Online TestTnpsc Exam
பொது மற்றும் தனியார் துறைகள் Online Test 8th Social Science Lesson 23 Questions in Tamil
பொது மற்றும் தனியார் துறைகள் Online Test 8th Social Science Lesson 23 Questions in Tamil
Congratulations - you have completed பொது மற்றும் தனியார் துறைகள் Online Test 8th Social Science Lesson 23 Questions in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
இந்திய பொருளாதாரம் குறித்து கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
- இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது அடிப்படையில் ஒரு வேளாண்மை பொருளாதார நாடாக இருந்தது
- நாட்டில் அதிக அளவில் வறுமை, கல்வியறிவின்மை, வேலையின்மை நிலவியது.
- இந்தியாவில் கலப்பு பொருளாதாரம் முறையை பின்பற்றி தனியார் மற்றும் பொது நிறுவனங்களால் செயல்படுத்தப்பட்டு வருகிறது
I, II மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 1 Explanation:
(குறிப்பு - இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது பின்தங்கிய வளர்ச்சியில் இருந்தது. இந்திய பொருளாதாரமானது சமதர்ம அடிப்படையில் இருக்க வேண்டும் என்று இந்தியா கருதியதால், கலப்புப் பொருளாதார முறையை பின்பற்றி வருகிறது)
Question 2 |
கீழ்க்காணும் கூற்றுகளில் எது தவறானது?
- பொதுத்துறை ஒரு பொருளாதாரத்தின் முழு வளர்ச்சியை செயல்படுத்துகிறது.
- தனியார்துறை லாப நோக்கத்தில் செயல்படுகிறது.
- கலப்பு பொருளாதாரம் என்பது முதலாளித்துவம் மற்றும் பொதுவுடைமையின் கலவையாகும்
I, II மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 2 Explanation:
(குறிப்பு- பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது தொழில்கள் அரசாங்கத்தின் உரிமையின் கீழ் உள்ளன. தனியார்துறை தொழில்கள் தனியார் நபர்களின் உரிமையின் கீழ் உள்ளன. கலப்பு பொருளாதாரத்தில் இவை இரண்டும் கலந்து உள்ளன)
Question 3 |
ஆங்கிலேயர்கள் இந்தியாவில் நிறுவிய போர் தளவாட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை எத்தனை?
16 தொழிற்சாலைகள் | |
17 தொழிற்சாலைகள் | |
18 தொழிற்சாலைகள் | |
20 தொழிற்சாலைகள் |
Question 3 Explanation:
(குறிப்பு - இந்தியா 1947ம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பொழுது, இந்தியாவில் ஆங்கிலேயர்கள் நிறுவிய 18 போர் தளவாட தொழிற்சாலைகள் மட்டுமே இருந்தன.)
Question 4 |
பம்பாய் திட்டம் எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது?
1935ஆம் ஆண்டு | |
1940ஆம் ஆண்டு | |
1945ஆம் ஆண்டு | |
1950ஆம் ஆண்டு |
Question 4 Explanation:
(குறிப்பு - பம்பாய் திட்டம் 1940-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பொருளாதார வளர்ச்சிக்கும், பொருளாதார மேம்பாட்டிற்காகவும் இது அறிமுகம் செய்யப்பட்டது)
Question 5 |
பொருத்துக
- பம்பாய் திட்டம் - a) 1948
- முதல் தொழில் துறை கொள்கை - b) 1951
- முதல் திட்டக்குழு - c) 1950
- தொழில்துறை சட்டம் - d) 1940
I-d, II-a, III-c, IV-b | |
I-b, II-c, III-d, IV-a | |
I-a, II-d, III-c, IV-b | |
I-c, II-a, III-b, IV-d |
Question 5 Explanation:
(குறிப்பு - இந்த திட்டங்கள் அனைத்தும், பொருளாதார மேம்பாட்டிற்காக படிப்படியாக அறிமுகம் செய்யப்பட்டவை ஆகும்)
Question 6 |
கலப்புப் பொருளாதாரத்தை ஆதரித்த இந்திய பிரதமர் யார்?
ஜவஹர்லால் நேரு | |
இந்திரா காந்தி | |
இந்திரா காந்தி | |
மொராஜி தேசாய் |
Question 6 Explanation:
(குறிப்பு - பிரதமர் ஜவஹர்லால் நேரு இறக்குமதிக்கு மாற்று தொழில்மயமாக்கல் அடிப்படையில் ஒரு பொருளாதாரக் கொள்கையை ஊக்குவித்து கலப்புப் பொருளாதாரத்தை ஆதரித்தார்)
Question 7 |
இந்தியாவின் இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?
1955-1959 | |
1956-1960 | |
1954-1959 | |
1951-1955 |
Question 7 Explanation:
(குறிப்பு - இந்தியாவின் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் காலவரையறை 1956 முதல் 1960 வரை ஆகும். இது பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது)
Question 8 |
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார்?
ஜவகர்லால் நேரு | |
டாக்டர் வி கிருஷ்ணமூர்த்தி | |
எம்எஸ் சுவாமிநாதன் | |
ஜேஆர்டி டாட்டா |
Question 8 Explanation:
(குறிப்பு - நேருவின் தேசிய தொழில்மயமாக்கல் கொள்கையை பூர்த்திசெய்ய பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சியை வலியுறுத்தியது. அதை இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை என்று அழைக்கப்பட்ட டாக்டர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் முன்னெடுத்துச் சென்றார்)
Question 9 |
இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் வகைகள் எத்தனை?
இரண்டு | |
மூன்று | |
நான்கு | |
ஐந்து |
Question 9 Explanation:
(குறிப்பு - இந்தியாவில் இரண்டு வகையான பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. அரசாங்கம் வசூல் வரி, கட்டணங்கள் போன்றவற்றால் திரட்டும் வருவாய் மூலம் அரசாங்கம் அவர்களுக்கு முழுமையாக நிதி அளிக்கிறது.நிறுவனத்தின் மொத்த பங்கு மூலதனத்தில் அரசாங்கத்தின் பங்களிப்பு 51 சதவீதத்திற்கும் அதிகமாக கொண்டிருக்கும்.)
Question 10 |
அரசுத் துறையால் நிர்வாகம் செய்யப்படும் நிறுவனம் எது?
தபால் மற்றும் தந்தி | |
ரயில்வே | |
துறைமுக அறக்கட்டளை | |
இவை அனைத்தும் |
Question 10 Explanation:
(குறிப்பு - ஒரு அரசாங்கத் துறையில் நிர்வாகம் என்பது பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் பொதுவானதாகும். தபால் மற்றும் தந்தி, ரயில்வே, துறைமுக அறக்கட்டளை, இந்தியாவிலுள்ள நீர்ப்பாசனத் திட்டங்கள் போன்றவை எடுத்துக்காட்டுகளாகும்)
Question 11 |
ஒரு நிறுவன சட்டத்தால் நிர்வகிக்கப்பட்டு, அரசாங்கம் ஒரு பிரதான பங்குதாரராக இருந்து கட்டுப்படுத்தப்படுவது கீழ்க்கண்டவற்றுள் எது?
அரசுத்துறைகளால் நிர்வாகம் செய்யப்படும் நிறுவனங்கள். | |
கூட்டுத்துறை நிறுவனங்கள் | |
பொது கழகம் | |
இவை எதுவுமல்ல |
Question 11 Explanation:
(குறிப்பு - கூட்டுத் துறை நிறுவனங்கள் என்பன, ஒரு நிறுவன சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது, எனினும் அரசாங்கம் ஒரு பிரதான பங்குதாரராக இருந்து, அதனை கட்டுப்படுத்தும். தனியார் மற்றும் அரசாங்கம் இணைந்து நடத்தும் நிறுவனங்கள் இவை ஆகும்)
Question 12 |
கீழ்க்கண்டவற்றில் கூட்டுத் துறை நிறுவனங்கள் அல்லாதவை எது?
இந்தியன் ஆயில் பெட்ரோனாஸ் தனியார் நிறுவனம். | |
இந்தியன் ஆயில் ஸ்கை டேங்கிங் நிறுவனம் | |
ரத்னகிரி கேஸ் அண்ட் பவர் தனியார் நிறுவனம். | |
ஆயுள் காப்பீட்டு நிறுவனம் |
Question 12 Explanation:
(குறிப்பு - ஆயுள் காப்பீட்டு நிறுவனம் என்பது பொது கழக அமைப்பு ஆகும். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டத்தினால் பொது கழகம் நிறுவப்படுகிறது)
Question 13 |
கீழ்க்கண்டவற்றுள் பொது கழகம் அல்லாதது எது?
ஆயுள் காப்பீட்டு நிறுவனம்(LIC) | |
ஏர் இந்தியா | |
இந்திய ரிசர்வ் வங்கி | |
இந்தியன் செயற்கை ரப்பர் நிறுவனம் |
Question 13 Explanation:
(குறிப்பு - இந்தியன் செயற்கை இரப்பர் நிறுவனம் என்பது ஒரு கூட்டு துறை நிறுவனம் ஆகும். இது தனியார் நிறுவன சட்டத்தின் நிர்வகிக்கப்பட்டு, அரசு ஒரு பங்குதாரராக கொண்டுள்ளது)
Question 14 |
பொருத்துக
- ரயில்வே - a) அரசால் நிர்வாகம் செய்யப்படும் நிறுவனம்
- இந்தியன் செயற்கை ரப்பர் நிறுவனம் - b) தனியார் நிறுவனம்
- ஏர் இந்தியா - c) பொது கழகம்
- ரிலையன்ஸ் - d) கூட்டு துறை நிறுவனம்
I-a, II-d, III-c, IV-b | |
I-b, II-c, III-d, IV-a | |
I-a, II-d, III-c, IV-b | |
I-c, II-a, III-b, IV-d |
Question 14 Explanation:
(குறிப்பு - பொதுத்துறை நிறுவனங்கள் அரசுத் துறையால் நிர்வாகம் செய்யப்படும் நிறுவனம், கூட்டுத் துறை நிறுவனம், பொது கழகம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது)
Question 15 |
இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் உருவாக்கத்திற்கு கருவியாக செயல்பட்டவர் யார்?
பி.சி மஹலநோபிஸ் | |
ஜவஹர்லால் நேரு | |
கிருஷ்ணமூர்த்தி | |
இவர் யாருமல்ல |
Question 15 Explanation:
(குறிப்பு - இரண்டாம் ஐந்தாண்டு(1956 முதல் 1960 வரை) திட்டத்திற்கு கருவியாக செயல்பட்டவர் இந்திய புள்ளி விவர நிபுணர் பேராசிரியர் பி.சி. மஹலநோபிஸ் என்பவர் ஆவார். இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் பிற்காலத்தில் ப்ரீட்மேன் - மஹலநோபிஸ் மாடல் என்று அழைக்கப்பட்டது)
Question 16 |
நவீன வகை தொழில்துறை கொள்கை என்று எந்த ஆண்டு தொழில் துறை கொள்கை அழைக்கப்பட்டது?
1951ஆம் ஆண்டு தொழில் கொள்கை | |
1971ஆம் ஆண்டு தொழில் கொள்கை | |
1981ஆம் ஆண்டு தொழில் கொள்கை | |
1991ஆம் ஆண்டு தொழில் கொள்கை |
Question 16 Explanation:
(குறிப்பு - 1991ஆம் ஆண்டு தொழில் கொள்கையானது நவீன தொழில் கொள்கை என்று அழைக்கப்பட்டது. இது முந்தைய அனைத்து தொழில் கொள்கைகளிலும் இருந்தும் தீவிரமாக வேறுபட்டது)
Question 17 |
1991ஆம் ஆண்டு தொழில் கொள்கை பற்றி கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
- இது தனியார் துறைக்கு அதிக சுதந்திரத்தை அனுமதித்தது.
- இந்தியாவுக்கு வெளியே உள்ள வணிக நிறுவனங்களில் இருந்து அன்னிய நேரடி முதலீட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
- இந்த தொழில் கொள்கையின்படி, ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியப் பொருளாதாரத்தில் நுழைந்தது.
I, II மட்டும் சரி | |
I, II மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 17 Explanation:
(குறிப்பு - மேற்கண்ட காரணங்களால், 1991 ஆம் ஆண்டு தொழில் கொள்கை, நவீன தொழில் கொள்கை என்று அழைக்கப்பட்டது.)
Question 18 |
பொதுத்துறை நிறுவனங்களின் நோக்கங்களுள் தவறானது எது?
வளர்ச்சிக்கான நிதி ஆதாரங்களை உருவாக்குதல் | |
சமச்சீர் வட்டார வளர்ச்சியை ஊக்குவித்தல் | |
இறக்குமதி ஊக்குவிப்பு மற்றும் ஏற்றுமதி மாற்றீடை துரிதப்படுத்துதல். | |
சிறிய அளவிலான மற்றும் துணை தொழில்களின் வளர்ச்சியை ஊக்குவித்தல் |
Question 18 Explanation:
(குறிப்பு - பொதுத்துறை நிறுவனங்களின் நோக்கம் ஏற்றுமதி ஊக்குவிப்பு, மற்றும் இறக்குமதி மாற்றீடை துரிதப்படுத்துதல் ஆகும். இது ஏற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும்)
Question 19 |
இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் இந்திய அரசின்......................தீர்மானத்தின் வாயிலாக அதன் தோற்றத்தை கண்டன. இதன்படி அட்டவணை A, B, C என தொழில்கள் வகைப்படுத்தப்பட்டது.
1956 ஆம் ஆண்டு தொழில் கொள்கை | |
1973 ஆம் ஆண்டு தொழில் கொள்கை | |
1991 ஆம் ஆண்டு தொழில் கொள்கை | |
1991 ஆம் ஆண்டு தொழில் கொள்கை |
Question 19 Explanation:
(குறிப்பு - 1956ஆம் ஆண்டு தொழில் கொள்கை, அரசுக்கு உரிய தொழில்களை அட்டவணை-A எனவும், தனியார்துறை தொழில்களை அட்டவணை-B எனவும் மற்றும் பிற தொழில்களை அட்டவணை-C எனவும் குறிப்பிடுகிறது.)
Question 20 |
பொதுத் துறைகளில், முதன்மை பொதுப் பயன்பாடுகள் என அழைக்கப்படுபவைகளில் எது தவறானது?
கப்பல் போக்குவரத்து | |
ரயில்வே | |
ரயில்வே | |
இவை அனைத்தும் |
Question 20 Explanation:
(குறிப்பு - பொதுத்துறை நிறுவனங்கள் பொருளாதார மேம்பாட்டுக்கு அத்தியாவசிய உள்கட்டமைப்பை வழங்கவேண்டும்.இவைகள் முதன்மை பொதுப் பயன்பாடுகள் என அழைக்கப்படுகின்றன)
Question 21 |
பொதுத்துறை நிறுவனங்கள் 'கட்டளை பொருளாதாரத்தின் அதிகாரங்களை' தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அவையாவன கீழ்க்கண்டவற்றுள் எது?
நிலக்கரி சுரங்கங்கள் | |
பாதுகாப்பு | |
வங்கிகள் | |
இவை அனைத்தும் |
Question 21 Explanation:
(குறிப்பு - பொதுத்துறை நிறுவனங்கள் கட்டளை பொருளாதாரத்தின் அதிகாரங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.(Commanding Heights of the Economy)
Question 22 |
பொருத்துக
- ஜவுளி - a) நுகர்வோர் சார்ந்த பொதுத்துறை நிறுவனம்
- மெக்கான் நிறுவனம் - b) வர்த்தக கழகமான பொதுத்துறை நிறுவனம்
- Iமருந்து - c) ஆலோசனை சேவை வழங்கும் பொதுத்துறை நிறுவனம்
- இந்திய உணவு கழகம் - d) நலிவடைந்த தனியார் நிறுவனங்களை மீட்க அமைத்த பொதுத்துறை நிறுவனம்
I-d, II-c, III-a, IV-b | |
I-b, II-c, III-d, IV-a | |
I-a, II-d, III-c, IV-b | |
I-c, II-a, III-b, IV-d |
Question 22 Explanation:
(குறிப்பு - பொதுத் துறைகள், மேற்கண்ட வகைகளுடன் சேர்த்து ஒன்பது வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன)
Question 23 |
நுகர்வோர் சார்ந்த பொதுத்துறை நிறுவனம் அல்லாதவை எது?
மருந்து | |
காகிதம் | |
உணவகம் | |
பாதுகாப்பு |
Question 23 Explanation:
(குறிப்பு - பாதுகாப்பு என்பது நுகர்வோர் சார்ந்த பொதுத்துறை நிறுவனம் அல்ல)
Question 24 |
நிதி ஆயோக் எந்த ஆண்டு முதல் செயல்படத் துவங்கியது?
2014 | |
2015 | |
2016 | |
2017 |
Question 24 Explanation:
(குறிப்பு - நிதி ஆயோக் 2015 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து செயல்படத் தொடங்கியது)
Question 25 |
நிதி ஆயோக்கின் தலைவர் யார்?
இந்திய நிதித்துறை அமைச்சர் | |
ஆடிட்டர் ஜெனரல் ஆஃப் இந்தியா | |
இந்திய பிரதமர் | |
இந்திய ஜனாதிபதி |
Question 25 Explanation:
(குறிப்பு - நிதி ஆயோக்கின் தலைவர் இந்திய பிரதமர் ஆவார். தற்போதைய நிதி ஆயோக்கின் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்)
Question 26 |
நிதி ஆயோக் என்பது எந்த குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட குழு ஆகும்?
நிதிக்குழு | |
திட்டக்குழு | |
வரைவுக்குழு | |
இது எதுவும் அல்ல |
Question 26 Explanation:
(குறிப்பு - நிதி ஆயோக் என்பது திட்டக் குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட குழு ஆகும்.)
Question 27 |
சமூக பொருளாதார மேம்பாட்டை குறிக்கும் குறியீடுகள் அல்லாதவை எது?
மொத்த உள்நாட்டு உற்பத்தி | |
ஆயுட்காலம் | |
கல்வியறிவு | |
சாலை விபத்துகள் |
Question 27 Explanation:
(குறிப்பு - சமூக பொருளாதார மேம்பாடு என்பது ஒரு சமூகத்தில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் செயல்முறையாகும்.இதன் குறியீடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஆயுட்காலம், கல்வியறிவு மற்றும் வேலைவாய்ப்பின் அளவு போன்றவைகள் ஆகும்)
Question 28 |
சமூக பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் துணைபுரிவது கீழ்கண்டவற்றுள் எது?
மொத்த உள்நாட்டு உற்பத்தி | |
தேசிய கனிம வளம் | |
தேசிய மனித வளம் | |
தேசிய வருமானம் |
Question 28 Explanation:
(குறிப்பு - மொத்தம் உள்நாட்டு உற்பத்தியானது சமூக பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் துணைபுரிகிறது.(GDP). தொழில் துறையில் தனியார் மற்றும் பொதுத் துறையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதம் அதிகரித்துள்ளது)
Question 29 |
2018-2019ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் துறையின் பங்களிப்பு?
15.87% | |
29.73% | |
54.40% | |
33.60% |
Question 29 Explanation:
(குறிப்பு - 2018-19ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் துறையின் பங்களிப்பு 15.87 சதவீதம் ஆகும்.)
Question 30 |
ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு சேவை செய்வதற்காக, 2018-19 மத்திய வரவு செலவு திட்டத்தில்...................... திட்டத்தை அரசாங்கம் அறிவித்தது.
தேசிய சுகாதார உற்பத்தி | |
தேசிய சுகாதார வளர்ச்சி | |
தேசிய சுகாதார மேம்பாடு | |
இவை எதுவும் இல்லை |
Question 30 Explanation:
(குறிப்பு - 2018-19 ஆம் ஆண்டு மத்திய வரவு செலவு திட்டத்தில் தேசிய சுகாதார உற்பத்தி திட்டத்தை அரசாங்கம் அறிவித்தது)
Question 31 |
2011 ஆம் ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சராசரி ஆயுட்காலம் ஆண்களுக்கு__________மற்றும் பெண்களுக்கு___________ஆகும்.
68.33ஆண்டுகள், 65.80ஆண்டுகள் | |
68.33ஆண்டுகள், 65.80ஆண்டுகள் | |
67.33ஆண்டுகள், 65.80ஆண்டுகள் | |
65.33ஆண்டுகள், 67.80ஆண்டுகள் |
Question 31 Explanation:
(குறிப்பு - 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 65.80ஆண்டுகள் மற்றும் பெண்களின் சராசரி ஆயுட்காலம் 68.33ஆண்டுகள் ஆகும் )
Question 32 |
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் (SSA) முக்கிய நோக்கம் என்ன?
6 முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கு வாழ்க்கை தீர்வுகளுடன் கூடிய இலவச கட்டாயக் கல்வி. | |
6 முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி | |
6 முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கு இலவச தொழிற் கல்வி | |
இது எதுவும் அல்ல |
Question 32 Explanation:
(குறிப்பு - சமூக பொருளாதார வளர்ச்சிக்கு கல்வித்திறன் முக்கிய பங்கு வகிக்கிறது அனைவருக்கும் கல்வி இயக்கம் இந்திய அரசின் முதன்மை திட்டத்தின் அங்கமாகும். 6 முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கு வாழ்க்கைத் திறன்கள் உடன் கூடிய இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்குகிறது)
Question 33 |
சமூக பொருளாதார வளர்ச்சிக்கு, அரசாங்கம் அறிமுகம் செய்த கல்வி அறிவு சார்ந்த திட்டம் எது?
அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் | |
மின்னணு கற்றல் | |
இலவச கணினி திறன் வகுப்புகள் மற்றும் சூழல் நட்பு | |
இவை அனைத்தும் |
Question 33 Explanation:
(குறிப்பு - சமூக பொருளாதார வளர்ச்சிக்கு கல்வித்திறன் முக்கிய பங்கு வகிக்கிறது அனைவருக்கும் கல்வி இயக்கம் இந்திய அரசின் முதன்மை திட்டத்தின் அங்கமாகும். திறன் வகுப்பு மின்னணு கற்றல் இலவச கணினி திறன் வகுப்புகள் மற்றும் சூழல் நட்பு கற்பதற்கான இயற்கையான சூழல் வழங்குதல் போன்ற திட்டங்களும் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது)
Question 34 |
வேலை வாய்ப்பானது முதன்மை துறையிலிருந்து எந்தத் துறைக்கு மாறியுள்ளது?
- இரண்டாம் நிலைத் துறை
- மூன்றாம் நிலைத் துறை
- நான்காம் நிலைத்துறை
I, II மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
எல்லாம் சரி |
Question 34 Explanation:
(குறிப்பு - வேலை வாய்ப்பானது முதன்மை துறையிலிருந்து இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைக்கு மாறியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான மக்கள் வேலை தேடி நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர் இதனால் நகர்ப்புற மக்கள் தொகை அதிகரிக்கின்றது)
Question 35 |
2011 ஆம் ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களில் பணியமர்த்திய நபர்களின் எண்ணிக்கை....... ஆகும்.
100 லட்சம் | |
150 லட்சம் | |
200 லட்சம் | |
250 லட்சம் |
Question 35 Explanation:
(குறிப்பு - நாட்டில் வேலையின்மை பிரச்சனையை தீர்க்க பொதுத்துறை இலட்சக் கணக்கான வேலைகளை உருவாக்கியுள்ளது. 2011 ஆம் ஆண்டில் பணியமர்த்திய நபர்களின் எண்ணிக்கை 150 லட்சம் ஆகும்)
Question 36 |
இந்தியாவில் ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் அந்நிய செலவாணி வருவாய்க்கு வழிவகை செய்யும் பொது நிறுவனங்கள் எது?
- மாநில வர்த்தக நிறுவனம்
- தாதுக்கள் மற்றும் உலக வர்த்தக நிறுவனம்
- ஹிந்துஸ்தான் எக்கு நிறுவனம்
- பாரத மின்னணு நிறுவனம்
I, II, III மட்டும் | |
II, III, IV மட்டும் | |
I, III, IV மட்டும் | |
I, III, IV மட்டும் |
Question 36 Explanation:
(குறிப்பு - மேற்கண்ட அனைத்து நிறுவனங்களும், ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் அந்நிய செலாவணி வருவாய் ஆகியவற்றில் இந்தியா மேம்படுவதற்கு அதிக பங்களிப்புகளை வழங்கியுள்ளது)
Question 37 |
பொதுத்துறை ஆனது நலிவடைந்த தொழில்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு அளிக்கிறது?
- நலிவடைந்த பிரிவு தொழில்கள் மூடப்படுவதை தடுத்தல்
- நலிவடைந்த பிரிவினர் தொழிலை ஏற்றுக்கொள்ளுதல்.
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 37 Explanation:
(குறிப்பு - நலிவடைந்த தொழில்களுக்கு பாதுகாப்பு வழங்குவது, நலிவடைந்த தொழில் செய்வோரை பாதுகாப்பது மூலதனம் நிலம் கட்டடம் இயந்திரங்கள் போன்றவற்றை தேவையற்ற முறையில் மூடுவதை பொதுத்துறை தடுக்கிறது)
Question 38 |
கீழ்க்கண்ட நிறுவனங்களுள் எந்த பொதுத்துறை நிறுவனம் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்வதற்காகவும், அந்நிய செலாவணியை செய்வதற்காகவும் தொடங்கப்பட்டது அல்ல?
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையம் | |
பாரத மின்னணு நிறுவனம் | |
இந்திய எண்ணெய் நிறுவனம் | |
நெய்வேலி நிலக்கரி நிறுவனம் |
Question 38 Explanation:
(குறிப்பு - எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையம் (ONGC), இந்திய எண்ணெய் நிறுவனம் மற்றும் பாரத மின்னணு நிறுவனம் போன்றவை இறக்குமதி மாற்றீடு மூலம் அந்நியச் செலாவணியை சேமித்து உள்ளன)
Question 39 |
இந்தியாவில் அதிக அளவில் பணியாளர்களைக் கொண்ட பொதுத்துறை நிறுவனம் எது?
இந்திய ரயில்வே நிறுவனம் | |
இந்திய நிலக்கரி நிறுவனம் | |
இந்திய நிலக்கரி நிறுவனம் | |
இந்திய நிலக்கரி நிறுவனம் |
Question 39 Explanation:
(குறிப்பு - இந்தியாவில் அதிக அளவில் பணியாளர்களைக் கொண்ட பொதுத்துறை நிறுவனம் இந்திய ரயில்வே துறை ஆகும்)
Question 40 |
தனியார் துறை குறித்து கீழ்காணும் கூற்றுகளுள் தவறானது எது?
இது முற்றிலும் லாப நோக்கம் உடையது | |
இது சமூக ரீதியாக பின்தங்கிய வர்க்க மக்களை பொருட்படுத்தாது, மற்றும் இட ஒதிக்கீடு பின்பற்றப்படுவதில்லை. | |
SAIL, TVS போன்றவை தனியார்துறை நிறுவனம் ஆகும். | |
இங்கு வரி ஏய்ப்பு உண்டு |
Question 40 Explanation:
(குறிப்பு - SAIL என்பது பொதுத்துறை நிறுவனம் ஆகும்)
Question 41 |
பொதுத்துறை நிறுவனங்கள் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில் தவறானது எது?
இங்கு தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படுகிறது | |
வரி ஏய்ப்பு இங்கு நடப்பது இல்லை | |
தொழில்களின் உரிமையானது அரசாங்கத்திடம் உள்ளது. | |
சமூக ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை, மற்றும் இட ஒதுக்கீடுகள் இதில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. |
Question 41 Explanation:
(குறிப்பு - பொதுத்துறை நிறுவனங்களில், சமூக ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் பொதுத்துறை நிறுவனங்களில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுகிறது)
Question 42 |
பொருத்துக
- மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் - a) 16
- மகாரத்னா தொழில்கள் - b) 300
- III. நவரத்னா தொழில்கள் c) 8
- மினிரத்னா தொழில்கள் - d) 74
I-b, II-c, III-a, IV-d | |
I-b, II-c, III-d, IV-a | |
I-a, II-d, III-c, IV-b | |
I-c, II-a, III-b, IV-d |
Question 42 Explanation:
I-c, II-a, III-b, IV-d
Question 43 |
மகாரத்னா தொழில்கள் குறித்த தவறான கூற்று எது?
- ஆண்டு நிகர லாபம் ரூபாய் 2500 கோடி உள்ளவை
- ஆண்டு நிகர மதிப்பு 3 ஆண்டுகளுக்கு 10,000 கோடி உள்ளவை
- சராசரி ஆண்டு வருவாய் மூன்று ஆண்டுகளுக்கு ரூபாய் 10, 000 கோடி உள்ளவை
I மட்டும் தவறு | |
II மட்டும் தவறு | |
III மட்டும் தவறு | |
எல்லாமே தவறு |
Question 43 Explanation:
(குறிப்பு - மகாரத்னா தொழில்கள் என்பன, சராசரி ஆண்டு வருவாய் மூன்று ஆண்டுகளுக்கு ரூபாய் 20,000 கோடி உள்ளவை ஆகும்.)
Question 44 |
கீழ்க்கண்ட வகைகளில் எது மகாரத்னா தொழில்கள் அல்லாதவை?
தேசிய அனல் மின் கழகம் (NTPC) | |
இந்திய எண்ணெய் நிறுவனம் (IOCL) | |
இந்திய நிலக்கரி நிறுவனம் (CIL) | |
பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) |
Question 44 Explanation:
(குறிப்பு - பாரதம் மிகு மின் நிறுவனம் என்பன நவரத்தினா தொழில் ஆகும். இது மகாரத்னா தொழில் சார்ந்தவை அல்ல)
Question 45 |
ஒரு நபர் அதனால் நிறுவனத்தின் சுதந்திரமான இயக்குனர்களின் எண்ணிக்கை அளவு என்ன?
ஐந்து | |
நான்கு | |
மூன்று | |
இது எதுவும் அல்ல |
Question 45 Explanation:
(குறிப்பு - நவரத்தினா நிறுவனத்தின் சுதந்திர இயக்குனர்களின் எண்ணிக்கை அளவானது
நான்கு ஆகும்)
Question 46 |
கீழ்க்கண்டவற்றுள் நவரத்னா தொழில்கள் அல்லாதவை எது?
இந்திய கொள்கலன் நிறுவனம் (CONCOR) | |
இந்திய பொறியாளர்கள் நிறுவனம் (EIL) | |
இந்துஸ்தான் இந்தியா நிறுவனம் (HIL) | |
பாரத பெட்ரோலியம் நிறுவனம் (HPCL) |
Question 46 Explanation:
(குறிப்பு - பாரத பெட்ரோலிய நிறுவனம் என்பது மகாரத்னா தொழில் சார்ந்தவை ஆகும்.)
Question 47 |
கீழ்காணும் கூற்றுகளுள் எது சரியானது?
- மூன்றில் ஒரு வருட நிகர லாபம் ரூபாய் 30 கோடி அல்லது அதற்கு மேல் அல்லது தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் லாபம் ஈட்டிய தொழிற்சாலைகள் மினிரத்னா தொழில்கள்-1 என்று அழைக்கப்படும்.
- மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக லாபம் ஈட்டியுள்ள மற்றும் நேர்மறையான நிகர மதிப்பு கொண்ட தொழிற்சாலைகள் மினிரத்னா தொழில்கள்-2 என்று அழைக்கப்படும்.
- சென்னை பெட்ரோலிய நிறுவனம் (CPCL) என்பது மினிரத்னா தொழில்-2 வகையை சார்ந்தது ஆகும்.
I, II மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 47 Explanation:
(குறிப்பு - சென்னை பெட்ரோலிய நிறுவனம் என்பது, மினிரத்னா தொழில்கள்-1 வகையைச் சார்ந்தது ஆகும்)
Question 48 |
பொருத்துக
- மகாரத்னா தொழில் a) நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NICIL)
- நவரத்னா தொழில் - b) கனிம ஆய்வு நிறுவனம்
- மினி ரத்னா தொழில்-1 c) பாரத பெட்ரோலியம் நிறுவனம் (BPCL)
- மினி ரத்னா தொழில்-2 - d) பாரத சஞ்சார் நிகாம் நிறுவனம் (BSNL)
I-c, II-a, III-d, IV-b | |
I-b, II-c, III-d, IV-a | |
I-a, II-d, III-c, IV-b | |
I-c, II-a, III-b, IV-d |
Question 48 Explanation:
(குறிப்பு - பொதுத்துறை நிறுவனங்கள் மகாரத்னா தொழில்கள், மினி ரத்னா தொழில்கள் -1, 2 மற்றும் நவரத்னா தொழில்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு கிட்டத்தட்ட 300 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன)
Question 49 |
எந்த முகலாய பேரரசர் நவரத்தின அமைச்சர்களை தனது அரசவையில் கொண்டிருந்தார்?
அக்பர் | |
அவுரங்கசீப் | |
ஹுமாயுன் | |
ஷாஜகான் |
Question 49 Explanation:
(குறிப்பு - பேரரசர் விக்ரமாதித்தியன் மற்றும் முகலாய பேரரசர் அக்பர் ஆகியோரின் அவையில் நவரத்தின அமைச்சர்கள் எனப்படும் ஒன்பது அமைச்சர்களைக் கொண்ட கொண்ட அமைச்சரவை இருந்தது)
Question 50 |
கீழ்கண்ட வகைகளில் தனியார் நிறுவனம் அல்லாதவை எது?
இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் | |
ஐசிஐசிஐ வங்கி நிறுவனம் | |
MECON நிறுவனம் | |
ஆதித்யா பிர்லா நிறுவனம் |
Question 50 Explanation:
(குறிப்பு - MECON நிறுவனம் என்பது மினி ரத்னா தொழில் சார்ந்த பொதுத்துறை நிறுவனம் ஆகும் )
Question 51 |
கீழ்க்கண்டவகைகளில் எது முற்றிலும் தனியார் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளவை?
- கால்நடை வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பு
- வேளாண்மை
- பால் வளர்ப்பு
I, II மட்டும் | |
II, III மட்டும் | |
I, III மட்டும் | |
எல்லாமே |
Question 51 Explanation:
(குறிப்பு - இந்தியாவில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் துறையான வேளாண்மை மற்றும் பால் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்ற தொழில்கள் முற்றிலும் தனியார் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன)
Question 52 |
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- மின்னணு மற்றும் மின்சார பொருட்கள் வாகனங்கள் ஜவுளி ரசாயனங்கள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தனியார் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
- வேளாண்மைத் துறையை நிர்வகிப்பதில் உம் அதன்மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு முழு உணவு விநியோகத்தையும் வழங்குவதில் தனியார் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
- அணுசக்தி, மின்துறை, நீர்வளம் போன்றவை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
I, II மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 52 Explanation:
(குறிப்பு - மின்னணு மற்றும் மின்சார பொருட்கள், வாகனங்கள், ஜவுளி, ரசாயனங்கள், உணவு பொருட்கள், ஒளி பொறியியல் பொருட்கள் போன்ற நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தனியார் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.)
Question 53 |
உயர் தொழில்நுட்ப தொழில்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக இருக்கும் பொதுத்துறை நிறுவனம் எது?.
அணுசக்தி | |
ரயில்வே | |
பாதுகாப்பு உற்பத்தி | |
ரோலிங் ஸ்டாக் |
Question 53 Explanation:
(குறிப்பு - உயர் தொழில்நுட்ப தொழில்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டு அணுசக்தி ஆகும் )
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 53 questions to complete.