Online TestTnpsc Exam
பேரரசுகளின் காலம்: குப்தர்- Online Test 6th Social Science Lesson 17 Questions in Tamil
பேரரசுகளின் காலம்: குப்தர்- Online Test 6th Social Science Lesson 17 Questions in Tamil
Congratulations - you have completed பேரரசுகளின் காலம்: குப்தர்- Online Test 6th Social Science Lesson 17 Questions in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
- மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் வட இந்தியாவில் குஷாணர்களாலும், தெற்கே சாதவாகனர்களாலும் நிறுவப்பட்டிருந்த வலிமை வாய்ந்த பேரரசுகள் வலிமையை இழந்தன.
- இச்சூழலில் சந்திரகுப்தரால் குப்த வம்சம் நிறுவப்பட்டது.
- குப்தர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், வர்த்தன அரச வம்சத்தை சேர்ந்த ஹர்ஷர் வட இந்தியாவை ஆட்சி புரிந்தார்.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 1 Explanation:
(குறிப்பு: குப்த அரச வம்சம் இருநூறு ஆண்டுக் காலம் நீடித்தது.)
Question 2 |
சரியான இணையைத் தேர்ந்தெடு.
- அலகாபாத் தூண் கல்வெட்டு – சமுத்திரகுப்தர்
- உதயகிரி குகைக் கல்வெட்டு - முதலாம் சந்திரகுப்தர்
- பிதாரி தூண் கல்வெட்டு - ஸ்கந்த குப்தர்
அனைத்தும் | |
1, 2 | |
2, 3 | |
1, 3 |
Question 2 Explanation:
(குறிப்பு: உதயகிரி குகைக் கல்வெட்டு - இரண்டாம் சந்திரகுப்தர்.)
Question 3 |
குப்தர்கள் கால இலக்கியச் சான்றுகளில் தவறான இணையைத் தேர்ந்தெடு.
நீதிசாஸ்திரம் – நாரதர் | |
ஹர்ஷ சரிதம் – பாணர் | |
தேவி சந்திர குப்தம் – காளிதாசர் | |
நாகநந்தா – ஹர்ஷர் |
Question 3 Explanation:
(குறிப்பு: தேவி சந்திரகுப்தம், முத்ரா ராக்ஸம் ஆகியவற்றை விசாகதத்தர் இயற்றினார்.)
Question 4 |
ஹர்ஷர் இயற்றிய நூல்களில் தவறானது எது?
ரத்னாவளி | |
நாகநந்தா | |
பிரியதர்ஷிகா | |
சி-யூ-கி |
Question 4 Explanation:
(குறிப்பு: யுவான் சுவாங் சி-யூ-கி என்னும் நூலை இயற்றினார்.)
Question 5 |
சீன பெளத்தத் துறவி பாகியான் யாருடைய காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்?
முதலாம் சந்திரகுப்தர் | |
இரண்டாம் சந்திரகுப்தர் | |
சமுத்திரகுப்தர் | |
ஷர்ஷர் |
Question 5 Explanation:
(குறிப்பு: பாகியானின் பயணக் குறிப்புகள் குப்தர்களின் வரலாற்றை அறிய உதவுகிறது.)
Question 6 |
நாணயங்களில் முதன்முதலாக இடம்பெற்ற குப்த அரசரின் வடிவம் யாருடையது?
முதலாம் சந்திரகுப்தர் | |
இரண்டாம் சந்திரகுப்தர் | |
ஸ்ரீ குப்தர் | |
சமுத்திரகுப்தர் |
Question 6 Explanation:
(குறிப்பு: குப்த அரச வம்சத்தை நிறுவியவர் ஸ்ரீகுப்தர். அவர் தற்போதைய வங்காளம், பீகார் பகுதிகளை ஆண்டதாகக் கருதப்படுகிறது.)
Question 7 |
கல்வெட்டுகளில் மகாராஜா எனக் குறிப்பிடப்படும் குப்த அரசர்கள் யார்?
முதலாம் சந்திரகுப்தர், ஸ்ரீகுப்தர் | |
முதலாம் சந்திரகுப்தர், இரண்டாம் சந்திரகுப்தர் | |
கடோத்கஜர், இரண்டாம் சந்திரகுப்தர் | |
ஸ்ரீகுப்தர், கடோத்கஜர் |
Question 7 Explanation:
(குறிப்பு: ஸ்ரீகுப்தருக்கு பின் அவருடைய மகன் கடோத்கஜர் அரசப் பதவியேற்றார்.)
Question 8 |
லிச்சாவி அரச குடும்பத்தை சேர்ந்த குமாரதேவியை மணந்த குப்த அரசர்
கடோத்கஜர் | |
ஸ்ரீகுப்தர் | |
முதலாம் சந்திரகுப்தர் | |
சமுத்திரகுப்தர் |
Question 8 Explanation:
(குறிப்பு: இக்குடும்பத்தின் ஆதரவோடு, வட இந்தியச் சிற்றரசுகள் பலவற்றை இவர் வெற்றி கொண்டு, ஒரு பேரரசின் முடியரசராகத் தன்னை முடிசூட்டிக் கொண்டார்.)
Question 9 |
லிச்சாவி அரச வம்சத்தின் ஆட்சிப் பகுதி எந்த இரு பகுதிகளுக்கிடையே அமைந்திருந்தது?
கங்கை - கோதாவரி | |
பஞ்சாப் – ஆப்கானிஸ்தான் | |
பஞ்சாப் – நேபாள் | |
கங்கை – நேபாள் |
Question 9 Explanation:
(குறிப்பு: லிச்சாவி பழமையான கன சங்கங்களில் ஒன்றாகும். சந்திரகுப்தரால் வெளியிடப்பட்ட தங்க நாணயங்களில் சந்திரகுப்தர், குமாரதேவி ஆகிய இருவரின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன. ‘லிச்சாவையா’ என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது.)
Question 10 |
பிரயாகை மெய்க்கீர்த்தியை இயற்றிய ஹரிசேனர் யாருடைய அவைக்கள புலவராக திகழ்ந்தார்?
ஸ்ரீகுப்தர் | |
கடோத்கஜர் | |
முதலாம் சந்திரகுப்தர் | |
சமுத்திரகுப்தர் |
Question 10 Explanation:
(குறிப்பு: பிரயாகை மெய்க்கீர்த்தி அலகாபாத் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. சமுத்திரகுப்தரின் ஆட்சிக்கான மிக முக்கியச் சான்று அலகாபாத் தூண் கல்வெட்டாகும்.)
Question 11 |
குப்த வம்சத்தின் தலைச்சிறந்த அரசர் __________.
முதலாம் சந்திரகுப்தர் | |
இரண்டாம் சந்திரகுப்தர் | |
ஸ்ரீ குப்தர் | |
சமுத்திரகுப்தர் |
Question 11 Explanation:
(குறிப்பு: முதலாம் சந்திரகுப்தரின் மகன் சமுத்திரகுப்தர் ஆவார்.)
Question 12 |
- கூற்று 1: பிரசஸ்தி என்பது ஒரு சமஸ்கிருதச் சொல்.
- கூற்று 2: பிரசஸ்தி என்பதன் பொருள் ஒருவரைப் பாராட்டிப் புகழ்வதாகும்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 12 Explanation:
(குறிப்பு: அவைக்களப் புலவர்கள் அரசர்களைப் புகழ்ந்துபாடி அவர்தம் சாதனைகளைப் பட்டியலிட்டனர். இவை பின்னர் மக்கள் படித்து தெரிந்து கொள்வதற்காகத் தூண்களில் பொறிக்கப்பட்டன. இவை பிரசஸ்தி / மெய்க்கீர்த்தி எனப்படும்.)
Question 13 |
பல்லவ நாட்டு அரசர் விஷ்ணு கோபனை __________ என்பவர் தோற்கடித்தார்.
முதலாம் சந்திரகுப்தர் | |
இரண்டாம் சந்திரகுப்தர் | |
குமாரகுப்தர் | |
சமுத்திரகுப்தர் |
Question 13 Explanation:
(குறிப்பு: சமுத்திரகுப்தர் மகத்தான போர்த் தளபதி ஆவார். அவர் பேரரசர் ஆனவுடன் நாடு முழுவதும் படையெடுத்துச் சென்றார். தென்னிந்தியாவின் மீதும் படையெடுத்தார்.)
Question 14 |
- கூற்று 1: வட இந்தியாவில் சமுத்திரகுப்தர் ஒன்பது அரசுகளைக் கைப்பற்றினார்.
- கூற்று 2 : சமுத்திரகுப்தர், தென்னிந்தியாவைச் சேர்ந்த 21 அரசர்களைத் தனக்குக் கட்டுப்பட்ட சிற்றரசர்களாக்கி அவர்களை கப்பம் கட்டச் செய்தார்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1 மற்றும் 2 இரண்டும் சரி | |
கூற்று 1 மற்றும் 2 இரண்டும் தவறு |
Question 14 Explanation:
(குறிப்பு: சமுத்திரகுப்தர், தென்னிந்தியாவைச் சேர்ந்த 12 அரசர்களைத் தனக்குக் கட்டுப்பட்ட சிற்றரசர்களாக்கி அவர்களை கப்பம் கட்டச் செய்தார்.)
Question 15 |
கீழ்க்கண்ட எந்த பகுதியின் அரசர்கள் சமுத்திரகுப்தரின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டனர்?
- அஸ்ஸாம்
- கிழக்கு வங்காளம்
- நேபாளம்
- மகாராஷ்டிரா
- பஞ்சாபின் கிழக்குப் பகுதி
அனைத்தும் | |
1, 2, 3 | |
1, 2, 5 | |
1, 2, 3, 5 |
Question 15 Explanation:
(குறிப்பு: ராஜஸ்தானத்தை சேர்ந்த பல்வேறு பழங்குடியினரும் சமுத்திரகுப்தரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர்.)
Question 16 |
சமுத்திரகுப்தர் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
சமுத்திரகுப்தர் ஒரு விஷ்ணு பக்தராவார். | |
போர்களில் வெற்றி பெற்றதன் நினைவாக நடத்தப்படும் வேதகால சடங்கான குதிரைகளைப் பலியிடும் வேள்வியைச் சமுத்திரகுப்தர் மீண்டும் நடைமுறைப்படுத்தினார். | |
சமுத்திரகுப்தர் வெளியிட்ட தங்க நாணயம் ஒன்றில் அவர் வீணை வாசிப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. | |
அவர் சித்திராங்கதன் எனும் பட்டம் பெற்றார். |
Question 16 Explanation:
(குறிப்பு: சமுத்திரகுப்தர் கவிதைப் பிரியரும் இசைப் பிரியருமாவார். அதனால் கவிராஜா எனும் பட்டம் பெற்றார்.)
Question 17 |
இலங்கையை சேர்ந்த ஸ்ரீ மேகவர்மன் எனும் பெளத்த அரசன் யாருடைய சமகாலத்தவர்?
ஸ்ரீகுப்தர் | |
கடோத்கஜர் | |
முதலாம் சந்திரகுப்தர் | |
சமுத்திரகுப்தர் |
Question 18 |
சாக அரசர்களைத் தோற்கடித்து மேற்கு மாளவத்தையும் குஜராத்தையும் கைப்பற்றிய குப்த அரசர்
ஸ்ரீ குப்தர் | |
கவிராஜா | |
விக்கிரமாதித்யர் | |
முதலாம் குமாரகுப்தர் |
Question 18 Explanation:
(குறிப்பு: இரண்டாம் சந்திரகுப்தர் சமுத்திரகுப்தரின் மகனாவார். அவர் விக்கிரமாதித்யர் என்றும் அறியப்பட்டார்.)
Question 19 |
விக்கிரமாதித்யர் குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.
- தென்னிந்திய அரசுகளோடு நட்புறவைப் பேணினார்.
- குதுப்மினாருக்கு அருகேயுள்ள இரும்புத் தூண் விக்கிரமாதித்யரால் உருவாக்கப்பட்டது என நம்பப்படுகிறது.
- இவருடைய அவையில் நவரத்தினங்கள் என்று அறியப்பட்ட கலைஞர்கள் இருந்தனர்.
அனைத்தும் | |
1, 2 | |
2, 3 | |
1, 3 |
Question 20 |
தவறான இணையைத் தேர்ந்தெடு (நவரத்தினங்கள்)
அமரசிம்ஹர் - அகராதியியல் ஆசிரியர் | |
காளிதாசர் - சமஸ்கிருதப் புலவர் | |
தன்வந்திரி – மருத்துவர் | |
ஹரிசேனர் – சோதிடர் |
Question 20 Explanation:
(குறிப்பு: ஹரிசேனர் – சமஸ்கிருதப் புலவர்)
Question 21 |
பொருத்துக.
- காகபானகர் i) சோதிடர்
- சன்கு ii) கட்டடக்கலை நிபுணர்
- வராகமிகிரர் iii) வானியல் அறிஞர்
- வராச்சி iv) இலக்கண ஆசிரியர்
- விட்டல் பட்டர் v) மாயவித்தைக்காரர்
ii iii i v iv | |
iii i ii iv v | |
i ii iii iv v | |
iv v ii i iii |
Question 22 |
நரேந்திர சந்திரர், சிம்மசந்திரர், தேவஸ்ரீ என்ற பட்டப்பெயர்களை கொண்ட அரசர்
இரண்டாம் சந்திரகுப்தர் | |
கடோத்கஜர் | |
முதலாம் சந்திரகுப்தர் | |
சமுத்திரகுப்தர் |
Question 22 Explanation:
(குறிப்பு: விக்கிரமாதித்யர், நரேந்திர சந்திரர், சிம்மசந்திரர், நரேந்திரசிம்மர், விக்கிரம தேவராஜர், தேவகுப்தர், தேவஸ்ரீ ஆகியவை இரண்டாம் சந்திரகுப்தரின் பட்டப்பெயர்கள் ஆகும்.)
Question 23 |
நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் யார்?
ஸ்ரீகுப்தர் | |
இரண்டாம் சந்திரகுப்தர் | |
முதலாம் சந்திரகுப்தர் | |
முதலாம் குமார குப்தர் |
Question 23 Explanation:
(குறிப்பு: முதலாம் குமார குப்தர் இரண்டாம் சந்திரகுப்தருடைய மகன் ஆவார்.)
Question 24 |
மிகச் சிறந்த குப்தப் பேரரசர்களில் கடைசி பேரரசர் யார்?
முதலாம் குமார குப்தர் | |
பாலாதித்யர் | |
முதலாம் சந்திரகுப்தர் | |
சமுத்திரகுப்தர் |
Question 24 Explanation:
(குறிப்பு: பாலாதித்யர் முதலாம் நரசிம்மகுப்தர் என்ற பெயரில் அரியணை ஏறினார். இவர் பௌத்த மதத்தால் ஈர்க்கப்பட்டவராவார். இவர் மிகிரகுலருக்கு கப்பம் கட்டி வந்தார்.)
Question 25 |
குமார குப்தரைத் தொடர்ந்து அரசப் பதவியேற்ற குப்த அரசர்
முதலாம் குமாரகுப்தர் | |
பாலாதித்யர் | |
ஸ்கந்த குப்தர் | |
சமுத்திரகுப்தர் |
Question 25 Explanation:
(குறிப்பு: ஸ்கந்த குப்தர் ஹூணர்களின் படையெடுப்பைச் சந்திக்க நேரிட்டது. அவர் அவர்களை தோற்கடித்து விரட்டி அடித்தார். ஆனால் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் படையெடுத்து வந்து குப்தப் பேரரசை தோற்கடித்தார்.)
Question 26 |
குப்த பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர் ________ ஆவார்.
முதலாம் குமார குப்தர் | |
பாலாதித்யர் | |
ஸ்கந்த குப்தர் | |
விஷ்ணுகுப்தர் |
Question 27 |
குப்தர்களின் ஆட்சியமைப்புக் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
குப்த அரசர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தினர். | |
உயர்பதவிகளில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள் தண்டநாயகர் மற்றும் மகாதண்ட நாயகர் என அழைக்கப்பட்டனர். | |
நிலவரி அரசின் முக்கிய வருவாயாக இருந்தது. | |
அதிக வட்டிக்குக் கடன் கொடுக்கும் முறை நடைமுறையில் இல்லை. |
Question 27 Explanation:
(குறிப்பு: குப்தர் காலத்தில் அதிக வட்டிக்குக் கடன் கொடுக்கும் முறை நடைமுறையில் இருந்தது.)
Question 28 |
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
- குப்தப் பேரரசு தேசம் அல்லது புக்தி எனும் பெயரில் பல பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டன.
- பிராந்தியங்கள் உபாரிகா எனும் ஆளுநர்கள் நிர்வகித்தனர்.
- பிராந்தியங்கள் விஷ்யா எனும் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன.
- கிராம அளவில் கிராமிகா, கிராமதியாகக்ஷா எனும் அதிகாரிகள் செயல்பட்டனர்
அனைத்தும் | |
1, 2, 3 | |
2, 3 | |
1, 2, 4 |
Question 28 Explanation:
(குறிப்பு: விஷ்யாபதிகள் எனும் அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்தை மேற்கொண்டனர்.)
Question 29 |
சரியான இணையைத் தேர்ந்தெடு.
- பாலாதிகிரிதா - குதிரைப்படையின் தளபதி
- மஹாபாலாதிகிரிதா - காலாட்படையின் தளபதி
1 மட்டும் | |
1, 2 | |
2 மட்டும் | |
எதுவுமில்லை |
Question 29 Explanation:
(குறிப்பு: பாலாதிகிரிதா - காலாட்படையின் தளபதி, மஹாபாலாதிகிரிதா - குதிரைப்படையின் தளபதி. தூதகா எனும் ஒற்றர்களை உள்ளடக்கிய வேவு பார்க்கும் அமைப்பும் செயல்பட்டது.)
Question 30 |
_________ என்பவரால் எழுதப்பட்ட நிதிசாரம் எனும் நூல் அரசுக்கருவூலத்தின் முக்கியத்துவத்தையும் வருமானத்திற்கான பல வழிகளையும் குறிப்பிடுகின்றது.
காளிதாசர் | |
காகபானகர் | |
வராச்சி | |
காமாந்தகர் |
Question 30 Explanation:
(குறிப்பு: சமுத்திர குப்தரைப் போன்ற அரசர்களின் படையெடுப்பு நடவடிக்கைகளில், வருவாயின் உபரியே முதலீடு செய்யப்பட்டது.)
Question 31 |
பொருத்துக.
- க்ஷேத்ரா i) மேய்ச்சல் நிலங்கள்
- கிலா ii) குடியிருப்பதற்கு உகந்த நிலங்கள்
- அப்ரகதா iii) வனம் அல்லது காட்டு நிலங்கள்
- வஸ்தி iv) தரிசு நிலங்கள்
- கபத சரகா v) வேளாண்மைக்கு உகந்த நிலங்கள்
ii iii i v iv | |
iii i ii iv v | |
v iv iii ii i | |
iv v ii i iii |
Question 32 |
குப்தர்கள் காலத்தில் சிரேஸ்தி மற்றும் சார்த்தவாகா என அழைக்கப்பட்டவர்கள் யார்?
இராணுவ தளபதி | |
தலைமை அமைச்சர் | |
அரசர் | |
வணிகர்கள் |
Question 32 Explanation:
(குறிப்பு: குப்தர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வணிகர்களின் பங்களிப்பு மிகவும் போற்றத்தக்கதாக இருந்தது. வணிகர்களில் இரண்டு வகையினர் இருந்தனர். அவர்கள் சிரேஸ்தி மற்றும் சார்த்தவாகா என அழைக்கப்பட்டனர்.)
Question 33 |
- கூற்று 1: சிரேஸ்தி பிரிவைச் சார்ந்த வணிகர்கள் ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தனர்.
- கூற்று 2: சார்த்தவாகா வணிகர்கள் எருது பூட்டிய வண்டிகளில் சரக்குகளை ஏற்றி பல்வேறு இடங்களுக்குச் சென்று வணிகம் செய்தனர்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 33 Explanation:
(குறிப்பு: மிளகு, தங்கம், செம்பு, இரும்பு, குதிரைகள், யானைகள் ஆகியவை முக்கிய வணிகப் பொருட்களாகும்.)
Question 34 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
நாளந்தா யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாகும். | |
நாளந்தா பல்கலைக்கழகம் பக்தியார்கில்ஜி என்பாரின் தலைமையில் வந்த மம்லுக்குகளால் அழித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டது. | |
நாளந்தா பல்கலைக்கழகத்தில் யுவான் – சுவாங் சமணத் தத்துவத்தைப் பற்றிப் படிப்பதில் பல ஆண்டுகள் செலவழித்தார். | |
நாளந்தா வளாகத்தில் எட்டு மகா பாடசாலைகளும் மூன்று மிகப்பெரிய நூலகங்களும் இருந்தன. |
Question 34 Explanation:
(குறிப்பு: நாளந்தா பல்கலைக்கழகத்தில் யுவான் – சுவாங் பெளத்த தத்துவத்தைப் பற்றிப் படிப்பதில் பல ஆண்டுகள் செலவழித்தார். நாளந்தாவில் பௌத்தத் தத்துவமே முக்கிய பாடப்பிரிவாக இருந்தது. யோகா, வேத இலக்கியங்கள், மருத்துவம் ஆகியவையும் கற்பிக்கப்பட்டன.)
Question 35 |
நாளந்தா பல்கலைக்கழகம் _________ நூற்றாண்டுகளில் குப்தப் பேரரசின் ஆதரவில் தழைத்தோங்கியது.
4, 5 | |
5, 6 | |
3, 4 | |
7, 8 |
Question 35 Explanation:
(குறிப்பு: குப்தர்களுக்கு பின்னர் கன்னோசியைச் சேர்ந்த பேரரசர் ஹர்ஷரின் ஆதரவில் சிறப்புற்றது.)
Question 36 |
ஷூணர்கள் பற்றிய செய்திகளில் தவறான கூற்றைத் தேர்ந்தெடு
ஹூணர்கள் என்போர் நாடோடிப் பழங்குடியினராவர். | |
தங்கள் மாபெரும் தலைவர் அட்டில்லாவின் தலைமையில், ரோமாபுரியையும் கான்ஸ்டான்டி நோபிளையும் பேரச்சத்திற்கு உள்ளாக்கினர். | |
வெள்ளை ஹூணர்கள் மத்திய ஆசியா வழியாக இந்தியா வந்தனர். | |
மிகிரகுலரை தோற்கடித்த பின்னர் இவர்கள் மத்திய பகுதிகளில் பரவினர். |
Question 36 Explanation:
(குறிப்பு: ஹூணர்கள் ஸ்கந்தகுப்தரைத் தோற்கடித்த பின்னர் இவர்கள் மத்திய பகுதிகளில் பரவினர். தங்கள் தொடர் படையெடுப்புகளின் மூலமாக எல்லையோர நாடுகளுக்குத் தொந்தரவு கொடுத்து வந்தனர்.)
Question 37 |
ஷூணர்களின் தலைவரான ________ தனக்குத்தானே அரசராக முடிசூட்டிக் கொண்டார்.
மிகிரகுலர் | |
யசோதவர்மன் | |
தோரமானர் | |
அட்டில்லா |
Question 37 Explanation:
(குறிப்பு: தோரமானருக்கு பின்னர் அவரது மகன் மிகிரகுலர் ஆட்சி செய்தார். முடிவில் மத்திய இந்தியாவில் மாளவத்தை ஆட்சி செய்து வந்த யசோதர்மன் அவர்களைத் தோற்கடித்து அவர்களின் ஆட்சிக்கு முடிவு கட்டினார்.)
Question 38 |
தவறான இணையைத் தேர்ந்தெடு.(குப்தர்கள் காலத்திய துறைமுகங்கள்)
- மேலைக் கடற்கரைத் துறைமுகங்கள் - கல்யாண், மங்களூர், மலபார்
- கீழைக் கடற்கரைத் துறைமுகங்கள் - வங்காளத்திலிருந்த தாமிரலிப்தி
இரண்டும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 38 Explanation:
(குறிப்பு: பாடலிபுத்திரம்,உஜ்ஜைனி, வாரணாசி, மதுரா ஆகியன முக்கிய வணிக நகரங்களாக இருந்தன.)
Question 39 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் முதலாம் சந்திரகுப்தர். | |
குப்தர்களின் பொற்காசுகள் தினாரா என்றழைக்கப்பட்டன. | |
குப்தர்கள் வெளியிட்ட பொற்காசுகளை விட வெள்ளி, செப்புக் காசுகள் குறைவாகவே வெளியிடப்பட்டன. | |
குப்தர்களுக்கு அடுத்து வந்த காலத்தில் பொற்காசுகளின் சுழற்சியில் வீழ்ச்சி ஏற்பட்டது. |
Question 39 Explanation:
(குறிப்பு: குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் சமுத்திரகுப்தர் ஆவார். குஷாணர்களின் நாணயங்கள் சமுத்திரகுப்தருக்கு உந்துதலை வழங்கின.)
Question 40 |
- கூற்று 1: குப்தர்கள் காலத்தில் சுரங்கத் தொழிலும் உலோகத் தொழிலும் செழிப்புற்று விளங்கின.
- கூற்று 2: உலோகத் தொழில் வளர்ச்சி பெற்றிருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டு சந்திரகுப்தரால் நிறுவப்பட்ட மெக்ராலி இரும்புத்தூணாகும்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 40 Explanation:
(குறிப்பு: டெல்லியிலுள்ள மெக்ராலி இரும்புத்தூண் இன்றளவும் துருப்பிடிக்காமல் உள்ளது.)
Question 41 |
குப்தர்களால் பயன்படுத்தப்பட்ட உலோகங்களில் தவறானது எது?
இரும்பு | |
தாமிரம் | |
ஈயம் | |
வெள்ளி |
Question 41 Explanation:
(குறிப்பு: இரும்பு, தங்கம், தாமிரம், தகரம், ஈயம், பித்தளை, செம்பு, மணிவெண்கலம், மைக்கா, மாங்கனீசு, சிகப்புச் சுண்ணம் ஆகியவை குப்தர்களால் பயன்படுத்தப்பட்ட உலோகங்கள் ஆகும்.)
Question 42 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
குப்தர் கால சமூகம் நான்கு வர்ணங்களைக் கொண்ட வர்ண முறையில் அமைந்திருந்தது. | |
அது தந்தை வழிச் சமூகமாக இருந்தது. | |
பலதார மணம் நடைமுறையில் இல்லை. | |
உடன்கட்டை ஏறும் முறை குப்தர்கள் காலத்தில் பின்பற்றப்பட்டது. |
Question 42 Explanation:
(குறிப்பு: குப்தர்கள் காலத்தில் பலதார மணம் பரவலாக நடைமுறையில் இருந்தது. குபேரநாகா, துருபசுவாமினி ஆகிய இருவரும் இரண்டாம் சந்திரகுப்தரின் அரசியர் எனக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. குப்தர் கால சமூகம் தந்தை வழி சமூகமாக இருந்தது.)
Question 43 |
குதிரைகளை பலி கொடுத்துச் செய்யப்படும் வேள்வியான அஸ்வமேத யாகத்தை நடத்திய குப்த அரசர்கள்
- முதலாம் சந்திரகுப்தர்
- சமுத்திரகுப்தர்
- ஸ்ரீகுப்தர்
- முதலாம் குமார குப்தர்
1, 2 | |
1, 4 | |
1, 3 | |
2, 4 |
Question 43 Explanation:
(குறிப்பு: குப்தர்கள் காலத்தில்தான் உருவ வழிபாடு தொடங்கியதையும் வைணவம், சைவம் ஆகிய இரு பிரிவுகள் தோன்றியதையும் காண்கிறோம்.)
Question 44 |
- கூற்று 1: கட்டுமானக் கோவில்களை முதன்முதலாகக் கட்டியவர்கள் குப்தர்களே.
- கூற்று 2: இது முன்பிருந்த மரபான, பாறைக் குடைவரைக் கோயில்களின் அடுத்த கட்டப் பரிணாம வளர்ச்சியாகும்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 44 Explanation:
(குறிப்பு: இக்காலப் பகுதியில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள், திராவிட பாணிக் கூறுகளை ஒத்திருக்கின்றன.)
Question 45 |
தவறான இணையைத் தேர்ந்தெடு.
- எல்லோரா - மகாராஷ்டிரா
- பாக் – உத்திரப்பிரதேசம்
- உதயகிரி – ஒடிசா
1, 2 | |
2, 3 | |
2 மட்டும் | |
3 மட்டும் |
Question 45 Explanation:
(குறிப்பு: அஜந்தா, எல்லோரா (மகாராஷ்டிரா), பாக்(மத்தியப் பிரதேசம்), உதயகிரி(ஒடிசா) ஆகிய இடங்களில் குப்தர் காலத்திய மிகவும் குறிப்பிடத்தக்க பாறைக் குடைவரைக் கோயில்கள் உள்ளன.).
Question 46 |
சுல்தான் கஞ்ச் என்னுமிடத்திலுள்ள _________ அடி உயரமுள்ள புத்தரின் உலோகச் சிற்பம் குப்தர்களின் உலோகச் சிற்பத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
5 | |
7 ½ | |
12 | |
18 |
Question 46 Explanation:
(குறிப்பு: நாளந்தாவிலுள்ள 18 அடி உயரமுள்ள புத்தரின் செப்புச் சிலை குப்தர்களின் உலோகச் சிற்பத்திற்கு எடுத்துக்காட்டாகும்
Question 47 |
குப்தர்களின் ஓவியக் கலைக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டுகளாக திகழ்பவை எவை?
- அஜந்தா குகை ஓவியங்கள்
- குவாலியர் பாக் குகை ஓவியங்கள்
- சுல்தான் கஞ்ச் குகை ஓவியங்கள்
- உதயகிரி குகை ஓவியங்கள்
1, 2 | |
2, 3 | |
1, 3, 4 | |
1, 2, 4 |
Question 48 |
குப்தர்கள் _________மொழியை அலுவலக மொழியாக கொண்டிருந்தனர்.
பிராகிருதம் | |
சமஸ்கிருதம் | |
பாலி | |
லத்தீன் |
Question 48 Explanation:
(குறிப்பு: பிராகிருதம் மக்களால் பேசப்படும் மொழியாக இருந்தது. குப்தர்களின் கல்வெட்டுகள், அனைத்தும் சமஸ்கிருத மொழியிலேயே உள்ளன.)
Question 49 |
கீழ்க்கண்டவற்றுள் காளிதாசர் இயற்றிய நூல்கள் எவை?
- மாளவிகாக்னிமித்ரம்
- மேகதூதம்
- குமார சம்பவம்
- ரிதுசம்காரம்
அனைத்தும் | |
1, 2, 3 | |
1, 3 | |
2, 3 |
Question 49 Explanation:
(குறிப்பு: காளிதாசர் இயற்றிய நாடக நூல்கள் சாகுந்தலம், மாளவிகாக்னிமித்ரம், விக்கிரம ஊர்வசியம் என்பனவாகும். அவருடைய ஏனைய நூல்கள் மேகதூதம், ரகுவம்சம், குமாரசம்பவம், ரிது சம்காரம் ஆகியனவாகும்.)
Question 50 |
சந்திரகோமியா எனும் பௌத்த அறிஞர் இயற்றிய சந்திரவியாகரணம் என்பது ________ நூல்.
வானியல் | |
மருத்துவ | |
இலக்கண | |
கணிதம் |
Question 50 Explanation:
(குறிப்பு: சந்திரகோமியா என்பவர் வங்காளத்தை சேர்ந்தவர்.)
Question 51 |
தவறான இணையைத் தேர்ந்தெடு.
பாணினி - அஷ்டதியாயி | |
பதஞ்சலி – மகாபாஷ்யம் | |
சூரிய சித்தாந்தா - பிரம்மகுப்தா | |
சுஸ்ருதர் – அறுவை சிகிச்சை |
Question 51 Explanation:
(குறிப்பு: சூரிய சித்தாந்தா - ஆரியபட்டர். இந்நூலில் ஆரியபட்டர் சூரிய, சந்திர கிரகணங்களுக்கான உண்மைக் காரணங்களை விளக்கியுள்ளார். பூமி தனது அச்சில் சுழல்கிறது எனும் உண்மையை அறிவித்த முதல் இந்திய வானியல் ஆய்வாளர் அவரேயாவார்.)
Question 52 |
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
- தன்வந்திரி ஆயுர்வேத மருத்துவத்தில் நிபுணராகத் திகழ்ந்தார்.
- சாரக்கர் ஒரு மருத்துவ அறிவியல் அறிஞராவார்.
- சுஸ்ருதர் அறுவை சிகிச்சை செய்முறையைப் பற்றி விளக்கிய முதல் இந்தியர் ஆவார்.
அனைத்தும் | |
2 மட்டும் | |
1, 2 | |
2, 3 |
Question 53 |
ரோமானியப் பேரரசர் மகா கான்ஸ்டன்டைனின் சமகாலத்திய குப்த அரசர்?
ஸ்ரீகுப்தர் | |
இரண்டாம் சந்திரகுப்தர் | |
முதலாம் சந்திரகுப்தர் | |
முதலாம் குமார குப்தர் |
Question 53 Explanation:
(குறிப்பு: மகா கான்ஸ்டன்டைன், கான்ஸ்டாண்டிநோபிள் நகரை உருவாக்கினார்.)
Question 54 |
கீழ்க்காண்பனவற்றில் காலவரிசைப்படி அமைந்துள்ளது எது?
ஸ்ரீகுப்தர் - முதலாம் சந்திரகுப்தர் - சமுத்திரகுப்தர் - விக்கிரமாதித்யர் | |
முதலாம் சந்திரகுப்தர் - விக்கிரமாதித்யர் – ஸ்ரீகுப்தர் – சமுத்திரகுப்தர் | |
ஸ்ரீகுப்தர் – சமுத்திரகுப்தர் - விக்கிரமாதித்யர் - முதலாம் சந்திரகுப்தர் | |
விக்கிரமாதித்யர் – ஸ்ரீகுப்தர் - சமுத்திரகுப்தர் - முதலாம் சந்திரகுப்தர் |
Question 55 |
வட இந்தியாவை ஹர்ஷர் ஆட்சி செய்த காலம்____________
கி.பி. 606 – 647
| |
கி.மு. 606 – 647
| |
கி.பி. 706 – 747
| |
கி.மு. 706 – 747 |
Question 55 Explanation:
விளக்கம்: குப்தர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், அதைத் தொடர்ந்து ஏறத்தாழ 50 ஆண்டு இடைபட்ட காலத்திற்குப் பின்னர், வர்த்தன அரச வம்சத்தைச் சேர்ந்த ஹர்ஷர் வட இந்தியாவை கி.பி.(பொ.ஆ)606 – 647 வரை ஆட்சி புரிந்தார்.
Question 56 |
குப்தர் காலத்தில் ____________ இல் நாணயங்கள் வெளியிடப்பட்டன.
தங்கம்
| |
வெள்ளி
| |
செப்பு
| |
மேற்கண்ட அனைத்தும் |
Question 57 |
சமுத்திரகுப்தரின் அவைக்களப் புலவரான ‘ஹரிசேனர்’ இயற்றிய பிரயாகை மெய்க்கீர்த்தி_____________தூணில் பொறிக்கப்பட்டுள்ளது.
சாரநாத் தூண்
| |
மெக்ரௌலி தூண்
| |
சாஞ்சி ஸ்தூபி
| |
அலகாபாத் தூண் |
Question 57 Explanation:
விளக்கம்: சமுத்திரகுப்தரின் அவைக்களப் புலவரான ‘ஹரிசேனர்’ இயற்றிய பிரயாகை மெய்க்கீர்த்தி அலகாபாத் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது.
Question 58 |
கூற்று 1: இரண்டாம் சமுத்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தில், சீனாவைச் சேர்ந்த பௌத்தத் துறவி பாகியான் இந்தியாவிற்கு வந்தார்.
கூற்று 2: அவருடைய பயணக் குறிப்புகள் குப்தர் காலத்து மக்களின் சமூக-பொருளாதார, மத, ஒழுக்க நிலைகள் பற்றிய செய்திகளை நமக்கு வழங்குகின்றன.
கூற்று 1 சரி, 2 தவறு
| |
கூற்று 1 தவறு, 2 சரி
| |
இரண்டும் சரி
| |
இரண்டும் தவறு |
Question 58 Explanation:
விளக்கம்: இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தில், சீனாவைச் சேர்ந்த பௌத்தத் துறவி பாகியான் இந்தியாவிற்கு வந்தார்.
Question 59 |
மகதத்து மக்கள் பற்றிய பாஹியானின் கூற்றுகளில் பொருந்தாது எது.
மகதத்து மக்கள் மகிழ்ச்சியோடும் செழிப்போடும் வாழ்ந்தனர்.
| |
கடுமையான தண்டனையின்றி நீதி வழங்கப்பட்டது.
| |
கயா பாழடைந்திருந்தது, கபிலவஸ்து காடாகியிருந்தது. ஆனால் பாடலிபுத்திரத்தில் மக்கள் செல்வத்தோடும் செழிப்போடும் வாழ்ந்தனர்.
| |
மரணதண்டனை வழங்கப்பட்டது. |
Question 59 Explanation:
விளக்கம்: மரணதண்டனை வழங்கப்படவில்லை.
Question 60 |
குப்தர்களின் ஆட்சி காலத்தில் கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்டவர்_______________
தூதர்
| |
அரசர்
| |
அவைக்கலப்புலவர்
| |
மேற்கண்ட எவருமில்லை |
Question 60 Explanation:
விளக்கம்: குப்த அரசர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தினர்.
Question 61 |
குப்த அரசர்களுக்கு நிர்வாகத்தில் உதவி செய்த குழு___________
ஒற்றர் குழு
| |
அமைச்சர்கள் குழு
| |
மந்திரி
| |
B C இரண்டும் |
Question 61 Explanation:
விளக்கம்: குப்த அரசர்களுக்கு அமைச்சர்கள் (மந்திரி) குழுவொன்று நிர்வாகத்தில் உதவி செய்தது. அக்குழு இளவரசர்களையும், உயர் அதிகாரிகளையும், கப்பம் கட்டும் சிற்றரசர்களையும் கொண்டிருந்தது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 61 questions to complete.