Online Test

History Model Test 22 in Tamil

History Model Test Questions 22 in Tamil

Question 1
மொழிவாரி மாநிலங்கள் சீரமைத்தல் தொடர்பான கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்க. சரியான விடையை தேர்ந்தெடு.
  1. மொழிவாரி மாகாண ஆணையம் பட்டேல் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது.
  2. இது மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படுவதை ஆதரிக்கவில்லை.
  3. 1953-ல் ஆந்திரா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது.
4. அதே சமயம், சென்னை மாநிலமும் தமிழ் பேசும் மாநிலமாக உருவாக்கப்பட்டது
A
1 மற்றும் 2
B
2 மற்றும் 3
C
1 மற்றும் 4
D
3 மற்றும் 4
Question 2
பின்வரும் இணைகளைக் கருத்தில் கொள்க.
  1. சுதேசி இயக்கம் - அன்னிபெசண்ட்
  2. மராத்தா - புறக்கணிப்பு இயக்கம்
  3. தன்னாட்சி இயக்கம் – ஆங்கில வார இதழ்
  4. மிண்டோ-மார்லி சட்டம் - 1909
மேற்குறிப்பிட்ட இணைகளில் எது சரி?
A
1, 2 மற்றும் 4
B
4 மட்டும்
C
2 மற்றும் 4
D
3 மற்றும் 2
Question 3
பொருத்துக.
  • அ. கிலாபத் இயக்கம் 1. 1927
  • ஆ. சுராஜ்ஜியக் கட்சி  2. 1920
  • இ. சைமன் கமிசன்     3. 1928
  • ஈ. நேரு அறிக்கை                   4. 1923
A
2 4 1 3
B
3 2 4 1
C
4 3 1 2
D
3 4 2 1
Question 4
கால வரிசைப்படுத்துக.
  1. தைமூரின் டெல்லி படையெடுப்பு
  2. குதுப் மினார் கட்டி முடிக்கப்படுதல்
  3. இரசியா டெல்லியின் அரியணையேறுதல்
  4. மாலிக் காபூரின் தென்னிந்திய படையெடுப்பு
A
1, 2, 3, 4
B
2, 3, 4, 1
C
3, 1, 4, 2
D
4, 3, 2, 1
Question 5
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் சரியான விடையைத் தேர்ந்தெடு:
  • பட்டியல் 1                                 பட்டியல் 2
  • அ. வாஞ்சிநாதன்                    1. சுதந்திரா கட்சி
  • ஆ. வ.உ.சி.                                2. வைக்கம் சத்தியாகிரகம்
  • இ. இராஜாஜி                 3. சுதேசி கப்பல் கம்பெனி
  • ஈ. ஈ.வே.ரா.                   4. கலெக்டர் ஆஷ்
A
2 4 1 3
B
3 2 4 1
C
4 3 1 2
D
3 4 2 1
Question 6
பின்வருவனவற்றுள் எது சரியானது?
  1. அக்பரின் கல்லறை கட்டிடம் (சிக்கந்தரா) ஷாஜகானால் கட்டப்பட்டது.
  2. ஆக்ரா கோட்டை கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளது.
  3. அக்பர் முத்து மசூதியை கட்டினார்.
  4. புலந்தர்வாஜா ஃபதேபூர் சிக்ரியில் அமைந்துள்ளது.
A
1, 2 மற்றும் 4
B
4 மட்டும்
C
2 மற்றும் 4
D
3 மற்றும் 2
Question 7
கீழே உள்ளவற்றைக் கொண்டு சரியான விடையளி:
  • கூற்று (A):          திலகர் லக்னோ ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
  • காரணம் (R): திலகர் ஒரு தீவிரவாதி.
A
(A) மற்றும் (R) சரியானவை
B
(A) மற்றும் (R) சரியானவை. ஆனால் (A) க்கு (R) சரியான விளக்கம் இல்லை
C
(A) சரியானவை (R) தவறானவை
D
(A) தவறானவை (R) சரியானவை
Question 8
பட்டியல் 1 ஐ 2 உடன் பொருத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை உபயோகித்து சரியான விடையைத் தேர்ந்தெடு.
  • பட்டியல் 1                                             பட்டியல் 2
  • அ. ஒத்துழையாமை இயக்கம்        1. ஆட்சிப் பணியாளர்
  • ஆ. W.C.பானர்ஜி                                   2. காந்தியடிகள்
  • இ. டப்ரின் பிரபு                                    3. வைஸ்ராய்
  • ஈ. A.O.ஹியூம்                          4. பாரிஸ்டர்
A
2 4 3 1
B
3 2 4 1
C
4 3 1 2
D
3 4 2 1
Question 9
சத்ரபதி சிவாஜியினை பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
  1. கி.பி. 1664-ல் சிவாஜி முகலாயரின் முக்கிய துறைமுகமான சூரத் துறைமுகத்தைத் தாக்கி அதைச் சூறையாடினார்.
  2. கி.பி. 1665-ஆம் ஆண்டு புரந்தர் உடன்படிக்கை சிவாஜிக்கும் ஜெய்சிங்கிற்குமிடையே நடைபெற்றது.
  3. கி.பி. 1674-ல் சிவாஜி சத்ரபதியாக ராய்களில் பட்டம் சூட்டிக் கொண்டார்.
4. சத்ரபதி சிவாஜிக்கு உதவி செய்ய அஷ்ட பிரதான் என்ற எட்டு அமைச்சர் குழு
A
1, 2 மற்றும் 4
B
4 மட்டும்
C
அனைத்தும் சரி
D
3 மற்றும் 2
Question 10
கி.பி. 1846 ஆம் ஆண்டு லாகூர் உடன்படிக்கை படி, ஆங்கிலேயர்கள் கட்டாயப்படுத்திய சரத்துக்கள் எவை?
  1. ஜலந்தர், தோவாப் பகுதியையும், போர் இழப்பீட்டுத் தொகையாக 1.5 கோடி ரூபாயும் வழங்க வேண்டும்.
  2. சீக்கிய படை குறைப்புடன், பிற ஐரோப்பியர்களை நியமித்தால் ஆங்கிலேயரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
  3. லாகூரில் சர் ஜான் லாரன்ஸ் ஆங்கிலேயர்கள் நியமித்து குடியமர்த்தினார்.
  4. ராணி ஜிந்தன் அரசு பாதுகாப்பு பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
A
1 மற்றும் 2
B
4 மட்டும்
C
மேலே உள்ள அனைத்தும்
D
3 மற்றும் 2
Question 11
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
  • கூற்று(A):           பிற்கால சோழர்கள் இறை என்ற வரியை வசூலித்து பண்டாரத்தில் செலுத்தினர். அவை தேவர் பண்டாரம், ஸ்ரீ பண்டாரம் என அழைக்கப்பட்டது.
  • காரணம் (R):      பண்டாரம் பாதுகாப்பான இடமாக இருந்தது.
A
கருத்தும் காரணமும் சரி
B
கருத்தும் காரணமும் இல்லை
C
கருத்து மட்டும் சரி
D
காரணம் மட்டும் சரி
Question 12
பட்டியல் 1 உடன் பட்டியல் 2 னைப் பொருத்துக. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் மூலம் சரியான விடையை தேர்ந்தெடுக்க.
  • அ. ரானுமால் மஸ்ட யஸ்னன் சபை                   1. கோபால கிருஷ்ண கோகலே
  • ஆ. சுதேசி இயக்கத்தின் அடையாளச் சின்னம் 2. தாதாபாய் நௌரோஜி
  • இ. டயமண்ட் ஆப் இந்தியா                         3. லாலா லஜபதிராய்
  • ஈ. ஷெர்-இ-பஞ்சாப்                                         4. சக்கரம்
A
2 4 3 1
B
3 1 4 2
C
4 3 1 2
D
3 4 2 1
Question 13
குப்தர் காலத்தைப் பற்றிய கூற்றுகளை கவனி. சரியானவற்றை தேர்ந்தெடு.
  1. அலகாபாத் தூண் கல்வெட்டு இரண்டாம் சந்திரகுப்தரைப் பற்றிய தகவல்களைத் தருகின்றது.
  2. மெஹ்ராலி இரும்புத் தூண் கல்வெட்டு முதலாம் சந்திரகுப்தரின் படையெடுப்புகளைக் குறிப்பிடுகிறது.
  3. சமுத்திர குப்தரின் வெள்ளி, தங்க நாணய வெளியீடு அவரை அஸ்வமேத யாகத்தை காத்தவர் எனக் காட்டியது.
  4. இரண்டாம் சந்திரகுப்தர் தன்னை விக்ரமாதித்தன் என்று அழைத்துக் கொண்டார்.
A
2, 3 மற்றும் 4
B
2 மற்றும் 3
C
1 மற்றும் 4
D
3 மற்றும் 4
Question 14
கால வரிசைப்படுத்துக.
  1. முதலாம் தரைன் போர்
  2. சிந்துவின் மீது அரேபிய படையெடுப்பு
  3. கஜனி மாமூதுவின் சோமநாதபுர படையெடுப்பு
  4. டெல்லியில் அடிமை வம்ச ஆட்சி நிறுவப்படுதல்
A
2, 3, 1, 4
B
2, 3, 4, 1
C
3, 1, 4, 2
D
4, 3, 2, 1
Question 15
பொருத்துக.
  • அ. சோழீஸ்வரர் கோயில்                1.  குலோத்துங்கன் – I
  • ஆ. கோரங்கநாதன் கோயில்           2. ஆதித்யன் – I
  • இ. பாலசுப்பிரமணியம் கோயில்   3. பாராந்தகன் – I
  • ஈ. கம்மாஹரீஸ்வர கோயில்        4. விஜயாலயன் – I
A
2 4 3 1
B
3 1 4 2
C
4 3 2 1
D
3 4 2 1
Question 16
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்துக.
  • பட்டியல் 1                                             பட்டியல் 2
  • அ. மௌலானா அபுல்கலாம்          1. கேசரி
  • ஆ. ஆசாத்                                              2. தத்வபோதினி பத்திரிக்கை
  • இ. தேவேந்திரநாத் தாகூர்                3. அல் ஹிலால்
  • ஈ. பால கங்காதர திலகர்                  4. மூக்நாயக்
A
3 4 2 1
B
3 1 4 2
C
4 3 2 1
D
3 4 2 1
Question 17
பட்டியல் ஒன்றில் காண்பனவற்றை பட்டிய; இரண்டுடன் பொருத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
  • வரிசை 1                                                                                    வரிசை 2
  • அ. டச்சு கிழக்கிந்திய கம்பெனி                                          1. 1600
  • ஆ. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி                                  2. 1664
  • இ. பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி                                         3. 1510
  • ஈ. போர்த்துக்கீசியர்கள் கோவாவைக் கைப்பற்றினர்     4. 1602
A
3 4 2 1
B
4 1 2 3
C
4 3 2 1
D
3 4 2 1
Question 18
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  • கூற்று(A): JUP குழு இந்தியாவின் மொழி வாரி மாநிலங்கள் அமைப்பது பற்றி மறுபரிசீலனை செய்ய அமைக்கப்பட்டது.
  • காரணம் (R): இந்த குழுவின் உறுப்பினர்கள் ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல் மற்றும் பட்டாபி சீதாராமய்யா ஆவர்.
கீழ்க்கண்ட குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
A
(A) மற்றும் (R) இரண்டும் தவறு
B
(A) மற்றும் (R) சரி, ஆனால் (R) என்பது (A) வின் சரியான காரணம் அல்ல
C
(A) மற்றும் (R) சரி, ஆனால் (R) என்பது (A) வின் சரியான காரணம் தான்
D
(A) சரி ஆனால் (R) தவறு
Question 19
பொருத்துக.
  • அ. ஆகஸ்ட் சலுகை              1. 1944
  • ஆ. சி.ஆர். திட்டம்                               2. 1945
  • இ. வேவல் திட்டம்                             3. 1946
  • ஈ. இடைக்கால அரசாங்கம்             4. 1940
A
3 4 2 1
B
4 1 2 3
C
4 1 2 3
D
3 4 2 1
Question 20
கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக.
  • அ.நேரு அறிக்கை                                           1. 1940
  • ஆ. இரண்டாவது வட்டமேஜை மாநாடு  2. 1928
  • இ. தனிநபர் சத்யாகிரகம்                              3. 1946
  • ஈ அட்லி பிரபுவின் அறிவிப்பு                     4. 1931
A
2 4 1 3
B
4 1 2 3
C
4 1 2 3
D
3 4 2 1
Question 21
கீழே உள்ளவற்றைக் கொண்டு சரியான விடையளி.
  • கூற்று(A): 1910-ஆம் ஆண்டு வ.உ.சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனியை துவக்கினார்.
  • காரணம்(R): கப்பலோட்டிய தமிழன் என்று வ.உ.சிதம்பரம் பிள்ளை அழைக்கப்படுகிறார்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
A
(A) மற்றும் (R) இரண்டும் உண்மை
B
(A) மற்றும் (R) இரண்டும் உண்மை, ஆனால் (A) வுக்கு சரியான விளக்கம் (R) இல்லை
C
(A) மற்றும் (R) இரண்டும் உண்மை, ஆனால் (A) வுக்கு சரியான விளக்கம் (R) இல்லை
D
(A) தவறானவை (R) உண்மையானவை
Question 22
கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதைச் சுட்டிக் காட்டவும்.
  1. வ.உ.சி. எட்டயபுரத்தில் பிறந்தார்.
  2. அன்னிபெசண்ட் பிரம்ம ஞானசபையைத் தொடங்கினார்.
  3. பாரதியார் பாண்டிச்சேரியில் மரணமடைந்தார்.
  4. சுய மரியாதை இயக்கத்தை ஈ.வெ.ரா. தொடங்கினார்.
A
2, 3 மற்றும் 4
B
2 மற்றும் 3
C
1 மற்றும் 4
D
1, 2 மற்றும் 3
Question 23
  1. பட்டியல் 1லிருந்து பட்டியல் 2ஐப் பொருத்துக.
  • பட்டியல் 1                                 பட்டியல் 2
  • (காலம்)                          (கலை பாணி)
  1. அ. குஷாணர்கள்                     1. திராவிடப் பாணி
  2. ஆ. குப்தர்கள்                2. வேசரா பாணி
  3. இ. சாளுக்கியர்கள்      3. நகரா பாணி
  4. ஈ. சோழர்கள்                4. காந்தாரக் கலை பாணி
A
4 3 2 1
B
4 1 2 3
C
4 1 2 3
D
3 4 2 1
Question 24
பின்வருவனவற்றுள் தவறானவை எது/எவை?
  1. சர் சையத் அகமது கான் அலிகார் இயக்கத்தை வழி நடத்தினார்.
  2. சர் சையத் அகமது கான் சுத்தி இயக்கத்தை ஆதரித்தார்.
  3. சர் சையத் அகமது கான் ஆங்கிலோ-ஓரியன்டல் கல்லூரியை ஆரம்பித்தார்.
A
2 மட்டும்
B
1 மற்றும் 2
C
1 மற்றும் 3
D
1, 2 மற்றும்
Question 25
பட்டியல் 1ஐ பட்டியல் 2உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
  • பட்டியல் 1                                             பட்டியல் 2
  • அ. தத்துவபோதினி சபை                 1. ஹென்றி விவியன் தெரோஜியோ
  • ஆ. இளம் வங்காள இயக்கம்          2. விஷ்ணு சாஸ்திரி பண்டிட்
  • இ. விதவை மறுமண சங்கம்          3. வீரேசலிங்கம்
  • ஈ. ஹிதகானி சமாஜம்                      4. தேவேந்திரநாத் தாகூர்
A
4 3 2 1
B
4 1 2 3
C
4 1 2 3
D
3 4 2 1
Question 26
இந்திய தேசிய உணர்பு விழிப்படையக் காரணமான கீழ்க்கண்டவற்றின் தன்மையைக் கவனி.
  1. முக்கியமாக அது கற்றறிந்தோரால் தொடங்கப்பட்டது.
  2. தேசிய இயக்கத்தில் சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒருங்கிணைந்தனர்.
  3. 1920 ற்குப் பிறகு காந்தியடிகள் அதற்கு தலைமையேற்று நடத்தினார்
  4. காந்தியடிகல் இயக்கத்தை ஆரம்பித்தார்.
மேலே கொடுக்கப்படுள்ள கூற்றுகளில் சரியானவை எவை?
A
2, 3 மற்றும் 4
B
1, 2 மற்றும் 3
C
1 மற்றும் 4
D
2, 3 மற்றும் 4
Question 27
வரிசை 1 உடன் வரிசை 2ஐ பொருத்தி வரிசைகளுக்குக் கீழ்க்கொடுக்கப்பட்டுள்ல தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க.
  • வரிசை 1                                    வரிசை 2
  • அ. பிரம்ம சமாஜம்                 1. சுவாமி விவேகானந்தர்
  • ஆ. ஆரிய சமாஜம்                  2. மேடம் பிளவாட்ஸ்கி
  • இ. ராமகிருஷ்ண மிஷன்      3. ராஜாராம் மோகன்ராய்
  • ஈ. பிரம்மஞான சபை 4. சுவாமி தயானந்த சரஸ்வதி
A
3 4 1 2
B
3 2 1 4
C
4 1 2 3
D
3 4 2 1
Question 28
வரிசை 1 உடன் வரிசை 2ஐ பொருத்தி வரிசைகளுக்குக் கீழ்க்கொடுக்கப்பட்டுள்ல தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க.
  • வரிசை 1                                    வரிசை 2
  • அ. கல்கத்தா காங்கிரஸ் (1928)       1. அடிப்படை உரிமைகள் மற்றும் பொருளாதார                                                                                  கொள்கை மீதான தீர்மானம்
  • ஆ. லாகூர் காங்கிரஸ் (1929)            2. இருநாடு கொள்கை
  • இ. கராச்சி காங்கிரஸ் (1931) 3. டொமினியன் அந்தஸ்து
  • ஈ. ராம்கார் காங்கிரஸ் (1940)            4. முழு சுதந்திரம்
A
2 3 4 1
B
3 2 1 4
C
3 4 1 2
D
3 4 2 1
Question 29
தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும்.
  1. சான்தாலர்கள் கலகம், 1855
  2. மாப்ளே கலகம், 1921
  3. வேலூர் கலகம், 1806
  4. பரக்பூர் சிப்பாய்கள் கலகம், 1804
A
1மட்டும்
B
2 மட்டும்
C
3 மட்டும்
D
4 மட்டும்
Question 30
பின்வருபவைகளை உயரு நிலையில் ஏற்பாடு செய்யவும்.
  1. பூனா தன்னாட்சி கழகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
  2. காகோரி வழக்கு முடிவுற்ற ஆண்டு
  3. S.P.சௌண்டர் கொலை செய்யப்பட்ட ஆண்டு
  4. டாக்டர் சத்யபால் மற்றும் டாக்டர் கிட்ச்லீவ் பஞ்சாப் –அரசால் நாடு கடத்தப்பட்ட ஆண்டு
A
1, 4, 2, 3
B
2, 3, 4, 1
C
3, 1, 4, 2
D
4, 3, 2, 1
Question 31
  1. கீழ்க்கண்ட கூற்றுக்களை கவனித்துச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
  • கூற்று(A): தமிழக மக்களின் வாழ்க்கையின் மீது பௌத்த மதத்தை விட சமணமதம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • காரணம்(R):       சமண மதம் பௌத்த மதத்தை விட இந்து மதத்துடன் பல கூறுகளை பொதுவாக பெற்றுள்ளது.
A
(A) மற்றும் (R) இரண்டுமே சரி ஆனால் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல.
B
(A) சரி ஆனால் (R) சரியானதல்ல
C
(A) சரியானதல்ல ஆனால் (R) சரியானது
D
(A) சரியானது ஆனால் (R) (A) விற்கு சரியான விளக்கம்
Question 32
கீழ்க்கண்ட கூற்றுக்களை கவனித்துச் சரியான வொடையைத் தேர்ந்தெடுக்கவும்.
  • கூற்று(A): திருமண விருப்ப மசோதா பியரம்ஜி மலாபரியின் முக்கியமான சாதனையாகும்.
  • காரணம் (R):      இந்த மசோதா சமுதாய சீர்திருத்தத்திற்கும் தேசிய இயக்கத்திற்கும் பிரிக்க முடியாத இணைப்பை உருவாக்கியது.
A
(A) மற்றும் (R) இரண்டுமே சரி ஆனால் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல.
B
(A) மற்றும் (R) இரண்டுமே சரி ஆனால் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கம்
C
(A) சரி, ® தவறு
D
(A) தவறு (R) சரி
Question 33
  1. பட்டியல்1 உடன் பட்டியல் 2ஐப் பொருத்தி சரியான விடையினை தெரிவு செய்க.
  • பட்டியல் 1                                 பட்டியல் 2
  • அ. வாரன் ஹேஸ்டிங்ஸ்     1. மங்களூர் உடன்படிக்கை
  • ஆ. சர் ஜான் ஷோர்     2. ஹபீஸ் ரகமத் கான்
  • இ. தோஸ்த் முகமது 3. தலையிடா கொள்கை
  • ஈ. மெக்கார்ட்னே பிரபு           4. ஆக்லண்ட் பிரபு
A
2 3 4 1
B
3 2 1 4
C
3 4 1 2
D
3 4 2 1
Question 34
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்க.
  • கூற்று(A): பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஜமீன்தாரி முறையில் நில பிரபுக்கள் குத்தகைதாரரிடமிருந்து அதிக குத்தகை வசூலித்தார்கள்.
  • காரணம்(R): மேற்படி ஆட்சியில் ஜமீன்தாரி முறையில் மக்கட்தொகை பெருக்கமும், கிராமங்களின் அழிவும் ஏற்பட்டதால், விளை நிலங்களின் தேவை பெருகியது.
A
(A) மற்றும் (R) இரண்டுமே சரி ஆனால் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல.
B
(A) மற்றும் (R) இரண்டுமே சரி ஆனால் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கம்
C
(A) சரி, ® தவறு
D
(A) தவறு (R) சரி
Question 35
ராஜாஜி குறித்த கீழ்க்கண்ட கருத்துகளில் தவறானவைகளை தெரிவு செய்.
  1. ராஜாஜி புதுப்பாளையத்தில் காந்தி ஆசிரமம் அமைத்தார்.
  2. தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகம் ஆரம்பித்தார்.
  3. இடைக்கால அரசில் உள்துறை அமைச்சர்
  4. சுதந்திர இந்தியாவில் தொழில் துறை அமைச்சர்
A
2, 3 மற்றும் 4
B
1, 2 மற்றும் 3
C
1 மற்றும் 4
D
3 மற்றும் 4
Question 36
பட்டியல் 1 உடன் பட்டியல் 2 ஐ பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு.
  • பட்டியல் 1                                 பட்டியல் 2
  • அ. மிண்டோ பிரபு                   1. தீவிரவாதி
  • ஆ. கே.ஆர்.காமா                     2. பிரித்தாளும் கொள்கை
  • இ. அபுல் கலாம் ஆசாத்        3. தன்னாட்சி கழகம்
  • ஈ. பொதுநலன்             4. கிலாபாத் இயக்கம்
A
2 1 4 3
B
3 2 1 4
C
3 4 1 2
D
3 4 2 1
Question 37
கீழ்க்காண்பவற்றுள் தவறானதை கண்டுபிடிக்கவும்.
  1. தாகூருக்கு முன்பே காந்தியை மகாத்மா என 1910ல் பாரதி புகழ்ந்தார்.
  2. 1906 ல் சென்னை கடற்கரையில் மேலைநாட்டுத் துணிகளை எரித்தார்.
  3. 1908-1918 வரை பாண்டிச்சேரிக்கு நாடு கடத்தப்பட்டார்.
  4. 1904ல் சுதேசமித்திரனின் துணை ஆசிரியர்.
A
2, 3 மற்றும் 4
B
1, 2 மற்றும் 3
C
3 மட்டும்
D
3 மற்றும் 4
Question 38
பிறழ்வு கொள்கையால் மாநிலங்கள் இணைக்கப்பட்டதை கால வரிசைப்படுத்தி கீழ்க்குறிக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. ஜெய்ப்பூர்
  2. உதய்பூர்
  3. ஜான்சி
  4. சதாரா
A
1, 4, 2, 3
B
3, 2, 1, 4
C
3, 1, 4, 2
D
4, 3, 2, 1
Question 39
வரிசை 1 உடன் வரிசை 2-டினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையினை தெரிவு செய்க.
  • வரிசை 1                                    வரிசை 2
  • அ. டச்சுக்காரர்கள்                   1. கோவா
  • ஆ. ஆங்கிலேயர்கள்  2. நாகப்பட்டினம்
  • இ. போர்ச்சுக்கீசியர்கள்          3. ஹூக்ளி
  • ஈ. பிரெஞ்சுக்காரர்கள்            4. பாண்டிச்சேரி
A
3 4 1 2
B
1 3 2 4
C
2 3 1 4
D
2 1 4 3
Question 40
முகமது பின் துக்ளக் தன் தலைநகரை டெல்லியிலிருந்து தௌலதாபாத்திற்கு கீழ்க்கண்ட காரணங்களுக்காக மாற்றினார்.
  1. டெல்லியிலிருந்து சமதூரம் இருந்தது, நிர்வாகத்திற்கு ஏற்றதாக இருந்தது.
  2. மங்கோலிய படையெடுப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள
  3. மிகவும் முக்கியம் வாய்ந்த பகுதி
  4. தன்னுடைய எல்லையை தென்னிந்தியாவில் விரிவுபடுத்த
A
1, 3 மற்றும் 4ம் சரி
B
1, 2 மற்றும் 4ம் சரி
C
1, 2, 3 மற்றும் 4ம் சரி
D
1,2 மற்றும் 3ம் சரி
Question 41
கீழே கொடுக்கப்பட்டுள்ள விஜயநகர அரச வம்சங்களை தோற்றுவித்தவர்களுடன் சரியாக பொருத்துக.
  • அ. சங்கம் வம்சம்                   1. நரசிம்மா
  • ஆ. சாளுவ வம்சம்     2. ஹரிஹரர்
  • இ. துளுவ வம்சம்                   3. திருமலை
  • ஈ. ஆரவீடு வம்சம்                  4. வீர நரசிம்மன்
A
3 4 1 2
B
1 3 2 4
C
2 3 1 4
D
2 1 4 3
Question 42
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்.
  • கூற்று(கூ):         1944-ல் ஈ.வே.ராமசாமி, திராவிடக் கழகத்தை ஆரம்பித்து திராவிடநாடு என்ற தனி நாடு கோரிக்கையை விடுத்தார்.
  • காரணம் (கா):   வட ஆரியர்கள் மேலாதிக்கத்துக்கு எதிராகவும், திராவிடர்களின் மதிப்பு உயர்வதற்காகவும் இக்கட்சி துவக்கப்பட்டது என்பது அவர் கருத்தாகும்.
இவற்றுள் பின்வரும் தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
A
(கூ), (கா) இரண்டும் சரி, (கா), (கூ)-விற்கான சரியான விளக்கம் ஆகும்.
B
(கூ), (கா) இரண்டும் சரி, (கா), (கூ)-விற்கான சரியான விளக்கம் அல்ல
C
(கூ) சரி, (கா) தவறு
D
(கூ) தவறு, (கா) சரி
Question 43
பின்வரும் இரு வாக்கியங்களில் கொடுப்பட்டுள்ள கூற்று (கூ) காரணம் (கா) ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் தொகுப்புகளிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
  • கூற்று(கூ):         1878-ஆம் ஆண்டின் வட்டாட மொழி பத்திரிக்கைச் சட்டம் இரகசியமாக உருவாக்கப்பட்டு ஆங்கிலேய இந்தியப் பேரரசின் மைய சட்ட மன்றத்தில் ஒரே அமர்வில் நிறைவேற்றப்பட்டது.
  • காரணம்(கா):    அமிர்த பஜார் பத்திரிகை அதுவரை வங்காள மொழியிலும், ஆங்கிலத்திலும் வெளிவந்தது. இரவோடு இரவாக இது ஆங்கிலப் பத்திரிகையாக மாற்றப்பட்டு விட்டது.
A
கூ), (கா) இரண்டும் தனித்தனியே சரியானவை, (கா), (கூ)-வின் விளைவு.
B
(கூ), (கா) இரண்டுமே சரொயானவை, ஆனால் (கா), (கூ) இடையே சம்மந்தம் இல்லை
C
. (கூ) சரியானது, ஆனால் (கா) தவறு
D
. (கூ) சரியானது, ஆனால் (கா) தவறு
Question 44
கீழ்க்கண்ட வாக்கியங்களை ஆராய்க. கீழ்க்கண்டவற்றுள் சரியான வாக்கியத்தை/ வாக்கியங்களை தரப்பட்டுள்ள தொகுதியிலிருந்து தெரிவு செய்க:
  1. 1887-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு ஆயிர விளக்குப் பகுதி மதராசில் நடைபெற்றது.
  2. 1903-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் 19-வது மாநாடு மதராசில் நடைபெற்றது.
  3. 1908-ஆம் ஆண்டு நெல்லை தேசாபிமான சங்கத்தை வ.உ.சிதம்பரம் பிள்ளை தோற்றுவித்தார்.
  4. சென்னை மாகாணத்தில் சைமன் புறக்கணிப்பு குழுவின் தலைவர் கு.காமராஜர்.
A
1, 3 மற்றும் 4ம் சரி
B
1, 2 மற்றும் 4ம் சரி
C
1, 2, 3 மற்றும் 4ம் சரி
D
1,2 மற்றும் 3ம் சரி
Question 45
பின்வரும் இருவாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று(கூ) காரணம் (கா) ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் தொகுப்புகளிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
  • கூற்று(கூ):         லக்னோ மாநாடு 1916-ஆம் ஆண்டு காங்கிரசு-லீக் உடன்பாட்டை செய்து கொண்டது.
  • காரணம் (கா):   காங்கிரசு-லீக் உடன்பாடு ஒரு சாதனையாகக் கருதப்பட்டாலும் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை.
A
(கூ) மற்றும் (கா) இரண்டுமே தனித்தனியே தவறானவை.
B
(கூ) மற்றும் (கா) இரண்டுமே தனித்தனியே சரியானவை. ஆனால் (கா) (கூ) வின் சரியான விளக்கமல்ல.
C
. (கூ) சரியானது, ஆனால் (கா) தவறு
D
. (கூ) சரியானது, ஆனால் (கா) தவறு
Question 46
பின்வருவனவற்றில் சரியாகப் பொருந்தாதது எது/ எவை? உங்கள் விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து தெரிவு செய்யவும்.
  1. புருசோத்தம் தாஸ் டான்டன் - 1950ல் காங்கிரஸ் தலைவர்
  2. காங்கிரசின் ஆவடி மாநாடு - 1963
  3. காமராசர் திட்டம் - 1955
  4. காமராசர் - 1964ல் காங்கிரஸ் தலைவர்
A
1ம், 4ம்
B
1ம், 2ம்
C
2ம், 4ம்
D
2ம், 3ம்
Question 47
முகலாய ஆட்சிக் காலத்தில் கிராம நிர்வாகம் தொடர்பாக பின்வரும் கூற்றுகளை உற்று நோக்குக.
  1. அது சிக்தாரின் கையிலிருந்தது
  2. அது, கிராம மக்களிடையேயான பிரச்சனைகள் உள்ளடங்குகின்றன வழக்குகளை தீர்த்து வைக்கக்கூடிய நிதி முகமையாகவும் இருந்தது.
A
1 மட்டுமே சரியாகும்
B
2 மட்டுமே சரியாகும்
C
1, 2 ஆகிய இரண்டும் சரியாகும்
D
1, 2 ஆகிய இரண்டும் தவறாகும்.
Question 48
களப்பிரர்கள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
  1. களப்பிரர்கள் பற்றிய செய்திகளை புத்த மதம் சார்ந்த நூல்களிலிருந்தும் பிற்கால தமிழ் இலக்கிய நூல்களிலிருந்தும் மற்றும் வேல்விகுடி தட்டுகளிலிருந்தும் பெறலாம்.
  2. வரலாற்றாலர்கள் இந்த காலத்தை ஒரு ‘நீண்ட வரலாற்று இரவு’ என்று வழங்குகிறார்கள்.
  3. இந்த காலம் புத்தமதம் தமிழகத்தில் வீழ்ச்சியை நோக்கிய காலம் என்று குறிக்கப்படுகிறது.
  4. எந்தவித தமிழ் இலக்கிய படைப்புகளும் இந்த காலத்தில் நடைபெறவில்லை.
A
1 மற்றும் 2
B
2 மட்டும்
C
3 மற்றும் 4
D
3 மட்டும்
Question 49
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலைப் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
  1. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலானது அரசு அதிகாரத்தின் சின்னமாக இருக்கவில்லை.
  2. தஞ்சாவூர் பக்தி இயக்க சைவ சமய துறவிகளின் மிக முக்கிய தளமாகும்.
  3. முத்தரையர்கள் விஜயாலய சோழனைத் தோற்கடித்து தஞ்சாவூரைக் கைப்பற்றினார்.
  4. முத்தரையர்களின் தலைவர் நிசம்பாசூடினி எனும் பெண் தெய்வத்திற்கு தஞ்சாவூரில் ஒரு கோயில் கட்டினார்.
A
1, 2 மற்றும் 3
B
2, 3 மற்றும் 4
C
2 மற்றும் 4
D
4 மட்டும்
Question 50
பொருத்துக.
  • நகரம்                              நிர்மானித்தவர்
  • அ. முரதாபாத்  1. முகமது கான் பங்காஷ்
  • ஆ. பருக்காபாத்            2. காஜி-அல்-தின் இமத்-அல் முல்க்
  • இ. காஜியாபாத்            3. பைசுல்லா கான்
  • ஈ. ராம்பூர்                       4. ரஸ்தம் கான் டெக்கானி
A
3 4 1 2
B
1 3 2 4
C
4 1 2 3
D
2 1 4 3
Question 51
பட்டியல் 1உடன் பட்டியல் 2ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க.
  • பட்டியல் 1                                             பட்டியல் 2
  • அ. அபினவ் பாரத் சொசைட்டி        1. மீர்ஸா குலாம் அகமது
  • ஆ. இந்தியன் அசோசியேஷன்       2. பாலகங்காதர திலகர்
  • இ. சிவாஜி இயக்கம்               3. சுரேந்திரநாத் பானர்ஜி
  • ஈ. அகமதியா இயக்கம்                     4. கணேஷ் தாமோதர் சவார்க்கர்
A
3 4 2 1
B
1 3 2 4
C
4 1 2 3
D
2 1 4 3
Question 52
கீழ்க்காணும் வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று(கூ):         கல்கத்தாவில் செப்டம்பர் மாதம் 1920-, ஆண்டு நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரசின் சிறப்பு கூட்டத்தில் தன்னாட்டி பெறுவது காங்கிரசின் முக்கிய குறிக்கோள் என முடிவு செய்யப்பட்டது.
  • காரணம் (கா):   1919-ம் ஆண்டுச் சட்டம் இந்தியர்களுக்கு தன்னாட்சியை வழங்கவில்லை.
A
கூ) மற்றும் (கா) சரியானவைகள் மற்றும் (கா) சரியான விளக்கத்தை (கூ)க்கு அளித்துள்ளது.
B
(கூ) மற்றும் (கா) சரியானவைகள் மற்றும் (கா) சரியான விளக்கத்தை (கூ)க்கு அளிக்கவில்லை.
C
(கூ) தவறு, ஆனால் (கா) சரி
D
(கூ) சரி, ஆனால் (கூ) தவறு
Question 53
பின்வரும் இரு வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று(கூ), காரணம் (கா) ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையை தெரிவு செய்க.
  • கூற்று(கூ):         நேருவிற்குப்பின், லால்பகதூர் சாஸ்திரி பிரதமரானார்.
  • காரணம் (கா):   நேரு தனது இறுதி காலத்தில், சாஸ்திரியின் ஒத்துழைப்பை அதிகம் பெற்றார்.
A
(கூ) உண்மை (கா)தவறு
B
(கூ), (கா) உண்மை. (கா), (கூ) இரண்டும் தொடர்புடையவை
C
கூ) வும் (கா) வும் தவறானவை
D
(கூ) தவறு (கா) உண்மையானவை
Question 54
அட்சிசன் ஆணையத்தின் விளைவாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பணிகள் யாவை?
  1. ஏகாதிபத்திய குடிமைப் பணி
  2. மாகாணக் குடிமைப் பணி
  3. சிறப்புக் குடிமைப் பணி
  4. சார்நிலைக் குடிமைப் பணி
A
1, 2 மற்றும் 3 மட்டும்
B
1, 3 மற்றும் 4 மட்டும்
C
1, 2 மற்றும் 4 மட்டும்
D
1, 2, 3, 4ஆகிய அனைத்தும்
Question 55
மௌரியப் பேரரசு மற்றும் நிர்வாகம் தொடர்பாக பின்வரும் கூற்றுகளை உற்று நோக்குக.
  1. சந்திடகுப்தர் மௌரியப் பேரரசைத் தோற்றுவித்தவர் ஆவார்.
  2. அசோகர், சக்ரவர்த்தியாக வருவதற்கு முன்பு அவாந்திகா மற்றும் தக்சிலா மாநிலங்களின் வைஸ்ராயாகச் செயல்பட்டார்.
A
1 மட்டுமே சரியாகும்
B
2 மட்டுமே சரியாகும்
C
1, 2 ஆகிய இரண்டும் சரியாகும்
D
1, 2 ஆகிய இரண்டும் தவறாகும்
Question 56
முகலாய ஆட்சியின் சட்டங்கள் தொடர்பாக பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
  1. கடவுளின் சட்டங்கள் குர்ரானில் மட்டுமே உள்ளடங்கியிருந்தன.
  2. ஜிம்மிஸ் என்றழைக்கப்பட்ட முகமதியர் அல்லாதவரால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட ஒரு சமூகத்தை இஸ்லாம் ஒரு போதும் ஏற்றதில்லை.
A
1 மட்டுமே சரியாகும்
B
2 மட்டுமே சரியாகும்
C
1, 2 ஆகிய இரண்டும் சரியாகும்
D
1, 2 ஆகிய இரண்டும் தவறாகும்.
Question 57
கௌடில்யர் தொடர்பாக பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
  1. அவர் நிர்வாகத்தின் புதிய பள்ளியைத் தோற்றுவித்தவர் ஆவார்.
  2. அவரின் இயற்பெயர் விஷ்ணுகுப்தா என்பதாகும்.
A
1 மட்டுமே சரியாகும்
B
2 மட்டுமே சரியாகும்
C
1, 2 ஆகிய இரண்டும் சரியாகும்
D
1, 2 ஆகிய இரண்டும் தவறாகும்.
Question 58
W.C. பானர்ஜி கீழ்க்கண்டவற்றுள் எந்த இடத்தைச் சேர்ந்தவர்?
A
கல்கத்தா
B
மும்பை
C
டில்லி
D
நாக்பூர்
Question 59
எந்த காங்கிரஸ் மாநாட்டில் “வந்தே மாதரம்” பாடல் முதல் முறையாக பாடப்பட்டது?
A
பம்பாய் 1885
B
மெட்ராஸ் 1888
C
கல்கத்தா 1906
D
லாகூர் 1929
Question 60
பின்வரும் இடங்களில் பழைய கற்கால குகை வீடுகள் காணப்படக் கூடியது
A
ஹரப்பா
B
பெலான்
C
பீம்பெட்கா
D
ராஞ்சி
Question 61
பின்வருவனவற்றுள் எது சரியான கூற்று இல்லை?
A
மகேந்திரவர்மன் சமண மதத்தை கடைபிடித்து வந்தார்
B
அவர் சைவ மதத்திற்கு மாறினார்
C
அவர் திருப்பாபுலியூரில் உள்ள புத்த விகாரங்களை அழித்தார்.
D
அவர் திருவடிகை என்னுமிடத்தில் சிவன் கோயிலைக் கட்டினார்.
Question 62
குடவோலை முறையைப் பின்பற்றியவர்கள்
A
சேரர்கள்
B
பாண்டியர்கள்
C
சோழர்கள்
D
ஆரியர்கள்
Question 63
ஹரப்பா நாகரிக காலத்தில் கைவினைப் பொருள்கள் உற்பத்தியில் பிரத்யோக இடத்தை வகிக்கும் பகுதி எது?
A
மொகஞ்சதாரோ
B
சன்குதாரோ
C
தோலவீரா
D
லோத்தல்
Question 64
‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற வாசகம் யாரால் வழங்கப்பட்டது?
A
சுப்பரமணிய பாரதியார்
B
சுப்பரமணிய சிவா
C
K.K. பிள்ளை
D
ஜவஹர்லால் நேரு
Question 65
  • சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுது.
  • உள் ஆட்சியின் தந்தை எனப்படுபவர்
A
கர்சன் பிரபு
B
வெல்லெஸ்லி பிரபு
C
ரிப்பன் பிரபு
D
டல்ஹௌசி பிரபு
Question 66
முகலாயர் காலத்தில் இசைத் துறையில் “ஞான சமுத்திரா” என்ற பட்டத்தை வென்றவர் யார்?
A
தான்சேன்
B
லால்கான்
C
ஜகநாத்
D
ஜனார்தனன்
Question 67
எந்த கவர்னர் ஜெனரலின் ஆட்சி காலத்தில் விதவை மறுமணச் சட்டம் கொண்டு வரப்பட்டது?
A
பெண்டிங்
B
டல்ஹௌசி
C
கானிங்
D
லாரன்ஸ்
Question 68
பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது?
A
புது டில்லி மாநகரம் - கோர்டன் என்பவரால் வடிவமைக்கப்பட்டது
B
உதய்பூர் அரண்மனை - எட்வின் லூடின்ஸ் மற்றும் சர் எட்வர்டு பேக்ரால் வடிவமைக்கப்பட்டது.
C
ராணிவிக்டோரியா நினைவு மண்டபம் - J.ரான்ஸம்
D
பிர்லா மந்திர் - கர்சன் பிரபு
Question 69
வாஸ்கோடகாமா எப்போது கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார்?
A
கி.பி. 1471
B
கி.பி. 1491
C
கி.பி. 1496
D
கி.பி. 1800
Question 70
மௌண்ட்பேட்டன் பிரபு இருநாட்டு திட்டத்தினை ஜவஹர்லால் நேருவை தவிர இவர்களுடனும் கலந்தாலோசித்தார்.
A
சர்தார் பட்டேல் மற்றும் திரு.மேனன்
B
திரு.ஜின்னா மற்றும் சர்தார் பட்டேல்
C
காந்திஜி மற்றும் திரு.ஜின்னா
D
திரு.மோதிலால் நேரு மற்றும் திரு. பட்டேல்
Question 71
பௌத்த சான்றுகளின்படி, தக்காணப்பகுதி இவ்வாறு அழைக்கப்பட்டது
A
பிரம்மார்ஷி தேசம்
B
மத்திய தேசம்
C
தக்ஷிண பதா
D
பூர்வ தேசா
Question 72
நியோகம் என்றால் பண்டைய இந்தியாவின் ஆறுவகைத் தத்துவங்களில் ஒன்றல்ல, அப்படியானால் நியோகா என்பது எதனைக் குறிக்கிறது?
A
விதவை உடன்கட்டையேறுதல்
B
பலதார மணம்
C
ஒரு விதமான உடற்பயிற்சி
D
கணவன் இறந்த பின் அவனது சகோதரனுடன் வாழ்க்கை நடத்துதல்
Question 73
இந்திய தொல்லியலின் தந்தை என்றழைக்கப்பட்டவர் யார்?
A
ஜான் மார்ஷல்
B
எஸ்.ஆர்.ராவ்
C
எஸ்.ஆர்.ராவ்
D
அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்
Question 74
“நான் நீதிக்கு புறம்பான குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வேனாயின் எனக்கு எதிரான தீர்ப்பை நானே வழங்கிக் கொள்வேன்” இது யாருடைய கூற்று?
A
பாபர்
B
அக்பர்
C
ஜஹாங்கிர்
D
அவுரங்கசீப்
Question 75
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
  • கூற்றுக்கள்:
A
சிவாஜி பட்டம் சூடிய ஆண்டு, 1674
B
புரந்தர் உடன்படிக்கை, 1664
C
சிவாஜி பிறந்த ஆண்டு, 1637
D
சிவாஜி இறந்த ஆண்டு, 1666
Question 76
ஹிந்தி மொழி மூலம் “அனைவரும் ஒருவரே” என்ற உணர்வை ஏற்படுத்திய சமூக சீர்திருத்தவாதி யார்?
A
இராஜாராம் மோகன்ராய்
B
சுவாமி தயானந்த சரஸ்வதி
C
ஸ்ரீராம் கிருஷ்ணா
D
மேடம் பிளவாட்ஸ்கி
Question 77
எந்த இதழ்கள் அதன் ஆசிரியரோடு சரியாக பொருந்தவில்லை?
A
வந்தே மாதரம்: அரவிந்தோ கோஷ்
B
நியூ இந்தியா: பிபின் சந்திரபால்
C
யுகந்தர் : பூபேந்தர்நாத் தத்தா
D
சந்தியா: பரிந்திரா கோஷ்
Question 78
“நான் ஒரு இந்திய டமாரம்” என்று கூறியவர்
A
மேடம் காமா
B
சகோதரி நிவேதிதா
C
அன்னிபெசண்ட்
D
காதம்பினி கங்குலி
Question 79
1931-ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்கு தலைமை தாங்கியவர்
A
ஜவஹர்லால் நேரு
B
மகாத்மா காந்தி
C
இராஜாஜி
D
வல்லபாய் படேல்
Question 80
கீழ்க்கண்டவற்றுள் கிரிப்ஸ் தூதுக்குழுவின் பரிந்துரை எது?
A
அரசியல் நிர்ணய சபை அமைக்க திட்டம்
B
மத்தியில் இரட்டை ஆட்சி அறிமுகப்படுத்தல்
C
பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையை ஆதரித்தல்
D
இந்தியர்களுக்கு இராணுவத்தை கட்டுப்படுத்த உரிமை
Question 81
“உங்கள் இரத்தத்தை கொடுங்கள்; நான் சுதந்திரத்தைக் கொடுக்கிறேன்” என்று சொன்னவர் யார்?
A
பால கங்காதர திலகர்
B
லாலா லஜ்பத் ராய்
C
பிபின் சந்திரபால்
D
சுபாஸ்சந்திரபோஸ்
Question 82
தாஷ்கண்ட் அமைதி மாநாடு எப்போது நடைபெற்றது?
A
ஜனவரி, 1966
B
பிப்ரவரி, 1966
C
மார்ச் 1966
D
ஏப்ரல் 1966
Question 83
முதல் தனிநபர் சத்தியாக்கிரகி என்ற பெருமைக்குரியவர்
A
காந்திஜி
B
வினோபாபாவே
C
ராஜாஜி
D
முகமது அலி ஜின்னா
Question 84
கீழ்க்கண்டவற்றுள் எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு ஐரீஷ் உறுப்பினர், ஆல்பிரெட் வெப் தலைமையில் நடைபெற்றது?
A
முதலாம் மாநாடு 1885
B
நான்காம் மாநாடு 1888
C
ஏழாவது மாநாடு 1891
D
பத்தாம் மாநாடு 1894
Question 85
“வந்தே மாதரம்” என்ற இதழின் முதல் பதிப்பாசிரியர் __________
A
பக்கிம் சந்திர சட்டர்ஜி
B
ஸ்ரீ அரவிந்த் கோஷ்
C
ரவீந்திரநாத் தாகூர்
D
டாக்டர் அன்னிபெசண்ட்
Question 86
தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும்.
  • அ. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம்       1. 1948
  • ஆ. ஐரோப்பிய சமூக சாசனம்                                2. 1961
  • இ. அமெரிக்க மனித உரிமைகள் மற்றும்                      3. 1958 கடமைகளின் பிரகடனம்
  • ஈ. சர்வதேச சிவில் மற்றும் அரசியல்                 4. 1966   உரிமைகளின் உடன்படிக்கை (ICCPR)
A
B
C
D
Question 87
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
A
இரஞ்சித்சிங் - பிளாசிப்போர்
B
திப்பு சுல்தான் - அமிர்தசரஸ் உடன்படிக்கை
C
ஹெக்டர் மன்றோ – பக்சார் போர்
D
வாட்சன் - ஸ்ரீரங்கபட்டினம் உடன்படிக்கை
Question 88
‘காங்கிரஸ் கட்சி அரசு மன்றங்களில் நுழைவது என்பது அரசுடன்  ஒத்துப் போவதற்கல்ல ஒத்துழையாமையை முன்னிறுத்தவே” என்ற  கருத்தினைக் கூறியவர்கள் எவர்?
A
பண்டித மோதிலால் நேரு மற்றும் தேஷ் பந்து சித்தரஞ்சன் தாஸ்
B
எம்.கே. காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு
C
லாலா லஜ்பத்ராய் மற்றும் கோபல கிருஷ்ண கோகலே
D
சுப்ரமணிய பாரதி மற்றும் வ.உ. சிதம்பரம் பிள்ளை
Question 89
பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
A
எட்டயபுரம் – கலெக்டர் ஆஷ்
B
ஜாலியன் வாலாபாக் துயரம் - ஹண்டர் கமிட்டி
C
சுயராஜ்ஜியக் கட்சி- பி.ஜி.திலகர்
D
மதுவிலக்கு - வ.உ.சிதம்பரனார்
Question 90
தென்னிந்தியாவில் சாதவாகனர்களின் வீழ்ச்சிக்குப் பின் மாபெரும் அரசியல் சக்தியாக உருவெடுத்த வம்சாவளி
A
அபிராஸ்
B
திரிகூடர்கள்
C
இக்ஷவாகு
D
பல்லவர்கள்
Question 91
பின்வரும் ஜோடிகளில் சரியாகப் பொருத்தப்பட்டது எது?
A
ஜாதகாஸ் - மௌரியர்களின் மரபு வழி
B
புராணம் - அசோகர் ஸ்ரீலங்காவில் புத்த மதத்தைப் பரப்புவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகள்
C
தீபவம்சம் - மௌரியர்களும் சமூகப் பொருளாதார நிலையும்
D
திக்நிகயா - மௌரியர்களின் அரசியலில் புத்த மதக் கொள்கைகளின் தாக்கம்
Question 92
நீதிக்கட்சியின் கோரிக்கை என்ன?
A
திராவிட நாடு
B
பாரத நாடு
C
விடுதலை நாடு
D
திராவிடர்கள் விடுதலை
Question 93
கீழ்க்குறிப்பிட்டவர்களில் யாரை ஈ.வே.ராமசாமி நாயக்கர் தனி திராவிட நாட்டை வலியுறுத்த சந்தித்தார்?
A
சர் ஸ்டாப்போர்ட் கிரிப்ஸ்
B
வில்லிங்டன் பிரபு
C
லின்லித்கோ பிரபு
D
மவுண்ட்பேட்டன் பிரபு
Question 94
பின்வருவனவற்றில் சரியான காலவரிசை கொண்ட நிகழ்ச்சிகளை அடையாளம் காண்க.
A
காங்கிரசு அமைச்சரவைகள் பதவி விலகல், ஆகஸ்டு அளிப்பு, கிரிப்ஸ் தூதுக்குழு, தனிநபர் சட்ட மறுப்பு
B
ஆகஸ்டு அளிப்பு, காங்கிரசு அமைச்சரவைகள் பதவி விலகல், தனிநபர் சட்டமறுப்பு , கிரிப்ஸ் தூதுக்குழு
C
காங்கிரசு அமைச்சரவைகள் பதவி விலகல், ஆகஸ்டு அளிப்பு, தனிநபர் சட்ட மறுப்பு, கிரிப்ஸ் தூதுக்குழு
D
காங்கிரசு அமைச்சரவைகள் பதவி விலகல், தனிநபர் சட்ட மறுப்பு, கிரிப்ஸ் தூதுக்குழு, ஆகஸ்டு அளிப்பு
Question 95
பின்வருவனவற்றுள் சரியானது எது? 1665-ம் ஆண்டு புரந்தர் உடன்படிக்கையின்படி முகலாயருக்கு கீழ்க்கண்ட எண்ணிக்கை கொண்ட கோட்டைகளை சிவாஜி கொடுத்தார்
A
23
B
26
C
28
D
30
Question 96
கீழ்க்கண்ட வாக்கியங்களை கருத்தில் கொள்க. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்புகளிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
  1. லால், பால், பால் ஆகிய மூவரும் தீவிர தேசிய மூவர் என்று அறியப்பட்டனர்.
  2. இந்தியாவின் தேசிய கீதம் இரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்டது.
  3. ‘புரட்சி வாழ்க’ என்ற கொள்கைக் குரல் எழுப்பியது பகத்சிங்.
  4. அன்னிபெசண்ட் அம்மையார்தான் முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசின் 1917ஆம் ஆண்டின் மாநாட்டிற்கு தலைமை தாங்கிய இந்தியப் பெண்மனி.
மேற்கண்ட எந்த வாக்கியம் தவறானது?
A
1
B
2
C
3
D
4
Question 97
சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியைப் பற்றி கீழே குறிக்கப்படுகின்றன. எந்த கூற்றுகள் சரியானவை?
  1. இரு கப்பல்கள் வாங்கப்பட்டன.
  2. இரு இயந்திர படகுகள் வாங்கப்பட்டன.
  3. பாரதியார் கப்பல்களின் பெயர்களை எதிர்த்தார்.
  4. இந்தியாவில் இம்முயற்சியை ஆங்கிலேயர் விரும்பவில்லை.
A
எல்லா கூற்றுக்களும் சரியானவை
B
கூற்று 1 தவிர, மற்ற கூற்றுகள் தவறானவை
C
கூற்று 4 தவிர, மற்றவை சரியானவை
D
கூற்று 2யை தவிர, மற்றவை தவறானவை
Question 98
மௌரியர்கள் காலத்தில் நீதி அமைப்புகளுக்கும், சட்ட நடைமுறைகளுக்கும் அடிப்படையாய் விளங்கியது
A
புத்த கொள்கைகள்
B
இந்துக் கொள்கைகள்
C
அர்த்தசாஸ்திரம்
D
பாரசீக சட்டங்கள்
Question 99
“இந்தியா இந்தியர்களுக்கே” என்று பிரகடனப்படுத்திய சமூக சீர்திருத்தவாதி யார்?
A
ராஜாராம் மோகன்ராய்
B
தயானந்த சரஸ்வதி
C
தயானந்த சரஸ்வதி
D
ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 99 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!