Online Test

Indian Polity Revision Test Part 2 in Tamil

Indian Polity Part 2 Revision Test in Tamil

Congratulations - you have completed Indian Polity Part 2 Revision Test in Tamil . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மாநில நிர்வாகம் கீழ்க்கண்டவற்றுள் எதனால் மேற்கொள்ளப்படுகிறது?
A
ஆளுநர்
B
முதலமைச்சர்
C
அமைச்சரவை
D
இவை அனைத்தும்
Question 1 Explanation: 
விளக்கம்: நமது நாட்டில் மத்திய அரசு, மாநில அரசு என்ற இரண்டு வகை அரசாங்கங்கள் நடைமுறையில் உள்ளன. இந்தியாவில் 28 மாநில அரசாங்கங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு மாநிலமும் தனது நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ள தனக்கென ஒரு அரசைக் கொண்டுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலமும் நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறையை கொண்டுள்ளது. மாநில நிர்வாகம் மாநில ஆளுநர் மற்றும் முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையால் மேற்கொள்ளப்படுகிறது. மாநில ஆளுநர் சட்டமன்றத்தின் ஒரு அங்கமாகத் திகழ்கிறார்.
Question 2
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
A
மாநில அரசின் தலைவராக மாநில ஆளுநர் இருப்பார் என இந்திய அரசியலமைப்பு சட்டம் குறிப்பிடுகிறது.
B
இந்தியக்குடியரசுத் தலைவரால் ஆளுநர் நியமிக்கப்படுகிறார்.
C
இவர் மாநில நிர்வாகத்தின் தலைவராக இருக்கிறார்
D
இவை அனைத்தும்.
Question 2 Explanation: 
விளக்கம்: மாநில அரசின் தலைவராக மாநில ஆளுநர் இருப்பார் என இந்திய அரசியலமைப்பு சட்டம் குறிப்பிடுகிறது. இந்திய குடியரசுத் தலைவரால் ஆளுநர் நியமிக்கப்படுகிறார். இவர் மாநில நிர்வாகத்தின் தலைவராக இருக்கிறார். அவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். எனினும் பதவிக்காலம் முடியும் முன்பாகவே அவரை அப்பதவியிலிருந்து குடியரசுத் தலைவர் நீக்கலாம். அல்லது தானாகவே தனது பதவியை ஆளுநர் ராஜினாமா செய்யலாம். ஆளுநரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் அல்லது வேறு மாநிலத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்படலாம். ஆனால் மாநில அரசாங்கம் ஆளுநரை பதவியிலிருந்து நீக்க இயலாது.
Question 3
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
A
குடியரசுத் தலைவர் மாநில ஆளுநரை நியமிக்கும் போது மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்படுகிறார்.
B
தொடர்புடைய மாநில அரசையும் கலந்தாலோசிப்பதில்லை
C
பொதுவாக ஒருவர் ஆளுநராக அவரது சொந்த மாநிலத்தில் நியமிக்கப்படுகிறார்.
D
இவை அனைத்தும்
Question 3 Explanation: 
விளக்கம்: குடியரசுத் தலைவர் மாநில ஆளுநரை நியமிக்கும் போது மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்படுகிறார். மேலும் தொடர்புடைய மாநில அரசையும் கலந்தாலோசிக்கிறார். பொதுவாக ஒருவர் ஆளுநராக அவரது சொந்த மாநிலத்தில் நியமிக்கப்படுவது இல்லை.
Question 4
கீழ்க்கண்டவற்றுள் ஒருவர் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்படுவதற்குரிய தகுதிகள் எவை?
A
மாநில ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
B
30 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும்.
C
மேலும் அவர் பாராளுமன்றம் அல்லது சட்டமன்றத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
D
இவை அனைத்தும்
Question 4 Explanation: 
விளக்கம்: மாநில ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். 35 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். மேலும் அவர் பாராளுமன்றம் அல்லது சட்டமன்றத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. இது தவிர ஆதாயம் தரும் எந்த ஒரு பதவியையும் அவர் வகித்தல் கூடாது.
Question 5
பின்வருபவர்களுள் ஆளுநரால் நியமிக்கப்படுபவர்களை தேர்க.
A
மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர்
B
முதலமைச்சரையும் அவரது ஆலோசனையின் பேரில் ஏனைய அமைச்சர்களையும் நியமிக்கிறார்.
C
மாநில அரசின் தலைமை வழக்கறிஞர்
D
இவை அனைத்தும்.
Question 5 Explanation: 
விளக்கம்: ஆளுநர் ஒரு மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார். மாநில அரசின் நிர்வாக அதிகாரங்கள் ஆளுநரிடம் உள்ளன. மாநில அரசாங்கத்தின் அனைத்து நிர்வாக செயல்களும் ஆளுநரின் பெயரால் மேற்கொள்ளப்படுகின்றன. ஆளுநர் முதலமைச்சரையும் அவரது ஆலோசனையின் பேரில் ஏனைய அமைச்சர்களையும் நியமிக்கிறார்.மாநில அரசின் தலைமை வழக்கறிஞர், மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்வதோடு சில இதர நியமனங்களையும் மேற்கொள்கிறார்.
Question 6
யாருடைய  அறிக்கையின் படி குடியரசு தலைவர் ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்துகிறார்?
A
ஆளுநர்
B
முதலமைச்சர்
C
அமைச்சரவை
D
இவை அனைத்தும்.
Question 6 Explanation: 
விளக்கம்: ஆளுநரின் அறிக்கையின் படி குடியரசு தலைவர் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356 ஐ பயன்படுத்தி ஒரு மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை ஏற்படுத்துகிறார். மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் செயல்படுகிறார்.
Question 7
முதலமைச்சரை பற்றிய கூற்றுகளுள் தவறானதை தேர்க.
A
மாநில முதலமைச்சர், அமைச்சரவையை, உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
B
பல்வேறு துறைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.
C
மாநில சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும், ஒத்தி வைக்கவும் அதிகாரம் கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் சட்டமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தையும் கொண்டுள்ளார்.
D
இவை அனைத்தும்
Question 7 Explanation: 
விளக்கம்: ■ முதலமைச்சர் மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார். மாநில அரசாங்கத்தின் பல்வேறு முக்கிய முடிவுகள் அவரது தலைமையின் கீழ் எடுக்கப்படுகின்றன. ■ மாநில முதலமைச்சர், அமைச்சரவையை, உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார். முதலமைச்சரின் ஆலோசனையின் பெயரில் அமைச்சர்களை ஆளுநர் நியமிக்கிறார். ■ பல்வேறு துறைகளை கண்காணித்து ஆலோசனை வழங்குகிறார். மேலும் அவர் பல்வேறு துறைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.
Question 8
சட்டமன்ற கூட்டம் நடைபெறாத போது அவசரச் சட்டத்தைப் பிறப்பிப்பவர் யார்?
A
ஆளுநர்
B
முதலமைச்சர்
C
துணை முதல்வர்
D
குடியரசுத்தலைவர்
Question 8 Explanation: 
விளக்கம்: மாநில சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும், ஒத்தி வைக்கவும் அதிகாரம் கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் சட்டமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தையும் கொண்டுள்ளார். ஆளுநரின் ஒப்புதலுக்குப் பின்னரே பண மசோதாவைச் சட்டமன்றத்தில் கொண்டுவர முடியும். கூட்டம் நடைபெறாத போது ஆளுநர் அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்கிறார்.
Question 9
மாநில அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளில் யாருடைய  முடிவே இறுதியாக இருக்கும்?
A
ஆளுநர்
B
முதலமைச்சர்
C
பிரதமர்
D
குடியரசுத்தலைவர்
Question 9 Explanation: 
விளக்கம்: முதலமைச்சர் மாநில அரசாங்கத்தின் கொள்கைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார். அவர் மாநில அரசின் கொள்கைகள் மக்களின் நலனுக்கு எதிராக இல்லாததை உறுதி செய்கிறார். மாநில அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளில் அவரது முடிவே இறுதியாக இருக்கும்.
Question 10
மாநில சட்டமன்றத்திற்கு எத்தனை ஆங்கிலோ இந்திய உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்?
A
2
B
1
C
12
D
6
Question 10 Explanation: 
விளக்கம்: சட்டமன்றத்திற்கு ஒரு ஆங்கிலோ இந்திய உறுப்பினரை அவர்கள் போதிய அளவு பிரதிநிதித்துவம் பெறாதபோது நியமனம் செய்யும் அதிகாரத்தைக் கொண்டுள்ளார். மாநில சட்ட மேலவைக்கு அறிவியல், இலக்கியம், கலை, சமூக சேவை, கூட்டுறவு இயக்கம் ஆகிய துறைகளில் சிறப்பாகப்பங்காற்றிய அறிஞர்களில், ஆறில் ஒரு பங்கு அளவிற்கு பிரதிநிதித்துவ அடிப்படையில் நியமிக்கிறார்.
Question 11
மாநில அரசாங்கத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை யாருடைய  ஒப்புதலுடன் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது?
A
ஆளுநர்
B
முதலமைச்சர்
C
பிரதமர்
D
குடியரசுத்தலைவர்
Question 11 Explanation: 
விளக்கம்: மாநில அரசாங்கத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை ஆளுநரின் ஒப்புதலுடன் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பண மசோதா உள்ளிட்ட அனைத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கிறார்.
Question 12
மாநில அரசாங்கத்தின் உயர் பதவிகளில் நியமனம் செய்யும் முக்கிய அதிகாரத்தைக் கொண்டுள்ளவர் யார்?
A
ஆளுநர்
B
முதலமைச்சர்
C
பிரதமர்
D
குடியரசுத்தலைவர்
Question 12 Explanation: 
விளக்கம்: மாநில அரசாங்கத்தின் உயர் பதவிகளில் நியமனம் செய்யும் முக்கிய அதிகாரத்தைக் கொண்டுள்ளார். முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின்படியே ஆளுநர் பல்வேறு உயர் அதிகாரிகளை நியமிக்கிறார்.
Question 13
மாநில அரசின் எதிர்பாரா செலவின நிதி யாரின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கும்?
A
ஆளுநர்
B
முதலமைச்சர்
C
நிதி அமைச்சர்
D
குடியரசுத்தலைவர்
Question 13 Explanation: 
விளக்கம்: மாநில அரசின் எதிர்பாரா செலவின நிதி ஆளுநரின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கும்.மாநில ஆளுநர் குடியரசுத் தலைவரைப் போன்று மாநிலத்தில் பெயரளவு நிர்வாகத் தலைவராக உள்ளார். எனினும் மாநில ஆளுநர் எப்போதும் பெயரளவு தலைவராக இருப்பது இல்லை. அவர் தனது அதிகாரங்களை குறிப்பிட்ட சில நேர்வுகளில் செயல்படுத்துகிறார்.
Question 14
பின்வருவனவற்றுள் ஆளுநரின் நிலை பற்றிய கூற்றுகளுள் சரியானது?
A
அவர் மத்திய அரசின் ஒரு முகவராக மாநிலத்தில் செயல்படுகிறார்.
B
எனவே இவர் மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஆகியவற்றிற்கிடையேயான உறவுகளைப் பராமரிப்பதற்குப் பொறுப்பு வாய்ந்தவர் ஆவார்.
C
ஆளுநர் முக்கியமான தருணங்களில் அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்குகிறார்.
D
இவை அனைத்தும்
Question 14 Explanation: 
விளக்கம்: எனவே இவர் மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஆகியவற்றிற்- கிடையேயான உறவுகளைப் பராமரிப்பதற்குப் பொறுப்பு வாய்ந்தவர் ஆவார். ஆளுநர் முக்கியமான தருணங்களில் அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்குகிறார். மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான ஆளுநரின் அறிக்கையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் மாநிலத்தில் நெருக்கடி நிலையை அறிவிக்கிறார். ஆளுநர் விருப்புரிமை அதிகாரத்தை செயல்படுத்தும் போது தன்னிச்சையான முடிவுகளை எடுக்கிறார்.அவர் அமைச்சரவை யிடமிருந்து அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்த தகவல்களைக் கோரிப் பெறலாம்.
Question 15
முதலமைச்சரை குறித்த கூற்றுகளுள் தவறானவற்றை தேர்க.
A
ஆளுநர் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மை கொண்டுள்ள கட்சியின் தலைவரை மாநில முதலமைச்சராக நியமிக்கிறார்.
B
முதலமைச்சர் அமைச்சரவையின் தலைவர் ஆவார்.
C
முதலமைச்சரின் பதவிக்காலம் நிலையான ஒன்று அல்ல.
D
இவை அனைத்தும்
Question 15 Explanation: 
விளக்கம்: ஆளுநர் மாநில சட்ட மன்றத்தில் பெரும்பான்மை கொண்டுள்ள கட்சியின் தலைவரை மாநில முதலமைச்சராக நியமிக்கிறார். முதலமைச்சர் அமைச்சரவையின் தலைவர் ஆவார். முதலமைச்சரின் பதவிக்காலம் நிலையான ஒன்று அல்ல. அவர் சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ளவரை முதலமைச்சர் பதவியில் நீடிக்கலாம்.
Question 16
முதலமைச்சராக பதவி ஏற்கும்போது உறுப்பினராக இல்லாவிட்டால் எத்தனை  மாதத்திற்குள் சட்டமன்றத்தில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்?
A
5
B
3
C
4
D
6
Question 16 Explanation: 
விளக்கம்: சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை இழக்கும்போது அவர் பதவி விலகுதல் வேண்டும். முதலமைச்சர் பதவி விலகுதல் என்பது ஒட்டுமொத்த அமைச்சரவையும் பதவி விலகுதலைக் குறிக்கும். முதலமைச்சர் மாநில சட்டமன்றத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். முதலமைச்சராக பதவி ஏற்கும்போது உறுப்பினராக இல்லாவிட்டால் 6 மாதத்திற்குள் சட்டமன்றத்தில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்.
Question 17
இந்தியாவில் மாநில சட்டமன்றம் கீழ்க்கண்டவற்றுள் எதனை உள்ளடக்கியது?
A
ஆளுநர்
B
மேலவை
C
கீழவை
D
இவை அனைத்தும்
Question 17 Explanation: 
விளக்கம்: இந்தியாவில் மாநில சட்டமன்றம் என்பது ஆளுநரையும் ஒன்று அல்லது இரண்டு அவைகளையும் கொண்டிருக்கும். மேலவை என்பது சட்டமன்ற மேலவை எனவும் கீழவை என்பது சட்டமன்ற பேரவை எனவும் அழைக்கப்படுகிறது.
Question 18
ஒரு மாநிலத்தின் சட்ட மன்ற மேலவையானது எத்தனை உறுப்பினர்களுக்குக்  குறையாமல் இருத்தல் வேண்டும்?
A
40
B
60
C
70
D
50
Question 18 Explanation: 
விளக்கம்: ஒரு மாநிலத்தின் சட்ட மன்ற மேலவையானது நாற்பது உறுப்பினர்களுக்குக் குறையாமலும், அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறது. இதன் உறுப்பினர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
Question 19
சட்டமன்ற மேலவை உறுப்பினர்களில் ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்கள் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
A
ஆளுநர்
B
பட்டதாரிகள்
C
ஆசிரியர்கள்
D
சட்டமன்ற உறுப்பினர்கள்
Question 19 Explanation: 
விளக்கம்: ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்கள் மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர். பன்னிரண்டில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பட்டதாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மற்றொரு பன்னிரண்டில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இடைநிலை பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்- படுகின்றனர்.
Question 20
சட்டமன்ற மேலவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
A
ஆளுநர்
B
பட்டதாரிகள்
C
ஆசிரியர்கள்
D
சட்டமன்ற உறுப்பினர்கள்
Question 20 Explanation: 
விளக்கம்: மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் நகராட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
Question 21
சட்டமன்ற மேலவை  உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெறுவர்?
A
4
B
5
C
6
D
2
Question 21 Explanation: 
விளக்கம்: சட்டமன்ற மேலவை ஒரு நிலையான அவையாகும். இதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெறுவர். அக்காலிப் பணியிடங்களுக்கு தேர்தல் நடைபெறும்.
Question 22
சட்டமன்ற மேலவை உறுப்பினராவதற்கு ஒருவர் எத்தனை  வயது நிரம்பியிருக்க வேண்டும்?
A
35
B
30
C
26
D
24
Question 22 Explanation: 
விளக்கம்: உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒருவர் இந்தியக் குடிமகனாகவும், 30 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். இவர் மாநில சட்டமன்றத்திலும் அல்லது பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் உறுப்பினராக இருத்தல் கூடாது.
Question 23
சட்டமன்ற மேலவையின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
A
குடியரசுத்தலைவர்
B
முதலமைச்சர்
C
ஆளுநர்
D
அவை உறுப்பினர்கள்
Question 23 Explanation: 
விளக்கம்: சட்டமன்ற மேலவையின் தலைமை அலுவலராக அவைத்தலைவர் இருப்பார். அவைத்தலைவர் இல்லாதபோது துணைத் தலைவர் அவையை நடத்தும் பொறுப்பினை கொண்டிருப்பார். சட்டமன்ற மேலவையின் தலைவர் மற்றும் துணைத் தலைவரை அவையின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
Question 24
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
A
சட்டமன்ற தேர்தலுக்காக, மாநிலம் பல்வேறு தொகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன
B
ஒரு சட்டமன்ற தொகுதி பத்தாயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டிருக்கும்.
C
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலிருந்தும் ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
D
இவற்றில் எதுவுமில்லை.
Question 24 Explanation: 
விளக்கம்: மாநில அரசாங்கத்தின் சட்டங்களை உருவாக்குபவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என அழைக்கப்படுகின்றனர் (MLA). இவர்கள் பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சட்டமன்ற தேர்தலுக்காக, மாநிலம் பல்வேறு தொகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவை சட்டமன்ற தொகுதிகள் என அழைக்கப்படுகின்றன. ஒரு சட்டமன்ற தொகுதி ஒரு லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலிருந்தும் ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
Question 25
இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப்பிரிவுகள் ஆளுநர் பதவிக்குத் தேவையான தகுதிகளைக் கூறுகின்றன?
A
157 மற்றும் 158
B
156 மற்றும் 155
C
154 மற்றும் 155
D
153 மற்றும் 154
Question 25 Explanation: 
விளக்கம்: இந்திய அரசியலமைப்பின் 157 மற்றும் 158 வது சட்டப்பிரிவுகள் ஆளுநர் பதவிக்குத் தேவையான பின்வரும் தகுதிகளைக் கூறுகின்றன. அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருத்தல் கூடாது. அவ்வாறு இருப்பின் அவர் ஆளுநராக பதவியேற்கும் பொழுது தாமாகவே அப்பதவி காலியாகிவிடும். மேலும் அவர், இலாபம் தரும் எந்த தொழிலிலும் ஈடுபடக்கூடாது.
Question 26
மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தைப் பற்றி கூறும் சட்டப்பிரிவு எது?
A
154
B
155
C
156
D
152
Question 26 Explanation: 
விளக்கம்: அரசியலமைப்பு சட்டப்பிரிவு 154 மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தைப் பற்றி கூறுகிறது. சட்டப்பிரிவு 154 (1)-ன் படி மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் இருக்க வேண்டும். இந்த அதிகாரம் அவரால் நேரடியாகவோ அல்லது அவரின் கீழுள்ள அலுவலர்களாலோ, அரசியலமைப்பின்படி செயல்படுத்தப்பட வேண்டும்.
Question 27
மத்திய – மாநில அரசுகளின் உறவுகளைக் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு எது?
A
சர்க்காரியா குழு
B
ஜேவிபி குழு
C
நாராயணன் குழு
D
ரங்கராஜன் குழு
Question 27 Explanation: 
விளக்கம்: மத்திய – மாநில அரசுகளின் உறவுகளைக் குறித்து ஆராய அமைக்கப்பட்ட சர்க்காரியா குழு ஆளுநர் நியமனம் குறித்த பல ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அவை: மாநில சட்டமன்ற குழுவால் தயாரிக்கப்பட்ட பட்டியலிலிருந்து அல்லது முதலமைச்சரின் ஒப்புதலுடன் மாநில அரசால் தயாரிக்கப்படும் பட்டியலிலிருந்து அல்லது முதலமைச்சருடன் நடத்தப்படும் கலந்துரையாடல் ஆகியவற்றின் மூலம், ஆளுநர் நியமனம் நடைபெறும்.
Question 28
ஜம்மு - காஷ்மீர் அரசியலமைப்பு  நடைமுறைக்கு வந்த ஆண்டு?
A
நவம்பர் 26, 1957
B
நவம்பர் 26, 1950
C
நவம்பர் 17, 1957
D
டிசம்பர் 26, 1958
Question 28 Explanation: 
விளக்கம்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், ஜம்மு - காஷ்மீர் அரசியலமைப்பு 1957-ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் ஏற்கப்பட்டு, 1957-ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது. இந்திய அரசியலமைப்பின் அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் மற்றும் அடிப்படை உரிமைகள் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்குப் பொருந்தாது.
Question 29
இந்திய அரசியலமைப்பு நீக்கிய எந்த அடிப்படை உரிமை ஜம்மு – காஷ்மீரில் இன்றும் நடைமுறையில் உள்ளது?
A
தனியுரிமை
B
சொத்துரிமை
C
அரசுரிமை
D
இவை அனைத்தும்
Question 29 Explanation: 
விளக்கம்: இந்திய அரசியலமைப்பின் அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் மற்றும் அடிப்படை உரிமைகள் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்குப் பொருந்தாது. இந்திய அரசியலமைப்பு நீக்கிய அடிப்படை உரிமைகளில் ஒன்றான சொத்துரிமை ஜம்மு – காஷ்மீரில் இன்றும் நடைமுறையில் உள்ளது.
Question 30
ஒருவரை ஒரு மாநில ஆளுநராக நியமனம் செய்யப்படுவதில்   பின்பற்றப்படும் மரபுகள் எவை?
A
ஆளுநராக நியமிக்கப்படும் ஒருவர் தான் எந்த மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட உள்ளாரோ அந்த மாநிலத்தில் வசிப்பவராக இருத்தல் கூடாது.
B
மேலும் ஆளுநராக நியமிக்கப்படும் ஒருவரை மத்திய அரசு, மாநில அரசுடன் கலந்தாலோசித்து அவரது பெயரை முன்மொழிய வேண்டும்.
C
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 158 (3A)-ன் படி ஒருவர், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் ஆளுநராக நியமிக்கப்படும் பொழுது, குடியரசுத் தலைவர் ஓர் ஆணையின் மூலம், ஆளுநரின் ஊதியம் மற்றும் படிகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து வழங்க தீர்மானிக்கலாம்.
D
இவை அனைத்தும்
Question 30 Explanation: 
விளக்கம்: ஒருவரை ஒரு மாநில ஆளுநராக நியமனம் செய்யப்படுவதில் இரண்டு மரபுகள் பின்பற்றப்படுகின்றன. அவை: ஆளுநராக நியமிக்கப்படும் ஒருவர் தான் எந்த மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட உள்ளாரோ அந்த மாநிலத்தில் வசிப்பவராக இருத்தல் கூடாது. மேலும் ஆளுநராக நியமிக்கப்படும் ஒருவரை மத்திய அரசு, மாநில அரசுடன் கலந்தாலோசித்து அவரது பெயரை முன்மொழிய வேண்டும். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 158 (3A)-ன் படி ஒருவர், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் ஆளுநராக நியமிக்கப்படும் பொழுது, குடியரசுத் தலைவர் ஓர் ஆணையின் மூலம், ஆளுநரின் ஊதியம் மற்றும் படிகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து வழங்க தீர்மானிக்கலாம்.
Question 31
குடியரசுத் தலைவரின் அவசரநிலை பிரகடனம் செய்யப்படும் பொழுது, குடியரசுத் தலைவரின் பெயரில் மாநிலத்தை நேரடியாக ஆட்சி செய்பவர் யார்?
A
உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி
B
ஆளுநர்
C
அட்டார்னி ஜெனரல்
D
சபா நாயகர்
Question 31 Explanation: 
விளக்கம்: ஆளுநர், மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவதுடன், துணை வேந்தர்களையும் நியமனம் செய்கிறார். குடியரசுத் தலைவரின் அவசரநிலை பிரகடனம் செய்யப்படும் பொழுது, குடியரசுத் தலைவரின் பெயரில் இவரே மாநிலத்தை நேரடியாக ஆட்சி செய்கிறார்.
Question 32
மாநிலத்தின் அரசு வழக்கறிஞரை நியமனம் செய்பவர் யார்?
A
குடியரசுத்தலைவர்
B
ஆளுநர்
C
இந்திய தலைமை நீதிபதி
D
முதலமைச்சர்
Question 32 Explanation: 
விளக்கம்: மாநிலத்தின் அரசு வழக்கறிஞரை நியமனம் செய்து அவரது ஊதியத்தையும் நிர்ணயம் செய்கிறார். ஆளுநர் விரும்பும் வரை அரசு வழக்குரைஞர் அவரது பதவியைத் தொடரலாம்.
Question 33
அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினரை பணிநீக்கம் செய்யும்  அதிகாரம் உடையவர் யார்?
A
குடியரசுத்தலைவர்
B
ஆளுநர்
C
இந்திய தலைமை நீதிபதி
D
முதலமைச்சர்
Question 33 Explanation: 
விளக்கம்: அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்கிறார். இருப்பினும் ஆளுநரால் இவர்களை பணிநீக்கம் செய்ய முடியாது. குடியரசுத் தலைவரால் மட்டுமே பணி நீக்கம் செய்ய முடியும்.
Question 34
உயர் நீதிமன்ற நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யும் அதே முறையைப் பின்பற்றி பதவி நீக்கம் செய்யப்படுபவர் யார்?
A
மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர்
B
ஆளுநர்
C
மாநில மனித உரிமைகள் ஆணையர்
D
அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுவின் தலைவர்
Question 34 Explanation: 
விளக்கம்: விளக்கம்: மாநில தலைமை தேர்தல் ஆணையரை நியமனம் செய்து, அவரது பணிக்காலம், பணியின் தன்மையைத் தீர்மானிக்கிறார். இருந்த போதிலும், உயர் நீதிமன்ற நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யும் அதே முறையைப் பின்பற்றியே மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்யலாம்.
Question 35
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
A
ஆளுநர் சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும் ஒத்திவைக்கவும் சட்டமன்றத்தைக் கலைக்கவும் உரிமைப் பெற்றுள்ளார்.
B
பொதுத் தேர்தல் முடிந்து முதலமைச்சர் மற்றும் மற்ற அமைச்சர்களின் நியமனத்திற்குப் பிறகு நடைபெறும் சட்டமன்றக்கூட்டத்தின் முதல் கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார்.
C
நிலுவையிலுள்ள மசோதா குறித்து சட்டமன்ற அவைகளுக்கு ஆளுநர் செய்தி அனுப்பலாம்
D
இவை அனைத்தும்.
Question 35 Explanation: 
விளக்கம்: சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பணியிடம் காலியாக இருக்கும்பொழுது சட்டமன்றத்தை தலைமை ஏற்று நடத்த எந்த சட்டமன்ற உறுப்பினரை வேண்டுமானாலும் ஆளுநர் நியமனம் செய்யலாம்.
Question 36
சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதியின்மை குறித்து தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்து முடிவு செய்பவர் யார்?
A
சபா நாயகர்
B
ஆளுநர்
C
மாநில தலைமை நீதிபதி
D
முதலமைச்சர்
Question 36 Explanation: 
விளக்கம்: கலை, இலக்கியம், அறிவியல், கூட்டுறவு இயக்கம் மற்றும் சமூக சேவை போன்றவற்றில் சிறந்து விளங்கும் நபர்களைத் தேர்ந்தெடுத்து மாநில சட்டமேலவையின் 6 இல் 1 பங்கு இடங்களுக்கு அவர்களை நியமனம் செய்கிறார். சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதியின்மை குறித்து தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்து முடிவு செய்கிறார்.
Question 37
கீழ்க்கண்ட அறிக்கைகளுள் ஆளுநரால் சமர்ப்பிக்கப்படுபவை எவை?
A
ஆண்டு நிதிநிலை அறிக்கை
B
அரசுப்பணியாளர் தேர்வாணையக் குழுவின் அறிக்கை
C
அரசின் தணிக்கைக்குழு அறிக்கை
D
இவை அனைத்தும்
Question 37 Explanation: 
விளக்கம்: மாநிலத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை, அரசுப்பணியாளர் தேர்வாணையக் குழுவின் அறிக்கை, அரசின் தணிக்கைக்குழு அறிக்கைகளை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கின்றார்.
Question 38
மாநில சட்டமன்றம் நடைபெறாத பொழுது அவசர சட்டத்தை ஆளுநர் பிறப்பிப்பதற்கான அரசியலமைப்பு சட்டப்பிரிவுவு?
A
213
B
124
C
312
D
123
Question 38 Explanation: 
விளக்கம்: அரசியலமைப்பு சட்டப்பிரிவு 213-ன் கீழ் ஆளுநர் மாநில சட்டமன்றம் நடைபெறாத பொழுது அவசர சட்டத்தைப் பிறப்பிக்கலாம். ஆனால் அந்த அவசரச்சட்டம், 6 மாதத்திற்குள் மாநில சட்டமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அவசரச்சட்டத்தை எந்நேரத்திலும் ஆளுநர் திரும்பப் பெறலாம்.
Question 39
கீழ்க்கண்டவற்றுள்  சரியானவற்றை தேர்க.
A
மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு மசோதாவும் ஆளுநர் கையொப்பமிட்ட பின்னர் மட்டுமே சட்டமாகும்.
B
ஆனால், சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் பொழுது ஆளுநர் கையொப்பமிடலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம் அல்லது மீண்டும் மறு பரிசீலனைக்காக சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்பலாம்.
C
மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட எந்த ஒரு மசோதாவும் மாநில உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்குத் தீங்கு விளைவிக்கும் நிலையில் இருக்குமாயின், அதனைக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக நிறுத்திவைக்கலாம்.
D
இவை அனைத்தும்.
Question 39 Explanation: 
விளக்கம்: * மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு மசோதாவும் ஆளுநர் கையொப்பமிட்ட பின்னர் மட்டுமே சட்டமாகும். ஆனால், சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் பொழுது ஆளுநர் கையொப்பமிடலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம் அல்லது மீண்டும் மறு பரிசீலனைக்காக சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்பலாம். மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட எந்த ஒரு மசோதாவும் மாநில உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்குத் தீங்கு விளைவிக்கும் நிலையில் இருக்குமாயின், அதனைக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக நிறுத்திவைக்கலாம்.
Question 40
மாநிலத்தின் ஆண்டு வரவு செலவு திட்டத்தினை தயார் செய்து சட்டமன்றத்தில் அறிமுகம் செய்பவர் யார்?
A
சபா நாயகர்
B
ஆளுநர்
C
நிதி அமைச்சர்
D
முதலமைச்சர்
Question 40 Explanation: 
விளக்கம்: ஆளுநர் மாநிலத்தின் ஆண்டு வரவு செலவு திட்டத்தினை தயார் செய்து சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யும் கடமையை ஆளுநருக்கு அரசியலமைப்பு வழங்குகிறது. தேவைப்பட்டால், துணை வரவு செலவு திட்டத்தையும் அறிமுகம் செய்யலாம். ஆண்டு நிதிநிலை அறிக்கையை (வரவு செலவு திட்டம்) சட்டமன்றத்தில் அறிமுகம் செய்ய காரணமாகிறார்.
Question 41
மாநில சட்டமன்றத்தில் துணை வரவு செலவு திட்டம் யாரால் சமர்ப்பிக்கப்படுகிறது?
A
சபா நாயகர்
B
ஆளுநர்
C
நிதி அமைச்சர்
D
முதலமைச்சர்
Question 41 Explanation: 
விளக்கம்: மாநில சட்டமன்றத்தில் மாநில நிதியமைச்சர் மூலம் துணை வரவு செலவு திட்டத்தை தேவைப்பட்டால் சமர்ப்பிக்கின்றார். ஆளுநரின் முன் அனுமதியுடன்தான் பண மதாவை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்.
Question 42
மாநில நிதி ஒதுக்கீட்டிற்கு யாருடைய பரிந்துரை அவசியம் ஆகும்?
A
சபா நாயகர்
B
ஆளுநர்
C
நிதி அமைச்சர்
D
பிரதமர்
Question 42 Explanation: 
விளக்கம்: ஆளுநரின் பரிந்துரையின்றி நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது. அரசின் எதிர்பாராச் செலவினங்களுக்காக ஆளுநர் அவசர நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய முடியும்.
Question 43
பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளின் நிதிநிலையை ஆய்வு செய்ய எத்தனை ஆண்டிற்கு  ஒருமுறை நிதி ஆணையம் அமைக்கப்படுகிறது?
A
6
B
10
C
7
D
5
Question 43 Explanation: 
விளக்கம்: பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளின் நிதிநிலையை ஆய்வு செய்ய ஒவ்வொரு ஐந்தாண்டிற்கு ஒருமுறை நிதி ஆணையம் ஒன்றை அமைக்கிறார். மாநில அரசின் தலைமை வழக்குரைஞரை நியமனம் செய்கிறார். கீழ் நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமனம் செய்கிறார்.
Question 44
யாருடைய ஆலோசனையின் பேரில் மாவட்ட நீதிபதிகளை ஆளுநர் நியமனம் செய்கிறார்?
A
குடியரசுத்தலைவர்
B
உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி
C
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
D
முதலமைச்சர்
Question 44 Explanation: 
விளக்கம்: உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையின் பேரில் மாவட்ட நீதிபதிகளின் நியமனம் மற்றும் பதவி உயர்வு போன்ற பணிகளை மேற்கொள்கிறார்.
Question 45
யாருடைய ஆளுநரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத்தலைவர் உயர் நீதிமன்ற தலைமைநீதிபதியை நியமனம் செய்கிறார்?
A
குடியரசுத்தலைவர்
B
ஆளுநர்
C
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
D
முதலமைச்சர்
Question 45 Explanation: 
விளக்கம்: ஆளுநரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத்தலைவர் உயர் நீதிமன்ற தலைமைநீதிபதியை நியமனம் செய்கிறார். குற்றவாளிகளின் கருணை மனு அடிப்படையில் குற்றவாளிகளை மன்னிக்கலாம் அல்லது குற்றவாளிகளின் தண்டனையைக் குறைக்கலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம்.
Question 46
கீழ்க்கண்டவற்றுள் ஆளுநரின் விருப்புரிமை அதிகாரங்கள் எவை?
A
குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஆளுநர் ஒரு மசோதாவை நிறுத்தி வைக்க முடியும்.
B
மாநிலத்தில், குடியரசுத் தலைவரின் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை செய்கிறார்.
C
மாநிலத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை, அரசுப்பணியாளர் தேர்வாணையக் குழுவின் அறிக்கை, அரசின் தணிக்கைக்குழு அறிக்கைகளை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கின்றார்.
D
a) மற்றும் b)
Question 46 Explanation: 
விளக்கம்: மாநில நிர்வாகம் மற்றும் சட்டமன்ற செயல்பாடுகள் தொடர்பானச் செய்திகளை முதலமைச்சரிடமிருந்து ஆளுநர் பெறுகிறார். மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் எந்த கட்சியும் அறுதி பெரும்பான்மையைப் பெறாத போது, ஆளுநர் எந்தக் கட்சி தலைவரையும் ஆட்சி அமைக்க அழைக்கலாம்.
Question 47
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
A
சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால் அமைச்சரவையை ஆளுநர் கலைக்க முடியும்.
B
அமைச்சரவை பெரும்பான்மையை இழந்தால், சட்டமன்றத்தை ஆளுநர் கலைக்கமுடியும்
C
இவை இரண்டும்.
D
இவற்றில் எதுவுமில்லை
Question 47 Explanation: 
விளக்கம்: சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால் அமைச்சரவையை ஆளுநர் கலைக்க முடியும். அமைச்சரவை பெரும்பான்மையை இழந்தால், சட்டமன்றத்தை ஆளுநர் கலைக்கமுடியும்.
Question 48
கீழ்க்கண்டவற்றுள் ஆளுநரின் அவசர கால அதிகாரம் அல்லாதது எது?
A
மாநில அரசு அரசியலமைப்பு விதிகளுக்கேற்ப செயல்படவில்லை என்று ஆளுநர் உறுதியாக நம்பினால் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356-ன் கீழ் மாநில அரசை கலைக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யலாம்.
B
மாநில அரசு கலைக்கப்பட்டவுடன், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வரும்.
C
ஆளுநர் குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக மாநிலத்தை நிர்வாகம் செய்கிறார்.
D
இவை அனைத்தும்
Question 48 Explanation: 
விளக்கம்: மாநில அரசு அரசியலமைப்பு விதிகளுக்கேற்ப செயல்படவில்லை என்று ஆளுநர் உறுதியாக நம்பினால் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356-ன் கீழ் மாநில அரசை கலைக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யலாம். மாநில அரசு கலைக்கப்பட்டவுடன், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வரும். ஆளுநர் குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக மாநிலத்தை நிர்வாகம் செய்கிறார்.
Question 49
ஆளுநருக்கு சிறப்புரிமைகளை வழங்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?
A
361 (1)
B
354 (2)
C
366 (3)
D
356 (2)
Question 49 Explanation: 
விளக்கம்: ஆளுநர் தனது பணிகள் மற்றும் அதிகாரத்தைச் செய்ய வேண்டும் என எண்ணுவதிலும் செயல்படுத்துவதிலும் எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. ஆளுநரின் பதவிக்காலத்தில் அவர் மீது குற்றவியல் நடவடிக்கைகளை அவருக்கு எதிராக எந்த நீதிமன்றத்திலும் தொடர முடியாது.
Question 50
கீழ்க்கண்டவற்றுள் ஆளுநரின் சிறப்புரிமை அதிகாரங்கள் எவை?
A
ஆளுநரின் பதவி காலத்தில் அவர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தவோ அல்லது அவரை கைது செய்யவோ எந்த நீதிமன்றமும் உத்தரவு பிறப்பிக்க முடியாது.
B
மாநில ஆளுநருக்கு எதிராக உரிமையியல் வழக்குகளைத் தொடர முடியாது.
C
ஆளுநரின் பதவிக்காலத்தில் அவர் மீது குற்றவியல் நடவடிக்கைகளை அவருக்கு எதிராக எந்த நீதிமன்றத்திலும் தொடர முடியாது.
D
இவை அனைத்தும்
Question 50 Explanation: 
விளக்கம்: சட்டப்பிரிவு 361 (1) ஆளுநருக்கான கீழ்க்காணும் சிறப்புரிமைகளை வழங்குகின்றது. (அ) தனது பணிகள் மற்றும் அதிகாரத்தைச் செய்ய வேண்டும் என எண்ணுவதிலும் செயல்படுத்துவதிலும் எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. (ஆ) ஆளுநரின் பதவிக்காலத்தில் அவர் மீது குற்றவியல் நடவடிக்கைகளை அவருக்கு எதிராக எந்த நீதிமன்றத்திலும் தொடர முடியாது. (இ) ஆளுநரின் பதவி காலத்தில் அவர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தவோ அல்லது அவரை கைது செய்யவோ எந்த நீதிமன்றமும் உத்தரவு பிறப்பிக்க முடியாது. (ஈ) மாநில ஆளுநருக்கு எதிராக உரிமையியல் வழக்குகளைத் தொடர முடியாது.
Question 51
1947 முதல் 1949 வரை முதலமைச்சர் பதவி வகித்தவர் யார்?
A
M. பக்தவச்சலம்
B
P.S. குமாரசாமி ராஜா
C
O.P. இராமசாமி
D
C. இராஜகோபாலாச்சாரி
Question 51 Explanation: 
விளக்கம்: திரு. O.P. இராமசாமி - 1947 – 1949 திரு. P.S. குமாரசாமி ராஜா - 1949 – 1952 திரு. C. இராஜகோபாலாச்சாரி - 1952 – 1954 திரு. K. காமராஜர் - 1954 – 1963 திரு. M. பக்தவச்சலம் - 1963 – 1967 திரு. C.N. அண்ணாதுரை - 1967 – 1969 திரு. M. கருணாநிதி - 1969 – 1976 திரு. M.G. இராமச்சந்திரன் - 1977 – 1987 திருமதி ஜானகி இராமச்சந்திரன்- ஜனவரி 1988 திரு. M. கருணாநிதி - 1989 – 1991
Question 52
1989 முதல் 1991 வரை முதலமைச்சர் பதவி வகித்தவர் யார்?
A
ஜெ.ஜெயலலிதா
B
ஒ . பன்னீர்செல்வம்
C
மு . கருணாநிதி
D
எம் .ஜி . இராமச்சந்திரன்
Question 52 Explanation: 
விளக்கம்: திரு. M. கருணாநிதி - 1989 – 1991 செல்வி J. ஜெயலலிதா - 1991 – 1996 திரு. M. கருணாநிதி - 1996 – 2001 செல்வி J. ஜெயலலிதா - 2001 திரு. O. பன்னீர்செல்வம் - 2001 – 2002 செல்வி J. ஜெயலலிதா - 2002 – 2006 திரு. M. கருணாநிதி - 2006 – 2011 செல்வி J. ஜெயலலிதா - 2011 – 2014 திரு. O. பன்னீர்செல்வம் - 2014 – 2015 செல்வி J. ஜெயலலிதா - 2015 – 2016 திரு. O. பன்னீர்செல்வம் - 2016 – 2017
Question 53
கீழ்க்கண்டவற்றுள் முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் எவை?
A
அமைச்சரவைக் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தி முடிவுகளை எடுக்கிறார்.
B
அமைச்சரவையின் குழப்பத்தைத் தனது இராஜினாமா மூலம் முடித்து வைக்கிறார்.
C
அமைச்சர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தி, வழிநடத்தி, இயக்கி, அவர்களது நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.
D
இவை அனைத்தும்
Question 53 Explanation: 
விளக்கம்: அமைச்சரவையின் தலைவரான முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளாவன. முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அமைச்சர்களை நியமிக்கிறார். அமைச்சர்களுக்குத் துறைகளை ஒதுக்கீடு செய்கிறார். தனது அமைச்சரவையை மாற்றியமைக்கிறார். ஓர் அமைச்சருடன் கருத்து வேறுபாடுகள் எழும்பொழுது, இராஜினாமா செய்யும்படி கேட்கிறார் அல்லது பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்குப் பரிந்துரை செய்கிறார்.
Question 54
கீழ்க்காணும் அலுவலர்களுள்  யாருடைய நியமனங்கள் தொடர்பாக முதலமைச்சர் ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிறார்?
A
மாநில திட்டக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்.
B
மாநில நிதிக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
C
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்.
D
இவை அனைத்தும்
Question 54 Explanation: 
விளக்கம்: ஆளுநருக்கும் அமைச்சரவைக்குமிடையே செய்தித்தொடர்புகளில், முதலமைச்சர் முதன்மையாக விளங்குகிறார். கீழ்க்காணும் அலுவலர்களின் நியமனங்கள் தொடர்பாக ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிறார். மாநில அரசு வழக்குரைஞர் மாநில தேர்தல் ஆணையர் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மாநில திட்டக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மாநில நிதிக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
Question 55
எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு ஆளுநருக்கு ஆலோசனைகள் வழங்க அமைச்சரவையை  உருவாக்க வழிவகை செய்திருக்கிறது?
A
164
B
163
C
166
D
165
Question 55 Explanation: 
விளக்கம்: அரசியலமைப்பு சட்டப்பிரிவு 163 ஆளுநருக்கு ஆலோசனைகள் வழங்க அமைச்சரவையை உருவாக்க வழிவகை செய்திருக்கிறது. சட்டப்பிரிவு 163(1)-ன் படி, முதலமைச்சரை தலைவராகக் கொண்ட அமைச்சரவை ஆளுநருக்கு தேவைப்படும் பொழுது உதவி செய்யவும் ஆலோசனை வழங்கவும் வேண்டும்.
Question 56
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்க.
A
அமைச்சரவை மாநில சட்டமன்றத்திற்குக் கூட்டாகப் பொறுப்பானது.
B
அமைச்சரவைக்குழு வின் அமைச்சர்கள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.
C
சட்டமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவர் அமைச்சராக பதவியேற்றால் 6 மாத காலத்திற்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்.
D
இவை அனைத்தும்
Question 56 Explanation: 
விளக்கம்: முதலமைச்சரின் தலைமையின் கீழ் அமைச்சர்கள் அனைவரும் ஒரு குழுவாக செயல்பட வேண்டும். முதலமைச்சர் எவ்வளவு காலம் பதவியில் நீடிக்கிறாரோ அதுவரை அமைச்சரவை தொடரும். சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டால் மாநில அமைச்சரவை இராஜினாமா செய்ய வேண்டும்.
Question 57
ஆளுநரால் முதலமைச்சர் நியமிக்கப்படுவதைக் கூறும் சட்டப்பிரிவு எது?
A
164
B
163
C
166
D
165
Question 57 Explanation: 
விளக்கம்: சட்டப்பிரிவு 164(1), ஆளுநரால் முதலமைச்சர் நியமிக்கப்படுவதைக் கூறுகிறது. மற்றும் முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் மற்ற அமைச்சர்களையும் நியமிக்க வகை செய்கிறது. ஆளுநர் விரும்பும் வரை முதலமைச்சர் பதவியில் தொடரலாம். முதலமைச்சர் உட்பட மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 விழுக்காட்டை தாண்டக்கூடாது என சட்டப்பிரிவு 164 (1A) கூறுகிறது.
Question 58
முக்கியமான துறைத் தலைவர்களின் நியமனங்களைச் செய்பவர் யார்?
A
ஆளுநர்
B
குடியரசுத்தலைவர்
C
தலைமை நீதிபதி
D
அமைச்சரவை
Question 58 Explanation: 
விளக்கம்: அமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்: மாநில அரசிற்கான கொள்கைகளை உருவாக்கி அவற்றை திறம்பட நடைமுறைப்படுத்துகிறது. சட்டமன்ற நிகழ்ச்சிகளை முடிவு செய்து எல்லா முக்கியமான மசோதாக்களுக்கும் ஆதரவளிக்கிறது. நிதிக்கொள்கையைக் கட்டுப்படுத்துவதுடன் மாநில பொது நலனுக்கான வரிக்கொள்கையை முடிவு செய்கிறது. சமூக, பொருளாதார மாற்றங்களுக்கான நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்களை உருவாக்கி அதன்படி மாநில அரசின் தலைமையில் பல்வேறு தொடர்புடைய துறைகள் உருவாக்கப்படுகின்றன.
Question 59
கீழ்க்கண்டவற்றுள் முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் எவை?
A
சட்டமன்ற கூட்டத்தொடரை ஆரம்பிக்கவும் ஒத்திவைக்கவும் ஆளுநருக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்குகிறார்.
B
சட்டமன்றத்தில் அரசின் கொள்கைகளை அறிவிக்கிறார்.
C
சட்டமன்றத்தில் மசோதாக்களை அறிமுகப்படுத்துகிறார்.
D
இவை அனைத்தும்.
Question 59 Explanation: 
விளக்கம்: எந்நேரத்திலும் சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்கிறார். இதர அதிகாரங்கள் மற்றும் பணிகள்: ஆளுங்கட்சியின் தலைவராக முதலமைச்சர் கட்சியைக் கட்டுப்படுத்தி அதன் ஒழுக்கத்தை மேம்படுத்துகிறார். மாநிலத்தின் தலைவராகப் பல்வேறுபட்ட மக்களின் தேவைகளை உற்று நோக்குகிறார். மாநிலத்தின் அரசியல் தலைமையாக பல்வேறு பணிகளைக் கட்டுப்படுத்தி, மேற்பார்வையிட்டு, பல்வேறு துறை செயலர்களின் பணிகளை ஒருங்கிணைக்கிறார். மாநில அரசு சுமூகமாக இயங்க மத்திய அரசுடன் இணக்கமான உறவை வைத்துக்கொள்கிறார்.
Question 60
ஆண்டு வரவு செலவு திட்டம் (Budget) யாரால் இறுதி செய்யப்படுகிறது?
A
ஆளுநர்
B
குடியரசுத்தலைவர்
C
தலைமை நீதிபதி
D
அமைச்சரவை
Question 60 Explanation: 
விளக்கம்: * மற்ற மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்கிறது. கீழ் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களில் ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிறது. மாநிலத்திற்கான செலவுகளைச் சமாளிக்க திட்ட அறிக்கையை உருவாக்குகிறது. ஒரு மசோதா சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் போது அது சாதாரண மசோதாவா அல்லது நிதி மசோதாவா என்று தீர்மானிக்கிறது. அமைச்சரவையின் ஒவ்வொரு அமைச்சரின் பணிகளைக் கட்டுப்படுத்தி, கண்காணித்து ஒருங்கிணைக்கின்றது.
Question 61
ஈரவை சட்டமன்றங்களைக் கொண்டுள்ள மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டு?
A
உத்திரப்பிரதேசம்
B
மத்தியப்பிரதேசம்
C
கேரளா
D
a) மற்றும் b)
Question 61 Explanation: 
விளக்கம்: இந்திய அரசியலமைப்பு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு சட்டமன்றம் ஏற்பட வகை செய்கிறது. பெரும்பாலான மாநிலங்கள் ஓரவையைக் கொண்ட சட்டமன்றங்களை மட்டும் பெற்றுள்ளன. சில மாநிலங்கள் ஈரவை சட்டமன்றங்களைக் கொண்டுள்ளன. (எடுத்துக்காட்டு: பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா மற்றும் ஜம்மு - காஷ்மீர்). கீழவையானது மாநில மக்களின் பிரதிநிதிகளைக் கொண்டது. மேலவையானது ஆசிரியர்கள், பட்டதாரிகள், மற்றும் உள்ளாட்சி உறுப்பினர்கள் ஆகியோர்களைப் பிரதிநிதிகளாகக் கொண்டது.
Question 62
தமிழகத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை எது வரை இருக்கலாம்?
A
36
B
32
C
30
D
28
Question 62 Explanation: 
விளக்கம்: தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையின் படி (234 உறுப்பினர்கள்) அமைச்சர்களின் எண்ணிக்கை 36 வரைஇருக்கலாம். அதாவது 234-ல் 15 விழுக்காடு.
Question 63
மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை?
A
500
B
450
C
400
D
550
Question 63 Explanation: 
விளக்கம்: மாநில சட்டமன்றம் பிரபலமான ஓர் அவை ஆகும். இதுவே மாநில அதிகாரத்தின் உண்மையான அதிகார மையமாகும். இது வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டது. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, மக்கள் தொகையைப் பொறுத்து மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. இருப்பினும், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 500க்கு மிகாமலும் குறைந்த பட்சம் 60க்கு குறையாமலும் இருக்க வேண்டும். சட்டமன்றத்தின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இருப்பினும் 5 ஆண்டுகள் முடியும் முன்னரே சட்டமன்றம் கலைக்கப்படலாம்.
Question 64
கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர் எது?
A
சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அம்மாநில சட்டமன்ற கீழவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 3-ல் 2 பங்குக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
B
ஆனால் மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 50க்கு குறையாமல் இருக்க வேண்டும் (ஜம்மு- காஷ்மீர் தவிர)
C
நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் காஷ்மீர் சட்ட மேலவையில் 36 உறுப்பினர்களே உள்ளனர்.
D
b) மற்றும் c)
Question 64 Explanation: 
விளக்கம்: மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அம்மாநில சட்டமன்ற கீழவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 3-ல் 1-பங்குக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால் மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 40க்கு குறையாமல் இருக்க வேண்டும் (ஜம்மு- காஷ்மீர் தவிர). நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் காஷ்மீர் சட்ட மேலவையில் 36 உறுப்பினர்களே உள்ளனர். சட்ட மேலவை உறுப்பினர்கள் மாநில சட்டமன்றத்தால் அவ்வப்போது நிறைவேற்றப்படும் சட்டங்கள் மூலம் தங்களது ஊதியம் மற்றும் படிகளைப் பெறுகின்றனர்.
Question 65
தமிழக சட்ட மன்றம் எத்தனை உறுப்பினர்களைக் கொண்டது?
A
235
B
234
C
250
D
225
Question 65 Explanation: 
விளக்கம்: ன்றத்தின் அமைப்பு தமிழக சட்டமன்றம் 235 உறுப்பினர்களைக் கொண்டது. இவர்களில் 234 உறுப்பினர்கள் வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆங்கிலோ – இந்தியன் வகுப்பினரில் ஒருவர் ஆளுநரால் நியமனம் செய்யப்படுகிறார். அட்டவணைப்படுத்தப்பட்டோர் (தாழ்த்தப்பட்டோர்) மற்றும் பழங்குடியினருக்கு சட்டமன்றத் தேர்தலில் தனித் தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன.
Question 66
மாநில அரசின் உண்மையான அதிகார மையமாக விளங்குவது எது?
A
அமைச்சரவை
B
சட்டமன்றம்
C
மேலவை
D
கீழவை
Question 66 Explanation: 
விளக்கம்: அமைச்சரவை (Cabinet) என்ற சிறிய அமைப்பானது அமைச்சரவையின் உட்கரு ஆகும். இது காபினெட் அமைச்சர்களை மட்டும் உள்ளடக்கியது. இதுவே மாநில அரசின் உண்மையான அதிகார மையமாக விளங்குகிறது. அமைச்சரவை குழுக்கள் எனப்படும் வெவ்வேறு குழுக்கள் மூலம் காபினெட் செயலாற்றுகிறது. அவற்றில் இரண்டு வகைகள் உள்ளன. அவை: ஒன்று நிரந்தரமானது மற்றொன்று தற்காலிகமானது ஆகும்.
Question 67
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
A
சட்டமன்ற உறுப்பினர்களிடையே சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
B
சபாநாயகர் தனது பதவியை இராஜினாமா (பதவி துறப்பு) செய்தால் சட்டமன்ற உறுப்பினராக தொடரலாம்.
C
சபாநாயகர் எந்நேரத்திலும் இராஜினாமா (பதவி துறப்பு) செய்ய முடியாது.
D
சட்டமன்றம் கலைக்கப்படும்பொழுது சபாநாயகர் தமது பதவியை இழப்பார்
Question 67 Explanation: 
விளக்கம்: சட்டமன்ற உறுப்பினர்களிடையே சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சபாநாயகர் தனது பதவியை இராஜினாமா (பதவி துறப்பு) செய்தால் சட்டமன்ற உறுப்பினராக தொடர முடியாது. சபாநாயகர் எந்நேரத்திலும் இராஜினாமா (பதவி துறப்பு) செய்யலாம். சட்டமன்றம் கலைக்கப்படும் பொழுது சபாநாயகர் தமது பதவியை இழக்க மாட்டார்.
Question 68
சட்டமன்றம் ஒரு தீர்மானத்தின் மூலம் எத்தனை நாட்கள் அறிவிப்பு கொடுத்த பிறகு சபாநாயகரைப் பதவி நீக்கம் செய்யலாம்?
A
7
B
10
C
14
D
15
Question 68 Explanation: 
விளக்கம்: சட்டமன்றம் ஒரு தீர்மானத்தின் மூலம் 14 நாட்கள் அறிவிப்பு கொடுத்த பிறகு சபாநாயகரைப் பதவி நீக்கம் செய்யலாம். அதற்கு முன் சபாநாயகரைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்கும் நேரத்தில் அவைக்கு வந்த பெரும்பாலான உறுப்பினர்கள் வாக்களித்து தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும். சட்டமன்றம் கலைக்கப்படும்பொழுது சபாநாயகர் தமது பதவியை இழக்க மாட்டார். மேலும், புதிய சட்ட மன்றத்தின் முதல் கூட்டம் வரை தனது பதவியைத் தொடர்கிறார். சபாநாயகர் இல்லாதபோது அவரது பணியைத் துணை சபாநாயகர் மேற்கொள்கிறார்.
Question 69
சட்டமன்ற மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு?
A
177
B
174
C
171
D
178
Question 69 Explanation: 
விளக்கம்: மேலவை என்பது மாநில சட்டமன்றத்தின் மேலவையாகும். இது ஒரு நிரந்தர அவையாகும். சட்ட மேலவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை அம்மாநில சட்டமன்ற பேரவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் 3-ல் 1-பங்குக்கு மிகாமலும் குறைந்த பட்ச எண்ணிக்கை 40-க்கு குறையாமலும் இருக்க வேண்டுமென அரசியலமைப்பு சட்டப்பிரிவு 171 (1) கூறுகிறது.
Question 70
இந்தியாவில் எத்தனை  மாநிலங்களில்  சட்டமேலவை உள்ளது?
A
8
B
9
C
11
D
7
Question 70 Explanation: 
விளக்கம்: சட்டமேலவை (விதான் பரிஷத்) இந்திய மாநில சட்டமன்றங்களில் ஓர் அங்கமாக செயல்படுகிறது. இந்தியாவின் 29 மாநிலங்களில் 7 மாநிலங்களில் சட்டமேலவை உள்ளது. ஈரவை சட்டமன்றத்தில் மறைமுகத் தேர்தலால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சட்ட மேலவையில் செயலாற்றுகின்றனர். சட்ட மேலவை ஒரு நிரந்தர அவையாகும். ஏனென்றால், இதனை கலைக்க முடியாது. சட்ட மேலவை உறுப்பினர்களின் பதவி காலம் 6 ஆண்டுகள் ஆகும்.
Question 71
சட்ட மேலவை உருவாக்கம் அல்லது நீக்கம் பற்றி சட்டப்பிரிவு எது?
A
163
B
167
C
169
D
168
Question 71 Explanation: 
விளக்கம்: சட்ட மேலவை உருவாக்கம் அல்லது நீக்கம் பற்றி சட்டப்பிரிவு 169 விவரிக்கிறது. இப்பிரிவின் படி, சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் 2 பங்கு (2/3) உறுப்பினர்கள் வாக்களித்து தீர்மானத்தை நிறைவேற்றி சட்டமேலவையை உருவாக்கவோ அல்லது நீக்கவோ நாடாளுமன்றத்தைக் கேட்டுக் கொண்டால் நாடாளுமன்றம் ஒரு சட்டத்தின் மூலம் மேலவையை உருவாக்கும் அல்லது நீக்கும்.
Question 72
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
A
சட்டமன்றக் கீழவையானது மேலவையைக் காட்டிலும் பண நடவடிக்கைகளில் அதிக அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
B
பண மசோதா கீழவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும்.
C
சட்டமன்றக் கீழவையின் அனுமதியின்றி புதிய வரிகளை விதிக்க முடியும்
D
a) மற்றும் c)
Question 72 Explanation: 
விளக்கம்: சட்டமன்றம் ஈரவைகளைப் பெற்றிருக்கும் பொழுது மேலவையைக் காட்டிலும் சட்டமன்றக் கீழவை அதிக அதிகாரங்களுடன் விளங்குகிறது. சட்டமன்றப் பேரவை மாநில நிதிநிலையை முற்றிலும் கட்டுப்படுத்துகிறது. மேலவை நிதி சார்ந்த நடவடிக்கையில் வாக்களிக்க முடியாது. சட்டமன்றம் நிர்வாகத் துறையைக் கட்டுப்படுத்துகிறது. அமைச்சரவையானது சட்டமன்றத்திற்குப் பொறுப்பானது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும். அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டால் அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவர்.
Question 73
சென்னை உயர் நீதிமன்றம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
A
1862
B
1863
C
1857
D
1864
Question 73 Explanation: 
விளக்கம்: 1862-ல் உயர் நீதிமன்றங்கள் கல்கத்தா, பம்பாய் மற்றும் சென்னையில் தோற்றுவிக்கப்பட்டன. காலப்போக்கில் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒவ்வோர் மாகாணமும் ஓர் உயர் நீதிமன்றத்தைக் கொண்டிருந்தது. 1950-க்குப் பிறகு தோற்றுவிக்கப்பட்ட உயர் நீதிமன்றங்கள் அண்டை மாநிலங்களுக்கும் உயர் நீதிமன்றமாக விளங்கியது. மாநில அளவில் உயர் நீதிமன்றங்களே மிக உயர்ந்த நீதிமன்றங்களாகும். இருப்பினும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் உயர் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.
Question 74
அரசியலமைப்பின் ஏழாவது திருத்தச்சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
A
1956
B
1957
C
1963
D
1966
Question 74 Explanation: 
விளக்கம்: இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் உயர் நீதிமன்றத்தைத் தோற்றுவிக்க வழிவகுக்கிறது. ஆனால் 1956-ஆம் ஆண்டு ஏழாவது திருத்தச்சட்டம், இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களுக்கென்று ஒரு பொதுவான உயர் நீதிமன்றத்தை நிறுவ நாடாளுமன்றத்திற்கு அங்கீகாரம் வழங்கியது.
Question 75
கவுகாத்தியிலுள்ள உயர் நீதிமன்றம் எத்தனை மாநிலங்களுக்கு பொது நீதிமன்றமாக உள்ளது?
A
5
B
3
C
2
D
7
Question 75 Explanation: 
விளக்கம்: பஞ்சாப், ஹரியானா மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகர் ஆகிய பகுதிகளுக்குச் சண்டிகரிலுள்ள உயர் நீதிமன்றம் பொது நீதிமன்றமாக உள்ளது. இதேபோன்று கவுகாத்தியிலுள்ள உயர் நீதிமன்றம் ஏழு வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், மேகாலயா, திரிபுரா மற்றும் அருணாச்சலப்பிரதேசம் போன்றவைகளுக்கு பொது நீதிமன்றமாக உள்ளது. டெல்லி ஒரு மாநிலமாக இல்லாத போதும் தனக்கென்று ஓர் உயர் நீதிமன்றத்தைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நீதிமன்றமும் தலைமை நீதிபதி மற்றும் பல நீதிபதிகளைக் கொண்டுள்ளது.
Question 76
இந்தியாவில் செயல்படும் உயர் நீதிமன்றங்களின் எண்ணிக்கை?
A
26
B
25
C
27
D
23
Question 76 Explanation: 
விளக்கம்: உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை குடியரசுத் தலைவரால் தீர்மானிக்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் 29 மாநிலங்கள் (2019 ஜனவரியில் தோற்றுவிக்கப்பட்டு அமராவதியில் இயங்கும் ஆந்திரப்பிரதேசத்தின் புதிய உயர் நீதிமன்றத்தையும் சேர்த்து) மற்றும் 7 யூனியன் பிரதேசங்களுக்கும் சேர்த்து 25 உயர் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.
Question 77
குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள் எவை?
A
மத்திய அரசிலோ, மாநில அரசிலோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளிலோ ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது.
B
மக்களவை உறுப்பினராவதற்கான தகுதியினைப் பெற்றிருத்தல் வேண்டும்.
C
அவரின் பெயரைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர்க் குழுவிலுள்ள பத்து வாக்காளர்கள் முன்மொழியவும் மேலும் பத்து வாக்காளர்கள் வழிமொழியவும் வேண்டும்.
D
இவை அனைத்தும்.
Question 77 Explanation: 
விளக்கம்: குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கான தகுதிகளை அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ளது. இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். மத்திய அரசிலோ, மாநில அரசிலோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளிலோ ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது. மக்களவை உறுப்பினராவதற்கான தகுதியினைப் பெற்றிருத்தல் வேண்டும். அவரின் பெயரைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர்க் குழுவிலுள்ள பத்து வாக்காளர்கள் முன்மொழியவும் மேலும் பத்து வாக்காளர்கள் வழிமொழியவும் வேண்டும். குடியரசுத் தலைவர் பாரளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்ட மன்ற உறுப்பினராகவோ பதவி வகிக்கக் கூடாது. ஒருவேளை பதவி வகிக்கும் பட்சத்தில் குடியரசுத் தலைவராக அவர் பதவி ஏற்கும் நாளில் அப்பதவி காலியானதாகக் கருதப்படும்.
Question 78
1967 - 1969 வரை குடியரசுத்தலைவராக பதவி வகித்தவர் யார்?
A
ஜாகிர் உசேன்
B
ஆர். வெங்கடராமன்
C
கே.ஆர். நாராயணன்
D
வி.வி. கிரி
Question 78 Explanation: 
விளக்கம்: இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் திரு. ராஜேந்திர பிரசாத் 1950 - 1962 திரு. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1962 - 1967 திரு. ஜாகிர் உசேன் 1967 - 1969 திரு. வி.வி. கிரி 1969 - 1974 திரு. பக்ருதீன் அலி அஹமத் 1974 - 1977 திரு. நீலம் சஞ்சீவி ரெட்டி 1977 - 1982 திரு. கியானி ஜெயில் சிங் 1982 - 1987 திரு. ஆர். வெங்கடராமன் 1987 - 1992 திரு. சங்கர் தயாள் சர்மா 1992 - 1997 திரு. கே.ஆர். நாராயணன் 1997 - 2002 திரு. அ.ப.ஜ. அப்துல் கலாம் 2002 - 2007 திருமதி பிரதீபா பாட்டீல் 2007 - 2012 திரு. பிரனாப் முகர்ஜி 2012 - 2017 திரு. ராம் நாத் கோவிந்த் 2017 முதல்.
Question 79
மத்திய பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதி என்ற அதிகாரத்தை குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ள  சட்டப்பிரிவு?
A
53(2)
B
52
C
54(1)
D
55
Question 79 Explanation: 
விளக்கம்: மத்திய பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதி என்ற அதிகாரத்தைச் சட்டப்பிரிவு 53(2) குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது. அவர் சட்டத்தின்படி இராணுவத்தை வழிநடத்துகிறார். எனவே அவர் பாதுகாப்புப் படையின் தலைமைத்தளபதி என அறியப்படுகிறார். இதன் மூலம் மற்ற நாடுகளின் மீது போர் அறிவிக்கவும், அமைதியை ஏற்படுத்தவும் அவர் அதிகாரம் பெற்றவர் ஆவார்.
Question 80
வெளிநாடுகளுக்கான அனைத்து உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும் யாருடைய  பெயரால்  நடைபெறுகின்றன?
A
பிரதமர்
B
வெளியுறவுத்தத்துறை அமைச்சர்
C
குடியரசுத்தலைவர்
D
துணைக்குடியரசுத்தலைவர்
Question 80 Explanation: 
விளக்கம்: வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்களைக் குடியரசுத் தலைவர் நியமிப்பதோடு மட்டுமல்லாமல் அவர் இந்தியாவுக்கான வெளிநாட்டுத் தூதர்களையும் வரவேற்கிறார். வெளிநாடுகளுக்கான அனைத்து உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும் குடியரசுத் தலைவரின் பெயராலேயே நடைபெறுகின்றன.
Question 81
துணைக்குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள் எவை?
A
30 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
B
மத்திய அரசிலோ, மாநில அரசிலோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளிலோ ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது
C
மக்களவை உறுப்பினராவதற்கான மற்ற தகுதிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.
D
இவை அனைத்தும்.
Question 81 Explanation: 
விளக்கம்: இ ந் தி ய அரசியலமைப்புச் சட்டம் துணைக்குடியரசுத் தலைவருக்கான தகுதிகளை வகுத்துள்ளது. இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். 35 வயது பூர்த்தி அ டைந்தவராக இருத்தல் வேண்டும். மத்திய அரசிலோ, மாநில அரசிலோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளிலோ ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது. மாநிலங்களவை உறுப்பினராவதற்கான மற்ற தகுதிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.
Question 82
குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் பதவிகள் ஒரே சமயத்தில் காலியாக இருக்கும் பட்சத்தில்  குடியரசுத் தலைவரின் பணிகளைச் செயலாற்றுபவர் யார்?
A
பிரதமர்
B
மாநிலங்களவையின் துணைத் தலைவர்
C
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
D
சபா நாயகர்
Question 82 Explanation: 
விளக்கம்: குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் பதவிகள் ஒரே சமயத்தில் காலியாக இருக்கும் பட்சத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குடியரசுத் தலைவரின் பணிகளைச் செயலாற்றுவார். 1969ஆம் ஆண்டு இத்தகைய ஒரு நிகழ்வின் போது உச்சநீதிமன்றதலைமை நீதிபதி M.ஹிதயதுல்லா குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
Question 83
பிரதம அமைச்சரின் கடமைகளைப் பற்றிக் குறிப்பிடும்  அரசியலமைப்பு சட்டப்பிரிவு  எது?
A
78
B
74
C
76
D
80
Question 83 Explanation: 
விளக்கம்: * பிரதம அமைச்சர் அமைச்சர்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு அரசின் பல்வேறு துறைகளை ஒதுக்கீடு செய்கிறார். தான் தலைமை வகிக்கும், அமைச்சரவைக் கூட்டத்தின் தேதி, நிகழ்ச்சி நிரல் (Agenda) குறித்து முடிவு செய்வார். பிரதம அமைச்சரே அமைச்சரவையின் தலைவர் ஆவார். மற்றவர்கள் அரசின் துறைகளைப் பகிர்ந்து கொள்ளும் சக அமைச்சர்கள் ஆவர். கேபினெட் கூட்டம் நடைபெறாத பொழுது பிரதம அமைச்சர் தனது மூத்த சகாக்கள் இருவர் அல்லது மூவரை இயல்பாகக் கலந்தாலோசிக்கலாம். பிரதம அமைச்சர் பல்வேறு துறைகளின் பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
Question 84
சர்வதேச மாநாடுகளில் இந்திய நாட்டின் பிரதிநிதியாகப்பங்கு கொள்பவர் யார்?
A
பிரதமர்
B
வெளியுறவுத்தத்துறை அமைச்சர்
C
குடியரசுத்தலைவர்
D
துணைக்குடியரசுத்தலைவர்
Question 84 Explanation: 
விளக்கம்: * மத்திய அரசின் விவகாரங்கள் மற்றும் சட்டத்திற்கான முன்மொழிவுகள் போன்ற அமைச்சரவையின் அனைத்து முடிவுகளையும் குடியரசுத் தலைவருடன் விவாதிக்கிறார். பிரதம அமைச்சர், குடியரசுத் தலைவருக்கும், அமைச்சரவைக்கும் இடையே பாலமாக செயல்படுகிறார். பிரதம அமைச்சர் நாட்டின் உண்மையான தலைவராவார். அவர் நாட்டின் முக்கிய செய்தித் தொடர்பாளராகவும் செயல்படுகிறார். சர்வதேச மாநாடுகளான காமன்வெல்த், அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு, சார்க் நாடுகளின் மாநாடு ஆகியவற்றில் இந்திய நாட்டின் பிரதிநிதியாகப் பிரதமர் பங்கு கொள்கிறார்.
Question 85
கீழ்க்கண்டவற்றுள் இந்திய நாடாளுமன்றத்தின் பகுதிகள் எவை?
A
மாநிலங்களவை
B
மக்களவை
C
குடியரசுத்தலைவர்
D
இவை அனைத்தும்
Question 85 Explanation: 
விளக்கம்: மத்திய அரசின் சட்டம் இயற்றும் அங்கமாக நாடாளுமன்றம் திகழ்கிறது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி V இல் 79 முதல் 122 வரை உள்ள சட்டப்பிரிவுகள், இந்திய நாடாளுமன்ற அமைப்பு, உள்ளடக்கம், ஆயுட் காலம், அலுவலர்கள், செயல்முறைகள், சிறப்புச் சலுகைகள், அதிகாரங்கள் பற்றி குறிப்பிடுகிறது. இந்திய நாடாளுமன்றம் மூன்று பகுதிகளைக் கொண்டது. அவைகள் குடியரசுத் தலைவர் ராஜ்ய சபா (மாநிலங்களவை) லோக்சபா (மக்களவை). நாடாளுமன்றமானது மாநிலங்களவை என்னும் மேலவையையும் மக்களவை என்னும் கீழவையையும் கொண்டுள்ளதால் இது ஈரவை சட்டமன்றம் என்றும் அழைக்கப்படுகிறது.
Question 86
கீழ்க்கண்டவற்றுள் மக்களவை உறுப்பினராவதற்கான தகுதிகள் எவை?
A
30 வயதிற்கு குறைவுடையவராய் இருத்தல் கூடாது.
B
அவரது பெயர் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருத்தல் வேண்டும் என்ற அவசியம் இல்லை.
C
மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது.
D
இவை அனைத்தும்.
Question 86 Explanation: 
விளக்கம்: மக்களவை உறுப்பினராவதற்கான தகுதிகள்: இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். 25 வயதிற்கு குறைவுடையவராய் இருத்தல் கூடாது. அவரது பெயர் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருத்தல் வேண்டும். மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது. மனநிலை சரியில்லாதவராகவோ அல்லது பெற்ற கடனை திருப்பி செலுத்த இயலாதவராகவோ இருத்தல் கூடாது.
Question 87
கீழ்க்கண்டவற்றுள் மக்களவையின் செயல்பாடுகள் எவை?
A
அனைத்து மசோதாக்களையும் மக்களவையில் அறிமுகப்படுத்தவும், நிறைவேற்றவும் முடியும் (நிதி மசோதா உள்பட).
B
குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் போன்றவர்களின் பதவி நீக்க விவகாரங்களில் பங்கேற்க மாநிலங்களவையைப் போலவே மக்களவையும் அதிகாரம் பெற்றுள்ளது.
C
அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்திற்கான எந்தவொரு மசோதாவை நிறைவேற்றுவதிலும் மாநிலங்களவையைப் போலவே மக்களவையும் சமமான அதிகாரம் பெற்றுள்ளது.
D
இவை அனைத்தும்.
Question 87 Explanation: 
விளக்கம்: மக்களவை உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்றுள்ளனர். நம்பிக்கையில்லாத் தீர்மானம் லோக்சபாவில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும். இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பிரதம அமைச்சர் உட்பட மற்ற அமைச்சர்களும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும்.
Question 88
தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை?
A
39
B
18
C
17
D
38
Question 88 Explanation: 
விளக்கம்: தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள். மாநிலங்களவை - 18 உறுப்பினர்கள் மக்களவை - 39 உறுப்பினர்கள்
Question 89
சபாநாயகரை பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்க.
A
ஒரு மசோதாவை நிதி மசோதாவா அல்லது சாதாரண மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்.
B
பண மசோதாவை தீர்மானிப்பதில் பிரதமருக்கு அடுத்த இடத்தை வகிக்கிறார்.
C
சபாநாயகர் பதவி காலியாக இருக்கும் போதும் அல்லது வருகை புரியாத போதும் மாநிலங்களவை தலைவர் மக்களவைக்குத் தலைமை வகிப்பார்.
D
இவை அனைத்தும்.
Question 89 Explanation: 
விளக்கம்: நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்திற்குத் தலைமை வகிப்பார். அவர் ஒரு மசோதாவை நிதி மசோதாவா அல்லது சாதாரண மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றுள்ளார். பண மசோதாவை தீர்மானிப்பதில் இவருடைய முடிவே இறுதியானது ஆகும். 1985ஆம் ஆண்டு கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி இந்திய அரசியலமைப்புச் சட்டம் 10வது அட்டவணை அடிப்படையில் ஒரு உறுப்பினர் மக்களவை உறுப்பினர் ஆக தகுதி பெற்றவரா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு. சபாநாயகர் பதவி காலியாக இருக்கும் போதும் அல்லது வருகை புரியாத போதும் துணை சபாநாயகர் மக்களவைக்குத் தலைமை வகிப்பார்.
Question 90
நாடாளுமன்ற மழைக் (பருவ) காலக் கூட்டத் தொடர் நடைபெறும் காலம்?
A
செப்டம்பர் - நவம்பர்
B
அக்டோபர் - நவம்பர்
C
ஜூன் - அக்டோபர்
D
ஜூலை - செப்டம்பர்
Question 90 Explanation: 
விளக்கம்: நாடாளுமன்றக் கூட்டத் தொடர் பட்ஜெட் கூட்டத் தொடர்: பிப்ரவரி முதல் மே வரை மழைக் (பருவ) காலக் கூட்டத் தொடர் : ஜூலை முதல் செப்டம்பர் வரை குளிர் காலக் கூட்டத் தொடர்: நவம்பர் மற்றும் டிசம்பர்.
Question 91
நிதி மசோதாவைப்பற்றிய கூற்றுகளில் சரியானவற்றை தேர்க.
A
நிதி மசோதாவினை திருத்தம் செய்யவோ அல்லது நிராகரிக்கவோ மாநிலங்களவைக்கு அதிகாரம் இல்லை.
B
மக்களவையில் மட்டுமே நிதி மசோதாவினை அறிமுகப்படுத்த முடியும்.
C
இம்மசோதா மாநிலங்களவையின் ஒப்புதலுடன் சட்டமாக மாறும்.
D
இவை அனைத்தும்.
Question 91 Explanation: 
விளக்கம்: நிதி மசோதாவினை திருத்தம் செய்யவோ அல்லது நிராகரிக்கவோ மாநிலங்களவைக்கு அதிகாரம் இல்லை. மக்களவையில் மட்டுமே நிதி மசோதாவினை அறிமுகப்படுத்த முடியும். இம்மசோதா மாநிலங்களவையின் ஒப்புதலுடன் சட்டமாக மாறும். மாநிலங்களவை 14 நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்கவில்லையெனில், ஒப்புதல் பெறாமலேயே சட்டமாகிவிடும். மாநிலங்களவையின் சட்டத் திருத்தத்திற்கான முன்மொழிவுகளை மக்களவை கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. எந்த முன்மொழிவுகளையும் மக்களவை நிராகரிக்கலாம்.
Question 92
பின்வருபவர்களுள் நாட்டின் உயர்ந்த சட்ட அதிகாரி யார்?
A
குடியரசுத்தலைவர்
B
இந்திய அரசு தலைமை வழக்குரைஞர்
C
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
D
சட்ட வரைவுக்குழு
Question 92 Explanation: 
விளக்கம்: இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 76 இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரை நியமிக்க வழிவகை செய்கிறது. இவர் நாட்டின் உயர்ந்த சட்ட அதிகாரி ஆவார். இவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். உச்ச நீதிமன்ற நீதிபதியாகத் தேவையான தகுதிகளை இவரும் கொண்டிருக்க வேண்டும். இவர் இந்தியக் குடிமகனாய் இருத்தல் வேண்டும். அவர் ஏதாவது ஒரு உயர் நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டுகள் நீதிபதியாகவோ (அல்லது) உயர் நீதிமன்றத்தில் பத்து ஆண்டுகள் வழக்குரைஞராகவோ அல்லது குடியரசுத் தலைவரின் பார்வையில் மேம்பட்ட சட்ட வல்லுநராகவோ இருத்தல் வேண்டும். குடியரசுத் தலைவர் விரும்பும் வரை இவர் பதவியில் நீடிக்கலாம். எந்த நேரத்திலும் குடியரசுத் தலைவரால் அவர் பதவியிலிருந்து அகற்றப்படலாம். அல்லது அவர் குடியரசுத் தலைவருக்குப் பதவி விலகல் கடிதத்தை அளித்து பதவி விலகலாம்.
Question 93
தற்சமயம் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை?
A
8
B
28
C
24
D
25
Question 93 Explanation: 
விளக்கம்: 1950ஆம் ஆண்டு அரசியலமைப்பின் தொடக்கத்தில் ஒரு தலைமை நீதிபதி உட்பட 8 நீதிபதிகளை உச்ச நீதிமன்றம் கொண்டிருந்தது. தற்சமயம் உச்ச நீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதி உட்பட 28 நீதிபதிகளைக் கொண்டுள்ளது. இந்திய உச்ச நீதிமன்றதலைமை நீதிபதியைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். மற்ற நீதிபதிகளைத் தலைமை நீதிபதியைத் தலைவராகக் கொண்ட மூத்த நீதிபதிகள் குழுவின் (Collegiums) ஆலோசனையுடன் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
Question 94
கீழ்க்கண்டவற்றுள் உச்சநீதிமன்ற நீதிபதிக்கான தகுதிகள் எவை?
A
அவர் இந்தியக் குடிமகனாய் இருத்தல் வேண்டும். (அல்லது) அவர் ஐந்து ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்திருத்தல் வேண்டும்.
B
அவர் பத்து ஆண்டுகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக செயலாற்றியிருத்தல் வேண்டும்.
C
குடியரசுத் தலைவர் பார்வையில் சிறப்பு மிக்க சட்ட வல்லுநராய் இருத்தல் வேண்டும்.
D
இவை அனைத்தும்
Question 94 Explanation: 
விளக்கம்: தற்காலிக அடிப்படையில் (ad-hoc basis) உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க அரசியலமைப்புச்சட்டம் வழிவகை செய்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட இதர நீதிபதிகள் 65 வயது வரை பதவியில் நீடிப்பர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாக குடியரசுத் தலைவரிடம் பதவி விலகல் கடிதத்தை அளித்து பதவி விலகலாம் அல்லது பெருங்குற்றத்தின் மூலம் உண்டான கண்டனத் தீர்மானத்தின் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரத்தினை நாடாளுமன்றம் பெற்றுள்ளது.
Question 95
கீழ்க்கண்டவற்றுள் உச்ச நீதி மன்றத்தின் அதிகாரங்கள் எவை?
A
உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்த முடியாது.
B
குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நீதிமன்றத்தின் பொதுவான செயல்முறைகள், வழிமுறைகளை ஒழுங்குபடுத்தும் விதிகளை உருவாக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
C
உச்ச நீதிமன்றம் தனது பணி அமைப்பின் மீதான முழுக் கட்டுப்பாட்டினையும் கொண்டுள்ளது.
D
இவை அனைத்தும்.
Question 95 Explanation: 
விளக்கம்: உச்ச நீதிமன்றம் கீழ்க்காணும் இதர அதிகாரங்களைப் பெற்றுள்ளது. உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று நீதிமன்றத்தின் பொதுவான செயல்முறைகள், வழிமுறைகளை ஒழுங்குபடுத்தும் விதிகளை உருவாக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் தனது பணி அமைப்பின் மீதான முழுக் கட்டுப்பாட்டினையும் கொண்டுள்ளது.
Question 96
கீழ்க்கண்டவற்றுள் உச்ச நீதி மன்றத்தின் மாரு ஆய்வு அதிகாரங்கள் எவை?
A
மத்திய, மாநிலங்களுக்கிடையிலான பிரச்சனைகள்.
B
அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்படும் சந்தேகங்கள், கருத்து வேற்றுமைகளை விளக்கி தெளிவுபடுத்துதல்.
C
அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல்.
D
இவை அனைத்தும்
Question 96 Explanation: 
விளக்கம்: ஒரு சட்டத்தினை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திடம் உள்ளது இது நீதிப்புனராய்வு (நீதிமன்ற மறுஆய்வு அதிகாரம்) எனப்படும். பின்வரும் தனிப்பட்ட நீதிமன்ற மறுஆய்வு அதிகாரங்களை உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது. அவை மத்திய, மாநிலங்களுக்கிடையிலான பிரச்சனைகள். அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்படும் சந்தேகங்கள், கருத்து வேற்றுமைகளை விளக்கி தெளிவுபடுத்துதல். அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல். மாநில சட்டமன்றங்கள் இயற்றும் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும் அதிகாரம் போன்றவைகளை உச்ச நீதிமன்றம் பெற்றுள்ளது.
Question 97
மக்களவைக்கு அதிகபட்சமாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை?
A
530
B
552
C
545
D
575
Question 97 Explanation: 
விளக்கம்: மக்களவையானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத்தின் புகழ்மிக்க அவை ஆகும். மக்களவைக்கு அதிகபட்சமாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் 552 அவற்றில் 530 உறுப்பினர்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், 13 உறுப்பினர்கள் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆங்கிலோ-இந்தியன் சமூகத்திலிருந்து 2 உறுப்பினர்களைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். தற்சமயம் மக்களவை 545 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
Question 98
மாநிலங்களவையின் தலைவராக செயல்படுபவர் யார்?
A
துணைக் குடியரசுத் தலைவர்
B
குடியரசு தலைவர்
C
சபா நாயகர்
D
பிரதமர்
Question 98 Explanation: 
விளக்கம்: மாநிலங்களவை ஒரு நிரந்தர அவை ஆகும். அதனைக் கலைக்க முடியாது. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறுகின்றனர். அதனால் ஏற்படும் காலியிடங்கள் புதிய உறுப்பினர்களால் நிரப்பப்படுகின்றன. துணைக் குடியரசுத் தலைவர் பதவி வழி மாநிலங்களவையின் தலைவராகச் செயல்படுகிறார். மாநிலங்களவையின் துணைத் தலைவர் அதன் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
Question 99
அடிப்படை உரிமைகளுக்காக மட்டுமின்றி மற்ற நோக்கங்களுக்காகவும் பேராணைகளை வெளியிடும் அதிகாரங்களை உயர் நீதிமன்றங்களுக்கு வழங்கும் சட்டப்பிரிவு?
A
216
B
226
C
224
D
214
Question 99 Explanation: 
விளக்கம்: இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 226, அடிப்படை உரிமைகளுக்காக மட்டுமின்றி மற்ற நோக்கங்களுக்காகவும் பேராணைகளை வெளியிடும் அதிகாரங்களை உயர் நீதிமன்றங்களுக்கு வழங்குகிறது. சட்டப்பிரிவு 32-ன் கீழ் உச்ச நீதிமன்றம் வழங்கும் நீதிப்பேராணைகள், ஆணைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் போன்றே உயர் நீதிமன்றமும் அவைகளை வழங்க அதிகாரம் பெற்றுள்ளது.
Question 100
கீழ்க்கண்டவற்றுள் தேசிய  அவசர நிலை அறிவிக்கப்பட்ட ஆண்டு அல்லாதது?
A
1962
B
1971
C
1975
D
1972
Question 100 Explanation: 
விளக்கம்: போர், வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பு, அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சி அல்லது உடனடி ஆபத்து அல்லது அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், குடியரசுத் தலைவர், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 352ன் கீழ் அவசரநிலையை அறிவிக்கலாம். போர் அல்லது வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பின் காரணமாக அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது அது ‘வெளிப்புற அவசரநிலை’ எனப்படுகிறது. ஆயுதமேந்திய கிளர்ச்சிக் காரணமாக அவசர நிலை அறிவிக்கப்படும்பொழுது அது 'உள்நாட்டு அவசர நிலை' எனப்படுகிறது. இந்த வகையான அவசரநிலைகள் 1962, 1971, 1975 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டன.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!