Online TestTnpsc Exam
உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் Online Test 10th Social Science Lesson 11 Questions in Tamil
உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் Online Test 10th Social Science Lesson 11 Questions in Tamil
Congratulations - you have completed உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் Online Test 10th Social Science Lesson 11 Questions in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
இந்திய அரசாங்கம் 1991 ஆம் ஆண்டுமுதல் நடைமுறைப்படுத்தும் புதிய பொருளாதாரக் கொள்கை எது?
- தாராளமயமாக்கல்
- தனியார்மயமாக்கல்
- உலகமயமாக்கல்
I, II மட்டும் | |
I, III மட்டும் | |
II, III மட்டும் | |
இவை அனைத்தும் |
Question 1 Explanation:
(குறிப்பு - நவீன நாட்களில் அரசியல்வாதிகள், பொருளியல் வல்லுநர்கள், மற்றும் தொழிலதிபர்களின் இடையே அதிகமாகப் பேசக்கூடிய கருத்துக்களாக தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் இருக்கின்றன.)
Question 2 |
______________ என்பதன் கீழ் பண்டங்கள் மற்றும் பணிகளுக்கான சர்வதேச சந்தைகள் ஒருங்கிணைக்கப் படுகின்றன.
தனியார்மயமாக்கல் | |
உலகமயமாக்கல் | |
தாராளாமாயமாக்கல் | |
வர்த்தக ஒப்பந்தம் |
Question 2 Explanation:
(குறிப்பு - உலகமயமாக்கல் என்பது பண்டங்கள் மற்றும் பணிகள், தொழில்நுட்பம், மூலதனம் உழைப்பு அல்லது மனித மூலதனம் ஆகியவற்றின் தடையில்லா ஓட்டத்தில், எந்த தடையும் ஏற்படாமல் உலகின் பல்வேறு பொருளாதாரங்களை ஒருங்கிணைப்பதற்கான செயல்முறையாகும்)
Question 3 |
அடிப்படையில் உலகமயமாக்கல் கீழ்கண்டவற்றுள் எதன் செயல்முறையை குறிக்கிறது?
- சர்வதேசமயமாக்கல்
- தாராளமயமாக்கல்
- தனியார்மயமாக்கல்
I, II மட்டும் | |
I, III மட்டும் | |
II, III மட்டும் | |
இவை அனைத்தும் |
Question 3 Explanation:
(குறிப்பு - உலகமயமாக்கல் என்பது உலகப் பொருளாதாரத்துவ நாடுகளை ஒருங்கிணைப்பது ஆகும்)
Question 4 |
உலகமயமாக்கல் என்ற சொல் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
மார்கஸ் | |
கார்ல் மார்க்ஸ் | |
கிங் பே | |
தியோடோர் லெவிட்
|
Question 4 Explanation:
(குறிப்பு - உலகமயமாக்கல் என்ற சொல் பேராசிரியர் தியோடோர் லெவிட் என்பவர் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டது. உலகமயமாக்கல் வரலாற்றுப் பின்னணியில் மூன்று நிலைகளில் விவாதிக்கப்பட்டது.)
Question 5 |
உலகமயமாக்களின் மூன்று நிலைகளில் கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?
தொன்மையான உலகமயமாக்கல் | |
இடைப்பட்ட உலகமயமாக்கல் | |
கடைநிலை உலகமயமாக்கல் | |
நவீன உலகமயமாக்கல் |
Question 5 Explanation:
(குறிப்பு - உலகமயமாக்கல் என்பது வரலாற்று பின்னணியில் மூன்று நிலைகளில் விவாதிக்கப்பட்டது. அவை தொன்மையான உலகமயமாக்கல், இடைப்பட்ட உலகமயமாக்கல் மற்றும் நவீன உலகமயமாக்கல் என்பன ஆகும்)
Question 6 |
சுமர் மற்றும் சிந்து சமவெளி நாகரீகத்தின் இடையே வர்த்தக உறவுகள் உலகமயமாக்கல் என்ற ஒரு வடிவத்தை மூன்றாம் நூற்றாண்டுகளில் உருவாக்கியது என்று வாதிட்டவர் யார்?
தியோடோர் லெவிட் | |
குந்தர் ஃபிராங்க் | |
ஆண்ட்ரு செகோவ் | |
இவர் யாரும் அல்ல |
Question 6 Explanation:
(குறிப்பு - உலகமயமாக்கல் என்பது மூன்றாம் நூற்றாண்டுகளில் உருவாக்கியது என்று வாதிட்டவர் ஆண்ட்ரே குந்தர் ஃபிராங்க் என்பவர் ஆவார்)
Question 7 |
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- கூற்று 1 - உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தின் ஆரம்ப வடிவத்தை தொன்மையான உலகமயமாக்கல் என்று கிரேக்க காலத்தின்போது அழைக்கப்பட்டது.
- கூற்று 2 - வணிக ரீதியாக நகர்புற மையங்கள் கிரேக்க கலாச்சாரத்தில் மையத்தில் ஆர்வமாக சுற்றி வந்தன.
கூற்று 1 மட்டும் சரி | |
கூற்று 2 மட்டும் சரி | |
இரண்டு கூற்றுகளும் சரி | |
இரண்டு கூற்றுகளும் தவறு |
Question 7 Explanation:
(குறிப்பு - நகர்புற மையங்கள் இந்தியாவில் இருந்து ஸ்பெயினுக்கு பரந்து விரிந்து அலெக்சாண்ட்ரியா, ஏதன்ஸ் மற்றும் அந்தியோக்கி போன்ற நகரங்களில் அதன் மையத்தில் இருந்தது)
Question 8 |
ஹன் வம்சத்துடன் இணைந்து பட்டு சாலையின் வளர்ச்சியை ஊக்கப்படுத்திய பேரரசுகள் எது?
- ரோம் பேரரசு
- பார்த்திபன் பேரரசு
- நெப்போலியன் பேரரசு
I, II மட்டும் சரியானது | |
II, III மட்டும் சரியானது | |
I, III மட்டும் சரியானது | |
எல்லாமே சரியானது |
Question 8 Explanation:
(குறிப்பு - ரோம் பேரரசுக்கும், பார்த்தியன் பேரரசுக்கும் மற்றும் ஹன் வம்சத்துக்கும் இடையேயான வர்த்தக தொடர்பில் உலகமயமாக்கலின் ஆரம்ப வடிவம் இந்த பேரரசுகளுக்கு இடையேயான வணிகஉறவுகளால் பட்டு சாலையின் (Silk Route) வளர்ச்சியை ஊக்கப்படுத்தியது.)
Question 9 |
இடைப்பட்ட உலகமயமாக்கல் காலம் என்று அழைக்கப்படுவது எது?
பதினாறாம் நூற்றாண்டு | |
பதினோராம் நூற்றாண்டு | |
பத்தாம் நூற்றாண்டு | |
பத்தொன்பதாவது நூற்றாண்டு |
Question 9 Explanation:
(குறிப்பு - உலகமயமாக்களின் அடுத்த கட்டம் இடைப்பட்ட உலகமயமாக்கல் என்பதாகும். அது 16 மற்றும் 17 நூற்றாண்டுகளில் ஐரோப்பிய பேரரசுகளின் எழுச்சியால் விளைந்தது)
Question 10 |
முதல் பன்னாட்டு நிறுவனம் என்று அழைக்கப்பட்டது எது?
பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் | |
டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனம் | |
டச்சு கிழக்கிந்திய நிறுவனம் | |
போர்த்துகீசிய கிழக்கிந்திய நிறுவனம் |
Question 10 Explanation:
(குறிப்பு - பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் (1600) தனியார் வணிக நிறுவனம் போல உருவாக்கப்பட்ட முதல் பன்னாட்டு நிறுவனம் ஆகும்.)
Question 11 |
பதினாறாம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவில் இருந்து ஆசியா மற்றும் பிரேசில் வரை வணிக நிறுவனங்களை நிறுவியவர்கள் யார்?
ஆங்கிலேயர்கள் | |
போர்த்துகீசியர்கள் | |
டச்சுக்காரர்கள் | |
ஸ்பானியர்கள் |
Question 11 Explanation:
(குறிப்பு - முதல் டச்சு கிழக்கிந்திய நிறுவனம் 1602 ஆண்டு துவங்கப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவில் இருந்து ஆசியா மற்றும் பிரேசில் வரை வணிக நிறுவனங்களை நிறுவியவர்கள் போர்ச்சுகீசியர்கள் ஆவர்)
Question 12 |
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- கூற்று 1 - பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளுக்கு இடையே நடைபெற்ற உலகமயமாக்கல் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை கொண்டிருந்தன.
- கூற்று 2 - சுங்கவரி, வாணிபம் குறித்த பொது உடன்பாடு மற்றும் உலக வர்த்தக அமைப்பு போன்ற பன்னாட்டு வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடபட்டுள்ளன.
- கூற்று 3 - இருபதாம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற உலகளாவிய வர்த்தக பொருளாதாரத்தில் மூலதனம் மற்றும் முதலீடு செய்யப்பட்டது.
1, 2 கூற்றுகள் மட்டும் சரியானவை | |
2, 3 கூற்றுகள் மட்டும் சரியானவை | |
1, 3 கூற்றுகள் மட்டும் சரியனானவை | |
எல்லா கூற்றுகளும் சரியானவை |
Question 12 Explanation:
(குறிப்பு - இருபதாம் நூற்றாண்டில் வணிக உற்பத்தியில் அதிக பங்கினைப் பெற்றிருந்ததுடன் சேவைகள் வர்த்தகம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தி வணிகத்தில் எழுச்சியுற்றதாக இருந்தது)
Question 13 |
- தென்னிந்திய வர்த்தக குழுக்களை உருவாக முக்கிய காரணம் எது?
- காரணம் 1 - வர்த்தக நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க
- காரணம் 2 - வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்த
காரணம் 1 மட்டும் சரி | |
காரணம் 2 மட்டும் சரி | |
இரண்டு காரணங்களும் சரி | |
இரண்டு காரணங்களும் தவறு |
Question 13 Explanation:
(குறிப்பு - வர்த்தக நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கவும், வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும் வணிகர்கள் தென்னிந்திய வர்த்தக குழுக்களை உருவாக்கினார்கள். இந்திய கலாச்சாரத்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வழிகளாக வர்த்தகக் குழுக்கள் இருந்தன)
Question 14 |
எந்த ஆண்டு கலிங்க வர்த்தகர்கள் சிவப்பு வண்ண கல் அலங்கார பொருட்களை வர்த்தகத்திற்கு கொண்டுவந்தனர்?
1053 ஆம் ஆண்டு | |
1503 ஆம் ஆண்டு | |
1553 ஆம் ஆண்டு | |
1353 ஆம் ஆண்டு |
Question 14 Explanation:
(குறிப்பு - 1053ஆம் ஆண்டு கலிங்க வர்த்தகர்கள் ( நவீன ஒரிசா) சிவப்பு வண்ண அலங்கார பொருட்களை வர்த்தகத்திற்கு கொண்டுவந்தனர். மேலும் ஆரம்ப நாட்களில் பருத்தி ஜவுளி யை தென்கிழக்கு ஆசியாவிற்கும் கொண்டு வந்து வர்த்தகம் செய்தனர்)
Question 15 |
மத்திய காலத்தில் தெற்கு இந்தியாவில் வர்த்தகர்கள் ஆக இருந்தவர்களில் அல்லாதவர் யார்?
பிருடாஸ் | |
கோவாரஸ் | |
கத்ரிகாஸ் | |
சோமாஸ் |
Question 15 Explanation:
(குறிப்பு - மத்திய காலத்தில் தெற்கு இந்தியாவில் வர்த்தகர்களாக கத்ரிகாஸ், நாகராஸ், மும்முரிந்தாஸ், அய்யாவோலி 500, செட்டீஸ், பிருடாஸ், கோவாரஸ் போன்ற பல வர்த்தக குழுவினர் செயல்பட்டனர்.)
Question 16 |
வாஸ்கோடகாமாவால் ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கு _________________ வழியாக புதிய கடல் பாதை கண்டுபிடிக்கப்பட்டது.
ஏதன் வளைகுடா | |
நன்னம்பிக்கை முனை | |
செங்கடல்(குறிப்பு - வாஸ்கோடகாமாவால் ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கு நன்னம்பிக்கை முனை வழியாக புதிய கடல் பாதை கண்டுபிடிக்கப்பட்டது. அது நாகரீக உலகத்தின் மீது பல விளைவுகளை ஏற்படுத்தியது.) | |
பாரசீக வளைகுடா |
Question 16 Explanation:
(குறிப்பு - வாஸ்கோடகாமாவால் ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கு நன்னம்பிக்கை முனை வழியாக புதிய கடல் பாதை கண்டுபிடிக்கப்பட்டது. அது நாகரீக உலகத்தின் மீது பல விளைவுகளை ஏற்படுத்தியது.)
Question 17 |
வாஸ்கோடகாமாவின் தலைமையின்கீழ் போர்ச்சுகீசியர்கள் எப்போது இந்தியா வந்தனர்?
மே 11, 1498ஆம் ஆண்டு | |
மே 17, 1498ஆம் ஆண்டு | |
மே 20, 1498ஆம் ஆண்டு | |
மே 25, 1498ஆம் ஆண்டு |
Question 17 Explanation:
(குறிப்பு - வாஸ்கோடகாமா நன்னம்பிக்கை முனை வழியாக ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கு புதிய கடல் பாதையை கண்டுபிடித்தார்.பின்னர் மே 17, 1498ஆம் ஆண்டு அவரின் தலைமையின் கீழ் போர்ச்சுகீசியர்கள் கோழிக்கோட்டில் வாணிபத்திற்காக வந்திறங்கினர் )
Question 18 |
வாஸ்கோடகாமா இந்தியாவிலிருந்து போர்ச்சுகலுக்கு கொண்டு சென்ற பொருட்களில் லாபமானது, இந்தியா முழுவதும் பயணம் செய்த செலவை விட _____________ மடங்காகும்.
60 | |
70 | |
80 | |
90 |
Question 18 Explanation:
(குறிப்பு - வாஸ்கோடகாமா இந்தியாவில் பயணம் செய்த செலவை விட 60 மடங்கு லாபத்தை இந்தியாவிலிருந்து போர்ச்சுகலுக்கு கொண்டு சென்ற பொருட்களின் மூலம் அடைந்தார் )
Question 19 |
கலிங்கர்களின் வர்த்தகப் பாதையுடன் தொடர்பில்லாதது எது?
சுமத்ரா | |
ஜப்பான் | |
மலேயா | |
பர்மா |
Question 19 Explanation:
(குறிப்பு - கலிங்கர்களின் வர்த்தகப் பாதையுடன் தொடர்புடைய இடங்கள் ஆவன இலங்கை, பர்மா, சம்பா, சீனா, சியாம், மலேயா. கேமர், சுமத்ரா, ஜாவா, பாலி போன்றவையே ஆகும் )
Question 20 |
வாஸ்கோடகாமாவின் இரண்டாவது இந்திய பயணம் எப்போது நிகழ்ந்தது?
1500 ஆம் ஆண்டு | |
1501 ஆம் ஆண்டு | |
1502 ஆம் ஆண்டு | |
1503 ஆம் ஆண்டு |
Question 20 Explanation:
(குறிப்பு - 1500ஆம் ஆண்டு பெட்ரோ ஆல்வாரேஸ் கபரல் என்பவர் இந்தியாவிற்கு வருகை புரிந்தார். பின்னர் 1502ஆம் ஆண்டு வாஸ்கோடகாமாவின் இரண்டாவது இந்திய பயணம் நிகழ்ந்தது)
Question 21 |
கீழ்க்காணும் எந்த இடங்களில் வர்த்தக நிறுவனங்கள் நிறுவுவதற்கு வழிவகை செய்தது?
- கோழிக்கோடு
- கொச்சின்
- கண்ணனூர்
- கொல்லம்
I, II, IV மட்டும் | |
II, III, IV மட்டும் | |
I, II, III மட்டும் | |
இவை அனைத்தும் |
Question 21 Explanation:
( குறிப்பு - இந்தியாவில் கோழிக்கோடு, கொச்சின் மற்றும் கண்ணனூர் ஆகிய இடங்களில் வர்த்தக மையங்கள் நிறுவப்பட்டன. ஆரம்பத்தில் போர்ச்சுகீசியர்களின் தலைநகரமாக கொச்சின் இருந்தது)
Question 22 |
பொருத்துக
- கலிங்கர்களின் வர்த்தகம் - a) 1502
- வாஸ்கோடகாமா முதல் முறை வருகை - b) 1500
- பெட்ரோ ஆல்வாரேஸ் கபரல் வருகை - c) 1053
- வாஸ்கோடகாமா 2ஆம் முறை வருகை - d) 1498
I-c, II-d, III-b, IV-d | |
I-a, II-d, III-c, IV-b | |
I-b, II-a, III-c, IV-d | |
I-d, IIa, III-c, IV-b |
Question 22 Explanation:
(குறிப்பு - வாஸ்கோடகாமா முதல் முறை இந்தியாவில் பயணம் செய்தபோது, இந்தியாவிலிருந்து போர்ச்சுக்கல் நாட்டிற்கு கொண்டு சென்ற இந்திய பொருட்களின் லாபம் அவரது இந்திய பயணத்தின் செலவை விட 60 மடங்கு அதிகமாக இருந்தது)
Question 23 |
எந்த ஆண்டு முதல் டச்சுக்காரர்கள் கடல் பயணங்கள் மேற்கொண்டனர்?
1596 முதல் | |
1500 முதல் | |
1536 முதல் | |
1590 முதல் |
Question 23 Explanation:
(குறிப்பு - 1596ஆம் ஆண்டு முதல் டச்சுக்காரர்கள் பல பயணங்கள் மேற்கொண்டு, டச்சு கிழக்கு இந்திய நிறுவனத்தை 1602ஆம் ஆண்டு உருவாக்கினர்.)
Question 24 |
அட்மிரல் வான் டெர் ஹகேன் அவரால் பெப்சி நிறுவனம் கீழ்க்காணும் எந்த இடங்களில் நிறுவப்பட்டது?
- மசூலிப்பட்டினம்
- நிஜாம்பட்டினம்
- தேவனாம்பட்டினம்
I, II மட்டும் | |
I, III மட்டும் | |
II, III மட்டும் | |
இவை அனைத்தும் |
Question 24 Explanation:
(குறிப்பு - டச்சுக் கிழக்கிந்திய நிறுவனம் 1602ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அட்மிரல் வான் டெர் ஹகேன் என்பவரால் டச்சு நிறுவனம் மசூலிப்பட்டினம், நிஜாம் பட்டினம் மற்றும் தேவனாம்பட்டினம் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டது.)
Question 25 |
1610ஆம் ஆண்டு புலிகாட்டில் தொழிற்சாலையை நிறுவ யாரிடம் அனுமதி கேட்கப்பட்டது?
சந்திரகிரி அரசர் | |
ராஜகிரி அரசர் | |
சங்ககிரி அரசர் | |
புதுக்கோட்டை அரசர் |
Question 25 Explanation:
(குறிப்பு - டச்சுக்காரர்கள் 1610ஆம் ஆண்டு சந்திரகிரி ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி புலிக்காட்டில் ஒரு தொழிற்சாலையை நிறுவினர்)
Question 26 |
டச்சுக்காரர்களால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களுள் கீழ்க்கண்டவற்றுள் எது?
- இண்டிகோ
- சால்ட்பேட்டர்
- வங்க கச்சா பட்டு
I, II மட்டும் | |
II, III மட்டும் | |
I, III மட்டும் (குறிப்பு - 1610ஆம் ஆண்டில் சந்திரகிரி ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி புலிகாட்டில் பிச்சைக்காரர்கள் ஒரு தொழிற்சாலையில் நிறுவினர். பின்னர் இண்டிகோ, சால்ட்பேட்டர் மற்றும் வங்க கச்சா பட்டு போன்ற இதர பொருட்களை டச்சுக்காரர்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்தனர்) | |
இவை அனைத்தும் |
Question 26 Explanation:
(குறிப்பு - 1610ஆம் ஆண்டில் சந்திரகிரி ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி புலிகாட்டில் பிச்சைக்காரர்கள் ஒரு தொழிற்சாலையில் நிறுவினர். பின்னர் இண்டிகோ, சால்ட்பேட்டர் மற்றும் வங்க கச்சா பட்டு போன்ற இதர பொருட்களை டச்சுக்காரர்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்தனர்)
Question 27 |
இந்தியாவில் டச்சுக்காரர்களின் தலைமையிடமாக இருந்தது எது?
புலிகாட் | |
கண்ணனூர் | |
மசூலிப்பட்டினம் | |
கோழிக்கோடு |
Question 27 Explanation:
(குறிப்பு - இந்தியாவில் டச்சுக்காரர்களின் தலைமையிடமாக புலிகாட் இருந்தது)
Question 28 |
எந்த ஆண்டு போர்த்துக்கீசியர்கள் இடமிருந்து தஞ்சாவூர் கடற்கரையில் இருந்த நாகப்பட்டினத்தை டச்சுக்காரர்கள் கைப்பற்றினர்?
1655ஆம் ஆண்டு | |
1659ஆம் ஆண்டு | |
1665ஆம் ஆண்டு | |
1669ஆம் ஆண்டு |
Question 28 Explanation:
(குறிப்பு - டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தை இந்தியாவில் 1602ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் நிறுவினர். 1659 ஆம் ஆண்டு போர்ச்சுகீசியர்கள் இடமிருந்து தஞ்சாவூர் கடற்கரையிலிருந்த நாகப்பட்டினத்தை டச்சுக்காரர்கள் கைப்பற்றினர்)
Question 29 |
ஆங்கிலேயர்களுக்கு கோல்டன் ஃபயர் மேன் என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?
கோல்கொண்டா சுல்தான் | |
பிஜப்பூர் சுல்தான் | |
ஹைதராபாத் சுல்தான் | |
இவர் யாருமல்ல |
Question 29 Explanation:
(குறிப்பு - கோல்கொண்டாவின் சுல்தான் ஆங்கிலேயர்களுக்கு கோல்டன் ஃபயர் மேன் என்ற பட்டத்தை வழங்கினார்.1632ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களை தனது ராஜ்ய துறைமுகங்களில் இலவசமாக வர்த்தகம் செய்ய அனுமதி வழங்கினார்)
Question 30 |
பொருத்துக
- 1600ஆம் ஆண்டு - a) செயிண்ட் ஜார்ஜ் கோட்டை
- 1626ஆம் ஆண்டு - b) எலிசபெத் ராணி பட்டயம் வழங்குதல்
- 1632ஆம் ஆண்டு - c) ஆங்கிலேயர்கள் புலிகாட்டில் தொழிற்சாலை அமைத்தல்
- 1639ஆம் ஆண்டு - d) கோல்கொண்டா சுல்தான் இலவச வர்த்தக அனுமதி அளித்தல்
I-b, II-c, III-d, IV-a | |
I-d, II-a, III-c, IV-b | |
I-a, II-d, III-b, IV-c | |
I-c, II-a, III-b, IV-d |
Question 30 Explanation:
(குறிப்பு - டிசம்பர் 31, 1600 அன்று கிழக்கிந்திய கம்பெனிக்கு நிறுவனம் தொடங்குவதற்கு எலிசபெத் ராணியால் பட்டயம் வழங்கப்பட்டது. தென்கிழக்கு கடற்கரையில், ஆங்கிலேயர்கள் 1611இல் மசூலிப்பட்டினத்திலும், 1626ஆம் ஆண்டு புலிகாட் அருகிலும் தொழிற்சாலையை நிறுவினார்கள்)
Question 31 |
ஆங்கிலேயர்களால் 1639ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோட்டை எவ்வாறு அழைக்கப்பட்டது?
புனித டேவிட் கோட்டை | |
புனித ஜார்ஜ் கோட்டை | |
புனித லூயிஸ் கோட்டை | |
இது எதுவும் அல்ல |
Question 31 Explanation:
(குறிப்பு - 1639 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் சென்னையில் ஒரு வலுவான நிறுவனம் கட்டப்பட்டது. பின்னர் அது செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்று அழைக்கப்பட்டது. சோழமண்டல கடற்கரையில் உள்ள மசூலிப்பட்டினம் விரைவில் ஆங்கிலேய குடியேற்றத்தின் தலைமையகமாக மாறியது)
Question 32 |
டேனிஷ்காரர்கள் எந்த ஆண்டில் இந்தியாவிற்கு வருகை புரிந்தனர்?
1616ஆம் ஆண்டு | |
1617ஆம் ஆண்டு | |
1618ஆம் ஆண்டு | |
1619ஆம் ஆண்டு |
Question 32 Explanation:
(குறிப்பு - டேனிஷ்காரர்கள் 1616ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை புரிந்து டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனம் ஒன்றை உருவாக்கினர்.)
Question 33 |
எந்த ஆண்டு டேனிஷ் குடியேற்றங்களால் டிரங்குபார் தலைமை இடமாக அறிவிக்கப்பட்டது?
1620ஆம் ஆண்டு | |
1621ஆம் ஆண்டு | |
1622ஆம் ஆண்டு | |
1623ஆம் ஆண்டு |
Question 33 Explanation:
(குறிப்பு - டேனிஷ்காரர்கள் 1616 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை புரிந்து டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை துவங்கினர். 1620ஆம் ஆண்டு டிரங்குபாரை தலைமையிடமாகக் கொண்டு டேனிஷ் தொழிற்சாலைகள் இயங்கின)
Question 34 |
1845ஆம் ஆண்டு இந்தியாவைவிட்டு வெளியேறிய ஐரோப்பியர்கள் யார்?
ஆங்கிலேயர்கள் | |
பிரஞ்சுக்காரர்கள் | |
டச்சுக்காரர்கள் | |
டேனிஷ்காரர்கள் |
Question 34 Explanation:
(குறிப்பு - டேனிஷ்காரர்கள் இந்தியாவில் தங்களை வலுப்படுத்த தவறியதால் 1845ஆம் ஆண்டு அனைத்து குடியேற்றங்களையும் ஆங்கிலேயர்களால் கட்டாயப்படுத்தப்பட்டு அவர்களுக்கே விட்டு விட்டு இந்தியாவை விட்டு சென்றனர்)
Question 35 |
இந்தியாவில் பிரஞ்சுக்காரர்கள் எந்த ஆண்டு முதல் பிரஞ்சு தொழிற்சாலையை நிறுவினர்?
1666ஆம் ஆண்டு | |
1668ஆம் ஆண்டு | |
1670ஆம் ஆண்டு | |
1672ஆம் ஆண்டு |
Question 35 Explanation:
(குறிப்பு - இந்தியாவில் பிரஞ்சுக்காரர்கள் 1668 ஆம் ஆண்டில் கோல்கொண்டாவின் சுல்தானிடம் அனுமதி பெற்று முதல் பிரெஞ்சு தொழிற்சாலையை நிறுவினர்)
Question 36 |
எந்த ஆண்டு டச்சுக்காரர்கள் பாண்டிச்சேரியை பிரஞ்சுக்காரர்களிடமிருந்து கைப்பற்றி பின்னர் திரும்ப ஒப்படைத்தனர்?
1690ஆம் ஆண்டு | |
1693ஆம் ஆண்டு | |
1696ஆம் ஆண்டு | |
1699ஆம் ஆண்டு |
Question 36 Explanation:
(குறிப்பு - 1693ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் பாண்டிச்சேரியை பிரஞ்சுகாரர்களிடம் இருந்து கைப்பற்றினர். எனினும் அதே ஆண்டு பாண்டிச்சேரியை பிரஞ்சுக்காரர்களிடம் ஒப்படைத்தனர்)
Question 37 |
பிரெஞ்சுக்காரர்களின் தலைமை இடமாக இருந்தது எது?
மசூலிப்பட்டினம் | |
மாஹே | |
பாண்டிச்சேரி | |
புலிகாட் |
Question 37 Explanation:
(குறிப்பு - 1701ஆம் ஆண்டு பாண்டிச்சேரி பிரெஞ்சுக்காரர்களின் தலைமையிடமாக மாறியது)
Question 38 |
ஐரோப்பியர்களின் இந்திய தலைமையகங்ககளை பொருத்துக.
- ஆங்கிலேயர்கள் - a) பாண்டிச்சேரி
- டச்சுக்காரர்கள் - b) டிரங்குபார்
- பிரஞ்சுக்காரர்கள் - c) புலிகாட்
- டேனிஷ்காரர்கள் - d) கொச்சின்
I-d, II-c, III-a, IV-b | |
I-d, II-b, III-c, IV-a | |
I-a, II-b, III-d, IV-c | |
I-a, II-d, III-c, IV-b |
Question 38 Explanation:
(குறிப்பு - ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்கள், டேனிஷ்காரர்கள், பிரஞ்சுக்காரர்கள் ஆகியோர் இந்தியாவில் வெவ்வேறு இடங்களை தங்கள் தலைமையகமாக கொண்டு இருந்தனர்)
Question 39 |
இந்திய அரசு சிறப்பு பொருளாதார மண்டலங்களை (SPECIAL ECONOMIC ZONE) கீழ்க்காணும் எந்த இடங்களில் நிறுவியுள்ளது?
- தமிழ்நாடு
- கர்நாடகா
- ஆந்திரா
- கேரளா
I, II இல் மட்டும் | |
I, II, III இல் மட்டும் | |
I, II, IV இல் மட்டும் | |
I, II, III, IV ஆகிய நான்கிலும் |
Question 39 Explanation:
(குறிப்பு - இந்திய அரசு தென்னிந்தியாவில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் ஏற்படுத்தியது.)
Question 40 |
தமிழ்நாட்டில் காணப்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் சரியானது எது?
- நாங்குநேரி SEZ
- எண்ணூர் SEZ
- கோயம்புத்தூர் SEZ
- ஓசூர் SEZ
I, II மட்டும் சரி | |
I, II, III மட்டும் சரி | |
I, II, IV மட்டும் சரி | |
I, II, III, IV ஆகிய நான்கும் சரி |
Question 40 Explanation:
(குறிப்பு - தமிழ்நாட்டில் மேற்கண்ட நான்கு இடங்களிலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைந்துள்ளன. இந்தியாவில் மொத்தம் 56 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன)
Question 41 |
இந்தியாவின் 1991ஆம் ஆண்டு புதிய பொருளாதாரக் கொள்கைகளுள் சரியானது எது?
- சில தொழிற்சாலைகளை தவிர, தொழில் உரிமம் பெறுவதை நீக்கியது.
- பொதுத்துறை நிறுவனத்திற்காக ஒதுக்கப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
- இந்தியாவின் பொருட்களின் ஏற்றுமதி பரிமாற்றத்தில் நிலையான பணத்தின் மாற்று இடத்தை சரி செய்தது.
I, II மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 41 Explanation:
(குறிப்பு - 1991ஆம் ஆண்டின் இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கை கொள்கையின்படி பொதுத்துறை நிறுவனத்திற்காக ஒதுக்கப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது)
Question 42 |
1991ஆம் ஆண்டு இந்தியா சர்வதேச சந்தையில் தனது கடன் தரும்தகுதியை இறந்ததால்___________ 40 டன் தங்கத்தை அடமானம் வைத்தது.
உலக வங்கியில் | |
இங்கிலாந்து வங்கியில் | |
அமெரிக்க வங்கியில் | |
ஆசிய வங்கியில் |
Question 42 Explanation:
(குறிப்பு - 1990-91ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற வளைகுடாப் போரின் காரணமாக எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் மேற்கு ஆசியாவில் போர்க்குணம் ஆகியவற்றின் காரணமாக கடுமையான அயல்நாட்டு வாணிபம் செலுத்து சமநிலையின் சிக்கல்கள் தோன்றியது. )
Question 43 |
கீழ்காணும் பெரிய ஏற்றுமதி நாடுகளில் எந்த நாட்டின் ஏற்றுமதி நிறுவனம் இந்தியாவில் அதிக அளவில் உள்ளது?
இங்கிலாந்து | |
அமெரிக்கா | |
பிரான்ஸ் | |
ஜெர்மனி |
Question 43 Explanation:
(குறிப்பு - இந்தியாவில் நான்கு பெரிய ஏற்றுமதி நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு சொந்தமான பன்னாட்டு நிறுவனங்கள் பெரும்பான்மையாக உள்ளது. இவற்றில் மிகப் பெரியது அமெரிக்காவாகும்)
Question 44 |
இந்தியாவில் எத்தனை பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளன?
10 | |
11 | |
15 | |
17 |
Question 44 Explanation:
(குறிப்பு - இந்தியாவில் உள்ள 15 பெரிய பன்னாட்டு நிறுவனங்களில், 11 அமெரிக்காவை சேர்ந்ததாகும்)
Question 45 |
உலக பங்குகளில் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் நாடுகள் கொண்டிருந்த பங்கு சதவீதத்தை பொருத்துக.
- அமெரிக்கா - a) 4.4 சதவீதம்
- இங்கிலாந்து - b) 52 சதவீதம்
- பிரான்ஸ் - c) 14 சதவீதம்
- ஜெர்மனி - d) 5 சதவீதம்
I-b, II-c, III-d, IV-a | |
I-a, II-b, III-d, IV-c | |
I-b, II-d, III-a, IV-c | |
I-c, II-d, III-a, IV-b |
Question 45 Explanation:
(குறிப்பு -1971ஆம் ஆண்டில் உலக பங்குகளில், வெளிநாட்டு நேரடி முதலீட்டில் அமெரிக்கா இங்கிலாந்து பிரான்ஸ் ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகியவை முறையே முதல் 5 இடங்களை கொண்டிருந்தன. 1969ஆம் ஆண்டு அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் மட்டும் தோராயமாக 140 பில்லியன் டாலர் மதிப்புள்ள பண்டங்களை உற்பத்தி செய்தது)
Question 46 |
2018ஆம் ஆண்டின்படி இந்தியாவின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களுள் அல்லாதவை எது?
மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் | |
பெப்சி நிறுவனம் | |
சோனி கார்பரேஷன் | |
TVS நிறுவனம் |
Question 46 Explanation:
(குறிப்பு - 2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் ஆவன சோனி கார்ப்பரேஷன், டாட்டா குழுமம், மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன், ஐபிஎம், நெட்டில், சிட்டி குழுமம் போன்றவை ஆகும் )
Question 47 |
அன்னிய செலாவணி கட்டுப்பாட்டு சட்டம் எப்போது நடைமுறைக்கு வந்தது?
ஜனவரி 1, 1974ஆம் ஆண்டு | |
ஜனவரி 12, 1974ஆம் ஆண்டு | |
ஜனவரி 1, 1973ஆம் ஆண்டு | |
ஜனவரி 18, 1973ஆம் ஆண்டு |
Question 47 Explanation:
(குறிப்பு - அன்னிய செலாவணி கட்டுப்பாட்டு சட்டம் 1973ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, ஜனவரி 1, 1974ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டம் இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாட்டை நேரடியாக குறிப்பிடுகிறது)
Question 48 |
அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் பாராளுமன்றத்தால் எந்த ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது?
1999 | |
1998 | |
1997 | |
1996 |
Question 48 Explanation:
(குறிப்பு - அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் (Foreign Exchange Management Act) 1999ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கட்டுப்பாட்டுக்கு மாறாக நிர்வாகத்தை FEMA வின் கீழ் வலியுறுத்தியது)
Question 49 |
நிறுவனம் மற்றும் அதன் தலைமையக்கங்களை பொருத்துக
- பாரத் ஏர்டெல் - a) பெங்களுரு
- மைக்ரோ மேக்ஸ் இன்டர்மேட்டிக்ஸ் - b) குஜராத்
- அமுல் - c) கூர்கான்
- இன்போசிஸ் - d) புதுடில்லி
I-d, II-c, III-b, IV-a | |
I-a, II-b, III-d, IV-c | |
I-b, II-d, III-a, IV-c | |
I-c, II-d, III-a, IV-b |
Question 49 Explanation:
(குறிப்பு - பாரத் ஏர்டெல் என்பது தகவல் தொடர்பு நிறுவனம் ஆகும். அமுல் என்பது உணவுப்பொருள் நிறுவனம் ஆகும். இன்போசிஸ் என்பது மென்பொருள் நிறுவனம் ஆகும். மைக்ரோமேக்ஸ் என்பது மின்னணு பொருட்கள் நிறுவனம் ஆகும்)
Question 50 |
நிறுவனம் மற்றும் அதன் தலைமையக்கங்களை பொருத்துக
- பாரத் ஏர்டெல் - a) பெங்களுரு
- மைக்ரோ மேக்ஸ் இன்டர்மேட்டிக்ஸ் - b) குஜராத்
- அமுல் - c) கூர்கான்
- இன்போசிஸ் - d) புதுடில்லி
I-d, II-c, III-b, IV-a | |
I-a, II-b, III-d, IV-c | |
I-b, II-d, III-a, IV-c | |
I-c, II-d, III-a, IV-b |
Question 50 Explanation:
(குறிப்பு - பாரத் ஏர்டெல் என்பது தகவல் தொடர்பு நிறுவனம் ஆகும். அமுல் என்பது உணவுப்பொருள் நிறுவனம் ஆகும். இன்போசிஸ் என்பது மென்பொருள் நிறுவனம் ஆகும். மைக்ரோமேக்ஸ் என்பது மின்னணு பொருட்கள் நிறுவனம் ஆகும்)
Question 51 |
MNC யின் நன்மைகளுள் அல்லாதவை எது?
பன்னாட்டு நிறுவனங்கள் குறைந்த விலையில் பொருட்களை தரவும் மற்றும் பரிவர்த்தனை செலவு இல்லாமல் உற்பத்தி செய்கிறது. | |
பன்னாட்டு நிறுவனங்கள் விலைகளைக் உழைப்பதால் உலகளாவிய நுகர்வோரின் வாங்கும் சக்தி குறைகிறது. | |
பன்னாட்டு நிறுவனங்கள் வரி மாறுபாட்டை பயன்படுத்திக் கொள்ள முடியும். | |
பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூர் பொருளாதாரத்தில் வேலை வாய்ப்பினை ஊக்குவிக்கிறது |
Question 51 Explanation:
(குறிப்பு - பன்னாட்டு நிறுவனங்கள் விலைகளை குறைப்பதால் உலகளாவிய நுகர்வோரின் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது)
Question 52 |
பன்னாட்டு நிறுவனங்கள் பற்றிய கீழ்காணும் கூற்றுகளுள் சரியானது எது?
- கூற்று 1- பன்னாட்டு நிறுவனங்கள் முற்றுரிமையை வளர்ப்பதற்கான ஒரு வழியாகும்
- கூற்று 2 - பன்னாட்டு நிறுவனங்களினால் சுற்றுசூழலில் தீங்கினை உருவாக்க வாய்ப்பு உள்ளது.
- கூற்று 3 - பன்னாட்டு நிறுவனங்கள் ஒழுக்க நெறிமுறைகளை மீறுவதோடு தார்மீக சட்டங்களை அவர்கள் குற்றம் சாட்டி மூலதனத்துடன் தங்கள் வணிக செயல்பாட்டினை திருப்பிக் கொள்வதற்கும் முனைவர்.
கூற்று 1, 2 மட்டும் சரி | |
கூற்று 2, 3 மட்டும் சரி | |
கூற்று 1, 3 மட்டும் சரி | |
எல்லா கூற்றுகளும் சரி |
Question 52 Explanation:
(குறிப்பு - மேற்கண்ட கூற்றுகள் அனைத்தும் சரியானவை ஆகும். இவை அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களினால் உண்டாகும் தீமைகள் ஆகும்)
Question 53 |
நியாயமான வணிக நடைமுறைகளில் பயனாளிகள் யார்?
நுகர்வோர் | |
வர்த்தகர் அல்லது நிறுவனர்கள் | |
உற்பத்தியாளர்கள் | |
இவர்கள் அனைவரும் |
Question 53 Explanation:
(குறிப்பு - ஞாயமான வணிகம் என்பது விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு சிறந்த விலை சிறந்த வேலை வாய்ப்பு அளித்தல் மற்றும் வர்த்தகம் தொடர்பான விதிமுறைகளை அளிப்பதாகும்)
Question 54 |
நியாயமான வர்த்தக அமைப்பின் கோட்பாடுகளில் தவறானது எது?
பொருளாதார ரீதியில் பின்தங்கிய உற்பத்தியாளர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குதல். | |
குழந்தை தொழிலாளர் மற்றும் கட்டாய தொழிலாளர் என்பதை உறுதிப்படுத்துதல். | |
திறனை வளர்த்தல் மற்றும் நியாயமான அமைப்பினை ஏற்படுத்துதல் | |
நியாயமான வர்த்தக அல்லது நடைமுறைகள் மற்றும் நியாயமான விலையில் கொடுத்தல். |
Question 54 Explanation:
(குறிப்பு - குழந்தை தொழிலாளர் மற்றும் கட்டாய தொழிலாளர் இல்லை என்பதை உறுதிப் படுத்துவதே நியாயமான வர்த்தக அமைப்பின் கோட்பாடுகளில் ஒன்றாகும்)
Question 55 |
கீழ்க்கண்டவற்றுள் எது நியாயமான வர்த்தக உணவுப் பொருட்கள் ஆகும்?
- காப்பி மற்றும் தேநீர்
- கோக்கோ
- தேன்
- வாழைப்பழம்
I, II, III மட்டும் | |
I, II, IV மட்டும் | |
II, III, IV மட்டும் | |
I, II, III, IV அனைத்தும் |
Question 55 Explanation:
(குறிப்பு - காபி மற்றும் தேநீர், கோக்கோ, தேன் மற்றும் வாழைப்பழம் போன்றவை நியாயமான வர்த்தக உணவுப் பொருட்கள் ஆகும். கைவினைப் பொருட்கள் ஜவுளி மற்றும் பூக்கள் போன்றவை உணவு அல்லாத பொருட்கள் ஆகும்)
Question 56 |
GATT என்னும் ஒப்பந்தம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1945ஆம் ஆண்டு | |
1946ஆம் ஆண்டு | |
1947ஆம் ஆண்டு | |
1948ஆம் ஆண்டு |
Question 56 Explanation:
(குறிப்பு - GATT- General Agreement Of Trade and Tariff என்று அழைக்கப்படும் காட் ஒப்பந்தம் 1947ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1947ஆம் ஆண்டு 23 நாடுகள் இந்த ஒப்பந்தம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது)
Question 57 |
- காட் ஒப்பந்தம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- கூற்று 1 - 1947ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டபோது 25 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
- கூற்று 2 - காட் நிறுவன உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது.
- கூற்று 3 - ஏழாவது சுற்றி 99 நாடுகள் பங்கேற்றது. எட்டாவது சுற்றில் 117 நாடுகள் பங்கேற்றன.
கூற்று 1, 2 மட்டும் சரியானது | |
கூற்று 2, 3 மட்டும் சரியானது | |
கூற்று 1, 3 மட்டும் சரியானது | |
எல்லா கூற்றுகளும் சரியானது |
Question 57 Explanation:
(குறிப்பு - GATT ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் சுங்கவரி வாணிபம் குறித்த பொது உடன்பாட்டில் 1947 ஆம் ஆண்டு 23 நாடுகள் கையெழுத்திட்டன. காட் ஒப்பந்தத்தின் நிறுவனர்களில் இந்தியாவும் ஒன்றாகும்)
Question 58 |
காட்டின் இயக்குனர் ஜெனரல் ஆர்தர் டங்கல் கொண்டுவந்த இறுதி சட்ட அல்லது ஒப்பந்த வரைவு எவ்வாறு அழைக்கப்பட்டது?
காட் இறுதி ஒப்பந்த வரைவு | |
டங்கல் வரைவு | |
காட் வரைவு | |
இறுதி வரைவு |
Question 58 Explanation:
(குறிப்பு - காட்டின் இயக்குனராக இருந்தவர் ஜெனரல் ஆர்தர் டங்கல் ஆவார். இவர் கொண்டு வந்த இறுதி சட்ட அல்லது ஒப்பந்த வரைவு டங்கல் வரைவு என்று அழைக்கப்பட்டது)
Question 59 |
டங்கல் வரைவிற்கு எப்போது ஒப்புதல் அளிக்கப்பட்டது?
ஏப்ரல் 14, 1994 | |
ஏப்ரல் 15, 1995 | |
ஏப்ரல் 15, 1994 | |
ஏப்ரல் 14, 1995 |
Question 59 Explanation:
(குறிப்பு - காட்டின் முக்கிய நோக்கம் அர்த்தமுள்ள விதிமுறைகளை பின்பற்றி பலவிதமான கட்டணங்களையும், ஒதுக்கீடுகளையும், மானியங்களையும் குறைப்பதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தை அதிகரித்தல் ஆகும்)
Question 60 |
காட்டின் (GATT) சுற்றுகளை பொருத்துக
- முதலாவது - a) பிரான்ஸ்
- இரண்டாவது - b) இங்கிலாந்து
- மூன்றாவது - c) சுவிஸர்லாந்து
- ஏழாவது - d) ஜப்பான்
I-c, II-a, III-b, IV-d | |
I-a, II-b, III-d, IV-c | |
I-b, II-d, III-a, IV-c | |
I-c, II-d, III-a, IV-b |
Question 60 Explanation:
(குறிப்பு - நான்காவது ஐந்தாவது மற்றும் ஆறாவது காட்டின் (GATT) சுற்றுகள் ஜெனிவாவில் ( ஸ்விட்சர்லாந்து) நடைபெற்றது)
Question 61 |
காட்டின் (GATT) எந்த சுற்று இறுதி சுற்று என்று அழைக்கப்பட்டது?
7வது | |
8வது | |
9வது | |
10வது |
Question 61 Explanation:
(குறிப்பு - 1986 முதல் 1994 வரை உருகுவேயில் நடைபெற்ற 8வது மற்றும் இறுதி சுற்று பன்டாடெல் எஸ் டீ (உருகுவே). இதை உருகுவே சுற்று என்று அழைத்தனர்.
Question 62 |
உலக வர்த்தக அமைப்பு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
1992ஆம் ஆண்டு | |
1994ஆம் ஆண்டு | |
1996ஆம் ஆண்டு | |
1998ஆம் ஆண்டு |
Question 62 Explanation:
(குறிப்பு - 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலக வர்த்தக அமைப்பை ( WTO) அமைப்பதற்கு காட் உறுப்பு நாடுகள் உருகுவே சுற்றில் இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது)
Question 63 |
WTO உடன்படிக்கை எந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது?
ஜனவரி 1, 1995 | |
ஜனவரி 31, 1995 | |
ஜனவரி 15, 1996 | |
ஜனவரி 20, 1996 |
Question 63 Explanation:
(குறிப்பு - உலக வர்த்தக அமைப்பை அமல்படுத்திட உடன்படிக்கையை ஏற்று 104 உறுப்பினர் நாடுகளால் கையெழுத்திடப்பட்டது. பின்னர் ஜனவரி 1, 1995 ஆம் ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வந்தது)
Question 64 |
உலக வர்த்தக அமைப்பில் தற்போது உள்ள உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கை என்ன?
164 நாடுகள் | |
170 நாடுகள் | |
175 நாடுகள் | |
180 நாடுகள் |
Question 64 Explanation:
(குறிப்பு - உலக வர்த்தக அமைப்பு என்று அழைக்கப்படும் WORLD TRADE ORGANIZATION என்னும் அமைப்பில் தற்போது 164 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.)
Question 65 |
உலக வர்த்தக அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
சுவிட்சர்லாந்து | |
அமெரிக்கா | |
பிரான்ஸ் | |
ஜெர்மனி |
Question 65 Explanation:
(குறிப்பு - உலக வர்த்தக அமைப்பின் தலைமையகம் ஜெனிவாவில் ( சுவிட்சர்லாந்து) அமைந்துள்ளது. இதன் நோக்கம் வணிகத்தின் கட்டுப்படுத்துதல் மற்றும் அயல்நாட்டு வாணிபம் ஆகும்)
Question 66 |
G-7 கூட்டமைப்பின் உறுப்பினர் நாடு அல்லாதவை எது?
ஜப்பான் | |
ஜெர்மனி | |
இத்தாலி | |
பிரேசில் |
Question 66 Explanation:
(குறிப்பு - G-7 கூட்டமைப்பின் உறுப்பினர் நாடுகள் ஆவன, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐக்கிய அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் ஆகும்)
Question 67 |
உலக வர்த்தக அமைப்பின் குறிக்கோள்களுள் தவறானது எது?
அயல்நாட்டு வாணிபத்திற்காக விதிகள் அமைத்தல் மற்றும் செயல்படுத்துதல். | |
வர்த்தக தகராறுகளை கையாளுதல். | |
முழு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் பயனுள்ள தேவையை அதிகரித்தல். | |
உலக வர்த்தகத்தில் வளர்ந்த நாடுகளின் ஒரு சிறந்த வளர்ச்சிக்கு பாதுகாப்பாக இருத்தல். |
Question 67 Explanation:
(குறிப்பு - உலக வர்த்தக அமைப்பின் குறிக்கோள்கள் ஆவன, உலக வர்த்தகத்தில் வளர்ந்து வரும் நாடுகளில் ஒரு சிறந்த வளர்ச்சிக்கு பாதுகாப்பாக இருத்தல், முடிவெடுக்கும் செயல்களின் வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல், முழு வேலை வாய்ப்பை உறுதிப் படுத்துதல் மற்றும் பயனுள்ள தேவையை அதிகரித்தல் போன்றவை ஆகும்)
Question 68 |
உள்நாட்டு தொழில்களின் வளர்ச்சிக்காக தேவையான வசதிகளை வழங்குவதற்கு அந்நாட்டில் செய்யப்படும் வெளிநாட்டு முதலீடு சில நிபந்தனைகள் அல்லது கட்டுப்பாடுகளை அரசு விதிக்கும் என்பதை__________________ குறிக்கிறது என உருகுவே சுற்று உடன்படிக்கை கூறுகிறது.
வர்த்தக தொடர்புடைய முதலீட்டு நடவடிக்கைகள் | |
உள்நாட்டு தொழில் முதலீட்டு நடவடிக்கைகள் | |
ஏற்றுமதி இறக்குமதி தொடர்புடைய முதலீட்டு நடவடிக்கைகள் | |
இவை எதுவுமல்ல |
Question 68 Explanation:
(குறிப்பு - வர்த்தக தொடர்புடைய முதலீட்டு நடவடிக்கைகள்( Trade Related Investment Measures) என்பது உள்நாட்டு தொழில்களை வளர்ச்சிக்காக தேவையான வசதிகளை வழங்குவதற்கு அந்நாட்டில் செய்யப்படும் வெளிநாட்டு முதலீட்டிற்கு சில நிபந்தனைகள் அல்லது கட்டுப்பாடுகளை விதிப்பது ஆகும்)
Question 69 |
உலகமயமாக்களின் நேர்மறை தாக்கமாக கருதப்படுவது கீழ்கண்டவற்றுள் எது?
- உலகமயமாக்கல் ஒரு சிறந்த பொருளாதாரம் மூலதன சந்தையின் விரைவான வளர்ச்சியை அறிமுகப்படுத்துகிறது.
- உலகமயமாக்கலால் வாழ்க்கைத்தரம் அதிகரித்துள்ளது.
- அந்நிய செலாவணியை பெறுவதற்கான இயற்கை வளங்கள் மிக அதிகமாக விரைவாக சுரண்டப்படுகிறது.
I, II மட்டும் | |
II, III மட்டும் | |
I, III மட்டும் | |
இவை அனைத்தும் |
Question 69 Explanation:
(குறிப்பு - அந்நிய செலாவணியைபெறுவதற்காக இயற்கைவளங்கள் மிக அதிகமாக விரைவாக சுரண்டப்படுகிறது என்பது உலகமயமாக்கலின் எதிர்மறை தாக்கங்களில் ஒன்றாகும்)
Question 70 |
வெளிநாட்டு முதலீட்டு கொள்கை அறிவிக்கப்பட்ட ஆண்டு எது?
ஜூன்-ஜூலை 1991 | |
ஜூலை-ஆகஸ்ட் 1991 | |
ஆகஸ்ட்-செப்டம்பர் 1991 | |
செப்டம்பர்-அக்டோபர் 1991 |
Question 70 Explanation:
(குறிப்பு - ஜூலை - ஆகஸ்ட் 1991 ஆம் ஆண்டு கப்பட்ட தாராளமயம் ஆக்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டு கொள்கையினால் (FPI) வெளிநாட்டு ஒத்துழைப்புகள் அதிகரித்து வெளிநாட்டு நேரடி முதலீடும் (FDI) அதிகரித்துள்ளது.)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 70 questions to complete.