Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTnpsc Exam

பன்முகத்தன்மையினை அறிவோம் – Online Test 6th Social Science Lesson 7 Questions in Tamil

பன்முகத்தன்மையினை அறிவோம் - Online Test 6th Social Science Lesson 7 Questions in Tamil

Congratulations - you have completed பன்முகத்தன்மையினை அறிவோம் - Online Test 6th Social Science Lesson 7 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1

பொருத்துக

  1. தமிழ் – 1. ஓணம் 
  2. மலையாளம் – 2. ஹோலி 
  3. இந்தி – 3. பொங்கல்
A
2 1 3
B
1 3 1
C
3 2 1
D
3 1 2
Question 1 Explanation: 
மேலும் தமிழக மக்கள் அரிசியையும், மலையாள மக்கள் புட்டு மற்றும் இந்தி மக்கள் சப்பாத்தி போன்ற உணவு முறைகளை கொண்டுள்ளனர். இவ்வாறு மக்கள் தங்கள் வாழ்க்கை முறையில் வேறுபட்டிருக்கிறார்கள். பல்வேறுபட்ட பின்புலங்கள், பண்பாடுகள், வழிபாட்டு முறைகளை சார்ந்து இருப்பினும் ஒற்றுமையாக வாழ்வதே பன்முகத்தன்மை என்று அறியப்படுகிறது.
Question 2

கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு

  1. இந்தியா ஏறத்தாழ ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகரிகத்தின் தாயகமாக விளங்குகிறது
  2. நிலம் வழியாகவும் கடல் வழியாகவும் பல்வேறு இனமக்கள் இந்தியாவிற்குள் இடம்பெயர்ந்தனர்
A
1
B
2
C
1 & 2
D
எதுவும் இல்லை
Question 2 Explanation: 
இந்தியாவில் காணப்பட்ட பல்வேறு வளங்களால் ஈர்க்கப்பட்டு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு இன மக்கள் வந்தனர். சிலர் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து வணிகம் செய்யவும் மற்றவர்கள் படையெடுப்பு காரணமாகவும் இந்தியாவிற்கு வருகை தந்தனர். ஆகையால் திராவிடர்கள், நீக்ரிட்டோக்கள், ஆரியர்கள், ஆல்பைன்கள் மற்றும் மங்கோலியர்கள் போன்றோர் நவீன இந்திய இனத்தவரின் ஒரு பகுதியாக உள்ளனர்.
Question 3

இந்திய துணை கண்டம் என்று அழைக்கப்பட காரணம் யாவை

 
  1. மலைகள் அமைந்திருப்பதால்
  2. கடல்கள் அமைந்திருப்பதால்
  3. சமவெளிகள் அமைந்திருப்பதால்
A
1 & 2
B
2 & 3
C
1 & 3
D
அனைத்தும்
Question 3 Explanation: 
கண்டம் எனப்படுவது மலைகள், பீடபூமிகள், சமவெளிகள், ஆறுகள், கடல்கள் போன்ற பல்வேறு இயற்கை பிரிவுகள் மற்றும் கால நிலைகளைக் கொண்ட மிகப் பரந்த நிலப்பரப்பாகும். இவ்வனைத்தையும் இந்தியா பெற்றிருப்பதால் இந்தியா துணை கண்டம் என்று அழைக்கப்படுகிறது.
Question 4

அதிக மழைபெறும் பகுதியான மௌன்சிராம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது

A
மேகாலயா
B
திரிபுரா
C
நாகாலாந்து
D
சிக்கிம்
Question 4 Explanation: 
ஒரு பகுதியின் பொருளாதார நடவடிக்கைகளை அதன் நிலவியல் மற்றும் காலநிலை கூறுகள் தான் தீர்மானிக்கின்றன. கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர் என்றால் சமவெளிகளில் வாழும் மக்கள் வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுகின்றனர். மேலும் மலைப் பகுதிகளில் நிலவும் காலநிலையானது காபி, தேயிலை போன்ற தோட்டப்பயிர் தொழிலுக்கு உகந்ததாக உள்ளது.
Question 5

ராஜஸ்தானின் எந்தப் பகுதி குறைவான மழைப் பெறும் பகுதியாக உள்ளது?

A
ஜெய்ப்பூர்
B
ஜோத்பூர்
C
ஜெய்சால்மர்
D
கோட்டா
Question 5 Explanation: 
நில அமைப்பில் காணப்படும் பன்முகத்தன்மை அப்பகுதியில் வளரும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு பகுதியின் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வளம் என்பது அப்பகுதியில் நிலவும் இயற்கை மற்றும் கால நிலையை பொருத்து மாறுபடுகிறது.
Question 6

ஒரு சமூகத்தின் அடிப்படை அலகு எது

A
தனிமனிதன்
B
ஊர் தலைவர்
C
சமுதாயம்
D
குடும்பம்
Question 6 Explanation: 
சமூகம் என்பது ஒரு பொது நலத்திற்காக மக்கள் இணைந்து வாழும் இடமாகும். நமது சமுதாயம் என்பது விவசாயிகள், தொழிலாளர்கள், கைவினைஞர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணாக்கர் போன்ற பலரையும் உள்ளடக்கியது ஆகும். மக்களின் மேம்பட்ட வாழ்க்கை முறைக்கு சமுதாயங்கள் ஒன்றையொன்று சார்ந்துள்ளன.
Question 7

குடும்பம் எத்தனை வகைப்படும்

A
2
B
3
C
4
D
5
Question 7 Explanation: 
அவை கூட்டு குடும்பம் மற்றும் தனி குடும்பம் ஆகும். பல குடும்பங்கள் சேர்ந்து இணக்கமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மேலும் பல குடியிருப்புகள் இணைந்து கிராமங்களாகவும், நகரங்களாகவும் உருவாகின்றன.
Question 8
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.
  1. அனைத்து மதங்களும் சமமானது என்று நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் அறிவிக்கிறது.
  2. இந்து மதம், இஸ்லாமிய மதம், கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், புத்த மதம், சமணமதம், ஜொராஸ்டிரிய மதம் போன்ற எண்ணற்ற மதங்கள் இந்தியாவில் தழைத்தோங்கி உள்ளன
A
1
B
2
C
1 & 2
D
எதுவும் இல்லை
Question 8 Explanation: 
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு ஆகும். மத விடுதலை நமது அடிப்படை உரிமை. இந்தியா பல மதங்களின் தாயகமாகும். மேலும் பல மதங்களின் புகலிடமாகவும் விளங்குகிறது.
Question 9

கீழ்கண்டவற்றுள் இந்தியாவில் கொண்டாடப்படும் விழாக்கள் யாவை

  1. மிலாது நபி
  2. குருநானக் ஜெயந்தி
  3. ரக்ஷா பந்தன்
  4. புத்த பூர்ணிமா
A
1, 2 & 3
B
2, 3 & 4
C
1, 3 & 4
D
அனைத்தும்
Question 9 Explanation: 
இந்தியா பல்வேறு விழாக்களின் தாயகமாகும். இந்தியாவில் பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் பல்வேறு விழாக்களை நாட்டின் பல பகுதிகளிலும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக கொண்டாடுகின்றனர். இந்திய விழாக்கள் ஆன பொங்கல், தீபாவளி, ஹோலி, விஜயதசமி, ஆயுத பூஜை, நவராத்திரி, துர்கா பூஜை, தசரா, விநாயகர் சதுர்த்தி, பிஹு, கும்பமேளா, ஓணம், கிறிஸ்துமஸ், ரம்ஜான், மகாவீர் ஜெயந்தி போன்ற விழாக்கள் இந்தியாவின் பண்பாட்டு பன்முகத்தன்மைகான ஆதாரமாக விளங்குகிறது.
Question 10

2001 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் உள்ள முக்கிய மொழிகளின் எண்ணிக்கை யாது

A
122
B
135
C
144
D
155
Question 10 Explanation: 
இந்தியாவில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியா 122 முக்கிய மொழிகளையும், 1599 பிற மொழிகளையும் கொண்டுள்ளது.
Question 11

இந்தியாவில் உள்ள மொழி குடும்பங்களின் எண்ணிக்கை யாது

A
2
B
3
C
4
D
6
Question 11 Explanation: 
அவை இந்தோ-ஆரிய மொழிக்குடும்பம், திராவிட மொழிக் குடும்பம், ஆஸ்ட்ரோ ஆஸ்டிக் மொழிக்குடும்பம் மற்றும் சீன திபெத்திய மொழி குடும்பம் ஆகும். தமிழ் மொழியானது பழமையான திராவிட மொழிக் குடும்பம் ஆகும்.
Question 12

கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது

A
வங்காளம்
B
இந்தி
C
தெலுங்கு
D
தமிழ்
Question 12 Explanation: 
2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தி மொழியானது 41.03% மக்களால் பேசப்படுகிறது. இதைத் தொடர்ந்து வங்காளம் – 8.10%, தெலுங்கு – 7.19%, மராத்தி – 6.99%, தமிழ் – 5.91% மக்களால் பேசப்படுகிறது.
Question 13

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை எத்தனை

A
20
B
21
C
22
D
24
Question 13 Explanation: 
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையின் படி 22 மொழிகள் அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
Question 14

எந்த ஆண்டில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது

A
2003
B
2004
C
2005
D
2006
Question 14 Explanation: 
2004 ஆம் ஆண்டு தமிழ் மொழி முதல் செம்மொழியாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. தற்போது வரை 6 மொழிகள் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Question 15

பண்பாடு என்ற சொல்லானது கீழ்க்கண்ட எவற்றைக் குறிக்கிறது

  1. மொழி
  2. சமூகப் பழக்க வழக்கங்கள்
  3. இசை
  4. கட்டிடக்கலை
A
1, 2 & 3
B
2, 3 & 4
C
1, 3 & 4
D
அனைத்தும்
Question 15 Explanation: 
பண்பாடு என்ற சொல்லானது மக்களின் மொழி, உடை, உணவு முறை, மதம், சமூக பழக்கவழக்கங்கள், இசை, கலை மற்றும் கட்டிடக் கலைகளின் பாரம்பரியத்தை குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட மக்களின் பண்பாடு அவர்களின் சமூக நடத்தையிலும் மற்றும் சமூக தொடர்புகளிலும் வெளிப்படுகிறது. இது சமூக வடிவமைப்புகளால் முன்னிறுத்தப்படும் குழு அடையாளத்தின் வளர்ச்சிநிலை ஆகும். மேலும் இவை ஒரு குழுவிற்கு மட்டுமேயான தனித்த அடையாளங்கள் ஆகும்.
Question 16

இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை யாது

A
28, 6
B
29, 6
C
28, 7
D
29, 7
Question 16 Explanation: 
ஒவ்வொரு மாநிலமும் அவற்றிற்கான உயர்ந்த மரபையும் மற்றும் நுண்ணிய கலை வெளிப்பாட்டு வடிவங்களை பெற்றிருக்கின்றன.
Question 17

இந்திய தொல்லியல் துறை இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டுச் சான்றுகளில் எத்தனை சதவீதம் தமிழ்நாட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

A
60%
B
65%
C
70%
D
75%
Question 17 Explanation: 
இவற்றில் பெரும்பாலானவை தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன.
Question 18

கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவில் பின்பற்றப்படும் இசை வடிவங்கள் யாவை

  1. லாவணி இசை
  2. கஜல் இசை
  3. நாட்டுப்புற இசை
  4. கர்நாடக இசை
A
1 & 2
B
2 & 3
C
3 & 4
D
அனைத்தும்
Question 18 Explanation: 
இசையும் நடனமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது. இந்தியாவில் பல்வேறு வகையான இசை வடிவங்கள் பின்பற்றப்படுகின்றன. அவை இந்துஸ்தானி இசை, கர்நாடக இசை, தமிழ் செவ்வியல் இசை, நாட்டுப்புற இசை, லாவணி இசை மற்றும் கஜல் இசை ஆகும். இந்த இசை வடிவங்களில் சேர்க்கப்பட்ட ஏராளமான பாடல்கள் பல மொழிகளிலும் காணக்கிடைக்கின்றன.
Question 19

கீழ்க்கண்டவற்றுள் நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வால் ஒரே தேசத்தால் ஒன்றுபட்டு வாழ காரணமாக இருப்பவை யாவை

  1. நாட்டுப்பற்று என்ற உணர்வு
  2. தேசிய சின்னங்கள்
  3. தேசிய விழாக்கள்
  4. இந்தியாவின் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள்
A
2 & 3
B
1 & 4
C
2 & 4
D
அனைத்தும்
Question 19 Explanation: 
இந்தியா பன்முகத்தன்மை நிறைந்த நாடாக இருப்பினும் நாட்டுப்பற்று என்ற உணர்வால் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். நம் நாட்டின் தேசிய சின்னங்களான தேசிய கொடி, தேசியகீதம் போன்றவையும் நாட்டின் ஒற்றுமைக்கு வழிவகுக்கிறது. சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்கள் தேசிய விழாக்களாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மேலும் நமது விடுதலைப் போராட்டங்களும், இந்திய அரசியலமைப்புச் சட்டமும் இந்தியாவின் ஒற்றுமைக்கு சான்றாக திகழ்கின்றன.
Question 20

பொருத்துக.

  1. அசாம் - யக்ஷகானம் 
  2. கர்நாடகாசத்ரியா 
  3. வட இந்தியாகுச்சுப்புடி
  4. ஆந்திர பிரதேசம்கதக்
A
2 1 3 4
B
3 2 1 4
C
2 1 4 3
D
4 2 3 1
Question 20 Explanation: 
பண்டைய காலங்களில் நடனம் என்பது வழிபாடு மற்றும் கொண்டாட்டத்திற்கான வழியாகவும், மகிழ்ச்சி மற்றும் நன்றியை வெளிப்படுத்துவதற்கான பாவனையாகவும் கருதப்பட்டது. இந்திய நடனங்கள் மூலம் நமது உயர்ந்த பண்பாடு வெளிப்படுகிறது. மேலும் கேரளா – கதகளி, தமிழ்நாடு – பரதநாட்டியம், மணிப்பூர் – மணிப்புரி, ஒடிசா - ஓடிசி போன்ற நடனங்கள் அந்தந்த மாநிலங்களின் பெருமையை பறைசாற்றுகிறது.
Question 21

தவறாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.

  1. குஜராத்தும்ஹல்
  2. ராஜஸ்தான்கூமர் 
  3. அசாம்பிஹு 
A
1
B
3
C
2 & 3
D
1 & 2
Question 21 Explanation: 
குஜராத் – கார்பா மற்றும் தாண்டியா, ஜம்மு மற்றும் காஷ்மீர் - தும்ஹல், தமிழ்நாட்டில் – கரகாட்டம், ஒயிலாட்டம், கும்மி, தெருக்கூத்து, பொம்மலாட்டம், புலியாட்டம், கோலாட்டம் மற்றும் தப்பாட்டம் போன்ற நடனங்கள் புகழ் பெற்று விளங்குகின்றன.
Question 22

சரியாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.

  1. கேரளாதெய்யம் 
  2. பஞ்சாப்பங்க்ரா 
  3. ராஜஸ்தான்கல்பேலியா 
  4. உத்திரபிரதேசம்  - சோலியா 
A
1, 2 & 3
B
2, 3 & 4
C
1, 3 & 4
D
அனைத்தும்
Question 22 Explanation: 
மேலும் உத்திரபிரதேசத்தின் ராஸலீலா, கேரளாவின் மோகினி ஆட்டம் போன்ற நாடகங்கள் புகழ்பெற்று விளங்குகின்றன.
Question 23

டிஸ்கவரி ஆஃப் இந்தியாஎன்ற நூலை எழுதியவர் யார்

A
ஜவஹர்லால் நேரு
B
லால் பகதூர் சாஸ்திரி
C
சர்தார் வல்லபாய் படேல்
D
B.R. அம்பேத்கர்
Question 23 Explanation: 
இந்தியா “வேற்றுமையில் ஒற்றுமை” உள்ள நாடாக விளங்குகிறது என்ற சொற்றொடரானது நமது சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.
Question 24
இந்தியாவை  “இனங்களின் அருங்காட்சியகம்” என்று கூறியவர் யார்?
A
ச. அகத்தியலிங்கம்
B
வி.ஏ.ஸ்மித்
C
சி.வை. தாமோதரனார்
D
மு. வரதராசனார்
Question 24 Explanation: 
இந்தியாவில் பல்வேறு இன மக்கள் காணப்படுவதால் இந்தியாவை இனங்களின் அருங்காட்சியகம் என வரலாற்றாசிரியர் வி.ஏ.ஸ்மித் அவர்கள் கூறியுள்ளார்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 24 questions to complete.

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!