Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTnpsc Exam

பண்டைய கால தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்ககாலம் – Online Test 6th Social Science Lesson 16 Questions

பண்டைய கால தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்ககாலம் - Online Test 6th Social Science Lesson 16 Ques

Congratulations - you have completed பண்டைய கால தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்ககாலம் - Online Test 6th Social Science Lesson 16 Ques. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • கூற்று 1: சங்கம் என்ற சொல் மதுரைப் பாண்டிய அரசர்களின் ஆதரவில் தழைத்தோங்கிய தமிழ்ப் புலவர்களின் குழுமத்தைச் சுட்டுகிறது.
  • கூற்று 2: இப்புலவர்கள் இயற்றிய பாடல்கள் மொத்தமாக சங்க இலக்கியம் என அறியப்படுகிறது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 1 Explanation: 
(குறிப்பு: சங்க பாடல்கள் இயற்றப்பட்ட காலம் சங்க காலம் என அழைக்கப்படுகிறது.)
Question 2
கீழ்க்கண்டவர்களுள், பனையோலைகளில் எழுதப்பட்டிருந்த தமிழ் செவ்வியல் இலக்கியங்களையும் பண்டைக்காலத் தமிழ் நூல்களையும் மீட்டு வெளியிட்டவர்கள் யார்?
  1. ஆறுமுக நாவலர்
  2. உ.வே.சா
  3. திரு.வி.க
  4. தாமோதரம் பிள்ளை
A
1, 2, 3
B
2, 3, 4
C
1, 2, 4
D
1, 3, 4
Question 3
சங்க காலம் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A
கால அளவு - கி.மு 3ம் நூற்றாண்டு முதல் கி.பி 3ம் நூற்றாண்டு வரை
B
காலம் - இரும்புக் காலம்
C
பண்பாடு – வெண்கலக் காலப் பண்பாடு
D
ஆட்சி புரிந்த வம்சங்கள் - சேரர், சோழர், பாண்டியர்
Question 3 Explanation: 
(குறிப்பு: சங்க கால தமிழகத்தின் புவியியல் பரப்பு - வடக்கே வேங்கடம் (திருப்பதி) முதல் தெற்கே கன்னியாகுமரி வரை. கிழக்கிலும், மேற்கிலும் கடல்களை எல்லைகளாகக் கொண்டிருந்தது, பண்பாடு - பெருங்கற்காலப் பண்பாடு, அரசுமுறை -முடியாட்சி)
Question 4
தமிழ் மொழியானது இலத்தீன் மொழியின் அளவிற்குப் பழமையானது எனும் கருத்தை கொண்டவர் யார்?
A
சார்லஸ் மேசன்
B
வீலர்
C
அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்
D
ஜார்ஜ் எல் ஹார்ட்
Question 4 Explanation: 
(குறிப்பு: ஜார்ஜ் எல் ஹார்ட் என்பவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழிப் பேராசிரியர். ஏனைய மொழிகளின் செல்வாக்கிற்கு உட்படாமல் முற்றிலும் சுதந்திரமான ஒரு மரபாக தமிழ்மொழி உருப்பெற்று எழுந்துள்ளது என அவர் கூறுகிறார்.)
Question 5
___________ தமிழகத்தைச் சேர்ந்த மத்திய மற்றும் வடக்குத் திருவிதாங்கூர், கொச்சி, தெற்கு மலபார், கொங்கு மண்டலம் ஆகியவற்றை ஆண்டனர்.
A
சேரர்கள்
B
சோழர்கள்
C
பாண்டியர்கள்
D
நாயக்கர்கள்
Question 5 Explanation: 
(குறிப்பு: முக்கியத்துவம் மிகுந்த சேர அரசர்கள் - உதயன் சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், சேரல் இரும்பொறை)
Question 6
சேரன் செங்குட்டுவன் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A
வட இந்தியாவின் மீது படையெடுத்துச் சென்றார்.
B
பத்தினித் தெய்வ வழிபாட்டை அவர் அறிமுகம் செய்தார்.
C
இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுவனின் அண்ணன் ஆவார்.
D
சிலப்பதிகாரக் காவியப் பாத்திரமான கண்ணகிக்கு சிலை எடுப்பதற்காக அவர் இமயமலையிலிருந்து கற்களை கொண்டுவந்தார்.
Question 6 Explanation: 
(குறிப்பு: இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுவனின் தம்பியாவார். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தின் ஆசிரியர்.)
Question 7
தனது பெயரில் நாணயங்களை வெளியிட்ட சேர அரசர்
A
உதயன் சேரலாதன்
B
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
C
சேரன் செங்குட்டுவன்
D
சேரல் இரும்பொறை
Question 7 Explanation: 
(குறிப்பு: சில சேர நாணயங்களில் அவர்களின் சின்னமான வில்லும் அம்பும் பொறிக்கப்பட்டுள்ளன.)
Question 8
சேர அரசர்கள் குறித்த செய்திகளை வழங்கும் நூல்
A
மதுரைக் காஞ்சி
B
புறநானூறு
C
பதிற்றுப்பத்து
D
குறுந்தொகை
Question 8 Explanation: 
(குறிப்பு: வேந்தர் எனும் சொல் சேரர், சோழர், பாண்டியர் ஆகியோரைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது.)
Question 9
சங்க காலத் தமிழ் மக்களின் மொழி, பண்பாடு ஆகியவற்றின் உயர்தரத்தை சுட்டிக்காட்டும் தமிழ் இலக்கண நூல்
A
நன்னூல்
B
தொல்காப்பியம்
C
புறநானூறு
D
அகத்தியம்
Question 10
தன்னை எதிர்த்த சேரர், பாண்டியர் மற்றும் அவர்களை ஆதரித்த பதினொன்று வேளிர் தலைவர்களின் கூட்டுப்படையைத் தஞ்சாவூர் பகுதியில் உள்ள வெண்ணி எனும் சிற்றூரில் தோற்கடித்தவர் யார்?
A
இளஞ்சேட்சென்னி
B
கிள்ளிவளவன்
C
கரிகால் வளவன்
D
பெருநற்கிள்ளி
Question 10 Explanation: 
(குறிப்பு: சோழ அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர் கரிகால் வளவன் ஆவார். இவர் காடுகளை விளை நிலங்களாக மாற்றினார். வேளாண்மையை மேம்படுத்துவதற்காக காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டினார்.)
Question 11
கரிகாலனின் ஆட்சியின் போது புகார் துறைமுகத்தில் நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பற்றிய விரிவான செய்திகளை வழங்கும் நூல்
A
பதிற்றுப்பத்து
B
நற்றிணை
C
பட்டினப்பாலை
D
மதுரைக் காஞ்சி
Question 11 Explanation: 
(குறிப்பு: சோழர்களின் துறைமுகமான புகார் இந்தியப் பெருங்கடலின் பல பகுதிகளிலிருந்து வணிகர்களை அதன்பால் ஈர்த்தது.)
Question 12
கல்லணை கட்டப்பட்ட போது ___________ ஏக்கர் நிலத்திற்கு அது நீர்ப்பாசன வசதியை வழங்கியது.
A
66,000
B
68,000
C
69,000
D
71,000
Question 12 Explanation: 
(குறிப்பு: கல்லணை கற்களால் கட்டப்பட்ட தடுப்பணை ஆகும். பாசனத்திற்காகக் கழிமுகப் பகுதி வழியாக நீரைத் திருப்பிவிடுவதற்காக காவிரி ஆற்றின் குறுக்கே இவ்வணை கட்டப்பட்டது.)
Question 13
கீழ்க்கண்டவர்களுள் சோழ அரசர் அல்லாதவர் யார்?
  1. இளஞ்சேட்சென்னி
  2. கோச்செங்கணான்
  3. கரிகால் வளவன்
  4. கிள்ளிவளவன்
  5. பெருநற்கிள்ளி
A
1, 2 மட்டும்
B
4, 2 மட்டும்
C
3, 4 மட்டும்
D
எதுவுமில்லை
Question 13 Explanation: 
(குறிப்பு: இளஞ்சேட்சென்னி, கோச்செங்கணான், கரிகால் வளவன், கிள்ளிவளவன், பெருநற்கிள்ளி ஆகியோர் முக்கியத்துவம் வாய்ந்த சோழ அரசர்கள் ஆவர்.)
Question 14
சேரர், சோழர், ஐந்து வேளிர் குலத் தலைவர்கள் ஆகியோரின் கூட்டுப்படையைத் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தோற்கடித்த பாண்டிய மன்னன்
A
கரிகாலன்
B
நெடியோன்
C
நன்மாறன்
D
நெடுஞ்செழியன்
Question 14 Explanation: 
(குறிப்பு: பாண்டியர் இன்றைய தென் தமிழகத்தை ஆட்சி செய்தனர். நெடுஞ்செழியன் மிகவும் புகழ்பெற்ற போர் வீரராகப் போற்றப்படுகிறார். நெடியோன், முதுகுடுமிப் பெருவழுதி, நன்மாறன், நெடுஞ்செழியன் ஆகியோர் முக்கியத்துவம் வாய்ந்த பாண்டிய அரசர்கள் ஆவர்.)
Question 15
கொற்கையின் தலைவன் என போற்றப்படுபவர் யார்?
A
நெடியோன்
B
முதுகுடுமிப் பெருவழுதி
C
நன்மாறன்
D
நெடுஞ்செழியன்
Question 15 Explanation: 
(குறிப்பு: பல பாண்டிய அரசர்களின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. பாண்டிய நாடு முத்துக்குளிப்புக்குப் புகழ் பெற்றதாகும்.)
Question 16
  • கூற்று 1: பாண்டியர்களின் நாணயங்கள் ஒரு புறத்தில் குதிரையின் வடிவத்தையும் மற்றொரு புறத்தில் மீனின் உருவத்தையும் கொண்டுள்ளன.
  • கூற்று 2: முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய அரசர் பல வேதவேள்விகளை நடத்தியதைக் கொண்டாடும் விதமாக நாணயங்களை வெளியிட்டார்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 16 Explanation: 
(குறிப்பு: பாண்டியர்களின் நாணயங்கள் ஒரு புறத்தில் யானையின் வடிவத்தையும் மற்றொரு புறத்தில் மீனின் உருவத்தையும் கொண்டுள்ளன.)
Question 17
கீழ்க்கண்டவற்றுள் சேரர்கள் சூட்டிக் கொண்ட பட்டம் எது?
A
சென்னி
B
வழுதி
C
இரும்பொறை
D
தென்னர்
Question 17 Explanation: 
(குறிப்பு: ஆதவன், குட்டுவன், வானவன், இரும்பொறை ஆகியவை சேரர்கள் சூட்டிக் கொண்ட பட்டங்கள் ஆகும்.)
Question 18
கீழ்க்கண்டவற்றுள் சோழர்கள் சூட்டிக் கொண்ட பட்டங்களில் தவறானது எது?
  1. சென்னி
  2. செம்பியன்
  3. வழுதி
  4. செழியன்
A
1, 2
B
2, 3
C
1, 4
D
3, 4
Question 18 Explanation: 
(குறிப்பு: சென்னி, செம்பியன், கிள்ளி, வளவன் ஆகியவை சோழர்கள் சூட்டிக் கொண்ட பட்டங்கள் ஆகும்.)
Question 19
பின்வருவனவற்றுள் பாண்டியர்கள் சூட்டிக் கொண்ட பட்டங்கள் எவை?
  1. மாறன்
  2. வழுதி
  3. செழியன்
  4. தென்னர்
A
அனைத்தும்
B
1, 2, 4
C
3, 4
D
1, 3, 4
Question 20
சேரர்கள் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A
மாலை – பனம்பூ மாலை
B
தலைநகர் – வஞ்சி / கரூர்
C
துறைமுகம் – புகார்
D
சின்னம் – வில், அம்பு
Question 20 Explanation: 
(குறிப்பு: துறைமுகம் - முசிறி / தொண்டி )
Question 21
சோழர்கள் குறித்த செய்திகளில் தவறானதை தேர்ந்தெடு.
A
துறைமுகம் - புகார்
B
மாலை - வேப்பம்பூ மாலை
C
தலைநகர் – உறையூர் / புகார்
D
சின்னம் – புலி
Question 21 Explanation: 
(குறிப்பு: மாலை - அத்திப்பூ மாலை)
Question 22
பாண்டியர்கள் குறித்த செய்திகளில் சரியானதை தேர்ந்தெடு.
  1. மாலை - வேப்பம்பூ மாலை
  2. துறைமுகம் – கொற்கை
  3. தலைநகர் – மதுரை
  4. சின்னம் - இரண்டு மீன்கள்
A
1, 2, 3
B
1, 2, 4
C
1, 3, 4
D
அனைத்தும்
Question 22 Explanation: 
(குறிப்பு: செங்கோல், முரசு, வெண்கொற்றக் குடை ஆகியன அரசு அதிகாரத்தின் சின்னங்களாகும்.)
Question 23
  • கூற்று 1: ஆய் என்னும் பெயர் பழந்தமிழச் சொல்லான ஆயர் என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.
  • கூற்று 2: சங்க காலத்து ஆய் மன்னர்களில் முக்கியமானவர்கள் பாரி, ஒரி, காரி, பேகன், ஆய், அதியமான், நள்ளி ஆகியோராவர்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 23 Explanation: 
(குறிப்பு: ஆயர் என்பதற்கு ஆநிரை மேய்ப்போர் என்று பொருள். சங்க காலத்து ஆய் மன்னர்களில் முக்கியமானவர்கள் அந்திரன், திதியன், நன்னன் ஆகியனவாகும்.)
Question 24
  • கூற்று 1: வேளிர்கள் பண்டைய காலத் தமிழகத்தில் ஆட்சி செய்த நிலவுடைமைப் பிரிவினர் ஆவர்.
  • கூற்று 2: கிழார் என்பவர் கிராமத் தலைவர் ஆவார்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 24 Explanation: 
(குறிப்பு: புகழ் பெற்ற வேளிர்கள் கடையெழு வள்ளல்களான பாரி, காரி, ஓரி, பேகன், ஆய், அதியமான், நள்ளி ஆகியோராவர். அவர்கள் தமிழ்ப்புலவர்களைப் பெருந்தன்மையுடன் தாராளமாக ஆதரித்தமைக்காகப் புகழப்பட்டவர்கள் ஆவர்.)
Question 25
சங்க காலத்தில் எந்த வரி ‘இறை’ என அழைக்கப்பட்டது?
A
சுங்கவரி
B
கப்பம்
C
அபராதம்
D
நிலவரி
Question 25 Explanation: 
(குறிப்பு: அரசின் வருமானம் வரிகள் மூலம் பெறப்பட்டன. நில வரியே வருவாயின் முக்கிய ஆதாரமாகும். இதைத் தவிர அரசு சுங்கவரி, கப்பம், அபராதம் ஆகியவற்றையும் வசூல் செய்தது.)
Question 26
சங்க கால ஆட்சியமைப்பு குறித்த செய்திகளில் சரியானதை தேர்ந்தெடு.
  1. வேந்தன், கோன், மன்னன், கொற்றவன், இறைவன் எனும் பெயர்களால் அரசர் அழைக்கப்பட்டார்.
  2. பட்டம் சூட்டப்படும் விழா ‘அரசுக்கட்டிலேறுதல்’ அல்லது முடிசூட்டு விழா எனப்பட்டது.
  3. பட்டத்து இளவரசர் கோமகன் எனவும் அவருக்கு இளையோர் இளங்கோ, இளஞ்செழியன், இளஞ்சேரல் எனவும் அழைக்கப்பட்டனர்.
  4. அரசர்களும் வீரர்களும் வீரக்கழல் அணிந்திருந்தனர்.
A
1, 2
B
2, 3
C
1, 2, 4
D
அனைத்தும்
Question 26 Explanation: 
(குறிப்பு: அரசுரிமை பரம்பரையானது. அரசர் “கோ” என அழைக்கப்பட்டார். அது கோன் எனும் சொல்லின் சுருக்கமாகும். அரசர் தினந்தோறும் அரசவையைக் கூட்டினார்.)
Question 27
சங்க காலத்தில் அரசர்கள் எத்தனை கடமைகளைச் செய்தனர்?
A
4
B
5
C
6
D
7
Question 27 Explanation: 
(குறிப்பு: கல்வி கற்பதை ஊக்குவிப்பது, சடங்குகளை நடத்துவது, பரிசுகள் வழங்குவது, மக்களைப் பாதுகாப்பது, குற்றவாளிகளைத் தண்டிப்பது ஆகியன அவ்வைந்து கடமைகளாகும்.)
Question 28
  • கூற்று 1: சங்ககால ஆட்சியமைப்பில் தூதுவர்கள் அரசரால் பணியில் அமர்த்தப்பட்டனர்.
  • கூற்று 2: அரசருக்கு நிர்வாகத்தில் பல அதிகாரிகள் உதவி செய்தனர். அவர்கள் ஐம்பெருங்குழு, எண்பேராயம் என இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தனர்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 28 Explanation: 
(குறிப்பு: அரசருடைய சபை அரசவை என அழைக்கப்பட்டது. அரசர் ‘அரியணை’ என்றழைக்கப்பட்ட ஆசனத்தில் அமர்வது வழக்கம். ஐம்பெருங்குழு - ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு, எண்பேராயம் - எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குழு.)
Question 29
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
A
சங்க காலத்தில் அரசருடைய படை என்று அழைக்கப்பட்ட இராணுவம் நான்கு பிரிவுகளைக் கொண்டிருந்தது.
B
அரசர் ‘தானைத் தலைவன்’ என அழைக்கப்பட்டார்.
C
அக்காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட முக்கியமான ஆயுதங்கள் வாள், கேடயம், தோமாரம் ஈட்டி, வில், அம்பு அகியனவாகும்.
D
ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த இடம் ‘படைக் கொட்டில்’ என அழைக்கப்பட்டது.
Question 29 Explanation: 
(குறிப்பு: படைத் தலைவர் ‘தானைத் தலைவன்’ என அழைக்கப்பட்டார். தோமாரம் எனப்படுவது சற்று தொலைவில் இருந்து எதிரியின் மீது ஏவுகணையைப் போன்று வீசப்படுவதாகும். போர்முரசம் கடவுளாகவே கருதி வணங்கப்பட்டது.)
Question 30
சங்க காலத்தில், கிராமங்களில் __________ என்பவை தீர்ப்பு வழங்கப்படும் இடங்களாயிருந்தன.
A
அவை
B
நீதிமன்றம்
C
மன்றங்கள்
D
சபைகள்
Question 30 Explanation: 
(குறிப்பு: அரசரே இறுதியான மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆவார். தலைநகரில் நீதிமன்றம் 'அவை’ என்றழைக்கப்பட்டது.)
Question 31
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
A
சங்க காலத்தில் ஒட்டுமொத்த ஆட்சிப் பகுதியும் நாடு என்றழைக்கப்பட்டது.
B
நாடு பல கூற்றங்களாகப் பிரிக்கப்பட்டன.
C
ஊர் என்பது கிராமம் ஆகும்.
D
கடற்கரையோர நகரங்களுக்குப் பட்டினம் என்று பெயர்.
Question 31 Explanation: 
(குறிப்பு: சங்க காலத்தில் ஒட்டுமொத்த ஆட்சிப் பகுதியும் மண்டலம் என்றழைக்கப்பட்டது. மண்டலங்கள் நாடுகளாகப் பிரிக்கப்பட்டன. கிராமங்கள், பேரூர் (பெரியகிராமம்), சிற்றூர் (சிறிய கிராமம்), மூதூர் (பழமையான கிராமம்) என அழைக்கப்பட்டன.)
Question 32
___________ என்பது துறைமுகங்களைக் குறிக்கும் பொதுவான சொல்லாகும்.
A
கொற்கை
B
முசிறி
C
வஞ்சி
D
புகார்
Question 32 Explanation: 
(குறிப்பு: புகார், உறையூர், கொற்கை, மதுரை, முசிறி, வஞ்சி அல்லது கரூர், காஞ்சி ஆகியவை சங்ககால முக்கிய நகரங்களாகும்.)
Question 33
ஐந்து திணைகளில் ________ 'மென்புலம்’ என அழைக்கப்பட்டது.
A
குறிஞ்சி
B
முல்லை
C
மருதம்
D
பாலை
Question 33 Explanation: 
(குறிப்பு: மென்புலத்தில் (நன்செய்) நெல்லும் கரும்பும் விளைந்தன. நெய்தல் தவிர மற்றவை வன்புலம் ( புன்செய் ) என அழைக்கப்பட்டன. அவற்றில் தானியங்களும் பருப்பு வகைகளும் விளைந்தன.)
Question 34
குறிஞ்சித் திணை குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A
நிலம் - மலையும் மலை சார்ந்த இடமும்
B
தொழில் - வேட்டையாடுதல் / சேகரித்தல்
C
மக்கள் – மறவர், மறத்தியர்
D
கடவுள் – முருகன்
Question 34 Explanation: 
(குறிப்பு: மக்கள் - குறவர், குறத்தியர்)
Question 35
முல்லை நில மக்களின் முக்கிய கடவுள் _______.
A
இந்திரன்
B
மாயோன்
C
கொற்றவை
D
வருணன்
Question 35 Explanation: 
(குறிப்பு: முல்லைத் திணை நிலம் - காடும், காடு சார்ந்த இடமும், தொழில் - ஆநிரை மேய்த்தல், மக்கள் - ஆயர், ஆய்ச்சியர்)
Question 36
_________ நில மக்கள் மறவர், மறத்தியர் என அழைக்கப்படுகின்றனர்.
A
குறிஞ்சி
B
முல்லை
C
நெய்தல்
D
பாலை
Question 36 Explanation: 
(குறிப்பு: பாலை திணை நிலம் – வறண்ட நிலம், தொழில் - வீரச் செயல்கள், கடவுள் – கொற்றவை)
Question 37
வேளாண்மையை முதன்மை தொழிலாக கொண்ட திணையின் கடவுள்__________.
A
இந்திரன்
B
மாயோன்
C
கொற்றவை
D
வருணன்
Question 37 Explanation: 
(குறிப்பு: மருதம்திணை நிலம் - வயலும் வயல் சார்ந்த இடமும், மக்கள் - உழவன், உழத்தியர்)
Question 38
பரதவர், நுளத்தியர் ஆகிய மக்கள் காணப்படும் திணை
A
குறிஞ்சி
B
முல்லை
C
நெய்தல்
D
பாலை
Question 38 Explanation: 
(குறிப்பு: நெய்தல் திணை நிலம் - கடலும் கடல் சார்ந்த பகுதியும், தொழில் - மீன்பிடித்தல் / உப்பு உற்பத்தி, கடவுள் - வருணன்)
Question 39
சங்க கால பெண்களின் நிலை குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A
சமூக வாழ்வில் பெண்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை.
B
நாற்பது பெண் புலவர்கள் வாழ்ந்து அரிய நூல்களை கொடுத்து சென்றுள்ளனர்.
C
திருமணம் சொந்த விருப்பத்தை சார்ந்து அமைந்திருந்தது.
D
பெண்களுக்கு பெற்றோரின் சொத்துக்களில் பங்கு அளிக்கவில்லை.
Question 39 Explanation: 
(குறிப்பு: பெற்றோரின் சொத்துக்களில் மகனும், மகளும் சமமான பங்கைப் பெற்றிருந்தனர். அவ்வையார், வெள்ளி வீதியார், காக்கைப் பாடினியார், ஆதிமந்தியார், பொன்முடியோர் ஆகியோர் சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் ஆவர்.)
Question 40
தவறான கூற்றைத் தேர்ந்தெடு
A
சங்க காலத்தில் முதன்மை கடவுள் சேயோன், நடுகல் வழிபாடும் வழக்கத்தில் இருந்தது.
B
வட பகுதிகளில் வளர்ந்திருந்ததைப் போன்று தமிழகத்தில் சாதிமுறை வளர்ந்திருக்கவில்லை.
C
சமூகத்தின் அனைத்து வகையான மக்களும் மஸ்லின், பட்டு மற்றும் நேர்த்தியான பருத்தியிழைத் துணிகளால் ஆன ஆடைகளை அணிந்தனர்.
D
சங்க இலக்கியங்கள் பாம்பின் தோலைக் காட்டிலும் மென்மையான துணிகனைப் (கலிங்கம்) பற்றிக் குறிப்பிடுகின்றன.
Question 40 Explanation: 
(குறிப்பு: பொருளாதார வசதிமிக்க மக்கள் மஸ்லின், பட்டு மற்றும் நேர்த்தியான பருத்தியிழைத் துணிகளால் ஆன ஆடைகளை அணிந்தனர்.சாதாரண மக்கள் பருத்தியினாலான இரு துண்டுகளான ஆடைகளை அணிந்தனர்.)
Question 41
________சங்க கால மக்களுடைய மிக முக்கியமான பண்பாட்டு அம்சமாக விளங்கியது.
A
இயல்
B
ஓவியம்
C
இசை
D
கூத்து
Question 41 Explanation: 
(குறிப்பு: சங்ககால மக்கள் முத்தமிழ் எனும் கோட்பாட்டை உருவாக்கினர்.)
Question 42
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
A
பண்டையக்காலத் தமிழர்கள் போர்க்களத்தில் மரணமுற்ற வீரர்கள்மேல் பெரும்மரியாதை கொண்டிருந்தனர்.
B
போரில் மரணமடைந்த வீரனின் நினைவைப் போற்றுவதற்காக நடுகற்கள் நடப்பட்டன.
C
பாடல்கள் பாடும் புலவர்கள் பாணர், விறலியர் என அழைக்கப்பட்டனர்.
D
ஓவியக்கலையில் சிறந்தவர்கள் கணிகையர் என்று அழைக்கப்பட்டனர்.
Question 42 Explanation: 
(குறிப்பு: கணிகையர் நடனங்களை நிகழ்த்துவர். ஏழிசை வல்லான் கரிகாலன் ஆவார்.)
Question 43
சங்க காலத்தில் __________ விவசாயம் செய்வோரின் மிகப் பொதுவான பகுதி நேரத் தொழிலாக இருந்தது.
A
ஆநிரை மேய்த்தல்
B
மீன்பிடித்தல்
C
நெசவு
D
வேட்டையாடுதல்
Question 43 Explanation: 
(குறிப்பு: சங்ககால மக்களின் மிக முக்கியமான தொழில்கள் வேளாண்மை, ஆநிரை மேய்த்தல், மீன்பிடித்தல், வேட்டையாடுதல் ஆகியவையாகும். மேலும் கைவினைத் தொழில் செய்வோரான தச்சர், கொல்லர், பொற்கொல்லர், மண்பாண்டம் செய்வோரும் இருந்தனர்.)
Question 44
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
A
சங்க காலத்தில் இந்திர விழா தலைநகரில் கொண்டாடப்பட்டது.
B
வணிகம் உள்ளுர், உள்நாட்டில், கடல் கடந்து வெளிநாட்டில் என மூன்று நிலைகளில் நடைபெற்றது.
C
முக்கியத் துறைமுகங்களில் ‘கலங்கரை இலங்கு சுடர்' எனும் ஒளி விளக்குக் கோபுரங்கள் இருந்தன.
D
புகார், மதுரை போன்ற முக்கியமான நகரங்களில் மூன்று வகையான சந்தைகள் இருந்தன.
Question 44 Explanation: 
(குறிப்பு: புகார், மதுரை போன்ற முக்கியமான நகரங்களில் இரண்டு வகையான சந்தைகள் இருந்தன. மதுரையில் 'நாளங்காடி' எனப்படும் காலைநேரச் சந்தையும் 'அல்லங்காடி' எனப்படும் மாலைநேரச் சந்தையும் இருந்துள்ளன.பண்டமாற்று முறை பரவலாக வழக்கத்தில் இருந்தது.)
Question 45
எகிப்து அரசன் இரண்டாம் ராம்செஸின் பதப்படுத்தப்பட்ட உடல் திறக்கப்பட்டபோது, தொல்லியல் அறிஞர்கள் அவருடைய நாசியினுள்ளும் அடிவயிற்றிலும் ___________ அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர்.
A
நெற்கதிர்
B
மயில் இறகு
C
கருமிளகுக்கதிர்
D
சந்தனக் கட்டை
Question 45 Explanation: 
(குறிப்பு: மேற்க்கண்டவாறு பதப்படுத்தி உடலைப் பாதுகாப்பது பண்டைய நாட்களில் பின்பற்றப்பட்ட முறையாகும்.)
Question 46
கீழ்க்கண்டவற்றுள் சங்க காலத்திய முக்கிய இறக்குமதி பொருட்களாக திகழ்ந்தவை எவை?
  1. புஷ்பராகம்
  2. ஈயம்
  3. திராட்சை மது
  4. கண்ணாடி
  5. குதிரைகள்
A
அனைத்தும்
B
1, 3, 5
C
2, 4, 5
D
2, 3, 4
Question 46 Explanation: 
(குறிப்பு: முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள் உப்பு, மிளகு, முத்துக்கள், தந்தம், பட்டு, நறுமணப் பொருட்கள், வைரம், குங்குமப்பூ, விலை மதிப்பு மிக்க கற்கள், மஸ்லின், சந்தனக் கட்டை)
Question 47
இந்திய வணிகர்களால் ரோமப் பேரரசுக்கு விநியோகம் செய்யப்பட்ட பட்டு, எடைக்கு எடை தங்கம் கொடுத்து பெற தகுதியானது என அறிவித்த ரோம அரசர்
A
முதலாம் ராம்செஸ்
B
இரண்டாம் ராம்செஸ்
C
ஆரிலியன்
D
சார்லஸ்
Question 48
சங்க காலத் தமிழகத்துடன் வணிக உறவுகளில் ஈடுபட்ட நாடுகள் எவை?
  1. கிரேக்கம்
  2. ரோம்
  3. எகிப்து
  4. சீனா
  5. தென்கிழக்காசியா
  6. இலங்கை
A
அனைத்தும்
B
1, 3, 5
C
2, 3, 5, 6
D
1, 3, 4, 5
Question 48 Explanation: 
(குறிப்பு: மேற்கண்ட நாடுகளுடன் வணிக உறவுகள் நிலவியதைத் தொல்லியல் அகழ்வாய்வுகள் மெய்ப்பித்துள்ளன.)
Question 49
முசிறியை ‘இந்தியாவின் முதல் பேரங்காடி' என இயற்கை வரலாறு என்னும் நூலில் குறிப்பிட்டவர் யார்?
A
மெகஸ்தனிஸ்
B
வாஸ்கோடாகாமா
C
பிளினி
D
அகஸ்தஸ் சீசர்
Question 49 Explanation: 
(குறிப்பு: மூத்த பிளினி ரோம் நாட்டைச் சேர்ந்தவர். ரோமானியரின் குடியிருப்பு இருந்த முசிறியில் அகஸ்டஸ் கடவுளுக்காகக் கோவிலொன்று கட்டப்ப்ட்டிருந்தது.)
Question 50
கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாப்பிரஸ் இலையில் எழுதப்பட்ட ஒரு ஒப்பந்தப் பத்திரத்தில் ___________ ஐ சேர்ந்த வணிகர் ஒருவருக்கும் முசிறியைச் சேர்ந்த ஒரு வணிகருக்குமிடையே மேற்கொள்ளப்பட்ட வணிக ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
A
எகிப்து
B
சீனா
C
மொரிசியஸ்
D
அலெக்ஸாண்டிரியா
Question 50 Explanation: 
(குறிப்பு: தற்போது இந்த ஒப்பந்தம் வியன்னாவிலுள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது.)
Question 51
களப்பிரர்களின் ஆட்சி குறித்து கீழ்க்கண்ட எந்த இலக்கியங்கள் தெரிவிக்கின்றன?
  1. தமிழ் நாவலர் சரிதை
  2. பெரிய புராணம்
  3. யாப்பெருங்கலம்
  4. வளையாபதி
A
அனைத்தும்
B
1, 2, 3
C
2, 3, 4
D
1, 3, 4
Question 51 Explanation: 
(குறிப்பு: களப்பிரர்களை பற்றி அறிய நமக்கு குறைவான குறிப்புகளே கிடைத்து உள்ளன. அவர்கள் விட்டுச்சென்ற நினைவுச் சின்னங்கள், தொல்கலைப் பொருட்கள் என எதுவுமில்லை. ஆனால் அவர்களின் ஆட்சி குறித்து இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன.)
Question 52
களப்பிரர்கள் தமிழகத்தை எத்தனை நூற்றாண்டுகள் ஆட்சி செய்தனர்?
A
ஒன்று
B
இரண்டு
C
இரண்டரை
D
மூன்று
Question 52 Explanation: 
(குறிப்பு: கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் சங்க காலம் படிப்படியாகத் தனது சரிவைச் சந்தித்தது.)
Question 53
பின்வருவனவற்றுள் களப்பிரர்கள் காலத்தில் எழுதப்பட்ட நூல்கள் எவை?
  1. சிலப்பதிகாரம்
  2. மணிமேகலை
  3. சீவக சிந்தாமணி
  4. குண்டலகேசி
A
அனைத்தும்
B
1, 2, 3
C
1, 2,4
D
3, 4
Question 53 Explanation: 
(குறிப்பு: களப்பிரர்கள் காலத்தில் பதினெண் கீழ்கணக்கைச் சேர்ந்த பல நூல்கள் இயற்றப்பட்டன. சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் அறிமுகத்தால் வட்டெழுத்து என்னும் புதிய எழுத்துமுறை உருவானது.)
Question 54
சரியான இணையைத் தேர்ந்தெடு.
  1. ஹான் அரச வம்சம் - ஜப்பான்
  2. மயன் நாகரிகம் – மத்திய அமெரிக்கா
  3. ரோமானிய நாகரிகம் – இத்தாலி
A
அனைத்தும்
B
1, 2
C
1, 3
D
2, 3
Question 54 Explanation: 
(குறிப்பு: ஹான் அரச வம்சம் - சீனா (கி.மு. 206 - கி.பி 220),ரோமானிய நாகரிகம்- இத்தாலி (கி.மு. 3ம் நூற்றாண்டு - கி.பி 1ம் நூற்றாண்டு) )
Question 55
பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்கு வந்தோர் ________ ஆவர்.
A
சாதவாகனர்கள்
B
சோழர்கள்
C
களப்பிரர்கள்
D
பல்லவர்கள்
Question 55 Explanation: 
(குறிப்பு: தமிழகத்தில் களப்பிரர்கள் காலத்தில் பெளத்தமும், சமணமும் முக்கியத்துவம் பெற்றன.)
Question 56
கீழ்க்காணும் கூற்றுகளில் எவை உண்மையானவை அல்ல ?
  1. கரிகாலன் தலையாலங்கானம் போரில் வெற்றி பெற்றான்.
  2. பதிற்றுப்பத்து சேர அரசர்கள் பற்றிய விவரங்களை வழங்குகின்றன.
  3. சங்க காலத்தைச் சேர்ந்த பழமையான இலக்கியங்கள் பெரும்பாலும் உரைநடையில் எழுதப்பட்டன
A
1 மட்டும்
B
1 மற்றும் 3 மட்டும்
C
2 மட்டும்
D
3 மட்டும்
Question 56 Explanation: 
(குறிப்பு: நெடுஞ்செழியன் தலையாலங்கானம் போரில் வெற்றி பெற்றான்.)
Question 57
பண்டைக் காலத் தமிழகத்தின் நிர்வாகப் பிரிவுகள் ஏறு வரிசையில் எவ்வாறு அமைந்திருந்தது
A
ஊர் < நாடு < கூற்றம் < மண்டலம்
B
ஊர் < கூற்றம் < நாடு < மண்டலம்
C
ஊர் < மண்டலம் < கூற்றம் < நாடு
D
நாடு < கூற்றம் < மண்டலம் < ஊர்
Question 58
சங்க காலம் குறித்த கல்வெட்டு சான்றுகளில் தவறானது எது?
A
கலிங்க நாட்டு அரசன் காரவேலனுடை ஹதிகும்பா கல்வெட்டு
B
புகளூர் கல்வெட்டு
C
அசோகருடைய 2 , 13 பேராணைக் கல்வெட்டு
D
வேள்விக்குடி கல்வெட்டு
Question 58 Explanation: 
(குறிப்பு: மாங்குளம், அழகர்மலை, கீழவளவு ஆகிய ஊர்களிலுள்ள கல்வெட்டுக்கள் சான்றுகளாக உள்ளன. (இவ்வூர்கள் அனைத்தும் மதுரைக்கு அருகேயுள்ளன.))
Question 59
கீழ்க்கண்டவற்றுள் சங்ககாலம் குறித்த செப்பு பட்டய சான்றுகள் எவை?
  1. வேள்விக்குடி செப்பேடு
  2. அரிக்கமேடு செப்பேடு
  3. சின்னமனூர் செப்பேடு
  4. கொடுமணல் செப்பேடு
A
1, 2
B
1, 3
C
2, 4
D
1, 4
Question 60
சங்க கால வரலாற்றை அறியும் வகையில் அகழாய்வு பொருட்கள் எங்கெங்கு கிடைத்துள்ளன?
  1. ஆதிச்சநல்லூர்
  2. கொடுமணல்
  3. கொற்கை
  4. உறையூர்
A
அனைத்தும்
B
1 , 3
C
1, 2, 4
D
1, 3, 4
Question 60 Explanation: 
(குறிப்பு: சங்ககாலப் பொருட்கள் ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கொடுமணல், புகார், கொற்கை, அழகன்குளம், உறையூர் ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன.)
Question 61
கீழ்க்கண்டவற்றுள் சங்க காலத்தை பற்றி அறிந்து கொள்வதற்கான அயல் நாட்டவர் குறிப்புகள் எவை?
  1. எரித்திரியக்கடலின் பெரிப்ளஸ்
  2. பிளினியின் இயற்கை வரலாறு
  3. தாலமியின் புவியியல்
  4. மெகஸ்தனிஸின் இண்டிகா
A
அனைத்தும்
B
1, 3, 4
C
1, 2
D
2, 3, 4
Question 61 Explanation: 
(குறிப்பு: ராஜாவளி, மகாவம்சம், தீபவம்சம் போன்ற நூல்களும் சங்க காலத்தை பற்றி அறிய உதவுகின்றன.)
Question 62
சங்க கால வரலாற்றை அறிவதற்கான இலக்கியச் சான்றுகள் எவை?
  1. பட்டினப்பாலை
  2. மதுரைக் காஞ்சி
  3. பத்துப்பாட்டு
  4. எட்டுத்தொகை
  5. சிலப்பதிகாரம்
A
அனைத்தும்
B
2, 3, 5
C
1, 3, 4
D
1, 2, 4, 5
Question 62 Explanation: 
(குறிப்பு: தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை சங்க கால வரலாற்றை அறிவதற்கான இலக்கியச் சான்றுகள் ஆகும்.)
Question 63
கீழ்க்கண்ட எந்த இடத்தில் சங்க காலம் குறித்த அகழ்வாய்வுப் பொருட்கள் கிடைத்துள்ளன.
A
ஆதிச்சநல்லூர்
B
அரிக்கிமேடு
C
கொடுமணல்
D
மேற்க்கண்ட அனைத்தும்
Question 63 Explanation: 
விளக்கம்: சங்க காலம் குறித்த அகழ்வாய்வுப் பொருட்கள் ஆதிச்சநல்லூர், அரிக்கிமேடு, கொடுமணல், புகார், கொற்கை, அழகன்குளம், உறையூர் போன்ற இடங்களில் கிடைத்துள்ளன.
Question 64
கீழ்க்கண்ட முக்கிய சேர அரசர்களுல் பொருந்தாதவர்_____________
A
உதயன் சேரலாதன்
B
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
C
சேரன் செங்குட்டுவன்
D
இளஞ்சேட்சென்னி
Question 65
கூற்று 1: சங்க காலத்தில் அரசர்களும் வீரர்களும் வீரக்கழல் அணிந்திருந்தனர். அதன்மீது அணிந்திருப்பவரின் பெயரும், அவரின் சாதனைகளும் பொறிக்கப்பட்டிருந்தன. கூற்று 2: ஒற்றர்கள் உள்நாட்டில் நடப்பனவற்றை மட்டும் தெரிந்துகொள்ளப் பயன்படுத்தப்பட்டனர்.
A
கூற்று 1 சரி, 2 தவறு
B
கூற்று 1 தவறு, 2 சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 65 Explanation: 
விளக்கம்: ஒற்றர்கள் நாட்டுக்குள் நடப்பனவற்றவை மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் நடப்பனவற்றையும் தெரிந்துகொள்ளப் பயன்படுத்தப்பட்டனர்.
Question 66
கூற்று 1: சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்கள் புறமுதுகில் காயமடைவதை அவமானமாகக் கருதினர். கூற்று 2: போரின்போது புறமுதுகில் காயம்பட்டதற்காக அரசர்கள் சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வுகளும் நடந்தன.
A
கூற்று 1 சரி, 2 தவறு
B
கூற்று 1 தவறு, 2 சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 66 Explanation: 
விளக்கம்: சங்க காலத்தில் வாழ்ந்த அரசர்கள் புறமுதுகில் காயமடைவதை அவமானமாகக் கருதினர்.
Question 67
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
A
அரசருடைய சபை அரசவை என அழைக்கப்பட்டது.
B
அரசர் “அரியணை” என்றழைக்கப்பட்ட ஆசனத்தில் அமர்வது வழக்கம்.
C
அரசர்கள் ஏழு விதக் கடமைகளைச் செய்தனர்.
D
அரசவையில் அரசரைச் சுற்றி அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்கள் அவைப்புலவர்கள் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
Question 67 Explanation: 
விளக்கம்: அரசர்கள் ஐந்து விதக் கடமைகளைச் செய்தனர்.
Question 68
பொருத்துக: A) குறிஞ்சி - 1. கடலும் கடல் சார்ந்த இடமும் B) முல்லை - 2. காடும் காடு சார்ந்த இடமும்; C) மருதம் - 3. மலையும் மலை சார்ந்த இடமும் D) நெய்தல் - 4. வயலும் வயல் சார்ந்த இடமும்
A
A-1, B-2, C-3, D-4
B
A-2, B-1, C-3, D-4
C
A-3, B-2, C-4, D-1
D
A-4, B-3, C-1, D-2
Question 68 Explanation: 
விளக்கம்: A) குறிஞ்சி - 1. மலையும் மலை சார்ந்த இடமும் B) முல்லை - 2. காடும் காடு சார்ந்த இடமும் C) மருதம் - 3. வயலும் வயல் சார்ந்த இடமும் D) நெய்தல் - 4. கடலும் கடல் சார்ந்த இடமும்
Question 69
பொருத்துக: A) குறிஞ்சி - 1. மாயோன் B) முல்லை - 2. முருகன் C) பாலை - 3. வருணன் D) நெய்தல் - 4. கொற்றவை
A
A-1, B-2, C-3, D-4
B
A-2, B-1, C-4, D-3
C
A-3, B-2, C-4, D-1
D
A-4, B-3, C-1, D-2
Question 69 Explanation: 
விளக்கம்: A) குறிஞ்சி - 1. முருகன் B) முல்லை - 2. மாயோன் C) பாலை - 3. கொற்றவை D) நெய்தல் - 4. வருணன்
Question 70
கூற்று 1: பொருளாதார வசதிமிக்க மக்கள் பருத்தியினாலான இரு துண்டுகளான ஆடைகளை அணிந்தனர். கூற்று 2: சாதாரண மக்கள் மஸ்லின் பட்டு மற்றும் நேர்த்தியான பருத்தியிழைத் துணிகளிலால் ஆன ஆடைகளை அணிந்தனர்.
A
கூற்று 1 சரி, 2 தவறு
B
கூற்று 1 தவறு, 2 சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 70 Explanation: 
விளக்கம்: பொருளாதார வசதிமிக்க மக்கள் மஸ்லின் பட்டு மற்றும் நேர்த்தியான பருத்தியிழைத் துணிகளிலால் ஆன ஆடைகளை அணிந்தனர். சாதாரண மக்கள் பருத்தியினாலான இரு துண்டுகளான ஆடைகளை அணிந்தனர்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 70 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!