Online Test
		
	
	
TN History Culture Part 2 Revision Test in Tamil
TN History Culture Part 2 Revision Test in Tamil
Congratulations - you have completed TN History Culture Part 2 Revision Test in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 Question 1  | 
திருவள்ளுவர் பொதுச் செலவை கீழ்க்கண்ட எவற்றிற்கு செலவிடுமாறு வலியுறுத்துகிறார்?
- பாதுகாப்பு
 - கல்வி
 - சமூகப் பணிகள்
 - பொதுப்பணிகள்
 - சுகாதாரப் பணிகள்
 
1, 3, 5   	  | |
3, 4, 5   | |
1, 2, 5  	  | |
1, 3, 4  | 
Question 1 Explanation: 
 (குறிப்பு: வள்ளுவர் சமநிதிநிலை அறிக்கையை பரிந்துறை செய்கிறார். ஒரு நாடு அதன் செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பட்சத்தில், அதன் வருமானம் குறைவாக இருந்தாலும் பாதகமில்லை என்கிறார்)
Question 2  | 
- "- - - - - - - - - -பொருளுடைமை
 - நில்லாது நீங்கி விடும்"
 - என்ற குறளில் நிலையான செல்வமாக கூறப்படுவது
 
கல்வி  | |
உறவினர்கள்  | |
நண்பர்கள்  | |
ஊக்கம்  | 
Question 2 Explanation: 
 குறிப்பு: 'உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
                       நில்லாது நீங்கி விடும்"
ஊக்கமே நிலையான செல்வம். மற்றவை எல்லாம் நிலைத்து நில்லாமல் அழிந்து விடும்
Question 3  | 
- __________ அளவிறந்து
 - ஆவது போலக் கெடும்.
 
உள்ளத்தால் உள்ளலும் தீதே  | |
களவினால் ஆகிய ஆக்கம்  | |
விருந்து புறத்ததாத் தாணுண்டல்  | |
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்  | 
Question 3 Explanation: 
 குறிப்பு: களவு மூலம் சேர்க்கப்படும் செல்வம் வளர்வது போலத் தோன்றினாலும் முடிவில் அழிந்துவிடும்.)
Question 4  | 
- "இயற்றலும் - - - - - - - - - - - - - - - - -
 - வகுத்தலும் வல்லது அரசு”
 - என்ற குறளில் சிறந்த அரசின் செயல்களாக குறிப்பிடப்படுபவை
 
- பொருள் வரும் வழிகளை அறிதல்
 - அவ்வழிகளில் பொருள்களைச் சேர்த்தல்
 - சேர்த்த பொருளை பாதுகாத்தல்
 - காத்த பொருளை பயனுள்ள வகையில் திட்டமிட்டுச் செலவிடுதல்
 
1, 2, 3  | |
1, 2, 4  | |
2, 3, 4  | |
அனைத்தும்  | 
Question 4 Explanation: 
 குறிப்பு: 
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு
இக்குறள் இறைமாட்சி என்னும் அதிகாரத்தில் அமைந்துள்ளது
Question 5  | 
- _______ எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
 - தீமை இலாத சொலல்
 
செல்வம்  | |
அழுக்காறு  | |
வாய்மை  | |
பொய்மை  | 
Question 5 Explanation: 
 குறிப்பு: வாய்மை எனப்படுவது மற்றவர்க்கு ஒரு தீங்கும் தராத சொற்களைச் சொல்லுதல் ஆகும்.)
Question 6  | 
- " - - - - - - - - - - - - காண்கிற்பின்
 - தீதுண்டோ மண்ணும் உயிர்க்கு”
 - என்ற திருக்குறளில் யாருடைய வாழ்வில் துன்பம் இல்லை எனக் கூறப்படுகிறது
 
தன்னுடைய மகிழ்ச்சியை மட்டும் கருத்தில் கொள்பவர்  | |
பொறாமை இல்லாதவர்  | |
புறங்கூறாது இருப்பவர்  | |
பிறருடைய குற்றத்தைக் காண்பது போல், தன்னுடைய குற்றத்தையும் காண்பவர்  | 
Question 6 Explanation: 
 குறிப்பு: 
“ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு”)
Question 7  | 
- "அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
 - கேடும் நினைக்கப்படும்” என்ற குறளில் கூறப்படும் கருத்து
 
புறங்கூறாமை  | |
அழுக்காறாமை  | |
அருளுடைமை  | |
வாய்மை  | 
Question 7 Explanation: 
 (குறிப்பு: பொறாமை கொண்டவருடைய செல்வமும், பொறாமை இல்லாதவருடைய வறுமையும் சான்றோரால் ஆராயப்படும் என்பது இக்குறளின் பொருள்
Question 8  | 
- கேடில் விழுச்செல்வம் _______ஒருவற்கு
 - மாடல்ல மற்றை யவை
 
அழுக்காறு  | |
சினம்  | |
வாய்மை  | |
கல்வி  | 
Question 8 Explanation: 
 குறிப்பு: அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே. ஒருவருக்கு அதனை விட சிறந்த செல்வம் வேறு இல்லை.)
Question 9  | 
- "மடியை மடியா ஒழுகல் - - - - - - - -
 - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -“
 - என்ற குறளில் கூறப்படும் கருத்து
 
துன்பம் கண்டு வருந்தாமை  | |
வறுமையிலும் விருந்தோம்பும் பண்பு  | |
சோம்பல் இல்லாத முயற்சி  | |
எந்த செயலையும் சிந்தித்து செய்தல்  | 
Question 9 Explanation: 
 குறிப்பு:
"மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்”
பொருள் - தம் குடியைச் சிறப்புடைய குடியாகச் செய்ய விரும்புபவர், சோம்பலைத் துன்பமாகக் கருதி முயற்சியோடு வாழ்தல் வேண்டும்
Question 10  | 
ஒருவருடைய பண்பை அறிந்து அவருக்கு நன்மை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நன்மை செய்தாலும் தீமை வந்து சேரும் என்ற பொருளை உணர்த்தும் குறள்
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
       எண்ணுவம் என்பது இழுக்கு
  | |
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
      செய்யாமை யானும் கெடும்
  | |
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
       அன்ன நீரார்க்கே உள
  | |
நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்
      பண்பறிந்து ஆற்றாக் கடை
  | 
Question 10 Explanation: 
 (குறிப்பு: இக்குறள் ‘தெரிந்து செயல்வகை’ எனும் அதிகாரத்தில் அமைந்துள்ளது.)
Question 11  | 
- i) ‘கற்றாருள் கற்றார் எனப்படுவர் _ _ _ _ _ _ ‘
 - ii) கற்றார்முன் கற்ற செலச் சொல்லித் _ _ _ _ _ _ _ _ ‘
 
கல்வி கற்க வேண்டிய முறை  | |
மாணவர்களின் பண்பு  | |
அவை அஞ்சாமை  | |
கற்பதனால் பெற்றோர் அடையும் சிறப்பு  | 
Question 11 Explanation: 
 (குறிப்பு :
“கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்"
பொருள்: தாம் கற்றவற்றைக் கற்றவர் முன் தெளிவாகச் சொல்ல வல்லவர், கற்றவருள் மிகவும் கற்றவராக மதிக்கப்படுவார்.
"கற்றார்முன் கற்ற செலச் சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்”
பொருள்: கற்றவர் முன் தான் கற்றவற்றை மனத்தில பதியும்படி சொல்லி, அவர்கள் கற்றவற்றையும் கேட்டு, அறிந்து கொள்ள வேண்டும்.)
Question 12  | 
- " - - - - - - - - - - - - - - - செறுபகையும்
 - சேராது இயல்வது நாடு"
 
- பசியின்மை
 - நோயின்மை
 - பகையின்மை
 - வேலையின்மை
 
1, 2, 4 	  | |
2, 3, 4   | |
1, 3 		  | |
1, 2, 3  | 
Question 12 Explanation: 
 உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு"
பொருள்: மிக்க பசியும், ஓயாத நோயும், அழிவு செய்யும் பகையும் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்)
Question 13  | 
"நாடென்ப நாடா வளத்தன - - - - - - - - -“ என்ற குறளில் எது சிறந்த நாடு என்று கூறப்படுகிறது?
முயற்சி செய்து சேரும் வளத்தை உடைய நாடு  | |
பெரிய அளவில் முயற்சி இல்லாமல் வளம் தரும் நாடு  | |
குறைந்த அளவில் வரி வசூலிக்கும் நாடு  | |
நல்ல பண்புகளை கொண்ட மக்களை உடைய நாடு  | 
Question 13 Explanation: 
 குறிப்பு:
"நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளம்தரு நாடு”
பொருள்: பெரிய அளவில் முயற்சி இல்லாமல் வளம்தரும் நாடே சிறந்த நாடாகும். முயற்சி செய்து சேரும் வளத்தை உடைய நாடு சிறந்த நாடு ஆகும்.)
Question 14  | 
- " - - - - - - - - - - - - - - - - -நனைகவுள்
 - யானையால் யானையாத் தற்று"
 - என்ற குறளில் கூறப்படும் கருத்து
 
யானையின் இயல்பு  | |
ஆராய்ந்து ஒரு செயலை முடித்தல்  | |
ஒரு செயலை செய்யும் போதே மற்றொரு செயலை செய்து முடித்தல்  | |
உயர்ந்த பண்புகளை உடையவர் அரிய செயல்களை செய்வர்  | 
Question 14 Explanation: 
 குறிப்பு:
"வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று"
பொருள்: ஒரு யானையைக் கொண்டு மற்றொரு யானையைப் பிடிப்பர். அது போல ஒரு செயலை செய்யும்போதே அச்செயலால் மற்றொரு செயலையும் செய்து முடிக்க வேண்டும்.)
Question 15  | 
- " - - - - - - - - - - - - ஆற்றின்
 - அருமை உடைய செயல்"
 - என்ற குறளில் யார் செய்வதற்கு அரிய செயல்களை உரிய நெரிமுறையில் செய்து முடிப்பர் எனக் கூறப்படுகிறது?
 
கற்றவர்  | |
பொய் கூறாதவர்  | |
செல்வ வளம் உடையவர்  | |
உயர்ந்த பண்புகளை உடையவர்  | 
Question 15 Explanation: 
 குறிப்பு:
" பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்")
Question 16  | 
- - - - - - - - - - - - - - - - - - -
 - இருள்தீர எண்ணிச் செயல்"
 
- வேண்டிய பொருள்
 - ஏற்ற கருவி
 - தகுந்த காலம்
 - செயலின் தன்மை
 - உரிய இடம்
 
1, 3, 5 	  | |
1, 2, 5   | |
2, 3, 4   | |
அனைத்தும்  | 
Question 16 Explanation: 
 குறிப்பு: 
"பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்")
Question 17  | 
- "சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் - - - - - - - - - - - -
 - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - “
 
மனத்தை அடக்கும் வல்லமை வேண்டும்  | |
பிறர் பொருள்களின் மீது ஆசைப்படுதல் கூடாது  | |
நடுவுநிலைமையுடன் சான்றோர் செயல்பட வேண்டும்  | |
நடுவு நிலைமையுடன் தகுதியானவருக்கு உதவுதல் வேணடும்  | 
Question 17 Explanation: 
 குறிப்பு: 
"சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி”)
Question 18  | 
- கூற்று 1: வள்ளுவர் வெளிநாட்டு உதவி பெறுதலை ஆதரிக்கவில்லை.
 - கூற்று 2: பசிக் கொடுமையிலிருந்து பெறும் விடுதலையே ஒவ்வொரு மனிதனும் பெறக்கூடிய அடிப்படை சுதந்திரம் என்றும் அனைத்து குடிமகனும் இதனை அனுபவிக்க வேண்டும் என்றும் வள்ளுவர் கருதினார்.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, 2 இரண்டும் தவறு  | 
Question 18 Explanation: 
 (குறிப்பு: குறள் 739 ல் வெளி உதவி கோரும் நாடுகள் நாடுகளே அல்ல என்கிறார். அவர் தன்னிறைவு பெற்ற பொருளாதாரத்தையே வலியுறுத்தினார்)
Question 19  | 
நலம் பேணும் அரசில் இருக்கக் கூடாதது என திருவள்ளுவர் கூறியவற்றுள் தவறானது எது?
வறுமை  | |
எழுத்தறிவின்மை  | |
நோய்கள்  | |
நல்ல விளைச்சல்  | 
Question 19 Explanation: 
 (குறிப்பு: நலம் பேணும் அரசின் முக்கிய கூறுகளாவன:
1. நோய் நொடியற்ற ஆரோக்கியமான மக்கள்
2. பெருஞ்செல்வம்
3. நல்ல விளைச்சல்
4. வளம் மற்றும் மகிழ்ச்சி
5. மக்களுக்கு முழுப் பாதுகாப்பு)
Question 20  | 
திருவள்ளுவர், பொருட்பாலின் முதலில் அரசனது இயல்பு கூறும் அரசியலை எத்தனை அதிகாரத்தில் கூறியுள்ளார்?
15   | |
20    | |
23    | |
25  | 
Question 20 Explanation: 
 குறிப்பு: இறைமாட்சி தொடங்கி இடுக்கண் அழியாமை வரையிலான 25 அதிகாரங்களில் அரசர், வேந்தர், நிலன் ஆண்டவர், மன்னவர் முதலான பெயர்களால் நாற்பத்தாறு முறை அவர் ஆட்சித் தலைவனைச் சுட்டிக் கூறியுள்ளார்)
Question 21  | 
- "கணைகொடிது யாழ்கோடு - - - - - - - - - - - - -
 - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - “
 - என்ற குறளில் கூறப்படும் கருத்து
 
பிறர் பொருள்களின் மீது ஆசைப்படுதல் கூடாது  | |
கள்ளாதவர் களர்நிலம் போன்றவர்  | |
மக்களின் தோற்றத்தை கொண்டு அவரவரர் பண்புகளை உணர வேண்டும்  | |
மக்களின் செயல் வகையால் அவரவரர் பண்புகளை உணர வேண்டும்  | 
Question 21 Explanation: 
 (குறிப்பு:
"கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்”
பொருள்: நேராக இருந்தாலும் அம்பு கொடியதாக இருக்கிறது. வளைவுடன் இருப்பினும் யாழின் கொம்பு இனிமையைத் தருகிறது. அதுபோல மக்களின் பண்புகளை அவரவர் தோற்றத்தால் அல்லாமல் செயல்வகையால் உணர்ந்து கொள்ள வேண்டும்.)
Question 22  | 
தலைவன் முதலில் தன் குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால் அவனுக்கு எந்த பழியும் ஏற்படாது என்றும் பொருள் தரும் குறள்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை - - - - - - - - -  | |
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க - - - - - - - - - -  | |
தன்குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் -----------  | |
உளர்என்னும் மாத்திரையர் அல்லால்-------------  | 
Question 22 Explanation: 
 குறிப்பு:
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு)
Question 23  | 
- " - - - - - - - - இலங்குநூல்
 - கற்றாரோடு ஏனை யவர் "
 
சான்றோர் - திருடன்  | |
அரசன் – புலவர்  | |
இறைவன் – மக்கள்  | |
மக்கள் – விலங்கு  | 
Question 23 Explanation: 
 குறிப்பு:
" விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்”)
Question 24  | 
" உளர்என்னும் மாத்திரையர் அல்லார் -----------------" என்ற குறளில் கல்லாதவர் எதை போன்றவர் எனக் கூறப்படுகிறது?
விலங்கு  | |
மரம்  | |
கடல்  | |
களர்நிலம்  | 
Question 24 Explanation: 
 குறிப்பு: 
" உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர்அனையர் கல்லா தவர்",
Question 25  | 
- " - - - - - - - - - - - - - - -பெற்றம்
 - புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று"
 - என்ற குறளில் புலியின் தோலைப் போர்த்திக் கொண்ட பசு பயிரை மேய்ந்தது எதற்கு உவமையாக கூறப்பட்டுள்ளது ?
 
கல்லாதவர் மேற்கொண்ட தவம்  | |
ஒழுக்கமில்லாதவன் பெற்ற செல்வம்  | |
மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட தவம்  | |
கல்வியறிவு இல்லாதவர் பெற்ற தலைமை பொறுப்பு  | 
Question 25 Explanation: 
 (குறிப்பு:
"வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று" )
Question 26  | 
எதையும் நன்கு ஆராய்ந்து ஒருபக்கம் சாயாது நடுவுநிலையில் நின்று நடத்துவதே சிறந்த ஆட்சி என்ற பொருளை தரும் குறள்
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
       முறைகாக்கும் முட்டாச் செயின் 
  | |
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
      தேர்ந்துசெய் வஃதே முறை
  | |
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
      அதனை அவன்கண் விடல்
  | |
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
       எய்த உணர்ந்து செயல்
  | 
Question 26 Explanation: 
 குறிப்பு: ஓர்ந்துகண் ணோடாது _ _ _ _ _ _ என்னும் குறள் செங்கோன்மை என்னும் அதிகாரத்தில் அமைந்துள்ளது.)
Question 27  | 
- "இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
 - முறைகாக்கும் முட்டாச் செயின்”
 
உலகத்து உயிர்கள்  | |
செங்கோல்  | |
குற்றமற்ற ஆட்சி  | |
செல்வம்  | 
Question 28  | 
- "தக்காங்கு நாடித் தலைசெல்லா வண்ணத்தால்
 - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -“
 
இறைவன்  | |
அரசன்  | |
அமைச்சர்  | |
மக்கள்  | 
Question 28 Explanation: 
 (குறிப்பு:
"தக்காங்கு நாடித் தலைசெல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து”)
Question 29  | 
- ________ என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
 - உறைகடுகி ஒல்லைக் கெடும்
 
இறைகாக்கும்  | |
இறைகடியன்  | |
இறைமாட்சி  | |
வேந்தர்மாட்சி  | 
Question 29 Explanation: 
 குறிப்பு: நம் அரசர் கடுமையானவர் என்று குடிமக்களால் தூற்றப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசர், தன் வாழ்நாள் குறைந்து விரைவில் அழிவார் என்பது இக்குறளின் பொருள்.)
Question 30  | 
- " கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் - - - - - - -
 - - - - - - - - - - - - - - - - - - - - - "
 - என்ற குறளில் கூறப்படும் பண்பு
 
கேட்பவரின் இயல்பு  | |
அரசனின் கடமை  | |
குடிமக்களின் கடமை  | |
சொல்லாற்றலின் இயல்பு  | 
Question 30 Explanation: 
 குறிப்பு:
"கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்”
பொருள் - கேட்பவரைத் தன் வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும் சிறந்த சொல்லாற்றலின் இயல்பாகும்.)
Question 31  | 
- ________ ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
 - தொகைஅறிந்த தூய்மை யவர்
 
சொல்லின் பொருள்  | |
கேட்பவரின் இயல்பை ஆராய்ந்து  | |
அவையின் தகுதி அறிந்து  | |
அறிஞர்களின் தகுதி அறிந்து  | 
Question 31 Explanation: 
 குறிப்பு :
"அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர்”
பொருள் - சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் அவையின் தகுதி அறிந்து பேசுதல் வேண்டும்.)
Question 32  | 
- "பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
 - - - - - - - - - - - - - - - - - - - - - - - "
 - என்ற குறளில் நற்பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம் யாருக்கும் பயனின்றி அழியும் என்பதற்கு எது சான்றாகக் கூறப்படுகிறது?
 
யானைக்கு குறிவைத்து தவறிய வேலை ஏந்துவது  | |
சான்றோரைப் பகைத்துக் கொள்வது  | |
ஒழுக்கமில்லாதவர் மேற்கொண்ட தவம்  | |
தூய்மையற்ற பாத்திரத்தில் வைக்கப்படும் பால் திரிதல்
  | 
Question 32 Explanation: 
 குறிப்பு:
"பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம்தீமை யால்திரிந்து அற்று”)
Question 33  | 
- " கற்றஅறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
 - _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ "
 - என்ற குறளில் பல நூல்களைக் கற்றவரின் கல்வி எப்போது பெருமை அடையும் எனக் கூறப்படுகிறது?
 
நற்பண்புடன் விளங்கும் போது  | |
அறிஞர் நிறைந்த அவையில் பேசும் போது  | |
பிறருக்கு உதவும் போது  | |
அறிஞர்களிடம் அறிவுரை கேட்கும் போது  | 
Question 33 Explanation: 
 குறிப்பு:  
"கற்றஅறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து")
Question 34  | 
- "நவில்தொறும் நூல்நயம் போலும் - - - - - - - “
 - என்ற குறளில் நல்ல நூல்கள் படிக்க படிக்க இன்பம் தருவது போல எது இன்பம் தரும் எனக் கூறப்படுகிறது?
 
அரசரின் நட்பு  | |
பகைவர்களின் நட்பு  | |
உறவினர்களின் நட்பு  | |
பண்புடையவர் நட்பு  | 
Question 34 Explanation: 
 குறிப்பு: 
"நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு”)
Question 35  | 
மீண்டும் மீண்டும் ஆராய்ந்து பாராமல் ஒருவனுடன் கொண்ட நட்பு தாம் சாகும் அளவுக்குத் துன்பம் தரும் என்ற பொருள் தரும் குறள்
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
       பண்புடை யாளர் தொடர்பு
  | |
நகுதல் பொருட்டுஅன்று நட்டல் மிகுதிக்கண்
       மேற்சென்று இடித்தல் பொருட்டு
  | |
ஆயந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
      தான்சாம் துயரம் தரும்
  | |
கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை
       நீட்டி அளப்பதோர் கோல்
  | 
Question 36  | 
- " - - - - - - - - - - - - - அதுஇன்றேல்
 - மண்புக்கு மாய்வது மன்"
 - என்ற குறளில் எந்த காரணத்தினால் உலகம் இயங்குவதாக கூறப்படுகிறது?
 
செல்வம் மிகுந்த காலத்தில் பணிவுடன் நடந்து கொள்வதால்  | |
பகைவருக்கு துன்பம் வரும் போது உதவி செய்வதால்  | |
நல்ல நூல்களைப் படித்து அதன்படி நடப்பதால்  | |
பண்பு உடைய சான்றோரின் வழியில் நடப்பதால்  | 
Question 36 Explanation: 
 குறிப்பு:
"பண்புடையார்ப் பட்டுஉண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்")
Question 37  | 
- "அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை
 - - - - - - - - - - - - - - - - - - - - - “
 
பிறருக்கு துன்பம் இழைக்கக் கூடாது  | |
வறியவர்களுக்கு உதவி செய்தல் வேண்டும்  | |
இகழ்பவரைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்  | |
அறச்செயல்களைச் செய்ய வேண்டும்  | 
Question 37 Explanation: 
 குறிப்பு: 
‘’அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை”)
Question 38  | 
- "மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
 - - - - - - - - - - - - - - - - - - - - - - - -“
 - என்ற குறளில் செருக்கினால் துன்பம் தந்தவரை எதனால் வெல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது?
 
செல்வம்  | |
வெற்றி  | |
பொறுமை  | |
போர்  | 
Question 38 Explanation: 
 குறிப்பு:
"மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்")
Question 39  | 
- i) “தீயவை தீய பயத்தலால்---------------- "
 - ii) “மறந்தும் பிறன்கேடு சூழற்க - - - - - - - - "
 
பொறையுடைமை  | |
தீவினை அச்சம்  | |
தெரிந்து தெளிதல்  | |
வினைத்தூய்மை  | 
Question 39 Explanation: 
 குறிப்பு:
“ தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்”
பொருள் - தீயவை தீயவற்றையே தருதலால் தீயை விடக் கொடியதாகக் கருதி அவற்றைச் செய்ய அஞ்ச வேண்டும்.
"மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு”
பொருள் – மறந்தும்கூடப் பிறருக்குக் கெடுதல் செய்ய நினைக்கக் கூடாது. நினைத்தால், நினைத்தவருக்குக் கெடுதல் செய்ய அறம் நினைக்கும்)
Question 40  | 
- " செல்வத்துள் செல்வம்- - - - - - - - - - - -
 - - - - - - - - - - - - - - - - - எல்லாந் தலை"
 - என்ற குறளில் செல்வத்தினும் சிறந்த செல்வமாக கூறப்படுவது எது?
 
பொறுமை  | |
பிறருக்கு உதவுதல்  | |
செவியால் கேட்டறியும் கேள்வி  | |
நற்செயல்கள்  | 
Question 40 Explanation: 
 குறிப்பு: 
"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாந் தலை")
Question 41  | 
- எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
 - ஆன்ற _______ தரும்
 
பொறுமை  | |
நல்லெண்ணம்  | |
பெருமை  | |
உயர் பதவி  | 
Question 41 Explanation: 
 குறிப்பு: எவ்வளவு சிறிதானாலும் நல்லவற்றைக் கேட்டால், கேட்ட அளவுக்கு பெருமை உண்டாகும் என்பது இக்குறளின் பொருள்)
Question 42  | 
- "நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
 - வாயினர் ஆதல் அரிது"
 - இக்குறளில் கூறப்படும் கருத்து
 
நுட்பமான கேள்வி அறிவினால் பெருமை உண்டாகும்  | |
கேள்வி அறிவே சிறந்த செல்வம்  | |
நுட்பமான கேள்வி அறிவு இல்லாதவர் அடக்கமான சொற்களை பேச மாட்டார்  | |
நுட்பமான கேள்வி அறிவு இல்லாதவர் விரைவில் அழிவர்  | 
Question 43  | 
"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் - - - - - - - - - - " என்னும் குறளில் ஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் அவரது ______ ஆராய்ந்து அறியும் உரைகல் எனக் கூறப்படுகிறது.
கல்வி   | |
பெற்றோர்  | |
செல்வம்  | |
செயல்பாடுகள்  | 
Question 44  | 
- “ஓஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் - - - - - - - - " என்ற குறளில்
 - வாழ்வில் உயர நினைப்பவர் எதை தள்ள வேண்டும் என கூறப்படுகிறது?
 
துன்பம் தரும் செயல்களை  | |
தவறான நட்பை  | |
தீய செயலால் பொருள் சேர்த்தலை  | |
புகழைக் கெடுக்கும் செயல்களை  | 
Question 44 Explanation: 
 (குறிக்கும்:
"ஓஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்”)
Question 45  | 
- " - - - - - - - - - - - - - - யாதொன்றும்
 - பேணாமை பேதை தொழில்”
 
- தகாதசெயலுக்கு வெட்கப்படாமை
 - தக்கவற்றை நாடாமை
 - பிறரிடம் அன்பு இல்லாமை
 - ஏதொன்றையும் பாதுகாக்காமை
 
அனைத்தும்  | |
1, 2, 4    | |
3, 4  | |
1, 3, 4  | 
Question 45 Explanation: 
 குறிப்பு:
"நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்”)
Question 46  | 
- "அடுக்கிய கோடி பெறினும் - - - - - - - -
 - குன்றுவ செய்தல் இலர்"
 - என்ற குறளில் யார் கோடிப்பொருள் அடுக்கிக் கொடுத்தாலும் தவறு செய்வதில்லை எனக் கூறப்படுகிறது?
 
கற்றோர்  | |
பெரியோர்  | |
உழவர்கள்  | |
குடிப்பிறந்தார்  | 
Question 46 Explanation: 
 குறிப்பு:
"அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்"
பொருள்- கோடி பொருள் அடுக்கிக் கொடுத்தாலும் ஒழுக்கமான குடியில் பிறந்தவர், தவறு செய்வதில்லை.)
Question 47  | 
- " - - - - - - - - - - - - வாய்மையொடு
 - ஐந்துசால்பு ஊன்றிய தூண் "
 
- பிறரிடம் அன்பு
 - பழிக்கு நாணுதல்
 - அனைவரிடமும் இணக்கம்
 - உண்மை
 - இரக்கம்
 
1, 3, 5 	  | |
2, 3, 4, 5   | |
1, 3, 4, 5  			  | |
அனைத்தும்  | 
Question 47 Explanation: 
 குறிப்பு:
"அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்”)
Question 48  | 
- " - - - - - - - - - - - - - - அதுசான்றோர்
 - மாற்றாரை மாற்றும் படை”
 
- செயல் செய்பவரின் ஆற்றல்
 - கேள்வியறிவு
 - பணிவுடன் நடத்தல்
 
1, 2 	  | |
2, 3 	  | |
1, 3 	  | |
அனைத்தும்  | 
Question 48 Explanation: 
 குறிப்பு:
"ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை”)
Question 49  | 
- "பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்
 - _ _ _ _ _ _ _ _ _ _ _ _ "
 - என்ற குறளில்,
 - பிறர் வெட்கப்படும் பழிக்குக் காரணமாய் இருந்தும் தான் வெட்கப்படவில்லை என்றால் _________ வெட்கப்பட்டு அவனை விட்டு விலகிப் போகும் என்று கூறப்பட்டுள்ளது.
 
செல்வம்  | |
அறம்  | |
உறவினர்கள்  | |
வாய்மை  | 
Question 49 Explanation: 
 குறிப்பு:
" பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்
அறம்நாணத் தக்கது உடைத்து”)
Question 50  | 
- "சுழன்றும்ஏர்ப் பின்னது - - - - - - - - - - - -
 - - - - - - - - - - - - - - தலை"
 - என்ற குறளில் சிறந்த தொழிலாக கூறப்படுவது எது?
 
தச்சர் தொழில்  | |
கொல்லர் தொழில்  | |
உழவுத் தொழில்  | |
வாணிபம்  | 
Question 50 Explanation: 
 குறிப்பு:
"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை"
பொருள் - பல தொழில்களால் இயங்கினாலும் உலகம் ஏருக்குப் பின்னாலேயே போகும். அதனால் வருந்தி உழைத்தாலும் உழவுத் தொழிலே சிறந்தது.)
Question 51  | 
“ வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - - - - - - - - - -“ என்னும் குறளில், உலகத்தில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவர் யாருக்கு இணையாக மதிக்கப்படுவார் என கூறப்படுகிறது?
அரசன்  | |
அறிஞர்கள்  | |
தெய்வம்  | |
முனிவர்  | 
Question 51 Explanation: 
 குறிப்பு:
" வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்”)
Question 52  | 
- 1." - - - - - - - - - - - - - - - - - - - - - - - வையகமும்
 
- 2. "- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
 
- மேற்கண்ட குறள்களில் கூறப்படும் பொதுவான கருத்து
 
வெகுளாமை  | |
செய்ந்நன்றி அறிதல்  | |
கல்வி  | |
பொறையுடைமை  | 
Question 52 Explanation: 
 (குறிப்பு:
1. " செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
      வானகமும் ஆற்ற லரிது"
பொருள் - தான் ஓர் உதவியும் செய்யாதிருந்தும் தனக்கு உதவி செய்த ஒருவருக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடாகாது.
2. "காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
        ஞாலத்தின் மாணப் பெரிது"
பொருள் - உரிய காலத்தில் ஒருவர் செய்த உதவி அளவில் சிறியதாக இருந்தாலும், அது உலகத்தின் அளவை விட மிகப் பெரியதாகும் . )
Question 53  | 
- பயன்தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
 - நன்மை _______ பெரிது
 
வானினும்  | |
கடலினும்  | |
உலகினும்  | |
அறத்தினும்  | 
Question 53 Explanation: 
 குறிப்பு: இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவர் நமக்குச் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலை விட பெரிதாகும் என்பது பொருள்.)
Question 54  | 
- "அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் _ _ _ _ _ _ " என்ற குறளில்,
 - ஒருவருடைய செல்வம் குறையாமலிருக்கும் வழியாக கூறப்படுவது எது?
 
வறியவர்க்கு உதவுதல்  | |
பெரியோரை பின்பற்றி நடத்தல்  | |
பிறருடைய கைப் பொருளை விரும்பாதிருத்தல்  | |
ஐம்புலன்களையும் வெல்லுதல்  | 
Question 54 Explanation: 
 குறிப்பு:
"அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்”)
Question 55  | 
- " மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
 - பிறத்தல் அதனான் வரும்”
 - என்ற குறளில் கூறப்படும் பண்பு
 
புலால் மறுத்தல்  | |
வெகுளாமை  | |
வெஃகாமை  | |
செய்ந்நன்றி அறிதல்  | 
Question 55 Explanation: 
 (குறிப்பு: தீமையான விளைவுகள் சினத்தாலேயே ஏற்படும் என்பதால் யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும் என்பது இக்குறளின் பொருள்)
Question 56  | 
- தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
 - _______________ சினம்
 
ஏமப் புணையைச் சுடும்  | |
தீய பிறத்தல் அதனான்வரும்  | |
தன்னையே கொல்லும்  | |
விலைப்பொருட்டால் ஊன்தருவார்  | 
Question 56 Explanation: 
 குறிப்பு: ஒருவர் தன்னைத்தான் காத்துக்கொள்ள விரும்பினால், சினம் வாறாமல் காத்துக் கொள்ள வேண்டும். காக்காவிட்டால் சினம் நம்மையே அழித்துவிடும் )
Question 57  | 
- நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
 - ___________________மிகும்
 
தெள்ளியர் ஆதலே  | |
உண்மை அறிவே  | |
ஏமப் புணையை  | |
முயல்வாருள் எல்லாம்  | 
Question 57 Explanation: 
 குறிப்பு: ஒருவர் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றிருந்தாலும், அவருக்கு இயல்பாக உள்ளதாகும் அறிவே மேலோங்கித் தோன்றும்.)
Question 58  | 
- "இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
 - தெள்ளியர் ஆதலும் வேறு”
 - என்ற குறளில் கூறப்படும் இரு வகை உலக இயல்பு
 
- செல்வம் உடையவர் அறிவுடையவராக இருப்பதில்லை.
 - தெளிந்த அறிவுடையோர் செல்வமுடையவராக இருப்பதில்லை
 - செல்வம் உடையவரிடத்தில் இரக்கம் இருப்பதில்லை
 - இரக்கம் இருப்பவரிடத்தில் செல்வம் இருப்பதில்லை
 
1, 2 	  | |
2, 3  	  | |
1, 3 	  | |
1, 4  | 
Question 59  | 
- " - - - - - - - - - - - - - - - - -
 - ஞாலத்தின் மாணப் பெரிது"
 - என்ற குறளில் உலகத்தின் அளவைவிட பெரியதாக கருதப்படும் செயல் எது?
 
தான் ஒரு உதவியும் செய்யாதிருந்தும் பிறர் நமக்கு உதவி செய்வது  | |
இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் செய்த உதவி  | |
அளவில் சிறியதாயினும் உரிய காலத்தில் ஒருவர் செய்த உதவி  | |
ஒருவர் செய்த உதவியை மறக்காமல் இருப்பது  | 
Question 59 Explanation: 
 குறிப்பு: 
"காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது")
Question 60  | 
- “ - - - - - - - - - - - - - - செறுவார்க்கும்
 - உள்அழிக்கல் ஆகா அரண்”
 - என்ற குறளில் பகைவராலும் அழிக்க முடியாததாக கூறப்படுவது எது?
 
செல்வம்  | |
நட்பு  | |
அரசன்  | |
அறிவு  | 
Question 60 Explanation: 
 (குறிப்பு:
"அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்அழிக்கல் ஆகா அரண்”
பொருள் - அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும். அன்றியும் பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் அதுவே ஆகும்.)
Question 61  | 
- "எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
 - __________________________ "
 
அவ்வது உறைவது அறிவு  | |
அதிர வருவதோர் நோய்  | |
இன்னான் எனப்படும் சொல்  | |
நன்றின்பால் உய்ப்பது அறிவு  | 
Question 61 Explanation: 
 (குறிப்பு: பின்பு வரப்போவதை முன்பே அறிந்து காத்துக் கொள்ளும் வல்லமை கொண்ட அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.)
Question 62  | 
- " வினைத்திட்பம் என்பது ஒருவன் - - - - - - - - -
 - - - - - - - - - - - - - - - - - - - - "
 - என்ற குறளில் நல்ல செயல்பாட்டிற்கு எது வேண்டும் என கூறப்படுகிறது?
 
நல்ல நட்பு  | |
பெரியோரை மதித்து நடத்தல்  | |
மன உறுதி  | |
சான்றோர் தொடர்பு  | 
Question 62 Explanation: 
 (குறிப்பு: 
"வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற”
பொருள் - நல்ல செயல்பாட்டிற்கு மன உறுதியே வேண்டும்; மற்றவை எல்லாம் பயன்படா.)
Question 63  | 
- " - - - - - - - - - - - - - - - - - - உருள்பெருந்தேர்க்கு
 - அச்சாணி அன்னார் உடைத்து "
 - என்ற குறளில் கூறப்படும் கருத்து
 
மனவுறுதியுடன் திகழ வேண்டும்  | |
சொல்லியபடி செய்து முடித்தல் வேண்டும்  | |
தோற்றத்தை கண்டு இகழக் கூடாது  | |
தக்க காலம் அறிந்து செயல்படுதல் வேண்டும்  | 
Question 63 Explanation: 
 (குறிப்பு:
" உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து "
பொருள் - ஒருவரின் தோற்றத்தைக் கண்டு இகழக் கூடாது. பெரிய தேர்க்குக் சிறு அச்சாணிதான் இன்றியமையாதது.)
Question 64  | 
- " கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்து
 - எண்ணி உரைப்பான் தலை"
 - என்ற குறளில் யாருடைய சிறப்பு கூறப்படுகிறது?
 
அரசன்  | |
அமைச்சர்  | |
ஆசிரியர்  | |
தூதுவர்  | 
Question 64 Explanation: 
 (குறிப்பு: தன் கடமை இன்னது என்று தெளிவாக அறிந்து, அதைச் செய்வதற்கு ஏற்ற காலத்தையும் தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவரே சிறந்த தூதுவர் என்பது இக்குறளின் பொருள்)
Question 65  | 
- "அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
 - தஞ்சம் எளியன் பகைக்கு”
 - இக்குறளில் குறிப்பிடப்படுவது
 
கூடா நட்பு  | |
பகை மாட்சி  | |
கயமை  | |
வாய்மை  | 
Question 65 Explanation: 
 (குறிப்பு: மனத்தில் துணிவு இல்லாதவராய் அறிய வேண்டியவற்றை அறியாதவராய், பொருந்தும் பண்பு இல்லாதவராய், பிறர்க்குக் கொடுத்து உதவாதவராய் இருந்தால் எளிதில் பகைக்கு ஆட்பட நேரும்.)
Question 66  | 
- வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக்
 - கேள்போல் ______ தொடர்பு.
 
பண்புடையாளர்  | |
சான்றோர்  | |
பகைவர்  | |
அரசர்  | 
Question 66 Explanation: 
 (குறிப்பு: வாளைப் போல் வெளிப்படையாகத் துன்பம் செய்யும் பகைவருக்கு அஞ்ச வேண்டியதில்லை. ஆனால் உறவுடையவர் போல் நடித்து உட்பகை கொண்டவனின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும் )
Question 67  | 
- "பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
 - கழகத்துக் காலை புகின்"
 - என்ற குறளில் எந்தச் செயலின் பண்புகூறப்பட்டுள்ளது ?
 
ஈகை  | |
கள் உண்ணுதல்  | |
இறக்கம்  | |
சூது  | 
Question 67 Explanation: 
 (குறிப்பு: சூதாடுமிடத்தில் ஒருவருடைய காலம் கழியுமானால், அது அவருடைய பரம்பரைச் செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.)
Question 68  | 
- ''நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
 - __________ மாணப் பெரிது.
 
கடலினும்  | |
மலையினும்  | |
ஞாலத்தினும்  | |
உயிரினும்  | 
Question 68 Explanation: 
 (குறிப்பு: நேர்வழி மாறாது அடக்கமாய் இருப்பவனின் உயர்வு, மலையின் மாண்பைக் காட்டிலும் பெரியது.)
Question 69  | 
- i) யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
 - - - - - - - - - - - - - - - - - -
 - ii) தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
 - - - - - - - - - - - - - - - - - - -
 - இவ்விருக் குறள்களிலும் பொதுவாக கூறப்படும் கருத்து
 
பொறையுடைமை  | |
ஒப்புரவறிதல்  | |
அடக்கமுடைமை  | |
நிலையாமை  | 
Question 69 Explanation: 
 (குறிப்பு:
i) யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
     சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
பொருள் - ஒருவர் எதைக் காக்காவிட்டாலும் நாவைக் காக்க வேண்டும். அவ்வாறு காக்காவிட்டால் சொல் குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.
ii) தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
      நாவினால் சுட்ட வடு
பொருள் - தீயினால் சுட்ட புண்ணால் உடலில் வடு உண்டானாலும் உள்ளே ஆறிவிடும். நாவினால் சுட்ட புண்ணால் உடலின் புறத்தே வடு உண்டாகாவிட்டாலும் உள்ளே ஆறாது.)
Question 70  | 
- "தாளாற்றி தந்த பொருளெல்லாம் - - - - - - - - - -
 - - - - - - - - - - - - - - - - - - - - - பொருட்டு”
 - விடாமுயற்சி செய்து ஈட்டிய பொருளெல்லாம் எதற்கு பயன்படுத்தவேண்டும் என இக்குறள் குறிப்பிடுகிறது?
 
உழுதல் தொழில் செய்ய  | |
இறைவனுக்கு வைத்து வணங்க  | |
கல்வி அறிவு பெற  | |
தகுதியானவருக்கு உதவி செய்ய  | 
Question 70 Explanation: 
 (குறிப்பு:
"தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு”)
Question 71  | 
- " - - - - - - - - - - - - - - - - - - - - செல்வம்
 - பெருந்தகை யான்கண் படின்”
 - என்ற குறளில் பெருந்தகையாளனிடம் உள்ள செல்வம் எதற்கு உவமையாகக் கூறப்படுகிறது?
 
மலையின் மாண்பு  | |
கடலின் பரந்த பண்பு  | |
கடலின் பரந்த பண்பு  | |
எல்லா உறுப்புகளையும் மருந்தாக தரும் மரம்  | 
Question 71 Explanation: 
 (குறிப்பு: 
"மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்”)
Question 72  | 
- “ - - - - - - - - - - - - - - - - அஃதிலார்
 - தோன்றலின் தோன்றாமை நன்று”
 - என்ற குறளில் கூறப்படும் கருத்து
 
செல்வ வளத்துடன் தோன்ற வேண்டும்  | |
இறக்க குணத்துடன் தோன்ற வேண்டும்  | |
புகழ் தரும் பண்புகளுடன் தோன்ற வேண்டும்  | |
அறிவு ஓழுக்கத்துடன் தோன்ற வேண்டும்  | 
Question 72 Explanation: 
 (குறிப்பு:
" தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று”)
Question 73  | 
- நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
 - பெருமை உடைத்துஇவ் வுலகு’’
 - இக்குறளில் கூறப்படும் கருத்து
 
பொறையுடைமை  | |
ஒப்புரவறிதல்  | |
அடக்கமுடைமை  | |
நிலையாமை  | 
Question 73 Explanation: 
 (குறிப்பு: நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் நிலையாமைப் பெருமை உடையது இவ்வுலகம் என்பது இதன் பொருள்)
Question 74  | 
- "யாதனின் யாதனின் நீங்கியான் _______
 - அதனின் அதனின் இலன்"
 
பற்று  | |
நோதல்  | |
மகிழ்ச்சி  | |
தீவினை  | 
Question 74 Explanation: 
 (குறிப்பு: ஒருவன் எந்தெந்தப் பொருள்களிடமிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ அந்தந்தப் பொருள்களால் அவன் துன்பம் அடைவதில்லை என்பது இக்குறளின் பொருள்)
Question 75  | 
- "இன்பம் இடையறாது ஈண்டும் - - - - - - - - - -
 - - - - - - - - - - - - - - கெடின் "
 - என்ற குறளில் எது தொலைந்து போனால் இன்பம் இடைவிடாமல் வரும் என கூறப்படுகிறது?
 
புகழ்  | |
பகைமை  | |
சோம்பல்  | |
பேராசை  | 
Question 75 Explanation: 
 (குறிப்பு:
"இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்”)
Question 76  | 
- "அமைந்தாங் கொழுகான் - - - - - - - - - -
 - - - - - - - - - - - - - - விரைந்து கெடும்"
 - என்ற குறளில் யார் விரைந்து கெடுவார் எனக் கூறப்படுகிறது?
 
- மற்றவருடன் ஒத்து போகாதவன்
 - தன் வலிமை அறியாதவன்
 - தன்னை பெரிதாக நினைப்பவன்
 
1, 2 	  | |
2, 3  | |
1, 3 	  | |
அனைத்தும்  | 
Question 76 Explanation: 
 (குறிப்பு:
“அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்")
Question 77  | 
- அருவினை யென்ப உளவோ கருவியான்
 - ________ அறிந்து செயின்
 
தகுதி  | |
செயல்  | |
காலம்  | |
துன்பம்  | 
Question 77 Explanation: 
 குறிப்பு: உரிய கருவிகளுடன் தக்க காலம் அறிந்து செய்தால் அரிய செயல் என்று ஒன்று இல்லை என்பது பொருள்)
Question 78  | 
குடிமக்களை அன்போடு அணைத்துக் கொண்டு ஆட்சி புரியும் அரசனுடைய அடிகளைப் பொருந்தி நிற்குமாம் உலகம் என்ற பொருள் தரும் குறள்
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
       வகுத்தலும் வல்ல அரசு
  | |
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
       அடிதழீஇ நிற்கும் உலகு
  | |
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
       கோல்நோக்கி வாழுங் குடி
  | |
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
        இறையென்று வைக்கப் படும்
  | 
Question 79  | 
வள்ளுவர் _______ யை அடிப்படைப் பொருளாதார நடவடிக்கை என்கிறார்.
வாணிபம்  | |
தொழிற்சாலை  | |
வேளாண்மை  | |
போக்குவரத்து  | 
Question 79 Explanation: 
 குறிப்பு: உலகத்தின் அச்சாணியாக வேளாண்மை இருப்பதாகவும், பொருளாதார ரீதியாக பிற துறைகளின் செழுமை வேளாண்மை துறையின் செழுமையைச் சார்ந்தது என்கிறார்.
"உழுதுண்டு வாழ்வோரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்" என்ற குறள் மூலம் இதனை விளக்குகிறார்.)
Question 80  | 
- "அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
 - மானம் உடைய தரசு "
 - என்ற குறளில்,
 - ________ வழுவாது, தீமைகளை நீக்கி, மறம் வழுவாது, மானம் காப்பது அரசு என கூறப்படுகிறது.
 
அன்பு  | |
கருணை  | |
அறம்  | |
ஒழுக்கம்  | 
Question 81  | 
- இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
 - ___________ இலானும் கெடும்.
 
பகை  | |
கெடுப்பார்  | |
செல்வம்  | |
நல்லார்  | 
Question 81 Explanation: 
 (குறிப்பு: குற்றங் கண்டபொழுது இடித்துக் கூறும் பெரியாரைத் துணைக் கொள்ளாத பாதுகாப்பற்ற மன்னன், பகைவர் இன்றியும் தானே கெடுவான்.)
Question 82  | 
- "பொறிஇன்மை யார்க்கும் பழிஅன் றறிவறிந்
 - - - - - - - - - - - - - - - - - - - - - - - - "
 - என்ற குறளில்,
 - ஐம்புலன்களில் இருக்கும் குறையை விட எது இழிவானதாகக் கூறப்படுகிறது?
 
புகழ் அடையாமல் இருப்பது  | |
பெரியோரின் சொல்படி நடக்காமல் இருப்பது  | |
அறிய வேண்டியதை அறிந்து முயற்சி செய்யாயது  | |
கேள்வி அறிவு பெறாமல் இருப்பது.  | 
Question 82 Explanation: 
 ( குறிப்பு:
"பொறிஇன்மை யார்க்கும் பழிஅன் றறிவறிந்
தாள்வினை இன்மை பழி")
Question 83  | 
- "வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
 - டைந்துடன் மாண்ட தமைச்சு”
 - என்ற குறளில் சிறந்த அமைச்சரின் பண்புகளாகக் கூறப்படுபவை
 
- மனவலிமை
 - குடிகளைக் காத்தல்
 - ஆட்சி முறைகளைக் காத்தல்
 - 4. நூல்களைக் கற்றல்
 - விடாமுயற்சி
 
அனைத்தும்  | |
1, 3, 4, 5  | |
2, 4, 5  | |
1, 4, 5  | 
Question 84  | 
- " - - - - - - - - - - - - வாராப் பொருளாக்கம்
 - புல்லார் புரள விடல்"
 - என்ற குறளில் எவ்வழியில் ஈட்டும் பொருளை ஏற்றுக் கொள்ளாமல் நீக்கி விட வேண்டும் எனக் கூறப்படுகிறது?
 
பரிசில் மூலம் பெற்ற பொருள்  | |
தானமாக பெற்ற பொருள்  | |
இரக்கமும் அன்பும் இல்லாமல் பெற்ற பொருள்  | |
திருடிய பொருள்கள்  | 
Question 84 Explanation: 
 (குறிப்பு: 
“அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்" )
Question 85  | 
- "வறியார்க்குஒன்று - - - - - - - - - - - - - - - -
 - - குறியெதிர்ப்பை நீரது உடைத்து “
 - இக்குறளில் கூறப்படும் பண்பு
 
கொல்லாமை  | |
அன்புடைமை  | |
ஈகை  | |
வாய்மை  | 
Question 85 Explanation: 
 (குறிப்பு:
" வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து”
பொருள் - இல்லாதவர்க்கு தருவதே ஈகை ஆகும். மற்றவை எல்லாம் பயனை எதிர்பார்த்துச் செய்பவை ஆகும்.)
Question 86  | 
- " - - - - - - - - - - - - - - தன்கைத்தொன்
 - றுண்டாகச் செய்வான் வினை”
 - இக்குறளில் தன் கைப்பொருளைக் கொண்டு ஒருவர் ஒரு செயலைச் செய்வது எதை போன்றது எனக் கூறப்படுகிறது?
 
போரின் போது பாதுகாப்பாக இருப்பதற்கு சமம்  | |
மலை மீது நின்று யானைப் போர் காண்பது போன்றது  | |
தீங்கு தராத சொற்களை பேசுவது போன்றது  | |
பகைவருடன் நட்பு பாராட்டுவதற்கு சமம்  | 
Question 86 Explanation: 
 குறிப்பு:
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை)
Question 87  | 
- ____________ இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
 - சுற்றமாச் சுற்றும் உலகு
 
புகழ்  | |
பொருள்  | |
குற்றம்  | |
தஞ்சம்  | 
Question 87 Explanation: 
 (குறிப்பு: குற்றம் இல்லாமல் தன் குடிப்பெருமையை உயரச்செய்து வாழ்பவரை உலகத்தார் உறவாகக் கொண்டு போற்றுவர்.)
Question 88  | 
- " - - - - - - - - - - - - -தேற்றம்
 - எனநான்கே ஏமம் படைக்கு"
 - இக்குறளில் படைக்கு பாதுகாப்பாக கூறப்படுபவை எவை?
 
- வீரம்
 - மானம்
 - புகழ்
 - முன்னோர் வழியில் நடத்தல்
 - நம்பிக்கைக்கு உரியவர் ஆதல்
 
அனைத்தும்  | |
1, 3, 4, 5  | |
1, 2, 4, 5  | |
2, 3, 5  | 
Question 88 Explanation: 
 (குறிப்பு:
"மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு")
Question 89  | 
- "எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
 - மாணாசெய் யாமை தலை"
 - இக்குறளில் கூறப்படும் கருத்து
 
கொல்லாமை  | |
வாய்மை  | |
இன்னா செய்யாமை  | |
ஈகை  | 
Question 89 Explanation: 
 (குறிப்பு: நம் உள்ளம் ஏற்றுக் கொள்ளாத எச்செயலையும் எக்காலத்திலும் யார்க்கும் சிறிதளவு கூட செய்யக் கூடாது.)
Question 90  | 
- "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் - - - - - - -
 - - - - - - - - - - - - - - - - - - தலை"
 - இக்குறளில் தம்மிடம் இருப்பவற்றை பிற உயிர்களுக்கு பகிர்ந்து கொடுப்பது எதை விட சிறந்தது எனக் கூறப்படுகிறது?
 
சான்றோரின் நட்பை விட சிறந்தது  | |
முனிவர்களின் தவத்தை விட சிறந்தது  | |
அறநூல்களில் கூறப்படும் அறங்களை விடச் சிறந்தது  | |
துறவறத்தை விட சிறந்தது.  | 
Question 90 Explanation: 
 (குறிப்பு:
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை")
Question 91  | 
- " வில்லேற் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
 - - - - - - - - - - - - - - - - - "
 - இக்குறளில் வில்வீரரின் பகையைப் பெற்றாலும் யாருடைய பகையை பெறக்கூடாது என கூறப்படுகிறது?
 
அரசனின் பகை  | |
உற்ற நண்பனின் பகை  | |
சான்றோரின் பகை  | |
சொல்வன்மை உடைய அறிஞரின் பகை  | 
Question 91 Explanation: 
 (குறிப்பு:
" வில்லேற் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை")
Question 92  | 
- ___________ என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
 - அற்றது போற்றி உணின்
 
துன்பம்  | |
நோய்  | |
மருந்து  | |
காலம்  | 
Question 92 Explanation: 
 (குறிப்பு:
"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது 
அற்றது போற்றி உணின்”
பொருள் - உண்டதும், செரித்ததும் அறிந்து உண்டால் மருந்து என ஒன்று வேண்டியதில்லை )
Question 93  | 
- " - - - - - - - - - - - - - - - - - - -
 - மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து”
 - இக்குறளில் மகிழ்ச்சியில் கடமையை மறக்கும் போது யாரை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது
 
பேராசை கொண்டவரை  | |
கல்வியறிவில்லாதவரை  | |
வறியவரை  | |
மறதியால் கெட்டவரை  | 
Question 93 Explanation: 
 (குறிப்பு: 
"இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக தாம்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து”)
Question 94  | 
- "எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
 - பெரியார்ப் பிழைத்தொழுகு வார்"
 - இக்குறளில் கூறப்படுவது
 
மக்கட்பேறு  | |
பெரியாரைப் பிழையாமை  | |
நீத்தார் பெருமை  | |
இனியவை கூறல்  | 
Question 94 Explanation: 
 (குறிப்பு: தீயினால் சுடப்பட்டவர் கூடப் பிழைத்துக் கொள்ள முடியும். ஆனால் பெரியவர்களுக்குத் தீங்கு செய்தவர் தப்ப முடியாது என்பது பொருள்)
Question 95  | 
- என்பில் அதனை வெயில் போலக் காயுமே
 - ______ அதனை அறம்.
 
பண்பில்  | |
பகையில்  | |
அன்பில்  | |
உலகில்  | 
Question 95 Explanation: 
 (குறிப்பு: எலும்பில்லாத புழுவை வெயில் உறுத்துவது போல அன்பில்லாத உயிர்களை அறம் உறுத்தும்.)
Question 96  | 
- "நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
 - நாட வளந்தரு நாடு"
 - இக்குறளில் கூறப்படும் கருத்து
 
அழிக்கும் பகை இல்லாததே சிறந்த நாடு  | |
உடலுயிரை வருத்தும் பசி இல்லாதது சிறந்த நாடு  | |
குறைந்த மக்கள் வளத்தை கொண்டது சிறந்த நாடு  | |
செல்வம் தேடி தன் மக்களைப் பிற இடங்களில் அலைய விடாதது சிறந்த நாடு  | 
Question 97  | 
- ஒல்லும் வகையான் _______ ஓவாதே
 - செல்லும்வா யெல்லாஞ் செயல்
 
இன்பம்  | |
ஆக்கம்  | |
அறவினை  | |
ஒழுக்கம்  | 
Question 97 Explanation: 
 ( குறிப்பு: செல்லுமிடமெல்லாம் அறச் செயலை செயல்படுத்த வேண்டும் )
Question 98  | 
- விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
 - உள்நின்று உடற்றும் ________.
 
துன்பம்  | |
வறுமை  | |
பசி  | |
மழை  | 
Question 98 Explanation: 
 (குறிப்பு: மழை உரிய காலத்தில் பெய்யாது போனால் உலகத்து உயிர்களை எல்லாம் பசி துன்புறுத்தும்)
Question 99  | 
- " _ _ _ _ _ _ _ _ _ _ மாநிலத்து
 - மன்னுயிர்க்கு எல்லாம் இனிது"
 - இக்குறளில் கூறப்படும் கருத்து
 
பிள்ளையின் புகழை தாய் கேட்டு மகிழ்தல்  | |
தம்மை விட தம் பிள்ளைகள் அறிவுடையோர் என மக்கள் கேட்டு மகிழ்தல்  | |
பணிவும் இன்சொல்லுமே மிகச் சிறந்த அணி  | |
மக்கள் அனைவரும் கருணை உணர்வோடு இருத்தல் வேண்டும்  | 
Question 99 Explanation: 
 (குறிப்பு:
" தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது")
Question 100  | 
- '' செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
 - செயற்கரிய செய்கலா தார்”
 - இக்குறளில் கூறப்படுவது
 
மக்கட்பேறு  | |
அன்புடைமை  | |
நீத்தார் பெருமை  | |
இனியவை கூறல்  | 
Question 100 Explanation: 
 (குறிப்பு: முடியாத செயலையும் முடித்துக் காட்டுபவர் பெரியோர். முடியாது என்பவர் சிறியோர்)
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 100 questions to complete.