்கம் (தென் இந்தியாவில்) ___________ எனப்படுகிறது.
A
தென்மேற்கு வெடிப்பு
B
வடகிழக்கு வெடிப்பு
C
பருவமழை வெடிப்பு
D
மழைக்கால வெடிப்பு
Question 42 Explanation: 
(குறிப்பு: தென்மேற்கு பருவக்காற்று இந்தியாவின் தென் முனையை அடையும்பொழுது இரண்டு கிளைகளாக பிரிகிறது. இதன் ஒரு கிளை அரபிக்கடல் வழியாகவும் மற்றொரு கிளை வங்காள விரிகுடா வழியாகவும் வீசுகிறது.)
Question 43
தென்மேற்கு பருவக் காற்று குறித்தக் கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
  1. தென்மேற்கு பருவக்காற்றின் அரபிக்கடல் கிளை மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவுகளில் மோதி பலத்த மழைப் பொழிவைத் தருகிறது.
  2. அரபிக்கடல் கிளையானது வடக்கு நோக்கி நகர்ந்து இமயமலையால் தடுக்கப்பட்டு வட இந்தியா முழுவதும் கனமழையைத் தோற்றுவிக்கிறது.
  3. ஆரவல்லி மலைத்தொடர் அரபிக்கடல் கிளைக் காற்று வீசும் திசைக்கு இணையாக அமைந்துள்ளதால் இராஜஸ்தான் மற்றும் வடஇந்தியாவின் மேற்கு பகுதிக்கு மழைப்பொழிவை தருவதில்லை.
A
1 மட்டும் தவறு
B
2 மட்டும் தவறு
C
1, 3 தவறு
D
எதுவுமில்லை
Question 43 Explanation: 
(குறிப்பு: தமிழ்நாடு மலை மறைவுப் பகுதியில் அமைந்துள்ளதால் தென்மேற்கு பருவக்காற்றில் குறைவான மழையைப் பெறுகிறது.)
Question 44
தென்மேற்கு பருவக் காற்றின் வங்காள விரிகுடா கிளை ___________ குன்றுகளால் தடுக்கப்பட்டு மேகாலயாவில் உள்ள மௌசின்ராமில் மிகக் கனமழையைத் தருகிறது.
  1. ஆரவல்லி
  2. விந்திய சாத்பூரா மலைகள்
  3. காசி
  4. கோரா
  5. ஜெயந்தியா
A
அனைத்தும்
B
1, 2, 4
C
2, 3, 4
D
3, 4, 5
Question 44 Explanation: 
(குறிப்பு: வங்காள விரிகுடா கிளை, வடகிழக்கு இந்தியா மற்றும் மியான்மரை நோக்கி வீசுகின்றது. இக்காற்று கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகரும் போது மழைப்பொழிவின் அளவு குறைந்து செல்கிறது.)
Question 45
இந்தியாவின் ஒட்டுமொத்த மழைப்பொழிவில் __________ சதவீத மழைப்பொழிவானது தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் கிடைக்கிறது.
A
25%
B
35%
C
50%
D
75%
Question 46
வடகிழக்கு பருவக்காற்றுக் காலம் குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.
  1. செப்டம்பர் மாத இறுதியில் அழுத்த மண்டலமானது புவியில் தெற்கு நோக்கி நகர ஆரம்பிப்பதால் தென்மேற்கு பருவக்காற்று பின்னடையும் பருவக்காற்றாக நிலப்பகுதியிலிருந்து வங்காள விரிகுடா நோக்கி வீசுகிறது.
  2. பூமி சுழல்வதால் ஏற்படும் விசையின் (கொரியாலிஸ் விசை) காரணமாக காற்றின் திசை மாற்றப்பட்டு வடகிழக்கிலிருந்து வீசுகிறது.
  3. இப்பருவக்காலம் இந்திய துணைக்கண்ட பகுதியில் வட கீழைக் காற்றுத் தொகுதி தோன்றுவதற்கு காரணமாக உள்ளது எனலாம்.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 47
வடகிழக்கு பருவக்காற்றின் மொத்த மழைப்பொழிவில், கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் தென் கர்நாடகாவின் உட்பகுதிகள் _____________ சதவீத மழையைப் பெறுகின்றன.
A
25%
B
30%
C
35%
D
40%
Question 47 Explanation: 
(குறிப்பு: வங்கக்கடலில் உருவாகும் புயலால் தமிழ்நாட்டின் பல பகுதிகளும் ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளும் மழையைப் பெறுகின்றன.)
Question 48
இந்தியாவின் வடமேற்கு பகுதியின் சராசரி வெப்ப நிலையானது அக்டோபர் மாதத்தில் ___________இல் இருந்து நவம்பர் மாதத்தில் __________ ஆக குறைந்தது.
A
27°C, 17°C
B
28°C, 17°C
C
38°C, 28°C
D
48°C, 38°C
Question 48 Explanation: 
(குறிப்பு: பின்னடையும் பருவக்காற்றுக் காலத்தில் நாடு முழுவதும் பகல் நேர வெப்பநிலை வீழ்ச்சியடைகிறது.)
Question 49
உலகில் மிக அதிக அளவு மழைப்பெறும் பகுதியான மௌசின்ராம் ___________ல் அமைந்துள்ளது.
A
அஸ்ஸாம்
B
மணிப்பூர்
C
பீகார்
D
மேகாலயா
Question 49 Explanation: 
(குறிப்பு: மெளசின்ராம் 1141 செ.மீ அளவு மழையை பெறுகிறது.)
Question 50
இந்தியாவின் ஆண்டு சராசரி மழையளவு
A
90 செ.மீ
B
110 செ.மீ
C
118 செ.மீ
D
124 செ.மீ
Question 51
தவறான இணையைத் தேர்ந்தெடு. (ஆண்டு மழைப்பொழிவு அளவு - நிலப்பரப்பு சதவீதம்)
A
125 - 200 செ.மீ மழைப்பொழிவு - 21 சதவீத பரப்பு
B
75 – 125 செ.மீ மழைப்பொழிவு - 37 சதவீத நிலப்பரப்பு
C
35 - 75 செ.மீ மழைப்பொழிவு - 24 சதவீத நிலப்பரப்பு
D
35 செ.மீ க்கும் குறைவான மழைப்பொழிவு - 17 சதவீத நிலப்பரப்பு
Question 51 Explanation: 
(குறிப்பு: 35 செ.மீ க்கும் குறைவான மழைப்பொழிவு - 7 சதவீத நிலப்பரப்பு, 200 செ.மீ க்கும் அதிகமான மழைப்பொழிவு - 11 சதவீத பரப்பளவு.)
Question 52
கீழ்க்கண்டவற்றுள் 200 செ.மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவை பெறும் பகுதிகள் எவை?
  1. மேற்கு கடற்கரை
  2. அசாம்
  3. மேகாலயாவின் தென்பகுதி
  4. திரிபுரா
  5. நாகலாந்து
  6. அருணாச்சலப் பிரதேசம்
A
அனைத்தும்
B
2, 3, 4, 5
C
1, 2, 4, 5, 6
D
2, 4, 5, 6
Question 53
கீழ்க்கண்டவற்றுள் 100 செ.மீட்டருக்கும் குறைவான மழைப்பொழிவை பெறும் பகுதிகள் எவை?
  1. ராஜஸ்தான் மாநிலம் முழுவதும்
  2. பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேச மாநிலத்தின் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகள்
  3. மத்தியப் பிரதேசத்தின் மேற்கு பகுதி
  4. மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு பகுதி
  5. தக்காணப் பீடபூமி
A
அனைத்தும்
B
2, 3, 4
C
1, 3, 4, 5
D
1, 4, 5
Question 53 Explanation: 
(குறிப்பு: தமிழக கடற்கரையின் ஒரு குறுகியப் பகுதியும் 100 செ.மீட்டருக்கும் குறைவான மழைப்பொழிவை பெறுகின்றன.
Question 54
கீழ்க்கண்டவற்றுள் இயற்கைத் தாவரங்களின் பரவல் மற்றும் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துபவை எவை?
  1. காலநிலை
  2. மண் வகைகள்
  3. மழைப்பொழிவு
  4. நிலத்தோற்றங்கள்
  5. சூரிய ஒளி
A
அனைத்தும்
B
1, 2, 3, 4
C
2, 3, 4
D
1, 3, 4, 5
Question 54 Explanation: 
(குறிப்பு: இயற்கைத் தாவரம் என்பது நேரடியாகவோ மறைமுகமாகவோ மனித உதவியில்லாமல் இயற்கையாக வளர்ந்துள்ள தாவர இனத்தை குறிக்கிறது.)
Question 55
ஆண்டு மழைப்பொழிவு 200 செ.மீட்டருக்கு மேலும் ஆண்டு வெப்பநிலை 22 °C க்கு அதிகமாகவும், சராசரி ஆண்டு ஈரப்பதம் 70 சதவீதத்திற்கு மேலும் உள்ள பகுதிகளில் ___________ வகைக் காடுகள் காணப்படுகின்றன.
A
அயனமண்டல பசுமை மாறாக் காடுகள்
B
அயன மண்டல இலையுதிர்க் காடுகள்
C
அயனமண்டல வறண்டக் காடுகள்
D
மலைக் காடுகள்
Question 55 Explanation: 
(குறிப்பு: கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, அந்தமான் நிக்கோபர் தீவுகள், அசாம், மேற்குவங்கம், நாகலாந்து, திரிபுரா, மிசோரம், மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.)
Question 56
அயனமண்டல இலையுதிர்க் காடுகள் ___________ ஆண்டு சராசரி மழைப்பொழிவு அளவுள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.
A
100 செ.மீட்டருக்கும் குறைவாக
B
50 செ.மீ முதல் 100 செ.மீ வரை
C
100 செ.மீ முதல் 200 செ.மீ வரை
D
50 செ.மீ முதல் 150 செ.மீ வரை
Question 56 Explanation: 
(குறிப்பு: அயனமண்டல இலையுதிர்க்காடுகளில் உள்ள மரங்கள் வசந்த காலத்திலும் கோடைக்காலத்தின் முற்பகுதியிலும் வறட்சியின் காரணமாக இலைகளை உதிர்த்து விடுகின்றன. எனவே இக்காடுகள் இலையுதிர்க்காடுகள் என அழைக்கப்படுகின்றன.)
Question 57
அயன மண்டல இலையுதிர்க் காடுகளில் காணப்படும் மரங்கள் எவை?
  1. தேக்கு
  2. சால்
  3. சந்தனமரம்
  4. ரோஸ் மரம்
  5. குசம்
  6. மாகு
A
அனைத்தும்
B
1, 2, 4
C
1, 2, 5, 6
D
1, 2, 4, 5
Question 57 Explanation: 
(குறிப்பு: தேக்கு மற்றும் சால் ஆகியவை அயன மண்டல இலையுதிர்க் காடுகளில் காணப்படும் முக்கிய மரங்களாகும். இதைத்தவிர பாலாங், ஆம்லா, மூங்கில், சிசம் மற்றும் படாக் போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரங்களாகும்.)
Question 58
அயன மண்டல இலையுதிர்க் காடுகள் காணப்படும் இடங்களில் தவறானது எது?
A
பஞ்சாப்
B
ஜம்மு & காஷ்மீர்
C
சதீஸ்கர்
D
மத்தியப்பிரதேசம்
Question 58 Explanation: 
(குறிப்பு: இமயமலைக்கு அருகில் அமைந்துள்ள பஞ்சாப் முதல் அசாம் வரையிலான பகுதிகள், வட சமவெளிகள், பஞ்சாப், ஹரியானா, ஆந்திரா, பீகார், மேற்குவங்கம், மத்திய இந்தியா, ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், சதீஸ்கர், தென் இந்தியா, மகாராஷ்ட்ரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு போன்ற பகுதிகளில் இக்காடுகள் காணப்படுகின்றன.)
Question 59
ஆண்டு மழைப்பொழிவு _____________ வரை உள்ள பகுதிகளில் அயனமண்டல வறண்ட காடுகள் காணப்படுகின்றன.
A
100 செ.மீட்டருக்கும் குறைவாக
B
50 செ.மீ முதல் 100 செ.மீ வரை
C
100 செ.மீ முதல் 200 செ.மீ வரை
D
50 செ.மீ முதல் 150 செ.மீ வரை
Question 59 Explanation: 
(குறிப்பு: அயனமண்டல வறண்ட காடுகள் ஒரு இடைநிலை வகைக் காடாகும்.)
Question 60
கீழ்க்கண்டவற்றுள் அயனமண்டல வறண்ட காடுகளில் காணப்படும் மரங்கள் எவை?
  1. இலுப்பை
  2. ஆலமரம்
  3. ஆவாராம் பூ மரம்
  4. பலா
  5. மஞ்சக் கடம்பு
  6. கருவேலம்
  7. மூங்கில்
A
அனைத்தும்
B
2, 3, 5, 6
C
1, 2, 4, 7
D
2, 4, 5, 7
Question 60 Explanation: 
(குறிப்பு: கிழக்கு இராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், உத்திரப் பிரதேசத்தின் மேற்கு பகுதி, மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ராவின் கிழக்குப் பகுதி, தெலுங்கானா, மேற்கு கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் கிழக்கு பகுதிகளில் அயனமண்டல வறண்ட காடுகள் காணப்படுகின்றன.)
Question 61
ஆண்டு சராசரி மழைப்பொழிவு _________க்கு குறைவாக உள்ள பகுதிகளில் பாலைவன மற்றும் அரைப் பாலைவனத் தாவரங்கள் காணப்படுகின்றன.
A
100 செ.மீட்டருக்கும் குறைவாக
B
50 செ.மீட்டருக்கும் குறைவாக
C
200 செ.மீ்ட்டருக்கும் குறைவாக
D
150 செ.மீட்டருக்கும் குறைவாக
Question 61 Explanation: 
(குறிப்பு: பாலைவன மற்றும் அரைப் பாலைவனத் தாவரங்கள் உள்ள காடுகள் "முட்புதர் காடுகள்" என்றும் அழைக்கப்படுகிறது. முட்புதர்க்காடுகள் அதிக வெப்பமும் மற்றும் குறைவான ஈரப்பதமும் கொண்ட பகுதிகளில் காணப்படுகின்றன.)
Question 62
முட்புதர் காடுகளில் காணப்படும் மரங்கள் எவை?
  1. கருவேலம்
  2. சீமை கருவேல மரம்
  3. ஈச்சமரம்
  4. மூங்கில்
A
அனைத்தும்
B
1, 2, 3
C
2, 3, 4
D
1, 3, 4
Question 62 Explanation: 
(குறிப்பு: பாலைவன மற்றும் அரைப் பாலைவனத் தாவரங்கள் வடமேற்கு இந்தியப் பகுதிகளான மேற்கு இராஜஸ்தான், வடக்கு குஜராத் மற்றும் தென்மேற்கு பஞ்சாப் ஆகிய பகுதிகளிலும், தக்காண பீயூமியின் கர்நாடகா, மகாராஷ்ட்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் வறண்ட பகுதிகளிலும் காணப்படுகின்றன.)
Question 63
இந்தியாவின் காலநிலை ___________ ஆக பெயரிடப்பட்டுள்ளது.
A
அயன மண்டல ஈரக் காலநிலை
B
நிலநடுக்கோட்டுக் காலநிலை
C
அயனமண்டல பருவக்காற்று காலநிலை
D
மித அயன மண்டலக் காலநிலை
Question 64
உயரம் மற்றும் மழையளவின் அடிப்படையில் மலைக்காடுகள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளன?
A
2
B
3
C
4
D
5
Question 64 Explanation: 
(குறிப்பு: இரண்டு வகை மலைக்காடுகள் கிழக்கு இமயமலைக்காடுகள் மேற்கு இமயமலைக்காடுகள்)
Question 65
கிழக்கு இமயமலைக்காடுகள் குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.
  1. வடகிழக்கு இந்திய மாநிலங்களில் உள்ள கிழக்கு இமயமலைச் சரிவுகளில் இவை காணப்படுகிறது.
  2. இவை 200 செ.மீட்டருக்கும் குறைவான மழைப்பொழிவை பெறுகின்றது.
  3. இவை பசுமைமாறாக் காடுகள் வகையைச் சார்ந்தவை.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
1, 3 சரி
D
2, 3 சரி
Question 65 Explanation: 
(குறிப்பு: கிழக்கு இமயமலைக்காடுகள் 200 செ.மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவை பெறுகின்றது.)
Question 66
கிழக்கு இமயமலைக் காடுகளில் காணப்படும் சால், ஓக், லாரஸ், அமுதா, செஸ்ட்நெட், சின்னமன் போன்ற மரங்கள் __________ உயரமுள்ள பகுதிகளில் காணப்படும்.
A
600 - 800 மீ
B
800 - 1200 மீ
C
1200 - 2400 மீ
D
2400 - 3600 மீ
Question 67
மேற்கு இமயமலைக் காடுகளில் __________ மீட்டர் உயரமுள்ள பகுதிகளில் அரை பாலைவன தாவரங்களான சிறு புதர் செடிகள், சிறு மரங்கள் போன்றவை வளருகின்றன.
A
500
B
700
C
900
D
1100
Question 67 Explanation: 
(குறிப்பு: ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்ரகாண்ட் போன்ற மாநிலங்களில் மிதமான மழை பொழிவு உள்ள பகுதிகளில் மேற்கு இமய மலைக் காடுகள் காணப்படுகின்றன.)
Question 68
_________ மீட்டர் உயரம் உள்ள மலைகளில் சிர்பைன் எனப்படும் மரங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.
A
500 - 700 மீ
B
700 - 900 மீ
C
900 - 1200 மீ
D
900 - 1800 மீ
Question 68 Explanation: 
(குறிப்பு: சால், சீமொல், டாக், ஜாமுன், ஜீஜீபி ஆகியன மேற்கு இமயமலைக் காடுகளில் காணப்படும் இதர முக்கிய மரங்களாகும்.)
Question 69

__________ மீட்டர் உயரமுள்ள பகுதிகளில் மித வெப்ப மண்டல ஊசியிலைக் காடுகள் பரவியுள்ளன.

A
1200 - 1600 மீ
B
1300 - 1800 மீ
C
1800 - 3000 மீ
D
2100 - 3500 மீ
Question 69 Explanation: 
(குறிப்பு: மித வெப்ப மண்டல ஊசியிலைக் காடுகளில் சிர், தியோதர், நீலபைன், பாப்புலர், பிர்ச் மற்றும் எல்டர் போன்ற மரங்கள் வளர்கின்றன.)
Question 70
கிழக்கு இமயமலைக் காடுகளில் காணப்படும் ஓக், பிர்ச், சில்வர், பெர், பைன், ஸ்புரூஸ், ஜுனிப்பர் போன்ற மரங்கள்__________ உயரமுள்ள பகுதிகளில் காணப்படும்.
A
600 - 800 மீ
B
800 - 1200 மீ
C
1200 - 2400 மீ
D
2400 - 3600 மீ
Question 71
அல்பைன் காடுகள் ___________ மீட்டருக்கு மேல் உள்ள இமயமலைகளின் உயரமான பகுதிகளில் காணப்படுகின்றன.
A
1200 மீ
B
1600 மீ
C
2200 மீ
D
2400 மீ
Question 71 Explanation: 
(குறிப்பு: அல்பைன் காடுகள் ஊசியிலை மரங்களைக் கொண்டுள்ளன.)
Question 72
ஒரே அளவு மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு ___________ ஆகும்.
A
சமவெப்ப கோடுகள்
B
சம மழைக் கோடுகள்
C
சம அழுத்தக் கோடுகள்
D
அட்சக் கோடுகள்
Question 73
___________ மலைப்பகுதிகளில் அல்பைன் காடுகள் பரந்த அளவில் உள்ளன.
A
மேற்கு தொடர்ச்சி மலை
B
கிழக்கு தொடர்ச்சி மலை
C
கிழக்கு இமயமலைப் பகுதி
D
மேற்கு இமயமலைப் பகுதி
Question 73 Explanation: 
(குறிப்பு: ஓக், சில்வர், பிர், பைன் மற்றும் ஜுனிபர் மரங்கள் அல்பைன் காடுகளின் முக்கிய மரவகைகளாகும்.)
Question 74
ஓத அலைக் காடுகள் குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.
  1. இக்காடுகள் டெல்டாக்கள், பொங்கு முகங்கள் மற்றும் கடற்கழிமுகப் பகுதிகளில் காணப்படுகின்றன.
  2. இவை ஓதங்களின் ஆதிக்கத்திற்கு உள்ளாவதால் சதுப்புநிலக்காடுகள் மற்றும் டெல்டா காடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
  3. இவை "மாங்குரோவ் காடுகள்" என்றும் அழைக்கப்படுகின்றன.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 75
___________ டெல்டா பகுதிகளில் உலகில் மிகப்பெரிய சதுப்பு நிலக் காடுகள் உள்ளன.
A
மகாநதி - கோதாவரி
B
கங்கை – பிரம்மபுத்திரா
C
கங்கை – மகாநதி
D
கோதாவரி – கிருஷ்ணா
Question 75 Explanation: 
(குறிப்பு: மகாநதி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளின் டெல்டா பகுதிகளிலும் ஓதக்காடுகள் காணப்படுகின்றன.)
Question 76
சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு (கடற்கரையோரக் காடுகள்)
  1. கடற்கரையோரக் காடுகள் "கடற்கரை காடுகள்" எனவும் அழைக்கப்படுகின்றன.
  2. இங்கு சவுக்கு, பனை மற்றும் தென்னை ஆகியவை முதன்மையானதாகும்.
  3. இவை இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு இரு கடற்பகுதியின் கரைப்பகுதிகளிலும் காணப்படுகின்றன.
  4. கேரளா மற்றும் கோவா பகுதிகளில் இவ்வகைக் காடுகள் அதிகமாக உள்ளன.
A
அனைத்தும் சரி
B
1, 2, 4 சரி
C
2, 3, 4 சரி
D
1, 2, 3 சரி
Question 77
ஆற்றுங்கரைக் காடுகள் குறித்த கூற்றுகளில் சரியானதைத் தேர்ந்தெடு.
  1. இக்காடுகள் கங்கை, யமுனை நதி பாயும் பகுதிகளில் குறிப்பாக காதர் பகுதிகளில் காணப்படுகின்றன.
  2. இது பசுமையான புதர் தாவரங்கள் மற்றும் புளியமரம் போன்றவற்றிற்கு பெயர் போனவை.
  3. தக்காணப் பகுதிகளிலுள்ள ஆற்றுப்பகுதிகளில் இவ்வகைத் தாவரங்கள் அதிகம் காணப்படுகின்றன.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 77 Explanation: 
(குறிப்பு: வட பெறும் சமவெளி பகுதிகளிலுள்ள ஆற்றுப்பகுதிகளில் இவ்வகைத் தாவரங்கள் அதிகம் காணப்படுகின்றன.)
Question 78
வானிலையியல் ஒரு __________ அறிவியலாகும்.
A
வானிலை
B
சமூக
C
அரசியல்
D
மனித
Question 78 Explanation: 
(குறிப்பு: வானிலையின் பல்வேறு கூறுகளைப் பற்றி, குறிப்பாக வானிலை முன்னறிவிப்பு பற்றிய ஒரு அறிவியல் பிரிவு வானிலையியல் ஆகும்.)
Question 79
  •  கூற்று 1: இயற்கை சூழ்நிலை அல்லது காடுகளை வாழிடமாகக் கொண்டு வாழும் விலங்குகள் வன உயிரினங்கள் எனப்படுகின்றன.
  • கூற்று 2: வனஉயிரினங்கள் முதுகெலும்புள்ளவை, முதுகெலும்பில்லாதவை என்ற இரு பிரிவுகளை உள்ளடக்கியது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 79 Explanation: 
(குறிப்பு: முதுகெலும்புள்ளவை - மீன், இருவாழ்விகள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள். முதுகெலும்பில்லாதவை - தேனீ, பட்டாம்பூச்சி, அந்திப்பூச்சி.)
Question 80
உலகிலுள்ள வனவிலங்கு உயிரினங்களில் இந்தியாவில் மட்டும் ___________க்கும் மேற்பட்ட வகையான வன விலங்கு உயிரினங்கள் உள்ளன.
A
62512
B
81251
C
8258
D
78652
Question 80 Explanation: 
(குறிப்பு: உலகில் 1.5 மில்லியன் வன விலங்கு உயிரினங்கள் உள்ளன.)
Question 81
பொருத்துக. (இந்தியாவில் காணப்படும் வனவிலங்குகள் - அவற்றின் வகைகள்)
  1. முதுகெலும்பற்ற உயிரினங்கள்   i) 6500
  2. மெல்லுடலிகள்                                  ii) 5000
  3. மீன்கள்                                                iii) 2546
  4. பறவையினம்                                    iv) 1228
  5. பாலுட்டிகள்                                        v) 458
A
ii iii i iv v
B
iii ii i v iv
C
v i ii iii iv
D
i ii iii iv v
Question 82
தவறான இணையைத் தேர்ந்தெடு. (இந்தியாவில் காணப்படும் வனவிலங்குகள் - அவற்றின் வகைகள்)
A
ஊர்வன வகைகள் – 446
B
இருவாழ்விகள் – 104
C
சிறுத்தைகள் – 4
D
பூச்சி வகைகள் – 60000
Question 82 Explanation: 
(குறிப்பு: இருவாழ்விகள் - 204 வகை)
Question 83
கலைமான் எந்தெந்த மாநிலங்களின் மாநில விலங்காக திகழ்கின்றது?
  1. கர்நாடகா
  2. ஆந்திரா
  3. பஞ்சாப்
  4. ஹரியானா
 
A
அனைத்தும்
B
1, 2, 3
C
2, 3, 4
D
1, 3, 4
Question 84
நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்?
  1. தொடர்ச்சியான வேட்டையாடுதல்
  2. யுகிலிப்டஸ் சாகுபடி பண்ணுதல்
  3. மண்ணரிப்பு
  4. புலிகளின் எண்ணிக்கை அதிகரித்தல்
A
அனைத்தும்
B
1, 2
C
2, 3
D
1, 4
Question 85
இந்திய வனவிலங்கு வாரியம் __________ ஆண்டு நிறுவப்பட்டது.
A
1948
B
1950
C
1951
D
1952
Question 85 Explanation: 
(குறிப்பு: இந்திய வனவிலங்கு வாரியம், வன விலங்குகள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக் குறித்த பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு வழங்க நிறுவப்பட்ட அமைப்பு ஆகும்.)
Question 86
இந்திய அரசு வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்தை இயற்றிய ஆண்டு
A
1952
B
1962
C
1972
D
1982
Question 86 Explanation: 
(குறிப்பு: வனவிலங்குகளைப் பாதுகாக்கவும், வேட்டையாடுதல், கடத்துதல் மற்றும் சட்டவிரோத வணிகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடனும் வன விலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.)
Question 87
இந்திய வனவிலங்கின் செழுமைத் தன்மையையும், பன்மையையும் பாதுகாக்க _________ தேசிய பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
A
92
B
102
C
108
D
112
Question 87 Explanation: 
(குறிப்பு: இந்தியாவில் 515 வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன.)
Question 88
__________ என்பது நிலம் மற்றும் கடலோர சுற்றுச் சூழலை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட ஒன்று ஆகும்.
A
சரணாலயம்
B
தேசிய பூங்கா
C
உயிர்கோள பெட்டகம்
Question 88 Explanation: 
(குறிப்பு: மக்கள் உயிர்க்கோள காப்பகத்தின் ஒருங்கிணைந்த அங்கமாகும்.)
Question 89
இந்திய அரசாங்கம் _________உயிர்க்கோள காப்பகங்களை ஏற்படுத்தியுள்ளது.
A
14
B
15
C
17
D
18
Question 89 Explanation: 
(குறிப்பு: உயிர்க்கோள காப்பகங்களின் பணி இயற்கை வாழ்விடத்தின் பெரும் பகுதிகளைப் பாதுகாத்தல், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தேசிய பூங்காக்களைப் பாதுகாத்தல் இவைகளின் பொருளாதார பயன்பாட்டு அண்மைப் பகுதிகளைப் பாதுகாத்தல் போன்றவற்றை உள்ளடக்கியது ஆகும்.)
Question 90
இந்தியாவில் உள்ள 18 உயிர்க்கோள காப்பகங்களில் ___________ காப்பகங்கள் யுனெஸ்கோவின் மனித மற்றும் உயிர்க்கோள காப்பகத் திட்டத்தின் கீழ் செயல்படுகின்றன.
A
9
B
10
C
11
D
12
Question 90 Explanation: 
(குறிப்பு: யுனெஸ்கோவின் மனித மற்றும் உயிர்க்கோள காப்பகத் திட்டத்தின் கீழ் செயல்படும் காப்பகங்கள் : மன்னார் வளைகுடா, நந்தா தேவி, நீலகிரி, நாக்ரேக், பச்மாரி, சிம்லிபால், சுந்தரவனம், அகத்தியமலை, பெரிய நிக்கோபர், கஞ்சன்ஜங்கா, அமர்கன்டாக்.)
Question 91
புலிகள் பாதுகாப்பு திட்டம் __________ ஆண்டு தொடங்கப்பட்டது.
A
1962
B
1968
C
1971
D
1973
Question 91 Explanation: 
(குறிப்பு: புலிகளை பாதுகாக்கவும் அதன் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தோடும் புலிகள் பாதுகாப்பகங்கள் தொடங்கப்பட்டன.)
Question 92
புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம், புலிகளின் எண்ணிக்கை ____________ சதவீதம் உயர்ந்து 1979 இல் 3015 ஆக இருந்தது.
A
40
B
50
C
60
D
70
Question 92 Explanation: 
(குறிப்பு: புலிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது போலவே மற்ற பாதிக்கப்பட்ட பாரசிங்க (சதுப்பு நில மான்), காண்டாமிருகம், யானைகள் போன்றவற்றின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன.)
Question 93
தவறான இணையைத் தேர்ந்தெடு. (உயிர்க்கோள காப்பகங்கள் - மாநிலம்)
A
அச்சனக்மர் அமர்கண்டாக் - மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர்
B
அகத்தியமலை – கேரளா
C
திப்ரு செய்கோவா – அசாம்
D
திகேங் திபங் - உத்திரப் பிரதேசம்
Question 93 Explanation: 
(குறிப்பு: திகேங் திபங் - அருணாச்சல பிரதேசம்)
Question 94
கீழ்க்கண்டவற்றுள் மத்தியப்பிரதேசத்தில் அமைந்துள்ள உயிர்க்கோள காப்பகங்கள் எவை?
  1. பச்மாரி
  2. சிம்லிபால்
  3. நாக்ரெக்
  4. பன்னா
A
அனைத்தும்
B
1, 2
C
2, 3
D
1, 4
Question 95
பொருத்துக. (உயிர்க்கோள காப்பகங்கள் - மாநிலம்)
  1. பெரிய நிக்கோபர்        i) சிக்கிம்
  2. மன்னார் வளைகுடா   ii) குஜராத்
  3. கட்ச்                                 iii) தமிழ்நாடு
  4. கஞ்சன் ஜங்கா              iv) அந்தமான் நிக்கோபார் தீவுகள்
A
i ii iii iv
B
ii iii i iv
C
ii i iii iv
D
iv iii ii i
Question 96
தவறான இணையைத் தேர்ந்தெடு. (உயிர்க்கோள காப்பகங்கள் - மாநிலம்)
A
மானாஸ் – அசாம்
B
நந்தா தேவி – உத்ரகாண்ட்
C
நாக்ரெக் – குஜராத்
D
நீலகிரி – தமிழ்நாடு
Question 96 Explanation: 
(குறிப்பு: நாக்ரெக் - மேகாலயா)
Question 97
யுனெஸ்கோவின் உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது
A
நீலகிரி
B
அகத்திய மலை
C
பெரிய நிக்கோபர்
D
கட்ச்
Question 98
கீழ்க்கண்டவற்றுள் யுனெஸ்கோவின் உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக உள்ளவை எவை?
  1. மன்னார் வளைகுடா
  2. சிம்லி பால்
  3. சுந்தரவனம்
  4. நோக்ரேக்
  5. பச்மர்ஹி
  6. நந்தாதேவி
  7. அச்சனக்மர் அமர்காண்டக்
  8. நந்தா தேவி
A
அனைத்தும்
B
2, 3, 4, 5
C
1, 2, 4, 5, 6
D
4, 6, 7, 8
Question 98 Explanation: 
(குறிப்பு: நோக்ரேக் - மேகாலயா)
Question 99
தவறான இணையைத் தேர்ந்தெடு. (உயிர்க்கோள காப்பகங்கள் - மாநிலம்)
A
சிம்லிபால் - ஆந்திரா
B
சுந்தரவனம் – மேற்கு வங்கம்
C
குளிர் பாலைவனம் - இமாச்சலப் பிரதேசம்
D
சேஷாசலம் குன்றுகள் – ஆந்திரா
Question 99 Explanation: 
(குறிப்பு: சிம்பிபால் – ஒடிசா.)
Question 100
பொருத்துக.
  1. யானை பாதுகாப்பித் திட்டம்  i) பாலைவன மற்றும் அரைப்பாலைவனத் தாவரங்கள்
  2. உயிர் பன்மைச் சிறப்பு பகுதிகள்       ii) அக்டோபர், டிசம்பர்
  3. வடகிழக்குப் பருவக்காற்று                  iii) கடற்கரைக் காடுகள்
  4. அயனமண்டல முட்புதர் காடுகள்        iv) யானைகள் பாதுகாப்பு
  5. கடலோரக் காடுகள்                                  v) இமயமலைகள்
A
v iv ii i iii
B
iv v ii i iii
C
v iii ii i iv
D
iv i ii iii v
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!