Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online Test

TN History Culture Part 4 Revision Test in Tamil

TN History Culture Part 4 Revision Test in Tamil

Congratulations - you have completed TN History Culture Part 4 Revision Test in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
தவறான தொடரைத் தேர்ந்தெடு
A
ஐரோப்பிய மொழிகள் தவிர்த்து அச்சில் ஏறிய மொழிகளில் முதல் மொழி தமிழ்.
B
1578ல் தம்பிரான் வணக்கம் எனும் தமிழ் புத்தகம் கோவாவில் வெளியிடப்பட்டது.
C
1609 இல் முழுமையான அச்சகம் சீகன்பால்கு என்பவரால் தரங்கம்பாடியில் நிறுவப்பட்டது.
D
தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் 1812 இல் வெளியிடப்பட்டது.
Question 1 Explanation: 
(குறிப்பு: 1709 இல் முழுமையான அச்சகம் சீகன்பால்கு என்பவரால் தரங்கம்பாடியில் நிறுவப்பட்டது.)
Question 2
உ.வே. சாமிநாதர் பதிப்பித்த நூல்கள் மற்றும் அவை பதிப்பிக்கப்பட்ட நாள்களில் தவறானது எது?
A
பத்துப்பாட்டு -1889
B
சிலப்பதிகாரம் – 1892
C
பதிற்றுப்பத்து – 1904
D
புறநானூறு – 1895
Question 2 Explanation: 
(குறிப்பு: புறநானூறு - 1894, சீவக சிந்தாமணி - 1887, புறப்பொருள் வெண்பாமாலை - 1895, மணிமேகலை - 1898, ஐங்குறுநூறு - 1903, பதிற்றுப்பத்து - 1904)
Question 3
19ம் நூற்றாண்டில் தமிழ் செவ்வியல் இலக்கியங்களை மீண்டும் கண்டறிவதற்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழித்த தமிழ் அறிஞர்கள்
  1. உ.வே.சாமிநாதர்
  2. மீனாட்சி சுந்தரனார்
  3. சி.வை.தாமோதரனார்
  4. சீகன்பால்கு
A
1, 2
B
2, 3
C
1, 3
D
2, 4
Question 3 Explanation: 
(குறிப்பு: சி.வை.தாமோதரனார் பனையோலைகளில் கையால் எழுதப் பெற்றிருந்த பல தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களைப் பதிப்பித்தார். அவற்றில் தொல்காப்பியம், வீரசோழியம், இறையனார் அகப்பொருள், இலக்கண விளக்கம், கலித்தொகை மற்றும் சூளாமணி ஆகியவை அடங்கும்.)
Question 4
தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட மொழிக் குடும்பத்தை சார்ந்தவை, அவை இந்தோ ஆரியக்குடும்ப மொழிகளோடு தொடர்பில்லாதவை எனும் கோட்பாட்டை உருவாக்கியவர்
A
சீகன்பால்கு
B
ராபர்ட் கால்டுவெல்
C
F.W. எல்லிஸ்
D
சி.வை. தாமோதரனார்
Question 4 Explanation: 
(குறிப்பு: ராபர்ட் கால்டுவெல் திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிட்டு இலக்கணம் என தலைப்பிடப்பட்ட நூலில் இக்கோட்பாட்டை 1856ல் விரிவுபடுத்தினார். F.W. எல்லிஸ் என்பவர் 1816ல் புனித ஜார்ஜ் கோட்டையில் கல்லூரியை நிறுவினார்.)
Question 5
___________ தமிழ் இசைக்கு சிறப்பு செய்ததோடு தமிழ் இசை வரலாறு குறித்து நூல்களையும் வெளியிட்டார்.
A
ராமலிங்க அடிகள்
B
அபிரகாம் பண்டிதர்
C
சி.வை.தாமோதரனார்
D
திரு.வி.க
Question 5 Explanation: 
(குறிப்பு: வள்ளலார் என பிரபலமாக அறியப்பட்ட ராமலிங்க அடிகள் நடைமுறையிலிருந்த இந்து சமய பழமைவாதத்தை கேள்விக்குள்ளாக்கினார்.)
Question 6
தவறான இணையைத் தேர்ந்தெடு (அறிஞர்கள் - வாழ்ந்த காலம்)
A
திரு.வி.க : 1883 - 1953
B
பரிதிமாற் கலைஞர் : 1870 – 1903
C
மறைமலையடிகள் : 1891 – 1956
D
சுப்பிரமணிய பாரதி : 1882-1921
Question 6 Explanation: 
(குறிப்பு: மறைமலையடிகள் : 1876 – 1950, பாரதிதான்: 1891 - 1964, சி.வை.தாமோதரனார்: 1832 - 1901, உ.வே.சாமிநாதர்: 1855 - 1942)
Question 7
பௌத்தத்திற்குப் புத்துயிரளித்த தொடக்க கால முன்னோடியான _________ என்பவர் காலனிய சக்தியை எதிர்கொள்வதற்காக பொதுவுடமைவாதத்தையும் சமத்துவத்தையும் வளர்த்தார்.
A
அயோத்திதாசர்
B
சிங்காரவேலர்
C
பெரியார்
D
பி.சுந்தரனார்
Question 7 Explanation: 
(குறிப்பு: சிங்காரவேலரின் காலம் 1860-1946. )
Question 8
சமூகரீதியாக உரிமைகள் மறுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்கள் பிரிவினரின் உரிமைகளுக்காகப் பகுத்தறிவுச் சித்தாந்தத்தை உயர்த்தி பிடித்தவர்கள் யார்?
  1. பண்டிதர் அயோத்திதாசர்
  2. சி.வை.தாமோதரனார்
  3. ஈ.வெ.ரா
  4. பி.சுந்தரனார்
A
1, 2
B
1 , 3
C
2, 4
D
1, 4
Question 8 Explanation: 
(குறிப்பு: அயோத்திதாச பண்டிதரின் காலம் 1845 - 1914)
Question 9
பரிதிமாற் கலைஞர் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A
வி.கோ.சூரியநாராயண சாஸ்த்திரி மதுரை அருகே பிறந்தார்.
B
சென்னை கிறிஸ்த்தவக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றினார்.
C
தமிழ்மொழி ஒரு செம்மொழி என்றும், எனவே சென்னைப் பல்கலைக்கழகம் தமிழை ஒரு வட்டார மொழியென அழைக்கக் கூடாதென முதன்முதலாக வாதாடியவர் இவரே.
D
மேற்கத்திய இலக்கிய மாதிரிகள் மீது இவர் கொண்டிருந்த தாக்கத்தின் விளைவாக 4 வரிச் செய்யுள் வடிவத்தை தமிழுக்கு அறிமுகம் செய்தார்.
Question 9 Explanation: 
(குறிப்பு: மேற்கத்திய இலக்கிய மாதிரிகள் மீது இவர் கொண்டிருந்த தாக்கத்தின் விளைவாக 14 வரிச் செய்யுள் வடிவத்தை தமிழுக்கு அறிமுகம் செய்தார்.)
Question 10
தமிழ் மொழியியல் தூய்மைவாதத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ________.
A
பரிதிமாற் கலைஞர்
B
உ.வே.சா
C
மறைமலை அடிகள்
D
சி.வை.தாமோதரனார்
Question 10 Explanation: 
(குறிப்பு: மறைமலை அடிகள் தனித் தமிழ் இயக்கத்தை உருவாக்கியவர் எனவும் கருதப்படுகிறார். பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு ஆகியவற்றிற்கு விளக்கவுரை எழுதியுள்ளார்.)
Question 11
மறைமலையடிகள் பணிபுரிந்த பத்திரிகை________.
A
சித்தாந்தம்
B
நியூஇந்தியா
C
சித்தாந்த தீபிகா
D
பாலபாரதி
Question 11 Explanation: 
(குறிப்பு: மறைமலையடிகளின் ஆசிரியர்களான பி.சுந்தரனார், சோமசுந்தர நாயக்கர் ஆகிய இருவரும் அவருடைய வாழ்க்கையில் முக்கிய செல்வாக்கு செலுத்தியோராவர்.)
Question 12
தவறான தொடரைத் தேர்ந்தெடு
A
மறைமலை அடிகள் சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழாசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றினார்.
B
தனித்தமிழ் இயக்கம் 1816ல் தொடங்கப்பட்டது.
C
மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை தனித்தமிழ் இயக்கம் உருவாக்கப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தார்.
D
தமிழ் சொற்களுக்குள் புகுந்துவிட்ட சமஸ்கிருத சொற்களுக்கு இணையான பொருள்தரக்கூடிய தமிழ் சொற்களடங்கிய அகராதி ஒன்றை நீலாம்பிகை தொகுத்தார்.
Question 12 Explanation: 
(குறிப்பு: தனித்தமிழ் இயக்கம் 1916ல் தொடங்கப்பட்டது.)
Question 13
_________ ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சென்னை மாகாண மக்கள் தொகையில் பிராமணர்களின் எண்ணிக்கை 3 விழுக்காட்டிற்கு சற்றே அதிகமாயும் பிராமணர் அல்லாதோரின் எண்ணிக்கை 90 விழுக்காடெனவும் காட்டியது.
A
1891
B
1901
C
1911
D
1921
Question 13 Explanation: 
(குறிப்பு: 1901 முதல் 1911 வரையிலான பத்தாண்டுகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்த பிராமணர் எண்ணிக்கை 4074 ஆகவும் அதே பிராமணரல்லாதோரின் எண்ணிக்கை 1035 ஆகவும் இருந்தது.)
Question 14
பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக மதராஸ் பிராமணரல்லாதோர் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு
A
1905
B
1907
C
1909
D
1911
Question 15
1912 இல் மதராஸ் ஐக்கிய கழகம் எனும் அமைப்பை உருவாக்கியவர்
A
சர் பிட்டி தியாகராயர்
B
டி.எம்.நாயர்
C
A. சுப்பராயலு
D
சி.நடேசனார்
Question 15 Explanation: 
(குறிப்பு: பின்னாளில் இது மதராஸ் திராவிடர் சங்கம் என்று மாறிய பின் திராவிடர்களின் மேம்பாட்டிற்கான உதவிகளைச் செய்தது. மேலும் இவர் திருவல்லிக்கேணியில் ஜுலை 1916 இல் திராவிடர் இல்லம் என்ற பெயரில் ஒரு தங்கும் விடுதியை நிறுவி பிராமணரல்லாத மாணவர்களின் கல்விக்கு உதவினார்.)
Question 16
__________ ஆண்டு டாக்டர் நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் மற்றும் அலமேலு மங்கை தாயாரம்மாள் உட்பட 30 முக்கிய பிராமணர் அல்லாத தலைவர்கள் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை உருவாக்க ஒருங்கிணைந்தனர்.
A
1914 அக்டோபர் 20
B
1914 நவம்பர் 20
C
1916 அக்டோபர் 20
D
1916 நவம்பர் 20
Question 16 Explanation: 
(குறிப்பு: இவ்வமைப்பு தொடங்கி வெளியிட்ட மூன்று செய்தித்தாள்களாவன - கட்சியின் கொள்கைகளைப் பரப்புரை செய்வதற்காகத் தமிழில் திராவிடன், ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ், தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா ஆகிய பத்திரிகைகளை வெளியிட்டது.)
Question 17
விக்டோரியா பொது அரங்கில் நடைபெற்ற கூட்டமொன்றில் பிராமணரல்லாதோர் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு
A
1914 டிசம்பர்
B
1915 டிசம்பர்
C
1916 டிசம்பர்
D
1917 டிசம்பர்
Question 17 Explanation: 
(குறிப்பு: இவ்வறிக்கை பிராமணரல்லாத சமூகங்களின் கருத்துக்களைத் தெளிவுபடக் கூறியது. மேலும் சென்னை மாகாணத்தின் பிராமணரல்லாதோர்களின் பொதுவான நிலையை அளவீடு செய்தது.)
Question 18
மாகாண அரசுகளில் இரட்டையாட்சி முறையை அறிமுகம் செய்த பின்னர் மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் _________ இல் முதல் தேர்தல் நடைபெற்றது.
A
1919
B
1920
C
1921
D
1922
Question 18 Explanation: 
(குறிப்பு: நீதிக்கட்சி தேர்தலில் வெற்றிபெற்று இந்தியாவின் முதல் அமைச்சரவையை சென்னையில் அமைத்தது. A.சுப்புராயலு சென்னை மாகாணத்தின் முதலமைச்சரானார். நீதிக்கட்சி 1920 - 1923 மற்றும் 1923-1926 ஆகிய ஆண்டுகளில் அரசமைத்தது.)
Question 19
நீதிக்கட்சியின் கீழிருந்த சட்டமன்றம் முதன் முதலில் தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை___________ ஆண்டு அங்கீகரித்தது.
A
1920
B
1921
C
1923
D
1926
Question 19 Explanation: 
(குறிப்பு: இத்தீர்மானம் பெண்களுக்கென இடத்தை ஏற்படுத்தியதால் 1926 இல் முத்துலட்சுமி அம்மையார் இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராக முடிந்தது.)
Question 20
நிர்வாக அதிகாரங்களை அனைத்து சமூகத்தினரும் பங்கிட்டுக் கொள்வதை ஊக்குவிக்கும் வண்ணம், அரசு அதிகாரிகளை தேர்வு செய்ய எந்த ஆண்டு பணியாளர் தேர்வு வாரியத்தை நீதிக்கட்சி அமைத்தது?
A
1921
B
1922
C
1924
D
1929
Question 20 Explanation: 
(குறிப்பு: இம்முறையை பின்பற்றி பிரிட்டிஷ் இந்திய அரசு 1929 இல் பொதுப் பணியாளர் தேர்வாணையத்தை உருவாக்கியது.)
Question 21
நீதிக்கட்சியால் இந்து சமய அறநிலையச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
A
1922
B
1924
C
1926
D
1929
Question 21 Explanation: 
(குறிப்பு: இச்சட்டத்தின்படி எந்தவொரு தனிநபரும், சாதி வேறுபாடின்றி கோவில்களின் நிர்வாகக் குழுக்களில் உறுப்பினராகவும் கோவிலின் சொத்துக்களை நிர்வகிக்கவும் வழிவகை செய்யப்பட்டது.)
Question 22
சுயமரியாதை இயக்கச் சொற்பொழிவுகளின் மையப் பொருளாக இருந்தது _________.
A
சுதந்திரம்
B
திராவிடர் நலன்
C
சமத்துவம்
D
இனம்
Question 22 Explanation: 
(குறிப்பு: திராவிட மக்களுடைய நீண்ட கால வரலாற்றின் போக்கில் திராவிட மக்கள் ஆரிய பிராமணர்களால் திட்டமிட்டு ஒடுக்கப்பட்டதாக அச்சொற்பொழிவுகளில் விவாதிக்கப்பட்டன.)
Question 23
இஸ்லாம் சமூகத்தில் சீர்திருத்த முன்முயற்சிகள் மேற்கொண்ட _______ மற்றும் ________ ஆகியோரை திராவிட முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டுமென பெரியார் கூறினார்.
A
சையது அகமது கான், அமானுல்லா
B
கமால் பாட்சா, அமானுல்லா
C
கமால் பாட்சா, அமானுல்லா
D
ஃபரூக் அப்துல்லா, கமால் பாட்சா
Question 23 Explanation: 
(குறிப்பு: சுயமரியாதை இயக்கம் இஸ்லாமின் மேன்மை மிகுந்த கோட்பாடுகனை சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை பாராட்டியது.)
Question 24
ஈ.வெ.ரா அவர்கள் ஈரோட்டின் நகர சபைத் தலைவராக பதவி வகித்த காலம்
A
1916 - 1917
B
1917 - 1918
C
1918 – 1919
D
1915 – 1918
Question 24 Explanation: 
(குறிப்பு: 1917 க்கு பின்னர் பிராமணரல்லாத நீதிக்கட்சியின் எழுச்சிக்குப் பின்னர் சி. ராஜாஜியின் முன் முயற்சியினால் பெரியார் மற்றும் பி.வரதராஜுலு போன்ற பிராமணரல்லாத தலைவர்களும் காங்கிரஸ் கட்சியில் சேர்க்கப்பட்டனர்.)
Question 25
சட்டசபை போன்ற பிரதிநிதித்துவ அமைப்புகளில் பிராமணர் அல்லாதவர்களுக்கு இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்துவது தொடர்பான தீர்மானத்தை எங்கு நடைபெற்ற காங்கிரஸ் குழுவின் வருடாந்திர மாநாட்டில் பெரியார் நிறைவேற்ற முயற்சி செய்தார்?
A
வேலூர்
B
காஞ்சிபுரம்
C
தஞ்சாவூர்
D
மதுரை
Question 25 Explanation: 
(குறிப்பு: 1925ல் கொண்டுவரப்பட்ட இத்தீர்மானம் தோல்வியடைந்தது. பெரியார் 1925ல் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்.)
Question 26
பெரியார் தொடங்கிய செய்தித்தாள்கள் மற்றும் இதழ்களில் தவறான இணையைத் தேர்ந்தெடு.
A
ரிவோல்ட் - 1928
B
புரட்சி – 1933
C
பகுத்தறிவு – 1925
D
விடுதலை – 1935
Question 26 Explanation: 
(குறிப்பு: பகுத்தறிவு - 1934, குடி அரசு - 1925)
Question 27
சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வ செய்தித்தாள் ________ ஆகும்.
A
புரட்சி
B
விடுதலை
C
பகுத்தறிவு
D
குடிஅரசு
Question 27 Explanation: 
(குறிப்பு: ஒவ்வொரு இதழிலும் சமூகம் பிரச்சனைகள் தொடர்பான தனது கருத்துகளைப் பெரியார் வழக்கமான கட்டுரையாக எழுதினார். அவ்வப்போது சித்திரபுத்திரன் எனும் புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதினார்.)
Question 28
1954 இல் நடைபெற்ற புத்தரின் 2500 வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள பெரியார் எந்த நாட்டிற்குச் சென்றார்.
A
நேபாளம்
B
பூடான்
C
கிரீஸ்
D
பர்மா
Question 28 Explanation: 
(குறிப்பு: சோவியத் ரஷ்யாவிலும் ஐரோப்பாவிலும் அவர் பெற்ற பயண அனுபவங்கள் அவரை சமதர்மக் கருத்துக்களின்பால் நாட்டம் கொள்ள வைத்தன.)
Question 29
B.R. அம்பேத்கார் எழுதிய சாதி ஒழிப்பு எனும் நூலை, பெரியார் தமிழில் பதிப்பித்த ஆண்டு
A
1930
B
1931
C
1933
D
1935
Question 29 Explanation: 
(குறிப்பு: B. R. அம்பேத்கார் அவர்களின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தனித் தேர்தல் தொகுதிக் கோரிக்கையை பெரியார் ஆதரித்தார்.)
Question 30
நீதிக்கட்சி சுயமரியாதை இயக்கத்துடன் இணைக்கப்பட்டு__________ ஆண்டு திராவிடர் கழகம் என பெயர் சூட்டப்பெற்றது.
A
1939
B
1942
C
1944
D
1946
Question 30 Explanation: 
(குறிப்பு : 1937 ராஜாஜி தலைமையிலான அரசில், பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக அறிமுகம் செய்ததற்கு எதிராக நடந்த, இந்தி எதிர்ப்புப் போராட்டமானது (1937-1939) தமிழ்நாட்டு அரசியலில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்போராட்டத்துக்காக பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார்.)
Question 31
பெண்ணியம் குறித்து பெரியார் எழுதிய மிக முக்கியமான நூல்
A
பெண் கல்வி
B
பெண் உரிமைகள்
C
பெண்ணியம்
D
பெண் ஏன் அடிமையானாள்?
Question 31 Explanation: 
(குறிப்பு : பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்படுவது அவர்களுக்குச் சமூகத்தில் நன்மதிப்பையும், பாதுகாப்பையும் வழங்கும் என பெரியார் நம்பினார்.)
Question 32
தமிழக அரசு "தமிழ்நாடு இந்து வாரிசுரிமைச் சீர்திருத்தச் சட்டத்தை” அறிமுகம் செய்த ஆண்டு
A
1981
B
1987
C
1989
D
1991
Question 32 Explanation: 
(குறிப்பு: இச்சட்டம் முன்னோர்களின் சொத்துக்களை உடைமையாகப் பெறுவதில் பெண்களுக்குச் சம உரிமை உண்டென்பதை உறுதிப்படுத்தியது.)
Question 33
இரட்டை மலை சீனிவாசன் பெற்ற பட்டங்கள் மற்றும் அவை பெறப்பட்ட வருடங்களில் தவறான இணையைத் தேர்ந்தெடு.
A
ராவ்சாகிப் - 1926
B
ராவ் பகதூர் – 1930
C
பாரத ரத்னா - 1973
D
திவான் பகதூர் – 1936
Question 33 Explanation: 
( குறிப்பு: இரட்டைமலை சீனிவாசன் தாத்தா என பரவலாக அறியப்பட்ட இவர் 1859 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பிறந்தார்.)
Question 34
இரட்டை மலை சீனிவாசன் அவர்களின் சுயசரிதையான ஜீவிய சரித சுருக்கம் வெளியிடப்பட்ட ஆண்டு
A
1930
B
1939
C
1941
D
1944
Question 34 Explanation: 
(குறிப்பு: இந்நூல் முதன் முதலாக எழுதப்பெற்ற சுயசரிதை நூல்களில் ஒன்றாகும்.)
Question 35
இரட்டை மலை சீனிவாசன் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு
A
1893 இல் ஆதிதிராவிட மகாஜன சபை எனும் அமைப்பை உருவாக்கினார்.
B
1927 இல் சென்னை மாகாண சட்டசபை உறுப்பினரானார்.
C
1932ல் செய்து கொள்ளப்பட்ட பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களுள் இவரும் ஒருவர்.
D
ஒடுக்கப்பட்ட மக்களின் கூட்டமைப்பு மற்றும் சென்னை மாகாண ஒடுக்கப்பட்ட வகுப்பாரின் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் தலைவராக பணியாற்றினார்.
Question 35 Explanation: 
(குறிப்பு: 1923 இல் சென்னை மாகாண சட்டசபை உறுப்பினரானார். B.R.அம்பேத்கரின் நெருக்கமானவரான அவர், லண்டனில் நடைபெற்ற முதல், இரண்டாம் வட்டமேஜை மாநாடுகளில் கலந்து கொண்டு சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் கருத்துக்களுக்காக குரல் கொடுத்தார்.)
Question 36
சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் உறுப்பினர்
A
இரட்டை மலை சீனிவாசன்
B
எம்.சி. ராஜா
C
சிங்காரவேலர்
D
பி.பி. வாடியா
Question 36 Explanation: 
(குறிப்பு: எம்.சி. ராஜா எனப்படும் மயிலை சின்னதம்பி சென்னை சட்டசபையில் நீதிக் கட்சியின் துணைத் தலைவராக செயல்பட்டார்.)
Question 37
எம்.சி. ராஜா அவர்களால் அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு
A
1923
B
1927
C
1928
D
1929
Question 37 Explanation: 
(குறிப்பு: இவர் ஆதிதிராவிடர், ஆதி ஆந்திரர் எனும் வார்த்தைகளைப் பயன்படுத்துமாறு பரிந்துரைத்தார்.)
Question 38
இந்தியாவின் முதல் தொழில் சங்கமான சென்னை தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்ட ஆண்டு
A
1909
B
1914
C
1916
D
1918
Question 38 Explanation: 
(குறிப்பு: சென்னை மாகாணத்தில் பி.பி.வாடியா, ம.சிங்காரவேலர், திரு.வி.க போன்றவர்கள் தொழிலாளர் சங்கங்களை அமைப்பதில் முன் முயற்சி மேற்கொண்டனர்.)
Question 39
அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநாடு 1920 அக்டோபர் 31 இல் எங்கு நடைபெற்றது?
A
கல்கத்தா
B
பூனே
C
சென்னை
D
பம்பாய்
Question 40
1923 இல் முதல் முதலாக மே தின விழாவை ஏற்பாடு செய்தவர் யார்?
A
திரு.வி.க
B
எம்.சி. ராஜா
C
சிங்காரவேலர்
D
பி.பி. வாடியா
Question 40 Explanation: 
(குறிப்பு: ம.சிங்காரவேலர் சென்னையில் பிறந்தவர்.சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மாநிலக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார்.)
Question 41
தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சனைகளை வெளிப்படுததுவதற்காக "தொழிலாளன்" என்ற பத்திரிக்கை வெளியிட்டவர்
A
திரு.வி.க
B
எம்.சி. ராஜா
C
சிங்காரவேலர்
D
பி.பி. வாடியா
Question 41 Explanation: 
(குறிப்பு: சிங்காரவேலர் இந்திய பொதுவுடைமை கட்சியின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவராக இருந்தார். பெரியாரோடும் சுயமரியாதை இயக்கத்தோடும் நெருக்கமாக இருந்தார்.)
Question 42
ஆபிரகாம் பண்டிதர் தஞ்சாவூரில் 'சங்கீத வித்யா மகாஜன சங்கம்' என்ற அமைப்பை ஏற்படுத்திய ஆண்டு
A
1910
B
1912
C
1918
D
1921
Question 42 Explanation: 
(குறிப்பு: இந்த அமைப்பே தமிழிசை இயக்கத்தின் கருமூலமானது. இசை நிகழ்வுகளில் தமிழில் பாடல்கள் பாடப்படுவதற்கு இவ்வியக்கம் முக்கியத்துவம் வழங்கியது.)
Question 43
தமிழிசையின் நிலை குறித்து விவாதிக்க, முதல் தமிழிசை மாநாடு எப்போது நடத்தப்பட்டது?
A
1918
B
1937
C
1940
D
1943
Question 44
1917ல் இந்தியப் பெண்கள் சங்கம், அன்னிபெசன்ட், டோரதி ஜினராஜதாசா, மார்கரெட் கசின்ஸ் ஆகியோர்களால் எங்கு தொடங்கப்பெற்றது?
A
பம்பாய்
B
அகமதாபாத்
C
அலகாபாத்
D
சென்னை அடையாறு
Question 44 Explanation: 
(குறிப்பு: இந்திய பெண்கள் சங்கம், பெண்கல்வி குறித்த பிரச்சனைகளைக் கையாள்வதற்காக 1927ல் அகில இந்திய பெண்கள் மாநாட்டை நிறுவியது.)
Question 45
________ ஆண்டு சென்னை சட்டமன்றத்தில் முத்துலட்சுமி அம்மையார் "சென்னை மாகாணத்தில் இந்து கோவில்களுக்கு பெண்கள் அர்பணிக்கப்படுவதை தடுப்பது” எனும் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
A
1920
B
1924
C
1927
D
1930
Question 45 Explanation: 
(குறிப்பு: பின்னர் தேவதாசி ஒழிப்புச் சட்டமாக மாறிய இம்மசோதா, இந்து கோவில் வளாகங்களிலோ அல்லது வேறு வழிபாட்டு இடங்களிலோ "பொட்டு கட்டும் சடங்கு” நட்த்துவது சட்டத்திற்கு புறம்பானது என அறிவித்தது. இக்குற்றத்தை செய்வோர்க்கு குறைந்தபட்சம் ஐந்தாண்டு சிறை தண்டனை என ஆணையிட்டது.)
Question 46
"எங்களுடைய நிலை அனைத்து மதங்களிலும் உண்மைகள் இருந்தாக வேண்டும் என்பதல்ல, ஆனால் உலகத்தில் நிறுவப்பட்ட அனைத்து மதங்களும் உண்மையானவையே” என்று கூறியவர்
A
ராஜாராம் மோகன் ராய்
B
சையது அகமதுகான்
C
கேசவ் சந்திர சென்
D
இராமலிங்க அடிகள்
Question 46 Explanation: 
(குறிப்பு: அலிகர் இயக்கத்தின் போது சையது அகமதுகான் மதம் சார்ந்த சிந்தனைகள் மாற்ற்ப்பட முடியாதவை என்பதை மறுத்தார். ராஜாராம் மோகன் ராய் வேதங்களில் தவறே இருக்க முடியாது எனும் கருத்தை புறக்கணித்தார்.)
Question 47
ராஜா ராம்மோகன் ராய் அவர்களால் பிரம்மசமாஜம் தொடங்கப்பட்ட ஆண்டு
A
1828
B
1835
C
1875
D
1878
Question 47 Explanation: 
(குறிப்பு: இந்து மதத்தை தூய்மைப்படுத்துதல், ஒரு கடவுள் வழிபாட்டைப் போதித்தல், மனித கண்ணியத்திற்கு முக்கியத்துவம் தருதல், உருவ வழிபாட்டை எதிர்த்தல், சமூகத் தீமையான உடன்கட்டை ஏறுதலை ஒழித்தல் ஆகியன மோகன்ராயுடைய நீண்ட காலத்திட்டங்களாகும்.)
Question 48
"கைம்பெண்களை உயிரோடு எரிக்கும் பழக்கத்தை ஆதரிப்போருக்கும் எதிர்ப்போருக்குமிடையே நடைபெற்ற விவாதம்" என தலைப்பிடப்பட்ட கட்டுரையை எழுதியவர்
A
கேசவ் சந்திர சென்
B
ராஜா ராம்மோகன் ராய்
C
தேவேந்திரநாத் தாகூர்
D
தயானந்த சரஸ்வதி
Question 48 Explanation: 
(குறிப்பு: 1818 ல் இக்கட்டுரை எழுதப்பட்டது. இதில் எந்த மதமும் கைம்பெண்களை உயிரோடு எரிப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை புனித நூல்களை சுட்டிக்காட்டி நிரூபித்தார்.)
Question 49
ராஜாராம் மோகன் ராயின் மரணத்திற்கு பின் பிரம்மசமாஜத்திற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டியவர்
A
கேசவ் சந்திர சென்
B
ரானடே
C
தயானந்த சரஸ்வதி
D
தேவேந்திரநாத் தாகூர்
Question 49 Explanation: 
(குறிப்பு: பிரெஞ்சுப் புரட்சியின் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு ஐரோப்பா சென்ற ராஜா ராம்மோகன் ராய் பிரிஸ்டல் நகரில் மரணத்தை தழுவினார். ரவீந்திரநாத் தாகூரின் தந்தை தேவேந்திரநாத் தாகூர் ஆவார்.)
Question 50
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
A
ரவீந்திரநாத் தாகூருக்கு பின் 1857 முதல் கேசவ் சந்திர சென் பிரம்மசமாஜத்தை முன்னெடுத்துச் சென்றார்.
B
பிரம்மசமாஜம் 1865ல் 64 கிளைகளை கொண்டிருந்தது.
C
காலப்போக்கில் பிரம்மசமாஜம் இரண்டாக பிரிந்தது.
D
தேவேந்திரநாத் தாகூரின் தலைமையில் இயங்கிய 'இந்திய பிரம்மசமாஜம்’, கேசவ் சந்திர சென்னுடைய 'சதாரன் பிரம்மசமாஜ்’ ஆகியவை பிரம்மசமாஜத்தின் இரண்டு கிளைகள்.
Question 50 Explanation: 
(குறிப்பு: பிரம்மசமாஜம் 1865ல் 54 கிளைகளை கொண்டிருந்தது. வங்காளத்தில் 50 கிளைகள், வடமேற்கு மாகாணத்தில் 2, பஞ்சாப்பில் 1, தமிழ்நாட்டில் 1 என மொத்தம் 54 கிளைகள்)
Question 51
உடன்கட்டை ஏறுதல் குற்றம் என சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
A
1803
B
1824
C
1829
D
1934
Question 51 Explanation: 
(குறிப்பு: ராஜாராம்மோகன் ராய் மனிதநேயமற்ற சமூகப் பழக்கமான உடன்கட்டை ஏறுதலுக்கு எதிராக போராடுவதில் மனவுறுதிமிக்கவர் ஆவார்.)
Question 52
‘பிரம்மசமாஜ நாடகம்' எனும் தலைப்பில் நாடகத்தை எழுதியவர் _________.
A
கேசவ் சந்திர சென்
B
ராஜா ராம்மோகன் ராய்
C
தேவேந்திரநாத் தாகூர்
D
சைதை காசி விஸ்வநாத முதலியார்
Question 52 Explanation: 
(குறிப்பு: தமிழ்நாட்டில் பிரம்ம சமாஜத்தின் ஆதரவாளர் சைதை காசி விஸ்வநாத முதலியார். கைம்பெண் மறுமணத்திற்கு ஆதரவாக ஒரு ஆய்வுக் கட்டுரையையும் எழுதினார். 1864ல் இதே நோக்கத்திற்காக 'தத்துவபோதினி’ எனும் தமிழ் இதழ் தொடங்கப்பட்டது.)
Question 53
பிரம்ம சமாஜத்தின் கிளை அமைப்பான பிரார்த்தனை சமாஜம் _______ ஆண்டு பம்பாயில் ஆத்மாராம் பாண்டுரங் என்பவரால் நிறுவப்பட்டது.
A
1818
B
1828
C
1867
D
1875
Question 53 Explanation: 
(குறிப்பு: எம்.ஜி.ரானடே, ஆர்.ஜி. பண்டார்க்கர் ஆகியோர் இவ்வமைப்பில் சேர்ந்து அமைப்புக்கு வலிமை சேர்த்தனர்.)
Question 54
__________ என்பவரின் முயற்சியால் உருவாக்கப்பட்ட தேசிய சமூக மாநாடு என்னும் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாடு நடைபெற்று முடிந்தவுடன் கூடும்.
A
பண்டார்க்கர்
B
ரானடே
C
கே.டி.தெலங்
D
ரவீந்திரநாத் தாகூர்
Question 54 Explanation: 
(குறிப்பு: ரானடே விதவை மறுமணச் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர். தக்காணக் கல்வி கழகம் என்னும் புகழ்பெற்ற அமைப்பைத் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றார்.)
Question 55
தயானந்த சரஸ்வதி ‘சத்யார்த்த பிரகாஷ்’ எனும் நூலை வெளியிட்ட ஆண்டு
A
1863
B
1872
C
1875
D
1878
Question 55 Explanation: 
(குறிப்பு: ஆரிய சமாஜத்தை உருவாக்கியவர் தயானந்த சரஸ்வதி (1824 - 1883) ஆவார். 1872 இல் கல்கத்தாவில் பிரம்மசமாஜ உறுப்பினர்களை சந்தித்தார்.)
Question 56
"வேதங்களை நோக்கி திரும்புக" என அழைப்பு விடுத்தவர் யார்?
A
கேசவ் சந்திர சென்
B
ராஜா ராம்மோகன் ராய்
C
தேவேந்திரநாத் தாகூர்
D
தயானந்த சரஸ்வதி
Question 56 Explanation: 
(குறிப்பு: தயானந்த சரஸ்வதி பஞ்சாப் பகுதிகளில் செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்தார். தயானந்தரின் 'சுத்தி' இயக்கம் இந்துக்கள் அல்லாதவர்களை இந்துக்களாக மாற்ற முயன்று பெரும் எதிர்ப்புகளை குறிப்பாக அகமதியா இயக்கத்தின் எதிர்ப்புகளை சந்தித்தது.)
Question 57
"அனைத்து மதக் கருத்துக்களும் ஒரே இலக்கைச் சென்றடையும் பல்வேறு பாதைகள்" என்ற கருத்தைக் கொண்டவர்
A
இராமகிருஷ்ண பரமஹம்சர்
B
ராஜா ராம்மோகன் ராய்
C
தேவேந்திரநாத் தாகூர்
D
விவேகானந்தர்
Question 57 Explanation: 
(குறிப்பு: இராமகிருஷ்ண பரமஹம்சர் கல்கத்தாவின் அருகேயுள்ள தட்சினேஸ்வர் எனும் ஊரிலுள்ள கோவிலின் ஏழைப் பூசாரி ஆவார்.)
Question 58
விவேகானந்தர் _________ ஆண்டு அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற உலகச் சமய மாநாட்டில் பங்கேற்று உரையாற்றி அங்கு கூடியிருந்தோர் மேல் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினார்.
A
1873
B
1878
C
1884
D
1893
Question 58 Explanation: 
(குறிப்பு: விவேகானந்தர் நவீன இந்தியாவின் விடிவெள்ளி எனக் குறிக்கப்படுகின்றார்.)
Question 59
"தனது அளுமைத் திறனால் வெளிநாடுகளில் இந்தியாவின் பாரம்பரியமிக்க நாகரிகத்திற்கும் அதனுடைய புதிதாகப் பிறப்பெடுத்துள்ள தேசம் எனும் உரிமைக் கோரிக்கைக்கும் கண்கூடான அங்கீகாரத்தைப் பெற்று தந்த முதல் இந்தியர்” என்று விவேகானந்தரைக் புகழ்ந்தவர்
A
ஹென்றி ஆல்காட்
B
வாலன்டைன் சிரோல்
C
இராமகிருஷ்ண பரமஹம்சர்
D
ஜோதிபா பூலே
Question 60
பிரம்ம ஞான சபை _________ ஆண்டு பிளாவட்ஸ்கி அம்மையார், கர்னல் ஆல்காட் ஆகியோரால் அமெரிக்காவில் நிறுவப்பட்டது.
A
1875
B
1879
C
1886
D
1893
Question 60 Explanation: 
(குறிப்பு: 1879 இல் இந்தியா வந்த அவர்கள் 1886 இல் அமைப்பின் தலைமையிடத்தைச் சென்னை அடையாரில் அமைத்தனர். 1893 இல் இந்தியாவிற்கு வந்த அன்னிபெசன்ட் அம்மையாரின் தலைமையில் பிரம்மஞான சபை வலுப்பெற்று குறிப்பாகப் பல தென்னிந்திய ஆதரவாளர்களை பெற்றது.)
Question 61
ஜோதிபா பூலே அவர்களால் சத்ய சோதக் சமாஜம் நிறுவப்பட்ட ஆண்டு _________.
A
1828
B
1835
C
1873
D
1875
Question 61 Explanation: 
(குறிப்பு: மக்களின் கல்வியே விடுதலைக்கான புரட்சிகரமான காரணியாக இருக்கும் என்று ஜோதிபா பூலே கூறினார். இவர் எழுதிய முக்கிய நூல் ‘குலாம்கிரி' (அடிமைத்தனம்) என்பதாகும்.)
Question 62
ஜோதிபா பூலே _________ ஆண்டு புனேயில் பெண்களுக்கென்று ஒரு பள்ளியையும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒரு பள்ளியையும் தனது துணைவியார் சாவித்ரியின் உதவியோடு தொடங்கினார்.
A
1875
B
1873
C
1868
D
1851
Question 62 Explanation: 
(குறிப்பு: கைம்பெண்களின் குழந்தைகளுக்காக ஒரு இல்லத்தையும் தீண்டத்தகாதவர்களுக்காக ஒரு பள்ளியையும் நிறுவினார். பிற்காலத்தில் மகாராஷ்டிராவில் பிராமணரல்லாதோர் இயக்கம் இவருடைய பணிகளால் தோன்றியது.)
Question 63
பண்டித ரமாபாய் யாருடைய உதவியுடன் ஆரிய மகிளா சமாஜ் எனும் அமைப்பை நிறுவினார்?
  1. கேசவ் சந்திர சென்
  2. ராஜா ராம்மோகன் ராய்
  3. ரானடே
  4. பண்டார்க்கர்
A
1, 4
B
1, 4
C
3, 4
D
2, 3
Question 63 Explanation: 
(குறிப்பு: 1882ல் 300 பெண்கள் இவ்வமைப்பில் கல்வி கற்றனர்)
Question 64
  • கூற்று 1: பண்டித ரமாபாய் ரானடே, பண்டார்க்கர் ஆகியோரின் உதவியோடு கைவிடப்பட்ட விதவைகளுக்காக ‘சாரதா சதன்’ எனும் அமைப்பைத் தொடங்கினார்.
  • கூற்று 2: புனேவுக்கு அருகேயுள்ள கேத்கான் எனும் இடத்தில் 'முக்தி சதன்’ எனும் அமைப்பை பண்டித ரமாபாய் நிறுவினார்.
A
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
C
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 64 Explanation: 
(குறிப்பு: முக்தி சதன் நிறுவனத்தில் 2000 பெண்களும் குழந்தைகளும் தங்கியிருந்தனர். அவர்களை சுயசார்புடையவர்களாக மாற்றுவதற்காக தொழிற்பயிற்சி வழங்கப்பட்டது.)
Question 65
ஸ்ரீ நாராயண குரு “ஸ்ரீநாராயண குரு தர்மபரிபாலன யோகம்" எனும் அமைப்பை நிறுவிய ஆண்டு
A
1901
B
1902
C
1904
D
1905
Question 65 Explanation: 
(குறிப்பு: இவ்வமைப்பு பொதுப்பள்ளிகளில் சேர்வதற்கான உரிமை, அரசுப் பணிகளில் அமர்த்தப்படுதல், சாலைகளைப் பயன்படுத்துவதற்கான, கோவில்களுக்குள் செல்வதற்கான உரிமை, அரசியல் பிரதிநிதித்துவம் போன்ற பிரச்சனைகளை கைகளில் எடுத்தது.)
Question 66
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
A
அலிகார் இயக்கம் 1875 இல் சையது அகமது கானால் தொடங்கப்பட்டது.
B
சையது அகமது கானின் முற்போக்கான சமூகக் கருத்துக்கள் அவருடைய பத்திரிகையான தத்கிப் – ஒல் - அக்லுக் மூலம் பரப்பப்பட்டது.
C
1846 இல் சையது அகமது கான் அறிவியல் கழகம் எனும் அமைப்பை ஏற்படுத்தினார்.
D
1868 இல் முஸ்லீம் மக்களிடையே நவீனக் கல்வியைத் தொடங்குவதற்காகப் பல மாவட்டங்களில் கல்வி குழுக்கள் அமைக்கப்படுவதை ஊக்கப்படுத்தினார்.
Question 66 Explanation: 
(குறிப்பு: 1864 இல் சையது அகமது கான் அறிவியல் கழகம் எனும் அமைப்பை ஏற்படுத்தினார்.)
Question 67
சையது அகமது கான் முஸ்லீம்களிடையே ஆங்கிலக் கல்வியை பரப்புவதற்காக __________ ஆண்டு அலிகாரில் ஒரு நவீன முகமதியப் பள்ளியை தொடங்கினார்.
A
1869
B
1870
C
1875
D
1877
Question 67 Explanation: 
(குறிப்பு: இப்பள்ளியே 1877 இல் முகமதியான் ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரியாக வளர்ச்சிப் பெற்றது.)
Question 68
இந்திய முஸ்லீம்களிடையே தாராளவாதக் கருத்துக்களைப் பரப்புவதற்காக _________ இல் சையது அகமது கான் ஆங்கிலேய கீழை தேயவிய கல்வி மாநாட்டை தொடங்கினார்.
A
1875
B
1882
C
1884
D
1886
Question 68 Explanation: 
(குறிப்பு: சமயச் சட்டங்களை கண்மூடித்தனமாக பின்பற்றுவதை சையது அகமது கான் எதிர்த்ததார்.)
Question 69
தவறான கூற்றைத் தேர்ந்தெடு
A
வாலி அல்லா சிந்தனை பள்ளியைச் சேர்ந்த இறையியலாளர்களால் 1867 இல் தியோபந்த்தில் இறையியல் கல்லூரி நிறுவப்பட்டது.
B
நட்வத் - அல் - உலாமா என்ற இயக்கம் 1894 இல் லக்னோவில் சிப்லிநுமானி மற்றும் வேறு சில அறிஞர்களால் உருவாக்கப்பட்டது.
C
பார்சீய சீர்திருத்தம் பற்றிய செய்திகளை பரப்புவதற்காக ராஸ்ட் - கோப்தார் எனும் செய்தித்தாள் வெளியிடப்பட்டது.
D
சிங் சபா இயக்கம் 1883ல் உருவாக்கப்பட்டது.
Question 69 Explanation: 
(குறிப்பு: சிங் சபா இயக்கம் 1873ல் உருவாக்கப்பட்டது. அகாலி இயக்கம் சிங் சபா இயக்கத்தின் கிளை இயக்கம் ஆகும்.)
Question 70
யாருடைய போதனைகள் தொகுக்கப்பட்டு ‘அகிலத்திரட்டு’ என்னும் வழிபாட்டு நூலாக வெளிவந்தது?
A
இராமலிங்க அடிகளார்
B
புத்தர்
C
கேசவ் சந்திர சென்
D
வைகுண்டசாமிகள்
Question 70 Explanation: 
(குறிப்பு: ஸ்ரீவைகுண்ட சாமிகள் வழிபாடு 1830 களில் நிறுவப்பட்டு இன்று வரை நடைமுறையில் உள்ளது. இவரை பின்பற்றிய நடைமுறைகள் ‘ஐயா வழி’ என்றழைக்கப்பட்டது.)
Question 71
வள்ளலாரின் பாடல்களை திரட்டி ‘திருவருட்பா’ எனும் பெயரில் நூல் வெளியிடப்பட்ட ஆண்டு
A
1865
B
1867
C
1875
D
1876
Question 71 Explanation: 
(குறிப்பு: வள்ளலார் 1860 களில் பஞ்சங்களும் கொள்ளை நோயும் ஏற்பட்ட போது சாதிமத வேறுபாடின்றி உணவளித்தார். தன்னை பின்பற்றுவோரை ஒருங்கிணைப்பதற்காக சத்ய ஞான சபை எனும் அமைப்பை நிறுவினார்.)
Question 72
அயோத்திதாச பண்டிதர் _________ ஆண்டு முதல் ஒரு பைசாத் தமிழன் என்ற பெயரில் வாராந்திரப் பத்திரிகை ஒன்றை தொடங்கி தான் இயற்கை எய்தும் காலம் வரை நாத்தினார்.
A
1903
B
1905
C
1908
D
1910
Question 72 Explanation: 
(குறிப்பு: 1867 இல் சீவக சிந்தாமணி, 1898 இல் மணிமேகலை ஆகிய இரண்டும் முழுமையாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட பின்னணியில் மிக முக்கியமான ஆளுமை அயோத்திதாச பண்டிதர் ஆவார்.)
Question 73
1929 ஆம் ஆண்டு முதலாவது சுயமரியாதை மாநாடு எங்கு நடைபெற்றது?
A
அடையாறு
B
விழுப்புரம்
C
மதுரை
D
செங்கல்பட்டு
Question 73 Explanation: 
(குறிப்பு: பெரியார் 1925ஆம் ஆண்டு காங்கிரசை விட் டு விலகி சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். இவ்வியக்கம் தேர்தல் அரசியலை தவிர்த்ததுடன் சமூக சீர்திருத்தம், சாதிமுறையை ஒழிப்பது, மாண்பற்ற தன்மையை நீக்குவது, பெண்கள் பாலின அடிப்படையிலான தடை நீக்கம், பரம்பரை அர்ச்சகர் உரிமையை எதிர்ப்பது போன்றவற்றிற்காக பிரச்சாரம் செய்தது.)
Question 74
சுயமரியாதை இயக்கத்தின் நோக்கங்களில் தவறானது எது?
A
திராவிட சமுதாயத்தை சீர்திருத்துவது மற்றும் அதனை உண்மையான பகுத்தறிவுடையதாக்குதல் .
B
திராவிடர்களின் பண்டைய தமிழ் பண்பாட்டினை அவர்களுக்குக் கற்பித்தல் .
C
ஆரிய பண்பாட்டின் ஆதிக்கத்தில் இருந்து திராவிட சமூகத்தைக் காப்பாற்றுதல்
D
மத விழாக்களை மக்கள் பின்பற்றுவதை ஆதரித்தல்.
Question 75
1965 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் நாள் இந்திய அரசு அமைப்புச் சட்டத்தின் உறுப்பு__________ படி இந்தி மொழி இந்திய நாட்டின் அலுவலக மொழியாக ஆக்கப்பட்டது.
A
331
B
313
C
213
D
231
Question 75 Explanation: 
(குறிப்பு: மத்திய அரசாங்கத்தின் இந்த முடிவை எதிர்த்து 1965 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாளை தி.மு.க துக்க தினமாக அனுசரிக்கத் தீர்மானித்தது.)
Question 76
_________ ஆண்டில், திராவிட கழகத்தை விட்டு பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணாதுரையால் ஆரம்பிக்கப்பட்டது.
A
1944
B
1946
C
1948
D
1949
Question 76 Explanation: 
(குறிப்பு: 1951 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றமானது உயர் கல்வியில் சாதிவாரி இடஒதுக்கீட்டை உடைத்து எறிந்தது.)
Question 77
பின்வருவனவற்றுள் பெரியார் தொடங்காத பத்திரிக்கை எது?
A
குடியரசு
B
புரட்சி
C
விடுதலை
D
சுயராஜ்யா
Question 78
__________ என்பவர் எழுதிய "திராவிட அல்லது தென்னிந்திய மொழிகள் குறித்த ஒப்பிலக்கணம்" என்ற நூல் திராவிடர் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியது.
A
வீரமாமுனிவர்
B
கால்டுவெல்
C
திரு.வி.க
D
ஆறுமுகநாவலர்
Question 78 Explanation: 
(குறிப்பு: ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை, உ.வே.சாமிநாத அய்யர் போன்ற தமிழ் அறிஞர்களின் முயற்சியால் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் மீட்டெடுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டன.)
Question 79
__________ என்பவர் 1800 ஆண்டுக்கு முன் தமிழர்கள் என்ற நூலில் ஆரியர்கள் வருவதற்கு முன்பே தமிழர்கள் மிகச் சிறந்த நாகரீகத்தை படைத்திருந்தனர் என்பதை சுட்டிக்காட்டினார்.
A
கால்டுவெல்
B
ஈ.வெ.ரா
C
பெரியார்
D
வி.கனகசபை
Question 79 Explanation: 
(குறிப்பு: பிராமணர் அல்லாதோர் மத்தியில் திராவிட உணர்வுகளை இது மேலும் வளர்த்தது.)
Question 80
கீழ்க்கண்ட எந்த அமைப்பு "ஜஸ்டிஸ்” என்ற பெயரில் ஆங்கில மொழி செய்தித்தாளை நடத்தி வந்தது?
A
சென்னை திராவிட சங்கம்
B
தென்னிந்திய நல உரிமைச் சங்கம்
C
ஆத்மிய சபை
D
ஆரியசமாஜம்
Question 80 Explanation: 
(குறிப்பு: இதனால் இந்த அமைப்பு நீதிக் கட்சி என்று அழைக்கப்படுகிறது. நீதிக்கட்சியை ஆதரித்த மற்றொரு தமிழ்ப் பத்திரிகை திராவிடன் ஆகும்.)
Question 81
1923 ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற நீதிக்கட்சி யாருடைய தலைமையில் அமைச்சரவையை அமைத்தது?
A
பிட்டி தியாகராய செட்டி
B
ஏ.சுப்பராயன்
C
பனகல் அரசர்
D
பி.முனுசாமி நாயுடு
Question 81 Explanation: 
(குறிப்பு: 1920 ஆம் ஆண்டு தேர்தல்களில் நீதிக் கட்சி வெற்றி பெற்றது.பிட்டி தியாகராய செட்டி அமைச்சரவைக்கு தலைமையேற்க மறுத்துவிட்டதால் ஏ.சுப்பராயலு ரெட்டியார் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது.)
Question 82
தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்காக சென்னை அரசாங்க தொழிற்சாலைகள் உதவிச் சட்டம் எப்போது கொண்டு வரப்பட்டது?
A
1920
B
1921
C
1922
D
1924
Question 82 Explanation: 
(குறிப்பு: இச்சட்டம் பல புதிய தொழிற்சாலைகள் உருவாக காரணமாயின. மேலும் இது தொழிற்சாலைகளுக்கு நிலம், நீர்பாசன வசதிகள் வழங்க வழிவகை செய்தது.)
Question 83
பொருத்துக.
  1. இட ஒதுக்கீட்டு அரசாணை i) 1929
  2. பணியாளர் தேர்வுக் குழு ii) 1922
  3. தொழிற்சாலைகளுக்கு உதவி  வழங்கும் சென்னை அரசின் சட்டம்       iii) 1924
  1. அண்ணாமலை பல்கலைக்கழகம் iv) 1926
  2. ஆந்திரப் பல்கலைக்கழகம் v) 1921
A
ii v iv iii i
B
v iv iii ii i
C
i iii v ii iv
D
v iii ii i iv
Question 84
_________ ஆண்டு பிரிட்டிஷ் தூதுவரான ஜோனாதன் டங்கன் என்பவரது சீரிய முயற்சியினால் காசியில் ஒரு வடமொழிக் கல்லூரி நிறுவப்பட்டது.
A
1757
B
1781
C
1791
D
1798
Question 84 Explanation: 
(குறிப்பு: 1813 ஆம் ஆண்டு பட்டயச்சட்டம் இந்தியாவில் கல்வி வளர்ச்சிக்கென அரசு ஆண்டுக்கு ஒரு லட்சம் ஒதுக்க வகை செய்தது.)
Question 85
தலைமை ஆளுநர் ஆலோசனைக் குழு உறுப்பினரான ஜே.பி. கிராண்ட் என்பவர் அறிமுகப்படுத்திய விதவை மறுமணம் குறித்த சட்டமுன்வடிவு எப்போது நிறைவேற்றப்பட்டது?
A
1829 ஜுன் 18
B
1829 ஜூலை 13
C
1856 ஜூலை 18
D
1856 ஜுலை 13
Question 85 Explanation: 
(குறிப்பு: இராஜாராம் மோகன் ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர் விதவை மறுமணச் சீர்திருத்தங்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.)
Question 86
1930 ஆண்டு சாரதா சட்டப்படி பெண்ணுக்கு குறைந்தபட்ச திருமண வயது_______.
A
10
B
12
C
14
D
18
Question 86 Explanation: 
(குறிப்பு: 1846ல் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயது பெண்ணுக்கு 10 ஆக இருந்தது. 1891ல் இயற்றப்பட்ட சட்டத்தின்படி அது 12 ஆக உயர்த்தப்பட்டது. இந்திய விடுதலைக்கு பிறகு அது 18 ஆக உயர்த்தப்பட்டது.)
Question 87
1924ல் பம்பாயில் "பகிஷ்கிரிட் ஹிட் காரினி சபை" என்ற அமைப்பை உருவாக்கியவர் ________.
A
பெரியார்
B
ஜோதிராவ் பூலே
C
அம்பேத்கர்
D
இராஜா ராம்மோகன்ராய்
Question 87 Explanation: 
(குறிப்பு: தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. மகாத்மா காந்தி "ஹரிஜன்” என்ற செய்தி ஏட்டை நடத்தி "ஹரிஜன் சேவக் சங்” என்ற அமைப்பையும் நடத்தினார்.)
Question 88
"துயரப்படும் உயிரினங்களைப் பார்த்து இரக்கம் கொள்ளாதவர்கள் கல் நெஞ்சக்காரர்கள், அவர்களின் ஞானம் மேகங்களால் மூடப்பட்டிருக்கும் " என்ற கருத்தினை முன்வைத்தவர்
A
வைகுண்டசுவாமிகள்
B
அயோத்திதாசர்
C
வள்ளலார்
D
அன்னிபெசன்ட்
Question 88 Explanation: 
(குறிப்பு: வள்ளலார் என அறியப்பட்ட ராமலிங்க சுவாமிகள் சிதம்பரத்திற்கு அருகேயுள்ள மருதூர் எனும் கிராமத்தில் பிறந்தார்.)
Question 89
வள்ளலார் அவர்களால் ________ ஆண்டு சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பு நிறுவப்பட்டது.
A
1848
B
1852
C
1856
D
1865
Question 89 Explanation: 
(குறிப்பு: பின்னர் இந்த அமைப்பு சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.)
Question 90
ஆங்கிலேய ஆட்சியையும் திருவிதாங்கூர் அரசரின் ஆட்சியையும் முறையே "வெள்ளைப் பிசாசுகளின் ஆட்சியென்றும்”, "கறுப்புப் பிசாசுகளின் ஆட்சியென்றும்” விமர்சித்தவர்
A
வைகுண்டசுவாமிகள்
B
அயோத்திதாசர்
C
வள்ளலார்
D
அன்னிபெசன்ட்
Question 91
1882ல் அயோத்திதாசரும் ஜான் திரவியம் என்பவரும் _________ எனும் அமைப்பை நிறுவினர்.
A
திராவிட பாண்டியன்
B
திராவிடம்
C
திராவிடர்க் கழகம்
D
திராவிட மகாஜன சபை
Question 91 Explanation: 
(குறிப்பு: அயோத்திதாசர் 1885ல் திராவிட பாண்டியன் எனும் இதழை தொடங்கினார்.)
Question 92
“திராவிட மகாஜன சபை" என்ற அமைப்பை 1891 இல் நிறுவிய அயோத்திதாசர் அவ்வமைப்பின் முதல் மாநாட்டை எங்கு நடத்தினார்?
A
மதுரை
B
சேலம்
C
தஞ்சாவூர்
D
நீலகிரி
Question 93
"சாக்கிய பெளத்த சங்கம்" என்ற அமைப்பை நிறுவியவர் _________.
A
H.S. ஆல்காட்
B
நாராயண குரு
C
அய்யன் காளி
D
அயோத்திதாசர்
Question 93 Explanation: 
(குறிப்பு: பிரம்ம ஞான சபையை நிறுவியவர்களில் ஒருவரான கர்னல் H.S. ஆல்காட் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக 1898 இல் இலங்கை சென்ற அயோத்திதாசர் அங்கே பெளத்தத்தைத் தழுவினார்.)
Question 94
ஸ்ரீநாராயண குருவால் ஊக்கம்பெற்ற அய்யன் காளி ________ ஆண்டு சாது ஜன பரிபாலன சங்கம் எனும் அமைப்பை நிறுவினார்.
A
1903
B
1905
C
1907
D
1909
Question 94 Explanation: 
(குறிப்பு: கீழ்சாதியாக கருதி ஒடுக்கப்பட்ட புலையர் சமூக மக்களின் கல்விக்காக இவ்வமைப்பு இயக்கம் நடத்தி நிதி திரட்டியது.)
Question 95
________ ஆண்டு வெளியிடப்பட்ட சார்லஸ் உட் அறிக்கையின் படி கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்கள் தோன்றுவிக்கப்பட்டன.
A
1848
B
1852
C
1854
D
1856
Question 95 Explanation: 
(குறிப்பு: கி.பி.1835 ஆம் ஆண்டு மெக்காலே முயற்சியால் ஆங்கிலம் இந்தியாவில் பயிற்று மொழியாக்கப்பட்டது.)
Question 96
வைகுண்ட சாமிகள் தோற்றுவித்த வழிபாட்டுத் தலங்கள் ________ என்று அழைக்கப்படுகின்றன.
A
துவையல் பந்தி
B
நிழல் தாங்கல்கள்
C
வைகுண்ட தாங்கல்கள்
D
துவையல் தலங்கள்
Question 96 Explanation: 
(குறிப்பு: நிழல் தாங்கல்கள் ஐயா வைகுண்டரின் கொள்கைகளைப் பரப்பும் இடங்களாகவும், சாதி, இனம் கடந்து சமய நல்லிணக்கத்தையும் மனிதநேயத்தையும் வளர்க்கும் இடங்களாகவும் விளங்குகின்றன. இவை தரும சாலையாகவும் விளங்குகின்றன.)
Question 97
தெலுங்கு மறுமலர்ச்சி இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார்?
A
அயோத்திதாச பண்டிதர்
B
ஸ்ரீநாராயண குரு
C
கந்துகூரி வீரேசலிங்கம்
D
பெரியார்
Question 97 Explanation: 
(குறிப்பு: இவர் 1876 இல் விவேகவர்த்தினி என்ற செய்திதாளை தொடங்கினார். 1874 இல் பொதுப் பள்ளியை நிறுவி சமூக முன்னேற்றம் அடையச் செய்தார். 1908ல் ஹித்காரினி பள்ளியையும் தொடங்கினார்.)
Question 98
"உலகில் எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம் இறுதியில் கடலில் சென்று சங்கமாம் பான்மையினை போன்று உலகோர் பின்பற்றும் தன்மையாலே..." யாருடைய கூற்று?
A
வள்ளலார்
B
இராமகிருஷ்ண பரமஹம்சர்
C
விவேகானந்தர்
D
தயானந்த சரஸ்வதி
Question 98 Explanation: 
(குறிப்பு: 1893 செப்டம்பர் 11ஆம் நாள் அமெரிக்காவின் சிகாகோ நகரில் உலக சமய மாநாடு மதகுரு கிப்பன்ஸ் தலைமையில் நடைபெற்றது. விவேகானந்தர் இம்மாநாட்டில் உரையாற்றி உலக சமய ஒற்றுமையை தெளிவுபடுத்தினார்.)
Question 99
"மனிதனை துன்பத்திலிருந்து மீட்டு, வழிநடத்தி, தெய்வநிலையை அடையச் செய்வதே சமரச சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய நோக்கம்” என்று கூறியவர்
A
அயோத்திதாசப் பண்டிதர்
B
இராமலிங்க அடிகளார்
C
வைகுண்டசுவாமிகள்
D
நாராயண குரு
Question 99 Explanation: 
(குறிப்பு: சின்மய தீபிகை, ஒழிவிலொடுக்கம், தொண்டை மண்டலச் சதகம் போன்ற நூல்களை வள்ளலார் பதிப்பித்தார்.)
Question 100
தவறான இணையைத் தேர்ந்தெடு (இயற்பெயர் - அறியப்பட்ட பெயர்)
A
மூல்சங்கர் -தயானந்த சரஸ்வதி
B
நரேந்திர நாத்தத்தா – விவேகானந்தர்
C
கடாதர சட்டர்ஜி - இராமகிருஷ்ண பரமஹம்சர்
D
காத்தவராயன் – கந்துகூரி வீரேசலிங்கம்
Question 100 Explanation: 
(குறிப்பு: காத்தவராயன் – அயோத்திதாசப் பண்டிதர்)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

One Comment

  1. Official language act article:343 is the right answer. But in Text book also wrongly printed. Please may be corrected sir.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!