October 3rd Week 2020 Current Affairs Online Test Tamil

Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
AAZZAAZZ
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
இணைய பாதுகாப்பு குறித்த அறிவு & தொழில்நுட்ப பரிமாற்றத்திற்காக எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?
Correct
• இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையே இணைய பாதுகாப்பு குறித்த கூட்டுறவுப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இயற்கை எரிவாயு விலையிடலில் தரப்படுத்தப்பட்ட மற்றும் வெளிப்படையான மின்னணு-ஏல நடைமுறைக்கு நடுவணமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கொல்கத்தா மெட்ரோ இரயிலின் ஒரு திட்டத்தின் திருத்தப்பட்ட செலவினத்திற்கும் அது அனுமதி அளித்துள்ளது. COVID-19 குறித்த பொது விழிப்புணர்வு பரப்புரைத் திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Incorrect

Question 2 of 50
2. Question
விழாக்காலங்களை முன்னிட்டு இந்தியப்பிரதமர் தொடங்கியுள்ள COVID-19 விழிப்புணர்வு பரப்புரைத் திட்டத்தின் பெயரென்ன?
Correct
• அண்மையில் பிரதமர் மோடி, COVID-19 தற்காப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, ‘ஜன் அந்தோலன்’ என்ற பரப்புரைத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். திருவிழாக்கள், குளிர்காலம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் செயல்படவுள்ளதை கருத்தில்கொண்டு இப்பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது. முகமறைப்பு அணியவும், கைகளை நன்றாக கழுவவும், சமூக விலகலை பின்பற்றவும் பிரதமர் மோடி அப்போது கேட்டுக்கொண்டார்.

Question 3 of 50
3. Question
உலக பருத்தி வணிகத்தில், இந்திய உயர்ரக பருத்தியின் புதிய வணிகப் பெயர் (brand) என்ன?
Correct
• மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, அண்மையில், இந்திய பருத்திக்கான முதல் வணிகப் பெயரையும் இலச்சினையையும் வெளியிட்டார். அது, அக்டோபர்.7 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட இரண்டாவது உலக பருத்தி நாளன்று வெளியிடப்பட்டது.
• இந்தியாவின் உயர்ரக பருத்தி, உலக பருத்தி வணிகத்தில், ‘கஸ்தூரி பருத்தி’ என்று அழைக்கப்படும். இந்திய பருத்திக்கான புதிய இலச்சினையையும் அமைச்சர் அப்போது வெளியிட்டார்.Incorrect
• மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, அண்மையில், இந்திய பருத்திக்கான முதல் வணிகப் பெயரையும் இலச்சினையையும் வெளியிட்டார். அது, அக்டோபர்.7 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட இரண்டாவது உலக பருத்தி நாளன்று வெளியிடப்பட்டது.
• இந்தியாவின் உயர்ரக பருத்தி, உலக பருத்தி வணிகத்தில், ‘கஸ்தூரி பருத்தி’ என்று அழைக்கப்படும். இந்திய பருத்திக்கான புதிய இலச்சினையையும் அமைச்சர் அப்போது வெளியிட்டார். -
Question 4 of 50
4. Question
நெதர்லாந்து பேரரசிற்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
• 1990ஆம் ஆண்டைச் சார்ந்த மூத்த இந்திய வெளியுறவு சேவை (IFS) அதிகாரியான பிரதீப் குமார் ராவத் நெதர்லாந்து பேரரசிற்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, தற்போது இந்தோனேசிய குடியரசின் இந்திய தூதராக இருக்கும் பிரதீப் குமார், விரைவில் புதிய பதவியை ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Question 5 of 50
5. Question
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய துணை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
• ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக M இராஜேஸ்வர் ராவை நடுவணரசு நியமித்துள்ளது. அவர் தற்போது RBI’இன் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார். மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு, இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது, N S விஸ்வநாதனை அடுத்து RBI’இன் நான்காவது துணை ஆளுநராக M இராஜேஸ்வர் ராவ் பொறுப்பேற்கவுள்ளார்.

Question 6 of 50
6. Question
இந்தியாவின் முதல் அதிநவீன உற்பத்தி மையம் (AMHUB) நிறுவப்படவுள்ள மாநிலம் எது?
Correct
• இந்தியாவின் முதல் அதிநவீன உற்பத்தி மையமானது (Advanced Manufacturing HUB – AMHUB) தமிழ்நாட்டில் நிறுவப்படவுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாட்டின் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் உதவி நிறுவனமான, ‘The Guidance’ உலக பொருளாதார மன்றத்துடன் (WEF) கூட்டிணைந்துள்ளது. AMHUB என்பது WEF வடிவமைத்த பத்தொன்பது தளங்களுள் ஒன்றாகும். நான்காம் தொழிற்துறை புரட்சியின் வாய்ப்புகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதன்மூலம், இது, தமிழ்நாட்டில் உற்பத்தி சூழலியல் அமைப்புக்கு உதவிபுரியும்.

Question 7 of 50
7. Question
ரிசர்வ் வங்கியின் அண்மைய அறிக்கையின்படி, எந்த நாட்டினுடைய அந்நிய நேரடி முதலீட்டில் நிதி நிறுவனங்களை அமைக்கவியலாது?
Correct
• நிதியியல் நடவடிக்கை பணிக்குழு வகுத்துள்ள வரையறைகளை பூர்த்திசெய்யாத மொரிஷியஸ் அல்லது பிற களங்களினுடைய அந்நிய நேரடி முதலீட்டில் நிதி நிறுவனங்களை அமைக்க முடியாது என்று இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்தது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வருடாந்திர வருவாயை பேரளவுக்கு பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Question 8 of 50
8. Question
முதன்முறையாக, போர்ப்ஸ் இந்தியா செல்வந்தர்கள் பட்டியல் – 2020’இன் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்ற இந்திய தொழிலதிபர் யார்?
Correct
• சமீபத்தில் வெளியிடப்பட்ட போர்ப்ஸ் இந்தியா செல்வந்தர்கள் பட்டியல் – 2020’இன்படி, ரிலையன்ஸ் தொழிற்துறையின் தலைவர் தொடர்ந்து பதிமூன்றாம் ஆண்டாக செல்வந்த இந்தியராக இருக்கிறார். அவரது நிகர மதிப்பு $88.7 பில்லியன் டாலராக உள்ளது. முகேஷ் அம்பானியைத் தொடர்ந்து $25.2 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் கெளதம் அதானியும், $20.4 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் சிவ் நாடரும் உள்ளனர். முதன்முறையாக முதல் பத்து இடங்களுக்குள் சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனவல்லா இடம்பெற்றுள்ளார்.

Question 9 of 50
9. Question
INOX வளி தயாரிப்புகளால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கிரீன்பீல்ட் உயிர்வளி (oxygen) ஆலையை திறந்துவைத்துள்ள மாநில அரசு எது?
Correct
• உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், காசியாபாத்தின் மோடி நகரில், மாநிலத்தின் மிகப்பெரிய உயிர்வளி ஆலையைத் திறந்து வைத்துள்ளார். தொழிலக மற்றும் மருத்துவ வாயுக்களின் முன்னணி உற்பத்தியாளர்களான INOX வளி தயாரிப்புகள் நிறுவனம் இந்த ஆலையை உருவாக்கி உள்ளது. இவ்வாலையின் திட்ட செலவினம் `135 கோடியாகும். இந்த ஆலை, நாளொன்றுக்கு 150 டன் திரவ மருத்துவ உயிர்வளியை உற்பத்தி செய்யும் திறன்கொண்டதாகும்.

Question 10 of 50
10. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘SARDP-NE’ என்பதை செயல்படுத்தும் நடுவணமைச்சகம் எது?
Correct
• வடகிழக்கு பகுதிகளில் சிறப்பு விரைவுச் சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடை இந்த நிதியாண்டில் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கிட்டதட்ட இரு மடங்காக உயர்த்தியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் நெடுஞ்சாலைகள் அமைக்க, 2020-21’ஆம் நிதி ஆண்டுக்கு முன்பு `390 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தற்போது இதே காலகட்டத்துக்கு இந்தத் தொகை `760 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் `300 கோடி, அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சாலைகளை மேம்படுத்தும் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Question 11 of 50
11. Question
நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதற்காக இராம்விலாஸ் பஸ்வான் கின்னஸ் சாதனை படைத்தார்; அவர் எந்தத் தொகுதியிலிருந்து இந்தச் சாதனையை புரிந்தார்?
Correct
• ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடிய மூத்த அரசியல் தலைவரும், லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனருமான இராம்விலாஸ் பஸ்வான் தனது 74ஆம் வயதில் காலமானார். நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றமைக்காக கின்னஸ் சாதனை படைத்தார். 1977ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்திலுள்ள ஹாஜிப்பூர் தொகுதியிலிருந்து 4.24 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். நுகர்வோர் விவகார அமைச்சராக பணியாற்றி வந்த பஸ்வானின் மறைவுக்குப் பிறகு, அவரின் பொறுப்பை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், கூடுதலாக நிர்வகித்து வருகிறார்.

Question 12 of 50
12. Question
ரிசர்வ் வங்கியின் அண்மைய அறிவிப்பின்படி, 2020 டிசம்பர் முதல், கீழ்க்காணும் எந்தச் சேவை, 24×7 (நாள் முழுவதும்) கிடைக்கவுள்ளது?
Correct
• எதிர்வரும் 2020 டிசம்பர் முதல் RTGS (Real Time Gross Settlement) என்ற பணமனுப்பும் முறையில் 24 மணி நேரமும் (24×7) பணம் அனுப்ப முடியும் என இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். தற்போதுள்ள RTGS சேவையில், ஒரு வேலை நாளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வாடிக்கையாளரால் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியும். நேரக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்பது இணையவழி பணப்பரிமாற்றத்தை மிகவும் பயனுள்ளதாக்கும். குறைந்தபட்சம் `2 லட்சத்திலிருந்து உச்சவரம்பு ஏதுமில்லாமல் RTGS மூலம் இனி பணமனுப்பவியலும்.

Question 13 of 50
13. Question
நடப்பாண்டில் (2020) அமைதிக்கான நோபல் பரிசை வென்ற நபர் / நிறுவனம் யார் / எது?
Correct
• COVID-19 தொற்றுநோய்க்கு இடையில் மில்லியன் கணக்கான மக்களுக்கு உணவளித்தமைக்காக ஐநா அவையின் உலக உணவுத்திட்டத்திற்கு நடப்பாண்டுக்கான (2020) அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1961ஆம் ஆண்டில் ஐநா உலக உணவுத்திட்டம் நிறுவப்பட்டது.
• இந்த ஐநா அமைப்பானது கடந்த ஆண்டில் மட்டும் 97 மில்லியன் உலக மக்களுக்கு உதவியுள்ளது. மேலும், 88 நாடுகளைச் சார்ந்த 15 பில்லியனுக்கும் அதிகமானோருக்கு கடந்த ஆண்டில் உணவுப் பொருட்களை அது வழங்கியுள்ளது. இந்தப் பரிசு தங்கப்பதக்கம், பட்டயம் மற்றும் பத்து மில்லியன் சுவீட குரோனாருக்கான காசோலையைக் கொண்டுள்ளது.Incorrect
• COVID-19 தொற்றுநோய்க்கு இடையில் மில்லியன் கணக்கான மக்களுக்கு உணவளித்தமைக்காக ஐநா அவையின் உலக உணவுத்திட்டத்திற்கு நடப்பாண்டுக்கான (2020) அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1961ஆம் ஆண்டில் ஐநா உலக உணவுத்திட்டம் நிறுவப்பட்டது.
• இந்த ஐநா அமைப்பானது கடந்த ஆண்டில் மட்டும் 97 மில்லியன் உலக மக்களுக்கு உதவியுள்ளது. மேலும், 88 நாடுகளைச் சார்ந்த 15 பில்லியனுக்கும் அதிகமானோருக்கு கடந்த ஆண்டில் உணவுப் பொருட்களை அது வழங்கியுள்ளது. இந்தப் பரிசு தங்கப்பதக்கம், பட்டயம் மற்றும் பத்து மில்லியன் சுவீட குரோனாருக்கான காசோலையைக் கொண்டுள்ளது. -
Question 14 of 50
14. Question
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு DRDO’ஆல் பரிசோதிக்கப்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையின் பெயரென்ன?
Correct
• ஒடிசா கடற்பகுதியிலிருந்து SU30 MK1 போர் விமானத்தின்மூலம், மேம்படுத்தப்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையின் (ருத்ரம்) சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்திய வான்படைக்காக, பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு அமைப்பு (DRDO), இந்த ‘ருத்ரம்’ எனும் முற்றிலும் உள்நாட்டிலேயே உருவான மேம்படுத்தப்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையை தயாரித்தது. இந்த ஏவுகணையின்மூலம் இந்திய வான்படை வீரர்கள், வெகு தொலைவிலிருந்தே எதிரி நாடுகளின் ரேடார்கள், டிராக்கிங் மற்றும் தகவல் தொடர்பை அழிக்கவியலும்.

Question 15 of 50
15. Question
எந்தவொரு திட்டத்தின்கீழ், சொத்து விவர அட்டைகளின் விநியோகத்தை பிரதமர் தொடங்கவுள்ளார்?
Correct
• பிரதமர் மோடி, SVAMITVA (Survey of Villages and Mapping with Improvised Technology in Village Areas) திட்டத்தின்கீழ் சொத்து விவர அட்டைகளை விநியோகத்தை தொடங்கவுள்ளார். கடன் பெறவோ அல்லது இதர நிதி பயன்பாடுகளுக்காகவோ கிராம மக்கள், தங்களது சொத்துகளை, ஒரு நிதி சொத்தாக உபயோகிப்பதற்கு இந்த நடவடிக்கை வழி வகுக்கும். இந்நிகழ்வின்போது 132,000’க்கும் மேற்பட்ட நில உரிமையாளர்களுக்கு சொத்து விவர அட்டைகளின் நகல்கள் ஒப்படைக்கப்படும். அட்டைகளை மாநில அரசுகளும் மக்களுக்கு விநியோகிக்கும்.

Question 16 of 50
16. Question
நாட்டின் வேலைவாய்ப்பு நிலையை மதிப்பிடுவதற்காக தொழிலாளர் அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் தலைவர் யார்?
Correct
• நாட்டின் வேலைவாய்ப்பு நிலைகுறித்து மதிப்பீடு செய்வதற்காக தொழிலாளர் பணியகம் அமைக்கப்ப
-ட்டிருப்பதாக தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது. SP முகர்ஜி தலைமையிலான நிபுணர் குழு புலம்பெயர்தல், தொழிற்முறை அமைப்புகள், வீட்டுப்பணியாளர்கள் குறித்து மூன்று ஆய்வுகள் நடத்தும். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கெளரவ பேராசிரியரான SP முகர்ஜி தலைமையிலான இக்குழுவில் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள், புள்ளியிலாளர்கள் மற்றும் அரசலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர்.Incorrect
• நாட்டின் வேலைவாய்ப்பு நிலைகுறித்து மதிப்பீடு செய்வதற்காக தொழிலாளர் பணியகம் அமைக்கப்ப
-ட்டிருப்பதாக தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது. SP முகர்ஜி தலைமையிலான நிபுணர் குழு புலம்பெயர்தல், தொழிற்முறை அமைப்புகள், வீட்டுப்பணியாளர்கள் குறித்து மூன்று ஆய்வுகள் நடத்தும். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கெளரவ பேராசிரியரான SP முகர்ஜி தலைமையிலான இக்குழுவில் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள், புள்ளியிலாளர்கள் மற்றும் அரசலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர். -
Question 17 of 50
17. Question
தென்சீனக்கடலில் நீர்மூழ்கிக்கப்பல் எதிர்ப்பு பயிற்சிகளை தொடங்கியுள்ள நாடு எது?
Correct
• ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அண்மைய அறிக்கையின்படி, ஜப்பானின் கடல்சார் தற்காப்புப் படை, தென்சீனக்கடலில் நீர்மூழ்கிக்கப்பல் எதிர்ப்புப் பயிற்சிகளைத் தொடங்கியுள்ளது. இப்பயிற்சியில் உலங்கூர்தி தாங்கி கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல் உள்ளிட்ட மூன்று கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. முழு தென்சீனக்கடலும் சீனாவால் உரிமைகோரப்படும் நிலையில், அந்நாடு அக்கடலில் அமைந்துள்ள செயற்கைத் தீவுகளில் இராணுவ நிலையங்களை நிறுவியுள்ளது. தென்சீனக்கடலை சீன தேசம் இராணுவமயமாக்கியதாக ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA) குற்றஞ்சாட்டிவருகிறது.

Question 18 of 50
18. Question
மே மற்றும் அக்டோபர் மாதத்தில் வரும் இரண்டாம் சனிக்கிழமைகளில், பல்லுயிர் தொடர்பான எந்தச் சிறப்புநாள் கொண்டாடப்படுகிறது?
Correct
• புலம்பெயர்ந்த பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒவ்வோர் ஆண்டும் மே மற்றும் அக்டோபர் மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமைகளில் உலக புலம்பெயர்வு பறவைகள் நாள் அனுசரிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்த பறவைகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், சூழலியலில் அவற்றின் முக்கியத்துவம் மற்றும் அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் ஆகிவற்றை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது. • “Birds Connect Our World – புள்ளினங்கள் நம் உலகத்தை இணைக்கின்றன” என்பது நடப்பாண்டு (2020) அக்.10 அன்று கொண்டாடப்பட்ட உலக புலம்பெயர்ந்த பறவைகள் நாளின் கருப்பொருளாகும்.

Question 19 of 50
19. Question
அண்மையில் தேசிய கடல்சார் அறக்கட்டளையுடன் கூட்டுசேர்ந்த TAEF என்பது எந்த நாட்டில் அமைந்த ஒரு மதியுரையகமாகும்?
Correct
• தைவான் – ஆசியா பரிமாற்ற அறக்கட்டளை (TAEF) என்பது தைவானைச் சார்ந்த ஒரு முன்னணி மதியுரையகமும் யுஷான் மன்றத்தின் அமைப்பாளரும் ஆகும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழை -ப்பை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் தேசிய கடல்சார் அறக்கட்டளையுடனான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால், இது அண்மைச் செய்திகளில் இடம்பெற்றது. கூட்டு ஆராய்ச்சி செய்வதையும் இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Question 20 of 50
20. Question
எந்த மத்திய அமைச்சகத்தின்கீழ், ‘இராஷ்டிரிய காமதேனு ஆயோக்’ அமைக்கப்பட்டுள்ளது?
Correct
• இந்திய அரசானது மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின்கீழ், ‘இராஷ்டிரிய காமதேனு ஆயோக்’ அமைத்துள்ளது. நவீன மற்றும் அறிவியல்பூர்வ வழிமுறைகளில் கால்நடை வளர்ப்பை ஊக்குவிப்பதும், கால்நடையினங்களை பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
• பஞ்சகவ்யப் பொருட்களைப் பயன்படுத்தித் தீபாவளியைக் கொண்டாடும் நோக்கத்தோடு, “காமதேனு தீபாவளி அபியான்” பரப்புரையை தேசிய காமதேனு ஆயோக் தொடங்கியுள்ளது.Incorrect
• இந்திய அரசானது மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின்கீழ், ‘இராஷ்டிரிய காமதேனு ஆயோக்’ அமைத்துள்ளது. நவீன மற்றும் அறிவியல்பூர்வ வழிமுறைகளில் கால்நடை வளர்ப்பை ஊக்குவிப்பதும், கால்நடையினங்களை பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
• பஞ்சகவ்யப் பொருட்களைப் பயன்படுத்தித் தீபாவளியைக் கொண்டாடும் நோக்கத்தோடு, “காமதேனு தீபாவளி அபியான்” பரப்புரையை தேசிய காமதேனு ஆயோக் தொடங்கியுள்ளது. -
Question 21 of 50
21. Question
TRIFED, IIT கான்பூர் மற்றும் சத்தீஸ்கர் MFP கூட்டமைப்பு ஆகியவற்றால் இணைந்து தொடங்கப்பட்ட முன்னெடுப்பின் பெயர் என்ன?
Correct
• பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின்கீழ் இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு கூட்டமைப்பானது (TRIFED), சத்தீஸ்கர் MFP கூட்டமைப்பு & IIT கான்பூர் ஆகியவற்றுடன் இணைந்து, “பழங்குடியினருக்கான தொழில்நுட்பம்” என்ற முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. இது, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறை நிறுவனங்கள் அமைச்சகத்தின் (MSME) ஒத்துழைப்புடன், ‘தொழில் முனைவு திறன்மேம்பாட்டுத்திட்டத்தின்’கீழ் தொடங்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வான் தன் பயனாளிகளுக்கு ஆறு வாரங்கள் பயிற்சியளிக்கப்படுகிறது.

Question 22 of 50
22. Question
யாரின் வாழ்க்கை வரலாற்றை, ‘தே வெச்சவா கரணி’ என்ற தலைப்பில், பிரதமர் மோடி வெளியிட்டார்?
Correct
• காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் Dr. பாலாசாகேப் விகே பாட்டீலின் வாழ்க்கை வரலாற்றை பிரதமர் மோடி அண்மையில் வெளியிட்டார். ஒருவரின் வாழ்க்கையை ஓர் உன்னத நோக்கத்திற்காக அர்ப்பணிப்பது எனப்பொருள்படும், ‘தே வெச்சவா கரணி’ என்ற பெயரில் இந்தத் தன்வரலாறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. பாலாசாகேப், எழுமுறை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவராவார். சமூக பணித்துறையில் அவராற்றிய பங்களிப்புக்காக, கடந்த 2010ஆம் ஆண்டில் அவருக்கு மதிப்புமிக்க, ‘பத்ம பூஷண்’ விருது வழங்கப்பட்டது.

Question 23 of 50
23. Question
எந்த இந்திய நிறுவனத்தின் நிறுவனர்கள், நடப்பாண்டு (2020) IIFL வெல்த் ஹுருன் இந்தியா 40 & தாமாக உருவான செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர்?
Correct
• பங்குச்சந்தை தரகு நிறுவனமான, ‘செரோதா’வின் நிறுவனர்களான நிதின் காமத் மற்றும் நிகில் காமத் ஆகியோர், நடப்பாண்டு (2020) IIFL வெல்த் ஹுருன் இந்தியா 40 & தாமாக உருவான செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர்.
• அவர்கள், ‘True Beacon’ என்ற சொத்து மேலாண்மை நிறுவனத்தையும் நிர்வகித்து வருகின்றனர். அவ்விருவரின் மொத்த நிகர சொத்து மதிப்பு `24,000 கோடியாகும். இப்பட்டியலில், `1000 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்புடன்கூடிய 40 வயதுக்குட்பட்ட இந்திய தொழிலதிபர்கள் இடம்பெற்றுள்ளனர்.Incorrect
• பங்குச்சந்தை தரகு நிறுவனமான, ‘செரோதா’வின் நிறுவனர்களான நிதின் காமத் மற்றும் நிகில் காமத் ஆகியோர், நடப்பாண்டு (2020) IIFL வெல்த் ஹுருன் இந்தியா 40 & தாமாக உருவான செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர்.
• அவர்கள், ‘True Beacon’ என்ற சொத்து மேலாண்மை நிறுவனத்தையும் நிர்வகித்து வருகின்றனர். அவ்விருவரின் மொத்த நிகர சொத்து மதிப்பு `24,000 கோடியாகும். இப்பட்டியலில், `1000 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்புடன்கூடிய 40 வயதுக்குட்பட்ட இந்திய தொழிலதிபர்கள் இடம்பெற்றுள்ளனர். -
Question 24 of 50
24. Question
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கால்சியம் நைட்ரேட் மற்றும் போரோனேட்டட் கால்சியம் நைட்ரேட் வகைகளை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது?
Correct
• குஜராத் மாநில உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனமானது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கால்சியம் நைட்ரேட் & போரோனேட்டட் கால்சியம் நைட்ரேட் வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதுவரை இறக்குமதி செய்யப்பட்டு வரும் இவ்விரு வேதிகளும், இந்தியாவில் முதன்முறையாக தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கால்சியம் நைட்ரேட் என்பது மிகவும் கரையக்கூடிய கூறாகும்; இது பரவலாக பாசனவழி உரமிடலில் பயன்படுத்தப்படுகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு & சிமெண்டின் வலிமையை அதிகரிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. போரோனேட்டட் கால்சியம் நைட்ரேட் ஆனது நீரில் கரையக்கூடிய ஓர் உரமாகும், இதில் உயர்தர அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

Question 25 of 50
25. Question
தனது பதிமூன்றாவது பிரெஞ்சு ஓப்பன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்ற டென்னிஸ் வீரர் யார்?
Correct
• பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயினின் ரபேல் நடால் சாம்பியனானார். பிரெஞ்சு ஓப்பனில் இது அவரது 13ஆவது பட்டமாகும். ஒட்டுமொத்த கிராண்ட்ஸ்லாமில் இது அவரது இருபதாவது பட்டம். இதன்மூலம், இருபது கிராண்ட்ஸ்லாம் பட்டம்வென்ற சுவிச்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாதனையை ரபேல் நடால் சமன்செய்துள்ளார். 2005ஆம் ஆண்டு அறிமுகமானதில் இருந்து, மொத்தம் ஆடிய 102 ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே தோல்வியடைந்த ரபேல், 100 பிரெஞ்சு ஓப்பன் போட்டிகளில் வென்றுள்ளார். இளம் போலந்து வீராங்கனையான இகா ஸ்வெய்டெக், பிரெஞ்சு ஓப்பனில் வென்ற மிகக்குறைந்த தரவரிசையுடைய பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

Question 26 of 50
26. Question
Animal Discoveries 2019 and Plant Discoveries 2019’ என்ற அண்மைய அறிக்கையின்படி, கடந்த 2019ஆம் ஆண்டில் எத்தனை புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?
Correct
• இந்திய விலங்கியல் ஆய்வுமையம் மற்றும் இந்திய தாவரவியல் ஆய்வுமையம் ஆகியவை, ‘Animal Discoveries 2019 and Plant Discoveries 2019’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டன. இந்த அறிக்கையின்படி, 2019ஆம் ஆண்டில் 364 விலங்கினங்கள் மற்றும் 180 தாவர இனங்கள் உட்பட 544 புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Cnemaspisanandani (பாறையில் வசிக்கும் மரப்பல்லி) மற்றும் Ginger Amomum nagamiense (நாகாலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு காட்டு இஞ்சி வகை) ஆகியவை இந்தக் கண்டுபிடிப்புகளுள் இடம்பெற்ற சில முக்கியமான இனங்களாகும்.

Question 27 of 50
27. Question
யாரை கெளரவிக்கும் விதமாக, பிரதமர், `100 மதிப்புள்ள நினைவு நாணயத்தை வெளியிட்டார்?
Correct
• விஜய ராஜே சிந்தியாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக இந்தியப் பிரதமர் மோடி `100 மதிப்புள்ள நினைவு நாணயத்தை வெளியிட்டார். குவாலியரின் ‘ராஜமாதா’ என அழைக்கப்பட்ட அவர், 1919ஆம் ஆண்டில் பிறந்தார். விஜய ராஜே சிந்தியா தனது அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சியிலிருந்து தொடங்கினார்; பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் தாய் கட்சியான ஜன சங்கத்தில் உறுப்பினராவதற்கு முன்பு சுதந்திராக் கட்சியில் சேர்ந்தார்.

Question 28 of 50
28. Question
அனைத்து FCRA கணக்குகளையும் தொடங்குவதற்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள வங்கி எது?
Correct
• வெளிநாட்டு நன்கொடைகளைக்கோரும் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் 2021 மார்ச்.31ஆம் தேதிக்குள் பாரத வங்கியின் புதுதில்லி கிளையில் FCRA கணக்கைத் தொடங்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. FCRA’இன்கீழ் பதிவுசெய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 2021 ஏப்ரல்.1 முதல் வேறு எந்த வங்கிக் கணக்கிலும் வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறவியலாது. வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்றுதல்) சட்டம், 2020, கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தால் திருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Question 29 of 50
29. Question
நடப்பாண்டில் (2020) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) சட்டம் மற்றும் நீதி அமைச்சர்களின் ஏழாவது கூட்டத்தை நடத்திய நாடு எது?
Correct
• ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நீதித்துறை அமைச்சர்களின் ஏழாவது மாநாட்டை, மத்திய சட்ட அமைச்சர் இரவிசங்கர் பிரசாத் தலைமைதாங்கி நடத்தினார். இதில் கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், இரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளின் நீதித்துறை அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். நிபுணர்கள் பணிக்குழுவின் இரண்டாவது கூட்டத்தை சட்ட விவகாரங்கள் துறையின் செயலாளர் நடத்தினார்.

Question 30 of 50
30. Question
2020 காலநிலை சேவைகளின் நிலை’ குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?
Correct
• நடப்பாண்டு (2020) காலநிலை சேவைகள் அறிக்கையை உலக வானிலை அமைப்பு, 16 பன்னாட்டு முகவர் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் வானிலை காரணமாக அதிக பேரிடர்கள் நடைபெறுவதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், பன்னாட்டளவில் மனிதநேய அடிப்படையிலான உதவிகள் தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கை, 2030ஆம் ஆண்டுக்குள் 50% உயரக்கூடும் என்றும் அது எச்சரித்துள்ளது.

Question 31 of 50
31. Question
ஊழல் ஏற்றுமதி 2020’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?
Correct
• பெர்லினில் உள்ள ஊழல் தடுப்பு கண்காணிப்புக் குழுவான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் தனது அண்மைய ஆய்வை, “ஏற்றுமதி ஊழல் 2020: OECD கையூட்டு ஒழிப்பு தீர்மானத்தின் அமலாக்கத்தை மதிப்பிடுதல்” என்ற தலைப்பில் வெளியிட்டது. ஆய்வின்படி, சீனா, ஜப்பான், நெதர்லாந்து, தென்கொரியா, ஹாங்காங், கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகியவற்றுடன் மிக மோசமான பதிவுகளைக்கொண்ட மிகப் பெரிய உலகளாவிய ஏற்றுமதியாளர்களுள் ஒன்றாக இந்தியா உள்ளது.
• இந்திய ஏற்றுமதியாளர்கள் அயல்நாட்டு அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுப்பதைத் தடுப்பதற்கான எந்த ஒரு வழிமுறையும் இந்தியாவில் இல்லை என்பதையும் அவ்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.Incorrect
• பெர்லினில் உள்ள ஊழல் தடுப்பு கண்காணிப்புக் குழுவான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் தனது அண்மைய ஆய்வை, “ஏற்றுமதி ஊழல் 2020: OECD கையூட்டு ஒழிப்பு தீர்மானத்தின் அமலாக்கத்தை மதிப்பிடுதல்” என்ற தலைப்பில் வெளியிட்டது. ஆய்வின்படி, சீனா, ஜப்பான், நெதர்லாந்து, தென்கொரியா, ஹாங்காங், கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகியவற்றுடன் மிக மோசமான பதிவுகளைக்கொண்ட மிகப் பெரிய உலகளாவிய ஏற்றுமதியாளர்களுள் ஒன்றாக இந்தியா உள்ளது.
• இந்திய ஏற்றுமதியாளர்கள் அயல்நாட்டு அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுப்பதைத் தடுப்பதற்கான எந்த ஒரு வழிமுறையும் இந்தியாவில் இல்லை என்பதையும் அவ்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. -
Question 32 of 50
32. Question
பன்னாட்டுச் செலவாணி நிதியம் (IMF) வெளியிட்டுள்ள, “உலக பொருளாதார கண்ணோட்டம்–2020” அறிக்கையின் தலைப்பு என்ன?
Correct
• பன்னாட்டுச் செலவாணி நிதியம், “A Long and Difficult Ascent” என்ற தலைப்பில் “உலக பொருளாதார கண்ணோட்டம்-2020” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, 2020-21ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 10.30 சதவிகித அளவுக்கு குறுகிவிடும். நடப்பாண்டு (2020) உலகளாவிய வளர்ச்சி – 4.4 சதவிகித அளவுக்கு (குறுக்கம்) இருக்கும் என அறிக்கை மதிப்பிட்டுள்ளது.

Question 33 of 50
33. Question
உலைச்சாம்பலை வழங்குவதற்காக நாடு முழுவதுமுள்ள சிமெண்ட் உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள இந்திய எரிசக்தி உற்பத்தி நிறுவனம் எது?
Correct
• நாட்டின் மிகப்பெரிய எரிசக்தி உற்பத்தி நிறுவனமும், மத்திய எரிசக்தி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமுமான NTPC லிமிடெட், நாடு முழுவதுமுள்ள சிமெண்ட் உற்பத்தியாளர்களுடன் இணைந்து, சாம்பலை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச்செல்லும் பணியை தொடங்கியுள்ளது.
• மின்னுற்பத்தி ஆலைகளிலிருந்து உலைச்சாம்பலை 100 சதவிகிதம் பயன்படுத்துவதற்கான NTPC’இன் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் பரந்து விரிந்த வலைப்பின்னலை பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும், குறைந்த செலவிலும் சாம்பலை நாடு முழுவதும் NTPC எடுத்துச்செல்கிறது. சிமென்ட் உற்பத்தியாளர்களுக்கு பதப்படுத்தப்பட்ட உலைச் சாம்பலை அனுப்பிய முதல் மின்னுற்பத்தி நிலையமாக உபி’இல் உள்ள NTPC ரிஹந்த் திகழ்கிறது.Incorrect
• நாட்டின் மிகப்பெரிய எரிசக்தி உற்பத்தி நிறுவனமும், மத்திய எரிசக்தி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமுமான NTPC லிமிடெட், நாடு முழுவதுமுள்ள சிமெண்ட் உற்பத்தியாளர்களுடன் இணைந்து, சாம்பலை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச்செல்லும் பணியை தொடங்கியுள்ளது.
• மின்னுற்பத்தி ஆலைகளிலிருந்து உலைச்சாம்பலை 100 சதவிகிதம் பயன்படுத்துவதற்கான NTPC’இன் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் பரந்து விரிந்த வலைப்பின்னலை பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும், குறைந்த செலவிலும் சாம்பலை நாடு முழுவதும் NTPC எடுத்துச்செல்கிறது. சிமென்ட் உற்பத்தியாளர்களுக்கு பதப்படுத்தப்பட்ட உலைச் சாம்பலை அனுப்பிய முதல் மின்னுற்பத்தி நிலையமாக உபி’இல் உள்ள NTPC ரிஹந்த் திகழ்கிறது. -
Question 34 of 50
34. Question
AYUSH அமைச்சகத்தின் மண்டல மூல மருந்துக் களஞ்சியம் நிறுவப்பட்டுள்ள இடம் எது?
Correct
• AYUSH திட்டத்தின்கீழ் சென்னையில் மண்டல மூலமருந்துக்களஞ்சியத்தை (Regional Raw Drug Repository – RRDR) மத்திய AYUSH அமைச்சகம் தொடங்கியுள்ளது. தேசிய AYUSH இயக்கத்தின்கீழ் மூலிகைத் தாவரங்களைப் பயிரிடுவதில் மண்டல மூலமருந்துக்களஞ்சியம் முக்கியப்பங்கு வகிக்கிறது. சென்னை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது. தென் மண்டலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மூலமருந்துகளைப் பாதுகாக்கவும், ஆவணப்படுத்தவும் இது ஏதுவாக இருக்கும்.

Question 35 of 50
35. Question
ஈராண்டுகாலத்திற்கு பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடு எது?
Correct
• பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில், முப்பத்து நான்கு உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்தக்கூட்டத்தில், தலைவர் மற்றும் துணைத்தலைவராக இந்தியா மற்றும் பிரான்ஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டன.
• ஈராண்டு காலத்துக்கு இந்தப் பதவியில் இந்தியாவும், பிரான்சும் இருக்கும். ஆசிய-பசிபிக் பகுதிக்கு, பிஜி மற்றும் நெளரு, ஆப்பிரிக்காவுக்கு மொரீசியஸ் மற்றும் நைஜர், ஐரோப்பா மற்றும் இதர பகுதிகளுக்கு இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து, இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிக்கு கியூபா மற்றும் கயானா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் துணைத் தலைவர்களாக தேர்வுசெய்யப்பட்டனர்.Incorrect
• பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில், முப்பத்து நான்கு உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்தக்கூட்டத்தில், தலைவர் மற்றும் துணைத்தலைவராக இந்தியா மற்றும் பிரான்ஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டன.
• ஈராண்டு காலத்துக்கு இந்தப் பதவியில் இந்தியாவும், பிரான்சும் இருக்கும். ஆசிய-பசிபிக் பகுதிக்கு, பிஜி மற்றும் நெளரு, ஆப்பிரிக்காவுக்கு மொரீசியஸ் மற்றும் நைஜர், ஐரோப்பா மற்றும் இதர பகுதிகளுக்கு இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து, இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிக்கு கியூபா மற்றும் கயானா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் துணைத் தலைவர்களாக தேர்வுசெய்யப்பட்டனர். -
Question 36 of 50
36. Question
‘அங்கிகார்’ திட்டம் குறித்த தேசிய அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய அமைச்சகம் எது?
Correct
• கடந்த 2019ஆம் ஆண்டில், ‘அங்கிகார்’ திட்டம் தொடங்கப்பட்டது; இதன்கீழ், பிரதமர் ஆவாஸ் திட்டத்தின் பயனாளிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு பிற நலத்திட்டங்களுக்கு அணுகல் வழங்கப்படுகிறது. மத்திய வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஓர் இணையவழி கருத்தரங்கில் பங்கேற்றார்; அப்போது, கட்டுப்படியாகக்கூடிய வாடகை வீட்டுவசதி வளாகங்களுக்கான வலைத்தளத் -தை அவர் தொடங்கிவைத்தார். இந்தக் கருத்தரங்கத்தின்போது, அவர், ‘ANGIKAAR’ திட்டம் குறித்த தேசிய அறிக்கையையும் வெளியிட்டார்.

Question 37 of 50
37. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற நகர்னர் எஃகு ஆலை அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
• தேசிய கனிம மேம்பாட்டு நிறுவனத்திடமிருந்து (NMDC), நகர்னர் எஃகு ஆலையை (NSP) பிரிக்கவும், அதிலுள்ள நடுவணரசின் பங்குகளை முழுமையாக விற்கவும், பிரதமர் திரு. மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்கட்கான அமைச்சரவைக்குழு கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியது.
• NSP பங்குகளை, NMDC’இன் கிளை நிறுவனமாக விற்பனை செய்ய கடந்த 2016ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த முடிவில் திருத்தஞ்செய்து, NSP நிறுவனத்தை தனி நிறுவனமாக பிரித்து அதன் பங்குகளை விற்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் செயல்முறை 2021 செப்டம்பருக்குள் நிறைவடையும் என எண்ணப்படுகிறது.Incorrect
• தேசிய கனிம மேம்பாட்டு நிறுவனத்திடமிருந்து (NMDC), நகர்னர் எஃகு ஆலையை (NSP) பிரிக்கவும், அதிலுள்ள நடுவணரசின் பங்குகளை முழுமையாக விற்கவும், பிரதமர் திரு. மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்கட்கான அமைச்சரவைக்குழு கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியது.
• NSP பங்குகளை, NMDC’இன் கிளை நிறுவனமாக விற்பனை செய்ய கடந்த 2016ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த முடிவில் திருத்தஞ்செய்து, NSP நிறுவனத்தை தனி நிறுவனமாக பிரித்து அதன் பங்குகளை விற்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் செயல்முறை 2021 செப்டம்பருக்குள் நிறைவடையும் என எண்ணப்படுகிறது. -
Question 38 of 50
38. Question
ஆப்பிரிக்காவின் மிகவுயர்ந்த சிகரமான கிளிமஞ்சாரோ அமைந்துள்ள நாடு எது?
Correct
• கிளிமஞ்சாரோ சிகரம் தான்சானியாவில் அமைந்துள்ள ஒரு செயற்பாடற்ற எரிமலையாகும. இது, ஆப்பிரிக்காவின் மிகவுயர்ந்த சிகரமும் உலகின் மிகவுயர்ந்த தனித்த மலையுமாகும். அண்மையில், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றாலும், செய்திகளின்படி, ‘கிபுனிகா மலை’ என்று அழைக்கப்படும் பகுதி இன்னும் எரிந்துகொண்டுதான் உள்ளது. இந்தத் தீயில், 28 சகிமீ பரப்பளவில் இருந்த தாவரங்கள் தீக்கு இரையானதாக கூறப்படுகிறது.

Question 39 of 50
39. Question
கீழ்க்காணும் எந்த நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான முதலாவது மருந்தாக, ‘Inmazeb’ என்ற மருந்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது?
Correct
• ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒழுங்குமுறை அமைப்பான உணவு மற்றும் மருந்து நிர்வாகம், எபோலா சிகிச்சைக்கான முதலாவது மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ‘Inmazeb’ என்ற பெயரிலான இம்மருந்து ரீஜெனரான் மருந்துகள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. பிற சிகிச்சை முறைகளை ஒப்பிடும் போது, நோயாளிகளின் உயிர்வாழ்வு விகிதம் இந்த மருந்தில் அதிகமாக உள்ளது. காங்கோவில் ஈராயிரத்துக்கும் மேற்பட்டோரின் மரணத்திற்கு காரணமாக இருந்த எபோலா நோய்த்தொற்றின்போது இந்த மருந்து பரிசோதிக்கப்பட்டது.

Question 40 of 50
40. Question
பன்னாட்டுச் செலவாணி நிதியம் வெளியிட்டுள்ள, ‘உலக பொருளாதார கண்ணோட்டம்-2020’இன் படி, 2020ஆம் ஆண்டில் இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்னவாக இருக்கும்?
Correct
• பன்னாட்டுச் செலவாணி நிதியத்தால் (IMF) அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ‘உலக பொருளாதார கண்ணோட்டம்–2020’இன்படி, இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2020ஆம் ஆண்டில் $1877 டாலராக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேசத்தின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2020ஆம் ஆண்டில் $1888 டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Question 41 of 50
41. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “கடன்களுக்கான கூட்டு வட்டி தள்ளுபடி” என்பது கீழ்க்காணும் எத்தனை வகை கடன்களுக்கு பொருந்தும்?
Correct
• வங்கிகளில் கடன் பெற்றவர்கள் COVID-19 பேரிடர் காலத்தில் திரும்பச் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து, அவர்களுக்கு நடப்பாண்டு மார்ச்-ஆகஸ்ட் வரையிலான ஆறு மாத காலத்துக்கு மாதாந்திர தவணை ஒத்திவைப்பு சலுகை அறிவிக்கப்பட்டது. இச்சலுகையை பயன்படுத்தியோருக்கு கூட்டு வட்டி (வட்டிக்கு வட்டி) விதிக்க முன்பு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது, `2 கோடி வரை கடன்பெற்றவர்களுக்கு இந்த வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

Question 42 of 50
42. Question
COVID-19 தொற்றை சமாளிப்பதற்கு ஏழ்மையான நாடுகளுக்கு உதவுவதற்காக, $25 பில்லியன் டாலர் மதிப்பிலான அவசரகால நிதியுதவிக்கு அழைப்பு விடுத்துள்ள நிறுவனம் எது?
Correct
• உலகின் ஏழ்மையான நாடுகளுக்கு உதவ, COVID-19 தொற்றுநோயின் சவால்களை கையாள, $25 பில்லியன் அமெரிக்க டாலர் அவசர நிதியுதவிக்கு உலக வங்கி அழைப்பு விடுத்துள்ளது. அண்மையில், உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ், நிதியமைச்சர்கள் மற்றும் G20 முதன்மை பொருளாதார -ங்களின் மத்திய வங்கி ஆளுநர்களிடம், பன்னாட்டு வளர்ச்சி சங்கத்தின் பிரதிநிதிகளிடம் இந்த உதவி நிதித்தொகுப்பை வழங்கப்போவதாக தெரிவித்தார்.

Question 43 of 50
43. Question
“Grow, nourish, sustain. Together. Our actions are our future” என்பது அக்.16 அன்று கொண்டாடப்படும் எந்தச் சிறப்பு நாளின் கருப்பொருளாகும்?
Correct
• நல்ல உணவு மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக உணவு நாள், ஆண்டுதோறும் அக்டோபர்.16 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. “Grow, nourish, sustain. Together. Our actions are our future” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். உலகம் முழுவதும் இந்த நாளில் நடத்தப்படும் கொண்டாட்டங்கள் மற்றும் செயற்பாடுகளுக்கு உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) தலைமை வகிக்கிறது.

Question 44 of 50
44. Question
அதிநவீன பன்னாட்டு வைராலஜி நிறுவனம் திறக்கப்பட்டுள்ள மாநிலம் எது?
Correct
• அதிநவீன பன்னாட்டு வைராலஜி நிறுவனத்தை கேரள மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் சமீபத்தில் திறந்துவைத்தார். அது, திருவனந்தபுரத்தில் உள்ள தொனக்கல்லில் உள்ள வாழ்வறிவியல் பூங்காவில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற வைராலஜிஸ்ட், Dr அகில் பானர்ஜி, தற்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின்கீழ் உள்ள இவ்வாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

Question 45 of 50
45. Question
எந்த நாட்டுடனான அமைதி ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது?
Correct
• இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் (UAE) இடையில் கையெழுத்திடப்பட்ட சுமூகமாக்குதல் ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேலும் ஐக்கிய அரபு அமீரகமும் செப்.15 அன்று வாசிங்டனில் தங்கள் உறவுகளை சுமூகமாக்குதலுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மேலும் பக்ரைனுடனான ஓர் அமைதி ஒப்பந்தத்திலும் இஸ்ரேல் கையெழுத்திட்டது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பக்ரைன் ஆகியவை இஸ்ரேலுடனான உத்தியோகபூர்வ உறவுகளுக்கு உடன்பட்ட முதல் வளைகுடா நாடுகளாகும்.

Question 46 of 50
46. Question
“தாலசீமியா பால் சேவா யோஜனா” என்பது ஹீமடோபாய்டிக் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சையின் ஒரு பகுதியாகும். இதற்கு நிதியுதவி அளித்துவரும் பொதுத்துறை நிறுவனம் எது?
Correct
• தலசீமியாவால் பாதிக்கப்பட்ட பின்தங்கிய நோயாளிகள் பயன்பெறும் வகையில், 2ஆம்கட்ட, “தலசீமியா பால் சேவா யோஜனா” திட்டத்தை மத்திய நலவாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் Dr. ஹர்ஷ வர்தன் தொடங்கிவைத்தார். இந்திய நிலக்கரி நிறுவனத்தின் சமூகப்பணியாக கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின்மூலம் தலசீமியா மற்றும் அரிவாள் செல் நோயாளிகளுக்கு குருதியில் உள்ள ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன.

Question 47 of 50
47. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘e-VIN’ என்பதன் விரிவாக்கம் என்ன?
Correct
• சுமார் 200-250 மில்லியன் மக்களை உள்ளடக்கிய சுமார் 400-500 மில்லியன் தடுப்பூசிகளை வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் அரசாங்கம் செயலாற்றி வருவதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அண்மையில் அறிவித்தார். மின்னணு தடுப்பூசி நுண்ணறிவு நெட்வொர்க் (e-VIN) ஆனது நோய்த்தடுப்பு திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும், தடுப்பூசி இயக்கத்தின் நிகழ்நேர கண்காணிப்புக்கும்; கொள்முதல் முதல் சேமிப்புக்கும், விநியோகத்திற்கும் அது பயன்படுத்தப்படுகிறது.

Question 48 of 50
48. Question
“இந்தியா – பன்னாட்டு உணவு மற்றும் வேளாண் வாரம்” என்பதை தொடங்கிய அமைச்சகம் எது?
Correct
• அக்டோபர்.16-22 வரை ஒருங்கிணைக்கப்படும் “இந்தியா-பன்னாட்டு உணவு மற்றும் வேளாண் வாரத்தை” இணையவாயிலாக மத்திய வேளாண் மற்றும் உழவர்கள் நலன், உணவு பதப்படுத்தும் தொழிற்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார். தொடக்க நிகழ்வில் உரையாற்றிய நரேந்திர சிங் தோமர், இந்திய உணவு சந்தையில் இந்தியாவின் உணவுப் பதப்படுத்தும் துறையின் பங்கு 32% இருப்பதாக கூறினார். இந்த நிகழ்வை முன்னிட்டு, ‘அன்ன தேவோ பவா’ என்று தலைப்பிடப்பட்ட இயக்கத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.

Question 49 of 50
49. Question
தோல் துறை திறன் கழகம் (LSSC) அறிமுகப்படுத்தியுள்ள திறன்பேசி செயலியின் பெயர் என்ன?
Correct
• “Scale India” என்ற ஆண்ட்ராய்டு அடிப்படையிலான திறன்பேசி செயலியை, இலாப நோக்கற்ற அமைப்பான Leather Sector Skill Council தொடங்கியுள்ளது. திறன் மற்றும் வேலைவாய்ப்பு சூழலியலில் உள்ளோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை இந்தச் செயலி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தச் செயலியை, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே, ஒரு மெய்நிகர் நிகழ்வில் அறிமுகப்படுத்தினார்.

Question 50 of 50
50. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பெபிகொலம்போ என்பது எந்தக் கோள் / வான் பொருளை ஆராய ஏவப்பட்ட விண்கலமாகும்?
Correct
• ‘BepiColombo’ என்பது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) ஆகியவற்றின் கூட்டுத்திட்டமாகும்; இது, புதன் கோளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சமீபத்தில் இவ்விண்கலம், முதன்முறையாக வெள்ளிக் கோளைக் கடந்து, வெள்ளிக்கு 17,000 கிலோமீட்டர் தொலைவிலிருந்து வெள்ளியை படம் பிடித்தது. புதனுக்கு ஏழாண்டு பயணத்தை மேற்கொள்வதற்காக இந்த விண்கலம் கடந்த 2018ஆம் ஆண்டில் ஏவப்பட்டது.

Leaderboard: October 3rd Week 2020 Current Affairs Online Test Tamil