June 2nd Week 2021 Current Affairs Online Test Tamil

Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
தேசிய மாணவர் படையின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
Correct
விளக்கம்
- தேசிய மாணவர் படை என்பது இந்திய ஆயுதப்படைகளின் இளையோர் பிரிவாகும். அதன் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது.
- தேசிய மாணவர் படை தலைமை இயக்குநரகத்தின் திறன்பேசி பயிற்சி செயலி 2.0’ஐ 2021 மே.28 அன்று பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர் அஜய்குமார் தொடங்கிவைத்தார். COVID-19 பெருந்தொற்றின்போது நாடு முழுவதும் உள்ள தேசிய மாணவர் படையினருக்கு இணையவழியில் பயிற்சியளிப்பதற்கு இந்தச் செயலி உதவிகரமாக இருக்கும்.
Incorrect

Question 2 of 50
2. Question
புலம்பெயர் வனவுயிரிகளுக்கான பாதுகாப்பு அமைப்பின் தூதர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட இந்தியர் யார்?
Correct
விளக்கம்
- ஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் கீழியங்கும் புலம்பெயர் வனவுயிரிகளின் பாதுகாப்பு அமைப்பின் தூதர் பதவியிலிருந்து ரண்தீப் ஹூடா நீக்கப்பட்டு -ள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயாவதி குறித்து அவதூறா -க பேசியதற்காக நடிகர் ரண்தீப் ஹுடா ஐநா தூதர் பதவியிலிருந்து நீக் -கப்பட்டுள்ளார். CMS அல்லது பான் தீர்மானம் என்பது கடந்த 1979’இல் கையெழுத்திடப்பட்ட ஒரு சர்வதேச தீர்மானமாகும். அது புலம்பெயர்ந்த உயிரினங்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Question 3 of 50
3. Question
நடப்பாண்டில் (2021) வரும் உலக புகையிலை ஒழிப்பு நாளுக்கான கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- உலகளாவிய புகையிலை நுகர்வினை 24 மணிநேர காலத்திற்கு தவிர்ப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒவ்வோர் ஆண்டும் மே.31 அன்று உலக புகையிலை ஒழிப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது.
- புகைப்பதனால் ஏற்படும் உடல்நலச்சீர்கேடு விளைவுகளால் தற்போது உலகெங்கிலும் கிட்டத்தட்ட 6 மில்லியனுக்கும் அதிகமானோர் மரணிக் -கின்றனர். இதில் 6 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் புகைப்பவர்களின் அருகில் இருப்பதாலேயே நோய்த்தாக்கத்திற்கு ஆளாகிறார்கள். “Quit Tobacco to be a Winner” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

Question 4 of 50
4. Question
உலக கடலாமை நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும் மே.23 அன்று உலகம் முழுவதும் உலக கடலாமை நாள் அனுசரிக்கப்படுகிறது. நிலம் மற்றும் நீரில் வாழும் ஆமை மற்றும் அவற்றின் பாதிக்கப்படக்கூடிய வாழ்விடங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்நாள் கொண்டாடப்படுகிறது.
- 1990’இல் நிறுவப்பட்ட அமெரிக்க ஆமை மீட்பு என்ற இலாபநோக்கற்ற அமைப்பு, கடந்த 2000ஆம் ஆண்டு முதல் உலக கடலாமை நாள் கொ -ண்டாட்டத்திற்கு தலைமைதாங்குகிறது. “Turtles Rock!” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

Question 5 of 50
5. Question
பரப்பளவில் இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமும் மே.30 அன்று அதன் மாநில நாளைக் கொண்டாடும் மாநிலமும் எது?
Correct
விளக்கம்
- கோவா – இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமாகவும், மக்கள்தொகை அடிப்படையில் நான்காவது சிறிய மாநிலமாகவும் உள்ளது. அண்மையில் இது தனது மாநில நாளை மே.30 அன்று கொண்டாடியது. 1961ஆம் ஆண்டில், ‘ஆபரேஷன் விஜய்’மூலம் இந்திய ராணுவம் கோவா, டாமன் & டையூ ஆகியவற்றை இந்திய ஒன்றியத்துடன் இணைத்தது.
- அதன்பிறகு கோவா, டாமன் & டையூவுடன் இணைந்து இந்தியாவின் மத்திய நிர்வாக யூனியன் பிரதேசமாக வகைப்படுத்தப்பட்டது. கடந்த 1987 மே.30 அன்று அந்த யூனியன் பிரதேசம் பிளவுபட்டு, கோவா இந்தியாவின் 25ஆவது மாநிலமாக அறிவிக்கப்பட்டது. டாமன் & டையூ தொடர்ந்து யூனியன் பிரதேசமாகவே இருந்தது.

Question 6 of 50
6. Question
பன்னாட்டு எவரெஸ்ட் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஆண்டுதோறும் மே.29 அன்று உலகெங்கும் பன்னாட்டு எவரெஸ்ட் நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த 1953ஆம் ஆண்டு இதே நாளன்று, நேபாளத்தின் டென்சிங் நோர்கே மற்றும் நியூசிலாந்தின் எட்மண்ட் ஹிலாரி ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை வெற்றிகரமாக அடைந்தனர். போற்றத்தக்க இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் மனி -தர்களாவர் இவ்விருவர்.
- 2008ஆம் ஆண்டில் எட்மண்ட் ஹிலாரி காலமானதிலிருந்து இந்நாளை பன்னாட்டு எவரெஸ்ட் நாளாகக் கொண்டாட நேபாளம் முடிவுசெய்தது.

Question 7 of 50
7. Question
ஒலிபரப்பாளர்களின் உயர்மட்ட அமைப்பான இந்திய ஒலிபரப்பு அறக்கட்டளையின் புதிய பெயர் என்ன?
Correct
விளக்கம்
- ஒலிபரப்பாளர்களின் உயர்மட்ட அமைப்பான இந்திய ஒலிபரப்பு அறக்கட்டளையானது இந்திய ஒலிபரப்பு மற்றும் டிஜிட்டல் அறக்கட்டளை என மறுபெயரிடப்பட்டுள்ளது.
- டிஜிட்டல் ஊடக உள்ளடக்க ஒழுங்குமுறை கவுன்சில் என்ற தன்கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்குவதன்மூலம், டிஜிட்டல் தளங்களை உள்ளடக்கும் வகையில் அதன் பார்வையை விசாலாமாக்குகிறது இந்த அமைப்பு. ஒலிபரப்பாளர்களையும், OTT தளங்களையும் இது ஒரே கூரையின்கீழ் கொண்டுவரும்.

Question 8 of 50
8. Question
1977 அமைதிக்கான நோபல் பரிசை வென்ற எந்த அரசு சாரா அமைப்பு, மே.28 அன்று நினைவுகூரப்படுகிறது?
Correct
விளக்கம்
- பன்னாட்டு மன்னிப்பு அவை என்பது மனிதவுரிமைகளை மையமாகக் கொண்ட ஓர் அரசு-சாரா அமைப்பாகும். இது, கடந்த 1961ஆம் ஆண்டில் லண்டனில் நிறுவப்பட்டது. பன்னாட்டு பொது மன்னிப்பு நாளானது ஒவ்வோர் ஆண்டும் மே.28 அன்று கொண்டாடப்படுகிறது.
- சித்திரவதைக்கு எதிரான பரப்புரைக்காக, 1977ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசும், 1978’இல் மனிதவுரிமைகள் துறையில் ஐக்கிய நாடுகள் பரிசும் வழங்கப்பட்டது.

Question 9 of 50
9. Question
உலக பால் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.1 அன்று உலக பால் நாள் கொண்டாடப்படுகிறது. முதல் உலக பால் நாள், 2001ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. பாலின் பங்கை சிறப்பித்துக்கூறுவதற்கும், பால் மற்றும் பால் உற்பத்தித் துறையுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை கொண்டு சேர்ப்பதற்குமாக ஐநா அவையின் உணவு மற்றும் உழவு அமைப்பு ஜூன்.1ஆம் தேதியை உலக பால் நாளாக தேர்வுசெய்தது.

Question 10 of 50
10. Question
உலக பெற்றோர் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- 2012’இல், ஜூன்.1ஆம் தேதியை, உலக பெற்றோர் நாளாக ஐநா பொது அவை அறிவித்தது. அதன்பின்னர், ஆண்டுதோறும் ஜூன்.1 அன்று உலக பெற்றோர் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகெங்கும் உள்ள அனைத்து பெற்றோர்களையும், தங்கள் குழந்தைகளுக்காக அவர்கள் செய்யும் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்திற்காக அவர்களை கெளரவிக்கும் நோக்கத்துடன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
- “Appreciate All Parents Throughout the World” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.

Question 11 of 50
11. Question
உலக மிதிவண்டி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஐநா பொது அவையானது ஜூன்.3ஆம் தேதியை உலக சைக்கிள் நாளாக அறிவித்தது. நீடித்த வளர்ச்சி மற்றும் நலத்தை மேம்படுத்துவதற்கான ஒருவழியாக, மிதிவண்டிப் பயன்பாட்டை ஊக்குவிக்க ஐநா அதன் இணை அமைப்புகளை ஊக்குவிக்கிறது. தேசிய மற்றும் உள்ளூரளவில் மிதிவண்டிப்பேரணிகளை நடத்துவதற்கும், சமூகத்தில் மிதிவண்டி ஓட் -டுதல் கலாசாரத்தை வளர்ப்பதற்கும் இந்நாள் பல்வேறு முன்னெடுப்புக -ளுக்கு அழைப்பு விடுக்கிறது.

Question 12 of 50
12. Question
ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறார்களுக்கான பன்னாட் -டு நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது?
Correct
விளக்கம்
- ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறார்களுக்கான பன்னாட்டு நாள் ஆனது ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.4ஆம் தேதி அன்று ஐநா அமைப்பால் நினைவுகூரப்படும் ஒரு நாளாகும். இது, 1982 ஆக.19 முதல் ஆண்டுதோ -றும் நினைவுகூரப்பட்டு வருகிறது.
- உடல், மன மற்றும் உணர்ச்சி ரீதியான பாதிப்புகளுக்கு ஆளான உலகெங்கிலும் உள்ள சிறார்கள் அனுபவிக்கும் வலியை உணர்ந்துகொள்வதே இதன் நோக்கமாகும். இந்த நாள் சிறார்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐநா’இன் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.

Question 13 of 50
13. Question
“சட்டத்துக்குப்புறம்பான, பதிவுசெய்யப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடித்தலை தடுப்பதற்கான பன்னாட்டு நாள்” அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- “சட்டத்துக்குப் புறம்பான, பதிவுசெய்யப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பி -டித்தலை தடுப்பதற்கான பன்னாட்டு நாள்”, ஒவ்வோராண்டும் ஜூன்.5 அன்று அனுசரிக்கப்படுகிறது. கட்டுப்பாடற்ற மீன்பிடி நடவடிக்கைகளால் மீன்வளங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து உணர்துதலே இந் நாளின் நோக்கமாகும். கடந்த 2017 நவம்பரில், ஐநா பொது அவை, ஜூன் 5ஆம் தேதியை இந்தச் சிறப்பு நாளாக அறிவித்தது. கடந்த 2018ஆம் ஆண்டில் முதன்முறையாக இந்நாள் கொண்டாடப்பட்டது.

Question 14 of 50
14. Question
நியூ கினியாவின் மழைக்காடுகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட ‘லிட்டோரியா மிரா’ என்பது ஒரு____?
Correct
விளக்கம்
- ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள் குழுவானது நியூ கினியாவின் மழைக் காடுகளிலிருந்து ஒரு புதிய மரத்தவளை இனத்தைக் கண்டறிந்துள்ளது. அதன் சாக்லேட் நிறம் காரணமாக, “சாக்லேட் தவளை” என்றும் அது அழைக்கப்படுகிறது. அது லிட்டோரியா என்ற ஆஸ்திரேலிய மரத்தவளை இனத்தைச்சேர்ந்ததாகும். எனவே இப்புதிய இனத்திற்கு ‘லிட்டோரியா மிரா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய இனத்தின் நெருங்கிய இனமாக ஆஸ்திரேலிய பச்சை மரத்தவளை இனம் உள்ளது.

Question 15 of 50
15. Question
நான்ஸி கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கும் நாடு எது?
Correct
விளக்கம்
- நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கி என்பது NASA’இன் புதிய அடுத்த தலைமுறை விண்வெளி தொலைநோக்கியாகும். அது தற்போது உருவாக்க நிலையில் உள்ளது. முன்னர், Wide Field Infrared Survey தொலைநோக்கி என்று அழைக்கப்பட்ட இது, NASA’இன் முதல் வானியல் துறை தலைவரான நான்ஸி கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கி எனப் பெயரிடப்பட்டது. அண்மையில், சூப்பர்நோவா எனப்படும் ஆயிரக்கணக்கான வெடிக்கும் விண்மீன்கள் இந்தத்தொலை நோக்கிமூலம் கண்காணிக்கப்படுவதாக NASA அறிவித்தது.

Question 16 of 50
16. Question
நடப்பாண்டில் (2021) வரும் உலக பெருங்கடல்கள் நாளுக்கான கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- உலக பெருங்கடல்கள் நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.8 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பெருங்கடல்களைக் கொண் -டாட மக்களை ஊக்குவிப்பதற்கும், கடல் நலத்தைப்பாதுகாக்க நடவடிக் -கை எடுப்பதற்கும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
- “The Ocean: Life and Livelihoods” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். கடந்த 1992ஆம் ஆண்டில் ரியோ டி ஜெனிரோவில் நடந்த புவி உச்சிமாநாட்டில், உலக பெருங்கடல்கள் நாளைக் கொண்டாடுவதற்கான கருத்தை கனடா நாடு முன்மொழிந்தது. கடந்த 2008 டிசம்பரில், ஐநா அவை ஜூன்.8ஆம் தேதியை உலக பெருங்கடல்கள் நாளாக நியமித்து அறிவித்தது.

Question 17 of 50
17. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, அஸ்பெர்ஜில்லோசிஸ் என்பது ஒரு ______நோய்?
Correct
விளக்கம்
- அஸ்பெர்ஜிலஸ் பூஞ்சையால் ஏற்படும் தொற்று, ஒவ்வாமை அல்லது பூஞ்சை வளர்ச்சிதான் அஸ்பெர்ஜில்லோசிஸ். சமீபத்தில், இந்தியாவில் கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை பாதிப்புகள் கடுமையாக அதிகரித்த பின்னர், அஸ்பெர்ஜில்லோசிஸ் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
- COVID-19 நோயாளிகளில் பொதுவாகக் காணப்படும் வலுவிழந்த நோய் எதிர்ப்பு அமைப்புகள் (அ) நுரையீரல் நோய்கள் உள்ளவர்கள் இத்தொற்றுநோயால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

Question 18 of 50
18. Question
முதலமைச்சரின் சிசு சேவா திட்டத்தை தொடங்கிய மாநிலம் எது?
Correct
விளக்கம்
- COVID-19 காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலனுக்காக முதலமைச்சரின் சிஷு சேவா திட்டத்தை அஸ்ஸாம் அரசு சமீபத்தில் அறிவித்தது. பெற்றோரை இழந்த ஆனால் அவர்களின் குடும்ப உறுப்பினர்களைக்கொண்ட குழந்தைகளுக்கு மாதத்திற்கு மாத உதவித்தொகையாக `3,500 வழங்கப்படும். குடும்ப உறுப்பினர்களற்ற குழந்தைகட்கு இலவச குடியிருப்பும் கல்வி வசதிகளும் வழங்கப்படும்.

Question 19 of 50
19. Question
இந்தியாவின் முதல் நகர கழிவுநீர் கண்காணிப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- கர்நாடக மாநில அரசானது பெங்களூரில் நகர கழிவுநீர் கண்காணிப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆரம்ப கட்டத்தில் கொரோனா வைரஸைக் கண்காணிக்கும் நோக்கத்தினைக் கொண்டுள்ளது.
- கர்நாடகாவின் இந்த முன்னெடுப்பை USAID (United States Agency for International Development) மற்றும் COVIDactionCollab (CAC) ஆகியவை ஆதரிக்கின்றன. CAC ஆனது தூய்மைத்தொழிலாளர்களுக்கு மாதிரிகள் சேகரிப்பதற்கும் அவற்றை ஆய்வகங்களில் பகுப்பாய்வு செய்வதற்கும் பயிற்சியளிப்பதன்மூலம் மாநிலத்திற்கு உதவுகிறது.

Question 20 of 50
20. Question
கேரளாவைச்சார்ந்த தஸ்னீம் அஸ்லாம், பின்வரும் எந்நாட்டுக்கு விதிவிலக்கான மாணவர் பிரிவில், ‘தங்க விசா’வைப் பெற்றுள்ளார்?
Correct
விளக்கம்
- கேரளாவைச் சார்ந்த இந்திய மாணவர் தஸ்னீம் அஸ்லாம், ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து விதிவிலக்கான மாணவர் பிரிவின்கீழ் பத்தாண்டுக்கான ‘தங்க விசா’வைப் பெற்றுள்ளார். 2031ஆம் ஆண்டு வரை அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறார். இந்த விசா, மிகவும் புகழ்பெற்ற கல்வியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

Question 21 of 50
21. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, “கடற்கூழ்” என்பது எந்த நாட்டின் கடற்கரையில் குவிந்துவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
துருக்கி கடற்கரையில் கடற்கோழை அல்லது கூழ் குவிந்துவருவதாக கூறப்படுகிறது. கடற்கூழ் என்பது தடிமனான ஜெல்லிபோன்ற சேறாகும். இது அலைதாவரம் எனப்படும் நுண்தாவரங்களின் திடீர் அதீத இனப் பெருக்கத்தால் உருவாகிறது. காலநிலைமாற்றங்காரணமாக கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதே இவ்விளைவுக்கு வழிவகுத்ததாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அதீத மீன்பிடித்தலும் இதற்கு மூல காரணமாக இருக்கும் எனச் சிலர் கருதுகிறார்கள்.

Question 22 of 50
22. Question
“அகங்க்ஷா” என்ற பெயரில் இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ள மாநில அரசு எது?
Correct
விளக்கம்
- கர்நாடக மாநிலத்தின் அனைத்து பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகள்குறித்த விவரங்களை வழங்கும் “அகங்சஷா” என்ற பெயரிலான வலைத்தளத்தை கர்நாடக மாநில முதலமைச்சர் எடியுரப்பா தொடங்கினார். இந்த வலைத்தளம் மாநில அரசு அதிகாரிகள், பெரு நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு உதவும்.
- சமூக பொறுப்புணர்வு நிதியைப் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த இது முயற்சி செய்கிறது.

Question 23 of 50
23. Question
ஜெர்மனிக்கும் நார்வேக்கும் இடையிலான கடலுக்கடியில் உள்ள மின்வட திட்டத்தின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- ஜெர்மனியும் நார்வேயும் இருநாடுகளுக்கிடையில், 623 கிமீ கடலுக்கடியில் உள்ள மின்வடத்தின் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளன. இந்த திட்டம் ‘நார்ட்லிங்க்’ என அழைக்கப்படுகிறது. இருநாடுகளுக்கும் இடையில் பசுமை ஆற்றலை பரிமாறிக்கொள்ளும் நோக்கங்கொண்டது இது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற $2.2 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவாகியுள்ளது. இது பசுமை ஆற்றலுக்கு மாறுவதற்கான ஒரு முக்கிய முன்னெடுப்பாக கருதப்படுகிறது.

Question 24 of 50
24. Question
COVID துயரத்தைத் தணிக்கும் ஒரு நடவடிக்கையாக, இந்திய பொதுத்துறை வங்கிகள், பின்வரும் எந்த அளவுவரை பிணையற்ற கடன்களை தனிநபர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளன?
Correct
விளக்கம்
- COVID-19 தொற்றுநோயால் ஏற்படும் பண ரீதியான சிக்கல்களைத் தணிக்கும் ஒருநடவடிக்கையாக, இந்திய பொதுத்துறை வங்கிகள் (PSB), தனிநபர்களுக்கு, பிணையற்ற கடன்களின் வடிவில் `5 இலட்சம் வரை நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளன.
- தடுப்பூசி உற்பத்தியாளர்கள், மருத்துவமனைகள் / மருந்தகங்கள், நோ -யியல் ஆய்வகங்கள் போன்றவற்றுக்கு நிதியுதவி வழங்க PSB’கள் அறிமுகப்படுத்திய 3 புதிய கடன் தயாரிப்புகளில் இது ஒன்றாகும்.

Question 25 of 50
25. Question
“தியான்ஜோ -2” என்பது எந்த நாட்டின் விண்கலமாகும்?
Correct
விளக்கம்
- தியான்ஜோ-2 அல்லது “Heavenly Vessel” என்பது சீனாவின் சரக்கு கொண்டுசெல்லும் விண்கலமாகும். அது சீனாவால் உருவாக்கப்பட்டுவ -ரும் விண்வெளி நிலையத்திற்கு பொருட்கள், உபகரணங்கள் போன்றவற்றை எடுத்துச்சென்றது. அது, அவ்விண்வெளி நிலையத்தின் ஒரு பகுதியாக இருக்கும் டியான்ஹே தொகுதியுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. லாங் மார்ச்-7 Y3 ஏவுகணையைப் பயன்படுத்தி புவியில் இருந்து அவ்விண்கலம் ஏவப்பட்டது.

Question 26 of 50
26. Question
பூஜா இராணி போராவுடன் தொடர்புடைய விளையாட்டு எது?
Correct
விளக்கம்
- துபாயில் நடந்துவரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பூஜா இராணி போரா தனது இரண்டாவது கண்ட அளவிலான பட்டத்தை வென்றுள்ளார். உஸ்பெகிஸ் -தானின் மவ்லுடா மோவ்லோனோவாவுக்கு எதிராக 75 கிகி பிரிவில் 5-0 என்ற கோல் கணக்கில் அவர் வெற்றியை பதிவுசெய்தார்.

Question 27 of 50
27. Question
ஆண்டுதோறும் உலக நலவாழ்வமைப்பால், ‘உலக புகையிலை ஒழிப்பு நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஆண்டுதோறும் மே.31ஆம் தேதியை, உலக நலவாழ்வு அமைப்பு (WHO) “உலக புகையிலை ஒழிப்பு நாள்” எனக்கொண்டாடுகிறது. “Commit to quit” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருள் ஆகும். புகையிலை தொற்று மற்றும் புகையிலையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் இறப்புகள் குறித்து உலகளாவிய கவனத்தை ஈர்க்க, 1987 ஆம் ஆண்டில் WHO உறுப்பினர்களால் இந்த நாள் உருவாக்கப்பட்டது.
- 1988ஆம் ஆண்டு மே.31 அன்று புகையிலை ஒழிப்பு நாளாக கொண்டாட ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Question 28 of 50
28. Question
ECLGS 4.0’இல், பின்வரும் துறைகளுள் எது சேர்க்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- ஒன்றிய அரசானது அவசரகால கடனுறுதித் திட்டம் 4.0’ஐ அறிமுகப்படுத்தியுள்ளதுடன், உள்நாட்டு வான் போக்குவரத்துத்துறையையும், உள்ளக உயிர்வளி உற்பத்திசெய்யும் நலவாழ்வு நிறுவனங்களுக்கு கடனளி -ப்பதையும் திட்டத்தின் நோக்கமாக விரிவுபடுத்தியுள்ளது.
- ECLGS 4.0’இன்கீழ் நிலுவையில் உள்ள கடனில் அதிகபட்சமாக 40% கடன் அல்லது `200 கோடி எது குறைவாக உள்ளதோ அதனை நிதி நிறுவனங்களிலிருந்து கடன் பெறுபவர்களால் பெறமுடியும்.

Question 29 of 50
29. Question
ESIC மற்றும் EPFO திட்டங்களைச் செயல்படுத்துகிற ஒன்றிய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகமானது ESIC மற்றும் EPFO திட்டங்களின்கீழ் இணைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அவர்களின் குடும்பத்தின் நலவாழ்வுகுறித்த அச்சத்தையும் கவலையை -யும் நீக்கும் விதமாக கூடுதல் பயன்களை அறிவித்துள்ளது.
- இப்புதிய நன்மைகளின்படி, COVID காரணமாக ஓர் ஊழியர் இறந்தால், பணியின்போதான காயத்தால் ஏற்படும் இறப்பில் கிடைக்கப்பெறும் அதே நன்மைகளைப்போன்று, காப்பீடு செய்யப்பட்ட நபரின் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் பயன்கள் வழங்கப்படும்.

Question 30 of 50
30. Question
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் குழந்தைகளுக்கான அவசரகால உதவி எண் என்ன?
Correct
விளக்கம்
- ஒன்றிய அரசின் உதவி எண்கள்பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி தனியார் பொழுதுபோக்கு அலைவரிசைகளுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.
- ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் உதவி எண் – 1075, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவி எண் – 1098, சமூகநீதித்துறையின் மூத்த குடிமக்களுக்கான உதவி எண் – 14567, நிம்ஹன்ஸ் அமைப்பின் உளவியல் ஆதரவு உதவி எண் – 08046110007 ஆகியவற்றை தனியார் பொழுதுபோக்கு அலைவரிசைகள், தாங்கள் ஒளிபரப்பும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கிடையே ஒளிபரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Question 31 of 50
31. Question
NASA’இன் கியூரியாசிட்டி ஆய்வூர்தி, எந்த வான்பொருளில் அமைந்துள்ள கேல் பள்ளத்தின் மீதிருந்த மேகங்களைப் படம்பிடித்து உள்ளது?
Correct
விளக்கம்
- NASA’இன் கியூரியாசிட்டி ஆய்வூர்தியானது செவ்வாய் கிரகத்தின் கேல் பள்ளத்திற்கு மேல் காணப்பட்ட மேகங்களைப் படம்பிடித்துள்ளது. 154 கிமீ விட்டம்கொண்ட இப்பள்ளம், சுமார் 3.5-3.8 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது. கேல் பள்ளத்தின் மீது உலவும் விசித்திரவகை மேகங்கள்குறித்து ஆய்வுசெய்வதற்காக, கியூரியாசிட்டி ஆய்வூர்தியால் சமீபத்தில் எடுக்கப்பட்ட 21 தனித்தனி நிழற்படங்களின் கலவைதான் இந்த நிழற்படம்.

Question 32 of 50
32. Question
உலக மூளைக்கட்டி நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உலக மூளைக்கட்டி நாளானது ஆண்டுதோறும் ஜூன்.8 அன்று உலகம் முழுமைக்கும் அனுசரிக்கப்படுகிறது. மூளைக்கட்டி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அதுகுறித்து மக்களுக்கு அறிவுறுத்துவதும் இந்த நாளின் நோக்கமாகும். உலக மூளைக்கட்டி நாளை, தொடக்கத்தில், லீப்ஜிக்கைச்சார்ந்த இலாபநோக்கற்ற அமைப்பான ஜெர்மன் மூளைக்கட்டி சங்கம் கடந்த 2000ஆம் ஆண்டில் நியமித்து அறிவித்தது.

Question 33 of 50
33. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தம், நியூசிலாந்துக்கும் எந்நிறுவனத்துக்கும் இடையேயான விண்வெளி ஆய்வுக்கான ஒப்பந்தமாகும்?
Correct
விளக்கம்
- நியூசிலாந்து, NASA உடனான விண்வெளி ஆய்வு ஒப்பந்தத்தில் கையெ -ழுத்திட்டுள்ளது. இதன்மூலம், ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பதினொன்றாவது நாடாக நியூசிலாந்து திகழ்கிறது. வரும் 2024ஆம் ஆண்டளவில் மனிதர்களை நிலவுக்கும், மேலும் செவ்வாய் கோளுக்கும் அனுப்பும் திட்டத்தின் ஒருபகுதியாக NASA உடனான இந்த ஒப்பந்தம் உள்ளது.

Question 34 of 50
34. Question
அண்மையில் அறிவிக்கப்பட்ட H10N3 என்பது எதன் திரிபு?
Correct
விளக்கம்
- H10N3 எனப்படும் அரிய பறவைக்காய்ச்சலின் முதல் மனித நோய்த்தொற்றை சீனா தெரிவித்துள்ளது. இந்தப்பாதிப்பு, 41 வயதுடைய நபருக்கு ஏற்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தால் உறுதிப்படு -த்தியுள்ளது.
- இப்பறவைக்காய்ச்சல் திரிபானது குறைந்த நோய்ப்பரவல் தன்மையை கொண்டுள்ளது. அதாவது ஒப்பீட்டளவில் கோழிப்பண்ணையில் ஏற்படுத்தும் தொற்றைவிட குறைவான தொற்றையே இது ஏற்படுத்துகிறது. உலகில் வேறெங்கும் இது பாதித்தாக இதுவரை பதிவாகவில்லை.

Question 35 of 50
35. Question
‘Ecowrap’ என்ற பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள வங்கி எது?
Correct
விளக்கம்
- பாரத வங்கி (SBI) தனது பொருளாதார ஆய்வறிக்கையான ‘Ecowrap’இல் 2021-22 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.9%ஆக உயரும் எனக் கணித்துள்ளது. முன்னர் இவ்வறிக்கை 10.4% வளர்ச்சி இருக்கும் எனக் கணித்திருந்தது. COVID-19 தொற்றுநோயின் இரண்டாம் அலையின் காரணமாக கணிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது.

Question 36 of 50
36. Question
ஜப்பானிய வீராங்கனை நவோமி ஒசாகாவுடன் தொடர்புடைய விளையாட்டு எது?
Correct
விளக்கம்
- முன்னணி டென்னிஸ் சாம்பியனும், உலகின் நெ.2 வீராங்கனையுமா -ன நவோமி ஒசாகா, பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து விலகுவதாகவும், களத்திலிருந்து சிறிதுகாலம் விலகியிருக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். மனநல காரணங்களுக்காக, போட்டிக்கு பிந்தைய பத்திரிகையாளர் சந்திப்புகளை புறக்கணிப்பதாக அவர் பதிவிட்டிருந்தார். இதையொட்டி, போட்டி அமைப்பாளர்கள் அவருக்கு அபராதம் விதித்தனர்.

Question 37 of 50
37. Question
கோவா குறித்த அண்மைய செய்திகளின் சூழலில், ‘GIFT’ என்ற சுருக்கம் பின்வரும் எதைக்குறிக்கிறது?
Correct
விளக்கம்
- கோவா மாநில அரசானது Goa Institution For Future Transformation (GIFT) என்ற பெயரில் ஒரு மதியுரையகத்தை அமைத்துள்ளது. இந்த நிறுவனம், கொள்கைசார்ந்த பல்வேறு விஷயங்கள் மற்றும் நலன்புரி முடிவுகளில் கோவா மாநில அரசுக்கு உதவும், அறிவுறுத்தும் மற்றும் வழிகாட்டும். GIFT’இன் செயல்பாடுகள் NITI ஆயோகின் செயல்பாடுகளுக்கு மிகவும் ஒத்ததாக இருக்கும்.

Question 38 of 50
38. Question
நடப்பாண்டின் (2021) P4G உச்சிமாநாட்டை நடத்திய நாடு எது?
Correct
விளக்கம்
- P4G – Partnering for Green Growth and the Global Goals – 2030 உச்சிமாநாட்டை கொரிய குடியரசு / தென் கொரியா நடத்தியது. அது சியோலில் நடத்தப்பட்டது.
- நீடித்த மற்றும் நெகிழ்வான பொருளாதாரங்களை உருவாக்குவதற்காக சந்தை அடிப்படையிலான கூட்டாண்மைகளை மேம்படுத்துவதற்கான நிகழ்வு இதுவாகும். “Inclusive Green Recovery Towards Carbon Neutrality” என்பது இந்த நிகழ்வின் கருப் பொருளாகும்.

Question 39 of 50
39. Question
“தோட்டக்கலை தொகுதி மேம்பாட்டு திட்டத்தை” செயல்படுத்தும் நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “தோட்டக்கலை தொகுதி மேம்பாட்டு திட்டத்தை” தொடங்கிவைத்தார். இந்தத் திட்டம், 11 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 12 தொகுதிகளில் முன்னோட்ட அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. இனங்காணப்பட்ட தோட்டக்கலை தொகுதிகளை உலகளாவிய போட்டிக்கு உட்படுத்துவதை நோக்கமாகக்கொண்டுள்ள இந்தத் திட்டம் தேசிய தோட்டக்கலை வாரியத்தால் செயல்படுத்தப்படுகிற ஒரு மத்திய துறை திட்டமாகும்.

Question 40 of 50
40. Question
COVID-19 பின்னணியில், ‘கப்பா’ & ‘டெல்டா’ என்றால் என்ன?
Correct
விளக்கம்
- COVID-19 தொற்றின் பல்வேறு திரிபுகளுக்கு கிரேக்க எழுத்துக்களைப் பயன்படுத்தி புதிய பெயர்களை உலக நலவாழ்வு அமைப்பு அறிவித்துள்ளது. உலக நலவாழ்வு அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவில் முதன்முதலில் காணப்பட்ட COVID திரிபு (B.1.617.2) டெல்டா என குறிப்பிடப்படும், அதேசமயத்தில் நாட்டில் முன்னர் காணப்பட்ட திரிபு (B.1.617.1) கப்பா என அறியப்படும்.

Question 41 of 50
41. Question
“தோட்டக்கலை தொகுதி மேம்பாட்டு திட்டத்தை” செயல்படுத்தும் நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “தோட்டக்கலை தொகுதி மேம்பாட்டு திட்டத்தை” தொடங்கிவைத்தார். இந்தத் திட்டம், 11 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 12 தொகுதிகளில் முன்னோட்ட அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. இனங்காணப்பட்ட தோட்டக்கலை தொகுதிகளை உலகளாவிய போட்டிக்கு உட்படுத்துவதை நோக்கமாகக்கொண்டுள்ள இந்தத் திட்டம் தேசிய தோட்டக்கலை வாரியத்தால் செயல்படுத்தப்படுகிற ஒரு மத்திய துறை திட்டமாகும்.
Incorrect
விளக்கம்
- மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “தோட்டக்கலை தொகுதி மேம்பாட்டு திட்டத்தை” தொடங்கிவைத்தார். இந்தத் திட்டம், 11 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 12 தொகுதிகளில் முன்னோட்ட அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. இனங்காணப்பட்ட தோட்டக்கலை தொகுதிகளை உலகளாவிய போட்டிக்கு உட்படுத்துவதை நோக்கமாகக்கொண்டுள்ள இந்தத் திட்டம் தேசிய தோட்டக்கலை வாரியத்தால் செயல்படுத்தப்படுகிற ஒரு மத்திய துறை திட்டமாகும்.
-
Question 42 of 50
42. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பண்டிட் தீனதயாள் ஆற்றல் பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- குஜராத் மாநில அரசானது மாநிலத்தின் ஏழு தனியார் பல்கலைக்கழகங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்க முடிவுசெய்துள்ளது. நிர்மா பல்க
-லைக்கழகம், CEPT பல்கலைக்கழகம், பண்டிட் தீனதயாள் ஆற்றல் பல்கலைக்கழகம், DAIICT, ஆமதாபாத் பல்கலைக்கழகம், சரோட்டர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் மார்வாடி பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஏழு பல்கலைக்கழகங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்க குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளித்தார்.

Question 43 of 50
43. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘Canadarm2’ என்றால் என்ன?
Correct
விளக்கம்
- சமீபத்தில், ‘Canadarm2’ என அழைக்கப்படும் ISS’இன் எந்திரக்கையின் ஒருபகுதியை விண்வெளி குப்பைகள் தாக்கி சேதப்படுத்தின. கையின் செயல்பாடுகள், சேதத்தால் பாதிக்கப்படாது என்பதை வானியலாளர்கள் உறுதிப்படுத்தினர். விண்வெளி நிலைய தொலைநிலை கையாளுதல் அமைப்பான ‘Canadarm2’, நிலையத்திற்கு வெளியே பொருட்களை நகர்த்தவும், நிலையத்தில் பணிகளை சரிசெய்யவும் பயன்படுகிறது.

Question 44 of 50
44. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘செஞ்சுற்றுலா’ என்பதுடன் தொடர்புடைய நாடு எது?
Correct
விளக்கம்
- கம்யூனிஸ்ட் கட்சிசார்ந்த வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மேம்படுத்துவதற்காக, சீனா, 2004ஆம் ஆண்டில் ‘செஞ்சுற்றுலா’வை அறிமுகப்படுத்தியது. இது நாட்டில் சுற்றுலாவோடு இணைந்து உள்ளூர் வணிகங்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக்கொண்டது. அண்மையில், ‘செஞ்சுற்றுலா’வின்கீழ் உள்ள இடங்கள் அதிக எண்ணிக்கையிலான பயணிகளுடன் சாதனைபடைத்தது.
- 1921ஆம் ஆண்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தேசிய காங்கிரஸ் நடைபெற்ற நன்ஹூ ஏரி மற்றும் மாவோ சேதுங்கின் பிறப்பிடமான ஷோஷன் ஆகியவை அடங்கும்.

Question 45 of 50
45. Question
மதுரா மற்றும் பானஸ்கந்தா ஆகியவற்றை எந்தத் துறையில் ஏற்றுமதி மேம்பாட்டுக்கான தொகுதிகளாக APEDA இனங்கண்டுள்ளது?
Correct
விளக்கம்
- வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டாணையமானது (APEDA) பால்பொருட்களின் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக ஒரு ஏற்றுமதி ஊக்குவிப்பு மன்றத்தை அமைத்து உள்ளது. இத்துறையிலுள்ள பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வுகாண்பதும் இதன் நோக்கமாகும். பால் வர்த்தகத்தை அபிவிருத்தி செய்வதற்காக உத்தர பிரதேச மாநிலத்தில் மதுரா மற்றும் குஜராத்தில் பானஸ்காந்தா ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இந்த ஆணையம் அங்கீகரித்துள்ளது.
- இத்தொகுதிகளில் உள்ள உழவர்கள் மற்றும் சிறு பால் வணிகர்களுக்கு ஏற்றுமதியில் திறனை வளர்ப்பதற்கு பயிற்சியும் உதவியும் வழங்கப்படும்.

Question 46 of 50
46. Question
CSIR-NCL ஆனது பின்வரும் எந்த மருத்துவ முறையைப் பயன்படுத்தி, தண்ணீரைக் கிருமிநீக்கம் செய்ய, ‘SWASTIIK’ என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியது?
Correct
விளக்கம்
- புனேவில் உள்ள CSIR-தேசிய வேதியியல் ஆய்வகமானது (CSIR-NCL) இயற்கை எண்ணெய்களைப் பயன்படுத்தி தண்ணீரைக் கிருமிநீக்கம் செய்வதற்காக, ‘SWASTIIK’ என்ற தொழினுட்பத்தை உருவாக்கியுள்ளது.
- அறிவியல் & தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப முன்முயற்சியின் ஆதரவுடன், இத்தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
- அழுத்தக்குறைப்பின் (குழிவுறுதல்) மூலமாக ஒரு திரவத்தை கொதிக்கச் செய்து, பின்னர் கிருமிநீக்கம் செய்வதற்கு, நுண்ணுயிர்க்கொல்லி பண்புகளைக் கொண்ட இயற்கை எண்ணெய்களை இது பயன்படுத்துகிறது.

Question 47 of 50
47. Question
நிலையாக வளர்ச்சியுறும் அமைப்பு (Standard Developing Organiz -ation) என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- இந்திய இரயில்வேயின்கீழ் செயல்படும் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பானது (RDSO) சமீபத்தில் நிலையாக வளர்ச்சியுறும் அமைப்பு என அறிவிக்கப்பட்ட நாட்டின் முதல் நிறுவனமாக மாறியுள்ளது. அரசாங்கத்தின் “ஒரு நாடு ஒரு தரம்” என்ற இலக்கை அடைவதற்காக, ‘SDOஐ அங்கீகரித்தல்’ என்ற திட்டத்தை இந்திய தரநிர்ணய அமைப்பு (BIS) அறிமுகப்படுத்தியது.

Question 48 of 50
48. Question
PMGKP’இல் உள்ள புதிய முறையின்படி, காப்பீட்டு நிறுவனங்கள் ____சான்றிதழின் அடிப்படையில் இழப்பீடுகளுக்கு ஒப்புதலளித்து தீர்வு காணலாம்.
Correct
விளக்கம்
- COVID-19 தொற்றுடன் போராடும் சுகாதார ஊழியர்களுக்கான பிரதமர் கரீப் கல்யாண் தொகுப்பு (PMGKP) காப்பீட்டு திட்டம், அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் `50 லட்சம் என்ற காப்பீடு வரம்புடன் தொடங்கப்பட்ட திட்டமாகும். சமீபத்தில், இழப்பீடு கோருவோரை அங்கீகரிப்பதற்கான புதிய அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இழப்பீடுகோரல் திட்டத்தின் நடைமுறைக்கு இணங்க மாவட்ட ஆட்சியர் சான்றளிப்பார்.
- மேலும் இந்தச் சான்றிதழின் அடிப்படையில், காப்பீட்டு நிறுவனம், 48 மணி நேரத்திற்குள்ளாக இழப்பீட்டிற்கு ஒப்புதல் அளித்து தீர்வு காணும்.

Question 49 of 50
49. Question
பன்னாட்டு நைட்ரஜன் முன்முயற்சி – 2021’ஐ நடத்திய நாடு எது?
Correct
விளக்கம்
- பன்னாட்டு நைட்ரஜன் முன்முயற்சியை ஜெர்மனியின் பெடரல் சுற்றுச் சூழல் முகமை (Umweltbundesamt–UBA) நடத்தியுள்ளது. ஐநா அவையின் நீடித்த வளர்ச்சி இலக்குகள், மூன்றாண்டுக்கு ஒருமுறை நடக்கும் எட்டாவது பன்னாட்டு நைட்ரஜன் முன்முயற்சி மாநாட்டின் முக்கிய கருப் பொருளாக இருந்தது. இது, 2021 மே.31 முதல் ஜூன்.3 வரை மெய்நிகர் முறையில் நடைபெற்றது.

Question 50 of 50
50. Question
நடுவணரசால் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்ட மகேஷ் ஜெத்மலானியின் தொழில் என்ன?
Correct
விளக்கம்
- புகழ்பெற்ற வழக்குரைஞரான மகேஷ் ஜெத்மலானி, சமீபத்தில், நடுவண் அரசால் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டார். மேலும், முன்னாள் பத்திரிகையாளர் சுவபன் தாஸ்குப்தாவும் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ரகுநாத் மோகபத்ராவின் மறைவின் காரணமாக ஏற்பட்ட காலியிடங்களை நிரப்பும் பொருட்டு மகேஷ் ஜெத்மலானி மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

Leaderboard: June 2nd Week 2021 Current Affairs Online Test Tamil