Online Test

Indian Polity Revision Test Part 5 in Tamil

Indian Polity Revision Test Part 5 in Tamil

Congratulations - you have completed Indian Polity Revision Test Part 5 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
தேசிய அரசுக்கும் பிராந்திய அரசுக்கும் இடையில் இருக்கும் உறவின் அடிப்படையில் ஆட்சி முறை எத்தனை வகைப்படும்?  
A
2
B
3
C
4
D
5
Question 1 Explanation: 
விளக்கம்: தேசிய அரசுக்கும் பிராந்திய அரசுக்கும் இடையில் இருக்கும் உறவின் அடிப்படையிலேயே ஒற்றை ஆட்சி முறை என்றும் கூட்டாட்சி முறை என்றும் அரசு வகைப்படுத்தப்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்தின்படி தேசிய அரசும் பிராந்திய அரசுகளும் தங்களது அதிகாரங்களைப் பகிர்ந்து அவரவர் எல்லைக்கு உட்பட்டு சுதந்திரமாகச் செயல்படுவது கூட்டாட்சி முறை ஆட்சியாகும்.
Question 2
கூட்டாட்சி முறையைக் கொண்ட நாடுகளுக்கு எடுத்துக்காட்டு எவை?
A
சுவிட்சர்லாந்து
B
இங்கிலாந்து
C
ஜப்பான்
D
இவை அனைத்தும்
Question 2 Explanation: 
விளக்கம்: அரசியலமைப்பு சட்டத்தின்படி தேசிய அரசும் பிராந்திய அரசுகளும் தங்களது அதிகாரங்களைப் பகிர்ந்து அவரவர் எல்லைக்கு உட்பட்டு சுதந்திரமாகச் செயல்படுவது கூட்டாட்சி முறை ஆட்சியாகும். ஐக்கிய அமெரிக்க நாடுகள், சுவிட்சர்லாந்து ஆஸ்திரேலியா, கனடா, ரஷ்யா, பிரேசில், அர்ஜென்டினா ஆகிய நாடுகள் கூட்டாட்சி முறையை கொண்டவை. கூட்டாட்சி முறையில் தேசிய அரசை மைய அரசு அல்லது மத்திய அரசு என்றும் பிராந்திய அரசை மாநில அரசு அல்லது மாகாண அரசு என்றும் அழைக்கின்றனர்.
Question 3
கீழ்க்கண்டவற்றுள் கூட்டாட்சியின் நிறைகள் எவை?  
A
மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு, நிர்வாகத் திறன்கள் மேம்பட வழிவகுக்கிறது.
B
உள்ளூர் சுய ஆட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு இடையே சமரசம் ஏற்படுத்துதல்
C
மிகப் பெரிய நாடுகள் தோன்றுவதற்கு வழி செய்கிறது
D
இவை அனைத்தும்.
Question 3 Explanation: 
விளக்கம்: * அதிகாரம் பகிர்ந்து அளிக்கப் படுவதால் மத்திய அரசின் சர்திவதிகாரப் போக்கைத் தடுக்கிறது. * மிகப்பெரிய நாடுகளுக்குப் பொருத்தமானது * பொருளாதார மற்றும் பண்பாட்டு முன்னேற்றங்களுக்கு நன்மை அளிக்கிறது.
Question 4
கீழ்க்கண்டவற்றுள் கூட்டாட்சி முறையின் அம்சங்கள் எவை?  
A
பெரும்பாலும் ஒரே குடியுரிமை
B
துணைக் குழுக்கள் தன்னிச்சையாகச் செயல்பட இயலாது.
C
அதிகாரப் பகிர்வு
D
மையப்படுத்தப்பட்ட அதிகாரம்
Question 4 Explanation: 
விளக்கம்: கூட்டாட்சி முறையின் அம்சங்கள்: * இரண்டு நிலையில் அரசாங்கம். * இரட்டைக் குடியுரிமை * கூட்டாட்சியின் குழுக்கள் மத்திய அரசுக்கு உட்பட்டவை * அதிகாரப் பகிர்வு * அதிகாரப் பரவல்
Question 5
கீழ்க்கண்டவற்றுள் கூட்டாட்சியின் குறைகள் எவை?  
A
ஒற்றையாட்சி முறையோடு ஒப்பிடும்போது கூட்டாட்சி முறை பலவீனமானது.
B
கூட்டாட்சி முறை அதிக செலவினம் கொண்டது
C
பிராந்திய போக்குகள்தான் பொதுவாக காணப்படும்.
D
இவை அனைத்தும்
Question 5 Explanation: 
விளக்கம்: * நிர்வாகச் சமநிலையில் குறைபாடுகள். * தேசிய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் * அதிகாரப் பகிர்வில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே முரண்பாடு உருவாகிறது. * இரட்டைக் குடியுரிமை. * மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்க இயலாது திடமான அரசியலமைப்பு. * வெளியுறவுக் கொள்கைகளில் சில நேரங்களில் மாநில அரசுகள் தடைகளை ஏற்படுத்துகின்றன.
Question 6
இந்திய அரசியலமைப்பில் காணப்படும் கூட்டாட்சி முறை அம்சங்கள் எவை?  
A
இரட்டை அரசாங்கம்
B
எழுதப்பட்ட அரசியலமைப்பு
C
அதிகாரப் பகிர்வு
D
இவை அனைத்தும்.
Question 6 Explanation: 
விளக்கம்: இந்திய அரசியலமைப்பில் கூட்டாட்சி முறை அம்சங்கள் * இரட்டை அரசாங்கம் * எழுதப்பட்ட அரசியலமைப்பு * அதிகாரப் பகிர்வு * அரசியல் அமைப்பின் உயர் அதிகாரம் நாட்டின் உச்சபட்சசட்டமாக அரசியலமைப்புச் சட்டம் விளங்குகிறது. மத்திய மாநில அரசுகளால் இயற்றப்படும் சட்டங்கள் அதன் விதிகளுக்கு உட்பட்டு அமைதல் வேண்டும்
Question 7
இந்திய அரசமைப்பின் எத்தனையாவது அட்டவணையின்படி மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் அதிகாரம் பங்கிட்டு அளிக்கப்பட்டுள்ளது?  
A
7
B
8
C
9
D
5
Question 7 Explanation: 
விளக்கம்: இந்திய அரசமைப்பின் ஏழாவது அட்டவணையின்படி மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் மத்திய பட்டியல், மாநில பட்டியல் மற்றும் பொதுப் பட்டியல் என்ற ன் அடிப்படையில் அதிகாரம் பங்கிட்டு அளிக்கப்பட்டுள்ளது.
Question 8
நெகிழா அரசமைப்பு குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்க.  
A
ஒவ்வொரு அவையிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை என்ற நடைமுறையின் மூலமே அரசமைப்புச் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
B
ஆளும் கட்சியினரால் மிக எளிதாக அரசமைப்பு சட்டத்திருத்தம் கொண்டுவர இயலும்.
C
a) மற்றும் b)
D
இரண்டும் இல்லை.
Question 8 Explanation: 
விளக்கம்: ஒவ்வொரு அவையிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை என்ற நடைமுறையின் மூலமே அரசமைப்புச் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் ஆளும் கட்சியினரால் மிக எளிதாக அரசமைப்பு சட்டத்திருத்தம் கொண்டுவர இயலாது.
Question 9
பொருத்துக.
  • 1. இஸ்ரேல்                -   A) நெசெட்
  • 2. ஜெர்மனி                  -   B) பன்டஸ்டாக்
  • 3. ஜப்பான்                    -   C) டயட்
  • 4. நார்வே                     -   D) ஸ்டோர்டிங்
  • 5. நேபாளம்                  -   E) ராஷ்டிரிய பஞ்சாயத்து
 
A
A) B) C) D) E)
B
D) E) A) B) C)
C
B) C) A) D) E)
D
A) C) E) D) B)
Question 9 Explanation: 
விளக்கம்: இஸ்ரேல் - நெசெட் ஜெர்மனி - பன்டஸ்டாக் ஜப்பான் - டயட் நார்வே - ஸ்டோர்டிங் நேபாளம் - ராஷ்டிரிய பஞ்சாயத்து
Question 10
மத்தியப் பட்டியலில் உள்ள துறைகளின் எண்ணிக்கை?  
A
100
B
98
C
52
D
61
Question 10 Explanation: 
விளக்கம்: மத்திய மாநில அரசுகள் சட்டங்கள் இயற்றும் அதிகாரம் படைத்தவை. ஆனாலும் அதிகாரங்கள் வேறுபடுகின்றன. சில குறிப்பிட்ட துறைகளுக்கு சட்டமியற்றும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடம் உள்ளது. இத்துறைகள் மத்தியப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
Question 11
கீழ்க்கண்டவற்றுள் மத்தியப்பட்டியலில் இடம்பெற்றுள்ள துறைகள் எவை?  
A
தபால் மற்றும் தந்தி
B
நீதித்துறை
C
செய்தித்தாள்
D
மக்கள் தொகை கட்டுப்பாடு
Question 11 Explanation: 
விளக்கம்: மத்தியப் பட்டியலில் 100 துறைகள் உள்ளடங்கியுள்ளது . வெளியுறவுத் துறைகள், பாதுகாப்பு, ஆயுதப்படைகள், தொலைதொடர்பு, தபால் மற்றும் தந்தி, மாநிலங்களுக்கிடையிலான வியாபாரம் மற்றும் வணிகம்.
Question 12
மாநிலப் பட்டியல் எத்தனை துறைகளைக் கொண்டுள்ளது
A
100
B
98
C
52
D
61
Question 12 Explanation: 
விளக்கம்: மாநிலப் பட்டியல் 61 துறைகளைக் கொண்டுள்ளது. மாநிலத்தின் பொது ஒழுங்கு, காவல் துறை, நீதித்துறை நிர்வாகம், சிறைத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், விவசாயம் போன்றவை
Question 13
பின்வருவனவற்றுள் பொதுப்பட்டியலின் கீழ் வருபவை எவை?  
A
நீதித்துறை நிர்வாகம்
B
சிறைத்துறை
C
புத்தகங்கள் மற்றும் அச்சகங்கள்
D
இவை அனைத்தும்
Question 13 Explanation: 
விளக்கம்: பொதுப்பட்டியல் 52 துறைகளாக உள்ளன. குற்றவியல் மற்றும் சிவில் நடைமுறைகள், திருமணம் மற்றும் விவாகரத்து, பொருளாதாரம் மற்றும் சிறப்புத் திட்டமிடல், செய்தித்தாள், புத்தகங்கள் மற்றும் அச்சகங்கள், மக்கள் தொகை கட்டுப்பாடு ஆகியன.
Question 14
இந்திய மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே உள்ள நிதி உறவுகள் குறித்த அரசியலமைப்பு பிரிவு எது?  
A
256 முதல் 263 வரை
B
245 முதல் 255 வரை
C
268 முதல் 294 வரை
D
இவற்றில் எதுவுமில்லை.
Question 14 Explanation: 
விளக்கம்: இந்திய நாடு, இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வழி முறைகளுக்கு உட்பட்டு மத்திய, மாநில அரசுகளுக்கிடையே அதிரங்களை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களின் கூட்டமைப்பு ஆகும். மத்திய மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரங்கள் பகிர்ந்து கொள்ளப் பட்டாலும் அனைத்து விவகாரங்களிலும் முடிவெடுப்பது மத்திய அரசே ஆகும். மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு என்பது: 1. சட்ட மன்ற உறவுகள் (பிரிவுகள் 245 முதல் 255 வரை) 2. நிர்வாக உறவுகள் (பிரிவுகள் 256 முதல் 263 வரை) 3. நிதி உறவுகள் (பிரிவுகள் 268 முதல் 294 வரை)
Question 15
மிகவும் பழமையான அரசாங்கம் எது?
A
ஐக்கிய அரசில் காணப்பட்ட முடியாட்சி முறை
B
ஏதென்சில் காணப்பட்ட முடியாட்சி முறை
C
சீனத்தில் காணப்பட்ட முடியாட்சி முறை
D
ஈரானில் காணப்பட்ட முடியாட்சி முறை
Question 15 Explanation: 
விளக்கம்: ஐக்கிய பேரரசு காணப்பட்ட முடியாட்சி அமைப்பே மிகவும் பழமையான அரசாங்கம் ஆகும். முடியாட்சியில் அரசரோ அல்லது மகாராணியோ அரசாங்கத்தின் தலைவராவார். ஆங்கில முடியாட்சி என்பது அரசியலமைப்புக்கு உட்பட்ட முடியாட்சி ஆகும். அதாவது அரசின் தலைமையாகவே இருந்தாலும் சட்டமியற்றும் வல்லமை தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்திடமே உள்ளது.
Question 16
ஒற்றை ஆட்சி முறைக்கான உதாரணம்?  
A
பிரான்சு
B
ஜப்பான்
C
இலங்கை
D
இவை அனைத்தும்
Question 16 Explanation: 
விளக்கம்: இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், மற்றும் இலங்கை ஆகியவை ஒற்றை ஆட்சி முறைக்கான உதாரணங்களாகும்.
Question 17
இறையாண்மை மிக்க ஓர் அரசு ஒரே நிறுவனமாக இருந்து ஆட்சி செய்வது?  
A
ஒற்றை ஆட்சி முறை
B
கூட்டாட்சி முறை
C
நிறுவன ஆட்சி முறை
D
இவை அனைத்தும்
Question 17 Explanation: 
விளக்கம்: ஒற்றை ஆட்சி முறை என்பது இறையாண்மை மிக்க ஓர் அரசு ஒரே நிறுவனமாக இருந்து ஆட்சி செய்வதாகும். மத்திய அரசு அதிகாரம் மிக்கதாகும். நிர்வாக அமைப்புகள் மத்திய அரசினால் ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்களை மட்டுமே செயல்படுத்தும்.
Question 18
அரசு என்னும் பதம் எம்மொழியிலிருந்து எடுக்கப்பெற்றது?  
A
பிரெஞ்சு
B
இலத்தீன்
C
a) மற்றும் b)
D
ஆங்கிலம்
Question 18 Explanation: 
விளக்கம்: அரசு என்னும் பதம், பழைய பிரெஞ்சு வார்த்தையான கவர்னர் (governer) என்பதிலிருந்தும் இயக்கு, ஆட்சி செய், வழி நடத்து, ஆள் என்று பொருள் தரும் லத்தீன் வார்த்தையான குபர்னர் (gubernare) என்பதிலிருந்தும் பெறப்பட்டது.
Question 19
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்க.
A
ஒற்றையாட்சி முறையில் அனைத்து அதிகாரங்களும் ஒரே இடத்தில் மையப்படுத்தப்படுகின்றன.
B
ஆனால் கூட்டாட்சி அரசு முறையில் அதிகாரமானது, மத்திய அரசு மற்றும் அதன் அமைப்புப் பிரிவுகளுக்குள்ளும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
C
ஒற்றையாட்சி முறை அரசியலமைப்பிலும் அதிகாரப் பரவலாக்கம் இருக்கக்கூடும்.
D
இவை அனைத்தும்.
Question 19 Explanation: 
விளக்கம்: ஒற்றையாட்சி முறையில் அனைத்து அதிகாரங்களும் ஒரே இடத்தில் மையப்படுத்தப்படுகின்றன. ஆனால் கூட்டாட்சி அரசு முறையில் அதிகாரமானது, மத்திய அரசு மற்றும் அதன் அமைப்புப் பிரிவுகளுக்குள்ளும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஒற்றையாட்சி முறை அரசியலமைப்பிலும் அதிகாரப் பரவலாக்கம் இருக்கக்கூடும். ஆனாலும் அதனைக் கூட்டாட்சி முறை எனக் கொள்ளலாகாது.
Question 20
கீழ்க்கண்டவற்றுள் ஒற்றை ஆட்சி முறையின் நிறைகள் எவை?  
A
உள்ளூர் சுய ஆட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு இடையே சமரசம் ஏற்படுத்துதல்
B
மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு, நிர்வாகத் திறன்கள் மேம்பட வழிவகுக்கிறது.
C
மிகப் பெரிய நாடுகள் தோன்றுவதற்கு வழி செய்கிறது
D
சிறு நாடுகளுக்குப் பொருத்தமானது
Question 20 Explanation: 
விளக்கம்: ஒற்றை ஆட்சி முறையின் நிறைகள் * சிறு நாடுகளுக்குப் பொருத்தமானது * அதிகாரம் மற்றும் பொறுப்புகளுக்கு இடையில் மோதல்கள் இருப்பதில்லை. * ஒற்றை ஆட்சி முறை உடனடியாக முடிவெடுத்துத் துரிதமாகச் செயல்படுகிறது.
Question 21
குறைந்த செலவுடைய ஆட்சி முறை எது?  
A
ஒற்றை ஆட்சி முறை
B
சிறுகுழு ஆட்சி முறை
C
நிறுவன ஆட்சி முறை
D
கூட்டாட்சி முறை
Question 21 Explanation: 
விளக்கம்: * ஒற்றை ஆட்சி குறைந்த செலவுடையது. * அரசியலமைப்பு திருத்தங்களை எளிதில் மேற்கொள்ள இயலும். * ஒற்றுமை, சீரான சட்டம், கொள்கை மற்றும் நிர்வாகத்தினை உள்ளடக்கியது.
Question 22
நிர்வாக தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ள ஆட்சி முறை எது?    
A
ஒற்றை ஆட்சி முறை
B
சிறுகுழு ஆட்சி முறை
C
நிறுவன ஆட்சி முறை
D
கூட்டாட்சி முறை
Question 22 Explanation: 
விளக்கம்: * மிகப்பெரிய நாடுகளுக்குப் பொருத்தமற்றது. * மத்திய அரசு பலதரப்பட்ட பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். அதனால் நிர்வாக தாமதங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன
Question 23
மத்திய அரசின் சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்க கூடிய அரசாட்சி முறை எது?  
A
ஒற்றை ஆட்சி முறை
B
சிறுகுழு ஆட்சி முறை
C
நிறுவன ஆட்சி முறை
D
கூட்டாட்சி முறை
Question 23 Explanation: 
விளக்கம்: * மத்திய அரசு உள்ளூர் பிரச்சினைகள் சார்ந்தும் உள்ளூர் மக்கள் நலனிலும் உள்ளூர் முயற்சிகளிலும் அக்கறை காட்டாது. * அதிகமான அதிகாரங்கள் குவிக்கப்படுவதால் மத்திய அரசின் சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கவும் கூடும்
Question 24
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒற்றை ஆட்சி முறை அம்சங்கள் எவை?  
A
பலமான மத்திய அரசு
B
மாநில அரசின் மீது மத்திய அரசின் ஆளுமை
C
ஒற்றை அரசமைப்பு
D
இவை அனைத்தும்
Question 24 Explanation: 
விளக்கம்: இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒற்றை ஆட்சி முறை அம்சங்கள் * பலமான மத்திய அரசு * மாநில அரசின் மீது மத்திய அரசின் ஆளுமை * ஒற்றை அரசமைப்பு * அரசியலமைப்பின் நெகிழ்வுத்தன்மை
Question 25
ஆளுநர்கள் மத்திய அரசினால் நியமிக்கப்படுதல் இந்திய அரசின் எத்தன்மையை குறிக்கிறது?
A
ஒற்றை ஆட்சி முறை
B
சிறுகுழு ஆட்சி முறை
C
நிறுவன ஆட்சி முறை
D
கூட்டாட்சி முறை
Question 25 Explanation: 
விளக்கம்: இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒற்றை ஆட்சி முறை அம்சங்கள்: * மாநிலங்களின் சமமற்ற பிரதிநிதித்துவம். * அவசரகால ஏற்பாடுகள் * ஒற்றைக் குடியுரிமை * ஒருங்கிணைக்கப்பட்ட ஒற்றை நீதித்துறை * அகில இந்தியச் சேவைகள் * ஆளுநர்கள் மத்திய அரசினால் நியமிக்கப்படுதல்.
Question 26
நாடாளுமன்ற ஆட்சி முறையின் அம்சங்கள் எவை?
A
பெயரளவில் மற்றும் உண்மையான நிர்வாகிகள்
B
எழுதப்பட்ட அரசியலமைப்பு
C
அதிகாரப் பகிர்வு
D
இவை அனைத்தும்
Question 26 Explanation: 
விளக்கம்: நாடாளுமன்ற ஆட்சி முறையின் அம்சங்கள் * பெயரளவில் மற்றும் உண்மையான நிர்வாகிகள் * பெரும்பான்மை கட்சி ஆட்சி * கூட்டுப் பொறுப்புணர்வு * இரட்டை உறுப்பினர் * பிரதம மந்திரியின் தலைமை
Question 27
கீழ்க்கண்டவற்றுள் நாடாளுமன்ற ஆட்சி முறையின் நிறைகள் எவை?
A
நிலையற்ற அரசாங்கம்
B
சட்டமன்றம் மற்றும் நிர்வாகத் துறைக்கு இடையிலான இணக்கம்.
C
பொறுப்பான அரசாங்கம்.
D
b) மற்றும் c)
Question 27 Explanation: 
விளக்கம்: நாடாளுமன்ற ஆட்சி முறை நிறைகள் * சட்டமன்றம் மற்றும் நிர்வாகத் துறைக்கு இடையிலான இணக்கம் * பொறுப்பான அரசாங்கம் * சர்வாதிகாரத்தைத் தடுக்கிறது * பரவலான பிரதிநிதித்துவம்.
Question 28
கீழ்க்கண்டவற்றுள் நாடாளுமன்ற ஆட்சி முறையின் குறைகள் எவை?
A
தொடர்ச்சியற்ற கொள்கைகள்
B
அமைச்சரவையின் சர்வாதிகாரம்
C
அதிகாரங்களைப் பிரிப்பதில் உள்ள சிக்கல்கள்
D
இவை அனைத்தும்
Question 28 Explanation: 
விளக்கம்: குறைகள் * நிலையற்ற அரசாங்கம் * தொடர்ச்சியற்ற கொள்கைகள் * அமைச்சரவையின் சர்வாதிகாரம் * அதிகாரங்களைப் பிரிப்பதில் உள்ள சிக்கல்கள்
Question 29
சட்ட மன்றத்திற்கு பொறுப்பில்லாததாகவும் நாடாளுமன்றம் அற்றதாகவும் உள்ள ஆட்சி முறை எது?
A
ஒற்றை ஆட்சி முறை
B
நாடாளுமன்ற ஆட்சி முறை
C
அதிபர் மக்களாட்சி முறை
D
வெஸ்ட் மினிஸ்டர் ஆட்சி முறை
Question 29 Explanation: 
விளக்கம்: அதிபர் மக்களாட்சி முறை என்பது சட்ட மன்றத்திற்கு பொறுப்பில்லாததாகவும் நாடாளுமன்றம் அற்றதாகவும் நிலைத்த நிர்வாக அற்றதாகவும் நிலைத்த நிர்வாக அமைப்பு உடையதாகவும் இருக்கும்.
Question 30
அதிகாரப் பகிர்வு கொள்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட அரசு முறை எது?
A
ஒற்றை ஆட்சி முறை
B
நாடாளுமன்ற ஆட்சி முறை
C
அதிபர் மக்களாட்சி முறை
D
வெஸ்ட் மினிஸ்டர் ஆட்சி முறை
Question 30 Explanation: 
விளக்கம்: அதிகாரப் பகிர்வு கொள்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இவ்வரசு முறை அமெரிக்கா, பிரேசில், இரஷ்யா, இலங்கை போன்ற நாடுகளில் நடை முறையில் உள்ளது.
Question 31
ஏப்ரல் புரட்சி எங்கு நடைபெற்றது?
A
பூடான்
B
நேபாளம்
C
ஈரான்
D
ஜப்பான்
Question 31 Explanation: 
விளக்கம்: ஏப்ரல் 2006ல் நேபாளத்தின் துடிப்பான, ஜனநாயகம் சார்ந்த மக்கள் சமூக இயக்கத்தின் தலைவர்கள் ‘ஏழு கட்சிகள் கூட்டமைப்பின்’ சார்பில் மக்களுக்கு அழைப்பு விடுத்தனர் (Seven Party Alliance). தலைநகர் காத்மண்டுவின் சுற்றுச் சாலையின் நெடுகிலும் ஏழு இடங்களில் பத்து இலட்சம் மக்கள் பங்கு பெறுமாறு ஓர் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இந்த இமாலய அரசின் எதேச்சதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்களாட்சிக்குப் புத்துயிர் அளிக்கப் பல்லாயிரக்கணக்கான குடிமக்கள் கோரினர். முன் எப்போதுமில்லாத இது போன்ற ஒரு நிகழ்வினால் அரசர் ஞானேந்திராவின் முடியாட்சி முடிவு பெற்று, மக்களாட்சிக்கு வழிவகுத்தது.
Question 32
பூடானில் எந்த மன்னரின் ஆட்சிக்காலத்தில் குடியரசு தேர்தகள் மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்றன?
A
மூன்றாம் அரசர்
B
நான்காம் அரசர்
C
ஐந்தாம் அரசர்
D
ஆறாம் அரசர்
Question 32 Explanation: 
விளக்கம்: பூடானில் ஏற்பட்ட வரலாற்று மாற்றம் மூன்றாம் அரசர் - அடிமைத்தனத்தை ஒழித்தார் நான்காம் அரசர் – கம்பீரமான வட்டங்களைத் துறந்தார். ஐந்தாம் அரசர் - குடியரசு தேர்தகள் மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள்
Question 33
அதிபர் மக்களாட்சி ஆட்சி முறையின் நிறைகள் எவை?
A
ஜனநாயகமானது
B
அதிபரின் முறையான கட்டுப்பாடு
C
முடிவெடுத்தலை மேம்படுத்துதல்
D
இவை அனைத்தும்
Question 33 Explanation: 
விளக்கம்: அதிபர் மக்களாட்சி ஆட்சி முறை நிறைகள் * ஜனநாயகமானது * அதிபரின் முறையான கட்டுப்பாடு * முடிவெடுத்தலை மேம்படுத்துதல்
Question 34
அதிபர் மக்களாட்சி ஆட்சி முறையின் குறைகள் எவை?
A
சர்வாதிகாரமாகச் சிதையும் வாய்ப்பு
B
நிர்வாக மற்றும் சட்டமன்றத்திற்கு இடையிலான இணக்கமற்ற உறவு
C
மாகாண அரசாங்கம்
D
a) மற்றும் b)
Question 34 Explanation: 
விளக்கம்: குறைகள் * சர்வாதிகாரமாகச் சிதையும் வாய்ப்பு * நிர்வாக மற்றும் சட்டமன்றத்திற்கு இடையிலான இணக்கமற்ற உறவு * சட்டமன்றம் மற்றும் நிர்வாகக் குழுவுக்கு இடையிலான நல்லுறவின்மை
Question 35
அதிபர் மக்களாட்சியின் அம்சங்களை தேர்க.
A
அமெரிக்க அதிபர் வாக்காளர் மன்றத்தினால் நான்காண்டுகளுக்கொரு முறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
B
ஒரு கடுமையான அரசியலமைப்புச் சட்டத்திற்கான குற்றச்சாட்டு இருந்தால் மட்டுமே நாடாளுமன்றத்தால் பதவி இறக்கம் செய்ய முடியும்.
C
அதிபர் அமைச்சரவையின் உதவியோடு ஆட்சிபுரிகிறார் அல்லது அமைச்சரவையைக் "கிச்சன் கேபினட்" என்று அழைக்கிறார்கள்.
D
இவை அனைத்தும்
Question 35 Explanation: 
விளக்கம்: அமெரிக்க அதிபர் மாகாணம் மற்றும் அரசின் தலைவராகத் திகழ்கிறார். அரசின் தலைவர் என்பது ஒரு பெயரளவிற்கான பதவியாகும். அரசாங்கத்தின் தலைவராக நிர்வாக அமைப்புகளுக்கு தலைமைதாங்கி வழிநடத்துகிறார். அமெரிக்க அதிபர் வாக்காளர் மன்றத்தினால் நான்காண்டுகளுக்கொரு முறை தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒரு கடுமையான அரசியலமைப்புச் சட்டத்திற்கான குற்றச்சாட்டு இருந்தால மட்டுமே நாடாளுமன்றத்தால் பதவி இறக்கம் செய்ய முடியும். அதிபர் அமைச்சரவையின் உதவியோடு ஆட்சிபுரிகிறார் அல்லது அமைச்சரவையைக் "கிச்சன் கேபினட்" என்று அழைக்கிறார்கள். இது தேர்ந்தெடுக்கப்படாத துறைசார்ந்த செயலர்களைக் கொண்ட சிறு ஆலோசனை அமைப்பு ஆகும்.
Question 36
மகா சபை என்று அழைக்கப்படுவது எது?
A
நாடாளுமன்றம்
B
கிச்சன் கேபினட்
C
காங்கிரஸ்
D
a) மற்றும் b)
Question 36 Explanation: 
விளக்கம்: மகா சபையின் (காங்கிரஸ்) செயல்பாடுகளுக்கு அதிபரும் அவரது செயலாளர்களும் பொறுப்பேற்க மாட்டார்கள். மகா சபையில் இவர்கள் உறுப்பினராகவும் இருப்பதில்லை கூட்டங்களில் கலந்து கொள்வதும் இல்லை.
Question 37
அதிபரால் கலைக்க இயலாத அவை எது?
A
கீழவை
B
கிச்சன் கேபினட்
C
காங்கிரஸ்
D
மேலவை
Question 37 Explanation: 
விளக்கம்: மகா சபையின் கீழவையான பிரதிநிதிகளின் அவையை அதிபரால் கலைக்க இயலாது. அதிகாரங்களைப் பிரிக்கும் கோட்பாடு அடிப்படையிலேயே அமெரிக்க அதிபர் முறை விளங்குகிறது. அரசின் சட்டமன்ற, நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறை அதிகாரங்கள் மூன்றும் தனியாக பிரிக்கப்பட்டு சுதந்திரமாக
Question 38
கீழ்க்கண்டவற்றுள் நல் ஆட்சியின் பண்புகள் எவை?
A
பங்கேற்பு
B
சட்டத்தின் ஆட்சி
C
வெளிப்படைத்தன்மை
D
இவை அனைத்தும்
Question 38 Explanation: 
விளக்கம்: நல் ஆட்சியின் பண்புகள் * பங்கேற்பு * சட்டத்தின் ஆட்சி * வெளிப்படைத்தன்மை * விரைவான நேர்மறையான வினையாற்றல் * கருத்தொற்றுமை * சமத்துவம் * திறமை மற்றும் செயல்திறன்
Question 39
இந்திய தேர்தல் முறை, எங்கு பின்பற்றப்படும் தேர்தல் முறையினைப் பின்பற்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது?
A
இங்கிலாந்து
B
ரஷ்யா
C
பிரான்சு
D
கனடா
Question 39 Explanation: 
விளக்கம்: இந்திய தேர்தல் முறை இங்கிலாந்தில், பின்பற்றப்படும் தேர்தல் முறையினைப் பின்பற்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
Question 40
நேரடி மக்களாட்சி முறை கொண்ட நாடு எது?
A
அமெரிக்கா
B
ரஷ்யா
C
ஆஸ்திரேலியா
D
சுவிட்சர்லாந்து
Question 40 Explanation: 
விளக்கம்: நேரடி மக்களாட்சி முறை கொண்ட நாடு சுவிட்சர்லாந்து மறைமுக மக்களாட்சி முறை கொண்ட நாடு இந்தியா ஆகும்.
Question 41
குடியரசு தலைவர் முறை அரசாங்கம் கொண்ட நாடு எது?
A
அமெரிக்கா
B
இங்கிலாந்து
C
ஆஸ்திரேலியா
D
சுவிட்சர்லாந்து
Question 41 Explanation: 
விளக்கம்: குடியரசு தலைவர் முறை அரசாங்கம் கொண்ட நாடு அமெரிக்கா நாடாளுமன்ற முறை அரசாங்கம் கொண்ட நாடு இங்கிலாந்து.
Question 42
முடியாட்சி முறை கொண்ட நாடு எது?
A
பஃரைன்
B
ஐப்பான்
C
ஆஸ்திரேலியா
D
இவை அனைத்தும்.
Question 42 Explanation: 
விளக்கம்: முழுமையான முடியாட்சி – பஃரைன் அரசமைப்பிலான முடியாட்சி - ஐப்பான் காமன்வெல்த் பகுதிகள் – ஆஸ்திரேலியா
Question 43
சமய ஆட்சி நடைபெறும் நாடுகள் எவை?
A
ஜெர்மனி
B
இத்தாலி
C
ஆஸ்திரேலியா
D
ஈரான்
Question 43 Explanation: 
விளக்கம்: சர்வாதிகாரம் ஹிட்லரின் ஜெர்மனி, முசோலியின் இத்தாலி மதச்சார்பின்மை - இந்தியா சமய ஆட்சி - பாகிஸ்தான், ஈரான், வாடிகன், நேபாளம்.
Question 44
நிலப்பரப்பு சார்ந்த அதிகாரப் பங்கீடு நடைபெறும் நாடுகள் எவை?
A
பாகிஸ்தான்
B
வாடிகன்
C
நேபாளம்
D
சீனா
Question 44 Explanation: 
விளக்கம்: நிலப்பரப்பு சார்ந்த அதிகாரப் பங்கீடு: ஒரவை சட்டமன்றம் - சீனா ஈரவை சட்டமன்றம் - இங்கிலாந்து, அமெரிக்கா
Question 45
செயலாட்சியின் வகைகள் எத்தனை?
A
2
B
3
C
4
D
5
Question 45 Explanation: 
விளக்கம்: செயலாட்சியின் வகைகள் ஒற்றை செயலாட்சி மாதிரி - அமெரிக்கா பன்மை செயலாட்சி மாதிரி - பிரான்சு
Question 46
அர்ப்பணிப்பு உறுதியுடைய நீதித்துறை கொண்ட நாடு எது?
A
சீனா
B
இங்கிலாந்து
C
அமெரிக்கா
D
முன்னாள் சோவியத் ரஷ்ய குடியரசு
Question 46 Explanation: 
விளக்கம்: நீதித்துறையின் வகைகள்: சுதந்திரமானது - அனைத்து மக்களாட்சி நாடுகள் அர்ப்பணிப்பு உறுதியுடையது - முன்னாள் சோவியத் ரஷ்ய குடியரசு
Question 47
நெகிழாதது மற்றும் எழுதப்பட்ட அரசமைப்பு தன்மை கொண்ட நாடு எது?
A
சீனா
B
இங்கிலாந்து
C
அமெரிக்கா
D
முன்னாள் சோவியத் ரஷ்ய குடியரசு
Question 47 Explanation: 
விளக்கம்: அரசமைப்பின் தன்மை நெகிழாதது மற்றும் எழுதப்பட்டது - அமெரிக்கா நெகிழும் தன்மையுடையது மற்றும் எழுதப்படாதது - இங்கிலாந்து
Question 48
முதலாளித்துவ நோக்கம் கொண்ட நாடு எது?
A
சீனா
B
இங்கிலாந்து
C
அமெரிக்கா
D
முன்னாள் சோவியத் ரஷ்ய குடியரசு
Question 48 Explanation: 
விளக்கம்: அமெரிக்கா முதலாளித்துவ நோக்கம் கொண்ட நாடு ஆகும்.
Question 49
பொதுவுடைமை நோக்கம் கொண்ட நாடு எது?
A
சீனா
B
இங்கிலாந்து
C
அமெரிக்கா
D
முன்னாள் சோவியத் ரஷ்ய குடியரசு
Question 49 Explanation: 
விளக்கம்: அரசின் தன்மை (நோக்கம், லட்சியம் மற்றும் கொள்கைகள் அடிப்படையிலானது) முதலாளித்துவம் - அமெரிக்கா பொதுவுடைமை - கியூபா, சீனா, வடகொரியா சமதர்மம் - ரஷ்யா
Question 50
பொருத்துக.
  • 1. ரஷ்யா                           -   A) கூட்டாட்சி சபை
  • 2. அமெரிக்கா                   -   B) நாடாளுமன்றம்
  • 3. சுவிட்சர்லாந்து            -   C) தேசிய சபை
  • 4. பாகிஸ்தான்                  -   D) டூமா
  • 5. தென் ஆப்பிரிக்கா        -   E) காங்கிரஸ்
A
A) B) C) D) E)
B
D) E) A) C) B)
C
B) C) A) D) E)
D
C) B) D) E) A)
E
A) C) E) D) B)
Question 50 Explanation: 
விளக்கம்: பாகிஸ்தான் - தேசிய சபை ரஷ்யா - டூமா அமெரிக்கா - காங்கிரஸ் தென் ஆப்பிரிக்கா - நாடாளுமன்றம் சுவிட்சர்லாந்து - கூட்டாட்சி சபை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!