June 3rd Week 2021 Current Affairs Online Test Tamil

Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
சமீபசெய்திகளில் இடம்பெற்ற SATAT திட்டத்துடன் தொடர்புடைய துறை எது?
Correct
விளக்க
- இந்தியாவில் எண்ணெய் துறை பொதுத்துறை நிறுவனங்கள், அதாவது இந்தியன் ஆயில், HPCL, BPCL, GAIL மற்றும் IGL ஆகியவை SATAT திட்டத்தை மேம்படுத்துவதற்கான ஓர் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மேற் கொண்டுள்ளன.
- Sustainable Alternative Towards Affordable Transportation (கட்டுப்படியா -கக்கூடிய போக்குவரத்தை நோக்கிய நிலையான மாற்று) என்பதன் சுருக்கந்தான் SATAT. இது அழுத்தப்பட்ட உயிரிவாயு உற்பத்தி ஆலைக -ளை அமைத்து, சந்தையில் அழுத்தப்பட்ட உயிரிவாயு கிடைப்பை உறுதிசெய்வதற்காக 01.10.2018 அன்று தொடங்கப்பட்டது.
Incorrect

Question 2 of 50
2. Question
WHOஆல் ஒப்புதல் வழங்கப்பட்ட சினோவாக் என்ற COVID-19 தடுப்பூசியை உருவாக்கிய நாடு எது?
Correct
விளக்கம்
- சீனாவின் சினோவாக் பயோடெக் லிமிடெட் உருவாக்கிய சினோவாக் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசியை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்த WHO பரிந்துரைத்துள்ளது. 2-4 வார இடை வெளியுடன் 2 டோஸ்களாக இத்தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம்.

Question 3 of 50
3. Question
ILO மதிப்பீடுகளின்படி, வரும் 2022ஆம் ஆண்டில் உலகளாவிய வேலையின்மை விகிதம் என்னவாக இருக்கும்?
Correct
விளக்கம்
- உலகளாவிய வேலையின்மை விகிதமானது வரும் 2022ஆம் ஆண்டில், 5.7 சதவிகிதமாக இருக்கும் என பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ILO) மதிப்பிடப்பட்டுள்ளது. உலகெங்கிலும் கிட்டத்தட்ட 205 மில்லியன் பேர் பணியற்றோராக இருப்பார்கள் என ILO மதிப்பிட்டுள்ளது. இது, 2019ஆம் ஆண்டின் 187 மில்லியன் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது. மேலும் 108 மில்லியன் பணியாளர்கள் ஏழைகள் அல்லது வறியவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ILO தெரிவித்துள்ளது.

Question 4 of 50
4. Question
WHO நிர்வாகக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள Dr பேட்ரிக் அமோத் சார்ந்த நாடு எது?
Correct
விளக்கம்
- இந்திய ஒன்றிய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், ஜூன்.02 அன்று உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவின் தலைவராக தனது பதவிக்காலத்தை நிறைவுசெய்தார். உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக்குழுவின் 149ஆவது அமர்வின்போது, கென்யாவின் சுகாதார அமைச்சகத்தின் சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் பேட்ரிக் அமோத் நிர்வாகக் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டு நியமிக்கப்பட்டார்.

Question 5 of 50
5. Question
அதிக மகசூல் தரக்கூடிய விதைகளை, உழவர்களுக்கு விநியோகிக்கும் அரசாங்க திட்டத்தின் பெயரென்ன?
Correct
விளக்கம்
- மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விதை சிறு தொகுப்பு திட்டத்தை, உழவர்களுக்கு அதிக மகசூல் தரும் விதைகளின் தொகுப்பி னை விநியோகித்து தொடங்கிவைத்தார். இது, உழவர்களுக்கு புதிய வகை விதைகளை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இந்த சிறு தொகுப்புகளை தேசிய விதை கழகம், NAFED மற்றும் குஜராத் மாநில விதை கழகம் வழங்குகின்றன.
- தேசிய உணவுப்பாதுகாப்பு திட்டத்தின்மூலம் ஒன்றிய அரசால் முழுமையாக இந்தத் திட்டத்திற்கு நிதியளிக்கப்படுகின்றது.

Question 6 of 50
6. Question
தேசிய மனிதவுரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- தேசிய மனிதவுரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் அருண் மிஸ்ரா பொறுப்பேற்றார். 2019ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மனிதவுரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் திருத்தத்திற்குப் பின்னர், NHRC தலைமைப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியத் தலைமை நீதியரசரல்லாத ஒருவர் மிஸ்ரா ஆவார். முன்னாள் தலைவரான நீதியரசர் H L தட்டுவின் பதவிக்காலம் கடந்த டிசம்பருடன் நிறைவடைந்தது. இந்த ஆணையத்தில் மேலும் இரண்டு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Question 7 of 50
7. Question
சமீபத்தில், பெஞ்சியுன்-4B என்ற புதிய தலைமுறை வானிலை செயற்கைக்கோளை ஏவிய நாடு எது?
Correct
விளக்கம்
- அண்மையில் சீனா, பெஞ்சியுன்-4B (FY-4B) என்ற புதிய தலைமுறை வானிலை செயற்கைக்கோளை வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. பெஞ்சியுன்-4B செயற்கைக்கோள், லாங் மார்ச் 3B என்ற ஏவுகணைமூலம் புவிசுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
- அது பெஞ்சியுன் செயற்கைக்கோள்களின் வலையமைப்பில் இணைந்தது. பெஞ்சியுன் தொடரின் முதல், தாழ்நிலை புவிசுற்றுப்பாதை செயற்கைக்கோள் சோதனை இயந்திரமான FY-1A, 1988’இல் ஏவப்பட்டது.

Question 8 of 50
8. Question
ஐநா நீடித்த போக்குவரத்து மாநாடு-2021’ஐ நடத்துகிற நாடு எது?
Correct
விளக்கம்
- ஐநா நீடித்த போக்குவரத்து மாநாடு – 2021 ஆனது அக்.14-16 வரை சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. நீடித்த வளர்ச்சி இலக்குகள் மற்றும் காலநிலைமாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தை அடைய, நீடித்த போக்குவரத்தை ஊக்குவிப்பதே இம்மாநாட்டின் நோக்கமாகும்.
- மிதிவண்டிகளின் நீண்ட ஆயுள், பல்திசையியக்கத்திறம் மற்றும் சுற்றுச் சூழல் தோழமைத்தன்மையை அங்கீகரிப்பதற்காக, ஐநா பொது அவை ஆனது ஜூன்.3’ஐ உலக மிதிவண்டி நாளாக அறிவித்தது.

Question 9 of 50
9. Question
நடப்பாண்டுக்கான (2021) புக்கர் பரிசை வென்றவர் யார்?
Correct
விளக்கம்
- நடப்பாண்டுக்கான (2021) விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, பன்னாட்டு புக்கர் பரிசை வென்ற முதல் பிரெஞ்சு எழுத்தாளர் என்ற பெருமையை டேவிட் டியோப் பெற்றுள்ளார். அவரது இரண்டாவது புதினமான ‘அட்நைட் ஆல் பிளட் இஸ் பிளாக்’ஐ அமெரிக்க எழுத்தாளரும் கவிஞருமான அண்ணா மோஸ்கோவாக்கிஸ் மொழிபெயர்த்தார்.

Question 10 of 50
10. Question
Experimental Advanced Superconducting Tokamak (EAST) என்ற அறிவியல் பரிசோதனையை மேற்கொள்ளும் நாடு எது?
Correct
விளக்கம்
- சீனாவின் Experimental Advanced Superconducting Tokamak (EAST) ஆனது அதன் சமீப சோதனையில் புதிய சாதனையை படைத்துள்ளது. இச்சோதனை, 101 விநாடிகளில் 216 மில்லியன் பாரன்ஹீட் பிளாஸ்மா வெப்பநிலையை அடைந்தது. “செயற்கை சூரியன்” திட்டத்தில் பணிபுரியும் அறிவியலாளர்கள், 20 விநாடிகளில் 288 மில்லியன் பாரன்ஹீட் வெப்பநிலையை அடைந்தனர். டோகாமக் சாதனம் என்பது சூரியன் விண்மீன்களில் நிகழும் இயற்கையான அணுக்கரு இணைவு செயல் முறையை நகலாக்கம் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Question 11 of 50
11. Question
‘நிரல்படுத்தக்கூடிய டிஜிட்டல் ஃபைபர்’ஐ அறிமுகப்படுத்திய பன்னாட்டு நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் (MIT) ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாக ‘நிரல்படுத்தக்கூடிய டிஜிட்டல் ஃபைபர்’ ஒன்றை உரு -வாக்கியுள்ளனர். இந்த டிஜிட்டல் ஃபைபர் உடலியல் செயல்பாடுகளை ஊகிப்பதற்காக நினைவகம், வெப்பநிலை உணரிகள் மற்றும் ஒரு நரம்பணு வலைய நிரல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
- நூற்றுக்கணக்கான சதுர சிலிக்கான் மைக்ரோஸ்கேல் டிஜிட்டல் சில்லுகளை ஒரு முன்னுரிவடிவில் வைப்பதன்மூலம் இது உருவாக்கப்படுகிறது. அது பின்னர் பாலிமர் ஃபைபர் உருவாக்க பயன்படுகிறது.

Question 12 of 50
12. Question
SAGE (Senior-care Aging Growth Engine) என்பது எந்த மத்திய அமைச்சகத்தின் முன்முயற்சியாகும்?
Correct
விளக்கம்
- முதியோர்களுக்கான சேவைகளை அளிக்கும் SAGE (முதியோர் பராமரிப்பு வளர்ச்சி இயந்திரம்) இணையதளத்தை மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தவார்சந்த் கெலாட் தொடங்கிவைத்தார். இந்த SAGE இணையதளத்தில் முதியோர் பராமரிப்புக்கான அனைத்து பொருட்களையும் வாங்கமுடியும். மேலும், துளிர்நிறுவனங்கள் அளிக்கும் நம்பகமான சேவைகளையும் பெறமுடியும்.

Question 13 of 50
13. Question
எந்த நோயைக் குணப்படுத்துவதற்காக, நானோ-ஃபைபர் அடிப்படையிலான மாத்திரைகளான ‘AmB’ஐ, IIT-H உருவாக்கியுள்ளது?
Correct
விளக்கம்
- ஹைதராபாத் – இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (IIT-H) ஆராய்ச்சி -யாளர்கள் ஆம்போடெரிசின் B’இன் நானோ ஃபைபர் அடிப்படையிலான வாய்வழி உட்கொள்ளும் மாத்திரைகளை உருவாக்கியுள்ளனர்.
- கருங்காய்ச்சலை குணப்படுத்துவதற்காக, ஆம்போடெரிசின் – B’இன் நானோ ஃபைப்ரஸ் அடிப்படையிலான வாய்வழி உட்கொள்ளும் மாத்திரைகளை உருவாக்குவதற்கான முதல்முயற்சி இதுவாகும். கருங்காய்ச்சலுக்கான சிகிச்சை தற்போது கருப்புப் பூஞ்சைக்கான சிகிச்சையாகப் பயன்படுத்தப்படுவதால், COVID-19 சிகிச்சைக்குப் பின்னான பூஞ்சை தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க இது பயன்படுத்தப்படலாம்.

Question 14 of 50
14. Question
உலக நீடித்த வளர்ச்சி உச்சிமாநாட்டை நடத்துகிற நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- உலக நீடித்த வளர்ச்சி உச்சிமாநாடு என்பது எரிசக்தி மற்றும் வள நிறுவனத்தின் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு முதன்மை நிகழ்வாகும்.
- “‘Redefining Our Common Future: Safe and Secure Environment for All” என்ற கருப்பொருளின்கீழ் நடைபெறுகிறது. உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், இவ்வுச்சிமாநாட்டில் உரையாற்றினார்.

Question 15 of 50
15. Question
உணவுப்பொருட்களின் பன்னாட்டு விலைகளைக் கண்டறிவதற்காக, உணவு விலைக்குறியீட்டை வெளியிடுகிற அமைப்பு எது?
Correct
விளக்கம்
- ஐநா – உணவு மற்றும் உழவு அமைப்பின் (FAO) உணவு விலைக்குறியீடு என்பது தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பால் பொருட்கள், இறைச்சி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் பன்னா -ட்டு விலையில் மாதந்தோறும் ஏற்படுகிற மாற்றத்தை அளவிடும் ஒரு நடவடிக்கையாகும். சமீப குறியீட்டின்படி, மே மாதத்திய உணவு விலை ஏப்ரல் மாதத்தைவிட 4.8% அதிகமாக இருந்தது. இது 2010 அக்டோபர் மாதத்திற்குப்பிறகு நிகழும் அதிகப்படியான மாதாந்திர விலை உயர்வாகும். இந்த விலைகள், 2020 மே மாதத்தைவிட 39.7% அதிகமாகும்.

Question 16 of 50
16. Question
2021 ஜூனில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள் -கைக்குழு கூட்டத்திற்குப் பிறகு, ரெப்போ விகிதம் ______ என நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான இந்திய ரிசர்வ் வங்கியின் ஆறு உறுப்பினர்களைக்கொண்ட பணவியல் கொள்கைக்குழு, முக்கிய வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருந்தது. ரெப்போ விகிதம் 4.00% ஆகவும், தலைகீழ் ரெப்போ விகிதம் 3.35% ஆகவும் தொடரும்.
- இதன்மூலம், ரெப்போ விகிதம் தொடர்ந்து ஆறாவது முறையாக மாறாமல் உள்ளது. கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை & பணவீக்கம்குறித்த அச்சங்களுக்கிடையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Question 17 of 50
17. Question
3 புதிய குகைகள் கண்டுபிடிக்கப்பட்ட திரிராஷ்மி பௌத்த குகை வளாகம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- மகாராஷ்டிராவின் நாசிக் அருகே அமைந்துள்ள திரிராஷ்மி பௌத்த குகை வளாகத்தில் 3 புதிய குகைகளை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்தக் குகை வளாகம் பாண்டவ் லெனி என்றும் அழைக்கப்படுகிறது. இத்தளம் கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கு முன்னர் ஒரு பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியால் ஆவணப்படுத்தப்பட்டது.

Question 18 of 50
18. Question
அண்மையில் காலமான ‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற இலட்சுமி நந்தன் போரா சார்ந்த எது?
Correct
விளக்கம்
- அஸ்ஸாமியைச் சார்ந்த பிரபல அஸ்ஸாமிய கல்வியாளர் மற்றும் ‘பத்மஸ்ரீ’ விருதாளருமான இலட்சுமி நந்தன் போரா சமீபத்தில் COVID காரணமாக காலமானார். அவருக்கு வயது 89. இலட்சுமி நந்தன் போரா, அஸ்ஸாமி மொழியில் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பதல் பைரவி மற்றும் காயகல்பா ஆகியவை அவரது சிறந்த படைப்புகளாகும். கடந்த 2015ஆம் ஆண்டில் அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது.

Question 19 of 50
19. Question
அண்மையில் திறந்துவைக்கப்பட்ட இன்டஸ் பெஸ்ட் பிரம்மாண்ட உணவுப் பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், சத்தீஸ்கர் மாநிலம் இராய்ப்பூரில் இன்டஸ் பெஸ்ட் பிரம்மாண்ட உணவுப்பூங்காவை தொடங்கிவைத்தார். மதிப்புக்கூட்டல், வேளாண் பொருட்களை நீண்டநாட்கள் சேமிப்பதற்கான வசதி, விவசாயிகளுக்கு அதிக வருவாய், தலைசிறந்த பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் இப்பகுதியின் உழவர்களுக்கு சந்தைப்படுத்துவதற்கான மாற்றுமுறைகள் போன்றவற் -றை இந்த உணவுப்பூங்கா உறுதிசெய்யும்.
- இந்தப் பூங்காவின்மூலம் சுமார் 5000 பேருக்கு நேரடியாகவும், மறைமு -கமாகவும் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

Question 20 of 50
20. Question
அண்மையில் பணியிலிருந்து நீக்கப்பட்ட இந்திய கடற்படையின் மிகப்பழைமையான நீரியல் ஆய்வுக்கப்பல் எது?
Correct
விளக்கம்
- இந்திய கடற்படையின் மிகப்பழைமையான நீரியல் ஆய்வுக்கப்பலான INS சந்தயக், 2021 ஜூன்.4 அன்று விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படையிலிருந்து நீக்கப்பட்டது. 40 ஆண்டுகள் பழமையான இந்தக்கப்பல், 200’க்கும் மேற்பட்ட பெரிய நீரியல் ஆய்வுகளை நடத்தியுள்ளது. இது, இலங்கையில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் பவன்’ (1987), ‘ஆபரேஷன் ரெயின்போ’ (2004) போன்ற முக்கியமான ஆபரேஷன்களின் ஒருபகுதியாகவும் இருந்துள்ளது.

Question 21 of 50
21. Question
மாணவர்களுக்கான ‘YounTab’ திட்டம் தொடங்கப்பட்டுள்ள மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் எது?
Correct
விளக்கம்
- லடாக் யூனியன் பிரதேசம், “YounTab” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்கீழ் லடாக் துணைநிலை ஆளுநர் R K மாத்தூர், 9-12 வரை படிக்கும் மாணவர்களுக்கு டேப்லெட் வகை கைக்கணினிகளை வழங்குவார். லடாக் அரசுப்பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான கிட்டத்தட்ட 12,300 மாணவர்களுக்கு இலவச கைக்கணினிகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

Question 22 of 50
22. Question
ICAR – இந்திய நறுமணப்பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனமானது எந்தத் தாவரத்தின் நுண்ணூட்டச்சத்து இலைசார் உருவாக்கத்திற்கான காப்புரிமையைப் பெற்றுள்ளது?
Correct
விளக்கம்
- இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின்கீழ் (ICAR) இயங்கும் இந்திய நறுமணப் பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனம் கருமிளகு நுண்ணூட்டச்சத்து இலைசார் உருவாக்கத்திற்கான காப்புரிமையைப் பெற்றுள்ளது.
- ICAR-IISR ஆனது நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளை கையாளுவதற்காக முக்கிய நறுமணப் பொருட்களுக்கு (கருமிளகு, இஞ்சி, மஞ்சள் & ஏலக்காய்) நுண்ணூட்டச்சத்து இலைசார் சூத்திரங்களை உருவாக்கியுள்ளது.

Question 23 of 50
23. Question
எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்படும், ‘கார்பேவாக்ஸ்’ என்னும் தடுப்பூசியை கொள்முதல்செய்வதாக இந்திய அரசு அறிவித்துள்ளது?
Correct
விளக்கம்
- பயாலாஜிக்கல் E நிறுவனத்தால் தயாரிக்கப்படும் “கார்பேவாக்ஸ்” என்ற COVID-19 தடுப்பூசியினை 30 கோடி டோஸ்கள் கொள்முதல் செய்வதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமையகம் ஹைதராபாத்தில் உள்ளது.
- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இத்தடுப்பூசியானது, “Recombinant Protein Sub Unit Vaccine” (அதாவது) COVID வைரசின் ஸ்பைக் புரதத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது, கோவாக்ஸின் (அ) கோவிஷீல்ட் தடுப்பூசிகளிலிருந்து வேறுபட்டது.

Question 24 of 50
24. Question
திட்டமிடப்பட்ட செயற்கைத் தீவான லினெட்டெஹோம் கட்டப்பட உள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- லினெட்டெஹோம் என்ற செயற்கைத் தீவை நிர்மாணிக்க டென்மார்க் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 1 சதுர மைல் (2.6 சதுரகிமீட்டர்) பரப்பளவில் இத்தீவு அமையவுள்ளது. மேலும் அதன் துறைமுகத்தை உயரும் கடல் மட்டங்கள் மற்றும் புயல்களிலிருந்து பாதுகாக்க, அதன் சுற்றளவு முழுவ -தும் ஒரு தடுப்பு அமைப்பு இருக்கும். இத்தீவு, சுரங்கச்சாலைகள் மற்றும் மெட்ரோ பாதைகள் வழியாக முதன்மை நிலத்துடன் இணைக்கப்படும்.

Question 25 of 50
25. Question
ஜூன்.5 அன்று நடப்பாண்டுக்கான (2021) உலக சுற்றுச்சூழல் நாள் கொண்டாட்டங்களை நிகழ்த்திய நாடு எது?
Correct
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.5ஆம் தேதியை உலக சுற்றுச்சூழல் நாளாக ஐநா அவை கொண்டாடுகிறது. இந்நாள் முதன்முதலில் கடந்த 1972ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. “Reimagine – Recreate – Restore” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். நடப்பாண்டின் (2021) உலக சுற்றுச்சூழல் நாள் கொண்டாட்டங்களை பாகிஸ்தான் நடத்தியது.

Question 26 of 50
26. Question
அண்மையில் தொடங்கப்பட்ட ‘E-100’ என்ற சோதனை அடிப்படையிலான திட்டத்துடன் தொடர்புடையது எது?
Correct
விளக்கம்
- உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு புனேவில் பிரதமர் மோடி E-100 என்ற சோதனை அடிப்படையிலான திட்டத்தை தொடங்கினார். இந்தத் திட்டம், நாடு முழுவதும் எத்தனால் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கா -ன ஒரு வலையமைப்பை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ‘இந்தியாவில் 2020-2025இல் எத்தனால் கலப்பிற்கான செயல்திட்டம் குறித்த நிபுணர் குழுவின் அறிக்கையை’ பிரதமர் வெளியிட்டார். 2025ஆம் ஆண்டுக்குள், 20 சதவீதம் எத்தனால் கலக்கும் இலக்கை அடைய இந்தியா தீர்மானித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

Question 27 of 50
27. Question
அண்மையில் தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்ட ரைமோனா காப்புக்காடு அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- அஸ்ஸாம் மாநிலத்தின் போடோலாந்து பிராந்தியத்திலுள்ள ரைமோனா காப்புக்காடு அம்மாநிலத்தின் ஆறாவது தேசியப்பூங்காவாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. கசிரங்கா, மனாஸ், நமேரி, ஒராங் மற்றும் திப்ருசைகோவா ஆகியவை அஸ்ஸாமில் உள்ள பிற 5 தேசியப்பூங்காக்களாகும்.
- வளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு குறிப்பாக தங்கநிற மந்தி, படைச்சிறுத்தை, இந்தியக்காட்டெருது மற்றும் இருவாச்சி ஆகியவற்றிற்கு பிரபலமானதாகும் இந்தப் பூங்கா.

Question 28 of 50
28. Question
பன்னாட்டு நிறுவனங்கள் மீதான குறைந்தபட்ச உலகளாவிய வரியை அறிவித்துள்ள பன்னாடுகளுக்கு இடையேயான குழு எது?
Correct
விளக்கம்
- ஏழு மேம்பட்ட பொருளாதாரங்களின் குழுவானது (G7) அண்மையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரி விதிப்பது குறித்து ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது “குறைந்தபட்ச உலகளாவிய வரி விகிதம்” ஆக இருக்கும். மேலும் அதன்கீழ் குறைந்தபட்ச வரம்பு 15% ஆக நிர்ணயிக்கப் -பட்டுள்ளது. G7 என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐக்கியப்பேரரசு மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் உள்ளடக்கிய ஒரு பன்னாட்டு அரசாங்கங்களுக்கு இடையேயான ஓர் அமைப்பு ஆகும்.

Question 29 of 50
29. Question
“I-Familia” என்ற தரவுத்தளத்தை தொடங்கிய அமைப்பு எது?
Correct
விளக்கம்
- பன்னாட்டு சட்ட அமலாக்க நிறுவனமான இன்டர்போல் “ஐ-பேமிலியா” என்ற உலகளாவிய தரவுத்தளத்தை தொடங்கியுள்ளது. இத்தரவுத்தளம் குடும்ப உறுப்பினர்களின் DNA’ஐப் பயன்படுத்தி காணாமல் போனவர்க -ளை அடையாளங்காணும் நோக்கங்கொண்டது.
- DNA தகவல்கள்கொண்ட பிரத்யேக உலகளாவிய தரவுத்தளம், போனபர்டே எனப்படும் DNA’ஐப் பொருத்திப் பார்க்கும் மென்பொருள் மற்றும் இன்டர்போல் உருவாக்கிய விளக்க வழிகாட்டுதல்கள் ஆகிய மூன்று கூறுகளை ‘ஐ-பேமிலியா’ கொண்டுள்ளது.

Question 30 of 50
30. Question
எத்தனை அளவுருக்களின் அடிப்படையில், செயல்திறன் தரவரிசைக்குறியீடு அல்லது PGI 2019-20 வெளியிடப்பட்டது?
Correct
விளக்கம்
- செயல்திறன் தரவரிசைக்குறியீடு அல்லது PGI 2019-20 என்பது இந்திய மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களின் கல்வி தொடர்பான குறியீடு ஆகும். இதனை வெளியிட மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இக்குறியீடு, 70 அளவுருக்களின் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டது. இக்குறியீட்டின்கீழ், பஞ்சாப், சண்டிகர், தமிழ்நாடு, அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் கேரளா ஆகியவை 2019-20ஆம் ஆண்டிற்கான குறியீட்டில் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.

Question 31 of 50
31. Question
இந்திய சுற்றுச்சூழல் அறிக்கை – 2021’இன்படி, 17 நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதில் இந்தியாவின் தரநிலை என்ன?
Correct
விளக்கம்
- இந்தியாவின் சுற்றுச்சூழல் அறிக்கை – 2021 என்பது டௌன் டூ எர்த் இதழின் வருடாந்திர வெளியீடு ஆகும். இந்த அறிக்கையின்படி, 2030 நீடித்த வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதிலும், அடைவதிலும் இந்தியா 117ஆவது இடத்திலுள்ளது. கடந்த ஆண்டு, இந்தியா, 115ஆவது இடத்திலிருந்தது. பட்டினியில்லாமை, பாலின சமத்துவம்போன்ற முதன்மை சவால்களின் காரணமாக ஈரிடங்களை இந்தியா இழந்துள்ளது.

Question 32 of 50
32. Question
விருச்சிக விண்மீன் குழாம், கோடைத்திருப்புநிலை மற்றும் ஸ்ட்ராபெரி நிலவு ஆகிய பல்வேறு விண் நிகழ்வுகள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிற மாதம் எது?
Correct
விளக்கம்
- ஜூன்.10 அன்று சூரிய கிரகணமும், ஜூன்.20-21 ஆகிய தேதிகளில், வசந்த காலத்தின் வானியல் ரீதியிலான முடிவும் கோடைகாலத்தின் தொடக்கமும் ஏற்படும். இது நீண்டபகலைக்கொண்ட காலமாக இருக்கும். கோடைகால அந்திகளில், தென்வானம் முழுவதும் விண்மீன்களின் குழுவாகக் காணப்படுகிறது. அது விருச்சிக விண்மீன் குழாம் ஆகும். அது ஜூன் மாதத்தில் காணப்படுகிறது. ஜூன் முழு நிலவு, ‘ஸ்ட்ராபெரி நிலவு’ என்றும் அழைக்கப்படுகிறது.

Question 33 of 50
33. Question
அலெக்சாண்டர் புஷ்கின் என்பவர் பின்வரும் எந்த மொழிசார்ந்த புகழ்பெற்ற கவிஞராவார்?
Correct
விளக்கம்
- அலெக்சாண்டர் புஷ்கின் என்பவர் ஒரு உருஷிய கவிஞராவார். அவர், நவீன உருஷிய மொழியின் தந்தையாக கருதப்படுகிறார். அவரது பிறந்த நாள் ஐநா உருஷிய மொழி நாளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த நாள், ஆண்டுதோறும் ஜூன்.6 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
- இந்த நிகழ்வு, தொடக்கத்தில் ஐநா கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (UNESCO) கடந்த 2010ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஐநா மொழி நாட்கள், பன்மொழித்துவத்தைக் கொண்டாடுவதையும் ஐநா’இன் ஆறு அலுவல்பூர்வ மொழிகளின் சமமான பயன்பாட்டை ஊக்குவிப்பதை -யும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

Question 34 of 50
34. Question
நடப்பாண்டின் (2021) உலக பெருங்கடல்கள் நாளுக்கான கருப் -பொருள் என்ன?
Correct
விளக்கம்
- உலக பெருங்கடல்கள் நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.8 அன்று அனுசரிக்கப்படுகிறது. அன்றைய நாளில், ஐநா அவை, பெருங்கடல்களைக் காப்பதற்காக நிலையான முன்னெடுப்புகள் மற்றும் நெகிழி மாசு -பாட்டை ஒழிப்பதற்காக அழைப்புவிடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால், ஐநா உலக பெருங்கடல்கள் நாளைய் கொண்டாட்டங் -கள் இரண்டாமாண்டாக இவ்வாண்டும் மெய்நிகர் முறையில் நடந்தது. “The Ocean: Life and Livelihoods” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.

Question 35 of 50
35. Question
‘உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூக பார்வை: போக்குகள் 2021’ என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட அமைப்பு எது?
Correct
விளக்கம்
- பன்னாட்டு தொழிலாளர் அமைப்பானது (ILO) ‘உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூக பார்வை: போக்குகள் 2021’ என்ற தலைப்பில் மதிப்பீட்டை வெளியிட்டது.
- இந்த அறிக்கையின்படி, உலகளாவிய நெருக்கடியால் உண்டாக்கப்பட்ட ‘வேலைவாய்ப்பு இடைவெளி’, 2022ஆம் ஆண்டில் 23 மில்லியனாக ஆவதற்கு முன்னர், நடப்பு 2021ஆம் ஆண்டில் 75 மில்லியனை எட்டும். குறைந்தது 2023ஆம் ஆண்டு வரை, ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய, வேலைவாய்ப்பு வளர்ச்சி போதுமானதாக இராது என்றும் அவ்வறிக்கை கணித்துள்ளது.

Question 36 of 50
36. Question
107 ஆண்டுகள் பழைமையான பில்லிமோரா-வாகாய் பாரம்பரிய இரயில் இயங்குகிற மாநிலம் எது?
Correct
விளக்கம்
- நவ்சாரியில் உள்ள பில்லிமோராவிற்கும், தெற்கு குஜராத்தின் டாங்ஸில் உள்ள வாகாய்க்கும் இடையே 107 ஆண்டுகள் பழைமையான குற்றக -லப்பாதையில் பாரம்பரிய இரயில் சேவையின் முதல் சோதனை ஓட்டம் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. 2020 டிசம்பரில், மேற்கு ரயில்வே இந்த சேவையை இரத்துசெய்தது. பின்னர் அது மறுபரிசீலனை செய்யப்பட்டது. இந்த ரயில் சேவை, 1913ஆம் ஆண்டில், பரோடாவின் மன்னர் அரசான கெய்க்வாட் வம்சத்தால் தொடங்கப்பட்டது.

Question 37 of 50
37. Question
“Safe food today for a healthy tomorrow” என்பது ஜூன்.7 அன்று கடைப்பிடிக்கப்பட்ட எந்த நாளின் கருப்பொருளாகும்?
Correct
விளக்கம்
- கடந்த 2018ஆம் ஆண்டில், ஐநா பொது அவையானது ஆண்டுதோறும் ஜூன்.7 – உலக உணவு பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தது. ஐநா’இன் கூற்றுப்படி, பாதுகாப்பற்ற உணவினால் ஒவ்வோர் ஆண்டும் 420,000 பேர் மரணிக்கின்றனர். “Safe food today for a healthy tomorrow” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

Question 38 of 50
38. Question
உச்சநீதிமன்றத்தால் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவத -ற்கு உத்தரவிடப்பட்ட ஆரவல்லி வனப்பகுதி அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- பரிதாபாத்தில் உள்ள ஒரு சிற்றூருக்கு அருகிலுள்ள ஆரவல்லி காட்டில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுமாறு ஹரியானா மாநில அரசுக்கும் பரிதாபாத் மாநகராட்சிக்கும் இந்திய உச்சநீதிமன்றம் ஆணை -யிட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் சுமார் 10,000 குடியிருப்புகளைக் கொண்டுள்ளன.

Question 39 of 50
39. Question
பின்வரும் திட்டங்களுள், ஆத்மநிர்பார் பாரத் தொகுப்பின் ஒருபகுதியாக மத்திய அரசால் தொடங்கப்பட்ட உணவுப்பாதுகாப்புத்திட்டம் எது?
Correct
விளக்கம்
- ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு உணவு தானியங்களை இலவசமாக வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஆத்மநிர்பார் பாரத் தொகுப்பின் ஒருபகுதியாக இந்திய அரசு பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா (PM-GKAY) என்ற உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கியது. அண்மையில், 2021 தீபாவளி (அதாவது) நவம்பர் 2021 வரை இந்தத் திட்டம் நீட்டிக்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

Question 40 of 50
40. Question
எந்நாட்டிடமிருந்து, MH-60 ரோமியோ உலங்கு வானூர்திகளை இந்தியக் கடற்படை வாங்குகிறது?
Correct
விளக்கம்
- இந்தியக்கடற்படையானது ஐக்கிய அமெரிக்க நாடுகளிலிருந்து MH-60 ரோமியோ உலங்கு வானூர்திகளைக் வாங்கவுள்ளது. முன்னதாக, 2020ஆம் ஆண்டில் இந்தியா, ஐக்கிய அமெரிக்க நாடுகளுடன் `16,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
- இந்திய விமானிகள் குழு ஐக்கிய அமெரிக்க நாடுகளை (USA) அடைந்து, இதனை இயக்குவதற்கான பயிற்சியைப் பெற்றனர்.

Question 41 of 50
41. Question
ஐநா பொருளாதார மற்றும் சமூக அவை (ECOSOC), எத்தனை உறுப்பினர்களைக் கொண்டுள்ளது?
Correct
விளக்கம்
- ஐநா பொருளாதார மற்றும் சமூக அவை (ECOSOC) என்பது ஐநா’இன் முக்கிய உறுப்புகளுள் ஒன்றாகும். அது 54 உறுப்பினர்களைக்கொண்டுள்ளது. இதன் உறுப்பினர்கள் ஒவ்வோராண்டும் 3 ஆண்டு பதவிகாலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
- ரகசிய வாக்கெடுப்பின்மூலம் 2022-2024 வரையிலான மூன்றாண்டு காலத்திற்கு, இந்தியா, ECOSOC’க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Question 42 of 50
42. Question
ஐநா அவையின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அப்துல்லா ஷாஹித் சார்ந்த நாடு எது?
Correct
விளக்கம்
- தற்போது மாலத்தீவுகளின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் அப்துல்லா ஷாஹித், ஐக்கிய நாடுகள் அவையின் அடுத்த தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஐநா’இன் தலைமைப்பொறுப்பை மாலத்தீவுகள் கைப்பற்றுவது இதுவே முதல்முறையாகும். ஐநா’இன் 76ஆவது அமர்வு (2021-22), ஆசிய-பசிபிக் குழுமத்தின் முறையாகும்.

Question 43 of 50
43. Question
cooperensis என்பது அண்மையில் எந்த நாடு / பிராந்தியத்தின் மிகப்பெரிய தொன்மாவாக அடையாளங்காணப்பட்டுள்ளது?
Correct
- ஆசுதிரேலியாவின் மிகப்பெரிய தொன்மாவாக Australotitan cooperensis அடையாளங்காணப்பட்டுள்ளது. அண்மையில் அதன் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இது சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த டைட்டனோசர் குடும்பத்தின் ஒருபகுதியாகும். இது 5-6.5 மீ., உயரமும் 25-30 மீட்டர் நீளமும் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மூட்டளவு ஒப்பீடுகளின் அடிப்படையில், இப்புதிய டைட்டனோசர், உலகின் முதல் 5 இடங்களுள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Question 44 of 50
44. Question
‘சுரக்ஷித் ஹம் சுரக்ஷித் தும் அபியான்’ என்பது எந்நிறுவனத்தின் முன்னெடுப்பாகும்?
Correct
விளக்கம்
- அறிகுறியற்ற மற்றும் மிதமான COVID-19 பாதிப்புள்ள நோயாளிகளுக்கு, வீட்டுக்குச்சென்று பராமரிப்பு உதவிகளை அளிப்பதில் மாவட்ட நிர்வாகத் -துக்கு உதவ, ‘சுரக்ஷித் ஹம் சுரக்ஷித் தும் அபியான்’ (எங்களுக்கும் பாதுகாப்பு, உங்களுக்கும் பாதுகாப்பு) என்ற திட்டத்தை 112 இலக்கு மாவட்டங்களில் NITI ஆயோக்கும் பிரமல் அறக்கட்டளையும் தொடங்கின.

Question 45 of 50
45. Question
சர்வதேச கோல் எண்ணிக்கைகளில் லியோனல் மெஸ்ஸியை விஞ்சிய இந்திய கால்பந்து வீரர் யார்?
Correct
விளக்கம்
- இந்திய கால்பந்து வீரரான சுனில் சேத்ரி சர்வதேச கோல் எண்ணிக்கைகளில் லியோனல் மெஸ்ஸியை விஞ்சியுள்ளார். அண்மையில் தோகாவில், வங்கதேசத்தை எதிர்த்து இந்தியா பெற்ற 2-0 என்ற கோல் கணக்கில், இருகோல்களையும் அவரே அடித்தார். 2022 FIFA உலகக் கோப்பை மற்றும் 2023 AFC ஆசிய கோப்பைக்கான தகுதிப்போட்டியில் அடித்த கோல்களின்மூலம் மெஸ்ஸியின் 72 கோல் எண்ணிக்கையை சேத்ரி கடந்தார். சர்வதேச பட்டியலில், போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 103 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

Question 46 of 50
46. Question
இந்தியாவின் முதல் CAR-T செல் சிகிச்சையானது அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. கீழ்காணும் எந்த நோயில் இச்சிகிச்சைமுறை பயன்படுத்தப்படுகிறது?
Correct
விளக்கம்
- மும்பையில் உள்ள TATA நினைவு மருத்துவ மனை, மும்பை IIT குழு ஆகியவை இணைந்து புற்றுநோய்க்கான முதல் CAR-T செல் சிகிச்சை -யை, எலும்பு மஜ்ஜை மாற்று மையத்தில் மேற்கொண்டன. இதற்கு உயிரித்தொழில்நுட்பத்துறை ஆதரவு தெரிவித்துள்ளது.
- இந்தக்குழுவினர் தங்கள் ஆய்வு திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாவது கட்டப்பரிசோதனைகளை மனிதர்களிடம் மேற்கொள்ள, உயிரித்தொழில் நுட்பத்துறை மற்றும் பிராக் ஆகியவை தேசிய பயோபார்மா திட்டம் மூலம் `19.15 கோடி நிதியுதவி அளிக்கின்றன. இந்த மரபணு சிகிச்சை இந்தியாவில் முதல்முறையாக மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

Question 47 of 50
47. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற வட அட்லாண்டிக் வல திமிங்கலம், IUCN செம்பட்டியலில், எவ்வகையின்கீழ் வைக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- ஓர் அண்மைய ஆய்வின்படி, வட அட்லாண்டிக் வல திமிங்கலங்களின் இளந்தலைமுறைகள், இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த திமிங்கலங்களைவிட 3 அடி நீளங்குறைவாக உள்ளன. மீன்பிடி கருவி உடனான சிக்கல்கள், கப்பல்களுடனான மோதல்கள் மற்றும் அவற்றின் உணவுப் பரவலை வடக்கே நகர்த்தும் காலநிலைமாற்றம் ஆகியவை இந்நிகழ்வுக்கு காரணங்கள் என்று கூறப்படுகிறது. இவ்வகை திமிங்கலங்களை IUCN, ‘மிகவும் அருகிவிட்ட இனம்’ என வகைப்படுத்தியுள்ளது.

Question 48 of 50
48. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற எகோ டம்பிங் மலை அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- சமீபத்தில், வனவுயிரி ஆர்வலர்கள் குழு ஒன்று கடல் மட்டத்திலிருந்து 4,173 மீ உயரத்தில், எகோ டம்பிங் மலையில், இரண்டு வகையான மோனல் பறவைகளைக்கண்டது. அது அருணாசல பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. இமயமலை மோனல் (Lophophorus impejanus) ஆப்கானிஸ்தான் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் பரவலாக காணப்படுகிறது. கொண்டையற்ற (Lophophorus sclateri) மோனல்கள் சீனா மற்றும் மியான்மரில் பரவலாக காணப்படுகிறன.

Question 49 of 50
49. Question
நெல், எள், துவரை மற்றும் உளுந்து ஆகியவற்றின் குறைந்தபட்ச ஆதரவு விலைகள் அண்மையில் உயர்த்தப்பட்டன. இவை _____ வகை பயிர்கள்.
Correct
விளக்கம்
- 2021-22ஆம் ஆண்டில் காரீப் சந்தை பருவத்தின் அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது.
- அதிகபட்ச உயர்வாக, எள்ளுக்கு கடந்த ஆண்டு குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட குவின்டால் ஒன்றுக்கு `452 அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. துவரை மற்றும் உளுந்துக்கு `300 அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நிலக்கடலைக்கு குவின்டாலுக்கு `275 அதிகரிக்க பரிந் -துரைக்கப்பட்டுள்ளது. நெல் பொதுவான ரகத்தின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவின்டாலுக்கு `1868’லிருந்து `1940 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதல் இரக நெல்லின் விலை `1960 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Question 50 of 50
50. Question
QS உலக தரவரிசை 2022’இன் படி, உலகின் சிறந்த ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக இடம்பெற்றுள்ள இந்திய நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- பல்கலைக்கழக தரவரிசைகளின் வருடாந்திர வெளியீடான குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (QS) உலக தரவரிசை 2022 ஆனது அண்மையில் வெளியிடப்பட்டது. இவ்வெளியீட்டின்படி, பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் (IISc), “உலகின் சிறந்த ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக” இடம் பெற்றுள்ளது. இந்நிறுவனம், ‘ஒருவர் சமர்ப்பித்துள்ள ஆய்வுக்கட்டுரை’ என்ற மதிப்பீட்டின்கீழ் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளது.

Leaderboard: June 3rd Week 2021 Current Affairs Online Test Tamil