Online Test
Indian Polity Revision Test Part 4 in Tamil
Indian Polity Revision Test Part 4 in Tamil
Congratulations - you have completed Indian Polity Revision Test Part 4 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
மத்திய அரசின் நிர்வாகம் பற்றி குறிப்பிடும் அரசியலமைப்பு பிரிவு?
52 - 78 | |
58 - 72 | |
48 - 65 | |
46 - 76 |
Question 1 Explanation:
விளக்கம்: இந்திய நாட்டின் உயர்ந்த அரசாங்க அமைப்பு மத்திய அரசு ஆகும். இதன் தலைமையகம் புதுதில்லியில் அமைந்துள்ளது. இந்திய அரசியலமைப்பின் பகுதி V இல் 52 முதல் 78 வரையிலான சட்டப்பிரிவுகள் மத்திய அரசின் நிர்வாகம் பற்றி குறிப்பிடுகிறது. நமது அரசியலமைப்புச் சட்டம் மக்களாட்சி அடிப்படையிலான அரசாங்கத்தை நமக்கு வழங்குகிறது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் இந்தியாவின் பரந்த மற்றும் பன்முகத் தன்மையைக் கருத்தில் கொண்டு இந்தியாவிற்கு கூட்டாட்சி முறையிலான அரசை வழங்கியுள்ளனர்.
Question 2 |
மத்திய நிர்வாகம் கீழ்க்கண்டவற்றுள் எதனை உள்ளடக்கியது?
குடியரசுத் தலைவர் | |
துணைக் குடியரசுத் தலைவர் | |
பிரதம அமைச்சர் | |
இவை அனைத்தும் |
Question 2 Explanation:
விளக்கம்: மத்திய அரசு மூன்று அங்கங்களைக் கொண்டது. அவை நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை ஆகியனவாகும். மத்திய நிர்வாகம், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதம அமைச்சரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவைக் குழு மற்றும் இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் ஆகியோரை உள்ளடக்கியது ஆகும். மத்திய சட்டமன்றம் நாடாளுமன்றம் என்றழைக்கப்படுகிறது. இது இரண்டு அவைகளைக் கொண்டது. அவை மாநிலங்களவை (ராஜ்ய சபா) மற்றும் மக்களவை (லோக் சபா) ஆகியனவாகும். மத்திய நீதித்துறை உச்சநீதிமன்றத்தைக் கொண்டுள்ளது.
Question 3 |
மத்திய அரசின் நிர்வாகத் தலைவர் யார்?
குடியரசுத் தலைவர் | |
துணைக் குடியரசுத் தலைவர் | |
பிரதம அமைச்சர் | |
இவை அனைத்தும் |
Question 3 Explanation:
விளக்கம்: நமது அரசியலமைப்புச் சட்டம் நாடாளுமன்ற முறையிலான அரசாங்கத்தை நமக்கு அளித்துள்ளது . மத்திய அரசின் நிர்வாகத் தலைவர் குடியரசுத் தலைவர் ஆவார். அவர்பெயரளவில் நிர்வாக அதிகாரம் பெற்றவர் ஆவார். அவர் இந்தியாவின் முதல் குடிமகன் ஆவார். அவர் முப்படைகளின் தலைமை தளபதியாகச் செயல்படுகிறார்.
Question 4 |
நீதித்துறையை அமைக்கும் பொறுப்பு யாருடையது?
குடியரசுத் தலைவர் | |
துணைக் குடியரசுத் தலைவர் | |
துணைக் குடியரசுத் தலைவர் | |
இவை அனைத்தும் |
Question 4 Explanation:
விளக்கம்: நீதித்துறையை அமைக்கும் பொறுப்பு அவருக்கு உண்டு. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 53ன் படி குடியரசுத் தலைவர் நேரடியாகவோ, அல்லது அவருடைய சார்நிலை அலுவலர்கள் மூலமாகவோ மத்திய அரசின் நிர்வாக அதிகாரங்களை அரசியலமைப்பின் படி செயல்படுத்துகிறார்.
Question 5 |
கீழ்க்கண்டவற்றுள் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கான தகுதிகள் எவை?
இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். | |
35 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். | |
மத்திய அரசிலோ, மாநில அரசிலோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளிலோ ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது. | |
இவை அனைத்தும். |
Question 5 Explanation:
அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ளது.
இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
35 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
மத்திய அரசிலோ, மாநில அரசிலோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளிலோ ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது.
மக்களவை உறுப்பினராவதற்கான தகுதியினைப் பெற்றிருத்தல் வேண்டும்.
அவரின் பெயரைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர்க் குழுவிலுள்ள பத்து வாக்காளர்கள் முன்மொழியவும் மேலும் பத்து வாக்காளர்கள் வழிமொழியவும் வேண்டும்.
Question 6 |
குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு பதவியேற்பு உறுதிமொழி செய்து வைப்பவர் யார்?
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி | |
பிரதமர் | |
தலைமை வழக்கறிஞர் | |
இவை அனைத்தும் |
Question 6 Explanation:
விளக்கம்: குடியரசுத் தலைவர், ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் படி வாக்காளர் குழுமத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். வாக்காளர் குழுமம் என்பது மாநிலங்களவை மற்றும் மக்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், தேசிய தலைநகர் டெல்லி, மற்றும் புதுச்சேரியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாகும். குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு உறுதிமொழி செய்து வைக்கிறார். குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும். அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட தகுதி உடையவர் ஆவார்.
Question 7 |
மத்திய அரசின் ஒவ்வொரு நிர்வாக நடவடிக்கையும் குடியரசுத் தலைவரின் பெயராலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?
75 | |
76 | |
77 | |
78 |
Question 7 Explanation:
விளக்கம்: இந்திய அரசியலமைப்புச் சட்டம் மத்திய அரசின் அனைத்து நிர்வாக அதிகாரங்களையும் குடியரசுத் தலைவருக்கு வழங்குகிறது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 77ன் படி மத்திய அரசின் ஒவ்வொரு நிர்வாக நடவடிக்கையும் குடியரசுத் தலைவரின் பெயராலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். நிர்வாகம் திறம்பட செயல்பட முக்கிய அலுவலகங்களுக்கானப் பல நியமனங்களைக் குடியரசுத் தலைவர் மேற்கொள்கிறார்.
Question 8 |
2002 - 2007 வரை இந்தியக்குடியரசு தலைவராக பதவி வகித்தவர் யார்?
திருமதி பிரதீபா பாட்டீல் | |
திரு. பிரனாப் முகர்ஜி | |
திரு. கே.ஆர். நாராயணன் | |
திரு. அ.ப.ஜ. அப்துல் கலாம் |
Question 8 Explanation:
விளக்கம்: இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்
திரு. ராஜேந்திர பிரசாத் 1950 - 1962
திரு. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1962 - 1967
திரு. ஜாகிர் உசேன் 1967 - 1969
திரு. வி.வி. கிரி 1969 - 1974
திரு. பக்ருதீன் அலி அஹமத் 1974 - 1977
திரு. நீலம் சஞ்சீவி ரெட்டி 1977 - 1982
திரு. கியானி ஜெயில் சிங் 1982 - 1987
திரு. ஆர். வெங்கடராமன் 1987 - 1992
திரு. சங்கர் தயாள் சர்மா 1992 - 1997
திரு. கே.ஆர். நாராயணன் 1997 - 2002
திரு. அ.ப.ஜ. அப்துல் கலாம் 2002 - 2007
திருமதி பிரதீபா பாட்டீல் 2007 - 2012
திரு. பிரனாப் முகர்ஜி 2012 - 2017
திரு. ராம் நாத் கோவிந்த் 2017 முதல்
Question 9 |
கீழ்க்கண்டவர்களுள் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுபவர்கள் யார்?
தூதர்கள் | |
உயர் ஆணையர்கள் | |
தேர்தல் ஆணையர்கள் | |
இவர்கள் அனைவரும் |
Question 9 Explanation:
விளக்கம்: பிரதம அமைச்சரையும், மற்ற அமைச்சர்களையும் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். அவர் பிரதம அமைச்சரின் ஆலோசனைப் படி அமைச்சரவை உறுப்பினர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு செய்கிறார். இந்தியாவின் மிக முக்கிய பதவிகளான மாநில ஆளுநர்கள், உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள், இதர நீதிபதிகள், இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர், தலைமைக் கணக்கு தணிக்கையாளர், இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் இதர உறுப்பினர்கள், மற்ற நாடுகளுக்கான தூதர்கள் மற்றும் உயர் ஆணையர்கள் ஆகியோரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.
Question 10 |
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் நிலையை ஆய்வு செய்ய ஓர் ஆணையத்தை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?
பிரதமர் | |
உச்ச நீதி மன்ற நீதிபதி | |
ஆளுநர் | |
குடியரசுத்தலைவர் |
Question 10 Explanation:
விளக்கம்: குடியரசுத் தலைவர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் நிலையை ஆய்வு செய்ய ஓர் ஆணையத்தை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் ஆவார். முப்படைகளின் தலைமை தளபதியான குடியரசுத்தலைவர், இராணுவப் படை, கப்பற் படை, விமானப் படை தளபதிகளை நியமனம் செய்கிறார்.
Question 11 |
நாடாளுமன்றம் குடியரசுத்தலைவரால் ஒரு ஆண்டுக்கு எத்தனை முறை கூட்டப்படுகிறது?
3 | |
4 | |
2 | |
1 |
Question 11 Explanation:
விளக்கம்: குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறார். பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை இவர் உரையாற்றி துவக்கி வைக்கிறார். மேலும் ஒவ்வொரு ஆண்டின் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் இவருடைய உரையுடன் துவங்குகிறது. குடியரசுத் தலைவர் ஆண்டுக்கு இரண்டுமுறை நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறார்.
Question 12 |
மக்களவையின் ஐந்து ஆண்டுகாலம் முடியும் முன்னரே அதனைக் கலைக்கும் அதிகாரம் கொண்டவர் யார்?
பிரதமர் | |
சபாநாயகர் | |
குடியரசுத்தலைவர் | |
a) மற்றும் b) |
Question 12 Explanation:
விளக்கம்: அவர் நாடாளுமன்றத்தின் எந்தவொரு அவையிலும் ஒரு சட்ட மசோதா நிலுவையில் இருந்தாலும் அது குறித்து செய்தி அனுப்பலாம். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பின்னரே அனைத்து மசோதாக்களும் சட்டமாகின்றன. நிதி மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யமுடியாது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளையோ அல்லது ஏதேனும் ஒரு அவையின் கூட்டத்தையோ குடியரசுத்தலைவர் முடிவுக்குக் கொண்டுவரலாம். மக்களவையின் ஐந்து ஆண்டுகாலம் முடியும் முன்னரே அதனைக் கலைக்கும் அதிகாரமும் இவருக்கு உண்டு.
Question 13 |
கீழ்க்கண்ட எந்த துறைகளில் சிறந்து விளங்கும் 12 நபர்களைக் குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு நியமிக்கிறார்?
கலை | |
இலக்கியம் | |
அறிவியல் | |
இவை அனைத்தும் |
Question 13 Explanation:
விளக்கம்: கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, மற்றும் சமூகப் பணி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் 12 நபர்களைக் குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு நியமிக்கிறார். மேலும் ஆங்கிலோ-இந்தியர் சமூகத்தைச் சேர்ந்த 2 நபர்களை மக்களவையில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்று கருதும்பட்சத்தில் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
Question 14 |
குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் மசோதாக்கள் எவை?
நிதி மசோதா | |
பாதுகாப்பு தொடர்பான மசோதாக்கள் | |
பொது மசோதாக்கள் | |
இவை அனைத்தும் |
Question 14 Explanation:
விளக்கம்: நிதி மசோதா, குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்குப் பின்னரே நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும். மத்திய அரசின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினைக் குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்ற பின்னரே மத்திய நிதி அமைச்சர் மக்களவையில் சமர்ப்பிக்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய அவசரகால நிதியினைக் குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ளது. அவரின் பரிந்துரை இன்றி எந்தவொரு மானியக் கோரிக்கையையும் கொண்டுவர முடியாது.
Question 15 |
இந்தியாவின் அவசர நிதியிலிருந்து அரசின் எதிர்பாராத செலவினங்களை மேற்கொள்ளும் அதிகாரம் யாருடையது?
பிரதமர் | |
உச்ச நீதிமன்ற நீதிபதி | |
குடியரசு தலைவர் | |
நிதி அமைச்சர் |
Question 15 Explanation:
விளக்கம்: இந்தியாவின் அவசர நிதியிலிருந்து அரசின் எதிர்பாராத செலவினங்களை மேற்கொள்ளும் அதிகாரம் அவருக்கு மட்டுமே உண்டு. ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு நிதிக்குழுவினை அமைக்கிறார். அல்லது மத்திய, மாநில அரசுகளின் வருவாயை பகிர்ந்து கொள்ள மாநிலங்கள் கோரிக்கை வைக்கும் பட்சத்தில் முன்கூட்டியே நிதிக் குழுவினை அவர் அமைக்கிறார்.
Question 16 |
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72-வது சட்டப்பிரிவு கீழ்க்கண்டவற்றுள் எதனோடு தொடர்புடையது?
நிதிக் குழு | |
குடியரசுத் தலைவரின் மன்னிப்பு வழங்கும் அதிகாரம் | |
நிதி நெருக்கடி | |
மத்திய, மாநில அரசுகளின் வருவாய் |
Question 16 Explanation:
விளக்கம்: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72-வது சட்டப்பிரிவு நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவரின் தண்டனையைக் குறைக்கவும், ஒத்திவைக்கவும், தண்டனையிலிருந்து விடுவிக்கவும், மன்னிப்பு வழங்கவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அனைத்து தண்டனைகள், மத்திய சட்டத்திற்கு எதிராகச் செயல்பட்டதால் வழங்கப்பட்ட தண்டனைகள், மரண தண்டனைகள் ஆகியன இவற்றுள் அடங்கும். இவர் தன்னுடைய அதிகாரத்தைச் செயல்படுத்துவதில் (நாடாளுமன்றத்தால் அவருக்கு எதிராக அரசியல் குற்றச்சாட்டு கொண்டு வரும் போது தவிர) எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.
Question 17 |
மத்திய பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதி என்ற அதிகாரத்தை குடியரசுத் தலைவருக்கு வழங்கும் ச் சட்டப்பிரிவு?
53(2) | |
54(2) | |
56(3) | |
57 |
Question 17 Explanation:
விளக்கம்: மத்திய பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதி என்ற அதிகாரத்தைச் சட்டப்பிரிவு 53(2) குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது. அவர் சட்டத்தின்படி இராணுவத்தை வழிநடத்துகிறார். எனவே அவர் பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதி என அறியப்படுகிறார். இதன் மூலம் மற்ற நாடுகளின் மீது போர் அறிவிக்கவும், அமைதியை ஏற்படுத்தவும் அவர் அதிகாரம் பெற்றவர் ஆவார்.
Question 18 |
இந்தியாவின் அனைத்து உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும் யாருடைய பெயரால் நடைபெறுகின்றன?
குடியரசுத்தலைவர் | |
பிரதமர் | |
துணைக்குடியரசுத்தலைவர் | |
வெளியுறவுத்துறை அமைச்சர் |
Question 18 Explanation:
விளக்கம்: வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்களைக் குடியரசுத் தலைவர் நியமிப்பதோடு மட்டுமல்லாமல் அவர் இந்தியாவுக்கான வெளிநாட்டுத் தூதர்களையும் வரவேற்கிறார். வெளிநாடுகளுக்கான அனைத்து
உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும் குடியரசுத் தலைவரின் பெயராலேயே நடைபெறுகின்றன.
Question 19 |
குடியரசுத் தலைவர் நெருக்கடி நிலையை அறிவிப்பதற்கான சூழ்நிலைகள் எவை?
போர் | |
வெளிநாட்டு ஆக்கிரமிப்பு | |
ஆயுதமேந்திய கிளர்ச்சி | |
இவை அனைத்தும் |
Question 19 Explanation:
விளக்கம்: நெருக்கடி நிலையை அறிவிக்கும் அதிகாரத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டம் குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது. அவைகள் பின்வருவன: போர், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, ஆயுதமேந்திய கிளர்ச்சி ஆகிய சூழ்நிலைகளில் குடியரசுத் தலைவர் நெருக்கடி நிலையை அறிவிக்கும் அதிகாரத்தை 352-வது சட்டப்பிரிவு வகுத்துள்ளது.
Question 20 |
மாநில அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் அதிகாரத்தைக் குடியரசுத் தலைவருக்கு வழங்கும் சட்டப்பிரிவு எது?
356 | |
352 | |
360 | |
365 |
Question 20 Explanation:
விளக்கம்: அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி ஒரு மாநில அரசாங்கம் செயல்படவில்லை எனில் அம்மாநிலத்தில் நெருக்கடி நிலையை அறிவித்து, அம்மாநில அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் அதிகாரத்தைக் குடியரசுத் தலைவருக்கு 356வது சட்டப்பிரிவு வழங்குகிறது.
Question 21 |
குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையை அறிவிப்பதற்கேற்ற சூழ்நிலை எது?
இந்தியாவின் நிதி நிலையில் திருப்தியின்மை | |
இந்தியாவின் எந்த ஒரு பகுதியில் ஏதாவது ஒரு காரணத்திற்காக அச்சுறுத்தல் ஏற்படுதல் | |
a) மற்றும் b) | |
அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி ஒரு மாநில அரசாங்கம் செயல்படவில்லை எனில் |
Question 21 Explanation:
விளக்கம்: இந்தியாவின் நிதி நிலையில் திருப்தியின்மை காணப்பட்டாலும், இந்தியாவின் எந்த ஒரு பகுதியில் ஏதாவது ஒரு காரணத்திற்காக அச்சுறுத்தல் ஏற்படும் பொழுதும் 360வது பிரிவின்படி குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையை அறிவிக்கிறார்.
Question 22 |
அதிகபட்சமாக 9 முறை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மாநிலங்கள் எவை?
கேரளா | |
மிசோரம் | |
சிக்கிம் | |
மேகாலயா |
Question 22 Explanation:
விளக்கம்: கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் அதிகபட்சமாக 9 முறை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
Question 23 |
குடியரசுத் தலைவர் தன்னுடைய பணித்துறப்பு கடிதத்தினை யாரிடம் வழங்கலாம்?
துணைகுடியரசுத் தலைவர் | |
பிரதமர் | |
தலைமை நீதிபதி | |
தலைமை வழக்கறிஞர் |
Question 23 Explanation:
விளக்கம்: குடியரசுத் தலைவர் பதவி ஏற்ற நாள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை பதவி வகிப்பார். அவர்
தன்னுடைய பணித்துறப்பு கடிதத்தினை துணைக் குடியரசுத் தலைவரிடம் வழங்கலாம்.
Question 24 |
குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட தேவையான காரணம்?
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தல் | |
தேவையின்றி அவசர நிலையினை அறிவித்தல் | |
அரசியலமைப்பை மீறுதல் | |
a) மற்றும் b) |
Question 24 Explanation:
விளக்கம்: சட்டப்பிரிவு 61-ன் படி அரசியலமைப்பை மீறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுவதன் மூலம் குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்யப்படலாம்.
Question 25 |
குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் தொடர்பான கூற்றுகளில் சரியானவற்றை தேர்க.
இவருக்கு எதிரான இக்குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானமாக கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். | |
மேலும் அவைக்கு வருகை புரிந்தவர்களில் நான்கில் ஒரு பங்கிற்குக் குறையாமல் ஆதரவு தெரிவிக்க வேண்டும். | |
குடியரசுத் தலைவர் தனது பதவிக்காலம் முடிந்தாலும் அவருக்குப் பின் ஒருவர் பதவியேற்கும் வரை அப்பதவியில் தொடரலாம். | |
இவை அனைத்தும். |
Question 25 Explanation:
விளக்கம்: குடியரசுத்தலைவருக்கு எதிரான குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானமாக கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். மேலும் அவைக்கு வருகை புரிந்தவர்களில் நான்கில் ஒரு பங்கிற்குக் குறையாமல் ஆதரவு தெரிவிக்க வேண்டும். குடியரசுத் தலைவர் தனது பதவிக்காலம் முடிந்தாலும் அவருக்குப் பின் ஒருவர் பதவியேற்கும் வரை அப்பதவியில் தொடரலாம்.
Question 26 |
கீழ்க்கண்ட எந்த அரசியலமைப்பு சட்டத்தின்படி குடியரசுத்தலைவர் எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை?
361(1) | |
362 | |
363 | |
364(2) |
Question 26 Explanation:
விளக்கம்: சட்டப்பிரிவு 361(1) ன் படி குடியரசுத் தலைவர் தன்னுடைய பணி மற்றும் அதிகாரத்தைச் செய்ய வேண்டும் என எண்ணுவதிலும் செயல்படுத்துவதிலும் எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.
Question 27 |
நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவியை வகிக்கிப்பவர் யார்?
துணைக் குடியரசுத் தலைவர் | |
பிரதமர் | |
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி | |
a) மற்றும் b) |
Question 27 Explanation:
விளக்கம்: 63வது பிரிவின் படி நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவியைத் துணைக் குடியரசுத் தலைவர் வகிக்கிறார். அலுவலக முன்னுரிமையின் படி குடியரசுத் தலைவருக்கு அடுத்த தர நிலையில் இவர் உள்ளார்.
Question 28 |
இந்திய துணைக்குடியரசுத்தலைவரின் பதவி எந்த நாட்டு துணைக்குடியரசுத்தலைவரின் பதவி போன்றது?
பிரிட்டன் | |
அமெரிக்கா | |
கனடா | |
அயர்லாந்து |
Question 28 Explanation:
விளக்கம்: அமெரிக்க துணைக் குடியரசுத் தலைவரின் பதவியைப் போன்றது. நாட்டின் அரசாங்க நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற இப்பதவி உருவாக்கப்பட்டுள்ளது.
Question 29 |
துணைக்குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் போ ட்டியிடுவதற்கான தகுதிகள் எவை?
இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். | |
35 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். | |
மத்திய அரசிலோ, மாநில அரசிலோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளிலோ ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது. | |
இவை அனைத்தும். |
Question 29 Explanation:
விளக்கம்: இந்திய அரசியலமைப்புச் சட்டம் துணைக்குடியரசுத் தலைவருக்கான தகுதிகளை வகுத்துள்ளது. அவை: இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். மத்திய அரசிலோ, மாநில அரசிலோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளிலோ ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது. மாநிலங்களவை உறுப்பினராவதற்கான மற்ற தகுதிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.
Question 30 |
துணைக் குடியரசுத் தலைவர் - தேர்தல் தொடர்பான சட்டப்பிரிவு எது?
66(1). | |
67(2) | |
68(3) | |
69(3) |
Question 30 Explanation:
விளக்கம்: சட்டப்பிரிவு 66(1) ன் படி துணைக் குடியரசுத் தலைவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாமல் குடியரசுத் தலைவர் போல மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
Question 31 |
துணைக்குடியரசுத்தலைவர் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவற்றை தேர்க.
அரசியலமைப்புச் சட்டம் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கான தொடர் வழிமுறைகளை நமக்கு வழங்கவில்லை. | |
புதிய துணைக் குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை மாநிலங்களவையின் துணைத் தலைவர் துணைக் குடியரசுத் தலைவரின் பணிகளைச் செய்கிறார். | |
குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் பதவிகள் ஒரே சமயத்தில் காலியாக இருக்கும் பட்சத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குடியரசுத் தலைவரின் பணிகளைச் செயலாற்றுவார். | |
இவை அனைத்தும் |
Question 31 Explanation:
விளக்கம்: அரசியலமைப்புச் சட்டம் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கான தொடர் வழிமுறைகளை நமக்கு வழங்கவில்லை. இது போன்ற சூழ்நிலைகளில், துணைக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் முடிந்தவரையில் விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். புதிய துணைக் குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை மாநிலங்களவையின் துணைத் தலைவர் துணைக் குடியரசுத் தலைவரின் பணிகளைச் செய்கிறார்.
Question 32 |
1969ஆம் ஆண்டு குடியரசு தலைவராக நியமிக்கப்பட்டவர்?
நாராயணன் | |
இராதாகிருஷ்ணன் | |
ஹிதயதுல்லா | |
பகவதி |
Question 32 Explanation:
விளக்கம்: குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் பதவிகள் ஒரே சமயத்தில் காலியாக இருக்கும் பட்சத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குடியரசுத் தலைவரின் பணிகளைச் செயலாற்றுவார். 1969ஆம் ஆண்டு இத்தகைய ஒரு நிகழ்வின் போது உச்சநீதிமன்றதலைமை நீதிபதி M.ஹிதயதுல்லா குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
Question 33 |
துணைக் குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் தொடர்பான கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவற்றை தேர்க.
மக்களவையின் ஒப்புதலுடன், மாநிலங்களவையில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் துணைக் குடியரசுத் தலைவரைப் பதவியிலிருந்து நீக்கலாம். | |
இத்தகைய தீர்மானம் கொண்டு வர குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன்னரே துணைக் குடியரசுத் தலைவருக்கு ஒரு அறிவிப்பை வழங்க வேண்டும். | |
a) மற்றும் b) | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 33 Explanation:
விளக்கம்: மக்களவையின் ஒப்புதலுடன், மாநிலங்களவையில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் துணைக் குடியரசுத் தலைவரைப் பதவியிலிருந்து நீக்கலாம். இத்தகைய தீர்மானம் கொண்டு வர குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன்னரே துணைக் குடியரசுத் தலைவருக்கு ஒரு அறிவிப்பை வழங்க வேண்டும்.
Question 34 |
பின்வருபவர்களுள் மாநிலங்களவையின் தலைவராக ச் செயல்படுபவர் யார்?
துணைக்குடியரசுத்தலைவர் | |
பிரதமர் | |
குடியரசுத்தலைவர் | |
சபா நாயகர் |
Question 34 Explanation:
விளக்கம்: துணைக் குடியரசுத் தலைவர் அவர் வகிக்கும் பதவியின் நிமித்தமாக மாநிலங்களவையின் தலைவராக ச் செயல்படுகிறார். மாநிலங்களவையின் தலைவர் என்கிற முறையில் அவர் பல்வேறு பணிகளை மேற்கொள்கிறார்.
Question 35 |
கீழ்க்கண்டவற்றுள் துணைக் குடியரசுத் தலைவரின் செயல்பாடுகள் எவை?
மாநிலங்களவையின் நடவடிக்கைகளை முறைப்படுத்துகிறார். | |
மாநிலங்களவையின் மரபு ஒழுங்கு முறைகளைத் தீர்மானிக்கிறார். | |
மாநிலங்களவையின் தீர்மானம் அல்லது கேள்விகளை அனுமதிப்பதை முடிவு செய்கிறார். | |
இவை அனைத்தும் |
Question 35 Explanation:
விளக்கம்: * மாநிலங்களவையின் நடவடிக்கைகளை முறைப்படுத்துகிறார்.
மாநிலங்களவையின் மரபு ஒழுங்கு முறைகளைத் தீர்மானிக்கிறார்.
மாநிலங்களவையின் தீர்மானம் அல்லது கேள்விகளை அனுமதிப்பதை முடிவு செய்கிறார்.
மிகப் பெரிய பிரச்சனையின்போது அவையின் நடவடிக்கைகளை அவர் ஒத்திவைக்கவும் அல்லது முடிவுக்குக் கொண்டு வரவும் செய்கிறார்.
பல்வேறு குழுக்களுக்கு அதனுடைய செயல்பாடுகள்தொடர்பாக அவர் வழிமுறைகளை வழங்குகிறார்.
Question 36 |
துணைக் குடியரசுத் தலைவர் அதிகபட்சமாக எவ்வளவு காலத்திற்கு குடியரசுத்தலைவரின் பணிகளைக் கவனிப்பார்?
ஐந்து | |
இரண்டு | |
நான்கு | |
ஆறு |
Question 36 Explanation:
விளக்கம்: குடியரசுத் தலைவர் உடல்நலக் குறைவால் தனது கடமைகளை ஆற்ற இயலாத போதும் அல்லது நாட்டில் இல்லாத போதும் துணைக் குடியரசுத் தலைவர், குடியரசுத் தலைவரின் பணிகளைக் கவனிப்பார். குடியரசுத் தலைவர் பதவியானது, அவரின் பதவித்துறப்பு, இறப்பு, அரசியலமைப்பை மீறிய குற்றச் சாட்டின் மூலம் பதவி நீக்கம் ஆகிய காரணங்களால் காலியாகும் போது துணைக் குடியரசுத் தலைவர் அதிகபட்சமாக ஆறு மாத காலத்திற்கு அவரின் பணிகளைக் கவனிப்பார்.
Question 37 |
குடியரசுத் தலைவருக்கு அறிவுரை வழங்கிட பிரதம அமைச்சரை த் தலைவராகக் கொண்ட ஒரு மத்திய அமைச்சரவைக் குழு இருக்கும் எனக் குறிப்பிடும் அரசியலமைப்பு பிரிவு எது?
73 | |
74(1) | |
75 | |
72 |
Question 37 Explanation:
விளக்கம்: அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 74 (1) குடியரசுத் தலைவருக்கு உதவிடவும், அறிவுரை வழங்கிடவும் பிரதம அமைச்சரைத் தலைவராகக் கொண்ட ஒரு மத்திய அமைச்சரவைக் குழு இருக்கும் எனக் குறிப்பிடுகிறது. குடியரசுத் தலைவர் அமைச்சரவை வழங்கும் அறிவுரையை மறு பரிசீலனைச் செய்யச் சொல்லலாம். ஆனால் மறுபரிசீலனைக்குப் பின்னர் அந்த அறிவுரையின்படி அவர் நடந்து கொள்ள கடமைப் பட்டவராவார்.
Question 38 |
இந்தியாவின் பிரதம அமைச்சர் பதவியானது எந்த அரசியலமைப்பு முறையில் இருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டது?
அயர்லாந்து | |
வெஸ்ட்மினிஸ்டர் | |
கனடா | |
அமெரிக்கா |
Question 38 Explanation:
விளக்கம்: (இங்கிலாந்தின் நாடாளுமன்றம் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மையில் அமைந்துள்ளதால் அவர்களின் நாடாளுமன்ற முறைவெஸ்ட்மினிஸ்டர் முறை என்றழைக்கப்படுகிறது). இந்தியாவின் பிரதம அமைச்சர் பதவியானது வெஸ்மின்ஸ்டர் அரசியலமைப்பு ஜனநாயக முறையில் இருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டது.
Question 39 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்க.
மக்களவையின் பெரும்பான்மைக் கட்சியின் தலைவரை பிரதம அமைச்சராகக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். | |
மற்ற அமைச்சர்களை பிரதம அமைச்சரின் ஆலோசனையின்படி குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். | |
மக்களவையில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் இல்லையெனில் குடியரசுத் தலைவர் எந்தக்கட்சி அமைச்சரவையை அமைக்க முடியுமோ அக்கட்சியின் தலைவரை அவர் அழைத்து அரசு அமைக்கக் கூறலாம். | |
இவை அனைத்தும் |
Question 39 Explanation:
விளக்கம்: குடியரசுத் தலைவர் அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணமும், இரகசியக்காப்புப் பிரமாணமும் செய்து வைக்கின்றார். பிரதம அமைச்சர் மற்றும் மற்ற அமைச்சர்களின் ஊதியங்களையும், படிகளையும் நாடாளுமன்றம் நிர்ணயிக்கிறது.
Question 40 |
நாடாளுமன்ற உறுப்பினராய் இல்லாதவர் அமைச்சராக நியமிக்கப்பட அவர் எத்தனை மாதங்களுக்குள் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்?
6 | |
2 | |
3 | |
4 |
Question 40 Explanation:
விளக்கம்: நாடாளுமன்ற உறுப்பினராய் இல்லாதவர் கூட அமைச்சராக நியமிக்கப்படலாம். ஆனால் அவர் 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும். அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும், ஒட்டு மொத்தமாகவும் மக்களவைக்கு பொறுப்புடையவர்களாவர்.
Question 41 |
திரு. சரண் சிங் அவர்கள் பிரதமராக பதவி வகித்த ஆண்டு?
1979 - 80 | |
1980 - 81 | |
1981 - 82 | |
1983 - 84 |
Question 41 Explanation:
விளக்கம்: இந்திய பிரதமர்கள் பட்டியல்
திரு. ஜவகர்லால் நேரு 1947 - 64
திரு. லால் பகதூர் சாஸ்திரி 1964 - 66
திருமதி இந்திரா காந்தி 1966 - 77
திரு. மொரார்ஜி தேசாய் 1977 - 79
திரு. சரண் சிங் 1979 - 80
திருமதி. இந்திரா காந்தி 1980 - 84
திரு. ராஜீவ் காந்தி 1980 - 89
திரு. வி.பி. சிங் 1989 - 90
திரு. சந்திரசேகர் 1990 - 91
திரு. பி.வி. நரசிம்ம ராவ் 1991 - 96
திரு. அடல் பிகாரி வாஜ்பாய் ேம 1996
திரு. டி. தேவகவுடா 1996 - 97
திரு. ஐ.கே குஜ்ரால் 1997 - 98
திரு. அடல் பிகாரி வாஜ்பாய் 1998 - 2004
திரு. மன்மோகன் சிங் 2004 - 14
திரு. நரேந்திர மோடி 2014 முதல்.
Question 42 |
பிரதம அமைச்சரின் கடமைகளைப் பற்றிக் குறிப்பிடும் அரசியலமைப்பு பிரிவு எது?
76 | |
74 | |
78 | |
80 |
Question 42 Explanation:
விளக்கம்: அரசியலமைப்பு சட்டப்பிரிவு 78 பிரதம
அமைச்சரின் கடமைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
Question 43 |
கீழ்க்கண்டவற்றுள் பிரதம அமைச்சரின் கடமைகள் எவை?
பிரதம அமைச்சர் அமைச்சர்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு அரசின் பல்வேறு துறைகளை ஒதுக்கீடு செய்கிறார். | |
தான் தலைமை வகிக்கும், அமைச்சரவைக் கூட்டத்தின் தேதி, நிகழ்ச்சி நிரல் (Agenda) குறித்து முடிவு செய்வார். | |
பிரதம அமைச்சரே அமைச்சரவையின் தலைவர் ஆவார். மற்றவர்கள் அரசின் துறைகளைப் பகிர்ந்து கொள்ளும் சக அமைச்சர்கள் ஆவர். | |
இவை அனைத்தும். |
Question 43 Explanation:
விளக்கம்: பிரதம அமைச்சர் அமைச்சர்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு அரசின் பல்வேறு துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
தான் தலைமை வகிக்கும், அமைச்சரவைக் கூட்டத்தின் தேதி, நிகழ்ச்சி நிரல் (Agenda) குறித்து முடிவு செய்வார்.
பிரதம அமைச்சரே அமைச்சரவையின் தலைவர் ஆவார். மற்றவர்கள் அரசின் துறைகளைப் பகிர்ந்து கொள்ளும் சக அமைச்சர்கள் ஆவர்.
கேபினெட் கூட்டம் நடைபெறாத பொழுது பிரதம அமைச்சர் தனது மூத்த சகாக்கள் இருவர் அல்லது மூவரை இயல்பாகக் கலந்தாலோசிக்கலாம்.
பிரதம அமைச்சர் பல்வேறு துறைகளின் பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
Question 44 |
குடியரசுத் தலைவருக்கும், அமைச்சரவைக்கும் இடையே பாலமாக
செயல்படுபவர்?
பிரதம அமைச்சர் | |
சபா நாயகர் | |
மக்களவை தலைவர் | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 44 Explanation:
விளக்கம்: * மத்திய அரசின் விவகாரங்கள் மற்றும் சட்டத்திற்கான முன்மொழிவுகள் போன்ற அமைச்சரவையின் அனைத்து முடிவுகளையும் குடியரசுத் தலைவருடன் விவாதிக்கிறார்.
பிரதம அமைச்சர், குடியரசுத் தலைவருக்கும், அமைச்சரவைக்கும் இடையே பாலமாக செயல்படுகிறார்.
பிரதம அமைச்சர் நாட்டின் உண்மையான தலைவராவார். அவர் நாட்டின் முக்கிய செய்தித் தொடர்பாளராகவும் செயல்படுகிறார்.
Question 45 |
இந்திய நாட்டின் பிரதிநிதியாகப் பங்கு கொள்பவர் யார்?
வெளியுறவுத்துறை அமைச்சர் | |
குடியரசுத்தலைவர் | |
துணை குடியரசுத்தலைவர் | |
பிரதம அமைச்சர் |
Question 45 Explanation:
விளக்கம்: சர்வதேச மாநாடுகளான காமன்வெல்த், அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு, சார்க் நாடுகளின் மாநாடு ஆகியவற்றில் இந்திய நாட்டின் பிரதிநிதியாகப் பிரதமர் பங்கு கொள்கிறார்.
Question 46 |
ஒட்டு மொத்த மக்களவை உறுப்பினர்களில் எத்தனை சதவீதம் பேர் அமைச்சரவை உறுப்பினர்களாக (பிரதம அமைச்சர் உட்பட) இருத்தல் வேண்டும்?
15% | |
17% | |
18% | |
19% |
Question 46 Explanation:
விளக்கம்: தேர்தலுக்குப் பின்னர் பிரதம அமைச்சரின் ஆலோசனையின்படி குடியரசுத் தலைவர் அமைச்சரவையை நியமிக்கிறார். சில சமயங்களில் நாடாளுமன்ற உறுப்பினராய் இல்லாதவர்கூட அமைச்சராக நியமிக்கப்படலாம். ஆனால் அவர் ஆறு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஏதேனும் ஓர் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒட்டுமொத்த மக்களவை உறுப்பினர்களில் 15% மட்டுமே அமைச்சரவை உறுப்பினர்களாக (பிரதம அமைச்சர் உட்பட) இருத்தல் வேண்டும் என இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது.
Question 47 |
மத்திய அமைச்சர்கள் எத்தனை தரநிலைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்?
3 | |
4 | |
5 | |
6 |
Question 47 Explanation:
விளக்கம்: மத்திய அமைச்சர்களின் வகைகள் மத்திய அமைச்சர்கள் மூன்று தரநிலைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கேபினெட் (அ) ஆட்சிக்குழு அமைச்சர்கள்
இராசாங்க அமைச்சர்கள்
இணை அமைச்சர்கள்
Question 48 |
நிர்வாகத்தின் மையக் கருவை உருவாக்கும் மூத்த அமைச்சர்களின் முறைசாரா அமைப்பு எது?
பாராளுமன்றம் | |
மக்களவை | |
மாநிலங்களவை | |
காபினெட் |
Question 48 Explanation:
விளக்கம்: நிர்வாகத்தின் மையக் கருவை உருவாக்கும் மூத்த அமைச்சர்களின் முறைசாரா அமைப்பே காபினெட் ஆகும்.
Question 49 |
குடியரசுத் தலைவர் அவசரநிலையைப் பிரகடனம் செய்ய பரிந்துரைப்பவர்?
அமைச்சரவை | |
சபாநாயகர் | |
பிரதமர் | |
ஆளுநர் |
Question 49 Explanation:
விளக்கம்: நிர்வாகத்தின் மையக் கருவை உருவாக்கும் மூத்த அமைச்சர்களின் முறைசாரா அமைப்பே காபினெட் ஆகும். காபினெட் அரசாங்கத்தின் பாதுகாப்பு, நிதி, வெளியுறவுக் கொள்கைகள், உள்துறை ஆகியவற்றின் முக்கிய முடிவுகளை எடுக்கிறது. குடியரசுத் தலைவர் அவசரநிலையைப் பிரகடனம் செய்ய அமைச்சரவை பரிந்துரைக்கிறது.
Question 50 |
அமைச்சரவை குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவற்றை தேர்க.
அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர அமைச்சரவை ஒரு கருவியாக செயல்படுகிறது. | |
நிதி மசோதாவானது அமைச்சரவையில் இருந்து தொடங்கும். | |
அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையை அமைச்சரவை முடிவு செய்வதோடு, சர்வதேச உடன்படிக்கைகளுக்கும் ஒப்புதல் அளிக்கிறது. | |
அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையை அமைச்சரவை முடிவு செய்வதோடு, சர்வதேச உடன்படிக்கைகளுக்கும் ஒப்புதல் அளிக்கிறது. |
Question 50 Explanation:
விளக்கம்: அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர அமைச்சரவை ஒரு கருவியாக செயல்படுகிறது. நிதி மசோதாவானது அமைச்சரவையில் இருந்து தொடங்கும். பின்னர் குடியரசுத்தலைவர் பரிந்துரையுடன் மக்களவையில் அறிமுகப்படுத்தப்படும். அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையை அமைச்சரவை முடிவு செய்வதோடு, சர்வதேச உடன்படிக்கைகளுக்கும் ஒப்புதல் அளிக்கிறது.
Question 51 |
பல்வேறு நாடுகளுக்கானத் தூதர்களை நியமிப்பதில் அமைச்சரவை முக்கிய பங்கு வகிக்கிறது.
அமைச்சரவை குழுவின் இரண்டாவது வகை அமைச்சர்கள் யார்?
கேபினெட் | |
இணை அமைச்சர்கள் | |
ஆட்சிக்குழு அமைச்சர்கள் | |
இராசாங்க அமைச்சர்கள் |
Question 51 Explanation:
விளக்கம்: அமைச்சரவை குழுவின் இரண்டாவது வகையினரே இராசாங்க அமைச்சர்கள் ஆவர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் பொறுப்பு அமைச்சராக செயல்படுகின்றனர். ஆனால் அழைப்பு விடுத்தால் மட்டுமே இவர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வர். அமைச்சரவையில் மூன்றாவதாக, இணை அமைச்சர்கள் உள்ளனர். காபினெட் அமைச்சர்கள் (அ) இராசாங்க அமைச்சர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட கடமைகளைச் செயலாற்றுவதில் இவர்கள் உதவி புரிகின்றனர்.
Question 52 |
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 79 முதல் 122 வரை உள்ள சட்டப்பிரிவுகள் எது குறித்து கூறுகிறது?
சட்ட மன்றம் | |
உள்ளாட்சி அமைப்புகள் | |
நீதி மன்றம் | |
இந்திய நாடாளுமன்றம் |
Question 52 Explanation:
விளக்கம்: மத்திய அரசின் சட்டம் இயற்றும் அங்கமாக நாடாளுமன்றம் திகழ்கிறது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி V இல் 79 முதல் 122 வரை உள்ள சட்டப்பிரிவுகள், இந்திய நாடாளுமன்ற அமைப்பு, உள்ளடக்கம், ஆயுட் காலம், அலுவலர்கள், செயல்முறைகள், சிறப்புச் சலுகைகள், அதிகாரங்கள் பற்றி குறிப்பிடுகிறது.
Question 53 |
இந்திய நாடாளுமன்றம் எத்தனை பகுதிகளைக் கொண்டது?
3 | |
4 | |
2 | |
5 |
Question 53 Explanation:
விளக்கம்: இந்திய நாடாளுமன்றம் மூன்று பகுதிகளைக் கொண்டது. அவைகள் 1. குடியரசுத் தலைவர் 2. ராஜ்ய சபா (மாநிலங்களவை) 3. லோக்சபா (மக்களவை). நாடாளுமன்றமானது மாநிலங்களவை என்னும் மேலவையையும் மக்களவை என்னும் கீழவையையும் கொண்டுள்ளதால் இது ஈரவை சட்டமன்றம் என்றும் அழைக்கப்படுகிறது.
Question 54 |
மாநிலங்களவையில் எத்தனை உறுப்பினர்கள் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
238 | |
250 | |
248 | |
246 |
Question 54 Explanation:
விளக்கம்: ராஜ்யசபா என்றழைக்கப்படும் மாநிலங்களவை 250 உறுப்பினர்களைக் கொண்டது. இதில் 238 உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்களால் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 12 உறுப்பினர்கள், இலக்கியம், அறிவியல்,
விளையாட்டு, கலை மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு அல்லது செயல்முறை அனுபவம் கொண்டவர்களைக் குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.
Question 55 |
மாநிலங்களவை உறுப்பினராவதற்கானத் தகுதிகள் எவை?
நாடாளுமன்றத்தால் அவ்வப்போது நடைமுறைப்படுத்தப்படும் தகுதிகளைப்பெற்றிருத்தல் வேண்டும். | |
மனநிலை சரியில்லாதவராகவோ அல்லது பெற்றகடனைத் திருப்பித்தர முடியாதவராகவோ இருத்தல் கூடாது. | |
இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். | |
இவை அனைத்தும் |
Question 55 Explanation:
விளக்கம்: மாநிலங்களவை உறுப்பினராக ஒருவர் கீழ்காணும் தகுதிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.
இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
30 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
அரசாங்கத்தில் ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது.
மனநிலை சரியில்லாதவராகவோ அல்லது பெற்றகடனைத் திருப்பித்தர முடியாதவராகவோ இருத்தல் கூடாது.
நாடாளுமன்றத்தால் அவ்வப்போது நடைமுறைப்படுத்தப்படும் தகுதிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.
மக்களவையிலோ (அ) எந்தவொரு சட்டமன்றத்திலோ உறுப்பினராக இருத்தல்கூடாது.
Question 56 |
மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம்?
5 | |
4 | |
6 | |
3 |
Question 56 Explanation:
விளக்கம்: மாநிலங்களவை ஒரு நிரந்தர அவை ஆகும். அதனைக் கலைக்க முடியாது. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறுகின்றனர். அதனால் ஏற்படும் காலியிடங்கள் புதிய உறுப்பினர்களால் நிரப்பப்படுகின்றன.
Question 57 |
மாநிலங்களவையின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் யார்?
மாநிலங்களவை தலைவர் | |
மாநிலங்களவையின் துணைத் தலைவர். | |
சபா நாயகர் | |
இவர்கள் அனைவரும் |
Question 57 Explanation:
விளக்கம்: துணைக் குடியரசுத் தலைவர் பதவி வழி மாநிலங்களவையின் தலைவராகச் செயல்படுகிறார்.
Question 58 |
மாநிலங்களவையின் துணைத் தலைவர் அதன் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் யார்?
மாநில சட்டமன்ற உறுப்பினர் | |
மாநிலங்களவை உறுப்பினர்கள் | |
மாநிலங்களவை தலைவர் | |
மக்களவை தலைவர் |
Question 58 Explanation:
விளக்கம்: தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் (MLA’s) ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த தேர்தல் முறை மறைமுக தேர்தல் எனப்படும். இவர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.
Question 59 |
எத்தனை மாதங்களுக்கு மேல் ஒரு மசோதா ஒப்புதல் பெறவில்லை எனில் குடியரசுத் தலைவர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறார்?
4 | |
3 | |
6 | |
9 |
Question 59 Explanation:
விளக்கம்: * எந்தவொரு மசோதாவும் (நிதி மசோதா தவிர) சட்டமாவதற்கு மாநிலங்களவையின் ஒப்புதல் தேவை. ஆறு மாதங்களுக்கு மேல் ஒரு மசோதா ஒப்புதல் பெறவில்லை எனில் குடியரசுத் தலைவர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து மசோதாவின் முடக்கத்தைத் தீர்த்து வைக்கிறார். அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கான எந்த ஒரு மசோதாவை நிறைவேற்றுவதிலும் மக்களவையைப் போன்றே மாநிலங்களவையும் அதிகாரம் பெற்றுள்ளது.
Question 60 |
குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிக்கும் அதிகாரம் பெற்றவர்கள் யாவர்?
மாநிலங்களவை உறுப்பினர்கள் | |
மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் | |
மக்களவை உறுப்பினர்கள் | |
இவர்கள் அனைவரும் |
Question 60 Explanation:
விளக்கம்: மாநிலங்களவை உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிக்கும் அதிகாரம் பெற்றுள்ளனர். இவர்கள் மக்களவை உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர். இவர்கள், குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பதவிநீக்க செயல் முறைகளில் அதிகாரம் பெற்றுள்ளனர்.
Question 61 |
மாநில அரசு பட்டியலை உருவாக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளது எது?
மாநிலங்களவை | |
மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் | |
மக்களவை | |
இவை அனைத்தும் |
Question 61 Explanation:
விளக்கம்: தேசிய முக்கியத்துவம் கருதி மாநில அரசு பட்டியலை உருவாக்கும் அதிகாரத்தை மாநிலங்களவை பெற்றுள்ளது. மாநிலங்களவையின் 2/3 உறுப்பினர்கள் பெரும்பான்மையுடன் ஒரு தீர்மானம் ஒப்புதல் பெறுகிறது. இதன் 2/3 உறுப்பினர்கள் பெரும்பான்மையுடன் அகில இந்தியப் பணிகளை உருவாக்கவும், நீக்கவும் அதிகாரம் பெற்றுள்ளது.
Question 62 |
நிதி மசோதா குறித்த கூற்றுகளில் சரியானவற்றை தேர்க.
நிதி மசோதாவினை திருத்தம் செய்யவோ அல்லது நிராகரிக்கவோ மாநிலங்களவைக்கு அதிகாரம் இல்லை. | |
மக்களவையில் மட்டுமே நிதி மசோதாவினை அறிமுகப்படுத்த முடியும். | |
இம்மசோதா மாநிலங்களவையின் ஒப்புதலுடன் சட்டமாக மாறும். | |
இவை அனைத்தும். |
Question 62 Explanation:
விளக்கம்: நிதி மசோதாவினை திருத்தம் செய்யவோ அல்லது நிரா க ரிக்க வோ மாநிலங்களவைக்கு அதிகாரம் இல்லை. மக்களவையில் மட்டுமே நிதி மசோதாவினை அறிமுகப்படுத்த முடியும். இம்மசோதா மாநிலங்களவையின் ஒப்புதலுடன் சட்டமாக மாறும். மாநிலங்களவை 14 நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்கவில்லையெனில், ஒப்புதல் பெறாமலேயே சட்டமாகிவிடும். மாநிலங்களவையின் சட்டத் திருத்தத்திற்கான முன்மொழிவுகளை மக்களவை கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. எந்த முன்மொழிவுகளையும் மக்களவை நிராகரிக்கலாம்.
Question 63 |
மக்களவைக்கு யூனியன் பிரதேசங்களில் இருந்து எத்தனை பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
13 | |
14 | |
15 | |
16 |
Question 63 Explanation:
விளக்கம்: மக்களவைக்கு அதிகபட்சமாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் 552 அவற்றில் 530 உறுப்பினர்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், 13 உறுப்பினர்கள் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆங்கிலோ-இந்தியன் சமூகத்திலிருந்து 2 உறுப்பினர்களைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். தற்சமயம் மக்களவை 545 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
Question 64 |
மக்களவை உறுப்பினராவதற்கான தகுதிகள் எவை?
25 வயதிற்கு குறைவுடையவராய் இருத்தல் கூடாது | |
மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது | |
மனநிலை சரியில்லாதவராகவோ அல்லது பெற்ற கடனை திருப்பி செலுத்த இயலாதவராகவோ இருத்தல் கூடாது. | |
இவை அனைத்தும். |
Question 64 Explanation:
விளக்கம்: * இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
25 வயதிற்கு குறைவுடையவராய் இருத்தல் கூடாது.
அவரது பெயர் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருத்தல் வேண்டும்.
மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது.
மனநிலை சரியில்லாதவராகவோ அல்லது பெற்ற கடனை திருப்பி செலுத்த இயலாதவராகவோ இருத்தல் கூடாது
Question 65 |
கீழ்க்கண்டவற்றுள் மக்களவையின் செயல்பாடுகள் எவை?
குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் போன்றவர்களின் பதவி நீக்க விவகாரங்களில் பங்கேற்க மாநிலங்களவையைப் போலவே மக்களவையும் அதிகாரம் பெற்றுள்ளது. | |
அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்திற்கான எந்தவொரு மசோதாவை நிறைவேற்றுவதிலும் மாநிலங்களவையைப் போலவே மக்களவையும் சமமான அதிகாரம் பெற்றுள்ளது. | |
அனைத்து மசோதாக்களையும் மக்களவையில் அறிமுகப்படுத்தவும், நிறைவேற்றவும் முடியும் (நிதி மசோதா உள்பட). | |
இவை அனைத்தும். |
Question 65 Explanation:
விளக்கம்: * அனைத்து மசோதாக்களையும் மக்களவையில் அறிமுகப்படுத்தவும், நிறைவேற்றவும் முடியும் (நிதி மசோதா உள்பட).
குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் போன்றவர்களின் பதவி நீக்க விவகாரங்களில் பங்கேற்க மாநிலங்களவையைப் போலவே மக்களவையும் அதிகாரம் பெற்றுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்திற்கான எந்தவொரு மசோதாவை நிறைவேற்றுவதிலும் மாநிலங்களவையைப் போலவே மக்களவையும் சமமான அதிகாரம் பெற்றுள்ளது
Question 66 |
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளை தேர்க.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் லோக்சபாவில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும். | |
இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பிரதம அமைச்சர் உட்பட மற்ற அமைச்சர்களும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும். | |
a) மற்றும் b) | |
இவற்றில் எதுவுமில்லை. |
Question 66 Explanation:
விளக்கம்: * மக்களவை உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்றுள்ளனர்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் லோக்சபாவில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும். இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பிரதம அமைச்சர் உட்பட மற்ற அமைச்சர்களும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும்.
Question 67 |
சபா நாயகர் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவற்றை தேர்க.
மக்களவையைத் தலைமை ஏற்று நடத்துபவர் சபாநாயகர் ஆவார். | |
அவர் மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். | |
மக்களவை கலைக்கப்பட்டாலும் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கும் வரை அவர் பதவியில் நீடிப்பார். | |
இவை அனைத்தும் |
Question 67 Explanation:
விளக்கம்: மக்களவையைத் தலைமை ஏற்று நடத்துபவர் சபாநாயகர் ஆவார். அவர் மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். நாடாளுமன்ற மக்களாட்சியில் சபாநாயகரின் பதவி ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. மக்களவை கலைக்கப்பட்டாலும் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கும் வரை அவர் பதவியில் நீடிப்பார். நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்திற்குத் தலைமை வகிப்பார்.
Question 68 |
ஒரு மசோதாவை நிதி மசோதாவா அல்லது சாதாரண மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றுள்ளவர் யார்?
குடியரசுத்தலைவர் | |
சபாநாயகர் | |
துணைக்குடியரசுத்தலைவர் | |
பிரதமர் |
Question 68 Explanation:
விளக்கம்: ஒரு மசோதாவை நிதி மசோதாவா அல்லது சாதாரண மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றுள்ளார். பண மசோதாவை தீர்மானிப்பதில் இவருடைய முடிவே இறுதியானது ஆகும். 1985ஆம் ஆண்டு கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி இந்திய அரசியலமைப்புச் சட்டம் 10வது அட்டவணை அடிப்படையில் ஒரு உறுப்பினர் மக்களவை உறுப்பினர் ஆக தகுதி பெற்றவரா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு. சபாநாயகர் பதவி காலியாக இருக்கும் போதும் அல்லது வருகை புரியாத போதும் துணை சபாநாயகர் மக்களவைக்குத் தலைமை வகிப்பார்.
Question 69 |
கீழ்க்கண்டவற்றுள் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் எவை?
நிர்வாகத்தினை மேற்பார்வையிடுதல் | |
வரவு- செலவு திட்டத்தினை நிறைவேற்றுதல் | |
பொதுமக்கள் குறைகளைப் போக்குதல் | |
இவை அனைத்தும் |
Question 69 Explanation:
விளக்கம்: இந்திய நாடாளுமன்றம் சட்டமியற்றுதல், நிர்வாகத்தினை மேற்பார்வையிடுதல், வரவு- செலவு திட்டத்தினை நிறைவேற்றுதல், பொதுமக்கள் குறைகளைப் போக்குதல், மேலும் வளர்ச்சித் திட்டங்கள், சர்வதேச உறவுகள், உள்நாட்டுக் கொள்கைகள் போன்றவைகளை விவாதித்தல் என பல பணிகளைச் செய்கிறது. நாடாளுமன்றம் குடியரசுத் தலைவர் மீதான அரசியல் குற்றச்சாட்டுகளை (Impeachment) விசாரிக்கவும், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமை தேர்தல் ஆணையர், இந்தியத் தலைமைக் கணக்கு தணிக்கையாளர் ஆகியோரை அரசியலமைப்புச் சட்ட விதிமுறைகளின்படி பதவி நீக்கம் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளது.
Question 70 |
மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
பிரதமர் | |
பாராளுமன்றம் | |
குடியரசுத்தலைவர் | |
மாநில அரசு |
Question 70 Explanation:
விளக்கம்: நாடாளுமன்றமானது நிர்வாகத்தினை கேள்விகள், துணைக் கேள்விகள் கேட்பதன் மூலமாகவும், ஒத்திவைப்புத் தீர்மானங்கள், விவாதங்கள், தீர்மானங்கள் இயற்றுதல், கண்டனத் தீர்மானம் அல்லது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதித்து அவையில் கொண்டு வருதல் போன்றவைகளின் மூலமாகவும் தனது கட்டுப்பாட்டினைச் செலுத்தி வருகின்றது. மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைத்திட நாடாளுமன்றதிற்கே அதிகாரம் உண்டு.
Question 71 |
இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 76 கீழ்க்கண்டவர்களுள் யாருடைய நியமனம் குறித்து கூறுகிறது?
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி | |
தலைமை கணக்கு அதிகாரி | |
முப்படை தளபதிகள் | |
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் |
Question 71 Explanation:
விளக்கம்: இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 76 இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரை நியமிக்க வழிவகை செய்கிறது. இவர் நாட்டின் உயர்ந்த சட்ட அதிகாரி ஆவார். இவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். உச்ச நீதிமன்ற நீதிபதியாகத் தேவையான தகுதிகளை இவரும் கொண்டிருக்க வேண்டும். இவர் இந்தியக் குடிமகனாய் இருத்தல் வேண்டும். அவர் ஏதாவது ஒரு உயர் நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டுகள் நீதிபதியாகவோ (அல்லது) உயர் நீதிமன்றத்தில் பத்து ஆண்டுகள் வழக்குரைஞராகவோ அல்லது குடியரசுத் தலைவரின் பார்வையில் மேம்பட்ட சட்ட வல்லுநராகவோ இருத்தல் வேண்டும். குடியரசுத் தலைவர் விரும்பும் வரை இவர் பதவியில் நீடிக்கலாம்.
Question 72 |
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரின் அதிகாரங்கள் குறித்த கூற்றுகளில் சரியானவற்றை தேர்க.
நாடாளுமன்ற இரு அவைகளின் செயல்முறைகளிலும் பேசுவதற்கும், பங்கு கொள்ளுவதற்கும் இவருக்கு உரிமை உண்டு | |
நாடாளுமன்றத்தின் இரு அவையின் கூட்டத்திலோ அல்லது எந்தவொரு கூட்டுக் குழு கூட்டத்திலோ வாக்கு அளிக்கும் உரிமை இன்றி உறுப்பினராக இவர் இடம் பெறுவார். | |
இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடும் உரிமை இவருக்கு உண்டு. | |
இவை அனைத்தும் |
Question 72 Explanation:
விளக்கம்: இவர் குடியரசுத் தலைவரால் குறிப்பிடப்பட்ட சட்ட விவகாரங்கள் மீது இந்திய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவார். குடியரசுத் தலைவரால் ஒதுக்கப்படும் சட்டரீதியிலான மற்ற கடமைகளையும் அவர் மேற்கொள்வார். அரசியலமைப்புச் சட்டம் அல்லது ஏனைய சட்டத்தின்படி வழங்கப்படும் பணிகளையும் அவர் மேற்கொள்வார். இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடும் உரிமை இவருக்கு உண்டு. நாடாளுமன்ற இரு அவைகளின் செயல்முறைகளிலும் பேசுவதற்கும், பங்கு கொள்ளுவதற்கும் இவருக்கு உரிமை உண்டு. நாடாளுமன்றத்தின் இரு அவையின் கூட்டத்திலோ அல்லது எந்தவொரு கூட்டுக் குழு கூட்டத்திலோ வாக்கு அளிக்கும் உரிமை இன்றி உறுப்பினராக இவர் இடம் பெறுவார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கக்கூடியக் அனைத்து சலுகைகளையும், சட்ட விலக்களிப்புகளையும் இவரும் பெறுகிறார்.
Question 73 |
மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தைப் பற்றி கூறும் அரசியலமைப்பு பிரிவு எது?
154 | |
164 | |
156 | |
163 |
Question 73 Explanation:
விளக்கம்: அரசியலமைப்பு சட்டப்பிரிவு 154 மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தைப் பற்றி கூறுகிறது. சட்டப்பிரிவு 154 (1)-ன் படி மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் இருக்க வேண்டும். இந்த அதிகாரம் அவரால் நேரடியாகவோ அல்லது அவரின் கீழுள்ள அலுவலர்களாலோ, அரசியலமைப்பின்படி செயல்படுத்தப்பட வேண்டும்.
Question 74 |
ஆளுநர் பதவி விலக யாரிடம் பதவித்துறப்பு கடிதம் கொடுக்க வேண்டும்?
குடியரசுத்தலைவர் | |
துணைக்குடியரசுத்தலைவர் | |
முதலமைச்சர் | |
பிரதமர் |
Question 74 Explanation:
விளக்கம்: மாநில ஆளுநர், குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகிறார். வழக்கமாக, அவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள். ஆனால் குடியரசுத் தலைவரின் விருப்பத்தின் பேரில் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம். பொதுவாக, ஒருவர் தனது சொ ந்த மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்படமாட்டார். மேலும், அவர் குடியரசுத் தலைவரால் ஒரு மாநிலத்திலிருந்து வேறொரு மாநிலத்திற்கு மாற்றப்படலாம். குடியரசுத் தலைவருக்குத் தனது பணித்துறப்பு கடிதத்தைக் கொடுப்பதன் மூலம் ஆளுநர் எந்நேரத்திலும் பதவி விலகலாம்.
Question 75 |
ஆளுநரின் பணி நீக்கம் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவற்றை தேர்க.
மாநில சட்டமன்றமோ அல்லது உயர் நீதிமன்றமோ ஆளுநரின் பணி நீக்கத்தில்
பங்கு பெறலாம்.
| |
ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆளுநராக நியமிக்கப்படலாம்... | |
ஒருவரை ஒரு மாநில ஆளுநராக நியமனம் செய்யப்படுவதில் மூன்று மரபுகள் பின்பற்றப்படுகின்றன. | |
இவை அனைத்தும் |
Question 75 Explanation:
விளக்கம்: மாநில சட்டமன்றமோ அல்லது உயர் நீதிமன்றமோ ஆளுநரின் பணி நீக்கத்தில் பங்கு பெற முடியாது. ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆளுநராக நியமிக்கப்படலாம். ஒருவரை ஒரு மாநில ஆளுநராக நியமனம் செய்யப்படுவதில் இரண்டு மரபுகள் பின்பற்றப்படுகின்றன. அவை: ஆளுநராக நியமிக்கப்படும் ஒருவர் தான் எந்த மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட உள்ளாரோ அந்த மாநிலத்தில் வசிப்பவராக இருத்தல் கூடாது. மேலும் ஆளுநராக நியமிக்கப்படும் ஒருவரை மத்திய அரசு, மாநில அரசுடன் கலந்தாலோசித்து அவரது பெயரை முன்மொழிய வேண்டும்.
Question 76 |
இந்திய அரசியலமைப்பின் 157 மற்றும் 158 வது சட்டப்பிரிவுகள் கீழ்க்கண்டவற்றுள் எது குறித்து கூறுகின்றன?
ஆளுநரின் அதிகாரங்கள் | |
ஆளுநரின் சிறப்புரிமைகள் | |
ஆளுநர் நியமனம் | |
ஆளுநராவதற்கான தகுதிகள் |
Question 76 Explanation:
நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருத்தல் கூடாது. அவ்வாறு
இருப்பின் அவர் ஆளுநராக பதவியேற்கும் பொழுது தாமாகவே அப்பதவி காலியாகிவிடும்.
மேலும் அவர், இலாபம் தரும் எந்த தொழிலிலும் ஈடுபடக்கூடாது விளக்கம்: இந்திய அரசியலமைப்பின் 157 மற்றும் 158 வது சட்டப்பிரிவுகள் ஆளுநர் பதவிக்குத் தேவையான பின்வரும் தகுதிகளைக் கூறுகின்றன.
அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
Question 77 |
மாநில சட்டமன்றம் நடைபெறாத பொழுது ஆளுநர் அவசர சட்டத்தைப் பிறப்பிக்க வழிவகுக்கும் அரசியலமைப்பு பிரிவு?
216 | |
214 | |
220 | |
213 |
Question 77 Explanation:
விளக்கம்: அரசியலமைப்பு சட்டப்பிரிவு 213-ன் கீழ் ஆளுநர் மாநில சட்டமன்றம் நடைபெறாத பொழுது அவசர சட்டத்தைப் பிறப்பிக்கலாம். ஆனால் அந்த அவசரச்சட்டம், 6 மாதத்திற்குள் மாநில சட்டமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அவசரச்சட்டத்தை எந்நேரத்திலும் ஆளுநர் திரும்பப் பெறலாம். மாநிலத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை, அரசுப்பணியாளர் தேர்வாணையக் குழுவின் அறிக்கை, அரசின் தணிக்கைக்குழு அறிக்கைகளை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கின்றார்.
Question 78 |
கீழ்க்கண்டவற்றுள் ஆளுநரின் சிறப்புரிமைகள் யாவை?
தனது பணிகள் மற்றும் அதிகாரத்தைச் செய்ய வேண்டும் என எண்ணுவதிலும் செயல்படுத்துவதிலும் எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. | |
ஆளுநரின் பதவிக்காலத்தில் அவர் மீது குற்றவியல் நடவடிக்கைகளை அவருக்கு எதிராக எந்த நீதிமன்றத்திலும் தொடர முடியாது. | |
ஆளுநரின் பதவி காலத்தில் அவர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தவோ அல்லது அவரை கைது செய்யவோ எந்த நீதிமன்றமும் உத்தரவு பிறப்பிக்க முடியாது. | |
இவை அனைத்தும் |
Question 78 Explanation:
விளக்கம்: சட்டப்பிரிவு 361 (1) ஆளுநருக்கான கீழ்க்காணும் சிறப்புரிமைகளை வழங்குகின்றது.
(அ) தனது பணிகள் மற்றும் அதிகாரத்தைச் செய்ய வேண்டும் என எண்ணுவதிலும் செயல்படுத்துவதிலும் எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.
(ஆ) ஆளுநரின் பதவிக்காலத்தில் அவர் மீது குற்றவியல் நடவடிக்கைகளை அவருக்கு எதிராக எந்த நீதிமன்றத்திலும் தொடர முடியாது.
(இ) ஆளுநரின் பதவி காலத்தில் அவர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தவோ அல்லது அவரை கைது செய்யவோ எந்த நீதிமன்றமும் உத்தரவு பிறப்பிக்க முடியாது.
(ஈ) மாநில ஆளுநருக்கு எதிராக உரிமையியல் வழக்குகளைத் தொடர முடியாது
Question 79 |
ஆளுநருக்கு ஆலோசனைகள் வழங்க அமைச்சரவையை உருவாக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு பிரிவு எது?
164 | |
163 | |
162 | |
166 |
Question 79 Explanation:
விளக்கம்: அரசியலமைப்பு சட்டப்பிரிவு 163 ஆளுநருக்கு ஆலோசனைகள் வழங்க அமைச்சரவையை உருவாக்க வழிவகை செய்திருக்கிறது. சட்டப்பிரிவு 163(1)-ன் படி, முதலமைச்சரை தலைவராகக் கொண்ட அமைச்சரவை ஆளுநருக்கு தேவைப்படும் பொழுது உதவி செய்யவும் ஆலோசனை வழங்கவும் வேண்டும்.
Question 80 |
வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் எண்ணிக்கை?
235 | |
234 | |
236 | |
238 |
Question 80 Explanation:
விளக்கம்: தமிழக சட்டமன்றம் 235 உறுப்பினர்களைக் கொண்டது. இவர்களில் 234 உறுப்பினர்கள் வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
ஆங்கிலோ – இந்தியன் வகுப்பினரில் ஒருவர் ஆளுநரால் நியமனம் செய்யப்படுகிறார். அட்டவணைப்படுத்தப்பட்டோர் (தாழ்த்தப்பட்டோர்) மற்றும் பழங்குடியினருக்கு சட்டமன்றத் தேர்தலில் தனித் தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன
Question 81 |
ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் பகுதி எது?
நகராட்சி | |
மாநகராட்சி | |
பஞ்சாயத்துக்கள் | |
பேரூராட்சி |
Question 81 Explanation:
விளக்கம்: ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் பகுதி நகராட்சி எனப்படும். நகர சபைத் தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்கள் (கவுன்சிலர்) மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களது பதவிக்காலம் ஐந்தாண்டுகளாகும். இந்நகராட்சியினை நிர்வாகம் செய்ய ஒரு நகராட்சி ஆணையர் அரசால் நியமிக்கப்படுகிறார்.
Question 82 |
தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1994 | |
1995 | |
1996 | |
1997 |
Question 82 Explanation:
விளக்கம்: 1994ஆம் ஆ ண் டு நடைமுறைப்படுத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒரு புதிய சட்டத்தின் அடிப்படையில், புதிய பஞ்சாயத்து ராஜ் அமைப்பு செயல்படுத்தப்பட்டது.
Question 83 |
தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் எவை?
மூன்று அடுக்கு அமைப்பு | |
கிராம சபை | |
தேர்தல் ஆணையத்தினை நிறுவுதல் | |
இவை அனைத்தும் |
Question 83 Explanation:
விளக்கம்: (அ) மூன்று அடுக்கு அமைப்பு (ஆ) கிராம சபை (இ) தேர்தல் ஆணையத்தினை நிறுவுதல்
(ஈ) நிதி ஆணையத்தினை நிறுவுதல் (உ) மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதத்தில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு (ஊ) பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு மற்றும் (எ) மாவட்ட திட்டக்குழுக்களை அமைத்தல்.
Question 84 |
கிராம ஊராட்சியின் ஆய்வாளராக செயல்படுகின்றவர் யார்?
மாவட்ட ஆட்சியர் | |
வட்டாட்சியர் | |
கிராம நிர்வாக அலுவலர் | |
ஒன்றிய குழு உறுப்பினர் |
Question 84 Explanation:
விளக்கம்: கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகள், கிராம ஊராட்சி என்று அழைக்கப்படுகின்றன. தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். (18வயது பூர்த்தியடைந்தோர்) அவர்களது பணிக்காலம் 5 வருடங்கள் ஆகும். கிராம ஊராட்சியின் ஆய்வாளராக மாவட்ட ஆட்சியர் செயல்படுகின்றார். ஐநூறுக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்டுள்ள ஒவ்வொரு கிராமமும் கிராம ஊராட்சியாக உருமாறியுள்ளது.
Question 85 |
கிராம சபை கூட்டங்களுக்குத் தலைமை தாங்குபவர் யார்?
ஊராட்சித் தலைவர் | |
பகுதி உறுப்பினர் | |
கிராம நிர்வாக அலுவலர் | |
ஒன்றிய குழு உறுப்பினர் |
Question 85 Explanation:
விளக்கம்: ஒவ்வொரு ஊராட்சியிலும், அவ்வூராட்சி அதிகார எல்லைக்கு உள்ளே வசிக்கும் மக்களே கிராம சபை உறுப்பினர்களாக இருப்பர். ஊராட்சித் தலைவர் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவார். கிராம சபை கூட்டங்களில், வரவு செலவு கணக்குகளும், திட்டங்களினால் பயனடைந்தோர் பற்றியும் கலந்துரையாடப்படும்.
Question 86 |
கீழ்க்கண்ட எந்த நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும்?
குடியரசு தினம் | |
பொங்கல் | |
பெரியார் பிறந்த தினம் | |
இவை அனைத்தும் |
Question 86 Explanation:
விளக்கம்: ஒரு வருடத்தில் நான்கு முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும்.
சனவரி 26 – குடியரசு தினம்
மே 1 – உழைப்பாளர் தினம்
ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்
அக்டோபர் 2 – காந்தி பிறந்த தினம்
Question 87 |
உத்திரமேரூர் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்ட மாவட்டம் எது?
கடலூர் | |
காஞ்சிபுரம் | |
திருவண்ணாமலை | |
தஞ்சாவூர் |
Question 87 Explanation:
விளக்கம்: காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரமேரூர் கல்வெட்டுகளில் காணப்படுகின்ற ஆதாரங்களின்படி உள்ளாட்சி அமைப்புகளில் தமிழ்நாடு ஒரு நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது. அக்காலத்தில் தமிழ்நாடு பல கிராம குடியாட்சியை கொண்ட நிலமாக விளங்கியது. பல சமூக குழுக்கள் தங்களது பகுதி மேம்பாட்டிற்காக நடவடிக்கைகளில் ஈடுப்பட்டனர்.
Question 88 |
நகராட்சி குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவற்றை தேர்க.
பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் பகுதி நகராட்சி எனப்படும். | |
நகர சபைத் தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்கள் (கவுன்சிலர்) மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். | |
இந்நகராட்சியினை நிர்வாகம் செய்ய ஒரு நகராட்சி ஆணையர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். | |
இவை அனைத்தும் |
Question 88 Explanation:
விளக்கம்: ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் பகுதி நகராட்சி எனப்படும். நகர சபைத் தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்கள் (கவுன்சிலர்) மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களது பதவிக்காலம் ஐந்தாண்டுகளாகும். இந்நகராட்சியினை நிர்வாகம் செய்ய ஒரு நகராட்சி ஆணையர் அரசால் நியமிக்கப்படுகிறார்.
Question 89 |
பல இலட்சம் மக்கள்தொகை கொண்ட பகுதிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மாநகராட்சி | |
நகரம் | |
பேரூராட்சி | |
மாவட்ட ஊராட்சி |
Question 89 Explanation:
விளக்கம்: பல இலட்சம் மக்கள்தொகை கொண்ட பெரு நகரப்பகுதிகள் மாநகராட்சி என அழைக்கப்படுகிறது. மாநகராட்சித் தலைவர் மேயர் என்று அழைக்கப்படுகிறார். மேயர் மற்றும் பிற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் ஆகும். இம் மாநகராட்சிக்கு மாநகராட்சி ஆணையர் நிர்வாக அலுவலர் ஆவார்.
Question 90 |
மாநகராட்சியின் ஆணையராக நியமிக்கப்படுபவர் யார்?
இந்திய ஆட்சிப்பணி அதிகாரி | |
வட்டாட்சியர் | |
நகராட்சி ஆணையர் | |
மேயர் |
Question 90 Explanation:
விளக்கம்: இந்திய ஆட்சிப்பணி (IAS) அதிகாரி ஒருவர் மாநகராட்சியின் ஆணையராக நியமிக்கப்படுகிறார். மாநகராட்சி சபையில் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் அனைத்தும் இவரால் செயல்படுத்தப்படுகிறன. மாநகராட்சி அலுவலகம் இவரது செயல்பாடுகளுக்கு உதவுகின்றது.
Question 91 |
மாநகராட்சித் தலைவரின் (மேயரின்) முக்கிய பணிகள் எவை?
அரசுக்கும் மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் இடையே ஓர் இணைப்புப்பாலமாக மேயர் செயல்படுகிறார். | |
மாநகராட்சி குழு கூட்டங்களுக்குத் தலைமை தாங்குகிறார். | |
வெளிநாட்டு பிரமுகர்களை வரவேற்று உபசரிப்பார். | |
இவை அனைத்தும் |
Question 91 Explanation:
விளக்கம்: மாநகராட்சித் தலைவரின் (மேயரின்) முக்கிய பணிகள்
அரசுக்கும் மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் இடையே ஓர் இணைப்புப்பாலமாக மேயர் செயல்படுகிறார்.
மாநகராட்சி குழு கூட்டங்களுக்குத் தலைமை தாங்குகிறார்.
வெளிநாட்டு பிரமுகர்களை வரவேற்று உபசரிப்பார்.
Question 92 |
உள்ளாட்சி அமைப்புகளைப் பற்றிய ஆவணக் குறிப்புகள் கண்டெடுக்கப்பட்ட அரச மரபுகள் எவை?
சோழர் | |
மௌரியர் | |
பல்லவர் | |
a) மற்றும் b) |
Question 92 Explanation:
விளக்கம்: உள்ளாட்சி அமைப்பு இந்தியாவில் தொன்றுதொட்டு காணப்படும் கருத்துரு ஆகும். இது பிற்காலச் சோழர்கள் அல்லது தஞ்சை சோழப்பேரரசு காலத்தில் உச்சநிலையை அடைந்தது. மெளரியப் பேரரசு காலத்திலும் உள்ளாட்சி அமைப்புகளைப் பற்றிய ஆவணக் குறிப்புகள் உள்ளன. பண்டைய இந்தியா முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் பல் வேறுபட்ட அம்சங்களுடன் காணப்பட்டன. இடைக்காலத்தில் நிலபிரபுவத்துவத்தின் முறையின் தாக்கத்தால், உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியத்துவம் குறைந்தது.
Question 93 |
பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் கிராமங்களிலிருந்து நகரங்கள் வரை கட்டமைக்கப்பட வேண்டும் என்பது யாருடைய திட்டங்களின் ஒரு முக்கியக் கூறாக இருந்தது?
நேரு | |
காந்தியடிகள் | |
அம்பேத்கார் | |
எம்.என்.ராய் |
Question 93 Explanation:
விளக்கம்: 1935 இந்திய அரசு சட்டம், மாகாணங்களில் தன்னாட்சியை அறிமுகப்¬ படுத்தியது. இச்சட்டம் 1937இல் நடைமுறைக்கு வந்தது. காங்கிரஸ் ஆட்சி அமைத்த மாகாணங்களில், ஊரக வளர்ச்சிக்குச் சிறப்பு கவனம் அளிக்கப்பட்டது. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் கிராமங்களிலிருந்து நகரங்கள் வரை கட்டமைக்கப்பட வேண்டும் என்பது காந்தியடிகளின் திட்டங்களின் ஒரு முக்கியக் கூறாக இருந்தது.
Question 94 |
உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை’ என அழைக்கப்படுபவர் யார்?
ரிப்பன் பிரபு | |
கானிங் பிரபு | |
வெல்லெஸ்லி பிரபு | |
வில்லியம் பெண்டிங் பிரபு |
Question 94 Explanation:
விளக்கம்: ரிப்பன் பிரபுவின் 1882ஆம் ஆண்டு தீர்மானத்தின்படி, மேற்கத்திய நாடுகளின் மக்களாட்சி முறையின் அடிப்படையில் 19ஆம் நூற்றாண்டின் கால் இறுதியில் இவ்வமைப்புகள் இந்தியாவில் புத்துயிர் பெற்றன. நவீன உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடித்தளமிட்டதால் ரிப்பன் பிரபு, ‘உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை’ என அழைக்கப்படுகிறார்.
Question 95 |
73 மற்றும் 74 வது அரசமைப்பு திருத்தச்சட்டங்களின் சிறப்பம்சங்கள் யாவை?
ஊராட்சி மற்றும் நகராட்சிகள் ‘உள்ளாட்சி அமைப்பு’ நிறுவனங்களாகச் செயல்படும். | |
குடியரசு அமைப்பின் அடிப்படை அலகுகள்: வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள உரிய வயதுடையோரைக் கொண்ட கிராம சபைகள் (கிராமங்கள்) மற்றும் பகுதி குழுக்கள் (நகராட்சிகள்) ஆகியன. | |
கிராமங்கள் இடையில் காணப்படும் வட்டாரம் / வட்டம் / மண்டலம் மற்றும் மாவட்ட அளவில் ஊராட்சிகள் என மூன்றடுக்கு முறையில் செயல்படுகின்றன. | |
இவை அனைத்தும் |
Question 95 Explanation:
விளக்கம்: பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டில் பெண்களுக்கும் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. எல்லா அளவு நிலைகளிலும் தலைவர்கள் பதவிக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ¾ ஒரே மாதிரியான ஐந்தாண்டு பதவிக்காலம் மற்றும் பதவிக்காலம் நிறைவடையும் முன்பாகவே தேர்தல்கள் நடத்தப்பெற்று, புதிய அமைப்புகள் உருவாக்கப்படுதல் வேண்டும். ஆட்சி கலைக்கப்பட்டால், ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படுதல் வேண்டும்.
Question 96 |
எத்தனை மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சிறு மாநிலங்களில் பஞ்சாயத்துக்கள் இரண்டடுக்கு முறையில் இயங்குகின்றன?
இரண்டு | |
மூன்று | |
நான்கு | |
ஐந்து |
Question 96 Explanation:
விளக்கம்: இரண்டு மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையை உடைய சிறு மாநிலங்களில் பஞ்சாயத்துக்கள் இரண்டடுக்கு முறையில் இயங்குகின்றன. ¾ நேரடித் தேர்தலின் மூலம் அனைத்து அளவிலும் இடங்கள் நிரப்பப்படுகின்றன. ¾ அனைத்து அளவு நிலைகளில் பஞ்சாயத்து தலைவர்களுக்கான இடங்களில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு, மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்படும்.
Question 97 |
கிராம ஊராட்சியின் செயல்பாடுகள் எவை?
குடிநீர் வழங்குதல் | |
தெருவிளக்குகளைப் பராமரித்தல் | |
சாலைகளைப் பராமரித்தல் | |
இவை அனைத்தும் |
Question 97 Explanation:
விளக்கம்: கிராம ஊராட்சியின் செயல்பாடுகள்
குடிநீர் வழங்குதல்
தெருவிளக்குகளைப் பராமரித்தல்
சாலைகளைப் பராமரித்தல்
கிராம நூலகங்களைப் பராமரித்தல்
சிறிய பாலங்களைப் பராமரித்தல்
வீட்டுமனைகளுக்கு அனுமதி அளித்தல்
வடிகால் அமைப்புக்களைப் பராமரித்தல்
தொகுப்பு வீடுகளைக் கட்டுதல்
தெருக்களைச் சுத்தம் செய்தல்
இடுகாடுகளைப் பராமரித்தல்
பொதுக்கழிப்பிட வசதிகளைப் பராமரித்தல்.
Question 98 |
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் சட்டம் கீழ்க்கண்டவற்றுள் எவற்றை உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் நடைமுறைப்படுத்தியது?
கிராமங்களிலுள்ள தெரு விளக்குகளைப் பராமரித்தல் | |
சந்தைகளையும் திருவிழாக்களையும் நடத்துதல் | |
மரங்களை நடுதல் | |
இவை அனைத்தும் |
Question 98 Explanation:
விளக்கம்: 1994ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் சட்டம் கீழ்க்கண்ட விருப்ப செயல்பாடுகளை உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் நடைமுறைப்படுத்தியது.
கிராமங்களிலுள்ள தெரு விளக்குகளைப் பராமரித்தல்
சந்தைகளையும் திருவிழாக்களையும் நடத்துதல்
மரங்களை நடுதல்
விளையாட்டு மைதானங்களைப் பராமரித்தல்
வண்டிகள் நிறுத்தப்படும் இடங்களில் உள்ள வாகனங்கள், இறைச்சி கூடங்கள் மற்றும் கால்நடைகளின் கொட்டகை ஆகியவற்றைப் பராமரித்தல்.
Question 99 |
மூன்றடுக்கு அமைப்பு உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பில் வரி விதிக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ள அமைப்பு எது?
கிராம ஊராட்சி | |
மாவட்ட ஊராட்சி | |
பேரூராட்சி | |
நகராட்சி |
Question 99 Explanation:
விளக்கம்: மூன்றடுக்கு அமைப்பு உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பில் கிராம ஊராட்சி மட்டுமே வரி விதிக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
வரிகள்
சொத்து வரி
தொழில் வரி
வீட்டு வரி
குடிநீர் இணைப்புக்கான கட்டணம்
நில வரி
கடைகள் மீது விதிக்கப்படும் வரிகள்
Question 100 |
உள்ளாட்சி அமைப்புகள் என்ற முறையின் கருத்துருவாக்கம், எந்த இரு ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நான்கு முக்கிய குழுக்களின் முயற்சியினால் நடைமுறைப்படுத்தப்பட்டது?
1957 - 1986 | |
1958 - 1988 | |
1953 - 1987 | |
1959 - 1989 |
Question 100 Explanation:
விளக்கம்: உள்ளாட்சி அமைப்புகள் என்ற முறையின் கருத்துருவாக்கம், 1957ஆம் ஆண்டு முதல் 1986ஆம் ஆண்டு வரை, நான்கு முக்கிய குழுக்களின் உருவாக்கம் மற்றும் அவற்றின் முயற்சியினால் நடைமுறைப்படுத்தப்பட்டது. சமூக அபிவிருத்தி திட்டம் (1952) மற்றும் தேசிய நீட்டிப்பு சேவை (1953) ஆகியன, 1957ஆம் ஆண்டின் பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு அடிப்படையாகத் திகழ்ந்தன.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.