Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTnpsc Exam

பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் Online Test 8th Social Science Lesson 10 Questions in Tamil

பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் Online Test 8th Social Science Lesson 10 Questions in Tamil

Congratulations - you have completed பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் Online Test 8th Social Science Lesson 10 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
"பொது ஏற்புத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு பண்டங்கள் வாங்கும்போது அதற்கான செலுத்துத் தொகையாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய எதனையும் பணம் என்று கூறலாம்" என்று கூறியவர்
A
மிடாஸ்
B
இராபர்ட்சன்
C
அமர்த்தியாசென்
D
அப்துல்கலாம்
Question 1 Explanation: 
(குறிப்பு: பணம் ஒரு அடிப்படை கண்டுபிடிப்பு. அன்றாட பரிவர்த்தனைகளுக்கு இது எளிதானது.)
Question 2
பணம் என்ற வார்த்தை __________ வார்த்தையான "மொனேட்டா ஜுனோ" விலிருந்து பெறப்பட்டது.
A
கிரேக்கம்
B
பிரெஞ்சு
C
ரோம்
D
சமஸ்கிருதம்
Question 2 Explanation: 
(குறிப்பு: மொனேட்டா ஜுனோ என்பது ரோமின் பெண் கடவுள் மற்றும் ரோம் பேரரசின் குடியரசு பணமாகும்.)
Question 3
இந்தியாவின் "ரூபாய்" என்ற சொல் _________ வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
A
இலத்தீன்
B
கிரேக்கம்
C
சமஸ்கிருதம்
D
பிரெஞ்சு
Question 3 Explanation: 
(குறிப்பு: 'ரூபியா’ என்றால் வெள்ளி நாணயம் என்று பொருள்.)
Question 4
"கற்றல் படைப்பாற்றலை ஏற்படுத்தும், படைப்பாற்றல் சிந்தனையைத் தூண்டும், சிந்தனை அறிவாற்றலை அளிக்கும், அறிவாற்றல் உங்களை சிறந்தவராக்கும்" என்பது யாருடைய கூற்று
A
ஜவஹர்லால் நேரு
B
மகாத்மா காந்தி
C
அப்துல்கலாம்
D
அம்பேத்கர்
Question 5
கீழ்க்கண்டவற்றுள் பண்டமாற்று முறையின் குறைபாடுகள் எவை?
  1. இருமுகத் தேவை பொருத்தமின்மை
  2. பொதுவான மதிப்பின் அளவுகோல்
  3. பொருட்களின் பாகுபடாமை
  4. செல்வத்தை சேமிப்பதற்கான சிரமங்கள்
A
அனைத்தும்
B
2, 3, 4
C
1, 3, 4
D
1, 2, 4
Question 5 Explanation: 
(குறிப்பு: பண்டைய காலத்தில் பணம் பயன்படுத்தப்படாமல் பண்டத்திற்கு பண்டம் பரிமாற்றம் நடைபெற்றதை பண்டமாற்று முறை என்றனர்.)
Question 6
இந்தியாவில் _________ நூற்றாண்டில் முதன் முறையாக பூரணாஸ், கர்ஷணம், பனாஸ் போன்ற நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன.
A
கி.பி. 5
B
கி.பி. 6
C
கி.பி. 7
D
கி.பி. 8
Question 6 Explanation: 
(குறிப்பு: மஹாஜனபதங்கள் ஆட்சியில் பூரணாஸ், கர்ஷ பணம், பனாஸ் போன்ற நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன.)
Question 7
தங்கம், வெள்ளி, தாமிரம் அல்லது ஈயம் போன்ற நாணயங்கள___________ துளையிட்டு வெளியிட்டனர்.
A
குஷாணர்கள்
B
மராத்தியர்கள்
C
மெளரியர்கள்
D
முகலாயர்கள்
Question 7 Explanation: 
(குறிப்பு: இந்திய கிரேக்க குஷாண அரசர்கள் கிரேக்க மரபுப்படி சித்திரங்கள் பொறிக்கப்பட்ட நாணயங்களை அறிமுகப்படுத்தினர்.)
Question 8
_________ ஆம் நூற்றாண்டில் டெல்லி துருக்கி சுல்தான்கள் தங்கள் நாணயங்களில் இந்திய அரசர்களின் உருவத்தை நீக்கி இஸ்லாமிய எழுத்துக்களை பொறித்து வெளியிட்டனர்.
A
10
B
11
C
12
D
13
Question 8 Explanation: 
(குறிப்பு: உலக நாணயங்கள் வெளியீட்டார்களில் சீனா மற்றும் மத்திய கிழக்கு லிடியாவுடன் பண்டைய இந்தியாவும் உள்ளன.)
Question 9
செர்ஷா சூரி, __________ கிராம் எடையுள்ள வெள்ளி நாணயத்தை வெளியிட்டார்.
A
128 கிராம்
B
134 கிராம்
C
156 கிராம்
D
178 கிராம்
Question 9 Explanation: 
(குறிப்பு: செர்ஷா சூரி, ஹுமாயூனை தோற்கடித்து ஆட்சியில் இருந்தபோது இந்நாணயத்தை வெளியிட்டார். இது "ரூபியா" என அழைக்கப்பட்டது.)
Question 10
முகலாய காலம் முழுவதும் _________நாணயம் பயன்பாட்டில் இருந்தது.
A
தங்கம்
B
வெள்ளி
C
தாமிரம்
D
செம்பு
Question 10 Explanation: 
(குறிப்பு: ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி 1600 ஆம் ஆண்டில் முகலாய நாணயத்தை பிரபலப்படுத்தியது.)
Question 11
____________ ஆண்டு முகலாய பேரரசர் பாருக்க்ஷாயர், ஆங்கிலேயர்களுக்கு முகலாய பண நாணயத்தை அச்சடிக்க அனுமதி அளித்தார்.
A
1600
B
1628
C
1707
D
1717
Question 11 Explanation: 
(குறிப்பு: முகலாய பண நாணயம் பம்பாய் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டது.)
Question 12
சரியான இணையைத் தேர்ந்தெடு.
  1. தங்க நாணயங்கள் – ஏஞ்ஜேலினா
  2. வெள்ளி நாணயங்கள் – கரோலினா
  3. செம்பு நாணயங்கள் – கப்ரூன்
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
3 மட்டும் சரி
Question 12 Explanation: 
(குறிப்பு: தங்க நாணயங்கள் – கரோலினா, வெள்ளி நாணயங்கள் – ஏஞ்ஜேலினா.)
Question 13
உரோமம், தோல், உப்பு, அரிசி, கோதுமை, பாத்திரங்கள், ஆயுதங்கள் போன்றவை ____________.
A
உலோக பணம்
B
பண்டப் பணம்
C
நிகர் பணம்
D
கடன் பணம்
Question 13 Explanation: 
(குறிப்பு: மேற்கண்ட பண்டங்களைக் கொடுத்து பண்டங்களை வாங்குதலை “பண்டமாற்று முறை" என அழைத்தனர்.)
Question 14
மனித நாகரிகத்தின் முன்னேற்றத்தில் பண்ட பணம் ____________ ஆக மாறியது.
A
காகித பணம்
B
உலோக பணம்
C
கடன் பணம்
D
நிகர் பணம்
Question 14 Explanation: 
(குறிப்பு: தங்கம், வெள்ளி, தாமிரம் போன்ற உலோகங்கள் எளிமையாக கையாளப்பட்டதால் அவற்றின் அளவு எளிதாக அறிந்து கொள்ளப்பட்டது.)
Question 15
  • கூற்று: காகித பணம் கண்டுபிடிப்பு பணத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய நிலையாக கருதப்பட்டது.
  • காரணம்: தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது சிரமாகவும், ஆபத்தானதாகவும் இருந்தது.
A
கூற்று சரி, காரணம் தவறு
B
கூற்று தவறு, காரணம் சரி
C
கூற்று, காரணம் இரண்டும் தவறு
D
கூற்று, காரணம் இரண்டும் சரி
Question 15 Explanation: 
(குறிப்பு: பொற்கொல்லர்களின் 'இரசீது’ பணத்தின் பதிலியாகவும் மேலும் காகித பணமாகவும் மாறியது.)
Question 16
  • கூற்று 1: காசோலை என்பது பணத்தை குறிப்பதாகும்.
  • கூற்று 2: காசோலை பணத்தின் பணிகளை மேற்கொள்ளும்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 16 Explanation: 
(குறிப்பு: காசோலை என்பது பணத்தைக் குறிப்பதல்ல. காகித பணமும், கடன் பணமும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வளர்ந்தது.)
Question 17
  • கூற்று 1: மக்கள் தங்கள் பணத்தின் ஒரு பகுதியை வங்கியில் வைப்பு தொகையாக வைத்து அந்த தொகையை வசதியாக காசோலை மூலம் திரும்ப பெறலாம்.
  • கூற்று 2: உண்டியல், கருவூலக பட்டியல், பத்திரம், கடன் பத்திரங்கள், சேமிப்பு பத்திரங்கள் ஆகியவற்றின் பயன்பாடுகள் பண பரிணாம வளர்ச்சியின் இறுதி நிலையாகும்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 17 Explanation: 
(குறிப்பு: உண்டியல், கருவூலக பட்டியல், பத்திரம், கடன் பத்திரங்கள், சேமிப்பு பத்திரங்கள் ஆகியவை நிகர் பணத்தில் அடங்கும்.)
Question 18
நெகிழிப் பணம் குறித்தக் கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.
  1. கடன் அட்டைகள் மற்றும் பற்று அட்டைகள் சமீபத்திய நெகிழிப் பணமாகும்.
  2. பணமில்லா பரிவர்த்தனை இதன் நோக்கமாகும்.
  3. வங்கியில் கணினி அமைப்புகளில் உள்ள மின்னனு முறையின் மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவது நெகிழிப் பணத்தில் அடங்கும்.
A
அனைத்தும் சரி
B
2, 3 சரி
C
1, 2 சரி
D
1, 3 சரி
Question 18 Explanation: 
(குறிப்பு: வங்கியில் கணினி அமைப்புகளில் உள்ள மின்னனு முறையின் மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவது மின்னனு பணத்தில் அடங்கும்.)
Question 19
___________ என்பது வாடிக்கையாளர் அல்லது பிற நிதி நிறுவனங்கள் வலைதளத்தின் மூலம் ஒரு பரந்த நிதிப் பரிவர்த்தனைகளை நடத்தும் ஒரு மின்னனு முறையாகும்.
A
மின் வங்கி
B
நிகழ்நிலை வங்கி
C
மின்னனு பணம்
D
நெகிழி வங்கி
Question 20
  • கூற்று 1: மின்னணு வங்கியை தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் என்றும் அழைக்கலாம்.
  • கூற்று 2: காசோலை அல்லது ரொக்கத்தை விட ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு நிதியை மாற்றுவதற்கு மின்னணு வழிமுறை பயன்படுகிறது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 20 Explanation: 
(குறிப்பு: தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் என்பதன் சுருக்கிய வடிவம் NEFT ஆகும்.)
Question 21
__________ என்பது பணத்தால் ஒரு நாட்டிலுள்ள பண்ட மற்றும் பணிகளை வாங்கும் சக்தியை குறிக்கும்.
A
நாட்டின் இறக்குமதி
B
நாட்டின் ஏற்றுமதி
C
பணத்தின் மதிப்பு
D
பண்டத்தின் மதிப்பு
Question 21 Explanation: 
(குறிப்பு: பணத்தின் மதிப்பு பண்ட பணிகளின் விலை அளவை சார்ந்திருக்கும்.)
Question 22
பணத்தின் மதிப்பிற்கும் விலையின் அளவிற்கும் இடையே உள்ள தொடர்பு
A
நேர்மறை
B
எதிர்மறை
C
சமம்
D
தொடர்பு இல்லை
Question 23
பணத்தின் மதிப்பு எத்தனை வகைப்படும்?
A
2
B
3
C
4
D
5
Question 23 Explanation: 
(குறிப்பு: பணத்தின் அக மதிப்பு பணத்தின் புற மதிப்பு)
Question 24
_________ என்பது உள்நாட்டிலுள்ள பண்ட மற்றும் பணிகளின் வாங்கும் சக்தியை குறிக்கும்.
A
இறக்குமதி அளவு
B
பணத்தின் அகமதிப்பு
C
பணத்தின் புறமதிப்பு
D
ஏற்றுமதி அளவு
Question 25
_________ என்பது வெளிநாட்டிலுள்ள பண்ட மற்றும் பணிகளின் வாங்கும் சக்தியை குறிக்கும்.
A
இறக்குமதி அளவு
B
பணத்தின் அகமதிப்பு
C
பணத்தின் புறமதிப்பு
D
ஏற்றுமதி அளவு
Question 26
இந்திய ரூபாய் குறியீடு (₹) எப்போது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது?
A
15 ஜூலை 2010
B
15 ஜூன் 2009
C
15 ஆகஸ்ட் 2009
D
15 ஆகஸ்ட் 2010
Question 26 Explanation: 
(குறிப்பு: இந்திய ரூபாய் குறியீடு தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த திரு. உதயகுமார் என்பவரால் அங்கீகரிக்கப்பட்டது.)
Question 27
"பணம் அதன் பணிகளால் வரையறுக்கப்படுகிறது. எதுவெல்லாம் பணமாக கருதப்படுகிறதோ அவை பணமாக பயன்படுத்தப்படுகிறது."
  • என்பது யாருடைய கூற்று
A
ஸ்டோவ்ஸ்கி
B
சர்ஜான் ஹிக்ஸ்
C
வாக்கர்
D
இராபர்ட்சன்
Question 27 Explanation: 
(குறிப்பு: ஸ்டோவ்ஸ்கியின் கருத்து படி “பணம்" என்பது ஒரு கடினமான கருத்தாகும். ஏனெனில் அது வேறுபட்ட துறைகளில் ஒன்றல்ல, மூன்று பணிகளை குறிப்பிடுகிறது. அவை ஒவ்வொன்றும் கணக்கீட்டின் அலகு, மதிப்பின் அளவுகோல், மற்றும் மதிப்பின் நிலைகலன்களை குறிக்கிறது.)
Question 28
"எதையெல்லாம் செய்யவல்லதோ, அதுவே பணம்" என்பது யாருடைய கூற்று?
A
ஸ்டோவ்ஸ்கி
B
சர்ஜான் ஹிக்ஸ்
C
வாக்கர்
D
இராபர்ட்சன்
Question 28 Explanation: 
(குறிப்பு: சில வல்லுநர்கள், “பணமாக பிரகடனம் செய்யப்படும் எவையும் பணமாகும்" என்று பணத்தை சட்டப்பூர்வமான சொற்களால் வரையறுத்துள்ளனர்.)
Question 29
கீழ்க்கண்டவற்றுள் பணத்தின் முதன்மை அல்லது முக்கிய பணிகள் எவை?
  1. பரிமாற்ற கருவி அல்லது பண செலுத்துகை
  2. மதிப்பின் அளவுகோல்
  3. எதிர்கால செலுத்துகைக்கான நிலை மதிப்பு
  4. மதிப்பின் நிலைகலன் அல்லது வாங்கும் சக்தியின் நிலைகலன்
  5. மாற்று மதிப்பு அல்லது மாற்று வாங்கும் சக்தி
A
1, 2
B
1, 2, 3
C
2, 3
D
3, 4, 5
Question 29 Explanation: 
(குறிப்பு: பரிமாற்ற கருவி பணம், பண்ட மற்றும் பணிகளை வாங்க பயன்படுத்தப்படுகிறது. மதிப்பின் அளவுகோல் அனைத்து மதிப்பையும் பணத்தால் அளவிடலாம். பலவகையான பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு இடையில் பரிமாற்ற விகிதத்தை தீர்மானிப்பது எளிது.)
Question 30
கீழ்க்கண்டவற்றுள் பணத்தின் முதன்மை அல்லது முக்கிய பணிகள் எவை?
  1. நாட்டு வருவாயின் அளவீடு மற்றும் விநியோகம்
  2. பரிமாற்ற கருவி அல்லது பண செலுத்துகை
  3. எதிர்கால செலுத்துகைக்கான நிலை மதிப்பு
  4. மதிப்பின் நிலைகலன் அல்லது வாங்கும் சக்தியின் நிலைகலன்
  5. மாற்று மதிப்பு அல்லது மாற்று வாங்கும் சக்தி
A
1, 2
B
1, 2, 3
C
2, 3
D
3, 4, 5
Question 31
கீழ்க்கண்டவற்றுள் பணத்தின் வரையறுக்கப்பட்ட பணிகள் எவை?
  1. கடன் அடிப்படையில் இயக்கப்படுகிறது.
  2. மூலதனத்தின் உற்பத்தித்திறன் அதிகரிப்பு
  3. நாட்டு வருவாயின் அளவீடு மற்றும் விநியோகம்
A
அனைத்தும்
B
1, 2
C
3, 2
D
1, 3
Question 32
  • கூற்று 1: பணவீக்கம் என்பது விலைகள் குறைந்து பணத்தின் மதிப்பு உயர்வதைக் குறிக்கும்.
  • கூற்று 2: பணவாட்டம் என்பது விலைகள் உயர்ந்து, பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைவதை குறிக்கும்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 32 Explanation: 
(குறிப்பு: பணவாட்டம் என்பது விலைகள் குறைந்து பணத்தின் மதிப்பு உயர்வதைக் குறிக்கும். பணவீக்கம் என்பது விலைகள் உயர்ந்து, பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைவதை குறிக்கும்.)
Question 33
வருவாயில் நடப்பு நுகர்வுக்கு பயன்படாத ஒரு பகுதி _________ என வரையறுக்கப்படுகிறது.
A
செலவு
B
சேமிப்பு
C
இலாபம்
D
நட்டம்
Question 33 Explanation: 
(குறிப்பு: அவை தற்போதைய நுகர்வுக்காக பயன்படுத்தப்படாமல் எதிர்கால பயன்பாட்டிற்கு ஒதுக்கி வைக்கப்படுகிறது.)
Question 34
__________ நெகிழ்வான விதிமுறைகளுடன் பூஜ்ஜிய இருப்புத்தொகையை கொண்டது.
A
மாணவர் சேமிப்பு கணக்கு
B
சேமிப்பு வைப்பு
C
நடப்பு கணக்கு வைப்பு
D
நிரந்தர வைப்பு
Question 34 Explanation: 
(குறிப்பு: சில வங்கிகள் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கிற மாணவர்களுக்கான சேமிப்பு கணக்குகள் துவக்கியுள்ளனர்.)
Question 35
வாடிக்கையாளர்கள் தன்னுடைய நடப்பு வருமானத்தில் ஒரு பகுதியை சேமிக்க ஆரம்பிக்கும் கணக்கிற்கு__________ என்று பெயர்.
A
மாணவர் சேமிப்பு கணக்கு
B
சேமிப்பு வைப்பு
C
நடப்பு கணக்கு வைப்பு
D
நிரந்தர வைப்பு
Question 35 Explanation: 
(குறிப்பு: சேமிப்பு கணக்கில் நுகர்வோர், பணம் தேவைப்படும் போது அவர்கள் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். அந்த வைப்புத் தொகைக்கு வங்கி பெயரளவு வட்டி அளிக்கிறது.)
Question 36
___________ வர்த்தக நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் பொது அதிகாரிகளால் ஆரம்பிக்கப்படுகிறது.
A
மாணவர் சேமிப்பு கணக்கு
B
சேமிப்பு வைப்பு
C
நடப்பு கணக்கு வைப்பு
D
நிரந்தர வைப்பு
Question 36 Explanation: 
(குறிப்பு: தேவைக்கேற்ப வங்கி பரிவர்த்தனை மேற்கொள்ள நடப்பு கணக்கு உதவுகின்றது.)
Question 37
_________’காலவைப்பு’ எனவும் அழைக்கப்படுகிறது.
A
மாணவர் சேமிப்பு கணக்கு
B
சேமிப்பு வைப்பு
C
நடப்பு கணக்கு வைப்பு
D
நிரந்தர வைப்பு
Question 37 Explanation: 
(குறிப்பு: நிரந்தர வைப்பு குறிப்பிட்ட காலத்திற்கு நிரந்தரமாக வங்கியில் இருக்கும்.)
Question 38
கீழ்க்கண்டவற்றுள் எவை முதலீட்டுக் கருவிகளில் அடங்கும்?
  1. பங்கு வர்த்தகம்
  2. பத்திரங்கள்
  3. பரஸ்பர நிதி
  4. பண்டங்களின் எதிர்காலம்
  5. ஆண்டுத்தொகை
A
அனைத்தும்
B
1, 3, 4
C
2, 4, 5
D
1, 3, 5
Question 38 Explanation: 
(குறிப்பு: காப்பீடு, வைப்பு கணக்கு ஆகியவையும் முதலீட்டுக் கருவிகளில் அடங்கும்.)
Question 39
வங்கி என்ற சொல் _________ வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
A
கிரேக்கம்
B
லத்தீன்
C
இத்தாலி
D
சமஸ்கிருதம்
Question 40
இந்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை பண மதிப்பிழப்பு செய்வதாக அறிவித்த நாள்
A
2015 நவம்பர் 12
B
2016 நவம்பர் 8
C
2016 அக்டோபர் 22
D
2017 நவம்பர் 10
Question 40 Explanation: 
(குறிப்பு: இந்திய அரசாங்கம் கருப்பு பணத்திற்கு எதிராக பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.)
Question 41
சேமிப்பு குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.
  1. சேமிப்பு என்பது தனிநபர் வருமானத்தில் நுகர்விற்காக பயன்படுத்தப்படாத ஒரு பகுதியேயாகும்.
  2. சேமிப்பு குறுகிய கால அல்லது அவசர கால தேவைகளை நிறைவேற்றும்.
  3. குறைந்த அல்லது புறக்கணிக்கப்பட்ட அளவு இடர்பாடு உடையது.
  4. குறைந்த நீர்மை தன்மை உடையது.
  5. வருவாய் குறைவு அல்லது இல்லை.
A
அனைத்தும் சரி
B
1, 2, 4, 5 சரி
C
2, 3, 4 சரி
D
1, 2, 3, 5 சரி
Question 41 Explanation: 
(குறிப்பு: சேமிப்பு அதிக நீர்மை தன்மை உடையது.)
Question 42
முதலீடு குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.
  1. முதலீடு என்பது மூலதன சொத்துக்களில் நிதி முதலீடு செய்யும் செயல்முறையை குறிக்கிறது.
  2. மூலதன உருவாக்கத்திற்கும், வருவாய்க்கும் முதலீடு உதவுகிறது.
  3. இடர்பாடுகள் மிக அதிகம்.
  4. வருவாய் அதிகம்.
  5. குறைந்த நீர்மை தன்மை உடையது.
A
அனைத்தும் சரி
B
1, 2, 4, 5 சரி
C
2, 3, 4 சரி
D
1, 2, 3 சரி
Question 43
  • கூற்று 1: கருப்பு பணம் என்பது அரசாங்கத்திற்கு செலுத்தாத எந்தவொரு பணத்தையும் குறிக்கும்.
  • கூற்று 2: கருப்பு பண வருவாய்கள் வழக்கமாக மறைமுக பொருளாதார நடவடிக்கை மூலம் பணமாக பெறப்படுவதால் அதற்கு வரியில்லை.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 43 Explanation: 
(குறிப்பு: குற்றவாளிகள், கடத்தல்காரர்கள், பதுக்குபவர்கள், வரி ஏய்ப்பவர்கள் மற்றும் சமுதாயத்தில் மற்ற சமூக விரோதிகள் மூலம் கருப்பு பணம் சேர்க்கப்படுகிறது.)
Question 44
இந்திய வங்கியியல் கட்டுப்பாட்டுச் சட்டம் ________.
A
1935
B
1945
C
1949
D
1969
Question 45
உலோக பணத்திற்காக எந்த உலோகம் பயன்படுத்தப்பட்டன
A
தங்கம்
B
வெள்ளி
C
வெண்கலம்
D
மேற்கூரிய அனைத்தும்
Question 46
கீழ்க்கண்டவற்றுள் பொருளாதாரத்தில் கருப்பு பணத்தின் விளைவுகள் எவை?
  1. இரட்டை பொருளாதாரம்.
  2. உண்மை அளவை குறைத்து மதிப்பீடு செய்வது.
  3. வரி ஏமாற்றுதல் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு
  4. சமத்துவம் வலுவிழத்தல்
  5. ஆடம்பர நுகர்வு செலவு
A
அனைத்தும்
B
1, 3, 5
C
2, 4, 5
D
1, 3, 4
Question 46 Explanation: 
(குறிப்பு: பொருளாதாரத்தில் கருப்பு பணத்தின் விளைவுகள் பணக்காரர் மற்றும் ஏழைகளிடையே இடைவெளி அதிகரித்தல். உற்பத்தி முறையில் விலகல் பற்றாக்குறை பணத்தை விநியோகித்தல் சமுதாயத்தில் பொது ஒழுக்க நிலைகளின் வீழ்ச்சிகள் உற்பத்தி மீதான விளைவுகள்)
Question 47
சரியான இணையைத் தேர்ந்தெடு.(கருப்பு பணத்திற்கு எதிராக சில சட்டரீதியான கூட்டமைப்பு)
  1. பணமோசடி நடவடிக்கை தடுப்புச் சட்டம் 2002
  2. ஊழல் தடுப்புச் சட்டம் 1988
  3. வெளிக்கொணரப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்து மசோதா (வரி விதித்தல்) – 2013
  4. பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டம்-1988 (2016ல் திருத்தப்பட்டது.)
  5. ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம் 2016.
A
அனைத்தும் சரி
B
1, 2, 3, 4 சரி
C
1, 2, 4, 5 சரி
D
2, 3, 5 சரி
Question 47 Explanation: 
(குறிப்பு: வெளிக்கொணரப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்து மசோதா (வரி விதித்தல்) – 2015)
Question 48
கருப்பு பணத்திற்கு எதிராக அரசின் சமீபத்திய நடவடிக்கைகளில் சரியானதை தேர்ந்தெடு.
  1. இந்தியா மற்றும் பிற நாடுகளின் அழுத்தத்தினால் சுவிட்சர்லாந்து உள்ளூர் சட்டங்களில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தி சுவிஸ் வங்கி வெளிநாடுகளுக்கு உதவுகிறது.
  2. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் கருப்பு பணத்தை கண்காணிக்க சிறப்பு விசாரணை குழு நியமிக்கப்பட்டது.
  3. பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது.
A
அனைத்தும் சரி
B
2, 3 சரி
C
1, 3 சரி
D
1, 2 சரி
Question 49
டெல்லி துருக்கி சுல்தான்கள் தங்கம், வெள்ளி மற்றும் தாமிரத்தால் ஆன நாணயங்களை ________ என்றும், மதிப்பு குறைந்த நாணயங்களை ___________ என்றும் அழைத்தனர்.
A
ஜிட்டால், டாங்கா
B
கர்சபணம், டாங்கா
C
டாங்கா, ஜிட்டால்
D
பூரணாஸ், கர்சபணம்
Question 49 Explanation: 
(குறிப்பு: 1526 இல் இருந்த முகலாய சாம்ராஜ்யம் முழு சாம்ராஜ்யத்திற்கான பணவியல் முறையை ஒருங்கிணைத்தது.)
Question 50
காகித பணத்தை அறிமுகப்படுத்தியது யார்?
A
பிரிட்டிஸ்
B
துருக்கியர்
C
முகலாய பேரரசு
D
மெளரியர்கள்
Question 51
பொருத்துக.
  1. பண்டமாற்று முறை                     i) வரி ஏமாற்றுபவர்கள்
  2. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம்     ii) மின்னணு பணம்
  3. மின்-பணம்                                 iii) நுகர்வு தவிர்த்த வருமானம்
  4. சேமிப்பு                         iv) பண்டங்களுக்கு பண்டங்கள் பரிமாற்றம்
  5. கருப்பு பணம்             v) 1935
A
iv iii ii i v
B
iv v ii iii i
C
iii ii i iv v
D
iv iii ii i v
Question 52
சரியான கூற்றை தேர்ந்தெடு.
  1. பண்டமாற்று முறையில் பல குறைபாடுகளாவன
  2. இருமுகத் தேவை பொருத்தமின்மை
  3. செல்வத்தை சேமிக்க சிரமமில்லை
  4. பொதுவான மதிப்பின் அளவுகோல்
  5. பொருட்களின் பாகுபடாமை
A
1, 2 சரி
B
1, 4 சரி
C
1, 3, 4 சரி
D
அனைத்தும் சரி
Question 53
பரிமாற்றத்திற்கு பணத்தின் சமீபத்திய வடிவங்கள் எவை?
  1. பற்று அட்டை
  2. பண்டமாற்று முறை
  3. கடன் அட்டை
  4. நிகழ் நிலை வங்கி
A
1, 3, 4
B
2, 3, 4
C
1, 2, 3
D
1, 2, 4
Question 53 Explanation: 
(குறிப்பு: கடன் அட்டைகள் மற்றும் பற்று அட்டைகள் சமீபத்திய நெகிழிப் பணமாகும். பணமில்லா பரிவர்த்தனை இதன் நோக்கமாகும்.)
Question 54
  • கூற்று 1: காகிதப் பணத்தை கட்டுப்படுத்துவதும், ஒழுங்குபடுத்துவதும் அந்நாட்டின் மைய வங்கியாகும்.
  • கூற்று 2: தற்போது பணத்தின் பெரும்பகுதி முக்கியமாக செலாவணிப் பணம் அல்லது காகிதப் பணம் மத்திய மைய வங்கியால் வெளியிடப்பட்டதாகும்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 54 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!