August 4th Week 2021 Current Affairs Online Test Tamil

Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
தலித் பந்து திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- தெலுங்கானா மாநிலத்தின் உசூர்நகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள சலபள்ளி கிராமத்தில் தலித் பந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்குவதன்மூலம் அவர்களின் வருமானம் ஈட்டும் செயல்பாட்டைத் தேர்வுசெய்வதற்காக தலா `10 இலட்சம் நிதியுதவியை வழங்கி முதலமைச்சர் கே சந்திரசேகர் ராவ் இத்திட்டத்தை தொடங்கிவைத்தார். மேலும், ஒரு தனி பாதுகாப்பு நிதியம் உருவாக்கப்படும். தலித் பந்து சமிதிகள், கிராமம் முதல் மாநில அளவில் பல்வேறு நிலைகளில் நிறுவப்படும். மேலும் அவற்றிடம், தலித் பாதுகாப்பு நிதியத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் ஒப்படைக்கப்படும்.
Incorrect

Question 2 of 50
2. Question
பிரதான் மந்திரி கதிசக்தி முன்னெடுப்பில் முதலீடு செய்யப்படும் தொகை எவ்வளவு?
Correct
விளக்கம்
- பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 15, 2021 அன்று `100 லட்சம் கோடி திட்ட மதிப்பீட்டில் பிரதான் மந்திரி கதிசக்தி முன்னெடுப்பை அறிவித்தார். இந்த முன்னெடுப்பு, இந்தியாவில் வாழும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இது உட்கட்டமைப்பின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும். இது புதிய எதிர்கால பொருளாதார மண்டலங்களின் சாத்தியக்கூறுகளையும் அதிகரிக்கிறது.

Question 3 of 50
3. Question
உலக நீரழிவுக்கு முந்தையநிலை நாளாக கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- நீரழிவு நோயைப் பற்றிய விழிப்புணர்வை பரப்பவும், நீரழிவு நோயின் தாக்கத்தை சமன் செய்யவுமாக, முதல் உலகளாவிய நிகழ்வு, ஆகஸ்ட்.14 அன்று உலக நீரழிவுக்கு முந்தையநிலை நாளாக நடத்தப்பட்டது. 2021 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி ஆண்டுதோறும் ஆக.14ஆம் தேதி அன்று உலக நீரழிவுக்கு முந்தையநிலை நாள் கடைப்பிடிக்கப்படும். நீரழிவு நாளுக்கு 90 நாட்களுக்கு முன்னதாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
- நீரழிவு நோயின் முன்னேற்றத்தைத்தடுப்பதற்கு 90 நாட்கள் ஆகும். இந்தியாவில் வாழும் 9 கோடி மக்கள், நீரழிவுக்கு முந்தையநிலையுடன் வாழ்கின்றனர். இவர்களுள் கிட்டத்தட்ட 75 சதவீதத்தினர், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நீரழிவு நோயால் பீடிக்கப்படுவார்கள்.

Question 4 of 50
4. Question
இந்தியா முழுவதும் உள்ள 20 தனியார் மருத்துவமனைகளால் மேற்கொள்ளப்படும் சுகாதார கேள்வி ஆய்வை (Health QUEST) தொடக்கி வைத்துள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) செயலாளரும் தலைவருமான டாக்டர் கே சிவன், இந்தியா முழுவதும் 20 தனியார் மருத்துவமனைகளால் மேற்கொள்ளப்படும் சுகாதார கேள்வி ஆய்வை (Health QUEST – Quality Upgradation Enabled by Space Technology) முறையாகத் தொடங்கிவைத்தார். இந்த ஆய்வின் குறிக்கோள், மனிதத் தவறுகளை குறைப்பதும், மருத்துவமனைகளின் அவசர மற்றும் தீவிரச் சிகிச்சைப் பிரிவுகளில் சுழிய குறைபாடு மற்றும் தரமான சேவையை அடைவதும் ஆகும். இந்த ஆய்வு, ISRO’இன் தரநிலைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கேற்ப, நாட்டில் நிலவும் சுகாதார அமைப்பின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

Question 5 of 50
5. Question
ஆயுர்வேதத்தில் உலகின் முதல் உயிரிவங்கிஅமைக்கப்படவுள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
Correct
விளக்கம்
- மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனோவால் சமீபத்தில் உலகின் முதல் ஆயுர்வேத உயிரி வங்கி புது தில்லியில் அமைக்கப்படும் என்று அறிவித்தார். AIIA என்பது புது தில்லியில் உள்ள ஒரு பொது ஆயுர்வேத மருத்துவ மற்றும் ஆராய்ச்சிநிறுவனமாகும். இது ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி நிறுவனமாகும். இந்நிறுவனம், பல்வேறு ஆயுர்வேத துறைகளில் முதுகலை மற்றும் முனைவர் பட்ட படிப்புகளை வழங்குகிறது.

Question 6 of 50
6. Question
AFC மகளிர் ஆசிய கோப்பை 2022’க்கு முன்னதாக இந்திய மகளிர் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக தாமஸ் டென்னர்பி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்வை நடத்தும் நாடு எது?
Correct
விளக்கம்
- AFC மகளிர் ஆசிய கோப்பை இந்தியா – 2022’க்கு முன்னதாக, இந்திய மகளிர் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக தாமஸ் டென்னெர்பி பொறுப்பேற்கிறார். AFC மகளிர் ஆசிய கோப்பை – 2022, ஜன.20-பிப்.6 வரை இந்தியாவால் நடத்தப்படவுள்ளது.
- இந்தியாவின் U-17 உலகக்கோப்பை அணிக்கான பொறுப்பில் இருந்த டென்னர்பி, ஆசிய கோப்பை முடிந்தவுடன் அந்தப் பணிக்குத் திரும்புவார். 2022 AFC மகளிர் ஆசிய கோப்பை, AFC மகளிர் ஆசிய கோப்பையின் 20ஆவது பதிப்பாகும்.

Question 7 of 50
7. Question
பேரிடர் மேலாண்மைத் துறையில் எந்த நாட்டுடன் இந்தியா கூட்டாளியாக, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?
Correct
விளக்கம்
- பேரிடர் மேலாண்மை, மீட்பு மற்றும் பாதிப்பு குறைப்பு துறைகளில் ஒத்துழைப்புடன் செயல்பட இந்தியா, வங்கதேசம் இடையே கடந்த மார்ச் மாதம் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த ஒப்பந்தத்தால், இருதரப்பு பேரிடர் மேலாண்மை முறைகளால், இரு நாடுகளும் பயனடையும். பேரிடர் மேலாண்மை துறையில் தயார்நிலை, நடவடிக்கை, திறன் மேம்பாடு ஆகியவற்றை வலுப்படுத்த உதவும்.

Question 8 of 50
8. Question
எந்த ஆண்டுக்குள், ஏழைகளுக்கு, பல்வேறு திட்டங்களின் கீழ், வலுவூட்டப்பட்ட அரிசியை வழங்க இந்திய அரசு முடிவுசெய்துள்ளது?
Correct
விளக்கம்
- 2024ஆம் ஆண்டிற்குள் பல்வேறு திட்டங்களின்கீழ் ஏழைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டை தீர்க்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஏழைக்கும் ஊட்டச்சத்து வழங்குவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும். ஏழைப்பெண்கள் மற்றும் ஏழை குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாதது அவர்களின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது என்ற கருத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

Question 9 of 50
9. Question
உலக இளையோர் வில்வித்தை சாம்பியன்ஷிப்பில், இந்தியா, எத்தனை தங்கப்பதக்கங்களை வென்றது?
Correct
விளக்கம்
- வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது. உலக இளைஞர் வில்வித்தை சாம்பியன்சிப் போட்டியில், இந்திய அணி, 15 பதக்கங்களை வென்றது. 2021 உலக வில்வித்தை இளைஞர் சாம்பியன்ஷிப் போட்டியானது போலந்தின் வுரோக்லாவில் நடைபெற்றது. 15 பதக்கங்களில், மகளிர் மற்றும் ஆடவர் ‘காம்பவுண்ட்’ நிகழ்வு மற்றும் கலப்பு அணி நிகழ்வுகளில் மூன்று தங்கப்பதக்கங்களை இந்தியா வென்றது. இறுதிப்போட்டியில், பெண்கள் அணி துருக்கியை 228-216 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.

Question 10 of 50
10. Question
‘Freedom Cyclothon’ என்ற சைக்கிள் பேரணியைத் தொடங்கி உள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்
- இந்திய விடுதலையின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, எல்லை பாதுகாப்பு படையின் (BSF) தலைமை இயக்குநர் SS தேஸ்வால், ஜம்மு-காஷ்மீரின் RS புரா பகுதியில் இருந்து ‘பிரீடம் சைக்ளோத்தான்’ என்ற சைக்கிள் பேரணியைத் தொடக்கிவைத்தார்.
- இந்தச் சைக்கிள் பேரணி ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய 4 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கும். புதிய இந்தியா கட்டுடல் இந்தியா, ஆத்மநிர்பார் பாரத், ஒரே பாரதம் ஒப்பிலா பாரதம் மற்றும் தூய்மையான கிராமம் பசுமையான கிராமம் பற்றிய செய்திகளை பரப்புவதே இதன் நோக்கமாகும். இந்தச் சைக்கிள் பேரணி சுமார் 1993 கிமீட்டர் தூரத்தை கடந்து செல்லும்.

Question 11 of 50
11. Question
பொருளாதார வளர்ச்சி நிறுவன சங்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்
- 15ஆவது நிதி ஆணையத்தின் தலைவர் NK சிங், பொருளாதார வளர்ச்சி நிறுவன சங்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1992 முதல் இந்தச் சங்கத்தின் தலைவராக இருந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்குப் பிறகு NK சிங் இப்பதவிக்கு வந்துள்ளார்.
- உடல்நலக் காரணங்களுக்காக மன்மோகன் சிங் இந்தப் பதவியில் இருந்து விலகினார். மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்காக இந்த நிறுவனம் பணியாற்றுகிறது. கடந்த 1952ஆம் ஆண்டில் VKRV ராவால் நிறுவப்பட்ட இது, 1958இல்தான் செயல்பாட்டுக்கு வந்தது. புதுதில்லியின் தில்லி பல்கலைக்கழக வளாகத்தில் இது அமைந்துள்ளது.

Question 12 of 50
12. Question
இருதரப்பு கடற்படை பயிற்சியான ‘கொங்கன்-2021’இல், எந்த நாட்டோடு இணைந்து இந்தியா பங்கேற்றுள்ளது?
Correct
விளக்கம்
- ஐக்கிய இராச்சியத்துடன் இருதரப்பு கடற்படை பயிற்சியான ‘கொங்கன்- 2021’ பயிற்சியில் இந்தியா பங்கேற்றுள்ளது. இங்கிலாந்தின் போர்ட்ஸ் மௌத்தில், இந்திய கடற்படை மற்றும் பிரிட்டனின் ராயல் கடற்படைக்கு இடையே இந்தக் கடற்படை பயிற்சி நடைபெற்றது. இந்திய கடற்படை மற்றும் பிரிட்டனின் ராயல் கடற்படைக்கு இடையேயான வருடாந்திர இருதரப்பு பயிற்சியான கொங்கனில் INS தபார் பங்கேற்றது.
- இந்திய கடற்படையும் ராயல் கடற்படையும், 2004ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் இப்பயிற்சியினை நடத்தி வருகின்றன.

Question 13 of 50
13. Question
உலகின் 50 ‘மாசுபட்ட நகரங்களுள்’ இரண்டாவது மாசுபட்ட நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய நகரம் எது?
Correct
விளக்கம்
- பிரிட்டிஷ் நிறுவனமான ஹவுஸ்பிரெஷ் தயாரித்த அறிக்கையின்படி, உத்தரபிரதேச மாநிலத்தின் காசியாபாத், 2020ஆம் ஆண்டில், உலகின் ‘50 மாசுபட்ட நகரங்களுள்’ இரண்டாவது மாசுபட்ட நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வறிக்கையின்படி காஜியாபாத் 106.6µg/m3இல் சராசரியாக 2.5 துகள் காற்றின் தரக்குறியீட்டை கொண்டுள்ளது.
- காஜியாபாத்தை விஞ்சி, சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஹோதான் நகரம் 110.2µg/m3 என்ற PM2.5 உடன் மிகவும் மாசுபட்ட நகரமாக உள்ளது. ஹோதானின் இந்தக் காற்று மாசுபாட்டிற்கு மணல் புயல் காரணமாக அமைந்துள்ளது. அது தக்லிமகன் பாலைவனத்திற்கு அருகில் உள்ளது; அது உலகின் மிகப்பெரிய மணல் பாலைவனமாகும். காஜியாபாத்தைப் பொறுத்தவரை, மாசுபாட்டிற்கான காரணமாக அந்த நகரின் போக்குவரத்து கூறப்படுகிறது.

Question 14 of 50
14. Question
அண்மையில், ஆம்வேயின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்
- ஆம்வே இந்தியா மற்றும் அதன் நியூட்ரிலைட் தயாரிப்புகளின் விளம்பர தூதராக ஒலிம்பியன் சைகோம் மீராபாய் சானுவை நியமித்துள்ளதாக ஆம்வே நிறுவனம் அறிவித்துள்ளது. மீராபாய் சானு, இந்நிறுவனத்தின் விளம்பரங்களை முன்னிலைப்படுத்துவார். பளுதூக்கும் வீராங்கனை ஆன சாய்கோம் மீராபாய் சானு, கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில், பெண்கள் 49 கி பிரிவில், வெள்ளிப்பதக்கம் வென்றார்.

Question 15 of 50
15. Question
செயற்கை நுண்ணறிவில் இயங்கும் மெய்நிகர் உதவியாளரான ‘ஊர்ஜா’வை அறிமுகம் செய்துள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- நாட்டின் எண்ணெய் & எரிவாயு துறையில் முதல்முறையாக சமையல் எரிகாற்று உருளைகளை முன்பதிவு செய்தல், எரிகாற்று உருளைகளை விநியோகிக்கும் நிறுவனத்தை மாற்றுதல் உள்ளிட்ட சேவைகளுக்காக ‘ஊர்ஜா’ என்ற தகவல்பரிமாற்ற வசதியை பாரத் பெட்ரோலிய நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
- தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்பட பதிமூன்று மொழிகளில் இந்தச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

Question 16 of 50
16. Question
ஹிரோஷிமா நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- கடந்த 1945ஆம் ஆண்டில் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டதால் ஏற்பட்ட பேரழிவு மற்றும் மனித இனத்திற்கு நிகழ்ந்த துன்பங்களை நினைவுகூரும் நோக்கோடு ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட்.6ஆம் தேதி அன்று ஹிரோஷிமா நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
- இந்த ஆண்டு (2021), இந்த அணுகுண்டுவெடிப்பு நிகழ்ந்த 76ஆவது ஆண்டாகும். அணுகுண்டால் தாக்கப்பட்ட முதல் நகரம் இதுவாகும். முறையே ஆகஸ்ட்.6 மற்றும் 9ஆம் தேதிகளில், ஹிரோஷிமா நகரத்தில் வீசப்பட்ட ‘தி லிட்டில் பாய்’ மற்றும் நாகசாகி நகரில் ‘தி ஃபேட் மேன்’ என்ற 2 அணுகுண்டுகளையும் உருவாக்கியது அமெரிக்காவாகும்.

Question 17 of 50
17. Question
இந்தியாவின் மிகவுயரமான மூலிகைப்பூங்கா திறக்கப்பட்டுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின் மனா கிராமத்தில் இந்திய -சீன எல்லைப்பகுதிக்கு அருகே 11,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட மூலிகைப்பூங்கா திறந்துவைக்கப்பட்டது. மத்திய அரசின் காடுவளர்த்தல் நிதித்திட்டத்தின் கீழ் உத்தரகண்ட் வனத்துறையால் இந்தப்பூங்கா அமைக்கப்பட்டது. இமயமலையின் உயரமான பகுதிகளில் காணப்படும் சுமார் 40 மூலிகை இனங்கள் இப்பூங்காவில் வளர்க்கப்பட்டுள்ளன.

Question 18 of 50
18. Question
அண்மையில், முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் காலமானார். அவர் எந்த மாநிலத்தின் முதல்வராக இருந்தார்?
Correct
விளக்கம்
- உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வரும் இராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநருமான கல்யாண் சிங், 2021 ஆகஸ்ட்.21 அன்று தனது 89ஆவது வயதில் இலக்னோவில் காலமானார். கல்யாண் சிங், 1991இல் முதல்முறையாக உபி மாநிலத்தின் முதல்வரானார். 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது உபி மாநில முதலமைச்சராக பதவி வகித்தவர் கல்யாண் சிங். அவர், 24 ஜூன் 1991 – 1992 டிச.6 வரை & 1997 செப்.21 முதல் 1999 நவ.12 வரை முதல்வராக இருந்தார்.

Question 19 of 50
19. Question
தேசிய அனல்மின் கழகமானது பின்வரும் எந்த நகரத்தில், 25 MW திறன்கொண்ட மிகப்பெரிய மிதவை சோலார் PV திட்டத்தை தொடங்கியுள்ளது?
Correct
விளக்கம்
- தேசிய அனல்மின் கழகமானது, 25 MW திறன்கொண்ட மிகப்பெரிய மிதவை சூரியசக்தி ஒளிமின்னழுத்தத் திட்டத்தை ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினத்திலுள்ள அதன் சிம்காத்ரி அனல்மின் நிலையத்தின் நீர்த்தேக்கத்தில் உருவாக்கியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட நெகிழ்வுத்தன்மை திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள முதல் சூரியசக்தி திட்டமாகவும் இது அமைந்துள்ளது.
- இந்த மிதவை சூரிய ஆற்றல் திட்டம், நீர்த்தேக்கத்தில் சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட சூரியசக்தி ஒளிமின்னழுத்த கலங்களிலிருந்து மின்சாரத்தை உருவாக்கும் திறனை இந்தத் திட்டம் பெற்றுள்ளது.

Question 20 of 50
20. Question
எந்த மாநிலத்தைச் சார்ந்த 7 உள்ளூர் உணவுப்பொருட்களை, மத்திய உணவுப்பதப்படுத்தும் தொழிற்துறைகள் மற்றும் ஜல் சக்தித் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல் அறிமுகம் செய்தார்?
Correct
விளக்கம்
- ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் ஒருபகுதியாக, மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் மற்றும் ஜல்சக்தித் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல், மணிப்பூர் மாநிலத்தின் ஏழு உள்ளூர் உணவுப் பொருட்களை இம்பாலில் அறிமுகம் செய்து வைத்தார். அவை, கருப்பரிசி லட்டு, கருப்பரிசி பழம் & கொட்டை பிஸ்கோத்துகள், சூடான மற்றும் காரமான புஜியா, கபோக் (பொறி) கலவை, மணிப்பூரி கிழங்கு பர்பி, மூங்கில் தளிர் முரபா மற்றும் அத்தி லட்டு ஆகும்.
- இப்பொருட்கள் மணிப்பூர் உணவுத் தொழிற்துறைகள் நிறுவன அடைவு ஆய்வகத் திட்டத்தின்கீழ் TQS குளோபல், காஜியாபாத்துடன் இணைந்து 10 லட்சம் பட்ஜெட் ஒதுக்கீட்டில் உருவாக்கப்பட்டது.

Question 21 of 50
21. Question
ஐநா பாதுகாப்பு அவையில், வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர் ஒரு மொபைல் தொழில்நுட்ப தளத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார். இந்தத் தளத்தின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், S ஜெய்சங்கர், ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையினரைப் பாதுகாக்க உதவுவதற்காக, “UNITE Aware” தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார். நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில், அவர், “தொழில்நுட்பம் மற்றும் அமைதி காத்தல்” பற்றிய ஐநா பாதுகாப்பு அவையின் விவாதத்திற்கு தலைமை தாங்கியபோது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
- “UNITE Aware” என்பது அமைதிப்படையினருக்கு தரை-தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக இந்தியாவால் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இது அப்படையினரின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக இந்தியா $1.64 மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது.

Question 22 of 50
22. Question
அண்மையில், தொலையுணர்திறன் செயற்கைக்கோள் தரவு பகிர்வில் ஒத்துழைப்பு நல்குவதற்காக, எந்த அமைப்பு, தங்களுக்குள் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுக்கொண்டது?
Correct
விளக்கம்
- பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா (BRICS) ஆகியவை தொலையுணர்திறன் செயற்கைக்கோள் தரவு பகிர்வில் ஒத்துழைப்பு நல்குவதற்கான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- BRICS விண்வெளி முகமைகளின் குறிப்பிட்ட தொலையுணர்திறன் செயற்கைக்கோள்களின் மெய்நிகர் விண்மீன் தொகுப்பை உருவாக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்மூலம் அந்தந்த தரைநிலையங்கள் தரவைப்பெறும். இந்த ஒப்பந்தம், இந்தியா BRICS தலைமையின்கீழ் உள்ள இச்சமயத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

Question 23 of 50
23. Question
நடைபாதை பொறியியல் மற்றும் அறிவார்ந்த போக்குவரத்து அமைப்புகளுக்காக பின்வரும் எந்த நிறுவனத்துடன் மத்திய சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகம் ஒத்துழைத்துள்ளது?
Correct
விளக்கம்
- நடைபாதை (pavement) பொறியியல் மற்றும் அறிவார்ந்த போக்குவரத்து அமைப்புகளுக்காக இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்துடன் (MoRTH) மெட்ராஸ் ஐஐடி நிறுவனம் கூட்டிணைகிறது. புதுமையான நடைபாதைபொருட்கள் மற்றும் தொழில் நுட்பங்கள், ஹைட்ரஜன் மின்கலத்தில் இயங்கும் போக்குவரத்து, தானியங்கி வாகன வகைப்பாடு, புதிய கட்டண அமைப்புகள், நிகழ்வு மேலாண்மை அமைப்புகள், பயணிகளின் தகவலமைப்புகள், FastTAG தரவு பகுப்பாய்வு மற்றும் போக்குவரத்து பாதுகாப்பு தவிர போக்குவரத்து உருவகப்படுத்துதல் ஆகியவை இதிலடங்கும்.
- நெடுஞ்சாலை பொறியியல் துறையில் MoRTH’ஆல் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிகள் உட்பட 8-10 மாணவர்களுக்கு மெட்ராஸ் IIT நிறுவனம், பயிற்சியளிக்கும்.

Question 24 of 50
24. Question
உலக மனிதாபிமான நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக மனிதகுலத்திற்கு சேவை செய்ய எண்ணும் அனைவரின் தியாகங்களையும் கௌரவிக்கும் வகையில், ஐநா அவை, ஆகஸ்ட்.19ஆம் தேதியை உலக மனிதாபிமான நாளாகக் கொண்டாடுகிறது. “#TheHumanRace: a global challenge for climate action in solidarity with people who need it the most” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.
- கடந்த 2009ஆம் ஆண்டில் ஐநா பொது அவையால் இந்நாள் முறையாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர், 2009 ஆகஸ்ட்.19 அன்று முதன்முறையாக நினைவுகூரப்பட்டது.

Question 25 of 50
25. Question
பின்வரும் எந்த மாநிலத்திலிருந்து, இந்தியாவிலேயே முதன் முறையாக ஓர் அரியவகை மந்தாரை இனம் கண்டுபிடிக்கப்பட்டது?
Correct
விளக்கம்
‘Cephalanthera erecta var. oblanceolata’ என்ற ஓர் அரியவகை மந்தாரை இனம், இந்தியாவிலேயே முதன்முறையாக உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் 1870 மீ உயரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. BSIஇன் 6 மாதத்திற்கு ஒருமுறை வெளிவரும் இதழான நெலும்போவில் இந்திய தாவரங்களின் புதிய இனங்கள்பற்றிய ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்திய மந்தாரை இனங்கள் குறித்த தகவல்களைக்கொண்ட தொகுதிகள் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

Question 26 of 50
26. Question
வடகிழக்கு மாநிலங்களில் அதிவேக இணையசேவையினை வழங்குவதற்காக, கீழ்காணும் எந்த நிறுவனத்துடன், யுனிவர்சல் சர்வீஸ் ஆப்ளிகேஷன் பண்ட் கூட்டுசேர்ந்துள்ளது?
Correct
விளக்கம்
- வடகிழக்கு மாநிலங்களுக்கு அதிவேக இணைய சேவை பெறுவதற்கு, யுனிவர்சல் சர்வீஸ் ஆப்ளிகேசன் பண்ட் (USOF) BSNL நிறுவனத்துடன் ஒப்பந்தம்செய்தது. இதன்மூலம் அகர்தலாவுக்கு இணைய இணைப்புக்கு 10 ஜிபிபிஎஸ் பன்னாட்டு அலைவரிசை, காக்ஸ் பஜார் வழியாக வங்க தேசத்தின் BSCCL நிறுவனத்திடமிருந்து வாடகை அடிப்படையில் பெறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின்கீழ், மேற்கண்ட பன்னாட்டு அலை வரிசையை, மூன்றாண்டுகளுக்கு வாடகைக்குப்பெற, பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு, USOF நிதியுதவி அளிக்கும். இதன்மூலம் வடகிழக்குப் பகுதி மக்கள் அதிவேக இணைய இணைப்புடன் பல இ-சேவைகளை பெறுவர்.

Question 27 of 50
27. Question
தொலையுணரி & புவியியல் தகவலமைப்பு அடிப்படையிலான தரவைப்பயன்படுத்தி MGNREGA திட்டத்தின் புதிய செயல்பாடுகளை திட்டமிட உதவும் தளத்தின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- ‘யுக்த்தாரா’ திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள புதிய புவிசார் திட்டமிடல் இணையதளம், தொலையுணர்வு மற்றும் புவியியல் தகவல் கருவி (GIS) அடிப்படையிலான தகவல்மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் (MGNREGA) புதிய செயல்பாடுகளை திட்டமிட உதவும்.
- பல்வேறு தேசிய ஊரக மேம்பாட்டு திட்டங்களின்கீழ் உருவாக்கப்பட்ட ஜியோடேக் (நிழற்படம் & காணொளிகள் அடங்கிய புவியியல் இடங்கள்) தகவல்கள் களஞ்சியமாக இந்தப் புவிசார் திட்டமிடல் இணையதளம் செயல்படும். இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், சொட்டுநீர்ப்பாசனத்திட்டம், தேசிய வேளாண் மேம்பாட்டு திட்டம் குறித்த தகவல்கள் நிழற்படங்களுடன் இருக்கும்.

Question 28 of 50
28. Question
தென்சீனக்கடலில் நீர்மூழ்கிக்கப்பல் எதிர்ப்புப்பயிற்சியைத் தொட -ங்கியுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- ஜப்பான் இராணுவ அமைச்சகத்தின் ஓர் அண்மைய அறிக்கையின்படி, ஜப்பானின் கடல்சார் தற்காப்புப்படை தென்சீனக்கடலில் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் பயிற்சிகளைத் தொடங்கியுள்ளது. இந்தப் பயிற்சியில், உலங்கூர்தி விமானந்தாங்கி மற்றும் நீர்மூழ்கிக்கப்பல் உட்பட மூன்று கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. முழு தென்சீனக்கடலையும் உரிமை கோரும் சீனா, அங்கு செயற்கைத்தீவுகளை அமைத்து அதில் இராணுவ புறக்காவல் நிலையங்களை நிறுவியுள்ளது. தென்சீனக்கடலை சீனா இராணுவமயமாக்குவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது.

Question 29 of 50
29. Question
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் விமானம், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை ‘ARMY-2021’இல் இந்தியா அறிமுகஞ்செய்தது. கீழ்கண்ட எந்த நாட்டில், ‘ARM-2021’ நடைபெறுகிறது?
Correct
விளக்கம்
- மாஸ்கோ பிராந்தியத்தில் நடைபெறும் பன்னாட்டு இராணுவ-தொழில் நுட்ப மன்றமான ‘ARMY-2021’இல் இந்தியா தனது உள்நாட்டுப்போர் விமானமான LCA தேஜஸ், பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைகள், அர்ஜுன் முதன்மை போர் பீரங்கி (MK1A) ஆகியவற்றை அறிமுகம் செய்தது.
- ஆகஸ்ட்.22-28 வரை மாஸ்கோவின் குபின்காவில் நடைபெறும் பன்னாட்டு இராணுவ-தொழில்நுட்ப மன்றமான ‘ARMY-2021’இல் DRDO பங்கேற்கிறது. DRDO என்பது இந்திய காட்சியரங்கின் ஒருபகுதி ஆகும். அங்கு அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் அமைப்புகளும் இந்திய பாதுகாப்புத் தொழில்களான கோவா ஷிப்யார்ட் லிமிடெட் (GSL), ஆயுதத் தொழிற்சாலைகள் மற்றும் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML) ஆகியவற்றுடன் இணைந்து காட்சிப்படுத்தப்படும்.

Question 30 of 50
30. Question
ஜெர்மனியில் பயிலவிரும்பும் மாணவர்களுக்காக டிஜிட்டல் & உடனடி தடுக்கப்பட்ட கணக்கை தொடங்கியுள்ள வங்கி எது?
Correct
விளக்கம்
- ஜெர்மனியில் பயில விழையும் மாணவர்களுக்காக டிஜிட்டல் மற்றும் உடனடி தடுக்கப்பட்ட கணக்கை தொடங்குவதாக ICICI வங்கி ஜெர்மனி அறிவித்துள்ளது. தடுக்கப்பட்ட கணக்கு (Blocked Account) என்பது ஒரு சிறப்பு வகை வங்கிக்கணக்காகும்; அதில் மாணவர்கள், ஒரு இருப்பு உறுதிப்படுத்தல் சான்றிதழை (Balance Confirmation Certificate (BCC)) பெறுவதற்காக குறிப்பிட்ட அளவு பணத்தை வைத்திருக்க வேண்டும். ஜெர்மனியில் மாணவ விசா பெறுவதற்கு இந்தக் கணக்கு கட்டாயமாகும். இக்கணக்கு, மாணவர்களுக்கு ஜெர்மனியில் பயன்படுத்தக்கூடிய ஒரு நடப்பு கணக்கை வழங்குகிறது. இது, உலகில் எங்கும் பயன்படுத்தக்கூடிய விசா பற்றட்டையுடன் வருகிறது.

Question 31 of 50
31. Question
தேசிய வேளாண் சந்தையில் (eNAM) வர்த்தகத்தில் முன்னிலை வகிக்கும் மாநிலம் எது?
Correct
விளக்கம்
- தேசிய வேளாண் சந்தையில் வர்த்தகத்தில் முன்னிலை வகிக்கும் மாநிலமாக இராஜஸ்தான் உருவெடுத்துள்ளது. வேளாண்பொருட்களின் இ-வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காக அனைத்து தனித்தனி வர்த்தக உரிமங்களையும் ஒருங்கிணைந்த உரிமமாக மாற்ற அனுமதித்த முதல் மாநிலம் இராஜஸ்தான் ஆகும். தற்போதுவரை, மொத்தம் 37346 வர்த்தகர்கள் ஒருங்கிணைந்த உரிமதாரர் வர்த்தகர்களாக பணியாற்றுகின்றனர்.

Question 32 of 50
32. Question
அண்மையில், அமெரிக்க சட்டமன்றத்தின் தங்கப்பதக்கம் பெற்ற முதல் இந்தியர் யார்?
Correct
விளக்கம்
- நியூயார்க் காங்கிரஸ் பெண்மணி கரோலின் மாலோனி, ‘மகாத்மா’ காந்திக்கு, அமெரிக்க சட்டமன்றத்தின் தங்கப்பதக்கத்தை, அவரது இறப்பி -ற்குப்பின் வழங்குவதற்காக, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அதற்கான சட்டத்தை மீண்டும் அறிமுகம்செய்தார். அகிம்சைமுறைகளின் மூலம் அவராற்றிய பங்களிப்புகளுக்காக அவருக்கு இவ்விருது வழங்கப் -படுகிறது. அவர், அமெரிக்காவின் மிகவுயர்ந்த குடிமகன் விருதான காங்கிரஸ் தங்கப்பதக்கத்தை பெறும் முதல் இந்தியர் ஆவார்.

Question 33 of 50
33. Question
பின்வரும் எந்த நகரத்தில், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையம் திறக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- ஹைதராபாத் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையத்தை மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் திறந்துவைத்தார். பொருண்ம அறிவியல் மற்றும் உலோகவியற்பொறியியல் துறையின் கட்டடம், உயர் செயல்திறன்கொண்ட கணினி மையம் மற்றும் உயர்-தெளிவுத்திறன் கொண்ட எலக்ட்ரான் நுண்ணோக்கி வசதி ஆகியவற்றையும் அவர் திறந்துவைத்தார்.
- செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையமானது ஜப்பான் பன்னாட்டு ஒத்துழைப்பு நிறுவனத்துடன் (JICA) இணைந்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தை நிறுவுவதற்காக ஹனிவெல் டெக்னாலஜி சொல்யூஷன்சுடன் பல்கலை ஒப்பந்தம் செய்துள்ளது.

Question 34 of 50
34. Question
2021 உலக தடகள U20 சாம்பியன்ஷிப்பை நடத்துகிற நாடு எது?
Correct
விளக்கம்
- 2021 உலக தடகள U20 சாம்பியன்ஷிப், உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் என்றும் அழைக்கப்படுகிறது; இது கென்யாவின் நைரோபியில் உள்ள நயாயோ விளையாட்டு வளாகத்தில் 2021 ஆகஸ்ட் 17 முதல் 22 வரை நடைபெறுகிறது. U20 சாம்பியன்ஷிப் என்பது ஜூனியர் சாம்பியன்ஷிப் ஆக தகுதிபெறுவதற்கான ஒரு சர்வதேச தடகள போட்டியாகும்.

Question 35 of 50
35. Question
உலக கொசு நாளாக கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- மலேரியாவிற்கான காரணங்கள் மற்றும் அதை எவ்வாறு தடுப்பது என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் ஆகஸ்ட்.20 அன்று உலக கொசு நாள் கடைபிடிக்கப்படுகிறது. மலேரியாவால் ஏற்படும் நோய்க்கு எதிரான போராட்டத்தில் சுகாதார அதிகாரிகள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளின் முன்னெடுப்புகளை முன்னிலைப்படுத்துவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
- ஒவ்வோர் ஆண்டும் உலக கொசு நாளன்று, கொசுக்களால் ஏற்படும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. “Reaching the zero-malaria target” என்பது நடப்பாண்டு (2021) வரும் உலக கொசு நாளுக்கானக் கருப்பொருளாகும். கடந்த 1897ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் மருத்துவர் சர் ரொனால்ட் ராஸ், பெண் கொசுக்கள் மனிதர்களிடையே மலேரியாவை பரப்புகின்றன என்று கண்டுபிடித்த நிகழ்வையும் இந்த நாள் நினைவுகூர்கிறது. 1902’இல், ராஸ், மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்றார் மற்றும் அதைப்பெற்ற முதல் பிரித்தானியர் ஆனார்.

Question 36 of 50
36. Question
உலகளவில் கிரிப்டோ ஏற்றலில் இந்தியாவின் தரநிலை என்ன?
Correct
விளக்கம்
- பிளாக்செயின் தரவுதளமான செயினாலிசிஸின்படி, 2021 உலகளாவிய கிரிப்டோ ஏற்றல் குறியீட்டில் (Crypto Adoption), உலகளவில் கிரிப்டோ ஏற்றலில் வியத்நாமிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. கிரிப்டோ ஏற்றலில் உள்ள முதல் 5 நாடுகளுமே ஆசியாவைச் சேர்ந்தவைதான். உலகளவில் 47,000 பயனர்களை அந்த நிறுவனம் ஆய்வுசெய்தது. இந்தியாவில், 30% பேர் தாங்கள் கிரிப்டோகரன்ஸிகள் வைத்திருப்பதாக கூறினர். அந்த அறிக்கையின்படி, பிட்காயின் என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான நாணயமாகும். அதைத் தொடர்ந்து ரிப்பிள், எத்தேரியம் மற்றும் பிட்காயின் கேஷ் ஆகியவை உள்ளன.

Question 37 of 50
37. Question
நுண்நிதி ஊக்கத்தொகை & நிவாரணத்திட்டத்தை அறிவித்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- அஸ்ஸாம் நுண்நிதி ஊக்கத்தொகை & நிவாரணத் திட்டம் (AMFIRS), 2021’ஐ செயல்படுத்துவதற்காக 37 நுண்நிதி நிறுவனங்களுடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அஸ்ஸாம் அரசு கையெழுத்திட்டுள்ளது. COVID-19 காலத்தில் நல்ல கடன் ஒழுக்கத்தை தொடர்ந்து பராமரிக்க உதவுவதற்காக, அஸ்ஸாமில் உள்ள நுண்கடன் வாங்குவோர்க்கு நிதி நிவாரணம் வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் வாடிக்கையாளர்கள் தங்களின் கடனை, தொடர்ந்து திருப்பிச் செலுத்துவதில் ஊக்கமளிக்கும்.

Question 38 of 50
38. Question
புதைபடிவமற்ற எஃகு தயாரித்த உலகின் முதல் நாடு எது?
Correct
விளக்கம்
- பசுமை எஃகு என்றும் அழைக்கப்படும் புதைபடிவமற்ற எஃகு தயாரித்த உலகின் முதல் நாடு சுவீடன் ஆகும். இந்தப் பசுமை எஃகு HYBRIT தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முதல் விநியோகம் வோல்வோ AB’க்கு சோதனை முறையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி 2016ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்துவருகிறது. முழு அளவிலான உற்பத்தி 2026 முதல் தொடங்கும். இவ்வறிக்கைகளின்படி, கோக்கிங் நிலக்கரிக்கு மாற்றாக ஹைட்ரஜனை பயன்படுத்துவது, எஃகு தயாரிப்பில் இருந்து குறைந்தபட்சம் 90% உமிழ்வைக்குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Question 39 of 50
39. Question
20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப்பில், பெண்கள் நீளந்தாண்டுதலில் வெள்ளி வென்றவர் யார்?
Correct
விளக்கம்
- ஆக.22 அன்று நைரோபியில் நடந்த உலக தடகள 20 வயதுக்குட்பட்ட சாம்பியன்ஷிப் போட்டிகளில் 6.59 மீட்டர் பாய்ச்சலில் பெண்கள் நீளம் தாண்டுதலில் ஷைலி சிங் வெள்ளிவென்றார். சுவீடனின் மஜா அஸ்காக் (6.60 மீ) விட ஒரு சென்டிமீட்டர் குறைவாகப் பாய்ந்து அவர் தங்கத்தை இழந்தார். மும்முறைத் தாண்டலில் அஸ்காக் தங்கம் வென்றார். இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில், இந்தியா மூன்று பதக்கங்களுடன் (2 வெள்ளி மற்றும் 1 வெண்கலம்) போட்டியை நிறைவு செய்தது. எட்டு தங்கம் உட்பட 16 பதக்கங்களுடன் கென்யா முதலிடத்தில் உள்ளது.

Question 40 of 50
40. Question
வேளாண்சார்ந்த துறைகளுக்கு கடன்வசதியுடன்கூடிய இரு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- அருணாச்சல பிரதேச மாநில அமைச்சரவையானது கடன்வசதியுடன் கூடிய இரண்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அது விவசாயம் சார்ந்த துறைகளில் `300 கோடி அளவுக்கு முதலீடு செய்ய உதவும்.
- 2021-22 நிதியாண்டில் விவசாயத்திற்காக ஆத்மநிர்பார் கிருஷி திட்டம் & தோட்டக்கலைக்காக ஆத்ம நிர்பார் பக்வானி திட்டம் ஆகியவற்றுக்கு மாநில அரசு தலா `60 கோடி மானியங்களை ஒதுக்கியுள்ளது. கடன் வசதியுடன் கூடிய இத்திட்டங்கள் 3 கூறுகளைக்கொண்டிருக்கும்.
- அவை வங்கி கடன்கள், மானியம் மற்றும் பயனாளிகளின் பங்களிப்பு ஆகும். உழவர்கள், சுய-உதவிக் குழுக்கள் & உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு இந்தத் திட்டங்கள் கிடைக்கும்.

Question 41 of 50
41. Question
‘ஆனந்தா’ என்ற திறன்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- ஆத்மநிர்பார் திட்டத்தின் ஒருபகுதியாக, LIC முகவர்கள் வாடிக்கையாள -ர்களை பல்வேறு காப்பீடுகளில் சேர்க்கும்போது காகிதம் இல்லாமல் மின்னணு முறையிலேயே அவர்களின் விவரங்களைப் பெற்று சமர்ப்பிக்கும் வகையில் ‘ஆனந்தா’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Atma Nirbhar Agents New-business Digital Application என்பதின் சுருக்கந்தான் ‘ANANDA’.
- இப்புதிய செயலிமூலம் வாடிக்கையாளர்களின் விவரங்களை ஆதார் எண் அடிப்படையில் உறுதிசெய்யவும், காகிதத்தில் விண்ணப்பப் படிவம் இல்லாமல் மின்னணு முறையிலேயே விண்ணப்பங்களைப் பெறவும் முகவர்களால் முடியும். இதன்மூலம் அவர்களின் பணி விரைவில் முடிவதோடு, அதிக வாடிக்கையாளர்களை பெறவும் முடியும்.

Question 42 of 50
42. Question
சுஜலாம் என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- விடுதலையின் அம்ரித் மகோத்சவ் கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக 100 நாள் ‘சுஜலாம்’ பிரச்சாரத்தை ஆக.25 அன்று நடுவண் ஜல் சக்தி அமைச்சகம் தொடங்கியுள்ளது.
- கழிவுநீர் மேலாண்மையை கிராம அளவில் மேற்கொண்டு, திறந்த வெளி மலங்கழித்தலற்ற கிராமங்களை அதிகளவில் உருவாக்குவதை இப்பிரச்சாரம் நோக்கமாகக்கொண்டுள்ளது. 10 இலட்சம் குட்டைகளை அமைப்பது உள்பட, கிராமங்களில் கழிவு & கழிவுநீர் மேலாண்மைக்கு தேவையான உட்கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதோடு மட்டுமில்லாமல் நீர்நிலைகளின் நீடித்த மேலாண்மையையும் இந்தப் பிரச்சாரம் கருத்தில்கொள்ளும்.

Question 43 of 50
43. Question
EASE 3.0’இன்கீழ், அடிப்படை செயல்திறனில் இருந்து சிறந்த முன்னேற்றத்திற்கான விருதை வென்ற வங்கி எது?
Correct
விளக்கம்
- தொழில்நுட்பம் சார்ந்த, எளிமையான மற்றும் கூட்டு வங்கியியலுக்கான 2021-22ஆம் ஆண்டுக்கான பொதுத்துறை வங்கிகள் சீர்திருத்த செயல்திட்டம் – EASE 4.0 என்னும் நான்காம் பதிப்பை மத்திய நிதி & பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் நிர்மலா சீதாராம் வெளியிட்டார்.
- 2020-21ஆம் ஆண்டுக்கான பொதுத்துறை வங்கிகள் சீர்திருத்த செயல் திட்டம் – EASE 3.0’இன் வருடாந்திர அறிக்கையையும் வெளியிட்ட அவர், EASE 3.0 வங்கிகள் சீர்திருத்த குறியீட்டில் சிறந்து விளங்கிய வங்கிகளை கௌரவிப்பதற்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். பாரத வங்கி, பரோடா வங்கி மற்றும் இந்திய யூனியன் வங்கி ஆகியவை EASE 3.0 வங்கிகள் சீர்திருத்த குறியீட்டில் சிறந்து விளங்கியதற்கான பரிசுகளைப் பெற்றன. இந்தியன் வங்கி, EASE 3.0’ இன்கீழ், அடிப்படை செயல்திறனிலிருந்து சிறந்த முன்னேற்றத்திற்கான விருதை வென்றது

Question 44 of 50
44. Question
காசநோயாளிகளில் கடுமையான COVID-19 நிலைமைகளின் தாக்கத்தை ஆய்வு செய்ய, எந்த நிறுவனத்துடன், பயோடெக்னாலஜி துறை ஒத்துழைத்துள்ளது?
Correct
விளக்கம்
- அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறை, BRICS நாடுகளுடன் ஒருங்கிணைந்து, காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடையே தீவிர COVID-19 தொற்றின் தாக்கம் குறித்து ஆய்வுசெய்வதற்காக SARS–CoV2 NGS–BRICS கூட்டமைப்பை செயல்படுத்தி வருகிறது. சிறந்த நோய் மேலாண்மைக்காக COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்படாத நுரையீரல் காசநோய் நோயாளிகளில் இணைநோய் குறித்த தகவலை இந்த ஒருங்கிணைந்த ஆய்வு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Question 45 of 50
45. Question
வங்கி மற்றும் நிதி மோசடிகளுக்கான ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- மத்திய விஜிலென்ஸ் கமிஷன்மூலம் வங்கி & நிதிமோசடிகளுக்கான ஆலோசனைக்குழுவின் தலைவராக TM பாசின் நியமிக்கப்பட்டுள்ளார். 2 ஆண்டுகாலத்திற்கு அவர் இப்பதவியிலிருப்பார். `50 கோடிக்கும் அதிகமான வங்கி மோசடிகளை ஆராய்ந்து அதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்காக இக்குழு உருவாப்பட்டது.

Question 46 of 50
46. Question
நடப்பாண்டுக்கான (2021) காசநோய் தடுப்புக் கூட்டுக் குழுவின் தலைவராக பொறுப்பேற்ற நாடு எது?
Correct
விளக்கம்
- மத்திய சுகாதாரம் & குடும்பநல அமைச்சர் மன்சுக் மாண்டவியா, காச நோய் தடுப்புக்கூட்டுக்குழுவின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். 2024ஆம் ஆண்டு வரை அமைச்சர் இந்தப்பொறுப்பை வகிப்பார்.
- ஐநா’இன் காசநோய் இலக்கை 2022ஆம் ஆண்டிற்குள் அடையவும், 2030ஆம் ஆண்டிற்குள் காசநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் மைல்கல் தருணத்தை அடையவும், காசநோய் தடுப்புக்கூட்டுச்செயலகம், கூட்டாளிகள் மற்றும் காசநோய் சமூகத்தின் முயற்சிகளை அவர் முன்னெடுத்துச் செல்வார்.

Question 47 of 50
47. Question
“Accelerating India: 7 Years of Modi Government” என்ற நூலின் ஆசிரியர்/தொகுப்பாசிரியர் யார்?
Correct
விளக்கம்
- முன்னாள் மத்திய அமைச்சர் K J அல்போன்ஸ், “இந்தியாவை முன்னேற்றுதல்: நரேந்திர மோடி அரசின் 7 ஆண்டுகள்” என்ற தமது நூலை பிரதமர் மோடியிடம் வழங்கினார்.
- இந்திய நிர்வாகத்தின் 25 துறைகள் குறித்த இந்த நூலில், 28 புகழ்மிக்க எழுத்தாளர்களின் 25 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இது மோடி அரசின் சாதனைகளின் ஆவணமாகும்.

Question 48 of 50
48. Question
‘கொடுப்பனவு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதித்திட்டம்’ என்பது எந்த நிறுவனத்தின் முன்னெடுப்பாகும்?
Correct
விளக்கம்
- ‘கொடுப்பனவு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதித்திட்டம்’ என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் முயற்சியாகும். இது `345 கோடி மதிப்பில் தொடங்கப் பட்ட திட்டமாகும். ஆண்டுதோறும் 30 லட்சம் புதிய டச் பாயிண்டுகளை அடுக்கு-3 முதல் அடுக்கு-6 வரையிலான மையங்களில் டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்காக உருவாக்க வேண்டும் என்பது இதன் நோக்கம் ஆகும். 1ஆவது மற்றும் 2ஆவது மையங்களில் PM SV நிதி திட்டத்தின் கீழ் உள்ள வீதியோர விற்பனையாளர்களுக்கு விற்பனை முனையங்களில் (POS) உட்கட்டமைப்பை விரிவுபடுத்தும் திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் விரிவுபடுத்தியுள்ளது.

Question 49 of 50
49. Question
2021 – பாதுகாப்பான நகரங்கள் குறியீட்டின்படி, அறுபது உலக நகரங்களுள், உலகின் பாதுகாப்பான நகரமாக தேர்வு செய்யப்பட்ட நகரம் எது?
Correct
விளக்கம்
- டென்மார்க் நாட்டின் தலைநகரமான கோபன்ஹேகன், அறுபது உலக நகரங்களுள் உலகின் பாதுகாப்பான நகரமாக பெயரிடப்பட்டுள்ளது. கோபன்ஹேகன், நூற்றுக்கு 82.4 மதிப்பெண்களைப்பெற்றது. இந்த நகரம், நகர்ப்புற பாதுகாப்பை அளவிடும் EIU குறியீட்டின் நான்காவது பதிப்பில் முன்னிலை வகிக்கிறது. யங்கோன் 39.5 மதிப்பெண்ணுடன் குறியீட்டின் கடனிலையில் உள்ளது. புது தில்லி 56.1 மதிப்பெண்ணுடன் 48ஆவது இடத்திலும், மும்பை 54.4 மதிப்பெண்ணுடன் ஐம்பதாவது இடத்திலும் உள்ளது. இந்தக்குறியீடு முதன்முதலில் 2015ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 2021ஆம் ஆண்டில், நகரங்கள் டிஜிட்டல், சுகாதாரம், உட்கட்டமைப்பு, தனிப்பட்ட மற்றும் சுற்றுசூழல் உள்ளிட்ட 76 பாதுகாப்பு அம்சங்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டன.

Question 50 of 50
50. Question
“கார்பன் வெளியேற்றமற்ற போக்குவரத்துக்கான அமைப்பினை” கீழ்காணும் எந்த நிறுவனத்துடன் இணைந்து NITI ஆயோக் அறிமுகப்படுத்தியுள்ளது?
Correct
விளக்கம்
- இந்தியாவில் கார்பன் வெளியேற்றம் இல்லாத போக்குவரத்துக்கான அமைப்பை நிதிஆயோக் மற்றும் உலக வளங்கள் இந்திய மையம் (WRI) ஆகியவை கூட்டாக இணைந்து தொடங்கியுள்ளன. ஆசியாவுக்கான NDC-போக்குவரத்து முயற்சித் திட்டத்தின் (NDC-TIA) ஒருபகுதியாக இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
- ஆசியாவின் போக்குவரத்துத் துறையில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. NDC-TIA என்பது கார்பன் வெளியேற்றமில்லா போக்குவரத்துக்கான ஒருங்கிணைந்த விரிவான அணுகுமுறையை ஊக்குவிக்கும் கூட்டுத் திட்டமாகும். இதில் சீனா, இந்தியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் உள்ளன.

Leaderboard: August 4th Week 2021 Current Affairs Online Test Tamil