July 1st Week 2021 Current Affairs Online Test Tamil

Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
எந்த ஆண்டுக்குள், நிலச்சீரழிவை ஒழிப்பதற்கு இந்தியா இலக்கு கொண்டுள்ளது?
Correct
விளக்கம்
- பாலைவனமாக்கலுக்கு எதிரான ஐநா தீர்மானத்தில் இந்தியா கையெழு -த்திட்டுள்ளது. அது, 2030ஆம் ஆண்டளவில் நிலச்சீரழிவை ஒழிக்க எண்ணுகிறது. பாலைவனமாக்கல், நிலச்சீரழிவு மற்றும் வறட்சிகுறித்த உயர்மட்ட கூட்டத்தில் சமீபத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். 2019’இல் புது தில்லியில் நடந்த பாலைவனமாக்கலுக்கு எதிரான ஐநா அவையின் 14ஆவது அமர்வின் தலைவராக பிரதமர் மோடி இருந்தார்.
Incorrect

Question 2 of 50
2. Question
உலகில், வாழைப்பழங்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு எது?
Correct
விளக்கம்
- 2020-21 நிதியாண்டில், இந்தியா, `619 கோடி மதிப்புள்ள மொத்தம் 1.91 இலட்சம் டன் வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக நடுவண் வணிக அமைச்சகம் தெரிவித்துள்ளது. முந்தைய 2019-20 நிதியாண்டி -ல், ஏற்றுமதி செய்யப்பட்ட `660 கோடி மதிப்புள்ள 1.95 லட்சம் மெட்ரிக் டன் வாழைப்பழத்தைவிடவும் இது அதிகமாகும்.
- உலக வாழைப்பழ உற்பத்தியில் 25 சதவீத பங்கைக்கொண்ட இந்தியா, மிகப்பெரிய வாழைப்பழ உற்பத்தியாளராக உள்ளது.

Question 3 of 50
3. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற AY.1 என்றால் என்ன?
Correct
விளக்கம்
- B.1.617.2.1 என்னுமொரு புதிய கொரோனா வைரஸ் திரிபு, எளிமையாக புரிவதற்காக ‘AY.1’ எனக் குறிப்பிடப்படுகிறது. இத்திரிபு, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் மிகவேகமாக பரவிவருவது கண்டறியப்பட்டுள்ளது. இக்கொரோனா வைரஸ் திரிபானது உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ளும் பண்புகளைக் கொண்டுள்ளது.
- இதன்மூலம் உடலின் நோயெதிர்ப்பு ஆற்றல், தடுப்பூசிகள் மற்றும் பிற பொருளெதிரி சிகிச்சைகளை இது பகுதியாகவோ (அ) முழுமையாகவோ எதிர்க்கும்.

Question 4 of 50
4. Question
பிரதமரால் தொடங்கிவைக்கப்பட்ட, ‘COVID-19 முன்களப் பணியா -ளர்களுக்கான சிறப்பு பயிற்சி திட்டமானது’ எந்தத் திட்டத்தின்கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- இந்தியப் பிரதமர் மோடி, ‘COVID-19 முன்களப் பணியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி திட்டத்தை’ தொடங்கினார். நாடு முழுமைக்கும் உள்ள `1 இலட்சத்துக்கும் மேற்பட்ட COVID-19 முன்களப்பணியாளர்களின் திறன் -களை மேம்படுத்துவதே இதன் நோக்கம். இந்தத் திட்டம், பிரதமரின் கௌஷல் விகாஸ் திட்டம் 3.0’ன்கீழ் `276 கோடி செலவில் மேற்கொள் -ளப்படும் சிறப்பு திட்டமாகும்.

Question 5 of 50
5. Question
இந்தோ-பசிபிக் நிலைப்புத்தன்மைக்காக கீழ்காணும் எந்த இரு நாடுகளுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது?
Correct
விளக்கம்
- இந்தியா, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன. இந்த முத்தரப்பு ஒப்பந்தம் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலைப்புத்தன்மையையும், விதிகள் அடிப்படையிலான பன்னாட்டு ஒழுங்கையும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள து. இது, “அனைவரின் இசைவு” என்பதையும் “சிலரின் ஆதிக்கத்துக்கு உட்படாதது” என்பதையும் அடிப்படையாகக் கொண்டது ஆகும்.

Question 6 of 50
6. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற Paraceratherium என்பது பின்வரும் எந்த விலங்கின் அழிந்துபோன ஒரு இனமாகும்?
Correct
விளக்கம்
- Paraceratherium என்பது கொம்பற்ற காண்டாமிருகத்தின் அழிந்துபோன ஓர் இனமாகும். இது, நிலப்பரப்பில் வாழும் மிகப்பெரிய பாலூட்டிகளுள் ஒன்றாகும். புதைபடிவங்களின் முழுமையற்ற தன்மையால் Paracerathe -rium’இன் சரியான அளவு தெரியவில்லை. வறண்ட பாலைவனங்கள் முதல் வெப்பமண்டல காடுகள் வரையிலான வாழ்விடங்களில் இந்த உயிரினம் வாழ்ந்தது.

Question 7 of 50
7. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற Stygarctus keralensis கண்டுபிடிக்கப்பட்ட மாநிலம் எது?
Correct
விளக்கம்
- கொச்சினின் அறிவியல் & தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கடல்சார் உயிரியல், நுண்ணுயிரியல் மற்றும் உயிரி வேதியியல் துறை பேராசிரியர்கள் NK விஷ்ணுதத்தன், PR ஜெயச்சந்திரன் மற்றும் பிஜோய் நந்தன் மற்றும் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் J G ஹேன்சன் ஆகியோரை உள்ளடக்கிய ஓர் ஆய்வுக்குழுவால் கேரள மாநிலத்தில் Stygarctus keralensis கண்டுபிடிக்கப்பட்டது. இது Stygarctus keralensis இனத்தின்கீழ் பெயரிடப்பட்ட எட்டாவது இனமாகும்.

Question 8 of 50
8. Question
உலக முதலை நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உலகெங்கிலுமுள்ள அருகிவரும் முதலை இனங்கள் அவற்றின் அவல நிலையை எடுத்துக்காட்டுவதற்காக ஜூன்.17 உலக முதலை நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில், சதுப்புநில முதலை (Crocodylus palustris); உவர்நீர் முதலை (Crocodylus porosus) மற்றும் சொம்புமூக்கு முதலை (Gavialis gangeticus) ஆகிய 3 முதலை இனங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் சொம்புமூக்கு முதலை இனம் அருகிவரும் இனமாக உள்ளது.

Question 9 of 50
9. Question
‘ஜான் ஹை டு ஜஹான் ஹை’ என்ற பெயரில் COVID தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நடுவண் அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- நாட்டின் கிராமப்புற மற்றும் தொலைதூரப்பகுதிகளில் கொரோனா தடுப்பு மருந்து வழங்கல் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் வகையிலும், தடுப்பு மருந்து குறித்து சிலர் பரப்பிவரும் வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை முறியடிக்கவுமாக ‘ஜான் ஹை தோ ஜகான் ஹை’ என்ற தேசிய அளவிலான பிரச்சாரத்தை நடுவண் சிறுபான்மையினர் நல அமைச்சகம் மேற்கொள்ளவுள்ளது.
- இந்தப் பிரச்சாரம், ஜூன்.21 அன்று பல்வேறு சமூக-கல்வி இயக்கங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் ஆகியோருடன் இணைந்து தொடங்கப்பட்டது.

Question 10 of 50
10. Question
நடுவணரசின் நலவாழ்வு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட புதிய மென்பொருளான ‘CSS’ என்பதன் விரிவாக்கம் என்ன?
Correct
விளக்கம்
- மத்திய நலவாழ்வு அமைச்சகமானது ‘COVID Serious Score (CSS)’ என்ற மென்பொருளைப் பற்றிய தகவல்களை வெளியிட்டது. இப்புதிய மென்பொருள், தீவிர சிகிச்சை பிரிவில் சுவாசக்கருவி பொருத்துவதற்கா -ன தேவை ஏற்படக்கூடிய நோயாளிகளை கண்டறிந்து இடர் ஏற்படுவ -தற்கு முன்னர் தேவையான ஏற்பாடுகளை செய்ய உதவும்.
- இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் ஆதரவுடன், IIT கௌகாத்தியுடன் இணைந்து கொல்கத்தாவைச் சார்ந்த நலம் சார் கண்டறிவுகள் அறக்கட்டளை இம்மென்பொருளை உருவாக்கியுள்ளது. அறிகுறிகள், உடல்நிலை, பரிசோதனை அறிக்கைகள் மற்றும் இணை நோய்த்தன்மை ஆகியவற்றை கணக்கிட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் சுவாசக்கருவி பொருத்துவதற்கான தேவை ஏற்படக்கூடிய நோயாளிகளை இது கண்டறிகிறது.

Question 11 of 50
11. Question
நடப்பாண்டு (2021) யோகா நாளுக்கான கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- உலக யோகா நாளானது கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.21 அன்று கொண்டாடப்படுகிறது. ஐநா அவையின் 69ஆம் அமர்வின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி தனது உரையில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாட முன்மொழிந்தார்.
- “Yoga for Wellness” என்பது நடப்பாண்டில் (2021) வந்த உலக யோகா நாளுக்கான கருப்பொருள் ஆகும்.

Question 12 of 50
12. Question
நிலையான அறுசுவை உணவியல் நாள் (Sustainable Gastronom -y Day) அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- நிலையான அறுசுவை உணவியல் ஆற்றக்கூடிய பாத்திரத்தை நோக்கி உலகின் கவனத்தைக் குவிப்பதற்காக, ஆண்டுதோறும் ஜூன்.18 அன்று உலக நிலையான அறுசுவை உணவியல் நாள் அனுசரிக்கப்படுகிறது.
- அனைத்து பண்பாடுகளும் நாகரிகங்களும் நிலையான வளர்ச்சியின் பங்காளர்களாக உள்ளன என்பதை இந்தச்சிறப்புநாள் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

Question 13 of 50
13. Question
உலக அரிவாள் செல் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- அரிவாள் செல் நோய் மற்றும் அதன் சிகிச்சை முறைகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.19 அன்று உலக அரிவாள்செல் நாள் அனுசரிக்கப்படுகிறது.
- அரிவாள் செல் நோய் என்பது இரத்தசோகையின் ஒரு மரபுவழி வடிவம் ஆகும். இதில் இரத்த சிவப்பணுக்கள் உடல் முழுவதும் போதுமான உயிர்வளியை எடுத்துச்செல்ல முடியாத நிலையிலிருக்கும். “Shine the Light on Sickle Cell” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.

Question 14 of 50
14. Question
‘மோதலின்போதான பாலியல் வன்முறைகளை ஒழிப்பதற்கான பன்னாட்டு நாள்’ அனுசரிக்கப்படும் தேதி எது?
Correct
விளக்கம்
- மோதல்களின்போது மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவ -தற்கும், உலகம் முழுவதும் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து தப்பிப்பிழைத்து வாழ்வோரை கெளரவிப்பதற்கும் மற்றும் இந்தக் குற்றங்களை ஒழித்துக்கட்டுவதற்காக தங்கள் இன்னுயிரை ஈந்தோருக்கு அஞ்சலி செலுத்தவதற்குமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.19 அன்று மோதலின்போதான பாலியல் வன்முறைகளை ஒழிப்பதற்கான பன்னாட்டு நாள் (International Day for the Elimination of Sexual Violence in Conflict) கடைப்பிடிக்கப்படுகிறது.

Question 15 of 50
15. Question
பெர்பெரா வளைகுடா என்றும் அழைக்கப்படுகிற நீர்நிலை எது?
Correct
விளக்கம்
- இந்திய கடற்படையானது முதன்முறையாக ஐரோப்பிய ஒன்றிய கடற்ப -டையுடன் இணைந்து ஒரு கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கிறது. அது, பெர்பெரா வளைகுடா என்றும் அழைக்கப்படுகிற ஏதன் வளைகுடாவில் நடைபெறவுள்ளது. இந்தப்பயிற்சியில் மிகவும் அதிநவீன வான் பாதுகாப்பு, நீர்மூழ்கி பயிற்சிகள், உத்திசார் நிகழ்வுகள் போன்றவை அடங்கும்.

Question 16 of 50
16. Question
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் தங்கம் வென்ற முதல் இந்தியர் யார்?
Correct
விளக்கம்
- “பறக்கும் சீக்கியர்” என்றும் அழைக்கப்படும் மில்கா சிங், COVID தொற்று காரணமாக அண்மையில் காலமானார். அவருக்கு 91 வயது. 1958’இல் வேல்ஸில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா -வின் முதல் தனிநபர் தங்கப்பதக்கத்தை மில்கா சிங் வென்றார்.
- படைவீரரும் தடகள வீரருமான மில்கா சிங், பல்வேறு சர்வதேச நிகழ்வுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, நாட்டிற்கு பல பரிசுகளை வென்று கொடுத்துள்ளார்.

Question 17 of 50
17. Question
நடப்பாண்டுக்கான (2021) பேரிடர் அபாயக் குறைப்பு – வறட்சி குறித்த சிறப்பு அறிக்கையின் உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- பேரிடர் அபாயக் குறைப்புக்கான ஐநா அலுவலகமானது (UNDRR) 2021 வறட்சி அபாயக் குறைப்பு – சிறப்பு அறிக்கை குறித்த உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த மதிப்பீட்டின்படி, இந்த நூற்றாண்டில் இதுவரை 1.5 பில்லியன் மக்களை, வறட்சி, நேரடியாக பாதித்துள்ளது. இந்த அதிகரித்த எண்ணிக்கைக்கு காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் மக்கள்தொகை மாற்றங்கள் காரணமாகும்.

Question 18 of 50
18. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற ‘ICMED 13485 PLUS’ என்றால் என்ன?
Correct
விளக்கம்
- ICMED என்பது 2016ஆம் ஆண்டில் மருத்துவ சாதனங்கள் சான்றிதழ் பெறுவதற்காக தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். சமீபத்தில், இந்திய தர கவுன்சிலும் இந்திய மருத்துவ சாதனங்களின் உற்பத்தியாளர்கள் சங்கமும் இந்தத் திட்டத்தில் சில அம்சங்களைச் சேர்த்துள்ளன இந்தப் புதிய திட்டத்தின் பெயர் “ICMED 13485 PLUS” ஆகும். இது, மருத்துவ சாதனங்களின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றை சரிபார்க்கும்.

Question 19 of 50
19. Question
பன்னாட்டு கார்பன் விலை தளத்தை அமைக்கவுள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்
- புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்துவதற்காக பன்னாட்டு கார்பன் விலை தளத்தை அமைக்க பன்னாட்டுச் செலவாணி நிதியம் (IMF) முன்மொழிந்துள்ளது. இந்த தசாப்தத்தில், குறைந்த கார்பன் வெளியேற்ற -த்தை நோக்கிச்செல்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- பன்னாட்டுச் செலவாணி நிதிய தலைவரின் கூற்றுப்படி, புவி வெப்பமடைதலை 1.5 முதல் 2 டிகிரி அளவுக்கு மட்டுப்படுத்தினால் 2030’க்குள் உமிழ்வை கால் முதல் அரை பங்கு வரை குறைக்க வேண்டும்.

Question 20 of 50
20. Question
இந்தியாவில் எத்தனால் உற்பத்திக்கான மாற்றுதீவன ஆதாரமாக அடையாளங்காணப்பட்டுள்ள பயிர் எது?
Correct
விளக்கம்
- ICAR-மத்திய கிழங்கு பயிர் ஆராய்ச்சி நிறுவனம் மரவள்ளிக்கிழங்கை உயிரி எத்தனால் உற்பத்திக்கான ஓர் உறுதியான மூலப்பொருளாகக் கண்டறிந்துள்ளது. ஓர் உயிரி எரிபொருள் பயிராக, கரும்புடன் ஒப்பிடும் போது மரவள்ளிக்கிழங்கு பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது.
- மரவள்ளிக்கிழங்கில் அதிக மாவுச்சத்து உள்ளடக்கம் மற்றும் குறைந்த மேலாண்மை நிலைமைகளின்கீழ் வளரும் திறனுள்ளது. இது, இந்தியா -வின் எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்ட இலக்கு 2025’ஐ அடைய உதவும்.

Question 21 of 50
21. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பெருந்தடுப்புப்பவளத்திட்டு அமைந்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கடற்கரையில் 2300 கிமீ நீளத்துக்கு அமைந்துள்ள பெருந்தடுப்புப்பவளத்திட்டானது அதன் அறிவியல் மற்றும் உள்ளார்ந்த முக்கியத்துவத்தின் காரணமாக கடந்த 1981’இல் உலக பாரம்பரிய தரவரிசையைப் பெற்றது. சமீபத்தில், UNESCO பெருந்தடுப்புப் பவளத்திட்டு, உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் வைக்கப்பட வேண்டும் எனக் கூறியது.

Question 22 of 50
22. Question
ஒலிம்பிக்கில் போட்டியிடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் திருநங்கை விளையாட்டு வீராங்கனையான லாரல் ஹப்பார்ட் சார்ந்த நாடு எது?
Correct
விளக்கம்
- டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியிடும் முதல் திருநங்கை விளையாட் -டு வீராங்கனையாக நியூசிலாந்தைச் சார்ந்த 43 வயதான லாரல் ஹப்பார்ட் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். சூப்பர் ஹெவிவெயிட் பெண்கள் போட்டியில் பங்கேற்கும்போது, ஹப்பார்ட், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை விளையாட்டு வீராங்கனையாக இருப்பார்.
- பன்னாட்டு ஒலிம்பிக் குழு (IOC) குறிப்பிட்டிருக்கும் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் பூர்த்திசெய்யப்பட்ட பின்னர் அவர் சூப்பர் ஹெவிவெயிட் 87 கிலோ பிரிவில் போட்டியிடுவார்.

Question 23 of 50
23. Question
100% கச்சா எண்ணெய் / 100% எத்தனால் பயன்படுத்தக்கூடிய எஞ்சினின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- ஆட்டோமொபைல் தொழிலுக்காக, பிளெக்ஸ் எரிபொருள் எஞ்சின்கள் கட்டாயமாக உருவாக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அறிவித்தார்.
- பிளெக்ஸ் எரிபொருள் எஞ்சின்களில், 100% கச்சா எண்ணெயோ (அ) 100% எத்தனாலையோ பயன்படுத்தவியலும். பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதற்கான இலக்கு ஆண்டை, இந்தியா, 2030லிருந்து 2025க்கு மாற்றியமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Question 24 of 50
24. Question
எஸ்தர் டப்லோ மற்றும் ரகுராம் ராஜன் ஆகியோரைக்கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழுவை உருவாக்கவுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களான நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முன்னாள் ஆளுநர் இரகுராம் இராஜன், முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், மேம்பாட்டு பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரீஸ், முன்னாள் மத்திய நிதிச்செயலாளர் S நாராயண் ஆகியோர் அடங்கிய பொருளாதார ஆலோசனைக் குழுவை உருவாக்குவதற்கு தமிழ்நாடு மாநில அரசு முடிவுசெய்துள்ளது.

Question 25 of 50
25. Question
உலகின் முதல் பிரத்தியேக ‘விரைவு இரயிலுக்கான பசுமை மதிப்பீட்டு முறை’யை அறிமுகப்படுத்தியுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- விரைவு இரயிலுக்கான உலகின் முதல் பிரத்தியேக பசுமை மதிப்பீட்டு முறையை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. CII-இந்திய பசுமை கட்டட கவுன்சிலானது IGBC பசுமை விரைவு இரயில் மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. IGBC ஆனது தேசிய விரைவு இரயில் கழகத்துடன் ஒத்துழைத்துள்ளது. இந்த மதிப்பீட்டு முறை, புதிய விரைவு இரயில் நிலையங்களை அவற்றின் செயல்பாடுகளின்போது ஆற்றல் திறமையான கருத்தாக்கங்களைப் பயன்படுத்துவதற்கு உதவும்.

Question 26 of 50
26. Question
NFSA பயனாளிகளுக்கு கூடுதல் உணவு-தானியங்களை வழங்கும் பின்வரும் எந்தத் திட்டம், நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தை 2021 ஜூலையிலிருந்து 2021 நவம்பர் மாதம் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டம் (கட்டம் – 4) கீழ், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் அதிகபட்சம் 81.35 கோடி பயனாளிகளுக்கு ஜூலை முதல் நவம்பர் வரை ஒரு மாதத்திற்கு ஐந்து கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும்.

Question 27 of 50
27. Question
வானூர்தி நிலைய சேவை தரத்திற்காக பன்னாட்டு வானூர்தி நிலைய குழும விருதை வென்ற இந்திய வானூர்தி நிலையம் எது?
Correct
விளக்கம்
- கொச்சின் பன்னாட்டு விமான நிலையமானது விமான நிலைய சேவை தரத்திற்காக பன்னாட்டு விமான நிலைய குழுமத்தின் தலைமை இயக்குநரிடமிருந்து சிறப்பு விருதை வென்றது. விமான நிலைய சேவை தர ஆய்வில், தொடர்ச்சியாக சிறந்த சேவைகளை வழங்கிய வானூர்தி நிலையங்கள், பயணிகளின் கருத்தின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றன.

Question 28 of 50
28. Question
ஓர் அண்மைய ஆய்வின்படி, உலகில் பல்வேறு வகையிலான பட்டாம்பூச்சிகள் காணப்படும் நாடு எது?
Correct
விளக்கம்
- இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் வெளியிட்டுள்ள ஓர் அண்மைய ஆய்வின்படி, பல்வேறு வகையிலான பட்டாம்பூச்சிகளின் தாயகமாக கொலம்பியா உள்ளது. தென்னமெரிக்க நாட்டில் அறியப்பட்ட அனைத்து உயிரினங்களிலும் சுமார் 20% பட்டாம்பூச்சிகளாக உள்ளன. சர்வதேச அறிவியலாளர்கள் குழு, “கொலம்பிய பட்டாம்பூச்சிகளின் சரிபார்ப்பு பட்டியல்” என்ற தலைப்பில் ஆவணமொன்றைத் தயாரித்தது.
- கொலம்பியாவில் மட்டும் இருநூற்றுக்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி இனங்கள் காணப்படுகின்றன.

Question 29 of 50
29. Question
NASA’இன் ரோபோட்டிக் உலங்கு வானூர்தியான இஞ்செனுயிட்டி, எந்த வான் பொருளில் இயங்கி வருகிறது?
Correct
விளக்கம்
- அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமையின் ‘மார்ஸ் 2020’ திட்டத்தின் ஒருபகுதியாக செவ்வாய்க்கோளில் இயங்கும் NASA’இன் சிறு ரோபோ உலங்கு வானூர்திதான் ‘இஞ்செனுயிட்டி’.
- இந்த உலங்கு வானூர்தி, எட்டாவது முறையாக, செவ்வாய்க்கோளில் ஒரு புதிய இடத்தில் தரையிறங்கியது. அதன்சமயம், 160 மீட்டர் தெற்கே ஒரு புதிய இடத்திற்கு அந்த உலங்கு வானூர்தி பறந்துசென்றது.

Question 30 of 50
30. Question
‘குழந்தைகள் மற்றும் ஆயுத மோதல்கள்’ குறித்த வருடாந்திர அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
Correct
விளக்கம்
- சிறார்கள் & ஆயுத மோதல்கள் குறித்து ஐநா தலைவர் அன்டோனியோ குடரெஸ், பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்பிய ஆண்டு அறிக்கையின்படி, கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பல்வேறு மோதல்களில் 8,500’க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
- சோமாலியா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில், கடந்த 2020’ஆம் ஆண்டில் அதிக விதி மீறல்கள் நடந்துள்ளன.

Question 31 of 50
31. Question
உலக இசை நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.21 அன்று உலக இசை நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், முதன்முதலில், 1982ஆம் ஆண்டில் பிரான்ஸில் கொண்டாடப்பட்டது. கோடை கதிர்த்திருப்ப நிலையுடன் இந்த நாள் ஒத்துப்போகிறது. மேலும், மக்களை, இசைகேட்டு மகிழ்வடையச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Question 32 of 50
32. Question
‘துளிர் நிறுவனங்கள் மற்றும் இடர் நிதியளிப்புபற்றிய ஆராய்ச்சி மையத்’தை (CREST) அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- இந்திய தொழில்நுட்ப நிறுவனம் – சென்னை, ‘துளிர் நிறுவனங்கள் & இடர் நிதியளிப்புபற்றிய ஆராய்ச்சி மையத்’தை அறிமுகப்படுத்தியுள்ளது. உயர்தர ஆராய்ச்சியில் ஈடுபடுவதில் உள்ள பெரும் இடையூறுகளை எதிர்கொள்வதற்காக இது இந்திய துளிர்நிறுவன நிலைகளில் ஒரு தரவு களஞ்சியத்தை உருவாக்கும்.
- ஆராய்ச்சியாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் அணுகக்கூடியதாக இருக்கும் இந்தத் தகவல்கள் சர்வதேச வெளியீடுகளுக்கு வழிவகுக்கும்.

Question 33 of 50
33. Question
ஜம்மு-காஷ்மீர் தொடர்பான எல்லை வரையறை ஆணையத்தின் தலைவர் யார்?
Correct
விளக்கம்
- 370ஆவது பிரிவு இரத்து செய்யப்பட்டு 2019 ஆகஸ்டில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்பப்பெற்ற 6 மாதங்களுக்குப் பிறகு வரையறை ஆணையம் அமைக்கப்பட்டது.
- இந்த ஆணையத்திற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமை தாங்குகிறார். சமீபத்தில் இந்த ஆணைக்குழு, ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள அனைத்து 20 மாவட்டங்களின் துணை ஆணையர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தியது. பிரதமர் அழைப்பு விடுத்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு முன்னதாக இது நடைபெற்றது.

Question 34 of 50
34. Question
டிராகுனோவ் குறிபார்த்து சுடும் துப்பாக்கிகளை இந்திய இராணுவத்திற்கு வழங்கிய நாடு எது?
Correct
விளக்கம்
- இந்திய இராணுவமானது 1990’களில் ரஷ்யாவிலிருந்து டிராகுனோவ் என்ற குறிபார்த்து சுடும் துப்பாக்கிகளை வாங்கியது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் தற்கால துப்பாக்கிகளைவிட இது பழையதாகும்.
- சமீபத்தில், டிராகுனோவ் துப்பாக்கியின் நவீன வடிவத்தினை இந்திய இராணுவத்திடம் வழங்க ரஷ்யா ஒப்புக்கொண்டது.

Question 35 of 50
35. Question
இந்திய வான்படையும் இந்திய கடற்படையும் பின்வரும் எந்த நாட்டின் கடற்படையுடன் இணைந்து திருவனந்தபுரத்திற்கு தெற்கே ‘பாஸேஜ்’ என்ற பயிற்சியில் பங்கேற்றன?
Correct
விளக்கம்
- இந்திய வான்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவை அமெரிக்க கடற்படையின் கேரியர் ஸ்ட்ரைக் குழுவுடன் இணைந்து ‘பாஸேஜ்’ என்றவொரு பயிற்சியில் பங்கேற்றன. திருவனந்தபுரத்திற்கு தெற்கே இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்திய முன்னணியில், சுகோய் விமானம், ஜாகுவார்ஸ், எரிபொருள் நிரப்பும் வானூர்தி மற்றும் போர்க் கப்பல்கள் மற்றும் கடற்புற ரோந்து வானூர்திகள் பங்கேற்றன.

Question 36 of 50
36. Question
ஹுருன் ஆராய்ச்சி & எடெல்கிவ் அறக்கட்டளை அறிக்கையின்படி, கடந்த நூற்றாண்டின் உலகின் மிகப்பெரிய கொடையாளி யார்?
Correct
விளக்கம்
- ஹுருன் ஆராய்ச்சி மற்றும் எடெல்கிவ் அறக்கட்டளை அறிக்கையின்படி, இந்தியாவின் தொழிலதிபரும் டாடா குழும நிறுவனருமான ஜாம்செட்ஜி நுசர்வான்ஜி டாடா, கடந்த நூற்றாண்டின் உலகின் மிகப்பெரிய கொடையாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார். அவர், $102.4 பில்லியன் மதிப்புள்ள நன்கொடைகளை வழங்கியுள்ளார். பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்தனர். விப்ரோ நிறுவனர் மற்றும் தலைவரான அசிம் பிரேம்ஜி, பட்டியலில் 12ஆவது இடத்தில் உள்ளார்.

Question 37 of 50
37. Question
பின்வரும் எந்த நிறுவனத்துடன் மத்திய ரயில்சைட் கிடங்கு நிறுவனம் இணைக்கப்படவுள்ளது?
Correct
விளக்கம்
- “குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை” என்பதற்கு இணங்கவும், எளிதாக தொழில்புரிவதை மேம்படுத்தவுமாக, மத்திய ரயில்சைட் கிடங்கு நிறுவனம் மற்றும் மத்திய கிடங்கு நிறுவனம் இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இதன்மூலம் இந்நிறுவனங்களின் சொத்துக்கள், பொறுப்புகள் மற்றும் உரிமைகள் ஒன்றாக இணைக்கப்படும். இந்த இணைப்பு, இரு நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒரே நிர்வாகத்தின் கீழ் இணையும்.

Question 38 of 50
38. Question
டோக்கியோ 2020’இல் பங்கேற்கும் இந்திய ஒலிம்பிக் அணிக்கான அதிகாரப்பூர்வ பாடலின் இசையமைப்பாளர் யார்?
Correct
விளக்கம்
- டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் இந்திய ஒலிம்பிக்குழுவின் பாடலை மத்திய இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு புது தில்லியில் அறிமுகப்படுத்தினார்.
- இந்தப் பாடலை பாடகர் மோஹித் சவுகான் இசையமைத்து, பாடியுள்ளார். டோக்கியோ போட்டிகளில், 100’க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் இந்தியாவின் சார்பாக பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Question 39 of 50
39. Question
ஐ.சி.சி’இன் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற நாடு எது?
Correct
விளக்கம்
- ஐ.சி.சி’இன் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து, இந்தியாவை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியனானது. இது, இருபதாண்டுகளில் நியூசிலாந்து வெல்லும் முதல் ஐ.சி.சி பட்டம் ஆகும். இறுதிப்போட்டியன்று நியூசிலாந்து 139 ரன்கள் இலக்கை, எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எடுத்தது.

Question 40 of 50
40. Question
ஐநா தரவுகளின்படி, நடப்பு 2021ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகெங்கிலும் உள்ள கைம்பெண்களின் எண்ணிக்கை என்ன?
Correct
விளக்கம்
- பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், கைம்பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குமாக, ஐநா பொது அவை, தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஜூன்.23’ஐ பன்னாட்டு கைம்பெண்கள் நாள் என அறிவித்தது. இந்த நாள், இணையை இழந்த பெண்களுக்கு ஆதரவு காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ஐக்கிய நாடுகள் அவையின் கூற்றுப்படி, உலகெங்கும் 258 மில்லியன் கைம்பெண்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பத்தில் ஒருவர் கடுமையான வறுமை நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

Question 41 of 50
41. Question
‘எல்லைகளற்ற வரி ஆய்வாளர்கள்’ என்பது எந்த அமைப்புடன் இணைந்த UNDP’இன் முன்னெடுப்பாகும்?
Correct
விளக்கம்
- ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டமும் (UNDP) பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பும் (OECD) இணைந்து, பூட்டான் நாட்டில் “எல்லைகளற்ற வரி ஆய்வாளர்கள்” என்ற கூட்டு முயற்சியைத் தொடங்கின. இந்த முன்னெடுப்புக்கு, இந்தியாவும் ஒரு கூட்டாளராக தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், பூட்டான் நாட்டுக்கு அதன் வரி நிர்வாகத்தை வலுப்படுத்த உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Question 42 of 50
42. Question
பரிசோதனை நோக்கங்களுக்காக கணவாய் மீன்குஞ்சுகளை விண்வெளிக்கு கொண்டு சென்றுள்ள விண்வெளி நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- அமெரிக்க விண்வெளி முகமையான NASA, பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக சில கணவாய் மீன்குஞ்சுகளை விண்வெளிக்கு கொண்டு சென்றுள்ளது. ஹவாய் பல்கலைக்கழகத்தின் – கெவாலோ கடல்சார் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இந்தக் கணவாய் மீன் குஞ்சசுகள், பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு ஸ்பேஸ்எக்ஸ் ஏவுகலம்மூலம் அனுப்பப்பட்டன.

Question 43 of 50
43. Question
வேளாண்துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில், எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா சமீபத்தில் கையெழுத்திட்டது?
Correct
விளக்கம்
- இந்தியா மற்றும் பிஜி நாடுகளுக்கிடையே வேளாண்மை மற்றும் அது சம்பந்தமான துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா அரசு கையெழுத்திட்டுள்ளது.
- பால்வள மேம்பாடு, அரிசி மேம்பாடு, பன்முகத்தன்மை வாய்ந்த கிழங்குப் பயிர்கள், நீர்வள மேலாண்மை, தேங்காய் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் இந்த ஒப்பந்தம் ஒத்துழைப்பை வலுப்படுத்தும்.

Question 44 of 50
44. Question
எந்த இந்திய மாநிலத்தில், உலகின் முதல் மரபணு மாற்றப்பட்ட ரப்பரின் கள சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?
Correct
விளக்கம்
- இந்திய இரப்பர் வாரியமானது உலகின் முதல் மரபணு மாற்றப்பட்ட ரப்பரின் களசோதனைகளை கௌகாத்தியில் உள்ள ரப்பர் வாரியத்தின் சாருதாரி ஆராய்ச்சி பண்ணையில் தொடங்கியது.
- இந்த இரப்பரை கேரளாவின் கோட்டயம் புதுப்பள்ளியில் உள்ள இரப்பர் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது. கேரள மாநிலத்தில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் கள சோதனைகளை நடத்த கேரள அரசு மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Question 45 of 50
45. Question
முவ்வகையான முதலைகளையும் கொண்ட ஒரே மாநிலம் எது?
Correct
விளக்கம்
- ஒடிசாவில் அண்மையில் சொம்புமூக்கு முதலைகளின் இயற்கையான கூடுகள் கண்டறியப்பட்டது. இதன்மூலம், நன்னீர் முதலைகள், சொம்பு மூக்கு முதலைகள் மற்றும் உவர்நீர் முதலைகள் ஆகிய மூன்று வகை முதலை இனங்களையும் கொண்ட ஒரே மாநிலமாக ஒடிஸா ஆனது.
- சொம்புமூக்கு முதலைகள் முதன்முதலில் கடந்த 1975’இல் ஒடிஸா மாநிலத்தில் வளர்க்கப்பட்டன. உவர்நீர் முதலைகள் மற்றும் நன்னீர் முதலைகளுடன் ஒப்பிடும்போது சொம்புமூக்கு முதலைகள் மிகவும் அருகிவிட்ட இனமாகவும் மரபணு ரீதியாக பலவீனமான உயிரினமாகவும் கருதப்படுகின்றன.

Question 46 of 50
46. Question
ஆண்டுதோறும் உலக ஒலிம்பிக் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஆண்டுதோறும் ஜூன்.23 அன்று உலக ஒலிம்பிக் நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நவீன ஒலிம்பிக் போட்டிகள், 1894ஆம் ஆண்டு ஜூன்.23 அன்று பாரிசில் உள்ள சோர்போனில் தொடங்கியதை நினைவுகூரும் வகையில் இந்நாள் முதன்முதலில் 1948ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
- வயது, பாலினம் அல்லது தடகள திறனை பொருட்படுத்தாமல் மக்கள் விளையாட்டில் பங்கேற்பதை ஊக்குவிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Question 47 of 50
47. Question
“Suicide Worldwide 2019” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்
- சமீபத்தில், உலக நலவாழ்வு அமைப்பு “Suicide Worldwide 2019” என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
- அவ்வறிக்கையின்படி, ஒவ்வோர் ஆண்டும் 7 இலட்சம்பேர் தற்கொலை செய்துகொண்டு மரணிக்கின்றனர். உலகில் நடைபெறும் தற்கொலைகளில் கிட்டத்தட்ட 77% குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் நிகழ்கின்றன எனவும் 15-19 வயதுடையவர்களின் இறப்புக்கான முக்கிய காரணங்களுள் தற்கொலை நான்காவது இடத்தில் உள்ளது என்றும் இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

Question 48 of 50
48. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘கோப்பர்நிக்கஸ் சென்டினல்-6 மைக்கேல் பிரீலிச்’ என்பது எவ்வகையான செயற்கைக்கோளாகும்?
Correct
விளக்கம்
- கோப்பர்நிக்கஸ் சென்டினல்-6 மைக்கேல் பிரீலிச் செயற்கைக்கோள் ஆனது 2020 நவம்பரில் ஏவப்பட்டது. இது ஒரு பெருங்கடல்-கண்காணிப்பு செயற்கைக்கோளாகும். இது கடல்மட்டத்தின் உயர்வை அளவிடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
- 6 மாதகால அளவுத்திருத்த பணிகளுக்குப்பிறகு, இச்செயற்கைக்கோள், அண்மையில், செயல்படத் தொடங்கியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டமான இதனை, ESA, NASA மற்றும் CNES பிரெஞ்சு முகமை ஆகியவை இணைந்து செயல்படுத்துகின்றன. கோப்பர்நிக்கஸ் சென்டினல்-6பி செயற்கைக்கோளானது 2025’இல் ஏவப்படவுள்ளது.

Question 49 of 50
49. Question
குய்லின்-பார் நோய்க்குறியானது பின்வரும் எந்தத்தடுப்பூசியுடன் தொடர்புடையது எனத் தெரிவிக்கப்படுகிறது?
Correct
விளக்கம்
- குய்லின்-பார் நோய்க்குறி என்பது ஓர் அரிய நரம்பியல் கோளாறு ஆகும். அதில், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பானது நரம்பு இழைகளில் உள்ள அதன் சொந்த பாதுகாப்பு பூச்சுகளையே தாக்குகிறது. ஐரோப்பாவிலும் இங்கிலாந்திலும் உள்ள சில நோயாளிகளிடையே அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு COVID-19 தடுப்பூசி செலுத்தப்பட்டபின் இந்த நோய்க்குறி தோன்றியதாக முதன்முதலில் அறிவிக்கப்பட்டது.
- இந்த நோய்க்குறி, தீவிர பலவீனத்துடன் தொடங்கி இறுதியில் முழு உடலையும் செயலிழக்கச் செய்யலாம். இந்தத் தடுப்பூசி, இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இதுபோன்ற சில பாதிப்புகள் தோன்றியுள்ளன.

Question 50 of 50
50. Question
நடப்பாண்டின் (2021) உலக போதைப்பொருள் அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்
- 2021 – உலக மருந்து அறிக்கையை ஐநா போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகம் (UNODC) வெளியிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில், உலகளவில் 275 மில்லியன் மக்கள் போதைப்பொருளைப் பயன்படுத்தியதாகவும், 36 மில்லியன் மக்கள் போதைப்பொருள் நோய்க் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வறிக்கை கூறுகிறது.
- கடந்த 24 ஆண்டுகளில், கஞ்சா பயன்பாடு சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

Leaderboard: July 1st Week 2021 Current Affairs Online Test Tamil