Online Test

Economics Part 3 Revision Test in Tamil

Economics Part 3 Revision Test in Tamil

Congratulations - you have completed Economics Part 3 Revision Test in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பொருளியல் வருவாய் ஈட்டும் துறைகள் எத்தனை வகைப்படும்?
A
நான்கு
B
ஐந்து
C
மூன்று
D
இரண்டு
Question 1 Explanation: 
விளக்கம்: முதன்மைத் துறை அல்லது விவசாயத்துறை, இரண்டாம் துறை அல்லது தொழில் துறை, மூன்றாம் துறை சார்புத் துறை அல்லது சேவைத்துறை என மூன்று வகைப்படும்.
Question 2
கீழ்க்கண்டவற்றுள் ஒழுங்கமைக்கப்பட்டத் துறையின் சிறப்பியல்புகள் எவை?
A
செய்யப்பட்டது
B
அரசாங்க விதிகளையும் ஒழுங்குமுறைகளையும் பின்பற்றுவது
C
ஊழியர்களையும் ஊழியர் சங்கங்களையும் கொண்டுள்ளது
D
இவை அனைத்தும்
Question 2 Explanation: 
விளக்கம்: இந்தியாவில் வங்கிகள், ரயில்வே, காப்பீடு, உற்பத்தித் உற்பத்தி தொழிற்சாலைகள், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களைக் கொண்டு செயல் படும் துறைகள் ஒழுங்கமைக்கப்பட்டத் துறைகள் என்று கூறலாம். இந்தத் துறைகள், சட்டத்திலுள்ள குறிப்பிட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் படி செயல்படுகிறது. இந்த ஊழியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு உண்டு என்பதோடு அமைப்பு ரீதியாக ஒழுங்கமைக்கப்படாத துறையில் இருப்பவரைக் காட்டிலும் அதிக ஊதியம் பெறுகின்றனர். ஒழுங்கமைக்கப்பட்டத் துறையில் நல்ல ஊதியம், நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம், ஊதியத்துடன் கூடிய விடுமுறை, மருத்துவ உதவித்தொகை மற்றும் காப்பீடு போன்றவை வழங்கப்படும்.
Question 3
கீழ்க்கண்டவற்றுள் ஒழுங்கமைக்கப்படாத துறைகளை பற்றிய சரியான கூற்றினை தேர்ந்தெடு.
A
அமைப்பு ரீதியாக ஒழுங்கமைக்கப்படாத துறைகள் என்பது வீட்டு உபயோகப்பொருள்கள், சிறு மற்றும் குடிசைத் தொழில்கள் போன்றவற்றைக் கூறலாம்.
B
இதற்கு விதிகளும் ஒழுங்குமுறைகளும் உண்டு.
C
இவற்றில் வேலை செய்வோருக்குக் அதிக கூலி கொடுக்கப்படுவதோடு பல நேரங்களில் தொடர்ச்சியாக வேலையும் இருக்கும்.
D
a) மற்றும் b)
Question 3 Explanation: 
விளக்கம்: இதற்கு விதிகளும் ஒழுங்குமுறைகளும் இருந்தாலும் அவை பின்பற்றப்படுவதில்லை. இவற்றில் வேலை செய்வோருக்குக் குறைந்த கூலி கொடுக்கப்படுவதோடு பல நேரங்களில் தொடர்ச்சியாக வேலையும் இருக்காது, பெரும்பாலும் அவர்களுக்குக் ஊதியத்துடன் விடுப்பு, விடுமுறை நாட்கள், மருத்துவ விடுப்பு போன்றவை இருக்காது. வேலை உத்தரவாதம் கிடையாது. வேலையில்லாத போது அவர்கள் தொழில் கூடங்களிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள். தெருக்களில் விற்பனை செய்வோர், பழுதுகள் சரி பார்ப்போர், சிறிய அளவிலான தொழில் செய்வதில் ஈடுபட்டுள்ள ஏராளமான எண்ணிக்கையிலான மக்களை இந்தத் துறை உள்ளடக்கியுள்ளது. அமைப்பு ரீதியாக ஒழுங்கமைக்கப்படாத துறையில் வேலைவாய்ப்பு வரையறைகள் நிலையானதாக, ஒழுங்குபடுத்தப்பட்டதாக இல்லை. தொழிலாளர்களுக்குச் சிறப்பு ஆதாயங்களோ வேலை நிரந்தரமோ கிடையாது. இந்த நிறுவனங்கள் அரசாங்கத்தில் பதிவு பெற்றவைகள் அல்ல.
Question 4
கீழ்க்கண்டவற்றுள் தற்கால வேலைவாய்ப்பின்  போக்குகள் எவை?
A
அதிகரித்துவரும் சுய-வேலைவாய்ப்பு
B
நிறுவனங்கள் ஒரு சில நிரந்தர ஊழியர்களையே பயன்படுத்துதல் மற்றும் குறுகிய கால ஒப்பந்தப் பணிகளைத் தருவதும் ஆகும்.
C
பகுதி நேர வேலைவாய்ப்பில் ஒரு வளர்ச்சி இருந்து வருகிறது. மக்களின் வாழ்க்கை முறையே இதற்குக் காரணமாக இருக்கலாம்.
D
இவை அனைத்தும்.
Question 4 Explanation: 
விளக்கம்: சமீப ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அமைப்பில் ஒரு மாறுதல் ஏற்பட்டுள்ளதோடு இது பணியமர்த்துவோர், அவர்களின் ஊழியர்களிடையே அதிக நெகிழ்ச்சியோடு பணிபுரியும் பாணியை வளர்த்தெடுக்க உதவியது. தற்கால வேலைவாய்ப்பு போக்குகள் அதிகரித்துவரும் சுய-வேலைவாய்ப்பு நிறுவனங்கள் ஒரு சில நிரந்தர ஊழியர்களையே பயன்படுத்துதல் மற்றும் குறுகிய கால ஒப்பந்தப் பணிகளைத் தருவதும் ஆகும். பகுதி நேர வேலைவாய்ப்பில் ஒரு வளர்ச்சி இருந்து வருகிறது. மக்களின் வாழ்க்கை முறையே இதற்குக் காரணமாக இருக்கலாம்.
Question 5
2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் விவசாயிகளின் எண்ணிக்கை?
A
49.3 %
B
42.1%
C
45.6%
D
43.1%
Question 5 Explanation: 
விளக்கம்: இந்தியா விடுதலை பெற்றபோதும் அதன் பின் நாற்பது ஆண்டு காலம் வரையும் தமிழக மக்களில் பெரும்பான்மையினோர் வேளாண் தொழிலையே நம்பியிருந்தனர். அந்த நிலை சமீப காலங்களில் மாறி வருகிறது. 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் விவசாயிகளின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டு காலத்தில் குறைந்தது தெரியவந்துள்ளது. அதேபோல், விவசாய தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. 2001ஆம் ஆண்டில் மொத்த தொழிலாளர்களில் 49.3 விழுக்காட்டினர் வேளாண்துறையில் இருந்தனர். பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த அளவு 42.1 விழுக்காடு என குறைந்தது. 2011ஆம் ஆண்டு தமிழகத்தில் மொத்தமாக மூன்று கோடியே 29லட்சம் தொழிலாளர்கள் இருந்தனர். அவர்களுள் 96 லட்சம் பேர் விவசாயத் தொழிலாளர்கள் ஆவர்.
Question 6
ஒரு ஹெக்டேருக்கும் குறைவான பரப்பில் சாகுபடி செய்யும் விவசாயிகள்?
A
சிறு விவசாயிகள்
B
பெரு விவசாயிகள்
C
குறு விவசாயிகள்
D
a) மற்றும் c)
Question 6 Explanation: 
விளக்கம்: தமிழகத்தின் பெரும்பாலான விவசாயிகள் குறுவிவசாயிகள் ஆவர் (ஒரு ஹெக்டேருக்கும் குறைவான பரப்பில் சாகுபடி செய்வோர்). மொத்த விவசாயிகளின் எண்ணிக்கையில் குறுவிவசாயிகள் 78 விழுக்காடு உள்ளனர். ஆனால் அவர்கள் சாகுபடி செய்யும் நிலத்தின் பரப்பளவு மொத்தச் சாகுபடி பரப்பளவில் 36 விழுக்காடு மட்டுமே ஆகும்.
Question 7
மொத்த விவசாயிகளின் எண்ணிக்கையில் சிறுவிவசாயிகள் எத்தனை விழுக்காடு உள்ளனர்?
A
14 விழுக்காடு
B
36 விழுக்காடு
C
28 விழுக்காடு
D
96 விழுக்காடு
Question 7 Explanation: 
விளக்கம்: சிறுவிவசாயிகள் (1-2 ஹெக்டேர் சாகுபடி செய்வோர்) 14 விழுக்காடு உள்ளனர். அவர்கள் விவசாயம் செய்யும் பரப்பளவு 26 விழுக்காடு ஆகும். தமிழகத்தில் விவசாயம் செய்பவர்களில் பத்தில் ஒருவர் மட்டுமே பட்டியலினத்தவர். அவர்களில் 96 விழுக்காட்டினர் சிறு, குறு விவசாயிகள் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலுமே சாகுபடி செய்யப்படும் நிலத்தின் பரப்பளவு சுருங்கிக் கொண்டே வருகிறது. குறு விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தமிழகத்தில் நேர்மாறாக, இவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மக்கள் வேளாண் தொழிலைவிட்டு விலகுவதையே இது சுட்டுகிறது.
Question 8
தமிழ்நாட்டில் பயிர் செய்யப் பயன்படுத்தப்படும் நிலத்தின் பரப்பு?
A
1/3
B
2/3
C
1/4
D
2/5
Question 8 Explanation: 
விளக்கம்: தமிழகத்தின் மொத்தப் புவியியல் பரப்பு ஒரு கோடியே முப்பது லட்சத்து முப்பத்து மூன்றாயிரம் ஹெக்டேர்கள் ஆகும். இப்பரப்பில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பு மட்டுமே பயிர் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. (45,44,000 ஹெக்டேர்).
Question 9
வேளாண் அல்லாத பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் நிலத்தின் பரப்பு?
A
19 விழுக்காடு
B
14 விழுக்காடு
C
11 விழுக்காடு
D
17 விழுக்காடு
Question 9 Explanation: 
விளக்கம்: வேளாண் அல்லாத பயன்பாட்டுக்கு 17 விழுக்காடு நிலம் பயன்படுத்தப்படுகிறது. ஏறத்தாழ இதே அளவு நிலம் (2,125 ஆயிரம் ஹெக்டேர்கள்) காடுகளாக உள்ளன. மொத்த நிலப்பரப்பில் சற்றேறக் குறைய 4 விழுக்காடு நிலங்கள் பயன்படுத்த முடியாதவை. தற்போதைக்குத் தரிசாகக் கிடக்கும் நிலத்தின் அளவு பத்தில் ஒரு பகுதியாகும். மற்ற தரிசு நிலங்கள் 13 விழுக்காடு ஆகும். ஆக, நான்கில் ஒரு பகுதி நிலம் தரிசாக விடப்பட்டுள்ளது. தரிசாக போடப்படும் நிலம் கூடுதலாகி வருவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவையன்றி, மேய்ச்சல் நிலங்கள், மரங்கள் வளர்க்கப்படும் நிலங்கள் ஆகியவை மொத்த நிலப்பரப்பில் 5 விழுக்காடுக்கும் சற்றே கூடுதலாக உள்ளன.
Question 10
தமிழகத்தில் நிகரமாக பயிர் செய்யப்படும் பரப்பளவு?
A
45,44,000 ஹெக்டேர்கள்
B
42,40,000 ஹெக்டேர்கள்
C
35,34,000 ஹெக்டேர்கள்
D
48,42,000 ஹெக்டேர்கள்
Question 10 Explanation: 
விளக்கம்: தமிழகத்தில் நிகரமாக பயிர் செய்யப்படும் பரப்பளவு 45,44,000 ஹெக்டேர்கள் ஆகும். இப்பரப்பு ஆண்டுக்கு ஆண்டு மாறும். மழைப்பொழிவு காலத்தில் போதுமான அளவு மழை இருந்தால் இப்பரப்பு கூடும். மழைபொய்த்தாலோ, குறைந்தாலோ இப்பரப்பு குறையும். இப்பரப்பில் ஒரு சிறு பகுதி மட்டும் ஒர் ஆண்டில் ஒரு முறைக்கு மேல் பயிர் செய்யும் வாய்ப்பை வழங்கும். இப்பரப்பும் நீர் வசதிக்குத் தகுந்தவாறு ஆண்டுதோறும் மாறும். இப்பரப்பு 9 இலட்சம் ஹெக்டேர்களாக இருந்தது. அடுத்த ஆண்டு மழையின்மையின் காரணமாக 6 இலட்சம் ஹெக்டேர்களாகக் குறைந்து போனது. நிலையானதும் நம்பகமானதுமான நீராதாரம் இருந்தால் மட்டுமே இப்பரப்பு ஓரளவுக்கு நிலைத்திருக்கும்.
Question 11
நுகர்வோருக்கும் மற்ற உற்பத்தியாளர்களுக்கும் தேவைப்படும் பொருட்களை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பெருமளவில் உற்பத்திச் செய்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
தொழிற்சாலை
B
தொழில்மயமாதல்
C
தொழில் தொகுப்பு
D
உற்பத்தித்திறன்
Question 11 Explanation: 
விளக்கம்: நுகர்வோருக்கும் மற்ற உற்பத்தியாளர்களுக்கும் தேவைப்படும் பொருட்களை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பெருமளவில் உற்பத்திச் செய்வது தொழில்மயமாதல் எனப்படும். தொலைபேசிகள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற நுகர்வுப் பொருட்கள் நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்திச் செய்கின்ற அதே வேளையில் தொழிற்சாலைகள் உற்பத்தியாளர்களுக்குத் தேவையான உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் இயந்திர உதிரிபாகங்கள் போன்றவற்றை உற்பத்திச் செய்கின்றன.
Question 12
மூலப்பொருட்களை எளிதில் பயன்படுத்தக் கூடிய பொருட்களாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு மனித நடவடிக்கையும் எவ்வாறு அழைக்கப்படும்?
A
தொழிற்சாலை
B
தொழில்மயமாதல்
C
தொழில் தொகுப்பு
D
உற்பத்தித்திறன்
Question 12 Explanation: 
விளக்கம்: பொதுவாக மூலப்பொருட்களை எளிதில் பயன்படுத்தக் கூடிய பொருட்களாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு மனித நடவடிக்கையையும் நிறைவேற்றுமிடம் “தொழிற்சாலை” என்று அழைக்கப்படுகிறது.
Question 13
வேளாண்மையின் வளர்ச்சியுடன் அதன் பொருளாதார வருவாய் மற்றும் வேலை வாய்ப்பு குறைவதற்கான காரணங்கள் எவை?
A
உணவுத் தேவையுடன் வருமானத் தேவையும் நிலையானதாக உள்ளது.
B
நுகரப்படும் உணவும் பொருளாதார விரிவால் பல மாற்றங்களுக்கு உட்படுகிறது.
C
நிலத்தின் இறுதிநிலை உற்பத்தித்திறன் குறைந்து கொண்டே வருவதால் வேளாண் பணிகளுக்கு தொழிலாளர்களை ஈர்த்துக்கொள்வதில் ஆட்களை ஏற்பதில் சில வரையறைகள் பின்பற்ற நேரிடுகிறது.
D
இவை அனைத்தும்
Question 13 Explanation: 
விளக்கம்: ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வருமானம் அதிகரிக்கும் பொழுது நுகர்வோர் வேளாண்மை உற்பத்திப் பொருட்களுக்கு தங்கள் வருமானத்தில் ஒரு சிறு பகுதியை மட்டும் செலவிடுகிறார்கள்.பல வட்டாரங்களுக்கிடையேயும் மக்களுக்கிடையேயும் வேளாண் தொழிலில் அதிக வேலைப்பகுப்பு முறை காணப்படுகிறது. உணவுப் பொருட்கள் நீண்ட தூரத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுப் பதப்படுத்தி முத்திரையிடப்படுகிறது. இதன் விளைவாக நுகர்வோர்கள் வாங்கும் விலையைவிட விவசாயிகள் பெறும் விலை குறைவாக உள்ளது.
Question 14
நவீன உற்பத்தி முறைகளை பயன்படுத்துவதன் பயன்கள் யாவை?
A
தொழில்கள் சிறந்த உற்பத்தித்திறனை அளிக்கின்றன.
B
இதனால் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பண்டங்களின் உற்பத்தி செலவும் குறைகிறது.
C
மலிவான விலையில் பண்டங்களை வாங்கிட உதவவும் மற்றும் அதிகளவு உற்பத்தித் தேவையை உருவாக்கவும் உதவுகிறது.
D
இவை அனைத்தும்
Question 14 Explanation: 
விளக்கம்: நவீன உற்பத்தி முறைகளை பயன்படுத்துவதன் மூலம் தொழில்கள் சிறந்த உற்பத்தித்திறனை அளிக்கின்றன. இதனால் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பண்டங்களின் உற்பத்தி செலவும் குறைகிறது. இதன் காரணமாக மலிவான விலையில் பண்டங்களை வாங்கிட உதவவும் மற்றும் அதிகளவு உற்பத்தித் தேவையை உருவாக்கவும் உதவுகிறது.
Question 15
கீழ்க்கண்டவற்றுள் தொழிற்சாலைகளின் உற்பத்தியைச் சார்ந்த பணிகள் எது?
A
வங்கி
B
போக்குவரத்து
C
வர்த்தகம்
D
இவை அனைத்தும்
Question 15 Explanation: 
விளக்கம்: உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் பண்டங்கள் ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு சந்தை நிலவுகிறது. அதே போல் வங்கி, போக்குவரத்து மற்றும் வர்த்தகம் போன்ற பணிகள் தொழிற்சாலைகளின் உற்பத்தியைச் சார்ந்தே உள்ளது.
Question 16
கீழ்க்கண்டவற்றுள் "தொழில் மயமாதலின்" ஒரு முக்கிய நோக்கம் எது?
A
வேலை வாய்ப்பு
B
வர்த்தகம்
C
வேளாண்மை
D
இவை அனைத்தும்
Question 16 Explanation: 
விளக்கம்: பண்டங்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் தொழில்மயமாதல் வேளாண்மையில் ஈடுபடும் அதிக உழைப்பாளர் சக்தியை ஈர்க்க உதவுகிறது. எனவே வேலைவாய்ப்பை உருவாக்குவது "தொழில் மயமாதலின் " ஒரு முக்கிய நோக்கமாகும். தொழில்மயமாதலுக்கு நன்மை தருவது "தொழில்நுட்ப மாற்றமே" ஆகும். நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தொழில்மயமாதலின் முறைகளையும் அதன் வளர்ச்சியையும் அறிந்து கொள்ள முடிகிறது. அவற்றின் விளைவாக உழைப்பாளர்களின் உற்பத்தித்திறன் அதாவது, உழைப்பாளரின் உள்ளீடு அதிகரித்தது. இதனால் தொழிலாளர்கள் அதிக வருமானம் ஈட்ட உதவுகிறது.
Question 17
தொழில்மயமாதலால்  ஒரு நாட்டின்  பொருளாதார வளர்ச்சியில் ஏற்படுத்தும் மாற்றங்கள்?
A
வருமானம் அதிகரிப்பதன் மூலம் பண்டங்கள் மற்றும் பணிகளின் தேவைக்கு வழி வகுக்கிறது.
B
உற்பத்தியாளர்களுக்குத் தேவையான உள்ளீடுகளை உருவாக்குகிறது.
C
நவீன உற்பத்தி முறைகளை பயன்படுத்துவதன் மூலம் தொழில்கள் சிறந்த உற்பத்தித்திறனை அளிக்கின்றன.
D
இவை அனைத்தும்.
Question 17 Explanation: 
விளக்கம்: வேளாண் உற்பத்தித்திறன் அதிகரிக்க உரங்கள் மற்றும் டிராக்டர்கள் போன்ற தொழில்களுக்கு உள்ளீடுகள் தேவைப்படுகிறது. மலிவான விலையில் பண்டங்களை வாங்கிட உதவவும் மற்றும் அதிகளவு உற்பத்தித் தேவையை உருவாக்கவும் உதவுகிறது. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தொழில்மயமாதலின் முறைகளையும் அதன் வளர்ச்சியையும் அறிந்து கொள்ள முடிகிறது. அவற்றின் விளைவாக உழைப்பாளர்களின் உற்பத்தித்திறன் அதாவது, உழைப்பாளரின் உள்ளீடு அதிகரித்தது. இதனால் தொழிலாளர்கள் அதிக வருமானம் ஈட்ட உதவுகிறது. பொருளாதாரம் அத்தகைய தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமான அளவு பண்டங்களை உற்பத்திசெய்ய முடியாவிட்டால் அது இறக்குமதியை நம்பியிருக்க வேண்டும். இதன் காரணமாக அதிகளவு அந்நிய செலாவணியைச் செலவிட வேண்டியுள்ளது. ஒரு நாட்டின் பொருளாதாரம் ஏற்றுமதியில் போதுமான வருமானம் ஈட்டவில்லையென்றால் வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்வது கடினம். எனவே தொழில்மயமாதல் ஒரு நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் மற்றும் ஏற்றுமதி மூலம் அந்நியச் செலாவணியை ஈட்டவும் உதவுகிறது.
Question 18
ஒரு  துறையின்  வெளியீடுகள் மற்றொரு உற்பத்தியாளரால் பயன்படுத்தப்பட்டால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
மூலதன பண்டங்கள் துறை
B
நுகர்வோர் பண்டங்கள் துறை
C
அடிப்படை பண்டங்கள் தொழில்கள்
D
இவை அனைத்தும்
Question 18 Explanation: 
விளக்கம்: வெளியீடுகளை இறுதி நுகர்வோர் பயன்படுத்தினால் அது "நுகர்வோர் பண்டங்கள் துறை" என்றும் வெளியீடுகள் மற்றொரு உற்பத்தியாளரால் பயன்படுத்தப்பட்டால் அது "மூலதன பண்டங்கள் துறை" என்றும் அழைக்கப்படுகிறது. சிமெண்ட் மற்றும் எஃகு போன்ற பிற தொழில்களுக்கு மூலப்பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இத்தகைய தொழில்களை அடிப்படை பண்டங்கள் தொழில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
Question 19
தொழிற்சாலைகள்  கீழ்க்கண்டவற்றுள்  எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது?
A
பயனர்கள்
B
நிறுவன உரிமையாளர்கள்
C
அளவு
D
இவை அனைத்தும்
Question 19 Explanation: 
விளக்கம்: பயனர்கள், நிறுவன உரிமையாளர்கள், அளவு, பயன்படுத்தப்படும் உள்ளீடுகளின் வகை ஆகியவற்றின் அடிப்படையில் தொழிற்சாலைகள் வகைப்படுத்தப்படுகிறது. அ. பயனர்கள்: வெளியீடுகளை இறுதி நுகர்வோர் பயன்படுத்தினால் அது "நுகர்வோர் பண்டங்கள் துறை" என்றும் வெளியீடுகள் மற்றொரு உற்பத்தியாளரால் பயன்படுத்தப்பட்டால் அது "மூலதன பண்டங்கள் துறை" என்றும் அழைக்கப்படுகிறது. ஆ. பயன்படுத்தப்படும் உள்ளீடுகளின் வகை: "வேளாண் பதப்படுத்துதல்" ஜவுளித்துறை, ரப்பர் உற்பத்தி, தோல் பொருட்கள் போன்ற மூலப் பொருட்களை பயன்படுத்தும் அடிப்படையில் தொழிற்சாலைகளை வகைப்படுத்துகின்றனர். இ. நிறுவன உரிமையாளர்கள்: தொழிற்சாலைகளானது தனியாருக்கு சொந்தமான, பொது உரிமையாளர் (மத்திய அல்லது மாநில அரசாங்கத்தால்) தனியார் மற்றும் பொதுத்துறை (கூட்டுறவாக) இரண்டிற்கும் சொந்தமானது அல்லது கூட்டுறவுக்கு சொந்தமானதாகவும் உள்ளன. ஈ) அளவு: நிறுவனங்கள் அவற்றின் உற்பத்தி, விற்பனை, முதலீடு அல்லது வேலைவாய்ப்பு அவற்றின் அளவின் அடிப்படையில் பெரியதாகவோ, சிறியதாகவோ அல்லது நடுத்தரமாகவோ இருக்கலாம்.
Question 20
ஒரு நிறுவனம் சிறியது, நடுத்தரம் அல்லது பெரியது என்பதைத் தீர்மானிக்க இந்திய அரசு பொதுவாக  பயன்படுத்தும் அளவுகோல் எது?
A
உற்பத்தி
B
முதலீடு
C
வருமானம்
D
நில அளவு
Question 20 Explanation: 
விளக்கம்: ஒரு நிறுவனம் சிறியது, நடுத்தரம் அல்லது பெரியது என்பதைத் தீர்மானிக்க இந்திய அரசு பொதுவாக முதலீட்டை அளவுகோலாகப் பயன்படுத்துகிறது. சிறிய நிறுவனங்களை விட அளவில் சிறியதாக இருக்கும் நுண்ணிய அல்லது மிகச்சிறிய நிறுவனங்களும் உள்ளன. இந்த வகைப்பாடு முக்கியமானது, ஏனென்றால் சிறிய நிறுவனங்களுக்கு அவற்றை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் பெருமளவு நிதி, உள்கட்டமைப்பு அல்லது மானிய உதவிகளை வழங்குகிறது.
Question 21
சிறிய நிறுவனங்கள்  முக்கியமானதாகக் கருதப்பட காரணம்?
A
இது பெரிய அளவிலான துறையை விட அதிக வேலைவாய்ப்பை உருவாக்குகிறது என்று நம்பப்படுகிறது.
B
அதிக உற்பத்தி
C
சிறிய அளவிலான துறை குறைந்த எண்ணிக்கையிலான சலுகைப் பெற்றப் பின்னணியில் இருந்து ஏராளமான தொழில் முனைவோரை வெளிப்படுத்த அனுமதிக்கிறது.
D
a) மற்றும் b)
Question 21 Explanation: 
விளக்கம்: சிறிய நிறுவனங்கள் இரண்டு காரணங்களால் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, முதலாவதாக, இது பெரிய அளவிலான துறையை விட அதிக வேலைவாய்ப்பை உருவாக்குகிறது என்று நம்பப்படுகிறது. பெரிய நிறுவனங்களானது மிகவும் மேம்படுத்தப்பட்ட மற்றும் தானியங்கி தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதால் அது போதுமான அளவு வேலைவாய்ப்பை உருவாக்குவதில்லை. இரண்டாவதாக, சிறிய அளவிலான துறை குறைந்த எண்ணிக்கையிலான சலுகைப் பெற்றப் பின்னணியில் இருந்து ஏராளமான தொழில் முனைவோரை வெளிப்படுத்த அனுமதிக்கிறது.
Question 22
சிறிய நிறுவனங்களின் தொகுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
சிறு தொகுப்புகள்
B
வேலைவாய்ப்பு மையங்கள்
C
நிறுவன குழுக்கள்
D
தொழில்துறை தொகுப்புகள்
Question 22 Explanation: 
விளக்கம்: 1980 ஆம் ஆண்டு வரை பெரிய நிறுவனங்கள் மிகவும் திறமையானவை மற்றும் சிறிய நிறுவனங்களை எதிர்த்துப் போட்டியிட முடியும் என்று பரவலாக நம்பப்பட்டது. ஆனால் தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் தொழில்மயமாதல் அனுபவங்களின் அடிப்படையில் ஒரு துறையில் நிபுணத்துவம் வாய்ந்த சிறிய நிறுவனங்கள் புவியியல் ரீதியாக குறிப்பிட்ட இடங்களில் குவிந்து உற்பத்தி மற்றும் கற்றலின் மூலம் பெரிய நிறுவனங்களின் திறன் இல்லாவிட்டாலும் அதற்கு ஈடு கொடுக்கும் அளவில் உள்ளதென நம்பப்படுகிறது. இத்தகைய சிறிய நிறுவனங்களின் தொகுப்புகளே "தொழில்துறை தொகுப்புகள்" என்று அழைக்கப்படுகின்றன.
Question 23
கீழ்க்கண்டவற்றுள் வெற்றிகரமான தொழில் தொகுப்புகளின் முக்கிய பண்புகள் எவை?
A
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் புவியியல் பகுதிகளுக்கு அருகாமையில் இருத்தல்
B
துறை சார்ந்த சிறப்பு கவனம்.
C
துறை சார்ந்த சிறப்பு கவனம்.
D
இவை அனைத்தும்
Question 23 Explanation: 
விளக்கம்: புத்தாக்கத்தினால் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி. நம்பிக்கையை எளிதாக்கும் ஒரு சமூக கலாச்சார அடையாளம் பல்வேறு திறமையான தொழிலாளர்கள் சுய உதவி குழுக்கள் செயல்படுதல் வட்டார மற்றும் நகராட்சிகளுக்கு அரசின் ஆதரவு. போன்றவற்றால் நிறுவனங்கள் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரமாக ஒத்துழைத்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் அவர்கள் தங்கள் திறனை விரிவுபடுத்த முடியும். போட்டியின் மூலம் அவர்கள் மிகவும் திறமையானவர்களாக மாற கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்
Question 24
வெல்லம் உற்பத்தி தொழிற்சாலையின் வளர்ச்சி எங்கு நடைபெற்றது?
A
தென் தமிழ்நாடு
B
சிவகாசி
C
திண்டுக்கல்
D
சென்னை
Question 24 Explanation: 
விளக்கம்: வாணிபத்தின் வளர்ச்சியானது சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுக வட்டாரங்களின் அருகாமையில் தொழிற்சாலைகள் உருவாக காரணமாகவும் இருந்தது. மேலும் சென்னையை சுற்றி வாகனங்கள் மற்றும் தோல் தொழிற்சாலை வளர்ச்சியைக் கண்டது. தென் தமிழ்நாட்டில் வெல்லம் உற்பத்தி தொழிற்சாலையின் வளர்ச்சி மற்றொரு சிறந்த உதாரணமாகும். மேலும், காலனித்துவ காலத்தில் சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு பின்னர் பட்டாசு உற்பத்தி மற்றும் அச்சுத் தொழிலுக்கு முக்கிய மையமாக மாறியது. துறைமுகம் சார்ந்த தொழில்களும் இதே காலகட்டத்தில் இப்பகுதியின் வளர்ச்சிக்குக் காரணமாகவும் இருந்தது. தோல் உற்பத்தித் தொழிலானது திண்டுக்கல், வேலூர், ஆம்பூர் ஆகிய பகுதியில் நடைபெற்றது.
Question 25
கொதிகலன் மற்றும் விசையாழிகள் தயாரிப்பதற்கான நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
A
கோயம்புத்தூர்
B
திருச்சி
C
திண்டுக்கல்
D
சென்னை
Question 25 Explanation: 
விளக்கம்: தொழில்வளர்ச்சியானது சுதந்திரத்திற்குப் பிறகு மத்திய மற்றும் மாநில அரசுகளால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பல பெரிய நிறுவனங்கள் நிறுவப்பட்டன. சென்னையில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் ரயில் பெட்டித் தொழிற்சாலையும் திருச்சிராப்பள்ளியில் கொதிகலன் மற்றும் விசையாழிகள் தயாரிப்பதற்காக பாரத கனரக மின்சாதன நிறுவனத்தை (Bharat Heavy Electricals Limited (BHEL) மத்திய அரசு நிறுவியது. BHEL நிறுவனம் அதனுடைய உள்ளீட்டுப் பொருட்கள் தேவைகள் தொடர்பாக பல சிறிய நிறுவனங்களின் தொழில் தொகுப்புகளின் தோற்றத்திற்கு வழிவகை செய்தது.
Question 26
போர் தளவாடங்கள் தயாரிக்க கனரக வாகனத் தொழிற்சாலை எங்கு அமைக்கப்பட்டது?
A
கோயம்புத்தூர்
B
திருச்சி
C
ஆவடி
D
சேலம்
Question 26 Explanation: 
விளக்கம்: சென்னை புறநகரில் உள்ள ஆவடியில் போர் தளவாடங்கள் தயாரிக்க கனரக வாகனத் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் நிறுவனமும் சென்னையில் மகிழுந்துகளை உற்பத்திச் செய்யத் தொடங்கியது. அசோக் மோட்டார்ஸ் (பின்னர் அசோக் லேலண்ட்) ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் இணைந்து சென்னை வட்டாரத்தில் வாகனத்தொழில் துறை தொகுப்புகள் வளர்ச்சிக்கு உதவியது. மேலும் இது வாகன உதிரி பாகங்களின் நகரமாக மாறியது. 1950 களில் இப்பகுதியில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு வாகன கூறுகளை வழங்குவதற்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு உதவியாக ஆவடியில் தொழில் தோட்டங்கள் நிறுவப்பட்டது.
Question 27
சேலத்தில் இரும்பு எஃகு ஆலை எந்த ஆண்டு  அமைக்கப்பட்டது?
A
1975
B
1973
C
1985
D
1964
Question 27 Explanation: 
விளக்கம்: மாநிலத்தில் அதிக நீர் மின்சக்தி திட்டங்கள் மூலம் மின்மயமாதலை பரவலாக அதிகரிக்க வலியுறுத்தப்பட்டது. இந்த அனைத்து நடவடிக்கைகளிலும் அரசு பெரும் பங்கு வகித்தது. 1973 ஆம் ஆண்டில் எஃகு உற்பத்தி செய்வதற்காக சேலத்தில் இரும்பு எஃகு ஆலை அமைக்கப்பட்டது. கோயம்புத்தூர் பகுதியில், ஜவுளி, ஜவுளி இயந்திரங்கள், மின்சார மோட்டார்கள் மற்றும் நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கான பம்ப் குழாய்கள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் பன்முகத் தன்மையின் வளர்ச்சியைக் கண்டது.
Question 28
1970 மற்றும் 1980 களில்  வீட்டு அலங்காரப் பொருட்கள் தொழில் தொகுப்புகள் தமிழகத்தில் எங்கு உருவாகியது?
A
திருப்பூர்
B
கரூர்
C
சேலம்
D
வேலூர்
Question 28 Explanation: 
விளக்கம்: 1970 மற்றும் 1980 களில் கோயம்புத்தூர் பகுதியில் விசைத்தறி நெசவுத் தொழில் தொகுப்புகள் அதேபோல் திருப்பூரில் பின்னலாடைத் தொழில் தொகுப்புகள் விரிவாக்கம் மற்றும் கரூரில் வீட்டு அலங்காரப் பொருட்கள் தொழில் தொகுப்புகள் இக்காலகட்டத்தில் உருவாகியது. மாநில அரசின் மூலம் பல்வேறு பகுதிகளில் தொழில்துறை தோட்டங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஊக்கப்படுத்தபட்டது.
Question 29
தமிழகத்தின்  எத்தனை  மாவட்டங்களில் தொழில் தொகுப்புகள் பரவியிருக்கின்றன?
A
16
B
17
C
11
D
13
Question 29 Explanation: 
விளக்கம்: மற்ற மாநிலங்களைப் போல் அல்லாமல் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் (13 மாவட்டங்களில் 27 தொழில் தொகுப்புகள்) தொழில்துறைகள் பரவியிருக்கின்றன. மேலும் அவற்றுள் பல தொழில்கள் ஏற்றுமதி சார்ந்தவையாகும். மாநிலத்தின் சாலைகள், ரயில் போக்குவரத்து, வான்வழிப் போக்குவரத்து மற்றும் முக்கிய துறைமுகங்கள் அனைத்தும் போக்குவரத்து இணைப்பினால் நன்கு வளர்ச்சி அடைந்து காணப்படுகிறது.
Question 30
சென்னை “ஆசியாவின் டெட்ராய்ட்” என்றழைக்கப்பட்ட காரணம்?
A
அதிக அளவிலான போக்குவரத்து
B
பெரிய அளவிலான வாகனத் தொழில்துறை
C
தொழில் மையம்
D
இவை அனைத்தும்
Question 30 Explanation: 
விளக்கம்: சென்னை பெரிய அளவிலான வாகனத் தொழில்துறை தளமாக இருப்பதால் “ஆசியாவின் டெட்ராய்ட்” என்று என்றழைக்கப்படுகிறது . சென்னையானது மிக அதிகமான தானியங்கி தொழிலை ஒருங்கிணைக்கும் மற்றும் உதிரிபாகங்கள் செய்யும் தலைமை இடமாகத் திகழ்கிறது. சில உள்நாட்டு நிறுவனங்களான TVS, TI சைக்கிளஸ், அசோக் லேலண்ட் மற்றும் ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் ஆகியன இதற்கு முன்னர் இருந்தன. பொருளாதார சீர்த்திருத்தத்திற்கு பின்னர் ஹுன்டாய், ஃபோர்டு, டைம்லர்பென்ஸ் மற்றும் ரெனால்ட் – நிசான் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் (Multi National Companies) (MNC) இப்பகுதியில் தொழிற்சாலைகளைத் திறந்துள்ளன. எனவே வெளிநாடுகளிலிருந்து பல உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளரின் கவனங்கள் இங்கே ஈர்க்கப்பட்டுள்ளது. பல உள்நாட்டு நிறுவனங்களும் சேர்ந்து அனைத்து நிறுவனங்களுக்கான உதிரி பாகங்களின் உற்பத்தித் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.
Question 31
சுமை தூக்கும் வாகன முழுபாக கட்டமைப்பிற்கான தொழிற்சாலைகளுக்குப் பெயர் பெற்ற இடங்கள் எவை?
A
நாமக்கல்
B
திருச்செங்கோடு
C
சேலம்
D
a) மற்றும் b)
Question 31 Explanation: 
விளக்கம்: தமிழகத்தின் மேற்கு பகுதியில் உள்ள நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு பகுதிகள் சுமை தூக்கும் வாகன முழுபாக கட்டமைப்பிற்கான தொழிற்சாலைகளுக்குப் பெயர் பெற்ற இடங்களாகும். சுமை தூக்கும் வாகனக் கட்டுமானத் துறையில் 150 தொழில்களில் 250 அலகுகளில் இந்த தொகுப்பில் 12 பெரிய அளவிலான சுமை தூக்கும் வாகனக் கட்டுமான துறைகள் உள்ளன.
Question 32
உலகளாவிய சந்தைகளுக்கு தரை விரிப்புகளை உற்பத்திச் செய்யும் முக்கிய மையங்கள் எவை?
A
பவானி
B
குமாரபாளையம்
C
சேலம்
D
a) மற்றும் b)
Question 32 Explanation: 
விளக்கம்: வாகனக் கட்டுமானத் தொழிலமைப்பைத் தவிர மேசைத்துணி, திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் துண்டுகள் போன்ற வீட்டு அலங்கார பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையமாக கரூர் உள்ளது. மேலும் பவானி மற்றும் குமாரபாளையம் உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு தரை விரிப்புகளை உற்பத்திச் செய்யும் முக்கிய மையங்களாகத் திகழ்கின்றன. இத்தகைய நவீன தொகுப்புகளைத் தவிர பட்டு மற்றும் கைத்தறிப் புடவைகளுக்கு பிரபலமான மதுரை மற்றும் காஞ்சிபுரம் போன்ற பாரம்பரிய கைவினைத் தொகுப்புகளும் உள்ளன. இந்த விசைத்தறி தொகுப்புகளில் பல அலகுகள் பயன்படுத்தியதன் மூலம் புதுமைமயமாதலின் அளவை அடைந்தன.
Question 33
தோல் பொருட்கள்  ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதன்மை மாவட்டமாக திகழ்வது எது?
A
மதுரை
B
வேலூர்
C
சேலம்
D
காஞ்சிபுரம்
Question 33 Explanation: 
விளக்கம்: வேலூர் அதனைச் சுற்றியுள்ள ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய நகரங்களில் நூற்றுக்கணக்கான தோல் உற்பத்தி மற்றும் பதனிடும் வசதியைக் கொண்டுள்ளது. தோல் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதன்மை மாவட்டமாக வேலூர் திகழ்கிறது. சென்னையிலும் பல தோல் சார்ந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலை நிறுவனங்கள் உள்ளன. திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தோல் பதனிடுதல் மற்றும் உற்பத்தித் தொழிற்சாலைகளின் தொகுப்பு காணப்படுகிறது. தோல் உற்பத்தித் தொழிற்சாலையும் வேலைவாய்ப்பை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Question 34
60% அச்சுப்பணி தேர்வுகளுக்கு முக்கிய பங்கு வகிக்கும் இடம் எது?
A
சிவகாசி
B
வேலூர்
C
சேலம்
D
அரியலூர்
Question 34 Explanation: 
விளக்கம்: தீப்பெட்டி உற்பத்தித் தொழிற்சாலையில் புகழ்பெற்று விளங்கும். சிவகாசி பகுதியானது தற்பொழுது பட்டாசு மற்றும் அச்சிடும் தொழிலில் நாட்டின் சிறந்த நகரமாகத் திகழ்கிறது. இந்தியா 90% பட்டாசு உற்பத்தி 80% பாதுகாப்பான தீப்பெட்டி உற்பத்தி மற்றும் 60% அச்சுப்பணி தேர்வுகளுக்கு முக்கிய பங்காக இதனையே சார்ந்துள்ளது. அச்சிடும் தொழிற்சாலை ஒவ்வொன்றும் அவற்றின் பணிகளில் தனித்துவம் பெற்று மேலோங்கி விளங்குகிறது. காலனித்துவ காலத்தில் தொடங்கப்பட்ட இத்தொழிலானது தற்பொழுது அதிகளவில் வேலை வாய்ப்பை அளிக்கிறது.
Question 35
பொருத்துக:
  1. A) கோயம்புத்தூர்              - 1) விளாங்குறிச்சி
  2. B) மதுரை                              - 2) இலந்தை குளம்
  3. C) மதுரை                                  - 3) வடபாலஞ்சி, கிண்ணிமங்கலம்
  4. D) திருச்சிராப்பள்ளி                - 4)  நாவல்பட்டு
A
1 2 3 4
B
4 2 1 3
C
3 1 2 4
D
2 3 1 4
Question 35 Explanation: 
விளக்கம்: வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, ஓசூர் மற்றும் சேலம் தகவல் தொழிற்நுட்ப முதலீட்டிற்கான இடங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதனை எளிதாக்குவதற்காக ELCOT நிறுவனம் எட்டு இடங்களில் ELCOSEZs (IT குறிப்பிட்டபொருளாதார சிறப்பு மண்டலங்கள்) நிறுவியுள்ளது.
Question 36
தமிழ்நாட்டில் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு உதவும் கொள்கைக் காரணிகள் எவை?
A
கல்வி
B
உள்கட்டமைப்பு
C
தொழில்துறை ஊக்குவிப்பு
D
இவை அனைத்தும்
Question 36 Explanation: 
விளக்கம்: அ) கல்வி: திறமை வாய்ந்த மனித வளங்கள் தொழிற்சாலைக்குத் தேவைப்படுகிறது. நமது மாநிலமானது தொடக்கக் கல்விக்காக அதிகமான கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், படித்தவர்களின், எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அடிப்படை எண் கணித திறன்களை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது. ஆ) உள்கட்டமைப்பு: மாநிலங்களில் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் தொழில்மயமாதல் பரவுதலுக்கு மின்சார விநியோகம் சிறப்பான பங்கினை வகிக்கிறது. மின்சார விநியோகம் மட்டுமல்லாது, தமிழ்நாடானது மிகச் சிறந்த போக்குவரத்து உள்கட்டமைப்புக்குப் பெயர் போனது ஆகும். இ) கல்வி, போக்குவரத்து மற்றும் ஆற்றல் வாய்ந்த உள்கட்டமைப்புகளுக்கு முதலீடு செய்வது மட்டுமல்லாமல், சிறந்த தொழிற் பிரிவுக்கான தொழிற்சாலை விரிவாக்கங்களை சிறந்தபகுதிகளில் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
Question 37
தமிழகத்தில் தொழில் விரிவாக்கத்திற்கு திறவுகோலாக செயல்படும் முகமைகள் எவை?
A
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம்
B
தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம்
C
தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம்
D
இவை அனைத்தும்
Question 37 Explanation: 
விளக்கம்: * தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT – State Industries Promotion Corporation of Tamil Nadu), 1971. தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO – Tamil Nadu Small Industries Development Corporation) 1970. தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (TIDCO - Tamil Nadu Industrial Development Corporation) 1965. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் - வரையறுக்கப்பட்டது (TIIC – Tamil Nadu Industrial Investment Corporation Ltd) 1949.
Question 38
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
A
1949
B
1960
C
1975
D
1970
Question 38 Explanation: 
விளக்கம்: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் - வரையறுக்கப்பட்டது (TIIC – Tamil Nadu Industrial Investment Corporation Ltd) 1949 புதிய தொழில் பிரிவுகளை நிறுவுவதற்கும் தற்போதுள்ள தொழில் பிரிவுகளை பெருக்குவதற்கும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகமானது குறைந்த அளவிலான நிதி உதவியைச் செய்கிறது. அனைத்து வகையான தொழில் நிறுவனங்களுக்கும் உதவும் என்றாலும் குறிப்பாக 90% மிகச்சிறு, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இது உதவுகிறது.
Question 39
சிறு நிறுவனங்களுக்காக நிறுவப்பட்ட முதல் தொழில்துறை நிறுவனம் எது?
A
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம்
B
தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம்
C
தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம்
D
தமிழ்நாடு சிறுதொழில் கழகம்
Question 39 Explanation: 
விளக்கம்: தமிழ்நாடு சிறுதொழில் கழகம் – வரையறுக்கப்பட்டது (TANSI – Tamil Nadu Small Industries Corporation Ltd) 1965 தொழில் மற்றும் வணிக நிறுவனங்களால் அமைப்புத் துறையில் நிறுவப்பட்டு, செயல்படுத்தப்பட்டு, வரும் சிறுதொழில் அமைப்புகளை 1965இல் தமிழ்நாடு சிறுதொழில் கழகமானது (TANSI) தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டது. சிறு நிறுவனங்களுக்காக நிறுவப்பட்ட முதல் தொழில்துறை நிறுவனமாகும்.
Question 40
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் முக்கிய நோக்கம்?
A
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் முக்கிய நோக்கம்?
B
வேலைவாய்ப்பு உருவாக்குதல்
C
வளங்களை உருவாக்குதல்
D
இவை அனைத்தும்
Question 40 Explanation: 
விளக்கம்: ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் (தொடங்கப்பட்டது: ஜனவரி 16, 2016) ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் என்பது இந்திய அரசின் ஒரு முன் முயற்சித் திட்டமாகும். இதன் முதன்மையான நோக்கம் தொழில் தொடங்குவதற்கான தொடக்க முயற்சிகளை ஏற்படுத்துதல், வேலைவாய்ப்பு உருவாக்குதல் மற்றும் வளங்களை உருவாக்குதல்.
Question 41
ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கடன் வழங்கும் எல்லை வரையறை?
A
10 லட்சத்துக்கும், 1 கோடிக்கும் இடையில்
B
1 லட்சத்துக்கும், 10 லட்சத்துக்கும் இடையில்
C
5 லட்சத்துக்கும், 1 கோடிக்கும் இடையில்
D
10 லட்சத்துக்கும், 50 லட்சத்துக்கும் இடையில்
Question 41 Explanation: 
விளக்கம்: ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் (தொடங்கப்பட்டது: ஏப்ரல் 5, 2016) ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் என்பது பச்சைப் புல்வெளி (Greenfield Enterprise) நிறுவனம் அமைப்பதற்காக குறைந்தபட்சம் 10 லட்சத்துக்கும், 1 கோடிக்கும் இடையில், ஒரு பட்டியல் சாதியினர் (SC) அல்லது பட்டியல் பழங்குடியினர் (ST) மற்றும் ஒரு வங்கிக் கிளைக்கு ஒரு பெண் கடன் பெறுபவர் என கடன் வழங்கி வங்கிக்கடன்களை எளிதாக்குவதே இத்திட்டமாகும்.
Question 42
கீழ்க்கண்டவற்றுள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் தொழில் முனைவோரின் பங்கு எது?
A
இவர்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் தலா வருமானம் உயர்வதற்கு உதவி புரிகிறார்கள்.
B
வருமானம் மற்றும் செல்வத்தின் செறிவைக் குறைப்பதன் மூலம் அவை சமூகத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கின்ன்றன.
C
குடிமக்களின் அசையா சேமிப்புகள் மற்றும் நாட்டின் ஏற்றுமதி வியாபாரம் மூலமாக மூலதனத்தைச் செயல்பட வைக்கிறார்கள்.
D
இவை அனைத்தும்
Question 42 Explanation: 
விளக்கம்: தொழில் முனைவோர் கிராமப்புற மற்றும் பின்தங்கிய தொழிற்சாலைகளை முன்னேற்றுவதுடன், நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிலவும் வட்டார ஏற்றதாழ்வுகளை நீக்குகிறார்கள். தொழில்முனைவோர் கைவினைஞர்கள், தொழில் நுட்பத் தகுதி வாய்ந்த நபர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை வழங்குகிறார்கள். தொழில்நுட்பத்தை மாற்றும் சூழலில் பணியாற்றி மேலும் புத்தாக்கத்தின் மூலம் இலாபத்தினை அதிகரிக்க முயற்சிக்கின்றனர். தொழில்முனைவோர், குறைந்த விலையில் சிறந்த தரமான பொருட்களைப் பெற மக்களுக்கு உதவுகின்றனர், இதன் விளைவாக அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.
Question 43
உலக மக்கள் தொகையில் இந்தியா எத்தனை சதவீதத்தை தன்னகத்தே கொண்டுள்ளது?
A
15%
B
17.5%
C
14%
D
19%
Question 43 Explanation: 
விளக்கம்: கடந்த நூறு ஆண்டுகளில் 4 மடங்கு மக்கள் தொகை அதிகரித்து உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இரண்டாம் நிலையை அடைந்துள்ளது. உலகின் புவிப்பரப்பில் 2.4% பரப்பளவு மற்றும் உலக வருவாயில் 1.2% வருவாயைப் பெற்றுள்ள இந்தியா உலக மக்கள் தொகையில் 17.5 சதவீதத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. உலக மக்கள் தொகையில் ஆறில் ஒருவர் இந்தியர்.
Question 44
பெரும் பிரிவினை ஆண்டு என்றழைக்கப்படும் ஆண்டு எது?
A
1921
B
1911
C
1951
D
1961
Question 44 Explanation: 
விளக்கம்: காலரா, பிளேக், இன்புளுயன்சா போன்ற கொள்ளை நோய்கள் மற்றும் பஞ்சம் இவற்றின் காரணமாக 1911 - 1921 காலகட்டத்தில் மக்கள்தொகை எதிர்மறையாக குறைந்தது. 1921 ஆம் ஆண்டு மக்கள் தொகை அதிகரிக்க துவங்கியதால் அவ்வாண்டு பெரும் பிரிவினை ஆண்டு என்றழைக்கப்படுகிறது.
Question 45
சிறு பிளவு ஆண்டு என்றழைக்கப்படும் ஆண்டு எது?
A
1921
B
1911
C
1951
D
1961
Question 45 Explanation: 
விளக்கம்: 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை பெருக்க வீதம் 1.33% - 1.25% ஆக குறைந்து வந்தது. ஆகையால் இது சிறு பிளவு ஆண்டு என்றழைக்கப்படுகிறது.
Question 46
1961 இல் இந்திய மக்கள்தொகை உயர்வு  வீதம்?
A
2%
B
3%
C
4%
D
1.5%
Question 46 Explanation: 
விளக்கம்: 1961 இல் இந்திய மக்கள்தொகை உயர்வு வீதம் 1.96% அதாவது 2% ஆகும். ஆகையால் 1961 ஆம் ஆண்டை மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு என்கிறோம். 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை ஒரு பில்லியன் அளவைக்கடந்தது.
Question 47
இந்தியாவில் 2011 ஆம் ஆண்டின் குழந்தைகள் பிறப்பு விகிதம்?
A
21.8%
B
39.9%
C
25.4%
D
27.5%
Question 47 Explanation: 
விளக்கம்: இந்தியாவில் 2011 ஆம் ஆண்டின் குழந்தைகள் பிறப்பு விகிதம் 21.8% ஆகும். 2001 ஆம் ஆண்டின் குழந்தைகள் பிறப்பு விகிதம் 25.4% ஆகும்.ஆம் ஆண்டின் குழந்தைகள் பிறப்பு விகிதம் 39.9% ஆகும்.
Question 48
2001 ஆம் ஆண்டு இந்தியாவில்  குழந்தைகள் இறப்பு விகிதம்?
A
7.11%
B
7.11%
C
27.4%
D
27.5%
Question 48 Explanation: 
விளக்கம்: 2001 ஆம் ஆண்டு இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் 8.4% ஆகும். 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் 7.11 ஆகும். 1951 ஆம் ஆண்டு இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் 27.4 % ஆகும்.
Question 49
மிகக்குறைந்த பிறப்பு வீதம் கொண்ட மாநிலம் எது?
A
கேரளா
B
டெல்லி
C
கோவா
D
கர்நாடகா
Question 49 Explanation: 
விளக்கம்: கேரளா மிகக்குறைந்த பிறப்பு வீதம்(14.7%) கொண்ட மாநிலம் ஆகும். உத்திரப்பிரதேசம் மிக அதிக பிறப்பு வீதம்(29.5%) கொண்ட மாநிலம் ஆகும். மேற்கு வங்காளம் மிகக்குறைந்த இறப்பு வீதம் (6.3%), ஒரிசா மிக அதிக இறப்பு வீதம் கொண்ட மாநிலம் (9.2%) ஆகும்.
Question 50
அதிக மக்கள் தொகை அடர்த்தியுடைய மாநிலம் எது?
A
மஹாராஷ்டிரா
B
உத்திரப்பிரதேசம்
C
கோவா
D
பீகார்
Question 50 Explanation: 
விளக்கம்:அதிக மக்கள் தொகை அடர்த்தியுடைய மாநிலம் பீகார் ஆகும். ஒரு சதுர கிமீக்கு 1102 என உள்ளது. அதனை அடுத்ததாக மேற்கு வங்காளம் 880 மக்கள் தொகை அடர்த்தி கொண்டுள்ளது.
Question 51
மிகக்குறைவான மக்கள் தொகை அடர்த்தியுடைய மாநிலம் எது?
A
அருணாச்சலப்பிரதேசம்
B
ஒரிசா
C
கோவா
D
பீகார்
Question 51 Explanation: 
விளக்கம்: அருணாச்சலப்பிரதேசம் மிகக்குறைவான மக்கள் தொகை அடர்த்தியுடைய மாநிலம் ஆகும். ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 17 நபர்கள் என்ற அளவில் மிகக்குறைவான மக்கள் தொகை அடர்த்தியைப்பெற்றுள்ளது.
Question 52
மிகக்குறைந்த பாலின விகிதம் கொண்ட மாநிலம் எது?
A
பஞ்சாப்
B
ஒரிசா
C
உத்தரகாண்ட்
D
ஹரியானா
Question 52 Explanation: 
விளக்கம்: இன் படி ஹரியானா மிகக்குறைந்த பாலின விகிதம்(877) கொண்ட மாநிலம் ஆகும். கேரளா மற்ற மாநிலங்களை விட பெண்கள் பாலின விகிதம் அதிகரித்து 1000 ஆண்களுக்கு 1084 பெண்களைக்கொண்டுள்ளது.
Question 53
2011 இல் வாழ்நாள் எதிர்பார்ப்பு விகிதம்?
A
63.5 வருடங்கள்
B
65.5 வருடங்கள்
C
68.5 வருடங்கள்
D
63.7 வருடங்கள்
Question 53 Explanation: 
விளக்கம்: பிறப்பின்போது எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் அளவே வாழ்நாள் எதிர்பார்ப்பு என குறிப்பிடப்படுகிறது. 1901 - 1911 ஆண்டு காலங்களில் வாழ்நாள் எதிர்பார்ப்பு விகிதம் 23 வருடங்கள் ஆகும்.
Question 54
2011 இல் பெண்களின் எழுத்தறிவு விகிதம்?
A
74.04%
B
65.5%
C
68.5%
D
63.7%
Question 54 Explanation: 
விளக்கம்: மொத்த மக்கள் தொகையில் எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை விகிதத்தை குறிப்பிடுகிறது. 1951 இல் ஆண்கள் நான்கில் ஒருவர் மற்றும் பெண்கள் பன்னிரெண்டில் ஒருவர் என்ற அளவிலேயே எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை இருந்தது. சராசரியாக 6 பேருக்கு ஒருவர் மட்டுமே எழுத்தறிவு பெற்றவர் ஆவர்.
Question 55
கல்வி எந்த ஆண்டு வரை மாநில அரசின் பொறுப்பில் இருந்தது?
A
1972
B
1976
C
1974
D
1973
Question 55 Explanation: 
விளக்கம்: 1976 வரை மாநில அரசின் பொறுப்பில் இருந்த கல்வி அதன் பிறகு மத்திய மாநில அரசுகளின் கூட்டுப்பொறுப்பில் இருந்தது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை கல்விக்கான வரவு செலவுகளை மேற்கொள்கிறது.
Question 56
இந்திய  கல்வி முறை எத்தனை நிலைகளைக்கொண்டுள்ளது?
A
5
B
6
C
7
D
8
Question 56 Explanation: 
விளக்கம்: இந்திய கல்வி முறை அடிப்படையில் 6 நிலைகளைக்கொண்டுள்ளது. குழந்தைக்கல்வி தொடக்கக்கல்வி இடைநிலைக்கல்வி மேல்நிலைக்கல்வி இளங்கலைப்பட்டம் முதுகலைப்பட்டம்
Question 57
வரவு செலவுத்திட்டத்தில் எத்தனை சதவீத நிதி கல்வித்துறைக்கு அளிக்கப்படுகிறது?
A
2%
B
4%
C
3%
D
5%
Question 57 Explanation: 
விளக்கம்: கல்வித்துறை என்பது பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை உள்ளடக்கியது. இது சமுதாயத்தின் எல்லா பிரிவு மக்களுக்கும் நடுநிலையான கல்வியளிக்கும் அமைப்பு ஆகும். வரவு செலவுத்திட்டத்தில் 3 சதவீத நிதி கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டு பெருமளவு நிதி பள்ளிக் கல்விக்கு செலவிடப்படுகிறது.
Question 58
இந்தியாவின் அனைத்து மருத்துவ நடைமுறைகளும் எந்த அமைச்சகத்தின் கீழ் உள்ளன?
A
சுகாதாரத்துறை
B
உடல் நலத்துறை
C
ஆயுஷ்
D
மனிதவளத்துறை
Question 58 Explanation: 
விளக்கம்: இந்தியாவின் உடல்நலம் மாநில அரசின் பொறுப்பில் வருகிறது. மத்திய சுகாதாரம் மற்றும் நலவாழ்வுக்கழகம் பல்வேறு நலக்கொள்கைகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. மத்திய நலத்துறை அமைச்சகம் நலத்துறையின் நிர்வாகத்தையும் அதற்கான தொழில்நுட்ப தேவைகளையும் கவனித்துக்கொள்கிறது.
Question 59
இந்தியாவின் உடல்நலப்பணிகள் எந்த அமைச்சகத்தின் கீழ் வருகின்றன?
A
சுகாதாரத்துறை
B
மத்திய நலத்துறை
C
ஆயுஷ்
D
மனிதவளத்துறை
Question 59 Explanation: 
விளக்கம்: இந்தியாவின் உடல்நலப்பணிகள் மத்திய நலத்துறை அமைச்சகத்தின் கீழ் வருகின்றன. மாநிலங்களை பொறுத்த வரையில் கேரளா மற்ற மாநிலங்களை விட உடல்நலம் பேணுதலில் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது.மற்ற முன்னேறிய நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவின் உடல்நலம் பேணுதல் திருப்திகரமானதாக இல்லை. இலங்கையை விட இந்தியாவில் உடல் நலம் பேணுதல் குறைவாக இருக்கிறது.
Question 60
நிரந்தர சொத்துரிமை சட்டத்தை காரன்வாலிஸ் அறிமுகப்படுத்திய ஆண்டு?
A
1793
B
1795
C
1792
D
1799
Question 60 Explanation: 
விளக்கம்: காரன்வாலிஸ் நிரந்தர சொத்துரிமை சட்டத்தை 1793 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தினார். பிறகு ஜமீன்தாரி முறையை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கியது. இம்முறையில் நிலச்சுவான்தாரர்களும், ஜமீன்தாரர்களும் நிலத்தின் சொந்தக்காரர்களாக நில வருவாயை அரசுக்கு செலுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் அவர்களிடமே வழங்கப்பட்டது. வசூலிக்கப்பட்ட நில வருவாயில் 11 இல் 10 பங்கு அரசுக்கு செலுத்த வேண்டும் என்றும் மீதத்தொகையை ஊதியமாக கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
Question 61
இனவாரி முறை என்றழைக்கப்படும் நில உடைமை முறை எது?
A
நிரந்தர சொத்துரிமை முறை
B
மஹல் வாரி முறை
C
இரயத்துவாரி முறை
D
சொந்த சாகுபடி முறை
Question 61 Explanation: 
விளக்கம்: இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் மத்தியப்பிரதேசம் மற்றும் பஞ்சாப்பிற்கு விரிவுபடுத்தப்பட்டது. இம்முறையில் கிராம மக்களாலான சிறு குழுவினர் நிலச்சொந்தக்காரர்களாக இருந்து நிர்வாகம் செய்தனர். அக்குழுவினர் நிலத்தை விவசாயிகளிடம் பிரித்து கொடுத்து அவர்களிடமிருந்து வருவாயைப்பெற்று அரசுக்கு செலுத்தினர்.
Question 62
கீழ்க்கண்ட எம்முறையில் நிலத்தை சொந்தம் கொண்டாடும் உரிமை நில உடைமையாளரிடம் இருந்தது?
A
நிரந்தர சொத்துரிமை முறை
B
மஹல் வாரி முறை
C
இரயத்துவாரி முறை
D
இவை அனைத்தும்
Question 62 Explanation: 
விளக்கம்: இம்முறை முதன் முதலில் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு பின்னர் மஹாராஷ்டிரா, குஜராத், அஸ்ஸாம், கூர்க், கிழக்கு பஞ்சாப், மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இம்முறையில் நிலத்தை சொந்தம் கொண்டாடும் உரிமை மற்றும் நிலத்திற்கான கட்டுப்பாடு, நில உரிமையாளரிடமே இருந்தது. சுதந்திரத்திற்கு முன்னர் இம்முறை குறைந்த அடக்குமுறை கொண்டதாக இருந்தது.
Question 63
வழி நடத்தும் திட்டம் கீழ்க்கண்டவற்றுள் எதனோடு தொடர்புடையது?
A
பசுமைப்புரட்சி
B
வெண்மைப்புரட்சி
C
நீலப்புரட்சி
D
மஞ்சள் புரட்சி
Question 63 Explanation: 
விளக்கம்: பசுமைப்புரட்சி என்பது வேளாண்துறையில் தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு திருப்பு முனையாக அமைந்தது. 1960க்கு பிறகு பாரம்பரிய வேளாண்முறைகள் மாற்றப்பட்டு புதிய தொழில்நுட்ப வேளாண் முறைகள் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டன. இதற்கு ஆரம்பமாக 1960 - 61 ல் 7 மாவட்டங்களில் வழி நடத்தும் திட்டம் புதிய தொழில் நுட்பத்தை வேளாண் துறையில் பயன்படுத்தும் முயற்சி எடுக்கப்பட்டது. இது அதிக விளைச்சல் தரும் ரகங்களை உற்பத்தி செய்வதற்கான திட்டம் ஆகும்.
Question 64
கீழ்க்கண்டவற்றுள் பசுமைப்புரட்சியின் சாதனைகள் எவை?
A
முதன்மைப்பயிர்களான நெல், கோதுமை போன்றவற்றின் உற்பத்தி பன்மடங்காக பெருகியது.
B
வணிகப்பயிர்கள் அல்லது பணப்பயிர்களான கரும்பு, பருத்தி, சணல், எண்ணெய் வித்துக்கள், மற்றும் உருளைக்கிழங்கு, போன்றவற்றின் உற்பத்தியை அதிகரிக்க உதவியது.
C
சிறந்த விதைகள் மூலமாக அனைத்துப்பயிர்களின் உற்பத்தி திறனும் பெருகியது.
D
இவை அனைத்தும்
Question 64 Explanation: 
விளக்கம்: முதன்மைப்பயிர்களான நெல், கோதுமை போன்றவற்றின் உற்பத்தி பன்மடங்காக பெருகியது. வணிகப்பயிர்கள் அல்லது பணப்பயிர்களான கரும்பு, பருத்தி, சணல், எண்ணெய் வித்துக்கள், மற்றும் உருளைக்கிழங்கு, போன்றவற்றின் உற்பத்தியை அதிகரிக்க உதவியது. சிறந்த விதைகள் மூலமாக அனைத்துப்பயிர்களின் உற்பத்தி திறனும் பெருகியது. வேளாண்மைக்கு தேவையான கருவிகளான டிராக்டர்கள், இயந்திரங்கள், கதிரடிப்பான்கள், மற்றும் பம்ப் செட்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் தொழில்கள் வளர்வதற்கு பசுமைப்புரட்சி நேரடிக்காரணமாக விளங்கியது.
Question 65
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
A
2015
B
2016
C
2014
D
2017
Question 65 Explanation: 
விளக்கம்: 18 பிப்ரவரி 2016 ல் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் விவசாயிகள் கோடைகால பயிர்களுக்கு 2% மற்றும் குறுவை சாகுபடி பயிர்களுக்கு 1.5% என்ற ஒரே சீரான சந்தாத்தொகையை கட்ட உதவுகிறது. தோட்டப்பயிர்கள் மற்றும் பணப்பயிர்களுக்கு வருடாந்திர சந்தா 5% ஆக இருக்கும்.
Question 66
1955  ஆம் ஆண்டு அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் 3வது  பிரிவின்படி ஏற்படுத்தப்பட்டது எது?
A
பயிர் காப்பீடு
B
உழவர் கடன் அட்டை
C
குளிர் பதன கிடங்கு
D
கிசான் கிரெடிட் கார்டு
Question 66 Explanation: 
விளக்கம்: இந்திய அரசு மற்றும் வேளாண் அமைச்சகம் 1955 ஆம் ஆண்டு அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் 3வது பிரிவின்படி குளிர் பதன கிடங்கு ஆணை 1964 என்பதை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் இன்றளவும் குளிர் பதன கிடங்கு வசதி போதிய அளவில் இல்லை.
Question 67
உழவர் கடன் அட்டை திட்டம் யாரால் தொடங்கப்பட்டது?
A
மைய வங்கி
B
விவசாய மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி
C
a) மற்றும் b)
D
வேளாண் அமைச்சகம்
Question 67 Explanation: 
விளக்கம்: உழவர் கடன் அட்டை, கிசான் கிரெடிட் கார்டு என்பது கடன் தேவைப்படுகின்ற ஒரு விவசாயியின் தகுதிக்கேற்ப கடன் மிக எளிதாக மற்றும் சரியான நேரத்தில் வழங்குவதற்கான ஒரு ஏற்பாடு ஆகும். இது 1998 ம் ஆண்டில் இந்திய மைய வங்கி மற்றும் விவசாய மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி ஆகியவற்றால் தொடங்கப்பட்டது. விவசாயிகள் கடனுக்காக முறைசாரா வங்கிகளை சார்ந்திருப்பதை குறைப்பதே அதன் நோக்கமாகும். முறை சாரா வங்கிகளில் கடன் பெறுவது எளிது. அனால் வட்டி வீதம் அதிகம். கட்டையை பிராந்திய கிராமப்புற, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகள் வழங்குகின்றன.
Question 68
விவசாயப்பொருட்களுக்கான அங்காடி குழுவின் பணிகள் எவை?
A
விவசாயப்பொருட்களுக்கான அங்காடி குழுவின் பணிகள் எவை?
B
சந்தை சார்ந்த விரிவாக்க சேவைகளை விவசாயிகளுக்கு வழங்குதல்
C
வேளாண் நடவடிக்கைகளை ஊக்குவித்தல்
D
இவை அனைத்தும்
Question 68 Explanation: 
விளக்கம்: விவசாயப்பொருட்களுக்கான அங்காடி குழு வேளாண்மை அல்லது தோட்டப்பயிர்கள் அல்லது கால்நடை பொருட்களை வர்த்தகம் செய்வதற்கு மாநில அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வமான அமைப்பு ஆகும். விலை நிர்ணயம் மற்றும் அங்காடி பரிமாற்றங்களில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருகிறது. வேளாண் பொருட்களின் வரவு மற்றும் விலை தொடர்பான புள்ளி விவரங்களை அவ்வப்போது காட்சிப்படுத்துகிறது.
Question 69
விவசாயிகளுக்கான மிகப்பெரிய உள்ளீடு எது?
A
உரங்கள்
B
விதைகள்
C
நீர்ப்பாசனம்
D
இவை அனைத்தும்
Question 69 Explanation: 
விளக்கம்: விதைகளே விவசாயிகளுக்கான மிகப்பெரிய உள்ளீடு ஆகும். தாராளமயமாக்கப்படுவதற்கு முன் நாடு முழுவதும் விவசாயிகள் மாநில அரசாங்க நிறுவனங்களிலிருந்து விதைகளைப்பெற்று வந்தனர். இந்நிறுவனங்கள் விதைகளை தாங்களே உற்பத்தி செய்து தரம் மற்றும் விலை நிர்ணயத்துக்கு முழு பொறுப்பாக இருந்தன. தாராளமயமாக்கல் மூலம் இந்தியாவின் விதைகள் சந்தை உலகளாவிய வேளாண் தொழிலுக்கு திறந்து வைக்கப்பட்டது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் 2003 ஆம் ஆண்டு பல மாநில அரசு நிறுவனங்கள் மூடப்பட்டன. இது விவசாயிகளை இரட்டிப்பாக பாதித்தது.
Question 70
பின்வருவனவற்றுள்  சமூக மற்றும் கலாச்சாரம் சார்ந்த சரியான கூற்றுகளை தேர்க.
A
இன்றளவும் ஊரக பகுதியில் சாதி முறை மாறாமல் உள்ளது.
B
ஆதிக்க சாதியினர் பெருமளவு நிலவுடைமை கொண்டிருப்பதால் மற்றவர்களை விட உயர்ந்தவர்களாக உள்ளனர்.
C
வகுப்பு மற்றும் சாதி சார்ந்த சுரண்டல்கள் ஊரகப்பகுதிகளில் உச்சத்தில் உள்ளது.
D
இவை அனைத்தும்
Question 70 Explanation: 
விளக்கம்: வறுமை, ஊட்டச்சத்துக்குறைவு, கல்வியறிவின்மை, குழந்தைத்திருமணம் போன்ற பலப்பிரச்சனைகள் இந்தியக்கிராமங்களில் நிலவுகின்றன. இந்தியக்கிராமங்களில் ஆணவக்கொலைகள் நடப்பதற்கு கலப்புத்திருமணம் முக்கிய காரணமாக உள்ளது. குழந்தை திருமணம் மற்றும் பெண்சிசுக்கொலை முதலியன மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
Question 71
கீழ்க்கண்டவற்றுள் ஊரக வறுமைக்கான காரணங்கள் எவை?
A
நிலங்கள் சரியாக பிரிக்கப்படாமை.
B
நிலங்கள் சரியாக பிரிக்கப்படாமை.
C
பொதுத்துறைகளில் முதலீடு
D
வளர்ச்சியின் நன்மைகளில் உள்ள சம நிலை
Question 71 Explanation: 
விளக்கம்: அ) நிலங்கள் சரியாக பிரிக்கப்படாமை. ஆ) பண்ணை சாராத தொழில்களில் வேலைவாய்ப்பின்மை இ) பொதுத்துறைகளில் முதலீடு இன்மை ஈ) வளர்ச்சியின் நன்மைகளில் உள்ள சமனற்ற நிலை உ) பணவீக்கம் ஊ) குறைந்த உற்பத்தித்திறன் எ) குறைந்த பொருளாதார வளர்ச்சி வீதம் ஏ) பெரிய தொழிற்சாலைகளுக்கே முக்கியத்துவம் ஐ) சமூக குறைபாடுகள்
Question 72
ஊரக வேலையின்மை எத்தனை வகைப்படும்?
A
2
B
4
C
3
D
5
Question 72 Explanation: 
விளக்கம்: ஊரக வேலையின்மை என்பது 3 வகைப்படும். அ) வெளிப்படையான வேலையின்மை ஆ) மறைமுக வேலையின்மை அல்லது குறை வேலையுடைமை இ) பருவ கால வேலையின்மை
Question 73
20 அம்ச திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
A
1974
B
1975
C
1973
D
1977
Question 73 Explanation: 
விளக்கம்: வறுமை ஒழிப்பு திட்டமான 20 அம்ச திட்டம் 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம் 1978 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வேலைக்கு உணவு திட்டம் 1977 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஊரக இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சி 1979 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
Question 74
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
A
1979
B
1975
C
1983
D
1980
Question 74 Explanation: 
விளக்கம்: ஊரக நிலமற்றோர் வேலை வாய்ப்பு உறுதித்திட்டம் 1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஜவஹர் வேலை வாய்ப்பு திட்டம் 1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
Question 75
ராஜீவ் ஆவாஸ் யோஜனா எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
A
1999
B
2000
C
2006
D
2009
Question 75 Explanation: 
விளக்கம்: பிரதான மந்திரி ஆதர்ஷ் கிராம் சதக் யோஜனா 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பாரத் நிர்மான் யோஜனா 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்திரா ஆவாஸ் யோஜனா 1985 -1986 ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டம் 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
Question 76
கீழ்க்கண்டவற்றுள் ஊரக வேலையின்மைக்கான காரணங்கள் எவை?
A
வேளாண்மை பருவ காலம் சார்ந்தது
B
துணை தொழில்களின்மை
C
வேளாண்மையை இயந்திரமயமாக்கல்
D
இவை அனைத்தும்.
Question 76 Explanation: 
விளக்கம்: ஊரக வேலையின்மைக்கான பல்வேறு காரணங்கள்: அ) திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் இன்மை ஆ) வேளாண்மை பருவ காலம் சார்ந்தது. இ) துணை தொழில்களின்மை ஈ) வேளாண்மையை இயந்திரமயமாக்கல் உ) மூலதன செறிவு தொழில் நுட்பம் ஊ) கல்வி முறையில் உள்ள குறைபாடுகள்
Question 77
கீழ்க்கண்டவற்றுள் குடிசைத்தொழில்களின் முக்கிய சிறப்பியல்புகள்?
A
குடிசைத்தொழில்கள் பாரம்பரியமானவை மற்றும் பரம்பரையாகவும் செய்து வரும் தொழிலாகும்.
B
மின்சாரத்தின் உபயோகத்தோடு பொருட்கள் செய்யப்படுகின்றன.
C
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
D
குடிசைத்தொழிலுக்கு குடும்ப உறுப்பினர்களின் உழைப்பு தேவைப்படுவதில்லை
Question 77 Explanation: 
விளக்கம்: அ) கைவினை தொழிலாளர்கள் தங்கள் சொந்த பொறுப்பில் வீட்டிலேயே குடும்ப வருமானத்திற்காக பொருட்களை தயாரிக்கின்றனர். வேறு ஒரு நிரந்தர பணியினை செய்து கொண்டே குடிசைத்தொழிலை மேற்கொள்பவர்களும் உள்ளனர். குடிசைத்தொழில்கள் பாரம்பரியமானவை மற்றும் பரம்பரையாகவும் செய்து வரும் தொழிலாகும். குடிசைத்தொழிலுக்கு வெளியிலிருந்து நபர்களை அமர்த்துவதில்லை. பொதுவாக குடும்ப உறுப்பினர்களே தேவையான உழைப்பினை தருகின்றனர். மின்சாரத்தின் உபயோகமின்றி பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அல்லது குறைந்த அளவு மின்சாரம் உபயோகிக்கப்படுகிறது. வழக்கமாக உள்ளூர் சந்தையிலேயே பொருட்கள் விற்கப்படுகின்றன.
Question 78
இந்தியாவின் முதன்மை குடிசைத்தொழிலாக விளங்குபவை எவை?
A
கைத்தறி
B
நெசவு
C
மட்பாண்டம் செய்தல்
D
இவை அனைத்தும்
Question 78 Explanation: 
விளக்கம்: பாய், கயிறு திரித்தல், கூடை முடைதல் ஆகியன உதாரணங்களாகும். இந்தியாவின் முதன்மை குடிசைத்தொழிலாக விளங்குபவை கைத்தறி, நெசவு, மட்பாண்டம் செய்தல், சலவை சோப்பு தயாரித்தல், சங்கு தொழில், கைகளால் காகிதம் தயாரித்தல், கொம்பு பொத்தான், முத்து சிப்பி பொத்தான், வீட்டு உபயோகக்கருவிகள், பூட்டு மற்றும் சாவி தயாரிக்கும் தொழிற்சாலைகள்.
Question 79
விளக்கம்: பாய், கயிறு திரித்தல், கூடை முடைதல் ஆகியன உதாரணங்களாகும். இந்தியாவின் முதன்மை குடிசைத்தொழிலாக விளங்குபவை கைத்தறி, நெசவு, மட்பாண்டம் செய்தல், சலவை சோப்பு தயாரித்தல், சங்கு தொழில், கைகளால் காகிதம் தயாரித்தல், கொம்பு பொத்தான், முத்து சிப்பி பொத்தான், வீட்டு உபயோகக்கருவிகள், பூட்டு மற்றும் சாவி தயாரிக்கும் தொழிற்சாலைகள்.
A
65%
B
73%
C
55%
D
45%
Question 79 Explanation: 
விளக்கம்: இந்தியாவில் 2015 ஆம் ஆண்டு சமூக பொருளாதார மற்றும் சாதி ரீதியான கணக்கீட்டின்படி 73% மக்கள் ஊரக பகுதிகளில் வசிக்கின்றனர். இதில் 18.5% மக்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள், 11% மக்கள் பழங்குடியினர்.
Question 80
கீழ்க்கண்டவற்றுள் முத்ரா வங்கியின் முதன்மை நோக்கங்கள் எவை?
A
குறுங்கடன் வாங்குபவரையும், பெறுபவரையும் ஒழுங்குபடுத்தல்
B
குறுங்கடன் வழங்குவதில் நிலைத்த தன்மையை ஏற்படுத்தல்
C
அனைத்து சிறுநிதி வழங்கும் நிறுவனங்களையும் பதிவு செய்தல்
D
மேற்கண்ட அனைத்தும்.
Question 80 Explanation: 
விளக்கம்: சிறு தொழில் புரிபவர்கள், சில்லறை வியாபாரிகள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் தனி நபர்களுக்கு கடன் வழங்கும் சிறு நிதி நிறுவனங்களுக்கு மேலும் நிதி மற்றும் கடன் வசதியை ஏற்படுத்தி தருதல். அனைத்து சிறுநிதி வழங்கும் நிறுவனங்களையும் பதிவு செய்தல் மற்றும் அவற்றின் செயல்பாடுகளை தரம் நிர்ணயம் செய்தல் மற்றும் முறையான ஒப்புதல் வழங்குதல்.
Question 81
கீழ்க்கண்டவற்றுள் சுய உதவிக்குழுக்களின் முக்கிய இயல்புகள் எவை?
A
பெரும்பாலான சுய உதவிக்குழுக்கள் 20 முதல் 30 பெண் உறுப்பினர்களைக் கொண்டவை.
B
சுய உதவிக்குழுவின் உறுப்பினர்கள் பொதுவாக வெவ்வேறு மாதிரியான பொருளாதார நிலையில் உள்ளவர்கள்.
C
SHGs தமக்கென்று வடிவமைக்கப்பட்ட சட்டங்களையும், விதிமுறைகளையும் கொண்டுள்ளன.
D
இவை அனைத்தும்
Question 81 Explanation: 
விளக்கம்: பெரும்பாலான சுய உதவிக்குழுக்கள் 10 முதல் 20 பெண் உறுப்பினர்களைக் கொண்டவை. சுய உதவிக்குழுவின் உறுப்பினர்கள் பொதுவாக ஒரே மாதிரியான பொருளாதார நிலையில் உள்ளவர்கள். SHGs தமக்கென்று வடிவமைக்கப்பட்ட சட்டங்களையும், விதிமுறைகளையும் கொண்டுள்ளன. SHGக்கள் முழு பங்கேற்பினை அளித்து அனைவரும் கலந்தாலோசித்து முடிவெடுப்பதுடன் தங்களை தாங்களே நிர்வகித்துக்கொள்கின்றனர்.
Question 82
முத்ரா வங்கி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
A
2014
B
2017
C
2015
D
2016
Question 82 Explanation: 
விளக்கம்: இது ஒரு பொதுத்துறை சார்ந்த நிதி நிறுவனம் ஆகும். இது சிறு குறு நிதி நிறுவனங்களுக்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும் மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் கடன் வழங்குகிறது. இது ஏப்ரல் 8, 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
Question 83
குறைந்த விலையில் எளிதில் பெறக்கூடிய தரமான ஆரோக்கிய வசதிகளை ஏற்படுத்தி தரும்  நோக்கத்தை கொண்ட நலத்திட்டம் எது?
A
தேசிய ஊரக நல அமைப்பு
B
தேசிய ஊரக வாழ்வாதார திட்டம்
C
பாரத் நிர்மான் யோஜனா
D
இந்திரா ஆவாஸ் யோஜனா
Question 83 Explanation: 
விளக்கம்: தேசிய ஊரக நல அமைப்பு 12, ஏப்ரல் 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. நலிவடைந்த ஊரக மக்களுக்காக குறைந்த விலையில் எளிதில் பெறக்கூடிய தரமான ஆரோக்கிய வசதிகளை ஏற்படுத்தி தருவது இதன் நோக்கம். உடல் நலத்தை தீர்மானிக்கும் காரணிகளான குடிநீர், சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து, சமூக மற்றும் பாலின சமத்துவம் போன்றவற்றை அடைவதற்காக சிறப்பாக செயல்படும் சமூக நீதி பரவலாக்கப்பட நல விநியோக முறையை ஏற்படுத்துவதே இந்த அமைப்பின் மிக முக்கிய நோக்கமாகும்.
Question 84
2018 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியச்சாலைகளின் நீளம்?
A
34 இலட்சம் கி.மீ
B
37 இலட்சம் கி.மீ
C
24 இலட்சம் கி.மீ
D
44 இலட்சம் கி.மீ
Question 84 Explanation: 
விளக்கம்: இந்தியாவின் சாலைத்தொடர்பு வசதி அமைப்புகள் உலகிலேயே பெரிய அமைப்புகளுள் ஒன்றாகும். 1950 - 51 ல் 4 இலட்சம் கி.மீட்டர் நீளமாக இருந்த இந்திய சாலைகளின் நீளம் 2018 ல் 34 இலட்சம் கி.மீ ஆகும்.
Question 85
இந்தியாவில் எத்தனை சதவீத குடும்பங்கள் ஒரு அறையை வீடாக கொண்டுள்ளனர்?
A
34%
B
36%
C
24%
D
38%
Question 85 Explanation: 
விளக்கம்: NSSO புள்ளி விவரத்தின்படி 38 சதவீத குடும்பங்கள் ஓர் அறையை வீடாக கொண்டுள்ளனர். 36 சதவீத குடும்பங்கள் இரண்டு அறைகள் கொண்ட வீட்டிலும் வாழ்கின்றனர்.
Question 86
2017 மார்ச் முடிவில் இந்தியாவின் எத்தனை சதவீத கிராமங்கள் முழுமையாக மின் தொடர்பை பெற்றிருந்தன?
A
98%
B
95.25%
C
99.25%
D
99.50%
Question 86 Explanation: 
விளக்கம்: 2017 மார்ச் முடிவில் இந்தியாவின் 99.25 சதவீதம் கிராமங்கள் முழுமையாக மின் தொடர்பை பெற்றிருந்தன. 31.03.2017 ன்படி கீழ்க்கண்ட 20 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் முழுமையான அதாவது 100 சதவீத மின்வசதி பெற்றுள்ளன. அவை சண்டிகர், டெல்லி, ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், டாமன் மற்றும் டையூ, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, கோவா, குஜராத், மஹாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம், கேரளா, லட்சத்தீவு, புதுச்சேரி, தமிழ்நாடு, தெலுங்கானா, அந்தமான் நிகோபார் தீவுகள், சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகியவை ஆகும்.
Question 87
இந்தியாவில் ஊரகப்பகுதிகளில் மின்மயமாக்கிகளை பாதிக்கும் காரணிகள் எவை?
A
நிதிப்பற்றாக்குறை
B
மாநிலங்களுக்கிடையேயான பிரச்சினைகள்
C
சீரற்ற நிலப்பரப்பு
D
இவை அனைத்தும்
Question 87 Explanation: 
விளக்கம்: இந்தியாவில் ஊரகப்பகுதிகளில் மின்மயமாக்கிகளை பாதிக்கும் காரணிகள்: மின்சார உற்பத்திக்கும் அதனை விநியோகிப்பதற்கும் அதிக செலவு ஏற்படுகிறது.மின் திட்டங்களை நிர்வகிப்பதில் மாநிலங்களுக்கிடையே பிரச்சினை நிலவுவதால் மின்சார விநியோகம் பாதிக்கப்படுகிறது. கிராமப்புறப்பகுதிகள் சமமற்று இருப்பதால் முறையான மின் இணைப்பு வழங்குவது கடினமாகவும், புதிதாக மின் இணைப்பு கம்பிகள் அமைப்பதற்கு கடினமாகவும் அதிக செலவும் ஆகிறது. ஊரக பகுதிகளில் மின் அனுப்புகையில் ஏற்படும் இழப்பு 25 சதவீதம் ஆகும்.
Question 88
நிலக்கரி உற்பத்தியில் இந்தியா உலக அளவில் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A
3
B
4
C
2
D
5
Question 88 Explanation: 
விளக்கம்: பூமிக்கு அடியில் அதிகமாக கிடைக்க கூடிய கனிமங்களில் நிலக்கரி முக்கியமானதாகும். சீனா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு அடுத்தபடியாக நிலக்கரி உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. மேற்கு வங்காளம், பீகார், மத்தியப்பிரதேசாம், மஹாராஷ்டிரா, ஒடிசா, மற்றும் ஆந்திரப்பிரதேசம், நிலக்கரி கிடைக்கக்கூடிய முக்கிய மாநிலங்களாகும். வங்காளம், ஜார்க்கண்ட் மாநில நிலக்கரி வயல்களிலிருந்து அதிக அளவு நிலக்கரி கிடைக்கிறது.
Question 89
இந்தியா உலக வியாபாரத்தில் எத்தனை சதவீத பங்குடன் மைக்காத்தாள் உற்பத்தியில் முதலிடம் பிடித்துள்ளது?
A
50%
B
40%
C
60%
D
55%
Question 89 Explanation: 
விளக்கம்: மைக்கா ஒரு வெப்பத்தை தடுக்கும் கனிமம் மற்றும் அரிதிற் மின்கடத்தி ஆகும். இந்தியா உலக வியாபாரத்தில் 60% பங்குடன் மைக்காத்தாள் உற்பத்தியில் முதலிடம் பிடித்துள்ளது. பெக்மடைட் எனப்படும் மைக்கா வகை ஆந்திர பிரதேசம், ஜார்கண்ட், பீகார், மற்றும் ராஜஸ்தானில் கிடைக்கிறது. இது மின் உபகரணங்களில் மின் தடுப்பானாக பயன்படுத்தப்படுகிறது.
Question 90
முதல் சணல் தொழிற்சாலை எங்கு அமைக்கப்பட்டது?
A
ரேஷ்ரா
B
பிலாய்
C
துர்காபூர்
D
ரூர்கேலா
Question 90 Explanation: 
விளக்கம்: இந்தியா போன்ற நாட்டிற்கு சணல் தொழில் மிக முக்கியமானதாகும். காரணம் இத்தொழில் மூலம் வெளிநாட்டு செலாவணி ஈட்டப்படுகிறது. மேலும் இத்தொழில் கணிசமான வேலை வாய்ப்பை அளிக்கிறது. 1855 இல் மேற்கு வங்க மாநிலத்திலுள்ள ரேஷ்ரா எனும் ஊரில் நவீன மயப்படுத்தப்பட்ட தொழிற்சாலை முதல் முறையாக உருவாக்கப்பட்டது. இந்தியாவின் சணல் தொழில், பாரம்பரியமாக ஏற்றுமதி செய்து வருகிறது. உலக அளவில் இந்தியா கச்சா சணல் உற்பத்தியிலும் சணல் பொருட்கள் தயாரிப்பிலும் முதலிடத்திலும் சணல் பொருட்கள் ஏற்றுமதியில் இரண்டாமிடத்திலும் உள்ளது.
Question 91
சர்க்கரை உற்பத்தியில் இந்திய அளவில் மூன்றில் ஒரு  பங்கு அளவை உற்பத்தி செய்யும் மாநிலம் எது?
A
பீகார்
B
உத்திரப்பிரதேசம்
C
மத்தியப்பிரதேசம்
D
மஹாராஷ்டிரா
Question 91 Explanation: 
விளக்கம்: இந்தியாவில் வேளாண் சார்புத்தொழில்களில் பருத்தி தொழிலுக்கு அடுத்தபடியாக சர்க்கரைத்தொழில் உள்ளது. உலக அளவில் இந்தியா பெரிய அளவிலான சர்க்கரை உற்பத்தியாளராகவும் பெரிய அளவிலான நுகர்வோராகவும் இருக்கிறது. சர்க்கரை உற்பத்தியில் இந்திய அளவில் மூன்றில் ஒரு பங்கு அளவை மஹாராஷ்டிரா மாநிலம் மட்டுமே உற்பத்தி செய்கிறது. அடுத்தபடியாக உத்திரபிரதேச மாநிலம்.
Question 92
பட்டுத்தயாரிப்பில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A
3
B
1
C
2
D
4
Question 92 Explanation: 
விளக்கம்: இயற்கையான பட்டு தயாரிப்பில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. சீனா முதலிடம். தற்போது உலக அளவில் 16% உற்பத்தியை இந்தியா கொண்டுள்ளது. இந்தியா மட்டும் கீழ்க்கண்ட வணிக அடிப்படையிலான 5 வகையான பட்டுத்துணிகளை உற்பத்தி செய்கிறது. அதாவது மல்பெரி பட்டு, வெப்ப மண்டல டஸ்சர் பட்டு, ஓக் டஸ்சர் பட்டு, ஏரி மற்றும் முகா பட்டு ஆகியன.
Question 93
மகப்பேறு இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு  எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A
3
B
2
C
1
D
4
Question 93 Explanation: 
விளக்கம்: நிதி ஆயோக் அறிக்கையின்படி மகப்பேறு காலத்தில் தாயின் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு 79 எண்ணிக்கையுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இது தேசிய சராசரியான 159இல் சரிபாதி ஆகும். மகப்பேறு இறப்பு விகிதத்தில் கேரளா (முதலிடம்). மஹாராஷ்டிரா 67 ஆகவும் இரண்டாம் இடத்தில் உள்ளது.
Question 94
தமிழ்நாட்டின் பாலின விகிதம்?
A
995
B
996
C
994
D
997
Question 94 Explanation: 
விளக்கம்: சமச்சீர் பாலின விகிதம் என்பது பெண்கள் வாழ்வியல் மேம்பாடு அடைந்திருப்பதைக் குறிக்கிறது. தமிழ்நாட்டின் பாலின விகிதம் 995 ஆகும். பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போதும் இந்திய அளவிலும் இந்த விகிதம் மிக அதிகமாகும். பாலின விகிதத்தில் கேரளம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.
Question 95
உயர்கல்விக்கான மொத்த சேர்க்கை விகிதத்தில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ள மாநிலம்?
A
கேரளா
B
மத்தியப்பிரதேசம்
C
தமிழ்நாடு
D
ஒடிசா
Question 95 Explanation: 
விளக்கம்: உயர்கல்விக்கான மொத்த சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தமிழ் நாட்டின் மொத்த சேர்க்கை விகிதமான 46.9% அனைத்து மாநிலங்கள் மற்றும் தேசிய சராசரியை விட அதிகமாகவுள்ளது. 59 பல்கலைக்கழகங்களும், 40 மருத்துவக்கல்லூரிகளும், 517 பொறியியல் கல்லூரிகளும், 2260 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 447 பல் தொழில் நுட்ப கல்லூரிகளும் 20 பல் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலிருந்து 4 இலட்சம் பொறியியல் மற்றும் பல் தொழில் நுட்பம் பயின்ற மாணவர்கள் வெளியேறுகின்றனர், இது இந்திய அளவில் உச்சபட்ச அளவாகும்.
Question 96
தமிழ்நாடு எத்தனை அடுக்கு உடல்நல அடிப்படை கட்டமைப்பை கொண்டுள்ளன?
A
5
B
4
C
3
D
2
Question 96 Explanation: 
விளக்கம்: தமிழ்நாடு மூன்று அடுக்கு உடல்நல அடிப்படை கட்டமைப்பை கொண்டுள்ளன. அவை மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமூக நல மையங்கள் ஆகியனவாகும். மார்ச் 2015 இல் தமிழகத்தில் 34 மாவட்ட மருத்துவமனைகளும், 229 துணை மருத்துவமனைகளும், 1254 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 7555 துணை நிலையங்களும், 313 சமூக நல மையங்களும் உள்ளன.
Question 97
தமிழ்நாட்டில் அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?
A
திருவண்ணாமலை
B
பெரம்பலூர்
C
கன்னியாக்குமரி
D
தஞ்சாவூர்
Question 97 Explanation: 
விளக்கம்: தமிழ்நாட்டில் அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டம் கன்னியாக்குமரி (92.14%), சென்னை(90.33%) குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் தருமபுரி (64.71) அரியலூர் (71.99)
Question 98
தமிழ்நாட்டின் அதிக குழந்தை பாலின விகிதம் கொண்ட மாவட்டம்?
A
கடலூர்
B
கன்னியாக்குமரி
C
அரியலூர்
D
நீலகிரி
Question 98 Explanation: 
விளக்கம்: தமிழ்நாட்டின் அதிக குழந்தை பாலின விகிதம் கொண்ட மாவட்டம் நீலகிரி(985), கன்னியாகுமரி (964), குழந்தை பாலின விகிதம் கொண்ட மாவட்டம் கடலூர் (896), அரியலூர் (897)
Question 99
வறுமைக்கோட்டுக்கு கீழ் அதிக மக்கள் வாழும் மாநிலம் எது?
A
ஒடிசா
B
பீகார்
C
அஸ்ஸாம்
D
கர்நாடகா
Question 99 Explanation: 
விளக்கம்: பீகாரில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் விழுக்காடு 34% ஒடிசாவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் விழுக்காடு 33% தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் விழுக்காடு 12%.
Question 100
தமிழ்நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம்?
A
8.3
B
9.5
C
7.2
D
6.5
Question 100 Explanation: 
விளக்கம்: தமிழ்நாட்டு மக்கள் தொகை 72138958. அதிக மக்கள் தொகையுடைய மாவட்டங்கள் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவாரூர் ஆகியவை. குறைவான மக்கள் தொகையுடைய மாவட்டங்கள் பெரம்பலூர், நீலகிரி, அரியலூர், தேனீ ஆகியவை.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!