Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTnpsc Exam

மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் – Online Test 6th Social Science Lesson 10 Questions

மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் - Online Test 6th Social Science Lesson 10 Questions

Congratulations - you have completed மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் - Online Test 6th Social Science Lesson 10 Questions. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
வில் டூராண்ட் கி.மு 6 ஆம் நூற்றாண்டை எவ்வாறு வர்ணிக்கிறார்?
A
நட்சத்திரங்களின் மழை
B
பொற்காலம்
C
நட்சத்திரங்களின் காலம்
D
மறுமலர்ச்சி காலம்
Question 1 Explanation: 
கி. மு 6 ஆம் நூற்றாண்டு பண்டைய இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டமாகும். இந்தியாவின் அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் அடையாள சின்னமாக அக்காலம் விளங்குகிறது.
Question 2
கீழ்கண்டவற்றுள் சமண நூல் எது?
A
அங்கங்கள்
B
திரிபிடகங்கள்
C
ஜாதகங்கள்
D
புராணங்கள்
Question 2 Explanation: 
ஆறாம் நூற்றாண்டின் முக்கியத்துவத்தை கீழ்கண்ட இலக்கியச் சான்றுகள் விளக்குகின்றன. சமண நூலான அங்கங்கள், பௌத்த நூல்களான திரிபிடகங்கள் மற்றும் சாதகங்கள் ஆகியவை.
Question 3

கீழ்க்கண்டவற்றுள் சமணம் பௌத்தம் தோன்றியதற்கான காரணங்கள் யாவை

  1. அதிக அளவில் செலவு செய்ய வேண்டியிருந்த வேள்வி சடங்குகள்
  2. மூடநம்பிக்கைகள்
  3. உபநிடத தத்துவங்கள் சாதாரண மக்களுக்கு புரிந்ததால் 
A
1 & 2
B
2 & 3
C
1 & 3
D
அனைத்தும்
Question 3 Explanation: 
பின்வேத காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட சிக்கலான சடங்குகளும் வேள்விகளும், அடிமைமுறை, சாதிமுறை மற்றும் பாலியல் பாகுபாடுகளும் புதிய விழிப்புணர்வு தோன்றுவதற்கு காரணமாயின.
Question 4
சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரர் யார்?
A
நேமிநாதர்
B
பார்சுவநாதர்
C
மகாவீரர்
D
ரிஷபர்
Question 4 Explanation: 
உலகத்தின் மிகப்பழமையான தற்போதும் வாழ்ந்துகொண்டிருக்கும் மதங்களில் சமணமும் ஒன்றாகும். சமணம் 24 தீர்த்தங்கரர்களை மையமாகக் கொண்டது. தீர்த்தங்கரர்கள் பல்வேறு காலங்களில் மதம் தொடர்பான உண்மைகளை போதித்தவர்கள் ஆவர்.
Question 5
மகாவீரர் பிறந்த ஊர் எது?
A
வைசாலி
B
குந்த கிராமம்
C
பவபுரி
D
சாரநாத்
Question 5 Explanation: 
மகாவீரரின் இயற்பெயர் வர்த்தமானர் ஆகும். இவர் வைஷாலிக்கு அருகே உள்ள குந்த கிராமம் என்னும் ஊரில் பீகார் மாநிலத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் சித்தார்த்தர் மற்றும் திரிசலா ஆவர். இவர் பவபுரி என்னும் இடத்தில் இயற்கை எய்தினார்.
Question 6
சமணம் என்ற சொல் _____ என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து பெறப்பட்டது?
A
ஜுனா
B
ஜனா
C
ஜினா
D
ஜனனம்
Question 6 Explanation: 
இதன் பொருள் தன்னையும் வெளி உலகத்தையும் வெல்வது என்பதாகும்.
Question 7
வர்த்தமானவர் என்பதன் பொருள் _____
A
ஒழுக்கமானவர்
B
அன்பானவர்
C
இரக்கம் உடையவர்
D
செழிப்பு
Question 7 Explanation: 
இவர் ஒரு சத்ரிய இளவரசர் ஆவார். இருந்தபோதிலும் அவர் தன்னுடைய முப்பதாவது வயதில் இளவரசர் என்னும் தகுதியை கைவிட்டுவிட்டு துறவறம் மேற்கொண்டார். தீவிரமான தியானத்தை மேற்கொண்டார்.
Question 8
வர்த்தமானர் எத்தனை ஆண்டு கால தவத்திற்கு பின்னர் கைவல்யா என்ற நிலையை அடைந்தார்?
A
10 ½
B
11
C
12 ½
D
14
Question 8 Explanation: 
அதன் பின்னர் அவர் ஜினா ஆனார். இவரை பின்பற்றியவர்கள் சமணர் என்று அழைக்கப்பட்டனர். மகாவீரர் பண்டைய சிரமானிய மரபுகளை மறு ஆய்வு செய்தார். அவற்றின் அடிப்படையில் புதிய கோட்பாடுகளை உருவாக்கினார். இவர்தான் உண்மையிலேயே சமயத்தை உருவாக்கியவர் என நம்பப்படுகிறது.
Question 9

கீழ்க்கண்டவற்றுள் சமணம் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

  1. இவ்வுலகத்தை உருவாக்கியவர் கடவுள் என்பதை சமணம் ஏற்கிறது.
  2. ஒருவருடைய வாழ்வின் நலன் அல்லது தரம் என்பது அவருடைய கர்ம வினையால் தீர்மானிக்கப்படுகிறது என்பதை சமூகம் ஆதரிக்கிறது.
A
1
B
2
C
1 & 2
D
எதுவும் இல்லை
Question 9 Explanation: 
இவ்வுலகத்தை உருவாக்கியவர் கடவுள் என்பதை சமணம் மறுக்கிறது. முக்தி அடைவது அல்லது பிறப்பு-இறப்பு-மறுபிறப்பு என்னும் சுழற்சியில் இருந்து விடுபடுவதே சமணத்தின் இறுதி லட்சியம் ஆகும். இறுதி தீர்ப்பு என்ற நம்பிக்கையை சமணம் மறுக்கிறது ( இறுதித் தீர்ப்பு என்பது யார் சொர்கத்திற்கு செல்வது? யார் நரகத்திற்கு செல்வது? என்பதை கடவுள் தீர்மானிப்பார் என்ற நம்பிக்கை )
Question 10
கீழ்க்கண்டவற்றுள் மகாவீரர் கூறிய மூன்று ரத்தினங்களுள் இல்லாதது எது?
A
நல்லறிவு
B
நல்ல பண்பு
C
நன்னம்பிக்கை
D
நற்செயல்
Question 10 Explanation: 
இவை திரி ரத்தினங்கள் அல்லது மூன்று ரத்தினங்கள் என்று அழைக்கப்படுகிறது. கர்மாவில் இருந்து விடுதலை பெறுவதற்கும் மோட்ச நிலையை அடைவதற்கும் மகாவீரர் மூன்று வழிகளை அறிவுறுத்தினார். மோட்சம் என்பது பிறப்பு மற்றும் இறப்பின் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுதல் ஆகும்.
Question 11
மகாவீரர் ஒழுக்கமான வாழ்வை மேற்கொள்ள எத்தனை கொள்கைகளை போதித்தார்?
A
5
B
6
C
7
D
9
Question 11 Explanation: 
அவை அகிம்சை- எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் இருப்பது, சத்யா- நன்மையை மட்டுமே பேசுதல், அஸ்தேய – திருடாமை, அபரிக்கிரகா- பணம், பொருள் சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமல் இருப்பது, பிரம்மச்சரியா - திருமணம் செய்து கொள்ளலாமை ஆகும்.
Question 12
மகாவீரரின் போதனைகளை தொகுத்தவர் யார்?
A
ஸ்துலாபத்ரா
B
பத்ரபாகு
C
கௌதம சுவாமி
D
சுதர்மன்
Question 12 Explanation: 
மகாவீரரின் தலைமை சீடராக இருந்தவர் கௌதமன் சுவாமி அவர்கள் ஆவார். இவர் மகாவீரரின் போதனைகளை தொகுத்து ஆகம சித்தாந்தம் என பெயரிட்டார்.
Question 13
சமணம் எத்தனை பிரிவுகளாக பிரிந்திருந்தது?
A
2
B
3
C
4
D
6
Question 13 Explanation: 
அவை திகம்பரர் மற்றும் சுவேதம்பரர் ஆகும். திகம்பரர் வைதீக பழமைவாத போக்குடைய சீடர்கள் ஆவர். சுவேதாம்பரர்கள் முற்போக்கானவர்களாக கருதப்படுகிறார்கள்.
Question 14

கீழ்க்கண்டவற்றுள் சுவேதாம்பரர்கள் மற்றும் திகம்பரர்கள் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.

  1. பெண்கள் நேரடியாக விடுதலை பெறவோ நிர்வாண நிலையை அடையவோ முடியாது என திகம்பரர் நம்பினர்.
  2. ஆண்களைப் போலவே பெண்களும் விடுதலைபெற சமமான தகுதிகளை கொண்டுள்ளனர் என சுவேதாம்பரர்கள் நம்புகின்றனர்.
A
1
B
2
C
1 & 2
D
எதுவும் இல்லை
Question 14 Explanation: 
திகம்பரர் பிரிவை சேர்ந்த சமணத்துறவிகள் ஆடைகள் அணிவதில்லை. நிர்வாணமாக வாழ்ந்தனர். அவர்கள் எந்தவிதமான உடைமையையும் வைத்துக்கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது. சுவேதாம்பர பிரிவை சேர்ந்த துறவிகள் வெள்ளை நிற ஆடைகளை அணிகின்றனர்.
Question 15

ரஜோகரனா என்பதன் பொருள்  _____.

A
பருத்தி ஆடை
B
கம்பளி ஆடை
C
பருத்தியைக் கொண்டு நெய்யப்பட்ட போர்வை
D
கம்பளி நூல்களைக் கொண்ட சிறிய துடைப்பம்
Question 15 Explanation: 
ரஜோகரனா, பிச்சைப்பாத்திரம், புத்தகம் ஆகிய உடைமைகளை வைத்துக்கொள்ள சுவேதம்பரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
Question 16

கீழ்க்கண்டவற்றுள் சமண மதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான காரணங்களுள்  சரியானது எது

  1. மக்கள் பேசிய மொழியிலேயே சமண கருத்துக்கள் சொல்லப்பட்டன.
  2. அரசர்கள் மற்றும் வணிகர்களின் ஆதரவு சமண மதத்திற்கு கிடைத்தது.
A
1
B
2
C
1 & 2
D
எதுவும் இல்லை
Question 16 Explanation: 
மேலும் சமணர்களின் போதனைகள் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும்படியாக இருந்தது. அதுமட்டுமின்றி சமணத் துறவிகளின் விடாமுயற்சியால் சமண மதம் இந்தியாவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
Question 17
சமணர் மலை என்ற குன்று எந்த கிராமத்தில் அமைந்துள்ளது?
A
கீழக்குயில்குடி
B
மேலூர்
C
உசிலம்பட்டி
D
மங்குலம்
Question 17 Explanation: 
இது மதுரை நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சமணத் துறவிகளால் உருவாக்கப்பட்ட தீர்த்தங்கரர்களின் உருவங்கள் இம்மலையில் காணப்படுகின்றன. இது இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னமாக உள்ளது.
Question 18
பாண்டவர் படுக்கை என்றழைக்கப்படும் சமணர் குகைகள் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
A
சிவகங்கை
B
தூத்துக்குடி
C
திருநெல்வேலி
D
மதுரை
Question 18 Explanation: 
மதுரையிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரிட்டாபட்டி என்ற கிராமத்தில் கலிஞ்சமலை உள்ளது. இதன் ஒரு பகுதியில் பாண்டவர் படுக்கை என்று அழைக்கப்படும் சமணர் குகைகள் உள்ளன. சமணத்துறவிகளுக்கான கற்படுக்கைகளே பாண்டவர் படுக்கை என அழைக்கப்படுகிறது.
Question 19
அறவோர் பள்ளி என்பது சமண துறவிகள் வாழ்ந்த இடங்கள் என எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
சீவக சிந்தாமணி
D
பட்டினப்பாலை
Question 19 Explanation: 
பண்டைய தமிழிலக்கியங்கள் ஜைனம் என்பதை சமணம் என்று குறிப்பிடுகின்றன. மேலும் கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு செல்லும் வழியில் சமணப் பெண் துறவியான கவுந்தியடிகள் அவர்களை ஆசீர்வதித்து அவர்களுடன் சென்றதாக தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
Question 20
கீழ்க்கண்ட எந்த இடத்தில் சமணர் கோயில் காணப்படவில்லை?
A
திருப்பருத்திக்குன்றம்
B
சித்தன்னவாசல்
C
தியாகனூர்
D
சிதாறல் மலை கோவில்
Question 20 Explanation: 
மேலும் புகார், உறையூர், மதுரை, கருவூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் சமண மடாலயங்கள் இருந்துள்ளன. ஜைன காஞ்சி - காஞ்சிபுரத்தில் உள்ள திருப்பருத்திக்குன்றம் என்ற கிராமத்தில் இரண்டு பழமையான சமணக் கோவில்கள் உள்ளன. இக்கிராமம் முன்னர் ஜைனகாஞ்சி என்று அழைக்கப்பட்டுள்ளது.
Question 21
கௌதம புத்தரின் இயற்பெயர் என்ன?
A
சித்தார்த்தர்
B
புத்தர்
C
கௌதமன்
D
வர்த்தமானர்
Question 21 Explanation: 
பௌத்த மதத்தை நிறுவியவர் கௌதம புத்தர் ஆவார். மகாவீரரை போலவே இவரும் ஒரு சத்திரிய இளவரசர் ஆவார். அரசாட்சி செய்து கொண்டிருந்த சாணக்கிய அரச வம்சத்தில் பிறந்தவர்.
Question 22
புத்தரின் சிற்றன்னை யார்?
A
திரிசாலி
B
மாயாதேவி
C
கௌதமி
D
திரிசலை
Question 22 Explanation: 
புத்தரின் பெற்றோர் சுத்தோதனா மற்றும் மாயாதேவி ஆவர். தாய் மாயாதேவி சித்தார்த்தர் ஏழு நாள் குழந்தையாக இருந்தபோது இயற்கை எய்தினார். எனவே அவருடைய சிற்றன்னை கௌதமி அவரை வளர்த்தார்.
Question 23
கௌதம புத்தர் எந்த நாட்டில் பிறந்தார்?
A
இந்தியா
B
சீனா
C
இலங்கை
D
நேபாளம்
Question 23 Explanation: 
புத்தர் நேபாள நாட்டில் லும்பினி தோட்டம் என்ற இடத்தில் பிறந்தார். மேலும் தன்னுடைய எண்பதாவது வயதில் உத்திரபிரதேசத்தில் உள்ள குசி நகரம் என்னும் இடத்தில் இயற்கை எய்தினார்.
Question 24

கீழ்க்கண்டவற்றுள் புத்தர் துறவறம் மேற்கொள்ள காரணமாக இருந்த காட்சிகள் யாவை

  1. ஒரு துறவி
  2. கவனிப்பாரற்ற முதியவர்
  3. நோயாளி
A
1 & 2
B
2 & 3
C
1 & 3
D
அனைத்தும்
Question 24 Explanation: 
சித்தார்த்தா தனது 29-வது வயதில் நான்கு துயரம் மிகுந்த காட்சிகளைக் கண்டார். அவை கூன் விழுந்த முதுகுடனும், கந்தல் ஆடைகளுடனும் கவனிப்பாரற்ற ஒரு முதியவர், குணப்படுத்த முடியாத வியாதியால் துன்பப்பட்டு கொண்டிருந்த ஒரு நோயாளி, இழந்துவிட்ட ஒரு மனிதனின் சடலம் அழுது கொண்டிருக்கும் அவனின் உறவினர்களால் இடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுதல், ஒரு துறவி.
Question 25
புத்தர் என்பதன் பொருள் என்ன?
A
ஒழுக்கமானவர்
B
இரக்கம் உடையவர்
C
ஞானம் பெற்றவர்
D
சிறந்த கல்வி பெற்றவர்
Question 25 Explanation: 
மனித வாழ்க்கை முழுவதும் துன்பங்களும் துயரங்களும் நிறைந்தது என துயரம் மிகுந்த காட்சிகளை கண்டபோது புத்தர் உணர்ந்தார். எனவே தன்னுடைய 29 ஆம் வயதில் அரண்மனையை விட்டு வெளியேறி துறவறம் மேற்கொண்டார்.
Question 26
புத்தர் தன்னுடைய தியானத்தின் எத்தனையாவது நாள் ஞானம் பெற்றார்?
A
45
B
47
C
48
D
49
Question 26 Explanation: 
தன்னுடைய 29 வயதில் இருந்து ஆறு ஆண்டுகள் கடுமையான தவமிருந்தார். தன்னைத்தானே வருத்திக் கொள்வது விமோச்சினத்திற்கான பாதை அல்ல என்பதை உணர்ந்தார். அதனால் கயாவுக்கு அருகில் ஒரு அரசமரத்தடியில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தை மேற்கொண்டார். தியானத்தின் 49 நாள் அவர் ஞானம் பெற்றார். அப்போதிலிருந்து அவர் புத்தர் என்று அழைக்கப்பட்டார்.
Question 27
புத்தரின் முதல் போதனை நடைபெற்ற இடம் எது?
A
சாரநாத்
B
கயா
C
வைசாலி
D
பாடலிபுத்திரம்
Question 27 Explanation: 
வாரணாசி அருகே உள்ள சாரநாத் என்னுமிடத்திலுள்ள மான்கள் பூங்கா என்ற இடத்தில் புத்தர் தனது முதல் போதனைச் சொற்பொழிவை நிகழ்த்தினார். இது ‘தர்ம சக்கர பரிவர்த்தனா’ அல்லது ‘தர்ம சக்கரத்தை நகர்த்துதல்’ என்று அழைக்கப்படுகின்றது.
Question 28

கீழ்க்கண்டவர்களுள் சாக்கியமுனி என்று அழைக்கப்படுபவர் யார்

A
மகாவீரர்
B
புத்தர்
C
குருநானக்
D
பார்சுவநாதர்
Question 28 Explanation: 
சாக்கிய அரச குடும்பத்தை சேர்ந்த துறவி என்பதால் கௌதம புத்தர் சாக்கிய முனி என்றும் அழைக்கப்பட்டார்.
Question 29

புத்தர் எத்தனை பேருண்மைகளை குறிப்பிட்டுள்ளார்

A
3
B
4
C
6
D
8
Question 29 Explanation: 
அவை வாழ்க்கைத் துன்பங்கள், துயரங்கள் நிறைந்தது. ஆசையே துன்பங்களுக்கான காரணம். ஆசையைத் துறந்து விட்டால் துன்ப துயரங்களை போக்கிவிடலாம். சரியான பாதையை பின்பற்றினால் ஆசைகளை வென்றுவிடலாம்.
Question 30

கீழ்க்கண்டவற்றுள் புத்தரின் எண்வகை வழிகளில் குறிப்பிடப்படாதது எது?

A
நல்ல செயல்
B
நல்ல திறமை
C
நல்ல பேச்சு
D
நல்ல அறிவு
Question 30 Explanation: 
புத்தரின் எண் வகை வழிகளாவன: நல்ல நம்பிக்கை, நல்ல எண்ணம், நல்ல பேச்சு, நல்ல செயல், நல்ல வாழ்க்கை, நல்ல முயற்சி, நல்ல அறிவு, நல்ல தியானம் ஆகும். புத்தரின் போதனைகள் எளிமையாக இருந்தன. மக்கள் பயன்படுத்திய மொழியிலேயே போதிக்கப்பட்டன. புத்தர் சடங்குகளையும் வேள்விகளையும் எதிர்த்தார்.
Question 31

புத்தரின் போதனைகள் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.

  1. புத்தர் கடவுளின் இருப்பை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. மறுக்கவும் இல்லை. ஆனால் பிரபஞ்ச விதிகளை நம்பினார்.
  2. கர்மா கோட்பாட்டை பௌத்தம் ஏற்றுக்கொண்டது.
A
1
B
2
C
1 & 2
D
எதுவும் இல்லை
Question 31 Explanation: 
புத்தரின் போதனைகள் தம்மா என்று குறிப்பிடப்படுகின்றன. புத்தர் அஹிம்சையை வலியுறுத்தினார். சாதிப் படிநிலைகளை புத்தர் நிராகரித்தார். நிர்வாண நிலையை அடைவதே வாழ்க்கையின் இறுதி நோக்கம் என்று புத்தர் வலியுறுத்தினார். வாழ்க்கைச் சக்கரம் - உலகைப் பற்றிய புத்தரின் பார்வையை பிரதிபலிக்கிறது.
Question 32

புத்த சங்கத்தில் இருந்த துறவிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்

A
சீடர்கள்
B
பிட்சுக்கள்
C
மகா துறவிகள்
D
புத்த துறவிகள்
Question 32 Explanation: 
புத்தர் தனது கருத்துக்களை பரப்புவதற்காக சங்கம் ஒன்றை நிறுவினார். அதில் உறுப்பினர்களாக இருந்த துறவிகள் பிட்சுக்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் மிக எளிய வாழ்க்கையை மேற்கொண்டனர்.
Question 33

புத்த  துறவிகள் வாழ்ந்த இடங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன

A
விகாரைகள்
B
ஸ்தூபி
C
சைத்தியம்
D
தியான கூடம்
Question 33 Explanation: 
மேலும் சைத்தியம் என்பது ஒரு பௌத்த கோவில் அல்லது தியான கூடத்தைக் குறிக்கும். விகாரைகள் மடாலயங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஸ்தூபி என்பது புத்தருடைய உடல் உறுப்புகளின் எஞ்சிய பாகங்கள் மீது கட்டப்பட்டிருக்கும் கட்டடம் ஆகும். இவை கலைத் திறமைவாய்ந்த நினைவுச் சின்னங்கள் ஆகும்.
Question 34

பௌத்த மதத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளன

A
2
B
3
C
4
D
6
Question 34 Explanation: 
அவை ஹீனயானம் மற்றும் மகாயானம் ஆகும். ஹீனயானர்கள் புத்தரின் சிலைகளையோ உருவப்படங்களையோ வணங்க மாட்டார்கள். ஆனால் மகாயானர்கள் புத்தரின் உருவங்களை வணங்கினர்.
Question 35

ஹீனயானர்கள் கீழ்கண்ட எந்த மொழியை பயன்படுத்தினர்

A
பாலி
B
பிராகிருதம்
C
சமஸ்கிருதம்
D
பார்சி
Question 35 Explanation: 
மகாயானர்கள் சமஸ்கிருத மொழியை பயன்படுத்தினர். மேலும் ஹீனயானர்கள் தனிமனிதர்கள் முக்தி அடைவது தங்களின் நோக்கம் என்று நம்பினர். அனைத்து உயிரினங்களும் முக்தி அடைவதே தங்களது நோக்கமாக மகாயானர்கள் நம்பினர்.
Question 36

கீழ்க்கண்டவற்றுள் எந்த பிரிவு தேரவாதம் என்று அழைக்கப்படுகிறது

A
மகாயானம்
B
திகம்பரர்கள்
C
சுவேதாம்பரர்கள்
D
ஹூனயானம்
Question 36 Explanation: 
ஹூனயானர்கள் மகாயானர்களைப்போல் விரிவான சடங்குகளைக் பின்பற்றாமல் மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தனர். மகாயானம் மத்திய ஆசியா, இலங்கை, பர்மா, நேபாளம், திபெத், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் பரவியது. இந்நாடுகளில் மத்திம வழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
Question 37

கீழ்கண்டவற்றுள் பௌத்தம் பரவியதற்கான காரணங்களுள் சரியானவை எவை

  1. விரிவான மதச்சடங்குகளை பௌத்தம் நிராகரித்தது.
  2. மக்கள் தம்மத்தை கடைபிடிக்க வேண்டும் என  பௌத்தம் வலியுறுத்தியது
A
1
B
2
C
1 & 2
D
எதுவும் இல்லை
Question 37 Explanation: 
புத்தரின் போதனைகள் மிக எளிமையாக உள்ளூர் மக்கள் பேசிய மொழிகளில் இருந்தன. புத்தரின் கருத்துக்களை பரப்பியதில் பௌத்த சங்கங்கள் முக்கிய பங்கு வகித்தன.
Question 38

கீழ்க்கண்ட எந்தெந்த அரசர்கள் பௌத்த மதத்திற்கு ஆதரவளித்தனர்

  1. அசோகர்
  2. கனிஷ்கர்
  3. ஹர்ஷர்
A
1 & 2
B
2 & 3
C
1 & 3
D
அனைத்தும்
Question 38 Explanation: 
மேலும் பௌத்த விகாரைகள் அல்லது மடாலயங்கள் சிறந்த கல்வி மையங்களாக செயல்பட்டன. அவற்றில் ஒன்று நாளந்தா. அங்கு சீன யாத்திரிகர் யுவான் சுவாங் பல ஆண்டுகள் தங்கி கல்வி பயின்றார்.
Question 39

அஜந்தா குகை ஓவியங்கள் கீழ்க்கண்ட எந்த மதத்தை சித்தரிக்கிறது

  1. சமணம்
  2. பௌத்தம்
  3. சீக்கியம்
A
1
B
2
C
1 & 3
D
அனைத்தும்
Question 39 Explanation: 
மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள அஜந்தா குகைகளின் சுவர்களிலும் மேல் கூரையிலும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பௌத்த ஜாதகக் கதைகளை சித்தரிக்கின்றன. ஜாதகக் கதைகள் புகழ் பெற்றவை. புத்தர் முந்திய பிறவிகளில் மனிதராகவும், விலங்காகவும் இருந்ததை குறித்த கதைகள் ஆகும். இவை அறநெறிகளை கூறுவன.
Question 40
கீழ்க்கண்டவற்றுள் சமண மற்றும் பௌத்த மதம் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
  1. கடவுள் இருப்பதாக சமணம் நம்பவில்லை. ஆனால் ஒவ்வொரு உயிரிலும் ஜீவன் இருப்பதை நம்பியது.
  2. அனாத்மா ( எல்லையற்ற ஆன்மா ) அனித்யா ( நிலையாமை ) ஆகிய கருத்துக்களுக்கு அழுத்தம் வழங்கியது
A
1
B
2
C
1 & 2
D
எதுவும் இல்லை
Question 40 Explanation: 
மேலும் சமணம் தீவிரமான துறவறத்தை பின்பற்றியது. பௌத்தம் இடைப்பட்ட வழியை பின்பற்றியது. இந்தியாவில் மட்டுமே சமண மதம் இருந்தது. உலகத்தின் பல பகுதிகளிலும் பௌத்தம் பரவியது.
Question 41

கீழ்க்கண்டவற்றுள் சமணம் மற்றும் பௌத்த  மதத்திடையே உள்ள ஒற்றுமைகளுள் சரியானது எது

  1. இருவரும் கர்மா என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொண்டனர்.
  2. வேதங்களின் ஆதிக்கத்தை மறுத்தனர்.
  3. இருவரும் கடவுள் இருப்பதை நம்பினர்.
A
1 & 2
B
2 & 3
C
1 & 3
D
அனைத்தும்
Question 41 Explanation: 
மேலும் இருவரும் இரத்த பலிகளை எதிர்த்தனர். மதச் சடங்குகளை நடத்துவதன் மூலம் முக்தி அடைய முடியும் என்பதற்கு மாறாக சரியான நடத்தையும் சரியான அறிவுமே முக்திக்கான வழி எனக் கூறினர். மக்கள் பேசிய மொழிகளிலேயே இருவரும் போதித்தனர்.
Question 42

பொருத்துக.

  1. முதலாவது புத்த மாநாடு          – 1. பாடலிபுத்திரம்
  2. இரண்டாவது புத்த மாநாடு      – 2. ராஜகிருகம் 
  3. மூன்றாவது புத்த மாநாடு         – 3. வைஷாலி
  4. நான்காவது புத்த மாநாடு          – 4. காஷ்மீர்
A
3 2 4 1
B
2 3 1 4
C
4 2 3 1
D
1 3 4 2
Question 43

கீழ்க்கண்டவற்றுள் பௌத்த மதத்தை சார்ந்த நூல் எது

A
மணிமேகலை
B
சீவக சிந்தாமணி
C
சிலப்பதிகாரம்
D
வளையாபதி
Question 43 Explanation: 
சங்க காலத்திற்குப் பின்னர் இயற்றப்பட்ட இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை பௌத்த இலக்கியமாகும். மணிமேகலையில் காஞ்சிபுரம் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
Question 44

யுவான்சுவாங் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தபோது யாரால் கட்டப்பட்ட ஸ்தூபியை கண்டதாக குறிப்பிட்டுள்ளார்

A
கனிஷ்கர்
B
ஹர்ஷர்
C
அசோகர்
D
சந்திரகுப்தர்
Question 44 Explanation: 
காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஒரு பௌத்த மையம் ஆகும். பௌத்த தர்க்கவியல் அறிஞரான தின்னகர் மற்றும் நாளந்தா பல்கலைக்கழகத்தின் மிகப்பெரும் அறிஞர் தர்மபாலர் இவ்வூரைச் சேர்ந்தவர்கள் ஆவர். கி.பி ஏழாம் நூற்றாண்டில் யுவான்சுவாங் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார். அங்கு அசோகரால் கட்டப்பட்ட 100 அடி உயரமுள்ள ஸ்தூபியை அவர் பார்த்ததாய் குறிப்பிட்டுள்ளார்.
Question 45
கீழ்க்கண்டவற்றை சரியாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
  1. சீனா  -  ஜொராஸ்டிரியனிசம்
  2. பாரசீகம் – கன்பூசியனிசம்
A
1
B
2
C
1 & 2
D
எதுவும் இல்லை
Question 45 Explanation: 
இந்தியாவில் சமணம் மற்றும் பௌத்தம் பரவ தொடங்கிய காலமான ஆறாம் நூற்றாண்டில் சீனாவில் கன்பூசியனிசம் மற்றும் பாரசீகத்தில் ஜொராஸ்டிரியனிசம் பரவியது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 45 questions to complete.

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!