Online TestTnpsc Exam
பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் – Online Test 6th Social Science Lesson 5 Questions in Tamil
பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்-Online Test 6th Social Science Lesson 5 Questions in Tamil
Congratulations - you have completed பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்-Online Test 6th Social Science Lesson 5 Questions in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- கூற்று 1: பேரண்டம் என்பது மிகப்பரந்த விண்வெளி ஆகும்.
- கூற்று 2: சுமார் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெரு வெடிப்பின் போது பேரண்டம் உருவானதாக பல வானியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 1 Explanation:
(குறிப்பு : சுமார் 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெரு வெடிப்பின் போது பேரண்டம் உருவானதாக பல வானியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.)
Question 2 |
ஈர்ப்பு விசையால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு இருக்கும் நட்சத்திரங்களின் தொகுப்பு___________.
பேரண்டம் | |
சூரியக் குடும்பம் | |
விண்மீன் திரள் மண்டலம் | |
விண்கற்கள் |
Question 2 Explanation:
(குறிப்பு: வான்வெளியில் விண்மீன் திரள் மண்டலங்கள் சிதறியும், குழுவாகவும் காணப்படுகின்றன.)
Question 3 |
பெருவெடிப்பு நிகழ்வுக்குப் பிறகு சுமார்__________ வருடங்களுக்குப் பின் பால்வெளி விண்மீன் திரள்மண்டலம் உருவானது.
10 பில்லியன் | |
10 மில்லியன் | |
5 பில்லியன் | |
6 மில்லியன் |
Question 3 Explanation:
(குறிப்பு: நமது சூரியக் குடும்பம் பால்வெளி விண்மீன் திரள் மண்டலத்தில் காணப்படுகிறது.)
Question 4 |
புவிக்கு அருகில் காணப்படும் விண்மீன் திரள் மண்டலங்கள் எவை?
- ஆண்ட்ரோமெடா
- ட்ரைட்டன்
- மெகல்லனிக் க்ளவுட்ஸ்
- டீமஸ்
1, 2 | |
2, 3 | |
1, 3 | |
1, 4 |
Question 5 |
- கூற்று 1: ஒளியின் திசைவேகம் வினாடிக்கு 3,00,000 கி.மீ ஆகும்.
- கூற்று 2: ஒலியானது வினாடிக்கு 330 மீட்டர் என்ற வேகத்தில் பயணிக்கும்.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 5 Explanation:
(குறிப்பு: ஓர் ஒளியாண்டு என்பது ஒளி ஓர் ஆண்டில் பயணிக்கக்கூடிய தொலைவு ஆகும்.)
Question 6 |
சூரியக் குடும்பம் சுமார் __________ வருடங்களுக்கு முன்பு உருவானதாக நம்பப்படுகிறது.
8 பில்லியன் | |
6.7 பில்லியன் | |
4.5 பில்லியன் | |
5.6 பில்லியன் |
Question 6 Explanation:
(குறிப்பு: சூரியன், எட்டுக் கோள்கள், குறுளைக் கோள்கள், துணைக்கோள்கள், வால் நட்சத்திரங்கள், சிறுகோள்கள் மற்றும் விண்கற்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது சூரியக் குடும்பம். இஃது ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டுள்ள ஓர் அமைப்பாகும்.)
Question 7 |
சூரியன் சூரியக் குடும்பத்தின் மொத்த நிறையில் எத்தனை சதவிகிதம் உள்ளது?
90.9 % | |
98.0 % | |
99.5 % | |
99.8% |
Question 8 |
சோலார் என்ற பதமானது ‘சூரியக் கடவுள்’ எனப் பொருள்படும் Sol என்ற ___________ மொழி வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
பிரெஞ்சு | |
ஆங்கிலம் | |
கிரேக்கம் | |
இலத்தீன் |
Question 8 Explanation:
(குறிப்பு: சூரியன் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற வெப்பமான வாயுக்களால் ஆனது.)
Question 9 |
காஸ்மாஸ் என்பது__________மொழிச் சொல்லாகும்.
இலத்தீன் | |
ஆங்கிலம் | |
சமஸ்கிருதம் | |
கிரேக்கம் |
Question 9 Explanation:
(குறிப்பு: அண்டத்தை பற்றிய படிப்பிற்கு அண்டவியல் (Cosmology) என்று பெயர்.)
Question 10 |
- கூற்று 1: சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 6000 °C.
- கூற்று 2: சூரியனின் வெப்பநிலை புவியின் மேற்பரப்பை வந்தடைய சுமார் 8.3 நிமிடங்கள் ஆகின்றது.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 10 Explanation:
(குறிப்பு: சூரியன் 1.3 மில்லியன் புவிகளை தனக்குள்ளே அடக்கக்கூடிய வகையில் மிகப் பெரியதாகும்.)
Question 11 |
சூரியனை கடிகார திசையில் சுற்றி வரும் கோள்கள் எவை?
- செவ்வாய்
- வெள்ளி
- நெப்டியூன்
- யுரேனஸ்
1, 2 | |
1, 3 | |
2, 3 | |
2, 4 |
Question 11 Explanation:
(குறிப்பு: வெள்ளி மற்றும் யுரேனஸ் கோள்களைத் தவிர பிற கோள்கள் அனைத்தும் சூரியனை எதிர் கடிகாரச்சுற்றில், அதாவது மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றி வருகின்றன. இவ்வாறு கோள்கள் சூரியனைச் சுற்றி வரக்கூடிய பாதை சுற்றுப்பாதை எனப்படுகிறது.)
Question 12 |
- கூற்று 1: கோள் என்றால் சுற்றிவருபவர் என்று பொருள்.
- கூற்று 2: கோள்கள் அனைத்தும் தத்தமது பாதையை விட்டு விலகாமல் சூரியனைச் சுற்றி வருவதற்குச் சூரியன் ஈர்ப்பு விசையே காரணமாகும்.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 12 Explanation:
(குறிப்பு: சூரியக் குடும்பத்தில் எட்டுக் கோள்கள் உள்ளன. அவை புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகும்.)(குறிப்பு: சூரியக் குடும்பத்தில் எட்டுக் கோள்கள் உள்ளன. அவை புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகும்.)
Question 13 |
‘வாள் நிற விசும்பின் கோள் மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு’ என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
பெரும்பாணாற்றுப்படை | |
புறநானூறு | |
சிறுபாணாற்றுப்படை | |
பதிற்றுப்பத்து |
Question 13 Explanation:
(குறிப்பு: பண்டைத் தமிழர்கள் சூரியன் மற்றும் பிற கோள்களைப் பற்றி அறிந்திருந்தனர் என்பது சங்க இலக்கியங்கள் வாயிலாக நமக்கு புலனாகிறது.)
Question 14 |
கீழ்க்கண்டவற்றுள் புவிநிகர் கோள்கள் என்று அழைக்கப்படுபவை எவை?
- வெள்ளி
- செவ்வாய்
- புதன்
- புவி
1, 3, 4 | |
1, 2 | |
1, 2, 3 | |
அனைத்தும் |
Question 14 Explanation:
(குறிப்பு: புவிநிகர் கோள்கள் ‘உட்புறக் கோள்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.)
Question 15 |
உட்புறக் கோள்களின் பண்புகளில் தவறானதை தேர்ந்தெடு.
- பாறைகளால் ஆனவை.
- அளவில் சிறியவை.
- மேற்பரப்பில் மலைகள், எரிமலைகள் மற்றும் தரைக் குழிவுப் பள்ளங்கள் காணப்படுகின்றன.
- வாயுக்களால் நிரம்பிக் காணப்படுவதால் வளிமக்கோள்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
2, 3 தவறு | |
2 மட்டும் தவறு | |
2 மட்டும் தவறு | |
4 மட்டும் தவறு |
Question 16 |
கீழ்க்கண்டவற்றுள் வளிமக் கோள்கள் என்று அழைக்கப்படுபவை எவை?
- சனி
- யுரேனஸ்
- வியாழன்
- நெப்டியூன்
- புளுட்டோ
1, 3, 5 | |
1, 2, 4, 5 | |
1, 2, 5 | |
1, 2, 3, 4 |
Question 16 Explanation:
(குறிப்பு: இக்கோள்கள் வாயுக்களால் நிரம்பிக் காணப்படுவதால் ‘வளிமக் கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. வளிமக்கோள்கள் ‘வெளிப் புறக்கோள்கள்’ அல்லது ‘வியாழன் நிகர் கோள்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.)
Question 17 |
சிறு கோள் மண்டலம் எந்தெந்த கோள்களுக்கிடையே காணப்படுகிறது?
புதன், வெள்ளி | |
வியாழன், சனி | |
செவ்வாய், வியாழன் | |
சனி, யுரேனஸ் |
Question 17 Explanation:
(குறிப்பு: சூரியனைச் சுற்றி வரும் சிறிய திடப்பொருள்களே சிறுகோள்கள் எனப்படும். அவை அளவில் மிகவும் சிறியதாக இருப்பதால் கோள்கள் என அழைக்கப்படுவதில்லை.)
Question 18 |
புதன் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
கிரேக்கக் கடவுள்களின் தூதுவரான மெர்குரியின் பெயரால் அழைக்கப்படுகிறது. | |
இக்கோளில் நீரோ, வாயுக்களோ கிடையாது. | |
இக்கோளில் வளிமண்டலம் இல்லாததால் பகல் பொழுதில் அதிக வெப்பநிலையும், இரவு நேரத்தில் கடுங்குளிரும் காணப்படும். | |
புதன் கோளுக்கு துணைக்கோள்கள் எதுவுமில்லை. |
Question 18 Explanation:
(குறிப்பு: ரோமானியக் கடவுள்களின் தூதுவரான மெர்குரியின் பெயரால் அழைக்கப்படுகிறது. அதிகாலைப் பொழுதிலும், அந்திப் பொழுதிலும் புதன் கோளை நாம் வெற்றுக் கண்களால் காணமுடியும்.)
Question 19 |
வெள்ளி குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
புவியைப் போன்றே ஒத்த அளவுள்ளதால் வெள்ளியும் புவியும் இரட்டைக்கோள்கள் என அழைக்கப்படுகின்றன. | |
தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 234 நாள்கள் எடுத்துக் கொள்கிறது. | |
அன்பு மற்றும் அழகைக் குறிக்கும் ரோமானிய கடவுளான வீனஸ் என்ற பெயரால் இக்கோள் அழைக்கப்படுகிறது. | |
இதன் சுழலுதல் காலம் மற்ற கோள்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. |
Question 19 Explanation:
(குறிப்பு: தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 243 நாள்கள் எடுத்துக் கொள்கிறது. வெள்ளி மற்ற கோள்களைக் காட்டிலும் மிகவும் மெதுவாக சுற்றுகிறது.)
Question 20 |
நிலவிற்கு அடுத்தப்படியாக இரவில் பிரகாசமாகத் தெரியும் விண்பொருள் ________.
வால் நட்சத்திரம் | |
புதன் | |
வெள்ளி | |
சனி |
Question 20 Explanation:
(குறிப்பு: காலையிலும் மாலையிலும் விண்ணில் காணப்படுவதால் இக்கோளை ‘விடிவெள்ளி’ மற்றும் ‘அந்திவெள்ளி’ என்று அழைக்கின்றோம்.)
Question 21 |
சூரியனிடமிருந்து மூன்றாவதாக அமைந்துள்ள புவி எத்தனையாவது பெரிய கோளாகும்?
3 | |
4 | |
5 | |
6 |
Question 21 Explanation:
(குறிப்பு: புவியின் மேற்பரப்பானது நான்கில் மூன்று பகுதி நீரால் சூழப்பட்டுள்ளதால் நீலக்கோள் என்றும் நீர்க்கோள் என்றும் அழைக்கப்படுகிறது.)
Question 22 |
ரோமானிய மற்றும் கிரேக்கக் கடவுள்களின் பெயரால் அழைக்கப்படாத ஒரே கோள் எது?
சனி | |
வெள்ளி | |
புவி | |
செவ்வாய் |
Question 22 Explanation:
(குறிப்பு: புவியில் நிலம், நீர் மற்றும் வளிமண்டலம் காணப்படுவதால் உயிரினங்கள் வாழத் தகுதியான சூழல் நிலவுகிறது. புவியின் ஒரே துணைக்கோள் நிலவாகும்.)
Question 23 |
- கூற்று 1: புவியின் துருவ விட்டம் 12, 714 கி.மீ.
- கூற்று 2: நிலநடுக்கோட்டுவிட்டம் 12,576 கி.மீ.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 23 Explanation:
(குறிப்பு: நிலநடுக்கோட்டுவிட்டம் 12,756 கி.மீ. ஆகும்.)
Question 24 |
புவி சூரியனை வினாடிக்கு_________ கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது.
20 | |
25 | |
30 | |
35 |
Question 25 |
சூரியனுக்கும் புவிக்கும் இடையே உள்ள தொலைவு எத்தனை கிலோமீட்டர்?
350 மில்லியன் கி.மீ | |
350 பில்லியன் கி.மீ | |
150 மில்லியன் கி.மீ | |
150 பில்லியன் கி.மீ |
Question 25 Explanation:
(குறிப்பு: மணிக்கு 800 கி.மீ வேகத்தில் செல்லும் வானூர்தி சூரியனை சென்றடைய 21 வருடங்கள் ஆகும்.)
Question 26 |
- கூற்று 1: செவ்வாய் கோளானது அளவில் புதனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது சிறிய கோளாகும்.
- கூற்று 2: செவ்வாய் கோள் ரோமானியர்களின் முதன்மைக் கடவுள் பெயரால் அழைக்கப்படுகிறது.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 26 Explanation:
(குறிப்பு: செவ்வாய் கோள் ரோமானிய போர்க் கடவுள் 'மார்ஸ்’ பெயரால் அழைக்கப்படுகிறது.)
Question 27 |
செவ்வாயின் மேற்பரப்பில்__________ உள்ளதால் செந்நிறமாக தோற்றமளிக்கிறது.
மெக்னீசியம் ஆக்சைடு | |
ஃபெர்ரஸ் சல்பைடு | |
அம்மோனியம் ஆக்சைடு | |
இரும்பு ஆக்சைடு |
Question 27 Explanation:
(குறிப்பு: செந்நிறமாக தோற்றமளிப்பதால் செவ்வாய் சிவந்த கோள் என அழைக்கப்படுகிறது.)
Question 28 |
- கூற்று 1: செவ்வாய் கோளின் வளிமண்டலம் மிகவும் மெல்லியதாகும்.
- கூற்று 2: செவ்வாயின் துருவப் பகுதிகளில் புவியைப் போன்றே பனியுறைகள் காணப்படுகின்றன
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 29 |
பின்வருவனவற்றுள் செவ்வாயின் துணைக்கோள்கள் எவை?
- ஃபோபஸ்
- கனிமீடு
- கேலிஸ்டோ
- டீமஸ்
1, 2 | |
2, 3 | |
1 , 3 | |
1, 4 |
Question 29 Explanation:
(குறிப்பு: செவ்வாய்க் கோளானது ஃபோபஸ்,டீமஸ் என்ற இரு துணைக்கோள்களைக் கொண்டுள்ளது.)
Question 30 |
ISRO செவ்வாய்க் கோளின் வளிமண்டலம் மற்றும் தரைப் பகுதியை ஆராய்வதற்காக__________ அன்று மங்கள்யான் எனப்படும் விண்கலத்தை அனுப்பியது.
24.06.2012 | |
24.06.2014 | |
24.09.2014 | |
24.09.2012 |
Question 30 Explanation:
(குறிப்பு: இந்தியா செவ்வாய்க் கோளினை ஆராயும் நாடுகளின் பட்டியலில் ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், நாஸா, ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அடுத்ததாக நான்காம் இடத்தில் உள்ளது.)
Question 31 |
ரோமானியர்களின் முதன்மைக் கடவுளின் பெயரால் அழைக்கப்படும் கோள்
சனி | |
யுரேனஸ் | |
நெப்டியூன் | |
வியாழன் |
Question 31 Explanation:
(குறிப்பு: சூரியக் குடும்பத்தின் மிகப் பெரியக் கோளான வியாழன் சூரியனிடமிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ளது.)
Question 32 |
வியாழன் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
நிலா மற்றும் வெள்ளி கோளுக்கு அடுத்ததாக பிரகாசமாக விண்ணில் தெரிவது வியாழன் ஆகும். | |
தன் அச்சில் மிக வேகமாக சுழலக் கூடிய கோள் வியாழன் | |
சூரியனை போன்றே இதன் வளிமண்டலத்திலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் காணப்படுகின்றன. | |
நான்கு துணைக்கோள்களை மட்டுமே கொண்டுள்ளது. |
Question 32 Explanation:
(குறிப்பு: வியாழன் மிக அதிகமான துணைக்கோள்களை கொண்டுள்ளது. துணைக்கோள்களின் எண்ணிக்கை 67)
Question 33 |
கீழ்க்கண்டவற்றுள் வியாழனின் துணைக்கோள்கள் எவை?
- யூரோப்பா
- டைட்டன்
- டிரைட்டன்
- கேலிஸ்டோ
1, 2 | |
2, 3 | |
1, 3 | |
1, 4 |
Question 33 Explanation:
(குறிப்பு: அயோ, யூரோப்பா, கனிமீடு மற்றும் கேலிஸ்டோ ஆகியன சில மிகப் பெரிய துணைக்கோள்கள் உள்ளன.)
Question 34 |
சூரியக் குடும்பத்தின் இரண்டாவது மிகப்பெரிய கோள்
வியாழன் | |
சனி | |
வெள்ளி | |
யுரேனஸ் |
Question 34 Explanation:
(குறிப்பு: சனிக்கோளின் தன் ஈர்ப்புத்திறன் நீரை விடக் குறைவாகும்.)
Question 35 |
ரோமானிய வேளாண்மை கடவுளின் பெயரால் அழைக்கப்படும் கோள்
யுரேனஸ் | |
நெப்டியூன் | |
சனி | |
வியாழன் |
Question 35 Explanation:
(குறிப்பு: பாறைத்துகள்கள், பனித் துகள்கள் மற்றும் தூசுக்களால் ஆன பல பெரிய வளையங்கள் சனிக்கோளை சுற்றி காணப்படுகின்றன.)
Question 36 |
வியாழன் கோளைப் போன்றே அதிக துணைக்கோள்களைக் கொண்ட சனிக்கோளின் மிகப் பெரிய துனைக்கோள்
டிரைட்டன் | |
டைட்டன் | |
ஈரிஸ் | |
மேக்மேக் |
Question 36 Explanation:
(குறிப்பு: சனி 62 துணைக்கோள்களைக் கொண்டுள்ளது. சூரியக் குடும்பத்தில் காணப்படும் துணைக்கோள்களில் நைட்ரஜன் மற்றும் மீத்தேன் ஆகிய வாயுக்களை கொண்ட வளிமண்டலம் மற்றும் மேகங்கள் சூழ்ந்து காணப்படுகின்ற ஒரே துணைக்கோள் டைட்டன் ஆகும்.)
Question 37 |
யுரேனஸ், வில்லியம் ஹெர்ஷல் என்ற வானியல் அறிஞரால் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?
1769 | |
1778 | |
1781 | |
1789 |
Question 37 Explanation:
(குறிப்பு: தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோள் யுரேனஸ் ஆகும்.)
Question 38 |
__________ வாயு உள்ளதால் யுரேனஸ் பச்சை நிறமாகத் தோன்றுகிறது.
நைட்ரஜன் | |
ஈத்தேன் | |
அம்மோனியா | |
மீத்தேன் |
Question 38 Explanation:
(குறிப்பு: இதன் அச்சு மிகவும் சாய்ந்து காணப்படுவதால் தன் சுற்றுப் பாதையில் உருண்டோடுவது போன்று சூரியனை சுற்றி வருகிறது.)
Question 39 |
- கூற்று 1: ‘யுரேனஸ்’ கிரேக்க விண் கடவுளின் பெயரால் அழைக்கப்படுகிறது.
- கூற்று 2 : யுரேனஸின் துணைக்கோள்களில் ‘டைட்டானியா’ மிகப் பெரியதாகும்.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 39 Explanation:
(குறிப்பு: யுரேனஸ் 27 துணைக்கோள்களைக் கொண்டுள்ளது.)
Question 40 |
நெப்டியூன் குறித்த கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு.
ரோமானியக் கடல் கடவுளின் பெயரைக் கொண்டது. | |
ரோமானியக் கடல் கடவுளின் பெயரைக் கொண்டது. | |
இதன் மிகப் பெரிய துணைக்கோள் ‘டிரைட்டன்’. | |
இதன் மிகப் பெரிய துணைக்கோள் ‘டிரைட்டன்’. | |
24 துணைக்கோள்களைக் கொண்டுள்ளது. | |
24 துணைக்கோள்களைக் கொண்டுள்ளது. | |
சூரியக் குடும்பத்தில் மிகத் தொலைவில் உள்ளதால் மிகவும் குளிர்ந்து காணப்படுகிறது. | |
சூரியக் குடும்பத்தில் மிகத் தொலைவில் உள்ளதால் மிகவும் குளிர்ந்து காணப்படுகிறது. |
Question 40 Explanation:
(குறிப்பு : 14 துணைக்கோள்களைக் கொண்டுள்ளது. இக்கோளில் பலத்த காற்று வீசும். இக்கோளில் காணப்படும் நீலம் மற்றும் வெள்ளை நிறமானது யுரேனஸ் கோளிலிருந்து இதை வேறுபடுத்துகிறது.)
Question 41 |
நெப்டியூன் கோளுக்கு அப்பால் தொலைவில் காணப்படும் சிறிய விண்பொருட்கள்___________ ஆகும்.
சிறுகோள்கள் | |
குறுங்கோள்கள் | |
விண்கற்கள் | |
விண்வீழ்கற்கள் |
Question 41 Explanation:
(குறிப்பு: குறுங்கோள்கள் மிகவும் குளிர்ந்தும் ஒளியில்லாமலும் காணப்படுகின்றன. கோள வடிவில் காணப்படும் இவை கோள்களைப் போல இல்லாமல் தமது சுற்றுப் பாதையைப் பிற குறுளைக் கோள்களுடன் பகிர்ந்து கொள்ளும்.)
Question 42 |
கீழ்க்கண்டவற்றுள் குறுங்கோள்கள் எவை?
- புளுட்டோ
- செரஸ்
- ஈரிஸ்
- மேக்மேக்
- ஹௌமியா
அனைத்தும் | |
2, 3, 4, 5 | |
2, 3,5 | |
1, 3, 4, 5 |
Question 42 Explanation:
(குறிப்பு: சூரியக் குடும்பத்தில் ஐந்து குறுங்கோள்கள் காணப்படுகின்றன.)
Question 43 |
நிலவு புவியைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்
27 நாள்கள் 2 மணி நேரம் | |
27 நாள்கள் 4 மணி நேரம் | |
27 நாள்கள் 6 மணி நேரம் | |
27 நாள்கள் 8 மணி நேரம் |
Question 43 Explanation:
(குறிப்பு: நிலவு தன்னைத்தானே சுற்றிக் கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரமும், புவியைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும் நேரமும் ஏறக்குறைய ஒன்றாகும்.)
Question 44 |
- கூற்று: விண்கற்களின் தாக்கத்தால் நிலவின் மேற்பகுதியில் அதிகளவில் தரைக்குழிப் பள்ளங்கள் காணப்படுகின்றன.
- காரணம்: நிலவிற்கு வளிமண்டலம் கிடையாது.
கூற்று சரி காரணம் தவறு. | |
கூற்று தவறு காரணம் சரி | |
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம். | |
கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல. |
Question 45 |
நிலவு புவியிலிருந்து ___________ கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
8,34,400 | |
3,94,400 | |
3,34,400 | |
3,84,400 |
Question 45 Explanation:
(குறிப்பு: நிலவு புவியில் நான்கில் ஒரு பங்கே அளவுடையது. மனிதன் தரையிறங்கிய ஒரே விண்பொருள் நிலவாகும்.)
Question 46 |
- கூற்று 1: நிலவைப் பற்றி ஆராய்வதற்காக இந்தியாவால் அனுப்பப்பட்ட முதல் விண்கலம் சந்திராயன்-1 ஆகும்.
- கூற்று 2: சந்திராயன் 1 2008 ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 47 |
தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு.
வால் விண்மீன்களின் திடப் பொருட்களால் ஆன தலைப் பகுதி பனிக்கட்டியால் பிணைக்கப்பட்டுள்ளது. | |
வால் விண்மீன்களின் வால் பகுதி திரவத்தால் ஆனது. | |
ஹேலி வால்விண்மீன் கடைசியாக 1986 ஆம் ஆண்டு வானில் தென்பட்டது. | |
76 வருடங்களுக்கு ஒரு வரக்கூடிய ஹேலி வால்விண்மீன் 2061 ஆம் ஆண்டு விண்ணில் தோன்றும். |
Question 47 Explanation:
(குறிப்பு: வால் விண்மீன்களின் வால் பகுதி வாயுக்களால் ஆனது.)
Question 48 |
சூரியக் குடும்பத்தில் காணப்படும் சிறு கற்கள் மற்றும் உலோக பாறைகளால் ஆன விண்பொருட்களை __________ என்று அழைக்கிறோம்.
விண்வீழ்கற்கள் | |
விண்கற்கள் | |
எரிநட்சத்திரம் | |
வால்விண்மீன் நட்சத்திரம் |
Question 48 Explanation:
(குறிப்பு: இந்த விண்கற்கள் புவியின் வளிமண்டலத்தை அடையும் போது உராய்வின் காரணமாக எரிந்து ஒளிர்வதால் எரி நட்சத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. வளிமண்டலத்தை தாண்டி புவியின் மேற்பரப்பைத் தாக்கும் விண்கற்கள் விண்வீழ்கற்கள் என அழைக்கப்படுகின்றன.)
Question 49 |
- கூற்று 1: புவி தன் அச்சில் 23 ½ ° சாய்ந்து தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது.
- கூற்று 2 : தன் சுற்றுவட்டப் பாதைக்கு 66 ½ ° கோணத்தை இந்த சாய்வு ஏற்படுத்துகிறது.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 49 Explanation:
(குறிப்பு: புவியின் வட துருவத்திலிருந்து, புவி மையத்தின் வழியாக தென் துருவம் வரை செல்லக் கூடிய ஒரு கற்பனைக்கோடு புவியின் அச்சு எனப்படும்)
Question 50 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.(புவியின் சுழலும் வேகம்)
- நிலநடுக்கோட்டுப் பகுதி - 845 கி.மீ / மணி
- 60° வட அட்ச ரேகை - 1670 கி.மீ / மணி
- துருவப் பகுதி – சுழி
அனைத்தும் சரி | |
1 மட்டும் தவறு | |
2, 3 தவறு | |
1, 2 தவறு |
Question 50 Explanation:
(குறிப்பு: 1. நிலநடுக்கோட்டுப் பகுதி - 1670 கி.மீ / மணி
2. 60° வட அட்ச ரேகை - 845 கி.மீ / மணி)
Question 51 |
புவி ஒரு முறை சுழலுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம்
23 மணி நேரம் 54 நிமிடங்கள், 4.09 வினாடிகள் | |
23 மணி நேரம் 56 நிமிடங்கள், 5.09 வினாடிகள் | |
23 மணி நேரம் 54 நிமிடங்கள், 5.09 வினாடிகள் | |
23 மணி நேரம் 56 நிமிடங்கள், 4.09 வினாடிகள் |
Question 51 Explanation:
(குறிப்பு: புவி மேற்கிலிருந்து கிழக்காக சுழலுகிறது. புவி சுழலுவதன் காரணமாக இரவு, பகல் ஏற்படுகிறது.)
Question 52 |
இரு அரைக்கோளங்களிலும் கோடைக்காலத்தில் ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கிலும், அண்டார்டிக் வட்டத்திற்கு தெற்கிலும் 24 மணி நேரமும் சூரியன் தலைக்கு மேல் தெரியும் நிகழ்வு____________ எனப்படும்.
ஆர்க்டிக் சூரியன் | |
அண்டார்க்டிக் சூரியன் | |
நள்ளிரவு சூரியன் | |
இரட்டை சூரியன் |
Question 53 |
புவியின் ஒளிபடும் பகுதியையும், ஒளிபடாத பகுதியையும் பிரிக்கும் கோட்டிற்கு _________ என்று பெயர்.
அச்சக் கோடு | |
தீர்க்கக் கோடு | |
ஒளிர்வு வட்டம் | |
புவிஅச்சு |
Question 53 Explanation:
(குறிப்பு: புவி கோள வடிவமாக உள்ளதால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சூரிய வெளிச்சம் புவியின் ஒரு பகுதியில் மட்டுமே படுகிறது. அப்பகுதிக்கு அது பகல்பொழுது ஆகும். புவியின் ஒளிபடாத பகுதி இரவாக இருக்கும்.)
Question 54 |
- கூற்று 1: புவி தன் அச்சில் தன்னைத்தானே சுற்றுவதைச் சுற்றுதல் என்கிறோம்.
- கூற்று 2: புவி தன் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வரும் நகர்வை சுழலுதல் என்கிறோம்.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 54 Explanation:
(குறிப்பு: புவி தன் அச்சில் தன்னைத்தானே சுற்றுவதைச் சுழலுதல் என்கிறோம். புவி தன் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வரும் நகர்வை சுற்றுதல் என்கிறோம்.)
Question 55 |
புவி வினாடிக்கு _________ கிலோமீட்டர் வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது.
15 | |
17 | |
20 | |
30 |
Question 55 Explanation:
(குறிப்பு: புவி ஒரு முறை சூரியனைச் சுற்றிவர 365 ¼ நாள்கள் ஆகிறது.)
Question 56 |
- கூற்று 1: மார்ச் 21ம் தேதி முதல் செப்டம்பர் 23ம் தேதி வரை ஆறு மாதங்கள் புவியின் வடஅரைக்கோளம் சூரியனை நோக்கி சாய்ந்து காணப்படும்.
- கூற்று 2: செப்டம்பர் 23ம் தேதி முதல் மார்ச் 21ம் தேதி வரை புவியின் தென் அரைக்கோளம் சூரியனை நோக்கி சாய்ந்து காணப்படும்.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 56 Explanation:
(குறிப்பு: புவி தன் சுற்றுப் பாதையில் சூரியனைச் சுற்றி வருவதால் சூரியன் நிலநடுக்கோட்டிற்கு வடக்காகவும், தெற்காகவும் நகர்வதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. புவி சூரியனைச் சுற்றி வருவதால் பருவ காலங்கள் தோன்றுகின்றன.)
Question 57 |
நிலநடுக்கோட்டுப் பகுதியில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழும் நாட்கள்
- மார்ச் 23
- செப்டம்பர் 21
- மார்ச் 21
- செப்டம்பர் 23
1, 2 | |
2 , 3 | |
1, 4 | |
3, 4 |
Question 57 Explanation:
(குறிப்பு: சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழுவதால் புவியின் அனைத்து பகுதிகளிலும் பகல் இரவு பொழுது சமமாகக் காணப்படும். எனவே, இந்நாட்கள் சமபகலிரவு நாட்கள் என அழைக்கப்படுகின்றன.)
Question 58 |
வட அரைக்கோளத்தில் மிக நீண்ட பகல் பொழுதைக் கொண்டிருக்கும் நாள்
மே 21 | |
ஜுன் 21 | |
ஆகஸ்ட் 23 | |
செப்டம்பர் 21 |
Question 58 Explanation:
(குறிப்பு: ஜூன் 21 அன்று கடகரேகை மீது சூரியனின் செங்குத்துக் கதிர்கள் விழுவதால் வடஅரைக்கோளத்தில் அந்நாள் மிக நீண்ட பகல் பொழுதைக் கொண்டிருக்கும். தென் அரைக்கோளம் நீண்ட இரவைக் கொண்டிருக்கும். இந்நிகழ்வு கோடைக் காலக் கதிர் திருப்பம் என்று அழைக்கப்படுகிறது.)
Question 59 |
குளிர்காலக் கதிர் திருப்பம் நடைபெறும் நாள்
ஜுன் 21 | |
ஜுன் 23 | |
டிசம்பர் 23 | |
டிசம்பர் 22 |
Question 59 Explanation:
(குறிப்பு: டிசம்பர் 22ம் தேதி மகர ரேகையின் மீது சூரியனின் செங்குத்துக் கதிர்கள் விழுகின்றன. இச்சமயத்தில் தென் அரைக்கோளத்தில் பகல் பொழுது அதிகமாகக் காணப்படும். வட அரைக்கோளம் நீண்ட இரவைக் கொண்டிருக்கும்.)
Question 60 |
- கூற்று: உயிரினங்கள் வாழத் தகுதியான கோள் புவியாகும்.
- காரணம்: பாறைக் கோளம், நீர்க்கோளம் மற்றும் வளிமண்டலம் ஆகிய மூன்று தொகுதிகளுடன் தகுந்த காலநிலையும் நிலவுவதால் உயிரினங்கள் வாழத் தகுதியுள்ள இடமாக புவி மாறியுள்ளது.
கூற்று சரி காரணம் தவறு. | |
கூற்று தவறு காரணம் சரி | |
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம். | |
கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல. |
Question 60 Explanation:
(குறிப்பு: உயிரினங்கள் வாழக்கூடிய குறுகிய மண்டலம் உயிர்க்கோளம் என அழைக்கப் பாடுகிறது.)
Question 61 |
பாறை என்ற பொருள்படும் ‘லித்தோஸ்’ என்ற __________மொழிச் சொல்லிலிருந்து பாறைக் கோளம் என்ற சொல் பெறப்பட்டது.
இலத்தீன் | |
ஆங்கிலம் | |
கிரேக்கம் | |
சீனம் |
Question 61 Explanation:
(குறிப்பு: புவியின் மேற்பரப்பில் காணப்படும் பாறைகள் மற்றும் மண் அடுக்கைப் பாறைக்கோளம் (Lithosphere) என்று கூறுகிறோம். இதில் உயிரினங்கள் காணப்படுகின்றன.)
Question 62 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
- ஹைட்ரோ என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்லே ஹைட்ரோஸ்பியர் ஆகும்.
- அட்மோ என்ற கிரேக்கப் பதத்திற்கு வளி அல்லது காற்று என்று பொருள்.
- பயோ என்ற கிரேக்க சொல்லிற்கு உயிர் என்று பொருள்
1, 2 | |
2 மட்டும் | |
3 மட்டும் | |
எதுவுமில்லை |
Question 62 Explanation:
(குறிப்பு: ஹைட்ரோஸ்பியர் என்பதற்கு நீர்க்கோளம் என்று பெயர்.வளிமண்டல வாயுக்களில் நைட்ரஜன் (78%) மற்றும் ஆக்சிஜன் (21%) முதன்மையான வாயுக்களாகும். உயிர்கோளம் பல்வேறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மண்டலங்கள் சூழல் மண்டலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.)
Question 63 |
மன்னார் உயிர்க்கோள் பெட்டகம் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள பரப்பளவு
9,500 சதுர கி.மீ | |
9,500 சதுர கி.மீ | |
10,500 சதுர கி.மீ | |
11,800 சதுர கி.மீ |
Question 64 |
- கூற்று 1: புவி தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்கு மிக அருகில் வரும் நிகழ்வு சூரிய அண்மை (Perihelion) எனப்படும்.
- கூற்று 2: புவி தன் சுற்றுப் பாதையில் சூரியனுக்குத் தொலைவில் காணப்படும் நிகழ்வு சூரியச் சேய்மை (Aphelion) எனப்படும்.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 65 |
தவறான இணையைத் தேர்ந்தெடு (துணைக்கோள்களின் எண்ணிக்கை)
யுரேனஸ் – 27 | |
சனி – 63 | |
செவ்வாய் – 2 | |
வெள்ளி, புதன் – 0 |
Question 65 Explanation:
(குறிப்பு: சனி-62, நெப்டியூன் -14, வியாழன் - 67, புவி - 1)
Question 66 |
பொருத்துக.
- வெப்பமான கோள் i) செவ்வாய்
- வளையம் உள்ள கோள் ii) நெப்டியூன்
- செந்நிறக் கோள் iii) வெள்ளி
- உருளும் கோள் iv) சனி
- குளிர்ந்த கோள் v) யுரேனஸ்
ii i iii iv v | |
v iv ii i iii | |
iv v iii ii i | |
iii iv i v ii |
Question 67 |
பேரண்டத்தின் படிநிலைகளுல் சரியான வரிசையைக் கண்டறி:
கோள்கள் - விண்மீன்திரள் மண்டலம் - சூரியக்குடும்பம் - துணைக்கோள்கள் - பேரண்டம்.
| |
கோள்கள் - சூரியக்குடும்பம் - விண்மீன்திரள் மண்டலம் - துணைக்கோள்கள் - பேரண்டம். | |
பேரண்டம் - சூரியக்குடும்பம் - விண்மீன்திரள் மண்டலம் - கோள்கள் - துணைக்கோள்கள். | |
பேரண்டம் - விண்மீன்திரள் மண்டலம் - சூரியக்குடும்பம் - கோள்கள் - துணைக்கோள்கள். |
Question 68 |
சூரியனைச் சுற்றுவதற்கு குறைந்த காலம் எடுத்துக்கொள்ளும் கோள்___________ஆகும்.
புதன்
| |
புவி
| |
நெப்டியூன்
| |
செவ்வாய்
|
Question 68 Explanation:
விளக்கம்: சூரியனைச் சுற்றுவதற்கு குறைந்த காலம் எடுத்துக்கொள்ளும் கோள் புதன்(88 நாட்கள்). அதிக காலம் எடுத்துக்கொள்ளும் கோள் நெப்டியூன்(164.8 வருடங்கள்).
Question 69 |
சூரியனைச் சுற்றுவதற்கு அதிக காலம் எடுத்துக்கொள்ளும் கோள்_____________ஆகும்.
வெள்ளி
| |
புவி
| |
நெப்டியூன்
| |
செவ்வாய் |
Question 70 |
தன்னைத்தானே சுழல்வதற்கு குறைந்தகாலம் எடுத்துக்கொள்ளும் கோள்_______________ஆகும்.
செவ்வாய்
| |
புதன்
| |
வியாழன்
| |
வெள்ளி |
Question 70 Explanation:
விளக்கம்: தன்னைத்தானே சுழல்வதற்கு குறைந்தகாலம் எடுத்துக்கொள்ளும் கோள் வியாழன்(9 மணி நேரம் 51 நிமிடங்கள்). அதிக காலம் எடுத்துக்கொள்ளும் கோள் வெள்ளி(243 நாட்கள்).
Question 71 |
பொருத்துக:
A. சனி - 1. டைட்டானியா
B. யுரேனஸ் - 2. டைட்டான்
C. நெப்டியூன் - 3. ட்ரைட்டான்
D. வியாழன் - 4. கானிமைட்
A-1, B-2, C-3, D-4
| |
A-2, B-1, C-3, D-4
| |
A-2, B-3, C-4, D-1
| |
A-4, B-3, C-2, D-1
|
Question 71 Explanation:
விளக்கம்:
A. சனி - 1. டைட்டான்
B. யுரேனஸ் - 2. டைட்டானியா
C. நெப்டியூன் - 3. ட்ரைட்டான்
D. வியாழன் - 4. கானிமைட்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 71 questions to complete.
Pl correct 19,43