Online Test
Indian Polity Revision Test Part 6 in Tamil
Indian Polity Revision Test Part 6 in Tamil
Congratulations - you have completed Indian Polity Revision Test Part 6 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
இந்திய அரசியலமைப்பின் எப்பகுதி தேர்தல் பற்றி கூறுகிறது?
14 | |
15 | |
16 | |
17 |
Question 1 Explanation:
விளக்கம்: தேர்தல் என்பது தமக்கான பொது சேவகர் ஒருவரை மக்கள் வாக்களித்து தேர்வு செய்யும் முறையாகும். இந்திய தேர்தல் முறை, இங்கிலாந்தில் பின்பற்றப்படும் தேர்தல் முறையினைப் பின்பற்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தியா ஒரு சமத்துவ, மதச்சார்பற்ற, மக்களாட்சி, குடியரசு நாடாகும், மற்றும் உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடாகும். தற்போதைய நவீன இந்தியாவானது ஆகஸ்ட் மாதம் 15ம் நாள் 1947ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்தது. இந்திய அரசியலமைப்பின் XVம் பகுதியில் காணப்படும், 324 முதல் 329 வரையிலான பிரிவுகளில் கூறப்பட்டுள்ள பின்வரும் விதிமுறைக்கேற்ப நம் நாட்டின் தேர்தல் முறை அமைக்கப்பட்டிருக்கிறது.
Question 2 |
தன்னிச்சையான தேர்தல் ஆணையம் அமைத்திட வழிவகைச் செய்யும் அரசியலமைப்பு பிரிவு எது?
324 | |
325 | |
326 | |
327 |
Question 2 Explanation:
விளக்கம்: நாட்டின் சுதந்திரமான, நியாயமான தேர்தலை உறுதி செய்திட தன்னிச்சையான தேர்தல் ஆணையம் அமைத்திட இந்திய அரசியலமைப்பின் பிரிவு 324ன் படி வழிவகைச் செய்கிறது. தற்போது தேர்தல் ஆணையமானது ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களை உள்ளடக்கியுள்ளது. பாராளுமன்ற தேர்தல் சம்மந்தமான வாக்காளர்களின் பட்டியல் தயாரித்தல், தொகுதிகளை வரையறை செய்தல் உட்பட அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டப் பிற அனைத்து விவகாரங்களைப் பெறுவதற்கான சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றலாம்.
Question 3 |
தமிழ் நாட்டில் யாருடைய காலத்தில் குடவோலை என்னும் வாக்களிக்கும் முறை வழக்கத்தில் இருந்தது?
சோழர் | |
பாண்டியர் | |
பல்லவர் | |
சேரர் |
Question 3 Explanation:
விளக்கம்: தமிழ் நாட்டில் சோழர்கள் காலத்தில் குடவோலை என்னும் வாக்களிக்கும் முறை வழக்கத்தில் இருந்தது.
Question 4 |
எந்த நாள் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது?
ஜனவரி 25 | |
ஜனவரி 23 | |
ஜனவரி 22 | |
ஜனவரி 21 |
Question 4 Explanation:
விளக்கம்: ஜனவரி 25 ஆம் நாள் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
Question 5 |
ஒருவர் தாம் செலுத்திய வாக்குப்பதிவு சரியானபடி பதிவாகி உள்ளதா என்று தெரிந்துகொள்ளும் அறிவியல் தொழில் நுட்பம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
2015 | |
2014 | |
2013 | |
2012 |
Question 5 Explanation:
விளக்கம்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயருக்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்தி வாக்கு செலுத்தப்படுகிறது. ஒருவர் தாம் செலுத்திய வாக்குப்பதிவு சரியானபடி பதிவாகி உள்ளதா என்று தெரிந்துகொள்ளும் வாய்ப்பை 2014 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது. இதை ஆங்கிலத்தில் சுருக்கமாக VVPAT என்று குறிப்பிடுகிறார்கள்.
Question 6 |
ஒருவர் தாம் செலுத்திய வாக்குப்பதிவு சரியானபடி பதிவாகி உள்ளதா என்று தெரிந்துகொள்ளும் அறிவியல் தொழில் நுட்பம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
2015 | |
2014 | |
2013 | |
2012 |
Question 6 Explanation:
விளக்கம்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயருக்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்தி வாக்கு செலுத்தப்படுகிறது. ஒருவர் தாம் செலுத்திய வாக்குப்பதிவு சரியானபடி பதிவாகி உள்ளதா என்று தெரிந்துகொள்ளும் வாய்ப்பை 2014 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது. இதை ஆங்கிலத்தில் சுருக்கமாக VVPAT என்று குறிப்பிடுகிறார்கள்.
Question 7 |
NOTA வை பற்றி விவரிக்கும் சட்ட விதி எண் எது?
49 - O | |
48 - O | |
39 - O | |
35 - O |
Question 7 Explanation:
விளக்கம்: ஒரு மக்களாட்சி நடைபெறும் நாட்டில் உள்ள வாக்காளர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரையும் தேர்வு செய்ய விருப்பம் இல்லை எனும் ஓர் பொத்தானை வாக்கு இயந்திரத்தில் தேர்வு செய்யலாம். இந்திய தேர்தல் நடத்தை விதிகள் , (1961) இல்- எனும் சட்டத்தின் விதி எண் 49 - O இம்முறை பற்றி விவரிக்கிறது.
Question 8 |
உலகில் NOTA வை அறிமுகப்படுத்திய 14 வது நாடு எது?
இந்தியா | |
பாகிஸ்தான் | |
இலங்கை | |
வங்காள தேசம் |
Question 8 Explanation:
விளக்கம்: 2014 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் NOTA முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. உலகில் NOTA வை அறிமுகப்படுத்திய 14 வது நாடு இந்தியா ஆகும்.
Question 9 |
இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள் எத்தனை வகைப்படும்?
2. | |
3 | |
4 | |
6 |
Question 9 Explanation:
விளக்கம்: இந்தியாவில் இரண்டு வகையான தேர்தல்கள் நடைபெறுகின்றன. அவை நேரடித் தேர்தல் மற்றும் மறைமுகத் தேர்தல் ஆகும்.
Question 10 |
கீழ்க்கண்டவற்றுள் நேரடித் தேர்தல் முறைக்கு எடுத்துக்காட்டு எது?
மக்களவை தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களை (MP) தேர்ந்தெடுத்தல். | |
சட்டமன்றத் தேர்தல்களில் சட்டப்பேரவை உறுப்பினர்களை (MLA) தேர்ந்தெடுத்தல் | |
ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தல் | |
இவை அனைத்தும். |
Question 10 Explanation:
விளக்கம்: நேரடித் தேர்தலில் வாக்காளர்கள் தமது பிரதிநிதிக ளைத் தாங்களே நேரடியாக தேர்ந்தெடுக்கிறார்கள். 18 வயது பூர்த்தியடைந்த மக்கள் நேரடித்தேர்தல் முறையில் பங்கு பெற்று தங்களது வாக்குகளைப் பதிவு செய்கின்றனர். நேரடித் தேர்தல் முறைக்குப் பின்வரும் சில எடுத்துக்காட்டுக் காணலாம். மக்களவை தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களை (MP) தேர்ந்தெடுத்தல். சட்டமன்றத் தேர்தல்களில் சட்டப்பேரவை உறுப்பினர்களை (MLA) தேர்ந்தெடுத்தல் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தல்.
Question 11 |
கீழ்க்கண்டவற்றுள் நேரடித் தேர்தல் முறையின் நிறை எது?
செலவு குறைவு | |
பெரிய நாடுகளுக்கு உகந்தது. | |
வலுவான மக்களாட்சி கொண்டதாகக் கருதப்படுகிறது. | |
இவை அனைத்தும் |
Question 11 Explanation:
விளக்கம்: i)வாக்காளர்கள் தங்களது பிரதிநிதிகளை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதால், நேரடித் தேர்தல் முறையானது வலுவான மக்களாட்சி கொண்டதாகக் கருதப்படுகிறது.
ii) அரசாங்க நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வும், தகுதியான பிரதிநிதிகளைக் தேர்ந்தெடுக்கவும் மக்களுக்குக் கற்பிக்கிறது. மேலும் மக்கள் அரசியலில் முக்கிய பங்கு வகிக்க ஊக்கமளிக்கிறது.
iii) மக்களைத் தீவிரமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டுகிறது.
Question 12 |
கீழ்க்கண்டவற்றுள் மறைமுகத் தேர்தல் முறையின் குறைகள் எவை?
தேர்தல் பரப்புரைகளின் போது சில நேரங்களில் வன்முறைகள், பதற்றங்கள், சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை முறை பாதிக்கப்படுகிறது. | |
சில அரசியல் கட்சி வேட்பாளர்கள், வாக்காளர்கள் மீது பணம், பொருள் (அ) பணிகள் மூலமாக தங்களது செல்வாக்கைச் செலுத்துவது என்பது ஒரு மற்றொரு சவாலாகும். | |
நேரடித் தேர்தல் நடத்துவது மிகப்பெரும் பணியாக இருப்பதால், ஒவ்வொரு வாக்கு மையங்களிலும் சுதந்திரமான, நியாயமான தேர்தல் முறையை உறுதி செய்வது என்பது தேர்தல் ஆணையத்திற்கு மிக பெரும் சவாலாக உள்ளது. | |
இவை அனைத்தும் |
Question 12 Explanation:
விளக்கம்: i) நேரடித் தேர்தல் முறை அதிக செலவு கொண்டதாக உள்ளது.
ii) எழுத்தறிவற்ற வாக்காளர்கள், பொய்யானப் பரப்புரைகளா ல் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். சில நேரங்களில் சாதி, மதம் மற்றும் இன்ன பிற பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் பிரச்சாரங்கள் மற்றும் பொய்யானப் பரப்புரைகளாலும் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.
Question 13 |
கீழ்க்கண்டவற்றுள் மறைமுகத்தேர்தலின் நிறைகள் எவை?
வாக்காளர்கள் தங்களது பிரதிநிதிகளை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதால், மறைமுகத் தேர்தல் முறையானது வலுவான மக்களாட்சி கொண்டதாகக் கருதப்படுகிறது. | |
அரசாங்க நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வும், தகுதியான பிரதிநிதிகளைக் தேர்ந்தெடுக்கவும் மக்களுக்குக் கற்பிக்கிறது. மேலும் மக்கள் அரசியலில் முக்கிய பங்கு வகிக்க ஊக்கமளிக்கிறது. | |
மக்களைத் தீவிரமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டுகிறது. | |
மறைமுகத் தேர்தல்கள் நடத்த செலவு குறைவானதாகும். |
Question 13 Explanation:
விளக்கம்: i) மறைமுகத் தேர்தல்கள் நடத்த செலவு குறைவானதாகும்.
ii) மறைமுக தேர்தல் முறையானது பெரிய நாடுகளுக்கு உகந்தது.
Question 14 |
கீழ்க்கண்டவற்றுள் மறைமுகத்தேர்தல் முறையின் குறை எது?
வாக்காளர் எண்ணிக்கைக் குறைவாக இருப்பதால் ஊழல், கையூட்டு, குதிரை பேரம் ஆகியவற்றிற்கு வாய்ப்புகள் அதிகம் காணப்படும். | |
எழுத்தறிவற்ற வாக்காளர்கள், பொய்யானப் பரப்புரைகளா ல் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். சில நேரங்களில் சாதி, மதம் மற்றும் இன்ன பிற பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் பிரச்சாரங்கள் மற்றும் பொய்யானப் பரப்புரைகளாலும் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். | |
மறைமுகத் தேர்தல் நடத்துவது மிகப்பெரும் பணியாக இருப்பதால், ஒவ்வொரு வாக்கு மையங்களிலும் சுதந்திரமான, நியாயமான தேர்தல் முறையை உறுதி செய்வது என்பது தேர்தல் ஆணையத்திற்கு மிக பெரும் சவாலாக உள்ளது. | |
இவை அனைத்தும் |
Question 14 Explanation:
விளக்கம்: i) வாக்காளர் எண்ணிக்கைக் குறைவாக இருப்பதால் ஊழல், கையூட்டு, குதிரை பேரம் ஆகியவற்றிற்கு வாய்ப்புகள் அதிகம் காணப்படும்.
ii) மக்கள் தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க நேரடியாக பங்கு பெறாமல், மாறாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டப் பிரதிநிதிகளே இம்முறையில் பங்குபெறுவதால், மக்கள் பிரதிநிதித்துவம் குறைந்த மக்களாட்சி முறையாக காணப்படுகிறது. எனவே, மக்களின் உண்மையான விருப்பத்தை பிரதிபலிக்காமல் இருக்க நேரிடுகிறது.
Question 15 |
குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்கள் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவற்றை தேர்க.
பாராளுமன்றத்தின் இரு அவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் | |
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் | |
பாராளுமன்றஇரு அவைகள் மற்றும் மாநில சட்டமன்றங்களில் நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்கள் இக்குழுவில் அங்கம் இடம் பெறமாட்டார்கள். | |
இவை அனைத்தும். |
Question 15 Explanation:
விளக்கம்: இந்திய குடியரசுத் தலைவர் பின்வரும் உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் குழாம் (Electoral College) மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவை
பாராளுமன்றத்தின் இரு அவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்
குறிப்பு: பாராளுமன்றஇரு அவைகள் மற்றும் மாநில சட்டமன்றங்களில் நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்கள் இக்குழுவில் அங்கம் இடம் பெறமாட்டார்கள்.
Question 16 |
புதுதில்லியில் அமைந்துள்ள இந்திய உச்சநீதிமன்றம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
1950 | |
1937 | |
1935 | |
1947 |
Question 16 Explanation:
விளக்கம்: புதுதில்லியில் அமைந்துள்ள இந்திய உச்சநீதிமன்றம் 1950 ஜனவரி 28ஆம் நாள் துவங்கப்பட்டது. இது 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட கூட்டாட்சி நீதிமன்றத்தைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டது.
Question 17 |
ஆரம்பத்தில் இருந்த உச்ச நீதி மன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை?
8 | |
10 | |
9 | |
12 |
Question 17 Explanation:
விளக்கம்: 1950ஆம் ஆண்டு அரசியலமைப்பின் தொடக்கத்தில் ஒரு தலைமை நீதிபதி உட்பட 8 நீதிபதிகளை உச்ச நீதிமன்றம் கொண்டிருந்தது. தற்சமயம் உச்ச நீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதி உட்பட 28 நீதிபதிகளைக் கொண்டுள்ளது.
Question 18 |
உச்ச நீதிமன்ற நீதிபதிகளை யாருடைய ஆலோசனையின்படி குடியரசுத்தலைவர் நியமிக்கிறார்?
பிரதமர் | |
மூத்த நீதிபதிகள் குழு | |
தலைமை நீதிபதி | |
b) மற்றும் c) |
Question 18 Explanation:
விளக்கம்: இந்திய உச்ச நீதிமன்றதலைமை நீதிபதியைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். மற்ற நீதிபதிகளைத் தலைமை நீதிபதியைத் தலைவராகக் கொண்ட மூத்த நீதிபதிகள் குழுவின் (Collegiums) ஆலோசனையுடன் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
Question 19 |
உச்சநீதிமன்ற நீதிபதிக்கான தகுதிகள்
இவை அனைத்தும் | |
அவர் இந்தியக் குடிமகனாய் இருத்தல் வேண்டும். (அல்லது) அவர் ஐந்து ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்திருத்தல் வேண்டும். | |
அவர் பத்து ஆண்டுகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக செயலாற்றியிருத்தல் வேண்டும். | |
குடியரசுத் தலைவர் பார்வையில் சிறப்பு மிக்க சட்ட வல்லுநராய் இருத்தல் வேண்டும். |
Question 19 Explanation:
விளக்கம்: உச்சநீதிமன்ற நீதிபதிக்கான தகுதிகள் அவர் இந்தியக் குடிமகனாய் இருத்தல் வேண்டும். (அல்லது) அவர் ஐந்து ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்திருத்தல் வேண்டும். அவர் பத்து ஆண்டுகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக செயலாற்றியிருத்தல் வேண்டும். குடியரசுத் தலைவர் பார்வையில் சிறப்பு மிக்க சட்ட வல்லுநராய் இருத்தல் வேண்டும்.
Question 20 |
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் வயது வரம்பு?
65 | |
68 | |
63 | |
64 |
Question 20 Explanation:
விளக்கம்: தற்காலிக அடிப்படையில் (ad-hoc basis) உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க அரசியலமைப்புச் சட்டம் வழிவகை செய்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட இதர நீதிபதிகள் 65 வயது வரை பதவியில் நீடிப்பர்.
Question 21 |
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் பதவி விலகல் கடிதத்தை யாரிடம் அளிக்கலாம்?
பிரதமர் | |
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி | |
குடியரசுத்தலைவர் | |
துணைக்குடியரசுத்தலைவர் |
Question 21 Explanation:
விளக்கம்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாக குடியரசுத் தலைவரிடம் பதவி விலகல் கடிதத்தை அளித்து பதவி விலகலாம் அல்லது பெருங்குற்றத்தின் மூலம் உண்டான கண்டனத் தீர்மானத்தின் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரத்தினை நாடாளுமன்றம் பெற்றுள்ளது.
Question 22 |
உச்ச நீதிமன்றத்தின் தலைமையிடத்தை மாற்றியமைக்க யாருடைய இசைவு பெறப்பட வேண்டும்?
பிரதமர் | |
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி | |
குடியரசுத்தலைவர் | |
துணைக்குடியரசுத்தலைவர் |
Question 22 Explanation:
விளக்கம்: உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர தலைமையிடம் புதுதில்லியில் உள்ளது. எனினும் இந்தியக் குடியரசுத் தலைவரின் இசைவு பெற்று இந்தியத் தலைமை நீதிபதியின் முடிவின்படி வேறு எந்த மாநிலத்திலும் அல்லது எந்த ஒரு இடத்திலும் இந்நீதிமன்ற அமர்வு அமையலாம்.
Question 23 |
உச்ச நீதிமன்றத்திற்கு நேரடியாக வரும் வழக்குகள் எந்த வரையறைக்குட்பட்டது?
தனக்கேயுரிய நீதி வரையறை | |
மேல்முறையீட்டு நீதிவரையறை | |
ஆலோசனை நீதிவரையறை | |
இவை அனைத்தும் |
Question 23 Explanation:
விளக்கம்: உச்ச நீதிமன்றத்திற்கு நேரடியாக வரும் வழக்குகள் தனக்கேயுரிய
நீதிவரையறைக்குட்பட்டவையாகும். அவைகள்
இந்திய அரசிற்கும் ஒரு மாநிலம் அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்கள்
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்கள்
அடிப்படை உரிமைகளை நடைமுறைபடுத்துவது தொடர்பாக எழும் சிக்கல்கள் ஆகியன உச்ச நீதிமன்றத்தின் தனக்கேயுரிய நீதி வரையறைக்குட்பட்டதாகும்.
Question 24 |
உச்ச நீதிமன்றம் அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்திட கீழ்க்கண்டவற்றுள் எந்த நீதிப்பேராணைகளை வழங்குகிறது?
ஆட்கொணர் நீதிப்பேராணை | |
தடைமாற்று நீதிப்பேராணை | |
உரிமை வினவு நீதிப்பேராணை | |
இவை அனைத்தும் |
Question 24 Explanation:
விளக்கம்: அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்திட கீழ்க்கண்ட நீதிப்பேராணைகளை உச்சநீதிமன்றம் வழங்குகிறது. அவைகள்
ஆட்கொணர் நீதிப்பேராணை
கீழ் நீதிமன்றங்களுக்கு விடுக்கும் கட்டளை நீதிப்பேராணை
வழக்கு விசாரணைத் தடை நீதிப்பேராணை
தடைமாற்று நீதிப்பேராணை
உரிமை வினவு நீதிப்பேராணை
Question 25 |
கீழ்க்கண்டவற்றுள் உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் மேல்முறையீட்டு வழக்கு எது?
உரிமையியல் | |
குற்றவியல் | |
அரசியலமைப்பு வழக்குகள் | |
இவை அனைத்தும் |
Question 25 Explanation:
விளக்கம்: உச்ச நீதிமன்றமே நாட்டின் இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாகும். மாநில உயர் நீதிமன்றங்கள் உரிமையியல், குற்றவியல் (Civil and Criminal) அரசியலமைப்பு வழக்குகள் மீதான தீர்ப்புகளுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரிக்கின்றது. அப்படிப்பட்ட வழக்குகளைத் தீர்க்க அரசியலமைப்புச் சட்டப்படி மேலும் சட்டவிளக்கம் தேவையென உயர் நீதிமன்றம் சான்றிதழ் அளித்தால் மட்டுமே அவ்வழக்குகளை உச்ச நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்ல முடியும்.
Question 26 |
பொது முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு சட்டம் அல்லது உண்மை மீதான உச்ச நீதிமன்றத்தின் கருத்தினைப் பெற அரசியலமைப்புச் சட்டம் யாருக்கு அதிகாரத்தினை வழங்குகிறது?
பிரதமர் | |
குடியரசுத்தலைவர் | |
சபா நாயகர் | |
துணைக்குடியரசுத்தலைவர் |
Question 26 Explanation:
விளக்கம்: பொது முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு சட்டம் அல்லது உண்மை மீதான உச்ச நீதிமன்றத்தின் கருத்தினைப் பெற அரசியலமைப்புச் சட்டம் குடியரசுத் தலைவருக்கு அதிகாரத்தினை வழங்குகிறது.
Question 27 |
கீழ்க்கண்டவற்றுள் உச்ச நீதிமன்றம் பெற்றுள்ள அதிகாரம் எது?
உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும். | |
குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று நீதிமன்றத்தின் பொதுவான செயல்முறைகள், வழிமுறைகளை ஒழுங்குபடுத்தும் விதிகளை உருவாக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. | |
உச்ச நீதிமன்றம் தனது பணி அமைப்பின் மீதான முழுக் கட்டுப்பாட்டினையும் கொண்டுள்ளது. | |
இவை அனைத்தும் |
Question 27 Explanation:
விளக்கம்: இதர நீதிவரையறை உச்ச நீதிமன்றம் கீழ்க்காணும் இதர அதிகாரங்களைப் பெற்றுள்ளது.
உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்.
குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று நீதிமன்றத்தின் பொதுவான செயல்முறைகள், வழிமுறைகளை ஒழுங்குபடுத்தும் விதிகளை உருவாக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் தனது பணி அமைப்பின் மீதான முழுக் கட்டுப்பாட்டினையும் கொண்டுள்ளது
Question 28 |
ஒரு சட்டத்தினை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும் உச்ச நீதி மன்றத்தின் அதிகாரம்?
தனக்கேயுரிய நீதி வரையறை | |
மேல்முறையீட்டு நீதிவரையறை | |
நீதிப்புனராய்வு | |
ஆலோசனை நீதிவரையறை |
Question 28 Explanation:
விளக்கம்: ஒரு சட்டத்தினை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும் அதிகாரம்
உச்சநீதிமன்றத்திடம் உள்ளது இது நீதிப்புனராய்வு (நீதிமன்ற மறுஆய்வு அதிகாரம்) எனப்படும்.
Question 29 |
கீழ்க்கண்டவற்றுள் உச்ச நீதி மன்றத்தின் தனிப்பட்ட நீதி அதிகாரங்கள் எவை?
மத்திய, மாநிலங்களுக்கிடையிலான பிரச்சனைகள் | |
அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்படும் சந்தேகங்கள், கருத்து வேற்றுமைகளை விளக்கி தெளிவுபடுத்துதல். | |
அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல் | |
இவை அனைத்தும். |
Question 29 Explanation:
விளக்கம்: 1. மத்திய, மாநிலங்களுக்கிடையிலான பிரச்சனைகள்.
2. அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்படும் சந்தேகங்கள், கருத்து வேற்றுமைகளை விளக்கி தெளிவுபடுத்துதல்.
3. அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல்.
4. மாநில சட்டமன்றங்கள் இயற்றும் சட்டங்கள்அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும் அதிகாரம் போன்றவைகளை உச்ச நீதிமன்றம் பெற்றுள்ளது.
Question 30 |
1862-ல் உயர் நீதிமன்றங்கள் எந்தெந்த இடங்களில் தோற்றுவிக்கப்பட்டன?
கல்கத்தா | |
பம்பாய் | |
சென்னை | |
இவை அனைத்தும் |
Question 30 Explanation:
விளக்கம்: 1862-ல் உயர் நீதிமன்றங்கள் கல்கத்தா, பம்பாய் மற்றும் சென்னையில் தோற்றுவிக்கப்பட்டன. காலப்போக்கில் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒவ்வோர் மாகாணமும் ஓர் உயர் நீதிமன்றத்தைக் கொண்டிருந்தது.
Question 31 |
எந்த ஆண்டுக்குப் பிறகு தோற்றுவிக்கப்பட்ட உயர் நீதிமன்றங்கள் அண்டை மாநிலங்களுக்கும் உயர் நீதிமன்றமாக விளங்கியது?
1900 | |
1935 | |
1950 | |
1960 |
Question 31 Explanation:
விளக்கம்: 1950-க்குப் பிறகு தோற்றுவிக்கப்பட்ட உயர் நீதிமன்றங்கள் அண்டை மாநிலங்களுக்கும் உயர் நீதிமன்றமாக விளங்கியது. மாநில அளவில் உயர் நீதிமன்றங்களே மிக உயர்ந்த நீதிமன்றங்களாகும். இருப்பினும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் உயர் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.
Question 32 |
இலண்டனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய நீதித்துறை வளாகம் எது?
கல்கத்தா | |
பம்பாய் | |
சென்னை | |
டெல்லி |
Question 32 Explanation:
விளக்கம்: 1862-ஆம் ஆண்டு ஜுன் 26 ஆம் நாளில் விக்டோரியா மகாராணி வழங்கிய காப்புரிமை கடிதத்தின் மூலம் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய மாகாணங்களில் உயர் நீதிமன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இவற்றில் சென்னை உயர் நீதிமன்ற வளாகம் உலகிலேயே இலண்டனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய நீதித்துறை வளாகமாகும்.
Question 33 |
பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர் ஆகிய பகுதிகளுக்கு பொது நீதிமன்றம் எங்கு அமைந்துள்ளது?
ஹரியானா | |
பஞ்சாப் | |
சண்டிகர் | |
டெல்லி |
Question 33 Explanation:
விளக்கம்: எடுத்துக்காட்டாக பஞ்சாப், ஹரியானா மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகர் ஆகிய பகுதிகளுக்குச் சண்டிகரிலுள்ள உயர் நீதிமன்றம் பொது நீதிமன்றமாக உள்ளது.
Question 34 |
ஏழு வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொதுவான நீதிமன்றம் எங்கு அமைந்துள்ளது?
நாகாலாந்து | |
கவுகாத்தி | |
அகர்தலா | |
மணிப்பூர் |
Question 34 Explanation:
விளக்கம்: கவுகாத்தியிலுள்ள உயர் நீதிமன்றம் ஏழு வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், மேகாலயா, திரிபுரா மற்றும் அருணாச்சலப்பிரதேசம் போன்றவைகளுக்கு பொது நீதிமன்றமாக உள்ளது.
Question 35 |
தனக்கென்று சொந்தமாக ஓர் உயர் நீதிமன்றத்தைக் கொண்டுள்ள யூனியன் பிரதேசம் எது?
அந்தமான் நிகோபார் | |
சண்டிகர் | |
டெல்லி | |
கோவா |
Question 35 Explanation:
விளக்கம்: டெல்லி ஒரு மாநிலமாக இல்லாத போதும் தனக்கென்று சொந்தமாக ஓர் உயர் நீதிமன்றத்தைக்
கொண்டுள்ளது. ஒவ்வொரு நீதிமன்றமும் தலைமை நீதிபதி மற்றும் பல நீதிபதிகளைக் கொண்டுள்ளது.
Question 36 |
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை தீர்மானிப்பவர் யார்?
குடியரசுத்தலைவர் | |
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி | |
மாநில முதல்வர் | |
பிரதமர் |
Question 36 Explanation:
விளக்கம்: உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை குடியரசுத் தலைவரால் தீர்மானிக்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் 29 மாநிலங்கள் (2019 ஜனவரியில் தோற்றுவிக்கப்பட்டு அமராவதியில் இயங்கும் ஆந்திரப்பிரதேசத்தின் புதிய உயர் நீதிமன்றத்தையும் சேர்த்து) மற்றும் 7 யூனியன் பிரதேசங்களுக்கும் சேர்த்து 25 உயர் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.
Question 37 |
உயர் நீதிமன்றத்தின் , தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமனம் செய்ய வழிவகை செய்யும் அரசியலமைப்பு பிரிவு எது?
216 | |
224 | |
221 | |
225 |
Question 37 Explanation:
விளக்கம்: சட்டப்பிரிவு 216-ன் படி ஒவ்வொரு உயர் நீதிமன்றத்திற்கும், தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளை குடியரசுத் தலைவர் காலத்திற்கேற்றவாறு நியமனம் செய்கிறார்.
Question 38 |
தங்களுக்கான நீதிவரையறை அதிகாரங்களுடன் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களையும் பெற்றுள்ள உயர் நீதி மன்றம் எது?
கல்கத்தா | |
பம்பாய் | |
சென்னை | |
இவை அனைத்தும் |
Question 38 Explanation:
விளக்கம்: சென்னை, பம்பாய், கல்கத்தா நீதிமன்றங்கள் தங்களுக்கான நீதிவரையறை அதிகாரங்களுடன் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களையும் பெற்றுள்ளன. அதே வேளையில் மற்ற நீதிமன்றங்கள் பெரும்பாலும் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களை மட்டுமே பெற்றுள்ளன.
Question 39 |
கீழ்க்கண்டவற்றுள் உயர்நீதிமன்றம் நேரடியாக விசாரிக்கும் வழக்குகள் எவை?
உயில் | |
திருமணம் சார்ந்த வழக்குகள் | |
நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் | |
இவை அனைத்தும்.. |
Question 39 Explanation:
விளக்கம்: முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், உயில், திருமணம் சார்ந்த வழக்குகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் ஆகியவற்றை மட்டும் நேரடியாக விசாரிக்கும் அதிகாரங்களை இவை பெற்றுள்ளன. மாகாண நீதிமன்றங்கள் தன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரூபாய் 2000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை மதிப்புடைய குற்றவியல் வழக்குகளை தனக்கே உரிய நீதிவரையறையை பயன்படுத்தி மாகாண நீதிபதிகள் விசாரிக்க முடியும்.
Question 40 |
உயர் நீதிமன்றங்களுக்கு பேராணைகளை வெளியிட அதிகாரம் வழங்கும் அரசியலமைப்பு பிரிவு எது?
216 | |
224 | |
221 | |
226 |
Question 40 Explanation:
விளக்கம்: இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 226, அடிப்படை உரிமைகளுக்காக மட்டுமின்றி மற்ற நோக்கங்களுக்காகவும் பேராணைகளை வெளியிடும் அதிகாரங்களை உயர் நீதிமன்றங்களுக்கு வழங்குகிறது.
சட்டப்பிரிவு 32-ன் கீழ் உச்ச நீதிமன்றம் வழங்கும் நீதிப்பேராணைகள், ஆணைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் போன்றே உயர் நீதிமன்றமும் அவைகளை வழங்க அதிகாரம் பெற்றுள்ளது.
Question 41 |
கீழ் நீதிமன்றங்கள் தனது அதிகார எல்லையைத் தாண்டி செயல்படாமல் தடுக்கும் நீதிப்பேராணை?
ஆவணக் கேட்பு பேராணை | |
தடையுறுத்தும் நீதிப்பேராணை | |
தகுதி வினவும் நீதிப்பேராணை | |
ஆட்கொணர்வு நீதிப் பேராணை |
Question 41 Explanation:
விளக்கம்: தடையுறுத்தும் நீதிப்பேராணை (Prohibition) கீழ் நீதிமன்றங்கள் தனது அதிகார எல்லையைத் தாண்டி செயல்படாமல் இது தடுக்கிறது. தகுதி வினவும் நீதிப்பேராணை (Quo Warranto) பொதுப்பதவிக்கு தவறாக வரும் ஒருவரை இது தடுக்கிறது. இதன் படி ஒருவர் அவர் எந்த அடிப்படையில் குறிப்பிட்டப் பதவியை வகிக்கிறார் என்பதை தெளிவுபடுத்திக் கோரும் நீதிப்பேராணை ஆகும்.
Question 42 |
ஐ.நா பொது சபை தீர்மானம் 217A எதனோடு தொடர்புடையது?
சுற்றுச்சூழல் | |
மனித உரிமைகள் | |
வணிகம் | |
வேளாண்மை |
Question 42 Explanation:
விளக்கம்: வெவ்வேறு சட்ட மற்றும் பண்பாட்டுப் பின்னணியுடன் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து, கலந்துகொண்ட பிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை (Universal Declaration of Human Rights) மனித உரிமைகள் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று பாரிசில் நடைபெற்ற ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றப்பட்ட (பொது சபை தீர்மானம் 217A) இந்தப் பேரறிக்கை, அனைத்துலக நாடுகள் மற்றும் அனைத்துலக மக்களின் பொதுத்தர சாதனை ஆகும்.
Question 43 |
மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பேரறிக்கையில் எத்தனை உறுப்புகள் (articles) உள்ளன?
29 | |
15 | |
20 | |
30 |
Question 43 Explanation:
விளக்கம்: மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பேரறிக்கையில் 30 உறுப்புகள் (articles) உள்ளன. அது சுதந்திரத்திற்கான உரிமையை உறுதி செய்வதோடு குடிமை, அரசியல், சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகளையும் தருகிறது. இவ்வுரிமைகள் இனம், பால், தேசியம் ஆகியவற்றைக் கடந்து அனைத்து மக்களுக்கும் பொருந்தும். ஏனெனில் மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாகவும், சம உரிமையோடும் பிறக்கின்றன.
Question 44 |
பெற்றோர் நலன்கள் பராமரிப்புச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
2009 | |
2015 | |
2010 | |
2007 |
Question 44 Explanation:
விளக்கம்: மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் நலன்கள் பராமரிப்புச் சட்டம் 2007-ஆம் ஆண்டில் சட்டமாக இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் பிள்ளைகளுக்கும் வாரிசுகளுக்கும் தங்கள் பெற்றோரை அல்லது மூத்த குடிமக்களைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளும் சட்டப்பூர்வ வேண்டுகோள் ஆகும்.
Question 45 |
அடிப்படைக் கடமைகள் மொத்தம் எத்தனை?
9 | |
15 | |
10 | |
11 |
Question 45 Explanation:
விளக்கம்: அடிப்படைக் கடமைகள் என்பவை குடிமக்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் என்ற விதத்தில் அமைந்துள்ளன. 1950 ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி இடம்பெற்றிருக்கவில்லை. 1976ஆம் ஆண்டு 42வது சட்ட திருத்தத்தின் மூலம் அவை இணைக்கப்பட்டன. அரசமைப்பு 11 அடிப்படைக் கடமைகளைக் குறிப்பிடுகின்றது.
Question 46 |
இந்திய மனித உரிமைகள் ஆணையம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
1993 | |
1992 | |
1994 | |
1991 |
Question 46 Explanation:
விளக்கம்: மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள் அமைக்கப்பட்டது தேசிய மனித உரிமைகள் ஆணையம். இது ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இவ்வமைப்பு ஒரு தலைவரையும், சில உறுப்பினர்களையும் கொண்டுள்ளது இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச உடன்படிக்கையில் உத்திரவாதம் தரப்பட்டுள்ள ஒரு தனி மனிதனின் வாழ்வு, சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பொறுப்பேற்கிறது.
Question 47 |
கீழ்க்கண்டவற்றுள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகள் எவை?
மனித உரிமை மீறல் அல்லது அத்தகைய மீறல் குறித்து அரசு ஊழியர் அலட்சியம் காட்டுதல் ஆகியவை மீது விசாரணை நடத்திடுதல். | |
மனிதஉரிமைமீறல் வழக்குகளில் தன்னை இணைத்துக் கொள்ளுதல். | |
மனித உரிமைகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் ஊக்குவித்தல். | |
இவை அனைத்தும் |
Question 47 Explanation:
விளக்கம்: • சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே மனித உரிமைக் கல்வியைப் பரப்புதல்.
மனித உரிமைத் துறையில பணியாற்றும் அரசுசாரா அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் முயற்சிகளை ஊக்குவித்தல்.
Question 48 |
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்க வழி செய்யும் வகையுரை பிரிவு?
21 | |
22 | |
23 | |
27 |
Question 48 Explanation:
விளக்கம்: இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்க வழி செய்யும் வகையுரை ஒன்று பிரிவு 21, மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993ல் உள்ளது. மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு ஆகியவை இவ்வாணையத்தின் முதன்மை நோக்கமாகும். மேலதிகமாக, எழுத்து மூலமான புகார் பெறாவிட்டாலும்கூட ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தும் வகையிலும், மாநில மனித உரிமை ஆணையங்களின் செயல்பாடுகளை வெளிப்படைத் தன்மையாக்கியது போன்ற ஒழுங்காற்று விதிகளை ஆணையம் வகுத்ததன் மூலமாக மாநிலங்களில் ஆணையத்தின் செயல்முறைகள் வலுவாக்கப்பட்டுள்ளது.
Question 49 |
கீழ்க்கண்டவற்றுள் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகள் எவை?
மாநில பட்டியல், பொதுப் பட்டியல் ஆகியனவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் குறித்தான மனித உரிமை மீறல்களை விசாரித்தல். | |
மாநில எல்லைக்குட்பட்டதாகும். இவ்வாணையத்தில் ஒரு தலைவரும் இரு உறுப்பினர்களும் உள்ளனர். | |
இவ்வாணையத்திற்கு குற்றவியல் நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரம் உண்டு. எனவே, தொடுக்கப்படும் வழக்குகள் அல்லது தானாக முன்வந்து தொடுக்கும் வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்கலாம். | |
a) மற்றும் b) |
Question 49 Explanation:
விளக்கம்: மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகள் :
மாநில பட்டியல், பொதுப் பட்டியல் ஆகியனவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் குறித்தான மனித உரிமை மீறல்களை விசாரித்தல்.
இதன் நோக்கங்களும் பணிகளும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை போன்றே உள்ளன. ஆனால் மாநில எல்லைக்குட்பட்டதாகும். இவ்வாணையத்தில் ஒரு தலைவரும் இரு உறுப்பினர்களும் உள்ளனர்.
இவ்வாணையத்திற்கு உரிமையியல் நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரம் உண்டு. எனவே, தொடுக்கப்படும் வழக்குகள் அல்லது தானாக முன்வந்து தொடுக்கும் வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்கலாம்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் வழங்க பரிந்துரைகளும் செய்யலாம்.
Question 50 |
ஐக்கிய நாடுகள் சபை எத்தனை வயதுவரையுள்ள அனைவரையும் குழந்தைகள் என வரையறுக்கிறது?
14 | |
18 | |
16 | |
15 |
Question 50 Explanation:
விளக்கம்: ஐக்கிய நாடுகள் சபை 18 வயதுவரையுள்ள அனைவரையும் குழந்தைகள் என வரையறுக்கிறது. இது உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தின் பிரிவு 25ல் காணப்படுகின்றது.
Question 51 |
ஐ.நா.சபை எந்த ஆண்டு குழந்தைகள் உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டது?
1992 | |
1989 | |
1988 | |
1990 |
Question 51 Explanation:
விளக்கம்: ஐ.நா.சபை 1989ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று குழந்தைகள் உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டது.
வாழ்வதற்கான உரிமை
குடும்பச் சூழலுக்கான உரிமை
கல்விக்கான உரிமை
சமூகப் பாதுகாப்பு உரிமை
பாலியல் தொல்லைகளுக்கு எதிரான உரிமை
விற்பதுஅல்லதுகடத்தலுக்கெதிரானஉரிமை
குழந்தை உழைப்பு முறை போன்ற மற்ற சுரண்டல்களுக்கெதிரான உரிமை
Question 52 |
வாழ்வதற்கான உரிமை என்பது கீழ்க்கண்டவற்றுள் எதனை குறிப்பிடுகின்றது?
பிறப்புரிமை | |
உணவு | |
உடை | |
இவை அனைத்தும் |
Question 52 Explanation:
விளக்கம்: ஒரு குழந்தை பிறப்பிற்கு முன்பே அது வாழத்தகுதி பெறுகின்றது. வாழ்வதற்கான உரிமை என்பது பிறப்புரிமை, அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை மற்றும் கண்ணியமான வாழ்வு வாழும் உரிமை ஆகியனவற்றை உள்ளடக்கியது.
Question 53 |
ஒவ்வொரு குழந்தையும் தொடக்கக் கல்வி பயில உரிமை உள்ளது என்பதை வலியுறுத்தும் அரசியலமைப்பு பிரிவு?
21A | |
20 A | |
21 | |
19 |
Question 53 Explanation:
விளக்கம்: அரசமைப்பின் பிரிவு 21Aல் உள்ளபடி 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்க 2009ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றம் கல்வி உரிமைச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தியது. இலவசமற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (Right of children to free and compulsory education) 2009, ஒவ்வொரு குழந்தையும் தொடக்கக் கல்வி பயில உரிமை உள்ளது என்பதை வலியுறுத்துகின்றது. இவ்வுரிமை, குழந்தைகள் தொடக்கக் கல்வி முடியும் வரை அருகாமையில் உள்ள பள்ளியில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி அளிக்க வழிவகை செய்கிறது. கல்வி பயிலும் குழந்தை எந்த வகையான கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
Question 54 |
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் எது?
பாஸ்கோ | |
ஸ்வயம் | |
பச்பன் பச்சாவ் | |
இவை அனைத்தும் |
Question 54 Explanation:
விளக்கம்: பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (2012) ஒவ்வொரு நிலையிலும் குழந்தைகளின் நலனை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இச்சட்டம் 18 வயது வரை உள்ளவர்களை குழந்தைகள் என வரையறுக்கிறது. அக்குழந்தைகளின் உடல், மன, அறிவு சார் மற்றும் சமூக வளர்ச்சியினை உறுதி செய்கிறது. பாலியல் வன்கொடுமையில் அதிகாரத்தில் இருப்பவரோ குடும்ப உறுப்பினரோ அண்டை வீட்டாரோ அல்லது அறிமுகமானவரோ ஈடுபட்டால் அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். குழந்தை என்ன வாக்குமூலம் தருகிறதோ அதை அவ்வாறே பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தையை அடிக்கடி சாட்சி சொல்ல அழைக்கக்கூடாது.
Question 55 |
எந்த வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகள் செய்யப்படும்போது வன் கொடுமை செய்தவருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது?
12 | |
13 | |
15 | |
10 |
Question 55 Explanation:
விளக்கம்: 12 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகள் செய்யப்படும்போது வன் கொடுமை செய்தவருக்கு மரண தண்டனை வழங்குவதோடு கடுமையான தண்டனைகள் விதிக்க வகை செய்யும் சட்டம் 2018 ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்டது. குற்றவியல் திருத்த சட்டம் 2018. இது இந்திய குற்றவியல் சட்டத்தில் கடுமையான திருத்தங்களை கொண்டு வந்தது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் விதிக்கப்படும் அபராத தொகையானது பாதிக்கப்பட்டவரின் மருத்துவ செலவை ஈடுகட்டும் வகையில் இருக்க வேண்டும் என்பதாகும்.
Question 56 |
கீழ்க்கண்டவற்றுள் குழந்தைகளுக்கான உதவி மைய எண் எது?
1098 | |
1092 | |
1094 | |
1908 |
Question 56 Explanation:
விளக்கம்: 1098 உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கான உதவி மைய எண் இந்தியாவின் முதல் 24 மணி நேர கட்டணமில்லா அவசர தொலை தொடர்பு சேவை ஆகும். குழந்தைத்தொழிலாளர், குழந்தை திருமணம் மற்றும் ஏதேனும் வன்கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
Question 57 |
பின்வருபவர்களுள் குழந்தைகள் உரிமை அமைப்புகளின் நிறுவனர் யார்?
கைலாஷ் சத்யார்த்தி | |
மலாலா | |
நிக்கில் தேவ் | |
அருணா ராய் |
Question 57 Explanation:
விளக்கம்: பச்பன் பச்சாவ் அந்தோலன் (இளமையைக் காப்பாற்று இயக்கம்) போன்ற பல குழந்தைகள் உரிமை அமைப்புகளின் நிறுவனர் கைலாஷ் சத்யார்த்தி. அவர் குழந்தை உழைப்பு, கொத்தடிமை, கடத்தல் போன்ற பல குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கைகளிலிருந்து சுமார் 86,000த்திற்கும் அதிகமான இந்தியக் குழந்தைகள் இவராலும், இவரது குழு உறுப்பினர்களாலும் மீட்கப்பட்டுள்ளனர். 1998ல் உலக மக்களின் கவனத்தை குழந்தை உழைப்பு முறை மீது திசை திருப்ப, 80,000கி.மீ. நீள ‘குழந்தை உழைப்புக்கு எதிரான உலகளாவிய அணிவகுப்பை (Global March against child labour) முன்னின்று நடத்தினார்.
Question 58 |
குறைபாடுகள் உடைய குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட எத்தனை சதவீதம் அதிகமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்?
3.4% | |
4.3% | |
3.2% | |
4.5% |
Question 58 Explanation:
விளக்கம்: குறைபாடுகள் உடைய குழந்தைகளே, மற்ற குழந்தைகளை விட 3.4% அதிகமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் என உலகளாவிய ஆராய்ச்சி ஒன்றின் முடிவுகள் குறிப்பிடுகின்றன.
Question 59 |
பதினான்கு வயதுக்குட்பட்ட எந்த குழந்தையும் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று கூறும் அரசமைப்பு பிரிவு எது?
21 A | |
22 | |
24 | |
45 |
Question 59 Explanation:
விளக்கம்: இந்திய அரசமைப்பில் குழந்தைகள் உரிமை
பிரிவு 24. பதினான்கு வயதுக்குட்பட்ட எந்த குழந்தையும் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தக்கூடாது.
பிரிவு 45. பதினான்கு வயது நிறைவடையும்வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் அளிக்கப்பட வேண்டும்
Question 60 |
மூதாதையரின் சொத்துகளில் பெண்களுக்கு சம உரிமை வழங்கும் இந்து வாரிசுரிமை சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1989 | |
1990 | |
1986 | |
1982 |
Question 60 Explanation:
விளக்கம்: தமிழ்நாடு இந்து வாரிசு உரிமை (தமிழ்நாடு திருத்தச்) சட்டம், 1989 ஐ நிறைவேற்றி மூதாதையரின் சொத்துகளில் பெண்களுக்கும் சம உரிமை வழங்கியுள்ளது, மத்திய அரசு இந்து வாரிசுரிமைச் சட்டம் 2005-இல் திருத்தங்களை மேற்கொண்டது. இதில் மூதாதையரின் பிரிக்கப்படாத சொத்தில் வாரிசு அடிப்படையில் பெண்களுக்கு சம உரிமையினை அளித்தது.
Question 61 |
மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை சதவீதம் முன்னுரிமை அடிப்படையில் ஒவ்வொரு பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது?
5% | |
4% | |
3% | |
6% |
Question 61 Explanation:
விளக்கம்: பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், மற்றும் பழங்குடியினருக்கு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் 69% இட ஒதுக்கீட்டினை தமிழ் நாடு அரசு வழங்கியுள்ளது. ஆதி திராவிடர் பிரிவில் இடம் பெற்றுள்ள அருந்ததியர் வகுப்பினருக்கு முன்னுரிமை அடிப்படையில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கியுள்ளது. மேலும் பெண்களுக்கு 33%, மாற்றுத்திறனாளிகளுக்கு 4% முன்னுரிமை அடிப்படையில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கியுள்ளது.
Question 62 |
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு ஒவ்வொரு பிரிவின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் எத்தனை சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது?
20% | |
25% | |
33% | |
12% |
Question 62 Explanation:
விளக்கம்: தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு ஒவ்வொரு பிரிவின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
Question 63 |
தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவற்றை தேர்க.
அரசு நிறுவனங்களின் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதற்கான இச்சட்டம் இந்தியாவில் 2005 நவம்பர் மாதம் இயற்றப்பட்டது. | |
இச்சட்டத்தின்படி அரசு நிறுவனங்களில் தேவைப்படும் தகவல்களை எந்த ஒரு சாதாரண குடிமகனும் கோரிப் பெறலாம். | |
தகவல்கள் 30 நாட்களுக்குள் வழங்கப்படுதல் வேண்டும். | |
இவை அனைத்தும் |
Question 63 Explanation:
விளக்கம்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஓர் புரட்சிகரமான சட்டமாகும். அரசு நிறுவனங்களின் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதற்கான இச்சட்டம் இந்தியாவில் 2005 அக்டோபர் மாதம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி அரசு நிறுவனங்களில் தேவைப்படும் தகவல்களை எந்த ஒரு சாதாரண குடிமகனும் கோரிப் பெறலாம். தகவல்கள் 30 நாட்களுக்குள் வழங்கப்படுதல் வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் தகவல் வழங்கும் அதிகாரியிடமிருந்து கட்டணமாக ஒரு குறிப்பிட்டத் தொகை வசூலிக்கப்படும்.
நாட்டின் வலிமை வாய்ந்த சட்டங்களுள் தகவல் அறியும் உரிமைச் சட்டமும் ஒன்றாகும். இச்சட்டம் மிகவும் எளிமையானதாகவும், சாதாரண மக்களும் பயன்படுத்தக்கூடிய வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
Question 64 |
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்களைப் பெற படிக்கத் தெரியாதவர்களுக்கு உதவுபவர் யார்?
பொதுத்தகவல் அலுவலர் | |
தகவல் உதவியாளர் | |
தகவல் வழங்குநர் | |
தகவல் அறியும் உரிமைச்சட்ட செயல்பாட்டாளர்கள் |
Question 64 Explanation:
விளக்கம்: இச்சட்டத்தின் வாயிலாக தகவல்களைப் பெற படிக்கத் தெரியாதவர்களுக்கு பொதுத்தகவல்
அலுவலர் உதவி செய்ய வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்கள் அதாவது ஊராட்சி, நகராட்சி
மற்றும் மாநகராட்சி அலுவலகங்கள் போன்ற உள்ளாட்சி அமைப்புகள் பல்வேறு அரசுத் துறைகள், அரசுப் பள்ளிகள், நெடுஞ்சாலைத் துறைகள் போன்றவை இச்சட்டத்திற்கு உட்பட்டதாகும்.
Question 65 |
கீழ்கண்ட எந்த அமைப்புகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது?
எல்லைப் பாதுகாப்புப் படை | |
மாநகராட்சி அலுவலகங்கள் | |
நெடுஞ்சாலைத் துறைகள் | |
a) மற்றும் b) |
Question 65 Explanation:
விளக்கம்: நாட்டின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைகளான எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), மத்திய சேமக் காவல் படை (CRPR) மற்றும் உளவுத்துறைப் பணியகம் (Intelligence Bureau) ஆகிய அமைப்புகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.• விண்ணப்பத்தில் உங்கள் முழுபெயர், முகவரி எழுதி கையெழுத்திட்டு தேதியுடன் பதிவு தபாலின் குறிப்பிட்ட அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.
அனுப்பப்பட்ட அஞ்சலுக்கு 30 நாட்களுக்குள் பதில் பெறப்படவில்லை எனில்
1 விண்ணப்பத்தை மேல்முறையீடுக்கு அனுப்பலாம்.
Question 66 |
இருப்பாலினருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதி செய்யும் அரசியலமைப்பு பிரிவு எது?
39 பி | |
38 சி | |
35 ஏ | |
36 பி |
Question 66 Explanation:
விளக்கம்: சமத்துவத்திற்கான உரிமை, பொது வேலைவாய்ப்பில் சமத்துவம், அமைப்புகள் மற்றும் சங்கம் தொடங்குவதற்கான உரிமை, வாழ்வாதார உரிமை, கடத்தலைத் தடுத்தல் மற்றும் கட்டாயத் தொழிலாளர் மற்றும் குழந்தைகள் உரிமைகளை, இந்திய அரசியலமைப்பு உறுதி செய்கிறது. பிரிவு 39பி, இருப்பாலினருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதி செய்கிறது.
Question 67 |
உயர்நீதிமன்றத்தின் நீதிபதி பின்வருவனவற்றுள் எந்தத் தகுதிகளை கட்டாயம் கொண்டிருத்தல் வேண்டும்?
ஏதோ ஒரு நாட்டின் குடிமகனாக இருத்தல் வேண்டும் | |
இந்தியாவில் பத்தாண்டு காலம் நீதித்துறை அலுவலராகபணியாற்றி இருக்கவேண்டும். | |
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களில் வழக்குரைஞராக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். | |
b) மற்றும் c) |
Question 67 Explanation:
விளக்கம்: உயர்நீதிமன்றத்தின் நீதிபதி பின்வரும் தகுதிகளை கட்டாயம் கொண்டிருத்தல் வேண்டும்.
■ இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
■ இந்தியாவில் பத்தாண்டு காலம் நீதித்துறை அலுவலராகபணியாற்றி இருக்கவேண்டும்.
■ ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களில் வழக்குரைஞராக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
Question 68 |
உயர் நீதிமன்ற நீதிபதியின் வயது வரம்பு?
63 | |
64 | |
62 | |
65 |
Question 68 Explanation:
விளக்கம்: உயர் நீதிமன்ற நீதிபதி 62 வயது வரை அப்பதவியில் இருப்பார். உயர்நீதிமன்ற நீதிபதி நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை மற்றும் திறமை இன்மை ஆகியவற்றின் அடிப்படையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்குவது போன்று நீக்கப்படலாம்.
Question 69 |
மாவட்ட நீதிபதிகள் யாரால் நியமனம் செய்யப்படுகின்றனர்?
முதல்வர் | |
தலைமை நீதிபதி | |
ஆளுநர் | |
குடியரசுத்தலைவர் |
Question 69 Explanation:
விளக்கம்: நீதி நிர்வாகத்திற்காக ஒவ்வொரு மாநிலமும் பல்வேறு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டமும் மாவட்ட நீதிமன்றத்தின் எல்லைக்குள் அமைந்திருக்கும். மாவட்ட நீதிபதிகள் ஆளுநரால் நியமனம் செய்யப்படுகின்றனர்.
Question 70 |
மனித உரிமைகள் என்ற கருத்து எங்கிருந்து ஆரம்பித்தது?
ஐரோப்பிய நாடுகள் | |
அமெரிக்க நாடுகள் | |
ஆசிய நாடுகள் | |
a) மற்றும் b) |
Question 70 Explanation:
விளக்கம்: அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களின் தொகுப்பானது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் வேரூன்றியிருந்தது.
Question 71 |
உலக மனித உரிமைகள் அறிவிப்பு ஐ.நா. பொதுச்சபையால் எந்த ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது?
1950 | |
1948 | |
1946 | |
1945 |
Question 71 Explanation:
விளக்கம்: ஐக்கிய நாடுகள் சபையின் மிகப்பெரிய சாதனைகளுள் ஒன்று மனித உரிமைகளுக்கான சட்டத்தை உருவாக்கியதாகும். இந்த இலக்குகளை அடைவதற்காக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக்கான ஓர் ஆணையத்தை நிறுவியது. எலினார் ரூஸ்வெல்டின் (முன்னாள் அமெரிக்க அதிபர் பிராங்களின் டி.ரூஸ்வெல்டின் மனைவி) வலுவான தலைமையால் வழிநடத்தப்பட்ட ஆணையம் உலகின் கவனத்தை ஈர்த்தது. இறுதியாக உலக மனித உரிமைகள் அறிவிப்பு ஐ.நா. பொதுச்சபையால் 1948இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அது மனித உரிமைகள் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும்.
Question 72 |
மனித உரிமைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
டிசம்பர் 10 | |
vடிசம்பர் 11 | |
டிசம்பர் 12 | |
டிசம்பர் 14 |
Question 72 Explanation:
விளக்கம்: உலக மனித உரிமைகள் அறிவிப்பு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஐ.நா. பொதுச்சபையால் 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. (பொதுச்சபை தீர்மானம் 217A). இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் நாள் மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இது 1950ஆம் ஆண்டிலிருந்து வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இது மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகாசாசனம் என்றும்அழைக்கப்படுகிறது.
Question 73 |
உலகில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட ஆவணம் எது?
உலக மனித உரிமைகள் அறிவிப்பு | |
உரிமை மனு | |
மகா சாசனம் | |
ஆங்கில உரிமைகள் மசோதா |
Question 73 Explanation:
விளக்கம்: இது மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகாசாசனம் என்றும்அழைக்கப்படுகிறது. இதன்கொள்கைகள் பெரும்பாலான நாடுகளின் (185 நாடுகளுக்கும் மேல்) அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. உலக மனித உரிமைகள் அறிவிப்பு 500க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி
பெயர்க்கப்பட்டுள்ளது. இதுவே உலகில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட ஆவணம் ஆகும்.
Question 74 |
மனித உரிமைகள் கொண்டுள்ள அடிப்படை மதிப்புகள் எவை?
கண்ணியம் | |
நீதி | |
சமத்துவம் | |
இவை அனைத்தும் |
Question 74 Explanation:
விளக்கம்: மனித உரிமைகள் கொண்டுள்ள அடிப்படை மதிப்புகள்
அ. கண்ணியம்: வாழ்வதற்கான உரிமை, ஒருமைப்பாட்டிற்கான உரிமை, கட்டாய தொழிலாளர்முறை, அடிமைமுறை,இழிவான தண்டனை ஆகியவற்றிற்கான தடை.
ஆ. நீதி: நேர்மையான விசாரணைக்கான உரிமை, குற்றத்திற்கு ஏற்றாற்போல் தண்டனை, ஒரே குற்றத்திற்காக ஒன்றுக்கு மேற்பட்ட முறை விசாரணைக்குட்படுத்தாத உரிமை.
இ. சமத்துவம்: சட்டத்தின் முன் அனைவரும் சமம். இனம், மதம், பாலினம், வயது, திறமை மற்றும் இயலாமை ஆகியவற்றில் பாகுபாடின்மை.
Question 75 |
மனித உரிமையின் அடிப்படைப் பண்புகள் எவை?
அடிப்படையானவை | |
மாற்ற முடியாதவை | |
இயல்பானவை | |
இவை அனைத்தும் |
Question 75 Explanation:
விளக்கம்: இயல்பானவை: அவை எந்தவொரு நபராலும் அதிகாரத்தாலும் வழங்கப்படுவதில்லை. அடிப்படையானவை: இந்த அடிப்படை உரிமைகள் இல்லையென்றால் மனிதனின் வாழ்க்கையும், கண்ணியமும் அர்த்தமற்றதாகிவிடும்.
மாற்ற முடியாதவை: இவைகள் தனிநபரிடம் இருந்து பறிக்க முடியாதவைகள் ஆகும். பிரிக்க முடியாதவை: மற்ற உரிமைகளை ஏற்கனவே அனுபவித்துக் கொண்டிருந்தாலும் கூட இந்த அடிப்படை உரிமைகளை மறுக்க முடியாது.
உலகளாவியவை: இந்த உலகளாவிய உரிமைகள் ஒருவரின் தோற்றம் அல்லது நிலையைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இந்த உரிமைகள் பொருந்தும். இந்த உரிமைகள் தேசிய எல்லையைத் தாண்டி அனைத்து நாடுகளிலும் அமல்படுத்தப்படுகின்றன.
Question 76 |
மனித உரிமைகள் எத்தனை முதன்மைப் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன?
4 | |
5 | |
6 | |
3 |
Question 76 Explanation:
விளக்கம்: மனித உரிமைகள் பிரகடனத்தில் 30 சட்டப்பிரிவுகள் உள்ளடங்கியுள்ளன. இந்த உரிமைகள் ஐந்து முதன்மைப் பிரிவுகளாக விரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.அவைகள் பின்வருமாறு.
அ) வாழ்வியல் உரிமைகள்
ஆ) அரசியல் உரிமைகள்
இ) சமூக உரிமைகள்
ஈ) பொருளாதார உரிமைகள்
உ) கலாச்சார உரிமைகள்
Question 77 |
தமிழ்நாட்டில் எந்த ஆண்டு மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்டது?
1993 | |
1994 | |
1996 | |
1997 |
Question 77 Explanation:
விளக்கம்: தமிழ்நாட்டில் 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 இல் மாநில மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்டது. இது மாநில அளவில் செயல்படுகிறது. இது ஒரு தலைவர் உட்பட மூன்று உறுப்பினர்களை உள்ளடக்கியது. இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலப்பட்டியல் பொதுப்பட்டியல் ஆகியவற்றின் கீழுள்ள துறைகள் தொடர்பான மனித உரிமை மீறல் தொடர்பானவைகளை மாநில மனித உரிமைகள் விசாரிக்கும்.
Question 78 |
ஆரோக்கியமாக குழந்தைகள் வளர வழிவகை செய்யும் அரசியலமைப்பு பிரிவு எது?
39(f) | |
24 | |
45 | |
21 |
Question 78 Explanation:
விளக்கம்: பிரிவு 24 - குழந்தைத்தொழிலாளர் முறையை தடை செய்கிறது. பிரிவு 39(f) - ஆரோக்கியமாக குழந்தைகள் வளர வழிவகை செய்கிறது.
பிரிவு 45 - 6 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்ப கால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்க அரசு முயல்கிறது.
Question 79 |
1986 இல் இயற்றப்பட்ட குழந்தைத்தொழிலாளர் சட்டம் எத்தனை வயது பூர்த்தி அடையாத குழந்தையை வேலைக்கு அமர்த்துவதை தடை செய்கிறது?
14 | |
18 | |
15 | |
16 |
Question 79 Explanation:
விளக்கம்: 1986 இல் இயற்றப்பட்ட குழந்தைத்தொழிலாளர் சட்டம் 15 வயது பூர்த்தி அடையாத எந்த ஒரு குழந்தையையும் வேலைக்கு அமர்த்துவதை தடை செய்கிறது.
Question 80 |
போதுமான கவனிப்பு இல்லாமல் இருக்கும் குழந்தைகளை நட்பு ரீதியாக அணுகி அவர்களை சீர்திருத்த முயற்சி மேற்கொள்ளும் சட்டம் எது?
கல்வி உரிமை சட்டம் | |
குழந்தைத்தொழிலாளர் சட்டம் | |
சிறார் நீதி சட்டம் | |
இவை அனைத்தும் |
Question 80 Explanation:
விளக்கம்: சிறார் நீதி சட்டம் 2000 (குழந்தைகளை பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல்)போதுமான கவனிப்பு இல்லாமல் இருக்கும் குழந்தைகளை நட்பு ரீதியாக அணுகி அவர்களை சீர்திருத்த முயற்சி மேற்கொள்கிறது.
Question 81 |
நான்காவது உலக மகளிர் மாநாடு எங்கு நடைபெற்றது?
பெய்ஜிங் | |
டோக்கியோ | |
இலண்டன் | |
பாரிஸ் |
Question 81 Explanation:
விளக்கம்: 1995 ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் நடைபெற்ற நான்காவது உலக மகளிர் மாநாடு பெண்களின் உரிமைகளை அங்கீகரிப்பதற்கும் உலகளவில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குமான ஒரு தளத்தை உருவாக்கியது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டங்கள் இந்த இலக்குகளை அடைவதற்கு தேவையானவற்றை கண்காணிக்கிறது.
Question 82 |
பெண்களை கேலி செய்வதற்கு எதிரானச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1997 | |
1995 | |
1994 | |
1998 |
Question 82 Explanation:
விளக்கம்: இந்து விதவை மறுமணச் சட்டம், 1856 - விதவைகள் மறுமணத்தைசட்டப்பூர்வமாக்கியது. இந்து திருமணச் சட்டம், 1955 - பெண்களின் திருமண வயது 21 என்று சட்டப்பூர்வமாக்கியது.
இந்து வாரிசு சட்டம், 1956 - பெண்கள் தங்கள் பெற்றோர்களின்சொத்தினை மரபுவழியாக பெறுவதை உறுதிசெய்கிறது.
Question 83 |
கீழ்க்கண்டவற்றுள் பெண் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் சட்டம் எது?
தொழிற்சாலைச் | |
தோட்டத் தொழிலாளர்கள் சட்டம் | |
சுரங்கச் சட்டம் | |
இவை அனைத்தும் |
Question 83 Explanation:
விளக்கம்: பெண் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் சட்டங்கள்:
தொழிற்சாலைச் சட்டம், 1948
தோட்டத் தொழிலாளர்கள் சட்டம், 1951
சுரங்கச் சட்டம், 1952
மகப்பேறு நலச் சட்டம், 1961
Question 84 |
தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரின் பதவிக் காலம் என்ன?
5 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை | |
5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை | |
6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை | |
5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை |
Question 84 Explanation:
விளக்கம்: இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1993 ஆம் ஆண்டு ஆக்டோபர் 12 ஆம் நாள் நிறுவப்பட்டது. இது சுதந்திரமான, சட்டப்பூர்வமான அரசியலமைப்பு சாராத ஓர் அமைப்பு ஆகும். இதன் தலைமையகம் புதுடெல்லியில் அமைந்துள்ளது. இது ஒரு தலைவரையும் பிற உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. குடியரசுத்தலைவர் நியமிக்கிறார். தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை ஆகும்.
Question 85 |
இன சமத்துவத்தை நிலைநாட்டிய பாரசீக மன்னர் யார்?
ஜார்ஜ் | |
ரூஸ்ட்வெல்ட் | |
சைரஸ் | |
போர்ஸ் |
Question 85 Explanation:
விளக்கம்: பண்டைய பாரசீகத்தின் முதல் மன்னரான மகா சைரஸ், அடிமைகளை விடுவித்து மக்கள் அனைவரும் தங்கள் சொந்த மதத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு என்று அறிவித்தார். இன சமத்துவத்தை
நிலைநாட்டினார். மேற்கூறியவைகளும், மற்ற ஆணைகளும் கியூனிபார்ஃம் எழுத்துக்களில் அக்காடியன் மொழியில் சிலிண்டர் வடிவிலான சுட்ட களிமண்ணில் பதிவு செய்யப்பட்டன. இது ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு அலுவல் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவை உலக மனித உரிமைகள் பிரகடனத்தின் முதல் நான்கு விதிகளுக்கு இணையாக உள்ளன.
Question 86 |
மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக ஓர் ஆணையத்தை அமைக்கும் அதிகாரம் பெற்ற ஐ.நா அமைப்பு எது?
பொருளாதார சபை | |
சமூக சபை | |
பாதுகாப்பு சபை | |
a) மற்றும் b) |
Question 86 Explanation:
விளக்கம்: மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக ஓர் ஆணையத்தை அமைக்க ஐ.நா சபையின் முக்கிய அங்கமான பொருளாதார மற்றும் சமூக சபை அதிகாரம் பெற்றது. மனித உரிமைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தேசிய மற்றும் மாநில அளவிலான மனித உரிமை ஆணையங்கள் அமைக்கப்பட்டன.
Question 87 |
குறிப்பிட்ட நாட்டில் குடியுரிமை பெறுவதன் மூலம் ஒருவர் அனுபவிக்கும் உரிமை எது?
வாழ்வியல் உரிமை | |
மனித உரிமை | |
அடிப்படை உரிமை | |
இவை அனைத்தும் |
Question 87 Explanation:
விளக்கம்: குறிப்பிட்ட நாட்டில் அல்லது மாநிலத்தில் குடியுரிமை பெறுவதன் மூலம் ஒருவர் அனுபவிக்கும் உரிமைகள் ஆகும். சிவில் உரிமைகள் நாட்டிற்கு நாடு அல்லது அரசாங்கத்திற்கு அரசாங்கம் பெரிதும் வேறுபடுகின்றன. இவை அரசியலமைப்பு சட்டத்துடன் தொடர்பானவை. அந்தந்த நாடுகள் பல்வேறு வகையான சிவில் உரிமைகள் மூலம் சுதந்திரங்களை மறுக்கவோ வழங்கவோ முடியும். சிவில் உரிமைகள் சமூகத்தினரால் உருவாக்கப்படுகின்றன.
Question 88 |
எந்த விலங்குகளை தவிர மற்ற விலங்குகளின் சின்னங்களை வழங்குவதை தேர்தல் ஆணையம் நிறுத்தியுள்ளது?
யானை | |
காளை | |
மான் | |
a) மற்றும் b) |
Question 88 Explanation:
விளக்கம்: தேர்தல் சின்னங்கள் வாக்காளர்களால் எளிதில் அறிந்துகொள்ளப்பட்டு நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது. விலங்குகளின் சின்னங்களை வழங்குவதை தேர்தல் ஆணையம் நிறுத்தியுள்ளது. விதி விளக்காக யானை மற்றும் சிங்கம் ஆகிய சின்னங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. தேசிய அளவிலான அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னம் நாடு முழுவதும் ஒன்றாக இருக்கும். இத்தகைய சின்னங்கள் வேறு எந்த கட்சிக்கும் அல்லது சுயேட்சை நபருக்கும் ஒதுக்கப்பட மாட்டாது.
Question 89 |
ஜன நாயகத்தின் முதுகெலும்பு எது?
தேர்தல் | |
ஊடகம் | |
பிரதிநிதித்துவம் | |
கல்வி |
Question 89 Explanation:
விளக்கம்: ஊடகமானது ஜனநாயகத்தின் முதுகெலும்பாகும். நமது ஜன நாயக சமுதாயத்தில் ஊடகம் பொது மக்களின் கருத்துகளை செயல்படுத்தும் உந்து சக்தியாகும். இது ஜன நாயகத்தின் மதிப்புகளை பலப்படுத்துகிறது. இது மக்களுக்கு அறிவையும் வலிமையையும் அளிக்கிறது. மேலும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.
Question 90 |
நுகர்வோரின் தேவைகளை பாதுகாக்கும் பொருட்டு அரசு எத்தனை வழிமுறைகளை வகுத்துள்ளது?
4 | |
3 | |
2 | |
5 |
Question 90 Explanation:
விளக்கம்: நுகர்வோரின் தேவைகளை பாதுகாக்கும் பொருட்டு அரசு மூன்று வழிமுறைகளை வகுத்துள்ளது.
அ) சட்டம் சார்ந்த நடவடிக்கைகள்
நுகர்வோர் பாதுகாக்கும் சட்டத்தை ஏற்படுத்துதல்
ஆ) நிர்வாகம் சார்ந்த நடவடிக்கைகள்
பொது விநியோக முறையில் அத்தியாவசிய பொருட்களை விநியோகித்தல்
இ) தொழில் நுட்பம் சார்ந்த நடவடிக்கைகள்
பொருட்களின் தரம் பாதுக்காக்கப்படல்
Question 91 |
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1986 | |
1987 | |
1988 | |
1889 |
Question 91 Explanation:
விளக்கம்: 1986 ஆம் ஆண்டு நுகர்வோரை பாதுகாக்கும் பொருட்டு அரசால் இயற்றப்பட்ட சட்டம் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என்று அழைக்கப்படுகிறது. நுகர்வோர் நலன்களை பாதுகாக்கும் பொருட்டு மத்திய மாநில அரசுகளில் தனித்தனி துறைகள் செயல்பட்டு வருகிறது. இந்த சட்டத்தின் முக்கிய அம்சம் மூன்று அடுக்குகளாக தேசிய அளவில் மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் விசாரணைகள் மேற்கொள்ள நுகர்வோர் நீதி மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது நுகர்வோரின் மகாசாசனம் என்று அறியப்படுகிறது.
Question 92 |
விவசாயம் சார்ந்த பொருட்களின் மீது பொறிக்கப்படும் முத்திரை எது?
அக்மார்க் | |
BIS | |
ISO | |
இவை அனைத்தும் |
Question 92 Explanation:
விளக்கம்: இந்தியாவில் பொருட்களின் தரத்தை நிர்ணயிக்கும் பொருட்டு அதன் மீது இந்திய தரக்குழுமம் குறியீடு BIS மற்றும் அக்மார்க் குறியீடு பொறிக்கப்படுகிறது. இந்தியாவில் இருப்பதை போன்று உலகில் பொருட்களின் தரத்தை நிர்ணயம் செய்ய உலகத்தர அமைப்பு ISO 1947 ஆம் ஆண்டு ஜெனிவாவில் துவக்கப்பட்டது. இது ஒரு அரசு சாரா நிறுவனம் ஆகும்.
Question 93 |
இந்திய தேசிய நுகர்வோர் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
டிசம்பர் 24 | |
டிசம்பர் 26 | |
டிசம்பர் 25 | |
டிசம்பர் 22 |
Question 93 Explanation:
விளக்கம்: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24 ஆம் தேதி இந்திய தேசிய நுகர்வோர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்த நாளில் தான் 1986 ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றம் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தினை இயற்றியது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15 ஆம் நாள் உலக நுகர்வோர் தினம் அனுசரிக்கப்படுகிறது. 1962 ஆம் ஆண்டு இதே நாளில் தான் நுகர்வோரின் உரிமைகள் அடங்கிய நகல் அமெரிக்க காங்கிரஸ் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனவே அந்த நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.
Question 94 |
நுகர்வோர் இயக்கத்தின் தந்தை என்று அறியப்படுபவர் யார்?
அருணா ராய் | |
நிக்கில் தேவ் | |
கைலாஷ் நாத் | |
ரால்ப் நாடார் |
Question 94 Explanation:
விளக்கம்: ரால்ப் நாடார் என்பவர் நுகர்வோர் இயக்கத்தின் தந்தை என்று அறியப்படுகிறார்.
Question 95 |
நுகர்வோர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாத இதழ் எது?
மதிப்புள்ள நுகர்வோர் | |
தமிழ்நாடு நுகர்வோர் கவசம் | |
மகா சாசனம் | |
விழித்திடு மனிதா விழித்திடு |
Question 95 Explanation:
விளக்கம்: நுகர்வோர் பற்றிய விழிப்புணர்வு சுய உதவிக்குழுக்கள் மற்றும் ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் மூலம் ஏற்படுத்தப்படுகிறது. நகர்ப்புறங்களில் குடியிருப்பு நல சங்கங்களின் மூலம் அறிமுகப்படுத்தப்படுகிறது. கருத்தரங்கம் மற்றும் பொதுப்பணிமனையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தமிழ்நாடு நுகர்வோர் கவசம் என்ற மாத இதழின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கப்படுகிறது.
Question 96 |
உணவுப்பொருட்கள் சம்பந்தப்பட்ட உலகத்தரத்தினை அறிந்து கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்ட நிறுவனம் எது?
கோடாக்ஸ் அலிமெண்டேஷன் கமிஷன் | |
உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் | |
உலக சுகாதார நிறுவனம் | |
இவை அனைத்தும் |
Question 96 Explanation:
விளக்கம்: உணவுப்பொருட்கள் சம்பந்தப்பட்ட உலகத்தரத்தினை அறிந்து கொள்ளும் பொருட்டு கோடாக்ஸ் அலிமெண்டேஷன் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த நிறுவனம் 1963 ஆம் ஆண்டு இத்தாலியில் ரோம் நகரில் உணவு மற்றும் வேளாண்மை துறை நிறுவனம், உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றால் நிறுவப்பட்டது.
Question 97 |
கீழ்க்கண்டவற்றுள் அமெரிக்க ஐக்கிய நாட்டில் இயற்றப்பட்ட நுகர்வோர் சட்டம் எது?
கூட்டமைப்பு நியாய கடன் வசூல் முறை சட்டம் | |
நியாய கடன் அறிக்கை சட்டம் | |
உண்மை கடனளிப்பு சட்டம் | |
இவை அனைத்தும் |
Question 97 Explanation:
விளக்கம்: அமெரிக்காவில் நுகர்வோர் நலன்களை பாதுகாக்கும் பொருட்டு மத்திய மாநில அளவில் பல்வேறு வகையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவைகள் கூட்டமைப்பு நியாய கடன் வசூல் முறை சட்டம், நியாய கடன் அறிக்கை சட்டம், உண்மை கடனளிப்பு சட்டம் ஆகியன. மாநில அளவில் பல மாநிலங்களில் நுகர்வோர் விவகார துறைகள் உருவாக்கப்பட்டு நுகர்வோரின் நலன்களை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Question 98 |
உரிமைகள் மற்றும் பாதுகாக்கும் பொறுப்பு எந்த நாட்டோடு தொடர்புடையது?
ஜெர்மனி | |
இங்கிலாந்து | |
அமெரிக்கா | |
சுவீடன் |
Question 98 Explanation:
விளக்கம்: ஜெர்மனி - உரிமைகள் மற்றும் பாதுகாக்கும் பொறுப்பு, ஒரு கூட்டாட்சி அமைச்சரவை, அமைச்சருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Question 99 |
கீழ்க்கண்டவற்றுள் நுகர்வோர் சட்டத்தின் பயன்கள் எவை?
விழிப்புணர்வு ஏற்படுத்துதல் - நுகர்வோர் சட்டம் மக்களிடையே பொருட்களின் விலை, தரம், சேவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. | |
சமூகம் பற்றியவை - பொருட்களின் உற்பத்தி மற்றும் சேவை பிறரை பாதிக்காமல் இச்சட்டம் செயல்படுகிறது. | |
சுற்றுச்சூழல் பற்றியது - நுகர்வோரின் பொருள் பயன்பாட்டால் சுற்றுச்சூழலில் ஏற்படும் விளைவுகளை அறிந்துகொள்ள உதவுகிறது. | |
இவை அனைத்தும் |
Question 99 Explanation:
விளக்கம்: நுகர்வோர் சட்டத்தின் பயன்கள்:
விழிப்புணர்வு ஏற்படுத்துதல் - நுகர்வோர் சட்டம் மக்களிடையே பொருட்களின் விலை, தரம், சேவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
சமூகம் பற்றியவை - பொருட்களின் உற்பத்தி மற்றும் சேவை பிறரை பாதிக்காமல் இச்சட்டம் செயல்படுகிறது.
சுற்றுச்சூழல் பற்றியது - நுகர்வோரின் பொருள் பயன்பாட்டால் சுற்றுச்சூழலில் ஏற்படும் விளைவுகளை அறிந்துகொள்ள உதவுகிறது.
Question 100 |
கீழ்க்கண்டவற்றுள் நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிற நடைமுறைகள் எவை?
வர்த்தக கண்காட்சி | |
நுகர்வோர் விழா | |
கூட்டு ஆர்வலர்கள் | |
இவை அனைத்தும் |
Question 100 Explanation:
விளக்கம்: உயர் அதிகாரிகளுக்கும் தலைவர்களுக்கும் உரிய பயிற்சிகள், கலந்துரையாடல்கள் மூலமாகவும், மற்றும் பொதுக்கல்வி நடவடிக்கை மூலமாகவும் கொடுக்கப்பட வேண்டும்.
பிற நடவடிக்கைகள்:
அ) வர்த்தக கண்காட்சி
ஆ) நுகர்வோர் விழா
இ) சுய உதவிக்குழுக்களுக்கும், பஞ்சாயத்து குழுக்களுக்கும், நுகர்வோர் விழிப்புணர்வு குறித்த பயிற்சி அளித்தல்.
ஈ) கூட்டு ஆர்வலர்கள்
உ) குடியிருப்போர் நலச்சங்கங்கள் மூலம் நுகர்வோர் உரிமைகள் குறித்து கருத்தரங்கம்/ பயிற்சி கொடுத்தல்
ஊ) வியாபார நோக்கமற்ற பணி மனைகள் நடத்துதல்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.