September 4th Week 2020 Current Affairs Online Test Tamil

Quiz-summary
0 of 60 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
Information
AAZZAAZZ
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 60 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- Answered
- Review
-
Question 1 of 60
1. Question
சமீபத்தில் வெளியிடப்பட்ட பொருளாதார சார்பற்ற நிலை குறியீடு – 2020’இல், இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?
Correct
பொருளாதார சார்பற்ற நிலை குறியீடு – 2020’இல், இந்தியா 105ஆவது இடத்தில் உள்ளது. ‘உலகின் பொருளாதார சார்பற்ற நிலை: 2020 ஆண்டறிக்கை’யை புது தில்லியைச் சார்ந்த மதியுரையகமான குடிமை சமூக மையத்துடன் இணைந்து கனடாவின் பிரேசர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை இக்குறியீட்டில் முதலிடத்தில் உள்ளன.
Incorrect

Question 2 of 60
2. Question
3.தலைமை தகவிணக்க அலுவலர் நியமனம் தொடர்பாக வங்கிகளுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்ட அமைப்பு எது?
Correct
வங்கிகளில் இணக்க செயல்பாடுகள் மற்றும் தலைமை தகவிணக்க அலுவலரின் பங்கு தொடர்பான வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. அனைத்து வங்கிகளிலும் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட இணக்கக்கொள்கை மற்றும் நியமிக்கப்பட்ட ஒரு தலைமை தகவிணக்க அலுவலர் கட்டாயம் இருக்கவேண்டும் என இவ்வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன. இத்தலைமை தகவிணக்க அலுவலர், வங்கியின் பொது மேலாளர் பதவிக்கு இணையாக மூத்த நிர்வாகியாக இருப்பார்.

Question 3 of 60
3. Question
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி விளைவதற்காக, ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA), எந்த நாட்டுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?
Correct
மாலத்தீவுக்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் இடையே ஓர் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது. “அமெரிக்க பாதுகாப்புத்துறைக்கான கட்டமைப்பு – மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு இடையேயான உறவு” இந்தியப் பெருங்கடலில் அமைதி மற்றும் பாதுகாப்பைப்பேணுவதற்கான ஒத்துழைப்பை ஊக்குவிக்க முற்படுகிறது. முன்னதாக, கடந்த 2013ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கிடையில் முன்மொழியப்பட்ட, படைகளின் ஒப்பந்தத்தை இந்தியா எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.

Question 4 of 60
4. Question
எந்த மத்திய அமைச்சகத்தின்கீழ், தரைவிரிப்பு ஏற்றுமதி வளர்ச்சிக் கழகம் செயல்படுகிறது?
Correct
இந்தியாவிலிருந்து தரைவிரிப்புகள் மற்றும் பிற தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப் -பதற்காக, கடந்த 1982ஆம் ஆண்டில், ஜவுளி அமைச்சகத்தால் தரைவிரிப்பு ஏற்றுமதி வளர்ச்சிக் கழகம் (CEPC) நிறுவப்பட்டது. அண்மையில், மெய்நிகராக மூன்று நாட்களுக்கு நடைபெறும் வாங்குபவர் -விற்பனையாளர் சந்திப்பை இவ்வமைப்பு அறிவித்ததால், அண்மைச் செய்திகளில் இடம்பிடித்தது.

Question 5 of 60
5. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, பக்ஜான் எண்ணெய்க் கிணறு அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
கிழக்கு அஸ்ஸாமின் டின்சுகியா மாவட்டத்தில் அமைந்துள்ள எண்ணெய் இந்திய நிறுவனத்தின் (OIL) பக்ஜான் எண்ணெய்க் கிணறு மூடப்பட்டுள்ளது. உபகரணங்கள் செயலிழந்த காரணத்தால், இந்த எண்ணெய்க் கிணற்றில், பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கட்டுப்பாடற்ற எரிவாயு பரவல் காரணமாக அதிக வேகத்தில் அத்தீ பரவியது. எண்ணெய் இந்திய நிறுவனமும் அயல்நாட்டு வல்லுநர்களும் இணைந்து கிட்டத்தட்ட 110 நாட்களுக்குப் பிறகு அத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Question 6 of 60
6. Question
வெனிஸ் திரைப்பட விழா – 2020’இல், “சிறந்த திரைக்கதை” விருதை வென்ற இந்திய திரைப்படம் எது?
Correct
மராத்தி மொழி திரைப்படமான ‘The Disciple’, வெனிசு திரைப்பட விழா–2020’இல் ‘சிறந்த திரைக்கதை’ விருதை வென்றுள்ளது. இந்தத் திரைப்படத்தை சைதன்யா தம்ஹானே இயக்கியுள்ளார். பாரம்பரிய ஹிந்துஸ்தானி பாடகரின் தனிப்பட்ட மற்றும் தொழிற்முறை அனுபவங்களை இப்படம் விவரிக்கிறது. மதிப்புமிக்க, ‘FIPRESCI’ விருதையும் இது பெற்றுள்ளது. சோலி ஜாவோ இயக்கிய ‘நோமட்லேண்ட்’ திரைப்படம், இந்த விழாவில், “தங்க சிங்கம்” விருதை வென்றது.

Question 7 of 60
7. Question
இந்திய வாகனங்களில் உமிழ்வு & பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதற்கான விதிமுறைகளை அறிவித்துள்ள அமைச்சகம் எது?
Correct
இந்திய வாகனங்களில் உமிழ்வு & பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்திய வாகனங்களுக்கான பூட்டுதல் இல்லா நிறுத்த அமைப்பு (ABS), வளிப்பைகள், பின்புற வாகன நிறுத்த உதவி அமைப்பு மற்றும் மோதல் தரநிலைகளுக்கான வரைவு அறிவிப்புகளையும் அவ்வமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இத்தகைய விதிமுறைகளில் வளர்ந்த நாடுகளுக்கிணையாக இந்திய வாகனத் தொழிற்துறையைக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் உள்ளன என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.Incorrect
இந்திய வாகனங்களில் உமிழ்வு & பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்திய வாகனங்களுக்கான பூட்டுதல் இல்லா நிறுத்த அமைப்பு (ABS), வளிப்பைகள், பின்புற வாகன நிறுத்த உதவி அமைப்பு மற்றும் மோதல் தரநிலைகளுக்கான வரைவு அறிவிப்புகளையும் அவ்வமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இத்தகைய விதிமுறைகளில் வளர்ந்த நாடுகளுக்கிணையாக இந்திய வாகனத் தொழிற்துறையைக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் உள்ளன என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. -
Question 8 of 60
8. Question
அண்மையில் எந்த மாநிலத்தில் அமைந்துள்ள மூன்று பெட்ரோலிய திட்டங்களை இந்தியப் பிரதமர் திறந்து வைத்தார்?
Correct
Incorrect
-
Question 9 of 60
9. Question
சமீபத்தில் நடந்த ASEAN-இந்தியா அமைச்சர்கள் கூட்டத்திற்கு இணைந்து தலைமைதாங்கியவர் யார்?
Correct
மத்திய வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியதோடு ASEAN -இந்தியா அமைச்சர்கள் கூட்டத்திற்கும் இணைந்து தலைமைதாங்கினார். இக்கூட்டம் ஒரு மெய்நிகர் முறைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் 10 ASEAN உறுப்பு நாடுகளின் அமைச்சர்களும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சரும் பங்கேற்றனர். இக்கூட்டத்தின்போது, புதிய ASENA – இந்தியா செயல் திட்டம் (2021-2025) ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Question 10 of 60
10. Question
திரிபுரா மாநிலத்தின் முதல் சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) எங்கு அமைக்கப்படுகிறது?
Correct
திரிபுரா மாநிலத்தின் சப்ரூமில் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) கட்டுவதற்காக, அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டது. இது, அம்மாநிலத்தின் முதல் SEZ ஆகும். `635 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த SEZ, இரப்பர், மூங்கில், ஜவுளி மற்றும் உணவுப் பதப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும். திரிபுராவின் தலைநகர் அகர்தலாவிலிருந்து 130 கிமீ தொலைவில் சப்ரூம் அமைந்துள்ளது.

Question 11 of 60
11. Question
சாலி புயலால் பாதிக்கப்பட்டு, அதன் மாகாணங்களில் அவசரநிலையை அறிவித்த நாடு எது?
Correct
வெப்பமண்டல புயல் சாலி காரணமாக ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (USA) கடலோர மாகாணமான லூசியானாவின் ஆளுநர், அம்மாகாணத்தில் அவசரநிலையை அறிவித்துள்ளார். இந்த வெப்பமண்டல புயல் ஒரு சூறாவளியாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லூசியானா மாகாணத்தின் நிலப்பரப்பிற்கு நகரும்போது, இது, மீண்டும் வெப்பமண்டல புயலாக பலவீனமடையும்.

Question 12 of 60
12. Question
1962’க்குப் பிறகு முதன்முறையாக ஆசியாவின் பொருளாதாரம் சரியும் என மதிப்பிட்டுள்ள நிறுவனம் எது?
Correct
ஆசிய வளர்ச்சி வங்கியின் கூற்றுப்படி, 1962’க்குப் பிறகு முதன்முறையாக ஆசியாவின் பொருளாதாரம் சரியும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1% அதிகரிக்கும் என இவ்வங்கி முன்பு கணித்திருந்தது. தற்போது, 2020ஆம் ஆண்டில் ஆசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 0.7% குறைந்து, 2021ஆம் ஆண்டில் 7.7 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் GDP, நடப்பாண்டு 9%ஆக குறையும் என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது.

Question 13 of 60
13. Question
‘நமாமி கங்கை’ திட்டம் மற்றும் ‘அம்ருத்’ திட்டத்தின்கீழ், எந்த மாநிலத்தில், பல்வேறு திட்டங்களை பிரதம அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்?
Correct
‘கங்கையாற்றை தூய்மைப்படுத்தும் திட்டம்’ & ‘அம்ருத்’ திட்டங்களின்கீழ் பீகாரில் பல திட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்தார். பேயூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பாட்னா, சிவன், மற்றும் சாப்ரா நகரங்களில் புதுப்பிப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்காகன அடல் திட்டம் (அம்ருத்) என 4 திட்டங்கள் தொடங்கிவைக்கப்பட்டன. இதுதவிர, முங்கர், ஜமல்பூர் ஆகிய இடங்களில் குடிநீர் வழங்கல் திட்டங்கள், முசாபர்பூரில் ‘கங்கையாற்றை தூய்மைப்படுத்தும் திட்ட’த்தின்கீழ் ஆற்றுப்படுகை மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டன.

Question 14 of 60
14. Question
அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட புதிய வங்கி ஒழுங்குமுறை (திருத்த) மசோதா, எந்த வகை நிறுவனங்களை மறுசீரமைக்க, இந்திய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரமளிக்கிறது?
Correct
இந்திய அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட புதிய வங்கி ஒழுங்குமுறை (திருத்த) மசோதா, கூட்டுறவு வங்கிகளை மறுசீரமைக்க இந்திய ரிசர்வ் வங்கிக்கு (RBI) அதிகாரம் அளிக்கிறது. இந்த மசோதாவை நாடாளுமன்றத்தின் பருவகால அமர்வின் முதல் நாளில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அவசரச்சட்ட வடிவில் முன்பு தாக்கல் செய்யப்பட்ட இம்மசோதா, பின்னர் திரும்பப் பெறப்பட்டது. இத்திருத்தத்தின்கீழ், ரிசர்வ் வங்கியால் நலிவடைந்த கூட்டுறவு வங்கிகளை மறுசீரமைக்க முடியும்.

Question 15 of 60
15. Question
மஞ்சள்கடலில் ஒரு கப்பலிலிருந்து, 9 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக புவிசுற்றுப்பாதைக்கு ஏவிய நாடு எது?
Correct
மஞ்சள்கடலில் உள்ள ஒரு கப்பலிலிருந்து சீனா ஒரு திண்ம முற்செலுத்தி ஏவூர்திப் பொறியை வெற்றி -கரமாக ஏவியது. இந்த ஏவூர்தியில், 9 செயற்கைகோள்கள் விண்ணுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இது சீனத்தின் 2ஆம் கடல்சார் ஏவுதிட்டமாகும். லாங் மார்ச் 11 குடும்பத்தின் பத்தாவது ஏவுகணையான லாங் மார்ச் 11-HY2, ஜிலின்-1 காபென் 03-1 குழுமத்திற்கு சொந்தமான ஒன்பது தொலையுணர் திறன் கொண்ட செயற்கைக்கோள்களை ஏற்றிச்சென்றது.

Question 16 of 60
16. Question
CAPEX திட்டத்தின்கீழ், “கொல்லைப்புற தோட்டம்” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் / யூனியன் பிரதேச அரசு எது?
Correct
ஜம்மு-காஷ்மீரின் தோட்டக்கலைத்துறையானது CAPEX திட்டத்தின்கீழ், “கொல்லைப்புற தோட்டம்” என்ற முதன்மைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இயற்கையான முறையில் பழ உற்பத்தியை மேற்கொள்ள, மக்களை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின்கீழ், 90% மானியத்தில் 3 பழ தாவரங்கள், உழவர்களுக்கு வழங்கப்படும். இந்தத் திட்டம், தற்சார்பு வாழ்வியலை ஊக்குவிப்பதோடு சுற்றுச்சூழலையும் பேணிப்பாதுகாக்கிறது.

Question 17 of 60
17. Question
அண்மையில், பெண்களின் நிலை குறித்த ஆணையத்தின் உறுப்பினராக தெரிவான நாடு எது?
Correct
பெண்களின் நிலைகுறித்த ஐநா ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 54 உறுப்பினர்களைக்கொண்ட இந்த ஆணையம் (CSW) ஐநா பொருளாதார & சமூக கவுன்சிலின் (ECOSOC) ஒரு வினைபடு அமைப்பாகும்.
இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் போட்டியிட்ட, ஆசிய-பசிபிக் நாடுகளுக்கான ஈரிடங்களுக்கு தேர்தல் நடந்தது. CSW’இல் இடம்பெறுவதற்கான தேர்தலில் இந்தியா வெற்றிபெற்றது.Incorrect
பெண்களின் நிலைகுறித்த ஐநா ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 54 உறுப்பினர்களைக்கொண்ட இந்த ஆணையம் (CSW) ஐநா பொருளாதார & சமூக கவுன்சிலின் (ECOSOC) ஒரு வினைபடு அமைப்பாகும்.
இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் போட்டியிட்ட, ஆசிய-பசிபிக் நாடுகளுக்கான ஈரிடங்களுக்கு தேர்தல் நடந்தது. CSW’இல் இடம்பெறுவதற்கான தேர்தலில் இந்தியா வெற்றிபெற்றது. -
Question 18 of 60
18. Question
இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையத்துடன் தொடர்புடைய அமைச்சகம் எது?
Correct
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இரு முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையம் மசோதா – 2020 மற்றும் ஹோமியோபதிக்கான தேசிய ஆணையம் மசோதா – 2020 ஆகியவை மக்களவையால் செப்.14 அன்று நிறைவேற்றப்பட்டது.

Question 19 of 60
19. Question
1. அதன் 35 இலட்சம் MSME’களுக்கு சந்தை ஆதரவை வழங்குவதற்காக SIDBI உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாநில அரசு எது?
Correct
குஜராத் மாநில அரசு சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியுடனான (SIDBI) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்கீழ், அம்மாநிலத்தின் 35 இலட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSME) திறன் கட்டமைப்பு மற்றும் சந்தை ஆதரவை வழங்குவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. முன்னதாக, MSME சூழலியலை உருவாக்குவதற்காக இராஜஸ்தான் மாநில அரசு SIDBI உடன் கூட்டிணைந்தது குறிப்பிடத்தக்கது.

Question 20 of 60
20. Question
3.நடப்பாண்டு (2020) வரும், ‘ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான பன்னாட்டு நாளுக்கான (உலக ஓசோன் நாள்)’ கருப்பொருள் என்ன?
Correct
உலக ஓசோன் நாள் அல்லது ‘ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான பன்னாட்டு நாள்’, செப்.16 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ஓசோன் படலத்தைப்பாதுகாப்பதற்கான வியன்னா தீர்மானம் 1985 மார்ச்.22 அன்று 28 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கையெழுத்திடப்பட்டது.

Question 21 of 60
21. Question
எந்த நாட்டோடு இணைந்து, பாதுகாப்பு தொழில்நுட்பம் & வர்த்தக முன்னெடுப்பு கூட்டத்தை, இந்தியா நடத்தியது?
Correct
இந்திய-அமெரிக்க இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒருபகுதியாக இந்தியாவுக்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் (USA) இடையிலான பத்தாவது பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முன்னெடுப்பு குழுமக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகின்ற இந்த குழுக்கூட்டங்கள், இந்தியா மற்றும் அமெரிக்காவால் மாறி மாறி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடந்த மெய்நிகரான சந்திப்பின்போது, பாதுகாப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்பு நல்குதல் தொடர்புடைய அறிக்கையொன்றும் கையெழுத்தானது.

Question 22 of 60
22. Question
உயிரி மருத்துவத்தில் நவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான ஒரு புதிய நிறுவனத்தை (BARDA) அமைப்பதாக அறிவித்துள்ள பன்னாட்டுச் சங்கம் எது?
Correct
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய ஒன்றியத்தில் அவரது முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் உரையை நிகழ்த்தினார். அவ்வுரையின்போது, அவர் ஒரு வலுவான ஐரோப்பிய நலவாழ்வுச் சங்கத்தை உருவாக்குதற்கு, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களை வலியுறுத்தினார். உயிரி மருத்துவத்தில் நவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மேற்கொள்வதற்கான ஒரு புதிய நிறுவனத்தை (BARDA) உருவாக்கவுள்ளதாகவும் அவர் அறிவித்தார். அடுத்த ஆண்டு உலக நலவாழ்வு உச்சிமாநாட்டைக் கூட்டவும் அவர் முன்மொழிந்தார்.

Question 23 of 60
23. Question
முதலாம் ‘AICTE-விஸ்வேஷ்வரையா சிறந்த ஆசிரியர்’ விருதுகளை வழங்கியவர் யார்?
Correct
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (AICTE) முதன்முறையாக விஸ்வேஷ்வரையா என்ற பெயரில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதை உருவாக்கியுள்ளது. இந்த விருதைப் பெறுவதற்கு, நாடு முழுவதும் AICTE அங்கீகாரம்பெற்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களிலிருந்து 12 பேராசிரியர்களை AICTE தேர்வுசெய்தது. பொறியாளர் நாளை முன்னிட்டு, இவர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருதுகளை மத்திய அமைச்சர் இரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் காணொலிக்காட்சிமூலம் வழங்கினார்.
சிறப்பான ஆசிரியர்களை அடையாளங்காணவும், உயர்தொழில்நுட்ப கல்வித்துறையில் அவர்களின் சிறந்த நடைமுறையை அங்கீகரிக்கவும் இந்த விருது உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சோனா தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியயை Dr. R மாலதி, ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர் Dr. ஜேனட் ஜெயராஜ், அரசன் கணேசன் பல் தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர் Dr நந்தகுமார் மாடா ஆகியோர் உட்பட 12 பேராசிரியர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.Incorrect
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (AICTE) முதன்முறையாக விஸ்வேஷ்வரையா என்ற பெயரில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதை உருவாக்கியுள்ளது. இந்த விருதைப் பெறுவதற்கு, நாடு முழுவதும் AICTE அங்கீகாரம்பெற்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களிலிருந்து 12 பேராசிரியர்களை AICTE தேர்வுசெய்தது. பொறியாளர் நாளை முன்னிட்டு, இவர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருதுகளை மத்திய அமைச்சர் இரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் காணொலிக்காட்சிமூலம் வழங்கினார்.
சிறப்பான ஆசிரியர்களை அடையாளங்காணவும், உயர்தொழில்நுட்ப கல்வித்துறையில் அவர்களின் சிறந்த நடைமுறையை அங்கீகரிக்கவும் இந்த விருது உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சோனா தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியயை Dr. R மாலதி, ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர் Dr. ஜேனட் ஜெயராஜ், அரசன் கணேசன் பல் தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர் Dr நந்தகுமார் மாடா ஆகியோர் உட்பட 12 பேராசிரியர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. -
Question 24 of 60
24. Question
MP’களின் ஊதியத்தை எத்தனை சதவீதத்துக்கு குறைக்க முற்படும், ‘நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம், சலுகைகள் மற்றும் ஓய்வூதியம்’ மசோதாவை மக்களவை நிறைவேற்றியுள்ளது?
Correct
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம், சலுகைகள் மற்றும் ஓய்வூதியம் (திருத்த) மசோதா, 2020’ஐ மக்களவை நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா COVID-19 தொற்றால் எழுந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, ஓராண்டு காலத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை 30% குறைக்கும். இந்த ஆண்டு தொடக்கத்தில், இது தொடர்பாக, அரசாங்கம் ஒரு அவசர ஆணையை பிறப்பித்திருந்தது.

Question 25 of 60
25. Question

Question 26 of 60
26. Question
செயற்கை சுவாச வழங்கிகளை தயாரிக்கவுள்ள KELTRON, எம்மாநிலத்திற்கு சொந்தமான மின்னணு மேம்பாட்டுக் கழகமாகும்?
Correct
கேரள மாநில அரசுக்கு சொந்தமான கேரள மாநில மின்னணு மேம்பாட்டுக்கழகம் (KELTRON), வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய செயற்கை சுவாச வழங்கிகளை (ventilators) தயாரிக்கவுள்ளது. செயற்கை சுவாச வழங்கிகள் உற்பத்தியில் தொழில்நுட்ப நிபுணத்துவம் பெறுவதற்காக, பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு அமைப்பின்கீழ் உள்ள உயிரி மருத்துவ தொழில்நுட்ப சங்கத்துடனான ஓர் ஒப்பந்தத்தில் KELTRON கையெழுத்திட்டுள்ளது.

Question 27 of 60
27. Question
கோசி இரயில் மகா சேது (பிரம்மாண்ட பாலம்) அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள கோசி இரயில் மகா சேதுவை (பிரம்மாண்ட பாலம்) இந்தியப் பிரதமர் மோடி திறந்துவைத்தார். கடந்த 2003-04’ஆம் ஆண்டில், இந்திய அரசு, இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கியது. 1.9 கிமீ நீளமுள்ள இப்பாலம் `516 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இப்பாலம், இந்திய – நேபாள எல்லையில், உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது.

Question 28 of 60
28. Question
G20 உறுப்பு நாடுகளைச் சார்ந்த சுற்றுச்சூழல் அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டமானது எந்த நாட்டின் தலைமையின்கீழ் நடைபெற்றது?
Correct
G20 உறுப்பு நாடுகளைச் சார்ந்த சுற்றுச்சூழல் அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டமானது செளதி அரேபியா தலைமையின்கீழ் மெய்நிகர் முறையில் நடைபெற்றது. இந்தியாவின் சார்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் ஊழல் எதிர்ப்பு, காலநிலை, விவசாயம், எண்ணிமப் பொருளாதாரம், கல்விபோன்ற பல்வேறு சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகள்குறித்து விவாதிக்கப்பட்டது.

Question 29 of 60
29. Question
நிலுவைத்தொகை செலுத்தப்படாத காரணத்தால் சூடானிலிருந்து வெளியேறிய இந்திய பொதுத்துறை நிறுவனம் எது?
Correct
எண்ணெய் வயல்களிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்க்கு பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், சூடானிலிருந்து இந்திய பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் & இயற்கை எரிவாயு நிறுவனம் (ONGC) வெளியேறியுள்ளது. இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான ONGC’இன் அயல்நாட்டு முதலீட்டுக் குழுமமான விதேஷ் (OVL) மற்றும் அதன் சீன பங்குதாரரான CNPC மற்றும் மலேசியாவின் பெட்ரோனாஸ் ஆகியவையும் எண்ணெய் வயல்களிலிருந்து விலகியுள்ளன. 2011ஆம் ஆண்டு முதல் வாங்கிய எண்ணெய்க்கு, $430.69 மில்லியனை சூடான் செலுத்தாமல் உள்ளது.

Question 30 of 60
30. Question
2025ஆம் ஆண்டுக்குள், பிரதமர் பாரதிய ஜனசாதி கேந்திரங்களின் எண்ணிக்கையை எத்தனையாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
Correct
எதிர்வரும் 2024 மார்ச் இறுதிக்குள், பிரதமரின் மக்கள் நல மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,500ஆக அதிகரிக்க நடுவணரசு இலக்கு நிர்ணயித்திருப்பதாக மத்திய இரசாயனங்கள் & உரங்கள் துறை தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு தரமான மருந்துகளை குறைந்த விலையில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு மக்கள் நல மருந்தகங்கள் தொடங்கப்பட்டன. 2020 செப்.15 நிலவரப்படி, நமது நாட்டில் உள்ள மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கை 6,603ஆக அதிகரித்துள்ளது.

Question 31 of 60
31. Question
ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் குடும்பங்களுக்கு, பசுக்களை வழங்க முடிவு செய்துள்ள மாநில அரசு எது?
Correct
மாநிலத்தில் வசித்து வரும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் குடும்பங்களுக்கு பசுக்களை வழங்குவதாக உத்தர பிரதேச மாநில அரசு சமீபத்தில் அறிவித்தது. செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் தொடங்கப்பட்ட ‘ஊட்டச்சத்து மாதம்’ திட்டத்தின் ஒருபகுதியாக இது தொடங்கப்பட்டுள்ளது. உ பி மாநில அரசானது, இதனை, ‘முதலமைச்சரின் ஆதரவற்ற பசுக்கள் பங்கேற்பு திட்டத்தின்’கீழ் மேற்கொள்ளும்.

Question 32 of 60
32. Question
‘மட்பாண்ட செயல்முறை’ மற்றும் ‘தேனீ வளர்ப்பு செயல்முறை’ உள்ளிட்ட திட்டங்களுக்கான வழிகாட்டுதல்களை அறிவித்துள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
‘மட்பாண்ட செயல்முறை’ மற்றும் ‘தேனீ வளர்ப்பு செயல்முறை’ ஆகிய இரண்டு திட்டங்களுக்கான வழிகாட்டுதல்களை மத்திய MSME அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஊதுவத்தி உற்பத்தியில் ஈடுபட்டு உள்ளோருக்கான ஆதரவை விரிவுபடுத்தி இரட்டிப்பாக்குவதாக மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் சில நாட்களுக்கு முன் அறிவித்தது. மத்திய MSME அமைச்சகத்தின் SFURTI திட்டத்தின்கீழ், மட்பாண்டங்கள் தயாரிப்பதற்கான அமைப்பை நிறுவுவதற்கும், தேனீ வளர்ப்புக்கான அமைப்பை உருவாக்குவதற்கும் தலா `50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Question 33 of 60
33. Question
அண்மையில் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட SWAMIH நிதியம் சார்ந்த துறை எது?
Correct
இந்திய அரசாங்கம் ஒரு புதிய “குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கான வீட்டுவசதித் திட்டங்களுக்கான சிறப்பு அனுமதி சாளரம்” திட்டத்தை (SWAMIH நிதியம்) உருவாக்கியுள்ளது. இது நிகர மதிப்புள்ள நேர்மறையான வீட்டுவசதித் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக உருவாக்கப்பட்டது. இத்திட்டங்களில், NPA’ஆக அறிவிக்கப்பட்டவையும், IBC’இன்கீழ் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் முன் நிலுவையில் உள்ளவையும் அடங்கும்.

Question 34 of 60
34. Question
ஹில்சா மீன்களை குறிப்பிட்ட அளவுக்கு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ள நாடு எது?
Correct
ஹில்சா மீன்களை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது. வரும் துர்கா பூசையை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் வர்த்தக அமைச்சகம், ஒன்பது ஏற்றுமதியாளர்களுக்கு, 1500 டன் ஹில்சாவை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதித்துள்ளது. 2012’இல் ஹில்சா ஏற்றுமதிக்கு வங்கதேசம் தடைவிதித்திருந்தது.

Question 35 of 60
35. Question
உலக வங்கியின் நடப்பாண்டுக்கான (2020) மனிதவளக் குறியீட்டில், இந்தியா அடைந்த தரநிலை என்ன?
Correct
ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படும் உலக வங்கியின் மனிதவளக் குறியீட்டின் அண்மைய பதிப்பில், இந்தியா 116ஆம் இடத்தில் உள்ளது. மனிதவளத்தின் முக்கிய கூறுகளின் அடிப்படையில், இக்குறியீடு, நாடுகளை வரிசைப்படுத்துகிறது. இந்தியாவின் மதிப்பெண், 2018ஆம் ஆண்டில் அது பெற்றிருந்த 0.44 என்ற அளவிலிருந்து தற்போது 0.49ஆக அதிகரித்துள்ளது. நடப்பாண்டு (2020) மார்ச் மாதம் வரை 174 நாடுகளுக்கான நலவாழ்வு மற்றும் கல்விசார் தரவுகளை இந்தக்குறியீடு உள்ளடக்கியுள்ளது. ஒரு பில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு இதுவரை பள்ளிக்கல்வி கிடைக்கப்பெறவில்லை என்ற தகவலையும் இந்தக் குறியீடு வெளிப்படுத்தியுள்ளது.

Question 36 of 60
36. Question
1.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஜிபூட்டி நன்னடத்தைக் கோட்பாடு’ என்பதுடன் தொடர்புடைய துறை எது?
Correct
மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் அண்மைய அறிக்கையின்படி, இந்தியா, ஜிபூட்டி நன்னடத்தைக் கோட்பாட்டில் (DCOC) இணைந்துள்ளது. DCOC என்பது கடல்சார் விவகாரங்கள் தொடர்பான ஒரு சங்கமாகும். அது, மேற்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் உள்ள கப்பல்களில் மேற்கொள்ளபடும் திருட்டு/ஆயுதமேந்திய கொள்ளைகளை எதிர்ப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இந்தியா ஒரு பார்வையாளராக இந்தக்குழுவில் இணைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, மொத்தம் 20 நாடுகள், இந்த நன்னடத்தைக் கோட்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.

Question 37 of 60
37. Question
மின்னாற்றலில் இயங்கும் வாகனங்களுக்கான ஒரு புதிய மானியத் திட்டத்தை அறிவித்துள்ள மாநில அல்லது யூனியன் பிரதேச அரசு எது?
Correct
குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, அண்மையில், மின்னாற்றலில் இயங்கும் வாகனங்களுக்கான ஒரு புதிய மானியத்திட்டத்தை அறிவித்தார். இது, காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்காக, மின்னாற்றலில் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் ஐந்து வளர்ச்சித்திட்டங்களின், “பஞ்சசீல பரிசு” என்று முதலமைச்சர் இதனை அறிவித்தார். இத்திட்டத்தின்கீழ், மாணவர்களுக்கு மின்-ஈருளிகள் வாங்குவதற்கு `12,000 மானியம் கிடைக்கும்.

Question 38 of 60
38. Question
பயணிகளிடமிருந்து கூடுதல் “பயனர் கட்டணம்” வசூலிக்க முடிவுசெய்துள்ள அமைப்பு எது?
Correct
சில முக்கிய இரயில் நிலையங்களில், ரயில் கட்டணத்துடன் கூடுதலாக “பயனர் கட்டணம்” வசூலிக்க இந்திய இரயில்வே முடிவுசெய்துள்ளது. இதனை இரயில்வே வாரிய தலைமைச் செயல் அதிகாரி V K யாதவ் தெரிவித்துள்ளார். இக்கூடுதல் கட்டணம், இரயில் நிலையங்களை சீரமைக்கவும், முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவற்றின் உட்கட்டமைப்பை நவீனப்படுத்தவும் பயன்படுத்தப்படும். மொத்த இரயில் நிலையங்களில், கிட்டத்தட்ட 10-15% வரையிலான இரயில் நிலையங்களில் மட்டுமே இந்தக்கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Question 39 of 60
39. Question
2020 செப்டம்பர்.24 அன்று நடைபெற்ற தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் (SAARC) கூட்டத்திற்கு தலைமைதாங்கிய நாடு எது?
Correct
தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் (SAARC) கூட்டம், 2020 செப்.24 அன்று நடந்தது. காணொலிக்காட்சிமூலம் மெய்நிகர் முறையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி தலைமைதாங்கினார். அனைத்து உறுப்புநாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தியா, பாகிஸ்தான் அமைச்சர்களும் சந்தித்தனர்.

Question 40 of 60
40. Question
இந்தியாவில், ‘மருந்துக்குறிப்பெழுதுதல் நடைமுறை’களை மேம்படுத்துவதற்காக, இலவச ஆன்லைன் பாடத்தை தொடங்கியுள்ள அமைப்பு எது?
Correct
இந்தியாவின் மருத்துவ பட்டதாரிகளிடையே ‘மருந்துக்குறிப்பெழுதுதல் நடைமுறை’களை மேம்படுத்த, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) ஓர் இலவச இணையவழி பாடத்தை தொடங்கியுள்ளது. ‘இந்திய மருத்துவ பட்டதாரிகளுக்கான மருந்துக்குறிப்பெழுதும் திறன்கள்’ என்ற பெயரிலான இந்தப் பாடத்தை, சென்னையில் அமைந்துள்ள தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வழங்கவுள்ளது. இந்திய மருத்துவக் கழகமானது முதுகலை பட்டதாரிகளுக்கு இந்தப்பாடத்தை கட்டாயமாக்கியுள்ளது.

Question 41 of 60
41. Question
நலவாழ்வுப் பணியாளர்கள் / மருத்துவர்களைத் தாக்கும் நபர்களை, தண்டனைக்கு உள்ளாக்கும் சட்டத்தைக் கொண்டுவரும் எந்த மசோதாவை, மாநிலங்களவை நிறைவேற்றியுள்ளது?
Correct
நலவாழ்வுப் பணியாளர்கள் / மருத்துவர்களைத் தாக்கும் நபர்களை, தண்டனைக்கு உள்ளாக்கும் சட்டத்தைக் கொண்டுவரும் தொற்றுநோய்கள் (திருத்த) மசோதா, 2020’ஐ மாநிலங்களவை சமீபத்தில் நிறைவேற்றியது. COVID-19 அல்லது இதேபோன்ற பிறிதொரு சூழ்நிலையை எதிர்த்துப் போராடும் நலவாழ்வுப் பணியாளர்கள் அல்லது மருத்துவர்களைத் தாக்குபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை இந்தச் சட்டம் அளிக்கிறது.

Question 42 of 60
42. Question
பன்னாட்டு சம ஊதிய நாள் (International Equal Pay Day) அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
செப்டம்பர்.18ஆம் தேதியை பன்னாட்டு சம ஊதிய நாளாக ஐக்கிய நாடுகள் அவை கொண்டாடுகிறது. இந்நாள் முதன்முறையாக இவ்வாண்டு (2020) கொண்டாடப்பட்டது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாகுபாட்டை முடிவுக்குக்கொண்டுவருதற்காக ஐநா அவை இச்சிறப்புநாளை அனுசரிக்கிறது. ஐநா அவையைப் பொறுத்தவரை, உலகின் அனைத்து பகுதிகளிலும் ஆண்களைவிட பெண்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. பாலின ஊதிய இடைவெளி 23% எனவும் ஐக்கிய நாடுகள் அவை மதிப்பிட்டுள்ளது.

Question 43 of 60
43. Question
NGDRS என்ற புதிய நில ஆவணப் பதிவு முறையை அறிமுகப்படுத்தியுள்ள மாநில / யூனியன் பிரதேச அரசு எது?
Correct
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச அரசானது, ‘தேசிய பொது ஆவணப் பதிவு முறை’யைத் (NGDRS) தொடங்கியுள்ளது. இந்த அமைப்பு, தற்போதுள்ள கைமுறை பதிவு முறையிலிருந்து இணையவழி பதிவு முறைக்கு நில விற்பனை அல்லது வாங்கும் செயல்முறையை மாற்றுவதைக் குறிக்கிறது. இந்தப் புதிய அமைப்பு வெளிப்படையான மற்றும் பொறுப்புள்ள நிலப்பதிவு பொறிமுறையை நிறுவுவதன்மூலம் ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேச அரசின் மின்னாளுகைக்கு பலம் சேர்க்கும்.

Question 44 of 60
44. Question
கீழ்க்காணும் எந்த நாடு தனது “நம்பத்தகாத நிறுவனங்கள் பட்டியலில்” உள்ள நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது?
Correct
சீனா தனது “நம்பத்தகாத நிறுவனங்கள் பட்டியலில்” உள்ள நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அலுவல்பூர்வ அறிக்கையின்படி, சீனத்தின் இறையாண்மை, தேசிய பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் வணிக நலன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு நிறுவனத்திற்கும் வர்த்தகம், முதலீடு மற்றும் நுழைவு இசைவுகளுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட அபராதங்களை சீனா விதிக்கும். சீன வணிகங்களுக்கு பாகுபாடு காட்டும் (அ) தீங்கு விளைவிக்கும் நிறுவனங்களின் பட்டியலும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

Question 45 of 60
45. Question
உலக அல்சைமர் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
அல்சைமர் என்பது ஞாபக மறதிக்கு வழிவகுக்கிற ஒரு நாட்பட்ட நோயாகும். காலப்போக்கில் இதன் நிலை மிக மோசமடைந்து அன்றாட பணிகளைச் செய்வதுகூட கடினமாகிறது. கடந்த 1994ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் செப்.21 அன்று உலக அல்சைமர் நாள் அனுசரிக்கப்படுகிறது. உலகெங்குமுள்ள தேசிய மற்றும் உள்ளூர் அல்சைமர் சங்கங்கள், இந்நோய் குறித்த விழிப்புணர்வு திட்டங்களை அடைய உதவும் வகையில், ஆண்டுதோறும் உலக அல்சைமர் மாதமாக செப்டம்பரை அனுசரிக்கின்றன.

Question 46 of 60
46. Question
ரோதங் சுரங்கப்பாதைக்கு எந்த முன்னாள் பிரதமரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது?
Correct
இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பெயர் விளங்குமாறு ரோதங் சுரங்கப்பாதை -க்கு ‘அடல் சுரங்கப்பாதை’ என பெயர்சூட்டப்பட்டுள்ளது. இது, லே-மணாலி நெடுஞ்சாலையில் இமயம -லையின் கிழக்கில் அமைந்துள்ள பிர் பாஞ்சல் மலைத்தொடரில், ரோதங் கணவாயின் கீழ் கட்டப்பட்டு உள்ள நெடுஞ்சாலை சுரங்கப்பாதையாகும். இது, 10000 அடி உயரத்தில் அமைந்துள்ள உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையாகும்.

Question 47 of 60
47. Question
சமீபத்தில், மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களால் வழங்கப்படும், பன்னாட்டளவில் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தின் முதல் பக்கத்தில், ‘சாலைப்போக்குவரத்திற்கான பன்னாட்டு மரபு’ என முத்திரையிட வேண்டும் என்று மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களுக்கு சாலைப்போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த மரபு நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?
Correct
மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், பன்னாட்டு ஓட்டுநர் உரிமத்தை வழங்கும்போது, அதன் முதல் பக்கத்தில் “சாலைப்போக்குவரத்திற்கான 1949 செப்.19’இன் பன்னாட்டு மரபு” என முத்திரையைப் பதிக்குமாறு மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் பன்னாட்டு ஓட்டுநர் உரிமத்தை, இந்த முத்திரை இல்லாத காரணத்தாலேயே பல நாடுகள் ஏற்க மறுப்பதாக அமைச்சகத்திற்கு வந்த புகார்களை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Question 48 of 60
48. Question
அண்மையில் வெளியிடப்பட்ட FIFA தரவரிசையில், முதலிடத்தில் உள்ள நாடு எது?
Correct
பன்னாட்டு கால்பந்து கூட்டமைப்பான (FIFA) தனது உலகளாவிய FIFA தரவரிசைகளை அண்மையில் வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் பெல்ஜியம் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. பெல்ஜியத்தைத் தொடர்ந்து பிரான்ஸ் மற்றும் பிரேசில் உள்ளன. நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை முறையே இங்கிலாந்து மற்றும் உருகுவே ஆக்கிரமித்துள்ளன.

Question 49 of 60
49. Question
பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்துப் போராடுவதையும், அவர்களுக்காக பாதுகாப்பான மற்றும் வன்முறையற்ற சமூகங்களை உருவாக்குவதையும் நோக்கமாகக்கொண்ட ஒரு தனித்துவமான முன்னெடுப்பான, ‘கேடயம் திட்டம்’, எந்த மாநிலத்தில் செயல்படுத்தப்படவுள்ளது?
Correct
திருச்சிராப்பள்ளி சரகத்திற்கு உட்பட்ட திருச்சிராப்பள்ளி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களிலும் பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுத்து நிறுத்தவும், இதுதொடர்பாக பெண்கள் & சிறார்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நோக்கம் கொண்டு திருச்சிராப்பள்ளி சரக காவல்துறை, ‘கேடயம்’ என்ற ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளது.

Question 50 of 60
50. Question
அண்மையில், அயல்நாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்றுதல்) திருத்த மசோதா, 2020’ஐ மக்களவை நிறைவேற்றியது. அசல் அயல்நாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்றுதல்) சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?
Correct
வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்றல்) திருத்த மசோதா, 2020 ஆனது செப்.21 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது, இந்தியாவில் அயல்நாட்டு பங்களிப்புகளைப் பெறுவதை நிர்வகிக்கும் சட்டத்தில் பல கடுமையான மாற்றங்களை முன்மொழிகிறது.
இது தனிநபர்கள், சங்கங்கள் & நிறுவனங்களால் அயல்நாட்டு பங்களிப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதையும் பயன்படுத்தப்படுவதையும் கட்டுப்படுத்தும் அயல்நாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்றுதல்) சட்டம், 2010’ஐ திருத்துகிறது. இத்திருத்தம் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் (அ) வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறும் ஒரு சங்கத்தின் அனைத்து அலுவலர்களையும் பதிவுசெய்வதற்கான கட்டாய அடையாள ஆவணமாக ‘ஆதார்’ அட்டையை மாற்றியுள்ளது. FCRA’இன்கீழ் பதிவுசெய்யப்பட்ட (அ) முன் அனுமதி பெற்ற ஒரு நிறுவனம் அதன் நியமிக்கப்பட்ட FCRA வங்கிக்கணக்கில் பெறப்பட்ட அயல்நாட்டு பங்களிப்புகளிலிருந்து வேறெந்நிறுவனத்திற்கும் (FCRA’இன்கீழ் பதிவுசெய்யப்பட்ட (அ) முன் அனுமதி பெற்றிருந்தாலுங்கூட) துணை மானியம்/களை வழங்க முடியாதவாறு இச்சட்டம் தடைசெய்கிறது.Incorrect
வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்றல்) திருத்த மசோதா, 2020 ஆனது செப்.21 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது, இந்தியாவில் அயல்நாட்டு பங்களிப்புகளைப் பெறுவதை நிர்வகிக்கும் சட்டத்தில் பல கடுமையான மாற்றங்களை முன்மொழிகிறது.
இது தனிநபர்கள், சங்கங்கள் & நிறுவனங்களால் அயல்நாட்டு பங்களிப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதையும் பயன்படுத்தப்படுவதையும் கட்டுப்படுத்தும் அயல்நாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்றுதல்) சட்டம், 2010’ஐ திருத்துகிறது. இத்திருத்தம் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் (அ) வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறும் ஒரு சங்கத்தின் அனைத்து அலுவலர்களையும் பதிவுசெய்வதற்கான கட்டாய அடையாள ஆவணமாக ‘ஆதார்’ அட்டையை மாற்றியுள்ளது. FCRA’இன்கீழ் பதிவுசெய்யப்பட்ட (அ) முன் அனுமதி பெற்ற ஒரு நிறுவனம் அதன் நியமிக்கப்பட்ட FCRA வங்கிக்கணக்கில் பெறப்பட்ட அயல்நாட்டு பங்களிப்புகளிலிருந்து வேறெந்நிறுவனத்திற்கும் (FCRA’இன்கீழ் பதிவுசெய்யப்பட்ட (அ) முன் அனுமதி பெற்றிருந்தாலுங்கூட) துணை மானியம்/களை வழங்க முடியாதவாறு இச்சட்டம் தடைசெய்கிறது. -
Question 51 of 60
51. Question
அண்மையில் இந்திய நாடாளுமன்றம், COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் நலவாழ்வு ஊழியர்கள் மீதான வன்முறைச் சம்பவங்களை பிணை பெறவியலாத குற்றமாக மாற்றுவதற்கு 2020ஆம் ஆண்டு தொற்றுநோய்கள் (திருத்த) மசோதாவை நிறைவேற்றியது. அசல் தொற்றுநோய்கள் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?
Correct
தொற்றுநோய்கள் (திருத்த) மசோதா, 2020 ஆனது 2020 செப்.22 அன்று இந்திய மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா, கடந்த 1897ஆம் ஆண்டைய தொற்றுநோய்கள் சட்டத்தை திருத்துவ -தற்காக, ஏப்.22 அன்று இந்திய அரசு பிறப்பித்த ஓர் அவசர ஆணைக்கான நிரந்தர மாற்றாக உள்ளது. இதன்மூலம், COVID-19 தொற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் நலவாழ்வு ஊழியர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் அனைத்து பிணையில் வெளிவரவியலாத குற்றமாக மாற்றப்படுவதோடு, அபராதம் மற்றும் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் குற்றமாகவும் மாற்றப்படுகிறது.

Question 52 of 60
52. Question
அண்மையில், பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2021-22 சந்தைப்படுத்துதல் பருவத்துக்கான ரபி பயிர்களுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) அதிகரிக்க ஒப்புதல் அளித்தது. பின்வருவனவற்றில் எது ரபி பயிர் அல்ல?
Correct
பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கன அமைச்சரவைக் குழு, 2021-22 சந்தைப்படுத்துதல் பருவத்துக்கான அனைத்து கட்டாய ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளைச் சார்ந்து இந்தக் குறைந்தபட்ச ஆதரவு விலைகளின் அதிகரிப்பு உள்ளது.

Question 53 of 60
53. Question
இந்திய அரசானது நாட்டின் முதல் மருத்துவ சாதன பூங்காவை அமைக்கவுள்ள மாநிலம் எது?
Correct
நாட்டின் முதல் மருத்துவ கருவிகள் தயாரிப்பு நிறுவனங்கள் கேரளத்தில் அமையவுள்ளன. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆதரவு, சோதனை மற்றும் மதிப்பீடு போன்ற மருத்துவ சாதனத் தொழிலுக்கு முழு அளவிலான சேவைகளை வழங்க, அதிமுக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ சாதனங்கள் துறையில் கவனம் செலுத்தப்படுகிறது.
‘MedSpark’ என்ற மருத்துவ சாதனங்கள் உற்பத்தி மையம், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின் தன்னாட்சி நிறுவனமான ஸ்ரீ சித்திரைத்திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழினுட்ப மையம் (SCTIMST) மற்றும் கேரள மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் கூட்டு முயற்சியில் திருவனந்தபுரத்தின் தொன்னக்கல்லில் உள்ள வாழ்க்கை அறிவியல் பூங்காவில் நிறுவப்படவுள்ளது.Incorrect
நாட்டின் முதல் மருத்துவ கருவிகள் தயாரிப்பு நிறுவனங்கள் கேரளத்தில் அமையவுள்ளன. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆதரவு, சோதனை மற்றும் மதிப்பீடு போன்ற மருத்துவ சாதனத் தொழிலுக்கு முழு அளவிலான சேவைகளை வழங்க, அதிமுக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ சாதனங்கள் துறையில் கவனம் செலுத்தப்படுகிறது.
‘MedSpark’ என்ற மருத்துவ சாதனங்கள் உற்பத்தி மையம், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின் தன்னாட்சி நிறுவனமான ஸ்ரீ சித்திரைத்திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழினுட்ப மையம் (SCTIMST) மற்றும் கேரள மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் கூட்டு முயற்சியில் திருவனந்தபுரத்தின் தொன்னக்கல்லில் உள்ள வாழ்க்கை அறிவியல் பூங்காவில் நிறுவப்படவுள்ளது. -
Question 54 of 60
54. Question
உலக இருதய நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
மனிதனின் இருதயநலத்தை பாதிக்கும் 4 முக்கிய காரணிகளான புகையிலை பயன்பாடு, முறையற்ற உணவுப்பழக்கம், உடற்பயிற்சி செய்யாமை மற்றும் மது அருந்துதல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் செப்.29 அன்று உலக இருதய நாள் அனுசரிக்கப்படுகிறது. “Use Heart to Beat Cardiovascular Disease” என்பது நடப்பாண்டு (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

Question 55 of 60
55. Question
இரும்புத்தாது சுரங்கத்திற்கு பெயர்பெற்ற தோனிமலை அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
இரும்புத்தாது சுரங்கத்திற்கு பெயர்பெற்ற தோனிமலை, கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. வளம்மிகுந்த இந்த இரும்புத்தாது சுரங்கம், 50 ஆண்டுகளாக அரசுக்கு சொந்தமான NMDC’இன்கீழ் இயங்கிவந்தது. NMDC’இன் குத்தகை, 2018’இல் முடிவடைந்தது; அதன்பின்னர், அங்கு சுரங்கப்பணி நிறுத்தப்பட்டது. அண்மையில், கர்நாடக மாநில அரசு, தோனிமலையில் மீண்டும் சுரங்கப் பணியைத் தொடங்க முடிவுசெய்துள்ளது.

Question 56 of 60
56. Question
அண்மையில், நிறுவனங்கள் (திருத்த) மசோதா, 2020’ஐ இந்திய மக்களவை நிறைவேற்றியது. அசல் நிறுவனங்கள் (ஒழுங்காற்றுதல்) சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?
Correct
நிறுவனங்கள் சட்டம், 2013 ஆனது மத்திய பெருநிறுவன விவகார அமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் (திருத்த) மசோதா, 2020’ஆல் திருத்தப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறுவனத்தின் சட்ட ரீதியிலான குற்றங்களை மறுபரிசீலனை செய்கிறது. மேலும், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் அமர்வுகளை நிறுவுவதற்கும் இம்மசோதா முற்படுகிறது. இந்த அமர்வுகள், பொதுவாக புது தில்லியில் அல்லது அறிவிக்கப்படக்கூடிய வேறு இடங்களில் அமைந்திருக்கும்.

Question 57 of 60
57. Question
வங்கிகளின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்த முற்படும் மற்றும் வங்கிகளின் உரிமம், நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் போன்ற பல்வேறு அம்சங்களைப் பற்றிய விவரங்களை வழங்கும் வங்கி ஒழுங்காற்றுதல் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?
Correct
கடந்த 1949ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வங்கி ஒழுங்காற்றுதல் சட்டமானது அண்மைய 2020ஆம் ஆண்டு வங்கி ஒழுங்காற்றுதல் (திருத்த) மசோதாவால் திருத்தப்பட்டது. இத்திருத்தம், ஒரு வங்கியை ஒன்றிணைத்தல் அல்லது சீரமைப்பதற்கான ஒரு திட்டத்தைத் தொடங்குவதற்கு ரிசர்வ் வங்கிக்கு (RBI) அனுமதியளிக்கிறது. இது கூட்டுறவு வங்கிகளையும் RBI’இன்கீழ் கொண்டுவருகிறது.

Question 58 of 60
58. Question
தொழிலாளர் தொடர்பான இரண்டாவது தேசிய ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு எது?
Correct
தொழிலாளர் தொடர்பான இரண்டாவது தேசிய ஆணையமானது கடந்த 2002’இல் அமைக்கப்பட்டது. ஊதியம் வழங்குதல், நலத்திட்ட வசதிகள், சமூகப் பாதுகாப்பு போன்ற சூழ்நிலைகளுக்கு குறைந்த கடுமையான விதிமுறைகளைக்கொண்ட சிறிய அளவிலான அலகுகளுக்கு ஒரு தனிச்சட்டத்தை இந்த ஆணையம் பரிந்துரைத்தது.

Question 59 of 60
59. Question
அதிக எண்ணிக்கையிலான செவிலியர் கல்லூரிகளைக் கொண்ட இந்திய மாநிலம் எது?
Correct
நாட்டில் அதிக எண்ணிக்கையிலான செவிலியர் கல்லூரிகளை கர்நாடக மாநிலம் கொண்டுள்ளது. மொத்தம் 314 கல்லூரிகளை அம்மாநிலம் கொண்டுள்ளது. அவற்றுள் 13 அரசு கல்லூரிகளும் 301 தனியார் கல்லூரிகளும் ஆகும். உடல்நலம் என்பது மாநிலப் பட்டியலின் கீழ் உள்ள ஒரு துறையாகும்; எனவே புதிய செவிலியர் கல்லூரிகளைத் திறப்பது என்பது அந்தந்த மாநில அரசுகளின்கீழ் உள்ளது.

Question 60 of 60
60. Question
அண்மையில், ஜம்மு-காஷ்மீர் அலுவல்பூர்வ மொழிகள் மசோதா, 2020’ஐ இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அலுவல்பூர்வ மொழிகளின் பட்டியலில், பின்வரும் மொழிகளுள் எ(து)வை சேர்க்கப்பட்டுள்ள(து)ன?
Correct
ஜம்மு-காஷ்மீர் அலுவல்பூர்வ மொழிகள் மசோதா 2020’ஐ இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அது கஷ்மீரி, டோக்ரி மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளை யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில், ஏற்கனவே அலுவல்பூர்வ மொழிகளாக உள்ள உருது & ஆங்கிலத்திற்கு கூடுதலாக சேர்க்கப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.________________________________________

Leaderboard: September 4th Week 2020 Current Affairs Online Test Tamil