August 1st Week 2020 Current Affairs Online Test Tamil

Quiz-summary
0 of 60 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
Information
AAZZAAZZ
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 60 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- Answered
- Review
-
Question 1 of 60
1. Question
இந்திய-இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சர்களின் உரையாடல் நடைபெற்ற நகரம் எது?
Correct
இந்தியா-இந்தோனேசியா இடையிலான பாதுகாப்பு அமைச்சர்களின் சந்திப்பு புது தில்லியில் நடந்தது. இந்திய தூதுக்குழுவிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமைதாங்கினார். அதேபோல், இந்தோனேசிய தூதுக்குழுவிற்கு அதன் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பிரபோவோ சுபியான்டோ தலைமைதாங்கினார். பாதுகாப்புத் தொழில்கள் மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்புக்கான சாத்தியகூறுகள் எவை எவை என்று இருநாடுகளும் விவாதித்து அடையாளம் கண்டன. இரு அமைச்சர்களும் அடையாளங்காணப்பட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், அவற்றை அடுத்தகட்டத்திற்குக் கொண்டுசெல்லவும் உறுதிபூண்டனர்.
ஓர் ஒருங்கிணைந்த உத்திசார் கூட்டாண்மைக்காக, இவ்விருநாடுகளும் புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் அப்போது கையெழுத்திட்டன.Incorrect
இந்தியா-இந்தோனேசியா இடையிலான பாதுகாப்பு அமைச்சர்களின் சந்திப்பு புது தில்லியில் நடந்தது. இந்திய தூதுக்குழுவிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமைதாங்கினார். அதேபோல், இந்தோனேசிய தூதுக்குழுவிற்கு அதன் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பிரபோவோ சுபியான்டோ தலைமைதாங்கினார். பாதுகாப்புத் தொழில்கள் மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்புக்கான சாத்தியகூறுகள் எவை எவை என்று இருநாடுகளும் விவாதித்து அடையாளம் கண்டன. இரு அமைச்சர்களும் அடையாளங்காணப்பட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், அவற்றை அடுத்தகட்டத்திற்குக் கொண்டுசெல்லவும் உறுதிபூண்டனர்.
ஓர் ஒருங்கிணைந்த உத்திசார் கூட்டாண்மைக்காக, இவ்விருநாடுகளும் புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் அப்போது கையெழுத்திட்டன. -
Question 2 of 60
2. Question
HIV/AIDS ஆகிய தொற்றுநோயை எந்த ஆண்டுக்குக்குள் முடிவுக்குக் கொண்டுவருவதாக இந்தியா உறுதியளித்துள்ளது?
Correct
ஐ.நா பொது அவையில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த உயர்மட்டக்கூட்டத்தில், அடுத்த 5 ஆண்டுகளில் HIV / AIDS தொற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை விரைவாக மேற்கொள்வதாக -வும், எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் அந்தத் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும் இந்தியா உறுதியளித்தது. அண்மையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ICMR) வெளியிட்ட ஓர் ஆய்வில், எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் AIDS நோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தேசிய இலக்கை இந்தியா இழக்கக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. புதிய HIV பாதிப்புகளின் குறைவு சதவீதம் 27% ஆக மட்டுமே உள்ளது. இது, நடப்பாண்டில் (2020), 75% ஆக இருந்திருக்கவேண்டும்.
Incorrect

Question 3 of 60
3. Question
உலக புலிகள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
புலிகள் அதிகம் வசிக்கும் நாடுகளின் தலைவர்கள், இரஷ்யாவின் புனித பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் கூடி, புலிகள் பாதுகாப்பு பற்றிய புனித பீட்டர்ஸ்பர்க் உடன்படிக்கையில் கையெழுத்திட்டதன் வாயிலாக, 2022ஆம் ஆண்டுக்குள் உலகளவில் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க உறுதிபூண்டனர். மேலும், ஆண்டுதோறும் ஜுலை.29ஆம் தேதியை உலக புலிகள் நாளாக, உலகெங்கும் கொண்டாட முடிவுசெய்யப்பட்டதிலிருந்து, புலிகள் பாதுகாப்புகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இச்சிறப்பு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நாளை முன்னிட்டு, புது தில்லியில், புலிகள் கணக்கெடுப்புபற்றிய விரிவான அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். இந்தியாவில் தற்போது புலிகளின் எண்ணிக்கை 2,967 ஆக உள்ளது; இது, உலகின் மொத்த புலிகள் எண்ணிக்கையில் 70% ஆகும்.Incorrect
புலிகள் அதிகம் வசிக்கும் நாடுகளின் தலைவர்கள், இரஷ்யாவின் புனித பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் கூடி, புலிகள் பாதுகாப்பு பற்றிய புனித பீட்டர்ஸ்பர்க் உடன்படிக்கையில் கையெழுத்திட்டதன் வாயிலாக, 2022ஆம் ஆண்டுக்குள் உலகளவில் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க உறுதிபூண்டனர். மேலும், ஆண்டுதோறும் ஜுலை.29ஆம் தேதியை உலக புலிகள் நாளாக, உலகெங்கும் கொண்டாட முடிவுசெய்யப்பட்டதிலிருந்து, புலிகள் பாதுகாப்புகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இச்சிறப்பு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நாளை முன்னிட்டு, புது தில்லியில், புலிகள் கணக்கெடுப்புபற்றிய விரிவான அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். இந்தியாவில் தற்போது புலிகளின் எண்ணிக்கை 2,967 ஆக உள்ளது; இது, உலகின் மொத்த புலிகள் எண்ணிக்கையில் 70% ஆகும். -
Question 4 of 60
4. Question
பாரத வங்கியானது (SBI) எந்த நாட்டின் உள்ளூர் வணிகங்களுக்காக $16.20 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது?
Correct
பாரத வங்கியானது (SBI) மாலத்தீவில் உள்ள உள்ளூர் வணிகங்களுக்கு $16.20 மில்லியன் அமெரிக்க டாலர் பணப்புழக்க ஆதரவை வழங்கியுள்ளது. இருநூற்றுக்கும் மேற்பட்ட சில்லறை கணக்குகளுக்கு, கடனைத் திருப்பிச் செலுத்துவதிலிருந்தும் SBI சலுகை அளித்துள்ளது. ஜூலை.26 அன்று மாலத்தீவின் விடுதலை நாளை முன்னிட்டு, SBI’இன் COVID நிவாரண செயற்பாடுகள் அறிவிக்கப்பட்டன. முன்னதாக $400 மில்லியன் அமெரிக்க டாலர்களை, மாலத்தீவுக்கு, நீட்டிக்கப்பட்ட நாணய இடமாற்று முறையின் வழியாக இந்தியா வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Question 5 of 60
5. Question
பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கிய மருத்துவப் படுக்கை தனிமைப்படுத்தும் அமைப்பின் பெயரென்ன?
Correct
COVID-19 நோய்த்தொற்றை எதிர்த்துப்போராடுவதற்காக புனேவைச் சார்ந்த பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனம் (DIAT) ’ஆஷ்ரே-Aashray’ என்ற பெயரிலான மருத்துவப் படுக்கை தனிமைப்படுத்தும் அமைப்பை உருவாக்கியுள்ளது. நோயாளியிடமிருந்து மற்றவர்களுக்கு வைரஸ் பரவுவதைத் தடுக்கும் சிறப்புப்பொருட்களால் ஆன தனிப்பட்ட உறைகள் இந்த அமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Question 6 of 60
6. Question
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, அதிக புலிகள் எண்ணிக்கையைக் கொண்டுள்ள மாநிலம் எது?
Correct
நடப்பாண்டுக்கான (2020) உலக புலிகள் நாளையொட்டி, “அனைத்திந்திய புலிகள் மதிப்பீடு – 2018” என்ற விரிவான நான்காவது அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். புதுப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் தற்போது புலிகளின் எண்ணிக்கை ஈராயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தேழாக (2,967) உள்ளது. இது, உலகின் மொத்த புலிகள் எண்ணிக்கையில் எழுபது சதவீதமாகும். மத்திய பிரதேச மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான (526) புலிகள் உள்ளன. அதைத் தொடர்ந்து கர்நாடகா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் அதிக எண்ணிக்கையிலான புலிகளைக் கொண்டுள்ளன.

Question 7 of 60
7. Question
உள்நாட்டு வான் போக்குவரத்து இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட, இந்தியாவின் முதல் ஆளில்லா வானூர்தி இயக்கப் பயிற்சிப் பள்ளி எது?
Correct
இந்தியாவின் பழமையான பறக்கும் சங்கங்களுள் ஒன்றான பம்பாய் பறக்கும் சங்கம், உள்நாட்டு வான் போக்குவரத்து இயக்குநரகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஆளில்லா வானூர்தி இயக்கப்பயிற்சிப்பள்ளியாக மாறியுள்ளது. ஆளில்லா வானூர்தி அமைப்புகளுக்கு பயிற்சியளிப்பதற்கான அச்சங்கத்தின் விண்ணப்பத்திற்கு DGCA ஒப்புதல் அளித்துள்ளது.

Question 8 of 60
8. Question
புதிய நுண்ணுயிர் எதிர்ப்பாற்றல் திட்டங்களுக்காக, இந்தியா, எந்நாட்டுடன் கூட்டிணையவுள்ளது?
Correct
நுண்ணுயிர் எதிர்ப்பாற்றலை (AMR) கையாள, எட்டு மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ஐந்து புதிய திட்டங்களுக்கு, இந்தியா, ஐக்கியப் பேரரசுடன் கூட்டிணந்துள்ளது. அனுமதி கிடைத்தபிறகு, இந்த ஐந்து திட்டங்களும் இந்த ஆண்டு (2020) செப்டம்பர் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன. இதற்காக, இங்கிலாந்து ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க நிதியத்திலிருந்து நான்கு மில்லியன் பவுண்டுகளை ஐக்கியப் பேரரசு வழங்கவுள்ளது. COVID-19 தொற்றுக்கான தடுப்பூசியை தயாரிக்க, இங்கிலாந்து, இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் கூட்டுசேர்ந்துள்ளது.

Question 9 of 60
9. Question
எந்த நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக தியரி பொல்லூர் நியமிக்கப்பட்டுள்ளார்?
Correct
TATA’இன் பிரிட்டிஷ் சொகுசு வாகன நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவரின் (JLR) புதிய தலைமைச் செயல் அதிகாரியாக தியரி பொல்லூர் நியமிக்கப்படுவார் என TATA சன்ஸ் தலைவர் N. சந்திரசேகரன் அறிவித்துள்ளார். முன்னதாக ரெனால்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த தியரி பொல்லூர், செப்.10 அன்று பதவியேற்றுக்கொள்வார். இவருக்கு முன் அந்தப் பதவியிலிருந்த பேராசிரியர் சர் ரால்ப் ஸ்பெத், ஜாகுவார் லேண்ட் ரோவரின் நிர்வாகமற்ற துணைத்தலைவராக செயல்படுவார்.

Question 10 of 60
10. Question
பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்ட துடியுருளிப்பாறை மலை அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
கேரள மாநிலத்தின் பிரமதோம் சிற்றூரில் அமைந்துள்ள துடியுருளிப்பாறை மலை பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநில பல்லுயிர் வாரியத்தின் பரிந்துரைகளின்பேரில், சுற்றுச் சூழல் ரீதியாக வளம்மிக்க இம்மலையை, ஒரு பல்லுயிர் பாரம்பரிய தளமாக பல்லுயிர் மேலாண்மைக் குழு முறையாக அறிவித்துள்ளது. உலக இயற்கைப் பாதுகாப்பு நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Question 11 of 60
11. Question
மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் தேசிய விருதுகளில், ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
வானிலை, பருவநிலை, பெருங்கடல்கள் மற்றும் இயற்கைப் பேரிடர்கள் குறித்த தகவல்களை அளித்து வரும் மத்திய புவி அறிவியல் அமைச்சகம், இந்தத் துறையில் சிறந்த பங்களிப்பு செய்தவர்களுக்கான தேசிய விருதுகளை அறிவித்துள்ளது.
நிலவியல் துறையில் மிகச்சிறந்த பங்களிப்பு செய்துவரும் பேராசிரியர் அசோக் சாஹினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் தேசிய பெருங்கடல் ஆய்வுமையத்தின் மூத்த முதன்மை விஞ்ஞானி Dr. V.V.S.S சர்மா, கோவா தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆய்வு மையத்தின் இயக்குநர் Dr. M இரவிச்சந்திரன் ஆகியோருக்கு பெருங்கடல் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான தேசிய விருது வழங்கப்படவுள்ளது.Incorrect
வானிலை, பருவநிலை, பெருங்கடல்கள் மற்றும் இயற்கைப் பேரிடர்கள் குறித்த தகவல்களை அளித்து வரும் மத்திய புவி அறிவியல் அமைச்சகம், இந்தத் துறையில் சிறந்த பங்களிப்பு செய்தவர்களுக்கான தேசிய விருதுகளை அறிவித்துள்ளது.
நிலவியல் துறையில் மிகச்சிறந்த பங்களிப்பு செய்துவரும் பேராசிரியர் அசோக் சாஹினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் தேசிய பெருங்கடல் ஆய்வுமையத்தின் மூத்த முதன்மை விஞ்ஞானி Dr. V.V.S.S சர்மா, கோவா தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆய்வு மையத்தின் இயக்குநர் Dr. M இரவிச்சந்திரன் ஆகியோருக்கு பெருங்கடல் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான தேசிய விருது வழங்கப்படவுள்ளது. -
Question 12 of 60
12. Question
தேசிய கல்விக்கொள்கையின்படி, எதிர்வரும் 2035ஆம் ஆண்டுக்குள் மொத்த சேர்க்கை விகிதத்தில் அடையவேண்டிய இலக்கு என்ன?
Correct
தேசிய கல்விக்கொள்கை 2020’க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி முறையில், பேரளவிலான மாற்றத்தக்க சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கும். இந்தப் புதிய கல்விக்கொள்கை, உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.தொழிற்கல்வி விகிதத்தை 26.3 சதவீதத்திலிருந்து (2018), வரும் 2035ஆம் ஆண்டு வாக்கில் 50 சதவீதமாக உயர்த்துவதும் இதிலடங்கும். உயர்கல்வி நிறுவனங்களில் 3.5 கோடி புதிய இடங்கள் சேர்க்கப்படும். கல்வி, மதிப்பிடுதல், திட்டமிடுதல் மற்றும் நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் யோசனைகளைத் தடையின்றி பகிர்ந்துகொள்ள தேசிய கல்வி தொழில்நுட்பப் பேரவை என்னுமொரு தன்னாட்சிபெற்ற அமைப்பும் உருவாக்கப்படவுள்ளது.

Question 13 of 60
13. Question
எந்தப் பன்னாட்டு நிறுவனத்தின் தலைவராக ஜின் லிகுன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்?
Correct
ஆசிய உட்கட்டமைப்பு & முதலீட்டு வங்கி (AIIB) அதன் வருடாந்திர கூட்டத்தின்போது ஜின் லிகுனை இரண்டாவது முறையாக தலைவராக தேர்ந்தெடுத்தது. அவரது இரண்டாவது 5 ஆண்டு பதவிக்காலம் 2021 ஜனவரி முதல் தொடங்கும். 2021 AIIB வருடாந்திர கூட்டத்தை, 2021 அக்.27-28ஆம் தேதிகளில் துபாயில் நடத்த, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு AIIB ஆளுநர் வாரியம் ஒப்புதல் அளித்தது.

Question 14 of 60
14. Question
போதைமருந்து உட்கொள்வதால் ஏற்படும் கோளாறுகள், போதையின் காரணமாக ஏற்படும் நடத்தை மாற்றங்கள் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கான விதிமுறைகளைக்கொண்ட மின்னணு-நூலை வெளியிட்ட மத்திய அமைச்சர் யார்?
Correct
போதைமருந்து உட்கொள்வதால் ஏற்படும் கோளாறுகள், நடத்தை மாற்றங்கள் ஆகியவற்றை சீர்செய் -வதற்கான சிகிச்சை விதிமுறைகள்பற்றிய மின்-நூல் ஒன்றை மத்திய சுகாதாரம், குடும்பநலத்துறை அமைச்சர் Dr.ஹர்ஷ்வர்தன் வெளியிட்டார். COVID-19 காலத்தின்போது போதைப்பழக்கம் தொடர்பான சவால்களை நாடு சந்திக்கும் என, “உலக போதைமருந்து தொடர்பான அறிக்கை-2020” கூறுவதாக Dr. ஹர்ஷ் வர்தன் குறிப்பிட்டுள்ளார்.
போதைமருந்து உட்கொள்வதற்கும் மாரடைப்பு, புற்றுநோய், சாலை விபத்தின் காரணமாக ஏற்படும் காயங்கள், மனநோய்போன்ற தொற்றுநோய் அல்லாத பிற நோய்கள் ஏற்படுவதற்கும் தொடர்பு உள்ளது என்பது குறித்து Dr. ஹர்ஷ் வர்தன் உரையாற்றினார். புகைபிடிப்பதால் COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான அபாயம் அதிகமாக உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்Incorrect
போதைமருந்து உட்கொள்வதால் ஏற்படும் கோளாறுகள், நடத்தை மாற்றங்கள் ஆகியவற்றை சீர்செய் -வதற்கான சிகிச்சை விதிமுறைகள்பற்றிய மின்-நூல் ஒன்றை மத்திய சுகாதாரம், குடும்பநலத்துறை அமைச்சர் Dr.ஹர்ஷ்வர்தன் வெளியிட்டார். COVID-19 காலத்தின்போது போதைப்பழக்கம் தொடர்பான சவால்களை நாடு சந்திக்கும் என, “உலக போதைமருந்து தொடர்பான அறிக்கை-2020” கூறுவதாக Dr. ஹர்ஷ் வர்தன் குறிப்பிட்டுள்ளார்.
போதைமருந்து உட்கொள்வதற்கும் மாரடைப்பு, புற்றுநோய், சாலை விபத்தின் காரணமாக ஏற்படும் காயங்கள், மனநோய்போன்ற தொற்றுநோய் அல்லாத பிற நோய்கள் ஏற்படுவதற்கும் தொடர்பு உள்ளது என்பது குறித்து Dr. ஹர்ஷ் வர்தன் உரையாற்றினார். புகைபிடிப்பதால் COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான அபாயம் அதிகமாக உள்ளது என்றும் அமைச்சர் கூறினார் -
Question 15 of 60
15. Question
ரபேல் போர்விமானங்களின் முதல் தொகுதி வந்திறங்கிய அம்பாலா விமானத்தளம் அமைந்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
Correct
ஐந்து ரபேல் போர்விமானங்களைக் கொண்ட முதல் தொகுதி, ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள அம்பாலா விமானத்தளத்தில் தரையிறங்கியுள்ளது. வான்படை தளபதியான RKS பதெளரியா, போர் விமானங்களை வரவேற்றார். இவை, 17ஆவது படைப்பிரிவான, ‘Golden Arrows’இல் சேர்க்கப்படும். இந்த விமானங்களை இந்திய வான்படையைச் சார்ந்த விமானிகள், நடுவானில் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பும் வானூர்திகளின் உதவியுடன் சுமார் 7 மணி நேரம் ஓட்டி வந்தனர்.

Question 16 of 60
16. Question
எந்த நிறுவனத்தின் உன்னத பாரத் அபியான் மையமானது கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதற் -காக CSIR மற்றும் விஞ்ஞான பாரதியுடன் கூட்டிணைந்துள்ளது?
Correct
அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுமன்றம் (CSIR), உன்னத் பாரத் அபியான் – இந்திய தொழில்நுட்ப நிறுவனம், தில்லி (UBA-IITD) மற்றும் புது தில்லியில் உள்ள விஞ்ஞான பாரதி இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவின் கிராமப்புற மேம்பாட்டுக்காக உன்னத பாரத் அபியான் (UBA) பகுதியில் கூட்டு நடவடிக்கை மேற்கொள்வதே புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம். உன்னத பாரத் அபியான் எண்பது கல்வி நிறுவனங்களை உள்ளூர் சமூகங்களுடன் இணைக்கும், மனிதவள மேம்பாட்டு அமைச்சின் ஒரு முதன்மை திட்டமாகும்.

Question 17 of 60
17. Question
இந்திய சூரிய மின்னாற்றல் கழகத்தால் வழங்கப்பட்ட அனைத்து காற்றாலை மின் திட்டங்களையும் முதலில் முடித்த ஆற்றல் உற்பத்தி நிறுவனம் எது?
Correct
சிங்கப்பூரைச் ஸார்ந்த செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமான செம்ப்கார்ப் எனர்ஜி இந்தியா லிட் (SEIL) தனது அண்மைய 800 MW காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்தை நிறைவு செய்ததாக அறிவித்தது. இந்திய சூரிய மின்னாற்றல் கழகம் நடத்திய காற்றாலை மின்னுற்பத்திக்கான ஏலத்தில் வழங்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் நிறைவு செய்த முதல் மின்னுற்பத்தியாளர் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. மத்திய மின்துறை அமைச்சர் RK சிங், செம்ப்கார்ப் நிறுவனத்தின் SECI 1, 2 மற்றும் 3 காற்றாலை திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார்.

Question 18 of 60
18. Question
‘தியோயு தீவு’களை தனது பிரதேசமாகக் கூறி, சட்ட அமலாக்க நடவடிக்கைகளை நடத்துவதற்கான உரிமையை பேரறிவிப்பு செய்த நாடு எது?
Correct
தியோயு தீவுகள் சீனப்பிரதேசம் என்றும், அப்பகுதியில் சட்ட அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள சீனத்துக்கு உரிமை உண்டு என்றும் சீனா சமீபத்தில் பேரறிவிப்பு செய்தது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின், சீனாவின் படையெடுப்புகள் குறித்த அமெரிக்காவின் விமர்சனத்தை மறுத்தார். கிழக்கு சீனக்கடலில் அமைந்துள்ள இந்தத் தீவுகளுக்கு ஜப்பானும் பல்லாண்டுகளாக உரிமைகோரி வருகிறது. இந்தப் பகுதியை ஜப்பான், ‘சென்காகு’ என்றும் சீனா, தியோயு என்றும் அழைக்கிறது.Incorrect
தியோயு தீவுகள் சீனப்பிரதேசம் என்றும், அப்பகுதியில் சட்ட அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள சீனத்துக்கு உரிமை உண்டு என்றும் சீனா சமீபத்தில் பேரறிவிப்பு செய்தது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின், சீனாவின் படையெடுப்புகள் குறித்த அமெரிக்காவின் விமர்சனத்தை மறுத்தார். கிழக்கு சீனக்கடலில் அமைந்துள்ள இந்தத் தீவுகளுக்கு ஜப்பானும் பல்லாண்டுகளாக உரிமைகோரி வருகிறது. இந்தப் பகுதியை ஜப்பான், ‘சென்காகு’ என்றும் சீனா, தியோயு என்றும் அழைக்கிறது. -
Question 19 of 60
19. Question
பொலிவுறு நகரங்களாக மாற்றுவதற்காக, மத்திய வீட்டுவசதி & நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் கூடுதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு நகரங்கள் எவை?
Correct
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது பொலிவுறு நகரங்கள் இயக்குநர் இராகுல் கபூரின்கீழ், ஐந்துபேர்கொண்ட மத்திய குழுவை அமைத்துள்ளது. லடாக்கில் உட்கட்டமைப்பு மற்றும் பணிவாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக, லே மற்றும் கார்கில் ஆகிய இரு நகரங்களுக்குமான திட்ட அறிக்கைகளை இக்குழு உருவாக்கும்.
வெவ்வேறு மாநிலங்களில் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பொலிவுறு நகரங்களுடன் கூடுதலாக இந்த இரண்டு நகரங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த யோசனையை, தொடக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் முன்மொழிந்தது.Incorrect
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது பொலிவுறு நகரங்கள் இயக்குநர் இராகுல் கபூரின்கீழ், ஐந்துபேர்கொண்ட மத்திய குழுவை அமைத்துள்ளது. லடாக்கில் உட்கட்டமைப்பு மற்றும் பணிவாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக, லே மற்றும் கார்கில் ஆகிய இரு நகரங்களுக்குமான திட்ட அறிக்கைகளை இக்குழு உருவாக்கும்.
வெவ்வேறு மாநிலங்களில் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பொலிவுறு நகரங்களுடன் கூடுதலாக இந்த இரண்டு நகரங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த யோசனையை, தொடக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் முன்மொழிந்தது. -
Question 20 of 60
20. Question
சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரபந்தன் புராஸ்கரை வழங்குகிற மத்திய அமைச்சகம் எது?
Correct
சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரபந்தன் புராஸ்கரை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்குகிறது. பேரிடர் மேலாண்மைத்துறையில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆற்றிய பங்களிப்புகளை இந்த விருது அங்கீகரிக்கிறது. விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளான ஜனவரி.23 அன்று வழங்கப்படும் இந்த விருதுக்கு, இந்திய அரசு, அண்மையில், வேட்பு மனுக்களை பெறத்தொடங்கியுள்ளது.

Question 21 of 60
21. Question
பாதுகாப்பு இறுதிநிலை அச்சுறுத்தல் அறிக்கை-2019’ஐ வெளியிட்ட தொழில்நுட்ப நிறுவனம் எது?
Correct
மைக்ரோசாப்ட் தனது, ‘Security Endpoint Threat Report – 2019’ஐ அண்மையில் வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, கடந்தாண்டு அதிக கிரிப்டோகரன்சி பாதிப்புகளைச் சந்தித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பிடித்துள்ளது. கடந்தாண்டில், இந்தியா, அதிக அளவு தீம்பொருள் பாதிப்புகளைச் சந்தித்த நாடுகளின் வரிசையில் ஏழாவது இடத்தையும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அதிக அளவு பணயத் தீ நிரல் (ransomware) பாதிப்புகளைச் சந்தித்த நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடத்தையும் பெற்றது.

Question 22 of 60
22. Question
ஆகஸ்ட் 2020 முதல் பணியாளர் வருங்கால வைப்புநிதிக்கு பணியாளர்கள் & பணியமர்த்துநர்களால் அளிக்கப்படவேண்டிய பங்களிப்பு வீதம் என்ன?
Correct
2020 மே மாதத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மே, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய 3 மாதங்களுக்கு EPF பங்களிப்பை 4% அளவுக்கு குறைத்திருந்தார். பணியமர்த்துநரின் பங்களிப்பில் 2% மற்றும் பணியாளரின் பங்களிப்பில் 2% என்ற அளவுக்கு குறைக்கப்பட்டிருந்தது.
COVID-19 தொற்றுபரவலின்போது அரசாங்கம் அறிவித்த நிவாரண நடவடிக்கைகளின் ஒருபகுதியாக அந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. 2020 ஆகஸ்ட் மாதத்திலிருந்து, இந்தப் பங்களிப்பு வீதம் பழைய பிடிப்பு வீதமான 24% என்ற அளவுக்கே பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.Incorrect
2020 மே மாதத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மே, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய 3 மாதங்களுக்கு EPF பங்களிப்பை 4% அளவுக்கு குறைத்திருந்தார். பணியமர்த்துநரின் பங்களிப்பில் 2% மற்றும் பணியாளரின் பங்களிப்பில் 2% என்ற அளவுக்கு குறைக்கப்பட்டிருந்தது.
COVID-19 தொற்றுபரவலின்போது அரசாங்கம் அறிவித்த நிவாரண நடவடிக்கைகளின் ஒருபகுதியாக அந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. 2020 ஆகஸ்ட் மாதத்திலிருந்து, இந்தப் பங்களிப்பு வீதம் பழைய பிடிப்பு வீதமான 24% என்ற அளவுக்கே பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. -
Question 23 of 60
23. Question
TransUnion CIBIL உடன் இணைந்து ‘MSME சக்ஷம்’ தளத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிதி நிறுவனம் எது?
Correct
‘TransUnion CIBIL’ நிறுவனத்துடன் இணைந்து, சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) ‘MSME சக்ஷம்’ என்ற வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒருங்கிணைந்த நிதியியல் கல்வி மற்றும் அறிவினை வழங்கவல்ல இத்தளம் குறு, சிறு & நடுத்தர (MSME) நிறுவனங்களிடையே நிதிசார்ந்த விழிப்புணர்வை உண்டாக்குவதோடு முறையான மற்றும் மலிவான கடன் வசதிகளை விரைவாக அணுகுவதற்கும் அவர்களுக்கு உதவும் .

Question 24 of 60
24. Question
ஆட்கடத்தலுக்கு எதிரான உலக நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
ஆட்கடத்தலுக்கு உள்ளானோரின் நிலைமைகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குமாக ஆண்டுதோறும் ஜூலை.30 அன்று உலகெங்கும் ஆட்கடத்தலுக்கு எதிரான உலக நாள் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2013ஆம் ஆண்டில், ஐநா பொது அவை, உலகளாவிய செயல்திட்டத்தை மறுஆய்வு செய்வதற்காக ஓர் உயர்மட்டக் கூட்டத்தை நடத்தியது; அப்போது, ஜூலை 30ஆம் தேதியை ஆட்கடத்தலுக்கு எதிரான உலக நாளாக அறிவித்தது. போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐ.நா அலுவலகம் (UNODC) அதன் உறுப்புநாடுகளின் முயற்சிகளுக்கு உதவி வருகிறது.

Question 25 of 60
25. Question
சமூக ஊடக உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கு அதீத அதிகாரம் வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள நாடு எது?
Correct
துருக்கி நாடாளுமன்றம் ஒரு புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது; அந்தச் சட்டம், சமூக ஊடக உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கு அதன் அதிகாரிகளுக்கு அதீத அதிகாரத்தை வழங்குகிறது. இந்தச் சட்டத்தின்படி, பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற முக்கிய சமூக ஊடக நிறுவனங்கள், பிரதிநிதி அலுவலகங்களை துருக்கியில் வைத்திருப்பதோடு, துருக்கியிலேயே அதன் பயனர்களின் தரவுகளை சேமிக்கவும் வேண்டும். இந்தச் சட்டம், இணையவழி குற்றங்களை எதிர்த்துப் போராடும் மற்றும் பயனர்களைப் பாதுகாக்கும் என்றும், இணையவழி ஒடுக்குதுதல் இடுகைகளை அதிகாரிகள் அகற்ற உதவும் என்றும் அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.

Question 26 of 60
26. Question
“தற்சார்பு இந்தியாவை அடைய தொழில்தொடங்குவதை எளிதாக்குவதுகுறித்த தேசிய எண்ணிம மாநாட்டை” ஏற்பாடு செய்த வர்த்தக சங்கம் எது?
Correct
இந்திய தொழிலக கூட்டமைப்பானது (CII) “தற்சார்பு இந்தியாவை அடைய தொழில் தொடங்குவதை எளிதாக்குவதுகுறித்த தேசிய எண்ணிம மாநாட்டை” ஏற்பாடு செய்தது.
இந்த மாநாட்டைத் தொடங்கிவைத்துப்பேசிய மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல், நமது நாடு முழுமையான டிஜிட்டல் சூழலமைப்பை நோக்கி நகர்கிறது என்றார். அடுத்த ஈராண்டுகளில் முழு நாட்டையும் கண்ணாடி இழை அடிப்படையிலான இணைய இணைப்புடன் கட்டமைக்க இந்திய அரசு இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.Incorrect
இந்திய தொழிலக கூட்டமைப்பானது (CII) “தற்சார்பு இந்தியாவை அடைய தொழில் தொடங்குவதை எளிதாக்குவதுகுறித்த தேசிய எண்ணிம மாநாட்டை” ஏற்பாடு செய்தது.
இந்த மாநாட்டைத் தொடங்கிவைத்துப்பேசிய மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல், நமது நாடு முழுமையான டிஜிட்டல் சூழலமைப்பை நோக்கி நகர்கிறது என்றார். அடுத்த ஈராண்டுகளில் முழு நாட்டையும் கண்ணாடி இழை அடிப்படையிலான இணைய இணைப்புடன் கட்டமைக்க இந்திய அரசு இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் கூறினார். -
Question 27 of 60
27. Question
எந்த மின்னணுப்பொருளை இறக்குமதிசெய்ய இருபதாண்டுகளுக்குப்பிறகு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது?
Correct
இந்தியா தனது உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் முயற்சியாக, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு அண்மையில் கட்டுப்பாடுகளை விதித்தது. வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள், இருபது ஆண்டுகளுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டது; அதன்பின்னர் இறக்குமதிக் கொள்கையில் எந்தவிதமான திருத்தங்களும் மேற்கொ -ள்ளப்படவில்லை. தற்போது, அயல்நாட்டு வர்த்தக இயக்குநரகம், அந்தக்கொள்கையை ‘கட்டற்றது’ என்பதிலிருந்து ‘தடைசெய்யப்பட்டது’ என்பதாக மாற்றியது. இருப்பினும், ஒற்றைநிறமுடைய தொலைக் காட்சிப் பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.

Question 28 of 60
28. Question
முந்திரி ஆராய்ச்சி இயக்குநரகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திறன்பேசி செயலியின் பெயரென்ன?
Correct
இந்தியாவிலுள்ள முந்திரி விவசாயிகளுக்காக, ‘Cashew India’ என்ற செயலியை கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள முந்திரி ஆராய்ச்சி இயக்குநரகம் உருவாக்கியுள்ளது. இந்தச்செயலி முந்திரி விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பதப்படுத்துவோர் போன்ற பங்குதாரர்களுக்கு முந்திரி ஒட்டுச்செடிகள், சாகுபடி, அறுவடைக்குப் பிந்தைய பதனிடல் செயல்பாடு மற்றும் சந்தை தகவல்களை வழங்குகிறது. 11 மொழிகளில் கிடைக்கப்பெறும் இந்தச் செயலிக்கு, ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுக்கான திட்டம் நிதியுதவி செய்கிறது.

Question 29 of 60
29. Question
தனது பணியாளர்களுக்கான தயாரிப்புகளை வாங்குவதற்காக காதி & கிராமப்புறத்தொழிற்துறைகள் ஆணையத்துடன் கூட்டிணைந்த முதல் ஆயுதமேந்திய காவல்படை எது?
Correct
இந்தோ-திபெத்திய எல்லைப்பாதுகாப்புப் படையானது காதி மற்றும் கிராமத்தொழில் ஆணையத்துடன் தனது பணியாளர்களுக்கான தயாரிப்புகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. சுமார் பத்து இலட்சம் பணியாளர்களுக்கு காதி பொருட்களை வாங்குவதற்காக, காதி & கிராமத்தொழில் ஆணையத்துடன் அத்தகைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் மத்திய ஆயுதமேந்திய காவல் படையாக ITBP மாறியுள்ளது. முன்னதாக, CAPF பொருள் விற்பனையகங்கள் உள்ளூர் தயாரிப்புகளை மட்டுமே விற்பனை செய்யும் என உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

Question 30 of 60
30. Question
நடப்பாண்டின் தேசிய விளையாட்டு விருது வென்றவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான, விளையாட்டு அமைச்சகத்தின் குழுவின் தலைவர் யார்?
Correct
Incorrect
-
Question 31 of 60
31. Question
மதிப்புமிக்க குஸ்டாவ் டுரூவ் விருதை வென்ற இந்தியாவின் சூரிய மின்னாற்றலில் இயங்கும் படகின் பெயரென்ன?
Correct
இந்தியாவின் சூரிய மின்னாற்றலில் படகான ‘ஆதித்யா’, மின்சார படகுகள் மற்றும் படகோட்டலில் சிறந்து விளங்குவதற்கான மதிப்புமிக்க குஸ்டாவ் டுரூவ் விருதை வென்றுள்ளது. கட்டண பயணிகள் சேவைக்காக வடிவமைக்கப்பட்ட படகுகள் பிரிவில் சிறந்த மின்சார படகு என இது அறிவிக்கப்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டில் கேரளாவில், ‘ஆதித்யா’ தனது செயல்பாடுகளைத் தொடங்கியபோது நாட்டின் முதல் சூரிய மின்னாற்றலில் இயங்கும் படகாக ஆனது. ‘NavAlt’ படகுகள் கட்டிய இந்தப் படகு, கேரள மாநில நீர்வழிப்போக்குவரத்து துறைக்கு சொந்தமானதாகும்.

Question 32 of 60
32. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘மகாத்மா காந்தி பாலம்’ அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
பீகார் மாநிலத்தில் கங்கையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மகாத்மா காந்தி சேது பாலத்தை, மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை அமைச்சர் நிதின் கட்கரி, காணொளிக்காட்சிமூலம் தொடங்கிவைத்தார்.
பாட்னா – ஹாஜிப்பூர் இடையே செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்.19’இல் அமைக்கப்பட்டுள்ள இந்த 4 வழிப்பாலம், 5.5 கிலோ மீட்டருக்கும் அதிக தூரம் உடையதாகும். இப்பாலம் `1,742 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் நீரோட்ட திசையில் செல்லும் பாதை, 2021ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பட உள்ளது. பழைய பாலத்தின் கற்காரை அமைப்பு, புதிய எஃகு தளத்தால் மாற்றப்படவுள்ளது.Incorrect
பீகார் மாநிலத்தில் கங்கையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மகாத்மா காந்தி சேது பாலத்தை, மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை அமைச்சர் நிதின் கட்கரி, காணொளிக்காட்சிமூலம் தொடங்கிவைத்தார்.
பாட்னா – ஹாஜிப்பூர் இடையே செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்.19’இல் அமைக்கப்பட்டுள்ள இந்த 4 வழிப்பாலம், 5.5 கிலோ மீட்டருக்கும் அதிக தூரம் உடையதாகும். இப்பாலம் `1,742 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் நீரோட்ட திசையில் செல்லும் பாதை, 2021ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பட உள்ளது. பழைய பாலத்தின் கற்காரை அமைப்பு, புதிய எஃகு தளத்தால் மாற்றப்படவுள்ளது. -
Question 33 of 60
33. Question
எந்த மத்திய அமைச்சகம் அதன் தகவல் தொழில்நுட்பம் (IT) சார்ந்த உதவித்தொகை திட்டங்களுக்காக ‘SKOCH’ தங்க விருதைப் பெற்றுள்ளது?
Correct
தகவல் தொழில்நுட்பம் சார்ந்த உதவித்தொகை திட்டங்கள்மூலம் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக ‘ஸ்கோச்’ தங்க விருதை மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் பெற்றுள்ளது. 66ஆவது ‘ஸ்கோச்’ 2020 போட்டிக்கு, “டிஜிட்டல் ஆளுகையின்மூலம் COVID-19 நோய்த்தொற்றுக்கு இந்தியா எதிர்வினையாற்றுகிறது” என்று பெயரிடப்பட்டிருந்தது.
“டிஜிட்டல் இந்தியா, மின்னாளுகை 2020” போட்டியில் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் ‘ஸ்கோச்’ விருதை வென்றது. ‘டிஜிட்டல் இந்தியா’ என்னும் மிகப்பெரிய இலட்சியத்தை அடைவதற்கும், மின்னாளுகையின் மேம்பட்ட இலக்கை எட்டுவதற்கும், அனைத்து ஐந்து உதவித்திட்டங்களையும் நேரடி பலன்பரிமாற்றத் தளத்துடன், நேரடி பலன்பரிமாற்ற இயக்கத்தின் உதவியுடன் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் இணைத்துள்ளது.Incorrect
தகவல் தொழில்நுட்பம் சார்ந்த உதவித்தொகை திட்டங்கள்மூலம் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக ‘ஸ்கோச்’ தங்க விருதை மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் பெற்றுள்ளது. 66ஆவது ‘ஸ்கோச்’ 2020 போட்டிக்கு, “டிஜிட்டல் ஆளுகையின்மூலம் COVID-19 நோய்த்தொற்றுக்கு இந்தியா எதிர்வினையாற்றுகிறது” என்று பெயரிடப்பட்டிருந்தது.
“டிஜிட்டல் இந்தியா, மின்னாளுகை 2020” போட்டியில் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் ‘ஸ்கோச்’ விருதை வென்றது. ‘டிஜிட்டல் இந்தியா’ என்னும் மிகப்பெரிய இலட்சியத்தை அடைவதற்கும், மின்னாளுகையின் மேம்பட்ட இலக்கை எட்டுவதற்கும், அனைத்து ஐந்து உதவித்திட்டங்களையும் நேரடி பலன்பரிமாற்றத் தளத்துடன், நேரடி பலன்பரிமாற்ற இயக்கத்தின் உதவியுடன் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் இணைத்துள்ளது. -
Question 34 of 60
34. Question
பதினைந்தாம் நிதிக்குழுவால் அமைக்கப்பட்ட வேளாண் ஏற்றுமதி தொடர்பான உயர்மட்டக்குழுவின் தலைவர் யார்?
Correct
ITC தலைவர் சஞ்சீவ் பூரி தலைமையில் வேளாண் ஏற்றுமதி தொடர்பான எட்டு உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக்குழுவை பதினைந்தாம் நிதிக்குழு அமைத்திருந்தது.
வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கும், அதிக இறக்குமதி மாற்றீட்டை செயல்படுத்த பயிர்கள் வளர்பை ஊக்குவிப்பதற்கும் மாநிலங்களுக்கு அளவிடக்கூடிய செயல்திறன் ஊக்கத்தொகைகளை பரிந்துரைக்கவும் இது அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையில், ‘பயிர் மதிப்புச்சங்கிலி திரளுக் -கான வணிகத்திட்டம்’ என்ற அரசு தலைமையிலான ஓர் ஏற்றுமதித்திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளது. 22 பயிர் மதிப்புச் சங்கிலிகளில் கவனஞ்செலுத்தவும் அது பரிந்துரைத்தது.Incorrect
ITC தலைவர் சஞ்சீவ் பூரி தலைமையில் வேளாண் ஏற்றுமதி தொடர்பான எட்டு உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக்குழுவை பதினைந்தாம் நிதிக்குழு அமைத்திருந்தது.
வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கும், அதிக இறக்குமதி மாற்றீட்டை செயல்படுத்த பயிர்கள் வளர்பை ஊக்குவிப்பதற்கும் மாநிலங்களுக்கு அளவிடக்கூடிய செயல்திறன் ஊக்கத்தொகைகளை பரிந்துரைக்கவும் இது அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையில், ‘பயிர் மதிப்புச்சங்கிலி திரளுக் -கான வணிகத்திட்டம்’ என்ற அரசு தலைமையிலான ஓர் ஏற்றுமதித்திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளது. 22 பயிர் மதிப்புச் சங்கிலிகளில் கவனஞ்செலுத்தவும் அது பரிந்துரைத்தது. -
Question 35 of 60
35. Question
வங்கதேசத்தில் மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்காக ரிலையன்ஸ் பவர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள உலகளாவிய நிறுவனம் எது?
Correct
ஆசிய வளர்ச்சி வங்கியானது ரிலையன்ஸ் வங்கதேச LNG மற்றும் பவர் லிட் உடன் $200 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்கீழ், ரிலையன்ஸ் பவர் நிறுவனம், வங்கதேசத்தில் 718 MW ஒருங்கிணை-சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தை உருவாக்கி இயக்கும். இதில், $100 மில்லியன் டாலர்கள் ஆசிய வளர்ச்சி வங்கியால் வழங்கப்படும். மீதமுள்ள $100 மில்லியன்கள், ஜப்பானிய பன்னாட்டு ஒத்துழைப்பு அமைப்பின் ஆசியாவின் முன்னணி தனியார் உட்கட்டமைப்பு நிதியிலிருந்து (LEAP) பெறப்படும்.

Question 36 of 60
36. Question
சவூதி அராம்கோவை விஞ்சி, உலக மக்களால் மிகவும் மதிக்கப்படும் நிறுவனமாக மாறிய பன்னாட்டு நிறுவனம் எது?
Correct
பன்னாட்டு பெட்ரோலிய நிறுவனமான சவூதி அராம்கோவை விஞ்சி, உலக மக்களால் மிகவும் மதிக்கப் -படும் பொது நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் மாறியுள்ளது. இத்தொழில்நுட்ப நிறுவனத்தின் சந்தை மூலதனம், $1.82 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. அதேசமயம், சவூதி அராம்கோவின் சந்தை மூலதனம், $1.760 டிரில்லியன் டாலர்களாக உள்ளது.

Question 37 of 60
37. Question
ஆக.1 அன்று எந்த விடுதலைப் போராட்ட வீரரின் நூறாவது நினைவுநாளை இந்தியா அனுசரித்தது?
Correct
லோகமான்ய பால கங்காதர திலகரின் நூறாவது நினைவுநாள் ஆகஸ்ட்.1ஆம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரசில் ஒரு முன்னணி தீவிரவாத தலைவராக திலகர் இருந்தார். லால்-பால்-பால் மூவரின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த அவர், “சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை, நான் அதைப்பெற்றே தீருவேன்” என முழங்கினார். 1856 ஜூலை.23 அன்று மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்த திலகர், 1920ஆம் ஆண்டு ஆகஸ்ட்.1ஆம் தேதியன்று காலமானார்.

Question 38 of 60
38. Question
அரபு உலகின் முதல் அணுவாற்றல் உலையை வெற்றிகரமாக இயக்கிய நாடு எது?
Correct
அரபு உலகின் முதல் வணிகரீதியிலான அணுமின்னுற்பத்தி நிலையத்தின் செயல்பாட்டை ஐக்கிய அரபு அமீரகம் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் வளம் மிகுந்த நகரமான அபுதாபியில் இந்த பராகா உலை அமைந்துள்ளது. இதன்மூலம், அணுவாற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 30 நாடுகளின் குழுவில் ஐக்கிய அரபு அமீரகம் இணைகிறது. இந்த அணுமின்நிலையம் கொரியா எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷனுடன் இணைந்து கட்டப்பட்டு இயக்கப்படுகிறது.

Question 39 of 60
39. Question
ஆகஸ்ட் 4, 2020 நிலவரப்படி, ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை செயல்படுத்தும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை என்ன?
Correct
ஜம்மு மற்றும் காஷ்மீர், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் உத்தரகண்ட் ஆகிய 4 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை, நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம், ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்துடன் ஒருங்கிணைத்துள்ளது. இவற்றோடு சேர்த்தால் இப்பொழுது, ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ என்ற திட்டத்தின்கீழ் ஆகஸ்ட்.4, 2020 நிலவரப்படி 24 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் அத்திட்டத்தில் இணைந்துள்ளன. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் பயனாளிகளில் சுமார் 80% நாடு முழுவதற்கும் செல்லுபடியாகக் கூடிய குடும்ப அட்டைகள்மூலம் இந்த மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் எங்கிருந்தாலும் உணவுப்பொருள்களை இப்பொழுது பெற்றுக்கொள்ளமுடியும். மீதியுள்ள மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களை தேசிய அளவில் செல்லுபடியாகும் நடைமுறையில் மார்ச் 2021’க்குள் ஒருங்கிணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Question 40 of 60
40. Question
நடப்பாண்டில் (2020) வரும் உலக தாய்ப்பால் வாரத்துக்கான கருப்பொருள் என்ன?
Correct
உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் முதல் வாரகாலத்தில் (ஆகஸ்ட் 1-7) உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1992ஆம் ஆண்டில் உலக நலவாழ்வு அமைப்பு மற்றும் UNICEF ஆகியவற்றுடன் இணைந்து தாய்ப்பாலூட்டலுக்கான உலகக் கூட்டமைப்பு (WABA) இதனை கடைப்பிடித்து வந்தது. இன்னசென்டி தீர்மானத்தில் கையொப்பமிடப்பட்டதையும் இந்த வாரம் குறிக்கிறது.

Question 41 of 60
41. Question
அடல் புத்தாக்க இயக்கம் தொடங்கிய அடைவு மேம்பாட்டு திட்டத்தின் பெயரென்ன?
Correct
தொழில்முனைவு & புத்தாக்கத்திற்கான ஆதரவை அளிக்கவும், நிபுணத்துவத்தை வழங்குவதற்குமான திட்டத்தை NITI ஆயோக் அமைப்பின் அடல் புத்தாக்க இயக்கம் (AIM) தொடங்கியுள்ளது. புற அழுத்தங்க -ளிலிருந்து சிறிய துளிர் நிறுவனங்களையும், புதிய தொழில்முனைவோரையும் பாதுகாக்கும் திறனை அதிகரிப்பதற்காக பில் & மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை, வத்வானி அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து, அடல் புத்தாக்க இயக்கம், “AIM-iCREST” என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற முயற்சி முதன்முறையாக மேற்கொள்ளப்படுகிறது.

Question 42 of 60
42. Question
அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் (AIIA) அமைந்துள்ள இடம் எது?
Correct
அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் என்பது புது தில்லியில் அமைந்துள்ள ஒரு தலைமை ஆயுர்வேத மருத்துவம் & ஆராய்ச்சி நிறுவனமாகும். COVID-19 நோய்த்தொற்றைக் கண்டறிவதற்கான இலவச மருத்துவப் பரிசோதனை & நோய் பாதித்தவர்களுக்கு இலவச சிகிச்சையளிக்கும் வசதி ஆகியவை புது தில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத சிகிச்சை மையத்தின் COVID-19 நலவாழ்வு மையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய AYUSH அமைச்சர் ஸ்ரீ நாயக், அம்மையத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவையும் அவர் தொடங்கிவைத்தார். அதில் வென்டிலேட்டர் வசதியும், அவசர சிகிச்சைப் பிரிவிற்குத் தேவையான இதர தரநிலைப்படுத்திய சாதனங்களின் வசதிகளும் உள்ளன.

Question 43 of 60
43. Question
அரசியல்சார் செய்தி வழங்கலுக்காக, ‘பிரேம் பாட்டியா’ என்ற விருதை வென்ற இந்திய இதழாளர் யார்?
Correct
இந்திய ஊடகவியலாளரும், இந்தியன் எக்ஸ்பிரஸின் சிறப்பு நிருபருமான தீபங்கர் கோஸ், அரசியல் செய்தி வழங்கலுக்காக, ‘பிரேம் பாட்டியா’ என்ற விருதை வென்றுள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர் சந்தித்த நெருக்கடி உட்பட COVID-19 தொற்றுநோய் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை அவர் விவரித்திருந்தார். சுற்றுச்சூழல் & மேம்பாட்டு பிரச்சனைகள்குறித்த செய்தி வழங்கலுக்கான விருதுக்கு, பத்திரிகை வலைத்தளமான ‘People’s Archive of Rural India (PARI)’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Question 44 of 60
44. Question
பள்ளிமாணவர்களிடையே அறிவியல் மனப்பாங்கை வளர்ப்பதற்காக சுகாதார அமைச்சர் தொடங்கிய திட்டத்தின் பெயரென்ன?
Correct
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் Dr. ஹர்ஷ் வர்தன், “வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்” 2020-21 என்ற தேசிய அளவிலான திட்டத்தை தொடங்கினார். இந்தத் திட்டம், 6 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான பள்ளிமாணவர்களிடையே அறிவியல் மனப்பாங்கை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பான விஞ்ஞான் பிரசார் மற்றும் கல்வி அமைச்சகத்தின் NCERT ஆகியவற்றுடன் கூட்டிணைந்து விஞ்ஞான் பாரதியால் நடத்தப்படுகிறது. இது, அறிவியலில் ஆர்வமுள்ள மாணவர்களை அடையாளங்கண்டு அவர்கட்கு சிறந்த பயிற்சியினை அளிக்கும்.

Question 45 of 60
45. Question
‘இ-ரக்ஷாபந்தன்’ என்ற இணையவழி குற்றங்கள்குறித்த விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் எது?
Correct
ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சர் YS ஜெகன்மோகன் ரெட்டி, இணையவழியில் நடைபெறும் குற்றங்கள்குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை, ‘இ-ரக்ஷாபந்தன்’ என்ற பெயரில் தொடங்கி வைத்துள்ளார். இது, குற்றப்புலனாய்வுத்துறை மற்றும் ஆந்திர பிரதேச மாநில காவல்துறையின் முதல் மெய்நிகர் திட்டமாகும். ஒருமாதகாலம் நீளும் இந்த வேலைத்திட்டம், பொதுமக்களிடையே, குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் இணைய வெளியில் உலவும் சிறார்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Question 46 of 60
46. Question
பிரிட்டிஷ் நாணயத்தில் இடம்பெறும் முதல் வெள்ளையரல்லாத நபர் யார்?
Correct
வெள்ளையரல்லாதோரின் பங்களிப்புகளைக் கொண்டாடுவதற்கான முயற்சிகளின் ஒருபகுதியாக, ஐக்கியப்பேரரசு, மகாத்மா காந்தியின் உருவத்தை தனது புதிய நாணயங்களில் பதிக்கவுள்ளது. இந்தப் பரிந்துரையை ராயல் நாணயச்சாலையின் ஆலோசனைக் குழுவுக்கு அனுப்பியுள்ளதாக ஐக்கியப் பேரரசின் நிதியமைச்சர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இது, “We too built Britain” என்ற பிரச்சாரத்தை நடத்துகிறது. மகாத்மா காந்தியின் உருவத்துடன் நாணயங்கள் பதிக்கப்பட்டால், அவர், ஒரு பிரிட்டிஷ் நாணயத்தில் இடம்பெறும் முதல் வெள்ளையரல்லாத நபராக மாறுவார்.

Question 47 of 60
47. Question
இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சிலின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
Correct
இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் (ICCR) என்பது புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்திய அரசின் ஒரு தன்னாட்சிபெற்ற அமைப்பாகும். கலாச்சார பரிமாற்றத்தின் ஊடாக இந்தியாவின் நாடுகடந்த கலாச்சார உறவுகளை இது ஊக்குவிக்கிறது. 1950ஆம் ஆண்டில், விடுதலை இந்தியாவின் முதல் கல்வியமைச்சரான மெளலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களால் இந்த அவை நிறுவப்பட்டது.

Question 48 of 60
48. Question
மத்திய குறு, சிறு & நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சகமானது (MSME) அகர்பத்தி கைவினைஞர்களுக்கான திட்டத்தை, கீழ்க்காணும் எந்தத் திட்டத்தின் கீழ் தொடங்கியுள்ளது?
Correct
மத்திய அரசின் குறு, சிறு & நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சகம், கிராமோதோக் விகாஸ் யோஜனா திட்டத்தின்கீழ், கிராமப்புறத் தொழில்களை மேம்படுத்துவதற்காகவும், அகர்பத்தி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்களின் நன்மைக்காகவும் பரிசோதனைத் திட்டம் ஒன்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

Question 49 of 60
49. Question
முதன்முதலில் ‘வியாபார மாலா’ விரைவு இரயிலை இயக்கிய இந்திய இரயில்வே மண்டலம் எது?
Correct
வடக்கு இரயில்வே மண்டலமானது தில்லியிலிருந்து திரிபுரா மாநிலத்தில் உள்ள ஜிரானியாவுக்கு முதன்முதலாக, ‘வியாபார மாலா விரைவு இரயிலை’ இயக்கியது. 46 சரக்கு இரயில் பெட்டிகளைக் கொண்ட இதில், 34 பெட்டிகளில் கோதுமையும், மீதமுள்ளவற்றில் அரிசி மற்றும் பருப்பு வகைகளும் ஏற்றப்பட்டிருந்தன. இந்த, ‘வியாபார மாலா’ விரைவு இரயிலின்மூலம் மட்டும் `94 லட்சத்துக்கும் மேல் அந்த இரயில்வே மண்டலம் வருவாய் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

Question 50 of 60
50. Question
அமெரிக்க மாகாணமான வடக்கு கரோலினாவை தாக்கிய சூறாவளியின் பெயரென்ன?
Correct
அமெரிக்க தேசிய சூறாவளி மையத்தின் அறிவிப்புப்படி, வடக்கு கரோலினா மாகாணத்தை, சமீபத்தில் இசையாஸ் (Isais) என்ற சூறாவளி தாக்கியது. இந்தச் சூறாவளி, வடக்கு கரோலினாவின் ஓஷன் ஐல் கடற்கரைக்கு அருகே ஒரு நிலச்சரிவை ஏற்படுத்தியது. வடக்கு கரோலினா, வர்ஜீனியா, மேரிலாந்து & டெலாவர் ஆகிய இடங்களில் ஒரு டசனுக்கும் மேற்பட்ட சூறைக்காற்று நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இந்தச் சூறாவளியால் குறைந்தது 2 பேர் பலியாகியிருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

Question 51 of 60
51. Question
நடப்பாண்டில் (2020) சமற்கிருத நாள் கொண்டாடப்பட்ட தேதி எது?
Correct
‘விஸ்வ சமற்கிருத தினம்’ என்றும் அழைக்கப்படும் சமற்கிருத நாள், ஹிந்து நாட்காட்டியின் ‘ஷ்ரவணா’ மாதத்தில் வரும் முழுநிலவு நாளன்று கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டில் (2020), சமற்கிருதத்தின் மறுமலர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக ஆகஸ்ட்.3 அன்று சமற்கிருத நாள் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் அகில இந்திய வானொலி (AIR), சமற்கிருதத்தில், ‘பகுஜன் பாஷா – சமற்கிருத பாஷா’ என்ற தலைப்பில் முதன்முறையாக ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஒலிபரப்பியது.

Question 52 of 60
52. Question
நிலக்கீல் உபபொருட்களை (bitumen derivatives) தயாரிப்பதற்காக கூட்டு நிறுவனத்தை உருவாக்கிய எண்ணெய் நிறுவனம் எது?
Correct
இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமும் நாட்டின் மிகப்பெரிய வணிக ரீதியிலான எண்ணெய் நிறுவனமுமான இந்தியன் ஆயில், பிரான்ஸின் டோட்டல் நிறுவனத்துடன் கூட்டிணைந்துள்ளது. இந்தியாவின் சாலைகட்டுமானத்தொழிற்துறைக்கு தேவையான உயர்தரமான நிலக்கீல் உப பொருட்கள் மற்றும் சிறப்பு தயாரிப்புகளை உருவாக்குவதற்காக இந்தக் கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கூட்டு நிறுவனம், தொடக்கத்தில், இராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில், தற்போதுள்ள டோட்டல் ஆலையில் செயல்படும்; பின்னர், இந்தியா முழுவதும் ஆறு புதிய ஆலைகளை அமைக்க `226 கோடி நிதியை முதலீடு செய்யும்.

Question 53 of 60
53. Question
NASA விண்வெளி வீரர்கள் பூமியில் மீண்டும் தரையிறங்க பயன்படுத்திய டிராகன் விண்கலத்தின் பெயரென்ன?
Correct
SpaceX’இன் புதிய டிராகன் விண்கலத்தில் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு பறந்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் பாப் பெகன்கென் & டக் ஹர்லி ஆகியோர் மீண்டும் பூமிக்கு வந்துசேர்ந்தனர். 64 நாள் விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு, அவர்கள், மெக்ஸிகோ வளைகுடாவில், ‘எண்டெவர்’ என்ற புதிய டிராகன் விண்கலம்மூலம் வந்து சேர்ந்தனர். கடந்த 9 ஆண்டுகளில் அமெரிக்க மண்ணிலிருந்து NASA’ஆல் அனுப்பப்படும் முதல் குழுவாகும் இது.
45 ஆண்டுகளில் NASA’இன் முதல் ‘ஸ்பிளாஷ்டவுன்’ இதுவாகும். ‘Splash down’ என்பது வான்குடை மூலம் விண்கலத்தை தண்ணீரில் தரையிறக்கும் முறையாகும்.Incorrect
SpaceX’இன் புதிய டிராகன் விண்கலத்தில் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு பறந்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் பாப் பெகன்கென் & டக் ஹர்லி ஆகியோர் மீண்டும் பூமிக்கு வந்துசேர்ந்தனர். 64 நாள் விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு, அவர்கள், மெக்ஸிகோ வளைகுடாவில், ‘எண்டெவர்’ என்ற புதிய டிராகன் விண்கலம்மூலம் வந்து சேர்ந்தனர். கடந்த 9 ஆண்டுகளில் அமெரிக்க மண்ணிலிருந்து NASA’ஆல் அனுப்பப்படும் முதல் குழுவாகும் இது.
45 ஆண்டுகளில் NASA’இன் முதல் ‘ஸ்பிளாஷ்டவுன்’ இதுவாகும். ‘Splash down’ என்பது வான்குடை மூலம் விண்கலத்தை தண்ணீரில் தரையிறக்கும் முறையாகும். -
Question 54 of 60
54. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சிரோ இம்மொபைல் தொடர்புடைய விளையாட்டு எது?
Correct
இத்தாலிய தொழிற்முறை கால்பந்து வீரரான சிரோ இம்மொபைல், கால்பந்து கிளப் லாசியோ மற்றும் இத்தாலியின் தேசிய அணிக்காக விளையாடிவருகிறார். ‘உள்நாட்டு தங்கக்காலணி’ மற்றும் ‘ஐரோப்ய தங்கக்காலணி’ விருதை வென்றுள்ளதை அடுத்து, அவர் அண்மைச் செய்திகளில் இடம்பெற்றார். சமீபத்திய போட்டியில், ஒரே பருவத்தில், கோன்சலோ ஹிகுவேனின் 36 கோல்களுக்கு இணையான கோல்களை அவர் பதிவுசெய்தார். அந்த மொத்த கோல்களில் 14 பெனால்டி கோல்கள் அடக்கம்.

Question 55 of 60
55. Question
தூய்மை இந்தியா இயக்கம் குறித்த கட்டுரைகளுடன் வெளியிடப்பட்ட நூலின் பெயரென்ன?
Correct
குடிநீர், தூய்மைப்பணி ஆகிய துறையின் செயலாளர் பரமேஸ்வரன் தொகுத்தமைத்துள்ள ‘ஸ்வச் பாரத் புரட்சி’ என்ற நூல் ஹிந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, ‘ஸ்வச் பாரத் கிரந்தி’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

Question 56 of 60
56. Question
தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் அலைவரிசையின் பெயரென்ன?
Correct
மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக்கழகத்தின், ‘Sahakar Co-optube NCDC’ என்ற தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக்கழகத்தின் யூடியூப் அலைவரிசையைத் தொடங்கிவைத்தார். இது வேளாண் மற்றும் உழவர்நல அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக்கழகத்தின் (NCDC) ஒரு புதிய முயற்சியாகும்.
ஹிந்தி மற்றும் 18 வெவ்வேறு மாநிலங்களுக்கான பிராந்திய மொழிகளில், “கூட்டுறவு உருவாக்கம் மற்றும் பதிவுசெய்தல்” குறித்து தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் தயாரித்த வழிகாட்டுதல் காணொளிகளையும் நரேந்திர சிங் தோமர் அப்போது வெளியிட்டார்.Incorrect
மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக்கழகத்தின், ‘Sahakar Co-optube NCDC’ என்ற தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக்கழகத்தின் யூடியூப் அலைவரிசையைத் தொடங்கிவைத்தார். இது வேளாண் மற்றும் உழவர்நல அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக்கழகத்தின் (NCDC) ஒரு புதிய முயற்சியாகும்.
ஹிந்தி மற்றும் 18 வெவ்வேறு மாநிலங்களுக்கான பிராந்திய மொழிகளில், “கூட்டுறவு உருவாக்கம் மற்றும் பதிவுசெய்தல்” குறித்து தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் தயாரித்த வழிகாட்டுதல் காணொளிகளையும் நரேந்திர சிங் தோமர் அப்போது வெளியிட்டார். -
Question 57 of 60
57. Question
5G தொழில்நுட்பத்தைப்பற்றி ஆய்வுசெய்வதற்காக, பெங்களூருவில் அமைந்துள்ள இந்திய அறிவியல் மையத்தில் ரோபோடிக்ஸ் ஆய்வகத்தை அமைக்கவுள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது?
Correct
5G தொழில்நுட்பத்தைப்பற்றி ஆய்வுசெய்வதற்காக பெங்களூருவில் அமைந்துள்ள இந்திய அறிவியல் மையத்தில் ஒரு ரோபாட்டிக்ஸ் ஆய்வகத்தை நோக்கியா நிறுவனம் அமைக்கவுள்ளது. ரோபாட்டிக்ஸ் ஆய்வகத்திற்கான நோக்கியாவின் இந்தச் சிறப்பு மையம், 5G & வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களின் அடிப்படையில், சமூகரீதியாக பொருத்தமான பயன்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய பயன்படுத்தப்படும். இது கல்லூரிகளுக்கும் தொழிற்துறைகளுக்கும் இடையிலான கூட்டுறவை ஊக்குவிக்கும்.

Question 58 of 60
58. Question
எந்த நிறுவனத்திற்கு, இந்தியாவின் மூன்றாவது மின்சார பரிமாற்றகத்தை அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது?எந்த நிறுவனத்திற்கு, இந்தியாவின் மூன்றாவது மின்சார பரிமாற்றகத்தை அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது?
Correct
முன்னதாக ஆற்றல் வர்த்தக கழகம் என்றழைக்கப்பட்ட PTC இந்தியா நிறுவனத்திற்கு இந்தியாவின் மூன்றாவது ஆற்றல் பரிமாற்றகத்தை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் 2 ஆற்றல் பரிமாற்றங்கள் உள்ளன; அவை, இந்திய எரிசக்தி பரிமாற்றகம் (IEX) மற்றும் இந்திய ஆற்றல் பரிமாற்றகம் (PXIL). BSE முதலீடுகள் மற்றும் ICICI வங்கி ஆகியவற்றின் திட்டத்துடன் இணைந்து PTC இந்தியாவின் திட்டத்திற்கு மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

Question 59 of 60
59. Question
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகமானது எந்த மாநிலத்திற்கென பிரத்யேக தூர்தர்சன் சேனலைத் தொடங்கியுள்ளது?
Correct
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அஸ்ஸாம் மாநிலத்திற்கென 24 மணி நேர பிரத்யேக அலைவரிசையான ‘தூர்தர்சன் அஸ்ஸாம்’ என்பதை புது தில்லியிலிருந்து மெய்நிகராக தொடங்கிவைத்தார். 24×7 இயங்கும் இவ்வலைவரிசையானது இசைநிகழ்ச்சிகள், பயணக்குறிப்புகள், மெய்யுரை நிகழ்வுகள் மற்றும் நாட்டுப்புற கலாச்சாரம் மற்றும் பழங்குடியின வாழ்வியலை மையமாகக் கொண்ட திரைப்படங்கள்போன்ற நிகழ்ச்சிகளுடன் அஸ்ஸாம் மாநிலத்தின் வளமான வரலாற்றைக் காண்பிக்கும். தூர்தர்சன், ஏற்கனவே பல வடகிழக்கு மாநிலங்களில் இயங்கிவருகிறது.

Question 60 of 60
60. Question
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி குறைகளை பகுப்பாய்வு செய்வதற்காக, DARPG மற்றும் IIT கான்பூர் ஆகியவற்றுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மத்திய அமைச்சகம் எது?
Correct
பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பாதுகாப்புத்துறை, மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை, கான்பூர் இந்திய தொழில்நுட்பப்பயிலகம் (ITI) ஆகியவற்றுக்கு இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.
பொதுமக்களிடமிருந்து பெறும் குறைகளைத் தீர்ப்பது மற்றும் கண்காணிப்பதற்கான இணையதளம் வாயிலாகப்பெறப்படும் புகார்களை ஆராயவும் தரவுகளைப் பெறுவதற்குமான செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரக்கற்றல் நுட்பங்களை, கான்பூர் ஐஐடி உருவாக்குவதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்யும். பொதுமக்களின் குறைகளுக்கான காரணம் மற்றும் அவைகளின் தன்மையை அடையாளங்கண்டு, அதற்கேற்றவாறு நிர்வாகத்தில் மாற்றங்களையும், கொள்கை முடிவுகளையும் எடுப்பதற்கு இந்த ஒப்பந்தம் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உதவும்.Incorrect
பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பாதுகாப்புத்துறை, மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை, கான்பூர் இந்திய தொழில்நுட்பப்பயிலகம் (ITI) ஆகியவற்றுக்கு இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.
பொதுமக்களிடமிருந்து பெறும் குறைகளைத் தீர்ப்பது மற்றும் கண்காணிப்பதற்கான இணையதளம் வாயிலாகப்பெறப்படும் புகார்களை ஆராயவும் தரவுகளைப் பெறுவதற்குமான செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரக்கற்றல் நுட்பங்களை, கான்பூர் ஐஐடி உருவாக்குவதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்யும். பொதுமக்களின் குறைகளுக்கான காரணம் மற்றும் அவைகளின் தன்மையை அடையாளங்கண்டு, அதற்கேற்றவாறு நிர்வாகத்தில் மாற்றங்களையும், கொள்கை முடிவுகளையும் எடுப்பதற்கு இந்த ஒப்பந்தம் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உதவும்.
Leaderboard: August 1st Week 2020 Current Affairs Online Test Tamil