November 2nd Week 2020 Current Affairs Online Test Tamil

Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
AAZZAAZZ
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
உள்நாட்டிலேயே கட்டப்பட்டு அண்மையில் இந்திய கடலோரக் காவல்படையில் புதிதாக சேர்க்கப்பட்ட கப்பலின் பெயர் என்ன?
Correct
• உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட, ‘ICG C-452’ என்ற புதிய கப்பல் இந்திய கடலோரக் காவல்படையில் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலை இந்திய கடலோரக் காவல்படையின் கூடுதல் தலைமை இயக்குநர் இணைத்து வைத்தார். பிரதமர் மோடியின் “இந்தியாவில் தயாரிப்போம்” மற்றும் “தற்சார்பு இந்தியா” பற்றிய பார்வைக்கு ஏற்ப சூரத்தின் லார்சன் & டூப்ரோ நிறுவனம் இந்தக் கப்பலை வடிவமைத்து கட்டியுள்ளது.
Incorrect

Question 2 of 50
2. Question
2.வானியல் துறையில் எந்த நாட்டுனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது?
Correct
• இந்தியா மற்றும் ஸ்பெயினுக்கிடையே வானியற்பியல் துறையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கூட்டுறவுகளை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்பந்தம், பெங்களூருவில் உள்ள இந்திய வானியற்பியல் நிறுவனம் மற்றும் ஸ்பெயினில் உள்ள வானியற்பியல் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தாகும்.

Question 3 of 50
3. Question
எந்த நாட்டின் தேர்தல் ஆணையம், “பன்னாட்டு தேர்தல் பார்வையாளர்கள் திட்டம்” என்றவொன்றை ஏற்பாடு செய்துள்ளது?
Correct
• பீகார் சட்டப்பேரவை பொதுத்தேர்தலை பார்வையிடுவதற்கான ‘பன்னாட்டு தேர்தல் பார்வையாளர்கள் திட்டம் 2020’ஐ இணையம் வாயிலாக நவம்பர்.5-7 வரை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியது.
• அயல்நாட்டுத் தேர்தல் மேலாண்மை அமைப்புகள் மற்றும் அமைப்புகளுக்காக இந்தத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரநிதிதிகள் பன்னாட்டு ஐடிஇஏ, தேர்தல் முறைமைகளுக்கான பன்னாட்டு அறக்கட்டளை மற்றும் உலக தேர்தல் நிறுவனங்களின் சங்கம் ஆகியவையும் இணையவழியில் நடந்த இந்தப் ‘பன்னாட்டு தேர்தல் பார்வை -யாளர்கள் திட்டம் – 2020’க்கு அழைக்கப்பட்டனர்.Incorrect
• பீகார் சட்டப்பேரவை பொதுத்தேர்தலை பார்வையிடுவதற்கான ‘பன்னாட்டு தேர்தல் பார்வையாளர்கள் திட்டம் 2020’ஐ இணையம் வாயிலாக நவம்பர்.5-7 வரை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியது.
• அயல்நாட்டுத் தேர்தல் மேலாண்மை அமைப்புகள் மற்றும் அமைப்புகளுக்காக இந்தத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரநிதிதிகள் பன்னாட்டு ஐடிஇஏ, தேர்தல் முறைமைகளுக்கான பன்னாட்டு அறக்கட்டளை மற்றும் உலக தேர்தல் நிறுவனங்களின் சங்கம் ஆகியவையும் இணையவழியில் நடந்த இந்தப் ‘பன்னாட்டு தேர்தல் பார்வை -யாளர்கள் திட்டம் – 2020’க்கு அழைக்கப்பட்டனர். -
Question 4 of 50
4. Question
இடம்பெயர்ந்த பறவைகளை, குறிப்பாக அமுர் வல்லூறுகளை வேட்டையாடுதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ள மாநில அரசு எது?
Correct
• திரிபுரா மாநிலத்தில் குளிர்காலம் தொடங்கவுள்ள வேளையில் புலம்பெயர்ந்த பறவைகளை, குறிப்பாக அமுர் வல்லூறுகளை வேட்டையாடுவதற்கு எதிராக அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமுர் வல்லூறுகள் உள்ளிட்ட புலம்பெயர்ந்த பறவைகள், கடந்த 1972’இல் இயற்றப்பட்ட வனவுயிரி பாதுகாப்பு சட்டத்தின்கீழ் உள்ளன என்பதை அறிவிக்க வனத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புலம்பெய -ர்ந்த பறவைகளை பாதுகாக்க, நாகாலாந்து ஏற்கனவே இதுபோன்ற ஆணையை பிறப்பித்துள்ளது.

Question 5 of 50
5. Question
2020 நவம்பரில், மெய்நிகராக தொழில்நுட்ப உச்சிமாநாட்டை நடத்தவுள்ள இந்திய நகரம் எது?
Correct
• பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாட்டின் 23ஆவது பதிப்பு மெய்நிகராக்க இந்த ஆண்டு நவ.19 முதல் 21 வரை நடைபெறவுள்ளது. இந்த உச்சிமாநாட்டை கர்நாடக மாநில அரசின் மின்னணு, தகவல் தொழினுட்பம், உயிரி-தொழினுட்பம் மற்றும் அறிவியல் & தொழினுட்பத்துறை ஏற்பாடு செய்யவுள்ளது. இவ்வுச்சிமாநாட்டில் பல தொழினுட்ப தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Question 6 of 50
6. Question
அண்மையில் உணவு விலைக் குறியீட்டை வெளியிட்ட அமைப்பு எது?
Correct
• அண்மையில் உணவு விலைக் குறியீட்டை உணவு மற்றும் உழவு அமைப்பு (FAO) வெளியிட்டுள்ளது. இந்தக் குறியீட்டு எண்ணானது அக்டோபர் மாதத்தில் 100.9 புள்ளிகளை எட்டியதாக ஐநா உணவு நிறுவனம் அண்மையில் அறிவித்தது. அது இந்த ஆண்டில் எட்டப்பட்ட அதிகபட்ச புள்ளியாகும்.

Question 7 of 50
7. Question
ஆந்திர பிரதேச மாநிலத்தில், ‘Go Electric’ பரப்புரையத் தொடங்கியுள்ள அமைப்பு எது?
Correct
• எரிசக்தி திறன் அமைவனமானது (BEE) ஆந்திர பிரதேச மாநிலத்தில், ‘Go Electric’ என்ற பரப்புரையை முன்னெடுத்துள்ளது. மின்னேற்று நிலையங்களை அமைப்பதற்கான மாநிலத்தின் மைய முகமையாக ஆந்திர பிரதேச மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டுக்கழகத்தை அம்மாநில அரசு நியமித்துள்ளது. மாநிலத்தில் 400 மின்னேற்று நிலையங்களை நிறுவவும் அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

Question 8 of 50
8. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘சார்-சபோரிஸ்’ என்பதுடன் தொடர்புடைய மாநிலம் எது?
Correct
• சார்-சபோரிஸ் என்பவை பிரம்மபுத்திரா ஆற்றில் அமைந்துள்ள மாறிவரும் தீவு நிலப்பரப்பாகும். அங்கு, ‘மியாஸ்’ என்று குறிப்பிடப்படும் பெங்காலி வம்சாவளியைச்சார்ந்த இசுலாமியர்கள் முதன்மையாக வசித்து வருக்கின்றனர். சார்-சப்போரிஸில் வாழும் இசுலாமிய மக்களின் பண்பாடு & பாரம்பரியத்தை பிரதிபலிக்கும், ‘மியா’ அருங்காட்சியகத்தை விரைவாக நிறுவுமாறு அஸ்ஸாம் மாநிலத்தின் பல்வேறு மக்கள் அம்மாநில அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

Question 9 of 50
9. Question
மின்வெளிக்குற்றம் தொடர்பான தகவல்தொடர்புகளை எளிதாக்குவதற்காக இரு புதிய சேவைகளை உருவாக்கியுள்ள பன்னாட்டு அமைப்பு எது?
Correct
• சட்ட அமலாக்க நிறுவனங்களிடையே மின்வெளிக்குற்றம் தொடர்பான தகவல்தொடர்புகளை எளிதாக்க பன்னாட்டுக் காவலகம் இரண்டு பாதுகாப்பான மற்றும் நெகிழ்வான சேவைகளை உருவாக்கியுள்ளது.

Question 10 of 50
10. Question
“சுற்றுப்புறங்களை பேணுதல்” என்ற சவாலை அறிமுகப்படுத்தியுள்ள அமைச்சகம் எது?
Correct
• மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) ஹர்தீப் சிங் புரி மூன்று புதிய திட்டங்களை புது தில்லியில் தொடக்கி வைத்தார். இளம் குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஏற்றவாறு மாநகரங்களை உருவாக்குவதில் கவனஞ்செலுத்தும் “சுற்றுப்புறங்களைப் பேணுதல்” என்ற சவால்; மாநகரங்களின் தரவு சூழலியலை மதிப்பிடுவதற்கான கட்டமைப்பு; மற்றும் 100 பொலிவுறு நகரங்களின் மாநகர தரவு அலுவலர்களுக்கான இணையம் சார்ந்த பயிற்சித்திட்டம் ஆகியவை ஆகும்.

Question 11 of 50
11. Question
மாநிலத்தில் உள்ள ஏதிலிகளுக்கு 25,000 நில பட்டாக்களை வழங்கியுள்ள மாநிலம் எது?
Correct
• ஏதிலிகள் மற்றும் பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியின (ST) மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கு வங்க மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று ஏதிலிகள் வசித்துவரும் குடியிருப்புகளுக்கு நில பட்டாக்களை வழங்குவதாகும். ஏதிலிகளுக்கு மொத்தம் 1,25,000 நில பட்டாக்களை வழங்க அம்மாநில அரசு முடிவுசெய்துள்ளது. அதில் 25,000 பட்டாக்கள் அண்மையில் முதலமைச்சரால் வழங்கப்பட்டன.

Question 12 of 50
12. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “பினாகா Mk-1” என்றால் என்ன?
Correct
• பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது (DRDO), ஒடிசா சந்திப்பூரிலிருந்து, நவ.4ஆம் தேதி நடத்திய மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது. முந்தைய பினாகா ஏவுகணையைவிட அதிக தூரம் சென்று இலக்கை எட்டும் வகையில் இந்த மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது.

Question 13 of 50
13. Question
UPI சந்தையில் நுழைவதற்காக இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ள சமூக ஊடக தளம் எது?
Correct
• ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகத்தில் (UPI) படிப்படியாக நுழைவதற்காக தேசிய கொடுப்பனவு கழகத்தின் ஒப்புதலை வாட்ஸ்அப் பெற்றுள்ளது. பேஸ்புக்கிற்கு சொந்தமான இந்நிறுவனம், இந்தியாவில் 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. தொடக்கத்தில் 2 கோடி வாட்ஸ்அப் பயனர்களுக்கு UPI வழியாக பணஞ்செலுத்தும் சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Question 14 of 50
14. Question
120 ஆண்டுகளில் முதன்முறையாக 500 மீ., உயரமுள்ள பவளப்பாறையைக் கண்டறிந்துள்ள நாடு எது?
Correct
• ஷ்மித் பெருங்கடல் நிறுவனத்தின் அறிக்கையின்படி, அதன் ஆராய்ச்சி கப்பலான ‘பால்கோர் – Falkor’ ஆஸ்திரேலியாவில் உள்ள பெருந்தடுப்புப் பவளத்திட்டில், பெரிய பவளப்பாறை ஒன்றை கண்டுபிடித்து -ள்ளது. இந்த ஆய்வுக் கப்பல் ஆஸ்திரேலியாவைச் சுற்றியுள்ள கடலில், பன்னிரண்டு மாத காலமாக ஆய்வுப்பணியை மேற்கொண்டு வருகிறது. 500 மீ., உயரமுள்ள அப்பவளப்பாறை 120 ஆண்டுகளில் முதல்முறையாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற புதிய பாறைகளை ஆராய்வதற்காக அந்நிறுவனத்தின் நீருக்கடியில் செயல்படும் ‘SuBastian’ என்ற எந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

Question 15 of 50
15. Question
நார்டிக் – பால்டிக் ஒத்துழைப்பு கட்டமைப்போடு தொடர்புடைய நாடுகளின் எண்ணிக்கை என்ன?
Correct
• வெளியுறவு அமைச்சர் Dr S ஜெய்சங்கர் சமீபத்தில் முதலாவது இந்தியா-நார்டிக்-பால்டிக் மாநாட்டில் உரையாற்றினார். நார்டிக்-பால்டிக் எட்டு (NB8) ஒத்துழைப்பு கட்டமைப்பில் டென்மார்க், சுவீடன், எசுடோனியா, பின்லாந்து, ஐசுலாந்து, லத்வியா, லித்துவேனியா & நார்வே ஆகிய 8 நாடுகள் உள்ளன.

Question 16 of 50
16. Question
“பத்னா லிக்னா அபியான்” திட்டத்தின் ஒருபகுதியாக மாறியுள்ள மாநிலம் எது?
Correct
• கேரள மாநிலம் அண்மையில், “பத்னா லிக்னா அபியான்” திட்டத்தின் ஒருபகுதியாக மாறியுள்ளதுடன், பத்தாண்டுகளுக்குப் பிறகு, கல்வியறிவு திட்டங்களுக்கான மத்திய நிதியைப் பெற தயாராகவுள்ளது. “பத்னா லிக்னா அபியான்” என்பது நடுவணரசால் தொடங்கப்பட்ட வாசிப்பு மற்றும் எழுதுதலுக்கான திட்டமாகும். அது, வரும் 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டில் முழுமையான கல்வியறிவு என்ற இலக்கை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Question 17 of 50
17. Question
ஒரே ஏவுகணையின்மூலம் 13 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவிய நாடு எது?
Correct
• தையுவான் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்து லாங் மார்ச்-6 என்ற ஒற்றை ஏவுகணையிலிருந்து சீனா 13 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியுள்ளது. இதில் அர்ஜென்டினாவின் பத்துச் செயற் -கைக்கோள்களும் அடங்கும். இந்த ஏவுதல், லாங் மார்ச் ஏவுகணையின் 351ஆவது நிகழ்வாகும். 90 புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை ஏவவும் சீனா திட்டமிட்டுள்ளது.

Question 18 of 50
18. Question
தில்லி காற்றின் தர மேலாண்மை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
• பணியாளர் அமைச்சகத்தின் அண்மைய உத்தரவின்படி, தில்லியின் முன்னாள் தலைமைச் செயலாளர் M M குட்டி, தேசிய தலைநகர மண்டலம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காற்றின் தர மேலாண்மை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். IIT-தில்லி, IMD & சுற்றுச்சூழல் அமைச்சகத்தைச் சேர்ந்த பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்களும் இந்த ஆணையத்தின் முழுநேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Question 19 of 50
19. Question
எந்த நாட்டைச்சார்ந்த விண்வெளி ஆய்வு மையம், பால்வீதியில் முதன்முறையாக ரேடியோ வெடிப்பை கண்டறிந்துள்ளது?
Correct
• பால்வீதியில் இதற்குமுன் கண்டிராத X கதிர் மற்றும் ரேடியோ சமிக்ஞைகளின் கலவையை சமீபத்தில் கண்டதாக தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (NASA) சமீபத்தில் தெரிவித்துள்ளது.
• விண்மீன் மண்டலத்திற்குள் முதலாவது விரைவான ரேடியோ வெடிப்பு (FRB) காணப்படுவதாகவும் அது அறிவித்தது. ‘FRB’ எனப்படும் இந்நிகழ்வு குறித்த தகவல்கள் ‘நேச்சர்’ என்ற இதழில் அண்மையில் வெளியிடப்பட்டது.Incorrect
• பால்வீதியில் இதற்குமுன் கண்டிராத X கதிர் மற்றும் ரேடியோ சமிக்ஞைகளின் கலவையை சமீபத்தில் கண்டதாக தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (NASA) சமீபத்தில் தெரிவித்துள்ளது.
• விண்மீன் மண்டலத்திற்குள் முதலாவது விரைவான ரேடியோ வெடிப்பு (FRB) காணப்படுவதாகவும் அது அறிவித்தது. ‘FRB’ எனப்படும் இந்நிகழ்வு குறித்த தகவல்கள் ‘நேச்சர்’ என்ற இதழில் அண்மையில் வெளியிடப்பட்டது. -
Question 20 of 50
20. Question
போர் மற்றும் ஆயுதமோதல்களின்போது சுற்றுச்சூழலைச் சுரண்டுவதைத் தடுப்பதற்கான பன்னாட்டு நாள் (International Day for Preventing the Exploitation of the Environment in War and Armed Conflict) அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
• போர் மற்றும் ஆயுதமோதல்களின்போது சுற்றுச்சூழலைச் சுரண்டுவதைத் தடுப்பதற்கான பன்னாட்டு நாளானது ஒவ்வோர் ஆண்டும் நவ.6 அன்று அனுசரிக்கப்படுகிறது. ஐநா பொதுச்சபையானது 2001ஆம் ஆண்டில் இந்நாளைக்கடைப்பிடிப்பது குறித்து அறிவித்தது. ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தின்படி, அனைத்து உள்நாட்டு மோதல்களிலும் குறைந்தது 40% இயற்கை வளங்கள் சுரண்டப்படுகிறது.

Question 21 of 50
21. Question
மனிதர்கள் மீது கிருமிநாசினிகள் பயன்படுத்துப்படுவதை ஒழுங்குபடுத்துமாறு இந்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ள அமைப்பு எது?
Correct
• கிருமிநீக்க சுரங்கங்களில், மனிதர்கள் மீது கிருமிநாசினியைப் பயன்படுத்துவது தொடர்பாக அல்லது கட்டுப்படுத்துவது குறித்து ஒரு மாதத்திற்குள் உத்தரவுகளை பிறப்பிக்குமாறு இந்திய உச்சநீதிமன்றம் இந்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மனித உடலில் கிருமிநாசினியைத் தெளிப்பது பரிந்துரைக்கப் -படவில்லை என நடுவணரசு ஆலோசனை வழங்கியுள்ள போதிலும், அதைத்தடுக்க (அ) கட்டுப்படுத்த அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இந்திய உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Question 22 of 50
22. Question
முன்னுரிமைத் துறை கடன் வழங்கலுக்காக, இணை-கடன் வழங்கல் முறையை உருவாக்கியுள்ள அமைப்பு எது?
Correct
• முன்னுரிமைபெற்ற துறைகளுக்கு கடன் வழங்குவதற்காக இணை-கடன் வழங்கல் மாதிரி (Co-Lending Model-CLM) திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. புதிய திட்டத்தின்கீழ், வங்கிகள், முன்னுரிமை பெற்ற துறை கடன்களுக்கு இணை-கடன் வழங்குவதற்காக வங்கி சாரா நிதி நிறுவன -ங்களுடன் முன் ஒப்பந்தம் செய்யலாம். CLM என்பது 2018 செப்டம்பரில் இந்திய ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட கடன் திட்டத்தின் இணை-தோற்றம் குறித்த முன்னேற்றமாகும்.

Question 23 of 50
23. Question
இரண்டாம் உலகப்போரில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில், 2020 டிசம்பர்.1 அன்று ஒரு கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ள பன்னாட்டு அமைப்பு எது?
Correct
• இரண்டாம் உலகப்போரில் பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவுகூரும் வகையில் வரும் 2020 டிச.1 அன்று ஒரு கூட்டத்தை நடத்த ஐநா பொதுச்சபை முடிவுசெய்துள்ளது. இதுதொடர்பான தீர்மானம் இரஷ் -யாவால் தயாரிக்கப்பட்டு வாக்களிப்பின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
• இரண்டாம் உலகப்போர் என்பது 1939 முதல் 1945 வரை நீடித்த ஓர் உலகளாவிய யுத்தமாகும். இது, உலகின் பெரும்பான்மையான நாடுகளை உள்ளடக்கியது; நேச நாடுகள் மற்றும் அச்சு நாடுகள் ஆகிய இரண்டு எதிரெதிர் இராணுவ கூட்டணிகளை அது உருவாக்கியது.Incorrect
• இரண்டாம் உலகப்போரில் பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவுகூரும் வகையில் வரும் 2020 டிச.1 அன்று ஒரு கூட்டத்தை நடத்த ஐநா பொதுச்சபை முடிவுசெய்துள்ளது. இதுதொடர்பான தீர்மானம் இரஷ் -யாவால் தயாரிக்கப்பட்டு வாக்களிப்பின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
• இரண்டாம் உலகப்போர் என்பது 1939 முதல் 1945 வரை நீடித்த ஓர் உலகளாவிய யுத்தமாகும். இது, உலகின் பெரும்பான்மையான நாடுகளை உள்ளடக்கியது; நேச நாடுகள் மற்றும் அச்சு நாடுகள் ஆகிய இரண்டு எதிரெதிர் இராணுவ கூட்டணிகளை அது உருவாக்கியது. -
Question 24 of 50
24. Question
‘சதாவதானம்’ என்பது கீழ்க்காணும் எந்தத் துறையுடன் தொடர்புடைய ஒரு நிகழ்வாகும்?
Correct
• பன்னாட்டு ‘சதாவதானம்’ நிகழ்வை குடியரசுத்துணைத்தலைவர் M வெங்கையா மெய்நிகர் முறையில் தொடங்கி வைத்தார். திருப்பதியில் ஸ்ரீ கிருஷ்ணதேவராய சத்சங்கின் அனுசரணையில் Dr. மெதசானி மோகன் ஏற்பாடு செய்துள்ள ஓர் இலக்கிய நிகழ்வுதான் இச்’சதாவதானம்’. திகைப்பூட்டும் இலக்கியப் புதிர்களுக்கு தீர்வுகாண்பது, கவிதைகளை மேம்படுத்துவது போன்ற இலக்கிய செயல்திறன்கள் இந்த இலக்கிய நிகழ்வில் அடங்கும்.

Question 25 of 50
25. Question
நிலக்கரி குறித்த ஐந்தாவது கூட்டு செயற்குழுவை இந்தியா எந்த நாட்டோடு இணைந்து நடத்தியது?
Correct
• இந்தியா-இந்தோனேஷியா இடையே நிலக்கரி வர்த்தகம் குறித்த 5ஆவது கூட்டு செயற்குழுகூட்டம், காணொலிக்காட்சி வாயிலாக நடந்தது. இதில் இருதரப்பு வர்த்தகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், இந்தியா சார்பில் நிலக்கரித்துறை அமசை்சகத்தின் கூடுதல் செயலாளர் வினோத் குமார் திவாரி கலந்துகொண்டார். இந்தோனேசியா சார்பில் அந்நாட்டு எரிசக்தித்துறை அமைச்சகத்தின் நிலக்கரி சுரங்கத்துறை இயக்குனர் கலந்துகொண்டார்.
• இந்த கூட்டத்தில், இந்தியாவின் நிலக்கரி கொள்கை சீர்திருத்தங்கள், நிலக்கரி ஆய்வு மற்றும் வர்த்தக நடவடிக்கைகள்குறித்து இக்கூட்டத்தில் நிலக்கரி அமைச்சகம் விளக்கியது. இதேபோல் இந்தோனேசி -யா, தங்கள் நாட்டு நிலக்கரி வர்த்தக கொள்கைகளை விளக்கியது.Incorrect
• இந்தியா-இந்தோனேஷியா இடையே நிலக்கரி வர்த்தகம் குறித்த 5ஆவது கூட்டு செயற்குழுகூட்டம், காணொலிக்காட்சி வாயிலாக நடந்தது. இதில் இருதரப்பு வர்த்தகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், இந்தியா சார்பில் நிலக்கரித்துறை அமசை்சகத்தின் கூடுதல் செயலாளர் வினோத் குமார் திவாரி கலந்துகொண்டார். இந்தோனேசியா சார்பில் அந்நாட்டு எரிசக்தித்துறை அமைச்சகத்தின் நிலக்கரி சுரங்கத்துறை இயக்குனர் கலந்துகொண்டார்.
• இந்த கூட்டத்தில், இந்தியாவின் நிலக்கரி கொள்கை சீர்திருத்தங்கள், நிலக்கரி ஆய்வு மற்றும் வர்த்தக நடவடிக்கைகள்குறித்து இக்கூட்டத்தில் நிலக்கரி அமைச்சகம் விளக்கியது. இதேபோல் இந்தோனேசி -யா, தங்கள் நாட்டு நிலக்கரி வர்த்தக கொள்கைகளை விளக்கியது. -
Question 26 of 50
26. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற யஷ்வர்தன் குமார் சின்ஹா, கீழ்க்காணும் எந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்?
Correct
• குடியரசுத்தலைவர் மாளிகையின் அறிக்கையின்படி, யஷ்வர்தன் குமார் சின்ஹா அண்மையில் தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு முன்னர், ஆகஸ்ட் மாதம் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்த பிமல் ஜூல்கா, தலைமை தகவல் ஆணையராக பதவி வகித்து வந்தார். ஹீராலால் சமாரியா, சரோஜ் புன்ஹாணி மற்றும் உதய் மஹூர்க்கர் ஆகியோருக்கு தகவல் ஆணையர்களாக தலைமை தகவல் ஆணையர் Y K சின்ஹா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவர்களுடன் சேர்த்து தலைமை தகவலாணையர் உட்பட தகவலாணையர்களின் மொத்த எண்ணி -க்கை எட்டாக உயர்ந்துள்ளது.

Question 27 of 50
27. Question
பயிர் எச்சங்களை எரிப்பது குறித்த விழிப்புணர்வு பரப்புரையத் தொடங்கியுள்ள மாநிலம் எது?
Correct
• மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர் எச்சங்களை எரிப்பது குறித்த விழிப்புணர்வு பரப்புரையை உத்தரபிரதேச மாநிலம் தொடங்கியுள்ளது. மாநிலத்து உழவர்களிடம் தங்கள் பயிர்களின் எச்சங்களை (பராலி எனப்படுகிறது) எரிக்க வேண்டாம் என்றும், ஆனால் அதற்கு பதிலாக அவற்றை பயன்படுத்தி உரம் தயாரிக்க வேண்டும் என்றும் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டார். மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பல தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர்.

Question 28 of 50
28. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ திட்டத்தின் பயனாளிகள் யார்?
Correct
• ஒரே பதவியில் ஓய்வுபெறும் ஆயுதப்படை வீரர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியத்தை வழங்குவதற் -காக ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ திட்டம் தொடங்கப்பட்டது. ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு ஐந்தாண்டுகள் நிறைவடைந்துள்ளதாக பிரதமர் மோடி சமீபத்தில் எடுத்துரைத்தார்.
• இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபின், இராணுவத்தினருக்கு அவர்கள் ஓய்வுபெறும் தேதியிலிருந்து கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்கப்படும் நடைமுறை மாற்றப்பட்டு அவர்கள் வகித்த பதவி, பணிக்காலம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.Incorrect
• ஒரே பதவியில் ஓய்வுபெறும் ஆயுதப்படை வீரர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியத்தை வழங்குவதற் -காக ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ திட்டம் தொடங்கப்பட்டது. ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு ஐந்தாண்டுகள் நிறைவடைந்துள்ளதாக பிரதமர் மோடி சமீபத்தில் எடுத்துரைத்தார்.
• இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபின், இராணுவத்தினருக்கு அவர்கள் ஓய்வுபெறும் தேதியிலிருந்து கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்கப்படும் நடைமுறை மாற்றப்பட்டு அவர்கள் வகித்த பதவி, பணிக்காலம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. -
Question 29 of 50
29. Question
இந்திய வானிலை ஆய்வுத்துறையானது எந்த நோய் பரவவுள்ளததற்கான முன்னறிவிப்பை வெளியிட உள்ளது?
Correct
• புவி அறிவியல் அமைச்சகத்தின் ஓர் அண்மைய அறிக்கையின்படி, இந்திய வானிலை ஆய்வுமையம் ஆனது அடுத்த பருவமழைக்காலத்தில் இருந்து மலேரியா பரவல் குறித்த முன்னறிவிப்பை வெளியிட உள்ளது. உயர்செயல்திறன்கொண்ட கம்ப்யூட்டிங் (HPC) வசதியை தற்போதுள்ள 10 பெட்டாப்ளாப்களில் இருந்து 40 பெட்டாப்ளாப்களாக உயர்த்தவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. தற்போது, HPC’இல் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜப்பானுக்கு அடுத்தபடியாக இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

Question 30 of 50
30. Question
‘எட்டா’ என்ற புயல், அண்மையில் எந்த நாட்டில் பெரும் நிலச்சரிவை ஏற்படுத்தியது?
Correct
• குவாத்தமாலாவில் ‘எட்டா’ என்ற புயலின் காரணமாக பொழிந்த பெருமழை மற்றும் புயல் காற்றின் காரணமாக ஐம்பதுக்கும் மேற்பட்டோர் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரழந்துள்ளனர். இந்தப் புயல், மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவை தாக்கிய பின்னர், வெப்பமண்டலப் புயலாக மாறியது. இதன் காராணமாக அந்நாட்டின் ஒரு நகரத்தில் நிகழ்ந்த மலைச்சரிவில் பல வீடுகள் சேற்றில் புதைந்தன. இது, அண்டை நாடான நிகரகுவாவிலும் நிலச்சரிவை ஏற்படுத்தியது.

Question 31 of 50
31. Question
COVID-19’இன்போது முன்மாதிரியான செயற்பாடுகளை மேற்கொண்டதற்காக, ‘World Travel Mart’ இலண்டனிடமிருந்து விருது வென்ற மாநிலம் எது?
Correct
• இலண்டன் உலக சுற்றுலா சந்தையால் கேரள சுற்றுலாத்துறைக்கு, மதிப்புமிக்க ‘Highly Commended’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. COVID-19 தொற்றின்போது பொறுப்புள்ள சுற்றுலாவை (Responsible Tourism) ஊக்குவிக்கும் நோக்கில் அதன் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளுக்காக அம்மாநிலத்திற்கு இவ் விருது வழங்கப்பட்டுள்ளது. கேரளாவின் பொறுப்புள்ள சுற்றுலா திட்டமானது ‘Meaningful Connections’ என்ற பிரிவில் இவ்விருதைப்பெற்றது.

Question 32 of 50
32. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற திக்ரே பகுதி அமைந்துள்ள நாடு எது?
Correct
• எத்தியோப்பியாவின் பிரதமரான அபி அகமது, அண்மையில், அந்நாட்டின் திக்ரே பகுதியில் இராணுவ நடவடிக்கைகளை தொடங்கினார். எத்தியோப்பியாவின் வான்படையானது சமீபத்தில் வடக்கு திக்ரே பிராந்தியத்தில் இராணுவ பீரங்கிகளை குண்டுவீசி அழித்தது. திக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக இந்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

Question 33 of 50
33. Question
ஹஜ் 2021 வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
• 2021ஆம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணத்துக்கு விண்ணப்பம் செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிவித்துள்ளார். COVID-19 நோய்தொற்றைக் கருத்தில்கொண்டு முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டு ஹஜ் பயணத்துக்கு இணைய வழியாகவும், அஞ்சல் வாயிலாகவும், ஹஜ் கைபேசி செயலி வழியாகவும் விண்ணப்பங்களை அனுப்பலாம் என அவ்வமைச்சகம் தெரிவித்துள்ளது.

Question 34 of 50
34. Question
சிறந்த மாநிலம்” என்ற பிரிவின்கீழ் தேசிய நீர் விருதுகள் 2019’இல் முதலிடம் பிடித்த மாநிலம் எது?
Correct
• தேசிய தண்ணீர் விருதுகள் – 2019’இன் ‘சிறந்த மாநிலம்’ என்ற பிரிவின்கீழ் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இவ்விருதுகளை நீர்வளத்துறை, மத்திய ஜல்சக்தி அமைச்சகம் ஆகியவை நிறுவியுள்ளது. தமிழ்நாட்டைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் இராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள், ‘சாதாரண’ பிரிவின் கீழ் சிறந்த மாநிலங்களாக தெரிவாகியுள்ளன.

Question 35 of 50
35. Question
அண்மையில் நிறைவடைந்த Gov-Tech-Thon – 2020 போட்டியில் முதல் பரிசைப்பெற்ற அணி எது?
Correct
• நடுவணரசின் மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் செயல்படும் நிறுவனங்களால் 36 மணி நேரம் நடத்தப்பட்ட அரசு தொழில்நுட்ப போட்டி (Gov-Tech-Thon 2020) கடந்த நவம்பர்.1ஆம் தேதியன்று நிறைவடைந்தது. ‘இராபர்ட் பாஷ் எஞ்சினியரிங் மற்றும் பிசினஸ் சொல்யூசன்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ‘Fit for Future’ என்ற குழுவுக்கு முதல் பரிசு கிடைத்தது. இவர்கள், வாகனத்தின் தகுதியை பரிசோதிக்கும் மாதிரி கருவியை உருவாக்கியிருந்தனர்.

Question 36 of 50
36. Question
குஜராத்தில் ஹசிரா மற்றும் கோகா இடையே இந்தியப் பிரதமர் எந்த வகையான போக்குவரத்தைத் தொடங்கினார்?
Correct
• குஜராத் மாநிலத்தில் ஹசிரா மற்றும் கோகா இடையே ரோ-பாக்ஸ் படகு சேவை இந்தியப் பிரதமரால் தொடங்கிவைக்கப்பட்டது. மூன்றடுக்குகள்கொண்ட ரோ-பாக்ஸ் கலன் ‘வாயேஜ் சிம்பொனி’, 2500 -2700 மெட்ரிக் டன்கள் கொள்ளளவுடனும், 12000-15000 ஜிகா டன்கள் இடப்பெயர்வுத் திறனுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.
• 30 வண்டிகள் சரக்கை முதலடுக்கிலும், 100 பயணிகள் கார்களை மேலடுக்கிலும், 500 பயணிகள் & 34 பணியாளர்கள் மற்றும் உபசரிப்புப் பணியாளர்களை பயணிகள் அடுக்கிலும் இது கொள்ளும்.Incorrect
• குஜராத் மாநிலத்தில் ஹசிரா மற்றும் கோகா இடையே ரோ-பாக்ஸ் படகு சேவை இந்தியப் பிரதமரால் தொடங்கிவைக்கப்பட்டது. மூன்றடுக்குகள்கொண்ட ரோ-பாக்ஸ் கலன் ‘வாயேஜ் சிம்பொனி’, 2500 -2700 மெட்ரிக் டன்கள் கொள்ளளவுடனும், 12000-15000 ஜிகா டன்கள் இடப்பெயர்வுத் திறனுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.
• 30 வண்டிகள் சரக்கை முதலடுக்கிலும், 100 பயணிகள் கார்களை மேலடுக்கிலும், 500 பயணிகள் & 34 பணியாளர்கள் மற்றும் உபசரிப்புப் பணியாளர்களை பயணிகள் அடுக்கிலும் இது கொள்ளும். -
Question 37 of 50
37. Question
நிர்வாக மற்றும் வரவு செலவுத்திட்ட கேள்விகள் தொடர்பான ஐநா ஆலோசனைக்குழுவுக்கு (ACABQ) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
• ஓர் இந்திய தூதரான விதிஷா மைத்ரா, நிர்வாக மற்றும் வரவு செலவுத்திட்ட கேள்விகளுக்கான ஐநா ஆலோசனைக்குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆசிய-பசிபிக் குழுவில் உள்ள ஒரே பதவிக்கான தேர்தலில் அவர் வெற்றிபெற்றார். 126 ஐநா உறுப்பினர்கள் அவரது வேட்புமனுவை ஆதரித்தனர். அவர், 2008ஆம் ஆண்டுத் தொகுதியைச் சார்ந்த இந்திய வெளியுறவு சேவை அதிகாரியாவார்.

Question 38 of 50
38. Question
PSLV-C49 ஏவுகலத்தைப் பயன்படுத்தி ISRO’ஆல் ஏவப்படவுள்ள புவி கண்காணிப்பு செயற்கைக்கோ -ளின் பெயரென்ன?
Correct
• இந்தியாவின் அண்மைய புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-01’ஐ இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) ஏவவுள்ளது. இச்செயற்கைக்கோளும் அதோடு சேர்ந்து பிற 9 வாடிக்கையாளர் செயற்கைக்கோள்களையும் ISRO தனது PSLV-C49 ஏவுகணையைப் பயன்படுத்தி விண்வெளிக்கு கொண்டுசெல்லும். ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்திலிருந்து இந்த ஏவுகணை ஏவப்படவுள்ளது.

Question 39 of 50
39. Question
நடப்பாண்டு (2020) வரும் அமைதி & வளர்ச்சிக்கான உலக அறிவியல் நாளின் கருப்பொருள் என்ன?
Correct
• பொது மக்களிடையே அறிவியலின் பயன்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் நவ.10 அன்று உலக அமைதி & வளர்ச்சிக்கான அறிவியல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றாட வாழ்வில் அறிவியலின் முக்கியத்துவத்தையும் இந்நாள் சிறப்பித்துக்கூறுகிறது. நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருள், “Science for and with Society” என்பதாகும்.

Question 40 of 50
40. Question
10.பதினைந்தாம் நிதி ஆணையத்தின் தலைவர் யார்?
Correct
• N K சிங் தலைமையிலான பதினைந்தாம் நிதி ஆணையம் சமீபத்தில் தனது அறிக்கையை இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்திடம் சமர்ப்பித்தது. கடந்த ஆண்டு, இவ்வாணையம், 2020-21ஆம் ஆண்டிற்கான பரிந்துரைகளுடன் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அது ஏற்றுக்கொள்ளப்பட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இந்த ஆணையம், 2021-22 முதல் 2025-26 வரையிலான காலத்திற்கான பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது.

Question 41 of 50
41. Question
(அடல் புத்தாக்க இயக்கம் (AIM)) AIM-சிரியஸ் புத்தாக்க திட்டமானது இந்தியா மற்றும் எந்த நாட்டின் மாணாக்கருக்காக தொடங்கப்பட்டது?
Correct
• இரஷ்யாவின் SIRIUS மற்றும் Atal Innovation Mission (AIM) ஆகியவை இணைந்து சமீபத்தில், ‘AIM – Sirius Innovation Program 3.0’ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்திய மற்றும் இரஷ்ய பள்ளி மாணாக்க -ருக்கான பதினான்கு நாள் திட்டமாகும். இது முதல் இந்தோ-இரஷ்ய இருதரப்பு இளையோர் புத்தாக்க முன்னெடுப்பாகும். இது, இரு நாடுகளுக்கும் தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

Question 42 of 50
42. Question
சாரநாத் ஒலி-ஒளி நிகழ்வினை எந்த மாநிலத்தில் பிரதமர் தொடங்கி வைத்தார்?
Correct
• பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி நகரத்தில் காணொலிக் காட்சிமூலம் பல மேம்பாட்டு திட்டங்களை தொடங்கிவைத்தார். இம்மேம்பாட்டுத் திட்டங்களுள் சாரநாத் ஒலி-ஒளி நிகழ்வு, பசுக்களின் பாதுகாப்பிற்கான உட்கட்டமைப்பு வசதிகள், வாரணாசி நகர பொலிவுறு ஒளிவிளக்குப் பணிகள் ஆகியவை அடங்கும்.

Question 43 of 50
43. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பின் மாதிரி, எந்த நகரத்தில் திறக்கப்பட்டது?
Correct
• செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையின் மாதிரியை பாதுகாப்புத் துறை அமைச்சர் இராஜ்நாத் சிங், புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO பவனில் திறந்து வைத்தார்.
• ‘மிஷன் சக்தி’ என்று அழைக்கப்படும் நாட்டின் முதல் செயற்கைகோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுக
-ணையின் சோதனை கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி ஒடிசாவில் உள்ள Dr APJ அப்துல் கலாம் தீவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. மிகவும் சவாலான இந்தச்சோதனையில் ‘மிஷன் சக்தி’ ஏவுகணை துல்லியமாக இலக்கை எட்டியதன்மூலம் விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள் -களைத் தாக்கி அழிப்பதில் உலக அளவில் நான்காவது நாடாக இந்தியா இடம் பெற்றுள்ளது.Incorrect
• செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையின் மாதிரியை பாதுகாப்புத் துறை அமைச்சர் இராஜ்நாத் சிங், புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO பவனில் திறந்து வைத்தார்.
• ‘மிஷன் சக்தி’ என்று அழைக்கப்படும் நாட்டின் முதல் செயற்கைகோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுக
-ணையின் சோதனை கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி ஒடிசாவில் உள்ள Dr APJ அப்துல் கலாம் தீவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. மிகவும் சவாலான இந்தச்சோதனையில் ‘மிஷன் சக்தி’ ஏவுகணை துல்லியமாக இலக்கை எட்டியதன்மூலம் விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள் -களைத் தாக்கி அழிப்பதில் உலக அளவில் நான்காவது நாடாக இந்தியா இடம் பெற்றுள்ளது. -
Question 44 of 50
44. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சுஷா நகரம் அமைந்துள்ள நாடு எது?
Correct
• ‘சுஷா’ என்பது உத்திசார் முக்கியத்துவம்மிக்க ஒரு கலாச்சார நகரமாகும். இது, நாகோர்னோ-கராபாக் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. இது, அசர்பைஜானின் ஒருபகுதியாகக் கருதப்படும் ஒரு மலைப் பாங்கான பகுதியாகும்; ஆனால், ஆர்மீனிய பூர்வகுடிகளின் கட்டுப்பாட்டில் இது உள்ளது. அசர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் தனது நாட்டின் படைகள் சுஷா நகரத்தைக் கைப்பற்றியதாக அண்மையில் அறிவித்தார். இது, நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தின் இரண்டாவது பெருநகராகும். நாகோர்னோ-கராபாக் சுற்றியுள்ள பகுதியில் நிகழ்ந்த சண்டையில் 1,000’க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

Question 45 of 50
45. Question
இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக் கொள்கை-2020 குறித்து அண்மையில் வெளிநாடுவாழ் இந்தியர்களுடன் கொள்கை ரீதியான ஆலோசனையை நடத்தியவர் யார்?
Correct
• இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக்கொள்கை-2020’க்கு தங்கள் பங்களிப்பை அளிக்கும் வழிகள்குறித்து, வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய அறிவியலாளர்களுடன், அறிவியல் தொழில்நுட்ப துறைக்கு பொறுப்பு வகிக்கும் சுகாதாரத்தறை அமைச்சர் Dr ஹர்ஷ் வர்தன், காணொலிக் காட்சிமூலம் ஆலோசனை நடத்தினார். இதுபோன்ற ஆலோசனைக் கூட்டத்தில் Dr ஹர்ஷ் வர்தன் பங்கேற்பது இதுவே முதல்முறை.

Question 46 of 50
46. Question
இலக்கியத்திற்கான நடப்பாண்டு (2020) JCB பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நூல் எது?
Correct
• மலையாள எழுத்தாளர் S ஹரீஷ் எழுதிய, ஜெயஸ்ரீ கலதிலால் ஆங்கில மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட, ‘Moustache’ என்ற நூல், நடப்பாண்டு (2020) இலக்கியத்திற்கான JCB பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Question 47 of 50
47. Question
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தேசிய தரவுத்தளத்தை உருவாக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ள நடுவண் அமைச்சகம் எது?
Correct
• புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான முதல் தேசிய தரவுத்தளத்தை உருவாக்குவதற்கு நடுவண் நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இது, ஆதார் இணைக்கப்பட்ட தேசிய அமைப்பு சாரா தொழிலாளர்க -ளுக்கான தரவுத்தளமாகும். இத்தரவுத்தளம் அத்தகைய தொழிலாளர்களுக்கே உரித்தான குறிப்பிட்ட திட்டங்களை செயல்படுத்த அரசாங்கத்திற்கு ஒரு தளத்தை வழங்கும்.

Question 48 of 50
48. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘மெகாஸ்கோப்’ என்பதை தொடங்கிய அமைப்பு எது?
Correct
• IIT முன்னாள் மாணாக்கர் பேரவையானது ‘மெகாஸ்கோப்’ என்றவொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தொற்றுநோய்களைத் துல்லியமாகக் கண்டறிவதற்கான தரவு பகுப்பாய்வு, சோதனை மற்றும் மரபியல் ஆகியவை இதில் அடங்கும். தனிப்பயனாக்கப்பட்ட மருந்தை பரிந்துரைக்கவும் இது பயன்படுத்தப்படும். மெகாஸ்கோப், பரிசோதனையின் துல்லியத்தை மேம்படுத்துவதோடு நோயின் தீவிரத்தை கணிப்பதன் மூலமும் சிகிச்சையின் செயல்திறனை மேம்படுத்துகிறது.

Question 49 of 50
49. Question
சுவாமி விவேகானந்தரின் முழு உருவச்சிலையானது பிரதமரால் எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் திறக்கப்பட்டுள்ளது?
Correct
• இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சுவாமி விவேகானந்தரின் முழுவுருவச்சிலையை நவ.12ஆம் தேதி அன்று புது தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் (JNU) திறந்து வைத்தார். இச்சிலையை அவர் காணொலிக்காட்சிமூலம் திறந்து வைத்தார். இந்தச் சிலையானது JNU முன்னாள் மாணவர்களின் ஆதரவுடன் JNU வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

Question 50 of 50
50. Question
ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநர், கீழ்க்காணும் எந்தக் கடவுளரின் பெயரில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை வெளியிட்டுள்ளார்?
Correct
• வைஷ்ணவ தேவி ஆலயத்தின் பெயரால் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வெளியிட்டுள்ளார். தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக இந்த நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாணயத்தை ஜம்மு மற்றும் தில்லியில் விற்க வைஷ்ணவ தேவி கோவில் வாரியம் முடிவு செய்துள்ளது.

Leaderboard: November 2nd Week 2020 Current Affairs Online Test Tamil